12 November 2015

முகம் பார்த்தோர்ருக்கு நன்றிகள்!

வணக்கம் உறவுகளே நலம் தானே என்னடா தனிமரம் தென்றல் போல  தொடங்கி புயல்போல எழுதி முடித்துவிட்டதே !என்று சிலர் எண்ணலாம் !ஆனாலும் காலம் என்ற நதியில் தனிமரமும் படகை பலதிசையில் செலுத்த வேண்டுமே)))

முதலில் இப்படி ஒரு தொடரை எழுதத்தூண்டிய முகநூல்/வலையுறவு முகம் காணாத தனிமரம் நேசனின் முகநூல்  ஈழத்து  தோழிக்கு பொதுவில் பெயர்குறிப்பிடமுடியாத (சுமாவுக்கு) நன்றிகள்!

 சிறையில் வாடும் நம்மவர்களின் நிலையை முகநூலில் சமூக அக்கறையுடன் பகிர வேண்டிய மூத்த ஈழத்து  பதிவரின் ஒரு அரசியல் பதிவு என்ற முகநூல் ஒரு கும்மியில் !\


 தனிமரம் போய் குத்திக் காட்டியவிடயங்களின்  போது அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் தான் குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு  என்பது போல இந்த குழுமத்தில்  புலம்பெயர்ந்து இருக்கும் பதிவர்  எல்லாம் இது எல்லாம் புலம்பெயர்ந்து சினேஹா மீது மையம் கொண்ட மரத்துக்கு எல்லாம் என்ன தெரியும் எழுத்துப்பற்றி !

முடிந்தால் எழுதலாமே  பொதுவெளி என்ற அவர் போட்ட உள்குத்து இலங்கை ஊடகத்தில் எழுத முடியுமா என்ற நளினமேடை நிகழ்வின் எதிரொலிதான் இந்த தொடர்! இலங்கை ஊடகத்தில் தூக்கிய வீசிய தொடர் வலையில் வந்து மின்நூல் வந்த விடயம் எல்லாம் அங்கு அவருக்கு புரியாது அவர் பண்டிதர் அடியவன் படிக்காதமரம்[[[ ஆனாலும் எழுதிவிட்டேன் என்பிழை எழுத்திப்பிழை பந்த்ப்பிழை இன்னும் இலக்கணப்பிழை எதுவும் திருந்த இந்த தொடரில் என் அம்மாவும்,  என் தாரமும் சொல்லியது இப்படி[[[!





ஏன் ஈழத்தில் /இலங்கையில் ஒரு வட்டத்துக்கு எழுத வேண்டும் அதுவும் ஆசிரியர் தணிக்கை ,,ஆலோசனை ,எல்லாம் தனிமரம் வலையில் இல்லை! என் வலையில் எழுதுவேன் என்ற ஆசைக்கு ஒரு முகம்  இதை நீங்கள் எழுதணும் அண்ணா என்று என்னையும்! உசுப்பிய புறச்சூழ்நிலை ஒருபாகம்  முடிந்துவிட்டது !

ஆனால் அதையும் தனிமரம் வலையில் எழுதிய போது முதலில் வந்து வாழ்த்திய வலைச்சித்தர் வலைப்பதிவர் சந்திப்பு என்று போய்விட புதிய வலையுறவு அன்பு சகோ கரூர் பூபகீதன் தொடர் ஊக்கிவிப்பு ஒருபுறம் இன்னொரு நம்மவர் நோர்வே அக்காச்சி கீர்தா ரவி அவர்களின் தனிஅழைப்பு பாராட்டு எல்லாம் இந்த தொடருக்கு கிடைத்து இருக்கு என்று முகநூலில் பதிய நேரச்சிக்கல் ஒருபக்கம் ஆனாலும் இந்த தொடரை பாராட்டி இன்னும் ஈழம் /இலங்கை பற்றி அறியும் ஆவலில் இந்த படிக்காத தனிமரம் வலைக்கு முதல் முதலில் வந்த மூத்த தமிழக பதிவர் நட<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJjQrb7WPzOQ0vN-kOkLa_9UiJMu7zQFtOMXE1d3v_fYvGjk4Qg0uU8VY7hYkHjtdf5O1C7U_dOpiOgiY1nClK4gfZbHTuwuT60cpIFNe_PNVzqq_NVIrNv3MsioK3LKP8Nbo-XyljWwHC/s35/*" width="35" height="35" class="photo" alt="">ராஜ நடராஜன் said...


நிறைய சொல்லி இருக்கீங்க போல இருக்குதே! 29ல வந்து சேருகிறேன். நேரம் கிடைக்கும் போது முதல் அத்தியாயம் முதல் பார்வையிடுகிறேன்.
ம்

இப்படி தனிச்சுகம் ஒருபக்கம் இருக்கட்டு்ம் இன்னொரு வைத்தியர் அதுவும் என் இரண்டாவது தொடரில் இருந்து இன்றுவரை என்னை எப்போதாவது வந்து எழுது என்று இடும் பின்னூட்டம் இத்தனை செலவு தனிமரம் வலைக்கு தனியாக கட்டும் கூகில் ஆண்டவர் கூட என்னை நீ கிழிச்ச ஹிட்சு பற்றி கேட்கவிலை!
 ஆனாலும் இவரின் வாழ்த்து போல !


இந்த தமிழ்மணம் திரட்டியும் தந்த உறவுகள் பலரில் தில்லையத்தார் துளசிதரன் சார் . மூங்கில்காற்று முரளிதரன், யாழ்பாவண்ணன். கில்லர்ஜி, எங்கள் பிளாக் சிரிராம். ரூபன். கரந்தை ஜெயக்குமார், விச்சு, புலவர் இராமானுசம். ஜிஎம்பி. வலிபோக்கன், தளிர் சுரேஷ். ஜோக்காளி, இந்துமதி கீர்தனா ரவி . ,நாஞ்சில் மனோ. இலியாஸ்,  சென்னைப்பித்தன்,,கந்தசாமி ஐயா, ஜம்புலிங்கம் முதல்வர், பாலமதி பதிவர், மகேஸ்வரி அக்காச்சி.. சுதா மேடம். ..யாழ்புத்தன்.,புதுவை வேலு ஐயாவின் தனி அழைப்பு பாராட்டு என இன்னும் பல வலையுறவுகள்  வாழ்த்தியதுக்கு இன்னும் பலரை அவசரநிலையில்  தென்றல் கீதா, தேன்மதுரகிரேஸ் ,மைதிலி அம்பாளடியாள். ஹேமா. கலை. ,இளமதி, அதிரா, அஞ்சலின், கலாப்பட்டி, என்று பலரை மறக்கவில்லை ஆனால்  என் அவசரம்! எல்லாம் மூத்தவர்கள் அறிவார்கள்§யாரையேனும் படிக்காத தனிமரம் மறந்தால் மன்னிச்சு . முகநூல் குழுமங்கங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

\


,என்பிழையையும் என் தொடர் இடை பாகமும் என் தனித்தேடலில் ஏதோ மதவாதியாக இந்த தனிமரம் வலையை இன்றுடன் மூடி  !13/11/15




மீண்டும் வரும் ஆண்டில் சந்திப்போம்! அதன் பின் சிந்திப்போம், !அதுவரை  ஆண்டு இறுதியும் பிறக்கும் ஆண்டு குதுகலமாக அமைய எல்லாம் வல்ல சினேஹாவை வாழ்த்தி பாட ஆசையில்லை ஆனாலும் !!

வனவாசம் போகும் தனிமரம்!


இனி தனிமரம் வலையில்  இன்றுமுதல் பதிவுகள் வராது புதிய ஆண்டில் 2016/02/ சந்திப்போம் பின் [[[யாரையும் மொய்கு மொய் வை என்று இன்று வரை கேட்கவில்லை ஆனால் காரூர் பூபகீதன் சகோ நீங்கள் வலையில்  தனிமரம் நேசனும் ஒரு புதியவர்! ஆனால் தனிமரம்  மதவாதி அல்ல ஆனால் மதவெறிபிடித்தவன் இல்லை! என் தேடலில் போகின்றேன்  வனவாசம் பல ஆண்டு! ஆனால் புதியவர் உங்களுக்கு இதை புரியவைக்க நேரச்சிக்கல்! மன்னிக்கவும்! நீங்கள்  உடல்நலம் பெற்று இந்தவாரம் வலைக்கு வரும் போது தனிமரம் அவசரமாக உங்களிடம் பின்னூடம் இடவசதியில்லை ஆனால் அன்புடன் சந்திப்போம்!மன்னிக்கவும்/


யாராரையும் மறந்தால் தனிமரம் படிக்காதவன் மன்னிச்சு திரட்டியில்  திட்டிஅடுத்த ஆண்டில் நட்பில் நேசித்தால் வாங்க[[[!

 அதுவரை !

ஐயா சாமி நான் படிக்காதவன்/! பாரிசில் வெட்டியான்!
கொஞ்சம் தனிப்பட்ட ஐப்பயப்ப சாமீ ஆன்மீக தேடலில் கடல் தாண்டி! ஓய்வில் \\\\




/மீண்டும் வலையில் வருவேன் !அதுவரை! சந்திப்போம்!



 

அவர் வழி காட்டினால் தொடர் எழுதுவேன்!!!

09 November 2015

`முகம் காணும் ஆசையுடன் ---சுபம்!!!!


முன்னம் வாசல் இங்கே-http://www.thanimaram.org/2015/11/36.html

இனி....

பதவியில் இருப்பதும், படகில் இருப்பதும் ஒரே நிலைதான்! ஆனால் மறைகரங்களை இனம்காட்ட மறுக்கும் பின்புலம் எல்லாம் விசாரணை செய்ய வேண்டும் விலகியோடுதல் ஏனோ சிலரைக்காக்க என்பதை மட்டும் நெஞ்சில் நிறுத்து! அவசரமாக கூடும்  அமைச்சரவைக் கூட்டம் எல்லாம் சிறைக்கைதிகளின் நிலை பற்றி சிந்திப்பது இல்லை.நல்லாட்சி ஆட்சி சீர்கெட்டுப்போனநிலை.

என்னால் ஆன இன்னொரு உதவி சுமாவினையும் கண்கானிப்பில் இருந்து விலக்கி வைத்திருப்பது. வேற என்ன உதவி தேவை என்றாலும் என்னைத்தொடர்பு கொள்ளு முடியும் என்றால் நிச்சயம் உதவுவேன்.

 இனி நல்லதே நடக்க பிரார்த்திப்போம்!!! என்று சொல்லிய அபயக்கோனை கடவுளைக் கண்ட பக்தன் போல  வார்த்தை பேசாமல் நின்றான் அசுரன்
.

இரண்டு நாட்களின் பின் கொழும்பில் சுமாவின் திருமணம் வரவேற்பு காணும் விழாவில் பூஜாவுடன் சேர்ந்தே நிகழ்வுக்கு சென்றான்.

 என்ன நண்பா?, நேற்று நீங்கள் பதிவுத்திருமணம்  அவசரமாக செய்த  விடயத்தைக்கூட  நடிகையின் கலியாணம் போல பொதுவில் பகிரவில்லையே ?,முகநூலில் ஒரு செல்பி இல்லை?, என்றவாறு நிவேதா அசுரனை கலாய்த்தாள்!

 என்ன புதுப் பொண்ணு என்னைப்பற்றி சொல்லியிருக்கின்றானா?,. வந்ததில் இருந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை  !அவரின் திடீர் வருகை, என்னை சிறைமீட்டது !எல்லாம் கனவு போல இருக்கு!! ஆனால் நிஜம் அதனை  நிதானிப்பதுக்குள் திடீர் பதிவுத்திருமணம் ,அதுக்கும் உதவிய அபயக்கோன் அப்பா  . !அவரின் ஆலோசனைகள் என திருப்பங்கள் அதிகமாக இருக்கு அக்கா நிவேதா.

. வந்தவனுக்கு தோழி என்னிடம் ஒரு வார்த்தை சொல்ல மனமில்லை ,முகநூலில் வேண்டாம், என் கைபேசியில்கூட சொல்லாத ரகசியம் .

நிவேதா என் அவசரம் உனக்கு சொன்னால் புரியாது. புலம்பெயர் புறச்சுழ்நிலை சொல்லி உன்னை கலங்கடிக்க ஆசையில்லை. முகம் காணும் ஆசையுடன் ஓடிவந்தேன் !ஆண்டவன் கிருபையில் என் காதலி 5 வருட சிறையிருப்பை வேதனையோடு கழித்த நாட்களின் கதை இன்னொரு காவியம் போல நடிகன் தளத்தில் பாரிஸ் போனதும் எழுதுவேன் விரிவாக.!

 நிச்சயம் எழுது நண்பா! வாசிக்க காத்து இருக்கின்றேன். அப்படியே பூஜாவுக்கும் ஒரு வலையை திறந்து கொடுத்தாள் நல்லது.

செய்யலாம் !வாங்க மணமக்களை வாழ்த்துவோம் போய் என்றவாறே சுமா இருக்கும் இடம் நோக்கி நடந்தார்கள் நிவேதா, அசுரன், பூஜா  மூவரும்..

.தூரத்திலேயே சுமா அசுரனை நன்றியுடன் பார்த்தாரே எழுந்து நின்றாள்! வாங்க. எப்படி? இப்படி எல்லாம் உன்னால் ஜோசிக்க ?,எழுத முடியுது? என்று சிந்திப்பேன்!

ஆனால் தனிமையில் என் கலியாணத்துக்கு நீ செய்த பொருளாதார உதவிக்கு என்ன கைமாறு செய்ய !

நீ செய்த ஆய்வுத்தேடலுக்கு முன் அசுரன் செய்தது ஒன்றும்மில்லை! இதோ என் காதலியை கைபிடிக்க உன் கைதிகள் தேடல் உழைப்புக்கு  பரிசாக சில ஆயிரம் ஈரோக்கள் தான் இந்த ஏதிலியால் செய்ய முடிந்த உதவி.!




 அடிவாங்குவாய் அசுரன்.

நாங்கள் இருக்கின்றோம்! இப்ப பூஜாவேறு சேர்ந்த பின்னும் நீ அகதி  என்று சொன்னால் நம்பாது உலகம். சரி நாங்கள் பின் முகநூலில் பேசுவோம் இப்ப விருந்து உண்டு செல்.

 உன் விருந்துக்கு அழைக்கவில்லை நீ என்பதையும் மறக்கவில்லை .அதையும் ஒருநாள் என் தளத்தில் எழுதுவேன்.

 நீ எழுது சுமா ஆனால் அவசரம் என்ற சொல் வெறும் வார்த்தையில்லை அது இன்னொரு வலி அதனை இன்னொரு தொடராக எழுதுவேன் நடிகன் தளத்தில்.

ஆமா தனிமரம் உன் விழாவுக்கு வாழ்த்து சொல்லி இருப்பானே என்னைமுந்தி! .
அவன் அதிகாலையில் அழைத்து பேசிவிட்டு ஸ்கைப்பை மூடிவிட்டான்.

நீங்கள் இருவரும் தனித்தனி முகங்கள் என்றாலும் உங்களின் நட்பும்,இணைந்தகைகள் படம்போல  பிரிவையும் எழுதலாமே அசுரன் .ஏன் வம்பில் மாட்டவா?, ஆளைவிடுங்க!


 நானும் என் காதலியும் இன்னும் ஒரு வார்த்தையும் கதைக்கவில்லை! ஒரு பாட்டும் கேட்கவில்லை!!.நிஜமா பூஜா ?,நான் பேச நினைப்பதெல்லாம் அவரின் பாடலில் வந்துவிடுகின்றது .ஆனாலும் நாளை மீண்டும் பிரியும் அவரின் அருகாமையை நினைக்கும் போது இந்த நேரமே உயிர்விடலாம் போல இருக்கு சுமா அக்கா!

. சீச்சீ சிறையில் இருந்த போது இருந்த நம்பிக்கை இப்ப இல்லையா?? இன்னும் ஒரு வருடத்தில் நீயும் பாரிஸ் போய் அசுரனுடன் திருமணம் காணப்போறாய் !

அந்த சந்தோஸத்தை நினைத்தவாரே நீயும் முகநூல், வலை என்று வாசிப்பதுடன் புதிய மொழியான பிரெஞ்சையும் இங்கு இருந்து படி.

 இனி வேலைக்கு போகாதே வீண் அவஸ்த்தையும் வேண்டாம்! அன்புத்தோழியே என்று அழைக்க மாட்டேன் நேசிப்பு  மச்சாள் என்பேன் .அசுரன் அண்ணா என்றால் அவரின் மனைவி எனக்கு மச்சாள்முறைதானே?,


உங்க பேச்சு பிடிச்சு இருக்கு! ஏன் உவன் பேச்சு பிடிக்கலையா?? ஐய்யோ நீங்க வாயாடி .சரி சுமா மீண்டும் சந்திப்போம் நான் விடைபெறுகின்றேன் நாளைக்காலை பாரிஸ் நோக்கி  பயணம்

.இனி எப்போதும் போல முகநூல்,ஸ்கைப், வலை என்று அசுரன் வெட்டியாக இருப்பான் என்று சொல்ல ஆசை !ஆனால் பாரிஸ் வாழ்க்கைத்தான் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்! எல்லாம் நல்லதே நடக்கும்.


 உன் நேர் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள். இதோ சேர்ந்தே ஒரு செல்பி! வேண்டாம் தாயி!!

 நீ அதையும் முகநூலில் போட்டு என்னையும் ,அந்த உதவாக்கரை தனிமரத்தையும் இன்னும் மோதவிட வேண்டாம்!

 நன்றி மீண்டும் சந்திப்போம். சுமா.

நன்றி அசுரன் வருகைக்கு.

. என்னங்க! சொல்லு பூஜா நீ இனி பேசிக்கொண்டே இரு அதையும் அடுத்த தொடராக எழுத முன் இப்ப ஒரு ஓய்வு நாடி ஒரு பாட்டு கேட்க ஆசை! அதையும் உன் தேர்வில் விடுகின்றேன் பூஜாவே நீயே சொல்லு!

நான் என்ன உங்களைப்போல பாட்டுப்பிரியை இல்லை!ஆனாலும் கனாக்கான்கின்றேன் பாட்டு பிடிக்கும்!


சரி அதைக்கேட்டவாறே தனிமரம் எழுதிய முகம் காணும் ஆசையுடன் தொடருக்கு ஒரு சுபம் சொல்லுவம் இப்போது !!


இதன் பாகம் இரண்டு நிச்சயம் வரும் என்ற ஈழத்து /இலங்கை  அரசியல்வாதியின் வாக்குறுதிபோல சிறையில் காத்து இருப்போர் விடுதலை விரைவில் என்ற செய்தி தொடர் கதை போல  வரலாறு தொடரும்[[[[[[!
கும்மி அடிப்போம் பொதுவில் !



அதுவரை
நம்பிக்கையுடன் ஒரு !!சிறு முடிவு தொடருக்கு.!!



                                                     சுபம்!!!!!!

.

08 November 2015

முகம் காணும் ஆசையுடன் --36

முன்னம் இங்கே பார்க்கலாம்-http://www.thanimaram.org/2015/11/35.html.
நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும்மில்லை இந்த உண்மையைக் கண்டவன்  துறவி, ஞானி , தர்மதுரை படப்பாடல் போல இந்த நாட்டு அரசியலில்  உண்மையில் இங்கு இனவாதம் இல்லை என்று இன்றுவரை! பொதுவில் இத்தனை அப்பாவிகள் போராட்டம் என்று பத்திரிக்கை செய்தி! இவர்கள் அப்பாவிகள் என்ற  அமைச்சர் கூற்று, ஆணைக்குழு அறிக்கை எல்லாம் கேட்டும் இன்னும் மூடுமந்திரம் போல பொதுமன்னிப்பு கொடுக்க  கூட இந்த நாட்டு முதல்குடிமகனுக்கு  நெஞ்சலுத்தம்  அல்லது அரசியல் தைரியம் இல்லை .!


ஆனால் அடுத்த தேர்தல்  வாக்கு அரசியலும் அதனை ஏய்க்கும் வழியும் தெரியும். என்ன செய்ய இங்கு பணத்தை  வீசி எறிந்தால் பிரபல்ய நடிகையின் வருகை போல !


எதுவும் நடக்கும் !ஆனால் அதுக்கும் வழிவகை தெரிய வேண்டும் . நல்ல துறவி மறைந்த செய்தி போல இதை பொதுவில் சொல்ல நான் வெட்கி தலைகுனிய மாட்டேன்!


 இங்கு எங்கும் இனவாத முன்னெடுப்பு எப்போதும் இருந்தே வந்ததும், வருவதும் ஒன்றும் புதிதல்ல!அதுவும் இப்ப புதிய பாதை என்ற போர்வையில் பெரியண்ணாவும் ,சின்னமாமியும் போடும் அரசியல் வியாபாரம் எல்லாம் துணிந்து எழுத இங்கு ஒரு ஊடகமும் இதயசுத்தியுடன் சுதந்திரமாக இல்லை .




எல்லாம் தம் வியாபார நோக்கில் தான் வீறாப்பு இனவாத அலையில்!இன்னும் நாட்டில் ஏற்பட்ட இழப்பு  ஊடகத்தில் பார்த்தும் ,



 தப்பி வந்த பாதுகாப்பு படையின் உத்தமர்களின் ஊமைக்குரல் கேட்டும்  இன்னும் திருந்தவில்லை இந்தநாட்டு உத்தமர்கள்.இன்னும் .

இல்லை இதை பேசி இந்த நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் என்று போலி விசாரணை அழைப்பு என்ற பெயரில் கைதும், அதன் பின்னே இருக்கும் அரசியல் சித்து விளையாட்டும் சொல்லி உன்னை கலங்கட்டிக்க எனக்கும் ஆசையில்லை.

 உன் காதலியைவிடுவிக்க என்னால் ஆன உதவியை என் நட்பு மூலம் தனிப்பட்ட முயற்ச்சி ஊடாக விசாரனைக்கைதி மட்டுமே!



 இவர் மீது இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யவில்லை இதுவரை! .ஆனால் பிணை வழங்க யாரும்முன்வரவில்லை அரசியல் விளம்பரபோல தனிப்பட்ட சட்டதரணிகள் கூட கறுப்புவெள்ளை படம் போல அல்லது பிரியங்கா படம் போல வழக்கு ஏற்று நடத்த இலங்கையில்   இல்லை பணக்கார அரசியல்வாதிகள் போல  அதிரடிப்படை அம்மவாசை  போல  அரசியல்வாதிகளின் வெளிநாட்டு ஆயுத வியாபாரம் போல கோடியில் கிடைக்கும் வருமானம் போல இல்லை சிறைக்கைதிகள் விடுவிப்பு!


 ஆனால் அதிலும் கோடி கோடியாக சம்பாதித்து அவர்களை அப்பாவியாக புலம் பெய வைத்த கதை நான் அறிவேன் என்றாலும்!




பூஜாமீது  இலங்கை  சட்டரீதியாக  எந்த குற்றமும்   இல்லை என்று இதோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அறிக்கை!


 இதன் மூலம் இனி உன்  காதலியுடன் ஒன்று சேரலாம் அசுரன்!


ஆனால் ஒரு   செய்தி சொல்ல வேண்டும்!




தொடரும்.....  

07 November 2015

முகம் காணும் ஆசையுடன் --35

முன்னம் வாசிக்க இங்கே--http://www.thanimaram.org/2015/11/34.html

இனி---

 பட்டைதாரிகள் போராட்டத்துக்கு பணிந்து அமைச்சரவை ஓப்புதல் தந்தது சந்தோஸம் இனவாத சிந்தனை நீங்கியது !ஆனால் அப்பாவிகள் சிறையில் இருப்போர் பற்றி அமைச்சரவை முதல் ஆளும் இலங்கை குடிவேந்தன் கூட தன் அதிகாரம் பற்றி இனவாத நிலை கடந்து இன்றும் பொது மன்னிப்பு வழங்க விருப்பம் இல்லை.!!





 ஆனால் அவனை கொடியில் ஏற்றிய தமிழர் ஓட்டு வோவணம் போல சந்தி சிரிக்கின்றது.. ஆனால் அந்த நாத்தம் இப்ப வடக்கு மக்கள் முஸ்லிம் சகோதர உறவுகளிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லி மாமா இப்படி ஓதும் புதிய வரலாற்றுக்கு புள்ளடி ஈட்ட ஓவ்வொறு வடக்கு நல்ல ஓட்டு! கள்ள ஓடு ஈழத்தமிழன் எல்லாம் இவன் மூத்திரம் குடிச்சு தம்சந்ததியை  இனிமேல்கூட ஒரு சந்தேகப்புலி என்ற  அப்பாவியாக  சிங்களம்  சிறைப்பிடிக்காதாது இருக்க பிரார்த்திப்போம்  அப்புகாமி எல்லாம் மோடயன் என்று இவன் போல பண்டிதர்கள் தான் ஈழத்தில் சட்டம் பேசியே இனவாத தீயை ஏற்றிய வரலாறு மீண்டும் நாகரிக வார்த்தையாக வரும் இன்றைய அவலத்திலும்  அப்பாவி கைதிகள் விடுதலை பற்றியோ சரண் புகுந்த போராளிகள் , விடுதலை அவர்களின் புனர்வாழ்வு, அகதிகள் மீள்குடியேற்றம் இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி பொருளாதார வளர்ச்சி பற்றி சிந்தியாது யாழ் பாராளமன்ற பேச்சாளர்  வாழ்க என்று கோசம் போடுவோம்!



 அல்லது இஸ்லாமிய சகோதர உறவு போல நல்லாக வாழ தூவா ஓதுவோம் !இது இப்ப திட்டமிட்டு ஆடும் இலங்கை அரசிய நாடக மேடை கூத்தாடி அரசியல் இதை பொதுவெளியில் பேச எனக்கு விருப்பம் இல்லை ஐயா !




தங்களுக்கு கிடைக்க வேண்டிய தகமைப் பட்டம் ,பதவி எல்லாம் இனவாதம் பேச விரும்பாத புத்தன் வழி்யில் போகும் ஒரு சாமானிய சட்டதரனி நீங்கள்   அதனால் இழந்த  மரியாதை  அம்சங்கள் கெளவரம் பட சிவாஜி போல  என்பதை அறிந்து கொண்டேன் ஐயா!



ஆனால் இப்ப நீங்கள் தான் என் நம்பிக்கை நட்டத்திரம். நான் இந்த நாட்டில் இருப்பது ஒரு வாரம் தான்! ஆனால் என்னால் இங்கே   என் காதலி இருந்த ஊர் எங்கும் போகும் சுற்றுலா ஆசையில்லை ..!




ஆனால் நீங்கள் உங்கள் சட்ட நெளிவு, சுழிவு, அறிந்து அதன் ஊடாக என் காதலியை என்னோடு நாடு போற்ற வாழ்க என்று வழிகாட்டினால் நானும் நீங்கள் என்றாவது பாரீஸ் வந்தால் அங்கு என் தந்தை போல பாராமரிப்பேன்.



 உங்க `மகள் இத்தாலியில் இருப்பது எனக்கு இன்னொரு  உடன் பிறவாத சகோதரி இருப்பது போல ! இப்ப சொல்லுங்க நான் என்ன செய்ய வேண்டும்! இதோ என் காதலியை தேடி இலங்கை மனித உறுமை ஆணைக்குழு . .காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு,காணாமல் போனோனோர் மாவட்ட கண்காணிப்பு அமைப்பு இன்னும் பிற அரசா சார அமைப்பு குழுக்களுக்கு என் காதலி பற்றி என் சார்பில் இலங்கை/ஈழத்தில் பதிவு செய்த சட்டக்குறிப்புக்கள் எல்லாம் இருக்கு !


ஆனால் இனவாத  போரில் ஆகுதியான என் தாய் தந்தை பற்றி இன்னும் ஒரு பதிவும் என்னிடம் இல்லை!




 நான்  நடுரோட்டில் ஏதிலி  போல நிக்கின்றேன் என்னை இனி நல்ல வழிகாட்டுவது உங்க கையில் ஐயா! என்ற அசுரன் பேச்சை அசராமல் கேட்டவாறு இருந்தார் இலங்கையில் குற்றவியல் பிரபல்ய முன்னால்  அரச சட்டதரணி அபயக்கோன்!

அடித்து ஆடுவோம்....



 

05 November 2015

கவிதையும் காற்றும்.

கவிதை போல கதை  எழுத ஆசை!
காணாமல் போன கண்ணீர் காதல்
கடல்கடந்த துயரம் எல்லாம்
காற்றில்! காதல் கீதம் போல
கரைந்து எழுத இது என்ன
காவேரி கடலா ?,



காதல் என்ன  அருவியா ??இல்லை
காளை மனதில்
கருணை விடுதலை
காத்திருப்போர்  பட்டியலா??
கடவுளே நான் என்ன
கல்லாத மரமா ?,காதலில்
கருனையுடன்  காதல்;!
கடிதம் எழுத நேரம் இல்லை.!
கருணை மனுக்கொடுக்கும்
காவலன் காதலன்!
கடல்கடந்தவன் கற்றவனா?,
காதலியுடன் காணம் பாடும்
கல்லாதவன் காசு இல்லாத
கயவன் போலவா ??
காத்து இருக்கும் கிளியே
கவிதை பாடு காற்றில்!



கதை முடியும் நேரம்!

காலையில் வேளை
காணம் வரும் காற்றில்!





04 November 2015

முகம் காணும் ஆசையுடன் --34

முன்னம் பார்க்க இங்கே-http://www.thanimaram.org/2015/11/33.html!

இனி வாசிக்க....

நாட்டு மக்கள் எப்போதும் இனவாதம் .மதவாதம். மொழிவாதம் பற்றிய போதையில் இருக்க வேண்டும்! சாமானிய அப்பாவிகள் தொடர் நாடகத்தில் மூழ்கி முத்துக்குளிக்க வேண்டும் ஆனால் விலைவாசி பற்றியோ ??வீதியில் நடக்கும் படுகொலை பற்றியோ?, அல்லது பாலியல் சீரழிப்பு  பற்றியோ?, சிறிய சிந்தனையும் வரக்கூடாது. என்பதை திட்டமிட்டு அரங்கேற்றும் ஆட்சி பீடங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வழியில் இப்போது போதை பாவனை    அதிகரித்து பற்றி பேச வேண்டிய முற்றும் துறந்த கூட்டங்கள்..


 இனவாத மேதாவிகள் ஏனோ இப்போது புத்தன் வழியில் பிச்சை போல சிங்கப்பூர்  தேசம் வரை  அரச செலவில் போவதன் பின்னால் இருக்கும் அரசியல் திட்டமிடல் பற்றி இங்கும் யாரும் முகநூலில் இன்று பொங்கவில்லை!


 பொங்கினால் முகநூலை முடக்க வழி இருக்கு !ஆனால் பொதுவெளியில் ஆட்சி பீடம் நீயா அவன் ;கில்லியா; தில் ஹீரோவா ; இல்லை தீனாவா?, ஆப்பிஸர் வரச்சொன்னார் ஆனால் அரவிந்தன் பட பார்த்தீபன் போல வீதியில் சுட்டுப்போட்டாலும் .




இன்னும் இனவாத கூட்டம் எந்த போலி பாஸ்போட்டில் நாட்டை விட்டுப்போனாலும், இல்லை இலங்கை  பாராளமன்றம் போனாலும் இனவாத உச்சம் இன்னும் கொக்கரிக்கும் வழியில் மக்கள் பிரதிநிதி நான் கட்சி தலைவர் என்று தென்னிலங்கையில் வீட்டுக்கு வீடு கட்சி !ஆனால் பெருண்பான்மை இனவாதம் போல தமிழர் பக்கம் மட்டும் இன்னும் ஒரே வீடு இருவாசல் என்ற பித்தலாட்டம் !எல்லாம் சித்தப்பூ செட்டப்பூ போல பெரியண்ணாவின் பித்தலாட்டம் இதை எந்த அப்பாவி ஈழத்தவன் பொதுவில் செருப்பு கொண்டு தேசிய கொள்கை வகுப்பாளருக்கு வேட்டி கட்டிய தமிழ்நாட்டு வேசப்புலி சிதம்பரத்துக்கு செருப்பு வீசியது போல  சிவசங்கர் மேனனுக்கும் வீசி எறிவார்கள்!இலங்கையில் உன் சித்து அரசியல் விளையாட்டு வேசம் நிரூபாமா ராவ் போல பலர் இந்திய நாட்டாமை மேதாவிகள் செய்த அட்டூளியம் என்றும் மறவாது !
 




 ஆனால் எம் தலைவன் தமிழிலி்ல் இஸ்லாமிய உறவுகளிடம் மன்னிப்பு கேட்ட பின்னும் ஆங்கிலம் பேசவில்லை என்று இன்னொரு தொடர் எழுத இந்து ராம் என்று மாமாக்கள் இங்கு வந்து அவர் மகனுடன் நெற்றிக்கன் படம் போல விளையாடும் கதை எல்லாம் அப்பாவி தமிழர் அறியா வண்ணம் நடக்கும் போதை விளையாட்டு இப்ப பொதுவில் தமிழர், சிங்களவர், என்று எல்லை மீறி ஆடும் அரசியல் ஆட்டம் எல்லாம் தொடரும் கதை இனி!




 இங்கு யுத்தம் இல்லை ஆனால் மக்கள் சந்தோஷத்துடன் இதோ கொழும்பில் ,யாழிலில் , மட்டக்களப்பில். வன்னியில் என்று வடிவாக படம்பிடிக்க இணைய வசதியிருக்கு என்று காட்ட தெரிந்த ஆட்சியாளருக்கு!




 வதைமுகாமில் அப்பாவி  நிர்வான நிலைசேதுகள்  பற்றியோ அல்லது மறைந்த பூலாந்தேவி போல இன்றும் இலங்கை ஆட்சியின் சிறைகள். புனர்வாழ்வு சிறப்பு முகாங்கள் .  சீர்திருத்த விசேஷட சிறைச்சாலைகளில்  நிர்வான கோல நான் கடவுள் போல இருக்கும் நம் நங்கைகள் நிலை பற்றி பொதுவில் பேச இன்னும் தயக்கம் §






கேட்டால் யாரோ ஒரு சட்டமா அதிபர் திணைக்களம் தான்   பதில் சொல்ல வேண்டும் நீதிமன்றத்தில்! ஆனால் சட்டம் படிக்காத மூத்த குடிமகன் கொலை வழக்கு விசாரிக்க மட்டும் சட்டத்தில் இடம் இல்லை என்று ஓய்யாரமாக அன்றைய தில்லான மோகனாம்பாள்  போல மறைந்து இருந்து பார்க்கும் மாயம் என்ன என்று வாக்குவாதம் செய்ய ஆசையில்லை பாலன்.


 நீ தேடித் தந்த  உன் முகநூல் நட்பு சட்டதணியுடன் நானே நேரில் பேசுகின்றேன் !.எனக்காக நீ வெற்றிக்கொடி கட்டு பட  வடிவேல் போல குடைபிடிக்கும் ஆடு நிலை போல இலங்கையில் உன் நிலை வெட்டும் பலியாடு போல வரலாறு  வேண்டாம் !நான் வென்றால் என் காதலியுடன்  டூயட் பாடுவேன் !



அதுக்கு நீ என்ன பாட்டு வானொலியில் போடுவாய்?,  உங்களுக்கு எப்போதும் பாட்டு ஒரு கொலைவெறி அசுரன்.

 முதலில் யாதார்த்த உலகு வாங்க!ஆனால் இன்னும் நீங்கள் சகோதர மொழியில் புலமைமிக்க கவி என்பதை கிளறி நோகடிக்க ஆசையில்லை.


 ஆனால் அந்த சட்டதரணியிடம் பேசும் போது என்னை அறிந்தவன் என்று சொல்லாமல் உங்க விடயத்தை பேசுங்க .

ஒரு அவசர வானொலி நேரடி நிகழ்ச்சி தொகுப்பு செய்யும் தேடலில் நான் மலையகம் போகின்றேன். அங்கும் கூட நீங்க மீண்டும் இலங்கை வந்த செய்தி சொல்ல மாட்டேன்.


 என் முகநூலிலும் கூட அதையே நீங்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இன்று நான் போகும் ஊர் சொல்ல மாட்டேன். உங்கள் நட்பு இன்னும் உங்கள் இன்னொரு தொடர்கதை எல்லாம் பேச நேரமில்லை ஆனால் இந்தப்பாட்டு


 உங்க கற்பனைக்கு விட்டுபோறன்!



  பாட்டு கேட்ட வாரே அந்த முகவரி தேடுங்க...



 உங்க தீர்வு இன்றைய முதல்குடிமகன் போல எது இனி வரும் நாட்களில் நல்ல  தீர்வு!கிடைத்தால் என்னோடு பேசுங்க இல்லையே எப்போதும் போல உங்க  மரம் வளர வாழ்த்துக்கள் காதல் மரம் செளிக்க வாழ்த்து  என்று என் வானொலியில் எந்த பாடல் போட உங்க விரோதி தனிமரம் சினேஹா பாட்டு போட்டாள் நாளை எனக்கு தனிமெயில் வரும் உள்குத்தாக ஆனாலும் நீங்க தேட காதல் கவிதை பேச என் வானோலியில் இன்னொரு நிகழ்ச்சி செய்ய ஆசையுண்டு!





தொடர்ந்து தேடலாம்.......


விரைந்து முகம் காணலாம்[[[[[

03 November 2015

முகம் காணும் ஆசையுடன் -33

முன்னம் காண இங்கே-http://www.thanimaram.org/2015/11/32.html.
பின்னம் இனி....


நல்லாட்சி இது என்று ஐநாவரை அமைதியாக ஆடிய கூத்தை அப்பாவி சிங்கள வாக்கு வங்கி  மக்கள் கூட்டமும் கூட !இன்று இதுவும் பழைய மொந்தையில் புதிய கள்ளு என்பதை  நாளார்ந்தம் நாளேடுகளில் நம் மாணவர்கள் மீது இட்ட வன்முறை வெறியாட்டம் பற்றி முகநூல் முதல் ஊடகம்வரை பேசும் ஆர்வத்தில் இருப்பது !


ஆட்சியின் வீழ்ச்சி பற்றிய ஒரு தெளிவு என்றாலும்! இன்னும் இனவாத சிந்தனை மாறவில்லை! இதே போலத்தான் குட்டிமணி வெலிக்கடைச்சிறையில்  கண்ணைப்பிடிங்கியதும் ;இன்றைய எதிர்கட்சிதலைவர்  முன்னோர் காலிமுகத்திடலில் வேட்டி கிழி்த்து ஓடவிட்ட வரலாறு எல்லாம் ஏனோ மறந்து போய் !காலவ்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று இலங்கை பாராளுமன்றத்தில் இன்று கேட்கும் இவர்களும் ?, தான் ஈழப்போரை ஊதி அப்பாவிகளை கொன்றுவிட துணை போனவர்கள்!


  ஆனால் அதிகாரம் நம்பக்கம் என்ற போதையில்   வேட்டி கட்டியவர்கள் இன்று  அப்பாவிகள் சிறைக்கைதிகள் விடுதலை பற்றி வாய் மூடிய நிலை  ஊமைவிழிகள் போல இருட்டில் வாழும் இன விடுதலைப்பயணம்  ஒரு புறம் ,இன்னும் சந்தேக புலி என்று  காணமல் போனவர்கள். ,இறுதியுத்தத்தில் சரண் அடைந்து இன்னும்  புனர்வாழ்வு முகாம்களில் குற்றுயிருடன் வாழும் அப்பாவி கடைநிலைப்போராளிகள் சுகவாழ்வு,.  மீள்குடியேற்றம் ,சொந்த காணியை இராணுவம்  அதிகார மையம் இது என்று நாட்டாமை செய்யும் நிலை தொடர்கதையாக இருந்தாலும் !

  இது நல்லாட்சி என்று பல்தேசியத்துக்கும் ,பாரத தேசவேடதாரிகளுக்கும் செங்கோல்தூக்கும் வக்காலத்து  ஜால்ரா வாசிக்கும் அதிகாரம் கொடுத்த மக்கள்  மனநிலை பற்றி பேச நேரமில்லையாம் !பாராளமன்றத்தில் !


ஆனால் தமிழ் பாராளமன்ற புதிய உறுப்பினர்  சிங்களத்தில் உரையாற்றியது தவறு என்று வீரப்புலியாக ;கொட்டைப்புலி,  இராவா அடித்த புலி, குறுட்டுப்புலி இவர் வம்சம் அக்கரையில் இன்னும் சூறப்புலி  என்று எல்லாம் முகநூலில் கும்ம இப்ப நேரம் இல்லை  பாலன்!


 அசுரன் இலங்கை  வந்தது என்  தனிப்பட்ட தேடலில். இந்த நாட்டில் இனவாத சிந்தனை நீங்கியும். நாட்டின்  தூரநோக்கு வளர்ச்சி சிந்தனையும்  வரும் வரை.  அதனை வலியுறுத்தி மக்கள் வீதிக்கு வராத நிலை  வரையும் இந்த இலங்கை ஈழத்தேசம் நிம்மதி காணாது ! இதுதான் சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் நிலை!

  மக்கள் வாக்கினை வாங்கி இரண்டு கட்சியும் ஆடு புலியாட்டம் என்று ஆடிக்கொண்டே இருப்பார்கள் .ஆனால் அப்பாவிகள் இன்னும் கண்ணீர் சிந்திக் கொண்டே ஓலம்மிட்ட வாறு அரபுலகம் என்றும் ,அவுஸ்ரேலியா என்றும் கப்பல் ஏறிக்கொண்டே இருப்பார்கள் !


அந்த துயரம் எல்லாம் தொடர்கதை ஆனால் அதை யாரும் எழுத முகநூலிலும், வலையிலும் தயார் இல்லை .இதைச்சொல்லி  பாலன் உன் காலை நிகழ்ச்சியை இரவுப்பொழுது இரவின் மடியின் போல தாலாட்ட எண்ணம் இல்லை .ஏன்னா சன்னி லியோன் கூட வரபோறா[[


ஏனா ?,

இப்ப இங்கே வா செல்லம் என்று பாட  தூண்டிக்கொண்டு இருக்கும் இன்னொரு நவீன போராட்டம் பற்றி நீ அறிவாய்.!

 ஆனால் பேசமாட்டாய்  !!


சுயநலம் அதிகம் உனக்கும் . ஆனாலும் நான்  உன்னிடம் கேட்பது நல்ல ஒரு சட்டதரணி முகவரி தா ?,அவர் மூலம் தான் இனி என் தேடல் தொடரவேண்டிய நிலையில்!


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் டிஜேவுக்கு சட்டதரணி நட்பாக இல்லை முகநூலில் கூட, ஆனாலும் தேடுவோம் சேர்! நல்ல சட்டதரணி நமக்கு நிச்சயம் கிடைப்பார்!


விரைந்து தேடுவோம்.......