31 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-60

உலாக்களில் பல விழாக்கண்டேன் உறங்கிய மனதுக்குள் நீ இருந்தாய் என் நிலவாக மறந்து போனாய் பின் பறந்து போனாய் !

இப்படி அவன் மனதில் நினைத்துவிட்டு!

வா சுகி போவம் .

"இருடா .உனக்கு எப்பவும் அவசரம் .அம்மாட்டக் காசு வாங்கியாரன் "

ஏன் ? அவிச்ச கடலை வாங்கவோ .வேண்டாம் .அதுதான் வீட்டில் மாமி செய்வாவே .

"இல்ல ராகுல் அது கச்சான் வாங்க இன்று அப்பாவிடம் காசு வேண்டினால் உனக்கு படம் பார்க்க பிறகு தரலாம் தானே"

" மெதுவாக பேசு ஓட்டவாய் "

அவள் அப்போதும் ஒரு குழந்தையைப்போல தான் !
குமரி என்றாலும் ஏனோ அவள் தான் அவனின் உண்மையான நேசிப்புக்கு இருக்கும் ஒருந்தியாக அங்கே இருந்தால்!

ராகுல் படம் பார்க்க தியேட்டரில் இருக்க அவளின் உண்டியல் காசுதான் டிக்கட் வழியாக வெளியே போகும்.

கடன் வேண்டும் போதெல்லாம் அவளுக்கு பள்ளிக்கூடம் புத்தகப்பை தூக்க வேண்டும் . அவளுக்கு கைவீசி வரணும் என்ற ஆசை.

அதையும் விட பிறந்த நாளில் இருந்து அவள் பாரம் ஏதும் சுமக்கக்கூடாது என்று எல்லாரும் அக்கறையோடு இருப்பது அவள் ஒருத்திக்குத் தான் .

எல்லாரும் அந்தளவு மனமும் குணமும் அவளுக்கு .மென்மையான மச்சாள் சுகி!

காசு வேண்டும் போது ராகுல் சொல்லுவான் .

"உன் பெரியப்பாவிடம் சீதனம் வாங்கி உனக்குத் தான் தருவேன் சரியா "

"அப்ப நீ உழைக்க மாட்டியோ?

யார் சொன்னது இல்லை என்று!

உங்க அப்பா சுருட்டுக்கடையில் கல்லாப்பெட்டியில் குந்தணும் என்று அடம்பிடிக்கின்றார் .

இதோ சின்ன மச்சாள் நித்திரை என்று அடம்பிடிக்கின்றாள் .

நீ படம் பார்த்துக் கெட்டுப்போறன் என்று ஒருபக்கம், கடையில் உங்கப்பா புலம்பல்!

யுத்தம் என்று சொல்லி என்ற ஐயா என்னை இங்க அனுப்பினதும்.

நான் படும் பாடும் உன்னைத் தவிர யாருக்குத் தெரியும். .

"சரிசரி மூஞ்சையை தொங்கப் போடாத "ராகுல்.

முதலில் பெரஹரா பார்க்கணும்


மிச்சம் எல்லாம் நாளை மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது பேசுவோம் . இல்லை ஆற்றில் குளிக்கும் போதும் பேசலாம்.குண்டா.


இனி பள்ளிக்கூடம் நான் கூட்டி வரமாட்டன் .

இந்தா வாரா உன்ற அக்காளிடம் புத்தகப்பையை கொடுத்துவிடு.

ஏன் ?துரைக்கு யாரவது லைன் போடுகினமோ பள்ளிக்கூடம் போகும் வழியில் .

இல்ல அந்தச் சீலா உங்க அப்பாவிடம் பந்தம் பிடிக்கின்றாள் .

நான் பசங்க கூடஅதிகம் பகிடி பண்ணுகின்றேன் என்று.

அந்த அக்காள் சொன்னாவோ ஓம் நேற்ற உன்ற அப்பா சொல்லித்திட்டியது எனக்கு "

"சுருட்டுக்குப் பாணி போடத் தெரியல போறவார பெட்டைகளுக்கு பகிடியா பண்ணுகின்றாய் கிரகம்."

அந்த கண்ணாடி அவள்தான் என்று நினைக்கின்றேன் .உங்க அக்காளின் புதுத் தோழி! அவாதானே.

ரெண்டு பேருக்கும் பாரன் காட்டுறன் பங்கஜம் பாட்டியின் பேரன் ஆர் என்று.

"உன்ற பாட்டி ஊரில். எங்க அப்பாவை இங்க ஒன்றும் செய்ய முடியாது சொல்லு சுகி உங்க சுருட்டுக்கடை வேலைக்காரனிடம் "

மாமியின் பெரியதங்கை மகள் இவளுக்கு அதிகம் நினைப்பு அவர் அப்பா செல்லன் மாமா கடையில் அவர் சொல்லும் வேலை எல்லாம் ராகுல் செய்வதால் .தங்க வீட்டிற்கு வந்து விடுவேனா உறவு கொண்டாடிக்கொண்டு என்று.

சுகி இவங்க அப்பாவும் நானும் உங்க அப்பாவிடம் சுருட்டுக்கடையில் ஒரே வேலைக்காரங்கள் தான் .

அவர் கல்லாப்பெட்டியில் இருக்கலாம் ஆனால் நான் எல்லாவேலையும் செய்வேன் வெள்ளை வேட்டியில் ஊத்தைபடக்கூடாது என்று இருக்கும் ஆள் இல்லை .


சரிசரி உன்ற தாத்தா பெருமையை சொல்ல வேண்டாம் ."

வா இந்த வீதியால் போகும் பெரஹரா பார்ப்போம்.

வீதியில் புத்தன் உலா வர விழிகளுக்கு வர்ணஜாலம் காட்டும் விளக்கு வெளிச்சம் பலர் போகும் வழிகளில் அதிசயமாக இந்த உலாவைப் பார்க்கும் சிலருக்கு .

தங்கள் இணைக்குயில்கள் வந்தார்களா ,என்றே எட்டிப்பார்ப்பதும் காத்திருப்பதாக இருக்கும் .

கிராமத்தில் இருந்து பலர் வந்து இருப்பார்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களுடன் .

இதில் ஊரில் பேசமுடியாத பலருக்கு இந்த பெரஹரதான் வழிகொடுக்கும் .

சில சகோதரமொழியில் இருப்போருக்கும் தாய்மொழிபேசுவோருக்கும் ஜொல்லு விடும் வீதி இது . சிலர் சில்மிச வேட்டைக்கு இருட்டு அடிவிழும் வீதியும் இதுவாகத்தான் இருக்கும்.

அந்தளவுக்கு இங்கே அதிகமானவர்கள் வீதியுலாவை கண்டு ரசிப்பார்கள்!

வீதியில் வரும் போது தான் தென்னக்கோன் தாத்தா வந்தார்.

அவர் பேர்த்தி அனோமா போனபின் செல்லன் மாமாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால் வீதியில் கண்டால் ராகுலோடு பேசுவார் .

ஆனால் அவரும் கல்கமுவை வாசியாக விட்டார் .இந்த விழாவில் அவரின் சின்னமகளின் சின்னப் பேர்த்தி குசுமா கண்டியன் நடனம் ஆடிவருவாள் .

அவளுக்கும் அனோமாவிற்கும் ஒரு வயது இளமை.

செல்வம் மாமா போனபின் அனோமாவிற்கு பதுளையில் இருந்து கடிதம் போடும் ஒரே ஒரு தோழி அவள்தான் .

இவளைப்பார்க்கும் போதெல்லாம் ராகுலுக்கு இப்போது அனோமா எப்படி எல்லாம் வளர்ந்து இருப்பாள் என்று நினைக்க மட்டுமே முடியும் !

வீட்டில் யாரும் சேர்க்காத உறவாகி அவர்களும் வெளிநாடு போனபின் மறந்த உறவாகிப்போனவர்கள் நினைப்பை ஏதாவது ஒரு சந்திப்புத்தானே சிந்திக்க வைக்குது .

அப்போது தான் தென்னக்கோன் தாத்தா சொன்னார்.

இதில் சுகியைத் தவிர யாருக்கும் தென்னக்கோன் தாத்தாவின் கதையும் தெரியாது, மொழியும் புரியாது.

தென்னக்கோன் தாத்தா ராகுலோடு எப்போதும் சகோதரமொழியில் தான் கதைப்பார் .

காரணம் நல்லா மொழிகற்கின்றேனா என்று கண்டு பிடிக்கத்தான் .அவர் தான் அன்று அந்த விசயத்தைச் சொன்னார்! பெரஹராவுக்கு சந்தோஸத்தோடு போனவன் சிந்திக்க வேண்டியவன் ஆகினான் ராகுல்!

  தொடரும்..........

 ///// பகிடி- ஜாலி
கச்சான்...-வேர்க்கடலை
லைன்.. நூல்விடுதல்/நோக்குதல்!
சீதனம்- வரதட்சனை!
கல்கமுவ  இலங்கையில் ஒரு நகரம் .
துரை-மரியாதை நிமித்தம் தோட்டத்தொழிலாளிகள் பேசுவது /சார் போல

மலையகத்தில் முகம் தொலைந்தவன் -59

பெளர்ணமியில் பார்க்க வந்தோம் லோகேஸ்வர நல்ல புண்ணியமே செய்துவிட்டோம் நகுலேஸ்வர .

என்பதைப்போல முத்தியங்கணை ரஜமஹா விகாரையில் இருந்து .

புத்தனின் தந்த தாதுவைத் தாங்கிக்கொண்டு வீதியுலா வரும் விழாதான் பெளர்ணமி விழா .வெசாக் பண்டிகை என்பார்கள் .

பெளர்ணமியில் இந்த பதுளையிலும் எசல பெரஹரா ஆண்டாண்டு காலமாக புத்தன் வருவார் வீதி உலா .

பார்க்கும் விழிகள் மொழிகடந்து ,இனம் கடந்து, கலைகள் முழங்கும் காட்சியினை பலர் புகைப்படங்களாக சிறைப்பிடிப்பார்கள்


.தேவநம்பிய திஸ்ஸன்17 ஆம் நூற்றாண்டில் கட்டிய புரதான இந்த முத்தியங்கனை புத்த விகாரை.

பலரின் அறிவுக்கணையும் ,சிலரின் இனவாத நாட்டுப்பற்றுக்கும் சில நண்பர்கள் தர்மஉபதேசம் கேட்கும் கல்விக்கூடமாகவும் ,சில கலைகளை மேடையேற்றும் .!கலைக்கூடமாகவும் பாரம்பரிய கலையைப் இன்றும் பேணும் ஒரு இடமாக இந்த விகாரை இருக்கின்றது .


நம்ம பாராம்பரிய கலைகள் எல்லாம் முகாரி வாசிக்க .தொலைக்காட்சியில் வரும் தொடருக்கும் சின்னத்திரையும் ,இணையமும் இன்னும் கலைகள் பற்றி பாராமுகத்துடன் பதிவு செய்ய மறுத்தாலும் .

அவர்கள் (சிங்களவர்)தங்கள் பாராம்பரிய நடனங்களை இன்னும் பரனில் ஏற்றிவைக்கவில்லை .

பலரும் பார்க்க ,ரசிக்க ,படிக்க என்று பல கலைகளையும் ஆடிவருவார்கள் .

முதலில் யானையில் புத்தனின் தந்த தாது வைத்துவிட்டார்கள் .

இனி வீதி உலாவுக்கு முதல் மரியாதையாக கயிற்றில் சுற்றி வெடியாக முழங்குவார்கள் .அதாவது கசயடியைப்போல இருக்கும் இதன் கயிறு 5 பேர் அதிக தூரத்தை தேர்ந்து எடுத்து சுத்தி சுத்தி சுழ்ற்றும் போது .

எங்க வீட்டுப்பிள்ளையில் எம்.ஜி.ஆர் நம்பியாருக்கு அடிக்கும் கயிறு போல இருக்கும்.

அதன் பின்னே கொடிகள் வரும் கூடவே தீப்பந்தம் வரும். இது தூக்கி வருவோர் விகாரையில் தோட்ட வேலை செய்யும் சாதாரண அம்புகாமியும் குணதாசவும் .

அவர்கள் நடந்து செல்ல பின்நாள் பாரம்பரிய கண்டி இசைமேளம் வரும் ,அதன் பின்னே வரும் ஆடல்களைகள் அடுக்கடுக்காக கண்டிய நடனம், சுழகு நடனம்,செம்பு நடனம் ,காவடி ,இடையில் வரும் வாயில் மண்னெண்ணை ஊத்தி ஊதிக்காட்டும் நெருப்புச் சுவாலை!

இப்படியே ஒவ்வொன்றாக இந்த விழா கீழ்வீதியால் பஸ்தரிப்பு நிலையம் சென்று அங்கிருந்து பசார் வீதியூடாக இந்த வீதிக்கு வரும் நேரம் நல்லிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும் .

பலரும் விரும்பிப்பார்க்கும் விழா .

செல்லன் மாமா நீண்டகாலம் இங்கே இருப்பதால் .இது எல்லாம் பார்த்துச் சலித்த ஒன்று என்பதால் யார் போறீங்களோ போய்விட்டு வாங்கோ என்று அன்று மட்டும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போக்குவரத்து தாண்டிக்குளம் பாதை போல .எல்லாரும் நான் வாரன் நீயும் வாரியோ என்றால் ஒவ்வொரு மச்சாளும் நித்திரை வருகின்றது .

நீ போ என்பதும் சின்னவள் சுகி ராகுலுடன் வீதிக்கு இறங்கிவிட்டாள் என்றால் இவர்களும் தங்கள் பிடிவாதம் தளர்த்தி விட்டு கொஞ்சம் இருடா பெரியவளும் வாரால் கவனமாக போட்டு வாங்கோ என்பா இன்னொரு மாமி .

அருகில் வாடகை வீடு எடுத்து இருந்தாலும் இந்த திருவிழாவின் நேரத்தில் செல்லன் மாமா வீட்டில்தான் எல்லாருக்கும் சாப்பாடு .

ஆனாலும் சரோஜா மாமி போல மற்ற எந்த தந்தைவழி மாமிமார்களும் மச்சாள்மார்களும் நல்லா சமைக்க மாட்டார்கள் .

அதனால் அங்கே போனால் கோப்பியோடு வந்துவிடுவான் ராகுல் .

அதுவும் பெரிய மாமியிடம் மூன்று மச்சாள்கள் .

மூத்தவள் ராகுலுக்கு அதிகம் மூப்பு என்பதால் அவள் வாடா போடா என்று அழைக்கும் உரிமை இருக்கும் .

நல்லா பாட்டுக்கேட்கும் பழக்கம் இருக்கு நல்லா கதைப்புத்தகம் படிப்பா .

அவாக்கு இடையில் இருப்பவள் தான் கோப்பி ஊத்தித் தருவாள் .

அவள் ஊத்திவந்து மேசையில் வைக்கும் போதே !

என்ன மச்சான் நேற்றுகோப்பி குடிக்க வில்லை.

உனக்கு சூடாக ஊத்தத் தெரியவில்லை .

! நான் எவ்வளவு சூடாகக்குடிப்பன் என்று இன்னும் தெரியல இவளுக்கு.

எல்லாம் பழக்கணும் ராகுல் நான் என்ப செய்ய மூத்தமச்சாள் திட்டுவதில் கொஞ்சம் கோபம் வரும் அவளுக்கு .

இந்த கோபம் குசினியில் பேணியில் போட்டுக் காட்டுவாள் .

அது இனி கோப்பி வேணும் என்றாள் வந்தியா .குடிச்சியா என்று இருக்கணும் .

அக்காள் குசினிக்கு வரமாட்டா இந்த வீட்டில் நான் தான் சமையல்! மகாராணி .

என்பதாக இருக்கும் இது எல்லாம் பார்த்துக்கொண்டு இன்னொரு மச்சாள் சாதுவாக இருப்பாள் அடுத்த அறையில்.

இவர்கள் எல்லாம் வருவது இந்த வெசாக் பண்டிகை பார்க்க ராகுலோடுதான் !


குறிப்பு    பெரஹராவின் இன்னும் சில புகைப்படங்களை விரும்பியோர் விழிக்கு!http://nesan-kalaisiva-nesan.blogspot.fr/

30 May 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் -58

அயிரம் நாமம் கொண்ட எங்கள் ஆத்தா அங்காலப்பரமேஸ்வரி அபிராமிப்பட்டரின் அந்தாதி பாடலில் அழகு மூக்குத்தி வடிவான தாயின் வீதி உலாவோடு மீண்டும் இணைகின்றோம் என்று முத்தையா ஜெகன் மோகன் ஒலி வாங்கியை வானொலியோடு இணைக்கும் போது அதை நாதஸ்வரம் கொண்டு பீப்பீ.. என வாசிப்பார் செல்லையா!
செல்லையா வடக்கில் அளவெட்டியில் குருகுலமாக இருந்து நாதஸ்வரம் வாசிக்க கற்றவர். இந்தியன் ஆமிக்காலத்தில் பின் தான் அங்கிருந்து வந்து சொந்த ஊரில் தோட்ட வேலைகள் செய்தாலும் தன் கலையார்வத்தை சமயங்களின் போது மறக்காமல் வாசிப்பார். அவருக்குத் தெரியும் இந்த வீதியில் எந்த சுருட்டுக்கடை முதலாளிக்கு எந்த பக்திப்பாட்டு வாசித்தால் வெற்றிலையில் வைத்து அன்பளிப்புத் தருவார்கள் என்று.. அந்த அன்பளிப்பு அடுத்த நாள் அவர்கள் பிள்ளைகளுக்கு புதிய புதிய ஆடையாக போய்ச் சேரும். அவர் நல்லா வாசிக்க வேண்டும் என்றால் அவருக்கு உரு ஏற்ற வேண்டும்! உரு ஏற்றுவது என்றால்...? அது உனக்கு புரியாது சுகி எனக்குப் புரியும்! நீ அக்காளுக்கு முன் ஜொள்ளு வழியிறாய் என்று, இரு வீட்டில் பத்திவைக்கின்றேன் என்று சொல்ல,  போடி உங்க அக்காளும் நீயும் நான் இங்கு வேற ஆளைப்பார்க்கின்றேன்!

ஓ அப்படி வேற நினைப்பு இருக்கா? இரு பங்கஜம் பாட்டிக்கு கடிதம் போடுறன் உன்ர பேரன் பதுளையில் கொழுந்து எடுக்கப்போறாராம் என்று..

 நீயே  பாட்டியிடம் போட்டுக்கொடுத்துவிடுவாய்போல...! அதைவிடு சுகி உரு என்று சொன்னது செல்லையா அண்ணா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார், அவருக்கு எங்க மாமாவுக்கு பத்திப்பாட்டுப் பிடிக்கும் என்பதால் சின்னஞ்சிறு பெண்போலவும் ,மாரியாத்தாவும் தான் வாசிப்பார்! நல்ல புதுச் சினிமாப்பாட்டு கேட்கணும் என்றால் அவருக்கு கொக்ககோலா கொடுத்தால் நல்லா சினிமாப்பாட்டு வாசிப்பார்! பலர் அது கொக்கக் கோலா என்று தான் பார்ப்பார்கள்! நானும் மூக்கையா அண்ணாவும் சேர்ந்து ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் "மெண்டிஸ்சாராயம்" அதில் கலந்து விட்டால் அவர் வாசிக்க நாங்கள் ஆட நல்ல கூத்தாக இருக்கும்! நீ வரவர மோசமாகிவிட்டாய் குண்டா படிக்கிறீயோ இல்லையோ இந்த வேலை எல்லாம் நல்லாச் செய்யிறாய்!

உங்க அப்பாதானே எல்லாம் பழக்கின்றார்! சுருட்டுக்கடை வியாபாரம் மட்டும் தான் வாழ்க்கை என்று... எனக்கு இது எல்லாம் பிடிக்காது பாரு, பரீட்சைமுடிய ஓடப்போறன்!
அது பிறகு பார்ப்பம் முதலில் தேங்காய் உடைக்கப் போறன், கொஞ்சம் தள்ளி நில்லு! வீதியுலா வரும் அம்மனுக்கு கும்பம் வைத்து பலர் பல படையல்கள் வைப்பார்கள்! கடலையும் அவலும் வாழைப்பழமும் மிதமிஞ்சிய அளவு போறவாற பக்தர்களுக்கு இந்த வீதியில் தாராளமாக கொடுப்பார்கள் சுருட்டுக்கடை முதலாளிமார்கள்! மஞ்சள் பூசிய தேங்காய் குவியலாக இருக்கும்; அதில் தான் வீரம் காட்டுவார்கள் இளையவர்கள்!


வருடத்துக்கு ஒரு முறை கட்டும் வெள்ளை வேட்டி சலவைக்காரன் திட்டித் திட்டி வெள்ளாவி வைக்க காரணம் தேங்காய் உடைத்தானா இல்லைமஞ்சள்த்தண்ணி ஊத்தின 16 வயதினிலே பாரதிராஜா படபாடலோ பாடிணவங்க போல மஞ்சளின் குளிர்த்தவனோ முதலாளி என்று அவர் தன் பங்குக்கு ராகுலுக்கு லாடம் கட்டினாலும், அந்த நேரம் தேங்காய் அடிக்கும் போது மாமாவில் நேற்று படம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்த்து உடைக்கும் சிதறு தேங்காய் அதுதான்! பலர் கூடி அடிக்கும் போது வரும் சந்தோஸம் வருடத்துக்கு ஒரு முறைதானே இதே ஊரில் என்றால் எத்தனை குவியல் தேங்காய் வைப்போம்! தேரடியில் உடைக்க என்ன செய்ய ஆத்தா இங்கவர வச்சிட்டா! அடுத்த முறை சரி ஊரில் பங்கஜம் பாட்டியோட சேர்ந்து உடைக்கணும் என்று வேண்டிக்கொண்டான் அம்மனிடம். தேங்காய் உடைத்தது போதும் ராகுல் இதை எல்லாருக்கும் கொடு எங்கிருந்து பார்க்கின்றார் செல்லன் மாமா என்று நிதானிக்காதவன் அவர் குரல் கேட்டதும் பெட்டிப்பாம்பு ஆகிவிடுவான்!. எல்லா அலுவலும் முடியும் போது தான் பெரியமச்சாள் உள்ளே போய்விட்டாள் என்ற உண்மை புரிந்து கொண்டான்! கோலாவில் ஒரு கூத்துக்கு அவன் செல்லையா அண்ணாவிடம் கொடுத்தான்! அவர் வாசிப்போடு தேர் இந்த வீதியைக் கடந்து செல்லவும் தேங்காய் பொறுக்குவார்கள் நகரசபை தொழிலாலிகள் ஆடி ஆடி வந்த அம்மன் இந்த வீதிகடந்து தன் கோயில் பீடம் செல்லும் பசறை வீதியூடாக....! 

அடுத்த விழா! பெளர்னமியில் நிலவு வெளிவர அந்த நிலவையும் மீறி இந்த வீதி ஜொலிக்கும்! அதுக்குள் வீட்டில் போய்ச் சாப்பிட்டு வந்தார்கள் எல்லாரும்! மாமியும் அவசரமாக புட்டு அவித்தா சாப்பாட்டுக்கு இரவு சாப்பாடு முடித்தபின் அடுத்த விழா சொர்க்க விழா!

தொடரும்...

29 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---57

கலைகள் 64  இருந்தாலும் ஆடற்கலை காண்போரை சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டும் .

நவரசங்கள் .அதுவும் !

நம் மலையகத்தில் இந்த கலைகள் அதிகம் ஆடும் இடமாக இருப்பது எல்லாம் ஆலய தேர் உலாவில் தான் .


அப்படி ஆடும்போது அவர்கள் மனதிற்கு இந்தக்கலைக்கு இன்னும் உயிர் இருக்கு  ரசிக்க பல விழிகள் உண்டு என்று நினைத்து ஆடும் ஆட்டம் தான் பொய்க்கால் குதிரையாட்டம் .!


இரண்டு குதிரை பூட்டினது போல இவர்கள் தோழில் இரு துணியைக் கட்டி  அதிகமான பாரத்தோடு அந்த இந்திரன் வாறான் புரவியில் !

இந்த சந்திரன் வாறான் குதிரையில் போவோமா ?

நாம் இருவர் போருக்கு!
 தோட்டம்  பாடும் பரணி கேளு  ?

என்று சொல்லம் வந்தோம் !ஐயா வீதிக்கு !மறந்து விட்டு என்ன பேச்சு ?

மாரியம் தேரிலே ஆட்டம் பார்க்கும் ரசிகரே அடித்திடுவீர் விசிலையே?

 என்ற போதே அவர்களை பொய்க்கால் குதிரை ஆட்டம் !

ஆட்டக்கூட்டியந்த அப்பையும் சேர்ந்தடிப்பார் விசில் !

 குதியை பார்க்காதவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் பார்க்க   ஓடி வருவார்கள்.

 எப்படித்தான் இந்த குதிரைபோல

ம் இவர்கள் முன்னுக்கும் ,பின்னூக்கும் தூக்கி ஆடுகின்றன் !

ஆட்டம் கற்றார்களோ ?என்று என்ன வைக்கும் முகத்துக்கு நல்ல வண்ணக்ககலர் பூச்சுப் பூசி அவர்கள் உண்மை முகம் தெரியாது குதிரை பச்சைக்கலரில் துணி செய்து பார்ப்போரை நிஜம் தானா அவர்கள் ஆட்டம் என்று எண்ண வைக்கும் !

ஒவ்வொரு கடைக்கும் முன்னும் இருக்கும் ஆட்கள் எல்லாம் பொய்க்கால் குதிரையோடு சேர்ந்தாடி  ஒரு புகைப்படம் எடுத்து வைக்க ஆட்களைத் தேடினால் !

புகைப்படம் எடுக்கும் கலைஞர் அம்மனை
மட்டும் அடுத்த!

நாளிழக்கும் தன் திறமையைக்காட்டவும் பல வண்ணங்களில் படம் எடுப்பார் !

இவரை அழைத்துவர சுருட்டுக்கடையின் பெயரைச் சொன்னால்  தான் போற போக்கில் கொஞ்சம் கைக்கு காசு கிடைக்கும் என்று குழுவாக புகைப்படம் எடுப்பார் !

என்ன எடுத்தும் அவர்  படம் அடுத்த வருடம் தான் வரும் கைகளுக்கு .அப்போது!


பொய்க்கால் குதிரையாடி வர அடுத்து வரும் ஆட்டம் ஒரு  விசித்திரம் இங்கே கோயில் விழாவுக்கு போனால் சாமி கும்மிட்டமா !


சந்தோஸமா கடலை வாங்கி சாப்பிட்டு வருவதுடன் முடிந்துவிடும் ஊரில் இருந்து வந்தவருக்கு !

இன்னும் சாமியே பார்க்கவில்லை என்று ஏங்கும் கண்களுக்கு என்ன போவோமோ வீட்டை?

 என்று மாமி இருப்புக்கொள்ளாமல் மறுபக்கத்தில் இருந்து கூப்பிடுவது கேட்கும் .


என்றாலும் கொஞ்சம் இருங்கோ மாமி !

இந்தா வந்திடும்  என்று ராகுல் சொல்லவது.

 என்னவோ பொய்தான் .ஆண்டுக்கொருதரம் இந்த வீதியில் இப்படி அம்மன் உலாவரும் போதுதான் பலர் ஊரில் இல்லாத ஆட்டத்தை இங்கு போடுவது !


சுருட்டுக்கடையில் இருக்கும் ஊர் பொடியங்கள் எல்லாம் எங்கே எங்கே என்று வழிமீது விழிவைத்துக் காத்திருக்கும் ஆட்டம் தான் மயில் ஆட்டம்!


 தோகை மயில் போல விதம் விதமாக சோடித்த ஆட்கள் எல்லாம் குயில்கள் மயில்லாட்டம் போடும் அதில் ஒரு ஆண்மயில் மட்டும் அங்கும் இங்கும் பார்க்கும் !


யாரவது மயில் ஆடும் குயிலுக்கு கூண்டில் அடைக்கும் வழிபோல ஏதாவது எழுதிக்கொடுக்கின்றாங்களா என்ற நோட்டத்தோடு நடுவில் வந்து ஆடிக்கொண்டிருக்கும் !


 இந்தக் காட்சியை வர்ணிக்க எத்தனை அறிவிப்பாளர்கள் வந்தாலும் முடியாது !


அந்தளவு தோல் வாத்தியமான பாண்ட வாசிக்கும் !.

ஒலி அதிகம் புதிய சினிமாப்பாடல்களை இசைப்பார்கள்.!

என்ன சுகி நீ இவையோட இதில் நில்லு .

நம்ம பசங்க வந்திட்டாங்க!

 ஒரு ஐஞ்சு நிமிசத்தில் வாரன் .

"நீ திருந்தமாட்டாய் இரு அப்பாட்ட சொல்லுறன் "


இன்று அவர் ஒன்றும் சொல்லமாட்டர் !


சொன்னி என்றால் குட்டு விழும் .


நான் சொல்லாட்டியும் பெரியக்கா சொல்லுவா ?!

 அவாக்கும் நினைப்புத்தான் !

நான் எதோ அவட அழகில் .மயங்கிவிடுவன் என்று  !

அனோமாட அழகைவிட இவ பெரிய வடிவோ?

 உனக்கு அடி நிச்சயம் குண்டா.

 அவள் தான் போயிட்டாலே?
 நீ நினைப்பில் இரு உதுக்குத்தான் சொல்லுறனான் !

இந்த புக்கக் எல்லாம் வாசிக்காத என்று .


போடி !

ஒரு ஐஞ்சு நிமிடசம் என்ற சொல்லம் !

போகும் போது.

   நெட்டோ சோடா உனக்கு மட்டும் வாங்கித்தாரன் சுகி!

இதில்லே நில்லுங்கோ என்று வேட்டியை மடித்துக்கட்டினால் .

அங்கே நம்ம ஊர் பொடியங்களும் ,கடையில் நிற்கும் இளசுகளும் மயில் ஆட்டத்தில் போடும் குத்தாட்டம் ஒரு பிரபல்யம்  .

மொழிமறந்து மதம்  கடந்து ஆடுவோரில் எல்லாம் இளவட்டம்கள் மடிச்சுக்கட்டின வேட்டி!

 சேட்டுப்போட்ட டவுசர் மடித்த பண்டார சேர்ந்துவரும் ரவி .

என எல்லாரும் மயில் ஆடும் குயிலுக்கு அங்க அசைவுக்கு ஏற்ப அருகில் போய் ஆடும் போது !

பார்க்க வேண்டும் மச்சாளின் அக்கினிப்பார்வைகளை .


எப்போதும் பெண்களுக்கு தங்களுடன் வந்தவர்கள்  வீதியில் ஆடினால்  பட்டாசைவிட வெடிப்பார்கள் வீட்டில் வந்து  .


வெடி என்ன அடி என்ன ஆட்டம் தானே முக்கியம் !

ஆடியவலி அடுத்த நாள் தெரியும் வைரவர் வாகனத்துக்கு இருக்கும் மரியாதை  வீட்டில் ராகுலுக்கு கிடைக்கும்.


 போய் இவளுகளுக்கு தேர்காட்டு என்றால் ரோட்டில் காவலிப்போல  !

ஆடுகின்றாய் என்று தொடங்கும்  அது கிடக்கட்டிம் அதற்கு காரணம் பெரியமச்சாள் !

சித்தப்பாவிடம் சிண்டு முடிந்தது தான் சொல்லிவிட்டால் சுகி ராகுலுக்கு ரகசியமாக!


ஆனால் முதல் நாள் நேரலையில் சீத்தாரம் சொல்லுவார்!

 முக்கிய வீதியில் இருந்து தேர் உலாவின் சிறப்பு நிகழ்ச்சியோடு இணைந்து இருக்கும் மலையக சேவை நேயர்களே !


மதிய செய்தி  அறிக்கைக்கு  நாம்  கலையகம் திரும்புகின்றோம் !

வணக்கம் !

வணக்கம் மயில்வாகனந்தம் சர்வாணந்தா!

  கேட்கின்றதா ?

ஆம்  சீத்தாராமன் .

 இந்த நேரடி நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரணை வளங்கும் பிரதான அனுசரனை ஆளார்கள் விளம்பரத்தையும்  எடுத்துவிட்டு!

  மதிய செய்தியின் பின் இணைந்து கொள்வோம்!!!!
தொடரும்!










//

28 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் --56

கோயில் திருவிழாக்களில் தான் மனம் குதூகலிக்கும் .

நாஸ்திகம் பேசுபவர்களும், ஆத்திகம் பேசுபவர்களும் ,ஆரவாரத்துடன் பார்க்கும் விழா இந்த அம்மனின் வீதி உலா .!

தீவில் இருந்து வந்த மச்சாள்மார்களுக்கும் ,மாமிமார்களுக்கும் சகோதரமொழி தெரியாது அப்போது .

அதனால் அவர்களை பின் தொடரும் வேலை ராகுலுக்கு செல்லன் மாமா சொல்லியது.

 இவர்களுக்கு முதலில் எங்கே வீதியின் பெயர் என்றே தெரியாது .ஊருக்குப் புதுசு .

.தீவில் தேர்திருவிழா என்றால் குடும்பங்கள் ஒன்று சேர்வது போல இருந்த  காலம் யுத்த நிலையாலும் ,பாதுகாப்பு பிரதேசம் என்றும் எங்கள் குலத்தெய்வம் சிறைப்பட்ட பின் .

அதே சாயலில் இருக்கும் அம்மனைக்கான மனதில் ஆனந்தம் வரும் .

பரம்பரையாக தேர்த்திருவிழா செய்தவர்கள் ,விடுபட்டாச்சு ,

வலிகள் தந்த நினைவுகளால் கோயில் போகாத நிலை இருந்த மனங்களுக்கு கொஞ்சம் மறுமலர்ச்சி கொடுத்த கோவில் தேர் வீதியில் வரும் நிலை.

 தீவில் தேர்கள் எல்லாம் உள்வீதி, வெளிவீதி மட்டும் வரும் எப்போதும் .

முதல் முறையாக மச்சாள்களுக்கும் மாமிமார்களுக்கும் சிதம்பர சக்கரம் பார்த்த உணர்வு .காளி அம்மன் வீதி உலா வரும் காட்சி!

 கோயில் இருப்பது நகரில் இருந்து அன்னளவாக 4 மைல் தொலைவில் .

உடரட்டை ரயிலைப்போல நடந்து சென்றால்  1 மணித்தியாலம் பிடிக்கும் ,யாழ்தேவியாக வவுனியாவில் இருந்து காங்கேஸன் துறை போகும் வேகத்தில் சென்றால் 35 நிமிடத்தில் ரொக்கில் போய் சேரலாம் .

ஆலயத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை அந்த அம்மனே அன்பர்ளுக்கு நகருக்கு வந்து தர்சனம் கொடுக்கும் காட்சி .அழகர் ஐயா ஆற்றில் இறங்க மதுரை வரும் அழகைப்போல இருக்கும்!

வீதி உலாவுக்கு அம்மன் ரொக்கிலில் இருந்து பசரைவீதியூடாக காம்ன்ஸ்தாண்டி விகாரக்கொடை வந்தால் .

முதலில் புத்தனின் வாசலில் இருக்கும் யானை மணியடித்து வணங்கி
நிற்கும் .யானைப்பாகன் மகோ பத்தினி தெய்யோ ! என்று பாதம் குனிந்து வணங்கி நிற்பான் .

அம்மன் மெதுவாக வருவா நல்ல படங்கள் சத்தம் இல்லாமல் தியேட்டருக்கு வருவதைப்போல .

அது நீண்டு வங்கி வீதி ,கீழ்வீதி ,ஊடாக நகருக்கு வந்து பஸ்தரிப்பு நிலையம் தாண்டி பாசார் வீதி ஊடாக வலம் வந்து !

அந்த வீதியில் வரும் போது தான் அமைதியாக வந்தவர்கள்.

 தேருலாவில் தங்கள் இன்னொரு முகத்தை  காட்டுவார்கள் .

மைக்டெஸ்ரின் ,வணக்கம் உறவுகளே !!

ரொக்கில் காளியம் தேர் ஊற்சவம் இப்போது இந்த வீதியில் இருந்து உலாவந்துகொண்டிருக்கின்றது ,

மலையகசேவையூடாக அம்மனின் பெருமைகளை,
" மலைகள் எங்கள் கலைமகள்  "
ரொக்கில் காளியம்மன் வீதியுலா சிறப்புக்களை சேர்ந்தளிக்க
என்னோடு சக அறிவிப்பாளர் சீத்தாரமனிடம் ஒலிவாங்கியை கையளிக்கின்றேன் !"

நன்றி முத்தையா ஜெகன் மோகன் என்று அவர் விடைபெறும் விடயத்தை மச்சாளுக்கு காட்டும் போது !

ராகுல் சொல்லுவான் .

இஞ்ச பார்த்தியோ நேரடி அஞ்சல் நடக்குது .

இவர்தான் சீத்தாராமன். அறிவிப்பாளர் , நாடக எழுத்தாளர் ,வானொலி நாடகம் செய்வார் .

முத்தையா ஜெகனின் பாடல்கள் வித்தியாசம் , அவரும் ஒரு கவிஞர் தெரியுமோ ?

"ஏன்டா நீ அப்ப இங்க படிக்கிறதே இல்லையா "

இப்படியே ஊர்சுத்தியே பழகப்போறீயோ ?

இரு சித்தப்பாவிடம் சொல்லிக்கொடுக்கின்றேன் .

நீ சொன்னால் பயமோ ?

இப்படியே விட்டுட்டு ஓடினால் உனக்கு வீட்டை போகத்தெரியுமோ ?

இடம் தெரியாதவிடங்களில் விட்டுவிட்டாள் மச்சாள்மார்கள் வாயை அடைக்கலாம் என்பதை தெரிந்த பின் தான் ராகுல் அவர்களுடன் வம்பளப்பது.

வா இங்க பார்த்தியோ.

 இது தான் கரகம் .

நம்ம மூக்கையா ஆடும் ஆட்டம் பாரு .

என்று மச்சாளுக்கு காட்டும் போது .

எங்க பார்க்க?

 இவ்வளவு கூட்டமாக இருக்கு

."கூட்டம் மூக்கையா ஆட்டம் பார்க்க இல்லை ."

"முத்தழகு தட்டு எடுக்கும் போது கரகத்தின் சிறப்பைப் பார்க்கும் சிலபார்வைகள்

"சில்லறையாக அவளின் ஆட்டத்திற்கு சுருதி மீட்டும் ,

இலங்கையிலும் கரகம் ஆடும்  கலைஞர்கள் .நாவலப்பிட்டி ,ஹாட்டன் பதுளையில் மடுல்சீமைப்பக்கம் இருக்கின்றார்கள் .

இவர்களுக்கு ஊக்கிவிப்பு இல்லாத நிலையில் தான் .

இந்த கரகாட்டம்   ஆடும் கலைஞர்கள் எல்லாம் இன்று அரபுலக்கதில் வேறு தொழில்லில் இருக்கும் வேதனையை என்ன சொல்வது ?

 தாய் ஏற்றிவிட்ட பூங்கரகத்தை ஆடும் முத்தழகு .

குலமகள் அவளை விலைமகளாக பார்க்கும் சில கூட்டம் இந்த வீதி உலாவில் !

ஆடவந்த பின் அம்பலத்தில் ஆடினாலும் ,அந்த வீதியில் ஆடினாலும், ஆட்டக்காரி என்று சொல்லும் உள்ளங்களுக்குத் தெரியாது !

அந்த முத்தழகு வீட்டில்  இருக்கும் வறுமை நிலை .

மூத்த அக்காள் கலியாணம் தள்ளிப்போகும் நிலை.

 மூக்கையாவின் கலைமீதான ஆர்வம் தான் அவரை ஊர்தாண்டி நாவலப்பிட்டியில் கரகம் ஆடிவந்த காமாட்சியை கைபிடித்து கரகாட்டம் ஆடும் ஜோடியாக பல மலையக கோவில்களில் கரகம் ஆடும் நிலையைப்பற்றி!

கரகம் ஆடப்போவதால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் தான் செல்லன் மாமா வேலைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தியது .

எங்கே கண்டாலும் மூக்கையா  ராகுலுக்கு வாசிக்க வேண்டியருவார் ஞானம் சஞ்சிகை, அகிலம் சஞ்சிகை என அதற்கு பரிசாக கொடுப்பது வெற்றிலையும் பாக்கும் தான் !

கொஞ்சம் வெள்ளைச்சுருட்டான திரிரோஸ்!

 அப்போது கரகம்  ! பார்க்க தோழில் தூக்கிய மச்சாள் சுகியும்  அவள் தோழில் சின்ன மச்சாள் ரதியும் தூக்கியிரிக்கும் போது  !

சரோஜா மாமி திட்டுவா .

"இறக்கிவிடு அவளை ,தோழில் எத்துறவயசா அவளுக்கு .

சும்மா அவளோடுட தனகாத .

நல்ல காலம் என் அம்மா பார்க்க இங்கு இல்லை இல்லையோ !

இந்தக்குமரியை இப்படி வளர்க்கிறீயோ ?என்று ஒப்பாரி வைப்பா "

சும்மா இருங்கோ மாமி  .

அவள் சின்னவள் குழந்தையில் இருந்து தூக்கும் எனக்கு சுகியின் பாரம் எல்லாம் ஒருமூட்டை கோர அரிசியும் வராத ,அக்காளும் ,தங்கையும் என்ன ஒரு புகையிலைச்சிற்பம் பாரம் கூட இல்லை .


கரகாட்டம் தெரியவில்லை தூக்கிக்காட்டினால் என்ன ?

இவளை நான்  விழுத்தியா போடுவன் .

மீசைமுளைச்சாலும்  உனக்கு அறிவு வளரல பெரியமச்சாள் பொறுமும் போது புரிந்து கொண்டான் .

அவளைமட்டும் தூக்கிறீயே சுகியோடு மட்டும்தான்  தூக்குக் காவடியோ ?

ஏன் உன்ற கொப்பர் சொல்லியிருந்தாரே மறந்துவிட்டியோ ?

குடிகாரன் மகன் கிட்ட வரமுடியுமோ என்ற மோள் கிளிமாதிரி என்று!

நான் பேரம்பலத்தார் பேரன் .

ஏதோ பாவம் கோயில் திருவிழா காட்டச் சொன்னதால் கூட வந்தன்.

 ஐயா வழியில் செம்பு எடுக்கமாட்டன்  எப்போதும் மச்சாள் .

ஓ அப்படியோ ?

பார்ப்பம் முதலில் பரீட்சையில் யார் பாஸ் ஆகுவது !

என்று இன்னும் 6 மாதம் இருக்கு  அடுத்த கடை போட எங்க அப்பாவும் வருவார் !

சுருட்டுக்குப் பாணிபோடுவது நீதான் .

அன்றே பெரியமச்சாள் முகத்தில் கரிபூசணும் என்று காத்திருந்தான் ராகுல்  !

இந்தப் பெரிய மச்சாளும் ராகுலும் ஒரு மாதம் வயது விதியாசம் ராகுல்  மூப்பு .

அவள் பெண்கள் கல்லூரியில் சாதாரண தரம் சேர்ந்து இருந்தால் .

சுகி போல அவளும் ,அவள் தங்கைகளும் அங்கே தான் படித்தார்கள் .

 வெளியில் பலருக்கு  அது தெரியாது !

செல்லன் மாமா  இந்த மச்சாள்மாருக்கு சித்தப்பா என்று மட்டும் எல்லாருக்கும் தெரியும் .!

அந்த வீதியில் கரகம் வர அதன் பின்னே வரும் ஆட்டம் யாழில் எங்கும் கானத ஆட்டம் !

தொடரும்!

//மோள்- மகள் யாழ்வட்டார மொழி!
தனகாத! - உரசாத யாழ் வட்டார மொழி!
பத்தினி தெய்யோ- அம்மனை சிங்களவர் பார்க்கும் பார்வை சீதையை அப்படித்தான் சொல்லுகின்றது அவர்கள் இதிகாசம்!
 அகிலம்/*ஞானம் சிறு சஞ்சிகைகள் முன்னர் மலையகத்தில் வெளிவந்தது!

27 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---55

பேரினவாதம் எப்போதும் பேச்சுவார்த்தை என்றுவிட்டு. விட்டுக்கொடுப்பு செய்யாமல் வீராவேசத்துடன் மீண்டும் போர் முரசு கொட்டுவதும் .

அடித்து விரட்டுவதும் அடிக்கி வைக்க நினைப்பதும் .நிகழ்வாகி வந்த நிலையில் .

அம்மையார் ஆட்சியும் போர் வெற்றி நிச்சயம் என்று வாசல் திறந்தது.

 பலர் வன்னியில் இருந்தவர்கள் .

தீவுக்கு போக திருகோணமலையில் காத்திருக்க !

யாழில் போர் மேகம் இடம் பெயர்வு என அகதிவாழ்வு தொடங்க அங்கிருந்து ஒடிவந்தவர்கள் பலர் .

பல திக்கில் போக அதுவரை பதுளைக்கு வரமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருந்த மாமிகளும் மச்சாள் மார்களுடன் பதுளை வந்தார்கள்1996 இல் !


அதுவரை குடும்பங்கள் சிலர் தாண் பதுளையில் இருந்தார்கள் .

ராகுலுக்கு உறவாக இப்போது அது கொஞ்சம் அதிகரித்தது. மச்சாள்மார்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குணம் .

அதுவும் தந்தை வழியில்  இருப்பவர்கள் எல்லா மாமி மார்களும் அண்ணன் மகன் என்று பாசம் ஒரு புறம் !

புதிய உறவுகள் வருகையில் தாய் வழி மச்சாள் சுகி போல யாரும் இல்லை .சுகி !

முன்னரே வந்திருந்தவள் பதுளைக்கு .

சுருட்டுக்கடையில் ராகுல் இருந்தாலும் அங்கே இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தவள் சுகிதான்.

தேவதைகளுக்கு வாழ்க்கைக்காலம் குறைவு என்று பூங்குழலி பொன்னியின் செல்வனில் சொல்லும் .அது உண்மை என்று சொல்லிவிட்டுப் போனவள் !

கடையில் வேலை செய்தாலும் மாமா வீட்டில் இரவுபடிப்பும் இருக்கையும்  அங்கே தான் ராகுலுக்கு

. உறவுகள் ஒரு தொடர்கதை, உணர்வுகள் சில சிக்குப்பட்ட நூல் முடிச்சு என்றால் ராகுலுக்கும் சுகிக்கும் இருந்த உறவும் ஒரு நூல் முடிச்சுத்தான்.இன்றும் மனம் அழவது அவளின் நிலைக்குத்தான்!

 ஒரு குழந்தையாக பால் ஊட்டி இடுப்பில் தூக்கி ,தோழில் தூக்குக்காவடி தூக்கி ,குமரியாக முதுகில் தூக்கி விளையாடி, மச்சானாக,ஒரே சாப்பாட்டை பங்கு போட்டு சாப்பிட்டு. மடியில் தாங்கி மச்சாளாக ஒருத்தியா  ?இந்த உலகில் மாமா பெற்ற மச்சாள் ஒரு பொண்ணுமனி   காத்திக்கு மட்டுமா இருக்கும் ?

இல்லை  ராகுலுக்கும் இருந்தால் !

சுகி ஒரு முரண்பாடு மச்சாள் என்றும் தங்கையா என்றும் உரிமையோடு தலையில் குட்டி பாடம் சொல்லிக்கொடுக்கும் போது !

வாடா கோப்பி ஊத்தியாச்சு என்று மாமி சொன்னால் .

அண்டா ரெடியாம் குண்டா !

என்று அவள் சொல்லும் போது அறைந்தாலும். அன்பில் அவள் பஞ்சம் வைக்காத ஆசை மச்சாள். கலியாணம் முடித்தால் தான் மச்சானா ஏன் நல்ல தோழன் இல்லையா ?ஏன் புரியமறுக்கின்றது  யாழ் சமுகம்??

1அவளுக்குமட்டும் தான் ராகுல் நாட்குறிப்பு படிக்கும் உரிமை கொடுத்து இருந்தான் அவன் .

பெண்கள் கல்லூரியில் படிக்கும் அவளைக்கூட்டிக்கொண்டு போகும் போது .
பலர் எண்ணுவது இவன் முதலாளி மகளை பள்ளிக்கு கூட்டிவரும்!வேலைக்காரன் என்று .

ஆனாலும்  அவள் பிறக்க முன்னரே ராகுல் அந்த வீட்டு முதல் ஆண்பிள்ளை .
எப்படிச் சொல்வது அவள் எங்க குடும்ப தேவதை !

இப்படியான உறவுகளுடன் .எங்கள் ஊர் திருவிழாவுக்கு நிகராக பதுளையில் வரும் திருவிழாதான் ரொக்கில் காளி அம்மன் தேர்.

பத்துநாள் திருவிழாவில் 9 நாள் வரும் தேர்த் திருவிழா கொண்டாட்டம் இலங்கையில் எங்கும் காணமுடியாத ஒரு வரவாற்றுச் சிறப்பு மிக்கது. ஒரு காலத்தில் !

மூவின மக்களும் கூடும் இந்திரவிழாவோ என எண்ண வைக்கும் காரணம் !

இந்துக்களுக்கு சாமி உலாவருவது ஒரு புறம் என்றால்!

 வியாரிகளுக்கு வியாபாரம் களைகட்டும் .

அதே நேரம் சிங்களவருக்கு இன்னொரு கொண்டாட்டம் !

புத்தன் ஞானம் பெற்ற பொர்ணமி விழாக் கொண்டட்டம் வரும் நாள் !

வாழ்க்கையில் ஒவ்வொரு சாமானியனும் காணவேண்டிய கலைகளின் வெளிப்பாடு இந்த  பொர்ணமி விழா (வெசாக் பண்டிகை )!

இந்த நாட்களில் விடுமுறை என்பதால் தூர தேசத்தில் இருக்கும் பதுளைவாசிகள் எல்லாம் ஓடிவருவார்கள் .

அம்மனைக்காணவும் அதனோடு வரும் கலைகள் ரசிக்க என்றால் !

சில குயில்களின் முகத்தை இதே சாட்டில் பார்க்க  வரும் கதாநாயகர்கள் சிலர் !அதில் இந்த தனிமரமும் ஒன்று பின் நாட்களில் !ஹீஹீஈஈஈஈ!!



இது இன்றைய  ரொக்கில் கோவில் முகப்பு!  

இப்படி இருக்கும் போது ரொக்கில்  காளி அம்மன் 9 .நாள் திருவிழா அதிகாலையில்  தேர்  வீதி உலா வரும்!

 மல்லாரியில் ஆடி வந்து அம்மன் தேருக்கு இருப்புக்கு வரும்  !தேர்முடி இல்லை இங்கே வாகனம் றக்ரரில் தான் !

அம்மனுக்கு மேடை அமைத்து வீதி உலா வருவா அம்மன் தேர் திருவிழா !!!' அதைக்கானும் கண்களுக்கு!! புதிதாக வடக்கில் இருந்து  வந்த மச்சாளுக்கு ஞாபகப்படுத்தும் !  வேலை ராகுலுக்கு!



தொடரும்!!

26 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---54

பாசம் ஒரு படலை. அதைக்கடந்து வருவது சந்திக்கு .

அப்போதுதான் ஊர் முகம் தெரியும் !

படலையை வெட்டி எறியும் கோபத்தையும் தள்ளி வைக்கணும் என்ற நிலை வரும் போது எல்லாம் மடி தேடுவது பங்கஜம் பாட்டியிடம் தான் ராகுல் .

பங்கஜம் பாட்டி தான் பல இடங்களுக்கு என் பேரன் என்று எங்கேயும் கிராமத்தில் இருக்கும் போது கூட்டிச் சென்றது .

கோயிலோ ,திருமணங்களோ ,இல்லை உறவுகளின் மரணத்திற்கோ கையோடு அழைத்துச் செல்லும் பாட்டியைப் பிரிந்தது .

பதுளையில் இருந்த போதும் யுத்தத்தின் போதும் தான் .

பிரிந்து மீண்டும் பார்த்த பாட்டி காலையில் பேரனுக்குக் கோப்பி கொடுக்கும் போதே சொன்னா!

"ராகுல் நல்ல பிள்ளைதானே
பாட்டியை நல்லாக நீதானே பார்க்க வேண்டும் "

செல்வன் மாமா எங்கட குடும்பத்தின் மானத்தை வித்துப் போட்டுத் தான் போனவன் .

நான் எப்படிச் சொல்லியும் கேட்கவில்லை ஆனால் அந்த அகிலா !

"பாட்டி அகிலா இல்லை  அனோமா அவள் பெயர் இப்ப வெளிநாட்டில் "

ஓம் !

செல்லன் மாமா சொல்லிப்போட்டார் .

இங்கே இருப்பதை விட அவன் அங்கேயே இருக்கட்டும் .இந்த ஊரிலும் இருக்க முடியாது தானே  ?

நீ நல்லாப் படிக்கணும் .மாமாவோட போய் .

ரூபனும் இல்லை, யோகன் எப்படி இருக்கின்றானோ ?தெரியல!

 நீ என் பேரன் தானே ?
ஓம் பாட்டி .

அப்ப  நான் சொல்வதைக் கேட்பாயா ?

ஓம் பாட்டி .

இனிமே நீ அகிலாவுக்கு படங்கள் கடிதங்கள் அனுப்பக்கூடாது.

 சரியா .

அனோமாவோட முகவரி என்னிடம் இல்லைப்பாட்டி.

  இப்ப அவள் பெரியவள் தெரியுமோ இந்த வருடம் கோயில் திருவிழா நடந்து இருந்தா !

அவள்  வெளிநாடு போகாமல் இருந்தா !

எப்படி எல்லாம் ஊரைச் சுத்திக்காட்டி இருப்பேன் பாட்டி தெரியுமோ ?

இப்ப எல்லாம் அவளைப் போல !!
!யாரும் எனக்கு வருசத்துக்கு நல்ல டெனிம் டவுசர் வாங்கித்தாரதில்லை .

செல்லன் மாமா சாரம் வாங்கித் தந்து இதுதான் வருசத்து உடுப்பு என்று விடுவர் பாட்டி

.ராகுல் நீ அப்படியே செல்லத்துரையைப்போல இப்போது இருக்கின்றாய் !

அவன் தான் பங்கஜத்தின் பேச்சை மீறாதவன் .

 கடவுள் அவனையும் கொண்டு போட்டார்.

நீ பேரன் தானே என்று நான் பார்த்ததில்லை .

மீண்டும் செல்லத்துரை எங்கவீட்டில் இருக்கின்றான் என்றுதான் எல்லா இடமும் உன்னைக்கூட்டிக்கொண்டு போவது .

சரியா .

நீ இனி செல்வம் மாமாவீட்டுக்கதை நினைக்கவே கூடாது .

மனசைக் குழப்பிக்க கூடாது குழம்பிய கேணியில் நீச்சல் பழக முடியாது ராகுல் ஆற்றைப்போல ஓடிக்கொண்டே இருக்கணும் .

வேண்டாம் என்று விட்ட உறவும் அப்படித்தான் .

இந்த பங்கஜம்  பேர் பலருக்கு ஊருக்குள் தெரியும் .

நாட்டில் ஏற்கனவே இனப்பிரச்சனை அதிகம் இருக்கு .

நீயும் அதில் சேரக்கூடாது என்று தானே உயிர் தப்ப உங்கம்மா பதுளை அனுப்பியது.

 நீ போகும் பாதையில் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு ஊர்கடந்து.  காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலை போகும் போது கடலில் தொலைத்துவிடு அவர்கள்! நினைப்பை .


பாசம்!

அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி
ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில்.
போகும் பாதையில் பாசம் தடுத்தது.
விலக்கிவிட்ட உறவு.
அது வேண்டாம் பேரா வீட்டுக்கு.விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு
தேயவில்லை நினைவலைகளில்!
இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது
விடையில்லாத உறவாக!
மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!(இது ஒரு விளம்பரம் கட்டணம் செலுத்தவில்லை!)கற்பனைக்கு உருவம் தேடக்கூடாது இது வேப்பம் தோப்பில் சக்திவேல் சொன்னது அம்பலத்தார் வழி மொழிந்தது !அவ்வ்வ்வ்வ்வ்மிச்சத்துக்கு இரவு வாரன் படலை திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில்!




கடலில் தீர்த்தம் ஆடியதைப்போல .















உன்னிடம் பேரம்பலத்தாரின் பிடிவாதம் ,வைராக்கியம் ,எல்லாம் அப்படியே இருக்குடா பேரா .

அதை விட்டுக்கொடுக்காத .

உங்க ஐயா வந்து கூட்டிக்கொண்டு போக  எப்ப வருவாரோ தெரியாது .

அதுவரை பதுளையில் இருந்து கடையையும் பாரு .

இங்கு நேவிக்காரன் கரைச்சல் இருக்கு மாமாவோடு போட்டுவா ராகுல் .

பங்கஜம் பாட்டி சொல்லிவிட்டு உச்சிமுகர்ந்த போதே தெளிந்துவிட்டான் பாட்டியின் அன்பைவிட யார் பாசம் அதிகமாக இருக்கப் போகின்றது ?

பாட்டி நான் போட்டுவாரன்.

வருவேன்  கண்டிப்பாக படிப்பு முடிய பதுளையில் இருந்து .

என்றுவிட்டு அவன் செல்வன் மாமாவோடு வந்து சேர்ந்தான் பதுளைக்கு காலம் ஓடும் வேகத்திற்கு அளவேது !

தொடரும்.......

குறிப்பு  ராகுல் அன்று எழுதியதை மீண்டும் எழுத வைத்தான் தனிமரத்தைக்கொண்டு!  இதுதான்  இறைவன் கொடியவன் என்தா!!!!


குறிப்பு -2  நன்றி கவிதாயினி ஹேமா மீண்டும் மீண்டும் என் நண்பனை கவிதை எழுத் தூண்டுவதற்கு!  அவன் தனிமரத்தின் நிழலை நாடி வாரன் இதுதான் அழகான நட்பா!

25 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---53

கிராமங்களில் இருக்கும் இயல்பை .நகரத்தில் காணுவது மிகவும் கடினம் .

இப்படியான இயற்கைத்தாய் வாழும் கிராமம்  .எல்லாம் யுத்த அரங்கில் கிழித்தெறியப்பட்ட மேடைகளைப்போலகாட்சி கொடுத்தது எங்கள் கிராமம் !

அதிகமானவர்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த பூமி. குட்டி போட்ட வாழையைப்போல பிரித்து எடுக்கப்பட்டு பல திக்கில் .

பலர் வன்னியில் அப்படி இருந்தும் பாட்டி வீட்டை இழந்து வேற வீட்டில் இருந்தா !

மூன்று தலைமுறையாக வாழ்ந்த வீடு கல்லும் மண்ணும் கலந்து கட்டினாலும் அதில் பேரம்பலத்தாரின் கண்ணீரும் வியர்வையும் முக்கியமாக  கட்டிய மனைவியை ஊரில் விட்டுட்டு பலமைல் தூரம் போய் வியாபாரம் செய்து சேர்த்த பணம் .

.அந்தப்பணம் இருந்தும் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும்  ஈழத்துக் கணவன்களுக்குத் தான் புரியும் கட்டிய மனைவியைப் பிரிந்து வாழும் வலிகள்!

  இதைப்போல பொருள் ஈட்டச்சென்று இருக்கும் வெளிநாட்டுக் கணவன்கள் தவிப்புக்கள் போல  செல்லன் மாமாவும் இருந்தார் பல காலம் இந்த வீட்டில் சரோஜா மாமியைப் விட்டுப் பிரிந்து பதுளையில்.இரண்டாவது தலைமுறையாக

 மூன்று தலைமுறையின்  சுகதுக்கங்கள் கண்ட எங்கள் வீடு

.குண்டு போட்டு அழித்ததால் அடியோடு பெயர்க்கப்பட்டு அத்திவாரம் மட்டும் இருந்திச்சு .

அதைப் பார்த்தவர்கள் இன்றுவரை அந்த பங்கஜம் பாட்டியும் ,செல்வம் மாமா மற்றும் ராகுலும் தான் .அந்தக்குடும்பத்தில் !

மற்றவர்கள் மறந்தும் ஊருக்குப் போகவில்லை ,இடம்பெயர்ந்தும் ,புலம் பெயர்ந்தும் விட்டதால்!

 பாட்டி ஓடிவரும் போது பேர்த்திமாருக்கு என சேர்த்து வைத்த நகைகள் எல்லாம் கொண்டுவர முடியாத நிலையில் .

தங்கமணிமாமாவின் மகள்களுக்கும் செல்வன் மாமாவின் மகளுக்கும் அனோமாயை அந்தப்பாட்டி அகிலா என்று தான் அப்போது அழைத்து வந்தா .

.எப்போதும் ஒருநாள் ஊர் கோயில் தேருக்கு  வருவினம் என்ற ஆசையில் சேர்த்து வைத்த பல ஜோடிக்காப்பு ,மல்லிகை மொட்டுச் சங்கிலிகள் ,அட்டியல்கள் ,காதணிகள் எல்லாம்  செம்பில் செய்த தூக்குச்சட்டியில் போட்டு .

அதனை ஒரு தண்ணி அள்ளும் வாளியில் போட்டு .

அதை ஒரு சாக்கினில் போட்டு .

சாக்கினுல் வளவுக்கு மதில் கட்ட வைத்திருந்த அரிகல் உள்ளே போட்டு .

எல்லாத்தையும் போட்டு வைத்த இடம் தான் .

சின்னவர்கள் முதல் பெரியவர்கள் எல்லாரையும் தன் ஊற்றினால் .

ஊத்தை போக்கிய கிணற்றில்.


இலங்கையில் வடக்கில் இருக்கும் தீவுகள் கிணறுகள் ஆய்வு செய்தால் பலது உப்புத்தண்ணீரும் நல்ல தண்ணீரும் தான் இருக்கும் .

சிலது ஆழம் அதிகம் நிலாவரைக்கிணறு   போல!

 எங்கள் ஊர் கிணற்றுக்கும் சில வழக்குகளும் ,மோதல்களும் வழிவழியாக நடந்து வந்தது .

அப்போது எங்கள் ஊரில் ஒரு தீர்ப்புச்சொல்லியவர் தியாகி திலீபன்.

 .வரலாற்றில் விலக்குத் தீர்த்தவர் வரலாறு நேர்மையில்'  எழுதும் எழுத்தாளர்கள் எழுதினால் .

அதில் ஒரு புள்ளியாக  எங்கள் ஊர் கிணறு எப்போதும் இருக்கும் .

அதை நேர்மையில் எழுதனும். நடுவன் அரசுக்கு வாக்காளத்து வாங்க  வரலாற்றை  மாற்றி எழுதும்  விஸ்ணுபுரத்தவர் போல இருக்கக்கூடாது !

முழுச்சோற்றில் பூசனிக்காயைப் புதைக்க நினைத்தாலும் !

முகம் தெரிந்தவர்கள் மறந்து போவார்கள் என்று எண்ணுவது செவிலிக்கதை வாழும் காலத்திலும் பலர் பேரன்களாக வந்தவர்கள் ,பார்த்தவர்கள் ,வளர்ந்தவர்கள் பிற் காலத்தில் நாகரிக வளர்ச்சியில் இணையத்திலும் கிறுக்குவார்கள் என்பதைப் போலத்தான்

. அப்படித்தான் ராகுலும் சின்னத்தாத்தாவும் பங்கஜம் பாட்டியின் சொத்தை எல்லாம் வீட்டுக்கிணற்றில் போட்டுவிட்டு.

 அதற்கு மேல் மாட்டுக்கொட்டகையில் கிடந்த  உரிக்காத தேங்காய் எல்லாம் போட்டுவிட்டு காத்திருந்தோம்

!.நேவிக்காரன் வெளிக்கிட்ட போது!

அதன் மேல் பூவரசம் சருகையும் ,தென்னோலையையும் போட்டு விட்டு ஓடிவந்தோம்

 அது ரகசியம் மூவருக்குத் தான் தெரியும் கிணற்றைப்பார்க்கும் வெளியிடத்தவர்கள் பாழடைந்த கிணறு என்று விட்டு விடுவார்கள் .

வீட்டில் இருக்கும்  பொருட்ளை  சூறையாடும் கூட்டங்கள் .எரிகிறவீட்டில் பிடுங்குவது இலாபம் !!என எடுத்துக்கொண்டு போவோர் .

கிணற்றைத் தோண்டமாட்டார்கள் என்று பங்கஜம் பாட்டி கணித்து இருந்தா .

தான் நெல்லுவித்தும் ,ஆடுகள் ,மாடுகள் வித்துக் கஸ்ரப்பட்டுச் சேர்த்த காசில் தன் பேர்த்திகளுக்குச் செய்த நகைகள் களவு போகாது .

எங்கள் குலதெய்வம் அம்மன் காக்கும் என்ற ஆதங்கத்தோடுதான் முதல்நாள் இரவு கிணற்றுக்குள் போட்டுவிட்டோம் .

ஒவ்வொரு திக்கில் யாராவது உயிரோடு இருந்தால்!

 இதை மறக்க வேண்டாம்  என்றுதான் பங்கஜம் பாட்டி பேரன் ராகுலையும் இதில் ஞாபகம் இருக்கட்டும் என்று சொல்லி வைத்ததை .

பதுளை வந்து சென்ற சின்னத்தாத்தா சொல்லியது செல்லன் மாமாவுக்கு .

.அதனை எடுத்துக் கொண்டு வரவழி தெரியாது நின்ற போதுதான் ! பாட்டி மறந்து போயிருக்கலாம்

சந்திரிக்கா அரசில் பலர் வன்னியில் இருந்து ஊருக்கு விரும்பினால் போகலாம் என்ற நிலையில் .

முத்தாச்சிப்பாட்டி வெளிக்கிட்டதை  சாட்டாக வைத்து.பாட்டி மறந்து போயிருக்கலாம் என்றுதான் செல்லன் மாமா ஓம் என்றது. அதன் பின்புதான்

 மூவரும் ஊருக்குப் போனது .போனகாரியம் தெய்வ அருளினால் ஒன்றும் களவு போகவில்லை .

போட்டது சில வருடம் என்றாலும் யாரும் கிணற்றுக்குள் பார்க்கவில்லை .

ராகுல் நீந்தும் அளவுக்கு ஆற்றில் பழகியிருந்த படியால் .செல்லன் மாமாவோடு இறங்கித் தேடியதில் கிடைத்தது. நகைகள்  .

அதை  பாட்டி செல்லன் மாமாவிடமே எல்லாத்தையும் இரவு கொடுத்தா .

அடுத்த நாள் அங்கிருந்து பாட்டியைப் பிரிந்து வர இருந்த. முதல்நாள் இரவின்  போதுதான் .!

பாட்டியிடம் செல்லன் மாமா சொன்னது எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான் ராகுல்.

 புலம்பெயர்ந்து போன  செல்வன் மாமா மகள் அனோமா ராகுலுக்குப் போட்ட கடிதங்களையும் , விளம்பர தபால்   அட்டைகளையும் அவனிடம் கொடுக்கவில்லை என்றும்.

 படிக்கின்றவயதில் அவன் போக்கில் விடமுடியாது மச்சான் என்னிடம் பொறுப்புத் தந்தவர் என்று சொல்லிய போதுதான் தெரியும் .

தன் அறியாமையால் மீண்டும் அனோமாவைப் பற்றி தவறாக எண்ணி விட்டோமே! என்று.

 எப்படியும் அனோமாவை பாட்டியோடு சேர்க்க வழி கிடைக்கும்
 என்ற நினைவில் உறங்கியவனை !
.

அதிகாலையில் எழுப்பிவிட்டா பங்கஜம் பாட்டி . எழுப்பியதும்  சொல்லியது தான் கோப்பியைவிட சுட்டது வாயில் இல்லை மனசில்!

..தொடரும்!

/////////////////////////////////
 நிலாவரை கிணறு -யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கிணறு!

24 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் --52

சமாதான தேவதையும், தூதுவன்களும் தமிழர் வாழ்வை கேள்விக்குறியாக்கியதற்கு  ?பேரினவாதம் என்ற கயிறு கட்டி இழுக்கின்ற நிலையில்!

 சந்திரிக்காவின் ஆட்சியில் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் .தோல்வியில் முடிந்தது .பெரியவர்கள் பேசவேண்டிய இடத்தில் பெரும்பான்மை அனுப்பியது அடிமட்ட செயலார்கள் தானே !அதுவும் லயனர்பெர்ணண்டோவுக்கு ஏது அதிகாரம் கையில் இருந்தது  சாமானியனும் கேட்கும் விடயம்!?

மக்கள் பலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி.

வன்னியில் இருந்தோர் வயதுக்கட்டுப்பாட்டு வேலிதாண்டி கப்பல் மூலம் போகச்சிலர் திருகோணமலையில் வந்து நின்றார்கள்!

முத்தாச்சிப்பாட்டியும் எல்லாரையும் வன்னியில் விட்டு விட்டு தான் ஊருக்குப் போறன் என்று வந்ததும் .

செல்லன் மாமாவும் ,ராகுலும் பதுளையில் இருந்து போனார்கள் திருகோணமலைக்கு.

பயணங்கள் பல விதம் அமைவது அவர்களின் தேவையின் நோக்கத்தைப் பொறுத்துத் தானே?

 செல்லன் மாமா ராகுலை ஊருக்கு அழைத்துப் போகும் முன்னரே சொல்லிவிட்டார்.

" ஊருக்குப் போன பிறகு வரமாட்டன் அங்கேயே இருப்பன் என்று பாட்டியை கட்டிப்பிடிச்சுக் கொண்டு நின்றாய் "

செவிட்டில் போட்டு இழுத்துக் கொண்டு வருவன் !
சொல்லிப் போட்டன் .

ஒழுங்கா வந்துவிடணும் சரியா!

"சரி மாமா என்று அவன் சொல்வதைத் தவிர அப்போது வேற வழியில்லை."

 பள்ளிக்கூட தேர்ச்சி அட்டையில் பாதுகாவலர் கையொப்பம் போடும் உரிமை அவரிடம் இல்லையா எங்க ஐயா கொடுத்து விட்டார் .

அதனால் தான் ராகுலுக்கு ஐயாமீது அதிகம் மனவருத்தம் இருந்தது.

 தன் பிள்ளைகளை தங்களுடன் வைத்திருக்காமல் யுத்தம், போராட்டம் என்றதுக்காக மற்றவர்களிடம் விடும் போது வரும் மனவேதனைகள் விடயங்களை ஏன் புரிந்து கொள்ளவில்லை ஐயா?

 யாழ் சமுகத்தில் இருந்து வந்த   செல்லன் மாமாவுக்கு தெரிந்தது எல்லாம் நல்லாப் படி .படி.

 அதுமுடிய சுருட்டுக்கடையில் வந்து வேலை பழகு.

 வெளியில் சுத்தாதே !

 அதிகாலை 4.45 எழும்பி இரவு 11 மணிக்கு  நித்திரை கொள்வதும் வியாபாரமும் தான் வாழ்க்கையா?

 என்று ராகுல் சிந்திக்கும் காலத்தில் இருக்கின்றான் என்று புரிந்துகொள்ள வில்லை அவர்.

தன்  மனதில் அடுத்த முதல்வர் வாரிசாக ராகுல் விருப்பம் இல்லாமலே .

சுருட்டுக்கடை வியாபாரத்தை கொண்டு நடத்தும் எல்லாத் தகுதியையும் கற்றுக்கொடுத்தார்.


சமையலில் தொடங்கிய வாழ்க்கை ஊர் போக வெளிக்கிடும் போது பில்போடுதல் முதல் கல்லாப்பெட்டியில் இருக்கும் தகுதி வரை பழக்கிவிட்டார்.

கல்லாப்பெட்டியில் யாரையும் உடனடியாக விடுவது இல்லை சுருட்டுக்கடையில்.

அதில் நிதானம் ,நேர்மை ,முக்கியம் இவை இல்லாத போது முதலாளி தொழிலாளி ஆகிவிடுவார்!

 .பில் போடும் போது கிராமத்து வியாபாரிகள்  சகோதரமொழியில் பற்றிச்சீட்டில் மறந்து போகாமல் எழதிக்கொண்டு வருவார்கள்.

 முன்னர்  தீவார்கள் பட்டணம் போவது என்றால் வேட்டியில் முடிச்சுப் போட்டுப் போவதுவ போலத்தான் !

இதை எல்லாரும் வாசிக்க மாட்டார்கள் ,புரிந்துகொள்ளமாட்டார்கள் . இப்படி சுருட்டுக்கடையில் இருக்கும் முதல் தலைமுறையினர் பலர் .

அதனால் தான் அடுத்த தலைமுறை அந்த தவற்றினை விடக்கூடாது என்ற கண்டிப்போடுதான் செல்லன் மாமாவும் ராகுலை சிங்களம் படிபடி  என்று படிக்க விட்டது .

அவர் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைத்தான் !

 கவிதையும் கட்டுரையும் உள்ளத்தின் வெளிப்பாடு சொல்ல முடியும் என்று எண்டரிவீரமூர்நாத்தும், ஜெயக்காந்தனும் ,தெளிவத்தை ஜோசப் ,மாத்தளை சோமு எல்லாம் சுருட்டுக்கடையில் பாக்கு வெட்டும் போதும் பார்த்துச் சிரிப்பார்கள் .

முதலாளி சாப்பிடப் போட்டார் வந்து  ஒரு பக்கத்தைப் புரட்டிப்பாரு வாழ்க்கையில் புது அனுபவம் கிடைக்கும் என்பதைப்போல இருக்கும் .

இதைப்பார்த்தால் முதலாளி மாமாவோ மருமகன் என்றும் பார்க்காமல் மருமகனுக்கும் மீசை வந்துவிட்டது  என்றும் ஜோசிக்காமல் துப்புக்கட்டையால  சாமரம் வீசுவார் முதுகில் .

படிக்கிற வயசில் கண்ட கண்ட புத்தகம் படிக்கிற ஆளைப்பாரு !

ஒழுங்கா சாதாரண தரம் பரீட்சை முடிக்கலையோ .

"சுருட்டுக்கடையில் வெற்றிலைத் தட்டுக்கு வெற்றிலை
அடுக்க வரும் சொல்லிப்போட்டன் "

.அடுத்த கடை வந்திருக்கு.

 படிப்புக்கு இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு .சரியா.

அவரின் அடுத்து வரும் செந்தமிழ்கள் எல்லாம் யாழ்ப்பாணத்து அர்ச்சனைகள்!

சினிமாப்படம் பார்க்க விடமாட்டார் ,சினிமாப்பாட்டுக் கேட்டால் கெட்டுப் போய்விடுவான் ,கதைப்புத்தகம் ,கவிதை வாசித்தால் !

ஏன் ?வீரகேசரியில் மாத்தளை சோமு எழுதிய ஒரு தோட்டத்து நாதஸ்வரம் தொடருக்கு விரும்பிய கருத்தினை கடிதம் மூலம் அனுப்ப முடியாது .

அவர் எண்ணத்தில் அந்தவயதில் கடிதம் வரைந்தால் அது காதல் கடிதம் தான் என்று நினைப்பில் இருப்பார் .

அதனால் தன்னோடு அருகில் கல்லாப்பெட்டியில் இருக்கும் படி கட்டுப்பாடு போட்டார் .

இவர் போட்ட கட்டுப்பாட்டுக்களை எல்லாம் தாண்டி அவன் பள்ளியில் இருந்து தன் விருப்பங்களை  புனைபெயரில் நிறைவேற்ற உதவியவன் நகுலேஸ்தான்!

அவனின் பிரிவில் தான் இடையில் சிலரின்  நட்பு முகங்களையும் கண்டுகொண்டான். ராகுல்.

 எந்த  செல்லன் மாமா ராகுல் மீது இலக்கியப்பக்கம் திரும்பக்கூடாது என்று கட்டுப்பாடு போட்டாரோ .

அவரே பார்த்தீங்களா ?
இன்று என் மருமகன் அமைச்சரிடம் பரிசு வாங்கும் படம் வந்திருக்கு.
 நாளிதழலில்  என்று சொல்லி பின் நாட்களில் மகிழ்ந்த போதும் அவன் அதே கடையில் வேலைக்காரன் தான்!

ஆனாலும் அப்போதும் கட்டுப்பாடு நீ இந்தகடையைத் தான் செய்ய வேண்டும் என்று .

இதைச் சொல்லிச் சொல்லியே  பதுளையில் இருந்து திருகோணமலைக்குப் போய் அங்கிருந்து  கப்பல் ஊடாக பயணித்து  பயணம் வாழ்வில் மறக்கமுடியாத கப்பல் பயணம்.

பங்கஜம் பாட்டியைப்  பார்த்த போது! இருந்த உணர்வுகளுக்கும் ,பாசத்திற்கும் எப்படி சொல்லில் செதுக்குவது ?

எப்போதும் பாட்டிமாருக்கும் பேரன்களுக்கும் இருக்கும் உறவை இடையில் இருக்கும் தகப்பன் ,தாய் ஒன்றும் செய்ய முடியாது .

அவர்கள் கூட்டணி பாசமழைகள்!

யுத்தம் பாட்டியின் அழகில் உடலில் மாற்றம் காணவைத்திருந்தாலும் பாசத்தில் பேராண்டி வந்திட்டான் என்று கோழி   உரித்து கறிவைத்தா  .

நேவிக்காரன் வந்தாலும் திமிரோட ரோட்டில் இருந்து.

 முத்தாச்சி  என்ர பேரனைக்கூட்டியந்து நெஞ்சில் பால் வார்த்துப் போட்டாய் .

உன்ர பேர்த்தியைத் தான்  விட்டுட்டு வந்திட்டான் இந்த செல்லன் !

நாட்டு நிலமையில் விரைந்து போகணும் அம்மா  என்று  செல்லன் மாமா வந்த விடயத்தை செயலில் செய்யத் தொடங்கினார் .

.ராகுல் இங்க  வாடா!

தொடரும்!

செவிட்டில்-காதில் அடிக்கும் செயல்-யாழ்வட்டாரமொழி!




//

23 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---51

ஆட்சிமாற்றமும் ஆட்சியில் பங்கு கொள்ளும் வரமும் பலருக்கு வழிகொடுத்தது. சாந்தியும் சமாதானமும் என்ற கோஷம்.

இதன்  ஊடாக அம்மையார் விடியல் தருவார்! என்று எல்லாரும் சேர்ந்து இன/மத/பேதம் தாண்டி சுதேசிய கொள்கைக்கு உற்சாகமாக செயல் பட்டார்கள்.

 சுருட்டுக்கடை வைத்திருக்கும் எல்லாருக்கும் கப்பம் கோரும் ஆட்சி வெளியேறணும் .என்ற ஆவலில் இருந்தோம்.!

செல்வம் மாமாவுக்கு அம்மையார் கட்சியில்  பாராளமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இடம் இருக்கு வந்து இணையுங்கள் .

என்று அப்போது தொகுதி அமைப்பாளராக இருந்த பெருன்பான்மை இனத்தவரும்,  பதுளை தொழில்நுட்ப தலைமை ஆசிரியரும் .

அவரோடு சேர்ந்து இன்று இலங்கை அரசியலில் முக்கிய பொறுப்பில் இன்று இருக்கும் இரு பதுளை அமைச்சர்களும் ஒன்றாக  இருந்து  அழைப்பு நீட்டிய போது.

 செல்லன் மாமா நிராகரித்து விட்டார்.

 இவைவிடயமாக தலைமை ஆசிரியர் வீட்டில்  பேசிக்கொண்டு இருக்கும் போது மாமாவோடு சேர்ந்து போயிருந்தான் ராகுல் .

எப்போதும் ராகுல் தான் அவர் மகன் போல அப்போது இருந்தான் !

எங்களுக்கு வியாபாரம் தான் சரியாக வரும் .அரசியலில் செருப்பு எரியமாட்டம் என்றுவிட்டு .

ஆனால் அரசியல் விளம்பரம் ஒட்ட தேவையான கோதுமைமாவும் ,பல கட்டுச் சுருட்டும் கொடுப்போம்.  இலவசமாக. அம்மையார் ஆட்சிக்கு வர. என்று  செல்லிவிட்டு வந்தார் செல்லன் மாமா.

காரணம் அம்மையாரின். அம்மா ஆட்சியில் தான்பல சுருட்டுத் தொழில் வியாபார நண்பர்கள் ,பின் அவர்கள் உறவாகியவர்கள் பலர் .புகையிலையிலும், செத்தல் மிளகாய் மூலம் அதிக இலாபம் பார்த்தார்கள்  .

என்பதால் வந்த  விஸ்வாசம் அல்லது, நன்றி உணர்வு  ஒரு புறம் என்றாலும் .

ஆட்சிமாற்றத்தை சாமானியர்களும் விரும்பி நின்றார்கள்.

அதனால் தான் ராகுலும் அரசியல் ஆர்வம் மிக்கவனாக இருந்தான்.

 அம்மையார் வெற்றி பெற  வேண்டும் என்று விளம்பரம் ஒட்டுவது முதல்  விருப்போடு செயல்ப்பட்டான்.

 ராகுல் கட்சியில் உறுப்பினர் இல்லை .

 அந்த பாராளமன்ற தேர்தலில் தான் அரசியலில் மக்கள் விரும்பிப்போடும் ஓட்டும் .

அதே கட்சிக்கார்கள் ஒருவரே பல ஓட்டும் போடும்  வழி முறை!இருக்கு என்று ராகுலும் உணர்ந்து கொண்டான்.

ஆம் ஆற்றில் மிதந்து வந்த உடல்களைப்பார்த்தவன் ,அகதியாக ஓடிவந்தவன் ,அதில் ஒரு அப்பாவியை நிர்வாணப்படுத்தி விளக்கமறியலில் இருந்தவனை தாங்கிக்கொண்டு வந்தவன் கண்களுக்கு விடியல் தேவையாக இருந்தது .

சட்டத்தின் பிடியில் இருக்கும் ஓட்டையை பயன்  படுத்தி ஏன் ஓட்டுப்போடாமல் இருப்பான் ?

விளைவு ராகுலும் முதல் சட்டவிரோத வாக்கினை வாக்களித்து 16 வயதில் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துகொண்டான்!

ஏன் கோபாலகிருஸ்ணன் மட்டும் தான் எப்போதும்  ஹீரோவுக்கு தந்தையாக நடிக்கணும் .

ஒரு நாயகனே தந்தையும் மகனுமாக நடிக்கக் கூடாத ?என்பதைப் போல தான் ராகுல் பெயரில் இருவர் இருந்தார்கள் அந்த முகவரியில்!

இப்போது இருவரும் புலம் பெயர்ந்து விட்டார்கள் வெவ்வேறு தேசத்திற்கு...

 ஆனால் வாக்குரிமை அங்குதான் முதலில் அவர்களுக்கு இருந்தது .

பின் தான் தேர்தல்  இடாப்பில் மாற்றம் செய்தார்கள் வன்னித்தொகுதிக்கு இருவரும் !

சகோதரமொழி உடற்பயிற்ச்சி ஆசிரியரின் வருகை. அதுவரை பள்ளிக்கூடத்திற்கு வாராத விளையாட்டு உபகரணங்கள் விரைந்து வந்தது .

அவரின் மாயம் தான் என்ன ?உரியவர்களிடம் நேரில் போய் பேசிய பின் கையோடு அடுத்த வாகனத்தில்  உபகரணங்கள் வந்து சேர்ந்தது.!

 அதன் பெறுமதி அப்போதே 100000 ரூபாய்க்கு மேல் .!

விளையாட்டு அமைச்சு ஒதுக்கும் விளையாட்டு உபகரணம் மூலம்  பயன்பெற்றவர்கள் குறைவு ,என்றாலும் இவரின் ஊக்குவிப்பினால் பல மாணவர்கள் கிறீக்கட் தாண்டி பல விளையாட்டில் தடம் பதித்தார்கள் .

சகோதரமொழி தெரிந்தவர்களும் ,தெரியாதவர்களும் திறமையிருந்தால் தன் செலவில் கொழும்பு வரை கூட்டிச் சென்றார்.

பாடவிதானத்தில் கவனம் செலுத்தாமல் வெளியில்  யாரும் கூட்டம் கூடமுடியாது!

தேவையான விடயத்தைத் தவிர வெளியே மாணவர்கள் நின்றால் கேள்வி கேட்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது!

உயர்தரத்தில் மாணவர் என்ற போர்வையில் இருக்கும் அடியாள்கள் செயலில் பல ஆசிரியர்கள் போல பயந்த நிலை இவரிடம் இல்லை .என்பதால் சண்டியர்கள் எல்லாம் சாந்த நிலையில் இருந்தார்கள்!

உண்மையில் வாத்தியார் என்றால் மரியாதை கொடுக்க வேண்டிய மாணவர்கள் .

பாடசாலை கதவு தாண்டினால் பள்ளிக்கூடத்தில் தண்டனை பெற்றால் அந்த தண்டனைக்கு வெளியில் முகம் மூடி அடிக்கும் செயலுக்கு முடிவு கட்டியதில் உடல்கல்வி ஆசிரியர் குனசிறி முக்கியமானவர் .அந்த கலைத்தாயின் கல்லூரியில்.

இப்படி ஒவ்வொரு மலையக பாடசாலையில் ஒவ்வொருத்தர் இருந்தால் நிச்சயம் பள்ளிக்கூடம் பல்கலையும் கற்கும் இடமாக இருக்கும் என்று  பின் நாட்களில் பலதடவை அவரிடம் செல்லியிருந்தான் ராகுல்!

 அவர்தான் சகோதர மொழி இலக்கியம் மீது இவனையும் திசைதிருப்பிய வழிகாட்டி!

 கம்பெரலிய முதல் வீசித்தல வரை விரைந்து  மொழிபெயர்ப்பு நூல்கள் தேடக்காரணம்!

தொடரும்!

குறிப்பு - இலங்கை பாராளமன்றத்தில் செருப்பு எரிந்தது ஒரு பெண்மணி  !

கம்பெரலிய-பேராசிரியர் சரச்சந்திர எழுதியது தமிழில் கிராமப் பிறல்வு என வெளிவந்தது
வீசிதல-பாசவலை திக்வலை கமால்  மொழிபெயர்த்தது மல்லிகை வெளியீடு!
// 

22 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்--50

கலைத் தரத்தில் படிக்கும் ஒரு மாணவி .
தன் கீழ் இருக்கும் மாணவணுக்குப் படிப்பில் இருக்கும்  நல்ல விடயங்களைச் சொல்லிக் கொடுக்கணும் கோஸம் போடும்  நேரத்தின் போதும் சரி.

"தம்பி  நீ நகுலேஸ்

"நல்லாப்படிக்கணும்.

 சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறு எடுத்து உயர்தரம் படிக்கணும் என்று ஊக்கிவிக்கணும்.

  கிடைக்கும் நேரத்தில் 9 வது தரத்தில் படிக்கும் மாணவனுக்கு அதில் வரும் பாடங்களில் இருக்கும் குற்றியலுகரத்திற்கும் ,குற்றியலிகரத்துக்கும் வித்தியாசம் சொல்லிக்கொடுக்கலாம் .

,சோல்பரி யாப்புக்கும் ,கோல்புறுக் யாப்புக்கும் .இடையில் வரும் முரண்பாடு  விளக்கலாம் .

தேற்றம் நிறுவுதல் பற்றியும், விஞ்ஞானத்தில் வரும் இராசயான குறியீடு மாற்றங்கள் பற்றி விளங்கப்படுத்தலாம்.
 h2o  எப்படி வரும் என்று சொல்ல முடியும் .

இல்லை  எனில் பதுளையின் குடிப்பரம்பல்.

 சுற்றுலாவிற்கு போகும் இடங்களாக துங்கிந்தை நீர்வீழ்ச்சி,



 அப்புத்தளை எடிசன் பங்களா.

 பதுளையில் பிரேமதாசா  அரசு கட்டிய நீர்த்தேக்க அணையிருக்கும் மெதிரிய இடம் பற்றி விழிப்புணர்வைக்கொடுக்கலாம்  .

கலையில் படிக்கும் மாணவி பதுளையில் பிறந்த தெளிவத்தை ஜோசப் வரலாறு. அங்கு ,இருக்கும் கலை இலக்கியவட்டம் பற்றி சொல்ல முடியும்..

 அதில் தமிழோவியன் செயல்கள், ,கவிதையில் அவரின் திறமை பற்றியும் .பதுளை கலை இலக்கிய வட்டத்தில் அவர் தான் செயலாளர் .இது மூன்றாம் கட்டையில் இருந்து இயங்குகின்றது.
 சரிநிகர், மல்லிகை,ஏரிக்கரை தினகரனில் இவரின் படைப்புக்கள் பெறும் பாராட்டு. இவர் பலரையும் ஊக்கிவிக்கும் அவர் நல்ல பண்பு பற்றியும்  .

எழுத்து விருப்பம் இருக்கும் மாணவர்கள் நீங்களும் அவரோடு சேர்ந்து செயல்படணும் என்று சொல்ல வேண்டிய நங்கை.

 ஒரு மாணவன் தன்னிலும் இரண்டு  வயது குறைவான நகுலேஸ் இடம் நடந்து கொள்ளும் முறை மற்ற மாணவர்களுக்கு எப்படி ஒரு பெண்மீது மரியாதை வரும்!

 கைபிடித்து சில்மிசங்கள் செய்ய ஒரு மாணவனை எப்படி அனுமதிக்க முடியும்.

 பெண்மையின் நாணம் தொலைந்து மற்றவர்கள் தன்னையும் ஒரு போகப்பொருளாக பார்ப்பார்கள் என்று எப்படி மறந்தாள்?

 வாலிப வேட்கை கட்டுப்பாடுகள் தாண்டும் .

அதற்கு எப்படி கீழ் இறங்கி வர முடிந்தது ஒரு உயர்தரமாணவிக்கு .!

மூலச்சலவைகள் தலைமை ஆசிரியர் ஊழல் செய்தார் என்றால் ?

இவர்கள் செய்யும் செயல் பலரின் படிப்புக்கு அல்லவா பாதகம் செய்கின்றது.

 பதவி வெறி பிடித்தவர்கள் மாணவர்கள் ஆர்வம் புரியாதாவர்களா??

 இப்படித்தான் எண்ணினான் ராகுல்!

 அவர்கள் உயர்தரத்து அண்ணாமார்களுக்கு .பதவியை அடையவும் அரசியல் விளையாட்டுக்கு திராவிடமுன்னேற்றக்கழகத்தின்  உணர்ச்சி அரசியல் விடயத்தையும் புகுத்தி சின்னவர்களுக்கும் சில போத்தல்கள் கொடுத்து  போதை ஏற்றினார்கள்.

 வெளியேறு வெளியேறு என்று உலரிய வாய்கள் எல்லாம் வெளியேறியது அடுத்து சில வாரங்களில் வந்த உயர்தரப் பரீட்சையில் தோற்று.

 அதிபர் கல்வித் திணைக்களத்திற்கு பதவி உயர்வோடு வெளியேற புதிய அதிபர் வந்தார் .பசுபதி .அவரும் யாழ்ப்பாணம்.

 எந்த பதவிக்கு ஆசைப்பட்டு மாணவர்களை தூண்டிவிட்டார்களோ?  அவர்கள் ஆப்பு இழந்த குரங்கின் கதை ஆகியது.

 புதிய அதிபர் சகிதம் புதிய பெரும்பான்மை ஆசிரியர் ஒருவரையும் உடன் அனுப்பியது கல்வித் திணைக்களம் .

கொடிபிடித்தவர்கள் எல்லாம் பதவி போன அமைச்சர் போல முடங்கினார்கள்.

 நகுலேஸ்  மாணவர் தலைவர் பதவியும் போனது

. தவனைப்பரீட்சை நடக்காமலே பள்ளி மூடி  புதிய 3 தவனை  ஆரம்பம் ஆனபோது நகுலேஸ் பதவி போய்விட்டது.

 ராகுலுக்கு மாணவர் தலைவர் பதவி வந்தது .

நல்ல மாணவன் ஒருவன் கண்முன்னாலே சீரழிந்து கொண்டிருந்தான். சொல்லிக் கேட்கவில்லை.

 அடுத்த பிரிவு மாணவர்களுடன் போய் சேர்ந்தான் நகுலேஸ் .

இருவருக்கு இடையில் சண்டை வந்தால் அவர்களைச் சுற்றியிருக்கும் களைகள் பல்லுக்காட்டும் . நச்சுப்புகை ஊதும்  இருவருக்கு இடையில் அவனுக்கும் ஊதினார்கள் .

"மச்சான் நகுலேஸ்"

ராகுல் அவன் ஊர்ப்புத்தியை காட்டிவிட்டான் .ப... !

மச்சான் நீ நம்ம கூட இருடா !

புதிய் அதிபருடன் பல புதிய பட்டதாரி ஆசிரியகள் அதிகமாக வந்து சேர்ந்தார்கள்.

 பள்ளியில் பாரிய மாற்றங்கள் நாட்டில் ஆட்சிமாற்றத்துக்கு வழிகோழினா!

வெற்றிநமதே !!சாந்தியும் சமாதானமும் என்று வந்தா புதிய தேவதையாக அம்மையார் சந்திரிக்கா .

எங்கும் ஒரே கூதுகலம் அஸ்தினாபுரம் இராமன் மீண்டுகொண்டு இருக்கின்றான் என்ற சேதிகேட்டு மக்கள் எப்படி  கூதுகலமாக இருந்தார்கள் என்று கம்பன் சொல்லியது போல !

பதுளையும் மீண்டும் சுதேசிகளுக்கு சுபீட்சம் என்று !

அதுவரை எதிர்க்கட்சியாக வழிநடத்திய சிறிமா மகளை முன்னிலைப்படுத்தி கொண்டுவந்த சாணக்கியம்.

 கருணாநிதி எப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியில் தன் கட்சியை கட்டியாண்டாரோ!

 அதே போல சிறிமா  ஜே.ஆர், அதன் பின் பிரேமதாச, பின் டீ.பீ.விஜயதுங்க போன்றவர்களுடன் ஆம்பிளைக்கு நிகராக செயல்பட்டு கொண்டு வந்தார் ஆட்சியை அப்போது தான் 1994 இல்!!

//
மெதிரிய-பதுளையில் இருக்கும் அணைக்கட்டுக்குப் போகும் இடம்!





/

21 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-49

மோகத்தைக் கொன்றுவிடு இல்லையேல் மூச்சை அடக்கிவிடு !
   பாரதி.

இப்படித்தான் மோகம் வரும். வயதில் ஏன் இப்படி மாணவர்கள் மாணவிகள் வாழ்க்கை  தடம்புரண்ட ரயில் போல ஆவது?

 எத்தனை மாணவர்கள் படிக்கணும். என்ற ஆவலில் எத்தனை தூரத்தில் இருந்து வருகின்றார்கள் ..

மலையகத்தில் போக்கு வரத்துச் சேவையில் இருக்கும் பயணிகள் சேவை பஸ் மிகவும் குறைவு .

அந்த பஸ் எடுக்க அதிகாலையில் காத்திருக்கணும் .பாதித்தூக்கக்களையுடன் ,இயற்கை உபாதை தாங்கிக்கொண்டு இப்படி .

இந்த பஸ்சில் ஏற்றிவிட தாய்மார்  3.30 எழும்பி தன் பிள்ளைக்கு பசிக்கும் என்று எத்தனை கஸ்ரத்திலும். ரொட்டி சுட்டு கட்டிக்கொடுக்கும் போதே .

காலையில் ஒரு கூடைக் கொழுந்து எடுப்போமா ?இல்லை கங்காணியிடம் கடுமையான ஏச்சு விழுமா, மாதக்கடைசியில் துண்டு விழும் கைச் செலவுக்கு என்ன செய்வது ?என ஜோசனைக்கும் இடையிலும் .

தன் மகன் படித்து பெரிய வேலைக்குப் போனால் தான் முதுமைக்காலம் இந்த லயச் சிறையில் இருந்து விடுதலைகிடைக்கும் .என்ற ஆர்வர்த்தில் ,ஆசையில் இருக்கும் தாய் உள்ளத்தின் கனவுகளுக்கு  எப்படி இவர்களால் சிதைமூட்ட முடிகின்றது.

 இந்த  வயதில் வரும் மாற்றத்தினால்!
குரல் மாற்றம் கண்டு மீசையரும்பும் பருவத்தில் .

பாடசாலையில் நீள்காட்சட்டை போட அனுமதி கிடைக்கும் வயது .

அந்தப்பாடசாலையில் இந்த 9 ஆம் வகுப்பில் தான் பலர் பாதை மாறிய பயணங்களைத் தொடங்குவார்கள்.

 அதுவரை எல்லா ஆசிரியர்களும் நல்லாக படிக்கும் மாணவன் .சாதாரன தரத்தில் சாதனை செய்வான் !என்றும் என் பேரைக்காப்பாற்றுவான் என்று பேசும் வாத்தியாரின் நம்பிக்கையில் .

இதுவும் கழிசரைதான்  என்று பேசவைக்கும் ஆண்டு இந்த 9 ம் வகுப்புத் தான்.

 அப்படியான வகுப்பில் தான் நம் பள்ளியில் வந்தது பகிஸ்க்கரிப்பு .

நல்ல மாணவன் என்று சொன்னவர்களுக்கு எல்லாம் என் தீர்ப்பை மாற்றுங்கோ என்று சொல்லிச் சென்றான் கையில் இருந்த  தலைமை ஆசிரியர் மீது தரம் தாழ்ந்து எழுதப்பட்ட பாதாதையைத் தாங்கிப்பிடித்த. நகுலேஸ்..

 அதற்கு காரணம் வனிதா!

வனிதா உயர்தரத்தில் கலைப்பிரிவு படிக்க வந்த முதலாம் ஆண்டு மாணவி என்ற போர்வையில் இருந்த ஒரு களை என்றால் மிகையில்லை.

 அவளின் குடும்பம் ஒரு வறுமைக்கோட்டில் இருந்தாலும் ,அவள் தாயும் ,தந்தையும் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் ,தன் மகள் படிக்க வேண்டும் என்று நினைத்து நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இருந்து தினமும் கஸ்ரப்பட்டு பட்டணம் அனுப்புவது.

 வனிதா நல்லாக படித்தால்! தங்கள் குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்கும் என்று !

ஆனால் அவளோ பட்டணத்தில் பலரின் புலம்பலுக்கு காரணமாக இருப்பாள் .

இந்த ஆண்டில் தான் அந்தப் பாடசாலையில் பெண்கள் அதிகமாக உயர்தரத்தில் எல்லாப்பாடங்களுக்கும் வந்து படித்தார்கள் ராகுல் இருந்த காலத்தில்.

! வனிதா கொஞ்சம் ஜாலியானவள். பலருடன்   பழகும் ஒருத்தி.

 அவளிடம் தங்கள் நட்பு மாலை தொடுத்தார்கள் பலர் .

சிலர் காதல் மாலை சூட முண்டினார்கள் பின் கதவாள் .

முன் பக்கம் அவளின் தாய் மாமான் ஒரு கராட்டியில் அந்த நகரில் கொஞ்சம் பிரபல்யம் ஆனவன் என்பதால் பலர் நகுலேஸ் இடம் உதவி நாடினார்கள்.இவர்கள் குடும்பம் தாய் மாமன் மருமளை மணம்முடிக்கும்  பின் புலம் கொண்டவர்கள்.

நகுலேஸ் கொஞ்சம் மைனர் மாப்பிள்ளை தோறனத்தில் இருந்தான் .

அதுவும் தாண்டி அவன் தாத்தா அடைவு கடை வைத்து இருந்தார்.

 அங்கே காசு புழங்கும் அதிகம் இதனால்  நகுலேஸ் கையில் அதிகம் பணம் இருந்தது.அவன் ஒரு கர்ணன் எப்போதும் யாருக்கும் காசு இல்லை என்று சொல்லாதவன்.

 அதனை சீரழிக்கும் வழிக்கு வழிகாட்ட பலர் வந்தார்கள் நண்பர்கள் என்று உயர்தரத்து அண்ணாமார்கள்.

 அவர்கள் இவனை மச்சான் தோறனத்தில்  நடத்தினார்கள் என்றால் !

வனிதா இவனை காசு புடுங்கும் மரமாக அவனின் வாலிபத்தை தூண்டிவிட்டாள்!

  அன்பைக் கொடுக்க வேண்டியவள் காமத்தைப் பொழிந்தால் என்பதா .

அவன் இவளை மோகினியாக பார்த்தான் என்பதா ?தவறு யாரிடம்?

நிச்சயம் நகுலேஸ் மனம் ,உடல் ,பேதலிக்க வனிதா காரணம் என்பது ராகுல் பார்த்தான்.  .

நல்ல வழிகாட்ட வேண்டியவள் காமக்கிளத்தியாக இருந்தாள்!

. தலைமை ஆசிரியர் வெளியேற தயாராக இருந்தார் .ஆனால் மாகாண கல்வியமைச்சு உடனடியாக விரைந்து செயல்படவில்லை .

பாதிக்கப்படுவது தோட்டமாணவர்கள் தானே அதுவும் சிறுபான்மை என்ற அசட்டை.

 இரண்டு மாதம் பகிஸ்கரிப்பு தொடர்ந்தது. இலங்கை பாரளமன்றம் வரை போனது முதல் முறையாக இந்த பகிஸ்கரிப்பு.

 அந்தளவு இதில் அரசியல் நகர்வுகள் பின் கரமாக இருந்தது.

தேசிய நாழிதலில் கலைத்தாயின் சேலை உருவப்பட்டுக் கொண்டு இருந்த அந்த நாட்களில் பலர் பள்ளி வருவது இல்லை .

வந்தாலும் இடையில்  வெளியேறி நூலகத்திலும் ,சினிமா திரையரங்கிலும் நேரம் கடத்தினார்கள்!. அப்போது ராகுல் கிங்ஸ்சில் இந்தப்படம் பார்த்தான் களவாக அப்போது அனோமாவின் நினைப்பு அவன் மனதில்!


தொடரும்!

குறிப்பு-1 கழிசரை-கெட்டவழியில் போகும் ஒருவன்.- யாழ் வட்டாரவழக்கு
ஏச்சு- திட்டுதல்- மலையக  வட்டார மொழி
இலங்கை பாராளமனற்உரைப்பதிவு - ஹாசட்-ஊவாமாகாணம் ... பாடசாலை விவகாரம்   கல்வியமைச்சு!1994/6/....
////////////////////
கிங்ஸ்- பதுளையில் இருக்கும் திரையரங்கு!

குறிப்பு - 2-இந்தப்பாடல் நாயகன் தென்னிந்தியா கமல்ஹாசனுக்கு சகலவிடயத்திலும் ஈடாக இருக்கும் நம்மவர் கலைஞர். நடிகை சங்கீத்தா வீரரத்ன குஸ்பூ போல்கண்ணக்குழி நடிகை. நேசனின் அபிமானி .எனக்கு தென்னிந்திய பாடகர் ஹரிகரனை நேரில் சந்திக்க காரணாமாவர். என் கடந்தகால தொழில் நிறுவனத்தின் விற்பனை மொடல் அழகி எங்களுடன் எங்கள் நிறுவனத்தில்  ஒரு நாள் பூராகவும் ஒரு பரிசு வழங்கியவர் நானும்  வாங்கியிருக்கின்றேன் .நிறுவனத்தின் நிதிக்கொள்கை  கருதி வெளியில்  தனிப்பட்டு நாங்கள் குழுவாக வெளி  வந்தாலும் எங்கள் குழுமப்படம் இன்னும் தாயகத்தில் அந்த நிறுவனத்தில் இருப்பது  பாடலில் வரும் வரி போல உன்னாலே நான்  என்னை உணர்ந்தேன்  என்பதைப்போல. நேரம் வரும் போது இந்தப்பாடல் முழுவதுக்கும் தனிப்பதிவு போடுவேன்! அதையும் தாண்டி அமலா பீரிஸ்  பின்னனிப்பாடகி நம்மெல்லிசைக்கும் தமிழுழில் பாடிய பாடகி ஆனால் அந்தஇசைக்கோர்வை கைவசம் என்னிடம் இல்லை!தேடுகின்றேன் பின் வந்தால் தனிப்பதிவு நிச்சயம்  போடுவேன்!

/: