31 May 2013

கவிதை போல கிறுக்கல்.-

நீ வருவாய் என
நின் நினைவில்
நிழல்கீழ்
நின்னை நினைத்து
நீராடிக் காத்து இருந்தேன்!
நீயோ விலகிப்போனாய்
நிலவு தேய்ந்த அம்மாவாசை
நிலவுபோல!




வருகின்றாய் என் வழி எல்லாம்
வாசலில் விட்டார்கள் வருவோர்கள்
வாசம் அறியா வஞ்சி இன மஞ்சள்
வாசலில் கோலம்!ம்ம்



ஏன் வந்தாய் என் வழியில்?
என்னை நிந்தித்தாய்
ஏனோ பிடிக்காதவன்!
என்னையும் ஏனோ
என்றும் தூற்றும் உன்
என்றும் காதலன் இவனோ??
ஏன் அவனும் ஏதிலியோ?,,
என்றும் அறியேன்!
என் உயிர்த்தோழியே!

என்றாலும் நீ வாழ்க!!!!
என் காதலியே!
எங்கோ வாழும் இவன்
என்றும் ஏதிலி!

28 May 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-4


நவீன பொருளாதார மாற்றம் இன்று பதுளை நகரையும் நவீன வசதிகளுடன் கொழும்பு நகருக்கு இணையாக உள்கட்டுமான மாற்றம் செய்து வருவது எங்கள் ஊர் அமைச்சரின்  தூரநோக்கும் ,அவர் ஆளுக்கட்சியில் முக்கிய துறையில் இருக்கும் அமைச்சர் என்பதால் என்றால் மிகையில்லை !

இந்த ஊரில் யானைச்சின்னம் வென்றாலும் ,கதிரையின் செல்வாக்கு அழிக்கமுடியாது .

.இன்று நவீன குளிர் ஊட்டப்பட்ட இந்த கொமிக்கேகசன் !

புதியதாக தெரிந்தாலும்  முன்னர் இருந்த இந்த இடத்தின் கடையின் நீங்காத நினைவுகள் உண்டு பலருக்கு எண்ணத்திலும் ,இதயத்திலும் இன்றும்!
அதன் பழைய அமைப்பு இன்னும் என் கண்ணுக்குள் நிலவுபோல !

முன்னர் இந்த இடத்தில் இரண்டு சுருட்டுக்கடை அருகருகே இருந்திச்சு !பஸ்சில் காதலருக்கு ஒதுக்கப்பட்ட இரட்டைச் சீட் போல  !

அவர்கள் வடக்கில் இருந்து வந்தவர்களின் மூன்று தலைமுறையை நானும் இந்த 30 வயதுக்குள் இங்கே பார்த்திருக்கின்றேன்.

 என் தாத்தா ,பின் என் அப்பா ,அதன் பின் நான் .என்று ஆனந்தம் படத்தில் வரும் திருப்பதி ஸ்டோர் போல அந்தக்கடைப்பெயர் இன்னும் மனசுக்குள் மத்தாப்பூ .

இந்தக்டையில் வாங்கிய சில்லறைச் சாமான்கள் மறக்கமுடியாது !அதுவும் அந்த K.R மார்க் சுருட்டு வாங்கியரச்சொல்லி எங்க தாத்தா எத்தனை கதை சொல்லி இருப்பார் சின்ன வயதில் எனக்கு தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் போல அது மட்டுமா இங்க தானே சேகர் எங்களுக்கு அறிமுகமானது ஒரு கார்காலத்தில். பள்ளிக்கூடம் வந்தது இந்தக்கடையில் இருந்து தானே  !

நாங்கள் எல்லாரும் பலகாலம் நினைச்சது அவனும் ஒரு வேலைக்காரன் என்று ,அப்புறம் தான் தெரியும் அவனின் தாய்தந்தை ,வடக்கில் நடந்தகொண்டு இருக்கும் போரில் இருந்து உயிர் தப்ப அவனை மட்டும் அவன்  தாய்மாமா பதுளை கூட்டியந்து வேலைக்காரன் போல வைத்து இருக்கின்றார் என்று ! அதுவும் உயர்தரத்தில்  தான்  நம் நட்புக்கள் பலர் அறிந்தது .

பின் இந்தப்பள்ளியில் நடந்த ஒரு கறுப்புப் புள்ளிச் சம்பவத்துக்குப் பின் பலரும் பலகட்சியில் .யார் யார் எல்லாம் வசதியிருக்கின்றதோ ?மக்களுக்கு சேவை என்ற பெயரில் வரும் நடிகர்கள் போலத் தான் தனிக்கட்சி என்றாகிவிட்டது மதவாதம் பிரதேசவாதம்,இனவாதம் நட்புக்களுக்கு இடையிலும் முகநூலில் கூட முகம் இல்லாத நிலையை எத்தனை நண்பர்கள் அறிவார்கள் ??


இந்தச் சம்பவத்தை நன்கு அறிந்த ராகுல் கூட இதன் இணைப்பான இன்னொரு கடையில் இருந்தவன் .அவனுக்கும் அதிகமான நண்பர்கள் இங்கு இருந்ததில்லை  !அவனுக்கும் ஒரு சில நல்ல நட்பு சேகர் போல பாபு போல இருந்தார்கள் !ஆனால் அந்த ராகுல் எங்களுக்கு வில்லன் போலவே இருந்தான் படிக்கும் காலத்தில்.

 காதல் ஒரு வாலிபவிளையாட்டு என்று புலம்புவதே அவன் இயல்பு !இப்ப உயிரோடு இருக்கின்றானா ?இல்லை இனவாத யுத்தத்தில் கானாமல் போனோர் பட்டியலிலா என்ற தகவல் ஏதும் எனக்கு இன்றும் தெரியாது !

ஆனால் இந்த பாபுவுடன் தொடர்பில் இருக்கும் சேகர் நிச்சயம் அறிவான் !அவனும் ஒரு பனங்கொட்டை .ஆனால் சொல்லமாட்டான் என்பது இராணுவ விசாரனையில் ஸ்லோன் பட்டையால் மலவாசலில் பைப் வைத்துக் கொண்டு காதில் அடித்தாலும் ,சேகரிடமும் ஒரு விசயத்தை அறியணும் என்றால் கல்லில் நார் உரிப்பது போல !

ம்ம் இந்த பாபுவும் ஒரு சில தகவல் அறிவான் புலனாய்வு பத்தி செய்தி எழுதும் ஊடகவியளார் போல !

ஆனால் உண்மை நட்பில் கூட ஏதும் சொல்லமாட்டான். இருடா நீயும் கிரிக்கெட்டில் புக்கியிடம் மாட்டிய விளையாட்டு வீரர் போல உன்னையும் சேகரிடம் மாட்டிசிடுகின்றேன்!

 நீ பேசிய கொமினிக்கேகன் எது என்ற வாரே அந்த கொமினிக்கேசன் முன்னால் இருக்கும் பாபுவைச் சந்திக்கச் சென்றான் குணால்!

தொடரும்......

24 May 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-3


காலநிலை மாற்றமும் ,கால மாற்றமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை !தூரதேசத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புப்போல!

 அப்படித்தான் குணாவும் சேகர் அழைத்தவுடன் பாபுவைத் தேடி தன் ஆட்டோவில் ஹாலி-எலவில் இருந்து பதுளைக்குச் சென்றான் .

இந்தக்கிராமம்  பதுளை நகரில் இருந்து 6 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் ஹாலி-எல என்றகிராமம் .

இந்த ஊர்தான் 1983கலவரத்துக்கு முன் நகரம் போல செழிப்புடன் வியாபாரங்கள் நடந்தகொண்டு இருந்தது . வடக்கில் இருந்து வந்தவர்களின் சுருட்டுக்கடை என்ற வியாபாரம் ஒருபுறம் ,என்றால் !இன்னொருபுறம் இந்த மண்ணில் இந்திய தோட்டத் தொழிலாளர் வம்சத்தின் அடுத்த சந்ததி புடவைவியாபாரம், இத்தியாதி என்று ,செழிப்புடன் இருந்த ஊரில் இனவாதம் 1983 இல் ஆடிய வெறியாட்டம் பார்த்த என்பால்ய காலம் இந்தியாவில் குஜாத் கலவரத்தைப் போல இன்னும் மறக்க முடியாது. என்பது போல நம் தமிழர் வாழ்வில் என்ன செய்வது !

இப்ப இந்த ஹாலி-எல செழிப்பும் இல்லை மார்க்கட் இழந்த தமிழ்சினிமா நடிகைபோல  பிரபல்யம் இல்லை இப்போது .எல்லாரும் பதுளையைத் தான் ஹிட்சுபடநாயகி போல சூழ்ந்து கொள்கின்றனர். 

இந்த இழவு பிடிச்ச பாபு பதுளையில் இருக்கும் எனக்கு ஒரு போன் எடுத்துச் சொல்லவில்லை .எங்கோ புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உதவாக்கரை சேகருக்கு மட்டும் சொல்லி இருக்கின்றான் .நட்புக்குள்ளும் இப்படியா பாரபட்சம்! ஒரே கட்சியில் இருந்துகொண்டு அடுத்த கட்சியில் சேர பேரம் பேசுவது போல இருக்கே ?

என்ன கொடுமையடா  !இப்ப எல்லாம் அவனவன் முகநூல், ஸ்கைப்  ,டுவிட்டர் ,என்று முன்னேறினாலும் முழுமையான அன்பை பகிர்வது குறைந்து போய்விட்டது .

என்ன இந்த ஆட்டோவும் சேகரின் அன்பளிப்பு என்பதால் கொஞ்சம் மனட்சாட்சியுடன் நடக்க வேண்டி இருக்கு .

 என்ன இந்த பாபு பதுளைக்கு அருகில் இருக்கும் என்னைக்கூட அவசரத்துக்கும் நினைக்கவில்லை .பாவுக்கு செவிட்டில் போடவேண்டும் ."என்னவோ நவீன உலகம் தன் கையில் இருக்கு என்று அடிக்கடி சொல்லுவானே "இப்ப உலகமே என் கையில் என்றும் !

நானும் சொல்லும் இந்தக் கைபேசியிக்கு சரி  ஒரு அழைப்பு, அல்லது குறுஞ்செய்தி கூட அனுப்பத்தெரியவில்லை கம்புநாட்டிப்பயல்.

 எனக்கு வரும் கோபத்துக்கு செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்காந்து வெட்டியது போல பாபுவின் தலையைச் சீவிவிடலாம் போல இருக்கு!

 என்ன செய்வது ஏதோ நண்பன் என்றாகிவிட்டான் .அதைவிட சேகரின் ஆஸ்தான நம்பிக்கைக்கு உரிய காகிரஸ் பிரதமர் போல பாபு .

இந்த நாட்டுக்கு வரமாட்டான் என்ற தைரியம் இந்த பண்ணி என் வேலையைக்கூட அதிகம் ஆக்குகின்றது .

ஏலவே என் அயர் சரியில்லை ,நேரம் கடைபிடிக்காதவன் என்று என் மனைவியே சொல்லும் நிலையில் !

நான் முன்னம்  பலதடவை எடுத்துச் சொல்லியும்  கேட்காமல் ஊடகம் என்ற ஆசையில் போகாத என்ற போதும் அந்த விற்பனைப்பிரதிநிதி வேலையில் வந்த யாழ்ப்பாண லூசன்  கொம்பு சீவியதில் கொழும்பு போய் இப்ப பதுளை ஊருக்குள் வரமுடியாத அரசியல் நிலை எல்லாம் சேகர் அனுபவதிப்பது போல இவனுக்கும் தேவையா??அந்த லூசன் விற்பனைப்பிரதிநிதி இப்ப எங்க இருக்கின்றானோ ?, ஜொல்லு விட்டக்கொண்டு!

ஒரு தகவலும் இல்லை இன்னும்!

ம்ம்


அவங்கள் தான் பிறப்பில் யாழ்ப்பாணம் பூர்வீர்கம் என்றாலும் இன்னும்

 சேகருக்கு தகவல் கொடுக்கும் பினாமி வேலை தொடர்ந்து  செய்யிறானோ ?இந்த பாபு  என்ற சிந்தனையில் ஆட்டோவை செலுத்திக்கொண்டு இருந்தான் குணால்!

.அவனின் சிந்தனை வேகத்துக்கு பதுளை நகரம் வந்துவிட்டதை எதிரில் இருந்த மணிக்கூட்டுக்கோபுரம் அதிகாலை 8.35 காட்டியது .இலங்கை நேரம்.


அதன்  முன்  எதிர் அருகில் இருக்கும் சர்வதேச தரத்தில் வாய்ந்த அந்த கொமிக்கேசன் முன் இருந்தான் பாபு!

தொடரும் '

!

22 May 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-2


பாரிஸ் தேசத்தில் எல்லோரும் சொந்த மாடிவீடோ அல்லது தனி வீடோ அதிகம் சிலர் வாங்க நினைக்க மாட்டார்கள்  .என்றாலும் ஒரு தொடர் மாடியில் ஒரு வீட்டுச் சொந்தக்காரணில் ஒருவன் தான் இந்த அஜய்.

அவன் தான் இந்த அறைக்குச் சொந்தக்காரன் அடுப்படியில் வேலை என்பதால் அதிகாலையில் எழம்ப மாட்டான். எனக்கோ அங்காடியில் அதிகாலை வேலை .

அதிகாலை 4 மணிக்கு  சினேஹா நடிகை போல என் பாரிஸ் காதலி நினைவில் கட்டிலில் புரளும் அந்த நேரத்தில் இந்த அழைப்பு வந்து ஆப்புவைத்துவிட்டதே !

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கும் ஆசை இனி வராது .என்னடா கைபேசியில் அடுத்த அழைப்பா ??போய் எடு அடுத்த மாதம் இன்னொரு அறைபார்த்துப் போய்விடு .

எந்தூக்கத்தை தொலைக்காத மச்சான். சரிடா. இந்த நேரத்தில் யாரோ ?எதுக்கும் கைபேசியில் வரும் அழைப்பினை நோட்டம் இட்டான் .அது ஸ்கைப் அழைப்பு .என்ன ?யாரு ,எங்க இருந்து ,என்று என்னைக்கேள்வி கேட்கமுன்,

 இந்த அஜய் பக்கம் கடந்து அடுப்படிக்கு எழுந்து போனான் சேகர்.

 மறுமுனையில்  அங்கிருந்து   அழைத்தது அன்பு நண்பன் பாபு!

 மச்சான்  சேகர் சாரிடா தூக்கத்தை குழப்பிவிட்டேனே? எனக்கு ஒரு பிரச்சனை மச்சான். என் நேரம் சரியில்லை .சொத்திடலாம் போல இருக்கு !


உன்னைவிட்டாள் எனக்கு இப்ப யார் உதவுவார்கள்?,,

 நாம் அப்படியா  தொழிலில் பழகினோம்?,, கொஞ்சம் இருடா! என்னாச்சு பாபு?? எது என்றாலும் கொஞ்சம் சாயந்திரம் பேசுவம் .

நான் வேலைக்கு கிளம்பும் நேரமாகுது .செத்துப்போவேன் என்றுமட்டும் என்னோட பேசாத .உனக்கு எது வந்தாலும் நான் மிருனாவுக்கு பதில் சொல்லவேண்டியவன் .

மறந்திடாத கவ்வாத்திக்கத்தியை தீட்ட வைக்காத !!ஆமாடா காதலில் வெட்டுப்படுவதை விட அந்தக்கத்தி மேல் !

சரி நீ வேலைக்கு கிளம்பு நான் பிறகு பேசுறன்..

மச்சான் டென்சன் வேண்டாம் .இப்ப நீ எங்க இருக்கின்றாய்? 
பதுளையில் தான்


. ஏண்டா இழவு பிடிச்சவனே !அங்க யார் போகச்சொன்னது உன்னை,  ?

நான்  வேலைக்கு இறங்கும் நேரம் .சாயந்திரம் வேலையாள் வந்து   பேசுறன் இன்னும் ஒரு 10
மணித்தியாலம் பொறு.!

***அனுவாரமே ஹந்தவ மம கத்தக்கரனவா அவுலக்நானே!''

என்னடா இஸ்கைப்பில் எனக்குப்புரியக்கூடாது என்று சிங்களத்தில் கதைக்கின்றாயா  சேகர்??


உனக்கு என்ன தெரியும் சகோதமொழி சிங்களம் பற்றி ,எந்த சிங்களம் பேசும் இலங்கை குடிமகன் வெட்ட வேண்டும்.கொத்தவேண்டும் .சுற்றுலா போனால் வேட்டி உருவி வீதியில் அடிக்க வேண்டும் .இது தானே உன் அரசியல் சித்தாந்தம் ,?அதுவும் புத்த பிக்கு எல்லாம் இனவாதி உன் பார்வையில் போடா .உன் நாடும் ,உன் தேசமும் ,உன் வெறியும்.

 நான் தனியாள்  எனக்கு அரசியில் ஒரு வெட்டு ஜால்ரா !விசில் ஊதும் சினிமா  ரசிகன் போல இல்லை நான். காலையில் என்னை சூடாக்காத அஜய்! நான் கோப்பி குடிக்கும் சுடுதண்ணி! ம்ம் உன்ர லைக்கா போன் தாடா அஜய் .

இந்தா!

 மறுநிமிடத்தில் பதுளையில் இருக்கும் குனாவிற்கு அழைத்தான் சேகர். ஹலோ மச்சான் நான் சேகர் நம்ம பாபு ஏதோ சிக்கலில் இருக்கின்றான் .ஒருக்கா போய்ப்பாரு நான் இன்னும் 10'மணித்தியாளத்தில் பேசுரன். ஓக்கேடா இப்போதே போறன் அவனிடம்!

என்ன சேகர் அப்ப இந்தமுறை சீட்டும் ,பிரெஞ்சுக்காரியுடன் டூயட்டும் பாட உன்னால் முடியாது போல :)))



உனக்கு நக்கல்  அஜய் சரி நான் வேலைக்குப் போறன். நீ தூங்கு என்னைப்போல நீயும் ஒரு காலத்தில் 7 நாளும் வேலை செய்யும் போது அப்ப பாரு நான் தூங்குவேன் டூயட் பாடிக்கொண்டு!!!
-----
தொடரும்.....

***அனுவாரமே ஹந்தவ மம கத்தக்கரனவா அவுலக்நானே!''--கண்டிப்பாக மாலை நான் கதைப்பேன் கஸ்ரம் இல்லைத்தானே ,?,என்று பொருள்படும் சகோதரமொழி சிங்களத்தில்!

முந்தைய் பதிவு இங்கே--http://www.thanimaram.org/2013/05/1.html

21 May 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-1

எங்கிருந்தோ இந்தவழியால் ஏன் வந்தேன்?
ஏன் தொலைந்தேன் ?

என்பூர்வபூமியில் இனவாதம் எல்லையில்
எழும்பி ஓடு என்றது வெறியாட்டத்தில்!
என் உயிர் தப்பி ஏன் வந்தேன்?
என்ற கேள்விக்கு ஏது பதில்?
என்றாலும் 
எனக்குள்ளும் இலக்கிய /இசையாசையில்
எங்கோ இன்னும் வாழ்கின்றேன்.
ஏதோ முகம் தொலைந்து
என்னுயிர்த்தோழியே என்பிழையும்
எழுத்துப்பிழையும்
ஏதிலிப்பிழையும் எப்போதும் என்னை அறிவாய்
என்ற எதிர்பார்ப்பில்
எங்கள் குலதெய்வம் ரெக்கில் அன்னையின்!
 எல்லையில் தீபம் ஏற்றி
எடுத்துவருகின்றேன் எந்தன் காவடி!

      என்றும் நட்புடன் நண்பனுக்கு
           ஏழுத்தாணி ஏற்றும்
              தனிமரம்.
என்று சொல்லிச் செல்லும் !

எனக்குப்பின் இருக்கும் சேகர் வாழ்வில்

எந்த முட்கள் நெஞ்சில் குத்தினாலும்
என்றும் கேட்காதே எங்கள்
ஊருக்கு எப்போது வருவீர்கள்?
எல்லோரையும் பார்க்க .எங்களை
எல்லாரையும் என்றும் அன்புடன்,
எப்போதும் சந்தோஸத்துடன்,
எப்போது வாழ்த்துவீர்கள்?
எங்களுக்கு நீங்கள் இன்னும் 
எங்கள் உயிர் நாயகனே!


எங்கள் நட்பில்  நீங்கள் 
என்றும் இலகணம் 
எங்களுக்குப் பிடிக்கவில்லை
எந்த பிடிவாதமும் உன்னிடம்
என்னையும் மன்னிக்க வேண்டும்
  ...........,என்றும் இவள் மீருனா!

          எழுதியது--18/1/2008 (நாட்குறிப்பில்)

பாரிஸ்வானில் குளிர்கால நேரமாற்றம், இன்னும் கொஞ்சநேரம் குறட்டைவிட ஆசையிருந்தாலும் !அடுத்து அடுத்து அடிக்கும் அலாரம் மணிகேட்டு எழும்பினான் அந்த 18  அடி அறையில் படுத்திருக்கும் சேகர் .அருகில் மேல்தளத்தில் படுத்திருக்கும் அஜய் என்னடா ?இப்ப தான் அதிகாலை  4 மணி அதுக்குள்ள அங்கிருந்து அழைப்போ? அங்க  இப்ப என்ன நேரம் என்று நீர்கொழும்பு முத்துலிங்கம் எழுதிய  நூல் படிக்காட்டியும் இங்கு என்ன நேரம் என்று தெரியவேண்டம் உன் உறவுகளுக்கு ?

நல்ல சினேஹா கனவில் படுத்துதிருக்கும் போது பாதியில் எழுப்பும் பாவிகளின் தொலைபேசி அழைப்பை தூக்கிவை ரிசிவரை இனி தூக்கிவைத்துவிட்டுத்தான் படுக்கணும் .


காலங்காத்தாலேயே கடுப்பூ ஏத்திராங்க நீயும் தூங்காமல் இப்படி ஏண்டா வீணாப்போகின்றாய் சேகர் .இப்ப எல்லாம் நம்நாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டில் இருப்போர் என்ன புக்கிள் போலவா காசு பரிமாற்றம் செய்ய தினமும் எங்கள் வாழ்க்கையே அன்றாடம் காட்சித்தான் இது என்ன சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் சின்னப்புள்ளத்தனமான செயல்போலவா இருக்கு? என்று சீண்டிவிட்டு மீண்டும் படுத்தான் அஜய் .!

தொடரும்.....
அறிமுகம் இங்கே....http://www.thanimaram.org/2013/05/blog-post_20.html.

20 May 2013

.என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி! அறிமுகம்.


வலையில் தனிமரத்தை நாடி ,ஆக்கமும் ஊக்கமும் தந்து அரவணைக்கும் அன்பான உறவுகள் அனைவருக்கும் வழிப்போக்கன் தனிமரத்தின் முதற்கண் வண்ணத்தமிழ்


மீண்டும் ஒரு காதல் ராகம் மீட்டும் 


இந்த நீண்ட தொடர் பயணத்தை உங்கள் பார்வைக்கு வலையில் ஏற்றுகின்றேன் அடுத்த பகிர்வு முதல்.!

நல்ல நட்புக்களின் புரிதல் எப்போதும் நல்ல செயல்களை முன்னெடுக்க ஊக்கசக்தியாக அமையும். அப்படியான நட்புவட்டத்தில் இந்தக் காதல் என்ற கவ்வாத்துக்கத்தி பலநேரங்களில் உறவுகளின் ரத்தம் கேட்கும் கோபத்தில் குளிர்காய என்பதும் ,அதன் பின் நிதானிக்கும் போது மனச்சிறைக்கதவுகளின் பின்னே கண்ணீர்ப்பூக்கள் சிந்தும் .

இப்படி செய்யத் தூண்டிய அந்தக்கணங்கள் ஒரு நொடியில் சுயம் இழந்த மனிதம் பற்றிய விடயத்தோடு இந்தத்தொடர்.எனக்குப் பிடித்தமான பலநட்புக்களின் வட்டத்தில் ஒருசில மலையகநண்பர்களின் வாழ்வில் அவர்கள் சந்தித்த ஒரு மறக்கமுடியாத சம்பவத்தின் காலத்தின் சுவடுகளை .எனக்குப் பிடித்த பாடல்களும் ,கவிதைகளும் சுமந்து.கதையாக தொடரும் இந்தத்தொடர். செல்லும் பூமித்தேசம் துங்கித்தைச் சாரலில் துள்ளிக்குதித்து காணாமல் போன ஒரு வழிப்போக்கன் நட்பு வாழ்வில் ஒரு சம்பவமே .


அவர்களை தனிமரமும் அறியும் விற்பனைப்பிரதிநிதியாக வலம் வந்த காலத்தில்  .!!அவர்களை மீண்டும் சந்திக்கும் காலம் வருமா என்றாள்??? எனினும் அந்த மலையகத்தின் இன்னொரு தோடி ராகம் இந்தத் தொடர்!



பதுளையில் தொடங்கி எங்கோ செல்லும் விதியின் பாதையில் தொலைந்த இந்த மாந்தர்கள்!சாமானியவர்கள் என்றாலும் ஏதோ ஒன்றைச் சாதித்தவர்கள் .அவர்களின் வாழ்க்கைப் பாதையில் அந்த அனுபவத்தை தனிமரத்துடன் பகிர்ந்த போது இலக்கிய ஆசையில்  தொடர்கின்றேன்.
இந்தத்தொடரும் தகுதியுள்ளதோ இந்த பதிவுலக மேடையில் நான் அறியேன்!


எப்போதும் படிக்காதவன் இவன் அதிகம் எழுத்துப்பிழைவிட்டாலும் ,என் நட்பில் தோள் கொடுக்கும் இந்த நண்பன் உதவியுடன் .

மீண்டும் மலையகவீதி வழியே பதிவுலக உறவுகள் உங்கள் பலரையும் அழைத்துச் செல்ல இருக்கின்றேன் .


இந்த பஸ்சில் ஏறிக்கொள்ள வாருங்கள் என் உயிரே என்னைப்பிரியும் ஒரு நொடியில் !


என்றும் நட்புடன்
தனிமரம் .


இந்தப்பாடல் கேட்ட வண்ணம்!

//கவ்வாத்துக்கத்தி-தேயிலைத்தோட்டத்தொழில் செய்வோரின் இன்னொரு ஆயுதம்!ம்ம்ம்ம்

16 May 2013

இன்னும் இல்லைத்தீர்வு! ஈழம்.


இப்படி ஒரு வாரத்தில் அங்கு
இருந்து இப்படி என்று !
இணையமும் இன்னும் பல ஊடகமும் இரங்கியும் !


இறுமாப்புடனும் இன்னும் பலசெய்தி
இங்கு வந்தது .


இன்னும் சில நாளில் ஒரு விடிவு
இனி என்ன ஈழம் போய் !
இந்த உயிரைவிட
இங்கிருந்து போக இனி
இங்கு இருக்கும் உறவுகளுடன்
இப்போதே தயாராகுங்கள் .
இங்கிலாந்து ஸ்ரேலிங்பவுண்  ஈரோ

 இன்னும் பல
இங்கேத்தே நாணயம் இன்னும் சில
இங்கத்தேய வசதி !
இப்படியும் சில
இலங்கைப்பிறப்பு!
இனி என்னவாகும் எங்கள் உறவுகள்
இப்போது என்னநிலை
இன்னும் உயிரோடு இருக்கின்றார்களா??
இணையம் 
இன்னும் கிடைக்கவில்லை .
இலங்கை ஊடகம் இன்னும் பொய் இனவாதத்துடன்
இங்கு  ஓதவில்லை.
இன்னும் வேலைக்குப் போகவில்லை
இன்று செப்பன் இங்கிதம் பேசுவான்
இன்று இரவு யாருடன் இருட்டில் இருந்தாய் என்று
இவர்களுக்கு என்ன தெரியும் .??
இடம்பெயர்ந்து இருந்த ,ஊர்பிரிந்து,
 இன்னுயிர் பிரிந்த, ஈழத்து கனவு சுமந்த
இயக்கத்தின் உண்மை முகம்.

இன்றும் வேலைக்கு வரவில்லை
இனி வேண்டாம் இன்றே தூக்கிவிடுங்கள்
இனி இல்லை வேலை.
இரவு தூக்கம் இல்லை
இன்னும் பதில் கிடைக்கவில்லை 
இணையத்தில் இருந்தேன் .
இரவு இரவாக இன்னும் இருக்கின்றோம்
இங்கு வீதியில் .

இன்னும் சாப்பிடாமல்
இந்த தலைமுறைக்கு ஈழம் தெரியாது.
இன்னும் தொப்புள்கொடி
இருக்கும் உறவு இந்தியா அறியாது.
இன்றும் சாப்பிடவில்லை
இப்போது வரும் செய்தி
இனி ஒரு விதி செய்வோம்.

இன்று உண்ணாமல் இங்கு இருக்கின்றோம்.
இந்த தேசம் எல்லாம் இறையாமை 
இருக்கும் தேசம் .
இலங்கைக்கு மட்டும்
இன்னும் ஈழம் கொடுக்கவில்லை
இனியும் ஒரு வழி பிறக்குமா?
இலங்கைத்தேசத்தில் இருட்டறையில்
இப்போதும் வாழும் இந்த ஈழக்கனவில்
இணைந்தவர்கள் வாழ்வில்!
இன்றும் வரப்போகின்றது. இலங்கையில்
இந்த இனவாதயுத்தம் வெற்றி கொண்ட
இலங்கை ஜனாதிபதி .
இந்தியா பயணம்
இன்னும் நம் பயணம்????


///



குறிப்பு-மே-18 வரவேண்டிய பதிவு சகபதிவாளர் பட்டாப்பட்டியின்  துக்கம் தனிமரமும் சேர்ந்து சகபதிவாளருக்கு அஞ்சலி செத்துவதால் மீண்டும் அடுத்த வாரம் பதிவுலகில் இணையும் உறவுகளுடன் .

சனி /ஞாயிறு மே 17/18 ஈழஅவலம் சுமந்த 4 ஆண்டு  தினம் இந்தப்பிறப்பு தாண்டும் வரை நம் இனம் மறவாது!