28 March 2017

காற்றில் வந்த கவிதைகள்-12


முன்னர் கவிதைகள் இங்கே-http://www.thanimaram.com/2017/03/11.html
------------------------------
மதிப்பு எண்கள் மட்டும்
மாற்றங்கள் தருவதில்லை வெற்றி என்று
மாறாத திறமைக்கு !
மல்லுக்கட்டும்
மானிடம் வென்றது என்று
மரணிப்பது அழகல்ல
மறுதேர்வு மறுபடியும்
மலரும்!///


---/

வந்து போகும் வாழ்வியலில்
வடிகட்டின முட்டாள் என்று!
வதைத்த நட்புக்களை வணங்கி
வரவேற்க இது வணக்கஸ்தல
வரவேற்பு பீடம் அல்ல நட்புக்களே!
வழிதவறாது வாழும்
வழிப்போக்கன் சாலை
வழிகேட்டு யாசகம்  நட்பு
வழி கேட்க மட்டும் இங்கே
வாழும் துறவி இவன்!---/


///::

விடைபெற்ற உன்  காதல் இருப்பிடத்துக்கு
விடையாகி வந்தாள் நேசத்தில்
விடுகதை போல ஒருத்தி
விடுதலையான  கைதி போல
விரும்புகின்றது மனம்
விரைந்து  மணம் முடித்த மனைவி என்ற
வீரமகள்!----







//:நல்லாட்சியின் கொடிப்பறக்க,
நம்மவர்கள் வெளியேறு ,வெளியேறு
நல்லவேஷம்   இது .
நம் கலையும்
நம்ம நிலமையும் மாறவில்லை
நாம் போராடத்தயார் என்று
நாலுபேர் குடைபிடிக்க!
நம்நாட்டில் இது வாடிக்கை
நாம் கைகுழுக்குவோம்  வாருங்கள்
நல்லவனுக்கு நல்லவன் என்று
நம் முதல்வரும்
நாளைய வருங்கால முதல்வரும்
நயமாக கைகுழுக்க விழாவில்
நடுநாயகமாக வீற்று இருந்தார்
நம் தேச சூப்பர்ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க
நாளைய தலைப்புச் செய்தி இது!..

.//////////////


என்னைப்போல   நீயும் கைகட்டகூடாது
என்று தானே எல்லா மொழியும்
ஏனோ கற்க வைத்தேன்!
என் மனம் கல்லாக
ஏண்டா என் வாரிசாக !
என்னை எல்லாரிடமும்
ஏதிலி போல
ஏன் கையேந்த விட்டாய்!!
எல்லாம் பாழாப்போன
ஏதோ மோகம் என்றால்!
என்னைக்கொன்று விடு!
என் மூச்சு வியாபாரம்
எனக்கு வெற்றிலை போல சிரிக்கவும்
எதுவென்றாலும் கொட்டப்பாக்கு போல
ஏனோ கோபத்தில் சிவக்கவுகம் மட்டும் தான்
என்னால் முடியும்!
ஏனோ பிச்சை கேட்க
என்னால்  முடியுல!
எங்கு இருக்கின்றாய்!

 விரைவில் !!!!!!!!

22 March 2017

காற்றில் வந்த கவிதைகள்-11

முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/03/10.html
---------------------------------------------------
கண்ணீருடன் கடதாசி தந்து
கவிஞன் நீ என்று
காதில் சொல்லி
கடல்கடந்தாலும்  ,அன்பின்
கவலைமறந்த காளை இவன் என்று
கவிதை தீட்டுவேன் !
காற்றலையில் வந்து
காதோடு
கவிபேசும்  என் கவிதை
கண்ணீர்விழிகளுடன்!
காணமல் போனவன்!


-----


கருவில் சுமக்கும் போது
கண்ணீர்விட்டவளில்லை கன்னே!
கரையில் சேரும் ஓடம் போல
கையில் தவழ்ந்த போதும்
கலங்காதவள் !கண்மணி என்று
கண்ணுக்குள் நிலவாக
கடைசிவரை இருப்பாய் என்ற
கனவை கலைத்தது இனவாத
கண்ணோட்டம். கானமல் போன
கைதிகளில் நீயும் ஒருவனா ?
கதறும் என் நிலை காவிகளுக்கும்,
கடவுளுக்கும் கேட்கலயா?
காணமல் போனவனை
கண்டு பிடிப்போர் யார்?////

--------------------------------

----அருகில் இருப்பாய்
அணைத்துக்கொள்வாய் என்றெல்லாம்
அனுதினமும் கனவுகண்டேன்!
ஆத்திரத்தில் அடித்த கரங்களுக்கு
அத்துமீறல் என்று
அரசபீடத்தில் அழுத்தி உரைத்தாய்!
அதிகபட்ச தண்டனையாக
ஆனாதைபோல் ஆக்கிவிட்டாயே
ஆவி பிரிந்து சென்று
அன்புக்காதலியே!!!!


////


---/வேடதாரிகள் வருகின்றார்கள்!
வேட்டி கட்டி, வேஷம் போட்டு!
வேண்டும் வாக்கு என்று!
வேடம் களைப்பீர்களோ?
வேண்டும் பணத்துக்கு
வேட்டுவைப்பீர்களோ?
வேதனையுடன்
வேற்றுப்பார்வையாளர்கள்!






14 March 2017

கவலை விடு!!!

நாளாந்தம் பல நம்மவர்கள்  பாடல்கள் இணைய வானொலிகள் மூலம் கேட்கும் வசதி கிடைத்திருப்பது ஐபோனின் மகிழ்ச்சி எனலாம்.



அந்த வகையில் முகநூல் வரை நட்பாக  நான் தொடரும் பலரில்  வன்னி மண்ணில் இருந்து தனிமரத்தோடு இணையும் வளரும் கலைஞர் நம்மவர்  கந்தப்பு ஜெயந்தன் அவரின்  சில பாடல்கள் தனிமரத்தில் பதிவாக இருக்கின்றது !




அந்த வகையில் மகளிர் தினத்தினை கொண்டாடும் வகையில் புதிய பாடல் ஒன்றினை கடந்த வாரம்8/3/17 இல்  சமூக தளத்தில் வெளியீடு செய்து இருந்தார்  ஜெயந்தன்! அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பே இந்தப்பகிர்வு!
பாடல் இயற்றிய கவிஞருக்கு நிரஞ்சலனுக்கு வாழ்த்துக்கள். பாடல் கேட்க






பாடலை அவரின் புதிய இணைய வானொலியில் கூட கேட்டு மகிழ முடியும் அதன் முகவரி இது-http://www.manvasam.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF/










12 March 2017

காற்றில் வந்த கவிதைகள் -10

முன்னம் இங்கே--http://www.thanimaram.com/2017/03/9.html   நன்றிகள் ஜினேஸ்§

புனிதனாக வாழ ஆசைதான் !
புழுதிவாரித் தூற்றும்
புறந்தள்ளி இவன் மோசக்காரன் என்று
புலம்பெயர்ந்தவன்
புண்ணியமாக சில லட்சங்கள்
புண்ணியம் செய்யாத போது!///




--------------------------------------------------
விழிகளில் வந்திடு கன்னே
விம்மலுடன்....வீதி எங்கும்
விரித்த கைகளுடன்
விதவையானவள்
விசாரிக்கின்றாள்
விடுதலைக்கு போன
வீரனைப்பெற்றவள்!//////

------------------------------------------------


ஆசையைத் துறந்து வா என
அழைக்கின்றது ஆன்மீகம்
ஆனாலும் அன்பே உன்னால்
ஆழ்மனதில் தோன்றிய
அழியாத காயத்துக்கு
ஆற்றுப்படுத்த ஏது வழி?


-----------------------------------------------
///!!
விரும்பிய பாடல் காற்றில்
விரைந்து வரும் என காத்திருந்தேன்.
விளம்பர இடைவேளைக்கு
விலகிச்செல்லும்
விருப்ப ஓய்வு போல !
விட்டுச்சென்றவள்
விரைந்து வருவாள் என
விழித்திருந்த போது
விட்டுப்போனது இணையத்தொடர்பு
விரும்பிய பாடல்  நிலை???
விரைவில்!!!


டிஸ்கி போட்டு பல மாதங்கள்§[[[

/// அசட்டையினத்தின் சோகக்கதை இங்கே- ஆனாலும் எழுத்து ஆர்வம் தொடர்ந்து இயங்க சினேஹாவின் காதல் போல[[http://www.thanimaram.com/2017/03/9.html

இதுவரை தனிமரம்.org  என்ற முகவரி கொஞ்சம் மாற்றவேண்டியதாகிவிட்டது .இனி தனிமரம் .com என்றே வாசம் வீசும் உங்களின் ஆதரவுடன். தனிமரத்தோடு மீண்டும் இணைந்து பின்தொடர்வோர் பட்டியலில் உங்களையும் இணைதுவிடுங்கள்! தயவு கூர்ந்து!  உங்கள் ஒரு சில இணைய நேரத்தில் நட்பாக ஏதிலி தனிமரத்துடன்! நேசமுடன் நேசன்! !




06 March 2017

காற்றில் வந்த கவிதைகள்-9

இது வரை இங்கே--http://nesan-kalaisiva.blogspot.fr/2017/02/8.html

கடும் பணி என்று
களைத்துச்சாய்ந்த போது
கல்லிலும் சிலை செய்யலாம்
கலங்காத நீ காளை என்றவளை
காணாமல் தேடுகின்றேன்
கடும்பணி தந்த பரிசு
கல்லுப்பதித்த வைர மோதிரத்துடன்!/




////////////////


புனிதனாக வாழ ஆசைதான் !
புழுதிவாரித் தூற்றும்
புறந்தள்ளி இவன் மோசக்காரன் என்று
புலம்பெயர்ந்தவன்
புண்ணியமாக சில லட்சங்கள்
புண்ணியம் செய்யாத போது!///:

//:
இழந்த போகவில்லை நம்
இருப்பிடம் இன்னும்
இருக்கக்கூடாது என்றுதானோ?
இடித்துவிட்டார்கள் ஆலயம் முதல்
இடுகாடுவரை .என்றாலும்!
இன்னும் நம்மூர்
இலங்கை முதல்
இந்த உலகம் எங்கும்
இதோ விடுவித்த கதை பேசுகின்றது
இனியும் ஒரு விதி செய்வோம்!///


//////////////





01 March 2017

காற்றில் நீண்ட மூச்சு கவிதை)))

நினைவுகள் தாலாட்டும்
நீ தந்த நிறைவான
நம்பிக்கையை இன்னும்
நிஜத்தில் கிடைக்கும்
நல்லாட்சி போல என்னியே
நானும் நிதமும்
நாம் பேசிய
நம்பூமி எங்கும்
நிழல் போல
நீலப்படையின்
நீங்காத பார்வை அம்புகள்
நிலத்தில் தேடுவது போல
நீண்டு தொடை எங்கும்
நீட்ட நினைக்கையில்
நிஜமான நல்லாட்சிக்கு
நீட்டி முழங்கும்
நம்பிக்கைவாசகம் எல்லாம்
நாற்றம் காணும் மீன்கள் போல
நாளைசெய்தியில்
நம் கதை பேசினாலும்
நான் காத்திருக்கின்றேன்
நல்லாட்சி தரும் தீர்வு போலவே
நாளை என்றாலும்
நம் கனவு
நிஜமாகுமா?

///