27 April 2016

யாசிக்கும் --- ஏ-தி-லி -8


 முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016/04/7_25.html


உன் விழியில்
உலர்ந்த காதல்
உன்னை யாசித்து!
உருகி உன்னை பிரிந்து
உன்னோடு நடக்கும் இந்த
உன்னத நாள் போல இனி வருமா?,

                                     ( யாதவன் நாட்குறிப்பில்)

இனி....





விரும்பி ஆன்மீகத்தில்  தொண்டு செய்வதுக்கும் பேருக்கு பணி செய்வதுக்கும் இடையில் வித்தியாசம் அதிகம் இருக்கு! படித்த பட்டத்தாரி செய்ய முடியாத விடயத்தையும் சாமனிய அனுபவசாலி இயல்பாக சுமைபோல அன்றி சீக்கரம் செய்துமுடிப்பான் என்பது யாதார்த்தம். இதை எப்படிச்சொன்னால் புரியும் உனக்கு?,சிறப்புத்தேச்சி என்றா !இல்லை  உங்க பாட்டி செல்லம்மா  நம் தேசத்தில் இருந்து நடை நடையாக இடம் பெயர்ந்து ,அலைந்து, திரிந்து, பின் இன்று புலம்பெயர்ந்தாலும் இன்றும் நடப்பதுக்கு அஞ்சியதில்லை !

அவங்க தூக்கி ஓடியந்த பேரன்களில் நானும் இன்றும் நடப்பதுக்கு எந்த தயக்கமும் கொண்டதில்லை!  பாரிஸ்வாசி ஆனபோதும் மைடியர் மார்த்தாண்டன் போல  அல்ல !

ஆனால் நீ அவங்க நெஞ்சில் குழந்தையாக  தூங்கிய அன்றைய இருண்ட ஈழத்தின் காலத்திலும் சரி, இன்று பாரிஸ் சுதந்திர நங்கையாக வளர்ந்தாலும் நடக்க தயங்குகின்றாய்)))

 நீ நடந்தால் இதயம் பட ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி என்று பாட இன்று அந்த பாடகர் மூச்சுடன் இல்லை !

 இந்த ஜொல்லு சாமிக்கு அழகோ ?,

ஆமா தமிழில் எந்த அழகு,?அளகு?அலகு?, எனக்கு தமிழ்மொழி எழுத்து தகராறு ஆனால் பேச்சு மொழி அறிவேன்  !

என் போல உன்னால் பிரெஞ்சு எழுதமுடியுமா?,

 நிச்சயமாக முடியாது யாழினி !

 வா விரைவாக நடப்போம் ரயில் நிலையம் நோக்கி நான் வேலைக்கு போக வேண்டும்.


உன்னைப்போல படபட  என்று என்னால் நடக்க  முடியாது யாதவன் !

 தயவு செய்து இரு பஸ் வரும் வரை  மீண்டும் ரயில் நிலையம்  நோக்கி நடந்து  போக முடியாது யாதவன்.

 ரயிலுக்கு நேரமாச்சு படம் நீ பார்த்து இல்லை ஆனால் எனக்கு பஸ் வருகையைவிட ரயில் முக்கியம்.

 ஏன் இப்ப புதுசாக யாராவது பிரெஞ்சு/அரேபிய/ஆப்பிரிக்கா என  நண்பிகள் சிலரை ரயிலில் தேடிப்பிடித்து விட்டாயோ ,,

 ஹீ தேடினேன் வந்தது  என்று மந்தாரா போல ஒருத்தி வந்தால் இப்படிப் பாடலாம் ஆஸ் மலைக் காற்று வந்து என்று சொல்லுவேன் என்று நினைக்காத !இப்ப சினிமாப்பாட்டுக்கு தற்காலிக தடை இலங்கை அரச தணிக்கை போல ஆன்மீகத்தில் இருப்பதால்.

  இன்று  என் பாட்டி அலங்கார பூசைபார்த்து விட்டு வருவேன் என்று தன் இறுதி நேரத்திட்டம்  என் நினைப்பில் மண்ணாப்போச்சு! இலங்கை ஜனாதிபதியை சந்திக்க நினைத்த வடக்கு முதலமைச்சர் திடீர் சுகயீனத்தால் பின் தள்ளியது போல ஆகிவிட்டது.

நீயும் பாட்டியுடன் இருந்து பூசையைப் பார்த்து இருக்கலாமே,,? நல்ல பஜனை கலைகட்டும். ஆசைதான் ஆனால் விடிய நானும் தனியாக  வேலைக்கு 300 கிலோமீட்டர் கார் ஓட்டனும்.

  அதுவும் அதிகாலை குளிர் நித்திரை அதிகம் வரும்  உனக்கு என்ன ? சொல்லுவாய்!

அதுசரி அன்று நம்நாட்டில் இடம் பெயர்ந்த போது  நீ நித்திரை யாழினி!

அன்றும் சிறுவனாகவும்  பின் இன்றைய  பாரிஸ் வாலிபன் போலத்தான் பாட்டியின் கைபிடித்து பாட்டி சொல்லைத்தட்டதே என்பது போல அருகில் கைபிடித்து வந்தேன்!

அந்தக்காலம் எல்லாம் உனக்கு நினைவு இருக்காது! மூன்றாம்பிறை சிரிதேவி போல என்று சொல்லவா !இல்லை அமராவதி சங்கவி போல என்று சொல்லவா !இல்லை நினைவே ஒரு சங்கீதம் பட ராதா நிலை போல இது என்பதா??

 எப்படி யாதவன் வந்த சில மணித்தியாலத்தில் உங்க  குருசாமி சொல்லிய பணி எல்லாம் சீக்கரம் முடித்தாய்?,

 எனக்கு ஒரு சில நிமிடம்  துப்பரவுக்கருவி பிடிப்பதுக்கே உடல்களைக்கின்றது!  உன்னால் எப்படி 20 மணித்தியாலம் ஒருநாளில் தொடர்ந்து   பணி  புரிய முடிகின்றது,,?,சமையல் அதிகாரி , துப்பரவுப்பணி அதன் பின் ஆன்மீக தொண்டு என்று!

  அதுதான் நேரமுகாமைத்துவம்!

இது எல்லாம் உனக்கு தெரியுமா?, நான் உன்னிடம் சொன்னேனா  படிக்காதவன் என்று!

இல்லை நான் தான் தவறாக நினைத்துவிட்டேன்.எதைப்பற்றி யாழினி ?,எல்லாத்தையும் !



! என்ற அவளின் பெருமூச்சுக் காற்று படாத தூரத்தில் யாதவன் பஸ் வருகையை  எதிபார்த்த வண்ணம் பாதையை நோக்கினான்!

தொடரும்...






25 April 2016

யா-சிக்கும்--- ஏ-தி-லி--7

முன்னர் யாசிப்பு இங்கே-http://www.thanimaram.org/2016/04/6.html

மனமும் உடலும் சிலிர்க்கின்றது!
மனதோடு மழைக்காலம் போல
மந்தார மாலையில்
மனம்  போன போக்கில் நீ
மறந்தவன் பின் வரும் இந்த நிமிடம்!
               ( யாதவன் நாட்குறிப்பில்)



காத்திருப்பு என்பது கவிதையாக சொல்ல வேண்டும் என்றால் வீரகாளி அம்மன் கோவில் விருச்சமரம் கூட என் பொறுமை சொல்லும் என்பதா? கதையாக சொல்ல இது என்ன கோகுலம் படம் பானுப்பிரியா நிலை போல அல்லது பூவே உனக்காக விக்ரமன் கதை போலவா! இல்லை இன்னும் விடுதலைவரும் என்று விடுதலைக்கனவுக்கு விரும்பியும், விரும்பாமலும் போய் சிறைக்கம்பிகள் பின்னே சிந்தும் கண்ணீருக்கும் வலிகள் உண்டு காத்திருப்பின் நிலை சொல்ல !!

அவசர உலகில் காத்து இருப்பது என்பது தமிழ்த்தலைவர்களுக்கு சாத்திய மாகலாம் தங்கள் வாரிசுகள் சுகமாக வெளிநாடுகளில் வாழ்வதாள்! ஆனால் ஒரு வாலிபனுக்கு கலியாணச்சந்தையில் காலம் எல்லாம் நீ வேண்டும் என்று காதலுடன்  காத்திருப்பது என்பது எத்தனை அவஸ்த்தை என்பது பொதுவெளியில் பலருக்கும் புரியாத உளவியல் போராட்டம்!

.பொறுப்புக்கள் சுமந்து; கடமைகள் முடிந்து கலியாண கனவு தோன்றும் போது தலையில் இருந்த பொன்முடி  களவாடப்பட்டுருக்கும் அதிவேக சமையல் அறையின் வெப்பத்தால் அது அமைதிப்படை  சத்தியராஜ் அம்மவாசை போல!

அடுத்த வீட்டு தம்பிக்கும் கலியாணம் முடிவாச்சாம் !நீ எப்ப  கலியாணம் கட்டப்போறாய் ,,என்று இன்று போன கலியாணவீட்டிலும் உன்னைப்பற்றித்தான் பருவத்தே பயிர் செய்யனும் ஒழுக்க விதிமுறை ஓதல்கள் என்று  பேச்சு!

 நீயோ மலைக்குப்போறன் என்று எங்கள் பேச்சையும் கேட்பதில்லை !பெற்றவளின் பேச்சையும் கேட்பதில்லை .


உன்னால் பொது இடங்களுக்கு போக முடியவில்லை! உன் வருமானத்தை வாங்கிப்பதுக்கின்றோம்மாம் பானாபத்திரிக்கைச்செய்தி போல என்றல்லவா இருக்கு நம் நிலை! .

இது எல்லாம் உனக்கு தெரியாதா?, இதுவரை உன்னிடம் 5 ஈரோகூட உரிமையுடன் கடன் வாங்கியதில்லை என்று உனக்கு மட்டும் தெரியும் நிஜம் !என்று உடன் பிறப்புக்களின் ஓயாத புலம்பல் எல்லாம் தெரியாமல் போகுமோ காத்திருக்கும் போது?,


 வார்த்தைகளின் சதுரங்க வேட்டை ? அவசரக்குடுக்கை என்று உள்குத்து போட்டால் நான் என்ன செய்வேன் யாழினி ?,


ஒருவனின் இயல்பை மாற்ற முடியுமா?, அப்படி வழி இருந்தால் சொல்லித் தரலாமே சொல்லித்தரவா மஜா பாடல்போல?வார்த்தையாள் சுடுவது என்றால் நானும் அதிகம் சுடுவேன் பன்றித்துண்டு வத்தல் போல அதுமட்டுமா! கிரேப் போல கல்லில் சுடவும் முடியும் என்று உன்னிடம் சொல்ல மனம் துள்ளினாலும்!

 ஏன் உன் சந்தோஷ நாட்களில் அக்கினிசுவாலை வீசுவான் என்று நெஞ்சோடு குமுறும் என் நிலை எல்லாம் உனக்கு புரியாது!

உன் பார்வையில் நான் மோஷமான ஆண்! கட்டில் சுகத்துக்கு அலையும் நெற்றிக்கண் ரஜனி போல  காதல் பற்றி தெரியாத ஆவரம்பூ பட வினித் போல .

ஆனால் சாமி என்று இந்த வழியில் போக காரணம் உன் காதல் என்ற உண்மை சொன்னால் தென்றல் சுடும் படம் போல !

இன்று நீ இப்படி அழகாய்  என்னோடு   அருகில் வருவதைப் பார்க்கும் போது என்னருகில் நீ இருந்தால் படம் போலத்தான் நல்லாட்சியில் இணைந்த பெருங்கட்சிகள் போல என்று எல்லாம் மனம் எண்ணும் !



ஆனால் உனக்கு  புரியுமா??காதல் என்றாலே அகதியின் யாசகம்  குடியேற்றம் பெற இன்னொரு வழி என்று நினைக்கும் உன் போன்றோரின் சிந்தனைக்கு அகதியாக உள்ளே வரும் இந்த நாட்டு இயல்பு எல்லாம் கடிதம், கவிதை என்று எழுத இது பொக்கிஷம் படம் அல்ல!

 ஆனாலும் லவ்டுடே படம் இயக்கிய பாலசேகரன் ]போல செருப்பால் அடிக்க அவர் இப்ப சினிமாவில் இல்லாது போனாலும் அவர் போல நச்  என்று சொல்ல ஆள் இல்லை! என்ன யாதவன் உள்குத்து ஊமையாச்சோ?, சொல்லாமலே லிவிஸ்ரன் போல இல்லை  யாழினி!

ஆமா யாதவன் எப்படி உன்னால் எப்போதும் வசூல்ராஜா பிரகாஸ் ராஜ் போல சிரிக்க முடியுது![[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கின்றாய் என்ற
 காலம் எல்லாம் இறந்தகாலம் அழுகை என்றால்அதையும் கடந்து வந்தவன் இவன் இது திமிர் அல்ல தன்நம்பிக்கை!









நிகழ்காலம் சிரிப்பு ஒன்றே மூலதனம் நானும் ஒரு வழிகாட்டி !

தொடரும்.....

23 April 2016

வலிகள் பல விதம்!!!


ஈழம் என்ற கோஷம் தந்த  அகதிப் பாடம் பல !அதை இங்கு வலையில் பேசினால் அல்லது எழுதினால் முகநூலில் மட்டுமா இந்த வலையில் கூட வாங்கும் உள்குத்து பலதை பல காலம் வார்த்தையில்  சொல்லி இருக்கின்றேன்  தனிமரம் !


ஆனால் சுருங்கச்சொல்லி விளங்கப்படுத்து என்ற தமிழ் வாத்தியார்கூட புலம்பெயர்வாழ்வை புரியாத மாணவன் போலத்தான்! என்ன செய்ய தலைமை சமையல் அதிகாரி  கடமை வேறு  நம்மவர் தேச கணிவு வேறு!வலிகள் பல விதம்! இதைச்சொல்லும் பாரிஸ் கலைஞர் இவர்! பாஸ்க்கி!







வலிகள் தாண்டி உயிர் தப்பி வந்து  புலம்பெயர் வாழ்வில் அழுது புலம்பும் பட்டதாரிகள் வாழ்க்கை இன்னொரு தனியுலம்! ஈழக்கதை வற்றாத உப்புக்கடல்!!

வார்த்தையும் கவியும்
வாழ்வில் பொய்த்தாலும்
வாழ்வாதார  மண்!!!!


!






20 April 2016

தூற்றுவோம்....!தூ.

துளிர்விட்டு மரமாக
துணிவுடன் இன்றும்
தூர தேசத்தில்
தூர்வார்கின்றபோதும்!
தூக்கி நின்ற வேர்கள் நீங்கள்
தூற்றுவது தூ என்று
துப்புவது  விழுகின்றது காதில்!


தூக்கனாம் குருவிகள் போல
தூரத்து சொந்தங்கள் இன்று!


தூக்கி உங்களை எறிந்தாலும்
துவண்டு போகின்றேன்
துழையிட்ட மூங்கில் போல
துட்டுக்காய் இன்று வரும் சேதிகள்
துயரங்கள் என்றாலும்!


துன்பியல் வரலாற்றை
துணி போல நெய்து
தூக்கில் இட்ட தேசங்களை
தூற்றிக்கொண்டே இருப்போம்
துளிர்க்கும் வரலாறாய்!
துறவறம் போகும் காலத்தில்
தூக்கிவைத்தோம்  கதிரையில்.


துடிப்பில்லாமல் பேசத்தானா?,
துரோகியாகுவாரோ?,
தூயவன் இல்லாத பூமியில்.!




18 April 2016

யா-சி-க்கும் -- ஏ-தி-லி--6


முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016/04/5.html

இனி--

            முகம் தொலைந்து
             முத்தாட வந்தேன் உன்னிடம்
                முழ்க்கிபோன படகு போல
                  முனங்கும் என் காதல்
                     முடிவு ஏது!!!

                                   (    யாதவன் நட்குறிப்பில்)


என்ன யாதவன் இலங்கை நல்லாட்சியின் தீர்வுத்திட்ட அமைதிச்செயல் போல அமைதி காக்கின்றாய்?, என்ற செல்லமா பாட்டிக்கு ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் விளம்பர அறிவிப்பு போல!

 இல்லை வேலையில் இருக்கும் போது அவசரம் தொலைபேசி எடு என்று தாய் நாட்டில் இருந்து கட்டளை போல  அழைக்கும் சொந்தங்களுக்கு ஒரு நேரகாலம் தெரியாது .

இங்க வேலையில் கவனக்குறைவு என்று முதலாளி திட்டும் நிலை எல்லாம் சொன்னால் புரியாது சொல்லுக்குள்  அடங்காது நீங்க எல்லாம் என் மேல வச்ச பாசம் பாடல் போல இல்லை. பணியில் இருந்து ஆட்களை இடை நிறுத்தும்  சட்டவசதிக்கு கூட இன்று தொலைபேசி அழைப்புகள்  காரணியாக  அமைகின்றது .

இன்று பாரிசில்  நிலவும்  பொருளாதார வீழ்ச்சி ,வேலைவாய்ப்பின்மை, குறைந்த சம்பளத்துக்கும் பணியாற்றத் தயாராக இருக்கும் ஊழியர் நிலை என்று  இந்த நாடு போகும் பாதையை உணராமல்!

  காசேதான் கடவுளடா,   உன் பணம் அது என் பணம் என்றா, மணி துட்டு பணம் பணம் என்று அங்கிருந்து கொண்டு.  இங்குள்ளவர்களை சுரண்ட நினைப்பதும் ஒருவித கொடிய நோய் எனலாம்.

 இரண்டும் கெட்டநிலையில்  புலம்பெயர் வாழ்க்கை ஒரு வரமல்ல சாபம்!

 அப்படிச்சொல்லாத யாதவன் கஸ்ர காலத்தில் உதவுவதுதான் நம்கடமை.

 இங்கு நாம் நல்ல வசதியில் இருப்பதாக அவர்கள் எண்ணுவதுக்கும், வழிகாட்டியது யார் ?,நம் புலம்பெயர் உறவுகள் தானே !

அடுத்தவர்களின் வாகனத்தை தன்வாகனம் போல செல்பி எடுப்பதும், நண்பர்களின் வீட்டை சினிமாவுக்கு சூட்டிங் விடுவது போல தன் புதிய வீடு என்று வீடியோ எடுத்து அனுப்புவதும், வட்டிக்கு காசு வாங்கி வசதியானவன் போல வெள்ளவத்தையில் வீடு வாங்குவது.

 அந்தக்கடன் கட்ட தன் வசதியான நண்பர்களுக்கே நம்பிக்கைத்துரோகம் செய்வது என்று தீராத வலிகள் இருப்பதை துணிவுடன் அங்கு இருப்போருக்கு சொல்லாதாது யார் பிழை ??

சைக்கிளில் போனவர்களை எல்லாம் மோட்டார் சைக்கிளிலில்  பறக்கவும், எடுத்ததுக்கு எல்லாம் ஆட்டோவில் ஏறு என்று அதிகம் வசதிபடைத்தோர் அம்பானி வாரிசுகள்  போல ஆடம்பரமனிதர் ஆக்கியது எல்லாம் இந்த வெளிநாட்டில் இருப்போர் தானே?,

 எத்தனை பேர் இன்று தன்நிலை மறந்து பகட்டு வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று நம்மவர்களை கொழும்பில் போய்ப்பார்த்தால் புரியும்!

 அதை எல்லாம் பேசிப் பயனில்லை.

 பேசாமல் யாழினி போல சுதந்திரமாக சிறுவயதில் புலம்பெயர்ந்து இருந்தால் இந்த வீன் அவஸ்தை தேவையில்லை !

ஆப்பிரிக்க கவிஞன் சொன்னான் பார்த்தியில் இருந்து பிடிங்கி நடும் செடி போல அல்ல அகதி வாழ்க்கை .

என் துயரம் யார் அறிவார்கள்?, முகநூலில் ஜல்சா ,வாட்சப்பில் குலுக்கள் எப்போதும் போனும் கையுமாக பவுசாக வாழ்கின்றான்!

  கஸ்ரத்திலும் இயக்கத்துக்குக்கு போகவிடாமல்!  இராணுவக்கட்டுப்பாட்டுப் குதிக்குள் கவனமாக வளத்தத்தோம் மருமகன் போல அல்ல எங்கபிள்ளை போல என்று  சுற்றுலா வருவோரிடம் புலம்பும் தாயின் இரத்த உறவுகள் எல்லாம் என்று திருந்துவார்கள் ?,யதார்த்தம் புரியாமல்?,


 கண்டதெல்லாம் நினைச்சு நீ ஏன் கவலைப்படுகிந்றாய் உன் வழியில் முன்னேறு !அது சரி முன்னேற வழி ஏதும் தெரியல யாழினி போல ஜாலியாக இருக்கனும் ஹீ ஹீ!

 ஏய்யா?, இது வரை நல்லாத்தே போகின்றது!  அவளை ஏன் வம்புக்கு இழுக்கின்றாய் ?,வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு உனக்கு.

 .நடந்தவை  நல்லதுக்காக என்று நினைக்க வேண்டியதுதான் !

இறக்கம் வந்தாச்சு.பார்த்து இறங்கி வாங்க ரயிலில் இருந்து!    இப்ப பஸ் இருக்குமா யாதவன் கோயிலுக்கு போக?, .

 இருக்கும்!

 ஏன் நீங்க பஸ்ஸில் போவதில்லையா  யாதவன் ?,

 நான் போகும் போது பஸ் வந்தால் ஏறுவேன்! அதிக நேரம்காத்து இருப்பது  என்றால்  நிச்சயம் காத்து இருக்க மாட்டேன் யாழினி  அந்தளவு பொறுமையில்லை.காதில் பாட்டைப்போட்டால் போகும்      தூரம் தெரியாது!



அது சரி நீங்க காத்து இருக்க மாட்டீங்க !பொறுமையில்லாத அவசரக் குடுக்கை தானே)))

  இதில் ஏதும் உள்குத்து இல்லையே யாழினி?,




தொடரும் .....

11 April 2016

நாங்கள் யார் என்று!!!!!!


முகநூலில் மூழ்கிப்போகும் போதெல்லாம் தாயக முக்கிய நட்புக்களிடம் இருந்து வரும் அன்பான வேண்டுகோள்  பல . புலம்பெயர் நிஜம் புரியாமல் பாஸ் இதைப்பற்றி உங்க பார்வை என்ன ?

அத்தோடு உங்கள் நட்புக்களிடமும் பகிர்ந்து கொள்(ல்)ளுங்கள் என்று வரும் தனிச்செய்திகள் பல நேரத்தில் அன்புத்தொல்லையாக இருந்தாலும் சில நேரத்தில் சில பதிவுகளைத்தேற்ற ))))ஒரு விடயமாகிவிடுகின்றது))))

நம்மவர் பாடல்,  நம்மவர் இசை, நம்மவர் நடிப்பு எல்லாம் சில நேரத்தில் கோமாளிகள் போல என்று சில விமர்சன மேதைகள் ஊடகத்தில் உள்குத்தாக உற்கார்ந்து எழுதும் போது ஆத்திரம் வரும் வாசிக்கும் போது!


என்றாலும் அது அவர்களின் பண்டிதர் தகமை     என்று வாதிடுவோரும் இருப்பது இந்த முகநூலில் .



. எனக்கு இசையும் காட்சிப் பின்புலங்களும், பழகிய, அறிந்த,  தெரிந்த ஊர்கள் பல என்றாலும்  மனம் மீண்டும் நாட்டுக்கு போகும் ஆசையைத் தூண்டும்! என் போல பல புலம்பெயர் உறவுகளுக்கு! என்ன செய்வது விதி வரை காவியங்களில் வீழ்ந்து போன இனம் நாட்டை விட்டு வந்தாலும் இசையை இன்னும் நேசிக்காமல் இருக்க மனம் ஏனோ! இன்னும் பழகவில்லை! கடந்த வாரம் காட்சியாக என் பார்வையில் வந்தவைகளில் முத்துக்கள் மூன்று இவை.-

முதலாவது  தெரிந்த ஊர் காட்சிகள் கொஞ்சம் சகோதரமொழி நங்கைகளுடன்  ஜொல்லுவிட்ட காலம் நீங்காத நினைவுகள்))) பூரிக்கட்டை அடி மதுரைத்தமிழனுக்கு மட்டுமா??)))) தனிமரத்துக்கும் தான்!))))





வானொலியில் இன்று பாடல் முன்னர் போல கேட்கும் ஆசையை தூண்டாவிட்டாலும் இந்த உடுக்கு ஏதோ சொல்ல வருவது  நிதர்சனம்[[




இன்னும் சில பாடல் தேங்கிக்கிடக்குது ஆனாலும் இந்த இணையம் சதி செய்கின்றது ! விரைவில் இன்னும் வரும்....







05 April 2016

யா- சி- க்கும் --- ஏ--தி--லி----5

முன்னம் சுவாசிக்க இங்கே-http://www.thanimaram.org/2016/03/4.html

இனி....

        என் தேடல் எதுவென்று
        என்னைச்செதுக்கி
        என்னைச்சிதைத்து
        என்னையும் குருவென்று
         ஏற்றிய என் காதலே!

                                            ( யாதவன் நாட்குறிப்பில்  )

யாரோ ?அது யாரோ ??,பாடி அழைத்தேன் உன்னை , அழைத்தது யாரோ நீதானே என்பது போல அல்ல! பூப்பூக்கும் ஓசை அதைக்கேட்கத்தான் ஆசை என்றும் இல்லை ஏன் இதயம் உடைத்தாய் என்ற பாடல் போலவும் அல்ல யாழிலினியின் கைபேசியின் உள்ளழைப்பு ரிங்டோன்! அது  சினேஹாவின் சிறுபிள்ளைத்தன பல்லாங்குழியின் விட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் போல இருக்கும் அழைப்பு ஓசை  அது.

இந்த பாடல் ஏன் அவளுக்கு பிடிக்கும் என்று சிந்திப்பதுக்கு முன்னரே பாட்டி செல்லம்மா புரிந்துகொண்டாள் யாழினியின் கைபேசிக்கு அழைத்தது யாழினியுன் தாய் லட்சுமி என்பது  தன் மூத்தமகள்  குணம் அறிந்தவள்!

யாழினியின்  ஒற்றை வார்த்தை பதில்கள் மூலம் அறிந்து கொண்டான் யாதவனும். தாய்யின் கைபேசி அழைப்பை.

தாய்க்கும் மகளுக்கும் இடையில் நான் ஏன் மூக்கை நுழைப்பான் என்று ஒதுங்கிய செல்லம்மா பாட்டி நீண்ட பெருமூச்சை விட்டவாரே தூரத்தில் தெரியும் தொடருந்தினை நோட்டமிட்டாள் அழகாய் ஓடும் ரயில் அலுங்காமல் ,குலுங்காமல்.

தாய்க்கும் மகளுக்கும் இடையில் எப்போது கருத்துப் போராட்டம் தொடங்குது ?சிந்தித்தாள் சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயக்காந்தனின் நாவலின் வீரியும் புரியும் .

ஆனாலும் இந்த அதிகாரம் என்ற மகுடம் இலங்கை ஜனாதிபதி பதவி போலத்தான்  குவிந்து கிடக்கின்றது  தாய் என்ற நிலையில்.  பதின்ம வயதில் தன் மகள்களுடன் முரண்படுகின்றாள் ஒரு தாய்யானவள் .அதைச்செய்யாதே, இதை பழகு ,இன்னாருடன் இப்படிப்படி நட அடுத்தவரிடம் எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் சிறுபிள்ளைக்கு ஒப்பிவிக்கும் நிலை போல!

 எந்தப்பாதை எங்கே பயணம் என்ற பாடல் போல அதுவும் பிரெஞ்சில் சுதந்திர தேசத்து சுந்தர நங்கை யாழினி பேரிளம் பெண் .

நீ என்ன சொல்வது! நான்
 படித்தவள் எல்லாம் அறிவேன் என்ற எண்ணம் நெஞ்சில் தங்கினால் ! அங்கே வார்த்தைகள் சிறைப்பாவையாகிவிடும்.

 என் சொல்லைக் கேட்பதில்லை என்று முறைப்பாடு பொதுவெளியில் தோன்ற பின் கெளரவம் பாடல் போலத்தான் நீயும் நானுமா என்று ஒருவீடு இருவாசல் போல உள்ளங்களும் தனியே தன்னம் தனியே என்று துள்ளிக்குதிக்கும்  அக்கப்போராக.

தலைவன் நிலையோ தாரமா ?தன் பிள்ளையா ?எந்தப்பக்கம் என் பாசம் என்று அன்புள்ள அப்பா போல தவிக்கும் !

இது எல்லாம் இன்றைய வாழ்வின் நிதர்சனம் இந்த போராட்டம் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் ஏன் என்றாள் எல்லோருக்கும் பொதுவானவன் யாதவன் .

என்ன கேட்டா  அம்மா?

கோயிலுக்கு யார்கூட போறாய் என்ற ?அவளின் ஒற்றை வார்த்தையின் பதில் மேலே  ஏதுவும் கேட்க வேண்டாம் என்பது போல !

 ஆனாலும் கார்கால ஆன்மீக சாமிக்குள்ளும் இதயம் துடிக்கும் சொல்லத்துடிக்குது மனசு போல  ஏன்  உன் அம்மாவிடம் சொல்லி இருக்கலாம் யாதவன் கூடப்போறேன்  என்ற கற்பனைக் குதிரை கடந்த கால பூந்தோட்டம் படப்பாடல் மீட்டாத ஒரு வீணை போல  உன்னை நினைத்தாலும் இந்த தனிமரம் வெட்டிப்பயல் எங்கே  இந்த ரயிலில் வந்துவிடுவானோ என்ற கலக்கமும் சேர்தது . அவன் வந்தால்  பாட்டாளே கொல்வான் அவன் பாட்டு இதுவோ???


அவனை தொடர்பு கொள்ள மனம் நினைத்தாலும் யாழினி பார்க்கவே பிடிக்காதவன் அவன்! என் நட்பு என்ற வட்டம் அறிந்தவன் ஆனால் இவளோ !

தொடரும்