31 October 2012

அந்த நாள் ஞாபகம் தொடர் -5

அந்த நாள் ஞாபகம் ஊடாக மீண்டும் தனிமரம்:))))))))).
தாயகத்தில் விற்பனைப்பிரதிநிதி வேலை நிமித்தம் இடமாற்றம் ,அல்லது குழுவேலை நிமித்தம் என புதிய புதிய ஊர்களுக்குப் போனால். அங்கு
இருக்கும் திரையரங்குகளில் ஏதாவது ஒரு படம் பார்ப்பது என் வாடிக்கையான நிகழ்வு .

அப்படி வேலை மாற்றம் வந்து போன இடம் தான் கம்பளை.

மலையகம் எனக்கு இன்னொரு தாய்வீடு இந்த மலையகம் எனக்கு அதிகம் நட்புச் சொந்தங்களை நிஜத்திலும் முகம் தெரிந்தவர்கள் பலரையும் பாசப்பிணைப்புக்களாக இன்றுவரை என்னோடு பயணிக்க வைக்கின்றது.


இந்த வலைப்பதிவு உலகில் தனிமரம் இருப்பதுக்கு அடிநாதமே இந்த மலையக சொந்தங்களின் பின்புலம் தான்.

இப்படியான நட்பு வட்டம் ஒரு புறம் என்றால் !

வலையுலகில் தனிமரம் நேசன் அதிகம் நட்பினைக் கடந்து நல்ல ஒரு குடும்ப உறவாக அக்காள்மார்கள் என அன்போடு பழகும் பலரையும் ,தங்கைகள் என பலரையும் ,அண்ணாக்கள் என பலரையும் ,தம்பிகள் என சிலரையும், ஐயா என , நாத்தனார் என உறவு தந்த தொடர் .என இந்த மலையகம் எனக்கும் பல மாற்றங்களைத் தந்து இருக்கின்றது.!


கம்பளையில் இருந்து தான் நான் அதிகம் மலையகத்தின் பல நகரங்களுக்கு விற்பனைப் பிரதிநிதியாக நுவரெலியா வரை போய் வந்து இருக்கின்றேன்.

.நீண்டதூர வாகனப் பயணத்தில் பெரும்
பகுதி நேரம் வாகனத்தில் பல்வேறு மொழிப் பாடல்களுடன் வானொலியோடு பயணிக்கும் நேயர் என்றால் மீண்டும் இருப்பிடம் திரும்பிவிட்டாள் திரையரங்கில் பொழுது கழியும் .!

அதிகமழையும் குளிர்ப்பிரதேசமுமான கம்பளையை ஒரு கோப்பியுடன் அந்தி மாலையில் ரசித்தால் ஊர் மிகவும் ரம்மியமான காட்சிகள் மனதில் பதியும்.

வேலை செய்ததைவிட திரையரங்கில் இருந்த நாட்கள் அதிகம் எனலாம்.)))) ஏதோ தனிமரம் மாதிரி ஒரு அப்பாவி கைப்புள்ளையை எந்த அதிகாரியும் பாடாய்ப்படுத்தவில்லை விற்பனை அளவை அதிகரிக்கணும் என்று இந்த ஊரில்.:)))) !

ஆனால் இனவாத இராணுவச்சோதனையில் தான் நீயும் போராளிகளுக்கு உளவு பார்க்கும் வேலையில் இருக்கின்றாயோ ?என்று குடையும் போது இந்த ஊரில் நிகழும் மண்சரிவைவிட மனச்சரிவு வரும்.!

அருண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேய்தானே?

கம்பளையில் இரு தியேட்டர் ஆனந்தா,சந்தியா,இருக்கின்றது.இரண்டிலும் பல படம் பார்த்து இருக்கின்றேன்.:)))))

அதிலும்!ஆனந்தா வில் பார்த்த இந்த ஹிந்திப் படம் அதிகம் பிடிக்கும் என்னுடன் இருக்கும் சிங்கள நண்பர்களுக்கு ஹிந்திப்படங்கள் மீது அலாதியான விருப்பம் எப்போதும் இருக்கும்.


.அவர்களின் நட்பு என்னையும் அதிகம் ஹிந்திப்படம் பார்க்கும் ஆவலைத்தூண்டிவிட்டது எனலாம். அதுவும் சாருக்கான் படங்கள் மீது அதிக எதிர்பார்ப்புக்களை விரும்பும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்!

இப்போது அதிகம் படம் பார்க்காவிட்டாலும் பார்த்த படங்களை மீள அசைபோடுவதும் ஒரு சுகம் உண்டு தானே !
இந்தப்படம் மனதில் தங்கிவிட்டது காஜலின் நடிப்பு,அவரின் நேசம், ராணி முகர்ஜின் உருக்கமான காதல் என இந்த முக்கோணக் காதல் கதை பலருக்கு பிடித்திருக்கும் படம் .

இந்தப்பாடல் சிங்களமொழியில் இறுவட்டாக வந்து இருப்பதும் பல இன்னிசை விழாக்களில் பலமேடைகளில் பாடப்படுவதும் சிறப்பு ஒரு புறம் என்றால் !

என் உயிர் நண்பர்களில் பலரில் ஒரு நண்பனின் (ரவியின்) காதலியும் என் அன்புத் தோழியுமான சகோதரமொழி நங்கை சாலிக்கா(பெயர் மாற்றம்) இறுதியாக இந்த ஊரில் தான் ஒன்றாக ஒரு இரவு நாம் இருந்து இந்தப்படம் பார்த்து இருந்தோம் கம்பளையில் !

இங்கு இருந்து அவள் திரும்பிய மூன்றாம் நாள் சாலிக்கா ஒரு குண்டுவெடிப்பில் உயிர் பிரிந்ததும். நான் அவள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்ததும் அதன் பின் இன்றுவரை கம்பளை போகாமல் இருப்பதும் நட்பு என்று சொல்வதா??!

ஆனாலும் நண்பி ஞாபகம் மறக்க முடியாது அவள் சிங்களத்தி என்றும் நீ தமிழன் என்றும் உனக்கு வெட்கம் இல்லையா என்று யார் துரோகி பட்டம் கொடுத்தாலும் நான் கவலைப்படமாட்டேன் !!எனக்கு அரசியலைவிட அன்பு முக்கியம்!
தொடரும்!ம்ம்ம்ம்

30 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி - 29

எதிர்பாராமல் பல இடங்களில் பலரைச் சந்திக்கும் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இருக்கின்றோம். பூர்வீகம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் வந்து சந்திக்கும் பஸ் பயணம் போலத்தான் என்னையும் சிவதாஸ் அண்ணா சேர்த்த இடம் "கிளாங்க". அங்கே எனக்கு முன்னே போய் இருந்த சிலரோடு 10 ஆக என்னையும் சேர்த்துவிட்டார். 

ஜீவன் இவர்களும் உங்க நாட்டுக்காரங்கள் தான் விரைவில் எல்லாரும் போய்விடுவீங்க. இங்க சமைக்க எல்லா சாமான்களும் இருக்கு நீங்களே சேர்ந்து சமைக்கலாம் வெளியில் எல்லாம் போகக்கூடாது. அக்கம்பக்கம் அதிகம் சத்தம் வராமல் இருங்க. எல்லாம் சரியானதும் போய்விடலாம். உங்க கடவுச் சீட்டைத் தாங்க, குமார் வாங்கச் சொன்னவர். என்றதும் நம்பிக் கொடுத்தேன் சிவதாஸ்சிடம்.. வாங்கிக் கொண்டு போய்விட்டார். எங்களோடு 10 பேர் என்றாகிவிட்டோம். வந்தவர்களில் பலர் ஏனோ உளவுத்துறையில் வேலை செய்பவன் நான் என்று நினைத்தவர்கள் போல, அவர்கள் 9 பேரும் தங்களின் ஊர் தாங்கள் போக இருக்கும் ஐரோப்பா பற்றியோ கனடிய தேசம் பற்றியோ பிரஸ்தாபிக்கவில்லை. வாய் பேசாதவர்கள் கூட சைகையில் தம் உணர்வுகளைச் சொல்லிவிடுவார்கள்.



நம்மவர்கள் மனதில் எப்போதும் இழக்காரமான நிலையோ இல்லை தன் வழிப்பயணத்தை இவன் காட்டிக்கொடுத்துவிடுவானோ என்ற மனப்பயமோ நான் அறியேன்... சமையலுக்கு ஒன்றாக உதவினார்கள். முதல் மூன்றுநாட்கள் நீண்டநிலையில் மூன்றாம் நாள் சிவதாஸ் வந்தார். கைபேசியில் கூப்பிட்டார். ஹலோ ஜீவன், பணிய இறங்கி வாங்க நான் காடியில் இருக்கின்றேன். உங்களோடு ஒரு வெள்ளைப்பையன் அவன் பேரு தர்சன் அவனையும் இட்டுக்கிட்டு வாங்க. வெரசா! 


அப்போதுதான் தர்சன் என்ற பெயரே தெரியும். அந்தளவுக்கு இருந்தார்கள் இறுக்கமானவர்களாக... இருவருமாக இறங்கி கீழே இறங்கிய நிலையில், காடியில் சிவதாஸ் அவர்கூட ஒரு பெண் மற்றும் இன்னொரு நபர் இருந்தார்கள். ஜீவன் ஏறுங்க பின்னாடி, தர்சன் வா முன்னாடி என்று விரைவாக காரினை பொதுச்சாலைக்கு இறக்கியவாறு தன்னோடு வந்த நண்பர் குகனிடம் சிவதாஸ் ஏப்பா குகன் இவங்களுக்கு பொருத்தமாக அந்தப்பையன் இருப்பானா?  

ஓம் பாஸ்.. அச்சு அசல் ஓட்டியின் பின் வரும் அல்லக்கை கூட்டம். இப்படி ஜால்ரா அடிக்கும் என்பது ஓட்டிகளுடன் பழகியவர்கள் அறிவார்கள். இந்த ஓட்டியின் அல்லக்கைபோல தான் பேராசிரியர் அன்பழகனும் கருணாநிதியின் தவறுகளை என்றும் வாய் திறந்து சொல்லமாட்டார். தலைவர் பேச்சுமீறி ஏதுதாவது சொல்லியிருப்பாரா இந்த பேராசியர்??! சிவதாஸ் தர்சனிடம் "தர்சன் இந்தவாரம் நீங்க கிளம்புறீங்க யார்கிட்டயும் ரூமில் சொல்லக்கூடாது. ஜீவன் நீயும் தான் முதலில் தர்சன் அப்புறம் நீங்க கூடவே இன்னும் கொஞ்சம் பேர் மலாக்காவில் இருந்து கப்பலில் போறீங்க எல்லாம் சரியாகிவிடும்"  என்ற போது காடியில் பின் இருந்த பெண் கனகா கேட்டாள் ஏங்க பாஸ் கப்பலிலா?? எல்லாரும்....

இல்ல 4 பசங்கள் கிளம்புறாங்க.. குமார் நாளை மறுதினம் வருவார் இட்டுக்கிட்டுப் போக... நாம முதலில் இவர்களுக்கு படம் எடுக்க வேண்டும். முன்னால் இருக்கும் பல்பொருள் அங்காடியை நோக்கி காரினை செலுத்தினார் சிவதாஸ். வெளிநாட்டுக்கு அனுப்ப இந்த ஓட்டிகள் முதலில் படம் எடுப்பார்கள். இது நம்மூரில் இராணுவம் சுற்றிவளைப்பு செய்துவிட்டு பொதுமக்களை ஒன்றுகூடவிட்டு, இராணுவப்புலனாய்வுத் தலையாட்டியைக்கொண்டு வந்து புலிகள் என்று அப்பாவிகளைச் சிறைப்பிடிக்கும் நிகழ்வு நினைவுக்கு வந்து போகும். அந்த நிலை இனி இல்லை என்பதால் படம் எடுக்கும் போது மனதில் தோன்றிவிடும் விரைவில் ஐரோப்பாவில் இறங்கிவிடலாம் என்று .. ஆனால் இது எல்லாம் சில ஓட்டிகள் அரங்கேற்றும் நாடகம் படம் பிடிக்க குகனுடன் அனுப்பிவிட்டு காத்திருந்தார்கள். சிவதாசும் கனகாவும் குகனோடு போய் படம் எடுத்து மீண்டும் வர நேரம் அதிகமானது. தனக்கு குடிக்க குகன் பல்பொருள் அங்காடியில் பீரும் ஆளுக்கு ஒரு கோலாவும் வாங்கித் தந்து, திரும்பி வரும் போது பின்னால் இருக்கையில் இருந்த கனகா முன் இருக்கையில் அமர்ந்திருந்த காட்சியை பார்த்த போதே புரிந்துகொண்டேன், அனுராதபுரம் கொழும்பு பஸ்களில் பார்த்த காட்சிகள் போலத்தான் இதுவும் ஒன்று என. எத்தனை சகிலா படம் பார்த்திருப்போம்.. ஜிந்துப்பிட்டி முருகனில்!



ஓட்டிகளில் பலர் ராமனும் அல்ல ஓட்டியுடன் வரும் பெண் ஒட்டி பத்தினியும் அல்ல . ஆனால் பாவம் அவர்களின் வாரிசுகள் என்பது மட்டும் நெஞ்சை வருடும் . மலேசியவாசிகளின் சில குடும்பக்கதைகள் கேட்டால் இரட்டை வாழ்க்கை எப்படிச் சாத்தியம் என்பதை இரண்டு மனைவியுடன் வாழும் கருணாநிதிதான் கதை எழுத வேண்டும்.. தென்பாட்டிச் சிங்கம் எழுதியர் அறியாத சங்கதியா??





 சிவதாஸ் மீண்டும் கொண்டுவந்து கிளாங்கில் இறக்கிவிட்டு சொன்னார் "நாளை மறுநாள் தர்சன் பயணம், கூடவே இன்னும் 4 பேர் போறீங்க! நம்புங்கள் என்னை. நம்பி குமார் பொறுப்புத் தந்து இருக்கின்றார்" என்றுவிட்டுச் சென்றார் ஒட்டி சிவதாஸ்! 


தொடரும் 

29 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -28

"எண்ணங்களாலே இறைவன் தானே வண்ணங்களாலே வசந்தம் தானே
எழில் கொஞ்சும் மலையகமே " என்ற முத்தழகு பாடல் ஒரு காலத்தில் அதிகம் பிரபலயம் தாய் வானொலியான இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத் தாபனத்தில்.

முத்தழகு அவர்கள் பல பாடல்கள் பாடியிருந்தாலும் இறுவட்டாக ஒன்றையும் வெளியீடு செய்யும் அளவுக்கு பொருளாதாரம் கைகூடியதா அவரிடம் ??இன்றும் தன் பாடலில் 25 பாடல்கள்தான் கைவசமாக இருக்கின்றது .

".தேவை என்றால் நீங்கள் விரும்பினால் முன் வந்து ஈழத்து மெல்லிசையில் முத்தழகின் முகம் என்று இசைத்தட்டாக வெளியீடு செய்யுங்கள் என்று ஒரு மாழைப்பொழுதில் ராகுலுடன் சேர்ந்து முத்தழகை கொழும்பில் சந்தித்த போது கூட இருந்த நண்பன் தான் லசந்தன்.

இந்த லசந்தனை மலேசியாவில் தோசைக்கடையில் சந்திப்பேன் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

முன்னர் கொழும்பில் பல்தேசியக்கம்பனியின் ஏகவினியோகஸ்தரிடம் பணியாளாக இருந்த மலையக உறவு அவன் ...

"மச்சான் ஜீவன் நீ எப்படிடா ??என்ன மலேசியாவுக்கு சுற்றுலா வந்தியா ?உனக்கு நல்ல ஒரு கம்பனி
கிடைச்சு இருக்கு. டார்க்கட் அடித்தால் நல்லா கையில் காசு கிடைக்கும். பிறகு என்ன சோக் பண்ண வேண்டியது தானே ?"

அப்புறம் சொல்லு என்ன சாப்பிடுகின்றாய்?

என்ன மச்சான் தெரியும் தானே உனக்கு காலையில் கொழும்பு வந்தால் முதலில் தெம்பிளி.

இரவு வந்தால் நமக்கு என்ன ஆட்கள் செட்டாகினால் ஜிந்துப்பிட்டி ரேணுகா பார் சொர்க்கம் ஒரு காலத்தில். உனக்குத் தெரியாதா லசந்தன்.?

ஓடா மச்சான் !

நீ கம்பனியில் உழைச்சகாசு எல்லாம் உன் நண்பர்கள் கூட சேர்ந்து கும்மாளம் போடுவாய் எனக்குத் தெரியும் !

"ஜீவன் மகே மாத்தயா என்று யார் வந்தாலும் ஒரு பியர் கூட வரும் "

அப்படி எல்லாம் என்னால் முடியாது .

நான் உங்க பொஸ்சிடம் ஒரு வேலைக்காரன் தானே?

" நீங்கள் வியாபாரிகள் நாங்கள் தேயிலைச் சாயம் தானே புழிஞ்சு போட்டு வீசிவிடுவீங்க" உங்களின் குணமே அப்படித்தானே ??

"வேற வேற கம்பனியில் வேலை வந்தால் ஓடிப்போய் சேர்ந்து விடுவீங்க .நீங்கள் ரவிசார் ,ராகுல் ,எல்லாம் இப்படித்தானே கொழும்பில் செய்தீங்க .எனக்கு நல்லாத் தெரியும் உங்க புத்தி.

கடைசியாக 1999 இல் என் அறையில் இரண்டு யாழ்ப்பாணப் பொடியங்களை சேர்த்துவிட்டுப் போனீங்க .

அவங்கள் என்னை மலையகத்தவன் தானே என்று நினைச்சு கடைசி மாத வாடகைகூட கட்டாமல் வெளிநாடு போட்டாங்கள்.

நல்ல காலம் ராகுல் தான் எனக்கு கடைசியில் உதவி செய்தான் அந்த காசு கொடுக்க .பின் (ராகுல்)அவனையும் நான் காணவில்லை.

சிங்களவன் வீட்டில் அறையை நம்பித்தான் தந்தான் .அந்த நம்பிக்கையை நான் கெடுக்கவில்லை.

உங்கள் நம்பிக்கையை நீங்கள் கெடுத்துவிட்டீங்க ."நீங்களும் ஒரு யாழ்ப்பாணத்தான் என்று "

சரி அது எல்லாம் கடந்தகாலம் ஆமா என்னாச்சு 1999 பின் கொழும்பில் பார்க்கவில்லை உங்களையும் ,ரவியையும் ஒரு அழைப்புக் கூட எடுக்கவில்லை ?

இந்த ராகுலையும் பின் நான் பார்க்கவில்லை ஜீவன் சார்.

என்னாச்சு ?
அது கொஞ்சம் கஸ்ரகாலம் அதைவிடு.

மச்சான் நீ எப்ப வந்தாய் மலேசியா ?உங்களுத்தான் தெரியுமே ஐயாவும் அவரின் பேரன்களும் ஓட்டு வாங்க மட்டும் பாசமாக வருவார்கள் .

எங்க எங்கள் மக்கள் மீது சமூக முன்னேற்றம் காட்டினார்கள் ??வேலையில்லை, பொருளாதார நெருக்கடி அதுதான் இங்க வேலை விசாவில் வந்து இருக்கின்றேன்.

" (அட்டசியாக் தெனவா ) 800 வெள்ளி)லங்காவ வடா மே ரட்டவள் ஒந்தட்டம சலக்கனவா . அப்பே ரட்ட சேரம வினாச.ம்ம்ம்

முதலாளிக்கு புரியாத சிங்கள மொழியில் என்னோடு பேசியது அவனுக்கு ஆறுதல் வேலையை காப்பாற்ற இதுவும் ஒரு தந்திரம்.

நாம கிளம்பலாமா ஜீவன் சரிடா பில் தா !

"இங்க ஒரு விடயமாக வந்தேன் எப்படியும் ஹட்டன் வரும் போது உன் வீட்டுக்கு கண்டிப்பாக வாரன். சாவகசமாக பேசலாம் ஒரு நாள் .

எந்த தப்பு அபிப்பிராயமும் வைச்சுக்காத "

எல்லா நேரத்திலும் எல்லாம் எல்லாருக்கும் சொல்ல முடியாது. ராகுல் சொல்லுவானே தில் தோ பாஹல் ஹைய் .

நீங்களும் மறக்கவில்லையா? அந்த படத்தையும் ,ராகுலையும் ??

ஹீஹீ அவன் என் பிரெண்டுடா லசந்தன் .

சரி கிளம்பலாம் சிவதாஸ் அண்ணா!

அவரின் பின்னே நானும் போகின்றேன் மனதில் ஒவ்வொருத்தரும் வெளிநாடு போக வெளிக்கிட்டதில் இருந்து சந்திக்கும் நட்புக்கள் முகம் தான் எத்தனை பார்வை எத்தனை கோணம்!
கடவுளே வழியில் வரும் மரங்கள் எல்லாம் !அழகாய் இருக்கு நம் வாழ்வு ஈழத்தில் பிறந்த பாவம் இப்படியா?

----/


தொடரும்---

அட்டசியாக் தெனவா ) 800 வெள்ளி)லங்காவ வடா மே ரட்டவள் ஒந்தட்டம சலக்கனவா . அப்பே ரட்ட சேரம வினாச.ம்ம்ம்//
//இலங்கை ரூபாயில்  800  ரூபாய்   இலங்கையைவிட மலேசியா போன்ற நாடு நம்மை நன்கு கவனிக்கின்றது சம்பளத்தில் . எங்க நாடு எல்லாம் நாசம் - என்று அவன் சொன்னான் சகோதரமொழியில்!
1 -மலேசிய -வெள்ளி 58 ரூபாய் இலங்கையில்  கதை நகரும் காலப்பகுதியில் !!

//தெம்பிளி -இளநீர்.
டார்க்கட்-விற்பனை அளவு!
சோக்- ஊதாரித்தனம்
மகே மாத்தயா- என்னுடைய சார் -

28 October 2012

கிறுக்கலும் கீதமும் -2

விரும்பி வந்ததும் விலகிச் சென்றதும் நீயடி.
விருப்பம் கேட்டேன்? விடை சொன்னாய்
விசா இல்லாதவன் விடலைப்பையன்
விடியல் இல்லாதவன் வடிவு இல்லாதவன்.
வாடிப்போகவில்லை வடிவான மனைவி
வந்துவிட்டாள் வாழ்வில்! சொர்க்கம் பாரடி
விலகிப் போனவளே! வாழ்த்துகின்றேன்.
வாழ்வில் நிறைவாக வாழ வேண்டி
வழிப்போக்கன் வாழ்த்துகின்றேன் வாழ்க
வாரிசுகளுடன் வளமாக!


//
தோற்றுப்போக தொலைந்து போகவில்லை
தோல்வி எனக்கு வழிகாட்டும் .
தோல் கொடுக்க ஆயிரம் நட்பு
தோற்றுப்போவேன் என்று விலகிச் சென்றாயா??
தோலில் ஆயிரம் பூமாலை
தோலில் சாய உருகாதே ?
தோழியாக வந்துவிட்டாள் மனைவி!
தொலைத்துவிட்டு உருகி ஆவது எல்லாம்
தொலைதூரப்பயணத்தில் தொலைத்த
தொன்மையான அன்புப் பரிசை!
தொலைக்க முன் யாசிக்காமல் விட்டாயா?
தொடர்ந்து சொல்வேன் தொல்லை இவன்!

:::
விசா- வதிவிட அனுமதி ஐரோப்பாவில்!

26 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி --27

ஈழத்தவர்கள் பலர் பொருளாதாத்தைப் பெருக்கத்தான் அகதி என்ற பெயரில் அடைக்கலம் கொடுக்கும் வெளி நாடுகளுக்கு ஓடிப்போகின்றார்கள் என்று சொல்லும் இலங்கை ஆட்சியாளர்களின் கீழ் இருப்போர் !

சுதந்திரமில்லாத ஊடக தணிக்கையின் பின் இருக்கும் நிஜத்தைத் தெரிந்து கொள்ளாத நிலையை நினைத்து என்ன சொல்வது??

ஊடகம் உண்மையில் நடுநிலமை பேணுகின்றதா ???

எல்லா மொழி ஊடகங்களும் இன ஐக்கியம் பேனாமல் ,இனவாதச் சேற்றை வாரியிறைக்கின்றது சாமானிய மக்கள் மீது திணிக்கின்றது .

"இப்படித்தான் கரனும் சொன்னான் என்னிடம் அன்று மலேசியாவில் வைத்து "

.நானும் தொழில் நிமித்தம் அவர்கள் கடையில் மதுபானத்தை மொத்தமாக வாங்கும் ஒரு வியாபாரிதான். .!

கரன் வவுனியாவில் பிரபல்யமான வியாபாரியின் மகன் .அவன் தந்தை ஒரு கோடிஸ்வரர் அரச அனுமதி பெற்ற மதுபானக் கடையை நடுத்துவதுடன் பல மதுபானக்கடைகளுக்கு மதுபான ஏகவினியோகஸ்தர். அத்துடன் பல கடைகள் ,வயல் நிலங்கள் ,என சொத்தில் ஒரு பெரும்புள்ளி.

அவருக்கு மூன்று மகன்கள் இரண்டாவது கரன் கொஞ்சம் ஜாலியான பேர்வழி. கட்டுப்பாடு இல்லாதவன்.

அவன் தந்தை அரசியல் பக்கம் கால்வைக்க நினைத்த போதுதான் .இனவாத இராணுவம் கப்பம் கோரல் என்ற பிரச்சாரத்தை அவர் மீது தொடங்கியது.

கரனை சிறைப்பிடித்தவர்கள் கேட்ட தொகையை கைமாற்றியதில் அவன் உயிருடன் வெளியில் வந்தான்.

இப்படி உயிரோடு வராதவர்கள் பொல்கொட வாவியிலும், நாட்டின் பிறபாகங்களிலும் அடையாளம் தெரியாத பிணங்களாக வந்த செய்திகள் ஊடகங்களில் ஒரு மூலையில் வந்தாலும் யாரும் அசட்டை செய்வது இல்லை.

மனித உரிமைவாதிகளும், ஜனநாயக பேச்சாளர்களும் குளிர்சாத அறையில் குளிக்கால கூட்டத்தொடரில் குந்தியிருந்து நித்திரை கொள்வதுடன் போய்விடும் நாட்கள் விடியல் இன்றி.

இது ஒன்றும் புதுமையல்ல தமிழர்களுக்கு இனவாத சிந்தனை உயர் ஆலோசகர் மட்டத்தில் பஞ்சசீலக்கொள்கை என்று 1956 இல் இருந்து வரும் செயல் .அதன் உச்சம் 1983 தொடங்கிய இனவெறியின் தாக்கம் இன்னும் தொடர்கின்றது.

அதன் பின் வந்தவர்கள் எல்லாம் சிறுபான்மை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட செய்திகள் அதிகம் வெளியில் சொல்ல முடியாத வண்ணம் வாய்ப்பூட்டு, செவிப்பூட்டு ,ஆட்கடத்தல் என அரகேறும் நாடகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை .என்பதை எத்தனை மக்கள் சிந்திப்பார்கள்.??

"சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் மூழ்கிக்கிடப்பது தானே இன்பமயம்" என்று இருக்குதுகள் என்றவாறே கரன் !

"நீங்கள் எப்படி இங்காலப்பக்கம் ஜீவன்" உள்ளே இருக்கின்றீங்கள் என்று கேள்விப்பட்டேன் .இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன் .

உயிரோடு இருக்கின்றேன் அதுமட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும் .

இனி எண்ணவோ கரன் ???

ஆமா நீ ஏன் இங்க???

" அப்பாவிடம் என்னைவைத்து இராணுவம் காசு வாங்கியது. ஒரு புறம் என்றாள் எங்கள் ஊரில் இருக்கும் துணைக்குழுக்கள் பலரில், இவர்கள் தலைவர்கள் வேற முன்னால் பலரையும் போட்டும் தள்ளிய சகோதரபடுகொலைகள் பற்றி வாய் பேசாத நவீன ஜனநாயக அரசியல் தலைவர்கள். வேடதாரிகள் அவர்களின் வழிவந்த அருவருடிகள் பலரில் ஒரு துணைக்குழு என்னையும் விடவில்லை வவுனியாவில் இருக்க.

பணம் ஏதோ எங்கப்பா அச்சடிக்கும் மத்திய வங்கி போல நினைக்கின்றாங்க போல .அவரின் உழைப்பும், உதிரமும் தியாகமும் எங்க இவங்களுக்குப் புரியப்போகுது??

" வியாபாரிகள் என்றால் கொள்ளை அடிக்கும் கும்பல் என்ற சிந்தாந்தம் பேசும் மார்க்கீசம் பேசும் இவர்கள் எல்லாம் வயலில் உழுது பார்த்து இருப்பாங்களா ?இல்லை வியாபாரநிலையத்தில் வந்து காடையர்கள் செய்யும் அட்டுழியத்தை எதிர்த்து இருப்பாங்களா ??

தங்களை வளர்க்க பொது என்னத்தில் தூய பாதையில் போனவர்களை திசை மாற்றிய அருவருடிகளினால் தான் இந்த நிலை நம் நாட்டில்.

அதனால் தான் "நானும் சொந்த வியாபாரத்தை விட்டுட்டு அகதியாக ஐரோப்பாவில் சரி போய் நிம்மதியாக இருக்கலாம் என்று இவரிடம் வந்து இருக்கின்றேன்வந்து ஒரு 10 நாள் தான்."

எப்படி உங்களோடு சங்கவி சேர்ந்தாள்?

ஓ அதுவா எல்லாம் இடையில் சந்திச்சோம் .

குமார் அண்ணா தான் இனி வழிகாட்டி.

ஜீவன் உன்னக்கு எப்போதும் துணையிருப்பேன் நான் .!

இப்ப சிஸ்ரரும் கரனும் இன்னொரு இடத்துக்கு போறாங்க .

"உங்களை நம்ம பிரெண்டு கூட்டிக்கொண்டு போவார் என்ன சாப்பாடு ?கோழிக்காலும், கோலாவும் எடுக்கவா ?

"வேண்டாம் குமார் வெளியில் ஏதாவது நம்மூர்சாப்பாடு கிடைக்குமா ?

ஓ தாராளமாக தோசைக்கடை பக்கத்தில் இருக்கு.

நீயும் பிரெண்டு கூட போய் சாப்பிடுங்க. நல்ல பீர் இருக்கும். சாப்பிட்ட பின் அவன் வீட்டில் தங்கலாம். இந்த வாரம் உங்களை ரூட் கிளியராக இருந்தால் ஐரோப்பாவில் இறக்கிவிடுவேன் .

உங்க ஆளு இன்னும் பாக்கி முடிக்கவில்லை அவரை இன்று போனில் கூப்பிடுகின்றேன். அவர் உங்களைக் கூப்பிடுவார் இந்த நம்பரில்.

மலேசியாவில் சுதந்திரமாக இருக்கலாம் ஜீவன் .நேரம் ஆகுது நாம் கிளம்புறம் என்று குமார் போய்விட்டார்.

கரன் சங்கவியையும் அழைத்துக்கொண்டு .சிவகாசியைப் பற்றி யாரும் பேசவில்லை என்ற நினைப்பு குமார் போன பின் வந்து போனது.

அருகில் இருந்த இந்தியன் தோசைக்கடைக்குள் குமாரின் நண்பர் சிவதாஸ் சகிதம் உள்நுழைந்தேன்.அங்கே!
...

தொடரும் ....



//
பீர் சாப்பிடுங்க -இலங்கையில் மதுபாணம் குடிப்போமா என்று கேட்பதைப்போல
ரூட்கிளியர் -பயண வழிகள் இசைவாக இருந்தால் என்று பொருள்கொள்க.
--
கூப்பிடுகின்றேன் - தொலைபேசியில் அழைக்கின்றேன் என்பதை மலேசியாவில் நடைமுறையில் சொல்லும் செயல்!

23 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -26

டிஸ்கி!!!
மீண்டும் ஒரு முறை இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு இல்லை!!!!
//

இனி!!!
////////////////தொடர் -26 !!
போட்டி என்பது இந்தப்பூமியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் செயல் .ஈழத்து இலக்கியத்தில் சமதர்மம் பேசிய கைலாசபதியும் எஸ்.பொன்னத்துரையும் போட்ட போட்டிகள், உள்குத்துக்கள் பல வாசகர்கள் அறிந்த ஒன்று .

அதே போல இந்த ஓட்டி வேலையில் அதிகம் பேர் இருக்கும் நாடும் மலேசியா தான்!

எத்தனை முகம்கள் ,எத்தனை பெயர்கள் ,என அவர்களை இனம் காட்டிக்கொள்ள.

அவர்கள் ஒவ்வொரு அடையாளங்கள் மட்டும்மல்ல பல அடிதடிகள் என பொலிஸ் அறியாத வண்ணம் நடக்கும் .

சில நேரம் பொலிஸ் வந்தால் நண்பர்கள் என்று கூறிவிட்டு கைகொடுத்துப் போகும் நட்புக்களாகவும் இருப்பார்கள்.

இந்த ஓட்டிகளிடம் ஏமாந்தவர்கள் கதைகள் ஏராளம். ஏட்டிலும் வரவில்லை ,எழுதியும் செல்லவில்லை பலர் என்பது வேதனையான விடயம் .

ஈழம் என்ற போர்வையின் உள்ளே நடந்த சீரழிவுகளை வலி ஏன்று ஒதுக்கிவிட்டுப் போக முடியாது .


அப்படித்தான் ஜீவனும் சிவகாசியை ஒதுக்கிவிட்டுப் போக நினைக்கவில்லை. கைபேசி அழைப்பில் சிவதாஸ் "இடப்பக்கம் வந்து கொண்டு இருக்கும் காடியில் ஏறுங்க என்ற போது வாடகைக்காரும் தயாராக வந்துகொண்டு இருந்தது" எங்களைநோக்கி.

" சிவகாசியைக் கூப்பிடாமல் போவது சரியில்லை ஜீவன் "என்றால் சங்கவி .

என்ன செய்வது ஹலோ சிவகாசி வா போவம்.

" நீங்க போங்க எனக்கு வழி தெரியும் போக "
என்று அவன் அடம்பிடித்த நிலையில் நாம் போய் ஆகணும் சிவதாஸ் அவசரம் காட்டுகின்றார் அழைபேசியில்.

சங்கவி முதலில் காரில் ஏறுங்க பொலிஸ் வந்தால் சோலி. இனி அவன் முடிவு இவ்வளவு தூரமும் வந்தவனுக்கு தெரியணும். புது இடத்தில் எப்படி எல்லாம் ஒத்தும் ,விட்டுக்கொடுத்தும் போகணும் என்று.

அவனுக்கு வியாபார நலன் தெரியாது போல விட்டுத்தள்ளு சங்கவி மீண்டும் அழைப்பில் வந்தார் சிவதாஸ் .

"ஜீவன் குமார் சார் சொல்லி இருந்தார் மூவர் என்று உங்கள் ரெண்டு பேரைத்தான் நான் பார்க்கின்றேன்"

மற்றவர் எங்க ?அவன் அங்களிப்பக்கம் ஓட்டலில் tea குடிக்கப்போட்டான் .

ok ,,நீங்கள் அருகில் வரும் காடியில் ஏறுங்க .காடியா ??

ஓ !!!உங்க ஊரில் கார் பிரெண்டு. இங்க காடி என்பாங்க நீங்க அதில் ஏறுங்க மற்றதைப்பார்க்கலாம் என்றதும் கார் அருகில் வரவும் சரியாக இருந்தது.

ஏறுங்கசார் என்றான் கார்ச்சாரதி உள்ளே சங்கவியும் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்ட நேரத்தில் மீண்டும் அழைப்பில் வந்தார் சிவதாஸ்.(அவர்களின் நண்பர்தான் கார் ஓட்டியும் )

ஜீவன் குமாருக்கு நான் இப்ப பேசிவிட்டேன் .

"நீங்க ரெண்டு பேரும் என்னிடம் வந்துவிட்டார்கள் என்று .அவர் ஐரோப்பாவிற்கு தகவல் சொல்லுவார் போனை காடி ரைவரிடம் கொடுங்க."

சார் சொல்லுங்க .சரி கார்ச்சாரதி மலேசிய மொழியில் பின் தொடர்பைத் தொடர்ந்துவிட்டு கைபேசிக்கு தொடர்பை துண்டித்தான் .

"என்ன ஜீவன் எங்களோட
வந்தவனை இடையில் விட்டு வருகின்றோம் எதிர்ப்பக்கம் ஏதோ அடிதடி நடந்திச்சு என்ன செய்வது "

சங்கவி வந்தவனுக்கு அறிவு வேண்டாம் ??தனக்கு கடவுள் நம்ம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன இடத்தில் நின்றாள் தானே கூட்டிக்கொண்டு போக வருபவன் கண்டு பிடிப்பான் .

வருவது யார் ?முன்னப்பின்ன பார்த்தோமா? இல்லைத் தானே .சுற்றுலா வழிக்காட்டி போலத்தானே வந்த இடத்தில் சொன்ன அந்த இடத்தில் நிற்க வேண்டியது தானே !

அதைவிடுத்து நாத்திகம் பேசுகின்றான் !என்ன ஊத்தப்பேச்சு பேசுகின்றான் .பட்டுத் திருந்தட்டும் விடுங்க .

"என்னோடு இடையில் 17 பேர் வந்தார்கள் வெளிநட்டுக்கு என்று அதில் ரவிதான் என் நண்பன்  அவன் தோழி சாலிக்கா  ரவிக்கு உயிர் !

அவள் சிங்களத்தி என் பார்வையில் ஆனாலும் என் பிரெண்டு ரவி அவன்!  தான் முக்கியம் எனக்கு !!!

மற்றவர்கள் எல்லாம் ரயில் பயணிகள் போலத்தான்!

நான் போவது பின்கதவால் வெளிநாட்டுக்கு. எல்லாரையும் கூட்டிக்கொண்டு போக இது ஆன்மீக யாத்திரை அல்ல சங்கவி .நான் ஓட்டியும் இல்லை ,நானும் ஒரு பயணிதான் உங்களைப்போல நாளை உங்களைப்பிரிய நேர்ந்தாலும் எனக்கு எந்த உறுத்தலும் இல்லை .ஏன் தெரியுமா ?

நாம் போக வேண்டிய தூரம் அதிகம்..

"நீங்கள் சுயநலவாதி என்கின்றீங்க பொதுவாக "

ஆமா .அதில் என்ன தப்பு ?

முதலில் என் பயணம் சரியாக அமையணும் என்று என்னும் சாமானியன் நான் .

வரும் வழியில் பலரைப் பார்ப்பதும் பிரிவதும் தொடர்வதும் ஒரு அனுபவம் போல தொடர்கின்றது விற்பனைப்பிரதிநிதி வேலையில் சேர்ந்த பின் அது தான் எனக்கும் இப்போதும் கிடைப்பதும் .!

ஒரு வேளை ராகுலைச் சந்திக்க நேர்ந்தால் !

"அவனோடு பகிர்ந்து கொள்வேன் என் அனுபவங்களை அவனுக்கு எழுத்து ஆர்வம் எப்போதும் இருக்கும். ஆனால் அவனைச் சந்திப்பேனா ??என்பதும் நிச்சயம் இல்லை.

நீண்ட தூர ஓட்டத்தில் மலேசியாவின் அழகிய சாலையோரம் தாண்டி வந்து நின்ற இடம் செந்தோஸா கிளாங்க .

அப்போது கைபேசியில் அழைப்பு வந்தது என்னப்பா ஜீவன் சொளக்கியமா?

அந்த காடியில் இருந்து இறங்கி முன்னால் இருக்கும் kfc உள்ளே வாங்க என்றார் குமார்.

kl இலில் சந்திப்போம் என்றது ஞாபகம் வர சங்கவியோடு இறங்கி உள்ளே சென்றாள்!

குமார் கோக்கக்கோலாவோடு இருக்க அவர் அருகில் இருந்தான் கரன்!

கரன் எப்படி இங்கே என நானும் திகைக்க .சங்கவி கரன் நீங்கள் எப்படி? என்று சகஜமாக கேட்டாள் ?


தொடரும்!
//////

சோலி-கஸ்ரம்-சிக்கல்
காடி -கார்
ஊத்தப்பேர்ச்சு-கெட்டவார்த்தை /நாகரிகம் இல்லாத வார்த்தை /மூன்றாம் தரவார்த்தை.
கிளாங்க -மலேசியாவில் இருக்கும் ஒரு ஊர்.
kfc- ,எல்லாரும் அறிவோம் நவீன இறைச்சித்துண்டு விற்கும் பல்தேசிய விற்பனைநிலையம்!ஹீ

22 October 2012

நெஞ்சில் வாழும் கலைஞன்!

ஹிந்தித் திரையுலகில் மிகநீண்டகால அனுபவமும் திறமையும் மிக்க மூத்த ஒரு படைப்பாளியும் சிறந்த ஆளுமையும் மிக்க ஒரு இயக்குனரை ஹிந்தி திரையுலகம் நேற்று (21/10/12 )இழந்து தவிக்கின்றது.

..யாச் சோப்ரா!

சினிமா இயக்குனர்கள் பலரின் பல படைப்புக்கள் சில ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். ஒலியும் ஒளியும் சந்திக்கும் இந்த திரைப்பட ஊடகம் பல்வேறு படைப்பாளிகளை மொழி கடந்து நேசிக்க வைக்கின்றது. அப்படி நான் நேசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் தான் யாஸ் சோப்ரா.


யாஸ் சோப்ரா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர் ஒரு இயக்குனர் ஹிந்தித் திரைவானில் என மட்டும் நன்கு அறிவேன்.
.அதே போல நல்ல கதாசிரியர்,நல்ல தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அவரின் மகன் ஆதித்த சோப்ராவும் ஒரு தயாரிப்பாளர். தந்தையோடு சேர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களை தந்து இருக்கின்றார்.

யாச் சோப்ராவின் படங்களை கொழும்பிலும் ,அனுராதபுரத்திலும் நான் அதிகம் பார்க்கும் சூழல் கிடைத்தது என் பணியின் காரணமாக. !

மக்களின் வாழ்க்கையின் மையமாக அதன் அடிநாதமாக இருப்பது குடும்பம் என்பதை மிக நேர்த்தியாக கையாளும் திறமைசாலி இயக்குனர்களில் ,கதாசியரியர்களில் மறைந்த யாஸ் சோப்ராவும் ஒருவர் என்பது நான் பார்த்த அவரின் படங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்.


யாஸ் சோப்ரா அதிகம் அமிதாப்பச்சனுக்குப் பின் பிற்காலத்தில் சாருக்கானை ஹிந்திப் பட உலகில் பாதுசாவாக உயர்த்தி விட்டவர்களில் முதன்மையானவர் எனலாம். பல நல்ல திரைப்படங்கள் யாஸ் சோப்ராவின் யாஸ் ராச் பிலிம்ஸ் மூலம் ஹிந்தியில் அதிக படங்களை மக்களுக்குத் தந்தவர்

.இவரின் படங்கள் நம்நாட்டில் சகோதரமொழியில் (சிங்களத்தில்)பின்னனிக்குரல் கொடுக்கப்பட்டு அதிக தடவை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் ,மற்றும் சிரச தொலைக்காட்சியிலும் ரசிகர்களுக்கு விருந்தாக ஒலி ஒளிபரப்பப்பட்டது.இனியும் தொடரும் ரசிகர்கள் விருப்பு இன்னும் இருக்கின்றது. அப்படி பார்த்தவர்களில் நானும் ஒருவன் .தில் தோ பாஹல் ஹைய்,கபி குசி கபிகம், வீரசாகர்,மொகப்பத்தேன் என எனக்கு அவரின் படைப்புக்கள் அதிகம் பிடிக்கும்!

யாஸ் சோப்ராவின் பிரிவில் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவர் படத்தில் இருந்து சில காட்சிகள் மீளவும் அந்தப்படைபாளிக்கு சமர்ப்பணம் கலையஞன் உயிர் பிரிந்தாலும், கலைப்படைப்பு உயிர் வாழும் .

அப்படியானவர்களில் யாச் சோப்ரா எப்போதும் வாழும் படைப்பாளி .




19 October 2012

உருகும் பிரெஞ்க்சுக்காதலி- இருபத்து ஐந்து


தென் ஆசியாவில் நிதானமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனலாம். மூவின மக்களும் சுதந்திரமாக ஒன்றினைந்த தேசமாக வாழும் மலேசியா நாடு தனித்துவம் மிக்கது. இந்த நாட்டின் ஆரம்பல கால முன்னேற்றத்தில் இலங்கையரின் பங்கு வரலாற்றில் இருட்டடைப்பு செய்ய முடியாத ஒன்று.!


இந்த நாட்டுக்கும் என் குடும்பத்திற்கும் 1983 கலவரம் வர முன்னர் தொடர்பு இருந்ததாக அடிக்கடி ராகுலின் பாட்டி பங்கஜம் பாட்டி சொல்லுவார். தன் இளைய சகோதரி சின்னவயதில் சிறிய தந்தையோடு புலம்பெயர்ந்து அந்த நாட்டில் அரச தொழில் கருமத்தில் இணைத்துக்கொண்டார் என்றும் அங்கேயே திருமணம் முடித்து வாழத் தலைப்பட்டு விட்டதினால் வீட்டில் யாரும் தொடர்பை கொண்டு இருக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். தன் ஒரு மகன்தான் அவர்களுடன் தொடர்பில் இருந்தான் என்றும் அந்த மகனும் மலையகத்தில் மாண்டு போனதன் பின் யாருக்கும் தொடர்பு இல்லை என்று சின்னவயதில் எங்களுக்கு 1991 ஊரில் இருந்து இடம்பெயர்ந்த போது சொன்னது ஞாபகம் வந்தது. 


என்னையும் மலேசியா வரவேற்கும் என்று நானும் நினைக்கவில்லை. விதி முன்னர் எழுதியது கணக்கினை யார் அறிவார் என்று எண்ணிக்கொண்டு வரும் போதே, சங்கவி சொன்னாள் ஜீவன் இப்ப மலேசியாவில் எங்க தங்கப் போறம் ஹோட்டலிலா? அவருக்கு ஐரோப்பாவுக்கு கோல் பண்ண வேண்டும் 3 நாட்களாக கதைக்கவில்லை. ஓ அப்படியா ? கோலாம்பூரில் இறங்கியதும் பேசலாம். எப்படியும் வெளிநாட்ட்டுக்கு அழைக்கும் தொலைபேசி மையம் இருக்கும். என்றாலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும். எங்களுக்கு குடிவரவு விசா இல்லாமல் அத்துமீறித்தான் வருகின்றோம்.

ஒரு காலத்தில் எங்க ஊர்களில் மலையக மக்களை கள்ளத்தோனி என்று நக்கல் பண்ணிவர்கள். பலர் கடைசியில் அவர்கள் வாரிசுகள் கூட தப்பி இருக்க உதவியது அந்த கள்ளத்தோனி என்று திட்டிய மக்கள் தான் சங்கவி அதை நேரில் ஒரு ஊடக பேட்டிக்கு ராகுல் பேட்டி கண்டபோது நேரடியாக அருகில் இருந்து கேள்விப்பட்டேன். கடையில் நாமும் இப்ப இந்த நாட்டுக்குள் கள்ளத்தோனியாக வந்து இருக்கின்றோம். எப்படியாவது ஐரோப்பா போனால் போதும். நீண்ட நேரம் ஒடிய வாகனம் வந்து சேர்ந்த இடம் கோலாம்பூரின் மஜீத் இந்திய சுற்றுவட்டம். சார் இங்கதான் உங்களை சித்தப்பா இறங்கச் சொன்னவர்! என்ற நடத்துனர் குரல் கேட்ட போதுதான் தூக்கம் கலைந்து.








முளித்துப் பார்த்த போது, அசதியில் நித்திரையாகி விட்டேன் என்ற நினைப்பு வந்தது என்னோடு வந்தவர்களுமா நித்திரையாகி விட்டார்கள்? இனி மேல் பயணங்களில் நித்திரை கொள்ளக்கூடாது. குமார் நடத்துனரிடம் தான் சித்தப்பா என்று சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நடத்துனர் இப்படி சொல்லுகின்றார் என்ற எண்ணம் வந்தது. சங்கவியும் ஆழ்ந்து உறங்கிவிட்டாள் என்பதைச் சொல்லியது விழிமூடிய சலனம் இல்லாத முகம். யுத்தம் எப்படி எல்லாம் வாழ்க்கைப் பாதையை மாற்றுகின்றது. நித்திரை கொள்ளும் போது தட்டி எழுப்பக்கூடாது கோழிச் செட்டையின் சிறகின் துணையோடு தூரிகை தீட்டும் ஓவியம் போல எழுப்ப வேண்டும் என்று சாலிகா ரவிக்குச் சொன்னது ஞாபகம் வந்து செல்கின்றது.


சங்கவியின் உறக்கத்தை வெடிகுண்டு போட்ட சூப்பர் சொனிக் போல திடுக்கிட வைக்க விருப்பம் இல்லை. ஆனாலும் எப்படியும் எழுப்பவேண்டும். இறங்க வேண்டும். என்ற போதே அவளும் கனவுகண்டு விழித்தவள் போல எழுப்பினாள். சிவகாசியை தட்டியதில் அவனும் சோதனைக்கு வந்த ஆமிக்காரன் காலில் தட்டியது போல நினைத்து திடுக்கிட்டு எழுந்ததும் மூவரும் கீழே இறங்கினோம். மலேசியா தலைநகரம் கோலம்பூர் உங்களை அன்போடு வரவேற்கின்றது என்பது போல இருந்திருந்தால் சந்தோசம். ஆனால் ஊர் தெரியாத புதுமுகங்கள் எங்களுக்கு எல்லாம் ஒரு அவசர சந்தேக நிலையைத் தந்தது. நாம் யார் எங்கே போறம் ஏது துணிவு இரு ஆண்கள் ஒரு பெண் மற்றவர்கள் பார்வையில் நாம் என்ன நோக்கம் கொள்வோம் என்ற சிந்தனை ஒரு புறம். குமார் தந்த கைபேசியில் குறித்த நண்பருக்கு அழைப்பை எடுத்த போது அருகில் ஒரு அம்மன் கோவில் இருக்கு அங்கே நில்லுங்கள் நான் வந்து விடுகின்றேன் என்றார். எதிர் முனையில் பேசிய சிவதாஸ்!


என்னவாம் ஜீவன் பக்கத்தில் ஒரு அம்மன் கோவில் இருக்காம் அங்கே நிக்கட்டாம் என்ற போது சங்கவியின் முகபாவம் தன் நிலை உங்களுக்கு தெரியும் தனே என்பதைக் காட்டியதை உணர்த்தியது. சிவகாசியை கோவில் உள்ளே இருக்கும் படி சொல்லியதில் நமக்குள் தொடங்கியது மல்யுத்தம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் கோயிலுக்குள் போனதில்லை. இந்த பன்னாடைக்கு ஊரில் எங்களின் தராதரம் தெரியாது போல. காசு கொடுத்துத் தானே போறம் இறைச்சிக்கடைக்கு ஏற்றும் மாடுகள் போல இந்த ஓட்ட பஸ்சில் ஏற்றியதும் இல்லாமல் இந்த ஊரில் கோயிலில் அதுவும் அதிகாலையில் போய் நிக்கட்டாமோ வருட்டும் அந்த வே.....மகன் அவனின் வார்த்தைகள் அருவியில் கொட்டும் கஞ்சல் போல நாகரிகம் இல்லாமல் வந்து விழுந்தது. 


அருகில் ஒரு பெண் இருக்கின்றாள். எம் நாட்டைச் சேர்ந்தவள் என்பதையுமா மறந்து இப்படி தரம்கெட்ட! மூன்றாம் தர வார்த்தை பேசுவது இதுவே வவுனியாவின் தமிழன் என்றாலும் அல்லது வனத்த முல்லையில் சிங்களவன் என்றாலும் இப்படி பேசி இருந்தால் முதலில் முன் பள்ளு மோதிரவிரல் முந்தியிருக்கும். அப்படித்தான் எங்கள் நட்பு வட்டம் அடிதடி என்றால் நாங்க கழுத்துப் பட்டியை கழற்றிவிட்டால் (tie) காவலிகள் தான். சில இடத்தில் ரவியோ, ராகுலோ நானோ சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து அடிபட்டதில் வாழைத்தோட்ட காவல் நிலையத்தில் எல்லாரும் கம்பி எண்ணி எங்கள் மேல் அதிகாரி வந்து பிணையில் எடுத்த பின்தான் நாகரிகமாக நாமும் மாறியிருக்கின்றோம். சந்தைப்படுத்தல் தொழிலில் பலர் முன் நாகரிகம் முக்கியம் கோபம் அல்ல என்று பலருக்குச் சொல்லிய காலத்தை நினைவு மீட்டியது.

சிவகாசியின் வார்த்தை சிலருக்கு சனியன் நாக்கில் இருப்பான் என்பார்கள் புதிய நாட்டுக்கு வந்து இருக்கின்றோம். அனுசரித்துப் போகவேண்டும் என்ற அடிப்படை நினைப்பைக்கூட நம் தேசத்து யுத்தம் பலருக்கு படிப்பிக்கவில்லை. பட்டதாரி முதல் பாமரன் வரை எல்லா இடத்திலும் வன்முறைதான் தீர்வு என்றால் காந்தி ஏன் திலீபன் ஏன் அன்னை பூபதி ஏன் என நினைக்கும் நேரத்தில் சிவகாசி எதிர்ப்பக்கம் இருக்கும் சாப்பாட்டுக்கடை நோக்கிப் போனான். அப்போது எதிரே இரு குழுக்கல் இடையே கைகலப்பு நடந்து கொண்டு இருந்ததை தூரத்தில் பார்த்து விட்டு நானும் சங்கவியும் அருகில் இருந்த ஹோட்டலில் நுழைந்த நிலையில் மலேசிய பொலிஸ் வந்துவிட்டது!




18 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -24

விற்பனைப் பிரதிநிதி வேலையில் பலரைச் சந்தித்து பேசும் சூழல் வந்த போதும், பெண்களுடன் அதிகம் கதைத்தாலும் ,என் எல்லை மீறிப் போனது இல்லை .கோட்டெஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு முன்னால் இருக்கும்
கழிவறையையும் சங்கவிக்கு காட்டிவிட்டு வீதியின் கரையில் காத்து இருந்த போது நாட்டில்

பல யுவதிகள் தூர இடமான கொழும்பு போக என்னோடு மதவாச்சியில் இருந்து வாகனத்தில் வந்த போதும் அவர்கள் மனதில் சஞ்சலம் வர நான் காரணமாக இருந்ததில்லை என்பதை மனதில் எண்ணிய வண்ணம் எல்லையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சங்கவியிம் வந்தாள்.!

என்ன ஜீவன் சார் ஜோசனை? ஒன்றும்மில்லை

.இந்த சார் பட்டம் எல்லாம் வேண்டாம் சங்கவி நாட்டைவிட்டு வரும் போதே என் சுயத்தை இழந்துவிட்டுத்தான் வருகின்றேன் .முன்னால் போற பொடியங்கள் பலர் பட்டதாரிகளாக இருக்கலாம் .என்னை உங்களுக்கும் ,பிரசாத்துக்கும் தான் தெரியும் .அவனையும் குமார் தன் காரில் கையோடு கூட்டிக்கொண்டு போய்விடுவார் அப்படித்தான் என்னிடம் சொல்லி விட்டுப் போறார்.

இனிமேல் ஜீவன் என்றோ ,அண்ணா என்றோ கூப்பிடுங்கோ .அதுதான் உறவாக இருக்கும் ,சரியா சங்கவி .

சரி ஜீவன் .

"இந்தாங்கோ காசு தக்க சமயத்தில் உதவியதுக்கு நன்றி "

.சங்கவி நானும் சகோதரிகளுடன் பிறந்தவன் ,மச்சாள்களுடன் வளர்ந்தவன் இந்தக்காசு வேண்டாம்.

இனியும் தாமதிக்காமல் கொஞ்சம் வேகமாக நடக்கணும் .பல்லைக்கடித்துக் கொண்டு சரியா?

பாதைகள் பலவிதம் எல்லைக்கோடுகள் சில விதம் .

என்ன ஜீவன் பயணமுகவர் எல்லையில் ஆமிக்காரன் நிற்பான் ,அதிகம் சோதனை இருக்கும் என்றார் .இங்க யாரையும் காணவில்லை, சாதாரனமாக எல்லையைக் கடக்கினம் நடந்தே .!

எனக்கும் தெரியவில்லை நானும் முதல் முறைதானே வாரன் சங்கவி.

ஆனால் இந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.

நாங்கள் போய்ச் சேர்ந்தால் போதும் எல்லைப்பகுதியில் எந்த துன்பமும் வராமல்.

1மைல் நடந்தாச்சு ஜீவன் .வெரசா வாங்க சிஸ்டர் நீங்களும் தான் முன்னால் நடந்து போன பிரசாத் எல்லாம் இப்போது காரில் போவதைப் பார்த்துக்கொண்டு நிற்கையில் குமார் கூப்பிட்டது கேட்டது.

நடந்துவந்த வேகத்தைவிட இவர்களின் கார்கள் வந்த வேகம் திகைப்பாக இருந்தது. பயண முகவர்கள் எப்படி எல்லாம் திட்டம் போடுகின்றார்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள் போல இல்லை .

.ஓட்டி குமார் சோதனை என்று பயம் காட்டிக் கொண்டு இருந்தார் .எல்லையில் இருந்த காவல்படையினர் ஒன்றும் கேட்கவில்லை.

ஒரு நேரம் அவர்களுக்குள்ளும் மனித நேயம் இருக்குமோ ?யுத்ததேசத்தில் இருந்து வரும் இந்த ஏதிலிகள் அமைதியாக வாழ ஆசைப்பட்டு நாடுவிட்டுப் போகின்றார்கள் என்ற நினைப்பு வந்திருக்குமோ? கவலையில்லாமல் ஒரு எல்லை தாண்டியாச்சு என்ற நிலையை குமார் உறுதி செய்தார் .

ஜீவன் இந்த பஸ் kl போகுது இதில் நீங்களும் சிஸ்ரரும் சேர்ந்து வாங்க .நீங்க ரெண்டு பேரும் தான் வேற பார்ட்டியின் ஆட்கள் .

முன்னால் வந்தவங்க வேற ஆட்கள் இந்த போனில் kl சேர்ந்ததும் கோல் பண்ணுங்க இந்த மேலே இருக்கும் நம்பருக்கு.எத்தனை மணித்தியாலம் பஸ் ஓடும் குமார் சார்.11மணித்தியாலம் பிடிக்கும் .சில நேரம் தாமதமாகலாம் அங்க நம்ம பிரெண்டு உங்களைப் பிக்கப் பண்ணூவார்.

"கவலையில்லை உங்களுக்கு இங்க போகும் வழியில் உங்க நாட்டைப்ப்போல இடையிடை இறக்கி ஏத்த மாட்டாங்க சோதனை என்ற பெயரில் சீண்டமாட்டாங்க.சரியா பயம் இல்லாமல் ஏறுங்க ."

எனக்கு உங்க நாட்டுக்காரங்கள்(சிலோன்) கூட அதிக பழக்கம் நாளை சந்திப்போம் ஜீவன் பின்னால் வருவது இன்னொரு ஓட்டியின் ஆள் அவன் பெயர் சிவகாசி கொஞ்சம் யாக்கிருதை தம்பி அவன் வயசு அப்படி சரியா .

kl சேர்ந்த பின் சந்திப்போம்!


தொடரும்...
//////
kl-கோலாலம்பூர்
வெரசா-விரைவாக!

17 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-23


கணனிக் கல்வி கற்றுக்கொள், தையல்கல்வி கற்றுக்கொள், சிற்றுண்டிகள் (கேக்) செய்ய கற்றுக்கொள், என்று சொல்லும் தாய் உள்ளங்கள் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு தூர இடங்கள் தூர தேசம் போகும் போது மற்றவர்களிடம் சகஜமாக தோழமையோடும் முன் யாக்கிருதையோடும் பழகவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை. என்னுடைய பிள்ளையை அடக்கமாக வளர்த்திருக்கின்றேன் என்று சொல்லும் சிலர் இந்த அடக்கம் என்பதுகூட சில நேரத்தில் தங்கள் தேவையை மற்றவர்களிடம் வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு தைரியம் இல்லாமல் செய்து விடும் என்தை நினைப்பதில்லை. 





அடக்கம் என்று சொல்லியே அவசியத்தை மறந்து போகின்றோம்! மாதத்தில் மூன்று நாள் படுக்கணும் தனியாக என்று எழுதிய வைரமுத்துவின் பாடல் பார்வைக்கு விளக்கம் கொடுக்கும். விளம்பரங்கள் இன்று எல்லா ஊடகங்களிலும் சாதாரணமாக வந்து போகின்றது. அது தாங்க என்று கேட்டு வாங்கும் உறவுகள் (கோட்டெக்ஸ்) பொதுவெளியில் கூச்சமாக பெயர் சொல்ல மாட்டார்கள் (கோட்டெஸ், விஸ்பர்) மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ ? என்ற மனப்பிரம்மை பாட்டி, அம்மா காலத்துடன் போய்விட்டது. இன்றைய உலகில் மூன்றுநாள் வீட்டில் இருக்க முடியாது.....

இது அவசர உலகம் குதிரை வேகத்திற்கு ஒட வேண்டிய பொருளாதார தேவை நிறைந்த உலகம். நாம் இனியும் கூச்சம் தயக்கம் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் நிலையை போக்க வேண்டிய கல்விக்கூடம் காமக்கூடமாகவும், அரசியல் பீடமாகவும் சீரழிகின்றது. எத்தனை கல்விப்பீடம் பெண்களின் இயற்கை உபாதை வரும் நாட்களில் எத்தகைய செயல்பாடுகள் மூலம் சுகாதாரமாக இருக்க முடியும் என்று வளரிளம் பருவத்தில் சிந்திக்கும் சொற்பொழி விளக்கவுரை கொடுக்கின்றார்கள்?

இன்றும்கூட வளர்ச்சிகான கிராமங்களின் கல்விக்கூட நிலையைப் பற்றியோ வளரிளம் மாணவிகளின் அடிப்படை தேவைகள் பற்றியோ உரிய கவனம் செலுத்தும் ஆலோசகர்கள் இல்லை. ஆனால் பதவி வெறியில் அலையும் கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கின்றது. இப்படித்தான் அன்று சங்களா கிராமத்தின் ஊடாக மலேசியா போக தயாராக வந்த சங்கவியினால் பிரசாத் போல அவர்கள் முன் செல்லும் மற்றவர்கள் போல வேகமாக நடக்க முடியவில்லை. 

அவளுக்கு அந்த மூன்று நாளில் இரண்டாம் நாள். என்ன ஜீவன் சார் எல்லாரும் உங்களைவிட வேகமாக போகினம். இவர்களின் வேகத்தைப் பார்த்தால் இன்றே ஐரோப்பாவிற்கு புகுந்து விடுவார்கள் போல? நீங்களே நல்லா வேகமாக காலில் சில்லுப்பூட்டிக் கொண்டு நடப்பீங்க. வழமையாக நான் சைக்கிளில் போகும் போது பார்த்து இருக்கின்றேன். ஆனால் இன்று இவ்வளவு மெதுவாக வாறீங்க. உங்களுக்கு வழித்துணையாக கூடவரச் சொல்லிவிட்டுத்தான் குமார் ஓட்டி முன்னால் மற்றவர்களுடன் போறார்! கொஞ்சம் வேகமாக நடக்கலாமே. முடியல ஜீவன் சார் பீரியட். நடக்கும் போது வலி அதிகமாக இருக்கிறது. 

ஐந்து நாட்களில் ஐரோப்பா போய்விடலாம் என்று சொல்லித்தான் பயணமுகவர் ரிக்கட் போட்டார். யாழ்ப்பாணத்தைவிட்டு ஒரு இரவுக்குள் வன்னி வந்தது போல இந்தப்பயணமும் அவசரப் பயணம் என்பதால் என்னால் எல்லாத் தேவைகளையும் அதிகமாக காவிக்கொண்டு வரமுடியவில்லை. எடுத்து வந்த பயணப் பொதியையும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழ் என்ற காரணத்திற்காக கிண்டிக்கிளரியதில் முக்கியமாக நீங்க ஊரில் இருக்கும் போது கடைக்கு கொண்டுவரும் அந்த விஸ்கோத்து! தொலைஞ்சு போச்சு

. ...

என் தொழிலில் பெண்களுக்கான நவீன கோட்டெக்ஸ் எல்லாம் வியாபாரம் செய்யும் ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலை பல்தேசியக் கம்பனி என்பதால் பலதும் தயாரிக்கும் எங்கள் நிறுவனத்தின் இந்த கோட்டெக்ஸ் விற்பதில் ஒரு சாதனையே செய்து இருக்கின்றேன். எங்கள் நிறுவனத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாடு பூராகவும் மும்மொழி தெரிந்த மும் மதத்வர்களில் எங்கள் தனியார் துறையில் 136 விற்பனைப் பிரதிநிதி நண்பர்கள் பணிபுரிந்தார்கள். அவர்களிடம் முதலில் பணியில் சேர்ந்த பரீட்சாத்தக் காலத்திலேயே அதிகமாக விற்பனை செய்து சந்தைப்படுத்தல் உயர் அதிகாரியிடம் இருந்து காசோலையை பரிசாக பெற்ற போது பலரின் புருவமும் உயர்ந்தது. இவன் எப்படி இந்தளவு தொகையை தொடர்ந்து 3 மாதம் விற்பனை செய்தான் என்று எல்லோரும் வியந்தார்கள். 
....
கம்பனியில் இருந்து ஆராய வந்தவர்களினாலும் புலனாய்வு செய்யும் மேல் அதிகாரியும் விற்பனையை வவுனியா வந்து உறுதி செய்து விட்டுப் போனாலும் அதிகமான விற்பனையை செய்த சூட்சுமம் உள்ளுக்குள் அவர்களுக்கும் பிடிபடவில்லை. யுத்தம் ஆயுத வியாபாரிகளையும் அரசியல் தரகரையும் மட்டும் வளர்க்கவில்லை. சாமானிய வியாபாரிகள் பலரையும் வளர்த்து இருக்கிறது. நான் யாரிடமும் களவு எடுக்கவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாடு இல்லாத பகுதிக்கு இனவாத அரசு காயப்பட்டவர்களுக்கு பஞ்சு அனுப்புவதில் கூட மனித நேயம் காட்டாத நிலையில் மாற்றுத் தீர்வாக இந்த கோட்டெக்ஸ் பஞ்சாக பயன்படுத்தும் செயல் இருந்த நிலையில் கட்டுப்பாடு இல்லாத பகுதியில் இருந்த வியாபாரி எனக்கும் உதவினார்.
..

அதிகளவு கொள்வனவு செய்து இது எல்லாம் என் விற்பனைத் தொழில்! அதை அசைபோட வைக்கின்றது சங்கவியின் கூற்று! சில வியாபார நிலையங்களில் பொதுவில் சொல்ல தயங்குவதால் சில கடைகளில் விஸ்கோத்து என்று குறிப்பால் உணர்த்துவார்கள். இது எல்லாம் என் கடந்தகாலம், என்ற ஜோசனையில் இருந்து விடுபட்ட தொடர்ந்தாள் சங்கவி.

இங்க வாங்கலாம் என்று பார்த்தால் இறங்கிய நேரத்தில் இருந்து ஒரே அம்பிளைகள். நான் மட்டும் தான் ஒருபெண். என்னோட வந்தவர்களின் பார்வையே ஒரு மாதிரி இருந்தது. பாங்ஹொக்கில் இருந்து இங்க வரை ஒரே தொடர் பயணம். தெரிஞ்சவங்கள் யாரும் இல்லை. 5 நாள் பயணம் என்று வநதேன். இங்கே மூன்று நாள் தொடர் தொடருந்துப் பயணம். டொலர் கூட மாத்தவில்லை. குமார் வாங்கித் தந்த சாப்பாட்டு மட்டும் தான். பஸ்சை விட்டு இறங்கவே இல்லை. எதிர் பாராமல் இங்கு கொண்டு வந்தார்கள். இங்கே வந்ததில் இருந்து 10 நாட்கள் வெளியே போகவிடவில்லை. பொலிஸ் திரிவார்கள் என்றும் பயணமுகவர்கள் காட்டிக்கொடுத்தால் இன்னும் காசு செலவாகும் என்றும் குமார் சொன்னவர்.



அறைக்கு வரும் துப்பரவு தொழிலாளியிடம் டொலர் கொடுத்து அதை (கோட்டெக்ஸ்) வாங்கியரச் சொன்னேன் அவள் ஒற்றை வாங்கியந்துவிட்டு டொலர் மாத்தவில்லை என்று காசையும் திருப்பித் தந்துவிட்டாள். பாவம் போல இருந்தது டொலரைக் கொடுத்து விட்டேன். காலையில் இன்னொன்று வாங்கியரச் சொல்லி அவள் இன்று வரவில்லை. அதுக்குள் குமார் வந்துவிட்டார். தங்கும் விடுதியில் இது எல்லாம் கிடையாது. கூட்டியந்த குமாரோடு தனியாக கதைக்க முடியவில்லை. அவர்பேசும் மொழி புரியவில்லை. மிகவும் கஸ்டமாக இருக்கு.

வழமையைவிட வயிறுற்றுவலி இன்று அதிகம். ஏன் தான் இந்த வெளிநாட்டுப் பயணமோ என்று சங்கவி மூச்சு விடாமல் பேசியதும் இல்லாமல் விழியில் விழுந்த நீர்த்துளி மனதில் சஞ்சலம் தந்தது. எல்லாரும் எல்லையைத் தாண்ட வேண்டும் என்ற அவசரத்தில் ஓடும் நிலையில் யாரிடம் போய் மனித நேய உதவியைப் பற்றி பேசமுடியும்? சங்கவி நீங்க படிச்ச பெண்தானே? எல்லா அம்பிளைகளும் காமப்பிசாசுகள் என்ற நினைப்போ? வாறதில் எல்லாம் ஒரே நாட்டுக் காரங்கள் ஒருத்தனிடம் அண்ணா இல்லை தம்பி இந்த (கோட்டேஸ்) வாங்கித் தாங்கோ என்று காசு கொடுத்தால் வாங்கித் தராமலா போய்விடுவாங்க?
..

இந்த ஏரியாவில் எத்தனை பார்மசி பல்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. கூச்சம் என்று ஏன் தான் இப்படி உங்கள் தைரியத்தையும் இழந்து விடுகின்றீங்க ? இருங்கோ வாறன் சங்கவி!

 தொடரும்.....

14 October 2012

கிறுக்கலும் கீதமும்!

கனவுகளுடனும் கவிதைகளுடன்
கனப்பொழுதுகள் கடந்து
கண்கள் தேடுவது உன்னை.
காத்திருப்பின் காலமும்
கதைகள் பல சொன்ன நாட்களும்
கனவில் தீண்டுகின்றது காதலியே !
காலம் கடந்தாலும்
காத்திருப்பேன் நீ வரும்
காலம் என் வாழ்வில் மீண்டும்
கார்கால மழையாக அன்புமழை.



:::::::::
வேதனைகள் வெற்றிக்கு வழிகாட்டும்.
வேண்டாம் காதல் என்றால் பிரிவுகாட்டும்.
வெட்டிப்பயல் வெட்டி விடு உறவை,
வேசம் போடும் உறவுகள்
வேள்விக்கு கேட்பது?
வெளிநாட்டுக்காசு.
வெளியில் சொன்னால்
வேதம் ஓதுகின்றேனாம்!
வெள்ளையன் நாட்டில் நான் படும்
வேதனைகள் வெளியில் தெரியாது
வெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்
வேசம் போடத் தெரியவில்லை
வேர்கள் தேடி ஓடுவது விட
வெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு!

தேடலில் ஓடும் போது தொலைவது
தேடிவரும் தூக்கம்
தேடலின் பின் தேடினாலும் வருவதில்லை
தேடும் தூக்கம் முரண்பாடு
தேடலிலா இல்லை தூக்கத்திலா?

உன்னை நினைத்து உருகியகாலம்
உன் நெஞ்சில் யாரோ?
உனக்காக எழுதி கவிதையில்
உன் பெயர் இல்லை.
உருகும் இன்றைய காலத்தில்
உன்னை மறந்தவன்.
உன்னைக்காணும் போதெல்லாம்
உனக்குத் தெரியாமல்
உன் விழியின் வழியில் விலகிப் போகின்றான்.
உன்னை நேசித்த வலியினை மறக்க.

உருகிப் போகாமல் உணர்வுகள் தொலைத்து.
உருகுவதும் காதலினால் தான்.