30 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்பகுதி!

நாட்டில் எப்போதும் எங்கேயும் குண்டு வெடிக்க கூடிய காலகட்டம். மக்கள் எந்த சத்தம் வந்தாலும் முதலில் என்னுவது குண்டுச்சத்தம் என்றுதான் .இது தானே நாட்டில் புரையோடிப்போய் கிடக்கும் தலைமுறைப் பிரச்சனை!
.. 
நானும் முதலில் எங்கேயோ கிளைமோர் வெடித்துவிட்டது என்றுதான் தலையை குப்புறச்சாய்த்து வாகன ஆசனத்தில் சாய்ந்து கொண்டேன்!  வெளியில் இரானுவத்தினர் தயார் நிலையில் இருந்ததை ஓரக்கண்ணால் பார்த்தேன்!
..
அவர்களிடையே  பதட்டமான நிலையில் உரையாடல் நிகழ்ந்தது பின் அமையான நிலையில் இருந்தனர். நாங்கள் நினைத்தோம் இன்று எங்கள் எல்லோருக்கும் செம்பனிதான் என்று  .இரானுவத்திற்கு இழப்பு வந்தால் அருகில் இருப்பவர் உயிர் உத்தரவாதம் இல்லை எத்தனை செய்திகளை நாளேடுகளில் படித்திருக்கிரேன்!
..
சில நிமிடங்களில் ஒரு ஆமிக்காரன் வந்து சொன்னான் முன் வாகனத்தில் பெற்றோல் டாங்கி  வெடித்துவிட்டது என்று அதனுடே புலியில்லை என்று அவர்களை இகழ்ந்து கூறினான் ,..

சில இடங்களில் ஊமையாகவும், மொழி தெரியாதவனாக இருந்தால் சில பண்பற்ற வார்த்தைப் பிரயோகம் வரும் போது சும்மா இருக்கலாம். மொழி புரிந்தால் மனதில் வன்மம் வரும் .எனக்கு அவர்களின் வார்த்தைகள் செவியில் வென்னீரை ஊற்றியது போல் இருந்தது !என்ன செய்யமுடியும் இப்படித்தானே பல இடங்களில் சுயம் இழந்து போகின்ரேன்!..

அப்பனே கேதீஸ்வரநாதரே எங்கள் எல்லோரையும் பத்திரமாக மன்னாரில் சேர்த்துவிடு ! இவர்கள் தயவில்  இருந்து பயணத்தை நிறைவு செய்தால் போதும் என வேண்டிக்கொண்டேன்!
.. 
தனியாக ஏதும்  நடந்தால் அதற்கு நான் பொறுப்பு  !இப்படி மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் ஆசையில் போய் ஏதாவது விபரீதம் என்றாள் என் வேளைத்தளத்திற்கும்  கெட்ட பெயர் ,எல்லாவிதமாகவும் மனசு சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது!

..நாதரே இப்படி
அருமையான தரிசனம் காட்டிய  பின் இப்படி மனசை அலைபாயவிடலாமோ! 
மன ஓட்டத்திற்கும்  வாகனம் ஓடிய வேகத்திற்கும் மதியம் நகரை வந்தடைந்தோம்!
..
போன சுவாசம் மீண்டும் வந்தது !ஆமியின் காவலில் இருந்து எமது அடையாள அட்டையையும் என் வேளைத்தள அட்டையையும் வாங்கும் போது ஆமிக்காரனிடம் கேட்டேன் ஏன் டாங்கி வெடித்தது என்று!..

இரானுவத்தில் வாகனங்களை ஓட்டுபவர்கள் எந்த  பழுதும் பார்க்காமல் கணக்கு எழுதி காசை தம் டாங்கியில் போட்டுவிடும்  ராஜவிசுவாசிகள் .நீண்ட தூரம் போகக்கூடிய வாறு திருத்தி வைப்பது குறைவு  அல்லது கவனயீனம் எனலாம்.  அவர்களிடம் கேட்டால் ஊசிபோறதிற்கு கணக்கு கேட்பினம் உலக்கைபோறதிற்கு கணக்கு கேட்காயினம் இதுதான் ஊழல் என்பதா?.

நன்றி உங்களால் என் கடவுளை தரிசித்தேன்!வாகனத்தை ஓட்டியவனிடம் உன்னை பெற்றவர்களுக்கு
புண்ணியம் சேரட்டும் என்றேன் ! .
என்னிடம் அவன் எதிர்பாராத வார்த்தைத் தொடர்!..
 .. 
தம்பி உனக்கு சிங்களம் தெரியுமா!மற்றவர்கள் பேசியது எல்லாம் கேட்டாயா!நான் கூறினேன் எல்லாத்தையும் கடவுளே என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கிறம் 
விடிவு தெரியாமல்!
.. 
அதன் பிறகு நகரில் கானும்போது எல்லாம் நலம் விசாரிப்பான் பாவம் அவனும் ஒருதாய்க்கு   மகன்! அவன் தொழில் இரானுவ சேவை, இனவாதப் போதனைக்கு அடிமையாகி கூலிக்கு மாறடிப்பவன்!இனி எப்போது போவேன் திருக்கேதீஸ்வரம்!?

29 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3

அழகிய மலர்களினால் மிகவும் சாந்த நிலையில் கேதீஸ்வர நாதருக்கும் ,கெளரி அம்பாளுக்கும் ,அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சியைக் கான! கோடி கண்கள் வேண்டும் என்ற பேராசை குடிகொண்டது !விபரிக்க முடியாத தரினங்களில் கண்களில் நீர்த்துளி வருவது பேராணந்தத்தின் வெளிப்பாடு  !தேவாரத்தில் வருமே! "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி""  .. நாதன் நாமம் நமச்சிவாயவே!"
...
பூசைகளை சிறப்பாக ஆச்சாரியர்கள் மந்திரங்களுடன் முடித்த ,மறுவினாடியில் கணீர் என்ற குரலில் வசாந்தா வைத்திய நாதனின் கதாப்பிரசங்கம் தொடங்கினார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வந்த இந்துக்கலாச்சார அமைச்சின் அதிகாரிகளின் ,அருளுரைகள் விளக்கங்களின் பின் அறிமுகத்தின் பின் .
..மடைதிறந்த வெள்ளம்போல் அம்மையாரின் மெய்யான விளக்கம் தொடர்ந்தது!(இவர் ஒரு ஈழத்தின் அறிவுச்சுடர், வானொலியில் தொடர்ந்து நற்சிந்தனை உரைக்கும் வித்தகி) ..
.. 
இன் நிகழ்ச்சிகள் ஏககாலத்தில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணம் நேரடி அஞ்சல் செய்துகொண்டிருந்தது! அங்கே என் ஊர்காரர் மு.ரவீர்ந்திரனுடன் ரா.ஜோகராஜன் இருவரும் அறிவிப்பு  செய்து கொண்டிருந்தனர், வானொலி நேரஞ்சலை அங்கேதான் நேரடியாக பார்த்தேன்!..


முன்னர் சாமியை தரிசிப்பது என்றாள் தோல்களில்  ஏறியும், முட்டிமோதியும் பார்த்தோம் என்றார் என்னருகில் இருந்த முதியவர்..
..  
அம்மையாரின் சொற்பொழிவு   நிரைவுரும் வேளையில் அவருக்கு அதிகாரிகளின் கரங்களால் பொண்ணாடை போர்த்து கெளரவிக்கப் பட்டது!  நேரமோ அதிகாலைப்பூசைக்கு கட்டியம் கூறியது மடங்களில் சூடாக கோப்பி,பால்   பரிமாறப்பட்டது,! 
.. 
கோப்பி என்றாள் எனக்கு  தனிப்பிரியம்  !பின்னாளில் சென்னையிலும், கேரளாவிலும் அவஸ்தைப்பட்டது தனி ஒரு ஆவர்த்தனம்!..

அதிகாலைப் பூசையின் பின் அடியார்கள் பாலாவியின்  புண்ணிய தீர்த்தம் ஆட அதன் குளத்தில் இறங்கினோம் !பாலாவி ஆறு போரின் விளைவால் குளம்போன்றே  சிறு வட்டத்தினுள் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்பர்களுக்கு  சரியான பனியில் நீர் குளுமையாக இருந்தது !
...
ஊரில் திருவிழா என்றாள் தீர்த்தத் திருவிழா கடலில் ஆடிய எனக்கு இது புது அனுபவம். ஆசைதீர குளிக்கலாம் என்றாள் எங்களுக்கான கால அவகாசம் முடிந்ததாக  இரானுவம் ஒலிபரப்பியது. விரைவாக எழுந்து மீண்டும் கோயில் சென்று வழிபட்டுவிட்டு  பிரசாதத்தை வேண்டிக்கொண்டு வாகனத்தை நோக்கி நடந்து போகும் போது இலக்கத்தகட்டை பத்திரமாக சரிபார்த்துக்கொண்டோம்!..
மீண்டும் நாதரையும் அம்பாளையும் எப்போது தரிசிப்போம் என்ற ஆதங்கம் எனக்குள்!
..
விரைவாக இரானுவத்தின் கன்கானிப்பின் ஊடே வாகனத்தில் ஏற்றப்பட்டோம் .எங்கள் உருமறைத்த வாகனத்தை தொடர்ந்தது இரானுவ இராட்சத கவசவாகனம்!.

வேகமாகப் போன வாகனத்தின்  முன்னே டமார் என்ற வெடிச்சத்தம்!
...
தொடரும்!

28 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-2

நீண்ட பாதுகாப்பு வலயங்களைத் தாண்டி எங்கள் வாகனம் கேதீஸ்வரத்தின்  முகப்பு வாசலில் நுழைந்தது எங்கள் வருகையை முன்னரே அறிந்த வானரப்படைகளின் காவலர்கள் போன்ற ரானுவத்தினர் எங்கள் வாகனத்திற்கு அருகில் வந்தனர் இங்கு வந்த நீங்கள் எங்களின் கன்கானிப்பில் இருக்கவேண்டும் யாரும் இந்த அனுமதிசீட்டை தொலைக்கக்கூடாது என்று கூறியவர்கள் எல்லாருக்கும் இலக்கத்தகடு தந்தார்கள்  !

நாளைக்காலை 8 மணிக்கு இவ்விடம் வந்துவிடவேண்டும் என்ற அறைகூவலுடன் எங்களை விட்டு தம்பணியில் சென்றனர் ஆட்டுக்கு வேலிபூராமல் இருக்க கிராமத்தில் தடி கட்டுவது போல் எங்களின் பூர்வீக கேதீஸ்வர நாதரை தரிசிக்க எங்களுக்கு இலக்கத்தகடு என ஒருவர் முனுமுனுத்தது காதில் விழுந்தது!
...
நீண்ட காலம் பராமரிக்காத பாதைகள் ஓரே கந்தர்வ ராஜானின் கோட்டைபோல் சுக்கிரிவன் முன்னுரைத்த கதை ஞாபகம் ஒரு பக்கம் என்றாள் இன்னொருபுறம்  என்னைச் சீராட்டிய அன்னையின் வீடும் 12வருடங்களில் இப்படித்தான் இருக்குமோ!
..
நாங்கள் விளையாடிய நாவல் மரத்தடி வளவும் இப்ப என்னை இனம்கானுமா! என்ற உணர்வுகள் என்னை சூழ்நிலைக் கைதியாக்க  மாந்தோட்டம் என்ற புரதாண நகரின் அழகைப் படிப்பித்த சமயப்பாட ஆசீரியை நினைவில் வந்துபோனார்!
..
ஓருகாலத்தில் வடக்கில் இருந்து  பாதையாத்திரையாக பூநாகரிப்பாதை யோரம் திருக்கேதீஸ்வரம் வந்தவர்கள் நம் முத்தோர்கள் காலத்தச்சன் இனவாதத்தை தைக்க தொடங்கிய 1979  இன் பின் யாத்திரைகள் தடைப்பட்ட தாக என்னுடன் 
வந்த முதியவர் தன் அனுபவங்களை பகிர்ந்தார்!
..
சுற்றுவட்டாரம் ஒரே காடுப்பத்தையாகவும் முற்கள் நிறைந்து போர்கால வடுக்களை சூடி கலிங்கத்துப்பரனியை ஞாபகப் படுத்தியது!
...
நாங்கள் அழகிய கேதீஸ்வர் நாதரின் கோபுரத்தைக்கண்டதும் கைகூப்பித் தொழுதோம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற  மந்திரத்தை மறக்கலாமா?
அவர்ரவர்கள்  வலப்புற வாசல் ஊடாக நாதரையும் கெளரி அம்பாளையும் தரிசித்தோம்! 
முதலில் அப்பன் கணபதியை கும்பிட்டுவிட்டு    பின் முருகன் தம்பியை தொழுது எங்கள் பிறவிப்பயன் பெற வேண்டி அம்மையப்பன் கேதீஸ்வர நாதரையும் கெளரி அம்பாளையும்  ஒரு பரவச நிலையில் வழிபடும்போது அங்கே ஆச்சாரியார்கள் நடுச்சாம பூசையின் தீபாராதனை ஒருசேர எல்லாக்கடவுளுக்கும் காட்டப்பட்டது .
"யாரும் சுவடுபடாமல் ஜய்யா என்றழைக்கும் போது காதல் மடப்பினி"" என் தேவாரத்துடன் என் பாராயணம் ..
...
தொடரும்

27 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும்  தொலைத்த நிம்மதியும்!

எப்போதும் பயணங்கள் ஒவ்வொரு அனுபவத்தையும் இனிய நினைவுகளையும் சுமந்து செல்கிறது. அது நாவலாகுவதும் சிறுகதை ஆவதும் சிறந்த சிற்பியின் கையில் கிடைக்கும் சிலை போன்றது!
...
ஆன்மீகப் பயணங்கள் பல தத்துவங்களை விளங்கவைக்கின்றது! 
நம் தேசத்தில் ஓவ்வொரு கிராமத்தையும் தாங்கி ஊரின் பெருமையை பறை சாற்றுவது சிறப்பான கோபுரங்களை தாங்கும் ஆலயமும்!  பயணங்களை வழி நடத்தும் வேப்பமர சாமிகளும் தான் !அது அம்மன் ஆகட்டும், வைரவர் ஆகட்டும் ,ஈழத்தவரின் இன்னொரு இயல்பு எனலாம்!
...
இவை எல்லாம் ஒரு காலம் !இப்போது நித்தியானந்த சாமிகளின் கூடம் என்று ஓடும்  புதுயுகத்தவர்களுக்கு கோயிலின் சிறப்புக்கள் தெரியாதுபோல் பாவனை புரிகிறார்களா? ஆன்மீகம் அழிந்து போய்க்கொண்டிருக்கா என அலசவேண்டிய காலத்தில் இருக்கிரோம்!
...
இப்படியான விசயங்களை மூத்த பதிவர்கள்  
ஆராயட்டும்!
யுத்த அரக்கன் பல தொன்மையான ஆலயங்களை அபகரித்து பாதுகாப்பு வலயம் என்ற கோட்டையை  அகழவிரித்து நம் புகழ்பூத்த ஆலயங்களுக்கு போக அனுமதி மறுக்கப்படுகின்ற நிலையில்!
... 
பணி நிமித்தம் 2000 ஆண்டுகளில் மன்னார்மாவட்டத்தில் இருந்த போது
ஒரு சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் முதன்மையான திருக்கேதீஸ்வரம் போகும் வாய்ப்பினை அடியேனும் பெற்றேன்!
..
எதிர்பாராத பயணம் அது.   வழமையாக வேலை முடிந்து இருப்பிடம் போகும் போது வழியில் ஒரு முகம் தெரியாதவர் தம்பி ,கேதீஸ்வரம் போறவர்கள்  கச்சேரியில்  பெயர் பதியட்டாம் என்றவர் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார் .என் மனதிற்கு ஒருகனம்  தயக்கம்  ,பணி நிமித்தம்  உறவுகளுக்கு தெரியப் படுத்தாமல் மன்னாரில் இருப்பது .நாட்டு நிலைமையோ ஒவ்வொரு கனமும் எங்கேயும் எதுவும் வெடிக்கலாம்!
சித்தன் செயல் சிவன் செயல் .என் குடும்பத்தில் 3தலைமுறை தாண்டி எனக்கு கிடைத்த வரம்! என் சைக்கில் பேரூந்து நிலையத்தை தாண்டி வலது புற ஒழுங்கையில் உள்ள கச்சேரி(பட்டின சபையில்) க்கு.   முண்டியடித்தேன் எனக்கு முன்னே கேதீஸ்வர நாதர் அருட்பார்வை பெற 60 பேர்  பச்சை உடுப்புக்காரனிடம் பெயர்பதிந்து கொண்டு இருந்தனர்!
தில்லைக்கூத்தனின் நடனம்பார்க்க யாருக்கு கசக்கும் அன்பருக்கு அடியவன் எங்கள் ஈசன் என படித்திருக்கிறோம் !போய் பார்பதற்கு ஒரு சந்தர்பம்! எனது அடையாள அட்டையை கொடுத்தேன் அந்த  ஆமிக்காரனிடம்!..
என்னையும் எனது அடையாள அட்டையையும் பலமுறை பார்த்தான் என்னிடம் வயது கேட்டான் நானும் பதில் கூறினேன்!
...
85பேர்களுக்குத்தான் அனுமதியிருப்பதாக அறிவுருத்தல்கள் வந்து கொண்டிருந்தது  !வந்த வர்களில் நான் ஒருவன்தான் இளைஞன்
(பொய்யில்லை நியம் கேதீஸ்வர நாதர்மேல்)..
உங்களுடைய வேலைசெய்யும் அடையாள அட்டையை தாரும் என்றவன் தன் மேல் அதிகாரியிடம் போனான் மீண்டும் என்னை
உள்ளேபோகவிட்டு அவன் தன்கடமையில் முழ்கினான்.  ஒருகனம் மனதில் !""பல்மிருகம் ஆகி பறவையாய் பாம்பாகி என்ற சிவபுராணம் ""ஒரு புறம் யார் பெத்த புள்ளையோ!  இப்படி முகம் தெரியாமல் பிணம் போல் என ஒரே நடுக்கத்தினுடன்
உள்ளே போனால்! அந்த அதிகாரி  என்னுடன் பலமுறை  என்னுடைய வாகணத்தில் பலவாசனைத்திரவியங்களை சுட்ட லஞ்சப்பேர்வழி!..
..
என்ன தம்பி நீ அங்கே எதற்கு நிலமை தெரியும் தானே! அயனில் குசிபடம் போகுது போய் ரசிக்கிறதை விட்டிட்டு 'என்றவரிடம் நீங்கள் போயா தினத்தில் பண ஓதுவதைப்போல்தான்(புத்தரின் போதனை உதட்டளவில்)நானும் போக விரும்புறன் என்றேன்.  ஏதும் சொல்லாமல் அனுமதி தந்தான்  நன்றி கலந்த சிரிப்புடன் வெளியே வந்து வழியனுப்பினான்.இரவு 9மணிக்கு நிற்கவும் என்றான் ஒம் என தலையாட்டிவிட்டு  இருப்பிடம் வந்தேன்!...
......


இரவு இருவாகனத்தில் எல்லொரும் எற்றப்பட்டோம் விரைவான பரிசோதனைகள் முடித்து ஒவ்வொருத்தருக்கும் இரு உடையே
அனுமதி! நம்மிடம் இருப்பது எப்போதும் இரண்டு சோடிதான்!...
.....

வாகன தொடரனி பாதுகாப்பு வழங்க உருமறைக்கப்பட்ட வாகனத்தில்  பயணமானோம்!
கேதீஸ்வரம் பாடல் பெற்ற தலம் ஞான சம்பந்தர் " நத்தார்படை  ஞானன் பசு.....
..என்ற தேவாரம் வாகனத்தில் அமைதியாக.
ஒலித்து  விரைவான  வேகத்தின் ஊடே கேதீஸ்வரரிடம் 3ம் சாமப்பூசைக்கான மணியடிகும் போது நாங்களும் இறக்கிவிடப்பட்டோம்,!
.....தொடரும்

26 April 2011

ஊர் விளையாட்டு-1

பட்டம் இது பள்ளிப்படிப்பை பற்றியது இல்லை!
இன்றைய இளைஞர்கள்,சிறுவர்கள் கணனியும் ,சின்னத்திரையிலும் மூழ்கிக்கிடக்கும் காலம் ஆனால் எங்கள ஊரில் நாம் வாழ்ந்த காலத்தில்  எங்களின் விளையாட்டு பட்டம் கட்டுதல்,
அழகான ஈச்சம் தடியில்,பூவரசம் தடியில்,பச்சைக்கருக்கு மட்டையில்., சாணம் பட்டம்,கொக்குப்பட்டம், மீன்பட்டம் என வசதியானதை கட்டுவோம்!..
என்னுடன் படித்தவர்கள் மட்டுமல்ல கிராமத்து விடலைகளும் எங்களுடன் போட்டி போடுவினம் பட்டம் கட்டுவதில்..
அழகான மாட்டுத்தால் கடதாசியில் ஒட்டும் பட்டம் எந்தக்காற்றுக்கும் நின்று பிடிக்கும்..
மாலை வேளையில் எல்லோருமாக அரிவி வெட்டிய அந்த வயல் வெளிகளில் மெதுவாக நைலோன் நூலின் உதவியுடன் பறக்கவிட்டு பட்டம் ஏற்றினால் மெது மெதுவாக நூலை விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால் ஆடி அசைந்து கண்னுக்கெட்டிய தூரம் தாண்டி ஏழுபனை உசரத்திற்கு ஏறும் !

இரண்டு கோம்புவில் இரு பொன்னச்சி கட்டை (வைன்போத்தல் மூடிவரும் சக்கையைப் போன்றது)கட்டி சிறு நூழை இருதடவை சுற்றினால் அழகான சத்தம்போடும் இதை வின்கூவுது என்பார்கள் வட்டார மொழியில் !நேரம்போவது தெரியாது நூழை ஆட்டி விடும் போது பலருடைய பட்டம் சிக்கிக்கொள்ளும் .!
சிலவேலையில் பட்டம் சிக்குப்பட்டு சண்டைபோட்டு காயங்களுடன் வீட்டுக்குப் போனால் அங்கே வாங்கும் பூசை தனியானது அதற்காக விழுந்து விட்டோம் என்று பொய் சொல்லுவதும் உண்டு!

மாலையில் எல்லோரும் தண்ணிக்குடத்துடன் போவார்கள்  குடிதண்ணிக்கு வயலில் போய் அள்ளுவது கிராமத்து வழக்கம் அப்படி போகும் சிலரின் தண்ணிப்பானையை உடைத்துவிட்டு ஓடும் குசும்பர்கள் எங்களை மாட்டி விடுவார்கள்!

சில விடலைகள் சிலருக்கு பட்டம் மூலம் கடிதங்கள் அனுப்புவினம் பனை இடுக்கினுல் சிக்கிக்கொள்ளும் பட்டங்கள் வாழ்வு இழந்தவை பட்டியலில் சேரும் நூழை சுருட்டிக்கொண்டு வரவேண்டியது தான்.
பலபொழுதுகள் பட்டம் விடும்போது பந்தையம் வைப்பார்கள் யாருடையது அதிக தூரம்போகுதோ அவருக்கு  கள்ளுவாங்கிக் கொடுக்கனும் சிறியவர்களுக்கு ஆட்டுக்கால் விசுக்கோத்து வாங்கிக்கொடுக்கனும்(இது இப்போது வழக்கத்தில் இல்லை) இப்படித்தான் எங்கள் பந்தையம் இருக்கும்.
...  
சூரியன் கடலில் மூழ்கும் போது நாங்கள் வீடு திரும்புவோம்,   சிறுவர்  பட்டாளம் ஒரே இரைச்சலுடன் வீடுபோகும் போது யாராவது விளக்கம் வைத்தால் பூவரசம் கம்பு தயாராக இருக்கும்!..
..
பட்டம் விடும்போட்டியில் யாரின் பட்டம் முதலில் வருகிறது என்பதற்காக நாங்கள் ஒரு சதி செய்வோம் சகுனிபோல்  நூலில் கொஞ்சம் சுண்ணாப்பை தடவி விட்டால் அந்தப்பட்டம் சில நிமிடத்தில் அறுந்து பனைக்கூடலில் விழும்  பலதடவை தப்பினாலும் ஒரு தடவை ஒருவரிடம் நையப்புடைந்த அனுபவம் என்றும் தழும்பாக என் வலது நெற்றியில்!

25 April 2011

யாழ்தேவியும் என் பயணங்களும்-1

  வாழ்க்கைப் பயணத்தில் நான் அதிகம் பிரயாணம் செய்வது புகையிரதத்தில் முன்னர் தாயகத்தில் ரயில் பயணம் என்றாள் அது தனிக்கதை!  சுவாரசியத்திற்கு குறைசல் இல்லை ரஜனி படத்தைப்போல!
  கொழும்பில் இருந்து பணி நிமிர்த்தம் வவுனியா போவது யாழ் தேவியில் தான்!..
அப்பு ஆச்சிகள் காங்கேசந்துறைவரை பயணம் போன யாழ்தேவி  யுத்த சாரதி பாதை மாற்றியதால் 1990 இன் பின் வவுனியாவுடன் தரையிறங்கி மக்களை மற்ற இடங்களுக்கு நடக்க விட்டது விதி எழுதிய சாசனம்!...
..
இரவுப்பயணங்களையே  அதிகம் நாடுவேன் கொழும்பில் இருந்து இரவு 10மணியலவில் புறப்படும் யாழ்தேவி என்ற கணீர் அறிவிப்புடன் ஆரம்பித்தால் அதிகாலை 5மணி 25 நிமிடம் அளவில். வவுனியா வந்தடையும்.ஞாயிறு இரவு அதிகமானவர்கள் அரசபணிகள்,தனியார் பணியாளர்கள் ,வைத்திய சேவைகாரணமாக கொழும்பு வந்தவர்கள் மீண்டும்  இருப்பிடம் செல்வதும் திரும்புவதுமாக களைகட்டும் .
..
வவுனியா இரானுவக்கட்டுப்பாட்டில் இருந்தது அங்கே தங்குவதற்கு அனுமதிப்பத்திரம் என்ற ஒன்று நடைமுறையில் இருந்தது அதுதான் உயிர்காக்கும் தோழன் நிரந்தர,தற்காலிக,3மாதம்,ஒரு வாரம்,ஒரு நாள்,  என்ற  அட்டவணைக்கு ஏற்ப இரானுவம் செயல்படுத்தும் அனுமதிப்பத்திரத்திற்கு  வரிசையில் காத்திருக்கனும் அதிகாலையில் நித்திரை ஒருபுறம் இவர்களின் இம்சை ஒருபுறம் கொடுமை.ரயில் பயணத்தின் களைப்பு மற்றொருபுறம் எவ்வளவு துயரமான நாட்கள் எனினும்....
        என்னுடன் மூவின நண்பர்களும் சிலவேளைகளில் கூடவருவினம் கூத்தும் கலகலப்பாகவும் இரவுப்பயணம்  வவுனியா வரை  கொண்டாட்டம்தான்!
..குருனாகல் இறங்கும் ஒரு நண்பன் எங்களுக்கு தன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து அவர் தந்தை கொண்டு வந்து காத்திருந்து தரும் செவ்விளனீர் குழையை  வெட்டித்தந்து அருந்தும் வரை யாழ்தேவி காத்திருக்கும் இதமான அந்த இரவுப்பொழுதில் மறுநாள் வயிறுப்போக்கு சுலபமாக்குவதில் அந்த வெவ்விளனீர் பங்கு அதிகமாக இருக்கும்!'!

  கொழும்பில் இருந்து பணி நிமித்தம் வவுனியா போவது யாழ் தேவியில் தான்!..
அப்பு ஆச்சிகள் காங்கேசந்துறைவரை பயணம் போன யாழ்தேவி  யுத்த சாரதி பாதை மாற்றியதால் 1990 இன் பின் வவுனியாவுடன் தரையிறங்கி மக்களை மற்ற இடங்களுக்கு நடக்க விட்டது விதி எழுதிய சாசனம்!...
.
..
வவுனியா இரானுவக்கட்டுப்பாட்டில் இருந்தது அங்கே தங்குவதற்கு அனுமதிப்பத்திரம் என்ற ஒன்று நடைமுறையில் இருந்தது அதுதான் உயிர்காக்கும் தோழன் நிரந்தர,தற்காலிக,3மாதம்,ஒரு வாரம்,ஒரு நாள்,  
        என்னுடன் மூவின நண்பர்களும் சிலவேளைகளில் கூடவருவினம் கூத்தும் கலகலப்பாகவும் இரவுப்பயணம்  வவுனியா வரை  கொண்டாட்டம்தான்!
..குருனாகல் இறங்கும் ஒரு நண்பன் எங்களுக்கு தன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து அவர் தந்தை கொண்டு வந்து காத்திருந்து தரும் செவ்விள்னீர் குழையை  வெட்டித்தந்து அருந்தும் வரை யாழ்தேவி காத்திருக்கும் இதமான அந்த இரவுப்பொழுதில் மறுநாள் வயிறுப்போக்கு சுலபமாக்குவதில் அந்த வெவ்விளனீர் பங்கு அதிகமாக இருக்கும்!'!
இரவுப்பயணம் எப்போதும் ஒவ்வொரு கதைகளையும்  . பல மெளனம் சித்திரங்களையும் விதைத்துச் செல்கிறது.
..பொல்காவெல இது யாழ்தேவியும் உடரட்டமெனிக்கேயும் கைகுழுக்கும் சாமாதான ஒப்பந்தம் இங்கு கூவிவிற்கும் சூடான கோப்பியும் சுண்டல் .சோளம் மெரினாச் சுண்டலுக்கு ஈடாகாது!வழிப்பறி கொள்ளையர் கைவரிசை காட்டும் இந்த நிறுத்தம் கல்லுண்டாய் வெளி ஞாபகம் வரும் கூடவே! 
பெருண்பான்மை வெறியர்கள் தமிழர் நித்திரையில் இருக்கும்போது  நகைகள்,பணம்கள்.பறித்துக்கொண்டு ஓடுவதையும் ,ஒன்றும் செய்யமுடியாத கையாலகாத நிலையை என்னி குமுறுவதைத் தவர நானும் தமிழன் என்ன செய்யமுடியும்! இங்கே விற்கப்படும் கோப்பியுள் யாராவது முகம் தெரியாதவர்கள் நித்திரைகுழுசை,மயக்க
மருந்து கலந்து கொடுத்து தமது கைவரிசையை காட்டிவிடுவார்கள்!நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!யாழ்தேவியின் தடம் கல்கமுவ இடத்தில் தரைதட்டினால் அங்கே கமகமவாசத்துடன் விற்கப்படும் தொதல்(இதற்கு தமிழ்ப்பெயர் சக்கரை கழி என நினைக்கிறேன் நிச்சயம் இல்லை) நல்ல சுவையானது!கல்கமுவ தாவடிப்புகையிலையை அழகான சுருட்டு சுற்றி அழகாய் பெட்டியில் அடைத்து பெட்டிச்சுருட்டாக தென்பகுதியில் விற்கப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன் இப்படி அடிவரும் யாழ்தேவி தலாவ  ஊடாக அனுதாபுரம் வந்தால் அதிகமானவர்கள் இறங்கினால் இந்த இராட்சியம் வரை பெருன்பான்மை போய்விடுவார்கள்  பின் வருபவர்கள் நம்மவர் ரயில் ஆசனத்தில் நீண்ட  


இடத்தைப்பிடித்து நித்திரை கொள்ளமுடியும்!இவையாவும் இரண்டாம் பெட்டியில் பயணம் செய்பவர்களின்  அன்றாட நிகழ்வுகள். அப்படியாடிவரும் யாழ்தேவி மதவாச்சி தாண்டி  பூனாவ ஊடாக இரைட்டப் பெரியகுளம்தாண்டி வவுனியா அடையும்போது என் வானொலி  பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை கேட்கதயாராகிவிடும்!
கதைகளையும்  . பல மொனமான சித்திரங்களையும் விதைத்துச் செல்கிறது.
..பொல்காவெல இது யாழ்தேவியும் உடரட்டமெனிக்கேயும் கைகுழுக்கும் சாமாதான ஒப்பந்தம் இங்கு கூவிவிற்கும் சூடான கோப்பியும் சுண்டல் .சோளம் மெரினாச் சுண்டலுக்கு ஈடாகாது!வழிப்பறி கொள்ளையர் கைவரிசை காட்டும் இந்த நிறுத்தம் கல்லுண்டாய் வெளி ஞாபகம் வரும் கூடவே! 
பெருண்பான்மை வெறியர்கள் தமிழர் நித்திரையில் இருக்கும்போது  நகைகள்,பணம்கள்.பறித்துக்கொண்டு ஓடுவதையும் ,ஒன்றும் செய்யமுடியாத கையாலகாத நிலையை என்னி குமுறுவதைத் தவர நானும் தமிழன் என்ன செய்யமுடியும்! இங்கே விற்கப்படும் கோப்பியுள் யாராவது முகம் தெரியாதவர்கள் நித்திரைகுழுசை,மயக்க
மருந்து கலந்து கொடுத்து தமது கைவரிசையை காட்டிவிடுவார்கள்!நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!யாழ்தேவியின் தடம் கல்கமுவ இடத்தில் தரைதட்டினால் அங்கே கமகமவாசத்துடன் விற்கப்படும் தொதல்(இதற்கு தமிழ்ப்பெயர் சக்கரை கழி என நினைக்கிரேன் நிச்சயம் இல்லை) நல்ல சுவையானது!கல்கமுவ தாவடிப்புகையிலையை அழகான சுருட்டு சுற்றி அழகாய் பெட்டியில் அடைத்து பெட்டிச்சுருட்டாக தென்பகுதியில் விற்கப்படுவதை நேரில் பார்த்திருக்கிரேன்!இப்படி அடிவரும் யாழ்தேவி தலாவ  ஊடாக அனுதாபுரம் வந்தால் அதிகமானவர்கள் இறங்கினால் இந்த இராட்சியம் வரை பெருன்பான்மை போய்விடுவார்கள்  பின் வருபவர்கள் நம்மவர் ரயில் ஆசனத்தில் நீண்ட இடத்தைப்பிடித்து நித்திரை கொள்ளமுடியும்!இவையாவும் இரண்டாம் பெட்டியில் பயணம் செய்பவர்களின்  அன்றாட நிகழ்வுகள். அப்படியாடிவரும் யாழ்தேவி மதவாச்சி தாண்டி  பூனாவ ஊடாக இரைட்டப் பெரியகுளம்தாண்டி வவுனியா அடையும்போது என் வானொலி  பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை கேட்கதயாராகிவிடும்!

22 April 2011

காற்றில் கலந்தது தொலைந்துவிட்டது!

நம்மவர் இசை,பாடல் என்றாள் என்ன வென்று தெரியாத ஓரு தலைமுறை எங்களுடன் பயணிக்கிறார்கள் .அவர்களுக்கு யுவன்சங்கர்,ரகுமான் தெரிகிறது ஆனால் முற்றத்து மல்லிகை வாசம் தெரியாத கடதாசிப்பூக்களை மலர் என்று பூசிக்கும் இயந்திர உள்ளங்கள்..

மெல்லிசையில் நம்மவர்கள் சிகரம் தொட்டவர்கள் .தேசம் அமைதியாக இருந்திருந்தால் !நமக்கு நல்ல இசைமுகவரி கிடைத்திருக்கும்.பிறர் தயவில் தாலாட்டுப்பாடியிருக்கமாட்டோம்!
"..சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் " 
என்ற பாடல் என்னுடன் பலகாலம் பாடல் புத்தகமாக இருந்தது.முகவரி இழந்த நண்பன் போல் எங்கோ தவரிவிட்டது. என்றாளும் அதன் நாதம் காதில் ஒலிக்கிறது. 
..இப்பாடல் மு.மதிவதனன் கற்பனைக்கு திருமலை பத்மநாதன் இசை மீட்ட இலங்கை வானொலி மெல்லிசை பாடல் நிகழ்ச்சி  அறிமுகப் படுத்திய பாடகர் N.கிருஸ்ணன் அடி எடுத்துக்கொடுக்க பின்னால் நம்குயில் கலாவதி சின்னச்சாமி சேர்ந்து ஆலாபனையுடன் சுருதி சேர்க்கும் போது தனிப்போட்டியே நடக்கும். 
..
இந்தப்பாடலை என் தந்தை அடிக்கடி முனுமுனுப்பார் அவருடன் சேர்ந்து நானும் தலையாட்டும் போது தந்தையின் கனிவு என்னை உச்சிமோர்ந்து  பாசம் பொழியும் வானொலியுடன் கழித்த நாட்களில் பிடித்த அறிவிப்பாளர் k.ஜெய்கிருஸ்ணா (இவரைப்பற்றி பின்னாலில் பதிவு செய்வேன்) என் விருப்பம் நிகழ்ச்சியில் இப்பாடலை ஒலிக்க விடுவார் .
.. 
கலாவதியுடன் கிருஸ்ணன் இதைப்பாடும் சரணத்தில் "" துள்ளிவரும் மானை அள்ளி" என்றபின் வரும் ஹம்மிங்  ஒரு பரவச நிலை அதேபோல் "பள்ளத்தில் வீழும் வெள்ளத்தினை" ஆணின் உச்சஸ்தாயில் பெண்குரல் கலாவதி செய்யும் ஹம்மிங் இன்னொரு உற்சாக  பாணம்....

எத்தனை பாடல்கள் கேட்டாலும் சில பாடல்கள் கண்கட்டிய குதிரைபோல் சிலபாடலின் பின் தான் செல்கிறது எத்தனை வானொலி வந்தாலும் இன்னும் தாய்வானொலி  இலங்கை ஒலிபரப்பே மெல்லிசைக்கு தாய் வீடு...
புதியவர்களுக்கு நாம் இப்பாடல்களை இறுவட்டுக்களாக கொடுக்கனும் ஆனால் இப்பாடல்கள் இறுவட்டுக்களாக வந்திருக்குமா?புலத்தில் இதை தேடுகிறேன் 
என் தாகத்திற்கு இன்னும் தருணம் வரவில்லை   தாயக உள்ளங்களே !எங்கள் மெல்லிசை பொக்கிஸங்களை வலையேற்றுங்களேன்!

21 April 2011

காற்றலையில் தேடுகிறேன் நிறைவு

கலைக்குமார்-;இவரும் விக்ரமனின் அறிமுகமே!நீவருவாய் என,உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்,பூவே உனக்காக .என பலபடங்களில் பாடல் இயற்றியவர்.இன்று மருத்துவத்துறையில் கடமைபுரிவதாக ஓரு வாரசஞ்சிகையில் படித்த ஞாபகம். கலைக்குமாரின் கவிதைகளில் மிகவும் இயல்பான கிராமிய வாசம் வரும்!96,97 காலப்பகுதியில் அதிகம் பாடல் புனைந்தவர்".ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் அது கேட்கும் போது சில ஞாபகம் தாலாட்டும்""இன்று இவர் கவிதையை அசைபோடவைக்கிறது...,

இவர்காலகட்டத்தில் வந்தவர்களில் சினேகன்,யுகபாரதி,கபிலன் என பாடல் ஆசிரியர்கள் சிலசில பாடல்கள் எழுதுகிறார்கள் மற்றவர்  பா.விஜய் இன்று முதன்மையில் இருக்கிறார் அதிக கவிதை நூல்களை அச்சில் கொண்டு வருகிறார். சினிமா உலகில்  கதாநாயகனாகவும் அரிதாரம் பூசுகிறார்.
 ... சிலபாடல்களை மறக்கமுடியாத காலகட்டம் பள்ளிப்பருவம் அதில் அசைபோட்டதன் விளைவே இப்பதிவு.

20 April 2011

காற்றலையில் தேடுகின்ரேன்  -2

R.ரவிசங்கர்-:இவர் விக்ரமனின் சீடர் சூரிய வம்சம் படத்தில் எழுதிய "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ""பாடல் பட்டிதொட்டி எங்கும் இவர் யார் என திரும்பிப்பார்க்கவைத்த கவிஞர் .பின் எழுதிய" எங்கே அந்த வெண்னிலா எங்கே அந்த வெண்னிலா""  
வருசம் எல்லாம் வசந்தம் படத்திற்கு பாடல் மட்டுமல்ல இப்பட இயக்குனரும் இவரே! அதன் பின் இவரைத்தேடுகிரேன் புலப்படவில்லை! வாரசஞ்சிகை ஒன்றில் உதவி ஆசிரியர் குழுவில் இருக்கும் R.ரவிசங்கர் ஏனோ திரையுலகத்தில் ஜொலிக்காமல் போய்விட்டார்!ரோசாப்பூ பாடல் மறைந்த மூப்பனார் அவர்களுக்கு அதிகமாக பிடித்த பாடல் என்று பெருமையாக கருப்பையா மூப்பனார் ஓரு பேட்டியில் கூறியிருந்தார்...
....---தொடரும்

அப்பாவிகள்!!!

இப்படியான ஒரு வாரங்களில்தான்
கிலக்கில் இருந்து அந்த யுத்த அரக்கன் 
எங்கள் வாழ்க்கையை துவசம் செய்துகொண்டு இரத்தவெறியுடன் கோரத்தனமாக நெறிகெட்டு இராட்சதசேனைகளுடன் படையெடுத்தான்!
........,,

இரத்தவாடை அவனை இதயம் துடிக்கவிடவில்லை !வெற்றி என்ற வேதாளம் மூலைச்சலவை செய்யப்பட்டு !போதை ஏற்றப்பட்டு !எங்கள் பூமி எங்கும் புயலாக
அக்கினி சுவாலையை வீசினான்!

எடுத்துச் செல்ல ஏதுமில்லை எல்லாம் கைநழுவிப்போய்க்கொண்டிருக்குது!
எல்லைபோட்டு வாழவைத்த வேங்கைகள் வேள்வியில் ஆகுதியாகும் போது !அபலைகள் கண்ணீருக்கு ஆறுதல்கூற அயலவர் இல்லை!

குடும்பங்கள் பிரிகின்றது ,குற்றுயிராக நம்பிக்கை  குதறப்படுகிறது!
காமப்பிசாசுகள் வேட்டையாடுகிறது புலிமான்கள் என்று தமிழ் மாதர்களை!
வானரக வல்லூருகள் வாரி இறைக்கிறது
பொசுபரசு பொதிகளை குடம் குடமாக!

..............,,,.
வற்றாத குளம்கள் எல்லாம் வன்னியின் மானிட  கொடுமைதாளாது பெருக்கேடுக்கிறது வாழ்ந்தது போதும் ஓடிஓடிக் கரைசேர்வோம் என்ற ஒளியில்லா
ஒருதிசைக்கு!

போதனை சொன்னவன் புதல்வர்கள் தறிகெட்டு தாண்டவம் ஆடுகிறார்கள!
மதிகெட்டு பிண்டங்கள்,பிதற்றல்கள்,அழுகுரல்கள்,கதறல்கள்,காப்பாற்ற யாருமில்லை!
கண்ணீர் வற்றிய பார்வையில் உதவிக்கு உடன்யாருமில்லை ,
யாருக்கு யார் கொள்ளிவைப்பது பிணக்குவியலில் கொழுத்துவதுதான் என்னால் முடிந்தபணி கால் இல்லாதவன் 
வேற என்ன சாதிக்க முடியும்!

எத்தனை ஒட்டம் ஓடிவிட்டேன் இப்போதுபோல் முன்னர்வந்ததில்லை!
வல்லரசுகளும் ,அசோகச் சின்னத்தாரும்,
ஆட்டுவிக்கும் அராஜகத்திற்கு ஆல்பவர்கள்
மத்துக்கடைகிறார்கள் தமிழர் வாழ்வில்!
கலிங்கத்துப்பரனி படித்தேன் !இன்று பார்க்கின்றேன் எங்கள் சந்ததிகள் அறுபட்ட பனைகளாக்  குற்றுயிரும் பிணங்களாகவும்!

ஓரு ஒலித்திசையில் நானும் ஊர்ந்து போகிறேன் நாளைய விடிவு  நல்லதா!
வரும் என்ற உந்துதளில்!பாவிகள் நாம்
பாவிகள் அப்பாவிகள்!

18 April 2011

Rio en parvaiyil

ரியோ!
உலகெங்கும்  திரையரங்குகளில் ஏப்ரல் 13இல்  வெளியாகி வெற்றி நடைபோடுகிறது ரியோ! என்கின்ற முப்பரிமான அனிமோசன் திரைப்படம்.
இப்படம் குழந்தைகளுக்கானது என்றாலும் பெரியவர்களும் பார்த்து ரசிக்கக்கூடியது.
கூண்டுப்பறவை எவ்வாறு மீண்டும் தன்  பறந்து செல்கின்றது என்பதை மிக அழகாக பறவைகளின் பார்வையில் நவீன முப்பரிமான (3டி)தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ரியோ என்கிற பறவை சின்னக்காலத்தில் பறவை கடத்துபவனிடம் பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டு வனத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் வழியில் கார்கால பனிமழையால் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்தில் சிக்கிக்கொள்கிறது கூண்டில் உயிர் தப்பியதை லிண்டா என்றகின்றசிறுமி கண்டெடுத்து தன் வளர்ப்பு பறவையாக்கிறாள்!
சிலகாலத்தின் பின் சிறுமி  சினிமா விதிக்கேட்ப பெரியவளாக பறவையும் தோழியாகிறது.
90நிமிடங்கள் பறவையுடன் சக பறவையாக பயணிக்கும் தருனத்தில் லிண்டா தன்காதலனுடன் அமெரிக்காவில் இருந்து பிரேசில் நாட்டுக்கு விடுமுறையைக் கழிக்க ரியோ சகிதம் செல்கிறாள்!
பிரேசில் நாட்டின் முன்னைய தலைநகரை படத்தின் தலைப்பாக வைத்திருப்பதால் கதை ஓட்டத்தில் பிரேசில் நாட்டுச்சிறப்புக்கள் காட்டப்படுகிறது!
பிரேசில் சென்ற பின் அங்கே லிண்டாவின் காதலன் ரியோவிற்கு ஆய்வுகூடத்தில் மற்றைய பறவைகளுடன் பழகவும் அதன் குணங்களையும் அறிவதற்கு விடப்படும் போது அங்கே இன்னொரு பறவை ரியோவிற்கு நட்பாகிறது 
அங்கே பறவைத்திருடனிடம் பிடிபடுகிறது.
பறவைத்திருடர்களின் சிறப்புக்கள் லிண்டாவின் பாசத்தின் வெளிப்பாடுகள் வனத்தில் உள்ள மற்றைய பறவைகள் லிண்டாவும் காதலனும் ரியோவை மீட்டார்களா? என்பதற்கு விடை வெள்ளித்திரையில் !ரியோ எப்படி திருடர்களிடம் இருந்து தப்பித்தது அவர்களுக்கு ராமன் வனவாசத்தில் எத்தனைபேர் உதவினார்களோ அவர்களை ஞாபகம் வருகிறது இதைப்  பார்க்கும்போது!
பிரேசிலின்புகழ் பெற்ற களியாட்ட நிகழ்வுகள் கதையை தாங்கிச் செல்கிறது.
bule sky studios இன் மற்றும்மொரு கைவண்ணம் ரியோ!
அழகிய இசையமைப்பு துள்ளும் பாடல் என 
இப்படத்தை ரசிக்கமுடியுது!
தமிழில் சிறுவர்களுக்கு தனியான படங்கள் வருவதில்லை பிஞ்சு மனதில் வக்கிரங்களையும் காமத்தையும் விதைக்கும் தமிழ் சினிமா இப்படியான திறமையான படங்களை எப்போது தரும்!?

Rio padam


Rio padam

Posted by Picasa

16 April 2011

காற்றலையில் தேடுகிறேன்....-1

அதிகமான சினிமாப்பாடல்களை செவிமடுப்பதாலும் இலங்கை வானொலி கற்றுத்தந்த பாடல் ஆசிரியரே முதன்மையானவர்கள் என்பதாலும் பாடல் ஆசிரியர்கள் யார் என்று தேடுவது என் ஆர்வம் .
தமிழ்சினிமாப்பாடல் சமுத்திரத்தில் வாலி,வைரமுத்து முதலைகளைத் தாண்டி 1992முற்பகுதியில் இருந்து பலமீண்கள் படையாக கிளம்பியது தமிழ்சினிமாவிற்கு 
பாட்டு எழுதுவதற்கு .
இப்படியானவர்களில் இன்று அதிகம்பேர் நிலையை தேடினால் முகவரியில்லாமலும் ,அரிதாகவும் எழுதுகிறார்கள்!
பழனிபாரதி: இவர் 1995,96,97,இல் அதிக பாடல்கள் எழுதியவர் தமிழில் வைரமுத்துவின் அரியாசனையை அசைத்துப் பார்த்தவர் ஆங்கிலக்கலப்பை முன்னிறுத்தியவர் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் உண்டு" அழகிய லைலா .."யாரது யாரது அங்கே"" ""மார்த்தாடு மார்த்தாடு"" என ரஜனி முதல் விஜய் என அதிகமானவர்களுக்கு பாடல் இயற்றியவர்.சினிமாவிற்கு வந்தாலும் சிற்றிதல்களில் பணிசெய்து கொண்டிருந்தவர் இப்போது இவரின் பாடல்கள் குறைந்து அடையாளம் இல்லாமல் போய்விட்டாரோ ! 
என எண்ணத்தோன்றுகிறது. முன்னர் பாடல் பேழைகளில் இயற்றியவர் பெயர் பதிவு செய்யப்படும் இப்போது இனையத்தில் அவ்வாறு வருவது அரிதாகியுள்ளது.
புதிய இசை அமைப்பாளர்கள் இவரைப்பயன் படுத்துவதில்லையா?
குறுந்தாடி பழனிபாரதி ஓதுங்கிவிட்டாரா?
அறிந்தவர்கள் கூறுங்கள்.
இவரின் கவிதைகள் நூல்களாகவும்,வாரப்பத்திரிகைகளிலும் வருகிறது.""காதலின் பின்கதவு "இவரின் புதியவரவு என நான் செல்லும் புத்தக்கடை நண்பர் நேற்று என்னிடம் தந்தார்.
இன்னும் படிக்கவில்லை.அவரின் பாடல்கள் நினைவில் வருகின்றது பதிவு  இடுவதற்கு
மீளமுடியவில்லை.பெரும்புள்ளி படத்தில் விக்ரமின் அறிமுகத்தால் திரையுலகில் நுழைந்தாலும் சுந்தர்.c இன் உள்ளத்தை அள்ளித்தா படமே இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபல்யப்படுத்தியது .
பலபடங்களுக்கு முழுப்பாடலும் எழுதியவர்
இன்று சோபிக்க முடியாமல் இருப்பது எதனாள்!
!தொலைவினிலே வாணம் தரை மேல் நானும்"" கோடிஸ்வரன் படப்பாடல் இன்னும் ஓலிக்கிறது!
தேவா,இசையானி,யுவன் இவரை அதிகம் பயன்படுத்தியவர்கள்.
அரவிந்தன் படத்தில் "ஆல்த பெஸ்ட்" பாடல் கவித்துவமானது ஆங்கிலம் கலந்தாலும்.
தான் காலத்திற்கு தேவையான மாதிரி பாடல் இயற்றுகின்றேன் என்று ஓரு பேட்டியில் கூறியிருந்தார்!   
                   ........-----தொடரும் 

.

13 April 2011

புதுவருடம் பின்னோக்கிய நினைவுகள்

புதுவருடம் என்றாள் மனதில் எழும் சந்தோஸக் கனவுகள் எத்தனை நினைக்கும் போது மனம் சிலிக்கிறது அன்நாளில் புதுவருடம் என்றாள் வீட்டை சுத்தம் செய்வது பலகாரம் சுடுவது என்று அம்மா ஓரே அமர்க்களமாக திரிவா நாங்களோ அண்ணன்,மச்சான்,நான்,தங்கைகள்.நண்பர்கள் எல்லாம் யார் யாரிடம் கைவிசேஸ்ம் வாங்களாம் என்பதில் ஓரு மாநாடே போடுவம். வியாபார நிமித்தம் தொலைதூரத்தில் இருக்கும் அப்பா,மாமாமார்,சிற்றப்பா,தாத்தா எல்லோரும் மூட்டை முடிச்சுக்களுடன் ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுவார்கள்!
அவர்களின் வருவுடன் வீட்டில் கலகலப்புக்கு பாசத்திற்கும் பஞ்சம்மில்லை  தாத்தா எங்கள் ஓவ்வொருத்தருக்கும் தான் கொண்டு வந்த உடுப்புகளை பிரித்துத்தருவார் கூடவே சக்கர்வாணம் பொட்டியில் வயதுக்கேற்றவாரு அதிகமாக அண்ணனுக்கே கிடைக்கும் இரவில் அந்த சக்கரத்தை சுழலவிட்டாள் அனுமானின் வாலில் வைத்த நெருப்பு போல் சுழன்று பறக்கும் வெளிச்சத்தில் எங்கள் சந்தோஸ்க்களிப்புக்கு அளவு ஏது
மறுநாள் அதிகாலையில் எழுந்து மருத்து நீர் வைத்து கிணற்றில் அப்பா எங்களை குளிப்பாட்டிவிடுவார் அப்பா வாழியில் தண்ணி இழுக்கும் அழகே தனியானது 
அம்மா அடுப்படியில் மாமிமார்,சித்திகளுடன் சமையல் ஆயத்தங்களுடன் மூழ்கினாலும் எங்கள் மீதும் ஓருபார்வை எப்போதும் இருக்கும்.
நல்ல நேரம் என்றதும் தாத்தா எல்லாரையும் கோயில் போக அழைப்பார் யாரும் ஏதும் சொல்லாமல் எங்க வீட்டு வாத்தியார் பின் நடந்து வயில் பாதை தாண்டி முன்னால் உள்ள அம்மன் கோயில் நுழைந்தால் தாத்தாவின் வரவிற்கு காத்திருந்தவர் போல் ஐயர் வாங்கோ எப்ப பயணத்தால் வந்தனீங்க எல்லாறுக்கும் புதுவருடவாழ்த்துக்கள் கூறுவார் அவரின் அந்த வாழ்த்துக்களுடன் எங்கள் புதுவருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள் எல்லாருக்கும் பரிமாற ஐயர் பூசையை தொடங்க நான் ஓடிப்போய் அந்த ஆலய கண்டாமணியை அடிப்பேன் அது கீழ் வருவதும் மேல் எழும்பும் போது என்னையும் இழுத்துச் செல்லும் அந்த சுகத்தை எப்படி சொல்லுவது !
கோயில் ஐயருடன் வீட்டார் எல்லாரும் அடுபடியில் இருந்து அரசியல் வரை பேசுவதை சக்கரை பொங்களை சாப்பிட்ட வாரே நாங்கள் வலம் வருவோம் .
பின் தாத்தாவீட்டுக்கு வந்து பூசை அர்சனைத்தட்டை சாமி படத்தடியில் வைத்துவிட்டு  தன் இடுப்பு மடிப்பேசில் இருந்து காசு எடுத்து வெற்றிலையில் வைத்து ஓவ்வொருத்தருக்கும் கைவிசேஸம் தருவார் அன்று எங்களில் யார்கூடக்காசு வாங்குவதில் ஓரு ரகளையே நடக்கும்!
மதியம் அம்மாவின் கைவண்ணத்தில் உருவான சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடுவோம் .
மாலையில் மாமாவீடுகளில் எங்களுக்கு ராஜமரியாதை மாமாமார் வாங்கியந்த புது உடுப்பு பட்டாசு வெடிபது என கொண்டாடத்திற்கு குறையில்லை!
1983 இல் ஏற்பட்ட இனவாத செயல்பாடுகள் எங்கள் குடும்பத்தாரின் வர்தகநிலைய தீவைப்புக்களும் தூர்மரணங்களும் எங்களை ஆழாத்துயரில் ஆழ்த்தியது.
அதன் பின்பு குடும்பங்கள் இடப்பெயர்வு,புலப்பெயர்வுகள் காரணமாக புதுவருடம் என்றாள் யுத்த நிறுத்தம்  என்ற கோசம் வலுப்பெற்றது பின்னாலில் அண்ணன்.மச்சான்,என ஒவ்வொருத்தராக நாட்டுக்காகப்போக நான் புலம் பெயர்ந்து இன்று புதுவருடம் என்றாலே உறவுகளுடன் 
தொலைபேசியில் வாழ்த்துக்களை கூறுவதுடன் காலம்கழிகிறது.
அடுத்த சந்ததி  இதன் அர்தங்கள் தெரியாமல் புலம் பெயர்  தேசத்தின் சிறப்பான பண்டிகைகளை கொண்டாடும் இனமாகிக்கொண்டு செல்கின்ற வேதனையை யாரிடம் சொல்லி அழுவது.

09 April 2011

Angali sujatha.

சுஜாத்தாவின் இழப்பை தமிழ் சினிமா தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டதோ? விதியை தூக்கி நிறுத்திய நடிப்பு குரலின் பாவம் எத்தனை பாத்திரங்களை தன் நடிப்பாள் புகழ் பெறக்காரணமான இருந்தார் இதுதான் நன்றி கெட்ட திரையுலகம் வெற்றியை கொண்டாடும் மரனத்திற்கு கூடவா இரங்கள் இல்லை.

07 April 2011

திரும்மிப் பார்க்கிறேன் நிறைவுப் பகுதி.

எங்கள் தேசத்தில் சுதந்திரக்கட்சி  கொண்டுவந்த தாய்மொழிவழிக் கல்வியினால் ஆங்கிலமொழி பின் தள்ளப்பட்டதும் போதிய திறமையாளர்களின் வழிகாட்டல் கிடைக்காமல் நாம் பலர் ஆங்கிலப் பாடத்தை ஓரு  வித மாற்றந்தாய் மனப் பக்குவத்தில்  இப்பாடவேளையில் விளையாடுவதும், வெளியேறுவதாலும் அருமை புரியாமல் இருந்துவிட்டு சாதாரன பரீட்சை நெருங்கும் போது படும் திண்டாட்டம். தனிக்கதை.நாங்கள் எல்லோரும்  தெரிந்தவகையில் சமைத்து சாப்பிடுவோம் இடைக்கிடை இருவராக வெளியே போய் இடங்களை தெரிந்து கொண்டு வருவோம் .கிழமைக்கு ஓருதடவை முகவர் நேரில் வருவார் .தொலைபேசியில் கதைக்கும் போது விரைவில் அனுப்புவதற்கு ஆவனை செய்வதாக கூறும் அவரின் வார்த்தைகளில் எங்களுக்கு நம்பிக்கையீனம் தொடங்கியது! வாரங்கள் மாதங்களாக ஓடியது. நாங்கள் சட்டவிரோதமாகத்தான் தங்கியிருக்கிறோம்  .எங்கள் கடவுச்சீட்டு பிரதிகள் மட்டுமே நம்மிடம் மூலப்பிரதி உடனடியாகவே வாங்கிக்கொண்டார் .முகவர்.சில நாளில் ஒருவரை அழைத்துச் செண்றார் அதன் பின் அவரின் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது .எங்களுக்கு செய்வது புரியவிலலை. நாட்டுக்கு புதியவர்கள் கையில் போதிய பணம் இல்லை .அனுமதியில்லை என்ன செய்வது என ஆளாளுக்கு கேள்வியுடன் தடுமாற்றம் !ஜரோப்பாவிற்கு தொடர்பு கொண்டால் நீங்கள் கவனமாக இருங்கள் அவர் வருவார் என கூறினார்கள் .எங்களிடம் சாப்பிட ஏதும்மில்லை ஒவ்வொருத்தவரின் கையிருப்பும் காலியாகிவிட்டது 3மாதங்கள் முடிந்துவிட்டது .நாளிதலில் நம்நாட்டில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்துகொண்டிருந்தது .இனியும் தாமததிப்பதில்  பலன் இல்லை என்ற முடிவு .அனைவருக்கும் நல்லது நாட்டுக்கு போவதற்கு தயாரானோம் .எங்களின் நல்லநேரமோ தெரியாது.
மலேசியாவில் ஆட்சிமாற்றத்திற்கு இசைவாக மஹதிர் முகமட் வழிவிட்டு அஹமட் படாபி பதவி எற்பதற்கு வழி கிடைத்தது.அவரின் முதல் நடவடிக்கை தேர்தல் பிரச்சாரமும் நாட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்கள் 3மாததிற்கு உள் வெளியேறுங்கள் சகல மார்க்கமும்  விசாரனை எதும்மின்றி போவதற்கு வழி செய்திருப்பதாக அறிவித்தல்கள் தேசிய நாளிதல்களில் வந்த வண்ணம் இருந்தது.
நாங்களும் நமது உறவுகளுக்கு  ஜரோப்பாவிற்கு அறிவித்து .அங்கிருந்து பணம் பெற்று நாட்டைவிட்டு வெளியேறி ஊர் போய் சேர்ந்தோம்.
இருந்த பணத்தையும் தொலைத்து மன உளைச்சலையும் பெற்று  ஏமாற்றப்பட்டதுதான்  அனுபவப் பாடமாக அமைந்தது.
என்னைப்போல் எத்தனை உள்ளங்கள் வெளிநாட்டு  மோகத்தால் சீரலிந்திருப்பார்கள்!?

Oru mugam tholainthavanukku.

  ஓ நண்பனே உன் சிறப்புக்குரிய நாள் இன்று!
 காலச்சக்கரத்தில் நீ விதைத்த காதல் ஏதோ ஓரு இதய மூளையில் முகாரி வாசிக்கிறது.!
முடிவெடுக்க முதுகெலும்பு இல்லாத உன் சம்பிரதாயச் சந்தையில் நான் கலியாணமாகி கடல்கடந்தேன்!.
.நீயோ நினைவுகளை மீட்டி என்னை தினமும் கழுவேற்றுகிறாய். 
நாம் சேர்ந்து கண்ணாடி வீட்டுக்குள் விவாகரத்தாகி  பிரியாமல் தனிபாதையில் போனதால்!
 இன்று சந்தோஸமாக கைபிடித்தவர் நல்ல நண்பனாக வழித்துனையாக வருவது என்பூர்வ ஜென்ம புண்ணியம்
.உனக்கும் நல்லமனைவி கிடைப்பாள்  என  வலை நண்பர்கள் கூறுகிறார்கள்.
 மீண்டும் நண்பர்கள் என்ற பயணத்தில் உன்னுடன் கூடவந்து நெறுங்கிய உன் இதயத்தை மீண்டும் உடைக்க நாம் ஒன்றும் சினிமாக்காதலர் இல்லை !"வாழ்க்கை சதுரங்கத்தில் திசைமாறிய சாமானியர்."
நல்ல நாளில் நானும் முகம் தெரியாத ஓரு நண்றியுள்ள ஜீவனாக உன்னை வாழ்த்துகிறேன்
.விதியின் விளையாட்டில்  நாம் ஓருபோதும் சந்திக்கக்கூடாது என் பிரியமான தேவனே.

06 April 2011

Tirumpippargiran-6

மலேசியா போனதும் எங்கள் முகவர் மறுநாள் வந்தார் தமிழ்சினிமாவில் வில்லனின் அடியாள் போல் வாட்டசாட்டமான உருவம் பாதிதமிழும் மீதி மலாய் மொழியும் கலந்து பேசினார் தான் மற்றவர்கள் போல் இல்லை உங்களை விரைவில் சேரவேண்டிய  இடத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார் இதைத்தானே எல்லா முகவர்களும் தவறாமல் உரைக்கும் வாசகம்.  எங்கள் (15)அனைவரையும் அவரின் காரிலும் அவர் நண்பர் காரிலும்  ஏற்றுக்கொண்டு நீண்ட சாலையில் பயனித்தார்  மனதில் சற்று அமைதி குடிகொண்டது எப்படியும் போய்ச்சேரனும் என்று என்குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே மலேசியாவின் சாலையை நோட்டமிட்டேன் நீண்ட அழகிய வேலைப்பாடும் அகலாமான நீளமான ஓரே தடைவையில் இரண்டு  பக்கமும்  5வாகணம் போகக்கூடிய விசாலமான இடம் அமைதியாக வாகணங்கள் போய்க்கொண்டிருந்தது இங்கு நான் பார்த்த இன்னொரு அம்சம் சாலையை கடந்து செல்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இலங்கையில் இது நான் அறிந்ததில்லை. உயர்ந்த கட்டிடங்கள் எங்கள் தேசம் போல் இரானுவ தடைகள் முகமறைப்புகள் கானவில்லை. 
-/...................       நீண்ட பயணத்தின் பிறகு நாங்கள் (15)  பேரும் தொடர்மாடி கட்டிடத்தை தாண்டி அந்த முகவர் போகும் வழியூடாக நாங்களும் எங்கள் மூட்டை முடிச்சுக்களுடன்  பின் தொடர்ந்து 5வது மாடியில் இறங்கினோம்.
......அழகான வேலைப்பாடு உடைய 5 அறைகள் கொண்ட தொடர்மாடி வீடு அது எங்களை உள்வாங்கிக்கொண்டது.   கொழும்பில் இதை பார்திருக்கிறேன் அதனால் எனக்கு வியப்பில்லை நண்பர்கள் தனிவீடுகளில் வாழ்ந்தவர்கள் சிலர் முதல்முறையாக பார்ப்பதால் அதிசமாக பார்த்தார்கள். எங்கள் முகவர்  எங்களுடன்    
நாட்டுச்சுழ்நிலையை  கேட்டு அறிந்து கொண்டார் அவரின் நண்பர் எங்களுக்கு சூடாக தேனீர் தந்தார் அது எங்களுக்கு தேவையானதாக இருந்தது பயணக்களைப்பில் இருந்ததால்.
மீண்டும் முகம்கழுவிக்கொண்டு எங்களில் 5பேரை  தன்னுடன்   வரும்படி கூறினார் சாப்பாட்டுச்சாமான் வாங்கித்தருவதாகவும் எல்லாரும் சேர்ந்து சமைத்து சாப்பிடச்சொன்னார்.  நண்பர்கள் யாரும் வீட்டில்  குசுனிப்பக்கம் போனவர்கள் கிடையாது என்பதை அவர்களின் முக அசைவில்  தெரிந்து கொண்டேன். என்னுடன் மற்றவர்கள் வந்தார்கள் அந்த முகவருடன் நாமும் இனைந்து  குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடியில் நுழைந்து தேவையானவற்றை    வாங்கிக்கொண்டு வரும் வழியில் எங்களை  
புகைப்படம்  எடுக்கும் படி அறிவுத்த இது என்ன ரானுவ தலையாட்டியின் மறுவடிவமோ என ஓருகணம் சிந்தனை சலசலத்தது.புகைப்படம் எடுத்தோம் இந்த இடத்தில் ஆங்கிலமொழியின் அவசியத்தை கூறியாக வேண்டும் நண்பர்கள் பலருக்கு தமிழைத்தவிர பிறமொழித்தகராறு அதனால்தான் இங்கே என்னை முதன்மையாக்கிறேன்.

01 April 2011

Tirumbippargieren-5

மலேசியாவிற்கு வந்தோம் என்ற சந்தோசம் எங்கள் முகவர் வந்து சேரவில்லை என்ற பயத்தில் காணாமல் போனது.மீண்டும் தொலைபேசியில் அந்த முகம் தெரியாதவரிடம் தொடர்பை மேற்கொண்டபோது நீங்கள் கவனமாக அருகில் இருக்கும் ஹொட்டலில் ரூம் எடுத்துத்தங்குங்கள் நாளை நேரில் வந்து உங்களை அழைத்துப்போகின்ரேன் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தார்.

திரும்பிப்பார்க்கின்றேன்  -4

தாய்யில் இருந்து மலேசியா செல்வதற்கு தலைக்கு 300வெள்ளிப்பணம் கொடுத்து சட்டத்தின் காவலரே சட்டத்திற்கு புறம்பாக எங்களை நாங்கள் போய் சேரவேண்டிய இடத்திற்கு கொண்டே சேர்த்தார்.கடவுளை நம்பும் என் நிலைகு மீண்டும் ஓரு உறுதியான நிகழ்வு மனிதன் வடிவில் கடவுள் வந்தார் என்றாள் அது காவல் அதிகாரி ரூபத்தில் முகம் தெரியாத எங்களை ஒரு பிரச்சனையும் இல்லாமல் தன்முயற்ச்சியில் எம்மை மலேசியாவில் இறக்கிவிட்டார்.