31 July 2017

காற்றில் வந்த கவிதைகள்-19

 -முன்னர் இங்கே-----http://www.thanimaram.com/2017/07/18.html
 -----------------


வார்த்தை கொண்டு  உன்னை வர்ணிக்க 
வாலிபம் போனதடி வந்தேறு நாட்டில்!
வாழ்ந்து காட்ட ஆசைகொண்டேன்.
வாழ்வாதரம் வடிகட்டின முட்டாள் நீ 
வாழத்தெரியாதவன் என்று
வாழ்த்துரை அளிக்கின்றது! இன்று
வானொலிகளும் கைவிட்டதடி உன்னைப்போல
வாசகர் கவிதைக்கு ஏது  தளம்?
வா இன்னொருமுறை 
வாழ்ந்திட அழைக்கின்றது அழகிய தேசம்
வாடகைக்கு இதயம் கிடைக்கலயே?!
வாடிய மரம் ஒன்று
வாழ்த்துப்பாடுமா?
வாருவாயா காதலுடன்
வாழும் ஜீவன் இவனடி!

-----

ஆழ்மன உணர்வுகளில்
அடிநாதமாக வாழும்
அன்பு ஜீவன்  போல 
அகதியின் நெஞ்சில்
அருவி போல வந்தாயே!
ஆன்மீகம் எல்லாம் என் அருகில் போல
ஆசையில் கடந்து வா என்றாயே!
ஆற்றங்கரையில் தொலைத்த
அறுநாக்கொடி போல என் இதயம்
அலைகின்றது இன்னும் !
அருவிகளில் நினைவிருக்கா?
ஆணை வருகின்றது என்று 
அணைத்துக்கொண்டாய் அன்று !
ஆணை போனதும் அதன் பின்னே நீ 
அகதியாய் போனதும்,
அழியாத நினைவுகளாய்!
அந்த மரம் இன்னும் உன்னையே எண்ணி
ஆசையில் மடிந்த கதை நினைவிருக்கா?
அன்பே அத்தை பெத்த 
அழகிய குயிலே!



//////

மீண்டும் ஒரு பிறவி எனில்
மீட்புபோரில் உயிர்பிரியும் வரம் வேண்டாம்
மீண்டும் ஒரு கைதிபோல 
மின்னும் நரகாட்சியில்
மீண்டும் பிறவாத இனவாதம் 
மீட்கும் பல நட்புக்களுடன்
மிதிலை ஆட்சிபோல ஒரு
மிருதுவான தேசத்தில் மறுஜென்மம்
மீண்டும் கிடைக்குமோ?

-----


25 July 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-10


முன்னர் இங்கே-   ---http://www.thanimaram.com/2017/07/9.html

இரட்சிப்பது, இரட்சனை, ஆட்கொள்வது தேவதூதன், தேவாமீர்தம் போல என்ற பதம் எல்லாம் எத்தனை அழகானது தமிழில் என்பதை சிந்தித்தால் மனதில் ஒருவகை மகிழ்ச்சிக்களிப்பு தானாகவே திறந்து கொள்ளும் மலையகத்தின் நீர்வீழ்ச்சி போல !

அப்படித்தான் இலங்கையின் ஆட்சி மாற்றங்கள்  என மலர்ந்த பிரேமதாச ஆட்சி , சந்திரிக்கா ஆட்சிரணில் அரசின். சமாதான ஒப்பந்த காலம் எல்லாம் தமிழ்மக்களின் மனங்களில் ஒருவித சந்தோஷ பரவசம் தோன்றியது ஆரம்பத்தில் !

ஆனால் ஆட்கொள்ள வந்தவர்களே அட்டுழியம் புரிந்த கதைகள் எல்லாம் இலக்கியம் வரலாற்றிப் பதிவாக எழுத வேண்டும் .

அது போலவே சமாதான காலத்தில் நேர்வேயின் செயல்பாடுகள் வடக்கில் மட்டுமல்லாது  தெற்கு நோக்கியும் பல அபிவிருத்தி செயல்பாட்டுக்கு நிதிப்பாதீட்டை கையாளத்தொடங்கியது  நேர்வே அரசு!

மீண்டும் மறுமலர்ச்சி கால இலக்கியம் போலவே கொழும்பு மட்டுமல்ல அப்புத்தளை, பண்டாரவளை,பதுளை என வியாபார உலகும் புத்தொளி வீசத்தொடங்கியது. மூடிய பாதைகள் மீண்டும் திறக்கும் போது வடக்கே தெற்கின் சவக்காரம் போலவும் தெற்கே வடக்கின் புகையிலை போலவும்  தடைப்பட்ட பொருட்கள் எல்லாம் தட்டுப்பாடு இல்லாது  கிடைக்கத்தொடங்கியது போலவே புலம்பெயர்ந்த உறவுகளும் மீண்டும் நேரில் சந்திக்கும் ஒரு கும்மமேளா நிகழ்ச்சி போல உறவுகளின் வருகை கொண்டாடத் தொடங்கியது ஒருபுறம் என்றால் !


மறுபுறம் தனியார்துறை விற்பனை நிறுவனங்களிலும் புதிய முகாமைத்துவ தலைமை மாற்றங்கள்  தம் விற்பனைத்துறையில் ஏற்றப்பட இனவாத தேக்கநிலையை  தளர்த்தியது இலங்கை இராணுவத்தைப்போல வியாபாரத்தை மீளக்கட்டி எழுப்ப !

சிங்களவர்களிடம் இருந்த ஏகவினியோகஸ்த்தர். என்ற ஆட்சியை கைமாற்றியது சந்திரிக்காவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் தோல்வியுற்ற  பொருளாதாரம் ரணிலின் பாராளுமன்ற வெற்றி அரசியலில் புதுவேகம்(2002 ) கொண்டது  போலவே  பல இடங்களில் ஏக வினியோகஸ்த்தர்களாக மீண்டும் தமிழரிடம் பகிர்ந்த போது புதிய பல விற்பனைபிரதிநிதிகளையும் உள்வாங்கியது பல்தேசிய நிறுவனங்கள்

அது போலவே விற்பனையை அதிகரிக்க தேர்ச்சி மிக்க விற்பனைப்பிரதிநிதிகளையும் கொழும்பில் இருந்து மலையகம் நோக்கி இடமாற்றம் செய்து தம் இலாபநோக்கத்தின் செயல்திறனை விஸ்தரிக்க பல நிறுவனங்கள்  புதுவழி தேடியது.//


 வடக்கினைப்போலவே தெற்கிலும் விற்பனைப் போட்டியுண்டானது பல விற்பனைப்பிரதிநிதிகளிடம் 

. இந்த காலகட்டத்தில் தான் தவராஜாவுக்கு மீண்டும் வசந்தம் போல ஏகவினியோகஸ்தர் உரிமம் கிடைத்தது. பல நிறுவனங்களை தன் அனுபவத்தில் பார்த்தவர் என்பதால் யுத்தநிலையிலும் தன்னோடு இயங்கிய பிரபல்ய நூடுல்ஸ் தயாரிப்புபின் சந்தைப்படுத்தலுடன்,(harichandra ) !



 புதிதாக பல்தேசிய  கம்பனியின் அத்தியாவசிய/ஆடம்பர நிறுவனத்தின் ஏகவினியோகஸ்த்தர் என்ற சில நிறுவனங்களின் கடைதிறப்புக்கு கைகொடுத்தார் .


அதுவரை சிங்கள இளையர்களின் வசம் இருந்த விற்பனைப்பிரதிநிதி  என்ற மகுடம் பாரதிராஜா சினிமாவில் அறிமுகம்செய்த நிஜமான கிராமங்கள் போல வடகிழக்கு இளையர்களும் புதிய சினிமா நாயகர்கள்  போல  ஆங்கிலத்துடன் ,தமிழும் ,சிங்களமும் பேசும் தனித்துவத்துடன் டாக்டரும் ,என்ஜினியரும் மட்டும் தான் தொழில் அல்ல இந்த விற்பனைய்துறையிலும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்துடன்  புத்தம் புதுப்பயணம் பட கதாநாயகர்கள் போல மலையகம் நோக்கி வந்தார்கள்!

 வந்தவர்களில் காதல் கடிதம் தீட்டியோரும், ஊருவிட்டு ஊர் வந்து காதல் மழையில் நனைந்தவர்களும்,பூந்தளிர் ஆட , மலையோரம் குயில்கூவக்கேட்டேன்மறக்கக்தெரியவில்லை  என் காதலை, ஒரு கடிதம் எழுதினேன் என்று பாடியவர்கள் கதை எல்லாம் உதவுகங்கரங்கள் போல உதவிய கதைகள்  என்றாவது  இன்றைய இணையத்தில் பேசலாம்!மலையகத்தின் சாதிய குறுக்கு வெட்டு  பற்றி யாழ்மேட்டுக்குடி எல்லாம் அறியாத கதை எல்லாம் )) பெரியகவுண்டர் பொண்ணு படப்பாடல் போல ) 



சுதந்திரமாக என காத்திருப்போர் பலர்!

அன்றைய மலையக பண்பலையில் ஒலித்த பாடல்கள் போல இன்று காசுகொடுத்துக்கூவி அழைக்கும் வானலை முதல்வன்கள்  பண்பலையைப்பார்க்கும் போது  !




 நினைவுகள் வைகாசி பிறந்தாச்சு பட நாயகி காவேரி போல அல்ல உன்னை நினைத்து பட  சினேஹா போல   புலம் பெயர் தேசம் பாரிசில் இருந்து விடுமுறையில்  இலங்கையின் அழகிய நகரம் அப்புத்தளை வந்தாள்  விழிகளில் வந்திடு கண்ணே என்பது போல கமலேசின் மச்சாள் தவராசாவின்  தங்கை  மாதவியின் மகள் சாருமதி !


தொடரும் ....

22 July 2017

காற்றில் வந்த கவிதைகள்-18


முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/07/17.html








----------------------------------
எத்தனை துயரங்கள் !
எண்ணற்ற விம்மல்கள்,
என்றாலும் இன்னும் ,
எங்கேயும் சிலிர்ப்புடன் இருக்க,
என்றாவது  இதயம் ஒரு தடவை 
எட்டிப்பார்க்க 
என் இதழ் பதித்து 
என்னுயிர் பிரிவதுக்கு முன்!
ஒரு முதல்முத்தம் இடவேண்டும்
என்னைப்பெற்ற தாய்நாட்டு மண்மீது!
என்றும் குழந்தை போல பிரிந்து 
எங்கும் ஒரு காதலன் இவன்

ஏதிலி!--////


----------------

 ருவரும் கவிதை எழுதினோம் இருவிழியில் இருபார்வையில் ஏனோ!
 இருவரில் ஒருவர் வென்றோம்
 இறுதிச்சுற்றில்!
இது தரம் என்று
இன்னொரு மகுடம்  என் கவிதைக்கு !
இருந்தும் இதில் ஏதோ அரசியல்
இன்னும் நம்மமுடியாதவன் நீ என்று 
இதயத்தோல்வி விருதும்
இன்முகம் காட்டியது!



இன்னொருவனுடன்  உனக்கு தாலியும் 
இந்த ஊர் தானே தந்தது!
இப்போது இடைவெளிகள் கவிதைக்கும்
இந்த முன்னால் கவிஞனுக்கும் 
இருந்தும் இணையம் இணைக்கின்றது
இருவரும் இருதேசத்தில்!




-----------