24 January 2021

ஊர் சிரிப்பு!

 ஊர்கூட்டி உறவுகளுடன்

உணவுப்  பந்தலில்

உன்கரம்   பற்றக்   கணாக்கண்டேன்!

உமையாள் பேர்த்தியே!

ஊர்  எல்லாம்

உருமாறிய  கொர்னாவில்,

உன்னையும்  பிரிந்து,

உத்தரவு  மீறாத

உண்மை  ஆட்சி பீடத்தில்\

ஊர் எல்லையில் கொத்தணிச்சாலை!

உழிக்கலக்கமிடும்,

உரைகளும்,  தினமும்

உளறுகின்ற   ஊடக   சந்திப்பும்போல

உன்னையும்  !காதலியைப் பிரிந்து,

உரைக்கின்ற  மருத்துவ அறிக்கைகள்,

உள்நாட்டு  சுகாதார  மந்திரிக்கும்,





உன்விதியும்,என்விதியும்

ஊடல்கொண்ட  கேதுகளினால்,

உயிர்ப்பெறாத   கலியாணமாம்!

ஊரவர்கள்   சிரிப்பொலி

உலகசேவையில்   கேட்கின்றேன்.




உலர்பாணம்   குடித்தவர்களுக்கும்

உனக்கும்   பிடிக்காத   

ஊதாரி முன்னால் மாப்பிள்ளைக்கும்

உருமாறிய  புதிய  கொர்னாவில்

 உயிருக்கு   உலைவைக்காதே  என்று

உத்தமன்   படம்போல   வாழ்த்துகிறேன்!




உந்தன்   திருமண  கோலத்திலும்

உரைமொழி  பெயர்ப்பாளன்   பின்னே

ஊர்க்குருவி   போல   இவனும்

உலர்ந்த   காதலுடன்!





யாவும்கற்பனை)

18 January 2021

வாழ்த்துவோமே!)))

 வந்தேறுதேசத்தில்

வசந்த  வாசல்   போல

வாட்டி   எடுத்தரொட்டி   போல

வகிபாக  காதல்   வசந்தமே!

வழிமாறிய   ரயில்த்தடங்கள்   போல

வாழ்த்துகள்    !!!இனிய

வாழ்க்கை  துணையுடன்

வாழ்வாங்கு   வடக்கு   அரசியல்போல

வாஞ்சனையின்றி

வலுவுடன்   வளரட்டும்   உன் 

வாழ்க்கை!     நீ

வழிமாறிப்போனாலும்    என் 

வாசலில்    ஒரு வெண்ணிலா     போல

வந்தரிசி   போட்டு   வாழ்த்த

வழிகள்    எங்கும்    கொர்னா

வாசல்   மூடிவஞ்சிக்கின்றது

வணக்கத்துக்குரிய   காதலியே!

வாழைமரம்  போல

வருடங்கள்    ஓடி

வழிமேல்    காத்திருந்து

வராத    அரசியல்தீர்வு   போலவே

வங்குரோத்து    வழிப்போக்கன்    இவனும்

வசதியில்லாத    வாரிசு!




வடநாட்டுப்பட்டம் 

வைத்திய   தொழிலில்

வாங்காத   ஊதாரி!

வட்டார   அரசியல்    தாண்டி

வளரும்    நடிகைபோல

வளவளப்புடன்     உன்னை

வசியம்    செய்தவன்     முகம்காண

வாய்ப்புத்    தாராத 

வடிவேலனையும்!    நிந்திக்கின்றேன்!!

வளரும்   சிறுதொழில்   முகவர்போர்வையில்

வட்டமேசையில்!

வந்துபாட!



வானொலிகளுக்கும் ,

வாயில்   முகக்கவசம்    போல

வாயில்ச்   சோதனைகள்

வடக்கு    இலண்டலில்

வசதியாணவர்கள்    கூட

வரவில்லையாம்!     கேட்டியோசங்கதி

வைப்பரில் ,

வருகின்றது,   கொசுவலைப்புதினங்கள்,

வாட்சாப்பகிர்வு    என்று,

விரும்புகின்றேன்    நாயகிக்கும்

வியாபாரி    மகனுக்கும்

விருப்பத்துடன்    மணநிகழ்வு!




வாழ்த்துவோர்    பட்டியலில்

வரதராஜப்   பெருமாளின்

வடமாகாணச்சபை    உறுப்பினரும்

வடிவாய்ச்சிரிப்பது    போல!

வதிரி   அச்சக   அழைப்பிதழ்  பார்த்து

வருகிற   மாகணச்சபைத்   தேர்தல்களும்

வசதிபடைத்   தோர்களுக்கு

வழிகாட்ட   பிராத்திக்கின்றேன்!

வந்துபோன    ஜெய்சங்கர்போல

வழிப்போக்கன்    இவனும்

வாழ்க   வளமுடன்

வாழ்வில்   16 உம்    பெற்று

வந்தேறு   தேசத்தில்

வளரட்டும்    உன்    சந்ததிகள்!


 

(யாவும்கற்பனை)