29 May 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்..-5

அரசியல்வாதிகளின்  பிள்ளைகள்  தேர்தலின் போது அரசியலுக்கு இழுத்து வரப்படுவதும் ,
சினிமா நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு கொண்டு வரப்படுவதும் சாதாரண ஒரு நிகழ்வு .என்றாலும் விரும்பமும் ஆர்வமும் தான் அவர்களை உரிய இடத்துக்கு கொண்டு செல்லும் !

திணிக்கப்படும் எதுவும் நின்று நிலையாது  இதுதான் யாதார்த்தம்.


 ஆனால் எங்கட ஆர்வம் ,விருப்பம் எதையும் தெரிந்து கொள்ளாமலே  இனி நீ தான் தொடர்ந்து  எங்கள் பாரம்பரிய வியாபாரத்தை  நடத்தனும் என்று மகன்களிடம் கெஞ்சும் தந்தைகளின் நிலையும் ,தாய்மாமாக்களின் கையேந்தலும் ஒன்றும் வரமல்ல சாபம் .

எமக்கு எதில் சிறப்புத்தேர்ச்சி  இருக்கு என்பதை ஏன் புரிய மறுக்கின்றார்களோ ?

நீ தான் இனி அடுத்த முதலாளி என்று பாசவலை வீசும் அங்குசம் என்ன வெற்றிக்கொடி கட்டு படத்தில் பார்த்தீபனுக்கு வங்கி லோன் கேட்க வடிவேல் கையொப்பம் இடும் போது வடிவேல் நிலை ஒரு பிலாஸ்பேக் பூமாலை போட்ட ஆடுக்கனவு போலவா ?

சில்லரைக்கடைவியாபாரம் என்ன ஆனந்தம் படம் போலவா இல்லை ,அங்காடித்தெரு போலவா ?அதிகாலை 5 மணிக்கு எழும்பி பின்னிரவு 1 மணி வரை தொடர்ந்து நிற்பதும், கல்லாப்பெட்டியில் மூலநோய்வரும் அளவுக்கு குந்தியிருப்பதும் தான் வாழ்க்கையா ?

இந்த சிறுதொழில் வியாபாரம்  பற்றிய அடுத்த தலைமுறையின் உணர்வுகள் எல்லாம் யாரும் விரும்பித் தேடாத ஒரு தனியுலகம்.


 உங்க நட்பு தனிமரம் கூட மென்போக்கில் தானே  எழுதினார் யாழவன் ?


அது பற்றி எல்லாம் எனக்கு கருத்துச்சொல்ல விருப்பம் இல்லை .

ஆனால் இன்று நாம் இப்படி வீதியில் அண்ணா வேலை ஏதாவது வந்தால் சொல்லுங்க என்று கையேந்தும்  நிலையில் எம்மூதாதையார்கள் யாரும் இருக்கவில்லையே ?

நாலுவகை  சுருட்டும்  ,ஒரு தட்டு வெற்றிலையும் ,ஒரு கோணி பாக்குடனும் ஒரு இடத்தில் இருந்து தொடங்கிய வியாபாரம் பின்னால் விளம்பரப்பலகைவைத்த தொடர்மாடி நவீன அங்காடி என வியாபார சாம்ராச்சியத்தையே உருவாக்கிய குறுநில மன்னர்கள் போல வாழ்ந்தவர்கள்  என்ற வரலாற்றையும் மறக்கூடாது!

என்ன இந்த இனவாத யுத்தம் வராது விட்டால் நம் கனவுகளில் நிச்சயம் ஒரு சுறுட்டுக்கடை வியாபாரமும் ஊடகஆசை போல எங்கேயும் எப்போதும் தோன்றி இருக்கலாம் தானே கமலேஸ் ?

உண்மைதான் .ஒருவேலை நாங்களும் இப்படி வெளிநாடு போய் பணத்தினை தங்கம் போல வெட்டி அள்ளனும் என்ற நவீன சிந்தனை தோன்றி இருக்காது தானே?))))


என்ன சிரிப்பு பாஸ் .

இல்லை ஒருபக்கம் இனவாதம்  வெறியில்  ஒருநாட்டு மக்களையே பிரித்தாலும்  அரசியல் சமூக நிர்வாக செயல்ச் சுதந்திரம் பற்றி நினைக்கும் போது சிரிக்கத்தோன்றியது!

இப்படித்தான்  நண்பா இங்கே வெளிநாட்டு வந்தபின் சிலர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இயற்க்கை அனர்த்த நிகழ்வை மனிதநேயத்துடன் உணராமல் !

இன்னும் இன்னும் இப்படி மக்களுக்கு வேண்டும் அன்று நம் உறவுகள் துடிக்கத் துடிக்க விட்ட கண்ணீர் சாபம் தான்  இப்படி இந்த மக்களையும் அல்லலுறவைக்கின்றது  என்ற திமிர்க்கதைகள் எல்லாம் ஒருநாளும் அப்பாவி மக்களை வாழவைக்காது !


இதைச்சொன்னால் அந்தநேரத்தில் ஊடகங்கள் ஏன் வாய்மூடிநின்றது என்கின்ற குறுக்குகேள்விக்கு என்ன பதில் சொல்வது?

" எந்த நாட்டிலும் அந்த நாட்டு அரசிக்குத்தான் ஊடகங்கள் சார்பாக செயல்ப்படும் என்ற அடிப்படை அறிவுகூடவா இல்லை "

இதில்வேறு இவங்கள் வந்தது ஊடக அடக்குமுறை உயிருக்கு அச்சுறுத்தல் என்ற அகதிக்கோரிக்கை வேண்டுதல் எல்லாம் மறந்து பேசும் மனிதத்தன்மை பற்றி என்னத்தைச்சொல்ல கமலேஸ் .

சரிடா  எனக்கு வேலைக்கு நேரமாச்சு மீண்டும் சந்திப்போம் என்று அன்று லாட்சப்பல் வீதியில்  சந்தித்தவனுக்கு  பின் என்ன நடந்தது என்ற சிந்தனையோடு ரயிலில் இருந்து  இறங்கி நிலக்கீழ் தொடரந்துக்கு பயணித்தான் !

அப்போதுதான் தொலைபேசி ரிங்டோன் சினேஹா பாடல் சில்சில் சில்லெல்லா சினுங்கியது !

இது என்னடா புஸ்பா புருஷனுக்கு வந்த சோதனை போல நேற்று ஒரு தொலைபேசி  அழைப்பை உள்வாங்கியதால் தானே இதோ இப்போதும் என் அவசர பணிக்கு இடையிலும் லாட்சப்பல் போறன் அந்த அழைப்பை ஏன் எடுத்தேன் ?

சிந்தித்தால் சில சொல்லப்படாத நாளையசெய்தி போல இன்னும் சொல்லப்படாத மலையகம் பற்றி ஏன் பேசமறுக்கின்றோம் ?

முகநூல் என்றாலும் டிவிட்டர் என்றாலும் இணைய வசதி பற்றிய தேடல்  இன்னும் போய்ச்சேராத பாரதிராஜா பட கிராமம் போல. இன்னும்  செழிப்புடன் இருக்கும் மோடி போய் வந்த மலையகம் பற்றி எல்லாம் ஏன்  பொதுவில்  பேச மறுப்பது?


தமிழ்க்கவியின் கட்டுரை பிழை என்று வடக்கில் பண்டித இலக்கியவித்தகர்கள்  திரும்ப வாங்கிய சிறப்பு நூல் பற்றி எல்லாம் பேசலாம்)))

எனக்கு என்றும் என் மனசு இளையராஜ இசைபோல என்று சொல்ல ஆசைப்பட்டு இருப்பேன் !இந்த நாதாரிக்ள் எல்லாம் இன்னும் இலங்கை சுற்றாத சிட்டுக்குருவி போல கட்டுப்பாடு கொண்ட சமூகநெறி பிறழாத உத்தமர்கள் போல நடிப்போர் ஷீகிலா படம் ஊத்தை என்று பார்த்துவிட்டு புலம்பும் எருமைமாடுகள்))) இதோ எருமைமாடு என்று சிங்களத்தில் கூட கில்மா படம்வந்தது ))).

எத்தனை பேர் பார்த்து சொல்லி இருப்பார்கள் அதில் நடித்த நடிகர் கூட சர்வதேச விருது பெற்ற விடயம் சொல்ல இங்க ஊடகத்தில் ஆர்வம் இல்லை நண்பா)))

இதோ விளம்பரத்துக்கு ஆதரவு தந்த வியாபார முகவர்  இவரின்   ஸ்தாபனம் மிகவும் பிரபல்யம்  இந்த மலையக மண்ணில்!

ஊவா பண்பலை வானொலி ஒரு சில வர்த்தக விளம்பரத்தின் பின் தொடந்தும் நேயர் பாடல் ஒலிக்கவிடும்)))http://www.radio.up.gov.lk/index.php?option=com_content&view=article&id=75&Itemid=84&lang=en




 இதோ பாடல் வருகின்றது)))



தொடரும்)))))

கோணி- சாக்கு!








24 May 2017

குடி குடி குடிக்கலாம்)))-3

கொத்தமல்லி நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் பிரதானமான ஒரு தானியம் எனலாம் .







இலங்கை வடபகுதி சொல்லாடலான சரக்குகறித்தூள் செய்வது என்றாலும் ,மிளகாய்த்தூள் செய்வது என்றாலும்  இந்த மல்லி சேர்க்காவிட்டால்  கதாநாயகி இல்லாத படம்  போல!





 மல்லியின் சிறப்பியல்புகள் அதிகம் உடல்சூட்டுக்கு ,வாயுக்கோளாறு  ,பித்தம், அல்சர் போன்ற நோய்க்கு துரித நிவாரனி.



 இந்து படத்தில் வந்த கொத்தமல்லி வாசம் பாட்டை சிலர் கேட்டும் இருக்க மாட்டார்கள் படம் பார்த்ததும் கூட சிலர்தான்))  இலங்கையின் இனப்போரினால் .!





ஆனாலும் இலங்கையின் மலைநாட்டில் பல ஊர்களில்  சிற்றளவு மல்லி இன்றும் வீட்டுத்தேவைக்காக  பயிரிடப்படுகின்றது .







இலங்கைக்கு அதிகம் மல்லி ருமேனியா மற்றும் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது .


.என்னதான் பெரியண்ணாவுடன் சிங்களம் முட்டி மோதினாலும் இறக்குமதிக்கு அவர்களிடமே சரணாகதி ஆகவே))).மோடி என்ன இனி இந்திய  மாநில எதிர்கால  முதல்வர் கூட வீடுச்சாவி கொடுக்க இலங்கைவரும்போது )) எதிர்ப்பு ஆர்பாட்டம் பற்றி எதுவும்  பேசாமல் போகலாம்))!







மல்லி ஆயுள்வேத வைத்தியத்தில் கூட அதிக முக்கியத்துவம் பெறுகின்றது  இலங்கைப்பொருட்களை தடைசெய்ய வேண்டும் /புறக்கணிக்க வேண்டும் என்று புலம்பெயர்தேசத்தில் பொங்கும் போராட்டக்காரர்கள் கூட சமஹன் குடித்துக்கொண்டே தொண்டையைச் சீர் செய்வார்கள். சமஹனின் மூலப்பொருளே மல்லியும்  இத்தியாதி மூலிகைகளும் தான்!  சினேஹா நடித்த ஆனந்தம் படத்தில் ஒரு நகைச்சுவை ஞாபகம் இருக்கா உங்கள் பலருக்கு பருப்பு கடிதம்))





 என்ன மல்லி பற்றி புலம்புகின்றேன் என்று சிந்திக்கின்றீர்களா உறவுகளே?)))


இன்று உடல் நலமில்லை உடனே  வாங்கோ மருந்து எடுக்க  என்று மனைவி கூட்டிச்சென்றது ஆங்கில வைத்தியரிடம் அவர் என்னைப் பரிசோதிக்க முன் மனைவியின் கழுத்தினைப் பார்த்தார் ))) எவ்வளவு பணம் ஆட்டையப்போடலாம் என்ற நினைப்பில்  )))





உள்  மனதில் தோன்றியது அதிகம் பீஸ்க்கட்டும் நிலமை என்று மாறும்?))) ஆயுள்வேத மூலிகைகள் நிறைந்த நாட்டில் கூட ஆங்கில வைத்தியம் பெருகிவிட்டது பணம்கொழிக்கும் தொழில் அல்லவா இதை சீர்செய்ய ஏதுவழி?

இந்த நிலையில் இலங்கையில்  கனவு கண்டாள் எப்படி இருக்கும் ?))
-----////


------------------------------------


கண்டகண்ட தெரியாத மருந்து வாங்கி
ஏன் கொடுப்பான் காசு ,காசு,
காசு ,காசு ,காசு !





எல்லா நோயும் தீரும் உடன் குடிப்போம்  !கொத்தம்மல்லித் தண்ணீர்
 எதிர்கால ஆரோக்கியம் என்றும் நிரந்தரம்!!
ருமேனியாவில் இருக்கு தூய்மையான கொத்தமல்லி
  இலங்கைக்கு கொண்டுவருவது
நம்ம( எங்களின் ) ஹமால் தம்பி!
குடிப்போமா கொத்தமல்லி .!
ஏன் பிஸ்க்கி ?பிரண்டி?
 ஏன் பிஸ்க்கி ?பிரண்டி ?





குடிப்போமா கொத்த மல்லி
,கொத்தமல்லி !
எல்லா நோயுக்கும் துரித நிவாரனி மல்லித்தண்ணி !





இன்னும் எனக்கு(எங்களுக்கு) நினைவுண்டு !
என் சிறுபராயத்தில், எனக்கு ஏதும் வியாதி என்றால்!
என் அம்மா தந்தது உடனடியாக மல்லித்தண்ணி!
 .அப்போது சுகப்படுத்தியது மல்லித்தண்ணீர் தானே?


எல்லா நோயுக்கும் துரித நிவாரனி  குடிப்போமா கொத்தமல்லித்தண்ணீர்}
கொத்தமல்லி தம்பி !
கொத்த மல்லி . -!!







வீதிப்பாடகர்களுக்கும் ,விற்பனைப்பிரதிநிதிகளுக்கும்  ,உடல் உழைப்பு தொழிலாளிக்கும்  புத்துணர்ச்சி தருவது
கொத்தமல்லித்தண்ணி !





உடல் இளைக்க வேண்டி உடல்ப்பயிற்ச்சி போனாலும்,
 உருபடியான உடன் மருந்து
கொத்தமல்லித்தண்ணீர் அதே கெதி தண்ணீர்தான்))


அது போல இது போல எதுவும் வேண்டாம்!




குழந்தை போல இருப்பாய் குடித்துப்பாரு!
 கொத்தமல்லி தம்பி குடித்துப்பாரு கொத்தமல்லி .கொத்தமல்லி !





காலையிலும் ,மாலையிலும் தினமும் குடிப்பேன்
உடல்பலமும் ,மனபலமும் இன்னும்
பளபளப்பாய் இருப்பதெல்லாம் கொத்தமல்லித்தண்ணி குடிப்பதால்
பளுக்கூட தூசுதான் பாரு தூக்கி))!





எல்லோரும் குடிப்போமா கொத்தமல்லி ஏன் பிஸ்க்கி பிராண்டி?/
ஏன் பிஸ்க்கி பிரண்டி ?





மறக்காமல் குடியுங்கள் கொத்தமல்லித்தண்ணீர் ))))





குளீர்பாணமும் வேண்டாம்,
ஐஸ்கிரீமும் வேண்டாம், குடிப்போமே
குளிர் அறை குத்தாட்ட சந்திப்பில் கூட
தம்பி ஊத்திக்கொடு   கொத்தமல்லித்தண்ணீர்)))!





இதோ இப்போது குடிநீர் போத்தலிலும் கொத்தமல்லி தண்ணீர் வந்துவிட்டது 
கொத்த மல்லி சிரிப்பு )))

---
மூலப்பாடல் ஆக்கம்-சந்திரதாச பெர்ணண்டோ





 இசைமீட்டி பாடியவர்கள் இருவர்  -சுனில் பெரேரா /பியால் பெரேரா


முகநூலில் பாடல் பகிர்ந்து உங்கள் சகோதரமொழி சிங்களமொழியின் தமிழ்வடிவம் எப்படி இருக்கு என்று அறிய ஆவல் என்று பதிவு எழுதத்தூண்டிய யாழ் இணைய பதிவர்  நட்பு  சுண்டலுக்கு நன்றிகள்..


  என் சிற்றறிவு  சிந்தித்த குத்தாட்டா வரிகளே  மேலே )))

மூலவடிவம் காட்சியில் காணுங்கள் )))




இலங்கையின் பிரபல்ய இசைக்குழுக்களில் ஜிப்சி இசைக்குழுவும் ஒன்று என் அபிமான பாடகர்களில் சுனிலும் ஒருவர்!


19 May 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்---4

முன்னர் விம்மல் இங்கே-http://www.thanimaram.com/2017/04/3.html?m=1




-----------------------------


இனவாத நாட்டில் இது வெள்ளைவான் கலாச்சாரம்  என்று அச்சம் கொள்வோருக்கும் கூட  ,மதவாத நாதாரிகள் அன்று ஆடிய மகுடி சிங்கலே கோஷம் போலத்தான்!தொடரும் இனவாத சீண்டல்கள்

 இன்றும்  மாண்புமிகு  சிறுபாண்மை அமைச்சரிடம் கூட  இது சிங்கள பூமி என்று தெரியாதா?

 நீ கூட தகுதியில்லாத துறையில் அமர்ந்து இருக்கின்றாய் என்று அடாவடித்தனம் காட்டுவதுதான் இன்றைய  நல்லாட்சியின் மேலாதிக்க அரசியல் பற்றி எல்லாம் யாரும் சிந்திப்பதில்லை


.


தம் அரசியல் தேவைக்காக வடக்கே துப்பாக்கிச்சூட்டு விளையாட்டை தொடங்கியிருக்கும் புதிய  இனவாத செயல்த்திட்டத்தின் லாவகமான செயல்பாடுகள்  எல்லாம்  அங்கங்கே புதிதாக உருவாகும் புத்தவிகாரைகள் போல நல்லாட்சியின் மென்வலு கோஷ நடிப்பை சர்வததேசம் நன்கு புரிந்துகொள்வாகளா ?








இனவாதத்துக்கு ஓட்டுப்போடும் கூட்டங்கள் ,இனவாத அரசியல் தூண்டும் விஷமிகள் வாழும் பூமியில்  தமிழர் விடிவு நிச்சயம் குதிரைக்கொம்பு போன்றது யாழவன் சார்!








இது போலத்தான் நம் உணர்வை தூண்டி இதோ மீண்டும் தாகம் கொண்டு எழுவோம் !அதுக்கு உங்களின் பங்களிப்பு  அவசியம் என்று உண்டியல் குலுக்குவது போல அரசியல்வாதிகளின் புலம்பெயர் வருகையும் ,இதனை விளம்பரம் செய்து நிதி திரட்டும் ஊடகங்களின் காற்றுள்ள போதே தூற்றும் செயல்களும்   இதன் மூலம்  கிடைத்த/கிடைக்கும்  நிதிகள் தாயகச் சொந்தங்களுக்கு உரிய நேரத்தில் உரிய இடங்களுக்கு இயற்கையின் கார்கால மழை  போல ஏழைக்கும் ,பணக்காரனுக்கும்  பொதுவாக பெய்வது போல வடக்கு கிழக்கு என்று  பிரதேசவாதம் பேசாது எங்கும்   நீக்கமற போய்ச் சேர்ந்தால் ஏன் பண்நாட்டு நிதியத்திடம் கையேந்துகின்ற இலங்கை ஆட்சி போல வீதியில் நாம் போராளிகளின்  வாழ்வாதரக் கையேந்தல்  ஒருபுறம் என்றால்!

தொலைநோக்கு  திட்டமிடாத தொடர்மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்வது போல நம் வேங்கைகளை ஏன் விபச்சாரம் என்ற படுகுழியில் தள்ளிவிடுவது ?

இது எல்லாம் சமூக தளத்தில் செய்தியாக  படிக்கும் நம்  அன்றாட இயல்பு நிலையை யார் மாற்றுவார்கள் ?என்று அன்று கேட்டவன் கமலேஸ்  !

இன்றும் பொறுந்துகின்றது  இலங்கை நாட்டை நினைக்கும் நேரத்தில்  !

அதுமட்டுமா ?

உன் விதிவிட விசா அனுமதி என்ன நிலையில் இருக்கு ?

என்றபோது  !

ஏன் மாத்தயா ?உங்க நட்புடம் சொல்லி அவர் இன்னொரு உருகும் பிரெஞ்சுக்காதலி பாகம் இரண்டு  என இன்னும் வராத கறுப்புரோஜா   ஆபாவணனன் படம் போல  ஒரு எதிர்பார்ப்பை  உங்கள் முகநூல் நட்புக்களிடம் சொல்லும்  உங்க நண்பனின் வித்தை எல்லாம் நான் அறிவேன் !


சிரித்த முகத்துடன் சினேஹா படத்துடன் ஜொல்லுவிடும் உங்க பிரியமான நட்பையும் சேர்த்தே உங்களைப்போலவே நானும் முகநூல் முதல் டிவிட்டர் வரை நட்புக்களுடன்  நானும் பயணிக்கின்றேன்.!



 முன்னர் விற்பினைப்பிரதிநிதியாக நீங்களும் அவரும் பில்போட்டுவிட்டுப்போகும்  அன்நாளைய தொழில் போல எந்தக்கடையில் எந்த நங்களைளிடம் ஜொல்லுவிட்டுக்கொண்டு இருக்கின்றானோ வெட்டிப்பயல் என்று உள்ளத்தில் திட்டும் கோலயா போல )))


நீங்கள் தான் அதிகம் என்நிலைத்தகவல் பக்கம் வருவதில்லை . மலையகம் பற்றி எழுதும் புதியவர்களின்  சிறந்த தேடலுக்கு லைக்கு இடாத  அவசர குடுகுடுப்பைக்காரர்  போல   என்றவன்  கமலேஸ் அன்று.!





இன்று என்ன ஆனான் ?ஏன் அந்த அழைப்பினை உள்வாங்கினேன் என்ற சிந்தனையில் யாழவன் பயணித்துக்கொண்டு இருக்கும் ரயிலில் இருந்த சக நம்நாட்டவரின் கைபேசியில் ஒலித்த பாடல் இதுவோ ?




தொடரும்!




 கோலயா- சிங்களமொழியில்  ! தமிழிலில் எடுபிடி போல))

10 May 2017

ஈரச்சாலை இரவுக்கனவு!

வானொலியோடு கூடிய சிறுவயது  நேசிப்பு இசைமீதான காதலாகி பல பாடல்களையும் இனவாத பூமியில் கேட்கும் வரம் பெற்ற  சாமானிய ரசிகன் அடியவன்.


அதனால் தான் நம்மவர்கள் பாடல்கள் என்றாலும் இந்தியதேச பாடல் என்றாலும் இசை மீதான மோகத்தில் பல இணையவானொலிகளுடன் இன்றும் பயணிக்கின்றேன் பல பொருளாதார தேடல்களுக்கு மத்தியிலும்.


 முன்னர் போல பல நேரத்தில் புதிய புதிய பாடல்களை  உடனே கேட்கமுடியாத பணிமாற்றம்/ ஆன்மீகப்பாதை /உதவாக்கரையும் இப்ப ஏதோ வலையில் /முகநூல் எல்லாம் எழுதுதாம்.   அதுதான் தனிமரம் என்ற ஊதாரி))) ஏதோ புனைபெயரில் ! இப்படி சிலரிடம்

பாரிசில் இருந்து  இலங்கைக்கு கோடைக்கால விடுமுறையில் என்று புலம்பெயந்து போவோரிடம் பெருமை பேசும் என் தாய் மாமன் கூட நான் பேசியதில்லை இன்றுவரை காரணம் இசைமீதான  காதல் . நினைத்துப்பார்க்கின்றேன் இடையில் வந்த இடைவெளிக்கு காரணம் என்ன ?


தலைமுறை மாற்றம். பூர்ணிமா ஜெயராம்? நதியாவா?ரேவதியா? அம்பிகாவா? ராதாவா? பானுப்ரியாவா? தேவயானியா? சினேஹாவா?  இன்னொரு தொடர் குசும்பாக எழுதமுடியும்))


முகநூலில் தடம் மாறிப்போகின்ற வழிகளில் கூட நெஞ்சுக்குப்பிடித்த பாடல்களை நட்புக்கள்  பகிந்து  !

இது பற்றிய உங்களின் ஆதரவுக்கரம் என்ன பங்கு வகிக்கும் என்று கேட்கின்ற போது தனிமரம் வலையில் எப்போதும் சேமிப்பாகபாடல்கள் இருக்கும்!

அது   நான் விரும்பி எழுதிய  தொடரில் எழுதில் இடைச்செருகலாக  /அந்த நாள் நினைவு போல  இடைச்செருகலாக என்பதை மட்டும் எப்போதும் தெரிவிப்பேன்!


இப்படித்தான் சகமுன்னால் பதிவர் நண்பர்கள் பதிவர் ராஜ் என் முகநூலில் பகிந்த இந்த பாடல் என்னையும்  ஈரச்சாலையில் இனிதே ஒய்யாரமாக ஓய்வு எடுக்கக்சொல்லுது இன்னும் திமிர் இசைமீதான தேடலில்)))

 இப்பாடலில் இசைமீட்டியவரும் ,கவிதை தீட்டியவரும், இப்போது என் முகநூல் நட்புக்கள் என்பதும் தனிமரத்தின் வளர்ச்சி என்ற சிற்றின்பத்துடன் இனிய பாடலை நீங்களும் கேட்க இங்கே)))

04 May 2017

காற்றில் வந்த கவிதைகள் --14

முன்னர் கவிதைகள் இங்கே-http://www.thanimaram.com/2017/04/13.html


 நன்றிகள் புரட்சி வானொலிக்கு.


------------------------------------------------------------------------------------------------------------------------
சிரித்துப்பேசி  சிறப்பு விருந்து,
சில்லறைத்தனமான
சீர்வரிசை போல சலுகை எல்லாம்
சிந்தி நீர் போல வீசியே!
சிரமதாணம் என்ற வேஷமிட்ட
சட்டை அணியும்
சிலோன் அதிபர் போல
சிரிக்க வைக்காதே
சில்லென்ற காதலில்!///

////
--/உதிரும் பூப்போல என்னையும் நீ
உதறிப்போனாலும் உலர்ந்த வாசம் வீசும்
உன்மேல் நான் கொண்ட காதல்
உலகத்தில் வாழும் காலத்தில்
உன்னை நேசித்தவாரே!


----------------------------------------------

-அவளைக்கடந்த அந்த ஒரு நிமிடத்தில்
அகதி தொலைத்தது இதயத்தை மட்டுமல்ல
அடுத்த ஊருக்கு அணிவகுக்கும்
அந்த கடைசி ரயிலையும் தான்!
அவளுக்கு புரியுமா ?
அவனும் நேசிப்பது?
அன்னியமொழி தெரியாதவன்!
ஆசையுடன் காதலில்!///


--/---------------------------------------------------


கைக்கூப்பி கடவுளைத்தொழும்
கையறு நிலை மனிதன் போல
கையேந்தினேன் உன்னிடம்!
கைகேயின் வரம் போல நீயோ
கைதி போல என் காதலை
கைவிட்டுச்சொன்றாயே
கையசைத்து!
கைக்குடையுடன் பைத்தியம் போல
கைதடியில் இவன் வாசம்!




யாவும் கற்பனைகள்......

02 May 2017

குறும்பா போல குறும்பு!

கும்பிட்டு தொழுது
குப்புறவிழுந்து
குடிகார அரசியல்வாதிக்கும்
குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும்
குறுகிப்போய்விடுவேனோ!
குறுந்தொடர் எழுதும் ஆசையில்
குறுஞ்சஞ்கையில்!
குருவே சரணம் என்று பணிவேனோ?

குற்றம் என்று குற்றியலுகரம்
குறுக்கே வரும் ஊடகம் போல
குத்திக்காட்டும் எழுத்துக்கலை
குடியில் வராது ஒன்று என்று!
குற்றவாளிபோல குறுகிநில்லாதே!
கும்பிடு போட்டு
குறிப்புக்கேட்டும் உன் கொப்பன்
குதறியவார்த்தைகள்
குன்றில் கேட்டிருக்கும்!
குளுகுளு அறையில் உன் செவியில்
குட்டியிருக்காது என்று புலம்ப
குட்டிப்பிசாசே பாடல் போல
குணா படம் போல அல்ல!
குற்றுயிர்  இல்லையடி என் காதல்!

குயிலே நீ ஒரு
குறத்தி  போல எந்தன் நெஞ்சில்
குடியிருக்க வரவில்லையெனில்!
குன்றில் கொலைசெய்து
குற்றவாளிக்கூட்டில் தப்பிக்ககூட
குடுக்கப்பல  நல்ல கூட்டாளிகள்
குற்றரேகைகளும்
குபேரன் போல
குணமகள் தாள்களும் கொட்டிக்கொடுப்பேன்!
குற்றப்பரம்பரை போல அரசியல்வாதிகள்
குணம் எல்லாம் பார்த்தவன்!
குற்றாலக்குறவஞ்சி படித்தவன்))).

குடுமிவழித்த  குழந்தை போல
கும்பிடும் துறவி போல
குருநாகல் வெவ்விளநீர் போல
குதுகலத்துடன் நீங்கள் கேட்பது
குன்றின் நிகழ்ச்சிக்கு
கு -வரிக்கவிதை தந்த வாசகன்!!!
குறிஞ்சிப்பூ! கவிதைக்கு
குரல் கொடுத்தவர் உங்கள்  அன்புடன்
குறியீட்டு இசையுடன் விடைபெறுவது
குகன் .


குறுக்கால பேவானே பாட்டை போடு
குத்தாக ஒரு பாட்டு
குடிக்க ஒரு காப்பி
குடிப்போம் வா !
குறுஞ்செய்தி வரவில்லை!
குருவி போல !

--------------------------------------------

      ;(((.   உங்களின் கிழித்த  நாட்குறிப்பில் குசுக்கிய  கவிதைகளில்   தணிக்கையால் வெளிவராத ஒரு   கவிதையை  குவிக்கா அனுப்பவும் என்ற  )))) இணைய வானொலி அறிவிப்பாளினி அன்பு நட்பு தோழிக்கா அவசரமாக கவிதையும் பாடலும் கேட்டேன் [[ அவர் வேற பாட்டை ஒலிக்கவிட்டார்[ஆனாலும் என் கோபம் அவர் நிகழ்ச்சிப்பக்கம் போகவில்லை ஒரு வாரமாக[[  [[



  என்றும் போல  தனிமரம் உங்ளோடு ஒருவன்! !


என்  பாடல் தேர்வு இது[[கு வரிசை எழுதுவது இலகுவல்ல[[
குரல் பிடிக்கும்[[ பாடல் போல!
குத்தினால் விஸ்வரூபம் எடுக்கும் தனிமரம்[[