31 July 2015

கவிதையும் காணமும்-.

கனவு போல வந்து
 கவிதை எழுது என்ற
காதலியே!! காத்திருந்து
கதை போல பல
 கவி உன் கண்ணில்
காதலுடன் எழுத
காத்திருந்த காளையின்
காலைப்பொழுதில்.
காதில் விழுந்த இடியடி
கடத்தப்பட்டாள் என்ற
கதை. அன்பே !!நான்
கல்லாதவன் என்று உன்னை
காதலித்து தொழில் அன்றி
காசுக்கு வழியில்லாத
கபோதி என்ற
கருணையும் புரியாத
காவலர். இனவிரோதிகளுக்கு
காதில் விழும் வண்ணம்
கண்ணீரோடு!!
காசும் தரலாம் .இலஞ்சம் .இல்லை
கமிஷன் என்று! நீ இன்னும்
காத்து இருக்கும் சிறைபோல
கடும் வணம் எது?, என்று
காணமல் போன உன்னை நினைத்து
காதலுடன் கண்ணீர்விடுகின்றேன்.


கதை போல  இதுவும்
கடந்து போகும் ஊடகத்துக்கு.
காத்திருக்கும் காதல் வலி
கடுகளவும் கட்டாயம்
கணக்கில் வராத இனவாத
கடற்படையின் கொலை போலத்தான்
காத்து இருக்கின்றேன் !!


காதல் கதை பேச வருவாய் என்ற
கடவுள் போல
கற்பனையுடன்!
காதல் நிஜம் என்றால் நீ
கைதியாக இருந்தாலும்
கைபிடிப்பேன் கடல் கடந்து வந்து.!!!


கட்டாயம் நீ இன்னும் ஏதோ கண்கானாத முகாமில்
கடும் வதை கைதியாக இருப்பாயோ
காதலியே கவலையுடன்
காதலன்  ஒரு
கடிதம்  எழுதப்போறேன் !
காணமல் போனோர் பற்றி
கயவர்கள் கூட்டம் காங்கிரஸ் கூடாராத்துக்கு!!
கவலையுடன் ஒரு ஈழத்து அப்பாவி.
கண்ணீர் தேசம் எழுத இவன்
காந்தி வம்சம் இல்லை
கைவிட்ட ஏதிலிகள் சில தலைமுறை
கதை போல அடுத்த வம்சத்தையும்
கழுத்தறுக்காமல் இருங்கள்..
கனவு போனபின்னும் கைதி போல
காணமல் போனோர் பட்டியளுடன்!


கதிரைக்காக இனியும் சேவகம் தேவையா?,

கற்றவர் என்ற போர்வையில்
கடல் கடந்து  நெஞ்சம் சுடும்
கலாம் கண்ட
கனவு  தேச அரசியல் வியாதிகளே!


//முன்னம் இங்கேயும் காணம் உண்டுhttp://www.thanimaram.org/2013/09/blog-post_22.html









29 July 2015

முகம் காண ஆசையுடன் -15

முகம் காணலாம் முன்னர் இங்கே-http://www.thanimaram.org/2015/07/14.html

 இனி-----------------
                                         
கனவுகாணுங்கள் என்று எழுதியவர் எங்களை விட்டு போட்டார்!
கனவு தேசம் காணப் போனவர்கள் பலர் காணமல் போனநிலை
பற்றி இன்றும்  தேர்தல் காலங்களில் மட்டும் கண்டவன் .நின்றவன் ,காப்பாளன், என்று கழுதையின் காலில் விழும் காட்சிகள் எல்லாம் கதிரை சுகத்துக்காக அலையும் அரசியல்வாதிகளின் காதில் இன்னும் ஒலிக்காக ஈழத்தின்  சிறப்புத் துயரம் எழுத இன்றும்  நவாலியூர் புலவரும் இல்லை!

 இந்த ஆடிமாதம் பற்றி அருமைக்கவிதை பாடிய நம்நாட்டு கவி வேந்தாச்சே!


 இன்று தாம் பெற்ற பிள்ளைகளை , உறவுகளை. கட்டியவன், என்று காணமல் கண்களங்கி கதறும் குடும்பத்தின் வலியும் ,வேதனைகளும் ,வெறும் வார்த்தையல்ல  சந்திச்சு முறையீடு செய்வதுடன் முடியும் கதையல்ல !

இருக்கான?, .இல்லையா ?,என்று பாடமுடியாத சோக வரலாறு இன்னும் எத்தனை காலம் நீளும்.?,??,

 நம்மை வாழ வைக்க வேலை தேடிப் போனோர், வேள்வி போல நாட்டு எல்லை காக்க போனவர்கள். நடுவீதியில்  நடுப்பகலில் நீ அவனா?, என்று கண்கட்டித் தூக்கிப்போன அப்பாவிகளின் வாழ்வு இன்னும் வாக்கு வேண்டிய போது ஊடகத்தில் ஒலிக்கும் ஒப்பாரி நாடகமில்லை..
https://www.youtube.com/watch?t=375&v=u_6HfF9dqeQ.
 இன்னும் கண்களில் ஒளி தேடும் வதை முகாமில் வாழும் சேதுக்கள் போல பல ஈழத்து தமிழச்சிகளும்  இன்னும் நடைப் பிணம்மாக வாழும் நிலையை யார் எப்போது பொதுவெளியிள்  பேசப்போறம்.?,,

 போவது குடும்ப மானம் என்ற ஓற்றை வார்த்தைக்குள் அடக்க வேண்டிய வலியை சூரிய தேவவன் தந்தான் என்று நவீன காலம் பேசும் ஊடக மாமாக்கள்  சொன்னாலும் !நாட்டுக்காக்க என்று கனவுகளுடன் போனவர்களையும் .கைதியாக நடைப்பிணம் போல நம்பி  வந்தவர்களையும் நாடு இனி கேட்கக்கூடாது.

 என்று நன்று திட்டமிட்ட இனவாதம்  இன்னும் சீரழிக்கும் அவலத்துக்கு  நாமும் இந்தநாட்டு தமிழர் என்று அரசகதிரையில் இருந்து ஆர்பரிக்கும் ஈனப்பிறப்புக்களும் இதயம் திறக்க வேண்டும்.

 இனியும்  ஏன் இந்த அப்பாவிகளுக்கு மட்டும் தீர்வில்லை?,,

. ஒரு வார்த்தை இதய சுத்தியுடன் மனம் திறந்து இனவாதம் தோற்கும் வண்ணம்   பொது மன்னிப்புக் கொடுக்க முடியாத வேந்தன் .

மலர்கள் வீசு மந்திரிகள் சூழ மானம் இல்லாது மக்கள் முன் ஏற்றும் தீபத்தையும் ஏற்பானோ?, இந்த உலகம் படைத்த சூரிய தேவன்?,.


 நிச்சயம் அவன் ஒன்றும் வாக்குறுதி கொடுத்துப்போகும் மானம் கெட்ட அரசியல்வாதியும் அல்ல .மக்களும் மறந்து  இலவச அன்பளிப்பு வாக்கு வருமானமும்  அல்ல !

 வதை முகாம்களில் நாளும் கண்ணீர் விடும் அப்பாவிகளுக்கும், நாடளுமன்ற நாய்களின் எச்சில் வாக்குறுதியில் நம்மி இன்னும் சிறையிள் இருப்போரின் வேதனைகளுக்கு நிச்சயம் ஒரு கடவுள் மனம் இறங்கி வர வேண்டும்!

 இனவாதம், மதவாதம், மொழிவாதம் ,இல்லாது இலங்கைக்கும் ,ஈழத்துக்கும் பாலம் போடு அந்த மகா மேதகு யார் என்ற கேள்வி ?,உன்னைப்போல எனக்கும் இருக்கு அசுரன் !

ஆனால் என்னால் உன்னைப்போல தொடர்ந்து எதையும் பொதுவெளியில்  பேசமுடியாத நிலை.

 என்னையும் எந்த வெள்ளைவான் கடத்துமோ ?,என்ற உள் அச்சம் இன்னும் நீங்கவில்லை!


ஆனாலும் என்றாவது ஒருநாள் ஓரு சில உண்மைகள் பொதுவெளியிள் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அறிய வேண்டும்.

 ஆனால் அதுவும் இனவாதம் ,மதவாதம், மொழிவாதம் , போகும் வரை ஊடகத்தில் அதை எந்த மேதையாளும் எழுத , பேச முடியாத விடயம் .


தொடர்ந்து பேசுகின்றேன் உன்னுடன் அசுரன் அதுவரை கொஞ்சம் காத்து இருக்கவும்; மற்ற நேயர்களின் அழைப்பினையும்  உள்வாங்கும் வானொலி அறிவிப்பாளினி  போல


அழைப்பை இடைநிறுத்தினால் சுமா..



....  

26 July 2015

விழியில் வலிதவனே மின்னூல்.

வணக்கம் வலை உறவுகளே நலமா,,,,,,??

வலையில் எழுதுவதன் மூலம் தான் ஏதோ பூர்வ ஜென்ம உறவாக  நட்புக்கொண்டாடுகின்றோம்.  அந்த வகையில் தொடர் கதை மூலம் பலரை வலையில் உறவுகொண்டாடும் தனிமரத்தின் சந்தோஷம் , துக்கம் எல்லாத்தையும் பதியும் ஒரு வீடுபோல   அல்லது ஒரு ஆறுதல் இந்த மரநிழல்!





அந்த வகையில் தனிமரத்தின் முகவரி எது என்றால் மொக்கையான தொடர்தான். இதுவரை  சில தொடர்கள்  சிலதை  ஏதோ என்வலையில் எழுதி பலரை நட்பாகிகொண்டு இருக்கின்றேன்


.இது தேறாது மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.  இன்னும் மெருகூட்ட வேண்டும் .அரசியல் நொடியை குறைக்கலாம் ,உவமானம் ,உள்குத்து போல இருக்கு என்று ஆசிரியர் பீடம்  எங்கோ ஏதிலியின்   எழுத்து ஆர்வத்துக்கு போட்ட அணைக்கட்டு பல என்றலும்  !!

அதை மூடிய வைத்த கவலையை கூகில் ஆண்டவர் போக்கிய வழிதான் தனிமரம் வலை!

 என் வலையில்தனிமரம் கிறுக்கிய    தொடர்கள்  மின்நூல் கண்டும் இருக்கின்றது முன்னர்.


 அந்த வகையில் மற்றும்மொரு மின்நூல்தான் இந்த தொடர்கதையும்.




வலையில் முகம் தெரியாமல் வரும் பலபதிவர்களிடம் ஒத்த சிந்தனை , ஒரே அன்பு பதிவாளரிடம்  இருக்குமா??,என்று தனிமரம் இன்றும் ஜோசிக்கும் கற்பனைக்கோட்டையை உடைத்தவன் ஒரு நம்நாட்டு பதிவாளார்  ரகு !!  அவன் மனசு போல .சுகி எங்கிருந்தாலும் நலமுடன் வாழும் ஆசையுடன்.




 காலத்தின்கொடுமை  அல்லது இனவாத கண்ணோட்டம் அவனை இங்கு வலையிள்  முகம்  காட்டாத முடியாத சூழல் !!

என்றாலும் என்  ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் ஒரு நட்பின்னை இந்த வலையுலகு எனக்கு தந்த கொடை !!

அவனோடு இனைந்து  தனிமரம் கிறுக்கிய தொடர் இது மின்நூல்.




அன்பின் நட்பான தொழில்நூட்பம் அறிந்த இன்னொரு மேதை என் தொடரையும் மின்நூல் வடிவில் உங்களையும் அவசர உலகில் வாசிக்க வழி கொடுத்து  இருக்கின்றார்.




அவருக்கு என் இதயம் கனிந்த நன்றிகளுடன் நீங்களும் இதை வாசித்து திறனாய்வு செய்து கருத்துரை பகிர்ந்து   என்  வெட்டிப்பொழுதை இன்னும் மெருக்கூட்டும் ஆசையுடன்http://freetamilebooks.com/.


தனிமரம் நேசன்
 பாரிஸ்.
.முகம் இருக்கு
தனிமரம் வலை .
அன்புடன்  காத்து இருக்கும் ஏதிலி
தனிமரம் நேசன்.

24 July 2015

முகம் காண ஆசையுடன் -14


முகம் முன்னே இங்கேl
தனிப்பட்ட சந்தோஷம் ;தனிப்பட்ட ஓய்வுக்கு; என்று செலவழிக்கும் நேரத்தை எத்தனைபேர் ஆன்மீக, கலை, கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு சில நிமிடத்தை ஒதுக்கின்றோம்!!

ஆனால் ஒரு சினிமா நடிகன்/நடிகைக்கு எத்தனை ஆவல் கொடுக்கின்றோம்!!!!!!!!!!!


 ஊர் மூலையில் இருக்கும் கோவில் விபரம் புரதாண வரலாறு தெரியாது ?,,ஆனால் புரட்சிதளபதியின் புதிய படப்பூசை படம் தெரியும் :!

புதிய நாயகி பெயர் வாயில் வராது !ஆனால் புதிய புரோபையில் ஏற்றிவைப்போம்.

 இதுதான் பொழுது போக்கு. கேட்டாள் முகநூல்/வலை மேய்வது நேரம் போக்க.



 ஆனால் தேசத்துக்காய்  கொட்டும் மழை என்றாலும், கொதிக்கும் வெயில் என்றாலும் தன் சுயம் தொலைத்து தேசத்துக்காய் தூங்காத கண்மணிகள் பலர் 2009 இன் பின் இன்னும் தேடாதோர் நிலை?, போல சிறைக்கூடங்களில்  உயிரோடு நடைப்பிணம் சேது போல வாழ்வோர் நிலை பற்றி எந்த ஈழத்து அரசியல் பலர் வியாபாரிகள் /இந்திய நடுவன் அரசின் ஜால்ராக்கள்  பலர் என்றாலும்!

 இறுதியில் ஈழத்தாயின் கழுத்தில் நஞ்சு ஏற்றிய  சமாதான விபச்சாரி எரிக்சொல்ஹைம்  போல  வந்து போன அரசியல்தொற்று நோய்கள் ஏன்?,, ஏன் ?,,ஏன் ????


இன்னும் ஈழக்காற்றுக்கு மூச்சுக்கொடுத்து முகம் தொலைந்து இன்றும் இலங்கையின் சிறையில் சந்தேகக்குற்றச்சாட்டில் கைதியாக இருப்போர் பற்றி இன்னும் வாய் திறக்காமல் இருப்பது ??


இதுதான் ஏகலைவன் குருதட்சனையா??

இல்லை இன்னும் செத்துப்போங்க அனாதைகளா என்று வக்கிர பார்வையா ??,


இது ஈழத்து தமிழர் பார்வையிள் எழுதும் பதிவாளர் நிலை என்றாள் !


இன்னும் மேலதிகமாக சகோதரமொழி சிங்களம் அறிந்தவன் பார்வை இன்னொரு உலகம் பேசும்.


 அரசியல் வாதிக்கு உடல்நிலை ஆபத்து என்றால் உடனே நட்சத்திர வைத்தியசாலையில் உடனே அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உடனே தீர்ப்பு எழுதும் போகலாம் என்று !

ஆனால் என்றோ புலிகளுக்கு உதவினார்கள் என்ற போலிக்குற்றச்சாட்டில் இன்னும் சிறையில் வாழும்அப்பாவி  சிங்களவன் உறுதி மொழி எல்லாம் முகநூலில் எவனும் பேசமாட்டோம்!


கேட்டால் ?,,jஇங்கே வெட்டியாக யாரோ ஒரு ஹீரோவின் ஜால்ரா !!


அதுவும் ஒரு பிரபல்ய வலை/முகநூல்/பதிவர்!

 அவர் உனக்கு நட்பு ஏன் அவர் இது பற்றி எழுதினால் சிறைக்கு போய்விடுவாரோ,,,  ,,????????????? முகநூலில் வேஷம் ப்போடும் அவரும் ஒருக்கால் போகம்பரை சிறைக்கு போய் வந்தால் எனக்கும்   வரும் அவசர் தமிழ்க்கொலை பற்றி புரியாமல் மேட்டுக்குடி என்று  அவர் நொங்கு வகுப்பு எடுக்கும்  நிலையும் இல்லாமல் போகும்[[[[[[[[[[[[[[[



 இல்லை ஹிட்சு கிடைக்காதோ சுமா!


 அசுரன் நான் உன்னிடம் இந்த விடயம் பேசவந்தது நீ யாருக்கும் ஜால்ரா போடாது உன் பார்வையிள்  நீ துணிந்து எழுதுவாய் என்ற நம்பிக்கையில்.


மற்றவர் பற்றி நான் ஜோசிக்கும் நிலையில்  இல்லை!

ஆனால் நான் சேகரிச்ச விடயம் பொதுவெளியில் பலரிடம் உன்னால் போக முடியும் என்ற நம்பிக்கை இருக்கு அசுரன்!

ஓ அப்ப நான் இன்றைய ஜனாதிபதி போல சிறைக்கைதியா[[[[[[[[[[[[[[[[[[[[[[ இல்லை! அது உள்வீட்டு /அயல்நாட்டு/ சர்வதேச அரசியல்  .

அதை குப்பையில் போடு அது  இலங்கைவிடயம் .

நமக்கு நம்விடயம் முக்கியம்!!

  நீ நான் தரும் விடயத்தை பொதுவில்  எழுது! நடப்பது சாமாணியர்கள் வாழ்க்கை நிலை

! உனக்கு கேவலம்பிளாக்  ஹிட்சு தேவை என்றால்  என்னுடன்
எதுவும் தொடர்பு கொள்ளாதே !

நானும் என் பாதையில் போறன்!

 ஓ தனிக்குடித்தனமா சுமா?,


 இல்லை தனி வழியா,,  ??????????????

நீ எதனை எழுத நினைக்கின்றாய் என்று நான் அறியேன் ஆனால் சொல்ல வருவதை ஆதாரத்துடன் அனுப்பு !நடிகன் பதிவாளர் நாடு கடந்து ஈழம் வரை தேடலில் வாசிப்போரிடம் போவேன்!

 இது தனித்துவம் அல்ல  தன்நம்பிக்கை!



   ,,,,,,,,,,,



தொடரும்

19 July 2015

முகம் காண ஆசையுடன் -13


முகம் காண முன்னர் இங்கே -http://www.thanimaram.org/2015/07/12.html

இனி...
----------------------
புரியாத புதிர் இனவாத இலங்கை
புலனாய்வுப் படையும்,
புடை சூழ்ந்த இராணுவமும் ,காவல்துறையும்
புனையும்  சதிவலை எல்லாம்
புலிப்பட்டம் கட்டி
புகழ் சிறைபோல பூட்டிய வரலாறு!



புண்பட்ட நெஞ்சமும்
புரட்டிக் கொடுத்த காசும்
புண்ணிய பூமியை அவசரமாக  விட்டு
புறமுதுகிட்ட போர் வீரன் போல அல்ல
புதிய பேரில் கடவுச்சீட்டு வாங்கி
புலம்பெயர் தேசம் வந்த கதை
புணை பெயரில் எழுதலாம்!
புதியபாதை புதிய தொடர் என்று!!
புரட்சியின் பாதையில்
புகழ் பெற்ற வடுக்கள்  எல்லாம்
புதினம் போல  எழுதவேன்.


புதிர் போடாமல்
 புடம் போட்ட தங்கம் போல
புட்டுப்புட்டு வையுங்க தொடர் எழுத
புதுக்கவிதை போல
புரிஞ்சுக்க இலகுவான விடயத்தை!
புதுப்பொண்ணே சுமா!


புகழ்ச்சி அல்ல
புறம்போக்கை  புடைசூழ கலியாணத்துக்கு
புதுப்பத்திரிக்கை அழைப்பு  வைக்காமல்
புதுக்குடித்தனம்  போகும்
புதிய செய்தியும் அறிவேன்! சுமா
புதுமனிதன் போல!
புன்சிரிப்பு அறியாதவன்.
புத்தன் தேச பூசா சிறையில்
புன்னகை சிந்தியவன் .

புதியமுகம் பாரிசில்
புழுகுமூட்டை வியாபாரம்
புண்ணாக்கு விற்பவன் விரைவில்
புதிய முகாம் பூந்தோட்டம்
புணர்வாழ்வின்  புதிய அவலம்
புதுவயல் போல உழவா
புன்முறுவலுடன் !


புதிராவன் நீ நான் அறிவேன் அசுரன்
புகழ்ச்சியல்ல புனைய வேண்டும்
புண்பட்டவர் வரலாறு!

கொஞ்சம்  இருங்க  அழைப்பிள் வருகின்றேன் என்று இடையில் சுமா தொடர்பை துண்டித்தாள் !!

ஏன் என்று புரியாமல் அடுத்த பாடலுக்கு காத்திருந்தான் இணைய   வானொலியில்!

தொடரும்......

பூசா- இலங்கையின் பிரபல்ய சிறைக்கூடம்!

16 July 2015

முகம் காண ஆசையுடன் -12

http://www.thanimaram.org/2015/05/10.html
http://www.thanimaram.org/2015/07/11.htm//
.....  இனி......





தேர்தல் என்றால் தேரடி வீதியும்
தேடப்படுவோர் வீதியும்
தேடிவரும் தேர்தல் நாயகர்கள்/ளிகள்
தேடாமல் போன தேசத்துக்காய்
தேடுவார் இல்லாத தலைவன் போல
தேங்கிய வதை/சிறை/ கைதிகள் என்று
தேசத்துக்காய் சிறையில் முகம் தொலைந்து
தேடிக்கொண்டு இருக்கும் உறவுகள்நிலை
தேர்தல்தல் வாக்குறுதியில் இன்னும்
தேற்ற வேண்டிய விடயம் எல்லாம் ஏன்?,,
தேவையில்லை என்று வாக்கு அரசியலில்
தேறாமல் போனார்கள்! இன்றைய
தேவடியாள் ஆட்சி என்று  அன்று மேடையில்
தேர்தல் பரப்புரை செய்த
தேர்ந்த வடகிழக்கிழக்கு
தேர்தெடுத்த   பண்டிதர்கள் எல்லாம்!
தேவை அரசின் கொடுப்பணவும்
தேறாத செலவு என்ற பாராளுமன்ற
தேர்வுநிலை கணக்கும் தான்!


தேறமாறமாட்டார்கள்  அரச கதிரையில்
தேயிலைத்தோட்ட அட்டை போல
தேறிய எந்த அரசியல்வாதியும்!


தேவை எனில் தன் கணவனையும் கொண்டவனை
தேடிப்போவாள் ஈழம்  என்ற கோஷம் போட்ட
தேர் போல இலங்கை பாராளுமன்றம் வண்டி ஓட்டிய
தேன் தமிழ் பேசியவன் பொண்டாட்டி!
தேடினாள் கூகிளில்அவள்
தேசிய அரசின்  கடந்த மகளீர்  அமைச்சர்!


தேடிப்பார்த்தாள் ஈழத்து  ஒரு   தமிழச்சியை
தேர்தலில் தோற்ற மகிந்த மாமாவுக்கு மருமகள் என்று
தேடியும் கிடைக்கல வடக்கில் இன்னும் இனியும்
தேவதை போல அசின் என்றும் ஷ்ரோயா என்றும்
தேர்தல் முடிந்தாள்  தெரியும் லீலை[[[[[[[[[[[[[[!


தேசம் கடந்து அவுஸ்ரேலியாவுக்கு
தேசம் இல்லாத தமிழனை
தேவை பல இலட்சம் என்று நட்டநடுக்கடலில்
தேடாமல் விட்ட வரலாறு  எல்லாம்
தோண்டும் காலம் விரைவில் வரும் !!!


தோற்றால் தேர்தலில்  என்று
தேர்ந்த பதிவர் போல தொடரவா ?,,


தேன் மொழி பேசும் வலைப்பதிவாளினி சுமா!
தேடிவந்த நடிகன் பதிவாளர்  அசுரன்
தேறாத பன்னாடை! இன்னும்
தேன் தமிழில் ஒரு பதிவு எழுத!
தேர்தல் காலம் போல என்னிடம்
தேற்ற வந்த விடயம் என்ன,,?,
,தேகத்தில் இல்லை வளு
தேடலில் நான் ஒரு அகதி!
தேடினாள் இல்லை முகநூலில்
தேற்ற ஒரு பாடல்!
தேடி வருவேன் ...
தேவதையை காண என்றும்
தேடுதல் போடுவேன் வெட்டிப்பயல்[[[[[[[[[[[[
..




தொடரும்.....


09 July 2015

முகம் காண ஆசையுடன் -11

http://www.thanimaram.org/2015/05/10.html.
இனி......



கைபேசியில்  உள் வரும் அழைப்பிணை எல்லா நேரத்திலும் உள்வாங்க முடியாத சூழ்நிலை  புலம்பெயர் தேசத்தின் சமையல் வேலையின் சாபம் என்பதை பலர் அறியாமல் !
எங்கே  ஊத்திக்கிட்டு இப்போது படுத்திருக்கின்றானோ என்பதுதான் சிலரின் உடனடி  தீர்மானமாக இருக்கும்!

 அப்படித்தான் தாயகத்தில் இருக்கும் சுமாவும் எண்ணியிருந்தாள் !என்பதை அவளின் நேரடி ஸ்கைப்பின் அழைப்பிள் உணரக்குட்டியதாக இருந்தது அசுரனுக்கு!

 என்ன அசுரன் நான் கேட்டத்துக்கு பதில் ஏதும் இல்லை. ஜானதிபதியின் வாக்குறுதி போல எல்லாம் பொய்யா??

 இல்லை சுமா நீண்ண்ட நாட்கள் உங்களுடன் பேசனும் என்ற முகநூல் தோழி ஒரு பதிவாளினியா நீங்களா ?,இப்போது இப்படி எல்லாம்  நடிகன் பதிவாளனிடம் இப்போது  பேசுவது என்ற சந்தேகம் இன்னும் அகலவில்லை!

 ஆமா என்ன கேட்டீங்க ?,என்ன கொஞ்சக்காலம் முகநூலில் கும்மியில்லை .வலையில் பதிவில்லை  ஏன் சொந்தச் சரக்கு தீர்ந்துவிட்டதா  ?,இல்லை  ஏதாவது புதிய பாதையிள் ஆக்காட்டிபோல பறந்தச்சா ?,

 இல்லை எழுத்துக்குஞ்சப் புகழ்போதை தெளிந்து விட்டதா என்றா! 

நிச்சயம் இல்லை சுமா எல்லாருக்கும் ஒரு சில நேரத்தில் ஒரு சில சிக்கல் அல்லது புறச்சூழ்நிலையில் தனிப்பட்ட தேடல் இருக்கும்! அதனால் நானும் ஒதுங்கியிருந்தேன் !!அதுக்காக  ஏதோ குடி போதையில் மூழ்கிவிட்டேன் என்று நீங்களும் உங்க முகநூல் நட்புக்களும் என்னை நிஜத்தில் புரியாமல் இருந்தால்.

  சாமானிய அசுரன் என்ன சொல்ல முடியும் !  எனக்கு எழுத்து ஒரு ,மலைப்பயணம் போல திறந்த யாத்திரை தோன்றிய  பலதை உணர்ந்து எழுதுக்கின்றேன் நான் யாரிடமும் போய் மொய்க்கு மொய் என்று ஏதையும் கேட்பவன் அல்ல!

 உங்களின் பதிவை படித்தால் கருத்துரைப்பேன். அதைவிடுத்து உங்களைப்போல உங்கள் பதிவை படித்தேன் ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை .தயக்கம் .பயம் .என்று எல்லாம் மக்கள் ஜனாதிபதி தன்கட்சியில் இனிமேல்  ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கமாட்டேன் என்று கூறிய வாக்கு மறந்து போய் சொந்தக்கட்சியில் ஊழல்வாதியினருக்கு மீண்டும் போட்டியிட இடம் கொடுத்து தன் வாக்கையே களங்கம் செய்பவர் போல இல்லை நடிகன் வலை அசுரன் ! 

எதை எழுதனும் எதை எழுதக்கூடாது என்பது என் சிந்தனை மட்டுமே!!


 புலம்பெயர்ந்தாலும் அசுரன் தன்மானம் கெட்டுப்பேனதில்லை சுமா! எனக்கு நட்பு பிடிக்கும் நான் பல வானொலியில் பல விடயம் பேசும் ஒரு வானொலி நேயர். அதை செவி மடுப்போர் என்  நட்பை முகநூலில்   விரும்பி வரும் போது அவர்களையும் என் நட்புவட்டத்தில் இணைத்து இருக்கின்றேன்.

 அதுக்காக அவர்கள் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. உங்களின் ஈழத்து /இலங்கை  ஊடக போட்டிக்கு நான் கட்டுப்படமாட்டேன் சுமா!

ம்ம்ம் பொங்கி முடிஞ்சுதா அசுரன் ?,.

இல்லை யாதர்த்த நிலையை கொஞ்சம் சொன்னேன்  ஈழத்து படைப்பாளி சுமாவே! 


நீங்கள் தப்பாக நினைத்தால் ஐயாம் சாரி அசுரன் ஒருத்தருக்காகவும் மாற மாட்டேன் .என் துயரம் என்னோடு!! 

என் பாதை பால் நிலாப்பாதை போல!

அரசியல் வேண்டாம். இலக்கியம் வேண்டாம். ஊடகம் வேண்டாம். அசுரன் நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டுத்தான் அழைப்பிள் வந்தேன் !!

அதை முதலில் சொல்லி விடுகின்றேன்!!!

.அது என்ன இலங்கையின் அடுத்த  பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி போலவோ  ஆவலுடன் கேட்க காத்து இருந்தான் அசுரன் சுமாவின் கேள்வியை!


தொடரும்!!!!!

03 July 2015

தொலைந்து போவேனோ ???????????

தொடர் என்று தொல்லையாக
தொடரும் பதிவாளர் தனிமரம்
தொலைந்து போனாரா ?,இல்லை
தொழில்நுட்பம் புதிய முகநூலில்
தொழில்படுகின்றாரோ தொடர்கதை
தொடங்கி தொக்கி நிக்கும் கதையின்
தொடர்வோர் நிலை புரியாமல்!


தொலைதூர அன்பிள்
தொடுவானம் போல
தொட்டுச்செல்லும்
தொழில்நுட்ப வலையின்
தொழில்குழுமம்
தொடர்ந்து கேட்கும்??
தொல்லை என்ற சோம்பல்
தொடவில்லை என்றாலும்!
தொழில் இல்லாத பொருளாதார
தொல்லையில் தேடலில் வேலை என்று
தொழில்கொள்வோர் முகவரி தேடிஓடுவதாள்!




தொலைந்து போகாமல் இருக்க
தொடர்ந்து ஏறுகின்றேன் படிகள்!
தொடர் சுமையல்ல எழுத என்றாலும்
தொடர மனசுக்கு இல்லை
தொல்லையகளும் சுமை!


தொடர்வேன் விரைவில்
தொலைய மாட்டேன் இனியும்.தனிமரம் அல்ல

 தொலைந்து போகாது   தோப்பாக  தனிமரம்
தொடரும் வலையுறவுகளின் அன்பு
தொட்டுச் செல்லும் வானவில்
தொடர்கதையில்!


தொடர் கதை  விரைவில்




[[[[[[[[[[[[[[[[[[[[[[[