27 February 2015

போதை தெளியாது.!

காதல் ஒரு போதை எப்போது குடிக்கத்தோன்றும் பாணம் என்று யாரும் நினைக்காத ஒன்று !

ஆனால் பருக வெளிக்கிட்டாள் அது கலவியள் எல்லாம் கற்றுத்தரும் ஒரு சோமபாணம்.


இதைப்பருகாத கவிஞர் உண்டோ இப்பாரில் என்றால் அது விடையில்லாத உலகமுடிவு!

அது போலத்தான் புதிய ஸ்வரம் இது சங்கீத உலகில் சாத்தியமா?? என்றால் இல்லை என்பதும் !சாத்தியம் என்பதும் சுருதி சேரும் மாற்றம் எனலாம் !

ஆனால் ஒவ்வொரு ஸ்வரங்களின் பின்னே இருக்கும் திரிபு  மேளகர்த்தா ராகங்கள் என இசைக்குறிப்பு சொல்லும் என படித்ததுண்டு ஏட்டில்  அதை நான் அறியேன் .

ஆனாலும் இந்தப்படம் அறிவேன்.

  இந்தப்படத்தின் பாடல்கள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகள்.

 இலங்கையில் இந்தப்படத்தை பார்த்தவர்கள் சிலர் ஆனால்   பலர் இதன் பாடல்கள்  அறிந்தவர்கள், .அருண்மொழி  இளையராஜாவின் அறிமுக பாடகர் என்பதை அறிய முன் அவர் ஒரு தேர்ந்த  புல்லாங்குழல் வாசிப்பாளர் என்பது சிலர் அறிந்த தகவல் .

 இன்று போல  1980  இன் பிற்காலத்தில் ஈழத்தில்  பல பாடல்களை நினைத்த  நேரத்தில்  கேட்கமுடியாது என்பது எல்லோர் வீட்டிலும் வானொலியும் இல்லை. `மின்சாரமும் இல்லை என்பது எத்தனைபேர் அறிவோம்! இன்றும் சிலபாடல் நெஞ்சில் ஒரு போதை இது எப்போதும் தெளியாது!இரவின் மடியில் கேட்கும் போது.


25 February 2015

தொட்டால் சினிங்கி!

இசை ஒரு போதை வானொலியோடு இயங்கும் சிலருக்கு. பல வேளைப்பழுவையும் . அன்றாட உணர்வுச்சிக்கலையும் தீர்ப்பது இசையாக இருப்பது  சிலருக்கு வாய்க்கும் வரமாகும்.



 இவர்கள் கடமையும். வருமானம் தரும் தொழிலாக அமைவதும் எல்லோருக்கும் கிடைக்காத அம்சம் அதுதான் வானொலி அறிவிப்புப்பணியாகும்.



 இலங்கையில்  நடிகர்/நடிகைகளுக்கு இல்லாத புகழ் இந்த வானொலியில்  இருப்போருக்கு கிடைத்து ஒரு காலம்!

 என்றாலும் இன்று பல்லாயிரம் இணைய வானொலி வந்தாலும். அதனை இயக்கும் ஆரம்பக்கல்வியைக்கொடுத்து இலங்கை வானொலி என்பதனை நாம் மறக்முடியாது.


 அந்த வானொலி நேயர்களில் தனிமரம் நேசனும்  ஒருவன் என்பதில் எப்போதும் எனக்கும் பெருமைதான் சில பாடல்களை  மீண்டும் இணையத்தில் கேட்கும் போது.


  தபால் அட்டையில் கேட்ட காலம் போல இன்று மனம் இல்லை என்றாலும் அது ஒரு காலம் நெகிழ்ச்சியில் இரவு நேர இசைத்தேடல்  இந்தப்பாடல்! இப்போது எல்லாம் இப்படியான பாடல் குறைவு எனலாம் கால அவசரகதியில் !


அவுஸ்ரேலிய இசையமைப்பாளர்கள் தமிழில் முதல் இசைமீட்ட தென்னகம் வந்த  பிலிப்-ஜெரி இசையமைத்த இந்த தொட்டால்சினிங்கி படம் இன்னும் மறக்கமுடியாது கதை  திரைக்கதை இயக்கம் தந்த  k. s.அதியமான் !



 தலைமுறை படத்தில் ஹீரோவாக வந்து போனவர் நினைப்பு இன்று   பலருக்கு ஞாபகம் இல்லாவிடினும்/

 இந்தப்பாடல் இன்னும் நினைவில் இருக்கும்..


ஆனால் இவர் இயக்கிய சொர்ணமுகி படத்தின் கதையை அன்நாட்களில் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக எழுதிய பின் திரையில் இயக்கி வெற்றிகண்டார் என்பதும் வரலாறு.


21 February 2015

ராஜாவின் ராஜாங்கம்..

இசையில் தொலைவது அல்லது இசையில் மூழ்குவது என்பதுபாடலில்  ஒரு தேடல் .இது வானொலிப்பணியில் இன்னொரு சுகராகம் ஷார்மிளாவின் இதயராகம் போல இலங்கையில்!



ஆனால் பாடல் பற்றிய மேலதிக தகவலும் நினைவுகளும் ஒருபோதும் வானொலி அறிவுப்புக்கு மேலதிக தகுதியாக மார்க்கு அல்லது புள்ளி வழங்கும் திட்டம் ஏதும் இல்லை நேர்முகத் தேர்வின் போது என்பதை பலமேடையில் கூறிய அன்னரைட்  மூத்தவர் மறைந்த பாலச்சந்திரன் குறிப்பு இங்கே-http://ksbcreations5.blogspot.fr/2010/11/5.html


பாடல் நேசிப்பு  அறியாது பின்புல தகுதியில்  சில வானொலிஅறிவிப்பாளர் தகுதி பெற்றவர்கள்  அறிவிப்பாளார்களாக இலங்கையில் இருந்தார்கள் என்பது நான் கண்ட நேரடி அனுபவம் 1998 இன் முற்பகுதியில் .அப்போது விளம்பர  வியாபாரத்தில் தனிமரம் ஒரு புதியவன்!


ஆனாலும் ஒரே பாடலில் பல பாடலை இணைத்து ஒரே காட்சியில் கைதட்டளைப்பெறும் உத்தியை இசைஞானி என்றோ  செய்தாலும்!


 அது இன்று புதியவர்களுக்கு மீண்டும் ஞாபகத்தில் ஒன்று இலங்கையில் ரூபாவாஹினி தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியின் முன்னோட்ட இசை இந்தப்பாடலின் ஆரம்ப குறியிசையே!!

பாடல் முழுவதும் இங்கே-



உங்கள் மனதில் தோன்றும் பாடல்கள் எதுவோ[[[[[[[[[[[[[[[[[[[

20 February 2015

முகம் காண ஆசையுடன் -2

கைபேசி அழைப்புக்காய் விடியும் வரைகாத்திருந்து ஈழம் கேட்டு கடலில் பிணம் போல உயிர் போனவர்கள்  என்பது சினிமாவில்  காதலில் ஜோடியாக ஊரைவீட்டு ஓடியவர் போல  சுகமாக இருக்கலாம்!



!ஆனால் வேலை தேடி நேர்முகத் தேர்வின் மறுமொழிவரும் வரை  காத்து இருக்கும் ஒரு குடும்பத்தை சுமக்கும் சுமைதாங்கி  மூத்த ஆண்மகன்  நாட்டைக்காக்கும் தலைவன் போல தன் சுய விருப்பு வெறுப்பை மறுந்து ஒரு ஞானி போல வாழும் நிலையை எல்லாம் யார் உணர்வார்கள்!


 இது என்ன இன்றைய நித்தியானந்தா போலவா  80 இன் முன் அன்றைய ஈழத்தில்தம் குடும்பத்துக்காக தன்னை வருத்திய பல அண்ணமார்கள் .அக்காள்மார்கள்.தம்பிமார்கள் .. எல்லாம்  இந்திய சினிமா அறிந்த தங்கைக்கோர் கீதம்.  அண்ணா போல சிலராக இருக்கலாம்!தம்பிதான் எல்லாம் என்று போன தர்மத்துரை என்றாலும் !


அக்காள் அவள் ஒரு தொடர்கதை சுஜாத்தா போல தம்பிமார்களின் நலனுக்காக ஈழத்தை விட்டுவந்து புலம்பெயர்தேசத்தில் அனுபவதித்த துயரம் எல்லாம் ஏனோ புலம் பெயர் இலக்கியம் பேசாது !


கேட்டாள் ஈழம் என்றாலும் .இலங்கை என்றாலும் இன்னும்  !ஒரே ஓப்பாரி ராகம் தான் இது தோடி ராகம் பாட மாநகரக்காவல் படம் அல்ல!


என்ன அசுரன் நீ அழைப்பாய் என்று எத்தனை மணித்தியாலம்  காத்து இருப்பது ! ஏன் அழைப்பிள் வருவதாய் கூறிவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவேன் என்று கூறிவிட்டு வராத ஜானதிபதி வேட்பாளர் போல ஓடிவிட்டீங்க!


ஓ நிவேதா நீ ஒரு அரசியல் பத்தி எழுதும் நிரூபர் இலங்கையில் ! ஆனால் உன்கற்பனைக்குதிரைக்கு ஏது கடிவாளம். இப்படித்தானே தமிழ் இலக்கியம் சொல்லுது   !


"நான் புலம்பெயர்தேசத்தில் இருக்கும் சாமானிய அப்பாவி. நீ இலங்கையில் இருப்பது போல குறிப்பிட்ட நேரத்துக்குள்    வாழ்க்கை வாழும் ஒருத்தியாக இருக்கலாம் "

என்கற்பனையும் ;புலம்பெயர் வாழ்க்கை அனுபவமும் வேற நிவேதா !


ஏண்டா நடிகன் பதிவாளர் அடிக்கடி கோப்பிபதும் ,உணர்ச்சி வச்சப்படுவது அதனால்  வரும் பாதிப்பு அறியாது பிரபல்ய முகநூல் குழுமம்மம் விட்டு ஓடுவதும்.

நடிகன் பதிவர்  ஒருவர்  குடிபோதையில் உளவிட்டு நேரில் நின்று பேசாத யூத்தளபதி   நடிகன் போல ஒரு திடமான நெஞ்சம் இல்லாதவன் என்று பேசும் முகநூல் நட்பை  நானும்  ஒரு பதிவாளினி அறிவேன் அசுரன்!


 ஆனால் நான் இன்று  உன் அழைப்புக்காய் காத்து இருந்தது என்  நண்பியின் கலியாண விடயம் பேச !

அந்த நண்பி  உன்முகநூல் மூலம் நடிகன் பதிவர்  அசுரன்  ஒரு ஈழத்தவர் என்று  அறிந்த  என் நல்ல நண்பி.

நீதான் யாவரும் ஊரே யாவரும் கேளீர்  என்று முகநூலில் எல்லாரையும் நட்புபாக ஏற்பாய்!   சினிமா நடிகை அடுத்த கால்ஷீட் தருவேன் என்ற புகழ்பெற்ற நடிகை போல !


 ஆனாலும் சுமா  ஒரு ஊடகவாதி  என்பதாள் இன்றுவரை. நீயும் உன் நட்பும் இலங்கை அரசுபோல அவளை அறியாமல் தேடலில் என்ன புலன் விசாரணை செய்தாலும் சுமாவும்  ஒரு பதிவாளிதான் அசுரன்.

ஆனாலும் என்ன ஆச்சர்யம் தெரியுமா?? அவளும் உன் ஊர்தான்.!

 ஆனால் நீ ஈழத்தில் பிறந்தவன் அன்றி வேற  ஏதுவும் உன் முகநூலிலோ; அல்லது  இன்று கூகில் ஆண்டவர் தந்த வரம் வலைப்பதிவு ஏதிலாவதும் சொல்லி இருக்கின்றாயா ?,

அல்லது வெட்டியாக உன் சுயபுராண வெற்றிப்பதிவு சரி எழுதியிருக்கின்றாயா?,

 இப்படித்தானே அச்சு ஊடக பத்திரிக்கை பிளாக் பற்றி உள்வட்டத்தில் கதைக்கின்றது!

ம்ம்  இருக்கும்  போட்டி உலகில். ஆமா நிவேதா நான் வலையில் இருப்பது உன்னைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்  என் முகம் அறிந்த பள்ளிநட்புக்கள். உண்மையாக இருக்கும் பொதுவெளியில்  ஆசுரன் ஆனால் சாட்டில் சிலநேரத்தில் சிலமனிதர்கள் ஈழம் என்ற போதையில் உளறிவிடுவார்கள்.

 நீ அறியாய் என்னிடம் இருக்கு முகநூல் சாட்டிங் ஸ்கிரின் சாட்!


நடிகன் வலையை  பிரபல்யப்படுத்தும்  நோக்கம் அன்றி நம்தேசத்தின் இருட்டடைப்பு செய்த செய்தியை பிரபல்யப்படுத்தும் ஒரு சாமானியம்!

அப்படி நீ நினைக்கலாம் அசுரன் ஆனால் புலன்விசாரணைக்குழு எங்கும் ஊடுருவி இருக்கு இணையப்பரப்பி்ல் நீ வெளிநாட்டில் சுதந்திர ஊடகப்பதிவாளராக இருக்காலாம் ஆனால் நம்நாட்டில்....இலங்கையில் ஈழத்தில்........


தொடரும்......

!

17 February 2015

முகம் காண ஆசையுடன் --1

வாழ்வில் தனிமனிதன் ஒருவரின் வெற்றி என்பது தனக்கு என ஒரு தொழில் .தனக்கென ஒரு வாழ்க்கை .தனக்கொரு குடும்பம் அதன் வழியாக தனக்கொரு வம்சம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு சமூகம் முன்னம் வகித்த காலமாற்றம் புரியாத ஒரு கட்டுப்பாடு எல்லாம் ஈழம் கேட்டு ஏதிலியானவர்களுக்கு ஓத்து வருமா?,


 ஒரு நாட்டில் ஏதோ பிறந்து காலச்சூழ்நிலையில் புலம்பெயர்ந்து;  அந்த நாட்டை விட்டுப்பிரிந்து அகதி என்ற கப்பலில் ஈழம் கடந்துபோனவர்கள் எல்லாம் இந்திரலோகத்தில் ராஜ வம்சம் போல வாழ்பவர்கள் அல்ல !

அடுத்த வேளை என்னாகும் தம்நிலை  என்ன கடன் கட்ட வேண்டும் என்ன செலவு இருக்கும் என்று எல்லாம் சிந்திக்க மாட்டோம் அது போலத்தான் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளியாக வந்தவர்களின் முதல்த்தலைமுறை வாழ்க்கை  பற்றி பேசாமல் அவர்களை இன்றும் கள்ளத்தோணி என்று பேசும் நம் மூத்த தலைமுறை எல்லாம் இதே ஐரோப்பிய தேசம் எங்கும் அகதி என்ற முகவரியில் வந்த தனிக்கதை எல்லாம் ஏன் வெளியில் சொல்லவில்லை?,

 இது ஒரு கெளரவமா இல்லை யாழ் வெள்ளை வேட்டி அரசியல் சாதுரியமா ?,நாம் இழந்தவை என்ன உணர்வுகளும் இடமும் ;உயிர்களும்; ஆட்சிக்கதிரைகளும் என்று மட்டுமா ?,

இன்னும் மற்றவர்களுக்கு சொல்லப்போறம்!!


 ஒரு நாடு விட்டு வந்து இன்னொரு நாட்டில் நாம் முகவரி தேடுவது என்பது என்ன சினிமாவில் வெற்றிக்கொடிகட்டு என்று ஒரு பாட்டில் எல்லாசுகமும் பெறுவதா?,

 அதுக்கு வந்தேறு நாட்டின் சட்டங்கள் எல்லாம் ஆசியா போல காசுகொடுத்தால் வளைந்து கொடுக்குமா??


  அப்படி என்றால் சிறிமா ஆட்சியில் நாடுகடந்தோர் இன்னும் இந்திய கேரள எல்லை வண்டிப்பெரியாரில் வாழும் அவலம் எல்லாம்  !  இணையத்தில் எழுத முடியுமா?,


 அப்படி எழுதினாலும் எத்தனைபேர் டாலர்தேசம் போல படிப்பார்கள் என்ற சிந்தனையில் ஐரோப்பிய  நாட்டின் குளிர்காலப்பொழுதில்  சிந்தனையோடு பாரிஸ் வீதியில் அதிகாலை துப்பரவு வேலை முடிந்து அடுத்த பணிக்கு போகமுன் ஆலயம் செல்லும் வேகத்தில் ஓடும் அசுரன் ஒரு பதிவாளர் என்று  தமிழ்ப்பதிவாளர் சிலர் அறிந்தாலும்!


 நடிகன் வலைப்பதிவின் அசுரன் சிலநாட்களாக பதிவு எழுதவில்லை ??ஏன் அவன் போலி முகமான முகநூல் மலைமகன் முகநூலும் முடக்கியிருக்கும் நோக்கம்!

 அசுரன் ஆன்மீகம் என்ற தனிப்பாதையில் போவது சில நட்புக்கள் அறியாத ஒன்று. அது போல அக்கரையான இலங்கையில்   இருந்து ஒரு பதிவாளினி அதிகாலை பனிக்குளிரையும் அறியாது அவன் தனியுடமையான கைபேசிக்கு அழைப்பு எடுத்தால் !

அவள் பெயர் நிவேதா என்று அசுரன் கையில் இன்னொரு உறுப்பு போல இருக்கும் ஐபோன் காட்சிப்படுத்தியது.

 காதினை இனவாத இராணுவம் பிடித்து இழுப்பதைவிட மோசமாக பனிக்குளிர் காதை வருடியது கைபேசியை எடுப்பதா,? இல்லையா என்ற மனப்போராட்டத்தினை இந்தியா வரும் இலங்கை ஜானாதிபதிக்கு கறுப்புக்கொடி காட்டு`ம் அரசியல்வாதிகள் போல அல்லாமல் தொடர்பினை உள்வாங்கினான் அசுரன் .

ஹலோ நிவேதா சொல்லுங்க இப்ப அவசரமாகஒரு முக்கிய வேளையாக குருவைத்தேடி  கோயில் போறன்.

 இன்னும் சில நேரத்தில் நானே அழைக்கின்றேன் ஸ்கைப் ஊடாக ! சரி காத்து இருக்கின்றேன்  அசுரன்!!






 வானொலியில் அடுத்த பாட்டுக்கு காத்து இருக்கும் நேயர் போல.

முகம் காண   ஆசையுடன்   தொடரும்.......

 அறிமுகம் இங்கே---http://www.thanimaram.org/2015/02/blog-post_1.html..

16 February 2015

முகம் காண ஆசையுடன்! அறிமுகம்!


                                             



 வலையுறவுகளே! மீண்டும் தனிமரம் ஒரு தொடர்கதையுடன் உங்களை நாடி வலையுலகில் வருகின்றேன் . அடுத்த பகிர்வு முதல் !





காதலும்; உயிர் இழப்பும் கடந்து; நடைப்பிணமாக வாழும் பலரின் இயல்புக் கண்ணீர்க்கதைகள் ஈழ அகதி ஏட்டில் எழுதாத பக்கங்கள் ஆயிரம் எனலாம் .!


 அச்சிலும், இணையத்திலும்., இலங்கையா?, சிலோனா?, ஈழமா?? என்ற கோள்வி என்றாலும் ;எல்லாராலும் ஏனோ பெருமூச்சை தன்னிலையில் விட்டவண்ணம் வானம் பார்த்த ஈழப்பூமியில் ஒரு விடியல் வரும் என்று காத்து இருந்து மனம் நொந்து வாழ்வை இழந்து சிறைப்பறவையான கதைகள் இனியும் என்றாவது வருமா ??


என்று  ஏங்கும் இலக்கிய உலகு இன்னும் இருக்கின்றது என்றால்! இனி வரும் காலம் இந்த பூமியில் இருந்து பல கதைகள் ஆட்சி செய்யும் என்ற மூத்தவர் அமரர் எஸ்பொ சொல்லிய வார்த்தைகள் இன்னும் நிழல் போல என்றாலும் ஈழத்தின் கதைகள் எல்லாம் ஊறுகாய் அல்ல தமிழ்நாட்டில் புத்தகம் விக்க!




எது .எப்படியோ !சாமானிய வழிப்போக்கன்  தனிமரமும்  கடந்த ஆண்டு இந்தியாவில் சந்தித்த ஒரு நம்மவரின் இதய வீணையை பாரிஸ் ஊடாக தொடர்கதையாக உங்களிடம் பகிர்கின்றேன்.



 படிக்காத என்னையும் நேசிக்கும் உங்களிடம் என் கதைகளும்!

 யாரோ சிலரின் முகம் காட்டமுடியாத மனிதர்களின் கதையை பக்கவாத்திய  மேளம்போல இருந்து எழுத்தாணி பிடிக்கின்றேன் !

               இவரும் ஒரு அருமையான சிந்தனைவாதி ராஜ்சேகர்https://www.facebook.com/rajasankar?fref=nf இந்தாண்டு சென்னையில் சந்தித்தேன்.7/1/15 மாலை!



இந்தத் தொடரும் ஒரு முகம் தேடி அலையும் ஒரு ஈழத்து உறவுகள் சிலரினை பெயர் மாற்றி  உங்களுடன் பேசவிடுகின்றேன்.


.இன்றைய நவீன வரவான முகநூலும்.  அத்துடன் வரும் இலவச வசதியும் வைப்பர். வாட்ச்சப் . இவர்களின் நிஜத்தை எப்படி எல்லாம் உணர்வில் நேரில்  சந்திக்கவும், சிந்திக்கவும் சிலரை எப்படி  வைத்து என்பதை இனிவரும் நாட்கள் தனிமரம் வலையில் படிக்கலாம்!


யாரையும் மனசஞ்சலம் கொள்ளவைக்கும் எண்ணம் தனிமரம் வழிப்போக்கன் நேசனுக்கில்லை !என்றாலும் இந்த கேள்விகள் சிலரை சிந்திக்கவைத்தால்! என் பெறுமதிமிக்க இணையத்தில் தனிமரம் செலவிடும் ஓய்வும் ஒரு மூச்சு வாங்குவதே அன்றே!!!!வேறல்ல!!!




 வழமை போல இந்தத்  தொடருக்கும் ,நேசனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்த முகப்புப் படம் நேசனின் கற்பனையில் தோன்றிய ஒன்று .பலநாள் கற்பனை நினைப்பில் நிஜவுலக ரயில்  பயத்தின் ஊடே பாரிஸ்  ரயிலில் தீட்டிய ஓவியம் மட்டுமே என்னிடம் !





என் இரண்டாவது ஐபோன்  களவாடப்பட்டது நிஜம் !ஹான்சிஹா மேல் சத்தியம்[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[


ஈரோ !பெறுமதியைவிட அதில் இருக்கும் என் எழுத்து ஆர்வ  உணர்வு தனிக்கதை நிஜத்தில் தமிழ் மொழி கடந்துஇந்திய நட்பு போல தனிமரத்தின்  சாகோதர மொழி  சிங்கள நட்புக்கள் பலரின் தொலைபேசி இலக்கம் ,மின்னஞ்சல், எல்லாம் போனதால் பலரை இவ்வாண்டு  இந்தியா போகமுன்  தொடர்பு கொள்ளவில்லை!![[[[[[[[[[[!அவர்கள் பலரும் ஐய்யப்பன் வழியில் சபரிமலைக்கு வருவது தனிக்கதை!

என்றாலும்! இனி தொடர் என் வீட்டுக்கணனியில் இருந்து  வெளியாகும் முதல் தொடர்  இது !

என்பதால் முன்னர் போல வேகமாக தனிமரம் வலையில் தொடர் வராது என்பதையும் .இனியும் தனிமரம் நேசன்  தொடர் எழுதுவேன்  என்பதையும். என்னைச்சீண்டி என்மீது சந்தனம் பூசிய பண்டிதர்கள் சிலருக்கு தனிமரம் நேசன் இன்னும் வெட்டியுடன் வலையில் தொடர்வேன் என்பதை   வலையுலக அவைக்கு சொல்லிய வண்ணம் !

பிடித்த பாடல் சேர்த்த வண்ணம் இடையில் கவிதையும் தீட்டிய முகம் காண ஆசையுடன்!




 இவன் படிக்காத தனிமரம்
6 வது ஆண்டில்  இன்னும் தனிமரம் வலையில்  ஈ ஓட்டும் நேசன்!

 ஏப்பா பக்கத்து இலையில் உள்குத்து போட்ட யாரும் வலையில் இன்று இல்லையே ???,



[[[[



வலையில்  யாரையும் நோகடிக்காது நமக்கு தோன்றுவதை எழுதுவோம் !எழுப்பிழை அவசர உலகில் சிறுதவறு அதை வாசிப்போர் துணிந்து பதிவின் பின்னூட்டத்தில் சொல்லி பதிவை அழகாக்கலாமே ??ஏன் உள்குத்து??

இது பணம் ஈட்டும் தொழில் அல்லத்தானே!இன்றுவரை தனிமரம் வலையில் ஒரு ஈரோகூட பெறவில்லை ஆனால் என் தனிமரம்.org  முகவரிக்கு வருடம் தோறும்  ஈரோ 15 செலுத்துவது  ஆத்ம திருப்திக்கு அன்றி சிலரின் கொக்கரிப்பு தனிமரம்  பைட்ஸ்  இல்லை தனிமரம் இப்படித்தான்!நாற்றம் கொல்ல தனிமரம் ஏதிலி ஈழத்தில் என்றாலும் பாரிசில்  வேலையில்லாமல் இணையத்தில் வெட்டி பேசும் அடிப்படித்தேவை அல்லாத   பாரிசில் இனிதே எல்லாத்தேவையும் அடிப்படையில் கொண்ட ஒரு ஈழத்தவன்!



 வலையுலகும் ஒரு தரிப்பிடம்தான்! வருவோம்! பின் ஹிட்சி கிடைக்காவிட்டால்  போவோம் ! இருக்கும் காலத்தில் ஹிட்சு அன்றி நட்பை சேமிப்போம்!

தனிமரம் பலரை இன்றும் நிஜத்துடன் பார்க்கின்றேன் துணிந்து! மதவாதி .மொழிவாதி. இனவாதி அல்ல!
என்றும் நட்புடன்
தனிமரம் நேசன்
பாரிஸ்§

தொடர் பிடித்தால் கருத்தும் திரட்டியில் வாங்கும் இடுவது உங்கள் எண்ணம் எழுதுவது என் ஆசை அதில் குத்து குடையுது என்றால் நீங்களும் வலையில் பதிவு எழுத தின்ண்டுக்கல் தனபாலன் சாரிடம் அடிப்படை படியுங்கோ! இனித்தொடர்!

உங்களிடம் விரைந்து!!!முகம் காண ஆசையுடன்[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[


10 February 2015

ஈழ வியாபாரிகள்.

ஈழம் எனும் பெயரில்
ஈன்ற நாட்டில்
இவனும் கேட்டேன் ஒலி
இன்றும் அது எந்த தேசம்
ஈரானில் வேலை தேடிய பின்
ஈழம் விட்டு ஏதிலியாகி
ஈன்ற தந்தை
ஈபோல பறந்த பின்னும்
இன்னும் அறியேன்!
ஈ போல ஈழத்து அகதி!


ஈ போல உடலை உறிஞ்சும்
ஈனப்பிறவி போல இவரும்
இத்துப்போன ஈழகோசம்
இறைத்து ஈன உயிர் வளத்தார்
ஈழத்தில் இவரும் தேவதூதன் போல
ஈ  போல மொய்த்தோம்
இன்று இவர் உயிருடன் இருக்கின்றார் என்று
இன்னும் அறியேன்!!

ஈன்ற உறவுகள் இடுகாடு போல
அடுக்கடுக்காய் போன போதும்
ஈழநண்பன் பேச்சில்
ஈழம் தருவேன் வீட்டில்
இரைந்து நின்ற இந்த நாய்
இன்னும் இருக்கா அரசியல் நதியில்!
ஈ இவரும் பாண்டியனாமே??,

இவர் போல இனியும்
வரும் ஈழநாய்களுக்கு எல்லாம்
இனியும் எடுப்போம் ஒரு
ஈக்குமாறு போல இதை!
இன்னும் கொலைஞர் முதல்
ஈழத்தாய் என்றும் ஈழம்
விக்கும் இவன் சீமான்
இங்கு காவடி
இழுதாலும் இன்னும்
இரந்து கொடுப்போம்

ஈரோவில்!


இன்னும் பல கதை எழுத
ஈழத்தில் இவர் போல
சுதந்திர தினம் இன்னும்
இலித்துக்கொண்டு
ஈழம் பேசும் வியாபாரிகள்
இனியும் வரலாம்!!!
///
ஈழத்தில் போர் ஓய்ந்து
இன்னும்நாம் வாழ வேண்டும்
இனியும் வேண்டாம் போர்!
......

08 February 2015

....நீ அவன் இல்லை.கிஸ்ராஜ்

வலையுலகு என்ற ரயில் பயணத்தில் நட்பாக வந்து போகும் பதிவர்கள் ,. பதிவாளினிகள் பட்டியல் அதிகம் எனலாம். என்றாலும் நெஞ்சில் நினைவில் நிற்போர் ஒரு சிலர் எனலாம்.பதிவுலகம் பலரை ஏதோ ஒரு புள்ளியில் சிலரை இணைந்த கைகள் போல நட்பில்  கைகோர்த்து நடக்கச்சொல்லுகின்றது .


 அந்த வகையில் 2011 ஆண்டின் முற்பகுதியில் அறிமுகமான வலைப்பதிவாளர்தான் நண்பன் ராஜ்

கடல்கடந்தாலும் நண்பர்கள்  பதிவாளருடன் எனக்காக நட்பு ஒரு தொடரில் தான் ஏற்பட்டது .பல் தொட்ரில் அவனுட்ன் அதிகம் பேசும் வரம் கிடைத்தது.

ராஜ் எழுதிய மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்  தொடரில் சிரிப்பும் ,சீண்டலுமாக இருந்த காலம் இனியும் வராது எனலாம்.

.2011 முதல் தொடர்ந்து வந்த பின்  சில ஆண்டுகள் துடிப்பாக செயல்பட்ட ராஜ் காலநதியில் இன்று பதிவுலகம் மறந்து குறும்படத்துறை நாடி  பதிவர்களை விட்டுப்போனாலும்!

 முகநூல்வழியே சில நேரங்களின் ஜாலியாக பேசும் நேரத்தை காலம் தந்து கொண்டு இருப்பதையும் சந்தோஸ்த்துடன் பகிர வேண்டும்.

 நடிகை சரண்யா மோகன் பிடித்த நடிகை என்பதுக்காக அவரின் நண்பர்கள் தளத்தில் கும்மிய காலம் பலரிடத்தில் சந்தோஸ்த்தையும் .மகிழ்ச்சியையும் தந்தவை அன்றி காயப்படுத்தும் நோக்கம் இன்றியது.கிஸ்ராஜ் அறிந்த ஒன்று.

ஒவ்வொருத்தருக்கும் இந்த வலையுலகு சில கட்டத்துக்கு மேல் தொடர்ந்து இயங்க முடியாத புறச்சூழலை தருவது வாழ்வியல் இயல்பு .அந்த வகையில் இப்போது அதிகம் ராஜ் பதிவுகளை மறந்தாலும் இனி வரும் காலத்தில் முன்னர் போல மீண்டும் பதிவுலகில் தடம் பதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் .


ஆமா இதுவரை நல்லாத்தானே போனிச்சு இடையில் என்ன ராஜ்மீது தனிமரத்துக்கு  திடீர் பாசம் என்று ஜோசிக்கின்றீர்களா ?,

தம்பிக்கு இன்று இன்னொரு ஆயுள்கூடுகின்றது .http://www.thanimaram.org/2014/02/blog-post_8.html

9/2/...இனிய நல்வாழ்த்துக்கள் ராஜ் .

 எப்போதும் விஜய் என்றால் நமக்கு அல்வா கையில்கிடைத்த சந்தோஸ்சம் பதிவுலக நாட்களில்...

 மீண்டும் ராஜ் கலகலப்புடன் வரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.சரண்யா மோகனும் காத்தே இருக்கின்றாள் உன் வருகைக்காக.[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

07 February 2015

இது காதல் மாதம் புயலே!

சுருதி சேர்க்கும் ஹிட்டார் போல இதயமும் உன்
ஷ்வரங்களையே மீட்டி என் காதலை
பூக்கள் போல   ஏங்க வைக்கின்றது நீயோ!
பிரபல்ய நடிகை போல புகழ்போதையில்
நானோ மீட்டாத இசைக்கோர்வையுடன்
இன்னும் படிகளில்!!!





////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
         ஆற்று நீர் அடித்துச்செல்லும் சருகு போல

          நீ விலகி ஓடினாலும்


         உன் நினைவும் சூர்ய உதயம் போல

         நெஞ்சில்  நினைவுகுறிப்பு போல 

             நீண்ட பச்சை அன்பே!!

///////////////////////


கடல் அலை பாறை மீது மோதுவது போல
நீயும் அனபில் என் இசைபோல 
நெஞ்சில் சேர்ந்து மீட்டிய சிம்பனி இசையை
என் நரம்புக்கருவி ஹீட்டார் மீட்டும்
இதை வரும் காலம் அறியும் அன்பே!
காதல் மாதம் இது வா
சேர்ந்தே மீட்டுவோம்!!!



     
                              ////

அடடா நீயும் அழகியோ

அகதியின் ஆசையில் 

அதிகம்  புலம்பிய

அத்தை மகளோ உருகிடும்

ஆசைக்காதலியோ


அன்பே நீயும் 

அந்த பனியோ!



///

04 February 2015

படித்ததில் பிடித்தது!!!!!!!

இணையத்தின் வருகை வாசிப்பை மேம்படுத்துகின்றதா? சீரழிக்கின்றதா ,என்ற விவாதம் சூடாக வரும் காலத்தில் .



இணையத்தில் எழுதுவோரும் வேகம் அதிகரிப்பது சந்தோஸசம் என்றாலும்  அவர்களின் உழைப்பு நிலைத்து இணையத்தில் நிற்கின்றதா?, இல்லை வந்தார்கள், வென்றார்கள் ,சென்றார்கள்,  என்றுதான்  அமையப்போகின்றதா ?,என்ற கேள்வி மனதில் . !


ஆனாலும் இன்று வலையில் எழுதும் பலர் தம் எழுத்தினை மின்நூல் வடிவில் அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி நகர்த்தும் செயலை இணையம் வரவேற்கின்றதை பாராட்ட வேண்டும்.




 அந்த வகையில்  வலையில் மூத்த படைப்பாளி ஒருவர்தான் தேவியர் இல்லம் ஜோதிஜி .அவரின் 5 படைப்பு இதுவாகும்.



அவரின் பல பதிவுகள் அவரின் படைப்பாற்றலை, வாசிப்பு அனுபவத்தை ,வாழ்வியல் அனுபவத்தை  ,இணையத்தில் கொட்டிச்செதுக்கி வைத்து இருக்கின்றார்.


 அதனை தொகுத்து இப்போது புதிய எழுச்சியுடன் மின்நூல்களாக கச்சியதமாக தொகுத்து வருவதை அந்த மின்நூல்களை இணையத்தில் பரவ விட்ட நிலையை வரவேற்கும் பலரில் தனிமரமும் ஒருவன்.


  காலத்துரிதகதியில் இணையத்தின் துணையுடன்  பகிர்வை வாசிக்கும் வாசகர்கள் பலர் .

கால ஓட்டத்தில் மனதை ஒருகணம் நின்று நிதானித்து .அழுது. புலம்பி ஆற்றாமையில் .வெதும்பி. புழுகும் நிலையை வாசகர்கள்.உள்வாங்குவார்கள் எனபதை வார்த்தையில் சொல்லத்தான் வேண்டுமா.?,

 ஜோதிஜி சில மின்நூல்களை முன்னர் வெளியீடு செய்து இருந்தாலும் என்னைக் கவர்ந்தது வாசிக்கத்தூண்டிய நூல் பயத்தோடு வாழப்பழகிக்கொள்!


 .331 பக்கம் கொண்ட இன்நூலினை பார்த்தும் படிக்கத்தோன்றும் முகப்பு அட்டைப்படம்  ஒரு புறம் என்றாலும் இன்று திருப்பூர் ஜோதிஜி மீது பலரின் சிந்தனை வர இவரின் கடின உழைப்பு பாராட்ட வேண்டியது தனிப்பதிவாக எழுத வேண்டியது.
 எடுத்தவுடன் ஏனோ முழுவதையும் வாசிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தந்தாலும் !என் தனிப்பட்ட பொருளாதார ;ஆன்மீகசூழல் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க வைத்தாலும்!


 ஓவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பாடத்தை படிக்கும் அனுபவத்தை இன்நூல்  தந்தது வஞ்சகப்புகழ்ச்சி அல்ல !காரணம் ஜோதிஜிக்கு  தனிமரம் ஒரு பதிவரா ?,என்று கூட அறிந்து இருக்கமாட்டார்.


அவரின் பள்ளிக்காலம் முதல் பதவி வரை அவரின் எண்ணதை, நெகிழ்ச்சியை, அனுபவ வழிகாட்டுதலை, தன்சமூக  கோபத்தினை .சமூகம் நோக்கி திருப்பி ஒரு காட்டாறு போல ஓடவிட்டு இருப்பதை இன்நூல் வாசிப்பில் உணர முடியும் .


திருப்பூர் உலகின் நிஜமுகத்தை இதில் அறியமுடிவதுடன் ஜோதிஜின் அனுபவத்தையும், கால ஓட்டத்தில் திறந்த மனதுடன்  . தமிழ் வலையுலகுக்கு அறிமுகமான நிலைமுதல் திரட்டியின் செயல்கள் வரை அவர் இணையத்தில் செலவிட்டு பெற்ற அனுபவத்தையும் ,நட்பு வட்டத்தையும் இன்நூலில் வாசிப்பின் ஊடே அறிக முடிகின்றது. அவரின் நூலினை தரயிறக்கம் செய்ய இங்கே-.http://freetamilebooks.com/ebooks/live-with-fear/


 படித்த நேரத்தில் இணையமும் அனுபவமும் ஒவ்வொருத்தரின் குணத்தினையும், சூழலையும் இங்கே சிலர்  கேலியும் ,ஆட்சிசார்பு நிலையையும்  குத்தி ஓதுக்க நினைத்தாலும் !ஒவ்வொருத்தர் மனவுறுதிக்கு திரட்டியும் அதன் செயல்ப்பாடும், ஒருவரின் திறமைக்கு மூடுதிரை போடமுடியாது என்பதே வரலாறு !

நீங்களும் வாசியுங்கள்  மீண்டும் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொஞ்சம் இன்றைய  நாகரிக உலகை மறப்போம்!ம்ம்ம் பயத்தோடு வாழப்பழகிக்கொள் மின்நூலில் ஒரு பதிவு தனிமரம் பற்றியும் பேசுகின்றார்!ஹீ ஐயோ தனிமரம் நான் இல்லை!ஹீ!

 வயசு, அனுபவம் அறியாதமரம் போலும்!ஹீ.

இன்று ஏனோ அவர் பதிவை எழுதும் போது இந்த பதிவை நீங்களும் படியுங்கோ-http://deviyar-illam.blogspot.com/

01 February 2015

கொத்தி தின்னாதே!!!

மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் இணையத்தின் துணையுடன் வலையுறவுகளை சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி !எல்லோறும் நலம் தானே??


.எங்கே தனிமரம் ஆன்மீகத்தில் தொலைந்துவிட்டதோ??


 என்று சிலரின் மைண்ட் வாய்ஸ் கேட்டது  குரல் கேட்டு வந்துவிட்டேன் கொக்குவில் கொக்கே பாட்டுக்கேட்டு ))))))




.இனி புதிய தொடர்கதையுடன்  இந்தாண்டு என் வலைப்பயணத்தை தொடர்கின்றேன் .


உங்களின் ஆக்கமும் ,ஊக்கமும், இன்னும் பதிவுலகில் தனிமரத்தை நிலைக்க வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

 என்றும்  நட்புடன்
தனிமரம்.