18 February 2019

காதல்க்கேடி!))))

இப்போதெல்லாம் முன்னர் போலபாடல்கள் கேட்கும் புறச்சூழ்நிலைகள் இல்லை .நிலையற்ற பொருளாதார தேடல்,இணைய வானொலிகளை செவிமடுக்க முடியாத கைபேசி செயல் இழப்பு , வீட்டில் நுழைந்தால் வாரிசுகளின் வா வெளியே போகலாம் என்ற ஆசைக் குதுகலிப்பு  எதிர்பார்ப்பு !

எப்ப பாரி வேலை வேலை வீட்டுக்கு வந்தால் ஒரே பேஸ்புக் வீட்டில் ஒருத்தி இருக்கின்றாள் என்ற நினைப்பு என்ற தமிழருவி வானொலியில் வரும் வர்த்தக விளம்பரம் போல நிஜத்திலும் கூல் கூல் என்றெல்லாம் சாமானிய வாழ்வியலில் அதிகம் மூழ்கிப்போய்விட்டேன் .)))) 

ஆனாலும் இன்னும் ரசனை மாறவில்லை பாடலுக்குக்கான தேடலில் என்று சொல்ல நினைத்தாலும் ,ஆர்ப்பாட்டமான இசைகள் அதிகம் என்னை ஈர்ப்பதில்லை. இந்த ஐரோப்பிய பரபரப்பு வாழ்வில்

காதல் மாதம் இது என்று கவிதை எழுத நினைத்தாலும்! காலநதியில் நானும் ஏதிலியாய்ப்போனேன்!)))

புத்தாண்டும் பிறந்தாச்சு பூவே நில்லடி  என்று இவ்வாண்டிலும் எம்மவர் கந்தப்பு ஜெயந்தன்  இசையில் செந்தூரனின் வரிகளில் ஒரு பாடலை காட்சிகளுடன் முகநூலில் பகிர்ந்து இருந்தார்  . 


 காட்சி அமைப்பில் சில முரண்பாடுகள் தனிப்பட்ட ரசனையில். தொடர்ந்து  ஒரே மாதிரியான இசை ,இந்திய சினிமாவின் தாக்கம் அதிகம் என்றாலும் நம்மவர் பாடலை பலரிடம் கொண்டு சேர்க்கும் ஆசையில் இதோ பாடல் நீங்களும் ரசிக்க!)))

11 February 2019

வரலாமா? !!!!)))

வணக்கம் உறவுகளே. மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் தனிமரம் உங்களை நாடி சிறகுவிரிக்கின்றேன் .))) 

பொருளாதார தேடல், ஆன்மீகத்தேடல் என்று சிலமாதங்கள்  தனிமரம் வலைக்கு ஓய்வு கொடுத்தாலும் மீண்டும் எனக்குள் தோன்றும் எழுத்து ஆர்வத்துக்கு  மடைதிறந்த வெள்ளம் போல தனிமரம் என்ற வலையில் நீர் பாய்ச்சும் ஆசையில் .ஏதிலியும் இணையத்தில் கிறுக்கப்போகின்றேன்.!


 எப்போதும் போல உங்களின் அன்பும் ,ஆசீர்வாதமும் தொடரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்.
—-

கவிதை—1

—-
கலைந்தும் கலையாத
காலைத்தூக்கத்திலும்
கடகடவென ஓடும்
கண்டி ரயில் போல
காதலியே உன் நினைவுகளும்
கண்ணைச்செம்புகின்றது!

—-

என்னையும் வெறுமையாக்கி
என்றும் இலங்கையின் 
எதிர்கட்சி போல
எல்லாமும் தூற்றுதல்
எடுத்த சபதம் போல!
எப்போதும் சுடலையில்
எரிக்கின்றாய் உன்னையே
என்றும் நேசிக்கின்றேன் என்ற
ஏதோ வார்த்தையில்!
ஏதிலியும் புலம்புகின்றேன்!
(யாவும் கற்பனை)




———

இன்றைய திருமணத்திற்கு நிச்சயம் அந்த முகம் வரும் இந்தமுகமும்  வரும் என்ற எதிர்பார்ப்பில்  நீ வருவாய் படத்தில் தேவயானி போல  அதனால் ....

விரைவில் 


இனியும்