31 December 2011

மனம் கவர்ந்தவர்!

தமிழ் திரை உலகில் திரைப்படம் இயக்கும் இயக்குனர். என்ற ஒரு பதவி முள்கிரீடம் என்றால் மிகையாகாது.

 இது பலர் கோதாவில் குதித்தாலும் !வெற்றி பெறுவோர் என்றாள் மிகவும் விரல் விட்டு எண்ணி விடமுடியும்.

 ரசிகர்கள் மனநிலையை கணித்து படம் இயக்குவது .என்பது ஒரு திரைக்கலைதான்! அந்த வகையில் பலர் எனக்குப் பிடித்திருந்தாலும் .!

!குடும்பத்துடன் துணிந்து போகக்கூடிய ஒரு இயக்குனர் என்றால் ?

அது விக்ரமன் அவர்கள்தான் என்பது என் தெரிவு!

 நடிகையின் சதையை நம்பி ஓடும் குதிரை அல்ல அவர் பாதை .தன் கதை எப்படி ரசிக்கப்படுகின்றது என்பதை தீர ஜோசித்து இயக்கும் பொறுமையான நடைவண்டி இயக்குனர் தான்!

 என்பதை ஒரு பேட்டியில் கூறி இருந்தார். புதுவசந்தம்(1990)  என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனர் அடி எடுத்து வைத்தவர்.

 பல மேடு பள்ளம் கண்டு இன்றும் தமிழ் சினிமாவில் நின்று பிடிப்பவர்.

 இதுவரை 17  படங்கள் இயக்கிய அவர் அதிகம் நல்ல புகழில் இருந்த காலம் என்றாலும் !பின் தடக்கிவிழுந்த காலகட்டம்  என்றாலும்! புகழ் போதையில் நிலை தடுமாறாத ஒருவர் .

அதிகபடம் இயக்கும் சூழல் இருந்தும் அதை பயன்படுத்தாத இயக்குனர் எனலாம்!

பார்த்தீபனுடன் உதவி இயக்குனராக புதியபாதை படத்தில் இருந்தவர்.

 பின்தான் இயக்குனர் பதவியில் ஆசனம் அமைத்தார்.

 இவரிடம் இருந்து இன்று பலர் புதுமுக இயக்குனர் ஆகி தமிழில் வலம் வருகின்றார்கள்.

 ரமேஸ் கண்ணா(தொடரும்-அஜீத்) இவரின் சிஸ்யர் ,தேவயாணியின் கணவர் ராஜகுமாரன்,புன்னகைதேசம் ஷாஜகான்  ,வருசம் எல்லாம் வசந்தம் ரவிசங்கர் எனப்பலர் படங்களை இயக்கி அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்!

விக்ரமன் படங்கள் எப்போதும் அன்பும் ,காதலும் ,நட்பும் அடிநாதமாக பரவிக்கிடக்கும்!

 வில்லன் என்பது யாரும் இல்லை எனலாம் !அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து. பெண்களையும் தன்நம்பிக்கை உள்ளவர்களாக புரட்சி செய்வதில் இவர் என்றும் முக்கியமானவர் .

இவர் படநாயகிகள் என்றாள்! சித்தாரா(புதுவசந்தம்), மோகினி (நான் பேச நினைப்பது எல்லாம்) ,பானுப்பிரியா (கோகுலம்) , ரோஜா இவரை ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தவர் விக்ரமன் தான் !(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் )

என பலரையும் சொல்வது என்றால் பதிவு நீண்டுவிடும்!

விக்ரமன் படத்தில் பாடல்கள் மிகவும் பேசப்படும் .ராஜ்குமார்,சிற்பி இவருக்கு ஏற்ற கூட்டணி இசையமைப்பாளர்கள்.


சூப்பர் குட் செளத்திரியின் அறிமுகம் என்பதால் !
அவருக்குத் தான்  அதிகம் படம் இயக்கியிருக்கின்றார் .

அவை எல்லாம்
வெற்றிப்படங்கள். பெரும்புள்ளி படம் தான் இவர்கள் இணைவில் வந்து கரும்புள்ளியான  தோல்விப்படம் எனலாம் .

.இவர் இயக்கிய புதியமன்னர்கள் படம் தவிர மற்றப்படங்களைத் தவர விட்டது இல்லை .

அத்தனையும் முதல் நாள் பார்க்கும் ரசிகன் .அத்தனை தூரம் அவரின் இயக்கம் எனக்குப் பிடிக்கும்!.

 இடையிடையே இவர் தன் பாணியில்பிருந்து விலகும் போது அது ரசிகர்களால்   தோல்வி முத்திரை குத்தப்படுகின்றது .

எப்போதும் பெண்களுக்குப் பிடித்த இயக்குனர் இவர்.

இன்று விஜய் அவர்களிக்கு ஒரு மாற்றுமுகத்தைக் கொடுத்தது பூவே உனக்காக மூலம் விக்ரமன் தான்.

 அந்த நன்றிக்கடனுக்கு இந்த டாக்குத்தர் கொடுத்த விசுவாசம் உன்னை நினைத்து படத்தில் கொஞ்சக் காட்சிகள் நடித்துவிட்டு முரண்பட்டு படத்தினை இழுத்தடித்தது .

அதன் பின் சூர்யா அந்தப்படத்தில் நடித்தார் .என்பது சினிமா எக்பிரஸ் பதிவு செய்த ஒரு செய்தித் துளியாகும்!

முரளி  முதல்  பரத்  என்றாலும், சரத் முதல் விஜய்காந்த  என்றாலும் அவரின் ஹீரோவாகவே இருப்பார்கள்.

 .சூரியவம்சம் நடிகர் பட்டாளம் அதிகம் கொண்டது.

 2000 ஆண்டில் முதல் வந்த படமான வானத்தைப் போல படம் விஜய்காந்திற்கு ஒரு திருப்புமுனை.

 அதன் பின்பு வந்த பிரியமான தோழி, சென்னைக்காதல் படங்கள் தோல்வியைத் தழுவியது என்றாலும் பாடல்கள் ஹிட்ஸ்.

 .வானத்தைப்போல படம் தேசியவிருது பெற்றது!
 இத்தனை ஆண்டுகளில் இவர் மெதுவாகவும், குறைந்தளவு படங்களும் இயக்கியது இவருக்கு ஒரு பின்னடைவு எனலாம் .

ஒரே குடும்ப அம்சம் என்பதால் தற்போதைய சின்னத்திரை ஆதிக்கம் இவரின் ரசிகர் வட்டத்தை மாற்றிவிட்டது எனலாம் .

கூட்டுக்குடும்பம் போய் தனிக்குடித்தனமே கோட் வாசலில் அல்லல்படும் போது .


இவர் படங்களில் வரும் விட்டுக் கொடுத்தல் வாழ்வு முறை நடைமுறையில் சாத்தியம் இல்லை.
 தற்போதைய நிலையில்.!


 என்றாலும் திரைப்படத்துறையில் சமுகக்கட்டுப்பாட்டுப் பொறுப்பை மீறாத இயக்குனர் என்றாள் அது விக்ரமன் மட்டுமே !

 இவர் பல புதிய பாடல் ஆசிரியர்களை தந்தவர்  தபுசங்கர் ,ரவிசங்கர்,கலைக்குமார் என நீளும் அவர்களில் பழனிபாரதி (பெரும்புள்ளிபடம்) பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டவர்.

ரவிசங்கர்,கலைக்குமார்,  எனப்பலர் இவரின் உதவியாளராக இருந்து பின் திரைப்பட பாடல் ஆசிரியராக வலம் வருப்பவர்கள்.

 கலைக்குமார் உதவி இயக்குனர் என்பதை த் தாண்டி நல்ல தோழன்  ,விமர்சகன் தனக்கு என
அண்மையில் ஒரு பத்திரிக்கையின் தொடரில் படித்த ஞாபகம் .

.ரமேஸ்கண்ணா இன்று பலபடத்தில் அவருடன் இணைஇயக்குனராகவும், பின் நகைக்சுவை நடிகராகவும் ,இயக்குனராகவும் பட்டைகிளப்புகின்றார் .

.இவர் படங்களில் எப்போதும் ஒரு சுயதொழில் முன்னேற்றம் பற்றி நம்பிக்கையூட்டும் வழியினைக் காட்டுவார்.

புதுவசந்தம் தெருப்பாடகன் முன்னேற்றம்,சூரியவம்சம் வாகன தொழில் சிறப்பு ,வானத்தைப்போல ஊறுகாய்த் தொழில்,கோகுலம் அப்பளம் தயாரிப்பு உ.எ.கொ பேப்பர் போடும் தொழில் என பல
முன்னூதாரணங்களை பதிவு செய்வதில்  விக்ரமன் ஒரு ஆலோசகர் எனலாம்!

இவர் படத்தில் பாடல்கள் எப்போதும் சொற்சுவை இசைக்கலவை சேர்ந்த பஞ்சாமிர்தம்.

 .தன் கதையின் கருவை கவிஞர்களிடம் கலந்து போயி கவிவடிக்க இசைவாக தன் உதவி இயக்குனர்களை கவிஞர்களாக்கி அவர்களையும் வளர்த்துவிட்டவர்.

 .வைரமுத்துவை நாடாத ஒரு இயக்குனர். தன் கருத்தை ஊதாசினம் செய்தார் என்பதால் சேர்ந்து இயங்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியதாக ஞாபகம் .
விக்ரமன் படத்தில் எல்லாப்பாடலும் கதையுடன் ஒன்றிப்போய் வருவது அவர் சிறப்பு.

பாடல்கள்  எப்போதும் அமைதியாக ரசிக்கலாம் ஆபாசமும் கலக்கமாட்டார்! இவர் படப்பாடல்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நினைவுகளைச் சுமந்து வந்து கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஊர்களில் பார்த்து ரசித்தவன். அந்த காலகட்டங்கள் மகிழ்ச்சியும் ,வருத்தங்களும் கலந்த நினைவுச் சின்னங்கள்.

 இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும் !. பழனிபாரதியின் கவிதை நயத்தை ரசிக்க வெளிக்கிட்ட காலகட்டத்தில் !

இதில் வரும் அணி சிறப்பு  தாளம் தந்தது தென்றல் அதை கேட்டு வாங்கும் மூங்கில் புல்லாங்குழல் வீசும் காற்று அருமையான நினைவுகள் .மனம் போகுதே நதி மாதிரி!
மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்!
சரணாலயம் ! பிருந்தாவனம் என பழனியின் அழகு தமிழ் கீதை போல் வாழுமே !

இன்றும் வாழ்கின்றது.  மனதை நெகிழ வைக்கின்றது.

சிற்பி இசை.இசைஞானிக்குப் பிறகு இந்தப்பாடலில் அதிகம் புல்லாங்குழல் சுருதி சேர்ப்பது சிற்பியின் சிறப்பு.

  இந்தப்படம் வெளியாகும் தருனம் வரை சிற்பியின் இசை ஆர்வம் முத்துக்குள் இருந்தது.

அதன் பின்புதான் அதிகம் தமிழ்சினிமாவில் பிரபல்யம் ஆகினார்.

 சிற்பியின் வரவால் அதிகம்  ஆரேபிய இசை தமிழ்சினிமாவில் புகுத்தப்பட்டது என்றாள் மிகையாகது!

  சித்திராவின் குரல் ,பானுப்பிரியாவின் நடிப்பு என இந்தப்பாடல் அதிகம் கவரும்.

இந்தக்காட்சியில் தோன்றும் கோயில் பிரகாரம் உண்மையான சிரிரங்கம் என்று என்னியது ஒரு காலம் !

அது ஒரு செயற்கை(செட்)என்று பின்நாளில் விக்ரமனின் தொடரில் படித்த ஞாபகம்.

என்றாலும் சிரிரங்கத்தில் இப்படியான பின் இரவுப் பொழுதில்  தர்சனம் செய்வதும் ஒரு புண்ணியமே!

 அதையும் தாண்டி என்னுடன் பழகிய ஒரு சிலரின் வாழ்வில் இந்தப்பாடல் எந்தளவு தாக்கம் செலுத்தியது !

என்பதை விரைவில் வரும் தொடர் அலசிச் செல்லும்!

  தொடர்ந்தும் விக்ரமன் நல்ல படங்களைத் தரவேண்டும் என்பதே என் ஆவல்!

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் .பிறக்கும் 2012 எல்லோருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்!

24 December 2011

நண்பனும்  நினைவுகளும்!

இசையின் ஓசையில் காதல் கதவு திறக்கும் இதயங்களை. என்பதை!  என் நண்பன் மூலம் கண்டு கொண்டேன்.

 நானும் தொழில் நிமித்தம் பலருடன் பழகியிருக்கின்றேன். என் விற்பனைத் துறையில் கைகோர்த்தவன் ஜேம்ஸ் .

இருவரும் கொழும்பில் வெவ்வேறு நிறுவனத்திற்கு கடமையாற்றினாலும், ஒரே வாடகை அறையில் தங்கும் நிலையைத் தந்தது பொருளாதார துண்டுவிழும் தொகை.

 அந்தப்பகுதியில் வேலை செய்யும் விற்பனைப்பிரதி நிதிகளில்  நானும், ஜேம்ஸ்சும், ஒரே வடபகுதி என்பதால் இயல்பாகவே பாதுகாப்புக் காரணங்களால் கொஞ்சம் அதிகம் கவனத்துடன் இருந்தோம்!.

 பொலிஸ் பதிவு மற்றுமொரு உடல் உறுப்பு ஆனபடியால்.

 .எங்கள் வேலையில் கொழும்பு கொட்டாஞ்சேனைப்  பகுதி முக்கிய இடம் வகித்தது .

ஜம்பட்டா வீதி ஒரு சுகமான சுமையான நினைவுகளைத் தந்து செல்லும் என நானும். வேலைக்குச் சென்ற காலத்தில் எண்ணியதில்லை!

பலசரக்குக் கடைகளும், பாமஸிகளும் நிறைந்த அந்த வீதியில் .

ஒரு கடையை நாம் இருவரும் அதிகம் திடீர் திடீர் என்று சுற்றி வருவோம்.

 காரணம் ஜேம்ஸ் மனதில் மையல் கொண்ட நங்கைக்காக!

 அவள் பார்வையில் பல நூல்கள் படித்தான் ஜேம்ஸ். சித்திரம் தீட்டும் சிங்காரச் செவ்விழல் மேரி லூக்கஸ் அவள் நாமம்.

 .நங்கை இருக்கும் கடை  ஒரு பலசரக்கு வியாபார நிலையம்.

 தந்தையின் வியாபார நடவடிக்கைக்கு உதவியாக கணக்குப் போடுவதும், காசு வாங்கி லாட்சியில்(கல்லாப்பெட்டி) போடுவதும். அவளின் பணியாக இருந்தது.

 அவளின் தம்பி அருகில் இருந்த பாடசாலையில் படித்து வந்தான். அவனைக் கண்டால் ஜேம்ஸ் மிகவும் அக்கரையுடன் தன் வாகனத்தில் இருக்கும் காசளரைக் கூட பின்பக்கம் ஏறும்படி கூறிவிட்டு !

அவனை முன் ஆசனத்தில் அமர்த்தி அழைத்து வருவான் .

எங்கள் அறைக்கு வந்தாள் மேரியின் பாமாலைதான் அதிகம் பாடும் இதய ராகம் ஆனது.

 எப்படியும் தன் காதலைச் சொல்லி விடனும் என்ற ஆவலில் என்னையும் இம்சை செய்யும் அளவுக்கு நண்பன் அவன்.

 .மேரி ஞாயிறுப் பொழுதுகளில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தேவகீதம் இசைக்கும் குழுவில் இருப்பவள்.

 அதனால் பல ஞாயிறுப் பொழுதுகள் அங்கே தவம் இருந்தோம்.

 அருகில் இருக்கும் பொண்ணம்பல வானேஸ்வரர் ஆலயத்தைக் கூட  பார்க்கவிடாமல் .

தனக்கு காவலுக்காக என்னையும் நந்தியாக்கி  விட்டு ஒரு தலையாய் காதலித்தவன் மேரியை.

  2000 ஆண்டு நத்தார் பண்டிகை மறக்க முடியாது நம் நட்புக்கு!

 ஆலய பூசையில் கலந்து விட்டு வந்தவளிடம் தன் காதலைச் சொன்னான் ஜேம்ஸ்!

 அவளிக்கும் இவன் ஒரு அப்பாஸ் என்ற அடிமனத்து எண்ணத்தின் வண்ணத்தில் காதல்ப் பூக்கள்  தொலைபேசிக் குறுஞ்செய்தியாக வலம் வந்தது.

 பின் சில பொழுதுகளில் செல்வமஹால் திரையரங்கும் சில்மிஸம் செய்யும் சோதனைக் கூடம் ஆனது.

  அவர்களுக்கு உதவியாக எட்டி இருக்கும் என்னையும் செல்வமஹால் திரையரங்கு மூட்டைப் பூச்சுகளும் முத்தமிட்டது முதுகில்.

 அவன் தம்பிக்கு எல்லாம் இது தெரியும் !என்னுடன் இருந்து  ஐஸ் சொக்கும், சிப்ஸும் தெவிட்டாமல் திண்பதில் அவனும் ஒரு வெண்ணை திண்ட கண்ணன் என என்னவைப்பான்.

 ஆனாலும்! அவனையும் விதிவிடவில்லை. பதுகாப்புக்கண்களுக்கு சந்தேகம் வந்ததில்.

 அவன் கைபேசியில் யாரோ செய்த செயலில்  புலனாய்வுப் பொலிஸ் ஜம்பட்டா பொலிஸ் நிலையம் கொண்டு போனார்கள்.

 அதன் பின் மேரியின் தந்தை லூக்கஸ் எம்புட்டுப் பாடு பட்டும் .இன்றுவரை தகவல் இல்லை. வியாபாரத்தின் வீழ்ச்சி சூறாவளியாகியது!

 சில நாட்களில் பலகாசோலைக்கள் திரும்பி வந்தது காசு இல்லாமல்.

 எத்தனை நாள் கடன் சொல்வது என்று தெரியாமல் இருந்த தந்தை. கடையை மூடிவிட்டு குடும்பத்துடன்  ஒர் இரவில் இருந்தசுவடு தெரியாமல் நாடு விட்டு ஓடிவிட்டார் இந்தியாவிற்கு!

 இனி என்னை மறந்திடுங்கள் என்று அவள் சொன்ன அழைப்புத் தான் மேரி எடுத்த இறுதி அழைப்பு.!

 இதயத்தில் ஈட்டி தாக்க நிலைகுழைந்தான் ஜேம்ஸ்.

  ஸ்டவுட்டும், மெண்டிஸ்சும் பாம்பராக்கும் ,பத்தவில்லை. வேதனைக்கு மருந்தாக !

வேலையில் ஒழுங்கில்லை தூக்கிவிட்டது நிர்வாகம் .

.இத்தனையும் தெரிந்தும் என்ன செய்ய
முடியும் என்னால் .

தந்தைக்கு  தொலைபேசியில்





தூண்டிவிட்டேன்!

  .போதையில் துவலும் இவன் திருந்த ஒரேவழி !போய் வா புலம் பெயர் தேசம் என்று தமக்கையிடம்  அனுப்பி விடுவோம் . .தந்தையும்  சம்மதிக்க
நடைபிணம் போல் நாடுவிட்டுப் போனான் ஜேம்ஸ்


   கனடாவிற்கு.!

காலநிலை மாற்றம் போல்  அவனும் மறந்து போனான் நம் நட்பை.

 அவனோடு சுற்றித்திரிந்த அந்தோனியார்,கொட்டஞ்சேனை சாந்தோம் மாதா தேவாலயங்கள் ஞாபகங்கள் இன்றும் என் விழிகளில்!

 காலம் பல நண்பர்களை நல்ல நூல் வடிவங்கள் ஆக்கின்றது! அதே வேகத்தில் யாழ் நூலகம் போல் எரித்துவிட்டும் செல்கின்றது இன்னும்
தொடர்கின்றது என்பதும் ஒரு சோகம் தான்.!


அவனுக்கு விருப்பம் இந்தப்பாடல்!
.பைபிள் வாசகங்களைத் தாங்கி வைரமுத்துத் தீட்டிய வர்ணக்கோவை. அனுராதா சிரிராம் இப்படியும் பாடுவார் என்பதையும் . கோலம்  இட்டது.

 ரகுமானின் மெல்லிசையில் வந்த இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம்! அந்த நண்பர் முகம்  நெஞ்சில்  நிழலாடுகின்றது! என்றாவது ஒரு புள்ளியில் சந்திக்கலாம் என்ற ஜீவனில்!

நண்பர்கள், வாசகர்கள் ,அனைவருக்கும் தனிமரத்தின் இன்பம் பொங்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!


 வலையுலகில் அருவாள் புகழ் அண்ணண் நாஞ்சில் மனோவிற்கும் அவர் குடும்ப உறவுகளுக்கும் தித்திக்கும் நத்தார் தின நல் வாழ்த்துக்களை விசேடமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.





      தகவல்-) தனிமரத்தின் சிந்தனையை செதுக்கிவரும் வலைப்பூவை தன் அழகிய தொழில் நுட்பத்தினால் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் ,இணையத்தின் உதவியுடன் அலங்காரம் செய்து தந்த நிகழ்வுகள் கந்தசாமிக்கு .

.என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 புதிய தொடருக்கு வெள்ளோட்டப் படமும் தந்து கைகொடுத்தவர் அவரே!

விரைவில் வரும் தொடர் உங்களை நாடி. அதுவரை தொடரும் தனிப்பட்ட தேடல்!

11 December 2011

ஒரு அறிமுகம். ஒரு கேள்வி??

என் இனிய வலையுலக உறவுகளே தனிப்பட்ட தேடலில்

தொடர்ந்து இணைந்து இருக்க முடியாத நிலையில் !மீண்டும் தனிமரம் ! அவசியமான, அவசரமான ஒரு நண்பனை ஊக்கிவிக்கும் ஒரு  பதிவுடன் உங்களை நாடி வருகின்றேன்!


ஈழத்துச் சினிமா என்ற ஒரு  வரலாறு தொலைக்கப்பட்டு.  இன்று நாம் கானலைத் தேடும் மான்களாக இருக்கும் துயரம் வேற எந்த தேசத்திற்கும் வராத ஒரு சாபம் .அப்படியும் சில விடிவெள்ளிகளாக பலர் இன்று நம் சினிமா மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என்ற ஆவலில் பலர் முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

 .ஈழத்துச் சினிமாவை விரும்பும் பலர் மீண்டும் சிரிமாவின் சுதேசியக் கொள்கைக்கமைய எம் தயாரிப்புக்களை மீளவும் தொடங்கமாட்டோமா? அன்னிய வரவினைக் கட்டுப்படுத்தி நம்மவர் திரைக் கலையை ஊக்கிவிக்கமாட்டார்களா? அதன் மூலம் மீண்டும் தரமான வாடகைக்காற்று, பொன்மணி,நாடு போற்ற வாழ்க, கோமாளிகள் வரிசையில் நம் படைப்பும் பெயர் சொல்லும் வண்ணம்.

 உறக்கத்தில் இருக்கும்   திரைப்படக் கூட்டுத்தாபனமும், அதன் துணை நிறுவனங்களும் ,கண்விழித்து சூரிய ஒளியினைப்பரப்பி நம் திரையுலக வாழ்வினை வெளிச்சம் போடாதா ?என ஏங்கும் பலர் வாழ்கின்ற நிலையில்.

 எங்களுக்கும் பூபாளம் இசைக்காதா? என  தேவதாசனின் மாநகரக் காதல்,அம்மா என
முழுநீளப் படங்கள்  இன்னும் முடிவுறாமல் பல ஆண்டுகள் பெட்டிக்குள் மூழ்கிப் போன
நிலையில்!

 அப்படத்துடன் இருந்தோர் சிலர் புலம் பெயர்ந்தும் விட்டார்கள் .என்பது வேதனையான விடயம். இப்படியான நிகழ்வுகளைத் தாண்டியும் இன்றும் பலர் தயாகத்தில் தம் கலைத்தாகத்திற்காக குறும்படங்களை இயக்கி வெளியீடு செய்கின்றார்கள்.

  அந்த வரிசையில் கடந்த மாதம் வெளியாகி இருக்கும் ஒரு குறும்படம் தான் தேஞ்ச செருப்பு.

அம்மா என் இல்லம் வருவாயே அலமேலும் மங்கா என் இல்லம் வருவாயே!
 என்றும் உன்னிடத்தில் சொல்லாமல் வேர் யார் இடத்தில் முறையிடுவேன் என் தாயே என்று!
 அம்மன் மீது பஜனையில் பாடும் சில பாடல் வரிகள்.


  தாய் என்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே! என்று இளையராஜா பாடல் புனைந்ததும் தாய் என்ற ஒர் தெய்வத்தின் புகழை இன்னும் மெருகூட்டவே!

 .இன்று சிலர் பொருளாதார தேடலில் தாயினைத் தாயகத்தில் தவிக்கவிடுவதும் .தாயுக்குத் தெரியாமல் இல்லறத்தில் இனைவதும் ,
போலியான மேல்தட்டு வர்க்கமாக தம்மைக் காட்டிக் கொள்ளுவதற்கும் சிலர் தாயின் அருமை, பெருமைகளைத்

தெரியாமல் எருமைபோல்! இருக்கும் நவயுக மாந்தர்களின் மனதையும். பாசத்தின் வேர்வை வீதியில் வேதனையில் வாடவிடும்  சமுக நிகழ்வைச் சாடி நிற்கும் இந்தக்குறும்படத்தை!

 நடராஜா மணிவண்ணன் எழுதி இயக்கி  இருக்கின்றார்.

 மில்ரோய் அவர்களின் ஒலி/ஒளி வண்ணத்தின் ஊடாக  நம் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கின்றார்.

 .செவிக்கு இதமாக பின்னனி இசையை தந்து கதையின் மையத்தை சிதைக்காமல் ஜீவனுடன் கலந்து போகின்ற இசைக்கோலம்.

இயல்பான நடிப்பு  தந்திருப்போர்
வீராம்மா மற்றும் ஜனா,விசு ஆகியோர்.

  தாயின் உணர்வலைகளையும் ,மகனின் இயல்பையும் தாங்கி வந்து நம் சமுகத்தின் அவலத்தினைச் சொல்லிச் செல்லும் குறும்படத்தினை. மிகவும் தன் பொருளாதாரச் சுமைகளுக்கிடையிலும் நம் விழிகளுக்கு விருந்தாக்கி சமூகத்தில் இன்று ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றத்தின்  நவீன இளைஞர்களுகளின் கருங்காலி முகத்திரை கிழியும் வண்ணம் சிறுதுளி நேரத்தில் சொல்ல வேண்டிய விடயத்தை கச்சிதமாக  சொல்லியிருக்கும் திறமையை  நிச்சயம் பாராட்ட வேண்டும்.


  பொருத்தமான கலைஞர்களின் தேர்வில் மிகவும் குறுகிய இடப்பரப்பினை பின்புலமாக கொண்டு. சாதாரண மக்களின் உள்ளக்குமுறலைப் பிரதி பலிக்கும் தேஞ்ச செருப்பு ஈழத்து குறும்படத்தில் ஒரு முத்திரை பதிக்கும் காவியம்

.அதிகமாக நிழலில் இயக்கியிருக்கும் காட்சியினை கொஞ்சம் ஒளி அதிகம் படரும் வண்ணம் காட்சிப் படுத்தினால் இன்னும் தெளிவான ரசிக்க முடியும்.

 என்றாலும் கதையின் தன்மை நிழலில் இருப்பதால் அதை தாங்கிக் கொண்டு ரசிக்கலாம் .இப்படத்தினைக் கண்டு களிக்க இங்கே -tsnஉள்நுழையுங்கள் உறவுகளே!

மனம் கொதிக்கின்றது மலைவாசா!
மாலைபோட்டால் மனிதவடிவில் மணிகண்டன் வருவான்!
மகிழ்ச்சியை தருவான் எண்ணம் போய்!
மாலை போட்ட சாமிமார்கள் மீது மகிரிசியை மர்த்தனம் புரிந்தது போல்!மலையாளிகள் இன்று தமிழர் மீது
ஆடும் நர்த்தனம் கண்டு !


குருவாயூரப்பன் நாமம் சொல்லும
நாவில் இருந்து!
குருவாயூரப்பன் மைந்தன் மாலைதாங்கிய பக்தர்கள் மீதிலும் இரக்கம் இல்லாது! காடைத்தனம் புரியும் கயவர்கள் மீது கதகளி ஆடிடத் தோன்றுது ஐயனே!

ஆண்டுக் கொருதரம் ஆனந்தமாய் அணிதிரளும் குமிழி வழி தேனி ஓரம் எல்லைதாண்டி  பவனி போகும் சபரிமலை யாத்திரைக்க
முல்லைப்பெரியாறு வடிவில்  கடை உடைப்பு காடைத்தனம்! கல் வீச்சு ! இந்தவருடம்!
சாமிமார்களையும், சன்னியசிகளையும் சண்டைக் இழுப்பதில் என்ன சந்தோஸம் இந்தச் சதிகாரர்களுக்கு!
முள்ளிவாய்க்காலில் நரபலி குடித்தவர்களுக்கு இன்னும் தீரவில்லை தமிழரின் இரத்த வெறி  வாடை
இதுதான் கலியுகமோ????
கலியுகவரதனே!

இந்தவாரம்-:  சபரிமலைக்குப் போன ஐயப்ப அடியார்கள் மீது புனித மாலையை அறுத்துத் தாக்கினார்கள் என்றதை கேள்விப்பட்டதன் தாக்கம் இந்த உரைநடை!

அதிகமான சாமிமார்கள் திருச்சியிலும் பழனிமலையிலும் தம் மண்டல விரதத்தை முடிக்கின்றார்கள். என்ற செய்தி வரும் நிலையில் தமிழக அறநிலைத்துறை வாரியம் என்ன செய்கின்றது?  ??





பிள்ளையார் பெருங்கதை இன்று தொடங்கிவிட்டது. மோதகப்பிரியனுக்கு இனி தொடர்ந்து அவளும் மோதகமும் படையல்தான்!

ஆன்மீகப் பிரியர்களுக்காக ஒரு பாடல் இதோ:-

மீண்டும் சில வாரத்தின் பின் தனிமரம் வலையில் காற்று வீசும்.