30 June 2012

அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

உறவுகளே நலமா!

தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு  கலாப்பாட்டி இன்று  30/06/2012 சிங்கையில் மிக சிறப்பாகக்கொண்டாடிய  பிறந்த நாள் விழாவுக்கு  தனிமரம் வசந்த கால வேலையில் போகமுடியாத  நிலையில் கடல் கடந்து நானும் என் வலை  உறவுகள்  உப்புமடச்சந்தியில் வாழ்த்துக்கின்றோம்!  வாழ்த்தும் 

கலாப்பாட்டி வாழ்க  நூறாண்டு! 


  பலரில் நானும் ஒரு தனிமரம் நேசன் குழு  கடல் கடந்து வாழ்த்துகின்றோம்!வாழ்க நூறாண்டு கலாப்பாட்டி! தனிமரம் தரும் வாழ்த்துப்பாடல் இது

கலாப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டடிக்கு!

விரைவில்!
ஜீவன் குடும்பம் என்ற காவடியில் மூத்தவனாகவோ /மூத்தவளாகவோ  இருந்தால் ஓவ்வொரு அடியும் பார்த்து எடுத்து தூக்கி ஆடணும் .ஏன்னா முதுகில் குத்தி இருக்கும் அலகு வலி அதிகம் புரிஞ்சுக்க!!

நிசா !குடும்பம் என்ற கோயிலுக்காக  நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும்  ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில்! வாரன்  ரயிலுக்கு நேரம் ஆச்சு! வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட! 



19 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-சிறப்பு நன்றிகள்!!!

ஒரு தொடரில் பல முகம் தெரியாத உறவுகளை எல்லாம் அக்காள் என்றும் தங்கை என்று ஐயா என்றும் நண்பர் என்று சகோ என்றும் உரிமை கொண்ட முடியுமா வலையுலகில் என்றால் ஆம் என்று அன்பு காட்டிய வலைச் சொந்தங்கள் பலரைத் தேடித்தந்த தொடர்தான் !








முகம் தொலைந்தவன் ராகுல் எனக்கு அதிகம் பலரோடு பரீட்சயம் ஆக இந்த நாட்குறிப்பு ஒரு பெரிய முகம் .அவசர உலகில் தொடருக்கு என்ன மதிப்பு இன்று இருக்கு என்றாள் நிச்சயம் நல்ல விடயங்கள் எங்கேயும் எப்போதும் சிலர் காத்திருப்பார்கள் வாசிப்பை நேசிப்பாக கொண்டு சுவாசிக்க என்று என்னை யாசிக்க வைத்தது!






வழிப்போக்கன் தனிமரத்திற்கு தொடர் எழுதக்கற்றுக்கொடுத்த மல்லிகை ஜீவா ஐயாவுக்கு என் நன்றிகள் .




 என் தொடரை எழத்துத் திருத்திய என் அம்மாவுக்கு முதலில் நன்றி என் அவசர்த்திற்கு அம்மாவாள் கணனியில் பார்வையை அதிகம் ஆராயமுடியாது அதில் தான் சில எழத்துப்பிழைகள் எப்படி தவிர்த்தாலும் உதவாக்கரையுடன் இந்த எழுத்துப்பிழையும் வந்து உள்குத்து வாங்கின்றது.:))) 






என் அம்மாதான் தான் முதல் வாசகி! 








மகன் பதிவுலகில் படிக்காதவன் என்று சொன்னாலும் தன் மகன் என்ன எல்லாம் நூல் படித்தான் என்பதை இந்த தொடரில் தான் முழுமையாக புரிந்துகொண்டது !




.மலையகத்தில் முகம் தொலைந்தவனுக்கு பதிவுலகில் முகவரி பலர் தந்து என்னோடு உறவாகிப்போனார்கள் அவர்களை எனக்கு அறிமுகம் செய்யக்காரணம் என் தாய் மாமாதான் .




இலக்கியப் பக்கம் என் கவனத்தை திருப்பிவிட்டவர் அவர் தான் இந்த முகம் தொலைந்தவனுக்கு இன்று வலையில் பலர் வாழ்த்துக்கூறம் அளவுக்கு ஊர் படிப்பித்ததும் நூல்கள் படிக்கவும் மூல காரணம் அவர்தான்!










 .என்னோடு இந்த தொடருக்கு முதல் அறிமுகம் தந்து பின் தன் தனிப்பட்ட தேடலில் விலகிச்சென்று மீண்டு வந்த என் வலையுலக தம்பி ராச்சுக்கு முதலில் நன்றி!




 அதனைத்தொடர்ந்து இந்த முகம் தொலைந்தவன் தொடருக்கு விருது தந்த கலிங்க இளவரசி கலைக்கும் ,கவிதாயினி ஹேமாவுக்கும் இரட்டிப்பு நன்றி இருவரும் எனக்குத்தந்த ஆக்கமும் ஊக்கமும் உறவும் வார்த்தைகளால் நன்றி மட்டும் சொல்ல முடியாது அண்ணா என்ற பாசம் காட்டும் இந்த உறவுகள் .






இவர்கள் எனக்கு அழைத்துவந்த தங்கைகள் அதிகம் எஸ்தர் -சபி. நிரூஞ்சனா, கலைவிழி,என ஒருபுறம் அக்காள்கள் அதிரா,அஞ்சலின்,கலா,இமா, என ஒருபுறம் அண்ணாக்கள் ஆகிப்போனநடைவண்டி கணேஸ் இவரின் இலக்கிய ஜாம்பாவான்களுன் என்னையும் ஆதரிக்கும் அன்புக்கு நான் அடிமை .,ரெவெரியின் பாசம்,,வசந்தமண்டபம் கவிதைக்குரல் மகேந்திரன் அண்ணா அன்பு  இவரின் கவிதைகள் பல என் தொடருக்கு பக்கபலமாக இருந்தது என்றால் மிகையாகாது.




இவர்களோடு தன் பல பயணங்களுக்கும் இடையில் இந்த தனிமரத்தையும் தம்பி என்று உறவாக ஓடிவரும் நாஞ்சில் மனோ என்று ஒரு குடும்ப உறவுகள் போல இனைத்த தொடருக்கு முகம் தந்த வலையுலக சகபதிவாளர்களுக்கு சிறப்பு நன்றி இந்த தனிமரத்தையும் பாசத்தால் தோப்பாக்கியவர்கள் இந்த அன்பு ஒன்றே போதும் !




முடிந்த போதெல்லாம் வந்து கருத்துக்கள் கூரிய சகபதிவாளர்கள் நிரூபன்,மணிசார்,துசி,கந்தசாமி,விக்கி,சி.பி,இராஜேஸ்வரி,ராஜி,மாலதி,சித்தாரா மகேஸ்,மதிசுதா,புலவர் ஐயா,ரமனி ஐயா,சென்னைப்பித்தன் ஐயா,சிட்டுக்குருவி,ரியாஸ்,பாஹி,.




மலையகம் பார்வையை பரந்த நிலையில் பேச பின்னனியில் இருந்து வலையில் தூண்டல் தந்த அம்பலத்தார் ஐயா,காற்றில் என் கீதம்,ஹாலிவூட் ரசிகன்,




எப்போதும் கடமைப்பட்டவன் தனிமரம் நேசன்.


இவர்களோடு !விச்சு,விமலன்,திண்டுக்கல் தனபாலன்,தென்றல் சசிகலா,ரதி, ஜீ,துரைடேலியல்,சிவசங்கரன்,கனவரோ,சமயங்களில் திரட்டியில் இணைத்த காட்டான்,சக்திவேல்,டாக்டர் முருகானந்தம்,போதிதர்மா,பன்னிக்குட்டி ராமசாமி,சீனி அண்ணா,எல்லாருக்கும் என் இனிய இதயம் கனிந்த நன்றிகள்!








இந்த தனிமரம் தடுமாறும் போதெல்லாம் வலையில் உறுதிகொடுத்த யோகா ஐயாவுக்கு மொத்த நன்றிகள் அவரின் பாசம் என்னை அதிகம் எழுதவைத்தது.




 எங்களை எல்லாம் எப்படி வலை உறவுகளோடு பழகணும் என்று வழிநடத்திய செங்கோவி ஐயாவுக்கு தனிமரம் நேசனின் நன்றிகள்.




 இந்த தொடரில் எழுத்துப்பிழைகள் பொறுத்தருளிய நெஞ்சகளுக்கு நன்றி!மற்றும் என் தொடருக்கு முகம் கொடுத்த உறவுகள் அனைவருக்கும் வாசித்த நெஞ்சங்களுக்கும் இந்த தனிமரம் நேசனின் தாழ்மையான நன்றிகள் பலகோடி 




.ஒரு சமுகவிடயத்தை பேச பின்னனியில் இருந்த முகம் தொலைந்த ராகுலின் பதுளை நண்பர்கள் கலைத்தாய்ப்புதல்வர்கள் அறிவுச்சோலைப்பூக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ராகுலை இயக்கிய அரபுலக நண்பன் டெனிலோடு தனிமரமும் நன்றி சொல்கின்றேன்.






 இந்த தொடரில் என் கவிதைகளையும் ,கற்பனைகளையும் பேச இடம் கொடுத்ததற்கு. தன் முகநூலில் என் தொடர் பதிவுகளைப்பகிர்ந்து பலருக்கு ராகுலின் முகத்தைக்காட்ட தனிமரம் நேசனுக்கு தன் அன்பைச் சொன்ன என் நண்பன் டனிலுக்கு இந்த நேரத்தில் நன்றிகள் பல !




வசந்தகால வசந்தத்தில் நானும் தொலைந்து போகின்றேன் சில மாதங்கள் மீண்டும் ஒரு உருகும் பிரெஞ்சுக் காதலி குறுந்தொடர் கதையோடு 






விரைவில் வருவேன் அதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பாசத்துக்கும் என் பணிவான நன்றிகள்




















 அன்பின் பாசத்தோடு என்றும் தனிமரம் நேசன்! 





18 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...- பின்னே சில முகங்கள்.


வணக்கம் உறவுகளே நீண்ண்......ட ஒரு தொடரை எழுதி உங்களை கொஞ்சம் அதிகம் இம்சையாக்கிவிட்டேன் சில வாரமாக. 




மலையகத்தில் முகம் தொலைந்தவன் ராகுல் பாத்திரம் ஊடாக மலையக வீதியை வலையுலகில் உலாவ விடணும் என்ற நீண்ட நாள் ஆசைக்கு அச்சாரம் போட்டது என் நண்பன் டனில் .



 இந்த தொடரின் மையக்கருத்து ஒரு மதச்சண்டையில் ஏற்பட்ட மனஉளைச்சளை கொஞ்சம் கற்பனை கலந்து சிறுகுறுந்தொடராக எழுதி ஒரு வாரசஞ்சிகைக்கு கொடுத்து அது வெளியாகும் தருணத்தில் . அந்தக்குழுவில் இருந்த ஒருவரோடு முரண்பட்டதால் வெளிவரவில்லை .






அந்த நேரத்தில் இனி இலக்கியம் ஆசையே வேண்டாம் என்று மூட்டைக்கட்டிவிட்டு வியாபாரத்தை கவனிக்க மன்னார் போனபோது .அயிசாவைச் சந்திச்சேன் !



 அப்போது எல்லாம் தனிமரம் ஜொல்லுப்பாட்டி பதிவுலகில் சொல்லுவது போல டென்சன் பார்ட்டி இல்லை:))) 


இப்படி ஒரு ஊரில் இப்படி ஒரு கதை இருந்திச்சு மாத்தயா 




அவனைக்கண்டால் மன்னிக்கச் சொல்லுங்கோ. அவன் வாழ்க்கையை தெளிவாக சொன்னதால் தான் நான் இப்போது சந்தோஸமாக ஒரு இல்லத்தரசியாக இருக்கின்றேன். என்று சொல்லி வீட்டில் எனக்குப் பிடித்த சாப்பாடுகள் செய்து விருந்து கொடுத்தாள் 



. அவர்கள் குடும்பம் எனக்கும் அதிகம் நெருங்கிய உறவாகிப்போனார்கள். அதன் பின் தான் நண்பரின் கதையை ஆராய்ந்தேன். ராகுல் எல்லாம் உத்தமன் கிடையாது ஆனால் குடும்பம் முக்கியம் என்று நினைப்பவன் .அவனிடம் கொழும்பில் வந்து சொன்னேன். 


" நீ புரிந்துகொண்டாய் அயிசா நல்லவள் என்று அது சரிதான் என்றான் ராகுல். அதன் பின் நட்பு தொடரவில்லை மாற்றல் என்று நானும்!கம்பளைக்குப் போய்விட்டேன். மாதமுடிவில் வரும் ஒன்றுகூடலுக்கு பல்தேசியக்கம்பனியின் காரியா லயத்தில் கொழும்பு வரும் போது கலாய்த்துவிட்டு ஓடுவேன் ராகுலை.




 டனில்லோடு சினிமா இசை இலக்கியம் ஹோல்பேஸ் பீச் என்று இருவருக்கும் பல ஒற்றுமை சிந்தனையில் நான் சபரிமலைப்பயணம் போகும் விடயம் முதலில் அவனோடுதான் பகிர்வேன். அப்போது தான் இந்த வருடம் யாத்திரையில் ராகுலை நானும் மீண்டும் சந்திச்சேன் . உடனே வந்து சிந்தித்தேன் வலைப்பதிவில் இருக்கும் நான் ஏன் இந்த மலையகப்பக்கம் உலா போக்கூடாது ? இயற்கை எழில் ரசிக்கும் பலருக்கு ஒரு ஊரைச்சுற்றிக்காட்ட வேண்டும். யுத்தம் என்ற வட்டத்தைத்தாண்டி இலங்கையில் பலவிடயம் இருக்கு பார்க்க ,படிக்க வெளியுலக மக்களுக்கு . நாமும் ஏதாவது வளர்த்த சமுகத்துக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்ற போது டனில் சொன்னான் ." நீ பழைய கதையை தொடங்கு காட்சிப்படம் நான் அனுப்புகின்றேன் மச்சான் என்று 


மலைமுகட்டில் தனிமரம் வலையேற்றிய படங்களும் இந்தத்தொடரில் பதுளை பற்றிய படங்கள் எல்லாம் அவனின் கைவண்ணம். அதிகம். அதனை பிடித்தது அவனின் தந்தை. டனில் தந்தையும் ஒரு புகைப்படக்கலைஞர் பதுளையில். இவன் இப்படி எனக்கு!யாதுமாகிய கண்ணன் அதிகம் பாடல் தேடமுடியாத போது இவனிடம் சொல்லிவிட்டால் அடுத்த வினாடி முகநூலில் பதிந்து விடுவான் . எங்க நட்பு பலருக்கு விசித்திரம் நான் ஒரு ஊர் அவன் ஒரு ஊர் ஆனால் நட்பில் ஒரே ஊர் .



அவனோடு சுத்தாத இடம் இல்லை கொழும்பு மற்றும் பதுளையில் நான் அந்தளவு நெருக்கம் அவன் வீட்டில் .எனக்கும். என் வீட்டில் அவனுக்கும் இருக்கும் மரியாதையை தொடர் ஆக்கினால் இன்னும் ஒரு தொடர் போடலாம். யுத்தம் பலரை பலருக்கு உறவாக்கிவிட்டது அதில் பதுளையும் எனக்கு ஒரு உறவுதான் என் நட்பு வட்டம் எப்போதும் அதிகம் தான் . 


இந்தத்தொடரில் அவனின் ஊக்கிவிப்புக்கு இந்த தனிமரம் நேசனின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல என்றும் நாம் குடும்பவிடயத்தை முன்னிலைப்படுத்துவோம் அவன் இப்போது அரபுலகத்தில் இருக்கின்றான் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம் நட்பாக நம்! 




இவனின் ஊக்கிவிப்பு ஒரு புறம் என்றால் காற்றில் என் கீதம் தோழியின் பங்கு இன்னொரு தூண்டல்.!



 பதுளை பற்றிய தொடரில் நிச்சயம் பல விடயங்கள் வரணும் என்ற போது அவங்களுக்கு தெரியாது நான் எதனை மையமாக வைத்து தொடரை தொடங்கினேன் என்று.



 ஆனால் இந்த பகிஸ்கரிப்பில் படிப்பில் சீரழிந்த பலரினை முகம் போட்டுக்காட்டணும் ஏன் இப்படி அங்கே அடிக்கடி நிர்வாகம் பாதிப்புக்குள்ளாகின்றது? பதவி ஆசையில், மதவெறியில், மாணவ சமுகம் பிழையாக நடத்தப்படும் ஆதங்கம் எல்லாம் பொதுவெளியில் பேச வேண்டும். பல்கலைக்கழகம் போக ஒரு ஆண்டில் படித்த பலருக்கு பொருளாதாரச்சிக்கல் இருந்தது. அதைத்தாண்டி பள்ளியில் படித்து பல்கலைக்கழகம் போவோம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் கனவை மத்தீ சீழித்த கதையை யாரும் சொல்லமாட்டார்கள் . அடுத்த தொகுதியினருக்கு ஆனால் அவங்கள் எல்லாம் ஆடினாங்கள், கும்மாளம் போட்டாங்க, பிள்ளைகளை சைட் அடித்தாங்க என்று மட்டும் 

விமர்ச்சிக்கும் போது அதில் ஏது நிஜம் என்று தெரியாமல் சிலர் பரிகாசம் செய்யும் நிலையை ராகுல் வெறுப்பதை என்னிடம் முன்னிலைப்படுத்தச் சொன்னதை உள்வாங்கித் தான் இந்த தொடரை தூசி தட்டி பதிவுலக நிழல்கால அரசியலையும் கலந்து எனக்குப் பிடித்த பாடல்களை இணைத்து தொடர் ஆக்க வலையேற்ற காற்றில் என் கீதம் கொடுத்த ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.


 முகநூலில் கிறுக்கியவனை வலைப்பக்கம் பயணிக்க முதல் குரு தோழிதான் எனக்கு அவங்ககூட ஒரு மூத்த பதிவாளினி-http://sutharsshini.blogspot.fr/


. சங்கீத டீச்சரிடம் நாம் ஒன்றாக படித்தோம் என்பதும் வெளியில் சொல்லாத சேதி . கதையோட்டத்தில் திருப்பம் வரணும் என்ற போது ராகுல் சொல்லிய இருவரையும் இவர்களுக்குத் தெரியாமல் கதையில் இணைத்தேன்!.இங்கே தான் தனிமரம் நேசன் கற்பனையை இவர்கள் முகநூலில் சூடாக விவாதம் பண்ணுவது யார் அந்த கல்பனா ???இது எல்லாம் ராகுல் சொன்னது என்றேன் இப்ப கேள்வி எல்லாம் தொலைந்தவன் பதுளை வருவானா என்பதே அதுதான்  முகம்  தொலைஞ்சிட்டான் இல்ல !!! 

இப்படி எல்லாம் எழுத வேண்டும்  மலையக உறவுகள்  முகம் என்று என்னை ஊக்கிவித்த என் ஆசிரியை மகன் பிஞ்சு முகம் மனோஜ்  காலக்கூற்றுவன் கொண்டு போனாலும் என் நினைவோடு அவன் பயணிப்பான்! இந்தத்தொடரில் அவன் இழப்துப்பு என்னை மீண்டும்   பதுளை பற்றி அதிகம் எழுதத்தூண்டிய ஒரு விடயம்..

 முகம் தொலைந்தவனுக்கு கை கொடுத்த வலை உறவுகள்  முகத்தோடு நாளை சந்திக்கின்றேன்!

17 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-இறுதி!!!!!!!


தமிழில் உறவுச் சொற்கள் உயர்ந்தவை அழகுள்ளவை. அர்த்தம் செறிந்தவை பாட்டியும் பொதுச்சொல் என்றார் வைரமுத்து. நினைத்தால் சரிதான் போலும்! 

கல்பனா வீட்டை வரச்சொல்லும் போது ஒரு மனம் சொன்னது .காதலிவீட்டில் ஒரு காப்பி குடிப்பது எவ்வளவு சுகம். போவன் அவள் வீட்டுக்கு என்று. இன்னொரு மனம் சொன்னது பாட்டி சொல்லியது மறந்து போச்சா ?யார் வீட்டிலும் உறவு நிலை தெரியாமல் ஒரு வயசுப்பிள்ளை வீட்டில் போய் கோப்பி குடித்தால் ஆவள் வீட்டுக்கு வரும் மருமகள் போல .சம்மந்தம் பேசவந்த சங்கதி எல்லாம் தெரியாத பேரனா பேரம்பலத்தார் பேரன் . இப்படியே திரும்பிப்போய்விடு இல்லை உனக்கும் உன் மாமாக்கள் கதிதான் வரும். நல்லா ஜோசிடா பேரா !கொள்ளிவைக்கக்கூட என்னிடம் வரப்பிடாது. தூக்கி வளர்த்த எனக்குத் தெரியாதா ?நீ யார் வீட்டுக்கு மருமகனாக போகணும் என்று . முடிவு பாட்டியிடம் விட்டான் .மென்று முழிங்கிய பின்


 . கல்பனாவுக்குச் சொன்னான் இன்னொருநாள் குடிக்கவாரன் என் பாட்டியோடு .கல்பனா சிரித்தது நெஞ்சிக்குள் சிலிர்த்தது சிந்தாமல் சிதறாமல் 

.சில நாட்கள் மாலையில் அவளோடு நடக்கும் போது அவள் எதிர்கால லட்சியம் சொன்னால் இந்த வருடம் பரீட்சையின் பின் நல்ல ஒரு நிர்வாக தலைவியாக முன்னேற்றம் காண வேண்டும் .இரண்டு தம்பிகளையும் நல்லா வழிநடத்ததும் என்ற போதே அவள் நிலவு போல மேலே உயர்ந்து நின்றாள் .


அவள் தம்பியின் காதல் விவகாரத்தில் ராகுல் வாழ்க்கைச்சுமையை சொல்லித் திருத்திவிட்டதால் அவனும் திருந்தி இருந்தது எல்லாம் கல்பனாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .


நடக்கும் போதே சொன்னால் உங்களை நல்ல நண்பனாக நான் எப்போதும் நினைப்பேன் எங்கோ இருந்து வந்து இங்கு வசந்தா டீச்சர் இடம் இந்தளவு மதிப்பும் ;மரியாதையும் ;பணிவையும் பார்க்கும் போது வித்தியாசமானவர்தான்!


 எல்லாப்பொடியங்களும் காதல் என்று நிக்கும் போது நீங்க கடமை என்ற பாதையில் போவது சந்தோஸம் நீங்க இப்படியே போகவேண்டும் என்ற போதே மனதில் அவள் மீது இருந்த ஈர்ப்பு வெளியேறிவிட்டது நல்ல தோழியாக இருப்பதே போதும் காதல் என்று சொல்லி அவள் நட்பை கேவலப்படுத்துவதைவிட சொல்லாமல் போவதே மனதுக்குள் சந்தோஸம் !


பரீட்சையில் சிறப்பாக செயல்பட வாழ்த்துச் சொன்னால் மறக்காமல் ஆட்டோக்கிராப் போட்டாள் .கல்லூரி வாழ்வில் இதுவரை எந்த அறிவுச்சோலைப்பூக்களுக்கும் ஆட்டோக்கிராப் போடாத ராகுல் இருபூக்களுக்குத் தான் வண்ணங்கள் வசந்தம் சேர்த்த வார்த்தைகள் கல்பனாவும் அவள் தோழிக்கும் தான் கைஜொப்பம் இட்டது .


இது எல்லாம் ராகுலின் நண்பர்கள் சுகுமார்,சங்கர்,தயாளன்,தினேஸ் என எவரும் அறியாத இருண்ட பக்கம். அவனின் ஆட்டோக்கிராப்பில் கூட அவள் போட்ட குறிப்பு நண்பர்கள் அறியாத பரம் ரகசியம்!


.பரீட்சை நேரத்தில் வீட்டில் போய் படி என்றார் செல்லன் மாமா.தன் கடையில் ஒரு ஊழியர் பொருட்களை களவாடுவதைக்கண்டுபிடிக்கத்தான் அவர் ராகுலை வீட்டைவிட்டு கடைக்கு அனுப்பியதன் பின்னனி .


எப்படி இவனை கடைக்கு போகவைப்பது என்ற போது அஞ்சகம் அம்மாவின் தீயில் அவர் அப்படி நடந்தது. .


சுகி பலதடைவை வந்து மன்னிச்சிடுடா குண்டா நான் விளையாட்டுக்குச் செய்தேன்!நீ வீம்பாக எடுத்துக்கிட்டாய் வாடா வீட்டை வீட்டில் போரா இருக்கு நீ இல்லாமல் நான் இனி உன்ற பாட்டுக்கள் எதுவும் எடுக்க மாட்டன் ..

போடி ஓட்டவாய் .

அன்று பேசாமல் விட்டுட்டு இன்று வாரியோ நான் வரமாட்டன் உன்னோட .எனக்கு ரோஸம் இருக்கு .உன் வழியில் நீ போ இப்ப வளர்ந்திட்டாய் இனி இந்தக்குண்டன் தேவையில்லைத்தானே !

. நீ வரமாட்டாய் உன் ரோஸம் எனக்கும் தெரியும்டா,,,,, ஆனால் என்னை மறந்து உன்னால் இருக்க முடியாது .உன் நாட்குறிப்பில் என் பெயரில் நீ எழதும் கவிதை எல்லாம் எனக்குத் தெரியும் .

உன்னை அழவைப்பன் எங்கிருந்தாலும் போட குண்டா 

.அவள் போய்விட்டாள்.அன்று தெரியாது ராகுலுக்கு அவள் தீயில் பின் நாட்களில் வாழ்வை முடித்துவிட்டு ஆயுள் பூராகவும் அழவிட்டுப் போய்விட்டாள் அவள் குழந்தையையும் என்று..

இன்றும் ராகுல் அழுவது அவள் புரிந்து கொள்ளாத மச்சானின் பாசத்தை..

 உயர்தரப் பரீட்சைமுடிந்த செப்டம்பர் முதல் வாரத்தில் ராகுல் ஊர் போக வெளிக்கிட்ட போது செல்லன்மாமா தடைபோட்டார் .

இங்க இருந்து கடையைச் செய்ய வேண்டியது தானே எனக்கு உதவியாக .ஏன் துரைக்கு வளர்ந்திட்டன் என்ற துணிவோ என் நிழலில் இந்தக்கடையை நீ தொடர்வாய் என்று தானே உன்னை வளர்த்தன்.இது எல்லாம் வேண்டாம் என்று போரியா. இன்றோட தொலைஞ்சு போ.


 இனி உறவு என்று என்கடைக்கு வரக்கூடாது .எனக்கும் பேரம்பலத்தாரின் ரோஸம் lஇருக்கு. என் பெயர், முகவரி ,எதுவும் நீ பாவிக்காமல் தனியாக முன்னேற முடியுமா,.  உன்னால் நிச்சயம் முடியாது .

முடிந்தால் நாளு ஊர் சுத்திவிட்டு வந்து பாரு செல்லன் மாமா சொல்லுவதன் அர்த்தம் புரியும் .உன்னால் தனித்துவமாக வாழமுடியாது. முடிந்தால் வாழ்ந்து காட்டு .அவரின் அர்ச்சனை மாலைகள் எல்லாம் வேள்வித்தீயில் வார்த்த ஆகுதிப்பொருட்கள் போல §


அன்று இரவு தான் நண்பர்களுடன் மீண்டும் அதிகமாக சோமபானம் அருந்தியிருந்தான் ராகுல். மனதில் கல்பனா தோழியாக!எப்போதும் இருப்பாள் .நண்பர்கள் அவளைப்பார்க்கும் போது இந்தப்பிள்ளையை ராகுல் சைட் அடிக்கின்றான் என்று கேளி பண்ணூவார்கள் என்பதால் தான் அவன் அவளுக்கு எந்த மன உளைச்சலும் வரக்கூடாது என்பதில் அக்கறை உள்ளவனாக அன்று அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கிளம்பியது .


என்றாவது நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் குடும்பம் முக்கியம் என்பதை .


இந்த ஊரில் எனக்கு எல்லாம் கிடைத்தது ஆனால் எல்லாம் கட்டுப்பாட்டோடு .சினிமா இலக்கியம் மீது என் ஆர்வம் சுருட்டுக்கடையை தாண்டிச் செல்லத்தூண்டிய காரணியை என்றாவது ஒருநாள் செல்லன் மாமா புரிந்துகொள்வார்.. ராகுலின் தனித்துவம் ..

பாட்டியைத்தாண்டி பேரம்பலத்தார் பேரன் வெளி வரமாட்டான். இயல்புகள் இழக்கப்பட்டால் சிதைக்கப்படுவது குடும்பம் என்ற ஆலமரம். 


அன்று இரவு ராகுல் என்னோடு(தனிமரம் நேசனோடு ) சகபயணியாக பயணித்தான் தலைநகரத்தின் அவசர உலகில் அவன் அவசரத்தில் நாட்குறிப்பை தொலைத்துவிட்டான். .




என்னிடம் கிடைத்தது அதில் படித்த சில சுவார்சியத்தை வலையில் ஏற்றிவிட்டேன் தொலைந்தவன் முகம் தொலைந்தான். 

ராகுல் எங்காவது அமைதியாக அவனாக இருக்கட்டும் நானும் அதைத்தான் விரும்புகின்றேன் .அவன் நாட்குறிப்பு மூடிவிட்டேன் . "எங்கேயும் எப்போதும் யாரோ யாருக்காக காத்திருப்பார்கள் வலிகளும். வேதனைகளையும் கடந்து சிரித்துக்கொண்டு .தில் தோபாஹல் ஹை!"



                          முற்றும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
















         

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-81


பூக்களைத்தான் பறிக்காதீங்க என்ற T.ராஜோந்திரன் ஒரு புறம் ,இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள் வைரமுத்துவும் எழுதிய வார்த்தைகள் எல்லாம். 

காதல் என்ற குளம் ஓடி கலியாணம் என்ற கடலில் கலக்கும் போது கடலில் மீன்கள் ,திமிங்கிலங்கள் ,சுறாக்கள் நண்டுகள் எல்லாம் வந்து சேரும் சமூகக்கட்டுப்பாடு என்ற வடிவில்!


 வர்க்க வர்ணாசிரமம் தலை எடுக்கும் .என்று தினேசிற்கு சொன்னபோது . "இல்லை மச்சான் பிரியா நல்ல பிள்ளை எங்க காதல் தோற்காது என்று .இரண்டு வருடம் இருவரும் பேசியகாதல் மொழிகள் அதிகம் வெளியில் தெரியாது .


. ஒரே பஸ்ஸில் 15 மைல் தொலைவில் இருந்து தினேஸ் வந்து பிரியாவுக்காக பஸ்சில் சீட் பிடித்த கதை பிறந்தநாளுக்கு அவன் கொடுத்த அன்புப்பரிசு காதல் கடிதம் என நீண்ட சூழ்நிலையில் .ராகுல் அப்போது படிச்சுப்படிச்சு சொல்லியது பிரியா உன்னை காய் வெட்டி விட்டுப் போய்விடுவாள் என்று.


 "இல்ல ராகுல் நீ தப்பாக புரிந்துகொண்டு இருக்கின்றாய் என்றான் " பிரியாவுக்கு ஆதரவாக பலர் மததீயை கலைத்தாயில் ஏற்றிய போதே தெரியும் இந்தக்காதல் வெற்றிகரமாக எடுத்த ஒரு திரைப்படம் தியேட்டரில் வந்தால் ஊத்திக்கொள்ளும் கதை சரியில்லை என்று அதுபோலவே பிரியா கடைசி நேரத்தில் பரீட்சைக்கு தனிவகுப்பு ஒரே பாடத்திற்கு இருவரிடம் போனால் தினேஸின் காதலை நிராகரித்துவிட்டு



 . ".பள்ளிக்கூட காதல் படலைவரைக்கும் என்று பஞ்சு டயலாக் பேசும் குமரன் சேருக்கும் தெரியும் இது தேறாத காதல் பொருளாதார உட்பிரிவுகள் என்று.


" பிரியா வெற்றிபெற்ற அறிவுச் சோலை மாணவி என்ற விளம்பரத்தின் பின்னே ஒரு முகம் தொலைந்தவன் தினேஸ் பற்றியாரும் பேசமாட்டார்கள். கடைசி நேரத்தில் அவன் ஒரு தலை ராகம் சங்கர் போல இருந்த நிலையை எந்த அறிவுச் சோலைப் பெண்கள் அறிவார்கள் ?


பரீட்சை நேரத்தில் மத்தீ எரிகின்ற நிலையில் மாணவர்கள் வரவு குறைந்துவிட்டது . நண்பர்கள் எல்லாம் வீட்டில் இருந்து படிப்போம் என்ற போது ஏற்றிவைத்த தீ எரிந்துகொண்டு கலைக்கல்லூரி மூடிய போது தினேஸ் ஒரு மனநோயாளி போல ஆனான் . 


பிரியா பிரியா என்று அவன் விழியில் அருவி ஓடிய போது ராகுல் ."சொன்னான் அப்போதே இதைத் தானே சொன்னேன் ஆண்டாள் பாசுரம் படிக்கும் எனக்குத் தெரியும்டா நாரணன் நம்பி நீ இல்லைடா அவளுக்கு நம்பாத என்று 


" பரீட்சை எழுதாமல் தோற்றுப் போய் தொலைந்தவன் தினேஸ் நட்பு வட்டத்தில் இருந்து ஒதுங்கி முகம் பார்க்க வரவில்லை ராகுல் பதுளையை விட்டு வெளியேறும் போது.


 தினேஸ் விவகாரம் எல்லாம் தயாளன் அறிவான் .

அவன் விமலா பின் தொடர்ந்த காதல் வீட்டில் அவன் தாய் ராகுலிடம் அழுத சங்கதி எல்லாம் பலர் வெளியில் சொல்லாத நிஜம். வீட்டில் இரு சகோதரிகள் இருக்க தனிப்பிள்ளையாக இருந்து குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டியவன் விமலா பின்னால் எத்தனை தூரம் போனான் பஸ்சில் என்று சேர்ந்து போன ராகுல் அறிவான் !


.எடுத்துச் சொல்லியும் விமலா புரிந்துகொள்ளவில்லை. தயாளன் தந்தையின் உடல் நிலை வீட்டில் ஒரு மகனான தயாளனின் அவனின் பொறுப்பினை தன் காதல் முக்கியம் என்று விமலா அழுத சங்கதி எல்லாம் சொல்ல முடியாது .அவன் தாயிடம் என்பதால் தான் ராகுல் தயாளன் வீட்டுக்கு கடைசி நேரத்தில் சொல்லாமல் வந்த பயணம் 


. அவனின் கடமையை சரியாக செய்தவிடாத ஒரு மருமகள் எப்படி வீட்டுக்கு விளக்கேற்றும் மதினி ஆனால் தயாளன் தங்கைக்கு.? 


காலம் சில விட்டுக்கொடுப்பை புரட்சி என்றும் தனுக்குடித்தனம் என்று போகின்ற போது பேர்த்தி உறவு பாசம் தேடுகின்றது பாட்டி வீட்ட வா என்று ஒளிந்து கொண்டு பார்க்கும் போது காதலுக்கு கண் இல்லைத்தான் போலும்! 


விமலா ஆட்டோக்கிராப் போடுங்க ராகுல் என்ற போது இருந்த கோபம் அவன் கேட்டான் ? நீங்க கூட அவனின் தங்கைகள் பற்றி ஒரு சிந்தனையும் செய்யவில்லையே? அவர்களின் எதிர்காலம் எல்லாம் உங்க காதல் வலையில் சிக்குப்படும் என்று.


 நான் இதில் எழுதும் அளவுக்கு நட்பை யாசிக்கும் நண்பன் இல்லை. என்ற போது விமலா கேட்டால் ? உங்க பெரிய மச்சாள் எல்லாம் ஆட்டோக்கிராப் போட்டு இருக்கின்றாங்க. நீங்க மட்டும் பிகு பண்ணுவது ஏன்? அப்போது தயாளன் வந்தான் மச்சான் போடுடா எனக்காக நம் நட்புக்காக இது கூடச் செய்ய் மாட்டியா ?

 மததீ எரிகின்ற போது படிப்பு எல்லாம் பாழாப்போச்சு! எல்லாரும் குமரன் சேரிடம் போக ராகுலுக்கும் கல்பனாவுக்கும் வீட்டில் படிப்பித்தா வசந்தா டீச்சர்


. யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும் என்று பாடிய கவிஞன் யுத்தம் என்ற ஒன்று யாரும் இல்லை துணையாக அகதிகளுக்கு என்று எழுதாமல் போனான்!

 அப்படித்தான் சுகுமார் குமரன் சேரிடம் போக கல்பனாவும் ராகுலும் தான் இருவராக வசந்தா டீச்சரிடம் இறுதிவரை படித்தது. 

"தம்பி நீங்க போகும் போது கல்பனாவை வீட்டில் விட்டுப் போகங்க. தனியாக கல்பனா போகும் சூழ்நிலை இப்ப இல்லை எல்லாக்காடையர்களும் எங்க அறிவிச்சோலைப்பூக்கள் மீது புழுதிவாரியிறைக்கும் வார்த்தைகள் காதில் கேட்க கூச்சமாக இருக்கு என்ற போதுதான்"

 ராகுல் சரி டீச்சர் கூட்டிக்கொண்டு போய் விடுகின்றேன் என்றான். 

ஒரு வார்த்தை பேசமுடியாது இருந்தவனுக்கு பல வார்த்தைகள் பேச கலைமகள் நாவில் கீறிய நவராத்திரி சிவாஜி போல கல்பனாவோடு மாலை நேரத்தில் மலையக வீதியில் நடந்தான் ராகுல். 

மனதில் அவள் ஒரு ஜோடிபோல நினைத்தான் .ஆனால் சொல்லவில்லை. என்ன ராகுல் புத்தகம் மட்டும் தான் படிப்பீங்களா ? மற்றவர்கள் முகம் படிக்க மாட்டீர்களா? 

அப்படி இல்லை கல்பனா ஊருக்குப் போகணும் இங்க வந்து அதிகம் படிச்சாச்சு வாழ்க்கையை. என்ன உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு ஏதாவது குழப்பமா? விரும்பினால் சொல்லுங்க கல்பனா இல்லை ராகுல் வீட்டில் ஒரு பிரச்சனை. தம்பி இன்னும் சாதரண தரம் பரீட்சைக்கூட முடிக்கவில்லை அதுக்குள் ஒரு காதல் புறா பிடிச்சிருக்கின்றார். அதுவும் கிறிஸ்தவக்குயில் படிச்சு ஒரு வேலை தேடணும் .வீட்டில் மூத்தவன் பொறுப்பை மறந்து திரியிறான் நான் சொன்னால் கேட்கின்றான் இல்லை. எனக்காக நீங்க பேசுவீங்களா அவனிடம் .

.உங்களிடம் அவன் கொஞ்சம் மரியாதை வச்சிருக்கின்றான். சரி பேசுகின்றேன் மனதில் தேவி சொன்னால் தேவன் என்ன செய்வது பாவம் எல்லாம் பலிபீடத்தில் போகும் வில்லன் பாத்திரம் கிடைக்குது. விரும்பிப்போகும் வீட்டில் ம்ம் வாங்க வீட்டை ஒரு கோப்பி குடித்துவிட்டுப் போகலாம் இல்லை கல்பனா?

தொடரும்.....

16 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-80


மததீயில் மாணவிகள் போராட்டம் மலையகம் எரிகின்றது !


அறிவிச் சோலையில் அடுப்பு ஊதும் குழல்கள் ;ஆட்டுவிப்போர் ஆடைகிழித்தார்கள், பள்ளிமாணவியின் பாவாடையில் இரத்தம் பார்த்தவர்கள் கண்களில் ..;என்று எல்லாம் தலையங்கமாக தலைநகரில் இருந்து வரும் பத்திரிகைக்கு செய்தி எழுதும் செய்தியாளர்!

 தெரியாத எரிகின்றது என்ன எரிக்கின்றது என்ன என்று.

 உண்மையின் குரல் என்று விட்டு பொய்யின் போதையை இரவு விடுதியில் இறைத்த மதவாதிகள் மாட்டின் ஜின் ஒரு புறம், தொட்டுக்கொள்ள மாட்டுப்பொறியல் அதில் தெரியவில்லையா மதம் எண்ண என்று??


 ஊதுகுழல் என்று எழுதும் போது தெரியவில்லை ஊதும் குழல் பெண்களா இல்லை கர்ணன் குழலா என்று அடுப்பு என்று எள்ளி நகையாடும் போது தெரியவில்லை பெண்கள் அடக்கி வைக்கணும் என்று நினைக்கும் ஆணாதிகப்பார்வை? 

ஆட்டுவிப்போர் என்ற தலையகம் தீட்டிய போது தெரியவில்லை மாணவிகள் மாணவர்கள் கைமீறி அது யாரிடம் போய் அரசியல் விளையாட்டில் கிரிக்கட் ஆட்டம் போல அடித்தாடும் நிலையில் மதத்தீ எரிந்துக் கொண்டு இருக்கிறது.


 வாக்கு அரசியலுக்கா மாணவர் சமுகத்தை தூண்டிவிட்டு வேசம் போட்ட அரசியல் முகம் தெரியாதா அந்த செய்தி ஆசிரியருக்கு நகரின் முக்கிய வாடிவீட்டில் மங்கள் வெளிச்சத்தில் மாலைப்நேரம் மப்பு போதவில்கைவென்று மண்டியிட்ட நேரம் சாரம் கட்டியவன் கண்டது எல்லாம் கமராவில் விழாது.

 ஆனால் விழியில் விழும் செவியில் விழும் மொழியில் புரியும் .ஆடைகிழித்தார்கள் என்று அசிங்கமாக எழுதிய போது எப்படி இருந்து இருக்கும் செய்தியைப் பார்த்து உணர்ச்சிக்கு அடிமையாகும் வாசகர்களுக்கு வெட்டணும் கொத்தணும் சுடணும் என்று தீ மூட்டும் செய்தி எழுத்தாளர் சமுகப்பார்வையில் செய்தி சொல்லமல் விட்டது ஏன் 


உள்ளார்ந்த பார்வையில் ஒரே வீட்டில் நண்பர்கள் ,நண்பியாக ,ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் சக நண்பிகளை துரியோதனன் சபையில் பாஞ்சாலியின் சேலை உருவியது போல பர்தாவை உருவ இது என்ன சினிமாவா ,,,


அவர்கள் நம் தோழிகள் எந்த காம வெறியும் இல்லாத நண்பிகள் தீபாவளிக்குப் பலகாரமும் ரம்சாணுக்கு வட்டல் அப்பம் தின்ற வீட்டில் எப்படி ரெண்டகம் செய்வார்கள் தீயாக வதந்தியைப் பரப்பி மாணவர்களின் மனங்களில் மதத்தீ கீறல்போட்டவர்கள் எல்லாம் எப்படி மதவாதிகள் பின் நின்று தீயிட்டார்கள் மறக்கமுடியாத பள்ளிமாணவர் பருவ வாழ்வில்.எல்லாம் ஆராய வேண்டி கல்வியமைச்சு வேடிக்கை பார்த்தது பாராளமன்றத்தில் பதிவாகும் வரை .



அந்தளவு இந்த அறிவுச் சோலையும் கலைத்தாயியும் மதச்சண்டையில் இருந்த போது வீதியில் நிற்கும் காடையர் காமக் கூட்டத்துக்கு பாவடையில் இரத்தம் எதனால் என்றே எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியாது .


.பருவயது கடந்து தானே தாய் ஆனால் இவனைப் பெற்றவள் அந்த ரத்தம் தெரியாதவன் ஆனால் மதம் என்ன எழுதினது என்று மட்டும் படித்து விடுவார்களே? 


எங்கும் உள்ள அல்லா பெயரைச் சொல்லும் அல்லாவின் ஆணையும் தொழுதால் அய்யனைச் சேர்ந்த பின் அம்மை தொழுதேத்தும் மெய்வினை அங்குண்டோ மெய்யுலகில்!

வீதியில் போகும் அறிவுச்சோலை இந்துப் பெண்பிள்ளைகளிடம் வீதியில் நின்று மோசமான வார்த்தைகள் பேசிய ஆட்டோ ஓட்டும் முஜாஹீதீன்களுக்கு எல்லாம் எப்படி இலவசமாக மதவெறி டீசல் ஊத்தினார்கள் வியாரிகள் இவர்களுக்கும் வீட்டில் சகோதரிகள் இருந்தால் இப்படியா தரம்கெட்ட வார்த்தைகள் தங்கையிடம் பேசுவார்கள் உணர்ச்சி வேகத்தில் உதிர்கும் வார்த்தைகளுக்கு உறவு முறை தெரியாதா ?


கேவலம் மதம் என்ற அரக்கன் புகுந்து வீதிகளில் மாணவர்கள் மாணவிகளுக்கு மன உளைச்சல் தந்த போது தான் ராகுல் அயிசாவிடம் கலைத்தாயின் பள்ளியில் அன்று பேசியது. 

அயிசா ஒரு சட்டப்பிரச்சனைக்கு மதச்சாயம் பூசிய மதப்பிரச்சனையில் கூட புரிந்து கொள்ளாமல் யார் யாரோ தீ மூட்டிவிட அதில் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லாம் வேற்று நாட்டவர்கள் போல நினைக்கும் போது எப்படி சுகுமார்கூட காலம் எல்லாம் காதல் வாழ்க என்று ஜோடியாக முடியும்.!


 எது பிரச்சனையாகும் என்று நினைத்தேனோ அது நேரில் நடக்குது நான் மதவாதி அல்ல. ஆனால் மதம் கடந்து நீங்க வரமுடியுமா ??????

வந்தாலும் உங்களுக்குப் பின் வீட்டில் இருக்கும் இரு சசோதரிகள் வாழ்வில் வரும் நடைமுறைச்சிக்கள் ஏன் உணரவில்லை? அதே போல தானே சுகுமார் வீட்டிலும் அவனுக்கும் இருக்கும் இரு சகோதரிகள் வாழ்வில் எப்படி எல்லாம் கலியாணச் சந்தையில் கேள்வி வரும் என்று ஜோசிக்கவில்லை?

 அவன் மூத்தவன் விடும் தவறினால் குடும்பத்தில் ஏற்படும் புயல்கள் ஏன் புரிய மறுக்கின்றீங்கள் ஆயிசா?18 வயதில் காதல் தேவை என்று ஜோசிக்கும் போது தன் குடும்பத்தின் கெளவரவம் ,பொறுப்பு தேவை என்று ஏன் ஜோசிக்கக்கூடாது? ஒரு பெண்காத்திருக்க முடியுமா?

படிப்பு முடிக்கவில்லை ,இன்னும் ஒரு தொழில் கிடைக்கவில்லை அதன் பின் குடும்பத்தில் பொறுப்பு முடிக்கவில்லை .அதுக்குள் கலியாணம் என்றுஒரு ஆணை எப்படி ஒரு பெண் அவசரப்படுத்த முடியும் நடைமுறையில் பல சிக்கல் வரும் இது எல்லாம் புரியாமல் காதல் என்றால் எப்படி அயிசா?

 நீங்க மதம் கடந்து வந்தாலும் நடைமுறையில் எங்க போய் வாழமுடியும் ?மன்னாரில் இல்லை கண்டியில் ஊர் விட்டுத்தான் போகணும். நிச்சயம் பதுளையில் வாழ மதவாதிகள் விட மாட்டிணம் .அதிலும் பார்க்க இந்த காதல் என்ற வேசத்தைக்களையுங்கோ இது எல்லாம் ஒரு ஈர்ப்பு ஆனால் பகிஸ்கரிப்பு நேரம் வராமல் விடாதீங்க பள்ளிக்கு .

ஏன்னா பொடியங்கள் எல்லாம் நீங்களும் மதவாதி என்று முத்திரை குத்துவாங்க அயிசா. .இவன் சுகுமார் காதலை நிராகரித்தால் அவன் வாழ்க்கை நல்ல இருக்கும் .ஒரு நண்பனாக இருவருக்கும் சொல்லுறன் இதுக்கு மேல் உங்க விருப்பம் நான் வில்லன் ,துரோகி என்று எப்படி நினைச்சாலும் பருவாயில்லை .


அயிசாவை எங்காவது ஊரில் பார்க்கும் போது நல்ல ஒரு வகுப்புத் தோழியாக பார்க்கணும் இனி உங்க இஸ்ரம்.மதத்தீயில் விழுந்த போது குளம்பிய குட்டியையில் மீன் பிடிக்க முடியாது என்பதை அயிசா சுகுமாரின் காதலை நிராகரித்து அத்தோடு பாடசாலைக்கும் வராமல் வீட்டில் இருந்து படித்துக்கொண்டு இருந்தால்.



 சந்தேகம் என்ற தீ சந்தர்ப்பம் கிடைக்கும் போது எண்ணை வார்க்கும்.

 சுகுமார் அயிசா ஒரு இஸ்லாம் .இந்த நேரம் வரமால் போனது அவளுக்கும் இயற்கை உபாதை இருக்கும் ஆனால் பொடியங்கள் மனதில் அவளும் மதவாதியின் பின்னால் போய் விட்டால் என்று நினைக்கின்றாங்க.

 ஒரு பகிஸ்கரிப்பிலே இப்படி என்றால் வாழ்க்கையில் எத்தனை தடைகள் தாண்டணும் வேண்டாம் இந்தகாதல் ஒழுங்கா படி. உன்னால் முடியும் பல்கலைக்கழகம் போக நான் பரீட்சை முடிய கொழும்பு போறன் இனி சந்திப்பது கடினம் மச்சான் .


ஆனால் குடும்பத்தில் நீ பொறுப்பா இருக்கணும் நண்பர்களில் பல வகை இருக்கு எல்லார் மனதும் ஒரே மாதிரி இருக்காது .

உன் வீட்டில் சாப்பிட்ட போது உன் தங்கையும் எனக்குத் தங்கைதான் அப்படி உறவில் தான் எல்லா வீட்டிலையும் நான் வேண்டுவது நண்பன் ஒரு அண்ணாவக இருக்க முடியும்.

 ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள் யாரும் நண்பர்கள் வீட்டில் மருமகனாக இருக்க முடியாது .அதுதான் என் நிலை .இதுக்கு கொஞ்சம் அவதானிப்பு தேவை ஒரு நண்பரின் செயல் எனக்கு பிடிக்கலை.

 இதை நீ நிராகரிக்க விட்டால் நான் உன்னை நிராகரிப்பேன் ஏன்னா எனக்கு அண்ணா பதவி தான் முக்கியம் புரிஞ்சுக்க யார் அந்த நட்பு என்பதை உணர்கின்ற தருணம் காதலைவிட முக்கியம் .