29 September 2015

முகம் காண ஆசையுடன் -22

 முன் வாசிக்க இங்கே -http://www.thanimaram.org/2015/09/blog-post_22.html!

கையேந்தியே காலங்கள்  வீனாக   ஆறில் இருந்து அறுபது படம் போல  வாழ்க்கை சிறையில் வீனாக போகுது கருணை காட்ட யாருமில்லாத கையறுநிலையில்!

நாம் இதோ கலப்பு நீதிமன்றம் என்ற புதிய கோஷம் நயன்தாராவுக்கு கூடிய கூட்டம் போல ஊடங்களில் இலங்கை பற்றி  தினமும் கூட்டம் பற்றி  எழுதினாலும் ,எல்லாத்தையும் பெரியண்ணா என்ற கோடாரி எப்படி கொன்றது நம் உறவுகளை என்பதை தியாகதீபம் நேற்றைய வரலாறு!


 நாளை என்னவாகும் ஐநா  தீர்மானத்துக்கு என்று எல்லாம் ஆவலுடன் காத்து இருப்போர் போலத்தான்! இன்னும் போர் முடிந்தும் அரச படையாள், புலனாய்வு துறையால் ,சந்தேக காவல்துறையால் சிக்குப்பட்டு சிறையில் இருப்போருக்கு பொது மன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்யக்கூட நினைக்காத இனவாத  சிந்தனை மனம் கொண்ட  மகா ஆசை துறந்த புத்தன் தேச அதிபர் குப்பை அகற்றுகின்றார்!




 அதனை வானொலியில் நேரடியாக வர்ணனை செய்யும் இன்றைய விடலைப்பையன் இனவாத வானொலி அறிவிப்பாளருக்கு. கடந்தா காலத்தில் வானொலியில் பணியாற்றியவர்களில் கூட சந்தேக குற்றச்சாட்டில் சிறையில் இருப்போர் பற்றி சிந்திக்க ஏனோ சுயதேடல் வழிவிடுவது இல்லை!மேலதிகாரி என்ற கட்டுப்பாட்டாளர் கடந்து தானே அவரும் அறிவுப்பு செய்ய வேண்டும் பொது வெளியில் ! இது  எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் தானே!


 ஒரு ஊடகம் தானும் தமிழ்/சிங்கள/ஆங்கிலம் என்று இன்றுவரை   முன்வந்து சிறையில் இருப்போர் வரலாற்றை ஒலி/ஒளியாக நேரடியாக ஏன் சிறையில் சில ராகம் போல சில மனிதர்கள் என்று விருமாண்டி படம் போல நேரடி ஒளிபரப்பு செய்ய நினைப்பது இல்லை??


 சட்டாமா அதிபர் சர்வ வல்லமை மிக்க சர்வார்திகளுக்கு மட்டும் சட்டச்சிக்கல் இல்லை! விடுதலை  என்று நீதிமன்றத்தில் நீதி எழுதும் போது! வீனாக அப்பாவிகள் கண்ணீர் விடும் சாமானிய போராளிகளுக்கு யார்  துணையாக சட்ட ஆலோசனை வழங்கபோறார்கள்?, வழக்கு முடியுமா?, அல்லது வாழ்வு தொலையுமா?, என்று ஆயிரம் சித்திரைவதைகள் தாங்கியும் புறநானூற்று விழுப்புன் வாங்கிய வீரர்கள்; வீராங்கனை போல இன்றும் புலிகள் என்ற போர்வையில் இனவாதம் சிறைபிடித்து வைத்து இருக்கும் உறவுகளின் அடுத்த கட்டம் என்ன??


 அதுக்கு நாம் என்ன செய்யப்போறோம் ?,


ஊதாரி தேர்தலுக்கு புலம்பெயர் நிதி அன்பளிப்பு; ஊரில் இருக்கும் கோயிலுக்கு ஆயிரம் நன்கொடை.;ஊரில் ஆள் இல்லாத பாடசாலைக்கு ஆயிரம் கணனி அன்பளிப்பு;
அந்த சங்கம்; இந்தச்சங்கம்; அவர்கள் ஊர் ;இவர்கள் ஊர் ;என்று போட்டி போட்டு ஆடுவோம்முகநூலில் பொது வெளி  நாகரிகம் தெரியாது !நான் யாழ்ப்பாணாத்தான் ! என்பள்ளி தான் கோட்டை மற்றது எல்லாம் குடிசை போல!குதறி எறியும் நாய்கள் எல்லாம் புலம்பெயர்ந்து நவீன வாழ்க்கை வாழுது குத்துப்பட்டு கிடப்பது எல்லாம் அப்பாவிகள் விளம்பரபோதை பிடிக்காத வேர்கள்!



 இன்னும் இளமை இதோ இதோ என்று ஆனால் நாங்கள் வாழ கடைசியில் தாயபூமி தணித்துவமாக வாழ தாக தீபம் ஏந்திய அப்பாவிகள் எல்லாம் இன்னும் அனல் தீயில் !

ஆனாலும் அறுத்தான் தாலி. அந்த நடிகையின் அந்தரங்கம் இதோ என்று கிளுகிளுப்புக்கு நாளும் பஞ்சம் இல்லாத செய்தியை நாளிதழ்கள் கொண்டு வரும்!

 ஆனால்  நாலாம் மாடியில் நாசமானவள் .மெனிக்காம்பில் மூர்க்கமாக இனவாத படையின் இச்சை வெறிக்கு  மூச்சையடக்கியவள் . இன்னும் தெய்யத்த கண்டியில் புனர்வாழ்வு முகாம் . வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் என்று சீரழியும் நம் உறவுகளுக்கு நேரும் கெதி

 தேடாமல் நடைப்பிணமாக வாழ்வோர் பற்றி நாம் பேசமாட்டோம்!

 நாமுக்கு தேவை பப்பறதான்!நவீன காலம் ஆச்சே!


 இதுதானே இன்றைய காலம்!நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்த வம்சம் எல்லாம்  நாசமாக போகட்டும் !

என்று திட்டும் அப்பாவிகளின் விடுதலைக்கு நாம் என்ன செய்யப்போறம் அகிலன் ?,

 விடாது தொடரும் வலி அசுரன்! ஆனால்!!  என்ன ஆனால்??

 எல்லாம் அரசியல் வியாபாரிகளை/விபச்சாரிகளை/ நாதாரிகள் /நாட்டைக் கெடுத்த பண்டிதர்கள் நாய்வேஷம் போட்ட ஈனப்பிறப்புகள் வாய்மூடித்தூங்குது என்று  மட்டும் கைகாட்டி விட்டு நாமும்  பொறுப்புக் கூறாது  தப்பி ஓடச்சொல்லுவதா ?,


!!நிச்சயம் இல்லை !!அரச அதிகாரிகள் ;இனவாத ஊடகவாதிகள்; இன்னும் தன் வருமானம் மட்டும் நோக்கம் கொண்ட தனியார் குழுக்கள் ;எல்லாம் இன்னும் சிந்திக்கணும்!!

 இன்னும் இருக்கே சட்டக்கல்லூரி `மாணவர் சமூகம் அது எந்த இனவாத போதையில் இன்னும் இருக்கு மச்சான் இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை சிறையில் சிந்தும் இரத்த உறவுகளின் நிலை பற்றி!



தொடரும்....

//

26 September 2015

தேடாமல் தினம் தேடும்!

வானொலி என்பது  கடந்த தலைமுறையின் ஒரு உற்ற துணை. அது எப்போதும் புதிய நவீன காலக் காதல் போல பிறரை  மோகத்தில் வீட்டை விட்டு  தேடி ஓடிப் போகாத ஒரு வீட்டு உடமை போல !எப்போதும்  பாடிக்கொண்டே இருக்கும்  சிறை படப் படால் போல நான் பாடிக்கொண்டே இருப்பேன் பக்கத்துணையாக இருப்பேன் என்பது போல! ஆனால் நாம் கேட்கும் சூழல் மறந்து.  நம் நித்திரை /அல்லது இன்ன பிற  வேலையில் மூழ்கினாலும்!



 அந்தக்கால வானொலி வேலியில் ஒலித்த வண்ணம் இருக்கும் !http://www.thanimaram.org/2011/05/blog-post_3429.htm

இது இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்ற செய்திக்கு  எத்தனை பேர் தம் செயலை நிறுத்தி காது கொடுத்தார்கள் என்பதை தாண்டி, இது வர்த்தகசேவையில் நேயர் தபால் அட்டையில் இன்றைய  பொங்கும் பூம்புனல் என்று வரும் அன்றைய காற்றலைக் காதல்  யார் அறிவார் ?,
http://www.thanimaram.org/2011/06/blog-post_08.html,

அதுமட்டுமா  /சர்வதேச ஒலிபரப்பு  திருச்சி நேயர் விருப்பம் என்றாலும் இலங்கையின் . மலையக சேவை கண்டியில் இருந்து , வன்னி சேவை அனுராதபுரம் ஊடாக , யாழ்சேவை.பலாலி ஊடாக  என்று அதன் பன்முகசேவை பற்றிய அறிதல் ஏனோ இன்றைய தலைமுறைக்கு இல்லை !

என்றாலும் வரலாறு முக்கியம் என்பது போல இந்த வானொலி கேட்கும் ஆர்வம் என்னையும் ஏனோ தேடல் வரை  போய் பட்ட துயரம், அது சகோதர மொழி சிங்கள வானொலி சிரச வரை கவிதை போல  ஆசையில் கிறுக்கிய அலை இன்னும் கண்களில் ஈரம்!!http://www.thanimaram.org/2012/07/blog-post_27.html


 என்றாலும் ஏனோ இசையும், தேடலும் இன்னும் வாழ வைக்குது!
http://www.thanimaram.org/2011/06/blog-post_5454.html

 இணைய வானொலிகளில் நேயராக இன்றும்!
http://www.thanimaram.org/2012/03/blog-post_09.html
!

ஆனாலும் தனிமரமும் தேங்கிப் போய்விட்டேன் போல இப்போது எல்லாம் 80 பாடல்களுக்கு கவிதை எழுதிக்கொண்டேயிருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்!


 இணைய வானொலியில்  முல்லை மண்ணில் இருந்து ,அவர்கள் வாசிக்கும் ஆசையில்  இலங்கையில் புதிய பாடல்கள் ஒலிக்கும் நேரம் பாரிசில்  தனிமரம்  தூங்குவதால்[[[.

 என் காதில் நல்ல  புதிய பாடல்கள் வரவில்லைப்போலும் அல்லது முகநூலில் முக்கிய  அரசியல் பேசுவதால், நம்நாட்டு புதிய வானொலிக் குயில்கள் இந்தப்பாட்டு கேட்டீங்களா அண்ணா என்று ஏனோ குத்தவில்லை மூக்கில் ))))
http://www.thanimaram.org/2015/09/blog-post_14.html

! ஆனாலும் விழியில் தொலைத்து அதன் பாதையில் தேடும் பலரின் துயரம் யார் பொதுவில் பேசப்போறம் ?,

பேசி கண்களில் ஈரம் என்றாலும் இந்த பாடல் என்னை இன்று ஒலிகாட்டுது நாளைய தேடலுக்கு பாடலை ரசியுங்கள்!


 இன்னொரு பதிவு இடலாம் தேடலும் பாடலும் வழியாக !




22 September 2015

முகம் காண ஆசையுடன்...-21

இங்கே பார்த்த முன்  பின்http://www.thanimaram.org/2015/09/20.html
 இப்படியே தேடிவாங்க [[




 அப்புறம்  ஒப்பாரி. முகநூலில் குத்து கொடையது என்றால் இது சின்னத்திரை தொடர் அல்ல ! சிலோன் வரலாறு சீக்கிரம் முடியும்  மலையோரம் வீசும் காற்று இலங்கை தொலைக்காட்சி  தொடர் போல இல்லை சித்தப்பூ !


மோடியும் ,மோடையன்  சிங்களவனும்  சிரிக்கும் காட்சி பாரு  என்று சொல்லி கொத்துக்கொத்தாக மதவாத நோக்கில் கொன்ற துயரம் மூடிமறைத்த அரசியல் வரலாறு மறைத்து!


தமிழ்  வேடதாரிகள் இணைய  நாளைய செய்தி என்று நம்மை  நடு ரோட்டில் கிடக்க வைத்த  முந்திய தலைமுறை  கோட்டு போட்ட சட்டதரணிகள்  போல

 இன்றும்  வேஷம் போட்டு சுவீஸ் வீதிவரை ஏமாற்றியதை அறியாமல் இன்னும் விடிவு வரும் என்று  கனவு  காணுகின்றோம் !!



அப்பாவிகள் ஆனால் தமிழ் போதும், ஹிந்திக்கு எதிர்ப்புக்கு தலைகொடுப்பேன்  பொங்கி எழு  மனோகரா  வசனம் போல ஆனால் அவர் வம்சம் வாழுது !

அப்பாவிகள் தினமும் கடலில் கரை ஒதுங்குது வெற்டுடலாக   இன்னும் கடிதம் எழுதும் தொடர்   ஆட்சி போனாலும் ஐயா எழுதுவது போல என்னால் எழுத முடியாது மச்சான் அகிலன்!


 நான் வெட்டியான் இல்லை வலையில் ! எனக்கும் ஆசையிருக்கு என் காதலியுடன் எல்லாம் நீதான் என்று உன்னை நினைத்து சினேஹா போல   டூயட்  பாட்டு பாட இது என்ன தனிமரம் அல்லைக்கை நண்பனின்  கமடித் தொடரா முகநூலில் சிரித்து  உள்குத்து போட [[[

இல்லை மச்சான் அகிலன்.

  இது  அசுரன் பதிவாளர்  தொடர் தனிமரம் போல ஜொல்லுப்பாட்டி அல்ல!


இது உனக்குப் புரியாது உன் வாசிப்பு அனுபவம் குறைவு இணையத்தில் நீ புதியவன்!

நானோ விழியில் வலிதந்தவனே போல தேடி ஓடும் சாமானியன் .சிலதை  இணையத்தில் வாசித்தமா.  வீட்டுக்கு வந்த பல்பொருள்  அங்காடி விளம்பர அட்டையை வாசித்த பின்  தூக்கி குப்பையில் போட்டோமா என்பது போல இல்ல !ஏதாவது தேவைக்கு உதவும் என்பது போல பாதுகாத்தல் உதவும் அப்படித்தான் சுமா அனுப்பிய செய்தியும் என்னையும் மீண்டும் அரசியல்வாதிகள் வீடுகளை நோக்கி  கொஞ்சம் கையேந்த வைக்கின்றது!

 அதுக்காக உதவி நாடி சில சுதந்திர அமைப்புக்களை என் வேலை நேரம் கடந்து சந்திக்கின்றேன் ,காரணம் என் இருப்பைப்போல என் காதலியின் இருப்பும் எனக்கு முக்கியம் !

காரணம் காதல் உடல் சார்ந்த தேடல் அல்ல உணர்வுடன் கூடிய ஒன்று அது சிறையில் பூத்த சின்னமலர் படம் போல அல்ல !

தொடரும்....





20 September 2015

நெஞ்சில் பூ மழை!

பதிவுலகம் என்ற மகா கடலில் தனிமரம் ஒரு சிறுமீன்! ஆனால் நிஜமான பாசம் கொண்டு வலை வீசினால் கடல்மீன்கள் பட கமல் போல வலைக்கடலில் வீழ்ந்து போவேன் இங்கே!

 என் முகம் காணாது என் தொடரில் கலந்து என்னோடு வலையில் உரையாடும் பலரில் என்னை நேசிப்போர் பட்டியல் இலங்கை பாராளமன்ற உறுப்பினரைவிட அதிகம் என்று வலையில் மார்பு தட்டுவேன் நானும் ரவுடிதான் என்று வடிவேல் போல  காரணம் ஹிட்சும் ,திரட்டி வாக்கும் என்னை இன்று வரை பாதிக்கவில்லை! பாசம் ஒரு தொடர்!







 அந்த வகையில் அன்புடன் பலரை வலையில் அண்ணாச்சி என்று அழைப்பேன் அது ஏன் என்று நாஞ்சில் மனோ என்னிடம் முகநூலில் கேட்ட போது !



சாட்ல ஒருத்தர் வந்தார்...
"நீங்க அண்ணாச்சி'தானே ?"
"இல்லையே நான் நாஞ்சில்மனோ..."
"அப்போ அண்ணாச்சிங்குறது நீங்க படிச்சி வாங்கிய பட்டமா ?"
ஆளு எஸ்கேப் ஆகிட்டான், என்ன அர்த்தத்தில் அப்பிடி கேட்டான்னு புரியாமல் இப்போ வரை மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன்...
சரி நம்மளை அண்ணாச்சின்னு கூப்புடுற ஒரு அன்பு ஜீவன் தனிமரம்' நேசன்தான் இதுக்கு பதில் சொல்லணும் ?//
 தனிமரம் நேசனின் பதில் இப்படி-    மரியாதை நிமித்தம் எப்போதும் நாஞ்சில் அண்ணாச்சி என்று கூப்பிடுவேன் அது என்னவோ தெரியாது சிலரை அப்படி கூப்பிடும் போது நட்புமுறை பிரியாத உறவைத்தருகின்றது!

 அது போல வலையில் ஒரு  இன்னொரு அண்ணாச்சி உறவுக்கு இன்று சிறப்பு நாள் !

 அவரின் தளம் இப்போது! அவரைப்போல காணமல் போனாலும் வலை/முகநூல் என்று அன்புத்தேடலில்   தேடப்படுவோர் நட்பு வட்டங்கள் அதிகம் ! http://ilavenirkaalam.blogspot.fr/
வசந்த மண்டபம் ஒரு கோயில் அதில் தனிமரம் ஒரு வாயில் சிலைதான் அன்பில்!

ஆனாலும் அண்ணாச்சி அமெரிக்காவில் இருப்பதாக முகநூல் புதிய செய்தி சொன்னாலும்! நிஜம் நான் அறியேன்!நேரில் கைபேசியில் பேச ஆசை ஆனாலும் தயக்கம்  இல்லம் போவதே மரியாதை சென்னை நோக்கி[[!
அதன் பின் தனிப்பதிவு போட்டு நாமும் வலையில் கூத்தாடுவோம்[[!



 வலையில் அவரின் பின்னூட்டம் கவிதை போல இருக்கும் ! என் தொடருக்கு வந்த  முன்னம் ஒரு பின்னூட்டம் இப்படி!

வானுயர்ந்த சோலையாம்
தேனுறை கனி மரங்களாம்
கானுறை தேசம்விட்டு
மானுடை நடையுடையாள்
தானுறை நெஞ்சமதை
நானுரை நெஞ்சமாய்
மாற்றிவிட
இதோ படைஎடுத்துவிட்டாள்
வருக வருக
பிஞ்சுக்காதலி
வாழிய நீ என்
பிரெஞ்சுக் காதலி...

ஆரம்பமே அமர்க்களம் நேசன்...
தொடருங்கள் தொடர்கிறேன்...
மகேந்திரன் said...
வணக்கம் தங்கை கலை..
நாங்கள் அங்கே இல்லையென்றாலும்
ராக்கி கட்டாவிட்டாலும்
நம் சகோதர உறவு தொடரும் பா..
வாழிய வளமுடன்..

அண்ணாசிக்கு ஒரு கேக் பார்ஷல் [[[


முகநூலில் பாசமாக இருக்கும் அப்படி ஒரு உறவை எனக்கு தந்தது இந்த தனிமரம் வலை 

! அண்ணாச்சி எப்போதும் முதலில் கேட்பது!

 தம்பி நலமா ?

,என்றதன் பின்தான்  பதிவு பற்றி பின்னூட்டம் இடுவார்!


 அப்படியான ஒருவர் இப்போது கடும்பணி நிமித்தம் வலையில் இல்லை ! பதிவர்விழாவில் கலந்துகொள்ளாது தனிப்பட்ட தேடலில் எங்காவது ஆழ்துலையில் ஆராட்சியில் இருக்கலாம் .

ஆனாலும் அன்பில் அவரை இன்றும் நினைக்கின்றேன்! 

அண்ணாச்சி வலைச்சர ஆசிரியர் பதவி மேடையில் முன்னம்  அலங்கரிதார் ! அதைவிடுத்து அவரின் தெம்மாங்கு கூத்து இன்னொரு கல்விக்கூடம் புதிய தலைமுறைக்கு! http://ilavenirkaalam.blogspot.fr/2013/10/blog-post_28.html



கவிதையில் எப்போதும் சமூக  தேடல் இருக்கும் அப்படியான ஒரு அன்பு அண்ணாச்சிக்கு என் வலையில் அழுத்தி எழுதுகின்றேன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!


அண்ணாச்சியும்.தனிமரம் வலைக்கும்மியில் அன்று கொடுத்த ]பின்னூட்டம் இன்னும் நெஞ்சில்! மின்நூலில் என்று பாசம் விடாது துரத்தும்!

வாழ்த்துவோம் வாரீகள்  வலையுறவுகளே!
 அண்ணாச்சி என்றும் நலமுடனும்
  சிறப்புடனும் சுபீட்சமாக வாழ !
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மகேந்திரன் அண்ணாச்சி!`
21/09/... இனிய பிறந்த நாளை இனிதே  கொண்டாடுகின்றார்!




 வலையில்  வாழ்த்தும்
 அன்புத்தம்பி!


இப்படிக்கு
தனிமரம் நேசன்
 பாரிஸ்§


 பாட்டு இல்லாத வாழ்தா அண்ணாச்சிக்கு-[[[[

-------------------------------
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் [[[








19 September 2015

வாழ்த்துகின்றோம் வாழ்க நலமுடன்!

வலையில் வரும்  பல உறவுகளில் ஒத்த சிந்தனையில் ஒரு சிலர் உறவாக வந்து நெஞ்சில் நிறைந்து விடுகின்றார்கள். எப்போதும் தனிமரம் என்றாலும் அன்பில் என்னையும் உறவாக்கிய சொந்தங்கள் பலர்  பன்முக வாழ்வில்!கரடு முரடான சாமானிய வாழ்வில் இந்த  வலையில் இருக்கும் காலமும் மிகக்குறுகிய நொடிகள் தான் ..அதையும் நேசிக்கும்  நெஞ்சங்களின் சிறப்பு நாட்களில் நல்வாழ்த்து சொல்லி தனிமரம் ஒரு சிலருக்குத்தான் தனிப்பதிவு எழுதுவது.!
http://www.thanimaram.org/2014/09/blog-post.html
http://www.thanimaram.org/2013/09/blog-post_19.htm
http://www.thanimaram.org/2012/09/blog-post_19.html
 இது அவர்களை என்பதிவுக்கு ஆமாசாமி போடும் நோக்கில் ஆள்சேர்ப்பது ! அல்லது திரட்டியில் வாக்கு பெறுவதுக்கு என்று சிலர் நினைத்தால்! எப்போதும் என் பதில் தனிமரம் யாரையும் வா என்றழைப்பவன்   அல்ல  !


  என் வலையில்  சுயகட்டுப்பாட்டில்  தொடர் வரைகின்றேன் வரலாறு முக்கியம் என்பதால் !வலையில் வந்தால் சந்தோஸம், போனால் துரதிஸ்ரம் எனக்கில்லை. தனிமரம் தோப்பாக பாரிசில் இருந்தாலும் என் சிந்தனையை யாரும் கட்டுப்படுத்த முடியாது!

 தனிமரத்தின் போக்கினை புரிவது கடினம் என்றாலும் ,தனிமரத்தின் கவிதை முகாரி  வலி என்றாலும் , வலையில் போட்டியாக  என்னோடு என் ஒரு கவிதையை ஹேமாவின் உப்புமடச்சந்தியில்  முடித்து வைத்த ஒரு வலைத் தங்கைக்கு இன்று சிறப்பு நாள்.http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html

எப்போதும் ஒரு சில வலையுறவுகள் தான் தனிமரத்தை கலாய்ப்பார்கள் வலையில். முகநூலில். ஸ்கைப்பில், கைபேசியில் இல்லத்து தொலைபேசியில் !



நானும் ரசிப்பேன் காரணம் சிரிக்கத்தெரியாதவன்  போலும் என்ற சிலரின் தப்பான நினைப்புக்கு தனிமரம்  காரணம் அல்ல!

  எனக்கு பாடல் ஒரு போதை போல  பிடிக்கும். கவிதை கிறுக்குவேன். தொடர் எழுதுவது என் தனிமரம் வலையை தனித்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் அல்ல !ஈழத்து /இலங்கை நாட்டு தணிக்கை மூடிய வரலாறு வெளியில் வரணும்  சுதந்திர பாரிசில் நாட்டில் ஏதிலியாக இருப்பதால் துணிந்து எழுதுகின்றேன் என் ஓய்வில்!.




அதுக்கும் போட்டியாக காதல்  தொடர்   எழுதிய தங்கை கிராமத்து கருவாச்சி  வலையில் தொடரை முடிக்காமல் இப்போது!
வலையை மூடி ,முகநூலை முடக்கி, தனிமெயிலை தடைபோட்டு ,அலைபேசி அழைப்பை விட்டு தனித்தேடலில்  வனவாசம் போய்விட்டாலும் !

வலையில் நேசிக்கும் உறவுகள் பலரும் பொய்முகம் அல்ல வாத்து!




நேசத்தில் அகதி அண்ணா எப்போதும் தங்கையை மறக்கவில்லை! எப்போதும் நீ சுபீட்சமாக, சந்தோஸமாக வாழ வேண்டும் என்பதையே என் வலைக்கு  கலை  என்று வந்து பின்னூட்டம் இட்ட தொடர்  2012 முதல் இன்று வரை 2015  சொல்லுவது.


வந்து போகும் உறவுகளை கடந்து வந்த ஒருவன் என்பதால் இப்பூமியில் எதுவும் நிரந்தரம் அல்ல! ஆனால் வாழும் காலத்தில் நிஜமான அன்பு முகம் அறியாமல் கூட வலையில் என்றும் வாழ்த்தும்.!, முகநூலில் ,முடியும் போது வாழ்த்தும் ,என் முகநூலில் எப்போதும் வெட்டி  அண்ணாவின் வேட்டிக்கிழி, உள்குத்துப்பதிவு  எல்லாம் முன்னர் பார்த்து ரசித்தவள் நீயல்லவா.[[எப்போதும் தனிமரத்தின் தங்கைகளில் நீ முதன்மையானவள்  என்ற பாசம் என்றும் வேசமில்லை!

 அன்புத் தங்கைக்கு என் குடும்பத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.20/09/...



வாழ்க வளமுடன்.

 எப்போது வனவாசம் முடித்து  நீ பொது வெளிக்கு வந்தாலும் அண்ணாவின் தனிமெயில் ,தனிமரம் வலை, தனிமரம் நேசன் முகநூல், இல்லத்து தொலைபேசி எல்லாம் காத்து இருக்கின்றது.

. என்  மகன் பிரியன்  நல்லாக வாத்து போல இப்போது   நடக்கின்றான் !!

 அதையும் கவிதையாக உன் வலையில் போட்டி போட்டு குறும்புடன் பின்னூட்டம் இட வேண்டிய ஆசையில்  அண்ணா!

 அதைவிட என்னைப் போல பாட்டு கேட்டே சாப்பிட பிடிக்குமாம் தனிமரம் நேசனின்  மகன்  பிரியனுக்கு !

இப்படிக்கு!

அன்பு அண்ணா தனிமரம்
கருக்குமட்டை தேடும்
அண்ணி,
குட்டிஸ் பிரியன்
பாரிஸ் ஊடாக.
20/09/.2015

வரும்  ஆண்டும் பதிவு போடனும்  வரும் புது ஆண்டும்2016 மும்  மலை ஏறனும் எல்லாம் ஐய்யப்பன் துணை!வேண்டி!நீ  பூசிக்கும் பிளையார் துணை இருக்க நாடி!

நான் உயர்கல்வி படிக்காதவன் தாயி[[[ தனிமரம்[[

18 September 2015

தயங்காதே பாடு!!

தனியான இனப் பரம்பல்
தனித்துவமான தன்னிறைவு!
தடுக்கி விழுந்தால் தமிழ்மொழி,
தம்பிரான் ,எம்பிரான் ,தர்கா,
தன்பூர்வ பூமி என்று இருந்தோம்!
தனிச்சிங்களம் சட்டம் வரமுன்!
தடியடி ,தன்னாதிக்கம்,
தனிச்சிறை  என்று
தண்ணீர்க்குண்டு போல  தமிழர்மீது

தரைப்படை, விமானப்படை,
தாணியங்கி கடற்படை, என்று
தாய்நில ஆக்கிரமிப்பு; சிங்களம் வீச!
தவிச்சோடி, தன் வாழ்வு  அகதியாக !
தமிழகம்,தவிர்த்து ஐரோப்பா , கனடா,
தடைகள் தாண்டி!
தவிப்புடன் உயிர்கொண்டு
தனிக்குளிரிலும்!
தவளை போல  தனிப் பண்பாட்டில்
தளைக்கின்றோம் தீராத நதி போல!


தமிழர் நாம் தாயகம் விட்டு பண்பாடு
தாய்ப்பால் போல
தாய் மொழியும் .ஐரோப்பிய மொழியும்,
தவழ்ந்து கனடா, அவுஸ்ரேலியா,
தாய் மாமான் உறவு என்று
தற்போது உடலால்  பிரிந்தாலும்!
தாய் சேய் உணர்வாக
 தம் கலாச்சாராம்
தரணி எங்கும் தமிழர் பாண்பாட்டில் !
 தலை நிமிர்ந்து!!


தனையனே ! நீயும் பிரெஞ்சில் இருந்து
தமிழில் கவி பாடு!! அது நம் பண்பாடு!
தந்தை   தாலாட்டுக்கின்றேன்
தாய் தேசம் பிரிந்த சோகம்
தமிழருக்கு இனியும் எக்காலமும்  வேண்டாம்.



தயக்கம் வேண்டாம் பண்பாடு நீ!
தமிழில் பண்  என்றால் இசை!
தயங்காதே பாடு !மகனே!! என்
தந்தையும் தாயும்
தமிழர் பண்பாடு நான் ?,,,,?,
தமிழில் பாரதி பற்றி பேசப்போறேன்
தற்போது !
தட்டுங்கள் கரகோஷம்
தமிழ்வானொலி அலைகள் ஊடாக
தமிழக புதுக்கோட்டை பதிவர் விழாவில் இருந்து!


தனித்தனியாக. இருப்பவர் பற்றி
தனபாலன் இதோ இணைய வானொலிக்கு
தனியாக தரும் பேட்டிக்காக காத்து இருக்கின்றோம்!!
தமிழக இணைய வசதி சீர் செய்த பின்
தனியாக வலையில்  இணைவோம்!
தனிக்கை காரணமாக பாடல் இல்லை!
தடங்களுக்கு வருந்துகின்றோம்!

--------------------

/ வலைப்பதிவர் திருவிழா -2015
                     மற்றும்
 தமிழ் இணையக் கல்விக்கழகம்
                       நடத்தும் !

மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 க்காவே எழுதிய புதுக்கவிதை இது இதுக்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை! இது தனிமரத்தின் சுய கற்பனை ! போட்டி முடிவுகள் வெளிவரும் வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்!

போட்டி விதிமுறைக்கு உட்பட்டவன்
தனிமரம் வலைப்பதிவாளர்
பாரி்ஸ்.




17 September 2015

தயங்காதே பாரதி !!



 தமிழன் என்று பேர் கொண்டு
தரணி  எங்கும் போர்மீட்டி
தடம் பத்தித்த பல  தலைவன்கள்
தன் சந்ததிக்கு கட்டிய மாளிகைகள்,
தமிழ் வளர்த்த மாடங்கள், எல்லாம்
தனியார் வருகை என்ற வெளிநாட்டு பதவிக்கு
தன்கீழ்ப் படிந்த ஒருவன் காட்டிக் கொடுத்த பலர்!
தயவு வேண்டி தன் இனத்தை
தன்சுயநலத்தால் அழித்தது போல!நெறி
தமிழன் என்ற இனமும்
தன்பண்பாடு என்ற
தன்முகத்தை  தமிழ்மொழி துறந்து!
தன் மதம் பிறழ்ந்து தன் வசதிக்காய்
தளை களைப் போற்றி !
தனித்துவம் தொலைத்து
தானே வேந்தன் என்று
தாய் நிலத்தை தவிக்க விட்டு
தாசியிடம் போன வரலாறு
தாண்டியும் நீதியுண்டு. நெறியுண்டு தமிழில்!
தானே மா என்றவன்
தாழ்ந்து போனான்
தன்மதம் பிச்சை ஏந்தி வாழ
தன் நீதி பிழைத்த ஒருவன்
தந்த அட்சயபாத்திரம் ஏந்தும் தேச வேந்தன்!

தமிழர் மீது போர் கொண்டு
தமிழர் தேசத்தில்
தயவு இலாது எறிந்த எரிவாயு
தமிழ் இனம் ,பண்பாடு. எல்லாம்
தவறியும் பிழைக்காது!
தானே எரியும்  பிலிக்ஸ் பறவை   போல
தமிழன்  என்ற உண்மை அறியாது
தப்புக் கணக்கு   போட!
தன் தேவைக் காய் உதவிய
தாவார வியாபாரிகள்   எல்லாம்!
தனலில் இருந்து தன் உயிர் கொண்டு
தப்பி வந்த தமிழரின் பண்பாடாய்
தமிழக எலிக்கறி போல எங்க கறி
தமிழலால் விற்கப்பட்டாலும்!
தமிழிலில்  இணையம் எங்கும்
தனியாக தான்தோன்றிஸ்வரர் போல
தமிழர் வாழும் தரணி எங்கும்
தமிழர் பண்பாடு வேதம் போல
தயக்கம் இன்றி  இனியும்
தனியொருவன் போல
தமிழில்  ஓதும்!
தயங்காதே பாரதி !!!
தமிழனுக்கு காணி நிலம் வேண்டும்
தனித்துவமாக பண்பாடு கொண்டு
தனியே வாழ!



-------------------------
 அரும்பத விளக்கம்
மா- அரசன்
தாவார- திண்ணை

///////////// வலைப்பதிவர் திருவிழா -2015
                     மற்றும்
 தமிழ் இணையக் கல்விக்கழகம்
                       நடத்தும் !

மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 க்காவே எழுதிய புதுக்கவிதை இது இதுக்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை! இது தனிமரத்தின் சுய கற்பனை ! போட்டி முடிவுகள் வெளிவரும் வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்!

போட்டி விதிமுறைக்கு உட்பட்டவன்
தனிமரம் வலைப்பதிவாளர்
பாரி்ஸ்.


---






15 September 2015

கவிதையே தெரியுமா ,,,??

கவிதை எழுதுவது இலகுவான விடயம் குணா படப்பாடல் போல கண்மனி அன்போடு காதலன் நான்! நான்  எழுதும்  மடல் இடையில்;  இல்லை அதில் பொன்மனி இன்னும்; லாலா லாலா இடையில் ;சினேஹா படம் போட்டு பாட்டு இணைப்பது போல சுலபம் இல்லை தனிமரம் வலைபோல [[



 இங்கு போட்டி! ஆனால் எழுதனும் என்ற ஆசையிருக்கு!! ஆனாலும் பரிசு கிடைக்காது போனாலும் என்ன இருக்கு என் வலை இருக்கே!

 அமைதிப்படை சத்யராஜ் போல  எனக்கு அழகுகை வராதது [[ அதுதான் ஏதிலிக்கு எல்லாம் தொலைந்து பேச்சே! !!


ஆனாலும் போட்டிக்கு போறம் மன்னன் பட கவுண்டர் போல ஐந்து பவுண் சங்கிலி போல கவிதைக்கு பரிசு என்ன தெரியுமா?,

 அட தருமி போல புலம்பி அழமாமல்!

 ஏன்னா ஏற்கனே பாவலர்கள் எல்லாம் மரப்புக்கவிதை எழுதி யாரோ மதுவாம் அதுதான் கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்துவிட்டார்களாம்!



 தேர்தல் வாக்காளர் பட்டியல் அதில் கடைசி  நேர வாக்காளர்  பெயர் கொடுக்க ஆசை !ஆனால் கட்டுரை எல்லாம் சட்டமன்ற விவாதம் போல புட்டுப்புட்டு வைக்க வேண்டும் !

அதுக்கு நீ சரிப்படமாட்டாய் என்று மரத்தில் யாரோ குத்து வதைப்பார்தால் அது தேன்மதுர தமிழ்க்கு கிடைக்க வாழ்த்துவோம்[[[!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/essay-poem-competition-for-bloggers.html
ஆனாலும்!

 கவிதையில் இரண்டுவகை  முன்னர் கமல் வசனம் போல புதுக்கவிதைக்கு பெயர் கொடுக்கவா என்றால் !அங்கும் பலர் அம்மாவின் வெளிநாட்டு முதலீட்டு விழா போல முண்டியடிப்பதாக தென்றல் காதில் சொல்லியது !
http://veesuthendral.blogspot.fr/2015/09/blog-post_10.html
என்று புலூடா விடலாம் என்றால் !!

யாரோ சுமியாம் அவா பலூடா கதை பேசி வலைச்சரத்தில் வந்து  இப்ப புதுக்கவிதையில் கலக்குவதாக கதை கோகில் பிளசில் வருது[[[ கொழுத்தி சிவகாசி வெடியை போடுவோம் [[[[


 ஆனாலும் போட்டி என்றால் குதித்து அதில் வேட்டி கிழிந்தாலும் .இந்த மேடையில்  வரும் பரிசு நமக்கு இல்லாவிட்டாலும்..   தி. நகர் சரவணா  ஸ்டோர்  போய் எத்தனை பாத்திரம் வாங்குகின்றோம் இந்தியா வரும் போதெல்லாம் ஆசையில் தேடித்தேடி!!


 அது போல நினைச்சு போட்டிக்கு எல்லோரும் போவோம் வலையுறவுகளே!



போட்டிக்கு போகும் கவிதாயினிகள் /கவிஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
எல்லாம் சொல்லி கனவு கானாமல் போனால் சாமிக்குத்தமாம் !அதுவும் கூட்டாஞ்சோறு செந்தில் மலைக்கோடை பற்றி சொன்னால் அழுகையாக வருது !http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_16.html

ஆனாலும் என் சோகம் தீரும் அதுதான் மலைக்கு போகும் போது பார்த்துவிடலாம் என்று சொன்னாலும். அவர் கேட்டார்  தறுதலை நாசமானப்போன நேசமனிப் பொன்னையா அண்ணாமலை ஜனகராஜ் போல தனிமரமே உங்களுக்கு என்ன பாட்டு வாங்கி அனுப்ப என்று ,,?,

அப்ப  முதல் கவிதைக்கு நானும் கனவுகான்கின்றேன் எதையோ சொல்ல[[



யாவும் கற்பனை!




14 September 2015

எழில் கொஞ்சும் ஊர்!

காலம் பலதை பொதுவெளியில் ஏதிலி என்ற கவச்தை தனிமரம் வலையில் அணியச் செய்ததுக்கு என் நட்பின்  கடந்த கால   அனுபவங்கள் தான் அனுராகம்!.தனிமரம் இன்று தோப்பு!ஆனால்



என் நட்பின்  அன்பு நண்பன் இலக்கிய  ஆசையில் அவன்  பட்ட அவமதிப்பும் ஆதனால் ஏற்பட்ட வெற்றுப்பும், அதன் பின்னே இருக்கும் பொருளாதார ,மற்றும் உறவுகள் பிரிவுகள் ,எல்லாம்  அவனை நேரில் பார்த்து புரிந்தவன் என்ற முன்னால் விற்பனை அதிகாரி  என்ற மேற்பார்வை கோதா  என்னையும் .அவனையும்  நட்பில் இன்று காலம்  பிரித்தாலும்!

 என் தனிமரம் வலையில் அந்த நட்பை என் பார்வையில் எழுதிய தொடர் வலையில் தனிமரம் நேசனுக்கு ஒரு முகவரியையும் .தனிமரமும் ஒரு சாமானிய வழிப்போக்கன் என்பதை பறைச்சாற்றிய 2011 தொடரினை விரைவில் அச்சில் கொண்டுவர ஆசை இருந்தாலும்!

 ஏதிலி என்ன செய்ய மின்நூல் வந்தாச்சு! இனி அதை பிழை திருத்தி அச்சில் வரவைத்து அடுத்த பதிவர் விழாவில் சரி வெளியீடு செய்யும் ஆசையை தருவது அனுராகம்!

பார்க்கலாம் காலம் வழிகாட்டுமா என்று?,இன்று ஏதோ பதிவை எழுதிவிட்டு பாடல் தேடல் கொண்டால் என் ஆசைத்தேடல் இன்று என்னை அழைக்குது!

இலங்கை நோக்கி !!

முன்னர் அதிகாலை இலங்கை வானொலியில் நம்மவர் இசையில் நான் விரும்பிக் கேட்ட பாடல் !அதுவும் நானே எழுதிய தொடரில் சேர்க்க முடியாமல் போன பாடலை இன்று கண்ட ஆனந்தம் எப்படிச்சொல்ல மனம் எல்லாம் புதுக்கோட்டை விழாவுக்கு போகமுடியாத புறச்சுழல் போல!


   ஆனால் இன்று என் நண்பனையும் நானும் தேடுகின்றேன் தொடராக[[பாடல் பாடிய முத்தழகு பற்றி விரைவில் பதிவாக பேசலாம்!

இன்னும் ஒரு தேடலில்!

அனுராகம் படத்துக்கு இசை- சரத் தசனாயக்க.
பாடல் எழுதியவர் -ஈழத்து ரெத்தினம்
பின்னனி பாடியவர் -முத்தழகு
நடிகர்- சிவராம்!
 பாடலை ரசிப்போம்!

  இலங்கை மலையக சேவை வானொலியூடாக காதில் கேட்ட காலம் நோக்கி விற்பனை பிரதிநிதி என்ற முன்னால் நினைவு இன்னும் சிலிர்ப்புடன்