30 September 2012

அந்த நாள் ஞாபகம் -2

வணக்கம் உறவுகளே!
சினிமா திரையரங்கு நினைவுகளோடு வரும் அந்த நாள் ஞாபகம் ஊடாக இரண்டாவது பதிவு இது.


ஒருவனின் தனிப்பட்ட வாழ்வில் வசந்தகாலம்,வரட்சிக்காலம் இலையுதிர்காலம்,இருண்டகாலம் எல்லாம் வரமுடியுமா ?வந்தால் எப்படி இருக்கும் என்பதை எனக்கு அனுபவரீதியாக கற்றுத்தந்த மண் வவுனியா

.இந்த ஊரில் நான்கு திரையரங்கு இருக்கு அவை ரோயல்,நியூ இந்திரா,சிரிமுருகன்,வசந்தி என அவை எல்லாவற்றிலும் படம் பார்த்தேன்:))) தனித்தனியாக இந்த திரைகள் வரும் .இனிமேல்!


வசந்தி-வவுனியா!

இங்கே விற்பனைப்பிரதிநிதியாக வேலை மாற்றம் கிடைத்த போது என்னோடு குடும்பம் யாரும் வரவில்லை. அவர்கள் ஒருகரை நான் ஒரு கரை நாட்டின் இனவாத யுத்தம் காரணமாக.

என்னோடு விற்பனைப்பிரதிநிதி வேலையில் நண்பர்கள் ஆக சேர்ந்து இருந்தவர்கள்21 பேர் இவர்களில் சிங்களம்,இஸ்லாமிய நண்பர்களும் அடக்கம் .இன்று சிலர் தொடர்பில் இருக்கின்றார்கள்.

எல்லாரும் தங்கி இருந்தது ஒரே ஒரு அடுக்குமாடித் தொடரில்

.அது மன்னார் வீதிக்கு போகும் வழியில் இருந்தது ஒரு காலத்தில் இந்த வீடு அரசியலிலும் பெயர் பொறிக்கப்பட்டது .என்பதை இப்போதுநான் வாசித்த ஈழப்போராட்டதில் எனது சாட்சியம் நூல் சொல்லிய பின் தான் நானே பிரமிப்போடு நோக்குகின்றேன்.

இதனை இன்னொருவர் பொறுப்பாக கண்கானிப்பதால் அவரிடம் தான் நாம் அன்று வாடகை செலுத்துவோம்.

எந்த நேரத்திலும் இந்த வாடகை அறையில் நண்பர்களின் அலட்டல்,புலம்பல் சீட்டாட்டம்,புகைத்தல்,சோமபாணம் என பரவிக்கிடக்கும் விரும்பினால் குடி ,புகை உன் விருப்பம் என்று மட்டும் சொல்லும் நட்புக்கள் யார் மீதும் எதையும் தினித்தது இல்லை .

இங்கே இருந்த ஒரு நண்பனிடம் தான் நான் சகோதரமொழியை (சிங்களம்)அதிகம் மேலதிகமாக கற்றது பேச,எழுது இவர்களுடன் சுற்றிய இடங்கள் அதிகம் மதவாச்சி,திருகோணமலை ,கண்டி என்று நட்பில் ஒருவரிடமும் பேதம் இருந்தது இல்லை என்பதே சிறப்பான விடயம்.

இந்த நட்புக்களின் வீட்டில் என் நினைவுகள் வாழ்கின்றது இன்றுவரை என்பதே எனக்கு அதிகம் பொக்கிசமான சொத்து.

இந்த நட்புக்களின் நண்பிகள் .நண்பிகளின் நண்பர்கள் என எப்போதும் வாரநாட்கள் ஜாலியாக நகரும் .அடிக்கடி இராணுவத்தின் சுற்றிவலைப்புக்கள் ,சோதனைகள் எம்மை சூழ்ந்தாலும் ஆபத்தில் பாஸ் கொண்டுவராத நாட்களில் பாஸ் இருக்கும் வாடகை அறையில் இருந்து கொண்டு வந்து எங்கள் நண்பர்களை மீட்டது என சிங்கள ,இஸ்லாமிய நட்புக்களின் நல்ல இதயங்களை மறக்க முடியாது வெறுக்க முடியாது புதியவர்கள் சிலருக்காக.!

இன்றும் இந்த முகம் தெரிந்த நட்புக்கள் எனக்கு மேலானது. .

இதை பொதுவில் சொல்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை .நட்பில் இன,மதம் மொழி இடையில் வருவதை தவறு என்றால் நான் யாரையும் விட்டுப் போவேன் எனக்கு இருக்கும் பல நல்ல இதயங்கள் உறவே எனக்கு போதுமானது .

அந்த நட்பு பிரதானம் இந்த வலையில் ,முகநூலில் என என எங்கும் என் தெளிந்த கருத்தினைச் நாகரிகமாக சொல்லும் உரிமை எனக்கு இருக்கு.

இந்த வசந்தியில் நாம் இந்தப்படம் பார்த்தபோது. எங்கள் நண்பர்களோடு இருந்து படம்பார்த்த ஜோடிகள் சிலர் அப்போது இல்லறத்தில் இணையவில்லை.

.பின் ஒருகாலம் இரு இனங்கள் இணைந்த போது அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் இன்னும் பசுமையான நாட்கள். (தனியாக பதிவு போடுவேன் நேரம் வரும் போது.:))))) )

காலத்தின் கோலம் இதே திரையரங்கில் என் நண்பன் ரவியும் ,சாலிக்காவும் சேர்ந்து படம் பார்த்த போது !


அப்போதும் அருகில் இருந்தவன்.தனிமரம்.

விதி பலரைப்பிரித்து இருக்கின்றது யுத்தம் மூலம்
.அந்த உணர்வை கொச்சைப்படுத்துவது அழகு இல்லை .ஆனாலும் ரவியின் சாலிக்கா அவர்கள் நட்பு எனக்கும் ஒரு சுகமான நாட்கள்!

இந்தப் படம் நம்மவர் இசையில் வந்த படம் உதயா இசையமைப்பு.

இவரின் இசையில் நிரோசா விராஜினி பின்நாட்களில் வேற ஒரு படத்தில் பாடல் பாடியிருந்தார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.

முதல்நாள் படம் பார்த்துவிட்டு வந்த மறுநாள் 2000 ஆண்டு ஒக்டோபரில் இந்த திரையரங்கில் குண்டு இருந்தது என்று திரையரங்கை 2 மாதம் முடக்கிய செய்தி ஏனோ ??தமிழ் பத்திரிக்கை சொல்லவில்லை.

சிங்களநாடேடு தீவிரவாதிகள் குண்டுவைத்து இருந்தார்கள் இராணுவம் மீட்டது என்று லங்காதீப செய்தி சென்னதையும் மறந்துவிடவில்லை. அனுபவம் ,வாசிப்பு மாறுபடும், ஆனால் நடுநிலை என்பது??? நாகரிகம் முக்கியம் ஊடகத்துக்கு விசமாக இனவாதத்தை தினிக்ககூடாது .!!



28 September 2012

அந்த நாள் ஞாபகம் தொடர்-1

வணக்கம் உறவுகளே நலமா?

தனிமரம் அதிகம் தொடரினை தாங்கிவந்தாலும்.


 நேரம் கிடைக்கும் போது சில சின்னச்சின்ன சிலிர்ப்புக்கள் தந்த சினிமாத் திரையரங்குகள் பற்றி அசைபோடலாம் என்ற ஆசையில் தொடரும் தொடர் இந்த அந்தநாள் ஞாபகம்.!

மனோகரா -யாழ்ப்பாணம்.


.ஒவ்வொருத்தரும் பொழுதுபோக்கும் வழிமுறைகளில் இந்த சினிமாவும் ஒன்று பல்வேறுமொழியில், பல்வேறுநாட்டில் இருந்து வரும் சினிமா என்னையும் சீண்டியிருக்கின்றது

.இப்போது கொஞ்சம் பொருளாதார தேடலில் அதிகம் சினிமா பார்ப்பது இல்லை என்றாலும் முன்னர் நானும் அதிகம் படம் பார்த்தவன் .:)))))

என் முதல் சினிமா திரையரங்கை நோக்கிய பயணம் சின்ன வயதில் தொடங்கியது.!

ஈழத்தில் வடக்கே ஒரு தீவில் பிறந்த எனக்கு சினிமா பார்க்க திரையரங்கு காட்ட கூட்டிக்கொண்டு போனவர்கள் அயல்வீட்டுக்கார மாமாவும் ,மாமியும் தான் தங்கள் பிள்ளைகளுடன் என்னையும் சேர்த்துக்கொண்டு.

எங்கள் கிராமத்தைவிட்டு பட்டணம் போவது என்பது 1990 இல் விண்வெளிக்குப் போவது போல ஆச்சரியமானவிடயம். .தாத்தா பட்டணம் போனாலும் பேரன்களுக்கு எள்ளுப்பொரி வாங்கியந்து பாசம் பொழிவதுடன் போய்விடும் காலத்தை பக்கத்துவீட்டு மாமிதான் மாற்றிக் காட்டினவா.

" உவனை நான் பத்திரமாக கூட்டிக்கொண்டுவருவேன் என்று .

அயல்நாட்டுப்படை அமைதி என்று வந்து அலங்கோலப்படுத்திய நிலையைப் பொறுக்கமுடியாமல் மாமாக்கள் ,அண்ணாக்கள் ,போராட்ட வழியில் போனதால் கிராமத்தில் இருந்த சின்னவர்களும் வழி மாறிப்போய்விடுவார்கள் என்ற பயத்தில் பட்டணம் போகவிட்டது இல்லை பலர் வீட்டில்.

என்றாலும் என் வீட்டில் அந்த மாமியின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து அனுப்பிய பட்டணம் பார்த்தநாள் இன்னும் மனதில் பசுமரத்தாணி போல .

அந்த மாமியின் உடன் பிறப்பு பட்டணத்தில் (நல்லூர்)குடும்பமாக குடியிருந்தார்கள். கிராமத்தில் இருந்து அதிகாலையில் வெளிக்கிட்ட நாம் மதியம் மாமியின் தம்பி வீட்டில் சாப்பிட்ட பின் திரையரங்கு போக முதலில் போனது ராஜா திரையரங்கு.

அப்போது ஓடிய படம்!பூப்பூவாய் பூத்திருக்கு.

அந்தக்காட்சிக்கு முன் கூட்டியே காட்சிகூடம் நிறைந்த நிலையில்.














மனோகராவில் பார்த்த படம் மனிதன்.












அன்று முதல் ரஜனி எனக்குப் பிடித்த நடிகர்கள் வரிசையில் சேர்ந்துகொண்டார்

.ரஜனிகாந்த்,ரூபினி,வினுச்சக்கரவர்த்தி,ரகுவரன்,சிறிவித்யா ,மற்றும் பலர் நடித்த இந்தப்படம் ரஜனிக்கு இன்னொரு வெற்றிப்படம்.ரூபினி பின் ரஜனியுடன் உழைப்பாளியில் குத்துப்பாட்டுக்கு ஆடியது மறக்கமுடியாது.

வைரமுத்துவின் பாடல் பிரபல்யம்" வானத்தைப்பார்த்தேன் .
இசை -சந்திரபோஸ்.

.."எஸ்.பி.முத்துராமன் இயக்கம் .ஏவிஎம் தயாரிப்பு என இந்தப்படம் வெள்ளித்திரையில் பெல்கனியில் இருந்து பார்த்த பரவசம் பின் எந்தப்படமும் மனோகரா திரையரங்கில் நான் மீண்டும் பார்க்கும் நிலையை நம்நாட்டு யுத்தம் காரணமாக முடியவில்லை.. திரையரங்கும் பின் வந்த நாட்களில் இயங்கவில்லை இன்றுவரை என நினைக்கின்றேன் தாயக உறவுகள்தான் நிஜம் சொல்லணும்!:))))

இந்தப்படம் ஒன்றாக பார்த்த அந்த மாமி இன்று கனடிய தேசத்திலும் நான் பாரிஸ் தேசத்திலும் என வாழ்ந்தாலும் நம் உறவு அலைபேசியில் தொடர்கின்றது.என்னோடு ஒன்றாக படித்தவள் அன்று படம் முடிந்து யாழ் கல்யானி கூல்பாரில் என்னோடு ஐஸ்சொக் ஐஸ்க்கிரீம் சாப்பிட்டவள் இன்றும் என்னிடம் கேட்பது எப்படா நீ ?கோபத்தை குறைக்கப்போறாய்?? என் மகன் பள்ளிக்கூடம் போறான் நீ பாரிசில் என்ன செய்கின்றாய் ??
என்ன பதில் சொல்ல ஹீ இன்னும் திருந்தாத ஜென்மன் என்றா????

மனிதன் படத்தில் இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும்.-பாடிய மலேசிய வாசுதேவன் இன்று நம்மோடு இல்லை,அத்தோடு ரகுவரன், சிறிவித்யா, என யாரும் நம்மோடு இல்லை அதே போல மனோகரா திரையரங்கும் தான்! ஆனால் நினைவு வாழ்கின்றது.!


//

27 September 2012

கருகிப்போன பூ!!!!

வசந்தகாலத்தில் இதயவாசல் வந்தாய்.
வாலிபத்தின் பூவாக காதல்பூ பூத்ததடி
இலையுதிர் காலத்தில் இரக்கம் இல்லாமல்
இடித்துரைத்தாய் .உன் காதல் வேசமடா
இனியும் என்னைப் பார்க்காதே எட்டிநின்று.
இதயம் தட்டிவிட்டுப் போய் !
கழுவும் குழாயில் வருவது நீரில்லை
என் கண்ணீர் காதலியே.!


கருகிப்போன பூவாக காத்திருக்கின்றேன்
கார்காலத்தில் பட்டுப் போன மரமாக.!

:::::;;;-

பின் பனிக்காலத்தில் பித்தனாகி
பின் தொடர்ந்தேன். பிடித்தவள் நீ
பின் தொடர பிரியாத வரம் கேட்டேன்.
பிணம் விழும் தேசத்தில்
பிறந்தவன் நீ .
பிடிக்கவில்லை,
பிரியம் இல்லை .என்றவள்!
பிரிந்த பின் உருகுவது காதலா?


பிரியம் வந்ததா பிரெஞ்சுக்காரியே?
பிழைத்துவிட்டான் பிடிவாதக்காரன்!
///
டிஸ்கி---- யாவும் கற்பனையே!!!!

24 September 2012

urukum piranchukkathali

அரச விடுமுறை நாட்களில் ஓய்வை நாடும் விழிகள் இந்த ஓய்வு கிடைக்க காரணம் என்ன என்று விழிப்புணர்வு அடைந்து இருப்பார்களா ? புத்தன் ஞானம் அடைந்த முழுமதிநாள் போயா விடுமுறைநாள் என்று இலங்கையில் அரச விடுமுறை நாளாக இருக்கின்றது. தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும் முதல்நாள் வாங்கி வைத்த ஓல்ட் அறக்கு (சாரயம் - டாஸ்மர்க் மூடிவிடுவார்கள் நம்நாட்டில்) சீட்டு ஆட்டம் ஆடும் போது உதவிக்கு வரும் நண்பர்கள் மேசைக்கு ஒல்ட் அறக்கு உள்ளே போனால் வருவது எல்லாம் புலம்பலும் வீரவசனங்களும் தான். சீட்டு ஆட்டம் ஆடும் போது சிந்தனையில் அரசியல் வந்துவிட்டால் இலங்கை பாராளுமன்ற கதிரைப்பேரம் பேசுதல் நிலைபோல நான்தான் வெல்லுவேன், இந்தா பிடி என்பக்கம் தான் வெற்றி என்று கோஸம் வைத்து விளையாட்டை கொழும்பு மீன் சந்தையில் பார்க்கலாம்.

சீட்டு ஆட்டம் தப்பு, இந்த போயா நாளில் என்று புத்த போதனை பன்சாலையில் சொல்லும் பிக்குவிடம் ஓம் என்று கேட்டுவிட்டு வந்து வேதாளம் முருங்கை மரம் எறியகதை போல இவர்கள் ஆடும் சீட்டு ஆட்டம் மீன்சந்தை தாண்டி கொச்சிக்கடை அந்தோனியார் வீதி வரை ஆளுக்கு ஒரு குழு ஆடிக்கொண்டு இருக்கும். பதிவுலகில் இனவாதம் பரப்பவும் மதவாததுக்கு தூபம் போடும் குழுக்கள் போலவும். 

இப்படித்தான் தாய்லாந்து சாங்கலா கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு அரச விடுமுறைநாள். நீராட்டு விழா நம்மூரில் கார்த்திகைத் தீபம் போல! கும்பமேளா திருவிழா போல தாய்லாந்து வாசிகள் இந்த நீர் விளையாட்டை மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடுவார்கள். அதில் பாலியல் தொழில் புரிவோர் இந்த நாளில் தங்கள் பாவங்கள் தீரும் நாள் என்று எண்ணி தண்ணீரில் தென்னம்பாலையில் செய்த கும்பம் போன்ற ஒரு விளக்கினை ஆற்றங் கரைகளிலும் நீர் நிலைகளிலும் விளக்கு ஏற்றி நீரில் விடுவார்கள். 

இந்நாளில் சங்கா கிராமத்தில் எந்த வீதியிலும் பாலியல் விடுதிகள் இயங்காது. ஒருமித்த கடையடைப்பு செய்து தங்கள் ஒற்றுமையை மற்றவர்களுக்குக்கு காட்டுவார்கள். அரசியல் ஆறைகூவல் இல்லை இது ஆண்டாண்டு நடக்கும். இந்த விழாவைக்காண பல நாட்டவர்கள், ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற போர்வையில் விடுப்புப் பார்க்க விரைந்து வருவார்கள். எங்களுக்கும் ஆசை வந்தது விடுதியில் சாப்பாட்டுடனும் நித்திரையுடனும் போகும் நாளை கொஞ்சம் சந்தோசம் மிக்க நாளாக மாற்றவோம் என்று நாங்கள் மூவரும் வெளியில் வந்தோம். என்னுடன் தேவன், காந்தன் என மூவருமாக முதலில் ஐரோப்பாவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கச் சென்றோம்.

இந்தக் கிராமத்தில் தூரதேசத்துக்கு அழைப்பு எடுக்க அதிகம் வீதிகள் தாண்டவேண்டும். ஓல்க்கோட் மாவத்தையில் பாதணி தேடி அலைவது போல! அலைந்தால் எங்காவது ஒரு தாய்லாந்து அன்னை ஒரு குடையின் கீழ் கைபேசியுடன் காதிருப்பார். வெளியிடங்களுக்கும் வெளிநாட்டுக்கும் அழைப்பு எடுக்கும் தொலைபேசி மையமாக அவரிடம் இருப்பது ஒரு குடை இரு கதிரை இரு கைபேசி இதுதான் தொலைபேசி பரிவர்த்தனை நிலையம். இந்த சங்கா கிராம வீதியில் ஆங்கிலம் தகறாறு. 

இவர்கள் கிராமிய பஞ்சாயத்து நீதியில் ஆங்கிலம் வழிகாட்டவில்லை. கிராமியக் கல்வியை முன்னேற்ற முன்னேறியது ஊழல் மூலம் தன் வருவாயை மட்டும்தான். அதனால்தான் தச்சின்சிங்கா லண்டனில் அரசியல் தஞ்சம் கோரும் அளவுக்கு பின் வந்த நாட்களில் நாட்டில் நெருக்கடி வந்தது. எங்கே போனாலும் பிழைக்க வழிகாட்டும் மொழி சைகை (உடல்வாகு) மொழி நாங்களும் தாய்லாந்து பாட்டியிடம் தொலைபேசி எடுக்க முதலில் சைகைமொழியில் செயல்பட்டதில் வெற்றிகிட்டியது. ஐரோப்பா தொடர்பு இலக்கம் பாவனையில் இல்லை என்று வந்த பதில் மனதில் பயத்தினைத் தந்தது. 

கையில் காசும் அதிகம் இல்லை. இனி எங்கள் கழுத்தில் கைகளில் இருக்கும் அணிகலன்ளைத் தான் விற்கவேண்டும். இல்லை அடைவு வைக்க வேண்டும். அடைவு வைக்க கடவுச் சீட்டில் விசாக்காலம் இருக்க வேண்டும். விசா முடிந்துவிட்டது. சட்டவிரோதமாக தங்கியிருக்கும் எங்களின் நிலை

23 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -16

அரசியல் படிக்காதவன் இன வெறியூட்ட மாட்டான். அரசியல் மற்றும் சட்டம், மொழி, நிர்வாகம் படித்த பட்டதாரிகள்தான் தங்கள் சுயநலத்துக்கு சமவுடமை என்றும் மதம் என்றும் இனம் என்றும் தூரநோக்கு இல்லாது இன வாக்கு அரசியல் செய்வார்கள். இன்றும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பல பிரதிநிதித்துவம் இல்லாமல் போக காரணம் இந்த உணர்ச்சிவசப்படும் அரசியலைத் தூண்டிவிடும் பட்டதாரிகள்தான்.


சாமானிய படிக்காதவன் தன் வழியில் வழிப்போக்கனாக ஓட்டுப் போட்டுவிட்டு சாதனை செய்துகொண்டே போவார்கள்.

மக்கள் தலைவர் காமராஜர் போல இப்படி எல்லாம் மனம் விட்டுப்பேசும் ராகுல் இங்கு இருந்திருந்தால் தேவனுக்கும் அவனுக்கும் நிச்சயம் கைகலப்பு வந்திருக்கும். சுடுவன் என்பவனும் வெட்டுவன் என்பவனும் போர் முனையில் இருக்காமல் தாய்லாந்தில் வந்து வீரம்பேசும் வாய்ச்சொல்லில் வீராட்டிகள். சில புலம்பெயர் விமர்சகர்கள் இனவாதம் வேண்டாம் என்றால் சிங்களவன் வாழ்பிடி என்பது போல!

கண்ணாடி வீட்டில் கல் எறிய வெளிக்கிட்டால் எல்லோருக்கும் படும். எட்டுப் பேருக்கு இடையில் 1956 இல் வந்த தனிச்சிங்களச் சட்டம் போல தமிழ் உணர்வு வந்து போனவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னும் மிதவாதம் பேசி சிறிமாவின் முந்தானையில் சீரழிந்த சமசாமாயக் கட்சி என்.எம்.பெரேரா போல ஒரு பக்கம். நீங்களும் வேண்டாம், இந்த அரசியலும் வேண்டாம் என்று துறந்து போன சாமானியன் வரிசையில் சிலர் இருப்பர்.

என்னையும் சேர்த்துக்கொண்டு நாமலுக்கு சுடுதண்ணியால் முகத்தைத் துடைத்துவிட்டு வெளியில் வந்த போது தங்கன் கேட்டான், மச்சான் இன்னொரு முகவர் இருக்கின்றார் அங்கு அவரிடம் போவோமா? விரைவாக அனுப்பி வைக்கின்றேன் என்று சொல்லுகின்றார். இந்த குழுவை விட்டுப் போவோமா? நீயும் நானும் ஏண்டா இப்ப தானே குழுவாக வந்தோம்? அதுக்குள் குழுச்சண்டையா? இப்ப இவங்களை விட்டு ஓடினால் பயந்து போய்விட்டோம் என்பார்கள் வெளியில் பார்த்தவர்கள்.

இவங்கள் ஓற்றுமை இவ்வளவுதான் விட்டுக்கொடுத்துப் போகத் தெரியாதவங்கள் என்று நினைப்பாங்க இல்லையோ தங்கன்? ரவி ஆரம்பத்தில் இருந்து இவங்கள் யாருமே பழக்கம் இல்லையே? ஒரே ஊரா ? இல்லைத்தானே விட்டுட்டுபோறது என்று முடிவு எடுத்த பின், இவங்களையும் சுமந்து கொண்டு செல்ல இது நட்புப் பயணம் இல்லை. ரயில் பயணம். பதிவுலகில் ஹிட்ஸ் வெறியன் போல இருக்கக்கூடாது, நான் இப்பவே அவர்கூட போகப்போறன் ரவி.

உன் சிந்தனையில் தெளிவு இருக்கும் என்றால் திரட்டியில் நல்லது எழுதுபவர்கள் போல இவர்களுடன் இரு. பயணம் வந்தவர்களில் ஏதோ உன் கூட கொஞ்சம் சந்தோஷமாக பழகியவன் என்பதால் சொன்னேன். முகவர் வந்து கேட்டால் வெளியில் போனவன் கதி என்னாச்சு என்ன என்று தெரியவில்லை என்று சொல்லு.

அடப்பாவி என்னையும் வம்பில் மாட்டிவிட்டாயே? பதிவுலகில் இனவாதி / மதவாதி அன்னக்காவடி என்பது போல இது நியாயம் இல்லை உண்மையில் தங்கன். சரி பரவாயில்லை நீ போகும் வழிகிடைத்தால் போய்ச் சேரு சந்தோஷம் என்றாவது ஒரு நாள் ஐரோப்பாவில் சந்திப்போம் மச்சான். தங்கனுடன் போய் இருந்தால் பின்நாட்களில் என் பயணம் சிறப்பாக இருந்து இருக்கலாம் என்று சொல்லும் நாள் வந்தது!

19 September 2012

தங்கையும் .அண்ணாவும் பின் நானும்!!!

வணக்கம் உறவுகளே!
எழுத்து ஆர்வம் என்ற ஆசையில் வலைப்பதிவு ஊடாக பயணிக்கும் முகம் தெரியாத பல உறவுகள் பின்னூட்டம் ஊடாக பதிவாளர்களிடையே உறவாகிப் போகின்றார்கள் அன்பில்.

இப்படி தனிமரத்தின் வலைக்கும் அன்பில் வந்து இணைந்த பலரில் எங்கள் பலரின் நெஞ்சில் இடம் பிடித்த எங்கள் கலிங்கநாட்டு இளவரசி அதிராவின் கலைவாரிசு கிராமத்துக் கருவாச்சி பதிவாளினி கலைச் செல்விக்கு இன்று சிறப்பான ஒரு நாள் .!20/09/.....

குறுகிய காலம் இணையத்தில் தனிமரத்தோடு பயணித்த எங்கள் இளவரசி .எனக்கு பதிவுலகில் கிடைத்த உடன் பிறவாத தங்கைகளில் முதலிடம் எப்போதும் கலைக்குத் தான் .

அதிகம் சிரியஸ் பார்ட்டி என்று சொல்லும் சில உறவுகளுக்கு தன் கலகலப்பான பின்னூட்டம் மூலம் ரீ.ரீ அண்ணா ஜாலியானவர் என்று கலாய்க்கும் கலையின் வெகுளித்தனமான அன்பில் சிரித்த நாட்கள் அதிகம் .

எங்கள் வீட்டில்(தனிமரம் வலையில்) எல்லாரும் தேடும் உறவாகிப் போனதில் கலை எங்களுக்கு ஒரு செல்லம் அன்பில் .

சிலருக்கு ஏனோ சிலரிடம் வரும் நிஜமான பாசம் முன் ஜென்ம தொடர்பு என ஏங்கவைக்கும்.எனக்கும் உடன் பிறந்த தங்கைகளுடன் உடன் பிறவாத தங்கையாகிப் போன கலையின் இணைய வருகை ஒரு புதிய உறவைத் தந்தது என்றால் மிகையில்லை நிஜமாக கலைக்காக ஒரு தொடரை தினமும் அன்பின் ஊக்கிவிப்பில் எழுதியநாட்கள் வசந்தகாலம் இனி முடியாது( புதிய வேலை மாற்றம்..)பதிவுலக அரசியல் கடந்து .

இந்த வலையுலகில் நான் சேமித்த பல உறவுகளில் கலையும் எனக்கு இன்னொரு தங்கை என்பதில் சந்தோஸம் எப்போதும். இன்று .இந்தியாவில் கலைத்தங்கையின் பிறந்தநாளை சிறப்பாக வேலைத்தளத்தில் இருந்த வண்ணம் கொண்டாடுகின்றார் இணைய வசதி இல்லாத ஊரில் கடமையில் இருக்கும் எங்கள் இளவரசிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வாழ்த்தும் இந் நேரத்தில் .

வலையில் முகம் தெரியாத உறவுகளான தனிமரதின் உறவுகள்
யோகா ஐயா தலமையில் வாழ்த்துவோர்.
ரீ.ரீ அண்ணா ,
ரெவெரி அண்ணா ,
கணேஸ் அண்ணா,
மகேந்திரன் அண்ணா,
விச்சு அண்ணா ,
நாஞ்சில் மனோ அண்ணா,
சீனி அண்ணா,
மைந்தன் சிவா அண்ணா,
துசியந்தன் அண்ணா,
ராச் அண்ணா,
டெனில் அண்ணா.,
காற்றில் என் கீதம் அக்காள்,
அதிரா அக்காள்,
ஹேமா அக்காள்,
அஞ்சலின் அக்காள்,
கலா நாத்தனார்,
எஸ்தர் சபி தங்கை,
நிரஞ்சனா தங்கை,
கலைவிழி தங்கை,
குட்டித்தாரா ,

&மற்றும் பலர். கலிங்கநாட்டு இளவரசி கிராமத்துக்கருவாச்சியை இன்று போல என்றும் சகல செளபாக்கியமும் பெற்று .நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ பிரார்த்திக்கின்றோம். வாழ்த்துக்கள் கூறிக்கொண்டே.

இளவரசி சுபீட்சத்துடன் வாழ நண்பன் ராகுலின் வாழ்த்துக்களையும் சேர்த்துவிட்டேன் . அவனின் வேண்டுதலில்.

வாத்துவுக்கு பிடித்த இந்தப்பாடல் இன்னும் பல ஜீவன்களுக்கும் பிடிக்கும் ..பாசத்தில் அண்ணாக்கள் தோழில் சுமப்பது தங்கைகளைத் தானே .
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கலைச் செல்விக்கு.
// பண்பில் ஒரு சிகரம் பாசத்தில் ஒரு அண்ணன் பாவில் ஒரு வசந்த மண்டபம் பார்க்கும் பார்வையில் கவியில் கிராமிய தென்றல் வீசும் !
எங்கள் மகேந்திரன் அண்ணாவிற்கு அன்பின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் முன் கூட்டியே தெரிவிக்கின்றோம்(21/9/..) இந்த உறவுகள் சகிதம்.!

17 September 2012

விழியில் நீர் சிந்தி!!

வசந்தகாலத்தின் வளர்பிறையே
வருவாய் இதயத்தில் ஒரு நிலவாக
வாசல் பார்த்து காத்திருந்தேன்!
வந்தாய் கைபிடித்து ஒருத்தனோடு
வாடிப்போனேன் என் காதல்
வடிவில்லாத செவ்வந்தியாக
விழியில் நீர் சிந்தி வாடிப்போன காதலுடன்.

தினமும் வருகின்றாய் ரயில் பயணத்தில்.
தித்திக்கும் மனதில் வருவாயா?
தேடிப்பார்த்தேன் நேற்றுமுதல்
தவிக்கவிட்டாய் தாரம் ஆகாமல்.
தலைவிதி என்று தாண்டிப்போனேன்
தவிப்புடன் மீண்டும் வந்தாயே !


தினமும் தவிக்கவிட்டு காத்திருந்த
தருணம் எல்லாம் என் காதல்
தனிவழிப்பாதையோ தோழியே?
தாண்டிப்போவேன் இந்த மரம் கடந்து.
தவிக்கமாட்டேன் தாமரைக்கொடியே!
//இந்தப் பாடல் இந்த காட்சிக்கு என் விருப்பமாக!

16 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -15


வந்து போகும் உலகில் விடுதியில் தங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் பலர் பலமுகம் கொண்டவர்கள், பல கருமங்களின் நிமித்தம் தங்கியிருப்பார்கள் வீடு இல்லாதவர்களுக்கு இந்த விடுதி ஒரு கொடை என்றால் சிலருக்கு சிறை. நம்நாட்டில் கொழும்பில், வவுனியாவில் என இந்த விடுதியின் வாழ்க்கை ஒரு விசித்திரம் சொல்லும். பலருக்கு யுத்தமுனைப்பு அதிகமான பிரேமதாச காலமும் அதன் பின் அம்மையார் ஆட்சியிலும் இந்த விடுதியில் இருந்து வேதனையை அனுபவித்தவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

அதுவும் கொழும்பில் புலம்பெயந்த கணவருடம் இணைந்து கொள்ள தன் பிள்ளைக்கள் சகிதம் தங்கியிருந்த போது, சந்தேக குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும் உறவுகள் நிலை எல்லாம் தேட உலகம் குடும்பத்துடன் திருப்பதி போகும் நடிகர் குடுபத்துக்கு பின்னாலும் முன்னாலும் சுடச்சுடச் செய்தி என்று சுதந்திரம் என்று நிம்மதியைக் குழைக்கின்றது. ஆனால் நிம்மதி இல்லாமல் இருக்கும் இந்த சந்தேக வழக்கில் இருப்பவர் நிலையை சுடச்சுடச் சொல்லாது உண்மையைத்தேடி என்று.

சந்தேகம் என்று பொலிஸ் வரும் என்று சொல்லியே வெளிநாடு போக வந்திருக்கும் ஏதிலியிடம் விடுதியில் இருந்தவர்களிடம் நம்மவர்களே சிங்களம் தெரியாத காரணத்தினால் பணத்தினை ஏப்பம் விட்ட சுனாமி உதவி நிதி போல பல கதைகள் பேசவேண்டியவர்கள் மதவாதிகள் பின் இனவாதம் பேசுதல் எடக்கு முடக்காம். என்ன கொடுமையடா சாமி வெளிநாடு என்ற வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொழுபில் வழிதவறி சீரழிந்த குடும்பத்து குத்துவிளக்கு எல்லாம் ஈழத்து பொன்மணி படம் போல தோல்வியை தன் தவறு என்று ஏற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டில் இருப்பவனைத் திட்டுவார்கள்.


ஏன் அப்படித்தான் நாமலும் வலி வேதனையில் ஓட்டியான், ஓட்டியான குமார் மீதும் ராஜா மீதும் சிணம் கொண்டு கள்ளன்கள் என்றும் கீழ்த்தரமான மூன்றாம் தரவார்த்தைகள் சிங்களத்தில் உளறியது அகிலனுக்கு வாந்தி போல இருந்தது, பதிவுலகில் சிலர் மதவெறி எடுப்பது போல. இவன் என்ன சிங்கள மொழியில் பேசுகின்றான் என்ற பின் தான் வந்தவர்கள் பலருக்கும் தெரிந்தது நாமல் ஒரு சகோதர மொழிக்காரன் வெளிநாடு போறான் என்று!

எங்கு போனாலும் சிலர் குணம் மாற்ற முடியாது. நாட்டைவிட்டு வந்தும் இனவாதம் கக்கும் சாக்கடை அரசியல் போல இவனைக்கொல்ல வேண்டும் மச்சான் என்றான். சுதன்  பட்டதாரி இவன் வார்த்தை என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. கொழும்பில் சொகுசாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு சிங்கள மாணவர்களுடன் ஒன்றாக எல்லாக் கூத்தும் கூட்டணி போல ஒன்றாக இருந்து பாராமன்றத்தில் செயல்பட்டு விட்டு வெளியில் வந்து இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லை என்று அறிக்கைவிடுவது போலத்தான் சுதன் நாமல் மீது குற்றம்சாட்டினான். தாய்லாந்தில் வந்து இப்படி எங்களையும் காட்டிக்கொடுக்கப் போறான். இவனால் நாம் போகவேண்டிய ஐரோப்பா பயணம் பாதியில் நிற்கப்போகுது போல ராஜாவுடன் போய்ச் தண்ணியடிச்சிட்டு ஏன் தேவையில்லாத வேலை சிங்களவனுக்கு மூளையில்லை என்று பேசியது நாமலுக்கு புரிந்தது.

இதனால் அவன் வலியில் இருந்தவனை சீண்டியது ஒன்றாக வந்தவர்களுக்குள் பிரிவினை குழுவாக இயங்கத் தொடங்கிவிட்டது. பின் வாக்கு அரசியலுக்காக பிரிந்து நிற்கும் சில அரச சார்பற்ற குழுக்கள் போலத்தான் சுதன் நிதானம் தவறியிருந்தான். வெட்டுவான் சிங்களவன் சுடுவான் தமிழன் என்று சொல்லிய சகோதர மொழி பேசுவோர் யாரும் போகாத வவுனியாவிற்கு விற்பனைப் பிரதிதியாக போறியா என்று கொழும்பில் தனியார்துறை மேல் அதிகாரி கேட்ட போது என்னால் முடியும் என்று வந்த என் நண்பன் ராகுல் போல இல்லை சுதன். ராகுல் மதவாதம் பேசமாட்டான். இனவாதம் வேண்டாம் என்பான். எங்களுடன் சோபபானம் அருந்தும்போது.!!

அடிபட்டதில் பல்லுவலி ஒரு புறம் வாய் வேற பிஞ்ச மோதகம் போல கோணிக்கிடக்கும் நாமலுக்கு பணடோல் வாங்கிக் கொடுக்கவோ, சோமபானம் வாங்கிக்கொடுத்து அவன் வலியைக் குறைப்பம் என்று மனித நேயம் இல்லாமல் தன் பயணம் தடைப்பட இந்த சிங்களவன் காரணமாகப் போறான் என்று சுதன் பேசிய சகோதரமொழி கேட்ட எனக்கே கோபம்.

 நல்ல கருக்குமட்டையால் சாத்தணும் போல இருந்தது. மூன்றாம் தரவார்த்தைகள் நானும். ஜீவனும் ,தொழிலில் பேசுவதுக்கே கூச்சப்படுவோம். ஏன் ராகுல் கூட விரும்ப மாட்டான்.

 ஆனால் பட்டதாரி இவன் என்று எங்களிடம் சொல்லியவன் இப்படிப் பேசியது ஒருவேளை இவன் குதிரை ஓடித்தான் பல்கலைக்கழகம் நுழைந்தானோ !சட்டக்கல்லூரிக்கு ஆள்மாறட்டம் செய்த முதல்குடிமகன் வாரிசுபோலவோ! நாமலுக்கு கொஞ்சம் நாவடக்கம் கற்றுக்கொள்ள இந்த வலியும் அதுக்கு நான் வாங்கிக்கொடுத்த பனடோலும் உதவியது.

பயணத்தில் ஒரே நாட்டுக் குடிமக்களாகத்தான் போகின்றோம். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இடையில் யாரோடும் வீண் மனஸ்தாபம் வேண்டாம். இது நம்நாடு இல்லை ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பிகளாக இருப்போம். ஐரோப்பா போனால் நீயாரோ, நான் யாரோ ஓட்டு வாங்கிக்கொண்டு கட்சிமாறிய மிலிந்த மொறகொட போலத்தான் மச்சான் என்றதில் அவனும் கொஞ்சம் சிரித்தது நட்புக்கு இசைந்து.

பயணங்களில் ஏற்பட்ட காலதாமம் மீண்டும் வந்த ராஜா நாமலையும் சுதனையும் கூட்டிக்கொண்டு போனான். மலேசியாவுக்கு .

வந்தவர்கள் போய்க்கொண்டு இருக்க நாங்கள் ஆறுபேர் மட்டும் யாராவது ஓட்டி வருவார்கள் குமார் அனுப்பினால் என்று நம்பிக்கையில் விடுதியில் காத்திருந்தோம். இடையிடையில் அழைப்பில் வரும் குமார் ராஜா தனக்கு துரோகம் செய்துவிட்டான். அவன் இனி வரமாட்டான். நான் வேற ஒருவரை ஒழுங்குப் பண்ணுகின்றேன் என்றுவிட்டு இறுதியாக அழைப்பில் வந்த போது விடுதியில் இருந்த ஒவ்வொருத்தரின் ஐரோப்பிய முகவர் விபரத்தை குறிப்பு எடுத்துக்கொண்டான். 

காலம் எப்போதும் பெறுமதியானது. தாய்லாந்து தேசத்தில் இருக்கும் நாட்கள் நீண்டு சென்றது 2 மாதம் சாப்பாடும் தூக்கமும் தொலைக்காட்சியும் மட்டுமே புலம்பெயர வெளிக்கிட்ட பயணம் முடிவில்லாத தொடரைபோல நீண்டது!

அக்கரையான மலேசியா போன யாரும் அழைப்பில் வரவில்லை. ஜீவன் இப்படி இருக்க மாட்டானே எந்த ஊர் போனாலும் ஒரு அழைப்பு எடுக்கும் நண்பன் நிலை என்னாச்சு? புதுபொண்டாடியை கண்ட மயக்கத்தில் இருக்கும் கலியாணமாப்பிள்ளை போல ஆகிவிட்டான? மலேசியா போனதும்!

// ஓட்டி வருவான் ஐரோப்பா போவோம் என்ற  நிலையில் இப்படியோ  பாடல் இருந்து இருக்கும் ....

தொடரும்.....

14 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -14

காசே தான் கடவுளடா கைக்கு கைமாறும் பணமே உன்னை கைபற்ற நினைக்குது மனமே" 

என்று கண்ணதாசன் கவி avm ராஜா பாடிய சக்கரம் படப்பாடல் மூத்தவர்கள் அறிந்திருப்பார்கள் இளையவர்கள் தேடமாட்டார்கள் ரசனையான பாடல்களை தேவை எல்லாம் குத்துத்தானே!. 

(சல்லிதமாய் தெய்யங்கே அய்யே) என்று சகோதர மொழியில் வியாபார உலகில் சொல்லும் ஒரு நகைச்சுவை. இப்படித்தான் ஓட்டிகளும் காசுக்கு ஆசைப்பட்டுத்தான் ஆட்களை கூட்டிச் செல்கின்றார்கள். பலர் சேர்ந்து குழுவாக இயங்கும் இந்த வேலையில் மேலே இருப்பவர் பணத்தினை பிரித்துப் பிரித்துத்தான் கொடுப்பார். பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒதுக்கீடு போல புணர் நிர்மானம் செய்த பின் தான் சில சட்டச்சிக்கல் கடந்து பணம் கைக்கு வரும் அதுபோல ராஜாவும் ஆட்களை மலேசியாவுக்குள் கொண்டு வந்தால் தான் குமார் காசு கொடுப்பான் என்று தெரியும்.

ஆனால் அவனுக்கு தாய்லாந்து வந்து விட்டால் தன் செயல் மறந்து போவான். வாக்கு வாங்கிவிட்டு பாராளுமன்றம் போன தொகுதி உறுப்பினர் போல. இந்த நிலையில்தான் நாமலிடம் அதிகம் பணம் இருக்கின்றது என்ற கணிப்பில் அதிகம் ஜாலியாக சோமபானம் பருகிவிட்டு தாய்லாந்து பரத்தையிடம் (பழந்தமிழ் இப்படிச் சொல்லும் நவீன உலகு பாலியல் தொழிலாளி என்று சொல்லும்) போன ராஜாவுக்கும் தாய்லாந்தில் தங்கியிருக்கும் மலேசியாவாசி ஒருவருக்கும் தொழில் விரோதம்! (இருவரும் வெவ்வேறு ஆட்களுக்கு ஆட்களை கூட்டிச் செல்லும் தனிநபர்கள்) கைகலப்பில் போக அருகில் இருந்த நாமல் ராஜாவுக்கு உதவிக்குப் போக கைகலப்பு அதிகமாகிவிட்டது.

யாரின் பிழை என்பது எங்கள் அறைக்கு இருவரும் காயத்தோடு வரும் வரை எங்களுடன் இருந்த யாருக்கும் தெரியவில்லை. வந்த கையோடு குமார் அழைப்பு எடுத்த விடயத்தைச் சொல்லியிருந்தான் அகிலன். உடனே ராஜா செய்தது எங்களை எல்லாம் விடுதி மாற்றியது. தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்கள் அனுபவத்தில் பார்த்தோம். ராஜா உடனே இன்னோர் விடுதியில் தங்கவைத்துவிட்டு சாப்பாடு கொடுக்கும் வசதி செய்துவிட்டு அன்று மாலையே மலேசியா போய் விட்டான். எங்களில் 8 பேரில் 5 பேரிடம் அதிகம் காசு இல்லை. நாங்கள் என்ன சுற்றுலா வந்த அம்பானி வாரிசுகளா? உயிர் தப்ப! ஒடிவந்த ஈழத்து ஏதிலிகள் தாய்லாந்து விசா முடிவடைந்து விட்டது. 

மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றால் தலைநகரம் பாங்கொக் போக வேண்டும். சாங்கலா கிராமத்திற்கு உள்ளே வந்த பின் யாரும் அதிகம் விசா பற்றி சிந்திக்கவில்லை. நாமல் அடிப்பட்டதில் காயம்பட்டு வந்து வலியில் துடித்த போது போதை தெளியத்தானே பிழையின் தன்மை புரியும்! நாமலும் ஓட்டி என்றால் ஓடும்பழமும் போல இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். 

நாமல் வலியில் துடித்த போதுதான் எங்களோடு இருந்தவர்கள், அவன் சிங்களவன் என்றே உணர்ந்து கொண்டார்கள். காதலித்து வீட்டைவிட்டு ஓடியவள் காதலித்தவன் அயோக்கியன் என்பதைத் தெரிந்து கொண்டது போல! 


////

சல்லிதமாய் தெய்யங்கே அய்யே)-காசேதான் கடவுளின் அண்ணா!பாடல் இதுவோ!
தொடரும்....

11 September 2012

ஊடக நண்பனுக்கு!!!!!!!


நண்பா நலமா இப்படி கேட்க மனதில் இன்னும் கோபம் தீரவில்லை!

 ஆயினும் நீயும் நானும் இணைந்தது தமிழ் படித்த காரணத்தால் . நீ ஆங்கிலம் அதிகம் படித்தாய் நான் அது படிக்க வில்லை. வருத்தம் இல்லை எனக்கு எழுத வராது என்று நீ திட்டிய போது !

உண்மைதான் என் படிப்பு 8ம் தரம் தான் இது எல்லாம்  நீஅறிந்தாலும் நான் சிரிப்பேன் ஏன் தெரியுமா ?நீ தமிழில் அதிகம் சிரிக்கும் படி எழுதினாய் உண்மையில் உன் எழுத்துக்கு நான் அடிமை .

ஆனால் நீ என்னைப்புரிந்து கொண்டவன் இல்லை என்பதை நேற்று என் தனி கைபேசி அழைப்பில் வரும் நேரம் வரை அறியவில்லை.

 அது தான் ஊரில் சொல்லுவார்கள் சட்டம் படித்தவன் சட்டம்பியார் வாழ்பிடித்தவன் அருவருடி என்று நானும் உன்னை வாழ்பிடித்தேன் !

நாலாவது தூண் என்கின்ற ஊடகத்தில்  நீ ஒரு அறிவாளி என்று  .

ஆனால் உன் படிப்பு உன் வருமானதுக்குகாக பிறரையும் விக்கும் மனிதவி மானம் தாண்டிய தொழில் என்பதை பார்த்த பின் தான் புரிந்துகொண்டேன் உன்னை வாழ் பிடிப்பதை விட மூட்டை தூக்கி பிழைத்து இருக்கலாம் என்று  .

நீ உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் உரிமையுடன் சென்னேன். நண்பா சிந்திக்க வேண்டும் சுயசிந்தனைதான் எம் நட்பை  தொடரும் சிந்திக்கும் வழியில் வாழ்பிடிக்கும் நண்பன் ஆக என்று .!

அப்போது எல்லாம் சிரித்தாய் மனதில் வஞ்சகம் என்றதை இப்போது அறியும் போது அகம் மகிழ்கின்றேன் படிக்காதவன் தப்பி விட்டேன் என்று.

 உன் ஊடக அறிவு வெறும் உணர்ச்சியில் உன்னை விட்டுப் போகும் பலரில் இறுதியாக நான் இருக்கின்றேன்! நட்புடன் பிரிகின்றேன் !கவலை எனக்கு இல்லை பலரை பிரிந்து ஏதிலியாகிய பின் நீயும் ஒரு சிநேகம் தான் உறவு இல்லை!ம்ம்ம்

என் மீது சந்தணம் பூசு     .சாணி அழகு ரொட்டி தட்டு ,முற்றம் சுத்திகரிக்கும்  விளக்கு மாற்றில் சாமரம் வீசு  .அன்னக்காவடி என்று  எல்லாம் சந்தோஸமாக திட்டு நண்பா !

ஆனால் உணர்ச்சி வசப்படுபவன் நான் இல்லை !

அகங்காரம் அகீர்திணைக்குஇல்லை உயர்திணை நண்பா! மீண்டும் உன் அழைப்பில் நான் வரமாடேன் நீயும் என் வழியில் வந்துவிடாதே! நட்பு  என்ற தமிழ் புனிதம்!ம்ம்ம் அரசியல் தாண்டி!

09 September 2012

விழியில் ஏனோ ஈரம்!!!!!!!!!!!!!!!!!

நீ தானே என் பொன்வசந்தம் பாடல் பற்றி அதிகம் பதிவுலகம் எழுத்தாக பதிவு செய்து கொண்டு இருக்கும் இன்நிலையில் !

இந்தப்பாடல்களை தர இறக்க நிறைவான நேரம் கிடைக்காத நிலையில் எதிர்பாராமல் இன்று பாடல்கள் எல்லாத்தையும் ஐபோனுக்கு சேமிக்க முடிந்திருக்கு.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இளையராஜா தன் இசைச்சரம் கோர்த்து இருக்கின்றார்.


கேட்ட நொடியில் இருந்து என்னோடு வா வா என்று .சாய்ந்தாடு சாய்ந்தாடு. வானம் மெல்லகீழ் இருந்து...  என எல்லாவற்றிலும்  என்னை அதிகம் மனதையும், செவியையும் மொத்த மாக கடன் வாங்கிய பாடல்களில் "முதல் முறைய் பாடல் "

கவிதையும் இசையும் இணைந்து கலக்கும் வித்தையை கேட்டே ரசித்துக்கொண்டே இருக்கின்றேன் 8 பாடலையும் எதைக்கேட்பது முதலில் என்ற அலைபாயும் மனதில் ராஜாவின் இசை என்றால் எப்போதும் ஒரு மயக்கம் இன்றுவரை இது இன்னும் தொடரும் ஆயுள்வரை .
முதல் முறையாக பாட்டில் .ஒவ்வொரு வரியும் நா.முத்துக்குமாரின் ! கவித்துவத்தை ஆழ்ந்து ரசிக்கும் போது இதயத்தில் ஏதோ பாரம். பெண்மையின் உணர்வை கவியாக்கிய கவிக்குப் பின்னால். ராஜாவின் இசை செய்யும் மாயம் இன்னும் சிலிப்பாக இருக்கின்றது. வயலின் வாத்தியம் மனதை எங்கோ அழைத்துச் செல்கின்றது!.
எப்படி எல்லாம் ராஜாவின் இசை என்னோடு பயணிக்கின்றது வாழ்க்கையின் வழிப்பயணத்தில், இன்னும் ராஜா அதிகம் இசையுலகில் ஆளவேண்டும் என்பதே என் ஆசை. பாடலில் ஒலிக்கும் சுனிதி செளஹான்! பாடகியின் தேன் தடவிய குழைவுக்குரல் அதிகம் ஈர்த்து இருக்கின்றது.விழியில் ஏனோ ஈரம்!ம்ம்
.நீ தானே என் பொன்வசந்தம் இப்போதே எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் கெளத்தம் மேனன் இந்தப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவார் என்பதைக்கான காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

08 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -13

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”
(விருந்தோம்பல் அதிகாரம் - குறள்-10)

விருந்தோம்புவோருக்கு இன்றியமையாதது இன்முகத்தோடு விருந்தோம்பலாகும் என்பான் வள்ளுவன். அது போல தாய்லாந்து விருந்துகளும் நாவிற்கும் மனதிற்கும் தித்திப்புக் கொடுக்கும் கடல் உணவுகள் இங்கு மிகவும் பிரபல்யமும் மிகவும் மலிவாகவும் கிடைக்கும் நம்நாட்டைவிட. விரும்பிய வகை கடல் மட்டி, மணலைமீன், நண்டு, இறால் கணவாய், நெத்தலி, ஒட்டி ஓரா பாரை என அவித்தும், நெருப்பில் வாட்டியும் வெட்டுக்கிளிப்பூச்சி பொரித்தும் தருவார்கள்! 

பாரை மீண் வாட்டி கல்லூண்டாய் வெளியில் தாத்தா கள்ளுக்குடித்த போது நான் சின்னவன். எனக்கு மீன் தீத்திய தாத்தாவுக்கு கூட நான் சிறையில் இருந்ததும் வெளிநாடு போவதும் தெரியாது. அந்தளவு தணிக்கை இனவாத போர் இடைவெளி தலைமுறை இடைவெளி போல! ம்ம் ஆனாலும் தாய்லாந்து கடல் உணவு சாப்பாடு தேவையான சோறு அல்லது நூடிஸ்ல் உடன் உறைப்புக்குத் தான் நம்மூர் மிளக்காய்த்தூள் தேடியலைய வேண்டும். 

ஆனாலும் எண்ணையில் பச்சமிளகாயும் மிளகும் சேர்த்து ஒரு வகை அச்சாரு (soauces-_சோஸ்) கிடைக்கும் ஆசையில் அதிகம் சேர்த்தால் அவர் மறுநாள் கழிவறையில் மாலைப் பத்திரிக்கை வரும் நேரம் வரை பொழுது கழிக்க வேண்டி வரும். அப்படித்தான் அன்று நாமலையும் ராஜா வெளியில் அழைத்துச் சென்றான். ஓட்டிகளிடம் வரும் பயணியிடம் பணம் இருக்கு என்று தெரிந்துவிட்டால்! திருப்பதியில் மொட்டை போடப் போன வெளிநாட்டு வாசிகள் போல ஆளுக்குகொரு காணிக்கையில் மொட்டை அடிப்பது போல ஓட்டிகளும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சலுகை கொடுப்பார்கள்.

இதனால் பணம் அதிகம் கொண்டு வராதவர்கள் மனம்கோனுவார்கள். பிறகு இருகும் நேரத்தில் தப்பான அபிப்பிராயம் வந்து விடும். சிங்களவன் எல்லாம் இனவாதி என்பது போல! அதுவும் நாமல் தாராளமாக ராஜாவுக்கு சோமபானம் வாங்கிக் கொடுப்பதும் தானும் குடிப்பதும் எங்களோடு வந்த அகிலனுக்கு பிடிக்கவில்லை. அகிலன் கட்டுப்பாடு மிக்கவன் என்று சொல்ல முடியும். வறுமையில் விடியல் தேடிப்போகும் ஒரு சாமனியன். நான்கு சகோதரிகள் அவனுக்கு பின் பிறந்தவர்கள். அவன் கையில் குடும்ப பாரம். அதனால் எப்படியும் வெளிநாடு போனால் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்ற ஆசையில் வந்தவன். 

விதி எல்லாரையும் ஒரே அறையில் தங்க வேண்டிய நிலை. அதுமட்டுமல்ல அகிலன் அமைதியானவன். கலகலப்பு நாமலுக்கும் ராஜாவுக்கும் ஒரே கூட்டணி என்றால் மார்க்கிஸ்ட் கட்சி போல அகிலன். நிறைவாக சோமபானம் அருந்தினால் ராஜா தாய்லாந்து வீதியில் தன்னை மறந்து விடுவான். 

"நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில் பேணிப் புணர்பவர் தோள்" என்ற வள்ளுவன் கூற்றுக்கு ஏற்ப பணம் கொடுத்தால் புணர்வாள் தாய்லாந்தில் பாலியல் தொழில் புரிவோர். உடம்பினால் உள்ளத்தினால் அல்ல ராசாவும் போக அவனோடு சேர்ந்து கொண்டான் நாமல். அனுராதபுரம் கொழும்பு எல்லாம் பாலியல் தொழிநடக்கும் இடம் அறிந்தவன். 

பஸ் பயணத்தில் எங்களோடு பேசும் போதே சொல்லியிருந்தான் அது எல்லாம் தெரியும் என்றாலும் நாய்க்கு ஏன் போர் தேங்காய் என்று விட்டு விட்டு வந்த இடத்தில் போய்ச்சேர வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். 

நாமலும் ராஜாவும் “நீங்கள் இங்கு இருங்கோ நாங்கள் வெளியில் போட்டு வாரம் சாப்பாடு வாங்கிக்கொண்டு”, 
என்று போனால் வருவது நேரம் கெட்ட நேரத்தில் ஓட்டிதானே பொறுப்பு எல்லாருக்கும். குமார் போய் 5 ஆம் நாள் தொலை பேசி அழைப்பு எடுத்தார்.

“ஹலோ எங்க ராஜா” மறுமுனையில் அகிலன் எடுத்தான். 

“அவர்கள் வெளியில் போய்விட்டார்கள்”

“ராசா வந்தவுடன் பேய்ச் சொல்லு கவலைப்படாதீங்க ராசா எல்லாரையும் கொண்டு வந்து சேர்த்துவிடுவார் மலேசியா நான் ஐரோப்பா ஆளிடம் பேசுகின்றேன் ஜோசிக்க வேண்டாம்!” தொடர்பை துண்டித்தார் குமார்!
 தொடரும்!....

(பேசுகின்றேன் – கதைக்கின்றேன் மலேசிய பேச்சுவழக்கு!

கலூண்டாய்வெளி - இலங்கையில் யாழிலில் இருந்து ஒரு கிராமத்துக்குப் போகும் ஒரு வழி)

05 September 2012

நாஞ்சில் மனோவை தீட்டப்போறன்!

வணக்கம் உறவுகளே நலமா?

என்ன மீண்டும் தொடரை மட்டும் எழுதுகின்றதே தனிமரம் என்று நினைக்கின்றீர்களா?

காலம் வேகம் கூடியது. வேலை மாற்றங்கள் கணனி முன் இருக்க முடியாத நிலையில் தொடங்கிய தொடரை முடிக்க வேண்டுமே!:)))

நாஞ்சில் மனோ அடிக்கடி அருவாள் கத்தியை காட்டி .

யோ தனிமரம் என்னையா ?பிரெஞ்சுக்காதலியை காட்டாமல் இன்னும் தாய்லாந்தில் ஊர் சுற்றுகின்றாயா ?
எடுடா அந்த அருவாளை என்று கத்தியை எடுத்து கொண்டு வந்துவிட்டார்.

நானோ தனிமரம் கத்தி பட்டால் தாங்குமா!

"அண்ணாச்சி பேச்சு பேச்சாக இருக்கணும் என்று வடிவேலு பாணியில் கத்தியை தீட்டிப் பார்த்தேன் "

நாஞ்சில் அருவாள்  துருப்பிடிச்சிருக்கா ?இல்லை கூரா இருக்கா ?
முடிவு ?:)))) ///////////////////////////////////////////// இப்ப எல்லாம் முகநூலில் ஓய்வாக இருந்தாலே கொஞ்சம் பேர் . யோ தனிமரம் நீ வில்லன்டா ராகுலை மட்டும் இப்படி ஹீரோ ஆக்கிவிட்டாயே ?அவன் வில்லன்டா என்று ஒரே கத்தி வருகின்றநிலையில் ! கதையை எழுதச் சென்ன நண்பன் அரபுலகத்தில் இருந்து இப்போது மீண்டும் மலையகம் (பதுளை )போய் இருக்கின்றான் .சிலரைச் சந்திக்க .ராகுல் போகமட்டான் என்பது நம் இருவருக்கும் தான் தெரியும்!ஹீ  பிரெஞ்சுக்காதலியிலும் ராகுல்  வருவான் இல்ல!ஹீ அடி பலமோ தெரியாது இன்னும் முகநூலிற்கு வரவில்லை டெனில்  எங்கிருந்தாலும் வாடா மச்சான் தனிமரத்திற்கு பொழுது போகுது இல்லை நீ இல்லாமல் முகநூலில் !:)))
////////////////////////////////////////////// இப்போது எல்லாம் சாட்டில் தனியாக வரும் முகம் தெரிந்த நட்புக்கள் எல்லாம் தனிமரம் யாரு மச்சான் என்கிறார்கள்? ஏன் இந்த கொலவெறி என்றால் உருகும் பிரெஞ்சுக்காதலி என்று விட்டு நீ ஏண்டா முகநூலில் குறிப்பும்  பாட்டும்  போட்டே கொல்லுறியே இது நியாயமா என்கிறார்கள்?!:)) அவனவன் வலி அவனணுக்கு அதை எழுத்தச்சென்னவன் இவன் என்று நண்பர் முகம் காட்டுவதுக்குள் என் இணையம் இப்ப அடிக்கடி காலை வாருகின்றது .
.அதனால் தான் பலரின் பதிவைப்படிக்க முடியுது இல்லை. /////////////////////////////////////// திரையரங்குகளில் படம்பார்த்த ஞாபகத்தை தொடரா எழுதப்போறன் என்றதும் . நண்பன் கேட்டான் வவுனியா வசந்தியில் இன்னொரு உலகம் இருந்ததுக்கு நீயும் சாட்சியே என்றான் . கூடவே வீட்டுக்காரியிடம் சொல்லியிருக்கின்றான் வசந்தி யாரு என்று கேளுங்க அண்ணி .  வசந்தி திரையரங்கு என்பதை புரியாமல் வதந்தியைக்கிளப்பி விடுறாங்க நான் பிளக்கில்தான் தனிமரம் இப்பவும் தனிமரம் தான் .ஆனாலும் என்னக்கும் ஒரு குடும்பம் இருக்கு எப்படி எல்லாம் சிந்திக்கின்றாங்க. முகநூலில் இருந்து வெரட்டுவதுக்கு.:))) சிலரைச் சந்தித்தால்
சிந்தித்தால் ? எப்படி இருக்கும் தனிமரம் வலையில் அடுத்த தொடர் எதிர் பாருங்கள். !!!!!!!!!!! டிஸ்க்கி-நாஞ்சில் மனோவின் அருவாளை தீட்டப் போறன் என்று சொல்ல வந்தேன்!ஹீஈஈஈஈஈஈஈஈ  அண்ணாச்சியோட தம்பியாக்கும் தனிமரம் !ஹீஈஈஈஈ எதுக்கும் அருவாளை தீட்டி வையுங்கோ !ஹீ

04 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -12

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் வெளியில் இருப்போரிடம் தொட்டலங்கா என்றால் கிராண்டபாஸ் பக்கம் ஒரு எண்ணம் மனதில் வரும். திருட்டும் விழிநிலை மக்களும் எல்லா சமுகச் சிக்கலும் சங்கமிக்கும் களனி ஆற்றின் மறுகரை (கறை). அதே போல வனத்தமுல்ல முல்லேரியா கொலன்னாவ என்று ஒவ்வொரு பக்கமும் கொழும்பு வாசிகள் ஆயிரம் கதை சொல்வார்கள் மக்கள் குழுவைப்பற்றி. அப்படித்தான் சாங்கலா கிராமம் ஒரு தூங்கா நகரம், மாலையில் தட்டிவான் சுமந்து சென்றது ஒரு நட்சத்திர விடுதிக்கு.

சாங்கலா கிராமம் மலேசியாவின் நூழைவாசலுக்கு அண்மையில் தாய்லாந்தின் எல்லையின் இறுதி முடிவு. பகலில் தூங்கும் இந்த நகரம் இரவில் இந்திரலோகம். கை வலி கால் வலிக்கு பிடிப்பு வைத்தியம் பார்க்கும் தாய்லாந்து வாசிகள் (massage) ஆட்டமா, தேரோட்டமா என்று இளமையில் ஆடிமகிழ களியாட்ட விடுதிகள் (dico). கிண்ணத்தில் தேன் சுமந்து தண்ணீர்த்தொட்டி தேடிவந்த கண்ணூக்குட்டி. சோமபானம் பருகியவன் பாடல் சுவை சேர்க்க விரும்பினால் இசைமீட்டலாம். சங்கீத குயிலோடு சேர்ந்து பாடும் இசைக்கலவை நிலையம் (karoki), காமம் என்பதுக்கும் மோகம் என்பதுக்கும் தேகம் றொம்ப முக்கியம் என்ற வைரமுத்து பாடல்போல என்னைத் தருவேன் உன்னிடம் விரும்பியது போல தாய்லாந்து நாணயம் கொடுத்தால் கட்டில் சுகம் தரும் நங்கைக்கள் என வீதி எங்கும் மடைபரப்பிய விடுதிகள்.




அரச அனுமதி இருக்கின்றது இந்த நாட்டில் என்பதே புதுமையான விடயம். இதுவரை தெரியவில்லை, இலங்கையில் இருக்கும் போது உலக அறிவு இப்படிச் சிலருக்கு எங்களோடு வந்தவர்களுக்கு. வார இறுதியில் அயல்நாட்டில் இருந்து வந்து அகம் மகிழும் அயல்நாட்டுவாசிகள் அதிகம் இருக்கும். இந்த ஊரில் குமாரின் வரவுக்கு காத்திருந்த ராஜா ஓட்டி எங்களை தனித்தனித்தீவாக பிரிக்கும் வேலையில் காத்திருந்தான். 
இனியும் பயணம் தொடரும் என்ற போது 18 பேரில் 10 பேருடன் குமார் மலேசிய போக தயாரன போது இது வரை சேர்ந்து வந்த ஜீவனையும் என்னையும் இருதுருவங்கள் ஆக்கிவிட்டார்கள்.

“மச்சான் என்னையும் கூட்டிப்போறார் குமார், எப்படியாவது போய்ச்சேர்ந்து விடுவம். நீ கலைப்படாத இங்க உன்னைப்பிரிய கவலையாக இருக்கு. ஒண்டா வேலையில் சேர்ந்து இருந்தோம் அதன் பரிசு 2 வருட சிறை வாழ்வு இந்த நகரம் வரை கூட வந்த நட்பு இடையில் போகுது என்றா? ”

வாழ்க்கையில் ஓடும் நதி போல இருக்கணும் நட்பு. வருவதும் போவதும் ஒரு கப்பல் போல கப்பல் தரைதட்டும் வரை தான் பயணிகள். அதன் பின் கப்பல் ஒரு காவிமட்டும்தான் கவலையைவிட்டு நீ போ, இடையில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நாட்டுக்கு போ சேகர் அண்ணா போல ஒழிந்து இருக்காத, உன்னை நம்பி வீட்டில் பொறுப்பு இருக்கு இந்தா குறிப்பில் இனி நீ தான் பயணம் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். உனக்கு பைத்தியம் ராகுல் போல எழுதிக்கொண்டு எலி தான் போகக்காணவில்லை விளக்குமாற்றைக் காவிக்கொண்டு போனதாம். 

ம்ம் போகும் வழியில் நீ பார்த்த காட்சிகள் மற்றவர்களுக்கு அனுபவமாக இருக்கும் ஜீவன். சந்தர்ப்பம் வரும் போது எழுதினால் பிற்காலத்தில் உனக்கு என்ன தெரியும் என்று யாராவது கேட்டால்! பதில் இதில் இருக்கு என்று சொல்ல முடியும் மச்சான். நீ எழுதிவை ராகுலிடம் கொடுத்தால் அவன் இன்னும் கற்பனை சேர்த்து கதையாக்குவான். போடா அவன் இப்ப அறிவிப்பில் சேர்ந்து இருப்பான் இனி எழுதுவது சாத்தியம் இல்லை சாலிக்காவை கரைச்சல் கொடுத்து சகோதர மொழியில் எல்லைக் கிராமக் கதை எழுதிக்கொண்டு போய் எரிக்கரையில் அவமானப்பட்டது மறந்து போச்சோ உனக்கு ரவி. 


முகம் முக்கியம் இல்லை, கருத்து முக்கியம் என்றால் யாராவது அவனுக்கு உதவுவார்கள் கவலயைவிடு ஜீவன். இப்ப அவன் தேர்வில் தேறி அறிவிப்பில் சேர்ந்து இருப்பான் என நானும் நம்புகின்றேன். நானும் தான் அவன் கனவு இலட்சியம் அதுதானே விற்பனைப் பிரதிநிதி எல்லாம் இரண்டாம் பட்சம் என்றுதானே வானொலி நிலையத்தோடு சுற்றிக்கொண்டு இருந்தான்! ம்ம் நண்பன் நல்லா இருந்தால் சந்தோஸம் தானே மச்சான். 

ஓம் ஓம் அன்று இரவு ஜீவனும் போய்விட்டான் மலேசியாவுக்கு. குமாரோடு நாங்கள் 8 பேர் எங்களில் நாமல் இன்னும் இருவர் அவர்களும் யாழ்வாசிகள். 4 பேர் ஒரு அறையிலும் இன்னும் ஒரு அறையில் 4 பேரும் ஆக 8 பேருக்கும் காவல் இருந்தார் ராஜா! அறையில் தொலைக்காட்சி இருக்கு படம் பார்க்கலாம் யாரும் வெளியில் போகக்கூடாது. உங்க கடவுச் சீட்டு எல்லாம் என்னிடம் தாங்க உங்களை மலேசியாவுக்கு கூட்டிக்கொண்டு போக ஏற்பாடு செய்யணும் வாங்கிக்கொண்டு போன ராஜா எங்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தான்.

ராஜா ஒரு சபலப் பேர்வழி. அவனோடு சேர்ந்து கொண்டான். நாமல்! தொடரும்.....