30 June 2013

சீனுவைப்பார்த்தேன்!!!!!!!!!!!!!


வணக்கம் உறவுகளே நலமா??
இன்று பலருக்கும் காதல் கடிதம் எழுதத் தூண்டியதில் திடங்கொண்டாடு பதிவாளர்  சீனு ஒரு காதல்ப்புரட்சியையே செய்து இருக்கின்றார் என்றாள் மிகையாகாது .

இந்த காதல்  கடிதம் எழுதப்போகும் பலரின் பட்டியல் அவர் தளத்தில் ஏறிக்கொண்டே போகின்றது !

விநோதமானவளே ,விநோதமானவனே என்று !நானும் சீனுவைப்பார்த்தது ஒரு வசந்தகாலம் என என் வாழ்வில் வந்த விற்பனைப்பிரதிநிதி என்ற வேலையில் தான்.

 அதுவும் கொழும்பில் இருந்த போது கெயிட்டி அப்போது பிரபல்யம்:)) 

இன்று அது போல இல்லை ஒரு திரையரங்கு .என்றாளும் இந்த சீனு மாளவிக்கா மனதில் ஒரு சிலிர்ப்பு அப்ப எல்லாம் .

நான் சினேஹா மீது ஈர்ப்பு வந்து!


 இப்படிப்பாடவில்லை பாரிஸ் வந்த போது :)))

இந்த "வாலமீனுக்கும் ,விலங்கு மீனுக்கும் கலியாணம் "என்ற ஆட்டத்திலே ஆடிக்கிடந்த நாட்கள் இன்னும் மறக்க முடியாது !

மாளவிக்கா ஒரு புயல்தான் .கடிதம் வாசிக்கும் நடுவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம் .

என்றாளும் கடிதம் படிப்பதால்  இனிப்படுவார்கள் சந்தோஸம் என்றாள் மிகையில்லை !இப்படி ஒரு உன்னதமான உணர்வு இந்த சீனுவுக்கு எப்படி வந்தது ?

பதிவுலகில்  நிச்சயம் இது ஒரு திருப்புனைதான் .எத்தனை மூத்தவர்கள் ,இளையவர்கள், இப்போது பதிவுலகத்திற்கு வந்தவர்கள் ,என பதிவுலகம் பிரபல்யமாக இந்த காதல் கடிதம் ஒரு  சாதனைதான் அது பற்றிய விபரம் இங்கே!http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html

  அட பதிவாளர் சீனு பிரபல்யமாம் அதுதான் தன்னைப்பற்றி  நாங்கள் எழுதினால் பரிசு கிடைக்காது என்று கண்டிசன் போட்டாலும் ,அவர் நடுவர் இல்லாத படியால் அவரை கலாய்க்கலாம் மொக்கை போட்டு என்று நாய்நக்ஸ் அண்ணாச்சி எழுதிய அரக்காணிக்கு அன்பு மடல் படித்த பின் நானும் நினைத்தேன் இப்படி ஒரு கற்பனை :))) http://goundamanifans.blogspot.in/2013/06/blog-post_29.html

அடிக்க வராதீங்கோ !பதிவுக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் உண்டு தானே:)))

28 June 2013

என் உயிரே எண்ணுள் இருந்து விலகும் நொடி-8


தொழில் தேடி தொலைதூரம் போனவர்களையும்,
தொலைதேசம் ,போனவர்களையும் ,தோன்றும் நேரமெல்லாம்  விரும்பியவர்களுடன்!
விருப்பமாக; புலம்புவதுக்கு ;யாரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடித்த கருவி !

இன்று விலைகுறைந்த சாதனமாகி வீதியெங்கும் சிரிக்கும் கைத்தொலைபேசியில்!

 நீண்டநாட்களின் பின் தானாகவே மிரூனாவின் அழைப்பு இலக்கைத்தை அழுத்தியவாறே !
அருகில் இருக்கும் சோமபாணத்தை அருந்திக்கொண்டு ;வேலையால் வந்த அலுப்புடன் வந்தமர்ந்தான் சேகர்!


அறையின்  அருகில் இருக்கும் கணனியையும் ,இயங்கவைத்துக்கொண்டு .அப்போது அவன் எடுத்த அழைப்பில் எதிர்முனையில் இருந்து நீங்கள் சுழற்றிய நபரின் அழைப்பினை பூர்த்தி செய்ய முடியாத நிலை !
"தயவு செய்து மீண்டும் சரிபார்த்து சுழற்றவும் என்று சொல்லிக்கொண்டு இருந்தது சிங்களத்திலும், தமிழிலிலும் பின் ஆங்கிலத்திலும் அந்த டயலொக் இணைப்பு"

என்னடா சேகர் சிலோனுக்கு லைன் கிடைக்கவில்லையோ??

இங்கமாதிரி இல்லைத்தானே அஜய்!
 இலங்கைத்தொலைத்தொடர்பில் எத்தனை குளறுபடிகள் தங்க ,தங்க ஆட்களுக்கு முதலில் இணைப்புக்கொடுத்தல் ,கையூட்டல் ,சந்தேகத்தில் ஒட்டுக்கேட்டள் என இந்த தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தில் இருக்கும் பல கதைகள் இன்னும் இணையத்தில் வரமறுக்கின்றது !


.இப்ப எல்லாம் அவுட்கோச்சிங்க என்று அலங்கார வார்த்தையின் பின் அழிந்து போகும் அன்றாட  வாழ்க்கை ,அடுத்த நாட்டு மனிதவலுபற்றி எல்லாம் ஆர் மச்சான்  அஜய் ஜோசிக்கின்றான் ,பேசுகின்றான் !

சமதர்மம் பேசும் கட்சிகள் எல்லாம் இனவாதம் பேசுது இதுதான் டிரேண்டாம் !

அதைவிடக்கொடுமை !



தொலைத்தொடர்புத் துறை அமைச்சரே அத்துமீறல் செய்து பத்திரிக்கையில் அடிபட்ட செய்தி எல்லாம் இன்னும் மறக்கமுடியாது நாட்டைவிட்டு அகதியாக ஓடி வந்தாலும் !



உனக்கு இந்த ஓட்டக்கார வீரங்கணி ஞாபகம் இருக்கா ?? அஜய்!!

இவங்களும் ஒரு சாதனிதான்!


கொஞ்சம் இரு மச்சான் தொலைபேசி  அழைப்பு போகின்றது  இப்ப எப்படியும் லைன் கிடைக்கும்,!

அப்ப இன்று அவள் பாடு கந்தல்தான் நான் வெளிய போறன் என்று அகர்ந்து சென்றான்  அஜய்.

அழைப்பில் இருந்த ரிங்டோன் அழகான பாடல் இசைத்தது அதை ரசித்த படியே காத்திருந்த சேகரின் அழைப்பை உள்வாங்கினாள் மிரூனா!!

வரப்போகும் அர்ச்சனைப்பூக்களின் ஆத்திரம் பற்றிய முன் உணர்தள் பற்றிய உண்மை புரியாதவள் எதிர்முணையில் ஹாலே என்ற போதே சேகரின் கையில் இருந்த சோமபாணம் இறங்கியது தொண்டைக்குள்
ஹாலோ மிரூனா நான் சேகர் !

ம்ம்ம் தெரியும்!!

 வெளிநாட்டு அழைப்பு என்றாள் எனக்கு உங்களைத்தவிர யார் இருக்கா அண்ணா !

ஆமா இந்த அண்ணா ,நொண்ணாவுக்கு எல்லாம் குறைச்சல் இல்லை ! 
ஏன்னா எப்போதும் சுடுதண்ணி போலத்தானா !
.
ம்ம் ஆமா எப்படி இருக்கின்றாய்?
ம்ம் இருக்கின்றேன்.
 இன்னும் சாகவில்லைஓ அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கோ ??வாழ்க்கைஒரு மலையேற்றம் போல ஏறிவிட்டாள் நீ தான் மலைமுகட்டின் முதல் ஆள் !

ஏண்ணா இப்படி எல்லாம் நாம் எதிர்பார்ப்பது எதுவும் நடக்குது இல்லை. எனக்கு மட்டும் தானா ?இல்லை என் போன்ற பெண்களுக்கே இப்படித்தானா??சேகர் அண்ணா!

அட எண்ணாச்சு இப்ப ?

இன்னும் என்ன ஆகணும் ?முன்னர் போல இல்லை பாபு முகம் கொடுத்துப்பேசியே பல நாள் !

எல்லாம் உங்களாள் தான்!

 ஆமா நீங்கதானே என்னை!
ம்ம்

என்னாலா ஹீ ஹீ .நல்ல கதை ஏன் நானா அவனைக்காதலிக்கச் சொன்னே ??நான் தூது வந்தது மட்டும் தான் !


முடிவு நீங்க ரெண்டு பேரும் தானே எடுத்தீங்க!

 அப்பவே சொன்னேனே காதல் என்ற தேரை இழுக்க முன் ஜோசியுங்கோ இந்தத்தேர் சந்தியில் நின்றாள் !ஊர்சிரிக்கும்;உறவு பழிக்கும் ;என்று நான் காதலுக்கு காவடி தூக்கிய ஒரு வழிப்போக்கன் .

ஆனால் தேரில் வரும் தேவி நீ என்றாள் வடம் இழுக்கும் மன்னவன் பாபுதான் .

.ஐயோ அண்ணா நீங்க வார்த்தையில் வித்தை காட்டும் விற்பனையாளு என்று எனக்குத் தெரியும் .சாதரண,புகையிலையையும்  கோடாவில் புகையிலை என்று  சொல்லிக்கொண்டு சிரிச்சுப்பேசும் உங்க பேச்சு என்னிடம் வேண்டாம் !

எங்க சொல்லுக்கேட்காமல் ஏரிக்கரை ஊடகத்துக்குப் போய் இப்ப ஊரைவிட்டு ,நாட்டைவிட்டே .நடுத்தெரிவில் நிற்பது போல நானும் இருக்க விரும்பவில்லை .

மாலையில் டியூட்டி உங்களுக்கு இந்த  பதுளை ஊருக்கு  எப்போதும் வரக்கூடாது என்ற பிடிவாதம் போல எனக்கும் இருக்கு பிடிவாதம் .

நான் போனை வைக்கின்றேன்!
ஒரு நிமிசம் மிரூனா அவன் தொடர்வதுக்கு
முன்னே அவள் தொடர்பைத் தூண்டித்தாள்!


தொடரும் !!

23 June 2013

அந்த நாள் ஞாபகம்-14


 வணக்கம் உறவுகளே நலமா?? அந்த நாள் ஞாபகம் ஊடாக திரையரங்குகளில் சிந்திய மணித்துளிகளையும் ,மணிகளையும் எண்ணிப்பார்க்கும் எழுத்தில் பதியும் இந்தத் தொடர்க்குறிப்பில் இன்று எந்த திரையங்கினை அறிமுகம் செய்வது ?இது கொழும்பின் புறநகரான பாமன்கடையில் இருக்கும் ஈரோஸ் திரையரங்கு .

இதில் 2000 ஆண்டு பிற்பகுதியின் ஒரு  இரவு 9.30 காட்சிக்கு ஞாயிற்றுப்பொழுதின் முடிவுக்கு நண்பர்களுடன் முண்டியடித்த நாட்கள் இனியும் வருமா ?என்ற ஆதங்கம் இப்போதும் இருக்கின்றது ?இக்கரையில் இருக்கும் எனக்கு!:)))) !

இப்போது எல்லாம் புதுப்படம் பார்த்து சுடச்சுட பதிவு எழுதி மின்னல் வரிகள் கணேஸ் ,திடங்கொண்டாடு சீனு என முதல் பதிவு போட்டு எப்படி பிரபல்யம் ஆகலாம் என்று எல்லாம் நல்ல நிலையை சொல்லித்தரும் வித்தை போல :)))
நாங்களும் நட்புக்குள் அடித்துக்கொண்ட அந்த அழகிய அன்பு நாட்கள் இப்போது அரபுலகம் பக்கமும் ,புலம்பெயர்வுப் பக்கமும்  என ஆகிநின்றாளும் அதுகடந்து நமது நட்புக்குள் இன்னும் தொடர்புகள் ,முகநூல் ,அலைபேசி என அங்கங்கே மின்னல் களைகட்டுகின்றது தொடர்ந்து!

இந்தப்படம் இலங்கையில் வெளிவந்து இரண்டாவது வாரம் தான் களைகட்டியது அதுக்கு இதன் இசையும் ஒரு காரணம் இதன் பல பாடல்களை தனியார் /அரச பண்பலைகள் இடைவிடாது ஒலிக்க விட்டது அதில் ஹாரிஸ் ஜெயராச் !


இதற்கு முன் மஜ்னுபடத்தில் முதல் இசை அமைத்தாலும் இந்தப்படம் முதலில் வந்ததாள் இதுதான் ஹாரிஸ் ஜெயராஜ்சின் முதல்ப்படம் என்று முதலில் அறிவுப்பு செய்து மூக்குடைபட்ட சில அறிவிப்பாளர்கள் நம்மவர் நிலையை நினைக்கும் போது சிரிப்பு வரும்!

 பின்கதவாள் அறிவிப்பாளராக முன்வரும் வித்தை தெரியாத என் நட்புக்களின் அன்றைய நிலையை என்ன சொல்லவது !அவை எல்லாம் கனவுகள் என்றாலும், அந்த நேரத்தில் கைகோர்த்த நட்புகளின் ஞாபகங்கள் இன்னும் மின்னல் அடிக்கின்றது.

அதையும் என் வலையில் தொடராக ஏற்றி வருகின்றேன்  .இந்தப்படம் பார்த்த எங்கள் நட்பு ஜோடிகளுக்காக ஆயிரம் பொய்  சொன்னாலும் அடிவாங்க ஒரு நண்பன் தேவையடா மச்சான் என்றவர்கள் நிலை என்ன??

அந்த நட்புக்குள் சகோதரமொழி நங்கைகளும் இருந்தார்கள் என்பதுக்கு நானே வாழும் சாட்சி :))) பொறுத்து இருங்கள் இந்தத்தொடரில்:)))

இந்தப்படத்தில் இந்தப்பாடல் அதிகம் எனக்குப்பிடித்தது அப்போது இல்லை !

அந்த நண்பன் அறையில் கொழும்பில் இருந்த போது இல்லை பாரிஸ்  வரும் வரை ஏனோ பின் இந்தப்பாடல் என் கைபேசி ரிங்டோனாக இருந்தது பின் வந்தகாலத்தில் !ம்ம் ஓ நானும் காதலில் விழுந்து விட்டேனோ நான் அறியேன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

தொடரும் அந்த திரையரங்குகள் முகவரிகள்§ஈஈஈஈஈஈஈ
§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

21 June 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-7


என்னிடம் மட்டும் எல்லாம் சொல்ல நினைக்கும் 
என் நண்பனே என்ன தெரியும்?
 என் அகதி நிலை !

எங்கோ போக வெளிக்கிட்டு 
என்னையே தொலைத்தேன் என்று .
எல்லாம் அறிந்தவன் நீ !

என்றாலும் எல்லாவற்றையும் என்னிடம் 
எதிர்பார்ப்பதும்
எனக்கு புரியாத புதிர் 
என்னாள் ஏற்ற முடிந்தது
ஏதிலி என்ற பின்!
என்னால்உன் காதலுக்கு
ஏற்ற முடிந்தது!

எண்ணெய்  தீபம் போல ஒரு வெளிச்சம் தரும் மொழுகைப்  போல !
என் நிலை இதுதான் !

ஏதிலி ஆனபின் 
என்னையே காதலில் கருகும் தீபம் ஆக்கும் என் கதையை என்று அறிவாயோ?? ??

என்ராலும் எடுக்கின்றேன் என் நண்பனுக்கு என்ன ஆச்சோ என்ற தவிப்பில்.

((( சேகர் நாட்குறிப்பில் இருந்து)2009!!

 செவ்வாணம் குளிரைப்போர்க்கும் மாலைப்பொழுது போல  கவர்ச்சி நடிகை இழுத்துப்போர்த்து இனி இப்படித்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டது போல இந்த இரவையும் எதிர்பார்த்து இரவியும் போய் ஓய்வு எடுத்தான் .இனிய நிம்மதியோடு  பதுளையில்.

அப்போது தவிப்போடு  வெளிநாட்டு அழைப்புக்கு காத்திருந்தான் பாபு . அழைப்பு எடுக்கின்றேன் என்ற சேகர் எத்தனை மணி என்றாலும் நிச்சயம் அழைப்பான் அதன் பின் ஸ்கைப்பில் வருவான் என்ற நம்பிக்கை அவனுக்கு தேர்தலில் நாம் ஜெவிப்போம் என்ற கட்சியினர் நம்பிக்கை போல காத்திருந்தான் பாபு.

 அந்த கொமினிக்கேசன் மூடும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்க பாபுவுக்கும் மனதில் தயக்கம் நீண்டுகொண்டே போனது உடரட்டை ரயில் போல !

என்றாலும் உற்ற தோழன் உதவாமல் போக மாட்டான்  என்ற உணர்வோடு காத்திருந்தான் .காலம் எல்லாம் காதல் வாழ்க முரளிபோல "ஒருமணி அடித்தாள் உன் ஞாபகம் நினைப்பில்" அவன் நினைப்பில் காடையர்கள் போல  தீ வைக்காமல் !

பாரிசில் மாலை உணவக வேலைக்கு போக முன்னர் நாரிப்பிடிப்புக்கு ஒத்தடம் போல ஒரு வேலை முடிந்து வந்தாள் ஒரு தூக்கம் போட்டுவிட்டு மறு வேலைக்குப் போகும் இயல்பு கொண்ட சேகர்.

 கைபேசியில் அழைப்பு எடுத்தான் பாபுவுக்கு.
 என்னடா மச்சான் ?என்னாச்சு ?
குணால் மெசேச் போட்டான் !

நீ கொஞ்சம் குழம்பிப்போய் இருப்பதாக  .ஒரு கட்சியில் இருந்து மறு கட்சி மாறும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களபோல என்று .

அதனால் தான் நீ உடனே பேசணும் என்ற போதும்அதிகாலை வேலைக்குப் போகும் அவசரத்தில் இணையத்தின் ஊடே முகம் காட்டவில்லை .
சாரிடா பாபு!

சொல்லு என்ன பிரச்சனை ?
நான் என்ன சொல்ல ?மிரூனா என்கூடப் பேசி ஒரு வாரம் ஆகுது !
டெலிபோன் எடுத்தா பேசுறதில்லை நேரில் போனா டியூட்டி டியூட்டி என்று விலகிப்போறா .என்ன செய்யிறது என்று புரியல மச்சான்!

 மனசு எல்லாம் ஒரே குழப்பம் !

அதுதான் உன்னோடு பேசுறன் இன்று எனக்கு நட்புக்கா நீதானே ! 

என்னடா நீ இப்ப்டி அரசியலில் இறங்கின வடிவேலு போல !

ஏன் மிரூனாவுக்கு பிடிக்காத விசயம் ஏதாவது செய்தீயா மச்சான் ?
இல்லடா !
ம்ம் 

ஆமா நீ எப்படிடா  இருக்கின்றாய் பாரிசில்?
என்ன கத ??சேகர்!

நானா ?நல்லா இருக்கின்றேன் !சந்தோஸமாக ,சுபீட்சமாக ,அமைதியாக ,ஆனந்ததமாக  ,குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக்கண்ணா என்று  இருக்கின்றேன் என்று சொல்ல இன்னும். ஆசைதான்! ஆனாலும் இன்னும் எதுவும் நல்ல .தகவல் இல்லை மச்சி!

ஓ அப்படியா!
ம்ம்!

நீ கொஞ்சம் மிரூனாவோட பேசு மச்சான் பிளீஸ்டா!

பாபு உனக்குத் தெரியாத விடயம் இல்லை நான் விரதம் தொடங்க இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு.
கார்த்திகை முதல் வர இன்னும் இரண்டுநாள் இருக்கு இல்ல!

 ஆமா !!

நீ சாமி ஆகமுன் என் நண்பனாக பேசு சேகர்!

ஆமா உதவிக்கு வரலாமா  என்றாள் அது எப்போதும் மிரூனாவுக்காகத்தான் !
ம்ம் நிச்சயம் நான் பேசுறன் பாபு நாளைக்கு மிரூனாவுடன்!

ஆமா ஒரு வாரம் ஒரு காதலி பேசாமல் இருக்கின்றாள் என்றாள் ஏதோ ஊடல் என்று படித்து இருக்கின்றேன் கவிதை.! நீ இன்னும் பாழான புத்தகம்  வாசிக்கும் விசயத்தை கைவிடலையா!\
ஹீஈஈஈ!
இப்ப நான்  சுதந்திரமாக கட்டுப்பாடு இல்லாத இணையத்தில் பலதை ப்படிக்கின்றேன் மச்சான்!
ம்ம்ம்! ஆமா பாபு!

அப்படி என்ன தான் செய்தாய் நீ ?மிரூனாவுக்கு கோபம் வர

நான் ஒன்றும் செய்யல சேகர் .
அதுதான் எனக்கும் புரியல மச்சான்!

என்கிட்டயே மறைக்கின்றாயா ?
என்னடா நீயும் என்னைப்புரிஞ்சுக்க மாட்டியா ???

ஹீ ஹீ உன்னை நான் புரிஞ்சளவுக்கு வேற யார் இருக்கின்றாங்க சொல்லு பார்ப்போம் பாபு!ஒரு படித்த மனிதன் இல்லை பண்பான மிருகம் ,ஒரு கீறல் விழுந்த மரம் சரி காட்டு!


 தொடரும்!!

20 June 2013

ஓர் ஓப்பாரி!!!!

ஏன் வந்தாய் என் வழியில்?
ஏனோ ஏதிலி நானும்
ஏற்றுகின்றேன் என்
ஏழை வாழ்வில்
ஏதிலியாகிய பின்!

ஏன் என் தேசம் மறந்தாய்  ,?
எனக்கோ என்னை மறந்தபின்!
எழுதிச்செல்லும் இசை இது!

எனக்கு இல்லை சோகம்
என்னை மறந்த உன் வாழ்வில்!
எங்கிருந்தாலும் என்றும் நலமா
எப்போதும் வாழ்க!
ஏதிலி இவன் வாழ்த்துகின்றேன்!
என்றும் இசைக்கும் கீதம்!
எவனோ இவன் ஏதிலி
என்றும் யாசிக்கும் அன்பில்!!!!!

17 June 2013

காதல் கடிதம் -பரிசுப்போட்டி திடம்கொண்டு போராடு!


வணக்கம் உறவுகளே திடம்கொண்டு போராடு சீனு காதல்கடிதம் எழுது என்று ஒரு போட்டி வைத்து இருக்கின்றார் .இவனோ படிக்காத தனிமரம் என்றாலும் ஆசையில் ஒரு கற்பனைக்கடிதம் இது அதில் வரும் கருத்துக்கள் யாவும் தனிமரத்தின் கற்பனையே  !

  கல்லாதவன் கட்டையில் போகும் வரை கரைசேராது கனவுகள் ,கவிதைகள் ,காணங்கள் ,கடுப்பாகும் கல்விமான்கள் கலந்துகொள்ளாது காத்து இருங்கள் கல்வியில் இவன் கட்டாயம் தோற்றவன்!

   அன்புடன் அதிகம் புலம்பும் அகதி இவன் ஏதிலி எனக்கு இல்லை முகவரி எல்லாம் இல்லாத தனிமரம் என் பெயர்!
                                                      என்றும் இவன் வழிப்போக்கன் ஜீவன் எனக்கு   நண்பன்!எப்போதும் பிரியாத நட்பிள்§ இப்படிக்கு
                                                                                 நேசன்!!!!
///////////////////////////////////////////////////////////////////////

நேசத்துக்குரியவளே !ஜீவனுக்கும் ஜீவநாடியாக ஜனனித்தவள் நீ என! என் ஜீவன் துடிப்பது உன்னை நேற்று நீண்டகாலத்தின் பின் நேரில் பார்த்த போதே பாழானது என் பார்வை !



நீண்ட காலம் எந்தன் தேசத்தில் எத்தனையோ இடங்களில் எத்தனையோ பெண்களுடன் பேசும் தொழில் முன்னம் எனக்கு !அப்போது எல்லாம்   என்னுள் வராத மாற்றம் நேற்றில் இருந்து நெஞ்சமெல்லாம் நீ வந்து நினைவுகளை சுருதிமீட்டுக்கின்றாய் !
ஜீவனுக்கு என்னாச்சு நேற்று எல்லாம் தூக்கம் இல்லை எங்கட தூக்கமும் போச்சு என்று நெருங்கிய நண்பர்கள் பலரும்  புலம்புகின்றார்கள் நானோ உன்னிடம்!ஆறுபெருகும் போது அதில் மூழ்கும் இளைஜன் போலவே உன்னை முதலில்பார்த்த கனங்களில் நானும் மூழ்கிப்போனேன் !

அகதியாக அடைக்கல விசாவுக்கு மனுக்கொடுத்துவிட்டு அரச விசாரணைக்கு காத்திருக்கும் அகதி போல என் யாசிப்பும் உன்னிடம் காதல் மனுக்கொடுத்துவிட்டு காத்து இருக்கின்றது என் நேசம்!

பிரியமானவளே உன் விழியில் இருந்தும் ,செவ்விதழில் இருந்தும் "உன் நேசம் என்னை வென்றதைய்யா!
 நீயும் நானும் சுதந்திரதேசமான பிரெஞ்சுதேசத்தில் !
கைகள் பிசைந்து
இந்த தேசம் எங்கும் வீதியுலா வருவோம்!
 இன்னும் பலதேசம் பறந்து பல நடைகள்  பயில் வோம் என்பாயா??!

என்னவனே நீ என்று என்னோடு யாழ்மீட்ட 
என்னிதயம் நீ என்று எப்போதும் சுருதியும் லயமும் போல நாம் சேர்ந்தே இருப்போமா??
எங்கள் இருவருக்கும் இந்த ஈர்ப்பு இடையில் வந்தது இல்லை !
எங்க பாட்டிக்கும் உன்னைப்பிடிக்கும் இந்த பேரனும்
இன்னும் உன்னை நினைவில் வைத்து இருக்கின்றான் !
மூன்று தலைமுறை பார்த்த நம் பங்கஜம் பாட்டியின் கதை எல்லாம் நினைவு இருக்கா??


நீண்ட தொடர் போல!


  இந்த இளைஜன் மீது இனி எல்லாம் சுகமே என்று சுந்தரத்தமிழில் சுருதி மீட்டுவாயா?, தங்கத்தில் ஒரு குறையிறிருந்தாலும் உன் சரீர அழகில்   ஒரு குறையும் இல்லாத நம் வீட்டு அத்தை பெற்ற அருமைப் பதுமை பண்பில் பிரெஞ்சுமொழிகூவும் குயிலே !
என்காதல் கீதம் இசைக்கும்  சுகியே!!

காதலியே யாசிப்பில்  பிதற்றும் இவன் மனம் புரியுமா உனக்கு ?
காதல் என்றாள் என்ன ??இரு வழியில் போகும் இனம் தெரியாத இரு இதயங்களின் தேடலின் இதய சங்கமா ??இந்தத் காதல் இன்பத்தேர் இதை இழுத்துச்செல்லும் இனிய தடம் எது இரவை விரட்டும் பகலைப்போல காதல்ப்பாதையில் போகும் விழிகளின் கோபுர தருசனம் என்றால்  !

நீ தேர் போலஉலாவும் வீதியில் நிற்கின்றேன் நேசத்தில் விரும்பிய படி நம் இந்தக்காதல் தேரை இழுக்கத் காத்திருக்கின்றேன் .இருகரங்கள் நீட்டி உன்னிடம் !


"சில்சில் சில்லெல்லா சொல்ல சொல் நீ மின்னலா "என்று டூயட் பாடுவோமா ?
என்று செல்லமாக கேட்கும் என் காதல் ஒரு தோடி ராகம்  பாடுமா ?

என் சுவாசமான சுகியே?
அகதியாக வந்தவனையும் அன்போடு பார்க்க உன் விழிகளில் என் ஜீவன் விரதம் கொள்ள விற்பனைப்பிரதிநிதி  இருட்டறையில் இருந்து இரவோடு இரவாக இந்த தேசம் வந்த அந்த வசந்த காலத்தின் பகல் பொழுதில் நீயும் மாமியோடு சேர்ந்து  அடி எடுத்து வைத்தாய் என் நண்பன் அறைக்கு !

அந்த நேரத்தில் என் நண்பன் சொல்லிய ஊர்கதைகள் கேட்டு உண்மையாகவா என்று ஒரு உள்ளக்களிப்பூ !
  உன் இதழ்களில் உதிர்த்தாய் அப்போது இரு கன்னங்களிலும் விழுந்தது
 இரு குழிகள் !

அந்தக்குழியில் தடுக்கி விழுந்த யானைபோல ஆனதடி என் நிலமை அன்று இரவு நான் எழுதிய பல கவிதைகள் சொல்லும் என் யாசகத்தை ; உண்மையில் அதில் சிலது விரசம், சிலது சிலிர்ப்பு ,என்று தனிமையில் சந்தித்தாள் சொல்லிச் சாய்வாய் என் தோலில் !

 சந்தோஸம் என்றாலே என் ஜீவன் எப்போதும் சொல்லும்   எங்கள் நட்பு வட்டத்தில் ஹாவதாவக் அமத்தக்க வெண்ட எப்பா அப்பே ரஸ்சாவக்  என்று அன்புத்தோழி  ஐராங்கனி அன்று ஒரு நாள் கேட்டாள் உள்ளன்பில் உருகி சந்தோஸமாக உடரட்டையில் !உம்ம மகே பெம்பர்த்தயோ உம்பட்ட கமத்தித  கைபிடிப்போமா??ஒரு குடையின் கீழ் பேரதெனிய பார்க்கில் ;பண்பாடுவோமா என்ற போதும் பல்லு இளிக்காமல் பண்பாக பற்று இல்லாமல்  பணி இன்னும் முடியவில்லை  பின் பார்க்கலாம் என்று நழுவி வந்த பாமரன் என்னையும் !


உன்னுள் உருகிப் போகும் வண்ணம் உதிர்த்தவளே உண்மையில் அந்த ஐராங்கனி உனக்கு உடன் பிறவாத மூத்த சகோதரி  !

ஜென்மம் பூராகவும் இது எல்லாம் நம் வீட்டுக்கதைகள் நாடு இப்படி ஆனதில் யாருக்கும் யாரைப்பற்றி ஒழுங்காக தெரியாத நிலை !யுத்தம் என்ற நிலையில் இடப்பெயர்வுகள் ,மகாவம்சத்திலும் பிழைகள் பல என்று சொல்லும் பாட்டியும் விட்டாள் ஒரு பிழை

அரவணைத்துப் போகத்தெரியாத பிடிவாதம் !!அதனால் வந்த குடும்பப்பிரிவு அடுத்த சந்ததி நீ பிரெஞ்சுதேசத்தில் பிழையாக நினைக்கின்றாய் பாட்டியின் பாசத்தை !


அந்த தாய்க்கும் ஆசையுண்டு பேர்த்திமேல் என்பதைக்கூட அறிய மறந்தவள்  நீ !
என்னையும் உருக வைக்கின்றாய் !
குருவிதலையில் பனங்காய் போல உன் மீது உன்குடும்பம் ஏற்றியது பல பாரம்
உனக்கும் என்ஜினியர் கனவு என்ற ஆசைக்கனவு !!
அதுவும் நான் அறிவேன்
அந்தப்படிப்பும் அழகாய்ப்படி என்னையும் சேர்த்து
அந்தப்படிப்பு முடிக்கும் முன்னே !!
ஆண்டவன் கருணையில்
அகதி விசா அதுவும் கிடைக்கும் !
அதன் பின்னே ஒரு வீடு
அத்தோடு உனக்கு என ஒரு தாலிக்கொடி
அத்தனையும் ஆயத்தம் செய்வேன்
அதுவும் பெட்டிக்கடை பேரம்பலத்தார் வம்சத்தின் வழிவந்தவன் நான்
அகதி!



உனக்கு சட்டதின் பிரகாரம் ஒரு சாட்சி நீ  கேட்டாள் போய் கேளு என் நண்பனிடம் பதுளையில் என் சொந்தப் பெயர் சொல்லி !
இன்னும் அந்த ஊர் கண்ணுக்குள் நிலவு போல !
அதுக்கு முதல் ஒரு வார்த்தை சொல்லிவிடு !

அன்பே நீதானடா என் உலகம் நம் குடும்பத்து
ஆலமரம் உன் வழியில் உனக்காக காத்து இருப்பேன் உயிர் உருகி அதுவரையில் ஆருக்கும் தெரியாமல் அலைபேசி அழைப்பு ,குறுஞ்செய்தி என்று கும்மியடிப்போம் தமிழ்ப்படம் போல !
கூட்டத்தில் இருந்து இமையும், இசையும் கலந்து இனியமையான பாடல் கேட்டு லங்காசிரியுடன் இரவில் இணைந்து இருப்போம்!

இந்தக்கடிதம் படித்தபின்  இன்னும் பேசலாம் பல கதை இவனுக்கும் இருக்கு இலக்கிய ஆசை ,இலங்கை ஜனாதியுடனும் இவன் போட்டோ வந்தது இலங்கை நாளிதழ் எல்லா மொழியிலும் இன்ன திகதி என்று என்னைத்தவிர இங்கு இன்னும் பலருக்கு இன்னும்  தெரியாது !


இவன் ஒரு வழிப்போக்கன் இதயத்தில் ஒரு இடம் கேட்கும்
 உதவாக்கரை உன்னை நினைத்து
உயிர்கொண்டு உண்மையில் எழுதுவேன் !
உனக்கு பல கவிதைகள் ,கதைகள் ,
உன்னால் புரிந்து கொள்ள முடியுமா ???
உண்மையில் தமிழில் பல பொருள் அதில்
உண்மையில்  எழுதினால் பிழைகள் பல என
உன்முன் எனக்கும் வரும் உள்குத்து !என்ன குத்தும்  எந்தக்குத்தும்
உயிர் பறிக்கும் ,இனவாத ஆமிக்குத்துக்கு அருகில் வராது !
அந்தக்குத்தும்  அடிவயிற்றில் அதன் !
உயிர் முதுகெலும்பில் அழுதபடி வாங்கியவன்
உவன்  ஒரு அகதி ஆனாலும் ஆழுது புலம்பமாட்டேன்
உன்னாள் நானடி! உண்மையில் யாசிப்பதாள் !

உன் யாசிப்போடு அடுத்த சனி
உந்த ஊரில் இருக்கும் அந்தக்கோயில் விளக்கு ஏற்ற
உன்னை நினைத்து  என்னை நோக்கிவிடியலோடு வந்துவிடு !
உன் வருகைக்கு  உன் பாதையில் விழியில் வழிவைத்து
உந்தன்  பிரெஞ்சு தேசத்தில்விசா இல்லாதவன் வீற்றிருப்பேன்
உன் முன்னே வீதியில் ஒரு மரத்தில்!
  உன்னைநினைத்து பல கவிதை இன்னும்,உருகும் இவன் 
உண்மையுள்ள ஜீவன்!

    உனக்கு என் உருகும் காதலன் !
ஒரு ஊர் இல்லாத உதவாக்கரை!
                                                                   உண்மையுள்ள ஒரு வழிப்போக்கன்!
                                                                    இவன் ஜீவன்!!!

/////////////////////
!!!
ஹாவதாவக் அமத்தக்க வெண்ட எப்பா அப்பே ரஸ்சாவக்  என்று அன்புத்தோழி  ஐராங்கனி அன்று ஒரு நாள் //  எப்போதும் மறக்க வேண்டாம் எங்கள் தொழில் ! என்று சிங்கள் மொழியில் சொல்லும் பேச்சு வழக்கு!ஐராங்கனி ஒரு சிங்கள் மொழி பேசும் இலங்கை நங்கை!

//உம்ம மகே பெம்பர்த்தயோ உம்பட்ட கமத்தித  //நீ என் காதலன் உனக்கு விருப் மா ??என்பது உரடடை என்பது இலங்கையில் ஜாதியம் பேசுவோரின் பிறப்பிடம் இன்றைய இலங்கைப்பிரதமர் கூட அந்த வம்சம்!இது இலங்கை அரசியல்!ம்ம்ம் !!!
//////////////////போட்டிக்கு ஒரு கடிதம் பொறுத்தருள்க! இவன் கற்பனையை

16 June 2013

உனக்கு புரியுமா!!!!!!!!!!!!!!!

உனக்கு என  இதயத்தில் ஒரு
உருக்கமாக  உதிர்த்தது
உண்மையாக ஒரு காதல் ரோஜா!
உன்னிடம் உள்ளன்போடு
உதிர்க்க உன்னை நினைத்து
உன்னை யாசித்து உன்னை எனக்கு
உரியவள்  என்று உன்னிடம் வந்தேன்!!


உன் தாயிடம் உன் குறிப்பு கேட்டு
உனக்கும் ஆசை என் மேல் என்று
உந்தன் பாட்டி சொன்னா!
உண்மையில் ஒரு கோயிலில்

உன் படிப்பு  உயர் படிப்பாம்
உன்னக்கா உதவாக்கரை
உண்மையில் காத்திருந்தேன்
உன் முடிவு  கேட்டு!உன்முன்னே  !!
உதிர்ந்தது காதல் ரோஜா!!
உனக்கு தெரியுமா அதன் உண்மை ஆயுள்
உன்முன்னே உதிரும் உதவாக்கரை இல்லை
உண்மையில் அவன் இப்போது !
உற்ற தோழியான உன் கதை அறிந்த
உத்தமி் முன்னே உடன் பாடுகின்றேன்
ஊர்  அறிய ஒரு பாட்டு உனக்கு புரியாத!
உன் நாட்டு மொழியில்!!!


12 June 2013

ஏதோ ஒரு கிறுக்கல்!

முகவரி இல்லை
மூலையில் கிடக்கின்றது !
முன்னர் முன்னால் காதலிக்கு
முத்தத்துடன் முன்னொரு காலம்
முயன்று எழுதிய கடிதம்
முடிக்காத வரியுடன்
முடிவில்லா வரியுடன்
முடிப்பாணா முகம் இல்லா
முன்னால் கவிஞன்??


///
தொடரும் பயணங்களில்
தொட்டு விடத்துடிக்கின்றது
தொலையும் தண்டவாளம்
தொட்டுவிட்டாள்  தொலையும்
தொடருந்து  ரயில்!


///
கதையும் இல்லை கவிதையும் இல்லை
கண்ணீரும் இல்லை
காலம் எழுதிய கதை
காதல்!!

///
எழுதுவது ஒரு வலி
எழுத்தாளன் ஒரு தலைவலி
என்ன தெரியும்
என்று கேட்பதும்  எழுத்தாளனூக்கு
ஏற்புடையதோ!! எல்லாம் எல்லாரும்
எல்லாம் பெற வேண்டும்!!!\



///////////////////////////





10 June 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-6


பிடிவாதம் தளர்ந்து போகுமோ பாசத்தில்
பிடித்தவர்கள் முன்  பிள்ளைபோல இவன்
பிழையில்லாதவன் என்று 
பிள்ளைப்பருவத்தில் தத்து எடுத்தவர்கள் தெரிந்து கொள்வார்களா?
பிடித்த தன் காதலையும் தொலைத்து 
பின் உருகிய கதையும் கண்டு 
பின்னும் கலங்குவார்களோ??
பிறவி நீத்தலிலும் இந்த 
பூமியில் இவன் வருவானோ?
பிடிவாதக்காரன் அவன் உதவாக்கரை  என்றாலும் அவன்
பிடியிருக்கு இன்னும் இந்த ஊர்  உறவுகளிடம்  அவனுக்கு  சிலர் 
பிடிக்காவிட்டாலும்  பிடிக்கும் இந்த துங்கிந்த பாயும்
பின்னே பதுளைக்குஅவன் ஒரு பிள்ளைப்பாசம் ராம்கி போல!


       (சேகர் நாட்குறிப்பில் இருந்து)
அவன் தான் இங்க வரமாட்டானே ?நிஜம் தான் குணால் ஆனாலும் தலைவன்  நேரில் வரமுடியாவிட்டாலும் தம்பி ஒரு பாதாணியுடன் எல்லையில் ஆட்சி செய்த வரலாறு நீ மறந்தாலும் நான் மறக்கவில்லை .

சேகருக்கு என் நிலை அத்தனையும் அறிவான் நான் இதுவரை என் காதலில் எதுவும் சொல்லாமல் மறைத்தது இல்லை  மச்சான் .

குணால் உன்னிடம் பேசமுடியாத பலவிடயங்கள் அவனிடம் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கின்றேன் .

பல செய்திகளுக்கு அவன் வாழும் சாட்சி  என்ன இந்த  நாட்டுக்கு வரமாட்டான் என்று தான் நான் நினைக்கின்றேன் .

அவன் பிடிவாதம் நன்கு அறிந்தவன் என்றபடியால் ஆனால் வந்தாலும் இங்கு வருவது சந்தேகம் வர .

ஆமா நீ எங்க இந்த நேரம் ?
ஆ நானோ ?

நீ செத்துடுவன் என்று உன் யாசசகமான நண்பன் சேகருக்கு சொன்னீயா ?

அதுதான் அவன் என்னை காலங்காத்தாலேயே அலைய விட்டிருக்கின்றான் !

"நீ தூக்கில் தொங்கின்றாயோ ?இல்லை டமரோன் குடிக்கின்றாயோ ?இல்லை இந்த தெய்யனாவ ஆற்றில் குதிக்கின்றாயோ ?
என்று பார்த்து வரச்சொன்னான்! 

போடாங்  நாதாரி .

பக்கத்தில் இருக்கும் எங்களை மறந்துட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உதவாக்கரை நண்பன்  உனக்கு உதவ முடியுமா ??

 அப்படி என்ன தான் பிரச்சனை உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை குணால் நீ போ உன் வேலையைப்பாரு ஆனால் நான் சாகும் அளவுக்கு கோளையில்லை!

சரி அழாத வா சல்காது ஓட்டலில் மாலுப்பாணும் டீயும் குடிப்பம் இப்ப பாண் விலைகூடினாலும் இன்னும் அந்த பால்யகால ஞாபகம் இதயக்கனி  போல இருக்கு இல்லடா குணால் எனக்கு இப்ப டீகுடிக்கும் மூட் இல்லை !

ஏன் காலங்காதலேயே ஒரு சொட் போட்டுவிட்டியோ ?

போடா இப்ப எல்லாம் குடிப்பதுகூட குறைந்துவிட்டது எல்லா நண்பர்களும் இருக்கும் இடங்களே தெரியாதநிலை சரி வா நான் பில்கொடுக்கின்றன் பாபு .

என்னடா நான் காசு இல்லை என்றா சொன்னேன் குணால் ? 

நட்புக்குள் என்ன கணக்கு என்னிடம் இருக்கும் போது நான் கொடுக்கின்றேன் உன்னிடம் இருக்கும் போது நீ கொடுக்கின்றாய் !நட்பைப் புரிந்து கொள்வது தான் முக்கியம் மச்சான்! 

ஆமா சேகருக்கு மட்டும் எப்படிடா நீ இப்படி ஆத்ம நண்பன் ஆனாய் நீ அவனுக்கு இந்த நாட்டைவிட்டுப்போனாலும் உன் குடும்பத்தில் மட்டும் இருக்கும் அக்கரையை என்னால் புரிஞ்சுக்க முடியல!

 உனக்கு மட்டும் அவன் எப்படி எல்லாம் இருக்கின்றான் என்று போட்டோ எல்லாம் அனுப்புகின்றான் .

எங்களுக்கு ஒரு தகவலும் அனுப்புகின்றான் இல்லையே இப்படியா நாம் முன்பு பழகினோம்! உண்மைதான் மச்சான் ஆனால் வெளிநாட்டு வாழ்க்கை வேற உலகம்  அது சொன்னால் புரியாது நாம் தமிழ் ஹிந்தி படத்தில் பார்க்கும் போல ஆடம்பரம் இல்லை !அதன் பின்னே இருக்கும் வெளிநாட்டு அழுக்கு  சாதாரன வாசிப்புக்கு கமடியாக இருந்தாலும் உள்வாங்கி வாசித்தால் புரியும் அதன் பின் எல்லாம் இருக்கும் காதல் வலி ! அது எல்லாம் நமக்கு  ஹில்மா ?ஹிட்சா ?என்னதெரியும் ?

மகேல ஜெயவர்த்தன வெண்டானா ,அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ,அடுத்த கனவுக்கன்னி யார் என்று தானே  நம் வாழ்க்கை??!ம்ம்  ஆனால் சேகர் வேதனை மிரூனா போல  நாம் யாரும் அறிய மாட்டோம் ஏன் நான் கூட!
 அந்தளவுக்கு சிரிப்பில் அவன் ஒரு மகா நடிகன்! ம்ம்ம்


தொடரும்!!!!