31 December 2011

மனம் கவர்ந்தவர்!

தமிழ் திரை உலகில் திரைப்படம் இயக்கும் இயக்குனர். என்ற ஒரு பதவி முள்கிரீடம் என்றால் மிகையாகாது.

 இது பலர் கோதாவில் குதித்தாலும் !வெற்றி பெறுவோர் என்றாள் மிகவும் விரல் விட்டு எண்ணி விடமுடியும்.

 ரசிகர்கள் மனநிலையை கணித்து படம் இயக்குவது .என்பது ஒரு திரைக்கலைதான்! அந்த வகையில் பலர் எனக்குப் பிடித்திருந்தாலும் .!

!குடும்பத்துடன் துணிந்து போகக்கூடிய ஒரு இயக்குனர் என்றால் ?

அது விக்ரமன் அவர்கள்தான் என்பது என் தெரிவு!

 நடிகையின் சதையை நம்பி ஓடும் குதிரை அல்ல அவர் பாதை .தன் கதை எப்படி ரசிக்கப்படுகின்றது என்பதை தீர ஜோசித்து இயக்கும் பொறுமையான நடைவண்டி இயக்குனர் தான்!

 என்பதை ஒரு பேட்டியில் கூறி இருந்தார். புதுவசந்தம்(1990)  என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனர் அடி எடுத்து வைத்தவர்.

 பல மேடு பள்ளம் கண்டு இன்றும் தமிழ் சினிமாவில் நின்று பிடிப்பவர்.

 இதுவரை 17  படங்கள் இயக்கிய அவர் அதிகம் நல்ல புகழில் இருந்த காலம் என்றாலும் !பின் தடக்கிவிழுந்த காலகட்டம்  என்றாலும்! புகழ் போதையில் நிலை தடுமாறாத ஒருவர் .

அதிகபடம் இயக்கும் சூழல் இருந்தும் அதை பயன்படுத்தாத இயக்குனர் எனலாம்!

பார்த்தீபனுடன் உதவி இயக்குனராக புதியபாதை படத்தில் இருந்தவர்.

 பின்தான் இயக்குனர் பதவியில் ஆசனம் அமைத்தார்.

 இவரிடம் இருந்து இன்று பலர் புதுமுக இயக்குனர் ஆகி தமிழில் வலம் வருகின்றார்கள்.

 ரமேஸ் கண்ணா(தொடரும்-அஜீத்) இவரின் சிஸ்யர் ,தேவயாணியின் கணவர் ராஜகுமாரன்,புன்னகைதேசம் ஷாஜகான்  ,வருசம் எல்லாம் வசந்தம் ரவிசங்கர் எனப்பலர் படங்களை இயக்கி அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்!

விக்ரமன் படங்கள் எப்போதும் அன்பும் ,காதலும் ,நட்பும் அடிநாதமாக பரவிக்கிடக்கும்!

 வில்லன் என்பது யாரும் இல்லை எனலாம் !அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து. பெண்களையும் தன்நம்பிக்கை உள்ளவர்களாக புரட்சி செய்வதில் இவர் என்றும் முக்கியமானவர் .

இவர் படநாயகிகள் என்றாள்! சித்தாரா(புதுவசந்தம்), மோகினி (நான் பேச நினைப்பது எல்லாம்) ,பானுப்பிரியா (கோகுலம்) , ரோஜா இவரை ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தவர் விக்ரமன் தான் !(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் )

என பலரையும் சொல்வது என்றால் பதிவு நீண்டுவிடும்!

விக்ரமன் படத்தில் பாடல்கள் மிகவும் பேசப்படும் .ராஜ்குமார்,சிற்பி இவருக்கு ஏற்ற கூட்டணி இசையமைப்பாளர்கள்.


சூப்பர் குட் செளத்திரியின் அறிமுகம் என்பதால் !
அவருக்குத் தான்  அதிகம் படம் இயக்கியிருக்கின்றார் .

அவை எல்லாம்
வெற்றிப்படங்கள். பெரும்புள்ளி படம் தான் இவர்கள் இணைவில் வந்து கரும்புள்ளியான  தோல்விப்படம் எனலாம் .

.இவர் இயக்கிய புதியமன்னர்கள் படம் தவிர மற்றப்படங்களைத் தவர விட்டது இல்லை .

அத்தனையும் முதல் நாள் பார்க்கும் ரசிகன் .அத்தனை தூரம் அவரின் இயக்கம் எனக்குப் பிடிக்கும்!.

 இடையிடையே இவர் தன் பாணியில்பிருந்து விலகும் போது அது ரசிகர்களால்   தோல்வி முத்திரை குத்தப்படுகின்றது .

எப்போதும் பெண்களுக்குப் பிடித்த இயக்குனர் இவர்.

இன்று விஜய் அவர்களிக்கு ஒரு மாற்றுமுகத்தைக் கொடுத்தது பூவே உனக்காக மூலம் விக்ரமன் தான்.

 அந்த நன்றிக்கடனுக்கு இந்த டாக்குத்தர் கொடுத்த விசுவாசம் உன்னை நினைத்து படத்தில் கொஞ்சக் காட்சிகள் நடித்துவிட்டு முரண்பட்டு படத்தினை இழுத்தடித்தது .

அதன் பின் சூர்யா அந்தப்படத்தில் நடித்தார் .என்பது சினிமா எக்பிரஸ் பதிவு செய்த ஒரு செய்தித் துளியாகும்!

முரளி  முதல்  பரத்  என்றாலும், சரத் முதல் விஜய்காந்த  என்றாலும் அவரின் ஹீரோவாகவே இருப்பார்கள்.

 .சூரியவம்சம் நடிகர் பட்டாளம் அதிகம் கொண்டது.

 2000 ஆண்டில் முதல் வந்த படமான வானத்தைப் போல படம் விஜய்காந்திற்கு ஒரு திருப்புமுனை.

 அதன் பின்பு வந்த பிரியமான தோழி, சென்னைக்காதல் படங்கள் தோல்வியைத் தழுவியது என்றாலும் பாடல்கள் ஹிட்ஸ்.

 .வானத்தைப்போல படம் தேசியவிருது பெற்றது!
 இத்தனை ஆண்டுகளில் இவர் மெதுவாகவும், குறைந்தளவு படங்களும் இயக்கியது இவருக்கு ஒரு பின்னடைவு எனலாம் .

ஒரே குடும்ப அம்சம் என்பதால் தற்போதைய சின்னத்திரை ஆதிக்கம் இவரின் ரசிகர் வட்டத்தை மாற்றிவிட்டது எனலாம் .

கூட்டுக்குடும்பம் போய் தனிக்குடித்தனமே கோட் வாசலில் அல்லல்படும் போது .


இவர் படங்களில் வரும் விட்டுக் கொடுத்தல் வாழ்வு முறை நடைமுறையில் சாத்தியம் இல்லை.
 தற்போதைய நிலையில்.!


 என்றாலும் திரைப்படத்துறையில் சமுகக்கட்டுப்பாட்டுப் பொறுப்பை மீறாத இயக்குனர் என்றாள் அது விக்ரமன் மட்டுமே !

 இவர் பல புதிய பாடல் ஆசிரியர்களை தந்தவர்  தபுசங்கர் ,ரவிசங்கர்,கலைக்குமார் என நீளும் அவர்களில் பழனிபாரதி (பெரும்புள்ளிபடம்) பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டவர்.

ரவிசங்கர்,கலைக்குமார்,  எனப்பலர் இவரின் உதவியாளராக இருந்து பின் திரைப்பட பாடல் ஆசிரியராக வலம் வருப்பவர்கள்.

 கலைக்குமார் உதவி இயக்குனர் என்பதை த் தாண்டி நல்ல தோழன்  ,விமர்சகன் தனக்கு என
அண்மையில் ஒரு பத்திரிக்கையின் தொடரில் படித்த ஞாபகம் .

.ரமேஸ்கண்ணா இன்று பலபடத்தில் அவருடன் இணைஇயக்குனராகவும், பின் நகைக்சுவை நடிகராகவும் ,இயக்குனராகவும் பட்டைகிளப்புகின்றார் .

.இவர் படங்களில் எப்போதும் ஒரு சுயதொழில் முன்னேற்றம் பற்றி நம்பிக்கையூட்டும் வழியினைக் காட்டுவார்.

புதுவசந்தம் தெருப்பாடகன் முன்னேற்றம்,சூரியவம்சம் வாகன தொழில் சிறப்பு ,வானத்தைப்போல ஊறுகாய்த் தொழில்,கோகுலம் அப்பளம் தயாரிப்பு உ.எ.கொ பேப்பர் போடும் தொழில் என பல
முன்னூதாரணங்களை பதிவு செய்வதில்  விக்ரமன் ஒரு ஆலோசகர் எனலாம்!

இவர் படத்தில் பாடல்கள் எப்போதும் சொற்சுவை இசைக்கலவை சேர்ந்த பஞ்சாமிர்தம்.

 .தன் கதையின் கருவை கவிஞர்களிடம் கலந்து போயி கவிவடிக்க இசைவாக தன் உதவி இயக்குனர்களை கவிஞர்களாக்கி அவர்களையும் வளர்த்துவிட்டவர்.

 .வைரமுத்துவை நாடாத ஒரு இயக்குனர். தன் கருத்தை ஊதாசினம் செய்தார் என்பதால் சேர்ந்து இயங்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியதாக ஞாபகம் .
விக்ரமன் படத்தில் எல்லாப்பாடலும் கதையுடன் ஒன்றிப்போய் வருவது அவர் சிறப்பு.

பாடல்கள்  எப்போதும் அமைதியாக ரசிக்கலாம் ஆபாசமும் கலக்கமாட்டார்! இவர் படப்பாடல்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நினைவுகளைச் சுமந்து வந்து கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஊர்களில் பார்த்து ரசித்தவன். அந்த காலகட்டங்கள் மகிழ்ச்சியும் ,வருத்தங்களும் கலந்த நினைவுச் சின்னங்கள்.

 இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும் !. பழனிபாரதியின் கவிதை நயத்தை ரசிக்க வெளிக்கிட்ட காலகட்டத்தில் !

இதில் வரும் அணி சிறப்பு  தாளம் தந்தது தென்றல் அதை கேட்டு வாங்கும் மூங்கில் புல்லாங்குழல் வீசும் காற்று அருமையான நினைவுகள் .மனம் போகுதே நதி மாதிரி!
மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்!
சரணாலயம் ! பிருந்தாவனம் என பழனியின் அழகு தமிழ் கீதை போல் வாழுமே !

இன்றும் வாழ்கின்றது.  மனதை நெகிழ வைக்கின்றது.

சிற்பி இசை.இசைஞானிக்குப் பிறகு இந்தப்பாடலில் அதிகம் புல்லாங்குழல் சுருதி சேர்ப்பது சிற்பியின் சிறப்பு.

  இந்தப்படம் வெளியாகும் தருனம் வரை சிற்பியின் இசை ஆர்வம் முத்துக்குள் இருந்தது.

அதன் பின்புதான் அதிகம் தமிழ்சினிமாவில் பிரபல்யம் ஆகினார்.

 சிற்பியின் வரவால் அதிகம்  ஆரேபிய இசை தமிழ்சினிமாவில் புகுத்தப்பட்டது என்றாள் மிகையாகது!

  சித்திராவின் குரல் ,பானுப்பிரியாவின் நடிப்பு என இந்தப்பாடல் அதிகம் கவரும்.

இந்தக்காட்சியில் தோன்றும் கோயில் பிரகாரம் உண்மையான சிரிரங்கம் என்று என்னியது ஒரு காலம் !

அது ஒரு செயற்கை(செட்)என்று பின்நாளில் விக்ரமனின் தொடரில் படித்த ஞாபகம்.

என்றாலும் சிரிரங்கத்தில் இப்படியான பின் இரவுப் பொழுதில்  தர்சனம் செய்வதும் ஒரு புண்ணியமே!

 அதையும் தாண்டி என்னுடன் பழகிய ஒரு சிலரின் வாழ்வில் இந்தப்பாடல் எந்தளவு தாக்கம் செலுத்தியது !

என்பதை விரைவில் வரும் தொடர் அலசிச் செல்லும்!

  தொடர்ந்தும் விக்ரமன் நல்ல படங்களைத் தரவேண்டும் என்பதே என் ஆவல்!

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் .பிறக்கும் 2012 எல்லோருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்!

24 December 2011

நண்பனும்  நினைவுகளும்!

இசையின் ஓசையில் காதல் கதவு திறக்கும் இதயங்களை. என்பதை!  என் நண்பன் மூலம் கண்டு கொண்டேன்.

 நானும் தொழில் நிமித்தம் பலருடன் பழகியிருக்கின்றேன். என் விற்பனைத் துறையில் கைகோர்த்தவன் ஜேம்ஸ் .

இருவரும் கொழும்பில் வெவ்வேறு நிறுவனத்திற்கு கடமையாற்றினாலும், ஒரே வாடகை அறையில் தங்கும் நிலையைத் தந்தது பொருளாதார துண்டுவிழும் தொகை.

 அந்தப்பகுதியில் வேலை செய்யும் விற்பனைப்பிரதி நிதிகளில்  நானும், ஜேம்ஸ்சும், ஒரே வடபகுதி என்பதால் இயல்பாகவே பாதுகாப்புக் காரணங்களால் கொஞ்சம் அதிகம் கவனத்துடன் இருந்தோம்!.

 பொலிஸ் பதிவு மற்றுமொரு உடல் உறுப்பு ஆனபடியால்.

 .எங்கள் வேலையில் கொழும்பு கொட்டாஞ்சேனைப்  பகுதி முக்கிய இடம் வகித்தது .

ஜம்பட்டா வீதி ஒரு சுகமான சுமையான நினைவுகளைத் தந்து செல்லும் என நானும். வேலைக்குச் சென்ற காலத்தில் எண்ணியதில்லை!

பலசரக்குக் கடைகளும், பாமஸிகளும் நிறைந்த அந்த வீதியில் .

ஒரு கடையை நாம் இருவரும் அதிகம் திடீர் திடீர் என்று சுற்றி வருவோம்.

 காரணம் ஜேம்ஸ் மனதில் மையல் கொண்ட நங்கைக்காக!

 அவள் பார்வையில் பல நூல்கள் படித்தான் ஜேம்ஸ். சித்திரம் தீட்டும் சிங்காரச் செவ்விழல் மேரி லூக்கஸ் அவள் நாமம்.

 .நங்கை இருக்கும் கடை  ஒரு பலசரக்கு வியாபார நிலையம்.

 தந்தையின் வியாபார நடவடிக்கைக்கு உதவியாக கணக்குப் போடுவதும், காசு வாங்கி லாட்சியில்(கல்லாப்பெட்டி) போடுவதும். அவளின் பணியாக இருந்தது.

 அவளின் தம்பி அருகில் இருந்த பாடசாலையில் படித்து வந்தான். அவனைக் கண்டால் ஜேம்ஸ் மிகவும் அக்கரையுடன் தன் வாகனத்தில் இருக்கும் காசளரைக் கூட பின்பக்கம் ஏறும்படி கூறிவிட்டு !

அவனை முன் ஆசனத்தில் அமர்த்தி அழைத்து வருவான் .

எங்கள் அறைக்கு வந்தாள் மேரியின் பாமாலைதான் அதிகம் பாடும் இதய ராகம் ஆனது.

 எப்படியும் தன் காதலைச் சொல்லி விடனும் என்ற ஆவலில் என்னையும் இம்சை செய்யும் அளவுக்கு நண்பன் அவன்.

 .மேரி ஞாயிறுப் பொழுதுகளில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தேவகீதம் இசைக்கும் குழுவில் இருப்பவள்.

 அதனால் பல ஞாயிறுப் பொழுதுகள் அங்கே தவம் இருந்தோம்.

 அருகில் இருக்கும் பொண்ணம்பல வானேஸ்வரர் ஆலயத்தைக் கூட  பார்க்கவிடாமல் .

தனக்கு காவலுக்காக என்னையும் நந்தியாக்கி  விட்டு ஒரு தலையாய் காதலித்தவன் மேரியை.

  2000 ஆண்டு நத்தார் பண்டிகை மறக்க முடியாது நம் நட்புக்கு!

 ஆலய பூசையில் கலந்து விட்டு வந்தவளிடம் தன் காதலைச் சொன்னான் ஜேம்ஸ்!

 அவளிக்கும் இவன் ஒரு அப்பாஸ் என்ற அடிமனத்து எண்ணத்தின் வண்ணத்தில் காதல்ப் பூக்கள்  தொலைபேசிக் குறுஞ்செய்தியாக வலம் வந்தது.

 பின் சில பொழுதுகளில் செல்வமஹால் திரையரங்கும் சில்மிஸம் செய்யும் சோதனைக் கூடம் ஆனது.

  அவர்களுக்கு உதவியாக எட்டி இருக்கும் என்னையும் செல்வமஹால் திரையரங்கு மூட்டைப் பூச்சுகளும் முத்தமிட்டது முதுகில்.

 அவன் தம்பிக்கு எல்லாம் இது தெரியும் !என்னுடன் இருந்து  ஐஸ் சொக்கும், சிப்ஸும் தெவிட்டாமல் திண்பதில் அவனும் ஒரு வெண்ணை திண்ட கண்ணன் என என்னவைப்பான்.

 ஆனாலும்! அவனையும் விதிவிடவில்லை. பதுகாப்புக்கண்களுக்கு சந்தேகம் வந்ததில்.

 அவன் கைபேசியில் யாரோ செய்த செயலில்  புலனாய்வுப் பொலிஸ் ஜம்பட்டா பொலிஸ் நிலையம் கொண்டு போனார்கள்.

 அதன் பின் மேரியின் தந்தை லூக்கஸ் எம்புட்டுப் பாடு பட்டும் .இன்றுவரை தகவல் இல்லை. வியாபாரத்தின் வீழ்ச்சி சூறாவளியாகியது!

 சில நாட்களில் பலகாசோலைக்கள் திரும்பி வந்தது காசு இல்லாமல்.

 எத்தனை நாள் கடன் சொல்வது என்று தெரியாமல் இருந்த தந்தை. கடையை மூடிவிட்டு குடும்பத்துடன்  ஒர் இரவில் இருந்தசுவடு தெரியாமல் நாடு விட்டு ஓடிவிட்டார் இந்தியாவிற்கு!

 இனி என்னை மறந்திடுங்கள் என்று அவள் சொன்ன அழைப்புத் தான் மேரி எடுத்த இறுதி அழைப்பு.!

 இதயத்தில் ஈட்டி தாக்க நிலைகுழைந்தான் ஜேம்ஸ்.

  ஸ்டவுட்டும், மெண்டிஸ்சும் பாம்பராக்கும் ,பத்தவில்லை. வேதனைக்கு மருந்தாக !

வேலையில் ஒழுங்கில்லை தூக்கிவிட்டது நிர்வாகம் .

.இத்தனையும் தெரிந்தும் என்ன செய்ய
முடியும் என்னால் .

தந்தைக்கு  தொலைபேசியில்





தூண்டிவிட்டேன்!

  .போதையில் துவலும் இவன் திருந்த ஒரேவழி !போய் வா புலம் பெயர் தேசம் என்று தமக்கையிடம்  அனுப்பி விடுவோம் . .தந்தையும்  சம்மதிக்க
நடைபிணம் போல் நாடுவிட்டுப் போனான் ஜேம்ஸ்


   கனடாவிற்கு.!

காலநிலை மாற்றம் போல்  அவனும் மறந்து போனான் நம் நட்பை.

 அவனோடு சுற்றித்திரிந்த அந்தோனியார்,கொட்டஞ்சேனை சாந்தோம் மாதா தேவாலயங்கள் ஞாபகங்கள் இன்றும் என் விழிகளில்!

 காலம் பல நண்பர்களை நல்ல நூல் வடிவங்கள் ஆக்கின்றது! அதே வேகத்தில் யாழ் நூலகம் போல் எரித்துவிட்டும் செல்கின்றது இன்னும்
தொடர்கின்றது என்பதும் ஒரு சோகம் தான்.!


அவனுக்கு விருப்பம் இந்தப்பாடல்!
.பைபிள் வாசகங்களைத் தாங்கி வைரமுத்துத் தீட்டிய வர்ணக்கோவை. அனுராதா சிரிராம் இப்படியும் பாடுவார் என்பதையும் . கோலம்  இட்டது.

 ரகுமானின் மெல்லிசையில் வந்த இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம்! அந்த நண்பர் முகம்  நெஞ்சில்  நிழலாடுகின்றது! என்றாவது ஒரு புள்ளியில் சந்திக்கலாம் என்ற ஜீவனில்!

நண்பர்கள், வாசகர்கள் ,அனைவருக்கும் தனிமரத்தின் இன்பம் பொங்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!


 வலையுலகில் அருவாள் புகழ் அண்ணண் நாஞ்சில் மனோவிற்கும் அவர் குடும்ப உறவுகளுக்கும் தித்திக்கும் நத்தார் தின நல் வாழ்த்துக்களை விசேடமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.





      தகவல்-) தனிமரத்தின் சிந்தனையை செதுக்கிவரும் வலைப்பூவை தன் அழகிய தொழில் நுட்பத்தினால் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் ,இணையத்தின் உதவியுடன் அலங்காரம் செய்து தந்த நிகழ்வுகள் கந்தசாமிக்கு .

.என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 புதிய தொடருக்கு வெள்ளோட்டப் படமும் தந்து கைகொடுத்தவர் அவரே!

விரைவில் வரும் தொடர் உங்களை நாடி. அதுவரை தொடரும் தனிப்பட்ட தேடல்!

11 December 2011

ஒரு அறிமுகம். ஒரு கேள்வி??

என் இனிய வலையுலக உறவுகளே தனிப்பட்ட தேடலில்

தொடர்ந்து இணைந்து இருக்க முடியாத நிலையில் !மீண்டும் தனிமரம் ! அவசியமான, அவசரமான ஒரு நண்பனை ஊக்கிவிக்கும் ஒரு  பதிவுடன் உங்களை நாடி வருகின்றேன்!


ஈழத்துச் சினிமா என்ற ஒரு  வரலாறு தொலைக்கப்பட்டு.  இன்று நாம் கானலைத் தேடும் மான்களாக இருக்கும் துயரம் வேற எந்த தேசத்திற்கும் வராத ஒரு சாபம் .அப்படியும் சில விடிவெள்ளிகளாக பலர் இன்று நம் சினிமா மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என்ற ஆவலில் பலர் முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

 .ஈழத்துச் சினிமாவை விரும்பும் பலர் மீண்டும் சிரிமாவின் சுதேசியக் கொள்கைக்கமைய எம் தயாரிப்புக்களை மீளவும் தொடங்கமாட்டோமா? அன்னிய வரவினைக் கட்டுப்படுத்தி நம்மவர் திரைக் கலையை ஊக்கிவிக்கமாட்டார்களா? அதன் மூலம் மீண்டும் தரமான வாடகைக்காற்று, பொன்மணி,நாடு போற்ற வாழ்க, கோமாளிகள் வரிசையில் நம் படைப்பும் பெயர் சொல்லும் வண்ணம்.

 உறக்கத்தில் இருக்கும்   திரைப்படக் கூட்டுத்தாபனமும், அதன் துணை நிறுவனங்களும் ,கண்விழித்து சூரிய ஒளியினைப்பரப்பி நம் திரையுலக வாழ்வினை வெளிச்சம் போடாதா ?என ஏங்கும் பலர் வாழ்கின்ற நிலையில்.

 எங்களுக்கும் பூபாளம் இசைக்காதா? என  தேவதாசனின் மாநகரக் காதல்,அம்மா என
முழுநீளப் படங்கள்  இன்னும் முடிவுறாமல் பல ஆண்டுகள் பெட்டிக்குள் மூழ்கிப் போன
நிலையில்!

 அப்படத்துடன் இருந்தோர் சிலர் புலம் பெயர்ந்தும் விட்டார்கள் .என்பது வேதனையான விடயம். இப்படியான நிகழ்வுகளைத் தாண்டியும் இன்றும் பலர் தயாகத்தில் தம் கலைத்தாகத்திற்காக குறும்படங்களை இயக்கி வெளியீடு செய்கின்றார்கள்.

  அந்த வரிசையில் கடந்த மாதம் வெளியாகி இருக்கும் ஒரு குறும்படம் தான் தேஞ்ச செருப்பு.

அம்மா என் இல்லம் வருவாயே அலமேலும் மங்கா என் இல்லம் வருவாயே!
 என்றும் உன்னிடத்தில் சொல்லாமல் வேர் யார் இடத்தில் முறையிடுவேன் என் தாயே என்று!
 அம்மன் மீது பஜனையில் பாடும் சில பாடல் வரிகள்.


  தாய் என்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே! என்று இளையராஜா பாடல் புனைந்ததும் தாய் என்ற ஒர் தெய்வத்தின் புகழை இன்னும் மெருகூட்டவே!

 .இன்று சிலர் பொருளாதார தேடலில் தாயினைத் தாயகத்தில் தவிக்கவிடுவதும் .தாயுக்குத் தெரியாமல் இல்லறத்தில் இனைவதும் ,
போலியான மேல்தட்டு வர்க்கமாக தம்மைக் காட்டிக் கொள்ளுவதற்கும் சிலர் தாயின் அருமை, பெருமைகளைத்

தெரியாமல் எருமைபோல்! இருக்கும் நவயுக மாந்தர்களின் மனதையும். பாசத்தின் வேர்வை வீதியில் வேதனையில் வாடவிடும்  சமுக நிகழ்வைச் சாடி நிற்கும் இந்தக்குறும்படத்தை!

 நடராஜா மணிவண்ணன் எழுதி இயக்கி  இருக்கின்றார்.

 மில்ரோய் அவர்களின் ஒலி/ஒளி வண்ணத்தின் ஊடாக  நம் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கின்றார்.

 .செவிக்கு இதமாக பின்னனி இசையை தந்து கதையின் மையத்தை சிதைக்காமல் ஜீவனுடன் கலந்து போகின்ற இசைக்கோலம்.

இயல்பான நடிப்பு  தந்திருப்போர்
வீராம்மா மற்றும் ஜனா,விசு ஆகியோர்.

  தாயின் உணர்வலைகளையும் ,மகனின் இயல்பையும் தாங்கி வந்து நம் சமுகத்தின் அவலத்தினைச் சொல்லிச் செல்லும் குறும்படத்தினை. மிகவும் தன் பொருளாதாரச் சுமைகளுக்கிடையிலும் நம் விழிகளுக்கு விருந்தாக்கி சமூகத்தில் இன்று ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றத்தின்  நவீன இளைஞர்களுகளின் கருங்காலி முகத்திரை கிழியும் வண்ணம் சிறுதுளி நேரத்தில் சொல்ல வேண்டிய விடயத்தை கச்சிதமாக  சொல்லியிருக்கும் திறமையை  நிச்சயம் பாராட்ட வேண்டும்.


  பொருத்தமான கலைஞர்களின் தேர்வில் மிகவும் குறுகிய இடப்பரப்பினை பின்புலமாக கொண்டு. சாதாரண மக்களின் உள்ளக்குமுறலைப் பிரதி பலிக்கும் தேஞ்ச செருப்பு ஈழத்து குறும்படத்தில் ஒரு முத்திரை பதிக்கும் காவியம்

.அதிகமாக நிழலில் இயக்கியிருக்கும் காட்சியினை கொஞ்சம் ஒளி அதிகம் படரும் வண்ணம் காட்சிப் படுத்தினால் இன்னும் தெளிவான ரசிக்க முடியும்.

 என்றாலும் கதையின் தன்மை நிழலில் இருப்பதால் அதை தாங்கிக் கொண்டு ரசிக்கலாம் .இப்படத்தினைக் கண்டு களிக்க இங்கே -tsnஉள்நுழையுங்கள் உறவுகளே!

மனம் கொதிக்கின்றது மலைவாசா!
மாலைபோட்டால் மனிதவடிவில் மணிகண்டன் வருவான்!
மகிழ்ச்சியை தருவான் எண்ணம் போய்!
மாலை போட்ட சாமிமார்கள் மீது மகிரிசியை மர்த்தனம் புரிந்தது போல்!மலையாளிகள் இன்று தமிழர் மீது
ஆடும் நர்த்தனம் கண்டு !


குருவாயூரப்பன் நாமம் சொல்லும
நாவில் இருந்து!
குருவாயூரப்பன் மைந்தன் மாலைதாங்கிய பக்தர்கள் மீதிலும் இரக்கம் இல்லாது! காடைத்தனம் புரியும் கயவர்கள் மீது கதகளி ஆடிடத் தோன்றுது ஐயனே!

ஆண்டுக் கொருதரம் ஆனந்தமாய் அணிதிரளும் குமிழி வழி தேனி ஓரம் எல்லைதாண்டி  பவனி போகும் சபரிமலை யாத்திரைக்க
முல்லைப்பெரியாறு வடிவில்  கடை உடைப்பு காடைத்தனம்! கல் வீச்சு ! இந்தவருடம்!
சாமிமார்களையும், சன்னியசிகளையும் சண்டைக் இழுப்பதில் என்ன சந்தோஸம் இந்தச் சதிகாரர்களுக்கு!
முள்ளிவாய்க்காலில் நரபலி குடித்தவர்களுக்கு இன்னும் தீரவில்லை தமிழரின் இரத்த வெறி  வாடை
இதுதான் கலியுகமோ????
கலியுகவரதனே!

இந்தவாரம்-:  சபரிமலைக்குப் போன ஐயப்ப அடியார்கள் மீது புனித மாலையை அறுத்துத் தாக்கினார்கள் என்றதை கேள்விப்பட்டதன் தாக்கம் இந்த உரைநடை!

அதிகமான சாமிமார்கள் திருச்சியிலும் பழனிமலையிலும் தம் மண்டல விரதத்தை முடிக்கின்றார்கள். என்ற செய்தி வரும் நிலையில் தமிழக அறநிலைத்துறை வாரியம் என்ன செய்கின்றது?  ??





பிள்ளையார் பெருங்கதை இன்று தொடங்கிவிட்டது. மோதகப்பிரியனுக்கு இனி தொடர்ந்து அவளும் மோதகமும் படையல்தான்!

ஆன்மீகப் பிரியர்களுக்காக ஒரு பாடல் இதோ:-

மீண்டும் சில வாரத்தின் பின் தனிமரம் வலையில் காற்று வீசும்.

16 November 2011

இதயத்தில் இருந்து உறவுகளுக்கு ஒருவரி.

இன்று பிறக்கும் கார்த்திகை( 17/11/2011தமிழக்கு)மாதம்.

 ஈழத்தமிழர் வாழ்வில் பல மறக்க முடியாத நிகழ்வுகளையும் இன்னுயிர் நீத்த மாவீரர் பரணி பாடும் இந்த  நாட்களில் சில கவிதைகளை சூடவும்.


 உலகநாடுகளிடம் விலைபோகாத தமிழ் இனத்தலைவர் அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் இன்னும் சில பதிவுகள் போட இருந்தேன். ஆனாலும்!

இந்துக்களில் இந்த மாதம் சிறப்பான இன்னொரு மாதம்.

  வீடுகளில் தீபம் ஏற்றும் கார்த்திகைத் தீபத்திருநாள்(விளக்கீடு) வரும் அடுத்த நாள் வரும் சார்வாலய(சொக்கப்பானை) தீபத்திருநாள்.

 வீட்டில் தீபம் ஏற்ற குமிழந்தடி தேடி பந்தம் சுற்றி அழகிய நாட்சாரம் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் தீபம் ஏற்றியதும்.

 கிணற்றடியில் விளக்கு எரிந்து கொண்டிருக்காமல் விரைவில் அணைந்து விடும். என்பதற்காக! தகரவாளியைக் கவுட்ட குறும்பான பாழ்யகாலம் .

அப்போது பார்த்த நேவிக்காரன் விட்ட வெளிச்ச லைட் பற்றிய உணர்வுகள்!

 .மறுநாள் மாலையில் நிலவு வரும் நேரத்தில் கோயில் பிரகாரத்தில் சர்வாலய தீபமாக பட்டபனை மரம் 1/2 வாசியில் சோலைக்காட்டுப் பொம்மைபோல் காவோலை, தென்னோலை சுற்றி அதில் கற்பூரம் ஏற்றிய சொக்கப்பானை பற்றிய நீங்க நினைவுகள்.!

 பிள்ளையார் கதையில் கோயிலில் வடைக்கும் ,அவளுக்கும்,மோதகத்துக்கும் அடிபட்ட சிறுவயதுக் குறும்புகள்.

திருவெம்பாவையில் நண்பர்கள் குழுவாக இல்லாத வீட்டுக் வாசல் படலையில் எல்லாம் நித்திரையில் இருக்கு இளவரசிகளையும், மச்சாள் மார்களையும், துயில் எழுப்ப சங்கூதிய திருவெண்பா கால சுகமான சுமைகள்!

 நண்பர்களுடன் இடம்பெயர்ந்து கொண்டாடிய கிருஸ்மஸ் பண்டிகைகள்.

 நண்பனின் காதலைத் தூக்கியெறிந்து கன்னியாஸ்த்திரியாக போக நினைத்தவள் நாட்டுக்காக்கப் போய் பெட்டியில் வந்தபோது!
 கலங்கிய நினைவுத்தோழிக்குப் பிடித்த பாடல் பகிர்வு .

என சிலதை சொல்ல இருந்தேன்!

 ஆயினும் ஐரோப்பிய கொண்டாட்டங்களுக்கான முன் ஆயத்தப்பணிகளும். ஓடிஓடி ஊழைக்கனும் என்ற கவியரசர் அவர்களின் காத்திரமான கவிதையைப்போல!

 தனிப்பட்ட தேடல் நிமித்தம் இந்தப்பதிவுடன் தனிமரத்தின் சகல செயல்பாடுகளையும் இனிவரும் இரண்டு மாதம் தற்காலிகமாக வலைப்பதிவை இடை நிறுத்துகின்றேன்.!

நேரம் கிடைக்கும் சிறுதுளியிலும் நண்பர்கள் தளத்திற்கு காத்திரமான விடயங்களுக்கு.
 முன்னுரிமை அடிப்படையில்    என் தார்மீக பின்னூட்டத்தையும், வாக்கினையும் அளிக்க முயல்கின்றேன்.

நேசன்-கலைசிவா வலைப்பதிவை. தனிமரம் என்று வலையுலகப் பிரவேசத்திற்கு பின்னனியில் இருந்த இயக்குனர்களில் என் குடும்பத்தின் மூத்த மருமகன், மூத்த சகோதரியும் தந்த ஊக்கிவிப்புத்தான் நான் பதிவு எழுத காரணம்.

 அவர்களின் ஒத்துழைப்புக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் முதலில்.

 என் வலையை தன் தொழில்நுட்பத்திறமையை மற்றவர்களுடன் பொறாமையில்லாமல் பகிர்ந்து. மற்றவர்களையும் காத்திரமான பதிவுகள் தர வேண்டும் என்று பின்னனியில் நின்று ஊக்கிவிக்கும் என் பதிவுலக வழிகாட்டியும், தன் தளத்தில் தனிமரத்தை அறிமுகம் செய்தும்!

 பலவிவாதங்களில் வார்த்தைஜாலம் காட்ட இடம் தந்தவர்கூட. சில கருத்துக்காக மின்னஞ்சலில் முட்டிமோதினாலும். கருத்து பதிவு உடன் அன்றி தனிநபர் மீதல்ல என்பதை பலதடவை நிறுவிய என் நண்பன்.  தமிழிலில் எல்லாவற்றையும் எழுதத் துணிந்தவன்.

 நாற்றின் வலைப்பதிவாளர் திருவாளர் நிரூபன் செல்வராஜாவுக்கு.

 என் பதிவுலகில் இத்தனை (80 கோகுல் +
சேர்த்து) உறவுகளைப் பெற்றுத்தந்து.
உறுப்பினர்கள் (75)


 என்னையும் ஒரு பதிவாளன் ஆக்கிய  உங்களுக்கு என் வெற்றியைப் பரிசாக அளிக்கின்றேன் நன்றியுடன்.

.நன்றி சொல்லி உங்களைப் பிரித்துக்காட்ட விருப்பம் இல்லை என்றாலும் காலம் உணர்ந்து செய்த உதவிக்கு நன்றி சொல்வது தவறல்ல சகோதரா!

 என்தளத்திற்கு அதிக நண்பர்களை இனம்காட்டிய நண்பன் துசிக்கும்,  செங்கோவி ஐயாவுக்கு என் சிறப்பு நன்றிகள்!

  உங்கள் ஊடாகத்தான் பலரை நான் பெற்றேன்..

 எப்போதும் என் பாடல் பதிவுகளில் காத்திரமான பின்னூட்டம்மிடுவதுடன் என் எழுத்துப்பிழையையும் திருத்தும் அன்புச் சகோதரி ஹேமா அவர்களுக்கு நன்றிகள் பலகோடி!

.ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணிக்கும்  மைந்தன் சிவா, ,மனோ,ரெவெரி,கந்தசாமி,ஆகுலன் தமிழ்வாசி, விக்கியண்ணா,சி.பி,புலவர் ஐயா விடிவெள்ளி,கனாவரோ,மதுரன், மதிசுதா,மதுரை சரவணன் சண்முகவேல் ஐயா,ரட்ணவேல் ஐயா ரமனி ஐயா கவி அழகன்,கோகுல்,ஐடியாமணி. மகேந்திரன்,அம்பாள்ளடியாள், அன்புத்தம்பி ராச். லோசன், மற்றும் பலர்  என பட்டியல் நீளும்!

 இவர்களுடன் என்னோடு பயணிக்கும்  அனைவருக்கும். தனிமரத்தின் தாழ்மையான நன்றிகள் .கருத்துக்காக சிலருடன் மோதினாலும் அவர்களும் என் நண்பர்கள்தான்.

பதிவுலகில் என்னை ஊக்கிவிக்கவும் சமயங்களில் வழிதவறும் போது தட்டி அடக்கும் யோகா ஐயா, ,காட்டானுக்கு சிறப்பு விருந்தினர் நன்றிகள்.!












. திரட்டியில் இணைப்புக்கொடுத்து என் தொடரை பலரிடம் சேர்த்த என்  அண்ணன் குற்றால மன்னன் நாஞ்சில் மனோவுக்கு விசேட நன்றிகள்(..உங்களை வரும் ஆண்டில் சரி நேரடியாக சந்திக்கனும் தமிழக்கத்தில் மறக்கமாட்டன் ஜின் பாட்டில் ஹீஹீ) 

என் பதிவுகளில் அவசரத்தில் நான் விடும் எழுத்துபிழைகளைத் திருத்திய பதிவாளர்கள் அனைவருக்கும் .


பார்வையாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த நன்றிகள் .



இத்தனைக்கும் பக்கபலமாக இருக்கும் என் மனைவிக்கு இன்னொரு சிறப்புநன்றிகள்.!

 மகனும் பிளாக் எழுதுறான் என்று மற்றவர்களுக்கு பல்புக் கொடுக்கும் என் தாய்க்கு  மொத்த நன்றிகள்.


புத்தாண்டில் புதிய  தொடர் மற்றும் பாடல்பதிவுகளுடன் சந்திக்கும் வரை !

.
நட்புடன் தனிமரம் நேசன்!

மீண்டும் என் வலைப்பதிவு ஊங்களை நாடி வரும் !

எல்லாரின் படமும் சேர்க்க ஆசை பதிவு நீண்டுவிட்டது! உறவுகளே!

ஒரு வாசகன் பார்வையில் ஒரு தொடர்!

ஒரு தொடரில் தான். பல விடயங்களைச் சொல்லமுடியும் என்பதன் மூலம் சிலவிடயங்களை காலத்தின் மீள்பார்வையாக.

 கடந்த சிலவாரங்களாக உங்களை நாடிவந்த நொந்து போன ஓர் இதயம் பற்றி பல வலையுலக நண்பர்கள் பின்னூட்டம் இட்டும் வாக்கு போட்டும் ஊக்கிவித்தார்கள் .

சிலர் இந்த நேரத்தில் நீ தொடர் ஏன் எழுதுகின்றாய் ?உனக்கு பதிவுலக அரசியல் தெரியவில்லை என்ற போது மைந்தன் சிவா சொல்வது போல் போற்றுவோர் போற்றவும் தூற்றுவோர் தூற்றட்டும்! விரும்பினோர் படிப்பார்கள் நேசன்னா என்று நண்பன் துசி பகிர்ந்து கொண்டான் ஒரு வாசகம் .அது  திருவாசகமாக கருதி  வேலைப்பளுவையும் தாண்டி எழுதிய போது எனக்கு மனப்பாரம் குறைந்தது .

நல்ல உள்ளங்களின் பின்னூட்டம் இன்னும் சிறப்பாக்கனும் என்ற ஆவலைத்தந்தது.

 இந்த இடத்தில் ஒரு சிறிய தெளிவைச் சொல்லி விடுகின்றேன்.

 இசை என் மூச்சு நான் கேட்ட பல கருத்தாளமிக்க பாடல்கள் பலரைச் சென்றடையனும் அதை தந்த வானொலிகள் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல விழைந்த ஒரு உத்திதான் கதையில் பாடலைச் சேர்த்தது .

.குத்துப்பாட்டில் பலநல்ல பாடல்கள் மறக்கப்படும் நிலையில் என் மனதில் இருந்த  அறிவிப்பாளர் கனவின் வெளிப்பாடுதான் நான் தெரிவு செய்த பாடல்கள்.

வலைபதிவில் அதிகம் பாடல் ஒலிக்கவிட்டு பதிவு போட்டது அடியவனாகத்தான் இருக்கும்.!

 பாடல்கள் பற்றிய சிலாகித்த ஹேமா,புலவர் ஐயா,ரெவெரி,துஷ்சியந்தன்,மனோ, செங்கோவிஅண்ணாச்சி,யோகா ஐயா  ,கோகுல்,மாயாஉலகம் நிரூபன் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.

தொடரினைத் தொடர்ந்து படித்ததுடன் பின்னூட்டங்களும் இட்ட பல சகபதிவாளர்களில் விதியாசமான சிந்தனையாளன் ஒரு சகபதிவாள நண்பன் இந்த தொடருக்கு. தன் பல வேலைப்பளுவிக்கு மத்தியிலும்  நீண்ட விமர்சனத்தை தந்து இந்த தொடரினை இன்னொரு பரிமானம் கூட்டியிருக்கும் செயல்.

 பதிவுலகில் இது இரண்டாவது முறை  என என்னுகின்றேன். (முதலில் என் பதிவுலக வழிகாட்டி நிரூபன் செங்கோவி அண்ணாச்சியின் மன்மதன் லீலைகள் தொடருக்கு வழங்கிய விமர்சனத்தை  அடுத்து)

  பதிவுலகில் எல்லோரையும் தன் தனித்துவமான எழுத்து நடைமூலம்  இந்த சிறிய வயதில் ஒளிவு மறைவு(பள்ளிக்கூட காதலை) இன்றி பதிவுலகில் காரசாரமான பதிவுகள்  தந்து கொண்டிருக்கும் என் சிறிய சகோதரன் நண்பர்கள் வலைப்பதிவாளர்  திருவாளர் கே.எஸ்.எஸ் .ராச் அவர்கள்  தந்திருக்கும் விமர்சனத்தை இங்கு பதிவு செய்கின்றேன்

பதிவுலகில் ஒரு தொடர் இப்படி ஊக்கிவிக்கப் படுவது இன்னும் பல காத்திரமான தொடர்களைத் தர ஒரு உந்து சக்தி.

மீண்டும் ஒரு இதயம் கனிந்த நன்றி ராச் .அதிக சிரத்தை எடுத்து நடுநிலையுடன் அலசிய உங்கள் விமர்சனப்பார்வைக்கு!

இதோ அவரின் பார்வையில்!


வணக்கம் தனிமரம் நேசன் அண்ணா
கடந்த சில வாரங்களாக நொந்து போகும் இதயம் என்னும் தொடர் மூலம்
மனிதவாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த சோகங்களையும்.வலிகளையும் சுமந்து கொண்டு நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.

இளம்வயதில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதலை சரியான முறையில் தெளிவுபடுத்தினால் சிலர் புரிந்து கொள்வார்கள் சில புரிந்து கொள்ள மாட்டார்கள் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் துரோகிகளாகவோ இல்லை காதலைபிரிக்கும் வில்லன்களாகவே தெரிவார்கள் இதனால் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு யோசிக்கும் போது அவர்களுக்கே விளங்கும் தாங்க செய்தது தவறு என்று.வார்த்தையை கொட்டிவிட்டு வருந்துவதைவிட வார்த்தையை கொட்டாமல் இருப்பதே மேல்.

ஆனால் உங்கள் நண்பனின் காதலைப்போல சின்னவயதில் பக்குவம் இல்லாதவயதில் காதலிப்பவர்கள் இதை உணர்ந்து கொள்வது இல்லை.அவர்களுக்கு தங்கள் காதலே பெரிதாக தெரியும்.

நட்பின் வலிகளை மட்டும் இல்லாமல் பல அரசியல் விடயங்களையும் இந்த தொடரில் பகிர்ந்து கொண்டீர்கள்

அதைவிட
மார்க்கெட்டிங் துறைபற்றியும்.வியாபார நிறுவனங்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளின் திறன்களையும் அவர்களின் சாமர்த்தியங்களையும்,அவர்களின் கஸ்டங்கலையும், உங்கள் தொடரில் சிறப்பாக அலசியிருந்தீர்கள்.

தொடரின் நிறைவில் மனதை கவரும் சினிமாப்பாடல்களை இணைத்து இசைமீதான உங்கள் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி அருமையான பாடல்களின் வீடியோக்களையும் பகிர்ந்து ஓரு இசை மழையுடன் இந்ததொடரை நகர்த்திய விதம் புதுமையானது சிறப்பானது.

இந்த உலகில் மாற்றம் ஓன்றுதான் மாறாதது.எதுவும் கடந்து போகும்.எனவே உங்கள் நட்பில் ஏற்பட்ட விரிசல்களும் கடந்து போகும் காலம் எல்லாக் காயங்களுக்கும் மருந்தாகும்..

உங்கள் எழுத்துநடை மிக அழகாக இருந்தது ஆனாலும் சில பகுதிகளில் திரைப்படங்களின் பெயர்களை வசனத்தில் இணைத்து நீண்ட வசனங்களாக எழுதியது வாசிக்கும் போது சலிப்பைத்தந்தது.ஆனால் புதுமையாக இருந்தது.

உங்கள் தொடரில் உவமை கலந்து எழுதிய விதம்.ஓவ்வொறு சம்பவங்களுக்கும் ஓவ்வொறு உதாரணங்களை சொல்லும் விதம் போன்றவை அருமை மொத்ததில் ஓரு சிறப்பான தொடருக்குறிய அத்தனை அம்சங்களுடனும் அமைந்திருந்த இந்ததொடரில் உங்கள் மனச்சுமைகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

நொந்து போகும் இதயம் என்னும் இந்ததொடரை போல பல சிறப்பான பதிவுகளை உங்கள் தளத்தில் எதிர்பார்கின்றோம் ஓரு வாசகனாக உங்களுடன் பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
அன்புடன்\
கே.எஸ்.எஸ்.ராஜ்

15 November 2011

முகம் தெரியாத உறவுக்கு!

14 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-நிறைவுப் பகுதி!

என்ன நானா இப்படி யாருக்கும் தெரியாமல்? என்ன இந்தப்பக்கம் எங்க இருக்கின்றீர்கள்.

 ஒரு தகவலும் ஒருத்தருக்கும் தெரியாமல் போகும் அளவுக்கு என்ன பிரச்சனை ?

"அதெல்லாம் ஒரு  கெட்ட கனவு நடந்தவை எல்லாம் நல்லதிற்கே!

 ஆமா நீ எப்ப நிக்கா செய்தாய்?

  எல்லாம் உங்களால்தான் நீங்க பாட்டுக்கு வாப்பாவிடம் என்னை இடம் மாற்றச் சென்னீங்களா?

 அங்க போன பிறகு தான் என் தவறு புரிந்தது. முதலில் உங்களுக்கு சாபம் கூடப் போட்டன் பிறகுதான் மெல்ல மெல்ல என் படிப்பு விடயம் என் பாதை என்ன என்று அல்லா என் புத்தியில் தெளிய வச்சார் .

எனக்கு கம்பஸ்கூட கிடைச்சது நானா!
 வாப்பாதான் இவரை எனக்குப் பார்த்தார்.!

 உண்மையில் வாப்பா உங்களைப் பார்த்தா சந்தோஸப்படுவார்!
 வீட்டை வாங்களேன்.

 இல்ல பார்த்திமா. நீ இப்படி சந்தோஸமாக இருப்பதே எனக்குப் போதும்.

 நான் இப்ப யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்ல.

 எல்லாரும் வீட்டில் நலம்தானே?

 அல்லா நம்மலகைவிடல இப்ப கொஞ்சம் இடம்பெயர்ந்து ஓடாமல் நெளுக்குளத்தில் வாப்பா, உம்மா, தாத்தா இருக்கினம்.
 நான் பெரிய தாத்தா பக்கத்தில் இங்கே இருக்கின்றன்.

 வீட்ட வரலாம் தானே?

 இல்ல நான் தனிப்பட்ட வேலையாக வந்தன்.
 இன்று இரவே கொழும்பு போறன்.


 . ஆமா நீ பள்ளிக்கூட நண்பர்கள் யாரையாவது பார்த்தாயா?

 வவுனியாவில் என்று இன்னொரு கோணத்தில் கேட்டேன் .இரண்டு தரம் போயிருந்தேன் வவுனியாவிற்கு .


உங்களுக்குத் தெரியுமே! அந்த வெள்ளப் பொடியன் இப்ப சிங்கப்பூரில் கம்பியூட்டர் கோர்ஸ் செய்யிறானாம்.

 நீங்கள் கதைப்பதில்லை என்று உங்க நண்பன் சந்திரன் நானா சொன்னார்
 நானா.

 பார்த்திமா  வெள்ளையன் என்றது ரவியை தன் கடந்த காலத்தை இப்படி பட்டும் படாமலும் சொல்வது எனக்கும் பிடித்திருந்தது.

 சந்திரன் நானா இப்ப ஒரு கடை போட்டு இருக்கின்றர்.

 உங்களைப் பற்றிக் கூட என்னிடம் கேட்டார். எல்லோரும் இடம் பெயர்ந்ததுடன் பலரும் பல இடங்களுக்கப் போயிட்டாங்க.

  நல்ல காலம் உங்களால் நான் ஏற்கனவே பதுளை போயிட்டன்.

  இப்ப எல்லாம் என் நானா நல்ல இருக்கனும் என்று தூவா ஓதுரன்.

" உண்மையில் வாப்பா சொல்லுவார் உங்க ஆலோசனைகள் தனக்கு இன்னொரு வியாபாரத்தை தொடங்க ஆசை ஊட்டும் என்று "

.எல்லாம் நல்லதுசெய்து விட்டு இப்படி இடம்பெயர்ந்ததும் மீளவும் வந்து பார்காமல் இருப்பது நியாஜமா நானா?

 இல்ல பார்த்திமா!  சில சங்கடங்கள் ஆறுதலாக இன்னொரு நாள் வீட்டை வாரன்.

"அக்ரம் கிட்ட மட்டும் இந்த இலக்கைத்தைக் கொடுத்துவிடு. அவனுக்கு எல்லாம் புரியும் படி சொல்கின்றன்.."


பார்த்திமா அந்த வெள்ளையன் எப்படி சிங்கப்பூர் போனான்?

 அவரின் மாமானார் வசதி செய்து கொடுத்தாராம்.

 மாமானார்??!
 என் நிக்கா  முடிந்தது  தெரிந்த பின் அவரும் கலியாணம் முடித்துவிட்டார். இன்ஸா அல்லா!

கடவுளே இந்தச் சின்ன வயதில் இவனுங்கள் திருந்தமாட்டாங்களா?

" பார்த்திமா பார்த்தாயா அம்பிகாபதி ரேஞ்சில் என்னோடு சண்டை போட்டான் இப்ப எந்த முகத்தோடு 23 வயதில் மாப்பிள்ளைக் கோலம் ?

எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.இது வஞ்சகச் சிரிப்போ அல்லது என்னைவிட வயதில் குறைந்தவன் குடும்பம் ஆகிவிட்டான் என்ற போறாமையோ அல்ல .

" சரி பார்த்திமா என்னைச் சந்தித்ததாக வேற யாரிட்டையும் இப்போதைக்குச் சொல்லாத.
 இன்னும் ஒரு வருடம் பின் என் வியாபாரத்தை மீளவும் வவுனியாவில் தொடங்கணும் .

அதுவரை இப்படி கானமல் போனோர் பட்டியலில் இருக்கின்றேன்.

 நானாவின் நிக்காவுக்கு எங்கள் எல்லோருக்கும் அழைப்பு வருமா?

"  நிச்சயமா மரியம் உம்மாவின் வட்டலப்பம் தானே எனக்கு பரிசுப் பொருள்.

 சரிம்மா நான் போயிட்டு வாரன் அவசரம் கொழும்பு போகனும்.

  மன்னாரில் இருந்து வருகின்ற போது மனதில் தங்கள் காதல் பெரிது என்று என் நட்புக்கு இதயக் கதவு மூடிய ரவியின் செயலில் நொந்து போன இதயம்.

 இப்போது நலமாக இருக்கின்றேன் என்று தெரிந்து கொண்டபின் ரவி கடந்த வருடம் முதல் நான் முகநூலில் இருப்பது தெரிந்து கொண்டு.

 மீளவும் நட்புக்கரம் நீட்டுகின்றான். நடந்தவை மறந்து நண்பர்கள் ஆவோம் கூட்டணியில் சேருங்கள் ஆதரவு தாருங்கள் என்று.

 என்னால் சில வார்த்தை ஜாலங்களை மறக்கும் மனவலிமையை தேடுகின்றேன்.

   இன்று மன்னியுங்கள் நண்பன் தானே என்கின்றாள் என்னவள

  மற்ற நண்பர்கள் அவனுடன் இன்று ஒரே மேசையில் இருந்து கொண்டு என்னையும் பிடிவாதம் மறந்து இணைந்த கைகள் போல சேருங்கள் என்று ஆலோசனை கூறுகின்றார்கள்.

 நானே சரி என்று பட்டதை அந்த நேரத்தில் செய்தேன் தவறு என் மீது இல்லாத போது தண்டித்த நண்பனும் அவர்கள் குடும்ப உறவு தேவையில்லை என்று அவன் நட்பினை உறுதிசெய்யாமல் ஒரு வருடங்கள் மெளனமாக இருக்கின்றேன்.

 என் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் உறவுகளே?!


.நொந்து போன இதயம் இன்றுடன் உங்களிடம் இருந்தும் விடை பெறுகின்றது பயணங்கள் பலவிதம்.
 இந்தப் பாடலை என் தெரிவில் கேளுங்கள்.

12 November 2011

நொந்து  போகும் ஓர் இதயம்-24

எப்போதும் வியாபாரம், நண்பர்கள் குழு,  பாடல்கள் தேடும் ஒலிப்பதிவுக் கூடங்களை நாடிச்  சுற்றும் வாழ்க்கைச் சக்கரம் .

ரவியின் நட்புப் பிரிவு ஒரு துயரமான நிகழ்வாகிப்போனது.

 ஒரே ஊரில் வாழ்ந்தும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவன் தங்கை கலியாணத்திற்கும்! என்னை அழைக்கவில்லை.

  உயர்தரப்பரீட்சை ஒரு வித சோர்வுடன் எழுதியதாக அவனின் இன்னொரு நண்பன் என்னிடம் பகிர்ந்து கொண்டான்.

 என்னால் தான் தன் பார்த்திமாவை தொலைத்து விட்டதாகவும் தன் காதல் தோல்விக்கு முழுக்காரணம் என் ஊர் புத்தி என்று சாடியது.

 என்னை இன்னும் சினம் கொள்ள வைத்தது

ஊர்ப்புத்தி என்பதன் மூலம் அவனை மன்னிக்கலாம் என்ற எண்ணத்தில் சந்திரிக்கா அம்மையார் மக்கள் விடுதலை முன்னனியை நம்பி பாராளமன்றத்தைக் கலைத்தது போல் அவனின் நட்பையும் உதறினேன்.

.அரச கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழ் மக்கள் புலிகளின் பக்கம் தான் என்பதை  இனவாத அரசுக்கு  மீளவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் முகத்தில் அறைந்தது.

 வன்னியில் இருந்து நகரசபைக்கு வந்த தொலைநகல் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போகவும் என்ற வாசகம் .

இது காற்றில் மலேசியாவில் அன்வர் இப்ராஹிமுக்கு  எதிரா திரும்பிய பாலியல் குற்றச்சாட்டுப் போல மக்கள் வெள்ளம்  முண்டியடித்து வவுனியாவை விட்டு பலபகுதிக்கும் இன்னொரு முறை  மீளவும் இடம்பெயர்ந்தார்கள். மக்கள்.

 பலர் இந்தியாவுக்கு மீளவும் போனார்கள் சொத்துக்களை விற்று.

 இராணுவ கட்டுப்பாடு என்பதால் பாஸ் நடைமுறையில் தங்கியிருந்த பலர் இதை சாட்டாக வைத்து  காற்றுல்ல போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக .

கொழும்பு வந்து கடவுச் சீட்டு எடுத்துக் கொண்டே ஒரே இரவில் பணக்காரன்  ஆகும் அண்ணாமலை படம் போல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக புலம் பெயர தென் ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் ஓடிய பலரையும் பார்த்த கண்களுக்கு!

  வியாபாரத்தில் மறுபக்கம் மூடியதால் கண்முன்னே சொந்தத் தொழில் தொடங்கி தோல்வியில் முடிந்தது கண்ணீர்க்கதை வைகாசி பிறந்தாச்சு படத்தில் சுலக்ஸனா மட்டும் விட்ட கண்ணீர்கதை அல்ல நானுந்தான்.

அடிமேல் அடி விழுந்தால் வேப்பமரமும் பலகை ஆகும் என்பது போல் இக்காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தோழியான சாலிக்காவும் மரணித்த போது வேதனையைப் போக்க வெண்தாமரை இயக்கம் சாமரம் வீசவில்லை.!

  விற்பனையின் போது யாரையும் நீ யாரு என்பதை விசாரிக்காத வியாபாரி  என்னை பாதுகாப்புக் கண்கள்.

 நான் விடுதியில் சந்தித்த அப்பாவி ஒருவன் குண்டு வைக்க வந்தவன் அவனை நீ இந்த விடுதியில் இந்த நேரம் சந்தித்தாய் என்று என்னையும் பாசச் சங்கிலியில் பூட்ட நினைத்த போது! மாமியார் வீட்டில் விருந்து உண்ணும் மருமகன் நிலையில் நான் இல்லை.

 சட்டத்தின் இருட்டறையில்  பின் கதவாள் ஒழித் தோடிய என் வெளிநாட்டுப் பயணங்களை இன்னொரு கோணத்தின் திரும்பிப் பார்க்கின்றேன் தொடர் பதிவில் எழுதியிருக்கின்றேன் விரும்பியோர் பாருங்கள்.http://nesan-kalaisiva.blogspot.com/2011/02/tirumpiparkirean.html?m=1

பலரும் நிதிக்கம்பனியில் போட்ட காசுடன் ஓடிப்போன நிதிக்கம்பனி முதலாளியைப் போல் என்னையும் இந்த வியாபாரத்தில் மற்றவர்களை ஏமாற்றிவிட்டுப் போன விற்பனைப் பிரதிநிதி என்ற என் பெயரை அந்தப் பகுதியில் உச்சரிக்கும் காலப்பகுதியில் !

கஞ்சி குடித்து வாழ்ந்த   என் மலேசிய வரலாறு தெரியாதவர்கள் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை.

என் குடும்பத்திற்கும் நான் சென்னதில்லை என் துயரங்களை.தொலைத்தொடர் வசதி ஏதும் இல்லாத பயணம்.

 விரும்பிப் போன பாதையில் சீதை தாங்கினாலே துயரங்களை அதைவிடவா என் சோகம்!

அங்கே பலர் வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்து, கொட்டும் மாரிக்காலம் கஸ்ரப்படும் போது.

  நானும் உயிர் தப்ப ஓடிய என் வாழ்க்கையின் நிலையில்.

 எப்போதும் அவசரப்பட்டுச்  செய்யும்
காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடியும் என்பது போல்  மீண்டும் சாமாதானகாலம் என்ற வசந்தகாலப்பறவையாக தாயகம் திரும்பினேன். ஆனால்!

மீளவும் ஹீரோவாக  நடிக்கத் துடிக்கும் காலம் போன முன்னனி நடிகர் மோகன் போல் என் வியாபார திறமை மூலம் விற்பனைத் பிரதிநிதியாக  புதிய பதவியில் யாழ்ப்பாணத்திற்கு மீளவும் என் சகோதரமொழி மேலதிகாரியின் பணிப்பின் பேரில் வேறோரு பல்தேசியக் கம்பனியில் சேர்ந்து வேலை செய்த போது.

 தவிர்க்க முடியாத பயணமாக மீளவும் மன்னார் போனேன் .

(ஓமந்தை ஊடாக பல நாட்கள்  பயணித்தாலும் ஒரு நாளும் என் இதயத்தில் பதிந்த வவுனியாவில் தரிக்காமல் ஒழித்தோடியது)

அன்று தனிப்பட்ட என் பணியுடன் நான் சந்தித்த ஒரு முக்கியஸ்தர் இன்று உயிருடன் இல்லை .அவரை  சந்தித்த

 பின் நான் எங்கு போனாலும் ஓடிப்போகும் நிம்மதியான ஒரு இடம் தியேட்டர்.

 அயன் தியேட்டரில் தற்செலாகப் பார்த்தேன்  பார்த்திமாவை! என் மடியில் அவளின் 3வது மவன் ராசிம் .

தொடரும்

 //
வெண்தாமரை-சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டம்

) அடுத்த பாகம் நிறைவுப் பகுதி!

11 November 2011

நொந்து போகும் ஒர் இதயம்-23

அசங்கவுடன் எப்போதும் சினேகபூர்வமான நட்பு இருக்கும் எனக்கு.
வறிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கும் அன்று இரவு என் கணக்கில் குடிவகையை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறீனேன்!

 இரவு  கம்பளை புறப்பட்டேன்.

மலையகம் எப்போதும்  தங்களின் துயரங்களை எரிமலையாக  வேதனைகளை மறைத்துக் கொண்டு எப்படி இருக்கின்றதோ! அப்படித்தான் இந்த மலையகத்தின்  பெரும் பாதைகள் .

வலைந்து வலைந்து அருவி போல் ஓடிக் கொண்டு இருக்கும்.





















 அதிகாலையில் வெளிக்கிட்ட பயணம் கம்பளையை வந்து சேரும் போது மாலை நேரத்தை அன்மித்துக் கொண்டிருந்தது .

எனக்காக சகோதரமொழி நண்பன் தன் அறைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தான்.

 ஒரு வார வேலையில் அவனோடு அவனின் அறையில் தங்குவதால் செலவு மிச்சம் ஒரு புறம் என்றாள்!

 விற்பனைச் சிக்கல்கள் வியாபாரத்தில் காசோலைக்கு பொருட்களை வாங்கி விற்பனை செய்து விட்டு பணத்தினைத் தராமல் சக்கரநாட்காளியைப் போல சுற்றவிடும் சிலரின் முகவரிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

 தனிப்பட்ட பினாக்கினால் நிறுவனத்தின் தயாரிப்பை எதிர்கட்சி என்பதற்காக எதிர்க்கும் கொள்கையைக் கொண்ட வியாபாரிகளை.
 இந்த புதிய முகம் மாற்றத்தின் மூலம் சந்தையில் மாற்றம் செய்யலமாம்.

 அதுமட்டும் மல்ல அவர்களிடம் வருமானம் முதல் அரசியல், சினிமா என பலதைப் பேசுவதற்கும் நண்பர்கள் துணை உதவும்.


 என்பதால் அதிகம் அவர்களுடன் பழகுவது வியாபாரத்தின் ஒர் அங்கம்.


 இப்படிப் பழகும் போது நண்பர்களுக்குள் எப்படி எங்கள் கைச் செலவைக் துண்டு விழாமல் நிறுவனத்தின் வளத்தில் ஒதுக்கீடு செய் முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும் .


எங்களையே ஏய்ப்போருக்கு எப்படி ஏய்க்கலாம் என்பதை தெரியாத அளவுக்கு நாங்களும் லால்லுபிரசாத் போல் மாட்டுத் தீவன கணக்கு காட்டுவம்.
  இந்த பல்தேசியக் கம்பனிகளுக்கு.


சகோதரமொழி நண்பர்களிடம் எப்போதும் இன்றைய நாளில் நல்லா சாப்பிட்டம், குடித்தோம். என்பதை தாரக மந்திரமாக ஓதுவார்கள்!

 ஜாலி அவர்களின் ஹாபி.


மலையகத்தில் மழை வந்தாள்  வீதிகள் எங்கும் மண்சரிவும் வீதித் தடையும் தொழிலைப் பாதிக்கும்  அத்துடன் தொலைத்தொடர்புகள் அதிகம் பாதிக்கப்படும்.

 துயரம் சில இடங்களில் தொடர்பே இருக்காது.

 வாகனத்தில் ஏறி எப்படா ஆட்சி மாறும் என்று காத்திருக்கும்  எதிர்க்கட்சி போல் மழை விடும் வரை காத்திருந்து அன்றைய நாளை  திட்டிக் கொண்டே ஓட்டுப் போடும் வாக்காளர் போல்  வேலை முடிந்து திரும்புவது இன்னொரு சவாலான விடயம்

.என்றாலும் நினைத்த அளவு விற்பனையைச் செய்து விட்டால்  அன்றைய இரவு பைலாவுடன் படம் பார்ப்போம்.
 தியேட்டரில். ஆனந்தா தியேட்டரில் பார்த்த படத்திற்கும் இன்று இந்திய நாளிதளுக்கும் என்ன சம்மந்தம்?

 இப்படியான  சந்தோஸங்கள் நீண்ட நாள் நிலைப்பது இல்லை.













இந்த தமிழ் பாடல் இங்கே  .
  ஒரு  வாரம்
போன பயணம் அதிக மழையாலும் விற்பனை தேக்கத்தினாலுன் நானும் 12 நாட்கள் கம்பளையில் தங்க வேண்டிய நிலை. இரண்டாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை மீண்டும் வவுனியாவிற்கு போய்ச் சேர்ந்தேன்.  காலமாற்றம்  ஓடும் வேகம்   இரத்த ஓட்டத்தை விட அதிகம் அதைவிட கொடுமை யுத்த பூமியில் நாம் இடம் பெயரும் துயரம் என் வாழ்விலும் சரி  வவுனியா வாழ் வாசி மக்கள் வாழ்விலும் சரி மறக்க முடியாத ஆண்டு 1999 கார்த்திகையின்  பின் வந்த நாட்கள் !

தொடரும்