20 July 2014

காதல் ஏவாளோ!

உன் வருகைக்காய் காத்து இருந்த போது
உன்னால் என் உறவுகள் உதிர்ந்த
உன் காதல் போலத்தான் என் தலைமுடியும்
உதிர்க்கவே இல்லை இன்னும் மொட்டையாக
உன் கழுத்தும் அப்படியேதான் இன்றும்!

///

வயல் எல்லை போல ஒரு வரம்பு இதய வாசல் நீ என்று!
 ஆனாலும் இரு பறவை கோடு போல நீ போட்ட தனிமைக்கைக்கோடு நீயே புறாவாக வருக!

இன்னும் காதல் பூ பசுமைவெளியில்!
////////////////////////////////////



இன்னும் இன்னும் கவிதை உன்னை நினைத்து! இனியும் எழுதும் 


இந்த  கற்பனை  அவலம் இவனுக்கு இனியும் தராதே!

 இப்படியும் வேண்டு்ம்!



இவன் ஒரு பாடல்ரசிகன்
!


13 July 2014

தாலிக்கு மாலை கோர்த்தோர்!

வணக்கம் வலை உறவுகளே !


எல்லோரும் நலம் தானே??

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் என்ற தொடர் தொடங்கி நீண்ட அறுவையின் பின் முடித்துவிட்டு எங்கே தனிமரம் ஓடிவிட்டது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது நினைத்தாலே இனிக்கும் என்பது போல:)))!


  தொடர் எழுதும் ஆசையில் சில தொடர் என் பாணியில் எழுதிப்ப்பார்த்தேன் தனிமரம் வலையில்  :)) அந்த வகையில் இந்தத்தொடரையும்  பாராட்டி ஊக்கம் தந்த உறவுகள் பல இந்த வலையுலகில்  !


. மறுதாரம்  ஆதரிக்கின்றாயா என்றும் ?எதிர்க்கின்றாயா என்றும் என் நட்பு வட்டத்தில் தோன்றிய முரண்பாட்டை?, பொதுவெளியில் அரசியல்; சினிமா ஆழ்ந்து படித்த நூல்களின் துணையோடு வலையில் ஏற்றிய ஆத்ம திருப்தி கண்டேன்.


 அதுக்கான பின்னூட்டம் இட்டு முதல் இடம் பிடித்த வலைப்புயல் தனபாலன் சாருக்கு முதல்மரியாதை நன்றிகள்!



அதே போல இன்னொருவர் யோகா ஐயா இடையில் இருவரும் சில அங்கத்தினை சேர்த்தே படித்துவிட்டு பாராட்டியதுக்கு பாமரன் தனிமரத்தின் நன்றிகள் .




இவர்களைத்தொடர்ந்து இடையிடையே ரூபன், டாக்டர் முருகாணந்தம் ஐயா. கில்லர்ஜி தேவகோட்டை,இமா,நாஞ்சில் மனோ ,கலை, சொக்கன் ஐயா.இமா,மாதேவி,அதிரா,புலவர் இராமனுஜம்,கரந்தை ஜெயக்குமார்,துரை செல்வராஜீ,அஞ்சலின், பாரதிதாசன்,சீராளன்,ஆத்மா,சீனி,காற்றில் என் கீதம்,மூங்கில் காற்று முரளீதரன்,தளீர் சுரேஷ், முத்தரசு,ஒண்ணும் தெரியாதவன் இலியாஸ்,..அம்பாள்டியாள்  அக்காள் ! கிரேஸ், கஸ்தூரி மயிலன்  இத்தனை உள்ளங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு இதயம் கனிந்த நன்றிகள்.


 .இந்த தொடரை முகநூலில் லைக்செய்த முகநூல் நண்பர்கள் எல்லோருக்கும் என்னை இணைத்து இருக்கும் எல்லா முகநூல் குழுமங்களுக்கும் நன்றிகள்.


இந்த தொடரை எழுத கருக்களம் தந்த என் நண்பனுக்கு என் நன்றிகள்.



 என் சிந்தனைகளை சீர்படுத்தி என்னோடு பயணிக்கும் இன்னொரு உறவான இந்த ஐபோனுக்கும் நன்றிகள்:)))


படிக்காத தனிமரத்தின் எழுத்துப்பிழைகளைத் திருத்திய என் மனைவிக்கு இன்னொரு நன்றிகள்!

.தொடரின் இடையில் கவிதை எழுத இடம் கொடுத்த இமையும் இசையும் லங்காசிறி  எப்  எம்,இணையராகம் தமிழ்ழருவி ,புரட்சி எப் எம் வானொலிகளுக்கும் தனிமரம் நேசனின் நன்றிகள் .

தொடரின் நாயகி பெயரினை தேர்வு செய்த தமிழ்ழருவி அறிவிப்பாளினி சாந்திக்கு என் நன்றிகள்!

இன்னும் என்னையும், என் பகிர்வுகளையும் ஊக்கிவிக்கும் எல்லா உறவுகளுக்கும் என் இதயம் நிறைந்த பாதகாணிக்கை நன்றிகள். இனியும் தொடர் எழுதும் ஆசை தொடரும் என்றால்! தனிமரம் வலையில் மீண்டும் வசந்தம் வீசும்! அதுவரை  தனிப்பதிவுகளுடன் சந்திக்கும் ஆசையோடு தொடரில் இதுவரை தனிமரம்இப்போது  தோப்பு தனயன்  என் மகன் அன்பு வாரிசு   பிரியனின் ஐயா சிவநேசன் தியாகராஜாவின் நன்றிக்ளும் வாழ்த்துக்களும்!


 இந்தப்பாடலுடன்! மீண்டும் சந்திப்போம் நேரம் கிடைக்கும் போது!




யாரையும் மறந்து இருந்தால் மன்னிச்சும் கோபம் படுத்தி இருந்தால் திட்டியும் என்னையும் ஏனோ வலையில் உறவு ஆக்கியதுக்கு மொத்த நன்றிகள்§

12 July 2014

சின்னவன் வாழ்த்துக்கள்

சிற்பியே உன்னைச்செதுக்கின்றேன்!
சின்ன வயதில் படித்தேன் உன்
சிறு நெருப்பு.  சில நேரம் உன் பாடல்
சில் என்று சீண்டியது!
சில நாவல்  வரிசையில் தண்ணீர் தேசம்
சிற்பியே உன்னைச்செதுக்கின்றேன்
சிவஞாணம் சிந்தையில் இன்றும்!

சிரிப்பில் நீ கிழிந்த பனையோலை
சினிமா பாட்டில் வில்லோடு வா நிலாவே
சிகரமாக பலபாடல் என் ஜன்னலின் வெளியே
சீடியில் இன்றும் நீ வானம் தோட்டுவிடும் தூரம்
சிலநேரம் உன் கோபம் பிடிக்காது என்றாலும்
சினிமாவில் நீயும் ஒரு சிங்கம் தான்!
சினிமா தாண்டி கிராம்த்துக்கருவாச்சி
சிகரங்களை நோக்கி அதன் பின்
சிந்திய எல்லா நதியிலும் என் ஓடம்
சிறப்பில் பல பாடல் சிந்த இங்கு
சிலோன் வானொலி போல இல்லை
சிலோன் தாண்டிய இதுவரை நான் உங்கள் போல இல்லை !
சின்னவன் என் வாழ்த்து
சிறப்புடன் இன்னும் சில ஆயிரம்
சினிமா பாடல் சிந்தவேண்டும் வைரமுத்து ஐயாவே!
சிறப்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சினிமாவில் இந்த வரி எப்பிடிப் பிடித்தாய்
சிந்திக்கின்றேன் இன்றுநானும்!


05 July 2014

இலவு சொல்லும் பாடல்!

ஈழத்தில் இருந்து  இப்போது புதிய வீச்சுடன் பல குறுந்திரைப் படங்களும். குறுவெட்டு இசையும் .

புலம் பெயர் தேசம் நோக்கி புதிய பாதை போட்ட வண்ணம் நாளந்தம் வருகின்றது!

 அந்த வகையில் இந்த வாரம் சில  பதிவாளர்கள் இணைவில் வந்து இருக்கும்  குறும்படத்திற்க்கான  முன்னோட்ட இசை விருந்து இந்தப்பாடல்!


 இதை பதிவாளர்கள் நாம் இன்னும் பலரிடம் சேர்ப்போம் ! வாருங்கள்  பதிவாளர்  வரோவுக்கு கை கொடுப்போம்!

வாழ்த்துக்கள் சகோ! இனிமையான பாடலுக்கு!

04 July 2014

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --மாங்கல்யம் சுபம்!

வாழ்வியலின் தத்துவங்களை வடிவாகச்சொல்லித்தரும் ஆசான் போன்ற வழிகாட்டிதான் இல்லற வாழ்க்கை என்ற அமைப்பு!

 இதில் கலந்து போய் குடும்பம் என்ற கூட்டினில் அடைந்து காலச்சக்கரத்தில் சித்தம், சுயம், சபலம், எல்லாம் தெளிந்து  ஆன்மா வீடேட்டற்றம் காணும் வழியை நம் இதிகாசம் எல்லாம் நீக்கமற நிஜங்கள் சொல்லி இருக்கும் செயல் பொய்யான பித்தலாட்டம் இல்லை!

.இல்லறம் வெறுத்து இறைவனடி சேரும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை தனிமரம்  போன்ற விவேகானந்தர் போல 


மோடி முதல் பிரெஞ்சுவா ஹோலண்ட் வரை இல்லறத்தின் இன்னல்களை இன்றும் பேசாமல் இருக்கும் சங்கதி எல்லாம் இந்த மானிட இல்லற வாழ்க்கையின் தனித்தொடர்கள்



.

.இல்லறம் கடந்து சிதம்பரத்தில் அப்பாச்சாமியானவர்கள் கதை எல்லாம் தனிமனித வாழ்வின் எச்சங்கள்!

 நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் அறிய மாட்டேன் ஜீவனி! ஆனால் என் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உன் பதிலில் இருக்கு.


 இப்ப சொல்லு என் தோழில் சாய்ந்து "என்னைத்தாலாட்டும் சங்கீதம் நீ என்பதா"

 இல்லை ஆசையில் ஒர் கடிதம் கெளசல்யா போலவா?,  தாலியோடு காத்து இருக்கின்றேன் தனிமரமாக!


 பரதன் என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இரவெல்லாம் தூக்கம் கெட்டு சிந்தை கலங்கிய நிலை !

"நீ அறியாய் ஆனாலும் இன்னும் இருக்கின்றேன் என்பது போல மனசு எல்லாம் இடையில் வந்து போன ராம்குமார் நினைப்பு என் வாழ்க்கையில் ஒரு புள்ளி"

 அது பெரும்புள்ளி பாபு போலவோ என்று எண்ணித்தவிக்கின்றேன்.


 என் மீதான் உன் காதலைப்புரிஞ்சுக்க முடிகின்றது.
 ஆனால் இல்லறத்தில் இணையும் நிலை சாத்தியமா?

 நான் இன்றே கலியாணம் என்று  சொல்லவில்லையே!

 ஜீவனி முதலில் என் காத்திருப்புக்கு முடிவைச் சொல்லு .


நான் மீண்டும் பாரிஸ் போய் வசந்த காலத்தின் இன்னொரு நல்லநாளில் வாசல் தேடி வருகின்றேன் .


அதுவரை விழியில் வலி தந்தவனே என்று போனில் புதிர் போடு!

 முகநூலில் கண்ணா உன்னைத்தேடுகின்றேன் என்று பாட்டுப்போடு பார்த்து பார்த்து கண்கள் பூத்து இருப்பேன் என்று புகைப்படக்காட்சி பகிர்!


  ஹீ!!

பரதன்  உனக்கு எப்போதும் கற்பனைக்கொழுப்பு அதிமடா என்று ஜீவனி பரதனின் கைபிடித்து கிள்ளிய போது பாய்ஸ் பட பாடல் "ஆலே ஆலே ஒவ்வொரு பற்களிலும்சிரித்தேன் "என்று பாட நினைத்தான் பரதன்!

 .அந்த நேரத்தில். ஜீவனி உன்னைக்கட்டிக்கவா தொட்டுக்கவா என்று விக்ரம் படப்பாடல் போல பாட நினைத்தாள் !


 ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் வர!

 ஆமா பரதன் நம் கதை தனிமரம் அறியுமோ ??




 பாரிஸ் வெட்டிப்பயலக்கு தெரியாமல் நான் பதுளை  வரவில்லை. என் நட்பு வட்டதில் அவனும் இன்னொரு நிழல் போல!

 அடப்பாவி அவனை நம்பாத  நம்கதையும் எழுதிவிடுவான் !



ஹீ அவன் எழுதினாலும் எனக்கு கவலையில்லை ஜீவனி. நாம் சேர்ந்தே பயணிப்போம் இனி பிரெஞ்சு நோக்கி.


 .உன் பாதையில் ஒரு நிழல்த்தடம் போல 
உன்னைதொடரும் ஒரு ஜீவன் நான் இனி
 உன்னில் இருந்து பிரியமாட்டேன்
 உன்னோடு என் பயணம் இணைந்தே !
உன் விழியில் என் பாடல்!
உன் நட்புக்கும் பிடித்த பாடல் எதுவாக இருக்கும்!
உன் தோளில் நானும் சாய்ந்து 
உன்னோடு பாடும் பாடல் இது




சுபம்........! 



வாழ்க்க வளமுடன்!



 வாழ்த்தும் நாம் தனிமரக்குடும்பம் வலையில்!