26 February 2014

அதிகாலையில் வாழ்த்து ஒலி!

இந்தப்பதிவு முற்றிலும் ஒரு வாழ்த்துப்பாடல் விரும்பியோர் வாழ்த்துப்பூக்களுடன் வாருங்கோ! ஹீ 


  பதிவுலகம் தந்த பல பாசப்பிணைப்புக்களில்
பாரிசில் வாழும் கற்றதது தமிழ்
பதிவாளர் பார்த்துப்
பழகியதில் தனிமரத்தையும்
பாசத்தில் மொய்க்கு மொய் வைக்காமல் நேசிப்பவர்!
பணம் கொடுக்கவில்லை மொய்யாக!ஹீ!
http://thusyanthan27.blogspot.fr/
பதிவுலகை இப்போது
பக்கம் வந்து பார்க்கும்
பழக்கம் மறந்தவர் ஏனோ?



பாரியார் இந்தப்பக்கம்
பார்க்கக்கூடாது என்று
பணிப்புரையோ நான் அறியேன்:)))§


பதிவுலகில் பதிவுக்காக ,பகிர்வுக்காக
பண்டிதர்களுடன் எழுத்து மூலம் சம்பாதித்து
பல கோடி ஈரோ
பணமீட்டி
பாரிசில் சாரு நிவேதா போல வீடுவாங்கி இருப்பதில்!
பட்டப்படிப்பு /பல்கலை /பாசாங்கு /
படிக்காத  தனிமரம் !



பதிவுலக ஹிட்சு பஞ்சாயத்தில் தனிமரத்தின்
பட்டுவேட்டி பஞ்சத்தில் அடிபட்டு  போன
 பஞ்சைப்போல கிழிந்தாலும்
படிக்காத பாலகன்
பாவம் தனிமரம் அண்ணாச்சி  என்று பலரிடத்தில்
பரிந்து பேசி பட்ட வடுக்கள் பலரின் பழைய
பதிவுகளின் பொக்கிஷம் போல
பார்த்து ரசிக்கலாம்:))) நாற்றில் /ஓட்டவடை/ என மாத்திஜோசித்து!
பார்த்துக்கலாம் !ஹீ !!  தனிமரம் இன்னும்
பதிவு போடுகின்றேன் பாரிசில் முகம் என்று!

பழைய படி மீண்டும்.
பாசதம்பி இன்னும் என்ன தோழா என்று
பதிவுகள் பகிரவேண்டும்
படித்த தொடரில் என்
பதிவும் மின்நூல் காண
பாதை காட்டியவன் எங்கள் தம்பி பாரிசில் இருந்து
பதிவு செய்த என்னுயிக் கண்ணம்மா
பார்த்து ரசித்துப்படித்தவர்கள் பலர்
பசங்கள் சிலர் குறும்படமாக்கி அதை
பாதியில் நிற்கின்ற பலகதை முகநூலில்
பதிந்துவைத்தான்  பகிடியாக:)))!
பாத்திரம் ஏற்றவள் பத்துமாசமாம்:))
பலகடல் தூரம் பயணித்து!

பாலகன் போல இவன் முகம்
பார்த்தாள் இளையதளபதியின்
பத்ரி போல தேவதை வந்த கோலம்
படங்களாக முகநூலில்!

பார்த்து ரசிக்கும் நடிகைகளில்
பலரும் இன்று மறந்த கமலி
பாத்திரம் இந்த காதல்க்கோட்டையின்
பக்தன் இவன்!
                                         துசிக்கு என் வாழ்த்துப்பூக்கள்.



  பலரும் அறிவார்கள்
பாட்டுக்கு மட்டும்
பார்த்து ரசிப்போம் இதையும்!


பார்த்த பின் பையனுக்கு
பருவம் ஒன்று கூடுகின்றது ./27/2/0000
பாரிசில் நேரத்தில் !
பல்லாண்டு பல்லாண்டு
பதினாறும் பெற்று
பரவசத்துடன் வாழ்  வாழ்த்துகின்றோம்.

பாரிசில் இப்போது பகல் ,இரவாக
பறந்து பறந்து வேலைக்கு ஓடி
பலமாடியில் பத்திரமாக ஒரு
பங்களா வாங்கியதில் நேரடியாக
பார்க்க வருவோர் தேவயானி
பக்தன் இல்லம் என்று
பலகையில் பெயர் என்றும்
பால்கோப்பி / பொங்கல் வைக்க
பச்சைப்பிள்ளை தனிமரத்தை
பாசத்துடன் கூப்பிட்டும்
பாரிசில்  நான் இல்லை
பார்த்துக்லாம் பாசதங்கை
பாரிஸ் வந்த பின் பாடுவோம் இந்தப்பாட்டு-))))/




25 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்-5

புலத்தில் இருந்து புலம்பெயர் தேசத்திற்கு நேரகாலம் அறியாது நேரடி அழைப்பில் வந்து நிம்மதியற்று வேலைத்தள மன அழுத்தம் ஒரு புறமும் .உடல் அலுப்பில் திரியும் நெஞ்சில் தூரத்து மின்னல் போல கைபேசியில் இடியினை இறக்கும் பல நட்புக்கள் புரிந்து கொள்வது இல்லை அங்கு அதிகாலை என்றால் !

பாரிசில் நடுச்சாமம் நல்ல தூக்கம் வரும் நேரம் ஊடக புகைப்படக்கார தனிமரம் போலவருவாய் உழைக்க   தூக்கம் விழித்து இருப்பது போல இல்லை!




தாயகதில் இருக்கும் உறவுகளின் நேரம் அறிந்து! தூக்கம் அறிந்து! துயரம் அறிந்து !நாள் ,நட்சத்திரம் எல்லாம் பார்த்து நாம் எடுக்கும் அழைப்புக்கு இப்ப நான் நித்திரைகொள்ளும் நேரம் .

நாளைக்ககு நேரடியாக தொலைபேசி எடு என்றெல்லாம் எடுத்து எறிந்து தெனாவெட்டாக பேசும் உறவுகளுக்கு பணத்தேவை என்றால் மட்டும் பாசம் பொங்கி வந்துவிடும் தேர்தல்  காலத்தில் மட்டும் மக்களின் நலம் பேசும் அரசியல் கட்சி போல!

கடந்த வாரம் ஈசன் என்னிடம் முகநூலில்  தகவலகாக கொஞ்சம் பணம் தேவை என்று  செய்தியாக சொல்லியிருந்தான்.

 என்னிடம் இப்போது உண்மையில் பணம் இல்லை .திவாலான வங்கி போல மற்றவர்களின் உதவியில்தான்  இந்த வருட மலையேற்றம் என்பதைக்கூட இவனிடம் சொல்ல மனம் கூசிய நிலையில்தான் இன்னும் மலைப்பயணம் முடிவில்லை என்று அழைப்பின்போது சொல்லியது .


பணம் தரவில்லை என்ற கோபம் தான் என் அழைப்பினை அதிகம் தவிர்த்துவிட்டானோ ?என்ற சிந்தனையில் வீதியில் வந்தவனிடம்.


 மறுபக்க கரையாக எதிரில் வந்தான் நண்பன் ஜீவன் .

சாமி சரணம் .
என்ன ஐய்யப்பா ?என் வரவைக்கூட எதிர்பார்க்கவில்லைப்போல ?

தூரத்திலேயே உன்னைக்கவனித்து விட்டேன்!

 நீங்க யாரு சினேஹாவின் கனவுச் செல்லச் சீமான்னாச்சே!



என்னைப்போலவா?  என்ன உங்க சொந்தக்காரங்கள் ஆலயத்தில் இன்று படிப்பூசை செய்வதால் இலண்டனில் இருந்து வந்தாச்சு போல!


 அதுசரி கழுத்தில் ஐய்யன் மாலை குருசாமியின் ஆஸ்தான் சீடன் இப்படி  விரதநேரத்தில் சினிமா பற்றி பேசுதல் முறையோ? தகுமோ ?நகுமோ ?

சினிமா இப்ப பார்ப்பது இல்லை . என்னையே சோதிக்கின்றீர்கள் அவனா இவனா என்பது போல ?


 குருநாதர் கூப்பிட்டால் பாரிஸ்  வராமல் இருக்க முடியுமா ?

ஐயா ஜீவன் சாமி போதும் ! உங்களுக்கும் ,குருவுக்கும் இடையில் என் நட்பு பழக்க தோஸம் வார்த்தையாக  வந்துவிட்டது .எப்போதும் போல :)))


ஆமா சினேஹாவைப் பார்த்தீங்களா??இல்லை பரதன் சாமி !


அடியேன்  சொன்னது சினிமா நடிகைகையை இல்லை ! அவங்களப் போல என்று நீங்கள் சொல்லும் உங்க பிரெஞ்சுக் குப்பினை(நண்பியை) !

ஏன் பரதன் சாமி?

 நல்லாப்போற என் வாழ்க்கையில்  பாரிசில் இன்னொரு நல்ல நண்பன் என் இன்னொரு குருநாதன் இப்படி எல்லாம் பேசலாமோ?

 அப்புறம் எப்ப யாத்திரை கிளம்புறது !

அதில் தான் ஒரு சிக்கல் ஜீவன் ;ஐய்யன் சோதனைக்கு அளவு இல்லையா ?

சோதனையில் இருந்து மீளத்தானே ஐய்யனிடம் சரண் புகுகின்றோம் .

அப்படி இருக்கும் போது அவர் எப்படி நம்மை துன்பத்துக்கு ஆளாக்குவார் ?அவரின் கருணை இருந்தால் எந்த மலையும் கடக்கமுடியும் !



நம்பிக்கைதானே வாழ்க்கை என்று பா.விஜய் கூட சொல்லியிருக்கின்றாரே?

ஆமா இன்று படிப்பூசையில் சாமியின்   எந்தப் பாட்டு களைகட்டும் தேர்தல் திருவிழாபோல?

 பரதன் சாமி இந்தாண்டும் இங்கு நிறைய கன்னிசாமிகள்  வரும் இடத்தில் அடியவன் கூட கன்னி சாமிதான் இன்னும் !

குருநாதர் பாடு என்றால் ஏதோ ஐப்பானில் கல்யான ராமன் ஹீரோ போல பாடுவேன் .இன்று .

பார்க்கலாம் பரதன் சாமி !

.குருவே அடியேன் பரதனும் கன்னிசாமிதான் .சரி வாங்கள் ஆலயத்துக்குள் நுழைவோம் முதலில் .என் கைபேசியையும் அணைத்து விடுகின்றேன் .

ஓ ஓஒ, குருவின் உள்குத்தை இன்னும் மறக்க வில்லையே!

ஹீ குத்தினாலும் குரு எனக்கு எப்போதும் குருதான் அது என்ன அரசியல் போல தனிக்கட்சி இல்லை /தனி முகநூல்க்குழுமம் போலவா!

ஆஹா  நான் இன்று கஞ்சிதான்   இனவாத புலிச் சந்தேகத்தில் சிறிலங்கா பொலிசில் பிடிபட்டவன் போல ஹீ!

ஜீவன் சாமியின் இன்னொரு நண்பன் இன்று

வருவான் இல்லை!

ம்ம்ம்ம் வரலாம் ,வரமாலும் போகலாம் !ரஜனியின் அரசியல் கூற்றுப்போல தனிமரம் பன்னாடை, பரதேசி .நாதாரி.படிக்காதவன் வால்பிடி.குஜா. இன்னும் வார்த்தை வரும்!

 இப்ப என்னையே அடக்கின்றேன் விரதம் என்பதால் !

இப்ப யார் வலைப்பதிவில் /முகநூலில் ஐபோனில் இருந்து கருத்துப்போடுகின்றானோ ,?முதலில் இவன் ஐபோனுக்கு மூக்கில் குத்தணும் பழகிய நம்மை விட்டு புதிய உறவுகள் என்று எங்கோ போட்டான்!

இன்று வந்தால் குருவிடம் இருக்கு!எல்லா ஆசையும்  துறந்த பின்னும் இன்னும் இப்ப வந்த வலையில் அதன் பின் முகநூலில் இந்த பன்னாடையின் சல்லாபம் தொடர்கின்றது முகம் மூடி!இன்று வந்தால் வேட்டி உருவ ஜீவன் இருக்கின்றேன்!...
இன்னும்

24 February 2014

சின்னச்சின்ன கீறல்கள்.

எத்தனை பாடல்கள் உந்தன்
ஏழ்மையான இதயத்தில்
எழுத்திச்செல்ல ஏதிலியாக
ஏழுகடல் தாண்டினேன்
என்னையும் தொலைத்தாயே
என் காதலியே இன்று
என்னையும் நினைத்து
ஏனோ அழுகின்றேனடி!
   


///////////


உனக்கென நானும்
எனக்கென நீயும்
உருகிப்போவதில்
உணர்கின்றோம் 
உண்மைக்காதல்.../

///////////////////////////////////////////////////////////////

மலையோரம் மங்கை அவள்
மலைநாட்டின் நங்கையவள்
மடியில் சாய்ந்து மரணம் வரை
மகிழ்ந்து இருப்பேன் என்றாள்!


மறந்தாள்  பின் மறைந்தாள்!!
மருகின்றாள் இப்போது
மன்னவன் நீயாக
மாலையிட்டு இருக்கிலாம் 
மறந்த  பின் காதலா??
மனமே மயங்காதே!//





20 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-4

நல்ல நட்புக்குள்  பிரிவினை தோன்றுவது எப்போது ?பருவம் அறியாத பள்ளிக்காலத்தில் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்து .வாடா ,போடா ,டேய் என்று உரிமையுடன் தோன்றும் நட்பு பள்ளியில் பருவ வயதில் பாவையரின் பார்வைக்குள் பாவலன் காவலன் போல பவனி வரத்தேடும் காதல் கனவின் போது கல்வியின்றி காதல் கூடாது என்று கண்டிக்கும் நட்புக்கு முதலில் வெட்டப்படும் கிளை போல நண்பன் /நண்பியின் நட்பும் வெட்டப்படும்.

நட்புக்குள் முரண்படுவதுக்கு முதல்க்காரணி காதல் என்றால் மிகையில்லை முன்னம் அறிந்த வந்தியத்தேவணும்  கங்கைகொண்ட சோழணும் போல விட்டுக்கொடுத்து நட்பையாசிக்கும் நண்பர்கள் எத்தனை பேர் இன்று ?

நம் சமூக வாழ்வில் நம் சுயற்த்திக்கும் மற்றவர்களின் சுயதிற்கும் இடையில் வரும் ஈகோ எத்தனை நட்பினை நாளும் மறையும் சந்திரன் போல நாம் அறியோம் ?


. நானும் இதுரை நட்புக்களை உயந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன் என் சிந்தனை எல்லம் ஐய்யன் நினைவு தாண்டி .நான் நட்பு யாசிப்பதில் ஈசனும் . ஜானதிபதியின் செயலாளர் போல முதன்மையானவன்.


   இது வரையில் எந்த சமூக விடயங்களையும் என்னோடு தொலைபேசியில் ,முகநூலில் ,தந்தியில்லா  இணைப்பில்(skipe) என்றெல்லாம் இனவாத அரசின் தணிக்கை போல  இன்றி சுத்ந்திர  தொடர்பைப் பேணியவன் முக்கிய விடயத்தை ஏன் மறைத்தான் !


நாட்டு மக்களுக்கு உண்மை சொல்லவேண்டிய ஜனாதிபதி வேட்பாளர் தனக்கு இறுதிப்போர் பற்றி ஏதும் தெரியாது என்பது போல இவ்வளவும் தானா ஈசன் என்மீது கொண்ட நட்பு.

 என்ன ஈசன் பேச்சே இல்லை ?


பரதன் சாமி இப்ப ஏதும் என்னிடம் கேளாத !


முதலில் உன் விரதம் முடிய விரிவாக பேசுவம். பிரமச்சாரிய விரதத்தில் இருக்கும் உன்னிடம் சலனங்களும், சபலங்களும் வரும் விடயங்களை பேச எனக்கு விருப்பம் இல்லை !

நான் ஒரு ஜய்யப்பசாமி இல்லாவிட்டாலும் ஒரு சாமியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிவேன்!



நவீன யுகத்தில் இன்று முகநூலின் மூலம் மீண்டும் உன்னுடன் நட்புக்குள் வந்தவர்கள்   நம் தேர்ந்த நட்பினைப் வடகிழுக்கு மாகாணசபையைப் பிரித்தது போல பிரிக்க செயல்படுபவர்கள் யார் என்பதையும் என்னால் அனுமானிக்க முடியும் .


 இன்று நீ வெளிநாட்டில் அம்பானி வாரிசு போல வாழ்கின்றாய் என்று !


நினைப்பவர்கள் எல்லாம் இன்னும் கிணற்றுத்தவளைகள்தான். தேர்தலில் வெல்லுவதுக்கு கொடுக்கும் வெற்று வாக்குப்போல இல்லை நம் செயல்கள் .


எதையும் நினைத்து என் நட்பினை சந்தேகிக்காத இப்ப நான் இன்னொரு கைபேசி அழைப்பினை உள்வாங்கப்போறன் பரதன் சாமி .


கோபிக்காத விரதம் முடிய முகநூலில்

 செய்தி போடு மனம்விட்டுப்பேசலாம்
!...
தவிக்கிறேன் இன்னும்........

18 February 2014

முத்தம் நித்தம் கிடைத்திடுமா???,!

நவீன தொழில்நுட்பத்தின் வருகை நம்மவர்களையும் தொலைத்த ஈழத்து மெல்லிசையை மீளவும் கட்டியெழுப்பும் முயற்ச்சியில் களம் இறங்க வைத்து இருக்கின்றது .


இப்படி நம் தேசத்தின் மெல்லிசையின் மூத்த தலைமுறையினரைத் தாண்டி!


 இளைய தலைமுறை இசைக் கலைஞர் வரிசையில் நாடறிந்த ஒரு கலைஞர் இவர்.


இவரின் இசைத்தொகுப்புக்கள் நவீன இசைக் கருவிகள் மூலம் கொஞ்சம் துள்ளல் அதிகம். நம்மவரின்  பைலாச்  சாயல் கொஞ்சம் இவரின் இசைத்தொகுப்பில் இரண்டரக் கலந்து இருப்பதால் இவரின் ரசிகனாகவும் இவரின் முகநூல் நண்பனாகவும் இருப்பது இன்றைய நவீன தொடர்பாடலின் நன்மை எனலாம்.


ஜெயந்தன் இந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்த பாடல் இந்த வாரம் என்னை முழுமையாக இதயம் வருடுகின்றது.




முன்னைய பாடல்களின் சாயல் இல்லாமல் புதிய மெட்டில் இந்தபாடல் என்னையும் .நம்தேசத்தின் தெரிந்த இடங்களையும் நடனத்தின் ஊடே ஊர்ந்து  செல்ல வைக்கின்றது .

பாடலின் கவிவரிகள் காட்சியும் ,முகநூலின் இன்றைய பிரசித்தமும் ,இறுதியில் வரும் நகைச்சுவையும் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கின்றது .பாடகியின் குரல் தான் பனியில் நனைந்து மூக்கில் அடைப்பு போல ரீங்காரம் செய்வது ஏனோஓஓஓஓஓஒ!நம்மவர் பாடல் ரசிக்க இங்கே.

 கந்தப்புவின் பாடல் கவர்ந்து தனிமரத்தின் சிந்தனைகள் !http://www.thanimaram.org/2012/04/blog-post_30.html.

நம்மவருக்கு முகம் கொடுக்கும் இங்கும் முகநூலில் லைக்பண்ணலாம்.
https://www.facebook.com/IlankaiRasigan?fref=ts

15 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்.--3

தொலை  தூரத்துக்குப் போனவர்கள் எல்லாம் சன்நியாசி போலவும் தொலைந்து போனவர்கள் என்று எண்ணுவதும் எங்கனம் ?

பிழைப்புக்கா வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குப் போன  நட்புக்களிடம் நாகரிகமாகப்பேசி கொஞ்சம் காசு அனுப்பு  பிறகு தருகின்றேன் என்று பணம் பறிக்கும் நட்புக்கள் பலரில் இன்று பிறந்த தேசத்தில் கூடப்பிறந்தவர்களின் நன்மை தீமை பற்றி  ஒரு தகவலும் சொல்லாதவர்களுக்கு அன்நியன் பட கருட புராணத்தின்  படி என்ன தீர்ப்புக்கொடுப்பது??


வெளிநாடு வந்தபின் தான் வாழ்க்கையின் பிரதான பாடங்களை  பலருக்கு பல உறவுகள் படிப்பிக்கின்றது .கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் போல இங்க வந்த பின் தான் .


நானும் குருவிற்கு முதல் சீடன் போல முன்னிற்பது  நம் நாட்டில் பலரில் ஒருவன் இங்குதான் அனுபவத்தில் முத்தவன் என்று அருகில் வைத்து இருக்கும் குருசாமியைபற்றியும் ,குருசாமியின் உயர்ந்த பண்பினை பக்கத்தில் இருந்து பார்த்துப்புரிய வேண்டும் மார்க்ரீச அரசியல் தத்துவம் போல எல்லோருக்கும் சமத்துவம் என்றாலும் குருவே எல்லாத்தையும் தாங்க வேண்டும் நாம் சாரீரத்தை சுகமாகம் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி பரம்பொருளின் மூலத்தை அறிவது ?

குருவும் ஒரு மனிதர்தானே அவருக்கு மட்டும் என்ன உடல் இயந்திரமா ? உடன் இருந்து அவரின் வழிகாட்டுதல் கிடைக்கும் போது அதனைப் புரிந்துப்செயல் படுவதால் பரதனுக்கும் குருவுற்கும் குருசிஸ்யன் போல உறவுநிலை. .

ஆன்மீகத்திலும் அரசியல் போல தூற்றுதலும் , கட்சி மாறுதலும் ,நீக்கமற நிறைந்து இருக்கும் பல சேவா சங்கம் பற்றி இந்த ஐய்யப்ப சங்கம் அறியும் .

போட்டியும், பொறாமையும் ,ஆன்மீகத்தில் அடியோடு வேர் அறுக்கவேண்டிய பாழ்வினை.

பலர் அறியாது ஆடும் ஆட்டம் எல்லாத்தையும் அந்த ஆண்டவன் அடக்கிவைப்பான் ஒருநாள் இது புரிந்தாள் அவன் புனிதன் .


இதை எல்லாம் பொதுவில் பகிரக்கூடிய நண்பன் ஈசன் மட்டுமே !அவனால்தான் இந்த விடயங்களை மற்ற என் நட்புக்கள் எல்லாம் இவனும் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போல என்று நினைப்பவர்கள் என்பதையும் நான்  அறிவேன் .

ஐய்யனே ஈசன் அழைப்பில் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீதியில் செல்லும் போதே அழைப்பினை உள்வாங்கினால் ஈசன் .

ஹாலோ.

 அவனின் ரிங்டோன் கர்ணா படத்தின் 'டெலிபேன் அடிக்குது டெலிபோன் அடிக்குது 'என்ற சினிமாப்பாடலினை ஒலிக்கவிட்ட வண்ணம் .

ஹாலோ நான் பரதன் பேசுறன் ஈசன் .

ஓ மச்சான் எப்படி இருக்கின்றாய் ?,என்னாச்சுடா தொலைபேசி இல்லை ?

முகநூலில் தொடர்பு இல்லை ?எங்க போட்டாய்?

 இன்னும் பிராசில்தான் இருக்கின்றீயா ?



முதலில் உனக்கு என் .!



நான் நல்லா இருக்குன்றேன் .

இப்ப விரதகாலம் என்பதை நீ மறந்திட்டியோ ??

அட ஆமா இல்ல  !

சாரி பரதன் சாமி.  மறந்தே போய்விட்டன் .

அரசியல்கட்சியின் தேர்தல் அறிக்கைபோல  அப்புறம் இந்த வருசமும் சாமி மலையேறுதோ ??

அருள்கிடைத்தால் போகலாம் நல்லதே நடக்கட்டும் உனக்கு .



ஆமா நீ ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை ?

எதைப்பற்றி பரதன் சாமி.

 ஒரு நண்பனாக ஈசன் எப்போதும் உன்னோடு எல்லாம் மனம் விட்டுப்பேசுவேனே !மறைக்காம   ஊரில் இருந்த போது!

ம்ம் இருக்கலாம் ஆனால் மறந்திட்டியே ஜீவனி. ஜீ....வ...... னி



என்றதும் ஈசனின் குரலில் ஒரு தடுமாற்றம் ..   உள்வாங்க முடியும் நட்புவட்டத்தில்!


13 February 2014

பார்த்தாலே பரவசம்.

இது காதல் மாதம் என்று காலையிலே முகநூலில் வணக்கம் சொல்லும் பதிவுலக நட்புக்களின்  காதல் போட்டோ பகிர்வைப் பார்க்கும் போதெல்லாம் காதல், காதலன் ,காதலி ,காதலே நிம்மதி ,காதல் கடிதம் ,காதல் பரிசு ,காதலுடன் என்று கற்பனையும் கலந்து பார்த்தாலே பரவசம் அவள் .

போஸ் என்றும் நான் அவன் இல்லை என்றாலும் சிரிப்பழகி   நீ வசிகரா போல மனது விரும்புகின்றேன் என்று சொல்லுவதில் எத்தனை ஆனந்தம்  ஆனாலும்.!


உன்னுடன் ,காதலா காதலா ,என்றென்றும்  ,விரும்புகின்றேன் ,உன்னை நினைத்து .என்று எல்லாம் துள்ளித்திரிந்தது ஒரு காலம் .

.நெஞ்சம் மறப்பதில்லை என்பது போல நெஞ்சமெல்லாம் ,நினைவெல்லாம் நித்யா நீதானே என் பொன்வசந்தம் என்றும் அன்புடன் என் குலமகள் ராதை சின்னா போல இல்லை நீ ஒரு ஜீவநதி என்று காதல் கடிதம் எழுதும் ஆசையில் நானும் இந்த ஊருச்சிப்பாய்  என்னைத்தெரியுமா எங்கள்  ஊர் பாட்டுக்காரன் என்று என்னவளே அவளுக்கு ஆசையில் ஓர் கடிதம் தீட்டினேன்
.

அவளோ ஏழைஜாதி, நீ ஒரு காதல்க்கிறுக்கன் ,இரவுப்பாடகன் ,காதல் சுகமனது ,என்னென்றும் புன்னகையில்  நீ போக்கிரி, புன்னகைதேசம் என்றெல்லாம் ரயில்ப்பயணங்களில் வசந்தவாசல் .அவள் வருவாளா ? நினைவிருக்கும் வரை பத்ரி போல காதல் சொல்வது உதடுகள் அல்ல  இதயத்திருடன் . "எங்கிருந்து வந்தாய்டா  ,"எனதுயிரே என்துயிரே எனக்கனவே  பிறந்தவன் "இவனோ என்று என்னுள்ளே ஒரு மாற்றம் வரவேண்டும் .

மனசுக்குள் வரலாமா விளக்கேற்ற? பார்த்தீபன் கனவு  போல இதயத்திருடன் என் ஆசைக்காதலன் என்று பார்த்தாலே பரவசம் வரவேண்டும் .


அப்போதுதான் காதல் ஜோதி காதல் ஜோதி  காதலா காதலா காலமெல்லாம் காதல் வாழ்க காதல் வைபோவமே என்று எல்லாம் பாடமுடியும் .

அதை விடுத்து இப்படி காதல் கசக்குத்ய்யா என்று எல்லாம் வர்ணஜாலம் காட்டாதே !  தென்மாங்குப்பாட்டுக்காரன் ,தேசிங்கு ராஜா ,நீயில்லை நிழல் இல்லை என்று வாலி போல இன்னொருவன் பொருள் மீது ஆசைப்படாதே இப்போது பிரசன்னா காதல்கலியாணம் செய்தாலும் .

2009 இல்  அன்று மலேசியாவில் கிளாங் நகரில் செந்தோஸா திரையரங்கில் பார்த்தாலே பரவசம் படம் பாத்தபோதில் இருந்து இந்தப் பைத்தியம் தெளியவில்லை சினிமா மோகம் மனசெல்லாம் இனிது இனிது என்றும்  நீ ஒரு வசந்த கீதம் காதல் வாழ்த்துக்கள் சொல்லும் ஆசையில்  இவன்  ஆட்டோக்கிராப் .


அதுக்குள்ள பெப்ரவரி -14 வந்துவிட்டதே இப்படியே இப்படியே இருந்துவிடக்கூடாதா ??இடையில் அருமையான டீச்சர் பாத்திரத்தில்  வந்தாய்.

இடையில்   ஏன் தொலைந்தாய் உருகின்றேன் இந்தப்பாடல் கேட்டவாரே!



!
யாவும் கற்பனையே.

12 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -2

கைபேசிக்கு ரிங்டோன் கண்டுபிடித்தவன் எவனோ நான் அறியேன்! அவன் கண்டுபிடிப்பு விசித்திரமானது .அதுவும் சினிமா பாடல்களை ரிங்டோனாக சேர்த்து இருக்கும் பாவனையாளர்கள் பலவாறு சிந்திப்பது இல்லை.


 மறுமுனையில் இருந்து அழைபபவர் எப்படியான சூழ்நிலையில் இருந்து தொடர்பை தொடர்கின்றார் என்று யார் அறிவார்?, மரண துக்கத்தைப் பகிரும் அழைப்புக்கு "வாடி வாடி கியூட் பொண்டாட்டி நான் நீ இல்லாமல் தூங்கமாட்டேன் " என்றும் ; "டாடி மம்மி வீட்டில் இல்லை,"கலியாணம்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா ? "  வை திஸ்கொல்வெறி  ?கொல வெறி ?என்று இசைச்செருகளை கேட்கும் போது எப்படி இருக்கும்? எதிரில் இருந்து அழைத்தவன் மனநிலை.


 இது எல்லாம் யார் சிந்திக்கின்றோம்!  நவீன உலகில் நாம்படும் பாடு  எல்லாம் ஆடம்பரத்திற்கா?  உடலின் இன்னொரு மாதொருபாகன் போல கைபேசிக்கு  அடிமையாகி நவீன ஆடம்பர உலகிற்குள் ஆட்பட்டுவிட்டோம் என்பதா??

"எந்த மலை சேவித்தாலும் தங்க மலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லை என்று ஆன்மீகத்தில் சரண்  புகும் பீடத்தில் கூட மற்றவர்களுக்கும் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வழிவிட அகன்ற கொட்டை எழுத்தில் அறங்காவலர் சபையின் அறிவிப்பனா ஆலயங்களில் கைபேசியின் செயலைத் தவிருங்கள் என்பதை நாம் கவனிப்பது இல்லை.

  பரமபிதாவை வேண்டி பிரார்த்திக்கும் பீடங்களில் எல்லாம் கைபேசியில் படம்பிடிப்பதும் ஆலய அமைதியை  சீர்கெடுப்பதுவுமே நம் சித்த வேலைகள் சீடர் என்ற போர்வையில் சிக்கிய ரஞ்சிதா போல.

சித்தர்கள் வாழ்ந்த பூமியில் சித்தாந்தம் எல்லாம் சந்திசிரிக்கின்றது  நிந்தியானந்தா காஞ்சிபீடாதிபதி செயல்கள்  எல்லாம் 100 வது நாள் வெற்றிவிழா என்ற சினிமாப்படம்போல.

 நம் ஆலயங்களில் வழிகாட்டவேண்டிய  அந்தணர்கள் கூட அமைதியைக் கெடுக்கும் வண்ணம் இந்த ரிங்டோனில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் " என்று நவீன மீள்கலவை பாடல் போட்டு பக்தர்களுக்கு சிந்தனையை சீர்குலைக்கும் செயல் கூடாது


. உண்மையான ஐய்யப்பன் பக்தன்  நெஞ்சுருகி சிந்தையை பரமார்த்தா மீது வைக்கும் போது !



பாசம் தடுப்பது போல ரிங்டோன் சிந்தனையை இடைஞ்சல் செய்யும் நிலையை குருநாதர் அடிக்கடி சபையில் கண்டித்துச் சொல்லுவதால் தான் ஆலயத்துக்கு நுழையும் முன்னர் கைபேசியை அணைத்து வைத்துவிடுவது பரதனின் இயல்பு  .


 பூசை குறித்த நேரத்தில் ஆன்மீகம் முக்கியம்  பரம்பொருளின் முன் நாம் எல்லாம் அற்பர்கள் .அவன் இன்றி உலகில் ஒரு அணுவும் அசையாது என்பது அன்றோர் வாக்கு. கைபேசி அணைக்க  முன் ஈசனுக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தபோது அவன் கைபேசியில் ஒலித்தது இந்தப்பாடல்.?

இன்னும் தவிக்கின்றேன்.......
இதன் அறிமுகம் இங்கே-http://www.thanimaram.org/2014/02/blog-post_6.html

08 February 2014

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாரீர்கள் .

பதிவுலகம்  எனக்குத் தந்த பல நல்ல வலையுறவுகளின் அன்பிற்கு தனிமரம் எப்போதும் கட்டுப்பட்டவன். அந்த வகையில் இந்த பதிவுலக அரசியல் மேடையில் யார் யார் எப்போது கட்சிமாறுவார்கள் என்று அறுதியிட்டும் கூறமுடியாது .

ஆட்சிக்காக சந்திப்புக்கள் தொடர்புகள் இன்றி ! பதிவுலகம் கடந்து இன்று என்னற்ற முகநூல் குழுமங்கள் இயங்குகின்றது. எதில் உறுப்பினர் எம் நோக்கம் என்ன என்பது எல்லாம் அந்த அந்த நேரத்தின்  நிலையைப்பொறுத்து நேரம் .

இருக்கும் போது நிறையப்பதிவுகளை எழுதுவதும் ,நேசமானவர்களின் வலைப்பதிவுகளுக்கு பிடித்த பகிர்வை பாராட்டுவதும் ,திரட்டியில் வாக்கிட்டு அதனோடு பின்னூட்டம் இடுவதும் .. அது தாண்டி நேரடியாக அழைப்பித்து பாராட்டுவதும் இந்த பதிவுலகத்தில் பலரும் பின் பற்றும் ஒரு வழிமுறை எனலாம் .நானும் தம்பியுடன் முகநூலில் இருந்தாலும் தம்பி டிவீட்ட்ரிலும் பிசி .தனிமரம் டிவிட்டரில் இல்லை)))))))))

அப்படி பலர் அறிந்த ஒரு பதிவாளருக்கு நாளைய பொழுது இன்னொரு பருவ வயது கூடும் நாள் .பாரிசில் இருந்து இந்த தனிமரமும் பாசமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என் வாழ்த்துக்கின்றேன் !


நீ வாழ்த்துவது யாரை என்பது கேட்புது புரிகின்றது :))) .


இவரின் இப்போதைய குடித்தனம் முகநூல்  சரன்யாமோகன் மீது மோகம் கொண்டு இருந்தாலும் .அஞ்சலி ஆண்டி ,ஹான்சிகா பாட்டி .என்று பரவலான குழுக்களிலும் பாசறைப் பேச்சாளராகி இலங்கை முதல் இந்தியா தாண்டி .இங்கிலாந்து இடையில் கனடா என்று இடையில்  டயலொக் போனில் குறுஞ்செய்தி அனுப்ப இலவசம் என்பதைக்கேட்டு இருக்கும் நாட்டில் இருந்து இணையத்தில் முழுநேரப் போராளியாக செயல்படுவதும் டாக்குத்தரின் சுறாசீடி ஏகவினியோகஸ்தர் .


எங்க தம்பி ராஜ் அவர்களுக்கு இன்று 9/2/..பிறந்தநாள்.


இன்நாளில் சகபதிவாளரின் பாசமான அன்புக்காட்சி இது சரன்யா வருவதால்.



////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////.
                                                9/2/14 நாட்குறிப்பில்.
!
 எனக்கும் நட்பாக என்னோடு
எங்கும் பயணித்த என் நண்பனே!
எழுத்திலும் ஏட்டிலும் எத்தனை
எத்தனை காதல் அறிந்தேன் என்றாலும்
எனக்குத் தெரிந்த மொழியில்
என் கண்முன்னே எழுதவும்,
என்னையும் ஹீரோவாக்கிய
என்நண்பனின் காதல்!


எல்லோரும் வாழ்த்த இன்று இல்லறத்தில்
எடுத்துவைக்கும் இன்நாளில்

 9/2/14
எங்கிருந்தோ நானும் வாழ்த்துகின்றேன்.
எனக்குத் தனிமரம் பிரெஞ்சு முகம்
என்று இன்னொரு முகமும் அறிந்தவன் நீ
என் எழுத்துல உறவுகளின்
எல்லோரின்
ஏகோபித்த நல்வாழ்த்துக்களும் எப்போதும்
எங்கிருந்தும் வாசம் வீசும்
எப்போதும் சீரும் சிறப்புமாக
எல்லோரும் போற்ற நீங்கள் வாழ்வீர்கள்  வாழ்க.
என் முதல் வாழ்த்தையும்
என்றும் கேட்ட முதல் ஆசீர்வாதத்தையும்
ஏற்றிவிடுகின்றேன் வாழ்த்துப்பாடலாக!


ஏதிலிக்கு முகூர்ந்த நாளில்
எப்போதும் போல வேலை !!!
என் கைபேசியும் ஓய்வில்
என் வாழ்த்து எப்போதும் உங்களுக்கு
என்றும் உண்டு.