30 April 2013

வரலாற்றில் வாழ்தல்.-ஒரு பார்வை.




இரு மொழிக்கொள்கைக்கு தீ இட்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில்! தன் ஆசிரியர் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் .தன் ஜீவனம் எப்படிச் சென்றது .அதன் போது தன் எழுத்துலகப் பயணம் எப்படி அமைந்தது என்ற அலசல்களுடன் பயணிக்கும் எஸ் பொவின் வரலாற்றில் வாழ்தல் நூலில் .



பண்டாரநாயக்காவின் தூரநோக்கற்ற அரசியல் செயல் .அதன் பின் அவருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி .

அதன் பின்னான தூர்மரணம் என விரிந்து செல்லும் பார்வையில்.
 திருமதி பண்டாரநாயாக்காவின் அரசியல் பிரவேசம். அவரிடன் நேர் எதிர்மறை வாழ்வின் அந்தரங்கவிடயம் எல்லாம் இவரின் எழுத்தில் படிக்கும் போது அறிந்துகொள்ள முடியாமல்  இருட்டைப்பு செய்த அரியவிடயங்கள் எல்லாம் அக்குவேறு ஆணிவேரக அலசப்படுவது ஒருபுறம் !


அத்தோடு ஆழ்ந்த பல சிங்கள இதிகாசங்களின் அரசியல் விடயங்கள் எல்லாம் மீண்டும் ஞாபகத்தில் வருவது அதன் சிறப்பாகும் .


இந்நிலையில் தன் பதவி மாற்றங்கள் அதன் பின் தமிழக பயணம் அதனோடு ஏற்பட்ட இலக்கியத் தொடர்புகள் அதன் பின் ஏற்பட்ட அரசியல் நிலைகளினால்.

 ஆசிரியர் தொழில் கிடைத்து நையீரிய  நாட்டில் தன் வாழ்க்கை முறை .


அவர்களின் இலக்கியங்கள், மக்களின் வாழ்க்கை முறை ,நையீரிய நாட்டின் வளங்கள் எப்படி ஆதிக்க சக்திகளினால் சுரண்டப்பட்டது .நம்மவர்கள் தேசத்தவர்களின் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் சுவாரசியமாக தொகுப்பில் பதிவு செய்து இருக்கின்றார் எஸ்.பொ .!


அவுஸ்ரேலியநாட்டில் தான் அகதி அந்தஸ்த்து கோரிய நிலைகளின் தர்க ரீதியான காரணிகள் .அதன் பின் தன் எழுத்துலகப்பார்வை ,தமிழக ஏடுகளின் ஜனரஞ்சகச் சுரண்டல் ,சிற்றிலக்கியத்தின் நிலை ,புத்தாயிரத்தில் புலம்பெயர் சந்ததியின் இலக்கிய தலைமைத்துவம் பற்றியதான கூற்றின் சர்ச்சைகள் !


அதன் முகாந்திரம் அடிப்படையான எடுகோல்கள் எல்லாம் தொட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் .இதுவரை அறிந்துகொள்ளாத பலவிடயங்களும் தன் நாடுகான் அனுபவங்களையும் ,பல்வேறுபட்ட கலைஞர்களுடன் தன் இலக்கிய ஆளுமைகள்  நேர்காணலில் கிடைத்த சேறுபூசல்கள் ,சந்தனம் பூசல்கள் எல்லாம் என இதில் வாசிப்போருக்கு திறந்த புத்தகம் போல தன் பாணியில் சொல்லி இருக்கின்றார் எஸ்.பொன்னத்துரை நீங்களும் தேடிப்படியுங்கள் இந்த இரண்டு தொகுதிகளையும்.

இதன் முதல்பதிவு இங்கே--http://www.thanimaram.org/2013/04/blog-post_23.html.
-------------------------------------------------------
பாட்டாளிகள் எல்லோருக்கும் இந்தப்பாடல் .




27 April 2013

அந்தநாள் ஞாபகம் -10


வணக்கம் உறவுகளே நலமா??

அந்தநாள் ஞாபகம் ஊடாக  திரையரங்களில் ஒவ்வொரு பல்லிலும் சிரித்த காலத்தை அசைபோடுகின்றேன் உங்களுடன்.

 அதில் பார்த்ததில் பிடித்த படம் , அதன் பாடல் ,தாண்டி அந்த அந்த ஊரில் எல்லாம் ஒரு வழிப்போக்கனாக என் விற்பனைப்பிரதிநிதிப்பயணத்தில்  போன பாதையில்!


 விழியில் வலி இல்லை ,முகம் தொலையவில்லை, யாரைப்பார்த்தும் உருகவில்லை காதலியே என்று:)))


நொந்துபோகவும் இல்லை விடலைப்பையனாக :))))!

முதல் வேலைகிடைத்த போது   விண்ணுக்கும் மண்னுக்கும் குதித்த காலத்தில் எந்த உள்குத்தும் இல்லை மனதிலும் உடலிலும்:))) !


காலத்தின் கோலம் கடல் கடந்து வந்தலும்!கொஞ்சம் வார இறுதி  தொடங்கும் வெள்ளி மாலையே நண்பர்கள் சகிதம் சினிமா திரையரங்களில் விசில் ஊதுவோம் ஜாலியாக அப்போது கட்டுப்பாடு இல்லாமல் காரணம்  வேலைத்திமிர்:)))!

அது 1999/2000  அப்போது எல்லாம் எந்த தலையீடும் எனக்கு இல்லை சுதந்திரப்பறவை .

நண்பர்கள் சேர்ந்தால் எந்த படம் முதலில் பார்க்கலாம் என்று ஒரு குட்டி நீயா ?நானாவே ,நடக்கும் மும்மொழி பேசும் கொழும்பு சூழலில்.

 முந்துவது எப்போதும் தமிழ்ப்படம் பார்ப்போம் என்று போகும் காசு எல்லாம் கவலையில்லாத நாட்கள்:))))

அப்போது தான் மருதானை சினிசிட்டி குளிர் ஊட்டப்பட்ட பல்தொகுதி ,பார்க்கிங் வசதியும், பல்கனி வசதியும் ;கொண்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது .

இந்த சினிசிட்டியில் முதலில் வந்த தமிழ்ப்படம் இந்தப்படம் .

இலங்கையில்தான் ஹிட்சு அதுக்கு இந்தப்பட நட்சத்திரங்களை இலங்கைக்குஅறிமுகவிழாவுக்கும் மற்றும் அதனோடு விளம்பர விடயங்களுக்கும் வந்து சென்றார்கள் என்பதும் பதிவுக்குரியது .அவர்களை நேரில் பார்த்தேன் என்பதும் இன்றும் சந்தோஸம்!ஹீ ஆனால் செலவுக்கணக்கு எல்லாம் வேண்டாமே!ஹீ!

அப்போது இருந்து இந்தப் பாடல் எனக்கு அதிகம் பிடிக்கும்.

இந்தப்படம் என்னோடு சேர்ந்து பார்த்த ஒரு நட்புக்களின் கடந்தகால நினைவுகளை மீட்கும் காதல் ராகம் சொல்லும் ஒரு தொடர் உங்களை நாடிவரும் விரைவில்!

இதன் முதல் பதிவுகளில் இதுவும் படிக்கலாம்!http://www.thanimaram.org/2013/02/7_7281.html.

தொடரும் அந்தநாள்  ஞாபகம்.....!

25 April 2013

ஐபோனில் தமிழா!! தனிமரமா???


அப்பிள் நிறுவனத்தின் அரிய வெளியீடான ஐபோனின் வருகை ஒரு வரப்பிரசாதம் .தனிமரம் என்ற வலைப்பதிவில் இன்றுவரை நான் எழுதும் பதிவுகள் எல்லாம் இந்த ஐபோன் செய்யும் மாஜம் தான் .

பாடல் இணைப்பும் காட்சிப்பட இணைப்பும் மட்டுந்தான் காட்டானின் கணனி செய்து தந்த உதவி கடந்த ஆண்டுவரை.:)))  .

இந்த ஐபோனில் எப்படி தமிழில் எழுதுவது என்றாள்?


அப்பள் ஸ்டோரில் போய் செல்லினம் என்ற அப்பளிக்கேசனை தேடினால் மு என்ற தமிழ் வடிவம் முன்னே வரும் .*


இதன் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறனின் முயற்ச்சி .இவர் ஒரு மலேசிய மைந்தன்.


அதனை உங்கள் கைபேசியில் தரவிறக்கவும்.அதன் பின் செல்லினம் உங்கள் வசம் 
தரவிறக்கியபின் விரும்பியதை தமிழ் மொழியில் நீங்கள் எழுதமுடியும்.


செல்லினம் தமிழில் நீங்கள் விரும்புவதை ஆங்கில வரிசைக்கிரமத்தில் எழுதுங்கள் .


ஒவ்வொரு பொன்ஸ்சும் நெடில்  எழுத்தை எழுத  அதன் அம்புக்குறி படத்தை ஒரு தடவை அழுத்துவன் ஊடாக நெடில் எழுத்தை பெறலாம்!

அதன் சாதாரன அமைப்பில் குறில் எழுத்துக்கள் சீராகவே இருப்பது அதன் சிறப்பம்சம் .


இதில் இருக்கும் குறைபாடு என்றால் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகும் போது நீண்ட பந்தி வந்தால் தட்டச்சு வேகம் குறைந்துவிடும் .அதனால் மிகவும் இலகுவான வழி சிறிது சிறிதாக எழுதிவிட்டு அதனை இன்னொரு இடத்தில்  காப்பி செய்துவைத்துவிட்டு தொடர்ந்தால் காரியம் இலகுவாகும் .

மீண்டும் பதிவு முழுமையடைந்து விட்டது என நீங்கள் நினைத்தால் பகுதி பகுதியாக காப்பி செய்ததை மீண்டும் ஒன்றாக்கிவிட்டு பிழைதிருத்தம் செய்ய முடியும்.

முதலில் சற்று கடினம் என்றாலும் தொடர்ந்து தட்டும் போது எழுத்துக்கள் மனதில் தங்கிவிடும் பிறகு வார்த்தைகள் மிகவும் இலகுவாக வந்துவிடும் .!
மேலதிக விபரம் இங்கே கிடைக்கும்.-http://sellinam.com/

..இந்தப்பதிவு எழுத்தக் காரணம்  ரெவெரி அண்ணாச்சி அவருக்கு தனிமரத்தின்  நன்றிகள்.

தனிமரம் பாரிசில் இப்படித்தான் அப்போது உருகியதோ  ஹீ


அடஐபோன் வந்த போது!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

23 April 2013

வரலாற்றில் வாழ்தல் ஒரு பார்வை!!!!!!


"படுதுயர் மறந்தொரு ஒட்டகம் மீதினில்
பயணம் செய்யும் பரதேசியாகவே
வடுபுண் தடவிட விரல்தொடு தழும்பினில்
விழிநீர் நிரம்பிய பயணியாய் நானும்!"
      (எஸ்.பொ )


ஈழத்து இலக்கிய வானத்தைப்பார்க் ஆசைப்படும் சாதாரண வாசகர்களை கடந்து ஈழத்து இலக்கிய கர்த்தாக்களின் தத்துவச்செருக்கு என்ன என்பதை தேடும் பலரும் வாசிக்க வேண்டிய ஒரு தகவல் களஞ்சியம் தான் வரலாற்றில் வாழ்தல் என்ற  எஸ்.பொ .வின்  குறிப்புக்கள் அடங்கிய நீண்ட வாழ்க்கையின் சில சில விடயங்களை தொட்டுச் செல்லும் கட்டுரைத் தொகுதி!

வாசிப்பு பிரியர்களுக்கு இந்த 
எஸ்.பொ ஈழத்து இலக்கிய வானில் ஒரு வணங்கா முடி  என்பதை நன்கு அறிவார்கள் .

என்றாலும் அந்த எஸ்.பொவின் அனுபவத்தின் ஊடாக யாழ் மேட்டுக்குடி பண்டிதர்களின் வாழ்பிடி அரசியல் ஆதிக்கம் ,அவர்களின் உள்குத்து என்பதில் தொடங்கி  !

அவரின் அகன்ற பார்வையூடாக ஈழத்து இலக்கிய குஞ்சம் கட்ட ஆசைப்பட்டதும் அதன் மூலம் என்ன என்ன சவால்களை சந்தித்தார் ?என்பதை தன் கூற்றாக சொல்லும் இந்த நூல்த் தொகுதி இரண்டு பாகம் கொண்டது .

மித்திரா வெளியீடாக வந்து நீண்டகாலமான இந்த தொகுதி கடந்த ஆண்டு. வசந்தகாலத்தில் சென்னையில் உலாச் சென்ற போது வாங்கியது .


இதுவரை வாசித்த
நூல்களில் என் நேரத்தினை பாரிசில் வாழ்வில் அதிகம் கொள்ளை கொண்டது. இது .

இலக்கிய தேடல் இருக்கும் எந்த வாசகனும் கடந்த காலத்தில் தம் கைக்கு கிடைக்க முடியாமல் போன யுத்த அவலம் ஒருபுறம், ஈழத்து பண்டிதர்களின் இருட்டடைப்பு ஒருபுறம், என்ற வட்டம் கடந்து பொக்கிசமாக சேமிக்க வேண்டியது!

தன் பிறப்போடு தொடங்கி தன் வாழ்க்கைச் சூழ்நிலை அப்போதைய யாழ்ப்பாணத்து ஆதிக்க வெறியினரின் வாழ்வியலில் தொடங்கி அதன் ஊடாக இலங்கையில் ஆழும்கட்சியாக வரும் ஜக்கிய தேசிக்கட்சி ,மற்றும் சுதந்திரக்கட்சி ,அதன் கூட்டணியான இடதுசாரி மார்க்கிய வாழ்பிடிகள் என அரசியல் நகர்வுகள் ஒருபுறம் ,தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணி என்போரின் தூர நோக்கு என்ற போர்வையின் பின் தன் வீட்டு இலாபம் அறிந்த சாமானியன் பார்வை அதன் ஊடாக இலக்கியப் பிரவேச   ஆசை .

அப்போதைய அவரின் வருகையை ஏற்றியும்  ,தூற்றியும் ,பேசியவர்களின் இலக்கியப்படைப்புக்கள்.

 அதன் ஆழுமை என்பனவற்றின் ஊடாக ஒரு படைப்பாளி எப்படி நடுநிலமையோடு தன் கணிப்புக்களை விதந்துரைக்கவேண்டும் என்பதை விமர்சனப்பார்வையூடாக விதம்பி நிற்கும் இந்த நூலில் .


நாம் ஒருவரின் 71 வருட வாழ்வின் தத்துவங்கள் ,பிடிமானங்கள், பிடிவாதங்கள் ,இழப்புக்கள் ,பெற்றவை ,குடும்ப நிலை ,அரசியல், சமய ,சமூக ,நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றித்
தகவல் என எதிர்கால வாசகனுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த நூலில் !

என்னைக்கவர்ந்த இந்த வரிகளை மீண்டும் ஒரு வாசகனாக என் வலையில் சேமிக்கின்றேன் !


"படுதுயர் மறந்தொரு ஒட்டகம் மீதினில்
பயணம் செய்யும் பரதேசியாகவே
வடுபுண் தடவிட விரல்தொடு தழும்பினில்
விழிநீர் நிரம்பிய பயணியாய் நானும்!"!


தொடரும்!!!!!!

21 April 2013

விழியில் வலி தந்தவனே விரும்பியோர்!


வணக்கம் உறவுகளே !
விழியில் வலி தந்தவனே தொடரை தொடர்ந்த தனிமரம் என்ன இன்னனும் சுகியின் நினைவில்  சுந்தர மோகனம் பாடுதோ என்று என்னை ஒரு அன்பு நண்பர் முகநூலில் கலாய்த்தாலும் !

தனிமரம் என்னோடு இந்த தொடரில் கூடவந்தவர்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டுமல்லவா?? 

பதிவுலகில் தொடர் என்றால் வரும் வாசர்களும் ,பின்னூட்டமும் ,ஹிட்சும் மிகக்குறைவு என்றாலும்! 

சில ஆதங்களையும் ,விடயங்களையும் எழுத்தில் பதிவு செய்வோம் !என்றாவது ஒருவர் தேடும் போது .அது அவர்கள் விழியில் விழும் என்ற  எதிர்பார்ப்பு எனக்கு எப்போதும் உண்டு.

 எங்கள் மண்ணில் நடந்த சங்காரம் எப்போதும் மனதில் ஒரு வலியாக தொடரும். என்றாலும் அந்த நேரத்திலும் சாதாரன மக்களின் மனநிலை என்ன ?ரகு போன்றோரின் கனவுகள் ?சுகி 
போன்றோரின் எதிர்ப்பார்ப்புக்கள் .எல்லாம் எப்படிப்பட்டன என்று ரகு நேரடியாக என்னோடு ஓர் இடத்தில் பகிர்ந்ததை .

சில காலத்தின் பின் தனிமரம் வலையில் சுதந்திரமாக எழுதிய திருப்தி எனக்குண்டு ..அத்தோடு இது விருதையும் தந்து என் வலையை அலங்கரிக்கின்றது..!

ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பின் வரும் காலங்களில் ஏனோ தடம் புரண்ட ரயிலைப்போல மாறிவிடுகின்றது.

 ரகு ஒரு பாதையில் சுகி ஒரு பாதையில் போனாலும் ஆசையும் ,கனவும் ,காதலும் பாலம் போட அதன் பின் இனவாத யுத்தம் என்ன செய்தது? என்பதை இந்தத்தொடர் அலசியது 

.இந்தத் தொடருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை .என்றாலும் சில கவிதைகள் தோன்ற சுகியும் ஒரு காரணம் .அதை உள்வாங்க ரகுவின் அன்பும் ஒரு  காரணம் .இந்த இருவரும் என்னை அதிகம் அறியாதவர்கள் .

அதுவும் தனிமரம் என்ற வலையில் இதைப்பதிவு செய்வதை ரகு அறிந்தாலும் ,சுகி என்றாவது ஒருநாள் அறியலாம் என்ற நட்பாசை இந்த நொடிவரை இருக்கின்றது.!

 காரணம் இன்னும் ரகு பாத்திரம் தனிமரமாக வாழ்கின்றான் என்பதில் தனிமரம் நேசனின் அன்பும், நட்பும் அவனுக்கு எப்போதும் தொடரும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையிருக்கு.

 எல்லாம் அவன் செயல் !

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வந்த முதல் வாசகர் திண்டுக்கல் தனபாலன் சார் அவருக்கு என் நன்றிகள் முதன் கண் .

பின் தொடர்ந்தவர் யோகா ஐயா அவரைத் தொடர்ந்து கவியாழி கண்ணதாசன்,கவிஞர் பாரதிதாசன்,இவர்களோடு வலையுலகில் நான் பிரமிப்பாக நோக்கும் தொடர் படைக்கும் செங்கோவி ஐயா,மின்னல்வரிகள் கணேஸ் அண்ணா ,தளிர் சுரேஸ் போன்றோரின் ஊக்கிவிப்பு இந்த தொடரை நிதனமாக எழுதக்காரணம் ..


அவர்களைத்தொடர்ந்து அஞ்சலின் ,அதிரா,இளமதி,சீனி,முத்தரசு,மாத்தியோசிமணி,ரெவெரி அம்பாளடியாள்,பூவிழி,பூந்தளிர்,போன்றோரின் ஆதரவு ,மகேந்திரன் ,நாஞ்சில் மனோ,ராச்,நெற்கொழுதாசன் ,பூங்கோதைச் செல்வன்,ஆத்மா, T.M.முரளிதரன் ,ஆதிரா,அருணா செல்வம்,ராச்,கரந்தை ஜெயக்குமார்,போன்றவர்களின் பின்னூட்ட ஊக்கம் இந்த விழியில் வலியை வலையில் ஏற்ற உந்து சக்தி என்றால் !

இந்த தொடரை தொடங்க முதல்க்கருவி ரகுவின் நட்பும் .அவனின் வழிகாட்டல் தடத்துக்கு தனிமரம் எழுத்தாணியாகினேன். இந்த எழுத்தாணி விடும் எழுத்துப்பிழைகளை திருத்திய என் தாய்க்கும், என் மனைவிக்கும் நன்றிகள்.


நான் வேண்டிய வண்ணம் இந்த காட்சிப்படம் வரைந்த நிகழ்வுகள் கந்தசாமிக்கும் என் நன்றிகள்  .

என் தொடருக்கு முகநூலில் விளம்பரம் செய்த நண்பர்கள் தளத்தின் பதிவாளர் ராஜ்க்கும் இந்த தொடரினை முகநூலில் விரும்பி லைக் செய்த உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

அத்தனை  உறவுகளின்  ஒத்துழைப்பும் ஊக்கமும் தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த இந்தத் தொடர்.!

மிகவும் ரசித்து ஒரு காதல் கதையை எழுத ஆதரவு தந்த ரகுவுக்கும், உங்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

எனக்குப்பிடித்த பாடல்களை தந்து உதவிய யூட்டியூப் சமுகதளத்திற்கும் ஒருகோடி நன்றிகள்.:))) 

என்னோடு விழியில் வலி தந்து என்னையும் இதுநாள் வரை  பிரியாத  இந்த ஐபோனுக்கு மொத்த நன்றிகள் இத்தனை உறவுகள் இவள் மூலமே :)))


அவள் கேட்கும் பாட்டு  இதுவோ???:))))


....

20 April 2013

அந்த நாள் ஞாபகம்-9


வணக்கம் உறவுகளே நலமா??
மீண்டும் தனிமரம் அந்தநாள் ஞாபகம் ஊடாக திரையரங்கில் தனியாக  சினிமாமீதான ஆர்வத்தில் எப்படி எல்லாம்! சீரழிந்தது, சிந்தித்தது? செயல்பட்டது .

என்பதை அசைபோடுகின்றேன் உங்களுடன் -பண்டாரவளை -நியூதியோலி.


.

எப்போதும் கடந்தகாலம் இனி மீண்டுவராது .என்றாலும் ரயிலின் பயணத்தில் மரங்கள் அசைந்தது என்ற கவிஞர் கற்பனை போல!

 நானும் இனவாத யுத்தம் கடந்து தனிப்பட்ட பொருளாதார தேடலில் விற்பனைப்பிரதிநிதியாக வேட்டி கட்டாமல் டை(கழுத்துப்பட்டி ) கட்டி முன்னம் புகையிலைக்கு பாணி போட்ட வேலையை விட்டுவிட்டு.)))))))   பன்நாட்டு கம்பனிக்கு எடுபிடியாக ஒவ்வொரு ஊர் விட்டு ஒவ்வொரு ஊர் சுற்ற ஆரம்பித்த நிலையில்.

இந்த தொழிலில் ஏற்பட்ட பதவி மாற்றத்தினால் போன இடம் தான் இந்த பண்டாரவளை!


நான் போகமுன்னமே இந்த ஊருக்கு போன என் கிராமத்தவர் கதையை நடுநிலையோடு வரலாற்றுத் தகவலுடன் பண்டாரவளை நகரின் மான்மியம் பற்றி வரலாற்றில் எழுதினால் .அதில் வடக்கில் பல தீவுகளில் ஒருதீவான என் கிராமத்தவர்கள் பொருளாதாரம் ஈட்ட இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையும் ,பின் இனவாத யுத்தத்தின் பயனாக குடும்பத்தையும் பாதுக்காக்க  அழைத்து வந்து குடியேறி இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ப்ல்ர். அவர்கள்  வந்த இடத்தில் பிழைக்க வந்து வெற்றிக்கொடிகட்டி குடும்பம் ,வியாபாரம் ,அரசியல் என்று ஆடைகட்டி அதில் தன் சுய கொளரவம் தொலைந்த  குடும்பஸ்தர் கதை எல்லாம் நிச்சயம் அச்சில்  ,இணையத்தில் வரலாம் ஆனால் அதுவருமா?? என்பதை காலத்தின் கையில் விட்டுவிட்டு §


இந்த நகரம் பல சிறப்புக்களையும் சில கரும்புள்ளிகளையும் கொண்ட நகரம். மூவின மக்களும் 'சேர்ந்து வாழும் இந்த ஊரிலும் விற்பனைப்பிரதிநிதியாக வலம் வந்த காலம் வசந்தகாலம் எனலாம் .

பல நட்புகளுடன் மலையகம் சுற்றும் சந்தர்பம் கிடைத்தது அத்தோடு இலங்கை வானொலியின் விளம்பர நிகழ்ச்சியான வர்த்தக(தென்றல் பின்நாட்களில்) வீதியுலா நிகழ்ச்சியும்.

 அன்பான அறிவிப்பாளர்களின் முகத்தினையும் நேரடியாக தரிசிக்கும் சூழல் கிடைத்தது. அவர்களின் நட்பு பின் இன்னொரு தேடலின் பக்கம் என்னையும் ஈர்த்தது .

அப்போது என்னோடு வந்த நட்பும் அந்த நண்பர்களின் காதல் கதையும் அதன் அரசியல் சூழலையும் ,இனிவரும் தொடரில் இன்னொரு வீதியுலா வரும் மலையகம் ஊடாக தனிமரம் வலையில் விரைவில்!


பண்டாரவளை திரையில் பார்த்த இந்தப்படம் என் ஞாபகத்தில் இன்னும்
ஒரு நினைவுச்சின்னம்!




தொடர் முன் பதிவை இங்கேயும் காணலாம்.http://www.thanimaram.org/2013/02/7_7281.html

14 April 2013

வசந்தமும் வாடலும்!

வாடிய மரங்கள் எல்லாம் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றது 
வந்துவிட்ட காதலியே காத்திருந்தோம் !
வாடிய பயிரைப்போல குளிரில் !
வசந்தகாலமே உன் வருகை 
வாழ்வின் வசந்தம்! வசந்தகாலத்தில் மரங்களில் பூக்கின்றது 
வடிவான பூக்கள்! 


வரும் வழியில் உன் கீதம் காதில் ஒலிக்கும் !
வந்தது செவியில் ஒரு செய்தி ஒலிக்கும் 
வாய்ஸ் ஓய்ந்து போனதாம் .
வாடிப்போகுமோ? ஊமைவிழிகள் 
வாடிய போதும் ஒலிக்கும் உன் நாதம் !


வாடா ஈழத்தில் ஒவ்வொரு கணமும் 
வாடாத தோல்வி நினை என நினைத்தால் 
வாடிய சோகத்துடன் 
வலையில் இவன் வழியனுப்பும் இந்த பாடல்! 

05 April 2013

விழியில் வலி தந்தவனே-இறுதி!!!!!!!!!!!!!


யுத்தம் காடாக்கிய வன்னி மண்ணில் மீண்டும் சோலையாக்க வேண்டிய் பாரிய வேலைப்பாடுகள் பல்தேசியத்தின் உதவியுடன் மீளக்கட்டியெழுப்ப வேண்டும் !




பாழான இனவாத அரசியல் ஆலோசக வாதிகள் அகற்றப்பட்டு இந்த நாடு செழிப்புற்றால் மட்டுமே அது சாத்தியம் !

இனவாத பேய்கள் ,மதவாதசகுனிகள் ,மொழிவாத குருடர்கள் ,அயல்தேச முள்ளமாரி ,முடிச்சவிக்கி , வேடதாரி பேய் ஓட்டிகள் எல்லாம் போய்த்தொலைந்தால் தான் புண்ணிய் பூமி ஆகும் அது!
சீர் செய்ய நீண்டகாலம் என்பது நினைவிற்குத் தெரியும்.\

  வடக்கில் இருந்து தெற்கு கொண்டு போன பிள்ளைகள் எல்லாம் புனர்வாழ்வு என்ற பூட்டிய  சிறையில் புழுவைப்போல புதைத்து விடுவார்களா ?விடுதலையாகி  வெளிவரும் பிள்ளை முகம் காணூவேனா ?என்ற  சோகத்தை நெஞ்சில் தாங்கி நிற்கும் எங்கள் உறவுகள் எல்லாம்  நிற்க முதலில் ஒரு ஊன்றுகோல் தாங்க!


எங்களுக்காக பள்ளியை பகிஸ்கரிப்போர்களே பள்ளிக்கே போக  வழியில்லாமல் பலர் இங்கு வாழும் .அவலத்தை பலதேசத்துக்கு சுதந்திரமாக சொல்லுங்கள் .

வந்து படிப்பிக்க முயலுங்கள் பாழான அரசியல்  தாண்டி .உங்கள் படிக்கும் காலத்தில் உயிர் விட்டு தீக்குளித்து தியாகி ஆகி எங்கள் தியாயங்களை கொச்சைப்படுத்ததீர்கள்.

 எங்களுக்கு இந்த ஜென்மத்தில் இப்படி நடக்க வேண்டும் என்று எழுதிய கடவுளைக்கூட சபிக்கின்றோம் நாள் தோறும். கண்ணகி தேசத்துக்கு சாபம் போட்டு எழுதிய தாமரையின் கவிதை போல.

 முசேலினி வம்சத்து முந்தாணையில் ஒளிந்து கொண்டு முத்துப்பல் இழித்துக்கொண்டு முகாரி பாடாதீர்கள்  மத்திய அரசை மீறி ஒன்றும் நடக்காது கவலை வேண்டாம் என்று அறிக்கைவிட்டுக்கொண்டு .

ஆட்கள் படை சூழவந்து ,பட்டாடைகட்டி பால்ச்சோறு தின்று விட்டு .தேனொழுகப்பேசி விட்டு ,தென்னகம் சென்று நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். ஈழம் வெல்வோம் என்று இது எல்லாம் உங்கள் ஊர் சினிமா நட்சத்திரம்
களிடம்  காட்டுங்கள் .


எங்கள்  கால் வலிக்குது எத்தனையோ உள்குத்தினால் என்று நினைத்து  மீண்டும் கிளிநொச்சித் தரையில் இருந்தான் ரகு!

சில காலத்துக்கு பிறகு சுகியை  ஒரு முறை வீதியில் கண்டான் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தால்.!தோழிகள் சூழ ரகுவை அவள் கண்டாள்!! ஆனால் சைக்கிளை நிறுத்தி அவள் கதைக்கவில்லை.பேசாமல் சென்றுவிட்டாள். பின்னால் இனவாத புலனாய்வு அவளையும் வேவு பார்க்கலாம் ,அப்பாவின் அதிகாரம் வலுவிழந்தாலும் இன்னும் என்ன ஆகும் எதிர்காலம் என்று எண்ணி இருப்பால் போலும்!


 இந்த நிலையில் ரகுவையும் இன்னும் ஏன் காயப்படுத்துவான் என்று போனாலோ!


 மேல் படிப்பு படிக்கவும் அல்லது அவள் தேகத்தையும் காமப்பேய்கள் மேய்ந்துவிடக்கூடும் என்ற பயத்தில் வேற ஊர் போனாலோ
புலம்பெய்ர்ந்து போனாலோ!
விடையே இல்லை!!!


விழியில் வலி தந்தவனே
விரும்பியபோது விலகினாய்
 வழியில் வந்தாய் வன்னி வீதியில்
விடையில்லாத வேள்வித்தீ
வீழ்ந்த போது!


வருந்துகின்றேன்
விழியில் வலி தந்தவள்
விவசாயி மகன் விடுதலைகண்டு ஆனந்தம்.
விழிகள் பின்னே என்னையும் வேலி போடுகின்றது
வருந்திவிடாதே!
விரும்பும் உன் வருகை கண்டேன்
வாழ்வோம் இன்னொரு ஜென்மத்தில்!



    அதுக்கு பிறகு ரகு சுகியை சந்திக்கவே இல்லை !
வழிமேல் விழிவைத்து விருப்புடன் காத்து இருக்கின்றான் ரகு விழியில் வலி தந்தவள்  வருவாள்  என்ற எதிர்பார்ப்பில்! அவள் வருவாளா ??,அவன் சேர வேண்டி பிரார்த்திக்கும் கடல்கடந்தவன் நண்பன் இவன்!இந்தப்பாடலுடன் விடைபெறுகின்றான் வன்னிக்களத்தில் இருந்து!


                          (முற்றும்)

                                          மூலக்கதை ----ரகு
                                           மூலக்கவிதை ---சுகி
                                              இடையில் கதையும் கவிதையும்  தனிமரம்!!!

04 April 2013

அரியாசனம் ஏறும் தனிமரம்!!!!!!!அடகொக்கா மக்கா ஹீ!

வணக்கம் உறவுகளே எல்லோரும் நலம் தானே??? 

வலைப்பதிவு என்ற எழுத்துலகில் வலம் வரும் பதிவாளர்கள், பதிவாளினிகள் எல்லாருக்கும் இருக்கும் ஆசைதான் எல்லோரும் தம் பகிர்வை படிக்கவேண்டும் நிறை ,குறைகளை தொட்டுச் சொல்லவேண்டும், தட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் !



 ஆனால் அந்த தென்றல் அப்படி எளிதில் இந்த பதிவுலகத்தில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை என்பது என் அனுபவம் . 


என்றாலும் முயற்ச்சி திருவினையாக்கும் என்பதுக்கு இணங்க எனக்கும் ஆரம்பத்தில் தெரியாத, பலவிடயங்களை இந்த பதிவுலகம் கற்றுக்கொடுத்து இருக்கு . அதிக நட்புக்கள் இப்போது எனக்கு இருப்பது இந்த வலைமூலம் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி 


. இந்த மூன்று வருட தனிமையை போக்கியது இங்குதான் .அதிக சண்டை ,விவாதம் வெட்டிப்பேச்சு என்று நானும் பலருடன் பழகியது ,பின் பிரிந்தது ,வெறுத்தது ,ஒதுங்கியது ,என்றெல்லாம் கடந்து என் எழுத்து ஆர்வத்திற்கு பலர் தோள் கொடுத்த உறவுகளுக்கு நன்றி சொல்லும் ஒரு பொதுத்தளமாக வரும் வார் 8/4/13 வலைச்சர ஆசிரியர் பதவியை அலங்கரிக்க அன்பு நண்பர் தமிழ்வாசி அவர்கள் அழைத்து இருக்கின்றார்!



 கிடைக்கும் வாய்ப்புக்கள் எல்லாம் என் எழுத்துப்பணியை மெருக்கூட்ட கிடைத்த சந்தர்ப்பமாக கருதி . என் பணியை வரும் 8/ 4/2013 தொடக்கம் ஒரு வாரம் உங்களுடன் நான் படித்ததில் பிடித்தது ,பழகிய ,பிடித்த தெரிந்த ,தெளிந்த ,பதிவுலக ஜாம்பாவாங்கள் பற்றிய என் கரித்துப்பகிர்வை உங்களுடன் அசைப்போடப்போறன்! 


எல்லாரும் எப்போதும் போல அன்பும் ,ஆதரவும் ,தருவீர்கள் என்ற நம்பிக்கையில் அரியாசனம் ஏறப்போரேன்.! 

வரும் வாரம் வலைச்சரத்தில் சந்திப்போம் எனதருமை உறவுகளே !!! நேரம் கிடைக்கும் போது ஒரு தரிசனம் காணுங்கள் தனிமரத்திற்கு தார்மீக ஆதரவு தந்து. 


நட்புடன் தனிமரம் 
தியாகராஜா சிவநேசன்!
பாரிஸ்.

03 April 2013

விழியில் வலி தந்தவனே--20


இந்த உலகில் அடிப்படைத்தேவையாவன என்று வரையப்பட்ட உணவு அது எங்களுக்குப் பகல் கனவாகிப்போச்சு பயிர் இட்டு பால்குடித்து பலர் சேர்ந்து இருந்த எங்கள் ஊர் பண்பட்ட பண்பாடு வளர்த்த பூமியில் பாவிகள் பொசுபரசுக்குண்டு போட்டு!



 விளைநிலத்தையும் விளையாமல் செய்த செயலில் பசிக்கின்றது வயிறு !


பாரதமும் ,சர்வதேசமும் பண்போடு பால் ஊத்த வேண்டாம் .பாழ்பட்ட பூமியில் பயிர் இடும் வசதியை முடிந்தால் முதலில் செய்து தந்து விட்டு வெட்டிப்பேச்சு பேசட்டும் ஈழம் காண்போம் எழுந்து வாங்கள் என்று!

 சப்பாத்துக்கால்கள் முதுகில் சங்காரம் செய்தாலும் ,தமிழன் என்று முளி புடுங்கினாலும் , சாகாத விழிகள் மீது இவர்களின் சீட்டுச்சக்கர நாற்காலிக்கனவு என்ன என்று தெரியாத பூமி புத்திரர்கள் இல்லை பண்டார வன்னியன்  வாழ்ந்த் பூமியில் வந்தவர்கள் .


ஆனால் இன்னும் இருக்கவீடு இல்லை, உடுத்த உடையில்லை ,வீதியில்இரந்து  நின்றால் விபச்சாரியாம்!

 சமூகம் கெட்டு விட்டுதாம் விளம்பரம் செய்யும் ஊடக விபச்சாரர்களுக்கு விழியில்லை ;வீதியில் தான் பிறந்த ஊரில் இல்லாத வீட்டைப்பார்த்து கதறும் தாய் .அவள் பால் ஊட்ட அழும் பிள்ளைக்கு பசிக்கு  உணவில்லாத நிலையை பத்திரிகையில் எழுதவேண்டியர்கள் பந்தி எழுதுகின்றது. பத்தினியா ?பாலியல் தொழிலாளியா ??என்று ஊத்திக்குடித்துக்கொண்டு ஊர்கதை பேசுவோர் முதலில் உடுக்க நல்ல உடை வாங்கித்தந்துவிட்டு  .

தங்கள் மானம். மரியாதை என்று ஊர்ப்பற்று என்று  விளம்பரம் செய்யட்டும்.

 .அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப காலி ஆகும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் அயல் நாடும், அடுத்த கட்டமும் ,என்று ஆராய்கின்ற கூத்தணியும் இந்த தேசத்தில் தான் கூத்தாடுகின்றது!

எங்கள் வாழ்வு கெடுத்தவனுக்கே எங்கள் ஓட்டு என்ற கோசம் போட்ட கோமாளிகள்  எல்லாம் எங்களை வைத்து வியாபரம் செய்கின்றது.









ஐயாமாரே  நாங்களும் நல்லாக வாழவேண்டும் மற்ற நாட்டவர்கள் போல உழுத பூமியில் எத்தனை எலும்புக்கூடு இன்னும் உக்காமல் இருக்கு. அந்த இடத்தில் எல்லாம் உண்மை பேசு என்று போதித்த புத்தன் சிலைகள் .