31 August 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்- 13

 முன்னர். இங்கே--/http://www.thanimaram.com/2017/08/12.html

---------------------



சுதந்திரக்கட்சியின் வெளியுறவுக்கொள்கையில் எப்போதும் ரஸ்யாக்குடியரசுவுடன் என்றும் காத்திரமான செயல்திறனை கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை ஆரம்பகால பண்டாரநாயக்கா காலம் தொடக்கம் முன்னைய ராஜபக்‌ஷா ஆட்சிவரை தொடரும் ஒரு பந்தம்!


 இலங்கையில் ஆரம்பகால வளர்ச்சியில் ரஸ்யாவும் பல அன்பளிப்புக்களை செய்தும் இருக்கின்றது நட்பு நாடாக! பண்டாரநாயக்காவின் மரணத்துக்கும் ரஸ்யாவின் உளவுப்படையும் காரணகர்த்தாக்காளாக இருந்தார்கள் என்ற சீனச்சார்பு மார்க்சியவாதிகளின் அரசியமேடைக்குற்றச்சாட்டு இன்றும் பல முன்னைய தலைமுறை அடிமட்ட அரசியல்த்தொண்டர்களிடம் சட்டம் ஒரு சதுரங்கம் என்பது போல என்றாலும்!


 ரஸ்யாவின் மாநிலங்கள் தனித்தனிதேசங்களாகி தனிநாடாகிய போதும் இன்னும் இலங்கையில் ரஸ்யாவையே முதல் நண்பனாக  சுதந்திரக்கட்சி கொண்டு இருக்கின்றது .என்றாலும்!! பெரியண்ணாவைவும் அதன் பரமவைரி பாகிஸ்த்தானையும் எப்படி அரசியலில் கையாள்கின்றதோ அப்படியே ரஸ்யாவுடனும் அதன் முன்னைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த உக்ரேன் முதல் லித்துனியா, ரூமெனியா ,ஒஸ்திரியா,யூகொஸ்லாவியா என்றெல்லாம் தன் அரசியப்பாதையில் பல தொடர்பை மேற்கொண்டாலும் !


இலங்கையின் ஆயுதங்கள் பல கள்ளச் சந்தையில் உக்ரேனுக்கு விற்ற விவகாரம் உக்ரேன் -ஐரோப்பாவுடன் சாய்ந்து எரிவாயு தடைப்பட்ட நிலையில் ரஸ்யாப்படைகள் உக்ரேனில் மோதலில் ஈடுபட்ட போது பல  ஐரோப்பிய நாளேடுகள் செய்தி வெளியீடு செய்தமை. அதை  மகிந்த ஆட்சி என்றாலும் இன்றைய நல்லாட்சி மறுதலித்தமும் இன்னும் அரசியல் ஒரு பனிப்புகார் போல விளங்காத ஒரு விடயம்!


 ஆனாலும் அவன்காட் விவகாரம்  இலங்கையின் ஆட்சிமேடையில் மீண்டும் கோகிலா போல வெற்றிலை உரல் இடிப்பது போல எழுந்தது !அதன் கைகள் ராஜபக்‌ஷவின் உறவினர்கள் லலித்வீரதுங்க என்ற உக்ரேன் நாட்டு தூதுவர் சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும்! அவரை கைது செய்ய சர்வதேச இண்டர் போலிடம் உதவி கோரியதாக  பொதுவெளியில் ஊடகக்கருத்து தெரிவித்த முன்னால் வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர துறை மாற்றப்பட்டதுடன் அவை பலர்  மறந்து போன வானொலி  நிகழ்ச்சி  நேற்றைய காற்று போல !


இனி இன்னொரு சுறாவளி ஊழல்க்கைது நடக்கும் போது அமெரிக்கா சார்பு உளவாளிகள் பலர் ;ரஸ்யாவுடனும், சீனாவுடனும் நிழல்யுத்தம் செய்வார்கள் !என்றாலும் செயலில் எவையும் நிறுபிக்க மாட்டார்கள்.


 காரணம் அரசியலில் எப்போதும் நண்பனும், துரோகியும் ஒரே கட்சியில் தானே இருக்கின்றார்கள். பணமுறிவு முதல் இனவாத வெறியை தூண்டும் சக்திகளாக  !




என்றாலும் இலங்கையின் வெளியுறவுத்துறையில் நிலவும் ஊழல் செயல்ப்பாடு ஆட்சி மாறும் போதெலாம் சினிமா கிசுகிசு போல ஊடகத்தில் வருவதும் ,பின் காணமல் போனோர் விசாரணை அறிக்கை போல கிடப்பில் போடப்படுவதும் ஒரு மாயக்கண்ணாடியே


 அது போலவே இலங்கையின் பல்கலைக்கழங்களிலும் புகுந்த இனவாத செயல்ப்பாடுகள் பலருக்கு புலம்பெயர் தேசங்களில் உயர்கல்வியை சிறப்பாக கற்பதுக்கு வழிகாட்டியது.




 அதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து என்ற வட்டம் தாண்டி ஐரோப்பிய நாடுகளிலும் பயின்ற பட்டதாரிசான்றிதல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நவீன கல்விச்சீர்திருத்தமும் ,பலரை வெளிநாடுகளில் கல்விபயில ஊக்குவித்தது எனலாம்!


 அந்த வகையில் சைப்பிரஸில் கல்வி பயில்வதில் பலரும் ஆர்வம் காட்டியதன் பின்னனி. அங்கே போவதன் ஊடாக ஐரோப்பிய நாட்டுக்குள் அடைக்கலம் தேடுவதுக்கு  வாய்ப்பாக இருந்ததும் பொதுவெளியில்  சொல்லப்படாத காகித ஓடம் போல ஒரு மறுபக்கம் என்றாலும்! சிலர் இந்தத்துறைமூலம் அதிகம் சுவிஸ் வங்கியில் சேமித்த கதை எல்லாம் புலன்விசாரணை படம் போல இலங்கையில் பாதாள  உலகக் கோஸ்ட்டி என்ற போர்வைக்குள்  சுட்ட கதைகள் எல்லாம் ஏராளம் ஊடகத்தில்  எழுத ஆசை !


என்றாலும் எனக்கும் நேரம் இருக்கனும்.  அதை பொதுவில் பிசுரிக்க ஆசிரியர் பீடத்துக்கும் தில் இருக்கனும்!  அரச விளம்பரம் கைவிட்டுப்போய்விடும் என்ற பயத்தில் வாசகர்களுக்கு உண்மையை சொல்லாமல் மறைக்கக்கூடாது ஊடகம் நிலாந்தன்!தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காதலி போல உன்னாலே உன்னாலே என்று  சினிமா  பாடல்கள் காட்சிகள் வருவது போல !








கொழும்பில் அழகு நிலையங்கள்  என்ற போர்வையில் இருக்கும் மசாஸ்  நிலையங்கள் எல்லாம் இன்னொரு உலகம் நீ  அது பற்றி அறியாய்))) 


 ஆமா நீ   லித்துனியா அறிந்து இருக்கின்றாயா?


 இல்லை நான் அல்பேனிய- கொசோவே - இனவன்முறை தான் நம்நாட்டு ஊடகத்தில் வெளிநாட்டு செய்தியில் அறிவேன்! அது சரி !


இங்கே பரந்த செய்திகள் எல்லாம் வாரயிறுதி நாளிதலில் கவிதைக்கு ஒதுக்கும் இடம் போலத்தான்! சினிமாவுக்கும் ,கிறீக்கட்டுக்கும், விளம்பரத்திலும் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றைய விடயங்களுக்கு கொடுப்பதில்லையே நிலாந்தன்!



நீங்க ஒரு குழப்பவாதி  யாழவன் அண்ணா !ஏன்?!!!!
 தொடரும்-----!!!!





28 August 2017

காற்றில் வந்த கவிதைகள்-21

முன்னர் இங்கே --http://www.thanimaram.com/2017/08/20.html


 ----------------------------------------
வழிகாட்டும் ஆசான்போலும்,
வழிநடத்தும் துணைவன் போலும்,
வாழ்க்கைப்பயணத்தில் என்றும் 
வரவேண்டி ஆசை கொண்டேன்!
வா போகலாம் என்று 
வழிவிட்டாய் ஆலயம் நோக்கி!
வரமறுத்த காதலியாய்!!

வழிகாட்டுகின்றேன் குருவாக!


----------------------------------------

விழிகளில் கண்ணிர் சிந்தும்
விரும்பியவள் முகத்தில்
விரல்கொண்டு சாமரம் வீசுவோனோ?
விரைந்து வந்த தாமதித்த ரயில் போல
விட்டுப்பிரிந்த  விரும்பிய
விதர்ப்ப நாட்டு வேந்தன் போலாவோனோ?
விறைக்கும் குளிர்தேசத்தில்!
விடுகதைகளுக்கு பதில் தேடும்
வினைத்திறனுள்ள எழுத்தாளர் போல
விடையில்லா காதலில்
விழுந்து !வீடுதேடி வந்ததும் ,
வீதியில் நின் தாய் 
வீசீய  வீர வார்த்தைகள் எல்லாம் 
விரும்பிய பாடலைக்கேட்டே
விழிமூடும் நேயர் போலவே
விஞ்சி நிற்கின்றது ! இன்னும் !
விரல்களினால் நீ இழுத்து மூடும் 
விழ்ந்து வரும் மேலாடையை நோக்கும் 
விடுப்புப்பார்க்கும் சபையில்! இருந்து என்னைக்கண்டு 
விலகிப்போய்  
விழிகளில் நீர் சுரக்கும் செயல்கண்டு
வீரகேசரியில் எழுதிய
விமர்சனம் போல கண்ணால் பேசவா? அன்பே
விலகிப்போன உன் 
விபரமறியாத காதலில்
வீதியில் நின்ற கதையை
விரைவில் ஒரு தொடராக
விதைக்கும் ஆசையில் !
விண்ணுக்கும் மண்ணுக்கும் போல
விசர்க்கதைகள் எல்லாம் கண்ணால் பேசவா?
 விரும்பியவள், விரும்புகின்றேன் நாயகி 
வீட்டில் என்னவளே என்று!
விட்டில்ப்பூச்சியாய் 
விரைந்திடும் ரயிலைத்தேடி
வீரா படப்பாடலுடன்
வீதியில் ஒருவன்!

-------------------------------------------



இன்னும் இன்னும் அழுதிடவே
இதயமும் துடிக்குது 
இனியும் நீ வேண்டாம் என்று
இருளில் விட்டுச்சென்ற 
இல்லற வாழ்வை எண்ணி
இனிதே விரும்பியவன்!///


-------------------------------------
யுகம் யுகமாய் நீயும்
யுவதி போல நானும்
யவன தேசம் எல்லாம்
யாசித்துப்பெற்று
யசோதையின் மைந்தன்  லீலை  போல
யாமறிந்த மொழியில்
யாழில் சுருதிமீட்டியதும்
யுத்தம் எனும் அரங்கனின் 
யாழ்வருகையில் 
யாழ்தேவியில் பிரிந்தோம் !
யாருக்கும் கிடைக்காத தீர்வு 
யாப்பு போலவே
யாருமற்ற ஏதிலிகளாய்
யாவரும் தேடுகின்றோம் 
உயிரிப் தேடலாய் ஈழம் என்னும்
யாசிப்பை!


22 August 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-12

முன்னர் இங்கேhttp://www.thanimaram.com/2017/08/11.html.
-----------------------

இலங்கையின் கல்வித்துறையில் அரசாங்கம் வழங்கும்  இலவச  சேவையில் வைத்தியராகவும் , என்ஜினியராகவும் ,முகாமைத்துவப் பட்டதாரிகளும் உயர்கல்வி ,மேற்படிப்பு, என்று அரச பணத்தை  விரயம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடும் வரலாறு சேர் பொன்னம்பலம் ராமநாதன் காலத்தில் இருந்து இன்றுவரை தொடரும் ஒரு  தொடர்கதை.


இன்றும்  அதுக்கு சுவாரசியம் ஊட்டும் சினிமாவில் கவர்ச்சி போல இனவாத யுத்தம் மத்தியதர வர்க்கத்தையும் புலம்பெயர்வைத்தது எனலாம் !

அத்தோடு இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்ட  சந்திரிக்கா ஆட்சியில் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் மூலமும் அதுவரை இருந்த திருச்சபைகளின் நிறுவாக செயற்பாடுகளுடன் ,மேலும் தனியார் துறையினர் கல்விச்சேவை வழங்கும் கல்விக்கூடங்களை தொடங்கும் வசதியின் மூலம் பலர் ஆங்கிலக்கல்விக்கு முக்கியம் கொடுக்கும் புத்துணர்ச்சி செயல்கள் இலங்கை எங்கும் பரவியது அம்மையாரின் ஆட்சி அலங்காரம்  பலரும் அறியாத வெளிநாட்டுக்கல்விக்கூடங்களில் கூட உயர்கல்வியை பெறும் வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கை இலங்கை ஜானதிபதிகளிலே சந்திரிக்கா அவர்கள் படித்தது பிரெஞ்சு தேச பல்கலைக்கழகம் ஒரு போலி என்று கூட அன்நாட்களில் ஊடகம் செய்தியை தீரிவுபடுத்தியம் வரலாறு!


 அந்த வகையில் இலங்கையிலும் பிரிட்டிஸ் கவுஸ்லின் செயல்த்திறங்கள் வீரியம் கொண்டது

இனவாத யுத்தத்தினால் வடக்கில் இருந்து கொழும்புக்கும் ,வெள்ளவத்தை முதல் பானந்துறைவரையும்  இடம் பெயர்ந்த வந்த யாழ்ப்பாணத்தவர்களின் புதிய பெஷன் ஒன்று பிரிட்டிஸ்கவுண்சிலில் ஏதாவது ஒரு கற்கைக்கு விண்ணப்பித்து ,அதனைப்பயில்கின்றேன் என்பதும் ,அதையே பீலாவாக மற்றவர்களிடம் கதையளப்பதும் ஒரு தற்பெருமை நானும் அடுத்த முதல்வர் என்பது  போல!

மச்சான் நான் சாட்டர் எக்கவுண்ட் கோஸ் செய்கின்றேன், மார்க்கட்டிங் கோர்ஸ், ஐடி கோர்ஸ் என்று வாயில் நுழையமுடியாத பெயர்களை எல்லாம் தமிழ்சினிமாவுக்கு  நிகராக கொரிய, ஈரானியப்படத்தின் பெயர்களை சொல்லி அதில் இருந்து உருவப்பட்டது என்பது சொல்வது போலத்தான் !


இந்தக்கல்விப்பாதை பலரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு  பஞ்ச தந்திரம் போல கைகொடுத்தது .


இலங்கையின் வரலாற்றில் கல்வியில்  மேலும் பன்முகப்படுத்தும் செயல் வடிவம் தான் கணனித்துறையின் வருகைப்புரட்சி !

உயர்வதுக்கு கிடைக்கும் பாதைகள் எல்லாம் ஏனோ பலரை வெளிநாட்டு மோகத்திற்கு நீர்வார்த்தது .அது மலையகம் நோக்கியும் மடைதிறந்தது.

 அதுவரை தலைநகர் கொழும்பிலும் , கண்டியிலும் இருந்து செயல்ப் பட்ட கல்வித்துறை கழகங்கள் மலையகத்தின் பெரு நகரங்களான பதுளை, பண்டாரவளை, இரத்தினபுரி, எனவும் கிளைகள் படரத்தொடங்கியது சினிமாவில் டியுட்டல் செயல்பாடு போல  மத்தியதர வர்க்கத்திற்கு ஈடாக கீழ்நிலை மக்களும் கல்வித்துறையில் அதிக தேடலைக் கொண்டவர்களுக்கு இச்செயல் வரப்பிரசாதம் ஆகியது .


குறிப்பிட்ட பணத்தொகையை ஆரம்பக்கட்டணமாக கட்டியபின்  மற்றத்தொகையை பிரிவு பிரிவுவாக கட்டுவதன் ஊடாக கல்வியை தொடரமுடியும். அதன் மூலம் வெளிநாட்டுக்கல்வியக்கழகங்களில் பட்டம் பெறும் வசதிக்கு விண்ணப்பித்து அவர்கள்  மேலும் கல்வியைத் தொடர நாட்டைவிட்டு புலம்பெயரமுடியும்.

 அந்த இனிய பாதையைக்கூட முற்கலாக மாற்றிவிட்டார்கள் சில கல்வி வியாபாரிகளும் ,அரச ஊழிய ஊழல்வாதிகளும் .

காரணம் இந்த கோட்டா இன் ஊடாக அதிக புலப்பெயர்வு விசா ஒரு வியாபாரமாகியது 1997 இல் காலப்பகுதியில்.

  அதனால் அதிக தடைகளை இலங்கையில் இயங்கும் ஐரோப்பிய , கனடிய ,அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, சைப்ரஸ் தூதர ஆலயங்கள் பின்பற்றத்தொடங்கியதும் ஒரு சொல்லப்படாத தூங்காவனம் போல  எனலாம் !

இந்த நிலையில் தான் உயர்தர பரீட்ச்சை எழுதி விட்டு பெறுபேறு வரும் வரை காத்திருந்த கமலேஸ்  மேற்படிப்பு என்ற போர்வையில் வெளிநாடு செல்வதுக்கு பொருத்தமான மார்க்கட்டிங் டெக்னோலஜிக் என்று சொல்லப்படும் சந்தைப்படுத்தல் நுட்பத்திறனுக்கு கொழும்பில் கல்வி கற்கும் வசதி பற்றியும் ,அதன் விபரங்களையும் அறிந்து தெளிவு பெற கொழும்புக்கு அழைத்துவர பின்புலமாக இருந்தான் யாழவன்

நல்லாட்சியையும்  நம்பிய சிறுபாண்மை அரசியல் தலமைகளை  நட்டாற்றில் விட்டது போலவே கமலேசின்  சாருமதி மீதான காதல் கல்விக்கழகத்தில் கிடைத்த ஒரு கறுப்பாடு ஊழல் செய்து தனக்குகிடைத்த வாய்ப்பினை போலியான சான்றிதல்களுடன் லித்துவேனியாவில் கல்விகற்கும் வாய்ப்பு என்ற போர்வையில் புலம்பெயரவைத்தான்! இலங்கையில் உயர்தரம் கற்றதுக்கான அடிப்படை சான்றிதல் இருந்தால் வெளிநாட்டுக்கல்விக்கழகங்களில் கல்வியை தொடரமுடியும் .

உயர்தர பெறுபெறு  வெளிவந்த  பின்னர் அதன் தகுதிச்சான்றிதல் ஒப்படைத்தால் போதும் என்ற நிலை அக்காலத்தில் இருந்தது! இப்போது சாதாராண தரத்தோடு ஆரம்ப படிநிலையை எட்டமுடியும் என்றளவுக்கு கல்வியின் தரம் சீரழிந்துவிட்டது இதை எல்லாம் என்றாவது பொதுவில் பேசவேண்டும் மச்சான் என்றான் கமலேசின் தம்பி நிலாந்தனுடன்!  

ஒம் நிச்சயம்  அண்ணா நீங்க எழுதனும் இல்லையேல் உங்க நட்புகள் ஊவா சமூக வானொலியில் உரைச்சித்திரம் போல சரி இதை புரிய வைக்கனும் யாழவன் .
 நிச்சயம் தெளிவு பெறுவார்கள் பலர்! அதுசரி  கமலேஸ்  அண்ணா போகும் நாடு எப்படி என்று உங்களுக்குத்தெரியுமா






 கமலேஸ்  அண்ணா தேவையில்லாமல் 12 லட்சம் கொடுப்பது பற்றிய உங்களின் கருத்து என்ன?

நான் என்ன சொல்ல.......நிலாந்தன்?!!!!!






தொடரும்....