29 July 2016

41 ஒரு நாட்கள் ! சிந்தித்தால் நிஜம்!!!


சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லிய வண்ணம் பல படைப்புக்கள் வருகின்றன.ஆனால் நெஞ்சில் தங்குவது சிலது என்பது நிதர்சனம்.

அந்த வகையில் இந்த குறும்படம் சமூகத்தின்  முக்கிய ஒரு விடயத்தை பொதுவிள் பேசுகின்றது அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்! இன்னும் பலரிடம் விவாதிக்கும் விடயமாக மாற்றுவது உங்கள் கைகளில்! படக்குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்! இதோ!

 இனிய குறும்படம் ரசிக்க!













27 July 2016

கவிதை போல கிறுக்கல்!!!

நினைவுகளுக்கு மட்டும்
நினைவில் ஒரு கல்லறை இருக்கும் எனில்
நீங்காத  உன் நினைவுகளையும்
நிச்சயம் அதில் புதைப்பேன்
நீ பிரிந்த அந்த நொடிகளை!//


/////

யாரோடும் நீ  சென்று வாழ்ந்தாலும்
என் யாசகம்
என்றும்  வாழ்த்தும் அன்பே!
யாசிப்பது உன் அழகையல்ல
யாதுமாகிய உன் நேசத்தை!
யானோ ஏதுமற்ற ஏதிலி!





//////////////////////////////////

இதயத்தில் நுழையும் காதல் போல
இமையும் இசையும்  இருவாசல் திறக்கின்றது!
இருண்டுபோன நம் இருவர் கைதிபோல,
இனியும் வசந்தம் என்று
இணைந்துபாடுவோம் இந்த
இனிய நாட்களை





//////////////////////

அடுப்படி வெப்பத்திலும் 
அனல்போல என் காதல்
அகதி உன்னைத்தேடியே
அலைந்து திரிகின்றது
ஆயுள்ச்சிறையில் என்றாலும் 
அணைத்துக்கொள்

முன்னம் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2015/03/blog-post.html

19 July 2016

யாசிக்கும்-- ஏ-- தி---லி--15

முன்னம் நினைவில் இங்கே-http://www.thanimaram.org/2016/07/14_5.html

இனி நினைப்பு தோன்றினால் விரும்பி தொடர்க!யாரையும் நோகாத ஏதிலி!!!





ஒரு ஆண் காலம் எல்லாம் பிரம்மச்சாரியாக வாழ்வதுக்கும், ஒரு பெண் காலம் எல்லாம் செல்வியாக வாழ்வதுக்கும், இந்த சமூகத்தின் சம்பிராதய ,இயல்பான,வாழ்வியல்  கட்டமைப்புக்கள் இடம் கொடுப்பது என்பது நிதிமோசடி வழக்கில் கைதியாக உள்ளே போவது போலவும் ,நோய் நொடி  என்ற சாட்டில் வெளிவருவது போல இலகுவான அரசியல் இல்லை .


ஒரு கம்பவாதிரி ,ஒரு அப்பாக்குட்டி தங்கமா என்று நாடு சிலரைத்தான் அறியும்!

 இன்னும் சிலர் வெளியுலகம் அறியாது , சிலரின் காதல் கைகூடாத நிலையில் காலம் எல்லாம்  தாடியுடன் சாமியாக ,அல்லது வெள்ளைரோஜா போல கன்னியாஸ்த்திரி என்று சமயத்தொண்டு என்று புதியபாதையில் பயணிக்கும் போக்கையும்  இந்த இனவாத ஆட்சியாளர்களின் தூண்டுதல் போல குடும்பம்  உறவுகள் என்ற ஆட்சிநிலை எதையும் தீர்மானிக்க இடம் கொடுப்பதில்லை யாழினி !

இதுதான் பொதுவான நடைமுறைச்சிக்கல் ,இலங்கை ஆட்சியின் இனவாத கலாட்சார போராட்டம் போல புதிது புதிதாக  தோன்றும் வன்முறைகள் !கண்டி நடணம்  போல எங்கும் ஆட இங்கு பாரிசில் இங்கு என்னாலும் முடியாது !

என் தந்தை எனக்கு எப்போதும் ஒரு நண்பன் போல நாங்க வியாபாரத்தில் பலதுறையில் ஈட்டுபட்டாலும் என் தந்தைக்கு  உன்மேலான என் காதல் வேதம் புரியும் !

என் யாசிப்பு மோகமுள் போல அல்ல   என்றென்றும் காதல்  போல நேசம்  என்பதையும் உணர்ந்தவர்.!

 உன் தந்தையைவிட குடும்பம் என்றால் விட்டுக்கொடுத்து போக வேண்டும் பிள்ளைகளின் ஆசையைப்புரிந்து கொண்டு என்பதை நம்பும் சாதார அப்பா அவர்.

 எனக்கு தவமாய்த் தவம்மிருது பட தந்தை போல என் காதலுக்குகாக தாய்தேசத்தில்   இருந்து தன் புலம்பெயர் நட்புக்கள் மூலம் எல்லாம்  எனக்காக உன் தந்தையிடம் பல தடவை தன்நிலையில் இருந்து இறங்கிவந்து பெண் கேட்ட போதெல்லாம் அவமரியாதையும் ,அலட்சியமும் செய்தார்!

 நீ படித்தவள் என்றும் நான் படிக்காத மாப்பிள்ளை பாரிஸில் சமையல்வேலையில் பாத்திரம் தான் கழுவ பொறுத்தமான பெரியவீட்டுப்பிள்ளை என்று!

என்னை அவமரியாதை செய்து இருக்கலாம் என் காதலுக்காக பொறுத்துக்கொள்வேன் !ஆனால் என் தந்தையை இல்லை ,என் வம்சத்தை வம்பு இழுத்தால் எப்போதும் நான் பொல்லாதவன்  !

உன் தந்தை என் அப்பாவிடம் வீசிய பாசவலை என்ன தெரியுமா ?

நான் ஆன்மீகத்தேடலிக் தொடர்ந்து போவதை இன்னொரு நித்தித்தியானந்தா மடம் போல விரைவில் வீடியோ வரலாம்!

 நீயும்  அவமானத்தில் தூக்கில் தொங்க வேண்டும் என்று விடுமுறையில் இலங்கை போற உறவுகள் யாரிடமோ கொழுத்திப்போட்ட பட்டாசு.

 ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பாட்டு போல அல்ல  அதன் மீள்தாக்கம் பூமரங்க போல ஐயா என்னிடம் கேட்டது என்ன தெரியுமா யாழினி?

?உன் பாட்டிதான் நம் குடும்பத்தை அரவனைத்து போகத்தெரியாமல் நடுவீதியில் நிக்க வச்சா !



அதை உன் தந்தையும் என்னிடம் பரீட்சிக்கின்றார்! நீ எந்த வழியில் போக விரும்புகின்றாய்?, என்பதை முடிவு செய்த பின் என்னோடு கதை!

 அது வரை நான் சாகமாட்டேன் !ஏன் தெரியுமா ?,

உன் அண்ணா பிறக்க வரம் வேண்டி அப்பவே1972  என் தந்தை வாழும் போதே சம்பிராத கொள்கை மீறி  திருப்பதியில் மொட்டை போட்டவன்!

 இன்னும் இருக்கின்றேன்!! சொத்தா போட்டேன்?,

 நீ போ ஆன்மீக பயணம்!எப்போதும் போல என் மகன் பாராளமன்ற தேர்தல் பிரச்சார வேட்பாளர் போல  சிரித்த முகத்துடன் எங்கும் மேடையில் தோன்ற வேண்டும் நீ என்மகன்!  உன்னையே அறிந்தவன்!!


 உன் நட்பு இங்கு இருந்து எப்போதும் போல இந்தியா வருவான் !என்னை! உன்னை! நம்மை புரிந்தவன்!!!



தொடரும்


05 July 2016

யாசிக்கும் ஏதிலி-14





முன்னம் கதை இங்கே-http://www.thanimaram.org/2016/06/13.html!

இனி....



 ஒரு பெண்ணுக்கு காதல் வரும் போது! குடும்பம் என்ற நூல்வேலிகள் வேலி தாண்டாத வெள்ளாடு என்று ஆர்பரிக்கும்!! தாண்டினால் அறுந்து போகும் உறவு முறை. அதன் காதல் வெற்றி சில ஆண்டுகளில் பேரன் பேர்த்தி என்று சொந்தங்கள் சேர்ந்துவிடும் இலங்கையின் இனவாத கூட்டாச்சி போல !இதுதான் நம் சமூகத்தின்  நிதர்சன நிலை !


இதை நேரில் பார்த்தவன்  நண்பர்கள் மூலம்! முன்னர் !!

இப்ப நிதமும் முகநூலில் கண்டுகளிக்கின்றேன் குடும்பத்தின் வைபவங்களை  நட்புக்கள் ஊடாக !ஆனால்!!

  ஒரு ஆணுக்கு காதல்  வரும் போது அவமானங்களும், அட்வைஸ்களும் என்று தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகள் போல திடீர் திடீர் என்று தோன்றும் அதன் தாக்கம் குடும்ப உறவுகளைக்கூட சீர்கெட்ட இலங்கை இனப்பிரட்ச்சனை போல ஒட்டவும் முடியாது ,சேரவும் முடியாத, இடியப்ப அரசியல் இது எல்லாம் உனக்கு புரியுமா யாழினி?




உன்னைப்பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !உனக்கென உனக்கெனப்பிறந்தேனே !!உன்னோடு வாழத வாழ்வென்ன வாழ்வு !!!சொல்லத்தான் நினைக்கின்றேன், சொல்லாமல் தவிக்கின்றேன் என்று எல்லாம் சினிமா போல பாட என்னால் முடியாது !




சித்திரம் போல உன்
சிரித்த முகம் நெஞ்சில்!
சினேஹா போல
சிலேடையாக
சிந்தை மயக்கிய
சிலோனில்  பிறந்த
சிங்காரியே!! காதல்
சிக்னல் நீ கொடுத்தாள்!!
சிறுகொடியில் சேர்திடலாம்!
சித்திரை பிறக்கமுன் !!!
சில்லறை வியாபாரி வம்சம் இவன்!



என்று எல்லாம் கவிதை எழுத எனக்குத்தெரியாது    யாழினி !

சிலோனில் இருந்து வந்தவன், என்ற என் தூய சிந்தனை எல்லாம் உன்னோடு உயிரிலே கலந்தது போல ,காதல் கொண்ட என் வாலிப காதல்! காதல்கோட்டை போல ஜொல்லு என்ற  உனக்கும் !உன் உறவுகளுக்கும் புலம்பெயர் வாழ்க்கைக்கு குடியுரிமை அனுமதி கேட்க குறுக்கு வழியான சிந்தனை இது என்று எண்ணத்தேன்றியதா?




 ?? ஏன் என் போல இடைப்பட்ட வயதில் புலம்பெயரும் பொடியன்களுக்கு எல்லாம் புலம்பெயர் தேசத்தில் காதலே வரக்கூடாதா! ?,தியாகங்களும்,வேதனைகளும், வருமான இழப்புக்களும், வந்து போகலாம்!! ஆனால் காதல் வந்து போக இது என்ன வடமாகாண பொருளாதார மைய அரசியலா ?,





 என்னால் உனக்கு அதிக மனத்துயரம்தான்!! நான் தந்த காதல்ப்பரிசு உனக்கு இது என்று இப்ப புரியுது யாதவன்!!




 என்ன செய்ய !!யாருக்கு மாப்பிள்ளை யாரோ ,,என்பது விதியின் நிலை என்று இப்ப என்னைத் தேற்றிக்கொள்கின்றேன்!



 வேற என்ன நான் சொல்ல !ஆனால் ஒன்றுமட்டும் சொல்லு யாதவன் ?,

5 வருடம் என் காதலுக்கு காத்திருந்த நீ எப்படி மனம் விரும்பி மாயாவை கைபிடித்தாய்?


 ஒருவன் வாழ்க்கையை தீர்மானிக்க குடும்ப அரசியல் ஒரு பாராளமன்றம் போல இங்கே எதிர் தரப்பு அணி போலஎத்தனை உறவுகள் என்று நீ அறியமாட்டாய் கூட்டுக்குடும்பம் பற்றி !


இது பிரெஞ்சு போல அல்ல ஈழ /இலங்கை வாழ்க்கை முறை !அதை உன் கூட இன்றைய அப்பா பட சினிமா போல சொல்லி இருக்க மாட்டார் தம்பி ராமையா போலத்தானே அவரும் எல்லாம் அவர் முடிவு தானே !அவர் கூட என்ன படித்தார் !!இலங்கையில் சாமானிய கிளாக்! இங்க வந்த புதுப்பணக்காரன்[[[

என் அப்பன் .என் மாமா. என் வம்சம். படித்த பட்டதாரி பட்டங்கள்  கூட படிக்காதவர் ஆனால் எங்க அரசியல் பின் வழி ஊடாக பிரபல்யம் ஆக வழிகாட்டியது என் தாத்தா!


 ஆனாலும் நாங்க விபாரிகள் தான் !!அது எங்க சொத்து !!!இப்ப நீயும் ஒரு பட்டதாரி ஆனால் உன் சொத்து என்ன இன்னும் உன்   வேலைகூட நிச்சயம் இல்லை![[[ !நானும் பட்டதாரிதான் நம் நாட்டில் இங்க ஏதிலி இதைச்சொன்னால் உலகம் நம்பாது அதனால் தான் என்றும் நான் படிக்காதவன் என்று எங்கும் சொல்லுகின்றேன் சிரிப்புடன்[[[!


தொடரும்....








02 July 2016

விடியுமா பொழுது!

வேதனைகள் பல தொடராக வெட்டியாக வலையில் எழுதினாலும் !



சொல்ல வந்த விடயம் செவிடன் காதில் சங்கு போலத்தான் சர்வதேசம் மட்டுமா !உள்நாட்டு நல்லாட்சியும்! நல்லது சொல்லட்டும் !




முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இப்போது சொல்லுவது போல இறப்பு சான்றிதல் வாங்கி .நீங்களும் உங்க உறவுகளும் நல்லாக இருங்க என்றால்!


 இந்த மனித உரிமைகள் , கானாமல் போனோர் ஆய்வுக்குழு.ஜனாதிபதி ஆணைக்குழு, இன்னும் வெட்டி கிழட்டு பித்தலாட்ட தேடுவோர் தூங்கும் ஜால்ரா அரச அமைப்புக்கள் !


எல்லாம் ஏன் இன்னும் பிச்சை புடுங்கனும் சர்வதேசத்திடம்!எனக்கும் கோபம் வரும் பொதுவெளியில் ஏன் பேசுவான் தணிக்கை போல!



நல்லது விடியுமா! நானும் தேடுகின்றேன் பலரை! நாடு கடந்து!




குறும்பட குழுவுக்கு என் வாழ்த்துக்கள்!



நம் வலி எந்த நாயும் அறியாத துயரம் அரசியல் ஜால்ராவுக்கு சூரியன் தோற்றது சொகுசாகப்போச்சு அரசியல் கதிரையில் எதிர்க்கட்சி தலைவர் என்று உலகம் ஏமாற்ற!