28 June 2011

நீ போகும் பாதை பூங்காவனம்!!

 நம்மவர் பாடகிகள் பலர் சந்தன மேடைக் கலைஞர்கள் தாண்டி. பலரை பதிவு செய்யனும் என்ற ஆவல் கம்பன் சொல்வது போல ஆவலில்  கடல்நுரையை பருகும்  செயல் !

.புலம்பெயர் தேடலையும் கடந்து எனக்குப் பிடித்தவர்கள் தொடரை முடிந்தவரை கூடவரும் பயணம் போல் எப்போது முடியும்!?

சில இசைக்குயில்கள் பல சோதனைகளைக் கடந்து பாடகியாகிறார்கள். அவர்களில் நம் தேசத்தில் மும்மொழியில் பாடுபவர்களை விரல்விட்டு என்னலாம்.அந்தவகையில் முதலில் என் பார்வை நிரோசா வீராஜினி!


அதையும் தாண்டி ஹிந்திப் பாடல்களையும் பாடக் கூடியவர் என்பது சிறப்பான விடயம்.
(  என்னைத் தெரியுமா)

சந்திரிக்கா  சமாதான தேவதை என்ற கோசாத்துடன்  வந்த ஆண்டு 1993 இன் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்).  

இந்தப்பாடல் பலதேர்தல் மேடைகளிலும், ரூபவாஹினியில் செய்திகளுக்கு முன் 5 நிமிடங்கள்  இப்பாடலுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

 அன்நாட்களில் ரூபவாஹினியின் தமிழ் பிரிவுத் தலைவர் வசந்த ராஜா( இவர் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை பின் செவிவழி கேட்டிருக்கிறேன்).
 யுத்த மேகம் கலைந்து ரனில் பல விளம்பரங்களில் பட்டலந்த வதைமுகாமின் சூத்திரதாரி என்று மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் தீட்டப்பட்டிருந்தது.

அந்தப்பாடல் மிகநேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருந்தது
அதனைப் பாடியவர் இந்தக் குயில்தான் .

(இப்பாடல் ஒரு மீள்கலவை)

.இதனை பின்னாளில் எனக்கு சொன்னவர் ஒரு சகோதரமொழி நண்பர்.

மூத்த சகோதரமொழி பாடகிகளில் லதா வல்பொல இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு புதுமையான குரல் தேடும்போது ரூபவாஹினி இசைக்கலைஞர் பிரெமசிரி ஹேமதாச விடம்  பாடல் ஆசிரியர்   M.H.M சாம்ஸ் அவர்கள்  வழிமொழிந்தது நிரோசாவை !

பாடல் பதிவு செய்து வெளியானதன் பின்பு அதுவரை  இசை மேடைகளில் அதிகம் பிரபல்யமாகதவர்(1989இன் காலப்பகுதியில் சகோதர மொழியில் பாடிக்கொண்டிருந்தார்) பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமானார்.

1997  அதுவரை வெறும் ஊடகங்கள் முலம் வந்த இவரின் குரல் எனக்கு அறிமுகமானது கொழும்பில் ஒரு மேடை நிகழ்ச்சியை நேரில் பார்த்தது ரசித்த பின்தான்.

 சகோதரமொழியில் பிரபல்யமான பலருடன் மேடையிலும் குறுவட்டிலும் சின்னத்திரை மட்டும்மல்லாது சிங்கள் திரையுலகிலும் பின்னனி பாடிக் கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் தமிழ்சினிமாப் பாடல்களை சகோதர மொழி மேடைகளில் வெளிவந்த காலகட்டத்தில்.
 தன் இஸ்லாமிய /தமிழ் மொழி ரசிகர்களுக்காகவும், மலையகத்தில் இசை நிகழ்ச்சியை செய்யும் போது அப்பிரதேச இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் பாட வெளிக்கிட்டார். அதன் பின்பு பல ரசிகர்கள் இவரின் குரலில் மயக்கம் கொண்டு அதிகமான பாடல்களை ரசிக்க வெளிக்கிட்டனர் .

எனக்கு இவரின் குரலில் பிடித்தது .
இசைஞானி  மெல்லிசை மன்னர் கூட்டு இசையில் வெளிந்த மெல்லத்திறந்த கதவு படத்தில் ஊருசனம் தூங்கிருச்சு என்று ஜானகி அம்மா பாடலை இவர் மேடைகளில்  இனிமையாக மொழியை சிதைக்காமல் பாடுவார் இப்பாடலை இவர் சகோதர மொழியில் ஒலிநாடாவாக(tape) வெளியிட்டார்.
இப்பாடல் தொகுப்பில் சகோதரமொழியில் சின்னத்தம்பி பாடல்கள் முழுவதும் அத்துடன் உதயகீதம் படத்தில் வரும் பாடுநிலாவே தேன்கவிதை பாடலும்  சேர்த்து அழகிய முகப்படம் போட்ட (நிரோசா) குறுவட்டாக வெளிவந்து .


இருந்ததை நான் பலமாதங்களாக .பத்திரமாக வைத்திருந்ததை சகோதரமொழி  நண்பன் பாடல்களை கேட்டுவிட்டுத்தருவதாக எடுத்துக்கொண்டு
அவன் வீட்டில் அதிகமான ஒலியில் ஒலிக்கவிடுவான்.
 அவனின் தங்கை அங்கிருந்து பாட நான் அடுத்த அறையில் இருந்து எதிர்பாட்டு பாட இந்தக் குளத்தில் கல்லெறிந்தாள் ஹான்சிஹாவை விட அழகானவள் நல்ல தோழியாக இருந்தால்.

நிரோசா தமிழில் சினிமாவில் பாடியது  இசைப்பயணம்
படத்தில் உன்னிக்கிருஸ்னனுடன் உதயா இசையில் பிரபல்யமான பாடல். இதனை  இனைக்க முடியவில்லை (பாடல் கேட்க தென்றலக்கு தபால் அட்டை அனுப்புங்கள்.)


 பின் புதிய பாடல் ஏதும் பாடியது நான் அறியேன்  அவரின்  வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக வெளிநாட்டுக்கு இசைக்கச் சேரிக்குப் போனதில் அவருடன்  ஒரு பாடகர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் படித்தேன்.

 சில  சகோதரமொழிப் பாடல் இவரின் குரலில் கேட்கும் போது மறந்து போன நண்பர்கள்  கூடவருவது போன்ற உணர்வு.
இன்னும் பாடனும் பல பாடல்கள் இந்தக் கானம் பாடும் கவிதை.

27 June 2011

பதில் இல்லை!!

அன்பே!
 இப்படி அழைக்க முடியாது !
இன்னொருத்தியின் கைபிடித்தவன் நீண்ட வருடங்கள் கழித்து நேற்று உன்னைப் பார்த்தேன்.
 தனிமரமாக!
உனக்காக காத்திருந்தேன்!
 ஒரு தலையாக காதல் கொண்டு நெஞ்சனையில் பூட்டி பஞ்சனையில் பள்ளிகொள்ள .
அதுக்காக விட்டேன் ஒரு தூது பெண் கேட்டு
உன்ற மோனுக்கு  என்ன தகுதியிருக்கு ?அவன் என்ன என்ஜினியரோ! ?
எடுத்தெறிந்து பேசினாளாம் உன் அன்னை .இது எல்லாம் உனக்கு தெரியுமா ?
என்று நானும் கேட்க காத்திருந்தேன். உன்னிடம்.


சிரிக்கும் போது விழும் கண்ணக்குழியில் நான் விழந்துகிடக்கும் யானை போல் !
நீ மேல் படிப்பு என்று ஊரைவிட்டுப் போனாய் !
நான் புலம்பெயர்ந்தேன் அகதியாக!

 என் ஆசைக் காதல் வருடங்கள் சில தாண்டும் வரை உன் மேல் காதல் உண்மையாகத்தான் .

இளவுகாத்த கிளியாக இருக்கப் போறியோ!
 ஊரில் என்னைப் பலபேர் உனக்கு கலியாணம் பேசலையோ?
 என்று போகும் இடமெல்லாம் கேட்கினம் என்று நச்சரிக்கும் ஆத்தாவிற்கு  வதிவிட அனுமதி கிடைக்கட்டும் என்று சாட்டுச் சொல்லியே போனது தலைமுடியும் வாலிபவயசும்!

உன் ஆத்தா இறங்கிவராத இலங்கை பாதுகாப்புச் சட்டம் விசாரனையில்லை தூக்கிப் போடு என்பது போல் என்னையும் குறிப்பையும் .

கடவுள் துணைக்கு வந்தார் வதிவிட அனுமதி தந்து.
 தட்டுங்கள் திறக்கப் படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வேதாளம் போல்  7 வருட என் காதல் சொல்லி கைபிடிக்க என்னியதும் உண்மை.

உன் விருப்பம் தெரியாமல் இராவணன் போல் சிறைப்பிடித்து தூக்கிவர என் தன்மாணம் இடம்தரவில்லை.
 உன் இதயத்தில் இடம் பிடிக்க காத்திருந்து காலத்தில் உன்னிடம் சொல்ல நினைத்தவை எல்லாம் என் நாட்குறிப்பேட்டில் பதிந்தேன்.
 படித்தால் கொஞ்சம்  சாருவின் சாட்டிங்கும் ஒத்துப்போகும்.

பொறுமையாக இருந்தாலும் இந்தக் குளத்தில் கல் எறிந்தார்கள்.
 இந்த வருடம் கலியாணம் கட்டாவிட்டால் இனி உனக்கு
பிள்ளையார் கெதியேன சாஸ்த்திரி சொன்னார் என்று.
 உணவுமேசையில் உள்நாட்டுப் போர் !திட்டல்கள், அறிவுரைகள், கிண்டல்கள் ,குத்தல்கள்,
 எல்லாம் சேர
உன்மீதான காதலுக்கு ஒரு போத்தல் மெண்டிஸ் ஒரு இரவு போதவில்லை !என்றாளும் முடுவுரையாக்கினேன் குடியுக்கும்!
 கிட்டாத உன் காதலுக்கும்!

என்னைக் கரம்பிடித்த குலமகள் ராதையின் காதலில் கரைந்து.
 கலந்து!
 இரு பிள்ளைச் செல்வங்கள் என் தோழில் !
நீ இன்னும் காத்திருப்பது என்னைவிட ஒரு நல்ல என்ஜினியருக்கு!
எங்கிருந்தாலும் நலமாக வாழனும் நீ ஆசைப்பட்டவள் அனாதையாக போகக்கூடாது!

(இது ஒரு நண்பனின் குமுறல் அவன் என்னிடம் கேட்டான் நல்ல குனமா ? நல்ல தொழிலா? கலியாணத்திற்கு தேவை பதில் எனக்கும் தெரியாது)

பதில் இல்லை!!

அன்பே!
 இப்படி அழைக்க முடியாது !
இன்னொருத்தியின் கைபிடித்தவன் நீண்ட வருடங்கள் கழித்து நேற்று உன்னைப் பார்த்தேன்.
 தனிமரமாக!

உனக்காக காத்திருந்தேன்!
 ஒரு தலையாக காதல் கொண்டு நெஞ்சனையில் பூட்டி பஞ்சனையில் பள்ளிகொள்ள .
அதுக்காக விட்டேன் ஒரு தூது பெண் கேட்டு 
உன்ற மோனுக்கு  என்ன தகுதியிருக்கு ?அவன் என்ன என்ஜினியரோ! ?
எடுத்தெறிந்து பேசினாளாம் உன் அன்னை .இது எல்லாம் உனக்கு தெரியுமா ?
என்று நானும் கேட்க காத்திருந்தேன். உன்னிடம்.

  
சிரிக்கும் போது விழும் கண்ணக்குழியில் நான் விழந்துகிடக்கும் யானை போல் !
நீ மேல் படிப்பு என்று ஊரைவிட்டுப் போனாய் !
நான் புலம்பெயர்ந்தேன் அகதியாக!
 என் ஆசைக் காதல் வருடங்கள் சில தாண்டும் வரை உன் மேல் காதல் உண்மையாகத்தான் .

இளவுகாத்த கிளியாக இருக்கப் போறியோ!
 ஊரில் என்னைப் பலபேர் உனக்கு கலியாணம் பேசலையோ?
 என்று போகும் இடமெல்லாம் கேட்கினம் என்று நச்சரிக்கும் ஆத்தாவிற்கு  வதிவிட அனுமதி கிடைக்கட்டும் என்று சாட்டுச் சொல்லியே போனது தலைமுடியும் வாலிபவயசும்!

உன் ஆத்தா இறங்கிவராத இலங்கை பாதுகாப்புச் சட்டம் விசாரனையில்லை தூக்கிப் போடு என்பது போல் என்னையும் குறிப்பையும் .

கடவுள் துணைக்கு வந்தார் வதிவிட அனுமதி தந்து.
 தட்டுங்கள் திறக்கப் படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வேதாளம் போல்  7 வருட என் காதல் சொல்லி கைபிடிக்க என்னியதும் உண்மை.

உன் விருப்பம் தெரியாமல் இராவணன் போல் சிறைப்பிடித்து தூக்கிவர என் தன்மாணம் இடம்தரவில்லை.
 உன் இதயத்தில் இடம் பிடிக்க காத்திருந்து காலத்தில் உன்னிடம் சொல்ல நினைத்தவை எல்லாம் என் நாட்குறிப்பேட்டில் பதிந்தேன்.
 படித்தால் கொஞ்சம்  சாருவின் சாட்டிங்கும் ஒத்துப்போகும்.

பொறுமையாக இருந்தாலும் இந்தக் குளத்தில் கல் எறிந்தார்கள்.
 இந்த வருடம் கலியாணம் கட்டாவிட்டால் இனி உனக்கு 
பிள்ளையார் கெதியேன சாஸ்த்திரி சொன்னார் என்று.
 உணவுமேசையில் உள்நாட்டுப் போர் !திட்டல்கள், அறிவுரைகள், கிண்டல்கள் ,குத்தல்கள்,
 எல்லாம் சேர 
உன்மீதான காதலுக்கு ஒரு போத்தல் மெண்டிஸ் ஒரு இரவு போதவில்லை !என்றாளும் முடுவுரையாக்கினேன் குடியுக்கும்!
 கிட்டாத உன் காதலுக்கும்!

என்னைக் கரம்பிடித்த குலமகள் ராதையின் காதலில் கரைந்து.
 கலந்து!
 இரு பிள்ளைச் செல்வங்கள் என் தோழில் !
நீ இன்னும் காத்திருப்பது என்னைவிட ஒரு நல்ல என்ஜினியருக்கு!
எங்கிருந்தாலும் நலமாக வாழனும் நீ ஆசைப்பட்டவள் அனாதையாக போகக்கூடாது!
 
(இது ஒரு நண்பனின் குமுறல் அவன் என்னிடம் கேட்டான் நல்ல குனமா ? நல்ல தொழிலா? கலியாணத்திற்கு தேவை பதில் எனக்கும் தெரியாது)

26 June 2011



24 June 2011

திருநங்கைகள் திருவிழா!!

கோடைகால வரவில் பாரிஸ் நகரம் பல விழாக் கோலங்களையும் ,களியாட்டங்களையும் ,பதிவு செய்கின்ற நிலையில் !

இன்று வரும் இந்த விழா ஒரு (25/6/2011)வித்தியாசமானது!

1993 இல் தொடங்கப் பட்டது GAY PRIDE என்கின்ற ஒத்த பாலினத்தினரும் ,திருநங்கைகளும் , இனையும் பிரமாண்டமான பேரணியாகும் !பல லட்சம் பேர் கூடுகிறார்கள்.

ஒத்த பாலினத்தவர்களை சமுகம் அங்கிகரித்து அவர்களுக்கு அனைத்து சமத்துவமும் கொடுத்துள்ள நாடுகளில் பாரிஸ்சும் ஒன்று .(ஆனால் மற்றைய ஐரோபிய நாடுகள் போல் திருமண ஒப்பந்தத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை நேற்றய தினம் சோசலிச கட்சி கொண்டு வந்த அங்கீகரிப்புத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைக் கட்டாயம் அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்)

திருநங்கைகள் என்றால் மிகவும் சமுகத்தில் ஒதுக்கப்பட்டு, கையேந்தியும் ,பாலியல் நங்கைகளாகவும் வலம்வரனும் என்று கீழைத்தேசம் போல் நடத்தாமல் அவர்களையும் சம உரிமையுடையவர்களாக

 பிறப்பில், காலமாற்றத்தில் ஏற்படும் இந்த மாறுதல் நிகழ்வை உள்வாங்கி..
அவர்களையும் சந்தோசமுடையவர்களாக இருப்பதற்காகவும்.,
சகல அடிப்படை வசதி செய்து கொடுத்துள்ளது பிரென்ஸ்.

ஒத்த பாலினத்தவர்களை சுதந்திரமாகவும் ,வெட்கப்பட்டும், அஞ்சியும் ஒதுங்காமல் சுயமாக மற்றவர்களுக்கு முன் தமது தேவைகளை.
பிறர் அறியும் வண்ணம் ஒன்று கூடி அவர்கள் தமக்கான நண்பர்கள், நண்பிகளை கண்டு கொள்ளும் விழா இது.

பல்வேறு நாட்டில் இருந்து பிரென்ஸ் தேசம் வருபவர்களும் நம் தேசத்தவர்களும் ஒன்று கூடுவது MONTPARNASS  என்ற நகரின் முக்கிய பகுதியில் .

இங்கு இருந்து தொடங்கும் பேரணி எள்ளுப் போட்டால் எண்ணைய் ஆகிவிடுவது போல் அலையலையாக கொட்டொலிகள், பாதாதைகள், வர்ணஜால பார ஊர்திகளில் நடனத்துடன் ஆரம்பமாகும் ஊர்வலம் Rupublique ஊடாக வலம் வந்துbastill என்ற முன்னர் நெப்போலியனின் கோட்டை இருந்த பகுதியில் நிறைவடையும்.


பிரென்ஸ் காவல்படை ஊர்வலத்திற்கு பந்தோபஸ்த்து வழங்க கலகத்தடுப்பு படையினர் புடைசூழ இவர்களுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கி தமது கடமையை செயலில் நிரூபித்து ஊர்வலம் அமைதியாக நடப்பதற்கு துனைபுரிகின்றனர் .

கல் எறிந்தும் காடையர் போல் உள்நுழைந்து கதர் வேட்டி கிழித்து காட்டு மிராண்டிகள் போல் அகிம்சைவாதிகளை காலிமுகத்திடலில் கதறக்கதற விரட்டியடித்த வெள்ளரசு வீரர்கள் இல்லை இங்கே கடமையில் இருக்கும் பாதுகாவலர்கள்.

பல்வேறு பகுதியில் இருந்து வரும் மக்கள் இந்த விழாவிற்கு ,வருகைபுரிந்து அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதுடன் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

தம்மைப் பற்றிய கழிவு இரக்கம் தேவையற்றது. தமக்கு உள்ள சமுககடமைகளையும் இவர்கள் பாதாதைகளில் எழுதியவண்ணம் அதிகமான கோஸங்கள்,  முழங்கவும்.

நடைப்பயணம் செல்லும் வழிகளில் பல உள்ளூர்/வெளியூர் அச்சு இலத்திர ஊடகங்கள் ஒலி/ஒளியாக முகப்பக்கத்திற்கு பதிவு செய்கிறார்கள் .

சிலரை நேர்முகம் கானுகின்றார்கள் பலர் வெளிப்படையாக சமுகத்திற்கு அறைகூவல்விடுகிறார்கள் தமது இருப்பைப் பற்றிய விடயங்களை.

பல சிற்றுண்டிகளும் ,மதுபாணங்களும் பீப்பாய்க்(குண்டுகள் அல்ல) கணக்கில் இன்று விற்பனையாகும் .

சிறப்பு அனுமதி பெற்ற சிற்றுண்டி வாகணம் தொடர்ந்து பின் செல்வதும் ,வீதியோரங்களில் சிறப்பான உணவகம் விரைவு உணவுகளையும் காவிச் செல்லும் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கும்.

களியாட்டம் என்றாள் அதிகமான மதுபாணங்கள் பரிமாறப் படும் தேசம் இது .

பாதையோரம் கிடக்கும் வெற்றுப் போத்தல்கள் திக்கத்தில் காணமுடியாத அளவு.!

பேரணியின் பின்னே நகர சபையின் துப்பரவுப் பணியாளர்கள் ,குப்பைகளை வகைப்படுத்தி .பாதையோரங்களை சுத்தம் செய்துபேரணியின் பின் மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக இலகுவாக்கி விடுவார்கள்.

பல பொதுமக்கள் கூடி நின்று பாரதையோரங்களில் தமது வாழ்த்துக்களையும் ,இவர்களின் நடனங்களை கண்டுகளிப்பதையும் புகைப்படம் மற்றும் ஒளி/ஒலியாக
காட்சிப் படுத்துவதையும் காணமுடியும்.

வருடத்திற்கு ஒரு முறை இவர்களுக்கு இது இந்திரலோக சொர்க்க விழா நம் தேசத்தில் திருநங்கைகள்,ஒத்த பாலினத்தவர் உரிமைகள் பற்றி சிந்திக்க முடியுமா?

21 June 2011

இசை விழா!

இன்று தொடங்கும் கோடைகாலம் !
பிரென்ஸ் வாழ் மக்களுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும்!  கோடைகால விடுமுறைகளை கொண்டாடுவதற்கு  முன்னோட்டமாக நாடு தழுவிய ரீதியில் இன்று இரவு மிகப் பிரமாண்டமாக விழா ஆரம்பமாகப் போகுறது ஆம் !இசைச் சங்கமம் இது.(fete du music)


 இது காலவரையில் மாரி காலத்தின் பனிக்குளிரிலும், இளவேனிக்கால இதமான குளிர்காற்றிலும்,  வீட்டுக்குள் ஒளிந்துகிடந்த உள்ளங்களையும் ,உறவுகளையும் வாசல் தாண்டி வாருங்கள் இசையின் ஆதார   சுருதியில் கலந்து கரைந்து போய் மகிழ்ச்சியடையுங்கள் .என்று  கலாச்சார அமைச்சகம் 1981 இல் தொடங்கப் பட்ட இந்த இசைக் கான மக்கள் மனம்குளிரும் திட்டம் இன்று தனது 30 ஆண்டு விழாவை  சிறப்பாககொண்டாட  உள்ளது.

இவ்விழாவிற்கு ரஸ்சியாவின் பிரதமர் விளாமிர் புட்டின் வந்து சிறப்பிக்கிறார்.

மக்களிடம் இலைமறை காயாக இருக்கும் இசைக்களைஞர்களை பட்டி தொட்டி எங்கும் கொண்டே சேர்க்கவும்  தமக்கான சந்தையை உருவாக்கவும் இந்த விழா பலருக்கு ஒரு உறவுப் பாலமாக இருக்கிறது.

பிரென்ஸ் மக்களிடம் முத்தம்,வைன் போன்ற குடிவகை, உணவு முறைக்கு அறிமுகம் என இந்த விழா முன்றுக்கும் ஒரு பொதுவானதாக இருக்கிறது.

அரசின் மக்கள் மகிழ்வூட்டும் திட்டத்தில் இன்று மதியம்.. 12 pm முதல் நாளை மாலை  17 p.m வரை பொதுப் போக்கு வரத்துக்கள் யாவும் சிறப்பு விலைக்கழிவு 3 euro செலுத்தி வாங்கும் பயணச் சீட்டுப் பயன்படுத்தி  விரும்பிய இடத்திற்குப் போய் இசையை பலருடன் கண்டு களிக்க வசதியாக சேவையினை வழங்குகிறது.

புறநகருக்கும், நகருக்கும் இடையில் மக்கள் தடையின்றி சென்று வர விசேட பொதுச் சேவைகள் கடமையில் ஈடுபடுத்தப்படுகிறது.

பிறமாநிலத்தில் இருந்தும் பிற நாடுகளிலும் இருந்தும் இந்த பிரென்ஸ் தேசத்தின் இனிய இசையை ரசிப்பதற்கு பலர் பாரிஸ் நகரை நோக்கி படையெடுக்கின்றனர்.

அரச/தனியார் அச்சு,இலத்திரனிய ஊடகம்கள் அனுசரனையில் பிரபல்யமான கலைஞர்கள் பலர் பல இடங்களில் இசை ரசிகர்களை நேரடியாகவும் மகிழ்விப்பதுடன். வானொலியில்ஒலிகளாகவும் /தொலைக்காட்சியில் ஒலி/ஒளியாகவும் மக்களிடம் சேர்ப்பதற்கும் தயாராகி இருகின்றனர்.

பிறநாட்டுப் புகழ்வாய்ந்த பாடகர்/பாடகிகள்/இசை விற்பனர்கள் பிரென்ஸ் கலைஞர்களுடன்   சேர்ந்தும் பல இசைக்கோலங்களை இசைத்து மக்களை இன்ப வெள்ளத்தில் தொடர்ந்து ஆழ்த்திவருவதுடன்.
 தம் ஒற்றுமையையும் ஒரே நாடு என்ற கொள்கையில் ஒற்றுபட்டு நிற்கும் போது நம் தேசம் அமைதியிழந்து அடிமை கொள்ளும் மனம்
கொண்ட வெள்ளரசுகளுடன் எப்படி ஒன்றுபடுவது!

இளைஞர்/யுவதிகள் இன்று பரவலாக தமக்குப் பிடித்தவர்களுடன் குழுவாகவும்  ,ஜோடிகளாகவும்  துள்ளல் இசைக்கு நகரங்களில் நடனம் புரிவதைக் காணமுடியும்.
 அதிகமான கூக்குரலில் அதிகமான சந்தோஸத்தை தொடர்ருந்துகளிலிலும் சுரங்கவழி தொடருந்துகளில் விழிப்பதைக் கானும்  போது ஒருவித  தவிப்பு  வருகிறது நம் இனத்தின் விடிவற்ற பொழுதை என்னி!

உணவகம்களில் இன்று சிறப்பான விலைகளில் சிறப்பான சிற்றுண்டிவகைகள் மக்களுக்காக தயாராகிவிடும் .
இசையுடன்
இன்சுவையையும் சுவைப்பதுடன் இனிய வைன் மற்றும் மதுபானங்களும் அதிக அளவில் பரிமாறப்படும் ஆட்டமும் பாட்டமும் அன்பின் வெளிப்பாடுகளையும் ஒரு சேரக்காண முடியும்.
 ஆண்டுக் கொருமுறைவரும் இந்த இசைவிழாவில்.பாரிசின் முக்கிய இசைக்களியாட்டம் நடக்கும் பகுதியான bercy,bastel,monparnasse, parc de la villette,அதிகமாக களைகட்டும் .

நம்மவர்களும் சிலவருடங்களுக்கு முன் இசைக்கச்சேரி செய்தார்கள் .இனக்குழுவிற்கு இடையில் ஏற்படும் வன்முறையால் இசை ஆவலர்கள் பாதிக்கப்பட்டதன் விளைவால் இப்போது தடைப்பட்டுள்ளது.

இவ்வருடமும் நடைபெறுமா என்பது  இதுவரை தகவல் யாதும் பெறவில்லை.காத்திருக்கும் இசைரசிகர்கள் பலர் என்பது மட்டும் உறுதியாக கூறமுடியும்.
 இப்படி நம் தேசத்தில் இப்படி ஒரு இசை விழா நடக்குமா?
  நம்மில் எத்தனை பேருக்கு முத்துசாமி, கனேஸ்வரன், திருமலை பத்மநாதன்,மோகன் -ரங்கன் என இசை அமைப்பாளர்கள் பாடகர்கள் முத்தழகு,கலாவதி, ரகுநாதன், சிறிதர் பிச்சையப்பா, ரானி ஜோசப் நிலுக்சி ஜெயவீரசிங்கம் என பல திறமையானவர்கள் இருப்பது தெரியும் ?

முற்றத்து மல்லிகையைவிட்டு அடுத்த வீட்டு ரோஜாவை நாடப் போறமா?நமக்கான இசையின் வடிவம்தான் என்ன எப்போது நமது மெல்லிசைகளும் உலகை ஆளப்போகிறது.மீண்டும் ஈழத்துப் பொப் இசையும் புத்தொளிகாட்டுமா?

20 June 2011

ஒரு நாள் விடியும்!!!

உன்னை வழியனுப்பிவிட்டு வரும்போதுதான் என்னுள் பல மாற்றங்கள்!
நீ கலங்கக் கூடாது என்று என்கண்களுக்கு கண்ணடி அணிந்து கொண்டேன் !உள்ளுக்குள் அழுதுபுலம்பும் துயரத்தை கண்ணாடி விம்பம் காட்டாதல்லவா!

சொல்லாத நேசத்தை சொல்லும் துனிவு இல்லை எனக்கு !
தொலைபேசியில் நலம் விசாரிப்புக்களுடன் தொடங்கும் கதை. வேற என்று சொல்ல நினைக்கின்றேன் !என் பூட்டிய இதயத்தில் விளக்கேற்றியவள் நீ என்று !
என்றாளும் மெனமாகிப் போகிறேன்!
உன்னைப் பிரிந்து விடுவேனோ என்ற நோர்வேயை நம்பிக் கெட்ட தமிழர் வாழ்வைப் போல்!
அருகில் இருந்தால் பல மொழிகள் பேசலாம் !
பொருளாதார இயந்திரம் என் நேசம் என்ற நேரத்தை காத்திருக்க விடாமல் கலைந்து போகும் மேகமாக யாரையோ தேடி ஓடும் ரயில் பயணம்!

இப்படியும் தேற்றிக்கொள்ள பல வலைகளைப் படிக்கிறேன்!
 உன்னிடம் யாசிக்கும் காதலைப் பெற கடல்கடந்து வர எனக்கில்லை குடியுரிமை  அனுமதி!
இப்படி எல்லாம் எழுத நினைக்கிரேன் என் ஞாபக குறிப்பேட்டில் அதற்குள் விடிந்து விடுகிறது  அழைப்பு மணியடித்து அடுத்த தேடலுக்கு!..
சொல்லப்படாத காதலும் சொல்ல முடியாத வலிகளும் தெரிவதில்லை தொலைபேசி
அழைப்புக்கலுக்கு!
காத்திருக்கும் என் கண்களுக்குள் நித்திரையும் உனக்கான என் நேசங்களும்
கரைந்து கலந்து போகிறது என்னைச் சுற்றிய உன் நினைவுகள்!
ஒரு நாள் விடியும் முடியாத நம் துயரம்!!

19 June 2011

உன்னையே  எப்போதும் நினைக்கிறேன்!

இந்த தனிமரத்தை  இசை என்பது மொழிகள் பலதாண்டச் செய்கிறது.என் உணர்வுகள் விஜயகாந்தை தப்பாக இடைபோட்ட வடிவேல் போல் கற்பனையான  சகோதர மொழி பாடலில்.

 பூங்காற்றில் நான் வானவில்லைப் பார்த்துக் கொண்டு நடந்துசெல்வேன் என் தந்தையே!
 எப்படி என்னை பின் தொடர்வீர்கள் என மகள் குறும்பாக கேட்க?
 தந்தையோ வானத்தின் தாரகைகளைப் பின் பற்றி உன்னை பிடித்துக்கொள்வேன் .என நகைப்பாக பதில் கூறுவது எனக்குப் பிடிக்கும்.

 மகே தோனியே -.என்று இலங்கையில் மேல்(உடரட்ட) பகுதியில் வாழும் சகோதர மொழி தந்தைகள் தான் இப்படி அழைப்பார்கள் .
சகோதரமொழியில் சாதியம் இப்போதும் உண்டு இது மறுக்கமுடியாது (பாத்த ரட்ட) கீழ்பகுதியில் வாழும் தந்தைமார் மகளை( துவ) என்றே அழைப்பார்கள்.

கவிஞரின் அழகான வார்த்தையாலம் என்னைக் கவர்ந்தது. மகளின் குறும்பான கேள்வியும் தந்தையின் பாசமும் விவேகமான பதிலும் மென்மையான இசையும் இனைந்த கலவை. .

மகே தோனியோ/மகளுக்கு -தமிழில் பலவர்ணனைகள்  கொடுத்தாலும் மூலப்பொருள் சிதையும்.

மகள் குறும்பாக தூசுவிழுந்தாலும் ,இடி இடித்தாலும்  ,கண்கள் சிவக்கஅழுவேன் என்று குறும்புத்தனமாக கண்களில் இந்த சிறுமி காட்டும் கண்ணழகு ஒரு தந்தையாக(கற்பனை) இருந்து பார்த்தால் தான் புரியும்

.தந்தைமார் சொல்லாத மகள் மீதான பாசம் என்பது மருமகன் என்ற உறவு வரும்போதுதான் .அவர்கள் கனவு கற்பனை எல்லாம் மகளின் வாழ்வு என்ற சக்கரம் சுற்றுகிறது என்பதை எத்தனை மருமகன்கள் சீதனம் என்பதைத் தாண்டி ஜோசிப்பார்கள்?

.மகள் என்பவள் தந்தை குடும்பத்தலைவன் ,அதிகாரம் காட்டுபவர் என்பதைத் மீறி தன் மீதான பாசத்திலும் கடமையிலும் (பொருளீட்ட பல வழிகளில் பிரிந்திருக்க நேர்ந்தாலும்) தன் பிள்ளைகளின் வாழ்வு என்பதை தாங்கும் ஆலமரம் என்பதை புரிந்து கொள்ளும் திறமையானவர்கள் எத்தனை பேர்..!?

அப்படி புரிந்து கொள்வார்கள் எனின் தந்தையின் ஆசிர்வாதம் இன்றி தன்வாழ்வை தீர்மானிப்பார்களா..? என்று ஒரு ரமனிச்சந்திரன் கதையில் வரும் பாத்திரப்படைப்பு ஆதங்கப்படும்.!

ஆற்றுனீர்-  இதை தனியாக ஒரு கட்டுரை எழுதலாம் கம்பன்,விபுலானந்தர் போன்றோரை மேற்கோல்காட்டலாம்!

சமதா சன சன்னே (எப்போதும் உன்னையே நினைக்கிறேன்) இதுக்கும் வர்த்தையாலம் இருக்கு தமிழில்.

மங் ரேக்ககன்னவா- நான் பாதுகாப்பேன்(இதையும் பல பொருள் கொடுக்கலாம்)இப்படி நான் ரசித்த வார்த்தைகள் அதிகம்.

இசையமைப்பாளர் பல சகோதரமொழி மேடைநாடகங்கள் சின்னத்திரை , ,தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் பின்னனி இசை மீட்டும் ரோகணதர்மகீர்த்தி.

கவிப்புலமையில் பல அழகிய சகோதர மொழி இலக்கிய வார்த்தைகளை பூமாலையாக்கி இருப்பவர் A.ஆனந்தகேவாரன்ஹிந்த என்பவர் .இவரின் மொழி நடை என்னை இன்னும் சகோத மொழியில் புலமை காணமல் விட்டுவிட்டோமே என்று ஏங்க வைக்கிறது.

பாடகர் காட்சியில் தோன்றும் அதே எட்வட்ஜெயக்கொடி சகோதரமொழியில் பல பாடல்களை தொலைக்காட்சியிலும் ,இசைத்தட்டுக்களாகவும் வெளியிட்டவர். கண்டிய சாஸ்திரிய சங்கீதத்தை முறையாககற்றவர் .

ரூபவாஹினி தொலைக்காட்சியில் பல மேடைப்பாடல்கள் பாடுவதில் முன்னனியில் இருந்தவர்(கீத்த பஹ ,போயாநாட்கள் பாடல்கள் என பலதில் இவர் முன்னனிப் பாடகர்) இவருடன் பாடுவதில் அன்நாட்களில் தொலைக்காட்சியில் பலர் முண்டியடித்தை சில இசை நிகழ்ச்சிகள் பார்க்கும் போது தெரிந்து கொண்டவை


.இவரிடம் எனக்குப் பிடித்தது. எப்போதும் எளிமையாக உடை அணிந்து கொள்வது ,பண்பானவர் மற்றவர்களை மனம்திறந்து பாராட்டுபவர்.
எப்போதும் மெல்லிசையே இவரின் தாரகமந்திரம் பைலாபாடி நான்கண்டதில்லை.

பண்டித் அமரதேவுக்கு இவரை அதிகம் பிடிக்கும் என்று இரகந்த பத்திரிகையில் ஒரு வாசகர் கேள்விக்கு.பதிலாக இருந்தது.

பாடி நடித்திருக்கும் இந்தச்சிறுமி நாதாஸா பெரேரா குரல் வளம் , குறும்புப் பார்வையில் ரசிக்கவைக்கிறார் சில சகோதரமொழி நங்கைகளுடன் தொழில் நிமித்தம் பழகியதில் அவர்கள் செய்யும் குறும்புகளை இவரின் நடிப்பில் பார்க்கின்றேன்.

இப்போது இந்தச் சிறுமி சகோதரமொழியில் பல அப்புஹாமியின் பேரன்களின் இன்றைய கனவுத்தாரகை சில தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதாக எனதுசகோதர மொழி நண்பர் கூறியிருந்தார்.

இப்போது பலர் சிவப்பு ரோஜாக்களுடன் ராஜகிரியப் பக்கம் திரிவதாகவும் கூறியிருந்தார்!
ஹான்சிக்ஹாவுக்கு போட்டி போடும் வலைப்பதிவு மூத்தவர்கள் போல்!எனக்கும் தனியாக பதிவுக்கடிதம் கொடுத்துவிடுவாயா??

இப்பாடலின் காட்சியமைப்பில் வரும் வைக்கோல் பட்டறை,தேமாமரம் ,இயற்கை அழகு, பசுமாடு,தாயப்பெட்டி விளையாட்டு, எல்லாம் என் சிறு வயதுகளில் பார்த்தும் ,விளையாடியும்  ரசித்தவைகள் தொலைந்து போய் விட்டதே யுத்தம் என்ற புயல்க்காற்றில்!

என்னைய்யா தனிமரம் பாட்டு வருமா என்று திட்டாதீர்கள் இதோ காட்சியும் காணமும் ..!




 ஒட்டுப் போடுங்கள் பாசப்பிறப்புக்களே ! ஒரு நிமிடம் கருத்துக்களையும் சொல்லிவீர்களா!

16 June 2011

காதல் தேவதை!!

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே "!என்று ரஜனி பாடும் போது தெரியாத சிங்கப்பூர் அழகை .!

.புலம்பெயரும் பொருட்டு உள் நுழைந்து .சில காலம் இருந்தபோது வெளியில் போக முடியவில்லை.!

என்ற ஆதங்கம் பல தடவை உறுத்தியதை ,புலம் பெயர்ந்து அகதி வாழ்வின் அவலங்களுக் கிடையிலும் அசுவாசித்துக் கொள்ள. அப்பப்ப ஓடி ஒளிந்து கொள்ளும் தேசமாக!

இந்த உல்லாச புரி வந்தோரை சுற்றுலா பயணிகளாக உள்வாங்குகின்ற.

இந்த இனிய நாட்டில் நான் பலதடவை ஒரு நாடோடி பாட்டுக்காரன் போல் என் பயணங்களை அமைத்துக் கொள்வது என் தேவதையான கடல் தேவதை தோன்றும் அழகைக் கான!


சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என்று சொல்லக் கூடிய இந்த சிறிய நாடு .இலங்கைக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்று ஒரு தலைவர் எங்களிடம் வாக்குக் கேட்கும் போது!

"சிங்கப் பூரைப் போல் இலங்கையை மாற்றுவேன் என்றவர் "சின்னாபின்னம் ஆக்கியது  தமிழர் வாழ்வைத்தான்!

சிங்கப்பூரில் பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கு .நீங்கள் இயற்கைத் தாயை செயற்கையின் ஊடே சென்று பார்க்க விரும்பும் பயணியானால்!.
 உங்களை இருகரம் கூப்பி வாரியனைக்கும் .
செந்தோசா இயற்கை கடல்களியாட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட பெரும் பரப்பளவு!

ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் வரவேற்பு பகுதியில். நீங்கள் விரும்பும் வண்ணம் விளக்கப் படத்துடன் அட்டவணைகளைத் தாங்கிய வண்ணம் .சிங்கார செந்தோசா சுற்றுலாமையத்தில் வரவேற்புப் பணியாளர்கள் விளக்குகிறார்கள் .

உள் அனுமதி சிங்கை நாணயத்தில் 3$.. அதன் பின் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளுக்கு நிர்னையக் கட்டணம் .

..இங்கும் ஒரு நிகழ்ச்சியுடன் மறு நிகழ்ச்சியை பார்க்கும் வண்ணம் விம் பவுடருடன் இலவச இனைப்பாக வரும் மற்றைய விம் பவுடர் போல் இனைப்பு நிகழ்ச்சிநிரல் இருக்கும்.

நானும் கடலால் சூழ்ந்த இனிய வயல்கள் தாலாட்ட, மாட்டுவண்டிகளைத் தொலைத்த கிராமத்து ,சிறுபாராயம் ..யுத்தம் என்ற அரக்கனின் கோரத்தில் இடம்பெயர்ந்தும் !

,புலம் பெயர் தேசத்தில் கடலை தேடிபோகும் தூரம் அதிகம் என்பதால்!

சிங்கைக் கடலில் கருணாநிதி போல் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரம் ஆவேன் என்பதை பரீட்ச்சித்து கடல்கரையில் சூரிய குளியல் முடித்து.

விளையாட்டுத்
தாண்டி வந்தது. கடல் தேவதை பாடும் நிகழ்ச்சிக்கு(sogs of sea).

இந்த நிகழ்ச்சி ஒருநாளைக்கு ராஜா தியேட்டரில் 3 காட்சிகள் போல் மாலையில் 3காட்சிகள் நடத்தப் படும் .
ஒரு அழகிய குறுங், மாயாஜால பிரமிப்பூட்டும் நாடகம்!

ஜெனிவா நகரத்திற்கு நீதிகேட்டுப் போன புலம் பெயர் தமிழர் மாதிரி பார்வையாளர்கள் நிகழ்ச்சி தொடங்க முண்ணமே முண்டியடித்தனர் .

தனிமரம் இரண்டாவது காட்சியைத்தான் எப்போதுமே நாடும்.!
7.30 க்கு தொடங்கும் நிகழ்ச்சி சிங்கையின் தேசிய கீதத்துடன் ஆரப்பமாகும்."
"..... நல்லொளி பொழி சிரனி நமோ விற்கு இல்லாத தேசிய ஓற்றுமை "
இந்த நாட்டில் இருக்கிறது .
பார்வையாளர்களை சிங்கை மாணவ சமுதாயம். இங்கு பகுதி நேரப்பணியாளர்களாக இருந்து சுற்றுலாவாசிகளுக்கும் விளங்கும் வண்ணம் சேர்ந்து தேசிய கீதத்தை இசைக்கிறார்கள்!

பொன்னியின் செல்வனில் பரிசல்காரியின் பார்வையில் வரும் தேவதையின் ஏக்கம் போல் !
செந்தோசா கடல் தேவதையின் வரவை அறிவிக்கும் ஒலிவாங்கி K.s. ராஜாவை ஞாபகம் ஊட்ட!

சூரிய தேவன் வானில் விடை பெறும் அந்த செவ்வாணம் எங்கள் கிராமத்தில் வடக்கன் மாட்டை வீட்டுக்கு ஓட்டிவந்து கொட்டிலில் கட்டுவது போல்!

சூரியன் மறையும் தருணத்தில் !பார்வையாளர்கள் கடற்கரையில் சீமெந்தால் செய்யப் பட்ட நீண்ட ஆசனங்களில்,அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து இரானுவத்தின் வெளிச்ச ஒளியை ஞாபகப் படுத்தும் .

தீச்சுவாலையை கடலில் மூங்கினால் ஆனா குழாய் ஊடாக வெளிச்சம் இட்டவாறும் கரடிப் போக்கு வான்கதவு திறந்து விட்டதைப் போல நீரினைக் கிழித்துக் கொண்டும்

கடல் தேவதையும், நாடக சிகாமணிகளும் கடற்கரையைப் பார்த்தவண்ணம் இருக்கும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் ஆகிறார்கள்.

தேவதையைக் காட்டும் அந்த சில வினாடிகள் பார்வையாளர்களின்,இயற்கையுடன் ஒன்றிய சூழ்நிலையில்.
பலத்த கரவோசம் விண் அதிர பல புகைப்படக்கருவிகளும் காட்சியை உள்வாங்குகிறது. காட்சியாகவும் ஒலி/ஒளியாகவும்.!

தேவதை மறைந்து விட நாடக மாந்தர்கள் தம் குறும்புத்தனமாக கடற்கரையில் ஒடியாடி கதையைத் சொல்கிறார்கள்.!

கடல் காதலன் ஒருவன் கடல் தேவதையை ஒரு நாள் கானுகின்றான்.
அவளை மீண்டும் கான ஆசைப் படுகின்றான். அதுக்காக அகத்தியர் போல்தவம் புரிகின்றான்.

 இவன் தவத்தினால் ஒவ்வொருத்தராக கடல் காவலர்கள் தோன்றி அவனை தேற்றுகிறார்கள்.

தேவதை நித்திரையில் இருப்பதாக அவளின் தோழிகள் கூறுகிறார்கள் .

.அவளை தான் நேசிப்பதாக அவன் கூறுகின்றான்.
நித்திரையில் இருக்கும் தோழியை யார் எழுப்புவது என ஜோசிக்கும் அவன். பார்வை யாளர்களுடன்,
சேர்ந்து எழுப்புவம் என்று !பார்வையாளர்களிடம் உதவி கோருகிறான்.

சர்வதேசம் கைவிட்ட ஈழத்தமிழர் போல் அல்லாமல் பார்வையாளர்கள் ஒத்தவண்ணம் அவன் பாடும் அறைகூவளை மக்களும் சேர்ந்து பாட கடலில் மேகத்தை கிழித்துக் கொண்டுதேவதை !

அழகிய திரையில் பலவண்ண கதிர் இயக்க(லேசர்) ஒலி/ஒளியுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வரும் பொழுது பல வான வேடிக்கை முழங்க !

சினிமாவிலும்,சின்னத்திரையிலும் கிடைக்காத,திருப்தி!

ஆண்டாள் பாடியது போல !
மத்தளம் கொட்ட  வரிசங்கு முழங்க நாரணன்நம்பியின் வரவைப்போல தேவதையின் ஒளி மயக்கிறது!

வானம் இருண்டு கருமை நிறம் கொள்ள கடலை ரசிக்கும் பலவண்ணம் கொண்ட வெளிச்சத்தில் பார்வையாளர்கள் வெளியேற !

சினிசிட்டியில் பாய்ஸ் பாடத்திற்கு உள்நுழைய முட்டுப்படும் ரசிகர்கள் போல் அடுத்த இரவுக் காட்சிக்கு தயாராகிறார்கள் பார்வையாளர்கள்!



நம்தேசத்தில் இப்படி பல இடங்களில் அமைக்கும் வளம் இருந்தும் என்ற பெருமூச்சு எனக்குள்!..

14 June 2011

காதல் சொல்ல வந்தேன்!!


13 June 2011

வாடகை இதயம்?!

பலர் தொழில் நிமித்தம் தனியாக இருக்க நேரும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் படிப்பு விடயம் காரணமாகவும் இத்தியாகி  பணி நிமித்தம் பிரியும் போது இருப்பதற்கு தேடுவது தான் வாடகை அறை(rooms) .

 இப்படி அறை தேடுவது என்பது பல புறக்காரணிகள் தீர்மானிக்கும் விடயங்களாக முதல் நாள் வெளியாகும் ரஜனிபடம் மாதிரி.

நானும் தொழில் நிமித்தம் பெரும் பட்டணம் கொழும்பில் 1999 இன் பிற்பகுதியில் ஒரு அறை தேடும் படலத்தை தொடங்கினேன். அது அவ்வளவு சுலமான விடயமாக இருக்கவில்லை. 

நாளிதழ்களில் ஒரு பக்கத்தில் ஏதாவது விபத்துச் செய்தி போல் இருக்கும் விளம்பரத்தில் தேடிப் பிடித்துப் போய் நோட்டம் இட்டால் அதிகமான கட்டணங்களும் புதுப் படத்திற்கு ஜஸ்வரியாவின் கால்ஸீட் கிடைப்பதை விட அதிகமான சட்ட திட்டங்கள் போடுவார்கள். 
நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் என்ற கொடிய வேதனையிலும் தமிழரிடம் அதிகமான வருமானத்தை ஈட்டும் வழிமுறை தெரிந்து ஆட்டை போட்டவர்கள் பல சகோத மொழி உறவுகள்.

 சில பெட்டிக்கடை ஓரங்களில் கவனிப்பார் அற்ற காஞ்சனா போல் ஏதாவது சிறு துண்டில் எழுதி ஒட்டப் பட்டிருக்கும்.சிலர் வீட்டுக்கு என்றே முகவர்கள் இருப்பார்கள் இவர்களிடம் தெரியாமல் அகப்பட்டால் ஆட்டோ செலவில் இருந்து அடுத்த நாள் சாப்பாட்டுச் செலவு வரை கணக்கு தேர்தல் நிதி  போல் அள்ளி வீசனும் அப்படிப் போனலும் இவர்கள் காட்டும் வீடுகள் புறாக்கூட்டை விட மோசமான தாக இருக்கும். சரியான தண்ணீர் வசதி,குளியல்/கழிவறை எதுவும் தொட்டால் ஏதோ சபலத்தில் போனவனை கட்டாயமாக தாலிகட்ட வைத்த நிலைதான்.

சில
நல்ல நண்பர்கள் தங்களுக்கு அருகில் மேல்தளத்தில் அறை உண்டு என்றதும் போய் பார்த்தேன். வீட்டு அறை சகல வசதியுடன் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள் குழாய் வழியே நீர் வந்து கொண்டிருந்தது. நீங்கள் வட்டமான இறப்பர் வாளியில் அள்ளிக் குழிக்கும் போது தண்ணீர் கீழ் வீட்டில் ஓடிப் போய் மூச்சு வாங்கும் .வீடு கட்டிக்கொடுத்த பொறியியளாலன்பின் கதவால் பல்கலைக்கழகம் புகுந்தவன் என்று நிருபித்திருந்தான். மின் இணைப்பு இல்லை. 

வீட்டுக்காரர் கூறினார் தம்பி கொஞ்சம் முற்பணம் அதிகமாகத் தந்தாள் கூடிய விரைவில் வேலைகளை முடித்து தம்பிக்குத் தரலாம் என்று. 

எவன் பொண்டாட்டிக்கு நகை வாங்கிக் கொடுக்க நான்  என்ன வெளிநாட்டுத் தூதுவனா?
ஜோசித்து சொல்கிறேன் என்று எடுத்தேன் ஓட்டம் செல்வமஹாலில் அப்பு படம் ஓடிய மாலைக் காட்ச்சிக்கு.

இருக்கும் அறைக்கு விரைவில் பிரியாவிடை பெறப்   போகும் இடம் மாறிப்போகும் தேசிய பாடசாலை அதிபரின் நிலையில் இருந்தது.வீட்டை உடைத்து
புதிய நவீன் தொடர் அங்காடி திறப்பதற்கு திட்டம் போட்டார் வீட்டு உரிமையாளர்..

இருந்த எங்களுக்கு கனிமொழிக்கு அனுப்பப் பட்ட பிடிவாராந்து போல் நேரத்திற்கே எழும்பச் சொல்லிவிட்டார்.அடுத்த கட்டம் என்ன செய்வது என கருணாநிதி போல் செயற்குழுவைக் கூட்டினால் வீட்டு உரிமையாளர் தனது நண்பர் ஒருவர் வாடைகைக்கு ஒரு அறை இருக்கு என்று கூறினார். 

அவரின் இலக்கத்தையும் தந்தார். 
நானும் அவரிடம் வாங்கி வீட்டு உரிமையாளருடன் தொடர்பு கொண்டேன் ஒரு ஞாயிறு பின் மாலைப் பொழுதில் நேரில் வரலாமா வாடகை அறை பார்க்க என்று அவரும் சரி என்றார் மறுமுனையில்!
விரைவில் ஞாயிறு மாலை அவரை நேரில் சந்தித்தேன் கல்கிசையில் அவர்கூறிய இடத்தைப் பார்வையிட சென்றேன் தொடர்மாடியில்  இரண்டாவது தளம் நன்கு  வேலைப்பாடுகள் செய்து அழகாக இருந்தது எதிர்  எதிரே மூன்று அறைகள் முதலாவதின் முன்பகுதியில் காட்சியகம் ஒன்றில்  வேலை செய்யும் சகோதர மொழி நண்பர் இருந்தார் இரண்டாவதை காட்டினார்  வாடகை 3000ரூபாய் ஒருவருடம் முன்பணம் கேட்டார்,
பிச்சைக்காரனிட்ம் பொன் கேட்டாள் 
என்ன செய்வான் ?

இன்னொரு நண்பனை சேர்த்துக் கொண்டுதான் என்னால் வாடகையை பிரிக்கலாம் என்றேன் அப்படி கொடுக்க முடியாது என்றார் நானும்  விடவில்லை ரியோவில் காசு கொடுத்து வாங்கும் ஐஸ் கட்டிகளை  செலவில்லாமல் அவர் இதயம் குளிரும் வண்ணம் பேசியதில் அவரும் உடன்பட நானும் அந்த அறையை நண்பனுடன் பகிர்ந்து கொண்டு வாடகைக்கு குடிபுகுந்தேன்!

என்நண்பன்  கொழும்புக்கு வந்தது புதிது ஊரில் படலை சாத்தாமல் படுத்தவன் ரூம் கதவை சாத்தாமல் மாப்பூ  மப்பில் மல்லாந்து படுக்க குடுராஜா அவன் உடுப்புக்கள் ,காசு ,பொலிஸ்பதிவு எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டான் நான் வந்துபார்த்தால்  ரூம் விரிச்சுப் போட்ட வைக்கோல் பட்டறைபோல் இருந்தது எதுவும் தெரியாமல் .

அதுவரை யாழ் தேவி புகைவிட்டது போல் குறட்டைவிட்டு நித்திரை பிறகு அவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்தது ஒருவாரம் கழிச்சு

அருகில் ஒர் அறைக்கு புதிதாக ஒரு  சகோதர மொழி  நங்கை வந்தாள்  சிரித்தால் சங்கீதா வீரரத்தன மாதிரி கண்ணத்தில் குழிவிழும் என்னுடன் அதிகமாக நட்பாக இருந்தாள்.எழுதுவிளைஞ்ஞர்(clack) வேலை அவளுடையது
என்னுடைய உடையை நல்ல வடிவாக அயன் செய்து தரும் வரை அவசரத்திற்கு பணம் வேண்டி கொடுத்தால் அது கோயில் உண்டியல்  போல்  ஆகிவிடும் என்றாளும் நல்ல தோழியாக இருந்தால் .

எனக்கு மாற்றம் வவுனியாவிற்கு வரும் காலம் வரை. 
அவளை நினைப்பது எல்லாம் என் கைவிரல் மோதிரம் அவளுக்காக அடைவுகடையை எத்தனை தரம் எட்டிப்பாத்திருக்கும் இன்றும் என் மைத்துனைர் என்னுடன் கோபமாக இருப்பது அவர் தந்த மச்சான் தோழன் மோதிரம் நான் தொலைந்ததால் மோதிரம் போல் அவளும் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணாக போய்விட்டாள் !

காலம் என்றாவது அவளை  மீண்டும் சந்திக்கவைக்கும் வைரமுத்துவின் பாடல் போல் இதயம் ஒரு வாடைகை வீடு இங்கு அடைமழை ஏது!

10 June 2011

வெள்ளித்திரையில் தனிமரம்!!

வணக்கம் என் உறவுகளே இந்த தனிமரம் இன்று உங்களை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது!

வெள்ளித்திரை,சின்னத்திரையை தாண்டி google வலை ஊடாக சர்வதேசத்து தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்களை பல்வேறு தொலைக்காட்சிகளையும் முதல் முறையாக ஒரே பண்பலையில் இணைத்து வரும் கலக்கப் போகும் கபோதி காணத்தவறாதீர்கள் ! இன்று இரவு 8.30 இற்கு
 ஒரு சிறு விளம்பரம்



புதுமணத்தம்பதிகளை விருந்துக்கு (இப்ப எல்லாம் யாரு கூப்பிடுறாங்க)வாங்கோ என்று அழைத்துவிட்டு சின்னத்திரையில் மூழ்கிக்கொண்டுப் வந்தவர்களுக்கு கோப்பி கொடுக்காமல் அவர்களையும் பிரிந்து போகவழிகாட்டும் நாடக சிகாமனிகளுக்கும் பால்க்கோப்பி அடுப்படியில் ஊற்றாமல் Tp யில் ஓடர் கொடுத்து வரவழைத்து தரும் பாட்டிமார்களையும் நோக்கி வரும் நிகழ்ச்சிதான் இனிப்பான சிற்றுண்டியை எப்படித் தயாரிப்பது என்ற இந்த டாக் சோ!

நிகழ்ச்சிக்கு போகமுன் ஒரு பாடல் "சாக்லெட் சாக்லெட் போலவே மனசு ""என்ற உன்னை நினைத்து படப்பாடல்!

என்ன நேயர்களே இன்று என்ன தயாரிப்பு என்று ஊகித்து விட்டீர்களா! சரி
இதுக்காக கண்ணைக் கசக்கலாமா ?நிகழ்ச்சிக்கு போங்கள் என்று சொல்லும் உங்களுக்கு ஒரு  சிறு வேண்டுகோள் !

இந்த நிகழ்ச்சியை பண்பலையில் இந்த தனிமரம் என்ற பிரதான கலையகத்துடன் ஒரே நேரத்தில் பலகிளைக் கலையகம்களும்  இனைக்கும் தொழில்நுட்ப வேலைகள் நடக்கும் இத்தருத்தில் .ஒரு சிறிய இடைவேளை.

பாசக்கார உறவுகளே இந்த தனிமரத்தையும் ஒரு வலைப்பதிவானாக்கி தமிழ்மணம், இண்டிலி , தமிழ்-10 ஆகியவ்ற்றில் நீங்கள் குத்தும் வாக்கு என்னை தரமான பதிவை பதியனும் என்ற ஆவலைத்தூண்டுகிறது என்னை தோலில் தாங்கும் உங்கள் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்!
 இதுதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த கலக்கப் போகும் கபோதி நிகழ்ச்சி தனிமரத்தின் பிரதான கலையகத்துடன் இனையும் பல்வேறு நாட்டு தொலைக்காட்சி   அலைவரிசைகள் பற்றிய குறிப்பை அறிவிக்க எங்கள் உங்கள் அன்பு ஓட்டைவடை என்னுடன் இணைகிறார் .நிகழ்ச்சியை சுவைபட தொகுக்க!
பலத்த கரகோசத்திற்கு மத்தியில்!
வணக்கம் தனிமரம். வணக்கம் ஒட்டைவடை. நேயர்கள் அதிகமாக தொலைபேசியில் வருவதற்காக திரையில் காட்சியை காண ஆவலாக ஒரு பைக்கட் சோளப் பொரியை 15 நிமிடங்கள் கொறித்துக் கொண்டும் உங்களை கடிக்கவும் காத்திருக்கிறார்கள் .

நேயர்களே இந்த தனிமரம் என்னை அடிக்கடி வம்புக்கு இழுக்குது .நானே டிவிட்டரில் வரச்சொல்லுறன் .இந்த நிகழ்ச்சிக்கு தயவாக கேட்டதால் வருகின்றேன் .மாப்பூ மனசை இப்படி பப்ளிக்கில் திறக்காத நாங்கள் உடன்பிறப்புக்கள்!

சொல்லுங்கள் நண்பா நேயர்களுக்கு எங்கள் பிரதான கலையகத்துடன் இணையும் கடல்தாண்டிய கூட்டனி ஒலிபரப்பில் இனையும் கிளை தொலைக்காட்சிகள் பற்றிய விபரங்களை!

பேரன்பு மிக்க நேயர்களே கபோதி நிகழ்ச்சியை உங்கள் வீட்டில்  வலையில் கொண்டு வருபவர்கள் இதோ!
தமிழ் சினிமா பாடல்காட்சிக்கு அதிகமாக ஓடும் பனிமழை தேசம் சுவிஸ் இல் இருந்து ஹேமா.
மத்திய கிழ்க்கிற்கு அண்ணன் மனோ . தமிழகத்திற்கு கூடல்பாலா அவருக்கு உதவியாக மதுரை சரவணன்,,தாயக உறவுகளுக்கு கொழும்பு மேற்கிற்கு மைந்தன் சிவா, கொழும்பு கிழக்கிற்கு காற்றில் என் கீதம், வடக்கின் வசந்தம் என்று  தனியாக நாற்றும் அவருக்கு உதவியாக கந்தசாமி மற்றும் மதிசுதா இவர்களுடன் இன்னும் பலர் .நிகழ்ச்சிக்கு சிறிது நேரம் என்பதால் இனைக்க முடியாத மற்றவர்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தனிமரம் இனைக்கும் .அதனையும் நீங்கள் செம்பு அனுப்புவதைப் பொறுத்து!

எல்லோறும் ஆவலுடன் பிரதான கலையகங்களும்  ஒருசேர இணையும் இத்தருணத்தில்
 .மணிக்குரல் தொலைக்காட்சி நேரம் இரவு 8.30 இது .ஒரு கட்டணம் செலுத்திய விளம்பரம்.

வணக்கம் கபோதி இந்த இனிப்பான சிற்றுண்டி எப்படி செய்வது ?எங்கே தோண்றியது ?ஏன் இதை நீங்கள் மக்களிடம் இலவசமாக கூறுகிறீர்கள் ?எதிர்காலத்தில் விஜயைக்கு போட்டியாக வர உத்தேசமா?

தனிமரம் கடுப்பேத்தாத அங்கே அன்பு உள்ளங்கள் அடுத்த பதிவு படிக்கனும்!
சரிபாஸ்!

வணக்கம் உங்கள் இருவருக்கும் .தொலைக்காட்சியில் என்னைக்கான காத்திருக்கும் நேயர்களே இன்று தலைக்கு  கலர் பூசமறந்துவிட்டேன் அதுதான் இவர்கள் ஒளியில் என் தலையில் சூரிய ஒளி தெரியுது!

இதற்குப் பெயர்
pudding (புட்டிங்)இது போத்துக்கல் நாட்டு இனிப்பு. எத்தனை நாளுக்குத்தான் நாங்கள் வடையையும் ,பாயாசமும்,,ஐஸ்கிரிமும் சாப்பாட்டுக்குப் பிறகு விசேஷமாக சபையில் கொடுத்துக் கொண்டிருப்பது .இப்ப எல்லாம்  புதுசு புதுசுத்தானே கண்டு பிடிக்கிறாங்க அலைவரிசை ஊழல் என்று!

தேவையான மூலப்பொருள்கள்  கமராவை கொஞ்சம் கிட்ட வையுங்கோ நேயர்களுக்கு கண்ணுக்கு தெரியனும்!(கண்ணுபோகனுமாம் எப்படி விளம்பர மோகம் கபோதிக்கு)
1)
500கிராம் சீனி இதை 300கிராம் 200கிராம் என்ப்பிரித்து வையுங்கள்(சீனிவிலை தெரியாதாஎன்று உனக்கு யாரும் திட்டாதீர்கள் சிறிமா ஆட்சியில் அரைக்கு மேல் சீனியில்லை என்று முன் சங்கக்கடையில் சிரிச்சுக்கொண்டு சொல்லும்போது விளங்கவில்லை மகள் ஆட்சியில் சீனிபோட்டுக் குடிக்காமல் பட்ட துயரம் சொல்லாத காதல். இதையும்தாண்டி இலங்கையில்  சீனி ஆலை இருந்தது சிலருக்கு தெரியாத சங்கதி)

2)கோதுமை மாவு  40கிராம் ( அரிசிமாவைத் தாண்டி இந்த கோதுமையை  வீட்டில் கண்டது இடம்பெயர்ந்த பிறகுதான்)

3) மஞ்சல் கரு முட்டை 8( இப்பஎல்லாம் வீட்டில் கோழி வளர்த்தால் மதிப்பு இல்லையாம் வெளிநாட்டுக் காசு எத்தனைபேரை வடிவேல் போல்  எகிரிப்பேசவைக்குது)

4)200கிராம்தேங்காய்ப்பூ பதப்படுத்தியது(தென்னைமரங்களே ஸெல் அடியில் சிதரிய தமிழன் போல் இப்ப இருக்கும் நிலையில்)

5)500மில்லி லீற்றர் பால்(அது வில்டாமில்க் பால் ,ஆட்டுப்பால் உங்கள் வசதிக்கேற்ப)

6)இரண்டு அலுமினியம் பாத்திரம்  .ஒரு இட்லிச்சருவம் போன்று மூடியுடன் கூடிய சிரிய அலுமினியம் பாத்திரம்

செய்முறையை கவணமாக கேளுங்கள் !செல்லம்   நாடகம் பிறகும்  பார்க்கலாம் கபோதிக்கு அடுத்த சூட்டிங் கனடாவில்.

நேயர்களே முதலில் 200கிராம் சீனியை 5 தேக்கரண்டி பச்சத்தண்ணீரையும் கலந்து சிறிய சட்டியில் கொதிக்க் வையுங்கள். 10நிமிடங்களில் உமியின் நிறத்தில் சீனிப் பாணி தயார்!
அதனை குவியம் போன்றஅலுமினியம் சட்டியில் ஊற்றுங்கள் முதலில். பின் சீனி,கோதுமைமா,முட்டை மஞ்சல் கரு,தேங்காய்ப்பூ,பால், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துவிட்டு நல்லாக கலக்கிய பின் சீனிப்பாணி ஊற்றிய குவியம் போன்ற  அலுமினியம் சட்டியில் நல்ல கொதிக்கும் வண்ணம் 45நிமிடங்கள் சுடுநீரில் கொதிக்க வையுங்கள்,

பின் வெளியில் எடுத்தால் அழகிய இராசவள்ளிக்கிழங்கு போன்ற  புட்டிங் சுவையூட்டி கிடைக்கும்! இதுதான் கபோதியின் இன்றைய  சிறப்புத் தயாரிப்பு.

நல்லது ரசிகர்களே இது சம்மந்தமான உங்கள் சந்தேகங்களை எழுதி அனுப்புங்கள் இதுவரை பலவலைகள் ஊடா ஓளிபரப்பான  இந்த அதிசய ஒளி/ஒலிபரப்பு இத்துடன் பிரதான கலையகத்துடன் இணைகின்றது.

இதுவரை பார்த்து ரசித்த உங்களுக்கும் நிலையம் வந்து சுவையூட்டியை செய்துகாட்டிய கபோதிக்கும் நன்றிகள் .
இதுவரை என்னுடன் இனைந்து கலக்கிய ஓட்டைவடைக்கும் நன்றி .

மீண்டும் ஒரு இனிய நிகழ்ச்சியில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது அப்புக்குட்டியின் அடுத்தவாரிசு தனிமரம்!(காப்பாத்துங்க முட்டை வருகிறது ஓடுகிறார் இந்தியா,சீனா  என்று தீர்வுதராமல்,)

08 June 2011

தொலைந்து போகும் தூதுவன்

தபால் அட்டை நீண்ட செவ்வகத்தில் தடித்த கடுதாசியினால் செய்யப்பட்டு முத்திரையை பதித்தவண்ணம் தாங்கியிருக்கும் .இது இன்று எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று நான் அறியேன் !
!ஆனால் இது ஒரு காலத்தில் என் பெயரை ஒரு இசைக்கூடத்திற்கு தூது சென்ற புறா!

எங்கள் வீட்டில் இருந்து 15 நிமிட  பொடிநடையில் போய் தபால் கந்தோரில் 25 சதம் கொடுத்து ஒரு கட்டு (12)வாங்கியந்தால் இரண்டு நாளில் அதில் என் கற்பனையை சுமந்து செல்லும் .இன்று போல் வானொலிகள் அன்று இல்லை இப்போது கருணா படத்தில் கவுண்டர் சொல்லுவார் சுத்துராஜா சுத்து டெலிபோல் அடிக்குது  என்று அடித்தால் விரும்பிய பாடல் ஓலிக்க விட ஆயிரம் அலைவரிசைகள் காத்திருக்கிறது.

முன்னர் நாங்கள் பிடித்த பாடல்களை கேட்க வேண்டும் என்றாள் இலகுவான அதிக செலவு இல்லாத வழிமுறைதான் தபால் அட்டையில் எழுதி அனுப்புவது.
இலங்கை ஒலிபரப்பில் மத்திய/சிற்றலையில் எங்களின் பெயரை இனிய குயில்களின் குரல் ஊடாக பாடல் விரும்பிக் கேட்டவர் வரிசையில் என் பெயர் வரும் வரை காத்திருந்த நிலை எப்போது கனிமொழி வெளியில் வருவார் எனக்காத்திருக்கும் கருணாநிதி போல்தான்!
அன்நாட்களில் அதிகாலையில் வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி என்றாளும் நீங்கள் கேட்டவை,நேயர் விருப்பம் என்றாளும் கதம்பமாலை என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் என் பெயரை இனைத்துக் கொள்ள நான் எழுதிய தபால் அட்டைகள்தான் காரணமாக இருந்தது. 


தூர தேச உறவுகளுக்கு சுறுங்கச் சொல்லில் அதிக விளக்கம் தரும் திருக்குறள் போல் நலம் விசாரிப்புக்களை தாண்டி!

சிலரின் காற்றுவாக்கில் காதல் சொல்லவும் இந்த தபால் அட்டை தூதுவனாக இருந்தது.
நம்கிராமத்தில் உப தபால் கந்தோர் நாட்சாரம் வீட்டில் முன் பக்கத்தில் இருக்கும் அவ்வீட்டில் சில புள்ளிமான்களில் ஒன்று சிலகனங்கள் விழியில் விழுந்து இதையம் நுழைந்து தினமும் தபால் அட்டை வாக்கும் சாட்டில் உருவான உறவுகள்  ஒருகவிஞன் வரிகளில் வரும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அவள் அப்பனும் நோக்கினான் என்று! அதில் சொல்லாதது அவள் அண்ணனும் நோக்கியதில் ரோட்டுப் புழுதியில் வேறு ஒரு பிரச்சனையை சாட்டாக்கி புழுதிமணலில் கட்டிப்பிடித்து பாசமலர் போல் பாசம் பொழிந்ததும், பின் "சில காலம்." நான் ஒரு ராசியில்லா ராஜா என் ஆசைக்கு இல்லை  இதுவரை ரோஜா "என்று பாடித்திரிந்த இளசையும் இந்தப் பச்சமண்ணும் அறியும்!
 தபால் அட்டைகள் இலகுவில் தொலைந்து போகாது காரணம் அதிக மான முகவரியில் அஞ்சல் பெட்டி குறீயீட்டு இலக்கம் பின்பற்றப்பட்டது அதனால் என்னைப் போன்றோரின் கோழி கிளரிய கையெழுத்தை எல்லாம் விளங்காத கந்தோரில் அட்டைகளை தரம்பிரிப்பவர்கள்(இலங்கையில் தரப்படுத்தல் என்பது எங்கள் சொத்தான பல்கலைக்கழகம் புகும் கல்விக்கு வைக்கப்பட்ட முதல் மரன அடி இதனால் மாறிய எங்கள் வரலாறு உலகம் அறிந்தது)இலகுவில் அஞ்சல் குறியீட்டுப் பெட்டியுள் சேர்ப்பினம்.

ஏதோ ஒரு கிராமத்து வானொலி,பாட்டு ரசிகன் பன்பலையிலும் பிற்காலத்தில் பிராந்திய சேவையில் வந்த யாழ் சேவை, வன்னி சேவை என பல தளங்களில் பாடல் கேட்கும் அன்பு நேயர்கள் வரிசையில் பல ஆயிரம் பேர்களில் நானும் ஒருவனாக இருக்க எரிக் சொல்ஹைம் தூதுவன் போல் சதிவலை பின்னாமல் என் தபால் அட்டையும் 574 ஊடாக இனிய பாடல்களையும் கவிதைகளையும் இந்த தபால் அட்டை தாங்கிவந்திருக்கிறது.

காலமாற்றம் நாட்டின் பொருளாதார பணவீக்கம்  அஞ்சல் அட்டையின் விலையிலும் எங்களை இடம்பெயர வைத்தது போல் விலை ஏற்றம் கண்டது !என்றாளும் என் நினைவில் இந்த தபால் அட்டை காலம் எல்லாம் நினைவில் வரும்!அவை சிதைந்து போகும்  வீட்டுச் சுவர் அல்ல சிந்தனையில் ஊறிப்போன ஞாபகங்கள்!

07 June 2011

போவோமா ஊர்கோலம்!?

 கடந்த வருடம் தனிப்பட்ட பயணமாக சென்னை சென்று இருந்தேன். போன அலுவல்கள் முடிந்ததும் எங்கே போவது சுற்றுலா என்று ஜோசித்த போது எனது மைத்துனர்  மாமல்ல புரம் போகும் படி கூறினார்! 


சரி என்ன தான் இருக்கு என்று நானும் மனைவியும்  தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் போய்ச் சேர்ந்தோம் !பலமார்க்கங்கள் உண்டு எனினும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கும் தாம்பரத்திற்கும் சில நிமிட பல்லவன் பஸ் பயணம்.அங்கிருந்து சொகுசு பஸ் மாமல்ல புரத்திற்கு நேரடியாக செல்கிறது. பாண்டிச்சேரி பேருந்துகளிலும் போகலாம் வசதியான நேரங்களில்.
 நாங்கள் போன நேரத்தில் நல்ல கோடை வெய்யில்  தாகத்திற்கு இளநீர் அருந்திவிட்டு மாமல்ல புரத்தில் புகழ் பெற்ற பல்லவர்காலத்தில் வடிக்கப்பட்டதாக வரலாறு கூறும் மாமமல்ல புர கற்சிலையில் 
அழகிய ஒவியங்களை ரசித்தோம்! ஒரு படத்தில்  வரும் "கல்லிலே கலைவண்ணம் கண்டேன்." என்று
நீண்ட தூரங்கள் அமைதியான எண்ணத்தை தோற்றுவிக்கும் மனநிலையில்    
பலர் எங்களைக் கடந்து ஓவியங்களை ரசித்துப் பார்த்தவண்ணமும் புகைப்படம் எடுத்தவண்ணமும் சென்றார்கள்.

பலநிலைகளில் ஓவியத்தை இப்படி கல்லில் தீட்டிய சிற்பியின் மனதில் என்ன சிந்தனை ஆட்சி செய்திருக்கும் என மனதில் கேள்விகள்? அழகிய மிருகங்கள் மனிதர்களின் இனைந்த உறவு நிலை .,மக்களின் வாழ்வுகள் என பலதை மனதில் பதியும் வண்ணம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ள அழகிய கருங்கற்களில் இப்படி எல்லாம் சிற்பம் செதுக்கிய அந்த ஓவியன் பெயரைத் தேடினால்  அது விபரங்கள் ஏதும் தென்படவில்லை!

.ஒரு இடத்தில் !

முக்கியமாக மகிடாசுரமர்த்தினி சிற்பம் எங்கள் புராணக்கதையில் மகிடாசுரன் அரக்கனை அன்னை காளி எவ்வாறு வதம் செய்தாள் என்பதை இங்கு சிறப்பாக செதுக்கப்பட்டதை பார்த்தேன்.பிரமித்துப் போனேன் .கோயில் கோபுரங்களில் பார்த்த சிலைகளைத் தாண்டி இப்படி பொதுமக்கள் பார்வைக்கு கட்டுப் பாடுகள் இல்லாமல் (இங்கு பாதுகாப்பு கெடுபிடியைச் சொல்கிரேன் அஜந்தாவை பார்க்கப் போய் அனுராத புரம் பொலிஸில் அண்ணதானம் வாங்கியது தனிக்கதை).முழுமையாக பார்த்தோம்.சுற்றிக்காட்ட வரும் முகவர்களை தவிர்ப்பது  உங்கள் நிதி நிலையில் துண்டு விழும் நானாவித செலவை குறைக்கலாம்!
 இனிய தென்றல் காற்று புத்துணர்ச்சி ஊட்ட தொலைந்து போன நண்பன் ஒருவனைப் பார்த்தேன். இத்தனை ஓவியங்களுக்கு இடையிலும் !
ஆம் எங்களை வாழவைத்த பனை ஒன்று சிரித்துக்கொண்டும் சிங்காரித்துக் கொண்டும் இருந்தது! பனையுடன் வாழ்ந்த பருவம் தாலாட்ட சில நிமிடங்கள் அசுவாசித்துக் கொண்டேன்!
என்னவள் கேட்டாள் கள்ளுக்கடைப் பக்கம் போனனீங்களோ ?இப்படிப் சாய்ந்து கொண்டு நிற்கிரியல்?
ஊரில் கள்ளுக்குடிக்கும் இளசுகள் இப்படி சாய்ந்து பிழாவில் குடிப்பது ஒரு தனிச்சுகம் .....காற்றுவாக்கில் என்னவளும் ஞாபகப்படுத்தினால்!

அழகிய அர்ச்சுனன் தபசு ,விஸ்னு கோயில் பாண்டவர்  இரதம் ,புதுமையான சுரங்கத்தில் அமைக்க்பட்ட சயண நிலை பெருமாளை அதிகமானவர்கள் சேவிக்கும் காட்சியை கானும் போது விடுபட்ட திருப்பதியர் எப்போது கானும் வரம் தருவாரோ? என ஒருகனம் சிந்தனை வசப்பட்டேன். 

வெயில் அதிகமாக  நீண்ட பாறைகளில் பலர் குழுக்கலாக வந்தவர்கள் சிற்றுண்டிகளை பகிர்ந்து உண்டார்கள் . நல்ல கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்த  தாய் ஒருவரிடம் நானும் கொய்யாபழம் வாங்கினேன்.

 இவர்களைப் பார்க்கும் போது அன்நாட்களில் கோயில் பிரகாரங்களில் கச்சான் விற்கும் சில முகம் தொலைந்த பாட்டிமார்களின் ஞாபகம் என்னை ஆட்கொண்டது. ராசா ராசா என்று தம்பிள்ளைகள் போல் எங்களுக்கு கச்சான் மட்டும் விற்காமல் அன்பையும் விற்றவர்கள்.


 எங்களை யுத்தம் பிரித்தாலும், அவர்களுக்கு என்னை ஞாபகம் இல்லாட்டியும் ,இன்னும் எனக்கு அவர்கள் என் மனக்கண்ணில் வந்து போகிறார்கள்.! 
அழகிய வெட்டுப்பாறைகளில் குடும்பமாக வந்தவர்களும் ,ஜோடியாக வந்தவர்களும் தனியாகவும் குழுவாகவும் இருந்து கதைத்துக் கொண்டும் விளையாடியவாரும் கலகலப்பாக இருந்தனர் . 

நடந்த களைப்பை போக்க நல்ல குச்சி ஐஸ் சாப்பிட்டோம் லிங்கம் கூல்பார் சுவை அதில் இல்லாட்டியும் குடித்தோம்!

பாறைகள் இடையே!ஜோடிகள் காலிமுகத்திடல் குடைகளை ஞாபகப் படுத்தியது என்னவள்  நீங்கள் வெளிநாடு  போய் கெட்டுப் போனீங்கள்  என்றதையும் ரசித்தேன் .!எங்களை  வேலிதாண்ட விட்டதில்லை கிராமத்துப் பெரிசுகள்! பட்டணம் போனால் கெட்டுப் போவாய் என்று பூட்டிவைத்தவர்கள் எத்தனை துயரத்தில் புலம் பெயரவிட்டார்கள் . என்று நான் அறிவேன்.

ஓவியங்களைப் ரசித்துவிட்டு வெளியில் வந்தால் கோல்டன் பீச் வரவேற்கிறது.அமைதியான கடல் அலைகள் நல்லபடகுப் பயணம் போகலாம் கொஞ்சம் பணம் கொடுத்தால் குதிரையில் வேண்டிய தூரம் சவாரி  போகலாம்.

பிரபுதேவா  அனுமதியில்லாமல் ,நயன்தாராவுடன் கைகுழுக்கலாம் புகைப்படம் எடுக்கலாம்  !ஆம் திறந்த வெளி  புகைப்படக்காட்ச்சியகம் பல இடங்களில் உண்டு  .உங்களை  நடிகர் நடிகைகளுடன் படம்பிடித்து தருவார்கள் இவர்களிடம் ஜெயகாந்தனின் சினிமாவிற்குப் போன சித்தாளு போல் உங்கள் பணத்தினை  பாதுகாப்பது உங்கள் சாமர்த்தியம்!

கடற்கரையோரம் பல நரிக்குறவர் வழிவந்த ஜக்கம்மா பாட்டிமார் உங்கள் எதிர்காலத்தை  புட்டுப்புட்டு வைப்பார்கள் ஒரு  குச்சி மூலம். கடல்தாண்டி  போவீர்கள் , மகாராசி இந்த அம்மா போகும் வீடு
 செல்வம் கொழிக்கும். அடுத்த வாரிசு அம்மாவிற்கு ஐய்யாவைப்  போல் என்று அடுக்கி பணத்தை ஆட்டை போடும் இவர்களிடம் கருணாநிதி போல் ஆட்சியில் பங்கு கொடுக்காமல் இதயத்தில் இடம் கொடுப்பது உங்கள் தந்திரம்.

கடற்கரையில் இனிய காற்றின் ஊடே  வடை ,சுண்டல் பால்கோப்பி  எல்லாம் கிடைக்கும்!

கடல்தாண்டி வந்தால் தலசயனப் பெருமாள் கோயில் வரவேற்கும் .அருகில் பல தங்கும் விடுதிகள்  இருக்கிறது.  இரவில் பூசைகள் கடலில் சந்திரோதயம் .காலைச் சூரிய உதயம் ,கடல் குளியல் என சிறப்பான குதுகலமாக்குவது நீங்கள் போடும் குறுங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

வரும்வழியில் சொர்க்கமே என்றாளும் அது நம்மூரைப்போலாகுமா என்று பாடல் ஒலித்தால் உங்கள் வலிகளுக்கு ஒரு பெரு மூச்சே தீர்வு!

06 June 2011

மழை விமர்சனம்!!!

என் உயிரின் மேலான தமிழ் மக்களே இந்த பாசத்துக்குறிய தனிமரம் மீண்டும் ஒரு திரை விமர்சனத்தில் தன் பாசப் பிறப்புக்களுடன் உங்களை நாடி வருகின்ற மாலை வேலையில்!
 ஏனையா  ராஜா படத்தைப் போடு எங்கள் வாக்கினை தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ்-10 இல் பதிவு செய்யிறம் என்று நீங்கள் கூறுவது என் செவியில் விழுகிறது! உங்களை நம்பி கடல்தாண்டி வருகிறது மழை!

நீண்ட நாளாக வானம் ஒரே சூரியனையும் அதிகமான வெக்கையையும் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு தொடக்கம் எதிர்பாராமல் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மழை பாரிசின் முக்கிய நகரங்களை  ஸ்தம்பிக்கும் நிலையில் இல்லாவிடினும் மிகவும் மெதுவாக இனிய சாரலை வானில் இருந்து தூவிக்கொண்டிருக்கிறது.

இது விடயமாக வானிலை ஆய்வாளர் ஓட்டைவடையிடம் கேட்டபோது.!

 நானும் எதிர்பார்க்க வில்லை இப்படி நடக்கும் என்று  எப்போதும் போல பட்டு வேட்டியும்  சட்டையும் சோளாப்புரி    யும்(இலங்கையில் புகழ் பெற்ற பாதனி) காதில் கடுக்கனும் போட்டுக்கொண்டு   !நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு போவம் என்று வெளியில் இறங்கினால் சோர் என்று ஒரே இரைச்சல் என்ன நாதஸ்வரம் நாடகம் நின்றுவிட்தோ? என்று ஒரு புறம்!  மனோ மாமா கொறட்டை விடுகிறாரோ !என்று மறு புரம் பார்த்தால்
வானில் இருந்து ஒரே இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது.

அடக்கடவுளே என் மழைக்கோட்டை நேற்றுத்தான் 2 மாதமாக(வெளிய சொல்லப்புடாது வெறும் வாசனைத்திரவியம் மட்டும் அடிப்பது மணக்கக்கூடாது பாருங்கோ) தோய்க்காத தை தோய்த்து அலுமாரியில் மடித்து வைத்தேன். இப்போது தேடுகிறேன் மகிந்தர் கிளிநொச்சியில் இன்று கோபுரம் திறந்து வைக்கிறார் என்று கேள்விப்பட்டு பதிவு போடும் அவசரத்தில் இருப்பதால்  மீண்டும் விரைவில் என் மழை அனுபவங்களை குறுவெட்டுக்களாக வெளியிடுவேன்.

இது விடயமாக தோழி ஹேமா அவர்களை இனைப்பில் இனைக்க முயற்ச்சித்தேன் .தொடர்பு கிடைக்கவில்லை வைரமுத்துவின் பாடல் சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ... ஒரு கறுப்புக்குடை காட்டி யாரும் வழிமறிக்க வேண்டாம் என்ற பாடல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. 

இத்துறையில் அனுபவம் கூடிய மூத்த பதிவர் மைந்தன் சிவாவின் பார்வையில் மழை விமர்சனத்திற்கு அனுகியபோது மழை படத்தில் ஸ்ரேயா நடனம் பார்த்து மூன்று நாள் முதுகுவலியில் புரண்டு படுத்ததுதான்  என்னால் சொல்லக்கூடிய தற்போதைய நிலை .என்று விமர்சனம் கூறாமல் விலக்கிச் செல்ல அடுத்த  தொடர்பில் வருவது!

உங்களை பாட்டுக்கும்மியில் பரவசப் படுத்திய நாற்று நிரூபன் தன்  மழை அனுபவத்தை பகிர வரும் போது ?!

வார இறுதியிலும் இன்றும் ஏற்பட்டுள்ள இடிமின்னல் காரணமாகவும் 
பாரிஸின் மழை , காரணமாகவும் இனையத்தில் ஏற்பட்ட தொடர்பாடல் சிக்கலினால் அதிகமான மன உளைச்சலில்  தனிமரம் இருக்கிறது . 

அதையும் தாண்டி நண்பரின் மழை விமர்சனம் கிடைக்கும் அதுவரை ஒலிக்கிறது காதல் மழையே காதல் மழையே எங்கே தொலைந்தாயோ!..

கந்தசாமியின் மழை விமர்சனத்திற்கு தொடர்புகள் ஏற்படுத்தும் வரை ஒரு இனிய பாடல் அந்தி மழை  நேரம் தங்கமழை தூவும் திருநாளாம்!..
 
இப்படத்தின் விமர்சனங்களை எழுதி அனுப்பும் முதல் மூவருக்கு அச்சுவேலி லாலா சோப் நிறுவனத்தின்  அனுசரனையில் வல்லைவெளி திரைக்கூடம் வழங்கும் காத்தவராயன் கூத்து நாடகத்திற்கு அனுமதிச் சீட்டு இலவசமாக வழங்கப் படும்!

05 June 2011

சிந்தீர்பீர்களா?!!

L


அன்புக்கினிய உறவுகளே! என்னைய்யா பாரதிராஜா படமா என்று கேட்கும் நண்பர்களே ஒரு நிமிடம்!
வார இறுதி எங்கே போகலாம் என்று மனதை குடைந்து முடிவெடுத்து சினிமாவிற்குப் போகும் நபர்கள் நீங்களா
 இதையும் படித்து விட்டுப் போங்கள்!

சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உண்டு தல அஜித்  ஒரு படத்தில் சொல்லுவார் உன் மூக்குவரைதான் உனக்கு சுதந்திரம் என்று அதே போல் நேற்று ஒரு நண்பன் முன்னால் நண்பன் என்னுடன் தொடர்பில் வந்தான். 

உன்னை மாதிரி வெளிநாட்டுக்காரனால் (அவன் சொல்வது இலங்கை தாண்டி உழைக்க வெளியேறிய மத்திய கிழக்கில் பணிபுரிபவர்களையும் சேர்த்துத்தான்)தான் இங்கு(கொழும்பில்  ) ஒழுங்கா படம் பார்க்க முடியல என்று? மிகவும் வார்த்தையில் கூறமுடியாததை 3 தரமானவார்த்தைகளை உரிமையுடன் என்னிடம் கொட்டினான்.
இன்று இந்த குள்ளநரியும் வலை எழுதுகிறது என்று தெரியாதவன் ஓசி விளம்பரம் கொடுக்க இது என்ன மணிக்குரல் விளம்பரமா ? விரும்பினவர்கள் படிக்கிறார்கள். 
விசயம் இது தான் பொது இடங்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள்

 கொழும்பில் பலருக்கு வெளிநாட்டில் இருந்து தகப்பன், சகோதரங்கள், சகோதரிகள்,  தங்கள் ஆசாபாசங்களை அடக்கி, தன்னை எண்ணாமல்  தன் குடும்பம் உறவுகள் என்று எண்ணிஅளவுக்கதிக மாக பணம் அனுப்புகிறார்கள்.இது ஒருவகை தியாகம் அல்லது நோய் என்றும் சொல்லலாம்! 
தனக்குக் கிடைக்காத சந்தோஸங்கள் தன் உறவுகளுக்கு கிடைக்கட்டும் என்று இங்கு குளிரில் ஒரு கோப்பி குடிக்க கணக்குப் பார்த்து பணம் அனுப்பும் பலர் ஒருபுறம்!

மத்தியகிலக்கில் கடும் வெயிலுக்கும் வீட்டு முதலாளிகளின் காமப்பசிகளுக்கு தப்பித்து பணிப் பெண்களாக கஸ்ரப்பட்டு பணம் அனுப்பும் சகோதர மொழி  தாய்மார்கள் , சகோதரங்கள் என பலர் பல துன்பத்திலும் பணம் அனுப்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் அனுப்பும் பணம் எப்படி செலவாகிறது தெரியுமா? பணம் மட்டும் மல்ல குடும்ப மரியாதை எல்லாமும் தான்!
மேல்தட்டு வசதிபடைத்தவர்கள் தங்களுக்குப் பிடித்த/பிரியமானவர்களுடன்/ சொகுசான வாகனம் ,மத்தியதரத்தினர் ஆட்டோக்களில் வந்து இறங்குவது மெஜிக்சிட்டி ,லிபட்டி, சமந்தா(தெமட்டக்கொட) கொங்கோட் (தெகிவலை) திரையரங்குகளுக்கு  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவார்கள் கையில் பணம் இல்லாட்டியும் கைபேசி இருக்கும் . சிலர் நேரடியாக லவ்வர் என்பார்கள் இவர்களுக்கு வயது ஆகக்கூடினால் 16 இல் இருந்து 21  உள்தான் இருக்கும் கண்டிப்பாக நாகரிகமான பாடசாலையில் படிப்பார்கள் (பெயரளவில்) மேலதிகமாக ஏதாவது தனியார் கல்வி நிறுவனங்களில் புதிய பட்டப்படிப்பு என்று ஒன்றில் கையில் விளம்பரங்களையும் வைத்துக் கொண்டு நான் இந்தக் கோஸ் செய்கிறன் என்று விளங்காதவன் இருக்கிறான் என்று விளக்கம் கொடுப்பினம் ஆங்கிலத்தில்!

எல்லாவகையான உணவுகளும் இவர்களுக்கு தெரியும் சமைக்க அல்ல! சாப்பிட இதில் சுவாரசியம் தமிழ், சிங்கள இஸ்லாமிய ஒற்றுமைகள்!

படம்பார்க்க உள்ளே யாராவது பினாமி டிக்கட் எடுத்து வைத்திருப்பான் அவனுக்கு ஏதாவது தாக சாந்தி இலவசமாக கிடைக்கும் லயன் லாகர் தொடக்கம் ஜின் வரை மவுஸ் ஏறும்!

பிரச்சனை  எங்கு தெரியுமா படம் தொடங்க விளக்குகள் அனைக்கப் பட்டதும் படத்தில் கவனிக்கிறார்களோ இல்லையோ இவர்களின் அனைப்புக்கள் ஸ்கிலா படம் தோற்றுப் போய்விடும்! 

நீங்கள் கேட்கலாம் படம் பார்க்கப் போனால் படத்தை விட்டு ஏன் இவர்களின் சந்தோசத்திற்கும் இறுக்கமான(நெருக்கமான)  அன்புக்கு குறுக்கே வாரீர்கள் என்று பலவயதினரும் படம் பார்க்க திரையரங்குக்கு வருகிறார்கள் .அவர்களுக்கு இவர்களின் முக்கல்,முணங்கல்கள் கண்ணிலும் காதிலும் விளுகிறது.  சில கேள்விகளுக்கு பதில் கூற எங்கள் சம்பிரதாய முறைகள் சங்கடப்படுத்துகிறது..
ஒரு முறை  சமந்தாவில் நானும் நண்பரும் 
காக்க காக்க படம் பார்த்தோம் முடிவில் நண்பனிடம் ஏண்டா ஜீவன் நல்லா வில்லன் பாத்திரம் பொருந்தியிருக்கு என்றேன் அவன் சொன்னான் நீ கூறுகெட்டவண்டா நல்ல ஸகிலா படம் பக்கத்தில் ஓடும் போது படத்தில்  எவன்  நடிப்பு
 முக்கியம் இதில் நான்  யாரை குறை கூறுவது !

நீங்கள் போவதற்கு எத்தனையோ விடுதிகள் குளிர்சாதன அறையுடன்(குளியல்) தாராளமாக இருக்கும் போது ஏன் இப்படி பொது இடத்தில் உங்கள் இச்சை/ இன்பங்களை மற்றவர்கள் முதுகு நெளியும் வண்ணம் நடந்து உங்களையும் பிறர் கண்களுக்கு தப்பான பார்வை பார்க்கும் வண்ணம் மற்றவர்கள் இழிவான வார்த்தைகள் பேசுவதுடன் உங்கள் உண்மையான்(நீங்கள் நம்பும்) அன்பர்களுக்கு கெட்ட பெயரையும் அல்லவா தேடிக் கொடுக்கிறீர்கள்!

இதுக்கு எவ்வாறு புரியும் வண்ணம் எடுத்துரைப்பது?!!இதில் நம்பிக்கையில் பெற்றோர் செய்யும் தியாகம் விழலுக்கு இறைத்த நீரா?..

04 June 2011

வெள்ளரிக்காய்.!!மீள்பதிவு நன்றி நிரூபன்

நாட்டு நடப்பு !
by Nesan
 இந்த வாரம் ஐரோப்பிய விவசாயிகளுக்கும் உள்ளூர் நுகர்வோர்களுக்கும் தலையிடியாக வந்துள்ள செய்திதான் வெள்ளரிக்காயில் ஏற்பட்டுள்ள ஒரு வகை பற்றீரியா நோய்!

 இதன் காரணமாக பல உள்ளூர் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்தல் செய்ய முடியாது தலையில் கைவைத்த வண்ணம் கருனாநிதி போல் இலவசம் ஏதாவது அரசாங்கம் தரமாட்டாதா என ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்!

கடந்த வார இறுதியில் ஜேர்மனியில் தொடங்கிய இந்த புதிய வகை நோயின் காரணமாக இதுவரை 16 பேர் உயிர் இறந்துள்ளதாக பிரென்ஸ்  ஊடகங்கள் ஜேர்மனியின் அரசின் உத்தியோக பூர்வ அறிவிப்பை உறுதி செய்துள்ளது!

பிரென்ஸ்சில் இதுவரை 6 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய பத்திரிகைக் குறிப்பு கூறுகிறது(இன்று அரச/வர்த்தக வங்கி விடுமுறை  அதனால் பத்திரிகை வெளிவரவில்லை )

முக்கிய பல்பொருள் அங்காடிகளில் இன்று வெள்ளரிக்காய் வியாபாரம் மந்த கதியில் நடப்பதை அவதானிக்க முடிந்தது( பகுதி நேர வேலையின் புண்ணியத்தில் நாராயாணா)

இதன் காரணமாக முக்கிய விவசாய அமைச்சர்கள் பிரென்ஸ்,ஜேர்மனி,ஸ்பானிஸ்   ஓன்று கூடிய கூட்டத்தில் சரியான தீர்வை  ஆலோசித்ததாகவும் , நல்ல செய்தி விரைவில்(தமிழர் தீர்வுத்திட்டம்??) வெளியிடப் படும் என்று நேற்றைய செய்திகள் கூறுகின்றன.

 பிந்திய செய்தியில் மக்களுக்கு சுகாதார அமைச்சகம்   இந்த நோய்கள் பரவாமல் இருக்க நோய்தடுப்பு முறைகள்   பல முன்னெச்சரிக்கைகளாக  வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது! இலத்திரனியல் ஊடகங்களில்.

வெள்ளரிக்காயில் தோன்றி இன் நோய் இன்னும் சில விவசாயப் பொருள்களிலும் பரவியுள்ள தாக தற்போதைய செய்திக்குறிப்பில் பிரென்ஸ் வானொலி அறிவிக்கிறது  .சலாத்(salade) இது ஒருவகை கீரை (ஓட்டவடை நீதான் தமிழ்மொழியில் இதக்கு விளக்கம் கொடுக்கனும்) தக்காளி(நம்பதிவர் இல்லைங்க)  போன்ற வற்றிலும்  பரவுகிற தாக  அறிவுப்புக்கள் வந்து கொண்டு இருக்கிறது!

ஏற்கனவே விவசாய அமைச்சர்களின் வேண்டு  கோளுக்கினங்க விஞ்ஞானிகள் அவசரமாக  நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் விரைந்து செயல் பட்டுக்கொண்டு இருப்பதாக வானொலி அறியத்தருகிறது (இது லங்கா புவத் இல்லை தம்பிகளே)
 
இது புதிய தலையிடி இப்போது ஐரோப்பிய அரசுகளுக்கு விவசாய ஏற்றுமதி/ இறக்கு மதியில் நோய் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய  குறிப்புக்களையும் சுகாதார வழிமுறைகளையும் கையாள வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

பிரென்ஸ் இல் பல  மாவட்டங்களில் கோடை மழை வரவில்லை இதனால் விவசாய உற்பத்தியில்  பல தாக்கம்கள் வந்து கொண்டும் ,வரப்போகிறது என்றும் கருத்துக்கணிப்புக்களும், ஆலோசனைகளும் கூறப் பட்டுக் கொண்டிருக்கும் இத்தருனத்தில் இன்னொரு இடியாக இச்செய்தி வந்துள்ளது.

உணவகம்களில் இதனால் பச்சைக்காய்கறிகளாக  சாப்பிடும் மக்கள் பலர் மாற்று உணவுகளை  தேடுகிறார்கள் !

 உடல் பருமன் கூடிவிடும் என்ற  (எங்களுக்கு வண்டிதான் கூடும்) காரணத்தால் பச்சை உணவுகளை உண்ணும் பிரென்ஸ் நங்கைகள் பலர் பாடு திண்டாட்டம் தான்!
இதனால் எங்களுக்கு  கொண்டாட்டம் சிலர் படுத்தும் பாடு இவங்கள் ஏதோ ஐஸ்வரியா தங்கைகைகள் என்ற நினைப்பு!

நாளை இதற்கான தீர்வுகள் ஏதாவது வரலாம் என்றாளும் இந்த நோய்த்தாக்கம் பற்றிய மக்கள் மனநிலை விரைவில் மாறுமா என்று கூறமுடியாது ! 

பக்கத்தில் நிருபன்  தனிக்கை செய்த காதல் கோட்டை பாடல் போடுகிறார் "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா  என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!"

03 June 2011

இன்று ஒரு தகவல்!!

 எப்படி இருக்கனும் என்ற பெற்றவர்களின் ஆசைகள் பல .அதில் விலகிப் போகும் போது அவர்கள் செல்லமாகவும், சில நேரங்களில் காட்டமாகவும் திட்டும் வார்த்தைகள் பலதாக இருக்கும்!

 இப்படித்தாங்க வீட்டில் சினிமா பார்த்து கெட்டுப்போனவன் என்று திட்டுகிறார்கள் என்றால் ! நேற்று என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் கொஞ்சம் அதிகமாக காதால் இரத்தம் வரும் அளவுக்கு வடிவேலுவைப் போல் எகிறிக் குதித்தான்!
மனோவின் அருவாள் அருகில் இல்லை!பயபுள்ள தப்பித்தான்!

அவன் சொல்லிவிட்டுப் போன வேலையை நான் செய்யவில்லை அதுக்கு அவன் சொல்லியது உதவாக்கரை என்று. பின் வைரவரின் வாகனத்தையும் சேர்த்துச் சொன்னது சுட்டுப்போட்டுது மனசில்!

அப்பதாங்க நான் வடை அண்ணாவுடன் பாசம் பொழிந்து கொண்டிருந்தன்.  அவர் நம்ம தோஸ்த்து .இவனுக்கு என் வலையைப் பற்றித் தெரியாது!கொசுவலை தெரியும் அவனுக்கு google வலை தெரியாது.

 நானே எவ்வளவு கஸ்ரப்பட்டு ஒவ்வொருத்தராக நட்புக்கரம் தேடி வரவைக்கிறன் என்று புரியாமல் என்னை உதவாக்கரையாம்! இப்பதாங்க வீட்டைத்தாண்டி தெருவிற்கு வந்தால் இண்ட்லியில்,தமிழ்மணத்தில்,தமிழ் -10,  என பாசக்காரப்  உறவுகள் ஓட்டுப் போட்டு என்னையும் தூக்கிவிட்டுக் கொண்டு இருக்கும் நிலமை தெரியாமல் உதவாக்கரையாம்! 

இதுக்கு விளக்கம் கேட்டேன் நீ ஒன்றுக்கும் 
பயன்படாமல் இருப்பவன் என்று எகத்தாளமாக பதில் சொன்னான் .நானும் வானம்  படத்தில் நம்ம தம்பி சிம்பு சொல்லுவது போல் அடக்கடவுளே  என்று விட்டுவிட்டாலும் இதன் உண்மையான சான்று தேடினேன்!
 இந்தப் பெரிசுகள் திட்டும்போது வராத இரத்த அழுத்தம் .இப்ப எல்லாம் மூக்கு மேல  கோபம் வருகுது கோடைகால வெய்யில் தாங்கமுடியாமல்!

ஆத்தாடி இந்த பச்சப்புள்ள உதவாக்கரையா பதில் யாரு சொல்லுவா? 
நம்ம ராஜா  அப்படித்தாங்க நான் ராகதேவன் இசைஞானியை விளிப்பது ! எங்கே சொன்னார் விளக்கம் எனக் கேட்கும் நண்பர்களே!

ஆற்றுக்கோ,ஏரிக்கோ கரைகட்டும் போது பெருங்கற்களைக் கீழே போட்டு அதன் மேல் மண்ணைக் கொட்டி கரை எழுப்புவார்கள்.மழையாலோ,
வெள்ளத்தாலோ மண் அரிக்கப் பெற்று கற்களுக்கிடையே இடைவெளி தெரியும் படி ஆகிவிட்டால் அதன் வழியே பெரும்பகுதியான நீர் கசிந்து வெளியேறிவிடும். எந்த இலக்கை நோக்கி ஆறு ஓடுகின்றதோ ஆற்றின் முழுத் தண்ணீரும் அந்த இலக்கை நோக்கி ஓடுவதற்கு உதவாத கரையாக அது ஆகிவிடுவதால் அதன் பெயர் உதவாக்கரை.

மேலும் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு நீந்தியோ படகிலோ போய் இறங்கினால் இறங்கக் கூடிய கரை புதை சேறு இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். கரைக்கு அப்புறம் விலங்குகள் வாழும் காடாக இருக்கக் கூடாது. புதை சேறாக இருந்தால் புதைந்து விடுவோம்! விலங்குகள் இருக்கும் பகுதியில் இறங்கினால்  விலங்குகளுக்கு இரையாகிவிடுவோம் அப்படிப்பட்ட பகுதியில் இறங்கினால் அந்தக்கரை உதவா கரை ஆகிவிடுவதால் அதுவும் உதவாக்கரைதான்.

உதவாக்கரை என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது இலக்கணக் குறிப்பு. இது கரையைக் குறிக்கும் போது மட்டும்தான் !

மனிதரை குறிக்கும் போது இலக்கணக் குறிப்பு ஆகுபெயர் ஆகும்!

இப்படி இலக்கண விளக்கத்தை ராஜா கவிஞர் முத்துலிங்கத்திற்கு விளக்கியிருக்கிறார்( கொசுறுத்தகவல் கிழக்கே போகும் ரயில் படத்தில் மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ என்று ஜெயச்சந்திரன் பாடுவது  அவர்  எழுதியது)

இந்த விளக்கத்தை  இளையராஜாவின் படைப்புகள் என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்  கவிஞர் முத்துலிங்கம்.இன் நூலாசிரியர் பிரபல கவிஞர் ,முனைவர்  .கருணாநிதி . ஆய்வு செய்த நூலாகும்!
முடிந்தால்  நீங்களும் படியுங்கள் இசையானியின் இலக்கிய அறிவைத் தெரிந்து கொள்ள முடியும்!  நன்றி முகம் தெரியாத தமிழ் ஆசிரியருக்கு!

01 June 2011

ராகதேவனுக்கு ஒரு வாழ்த்து!!

  ஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவம் அதிகம்  ஆம் இன்று(2/6/43)இந்திய இசைமேதை என்று மட்டுமல்லாது உலகில் பீத்தேவனின் இசைக்கு அடுத்த இடம் எங்கள் ராகதேவன் இசையானிக்கு இன்று பிறந்த நாள்!

வானவில்லைப் பார்பது போல் ஒரு ரசிகனாக அவரை வியர்ந்து பார்க்கிரேன் பண்ணைபுரத்து ராசையா இளையராஜாவாக அன்னக்கிளி முதல் அடி  எடுத்து வந்து இன்று அழகர்சாமி குதிரை வரை என்னை தன் இசையால் ஒரு தந்தை போல் ,நண்பன் போல் ,குருவாக இருந்து என்னை ஆளுகின்றார். அவரை இன்நாளில் வாழ்த்தும் வயது எனக்கில்லை ஆதலால் ஒரு குருவைப் போல் வணங்குகின்றேன்!நீண்டகாலம் வாழ்ந்து இசைத்தொண்டு ஆற்றனும் என்று!

அவருக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இசையமைப் பாளர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் ஆனாலும் என் முதல் தெரிவு எப்போதும் அன்னை போன்ற ராஜாவின் இசைதான்.
"காதல் ஓவியம் ஒலிக்கும்" இக்கனங்களில் அவரின் குரல் ஊடாக நான் என் தொலைந்து போன அழகிய அமைதியான கிராமத்தின் வயல்களில் ரயர் சில்லுவண்டி ஓட்டும் ஒரு சிறுவனாக்  கரைந்து போகின்றேன்.

 அன்நாளில் இவரின் இசையை காற்றலையில் கொண்டு வந்தது இலங்கை ஒலிபரப்பின் மத்திய/சிற்றலை வரிசைகளும் ,திருச்சிறாப்பள்ளி வானொலியின் திரைகடல் ஆடிவரும் தென்றலுமே!இன்று பலதடங்கள் தாண்டி ராஜாவும் வந்துவிட்டார் நானும் புலம் பெயர்ந்து தடம் மாறிப் போனாலும் அவரின் இசையை கேட்கும் ரசனையை   மாற்ற முடியவில்லை என்னால்!

ராஜாவை இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி நல்ல பாடல் ஆசிரியர், பாடகர், எழுத்தாளர் என்று பல்கலைஞ்ஞர்  இவரின் பாட்டுத்திறமைக்கு உதாரணம் பல அதில் இதயக்கோயில் படத்தில் எழுதி இசையமைத்துப் பாடிய "இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்""""வரிகளின் ஊடே இரு அடிகள் ""நீயும் நானும் போவது காதல் என்ற பாதை சேரும் நேரம் ..வந்தது மீதித்தூரம் வரிகளில் கற்பனையின் உச்சம் ஆத்மராகம் ஒன்றில் ஆடும் உயிர்கள் இரண்டு என்ற வரிகளில் படத்தின் மையப்புள்ளியை சுட்டி அற்புதமான வார்த்தையை கோத்திருப் பார்.

அதிகமான பாடல் எழுதி மெட்டமைத்துப் பாடியவர் ராஜா ஒருவரே!ஆண்பாவத்தில் அவர் போட்ட காதல் கசக்குத்ய்யா பாடல் என்றும் நிலைத்து நிற்கும் கவிவரிகள் காதலர்களின் பிரிவில் இப்பாடல் என்றும் ஒலிக்கும்!

 ஆற்றுப்படுத்தும் வரிகள் என்று நண்பர் கானாபிரபா. சில நல்ல பாடல்களை  குறிப்பிட்டிருந்தார் அவற்றில் எனக்குப் பிடித்தது .பின்வரும் பாடல்"" பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி ""என்ற பாடல் எழுதி மெட்டுப் போட்டு பாடியிருந்தார்!

பலபாடல்களை ஒலி/ஒளியேற்ற போதிய கால நேரங்களை புலம் பெயர் தேசம் வழங்க மறுக்கிறது!

இவரின் கற்பனைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு நாடோத்தென்றல்   படத்தில் அவரின் கைவண்ணத்தில் எழுதிய பாடல் தான்" ஒருக்கனம் ஒருயுகமாக  .. ஏன் தோன்ற வேண்டுமோ என்ற பாடலின் காதலின்  தவிப்பை இவர் போல் வடம் பிடிக்க முடியுமா என பலதடவை ஜோசிப்பேன் தேர்ந்த வார்த்தைகள் அச்சரமாக வந்து போகும் " பூமிக்குள் வைரம் போல் நெஞ்சத்தில்  நீதனம்மா ! என்ற வரிகளை பின்னிரவுப் பொழுதில் கேட்டாள் இசையைத்தாண்டி அவரின் குரலில் வரும் பாவத்தை காதலில் சோகரசத்தை பிழிந்து கொடுத்திருப்பார்!துரதிஸ்டவசம் இப்பாடல் இறுவட்டில் மட்டுமே பதிவானது படத்தில் பாரதிராஜா சதிசெய்துவிட்டார் சேர்கவில்லை!

பிரபல்யமான நடிகர் எல்லாருக்கும் பின்னனிபாடியிருக்கிறார் இவரின் இசை தமிழ்.தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என்று பலமொழியில் இசைக்கின்றார்.இதுவரை 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்கிறது விக்மீடியா!

மேத்தா சொல்வதுபோல் பக்கம் பார்த்துப் பேசுகிறேனில் இந்திப் பாடல்களை உச்சரித்த வாய்கள் எல்லாம் மண்வாசனைப் பாடல்களை ஒயாமல் உச்சரித்து கிராமத்துக் காதலை பட்டிதொட்டியில் கொண்டு சேர்த்து ஹிந்தியின் ஆதிக்கத்தை ஒர் இரவில் யுத்தம் இன்றி இசையாள் தமிழ் பக்கம் தலையசைக்க வழி செய்தவர் ராஜா என்று!


இசைஞானம்,இலக்கிய ஞானம், கவிஞானம் அமையப்பெற்ற ஒரே இசையமைப்பாளர் ராஜாமட்டுமே என்று அறுதியிட்டு கூறுகிறார் கவிஞர் முத்துலிங்கம்!

இளையராஜா இசைமட்டும் அல்ல நல்ல கவிஞர்  தமிழ்த்திரையில்  வெண்பாக்கல் எழுத்தத் தெரிந்த  வித்தகர்! இலக்கியத்தில் இவரின் பால்நிலாப் பாதையில்
" என்னைப் பெற்ற போது ஈழந்த சுமையை-தாயே உன்னை இழந்த போது என்மீது ஏற்றிவைத்துச் சென்றாயோ?"என்று தாயின் அன்பை பாடுகிறார்!

என் நரம்பு வீனை, ஞானகங்கா,வழித்துனை, இளையராஜாவின் படைப்புக்கம்  என இதுவரை 8 நூல்கள் வெளியிட்டுள்ளார்.

இவரின் இன்னொரு முகம் மூர்க்காம்பிகையின் மீதான பக்தி அதனால்தான் ரமணமகரிஸின் போதனையை பின்பற்றி   ஆன்மீகத்தில் தன் புகழ் எதுவென்று தெரிந்தும் ஒரு ஞானி போல் பற்று இன்றிய அவரின் பார்வையை  என் நரம்பு வீனை என்ற வெண்பா நூலில்

""காற்றில் பிறக்கும் இசைபோல் எனதுள்ளில்
ஊற்றாய்ச் சுரந்திடும் உன்கருணைத் தேன்கண்டு போற்றுதலே பூண்டொழுகி நின்றேன்! பிறவிமலச்
சேற்றினும் செம்மலரே செப்பு! என்று தன்னடக்கம் காட்ட முடிகிறது!

இளையராஜாவின் மீது அதிகமான விமர்சனங்கள் உண்டு வைரமுத்துவின் மலர்கணைகள் வசைமொழியாக அன்நாட்களில் சில பத்திரிக்கைகள் களம் கொடுத்து தங்கள் தலித்விரோத போக்கை எள்ளி நகைத்தது .மீளமுடியாது என்றார்கள் காதலுக்கு மரியாதை மீண்டும் ஒரு முதல் மரியாதை போல் பட்டிதொட்டி எங்கும் வீறுகொண்ட யானை போல் எல்லாவற்றுக்கும் இசையாள் பதில் சொன்னார்!

நான் கடவுள் இசையில் சாயி +ஜெயமோகன்  மோதல்கள் ஊரறிந்தது!
காய்த்த மரம்கல்லடி படும் என்பதற்கு பல இடங்களில் ராகதேவன் மீது பொறாமை நெஞ்சங்கள்  தலைகனம் பொருந்தியவன் அனுசரிக்கத் தெரியாதவன் என்று தரம்தால்த்தியவர்களுக்கு  ஞானியின் மொனம்தான் பதிலாகியது அது சிம்பனியில் திருவாசகமாக உலகிற்கு கிடைத்தது!

 திரையில் ஒரு படத்தினை தன் பின்னனி இசையால் காவியாம் ஆக்கும் வித்தை தெரிந்தவர் .சிந்துபைரவி,முதல் மரியாதை, சலங்கை ஒலி,பிதாமகன், சேது.அழகி  என அடுக்கலாம் அணிச்சிறப்புக்கள்.

 விஜய் அண்டானி சொல்வது போல் இளையராஜா என்ற யானை     தின்று போட்ட சக்கையை வைத்துத்தான் நாம் இசைக்கிறோம் என்று வார இதழ் ஒன்றில் கூறியிருந்தார்!

 இளைஜராஜாவின் இலக்கியதை அழகாக கவிஞர்  கருனாநிதி இளையராஜாவின் படைப்புக்கள் என்ற நூழாக வெளியிட்டுள்ளார்!

 கம்பனின் புகழ் பாடும் கம்பவாதிரி ஜெயராஜ போல் பேசும் கலை தெரியாத   இந்த பாமர இசை ரசிகனும் ராகதேவன்  இசையை குருடன் தடவிப் பார்த்த யானையைப் போல் நானும் சிலதை அசைபோடுகிறேன்!
இன்று பிறந்த நாளை இசைக்குடும்பமாக கார்த்திக்ராஜா,யுவன் சங்கர்ராஜா,பவதாரினி  காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா என்று இசையாள் நிறைந்திருக்கிறது!