30 March 2013

விழியில் வலி தந்தவனே -18


 போகும் பயணம் தெரிந்து போவதில்லை ஈழப்போராட்ட களத்துக்கு செல்லும் வீரவேங்கைகள் .அப்படியானவர்களில் ஒருவன் தான் ரகுவும் என்பதால் அவள் பதிலுக்காக காத்திராமல் நடக்கத்தொடங்கினான்.


 இனி எப்ப ரகு உங்களை பார்ப்பேன் மீண்டும் பார்ப்பேன் குறுந்தொகை பாடல் போல கார்காலத்திலா ??இப்பவாவது சொல்லுங்க ??என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று பீளீஸ்.


ஆனால் உங்களுக்காக எப்பவும் காத்து இருப்பேன் 16 வயதிலினிலே மயில் போல இனவாத யுத்தத்தில் இன்னுயிரை நீக்காவிட்டாள் என்று சற்று சத்தமாக சொன்னாள்.வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்று புலம்பெயர் தேசம் சர்வதேசத்திடம் கதறியது போல!


என்ன சொல்ல சொல்லுறீங்க சுகி??காதலுக்கு மரியாதை படத்தின் இறுதிக்காட்சி போல என் அம்மாவையும் ,அப்பாவையும் வந்து உன்னை எனக்கு கட்டிவையுங்க. இவள் எங்க வீட்டு இராசத்திபோல நாங்க பார்த்துக்கொள்வோம் என்றா? 

இல்லை விவசாயி நாங்கள் என்றாலும் வீதியில் விடமாட்டோம் எங்க வீட்டுக்கு வந்த மருமகளை என்று விராப்புடன் சம்பந்தம் பேசச் சொல்லுறீங்களா??? 

இல்லை உங்க அப்பாவின் அதிகார மையம் புரியாமல் நீ என்னை நேசிப்பதையும் !அதனால் வரும் பின்விளைவுகளையும் புரியாதவன் போல நடந்துக்கவா ?


காதலே நிம்மதி பட சூர்யா போல சுகி?? 


இனவாத ஆட்சி உங்க அப்பாவைக்கூட இந்த ஊரில் இருந்து ,இந்த உலகத்தில் இருந்து குண்டுவைத்து என்றாலும் கொலை கங்கணம் கட்டும் நிலையில் அவர் உயிரைக்காக்க உறங்காத கண்மணிகள் புலனாய்வில் இருப்பார்கள் .அவர் குடும்பத்து பெண் நீ.

 இந்த நிலையில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் எத்தனை குறுஞ்செய்தி செல்போல கூவிக்கொண்டு போகும் என்று யார் அறிவார் ?? 


இது எல்லாம் ஜோசிக்காமல் நீ அழுதுவது தான் எனக்கு வியப்பாக இருக்கு!இல்லை நீ என்னை நேசிப்பதை அறிந்துவிட்டு உன் அப்பாவின் அதிகார மையத்துடன் மோதவா??

 சினிமா ஹீரோ போல பஞ்சு வசனம் பேசவா?? கதிர் அறுக்கத் தெரிந்தவனுக்கு கழுத்தும் அறுக்கத் தெரியும் கட்டி வையுங்க உங்க பெண்னை என்றா ?

இது எல்லாம் பேச நல்லா இருக்கும் .ஆனால் எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை.

 பேச்சு வார்த்தை மேசைக்கு என்று வந்து விட்டு இப்ப இனவாதம் பேச்சை முறித்துக்கொண்டு முன்னேறும் இந்த செயல் போல இல்லை நம் வாழ்க்கை!

 வெற்றிகொள்வோம் என்ற எண்ணத்தில் முன்னெடுப்பு செய்தால் வீழ்ந்து போவது அப்பாவி மக்கள் போல என் குடும்ப உறவுகள் தான்.

 இப்படி ஆகுவதை விட மெளனம் பேசியதே படத்தில் வருவது போல விட்டுவிடுவோம் இந்த காதல் என்ற வார்த்தையே பிடிக்கல உன்னையும் சேர்த்துத்தான் நீ என் முன்னே அழுது புலம்பும் நிலையை என்னால் பார்த்து சகிக்க முடியாது . என்றுவிட்டு! ரகு திரும்பி அவளை ஒரு முறை பார்த்தான் .!! 

அவள் கண்களில் இருந்து கண்ணீர் மண்ணில் விழுந்துகொண்டு இருந்தது.நாளை நான் என் மண்ணில் வீழ்ந்தாலும் எனக்கான கண்ணீரை இவள் இப்பவே சிந்துகின்றாள் என்று நினைத்துக்கொண்டு ரகு திருபிப்பார்க்காமல் வேகமாக நடக்கத்தொடங்கினான்.!! 

கண்ணில் வலிதந்து கடந்து போகின்றவனே
காதலியின் நினைவு துறந்துபோவாயோ
களத்தில் களிரு போல கட்டளை ஏற்று
கலிங்கத்துப்பரணி பாடுவாயோ
கடும்சமர் என்று களப்பலியாகி
கந்தகக்காற்றில் கலந்து போவாயோ
காலம் எல்லாம் இதயக் கமலம் ஆவாயோ
காத்து இருப்பேன் கண்ணன் வருவான் 
என்ற ராதை போல!
       ( சுகியின் குறிப்பில் இருந்து.)

29 March 2013

விழியில் வலி தந்தவனே-17




தெரிந்தவர்களை கண்டுவிட்டு காணாதவர் போல போவது சிலரின் குணம் .அவருக்கும் ஆயிரம் சோலி இருக்கும் என்று அவரைப் பற்றி மனதளவில்  புறம் பேசுவோரும் நம்மில் உண்டு! அதுபோலவே !

என்ன ரகு ?பார்த்தும் பாக்காதது போல போறீங்க! அதே பாசத்துடன் கூடிய ஏக்கம் கலந்த தொனியில் கேட்டாள்.

பஞ்சாயத்தில் நிற்கும் சின்னக்கவுண்டர் விஜய்காந்து போல அவன் நிலையை எண்ணி கையை விடுங்க சுகி .

"யாரும் பார்த்தால் என்ன நினைப்பினம்.நீங்க அங்கால வாங்க கதைக்கலாம் என்று அன்னதான மண்டபத்தின் பின் இருப்பது கோயிலுக்கு சொந்த மான பூந்தோட்டம் ."

காலை மாலை பூஜைக்கு பூக்கள் தரும் நந்தவனத் தெரு என்று நண்பர்கள் சொல்லும் .பின்புறமாக அவளை அழைத்துச்சென்றான்.

அவனைபார்த்ததும் வான்கதவு திறந்த மூன்றாம் வாய்க்கால் போல தேம்பித் தேம்பி அழுதால் .

அழாதீங்க சுகி யாரும் பார்த்தால்என்னையும் வட்டுவாய்க்காலில் பச்சை மட்டை அடிவாங்க வழி செய்துவிடுவினம்!  அப்புறம் பிரச்சனையாகிவிடும் 

அழாமல் என்ன செய்ய சொல்லுறீங்க ரகு  ?,என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் போயிட்டீங்களே போராட்ட களத்திற்கு.அவ்வளவு நான் தகுதியில்லாதவளாகப்   போயிடேனா?

இல்லை சுகி.


கதைக்காதீங்க ரகு என்று அவன் கன்னத்திலும் ,மார்பிலும் மாறி ,மாறி காதல் போதையில் அடித்தாள்.

 பின் திருமாலின் திரு மார்பில் சாய்ந்த ஶ்ரீதேவி போல அவன் மார்பில் அப்படியே சாய்ந்து கொண்டாள். ரகுவும் அவளை தடுக்கவில்லை ஆற்றுப்படுத்த முன் அவள் கோபம் தணியட்டும் என்று  சிறுது நேரத்தின் பின் சொரி  ரகு ஏதோ கவலையில் அடித்துவிட்டேன் .வலிக்குதா ?என்று பூமழை பொழிகின்றது பட நதியா போலஅப்பாவியாக கேட்டாள்.

 அவன் மார்பில் சாய்ந்த படியே.உள்ளமே என் கோயில் உன் உடல் அல்ல என்ற நிலைஅவளிடம்.

விடுங்க சுகி என்று சாய்ந்து இருந்தவளை விலக்கிவிட்டு ரகு சொற்பொழிவுக்கு வரும் பேச்சாளர் சோடா குடித்துவிட்டுப் பேசுவது போல பேசத்தொடங்கினான்.

 இன்னும் என்னை நினைச்சுக்கொண்டு இருக்குறீங்களா சுகி??

.நான் அப்ப சொன்னதைத்தான் இப்பவும் சொல்லுறேன். உங்களை என்னால் விரும்ப முடியாது.


இன்றைய நம்தேசத்தின் நிலையை நினைச்சுப்பாருங்க ??எந்த நேரம் என்ன நடக்கும், யார் உயிர் எப்ப போகும் எங்கு இருந்து விமானக்குண்டுவீச்சு வரும் எந்த வழியால் இராணுவம் முன்னேறும் என்றும் தெரியாத பயப்பிராந்தியில் மக்கள் !


வாழ்வாதாரங்கள் எல்லாம் யுத்த முனைப்பின் பலனாக மூடிய நிலையில் வாழ்வே போராட்ட சூழலில் யார் ?யார் மரணிப்போம் என்று தெரியாத  நிலையில் ஏன் இந்த காதல்???


இந்த ஊரில் எத்தனையோ பேர் காதலித்து இருப்பார்கள்.  பின் பிரிந்து  தேசத்துக்காக போய் கல்லறையில் வித்தாகிப் போனவர்கள் பின் எழுதக்கூடிய நம்பகத்தன்மையான நாவல்களாகக் கூட இருக்கலாம் .

இது எல்லாம் யார் அறிவார் ??எங்கள் மண் இன்னும் பல சுவையான, சுகமான ,சோகமான வரலாற்றை என்றாவது காலச்சரித்திரத்தில் பதிவு செய்யலாம்!இது எல்லாம் நாம் பலருக்கு சொல்லவேண்டிய விடயங்கள்.

 இந்த  நிலையில் தான் போராட்ட களத்திலும் சிறப்பாக  இயங்கும் இலக்கியம்  நெஞ்சங்களுக்கு பாராட்டு விழா ,பொற்கிளி என்று எல்லாம் நம் தலமை ஊக்கிவிக்கின்றது .


நானும் எழுதும் ஆர்வத்தில் இருக்கின்றேன் அன்பைத்தேடும் தனித்தீவு போல இப்போது இல்லை புரிஞ்சுக்க சுகி!
நீ மாறவே மாட்டியா ரகு சற்று உரிமையுடன் கேட்டாள்.இல்லை சுகி என் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படித்தான் நடக்கும்.அதே போல உங்கள் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படிதான் நடக்கும்.

ஆமா ஏ.எல்(உயர்தரம்)என்ன பாடம் படிக்கிறீங்க என்று பேச்சை மாத்தினான் ரகு.

மெட்ஸ்(கணிதப்பிரிவு) படிக்கிறன். 

அப்ப இஞ்ஜினியர் தான் போங்க !!

"நம்நாட்டுக்காசில் படித்து பட்டம் பெற்றுவிட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்யப் போறீங்க .அப்படித்தானே.???

அங்கே போய் நம்மண்ணில் இருந்து வருவோர் மனித வலுவில் வேலைக்கு வருபவர்களிடம் .திமித்தனத்துடன் கோப்பை கழுவ வந்தனீயா ??என்றும்  குப்பை கூட்ட வந்தனீயா ??என்றும் குதர்க்கம் பேசப்போறீங்களாக்கும் என்று ரகு சொல்லவும்.

சோர்ந்து போயிருந்த அவள் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்ந்தாள் நீங்கள் எப்போதும் அமைதிப்படை சத்யராஜ் போல் ஜொல்லுப் பாட்டிதான் !
உங்களுடன் கதைச்சிக்கொண்டு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா? ரகு என் கூடவே நீங்க இருந்தா எப்படி இருக்கும்.!

ஓக்கே சுகி நான் வீட்ட போகணும் !
நாளைக்கு போராட்டகளத்துக்கு மீண்டும் போகப்போறேன் என்று ரகு அவளிடம் சொல்ல. மீண்டும் வேலைக்கு போகும் தாயைப்பிரிந்து செல்லும் குழந்தை போல அழத்தொடங்கினாள்!

தொடரும் விரைந்து!!!!!!


//
வட்டவாய்க்கால்-வன்னியில் சமூகவிரோத செயல் என்றால் தீர்ப்பு அங்குகிடைக்கும்!

28 March 2013

விழியில் வலி தந்தவனே-16



போராட்ட களத்தில் இருந்து பெற்றவர்களையும் ,கூட வந்தவர்களையும் ,பிறந்த ஊரையும் ,விரும்பினால் போய்ப் பார்க்கலாம் பொறுப்பாளருக்கு அறிவித்தல் கொடுத்து விட்டு.

 அப்படித்தான்!ரகுவும்சிறிய விடுமுறை ஒன்றில் ஊருக்கு வந்திருந்தான் !

இனவாத போர் வெறியில் வரும் சிங்கபாகு சிப்பாய் என்றாலும், கஜபாகு ரெஜிமேண்ட சிப்பாய் என்றாலும், விடுமுறையில் வீடு செல்லவும் ,ஆன்மீககருமம் ஆற்றவும் ,விடுப்பு விடுமுறை கேட்டாள் !விரைவில் கொடுக்கமாட்டார்கள் .உயர் அதிகாரிகள் அதனால் அவர்கள் தப்பி ஒடுவோர் பட்டியலிலும், போராளிகளிடம் சரணடைவதாகவும் கதைகள் சொல்வார்கள் எங்கள் பொறுப்பாளர் அண்ணாக்கள் !

இப்படி ஒரு சிலரை காவல் தடுப்பில் இருக்கும் போது சந்தித்ததும் ஞாபகம் வந்து போகும் நிலையில் தான் ரகு சிறிய விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தான்!

 தற்போது யுத்த நிலையில் ஊரில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.ஒரு சிலர் மட்டும் குடும்பமாக இருந்தார்கள். !!

விமானக்குண்டு வீச்சில் இருந்து தப்பவும், இனவாத ஆட்சியின் தமிழர்மீதான உக்கிரமான பொருளாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து ஏற்படுவதால் பலர் இடம் பெயர்ந்துகொண்டு இருந்தார்கள். எங்கே பொருட்களையும் ,உடமைகளையும், உயிரையும் பாதுகாக்க வழிகள் இருக்கும் இடங்கள் நோக்கி!!

 போனவர்கள் நிலை என எல்லாவற்றையும்.அவர்களிடம் ஊர் புதினங்களை கேட்டு அறிந்துகொண்டான் ரகு.

 போர் முற்றுகையிலும் நம்மவர்கள் கைதூக்கி வேண்டிக்கொள்ளும் எங்கள் சன்னிதானம் என உருண்டு நேர்த்திக்கடன் தீர்த்த ஊர்க்கோவில் திருவிழா தொடங்கியது பத்துநாள் திருவிழா .

அதில் சில நாட்கள் மட்டுமே ரகுவால் கலந்துகொள்ள முடியும் என்பதால் இரவு, பகல் என்று நண்பர்களுடன்  நாட்டில் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் மிகத்தீவிரமான போர் முன்னெடுப்பு ,சர்வர்வதேசத்தின் மெளனம் ,எரிக்சொல்கைம்,யாக்காசி அக்காசி போய் இப்ப விஜய்நம்பியார் என்ற வேடதாரியின் புதிய முகம் எல்லாம் தமிழர்மீது ஏன் இப்படி ஒரு கபட நாடகம் என எல்லாம் நட்பு வட்டத்தில் ஆக்ரோசமான கருத்துப்பரிமாறல் ஒரு புறம் என்றால் !

போரரைத் தவிர்க்க புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டு வரும் கவனயீர்ப்பு உண்ணாவிரத நிகழ்வுகள் ,மக்கள் குழுமத்தின் ஆதரவுகள், இவை எல்லாம் சர்வதேசம் கணக்கில் எடுக்குமா?? என்ன வளம் இங்கு இருக்கு சுரண்டல் பேர்வழிக்கு வந்து சேர்பியாவை போல பிரித்துக்கொடுப்பார்களா??,


 சேர்பியாவுக்கு  முன் இருந்தே நசுக்கப்படும் இனம் ஈழத்து குடிமக்கள் என்று எந்த!! இராஜதந்திரி அறிவான் சமாதனம் வெள்ளைப்புறா என்று வேசம் கட்டும் குள்ளநரிகள்!




 என்று அனல் பறக்கும் கோயில் பிரகாரர்தில் .


அப்படி இருந்த ரகுவின் நட்பு வட்டத்தில் இவர்களில் ஒரு சிலர் அவயங்கள் இழந்த வீரர்கள் என்றாலும் நெஞ்சில் வீரம் இன்னும் வீசும் காளைகள் ! 


கோயிலில் ரகுவின் பொழுதுகள் சந்தோஸமாக கழிந்தன. 


ஒரு மாலைவேளையில்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலின் ஆக்ரோசத்துக்கு சூடுதணிக்கவும் ,நெஞ்சில் இருக்கும் அழுக்குச் சூட்டினை ஓடும் நீரில் போக்கவும் ஆன்மீகத்தில் நம்பிக்கையுடன் வருவோருக்கு தாகம் தீர்க்கும் வண்ணம் கோயில் வடக்குப் பக்க பிரகாகரத்தில் ஒரு நீர்த்தடாகம் எப்போதும் வற்றாது  இருக்கும் வண்ணம் நீர் நிரப்பி இருக்கும். அது வற்றாது இருக்க ரகு குடிதண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான் .


முன்னர் இதை தந்தையோடு வந்து அவன் செய்த செயல் வழமை போலவே கோயிலுக்கு பின் உள்ள பைப்பில் ரகு குடிதண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான் !.

நிரப்பிவிட்டு திரும்பும் போது அங்கே வன்னி வெயிலின் வெக்கையைத் தீர்க்க தாக சாந்திக்குக்கு சுகியும் தண்ணீர் குடிப்பதற்காக நின்று கொண்டு இருந்தாள் !


சுதந்திரக்கட்சியின் கட்சிக்கொடி போலஒரு நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள். 


இவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்கவைத்தது எது?ஏன் அவள் சற்று முன் வந்திருக்காலம் இல்லை ரகு சற்று பிந்தி வந்திருக்காலம் 12 B படம் சிம்ரன் போலஆனால் இவ்வளவு காலத்தின் பின் இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து வந்த சக்தி எது? 

சுகி ரகுமேல் வைத்திருந்த அவளது தூய்மையான யாசகமாக இருக்குமோ ஒரு வேளை அது உண்மை என்றால் காதல் சக்தி மிக்கதுதானே. சுகி சிறுது நேரம் ரகுவையே மரங்கொத்திப் பறவைபோல பார்த்துக்கொண்டு நின்றாள் ரகுவும் அவளது பார்வைகளை எதிர்கொள்ள சக்தி அற்றவனாக பார்வை ஒன்றே போதும் குணால்  போலஅவளை கடந்து செல்ல முட்படுகையில் அவள் ரகுவின் கையை கன்னிகாதானம் செய்த பின் கணவன் கரம் பற்றும் மனைவிபோல இறுக பற்றினாள்.!! 



24 March 2013

விழியில் வலி தந்தவனே-15


நம்மோடு படித்தவர்கள் கூட இருந்து பள்ளியில் பழகியவர்கள் பலர் ஒவ்வொரு போர்ப்பாசறையில் ஏதோ ஒரு பொறுப்பாளரின் பின்னே போர் முரசு கொட்டி களத்தில் இருந்தார்கள் !


அப்படி இருக்கும் நிலையில் சிலரின் வீரச்சாவு எங்கள் நண்பர்களுடன் பகிருப்படுவதும் உண்டு சிலரின் இழப்பை விழிக்கு கொண்டுவருவது விடியலில் வரும் நாளிதழ் அப்படித்தான் ரகுவுடன் படித்த அவன் நண்பன் சுயன் மண்ணுக்காக இறந்தவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டான் என்ற செய்தி ரகுவிற்கு ஒரு வாரம் கழித்துதான் தெரியும். அனால் அவன் அழவில்லை அவன் கண்கள் ஒருதுளி நீரையும் சிந்தவில்லை.

சுயனுக்கும் அவனுக்குமான நட்பு இணைந்த கைகள் போல எழுத்தில் வர்ணிக்கமுடியாதது. அவனது பாடசாலை வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு நண்பன் சின்னவயதில் இருந்தே பழக்கம்.சுயன் சற்று சண்டியர் விருமாண்டி போலஆனால் அவன் மனமோ குழந்தை போல அது அவனுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.!

அவன் ஒருத்தியை நேசித்ததும் அவள் அவனை செந்தமிழில் பூசித்ததும் புழுவாரித் தூற்றியதும் எல்லாம் நீங்காத நினைவுகள்!

அவனுடன் பள்ளியில் சண்டை போட்டது பாவையரின் பின்னே ஜொல்லுவிட்டது என நினைவுகள் பசுமையானவை.

இவனுக்காக அவனும் அவனுக்காக இவனும் போட்ட சண்டைகள் ஏராளம் இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் ஒரு ஜென்மத்திலும் நான் உந்தன் நண்பனாக வேண்டும் நண்பனே உன் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று ரகு மனதிற்குள் பிராத்தனை செய்துகொண்டான்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். சிலநேரங்களில் சில மனிதர்கள் போலஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.பிதாமகன் சூர்யா போல!

இன்று சுயன் நாளை நானாக கூட இருக்கலாம் ஆனாலும்  தன் நண்பனின் இறப்பு என்றாலும் சரி தன் இறப்பு என்றாலும் சரி அது அர்த்தப்படுகின்றது என்று நினைத்துக்கொண்டான்.தாய் மண்மீது நேசிப்பில் என்பதால்!

போராடினால்தான் வாழ்க்கை கடவுளுக்கு வன்னி மாந்தர்கள்  மீது ஏன் இத்தனை ஓரவஞ்சனை. !

சுயனின் நினைவில் மூழ்கியிருந்த ரகுவின் மனதில் சுகி எட்டிப்பார்த்தாள் பாறையின் இடுகில் வேர் விடும் கொடிபோல  !


அவளது அழகிய முகம் அவன் முன்னே வந்து போனது.பாவம் என்னை எவ்வளவு நேசித்தாள் ஆனால் என்னால் தான் அவள் காதலை ஏற்கமுடியவில்லை.

அவள் மனம் எப்படி இலங்கை வேந்தன் கலங்கி நின்ற காட்சி போல நொந்து இருக்கும்.அந்த சின்னப் பெண்ணின் மனதில் என் மீதான வாலிப ஈர்ப்புக் காதல் அவள் இறுதிக்காலம் வரை இருக்குமா? இல்லை என்னை மறந்திருப்பாளா?அப்படி மறக்கவில்லை எனில் இறைவா என் மீதான நினைப்பை மறக்க செய்.அவள் அப்படித்தான் படம் போல!


என்னில் அன்பு காட்டிய அந்த ஜீவனுக்கு மேலும் கஸ்டம் கொடுக்காதே அவள் சந்தோசமாக இருக்கவேண்டும் .அவள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும்!

.நேசித்தவள் நிறைவாக வாழ வேண்டும் என்பது தானே தூய்மையான யாசகன் நேசிப்பவன் வேண்டும் வரம்!

ஏதோ ஒரு காலத்தில் எம் மண் விடிகின்ற போது அப்போது நான் உயிருடன் இருந்தால்!!!

 அவளை சந்திக்கும் போது என் மீதான நினைப்பு அவளுக்கு இருக்க கூடாது.என்னை ஒரு தலையாக காதலித்தது தவிர அவள் எந்த தவறும் செய்யவில்லை .எனவே அவள் வாழ்க்கையை வளமாக்கு என்று இறைவனிடம் ரகு சுகிக்காக வேண்டிக்கொண்டான்!

என்னவளே என்னுள் வந்தாய் தீயாக
எனக்கும் உன் நேசம் பிடிக்கும் நதியாக
என் தேசம் எரிகின்றது விடுதலை வேள்வியாக
எப்போதும் நீ இருப்பாய் யாகமாக
என்றாவது வந்தால் நீயாக
என்னிடம் வந்திடாதே கொடியாக
என் வழியில்  உன் குடும்பம் நந்தியாக
எனக்கும் வழி மறிக்கும்! என்னை மறந்து விடு!!!


(ரகுவின் குறிப்பில் இருந்து!)

(தொடரும்)

23 March 2013

அந்தநாள் ஞாபகம்...8


வணக்கம் உறவுகளே நலமா??
மீண்டும் அந்த நாள் ஞாபகம் ஊடாக மீண்டும் ஒரு திரையரங்கில் சந்திக்கின்றேன்:)))

 இன்று எந்த ஊர் என்று உங்களுக்கு அறிய ஆவலா??


தெற்கில் இருந்து  இந்த ஊர்கடந்து தான் எல்லோரும் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் வாகனத்தில் என்றால்.!

இந்த ஊரிலும் ஒருகாலத்தில் மூவின மக்கள் முறையாக அமைதியாக வாழ்ந்தார்கள். பின் இனவாத இரைக்கு பலியான ஊர்களில் இந்த ஊரும் தமிழர் மனதில் வடுக்களைத் பதிவு செய்து இருக்கின்றது கடந்த காலங்களில் அந்த ஊர்தான் மதவாச்சி .!!!



இனவாதம் இந்த தொகுதியை திருமலையுடன் இணைக்கின்றேன் என்றும் ,அனுராத புரத்துடன் இனைக்கின்றேன் என்றும் .வவுனியாவுடன் இனைக்கின்றேன் என்றும் கூறுபோட்டதில் குலைந்து போனது பால்ச்சோறு என்பது என் கணிப்பு.!

முதல்தர வருமானம் இங்கு விவசாயம்!!!



மன்னார் செல்லவும், முல்லைத்தீவு செல்லவும் ,முன்னர் இந்தஊர் ஊடாக பாதை இருந்தது .


அதை இராணுவ இருப்புக்கு என்று எல்லைப்பகுதி ஆக்கியதில் இனவாதம் இந்த ஊர் மைந்தர்களின் அடுத்த தலைமுறையை இராணுவத்தில் இணைத்தது வேலைகொடுக்கின்றோம் என்ற போர்வையில் .வெற்றுடல் ஆக்கி வந்த சிங்களவர்கள் கதை எல்லாம் இன்னும் இலக்கியமும் , இனவாத சிங்கள் ஊடகமும் வரலாறாக பதிவு செய்யவில்லை என்பது இருமொழி வாசகனாக இருந்த போது  முன்னர் நான் அறிந்தது !!


பின் அந்த இலக்கிய ஆசையும் ஊடக ஆசையும் அறவே வேண்டாம் ! என் விற்பனைத்தொழிலில்சாமானியனாக முன்னேற முடியும் என்பதையும் அனுபவமாக கற்றவன்:))))


என்றாலும் இந்த மதவாச்சி மண் மீது எனக்கும் இன்னும் உருகும் நேசம் உண்டு:)))

இங்கு தான் நான் பல சகோதரமொழி நங்கைகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த விடயங்களை தனிமரதில் இரு தொடரிலும் பதிவு செய்து இருக்கின்றேன் .

காரணம் ஒரு சிலர் சரி!இயற்கையான எழில்கொஞ்சும் ஊர்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஏற்ற ஊர் எது என்று பார்த்தவர்கள் சொன்னால் தானே மற்றவர்கள் போகமுடியும் .

இதைச் சிலர் பவுசுகாட்டுகின்றான் என்று மனதில் குமுறினால் போகின்றது திரட்டியில் குத்தும் ஓட்டுத்தான்:))

இந்தஊரில் வார இறுதியில் என் நட்புக்களுடன் சேர்ந்திருந்த காலம் என் தொழிலில் பொற்காலம்.என்றாலும் !!!இனவாதம் என்னையும் ஓடவிட்டது புலம் பெயர் என்று எனினும் என் உயிர் முக்கியம் !!


 இந்தப்படம் போல அந்த நாயகி போல என் நண்பி அழுத கண்ணீர் இன்னும் பேச வைக்கும் என்றாவது ஒரு நாள் நடுநிலையில் இனவாதம் ,மதவாதம்,மொழி வாதம் ,யுத்தம் கடந்து !!


நீ ஒரு எழுத்தாளன் என்றாள் உண்மை பேசி இந்த ஊர் இயல்பு பற்றி !!அப்போது தனிமரம் என்று சொல்லாதே நான் இருபேன் உன் இன்னொரு நிஜத்தில் என்றவள் ஞாப்கம் இன்னும் வாழ்கின்றது !!!


தனிமரம் சொல்வேன் நடுநிலையோடு என்றாவது ஒருநாள்!அந்த நங்கை ஆவி போனாலும் அவள் போட்ட கோலம் இந்தப்பாடல் மூலம் சகோதர வானொலி சிரசவில் என் முதல் கவிதை மகுடம் சூட்டி டொப்-10 பாடல் தெரிவில் முதலில் வந்ததும் அந்தப்பாடல் தந்த அறிவிப்பாளர் ஆசானுக்கும் பதிவு எழுத்திய ஈழத்து நேயர் தனிமரம் என்பதும் என் சாதனை தான்!http://www.thanimaram.org/2012/07/blog-post_27.html


ம்ம் படிக்காதவன் கூட பண்பு தெரிந்தவன்! எழுதுவது மூலம் என் வீடு நிறைய வில்லை திரட்டியிலும் தான் )))))))))))))))))))))))))))நேரம் இல்லை எழுத்துப்பிழை திருத்த இனவாத ஆட்சி போல நான் ஒன்றும் பண்டிதர் அல்ல!ம்ம் சாமானிய வழிப்போக்கன்!ம்ம் இந்த ஊரும் கடந்து வந்தவன் குழுமம் எனக்கு ஒரு பொருட்டு இல்லை உள்குத்து போட்டாள்)))))))))))))))))))))))))))))))))!பாட்டை ரசியுங்கள்

இந்தப்படம் பார்த்த உறவுகள் இன்று இந்தப்பூமியில் இல்லைஉயிரோடு  தனிமரம் வாழ்கின்றேன் காற்றில் உன் குரல் வானொலியில் வரும் அது கேட்பேன் எங்கோ நான் இருந்து அந்த கவிதை வரி ஞாபகம் இடையில் சிலதை மறந்து விட்டேன் இனவாத இம்சையில் இசை மறந்து!ம்ம்

22 March 2013

விழியில் வலி தந்தவனே -14




நாரணன் நம்பி வருவானா? நான் அவனுக்கு மாலை சூட்டுவேனா ?நான் வணங்கும் கடவுள்போல என் 
நாயகன் அவன் முகம் மீண்டும்  ஒரு முறை பார்க்கமாட்டேனா ,என்று சுகி ஏங்கிக்கொண்டு இருந்தால். விதியின் கட்டளையில் பயணிக்கும் சாமனிய மனிதர்களால் விதியினை மீறமுடியுமா?தலைவிதியை மாற்றமுடியுமா ??இந்திரலோகத்தில் அழகப்பன் போல நம் தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் .என்று விதியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு காத்திருந்தாள் சிறைச்சாலை படத்தில் தபூ போல!


காதல் என்ற சொல்லின் அர்த்தம் 
என்ன என்று அறிய வைத்தவன் நீ
என் நுரையீரல்களில் சுவாசமானவனே
இதய நாளங்களின் நாட்டியமாடியவன்

உயிர்த்துளி உன்னை சேர துடிக்கும் போது
ஒரு துளிஅன்பை கூட தர மறுப்பது நியாயமா?இலங்கை  சட்டமூலம் 13 வது சரத்துப்போல!
நாணம் விட்டு சொல்கின்றேன் அன்பே
என் பெண்மனம் உன்னை தினம் சமாதானத்தை யாசிக்கும் தமிழச்சிபோல அழைக்கின்றது.
உன் அன்பில் அது ஆயுள் கைதிபோல அனுபவித்து சாக துடிக்கின்றது.

என் கண்கள் சிந்தும் கண்ணீரில் கூட
உன் மேலான நேசம் தான் இருக்கின்றது!
புரிந்துகொள்ளடா என் யாசிப்பை 
ஒர் நாள் ஏனும் உன்னோடு வாழபிரியாத
வரம் கொடு தென்னவனே!

இப்பிறப்பில் என் இதயம் நுழைந்தவன் நீதான்
இங்குமட்டும் இல்லை !
இந்த பூமியில் எங்கும் சொல்வேன் நீ என்னுடன் இருந்தால். 
இணையத்திலும் 
இந்தக்காதல் இசைமீட்ட
 இதயராகம் காற்றில் வருவது போல விரைந்து வா. !


 சுகியின் சுவாசத்தை சுவாசி .
என் உயிர் நீதானே என்பாயா?
 என் இதய ஏட்டில் 
உருகிப்போகின்றேன் .
ஒவ்வொரு வீரச்சாவிலும் உன் பெயரைப்போல
 இன்னொரு உருவம் ஈழத்தில் வித்தாகிப் போவதில் .
நானும் வீழ்ந்தேனே !
வீரம் விளைந்த மண்ணில் 
விவசாயிமகன் வீழியில்
விதியது போர் என்றது 
விடியலை நோக்கி நீ
நானும் !
வீதியில் நிற்கின்றேன்

.ஒரு விடியல் வருமா?
 மஞ்சல் கயிறு நீ கட்ட 
விடியும் ஒரு பொற்காலம் வீட்டில் மட்டுமா?

வீதியில் ,ஊரில், நாளு பேர் ,நம் உறவை
விளம்பரத்துடன் வீதிகடந்து .
நாயாறு கடந்து
நல்ல சந்தோஸம் காண்போமா ?
சர்வதேசம் என்று ஊர் சுற்றி!
நாம் மட்டும்
விதியின் கையில் நாதியற்ற  தமிழர் ஆவோமா நல்ல தீர்வு கிட்டவில்லை .
நாம் பார்த்த ச்ர்வ்தேச் அனுசரனையில் ஆலவட்ட சமாதான
நாடகத்தில் என்று நம்மை நாமே நொந்து கொள்வோமா ???
நாட்டுக்காக போராடாப்போனவனே !நல்லவனே !!
நமக்கு மட்டும் இந்த
 நாட்டில் விடியல் எப்போது என்று
நானும்சுயநலத்தில் சுருண்டு போகின்றேன் !

.உன்னோடு வாழும் ஆசையில் ஆமி சுட்டாலும் 
உன் முன்னால் வீழ்ந்து போகணும் பாடையில் ,போகாமல் ,புதைக்கவும் முடியாமல்,எரிக்கவும் முடியாமல் ,இனவாத போர் பார்த்துப் புலம்புவாயா ??
எங்காவது புலம் தாண்டி வாழ்வாயோ ?
என்று நான் எல்லாம்  சிந்திக்க வைத்தவனே!



 மீண்டும் சந்திப்போனே??????
உன்னை நிந்திப்பேனா நினைவில் என்றும் நீயடா
நெருப்பில் என் நினைவுகள் சுடுகின்றது.
நாட்குறிப்பில் சிந்தும் விழிநீரும்
விடைகிடைக்குமா என்றல்லவா 
விளித்து நிக்கின்றது!

  ( சுகியின் நாட்குறிப்பில் இருந்து)



21 March 2013

விழியில் வலி தந்தவனே-13


மண் மீது கொண்டகாதல் ஒருபுறம் தமிழன் என்ற இனத்தையே அழிக்கத் துடிக்கும் இனவாத ஆட்சியின் போர் முற்றுகை ஒரு புறம் என வன்னி மண் வாட்டம் கண்ட நிலையில் !


விடுதலையின் பாதையில் சேர்ந்து ரகுவும்  இப்போது ஒரு போராளி.இந்த வாழ்கை அம்பானியின் வாரிசுபோலவோ அரசியல் வாதியின் வாரிசு போலவோ  அவ்வளவு எளிதானது இல்லை. மரணபயம் என்பது அவனுக்கு துளியும் இல்லை. காரணம் மூன்று தலைமுறை கடந்து தொடர்கின்றது .தமிழர்மீது  யுத்தம் ஆனாலும் தலைக்கு மேல் நாகபாசுரம் போல மரணம் இப்போது இருக்கின்றது.இன்று மரணமோ இல்லை அடுத்த நொடி மரணமோ என்று தெரியாத நிச்சயம் அற்ற வாழ்க்கை.

பிரெஞ்சு நோர்மண்டி தரை இறக்கம் போலவும், ஸ்டாலின் கிராட்டு சமர் போலவும் கண் எதிரே வீரச்சாவினைத் தழுவும் போராளிகள் ,அவயங்கள் இழக்கும் வீரவேங்கைகள் . காலையில் காண்பவரை மாலையில் காணக்கிடைக்காது,

மண்ணுக்காக தம் உயிரை தாரை வார்த்து வித்தாகிப் போவார்கள் வீரத்துடன் இது பழகிபோன விடயமாக நாளாந்தம் நடக்கும் விடயமாக மாறிவிட்டது எல்லாப்போராளிகள் போலவே ரகுவின் வாழ்க்கையிலும்.

சிலவேளை நாம் வெல்வோம் என்ற கோஷத்துடன் கொலவெறித்தாண்டவம் ஆடிவரும் இனவாத இராணுவத்துடன்  காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து சண்டை நடக்கும் .இரண்டும் மூன்று நாட்கள் கூட தொடர்ந்து சண்டை நடக்கும்,!


இனவாத ஊடகம் தனிக்கை என்று உள்நாட்டில் கவசம்போட்டாலும் கசிந்துவிடும் கடல்கடந்து  வெளிநாட்டு சுதந்திர ஊடகத்திற்கு .ஏன் நம்மவர் அறியக்கூடாதா என்று விடைதேடினால் வீட்டிற்கு வரும் வெடிகுண்டு .கேட்டுப்பாருங்கள் ஆய்வுக்களம் எழுதும் இக்பால் அத்தாஸ் வாழும் சாட்சி இனவாத நாட்டில் .!


அதுமட்டுமா??போர்களத்தில் உணவு ,தண்ணீர் இருக்காது,சோற்றைக்காண்பது கடவுளை காண்பது போல இருக்கும்.நெல்விளைந்த எங்கள் நெஞ்சம் போன்ற தாய்பூமி எங்கும் கந்தக குண்டுமழை பொழிந்த இறையாண்மை ஆட்சியினர் மீது எந்த இணைத்தலைமை நாடும் நிறுத்துங்கள் என்று குரல் கொடுக்கவில்லை .தமிழர் குரலை மட்டும் அடக்கி வாசியுங்கள் என்று அதிகாரப்பாட்டல்லவா பாடினார்கள்!


காயம்  அடைகின்ற நண்பர்களை வாகனத்தில் ஏற்றிவிட்டு வரும் போது அங்கம் எல்லாம்இந்தமண்ணு எங்கள் சொந்த மண் என்ற தன்மானத்தில்  அந்தக் குருதி சிந்தியிருக்கும்.

அதை கழுவ முடியாது தண்ணீர் இருக்காது.எங்கும் நீர் இருந்த பூமியில் தடைகள் போட்டு அணைகள் எல்லாம் பெருக்கு எடுக்காமல் இருக்க போர் வெறியர்கள் வாய்க்கால்கள் மீது கொட்டிய சீமெந்து எந்த சுனாமி நிதியில் சுட்டதோ ?யார் அறிவார்கள் ??,ஆனாலும் தேசத்துக்காக ஒருவன் சிந்திய குருதி என்பதால் அதில் வீரமும் ,பற்றும் இருக்கும்.அதில் பிரதேசவாத வாடை வீசாது தாய்  மண்வாசமே வீசும்.

கோபாலபுரத்தில் குந்தியிருந்து ஈழம் காண்பேன் ஈழம் காண்பதே என் இலட்சியம் என்று அரசியல் நாடகம் போடும் ஈனப்பிறவிக்கு தெரியுமா? ஈழம் காண்பது ஒன்றும் திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதுவது போல இல்லை என்று.



பெற்றவர்கள் கூடவந்தவர்கள் நேசித்தவர்கள் எல்லாரையும் நெஞ்சில் இருந்து நீக்கி தூய மண் மீது நேசிப்பில் தாய்நாட்டிற்காக போராடும் உணர்வை கவிதையாகவோ ,கதையாகவோ வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.தேசத்திறாக போராடுகின்றோம் என்ற விடிவெள்ளி உணர்வைத்தவிர வேறு எதுவும் மனதில் இருக்காது.




போராட்டச் சூழலில் ரகு சுகியை முழுவதும் மறந்தே போய்விட்டான்.

சுகிக்கு ரகுவில் கடுமையான வஞ்சினம் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மண்நேசிப்பில் போராளியாக போய்விட்டானே !என்னை கடைசிவரை விரும்பவேயில்லை என்னைப்புரிந்துகொள்ளாத முரட்டுக்காளை போல படுபாவி என்னை தவிக்கவிட்டுவிட்டு இப்ப எங்க இருக்கின்றானோ ?எப்படி இருக்கின்றானோ ?அவன் உயிருக்கு போராட்டகளத்தில் எந்த பாதிப்பும் வரக்கூடாது. எங்க இருந்தாலும் அவன் பத்திரமாக இருக்கவேண்டும் என்று அவள் வேண்டிக்கொண்டாள்.

தனது பதினோராம் தர பரீட்சையில் பாஸ் ஆகிவிட்டால் சுகி அடுத்து உயர்தரத்தில் படிப்பதற்கு வேறு பாடசாலைக்கு சென்றுவிட்டாள்.
ரகுவை பற்றி அறிந்துகொள்ள அவள் பல முயற்சிகள் எடுத்தும் எந்த பயனும் இல்லை .


போராட்ட களத்தில் இருப்போரிடம் சுடச்சுட செய்தி சொல்லுமா ஊடகம் சினிமா ஒளியில் இருப்பவர்  மீது மட்டும் முன்னும் பின்னும் முகத்தை நீட்டும் துப்பாக்கி முணைபோல!அவன் பற்றிய எந்த தொடர்புகளும் இல்லை.அவனது நண்பர்களிடமும் போய் கேட்க முடியாது அவர்களும் போராட்டகளத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போய்விட்டார்கள்.

நாம் நேசிப்பவர்கள் நம்காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தாலே பாதி வலிகுறைந்துவிடும். ஆனால் அவர்கள் பிரிந்துவிடும் போது அதுவும் அவர்கள் பற்றிய எந்த தகவலும் தெரியாத போது அது கொடுமையிலும் கொடுமை.!

////
தொடரும் விரைந்து!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!