30 March 2014

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2

இங்கு முதல் -http://www.thanimaram.org/2014/03/blog-post.html
இனி........................

இப்படியே இருந்து
இளமையை வீணாக்காதே.
இந்தா குடி !


இலங்கையின் ஆட்சியில்
இந்தியாவும் ,இணைத்தலமையும்
இன்னும் சில அரேபிய நாடுகள் போலவும்
இறையாண்மை மீறி
இயக்குவது போலவும் தான்
இந்த நட்புக்களும்!
இடைவிடாது ஆலோசனை உள்குத்தில்
இவளைவிட்டாள் !


இல்லையா இன்னொருத்தி?
இந்தா பார்
இந்த நாட்டில் விசா என்ற முகவரி

இன்னும் வாழ
இங்கு ஒரு குடியிருப்பு
இல்லறத்திற்கு இது போதும்.

இனியும் என்ன ஜோசனை

இந்தக் காதலும் தாண்டிவாடா
இனவாத தேசத்தை கடந்தது போல
இல்லை எங்களை இத்தோடு
இலங்கையில் செம்பனி போல
இன்னும் தீர்ப்பு இல்லாமல்
இப்படியே இருந்து விடு!!

இனியும் நீ முடிவில்
இந்தியா போல மதில் மேல் பூனையாக
இருந்து கழுத்தறுக்காதே!

இதுதான் நம் நட்பின் கடைசி வருகை
இருந்து ஜோசி இனி
இணைப்பில் மட்டும் வருவோம்
இங்கும் பல வேலை இருக்கு !!
இலங்கைக்கு உறுத்தும் நாடுகடந்த அரசாங்கம் போல
இத்தோடு முடி !

இதய  சுயபுலம்பலை
இந்த சினேஹா போனால்
இன்னொரு இனியா
இப்போது கார்த்திகா
இல்லை இருக்கவே
இருக்கா கோவைசரளா.!

இல்லையோ ஹான்சிஹா பாட்டிபோல
இவங்களையும் இன்னும்
இயம்பவா இனிய நண்பனே.

இன்னொரு பாட்டு கேளு
இமையும் இசையில் !!!


தொடரும்....

28 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --13

பள்ளிக் கூட வகுப்பறை மெனிங் மார்கட் சந்தை போல எப்போதும் கலகலப்பாக இருக்கும் .


அதுவும் குறித்த பாட வேளைக்கு வாத்தியாரோ, ஆசிரியையோ ,வராவிட்டால் அடுத்த திட்டம் இலங்கை கிரீட்கட் குழுவில்  இடம் கிடைக்கும் என்ற சூப்பர் ஸ்டார் கனவில் கிரிட்க்கட் விளையாட ,தேர்தல் கூட்டணிபோல பேச்சுவார்த்தை முதலில் தொடங்கிவிடும்.


 வா மச்சான் கிரீட்கட் ஆடப்போவோம் என்று வெளிக்கிட்டு விடுவார்கள். அதுக்கு உத்தரவு வாங்க அதிபரிடம் போவது என்றால் தான் அதிகம் அர்சியல்வாதி போல பேசாமல்  அண்ணன் மாதிரி சிரித்து இனிமையாக பேசுக்கூடியவன் யார் என்று தேடுவார்கள் !


நண்பர்களில் .ஈசனும் அப்படித்தான் சிரித்து சிரித்து செயலை .முடிப்பான் !


.வர்த்தகப்பிரிவில் படிக்கும் பையன்கள் எல்லாம் அதிகம் தீராத விளையாட்டுப்பிள்ளை போல எப்போதும் ஜாலியாக திரிவார்கள் என்பது கணிதப்பிரிவும் ,விஞ்ஞானப்பிரிவும் ,படிக்கும் மாணவர்களிடையே பாதுக்காப்பு ஊழல் போல உறிப்போன ஒரு விடயம்.


சமயங்களில் மாணவத்தலைவர் பொறுப்பு இந்தப்பள்ளியில் அதிகம் வர்த்தகப் பிரிவில்தான் காரங்கிரஸின் குடும்ப ஆட்சி போல !

முகங்கள் மாறலாம் கொள்கை எப்போதும் வர்த்தப்பிரிவு இடம் தான் .எதிர்காலத்தில் மாற்றம் வருவது என்பது ரணிலின் ஜானாதிபதி கனவு  போலத்தான் .

 "வா மச்சான் பரதன் விளையாட"
 இல்லை மச்சான் !நீ போடா எனக்கு விளையாடும் எண்ணம் இல்லை !

ஓ ஏன் வைரமுத்து எழுதியது போல கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையில் ஒரு உருண்டை உருளுதோ மன்மதராசாவுக்கு ?
போடா  போரடிக்காத நான் தான் அடுத்த பிரதமர் என்பது போல இருக்கு உன் பேச்சு !

சரி உன் இஸ்டம்.
 மாணவர்கள் வெளியேறினால் மாணவிகளும் நேரம் போக்குது அடுத்த கட்டிடத்தில் இருக்கும் நூலகத்துக்கு நுழைவதும் ,மற்றத் தோழிகளின் கலைப்பிரிவு மாணவிகளுடன் கலந்து பேசுவதும் இயல்பான நிலை .


இந்த நேரத்தில் தான் விரும்பியவர்களுடன் தனிமையாக பேசும் சூழல் அமையும் கிறிஸ்த்தவ தேவாலயத்தின் அமைதி போல இப்படி ஒரு சந்தர்பம் ஜீவனியுடன் பேசும் சூழல் அமையுமா ?,திடீர் பிரதமர் ஆன பொருளாதார சிங் போலத்தான் .இன்றைய பள்ளி நிலையும்!இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போலத்தான்
பரதனின்  நிலையும்..

ஜீவனிக்கும் கவிதை பிடிக்கும் என்பதை அவள் கொண்டுவரும் கவிதை நூல்கள் மூலம் நன்கு உணர்ந்தவன் .
தன் விருப்பையும் இப்படித்தீட்டினான் வார்தைகளில்!!


பரதன் என்ற ஒரு அப்பாவி
பாதுகை கொண்டு
பாரதம் ஆண்டான் !
படித்திருப்பாய் வரலாறு!
பதுளைக்கு வந்த ஒரு அப்பாவி
பரதனும் உன்னை அன்பில் ,
பண்பில் ஆழத்துடிக்கின்றேன்
பாவையே!
பட்டென்று வெட்டிவிடாதே
பல ஊர் கடந்தவன்!
பார்த்ததில் பிடித்தவள் நீ!!!
பாதகமான பதில் பார்த்தால்
பாய்ந்து விடுவேன்
பஸ் முன்னால்!
பார்த்து பரிவுடன் சொல்லு
பதில்?,
பரிதவிப்புடன்  பரதன்!

 படபடப்புடன் கவிதை எழுதி ஜீவனியிடம் கொடுத்துவிட்டு விளையாடப் போனான் பரதன் !


இன்னொரு பார்வையும் இவர்களை பார்த்து அறியாமல்!

இன்னும் தவிக்கின்றேன்.........................

குறிப்பு!-
மெனிங்க் மார்க்கட்-கொழும்பில் இருக்கும் ஒரு சந்தை  சென்னை கோயம் போடு போல!

26 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --12

கொள்கைப் பிரகண்டத்துக்கும் ,கொள்கை நடைமுறைக்கும் இருக்கும் இடை வெளி பற்றிய அரசியல் முரண்பாடு பற்றி பிரெஞ்சுப் புரட்சி அரசியல் விஞ்ஞானம் படிக்க நினைக்கும் உனக்கு !


அரசியல் பொய்ப்பின் ஆகுதியாவேன் அது மகன் என்றாலும் தேர் ஏற்றுவேன் என்ற  மனூநீதி சோழன் வரலாறு எல்லாம் முன்னம் படித்த நீ காதல் அறியாமல் போகலாம் !


நடை முறைச் சூழலில் அவர் ,அவர் விருப்பம் தான் ஐநாவில் எந்த வீட்டோ அதிகாரத்தையும் தாக்கும் ஆயுதம் போல என்றாலும் சொல்லுகின்றேன் நண்பா !


நீ தான் இந்த ஊரில் நான் அறிந்த நட்பு முதல்வன் உன்னை மீறி எந்தக்காலத்திலும் கட்சியை மீறி ஆதரவு கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர் போலவோ?

 மாகாண  சபை உறுப்பினர் போலவோ நான் இல்லை !!


நான் என்பது அகங்காரமோ ?உயர்திணையோ இல்லை?


ஆனாலும் என் காதலுக்காக உன்னையோ ?
உன் குடும்பத்தையோ பலிகொடுக்கும் நட்பும் நான் இல்லை !


பரதன் எனக்கும் கொள்கை இருக்கு நானும் மரணங்கள் மலிந்த பூமியில் இருந்து வந்தவன்!

எனக்கு ஜீவனி  மீது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு!அது காதலா ?இல்லைக் காமமா ?

இல்லை ஒரு இனக்கவர்ச்சி ஈர்ப்பா என்று இந்த நிமிடம் வரை என்னால் உணரமுடியவில்லை !


என் காதலை இன்னும் அவளிடம் சொல்லவில்லை !



அதுக்குள் கட்சியை மீறிப்போனால் அனாதை ஆகிவிடுவாய் என்பது போலவும் முகநூல் குழுமத்தை மீறிப்போனால் ஈழப்போராட்டாத்தில் எனது சாட்சியம் எழுதிய ஐய்ர் போலவும் தனிமரம் ஆகிவிடுவாய்  என்று பயமுறுத்தும் செயல் வேண்டாம் மச்சான் !


ஏன் தெரியுமா அவள் மனசில் யாரோ??அந்த காதல் லீலை நீ அறியாய்!



தொடரும்!..

24 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -11

ஜீவனி கண்கள் காய்ந்து உலர்ந்த மிளகு போல .நெற்றி அன்று கொய்த ஏலம் போல .காது நேற்றுப் பறித்த சாதிக்காய் போல .முகம் அதிகாலை மலர்ந்த கொழுந்துத் தளீர் போல .கைகள் ஆணை வாழைப்பழம் போல .கால்கள் தாமரைக்கீரை போல ,.





இடையோ உலராத கறுவா பட்டை போல .!
பார்வையோ கொழுந்து பறிக்கும் பெண்களை குறுகுறு என்று நோக்கும் கங்காணி போல


,நேரில் பழகினால் அரசியல் ஓட்டுக்காக எப்போதும் ஏழை வீடு தேடும் இந்திராவின் பேரன் போல, பேச்சில் ஒரு திமிர் அது பண்டாரநாயக்கா வம்சத்தின் சமாதான தேவதை போல,

 இன்னும் சொல்ல ஆசை இந்த கடிதம் யார் கையில் சிக்குமோ எழுதிக் கிழிக்கும் பரீட்சைப் பேப்பர் போல !

அவளின் அடுத்த கட்டம் அப்பன் கட்சியில் மகளீர் அணித்தலைவி  என்று போய் அடுத்த தலைவி ஆகும் எண்ணம் இருக்கும் .

இவளுக்கு யார் ராசையா பிரவுதேவா போல ஆவர்கள் அராய்ச்சி செய்யும் உயர் தர இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பற்றி எல்லாம் உனக்கு தெரியுமா ?பரதன்!

எங்கள் பள்ளியில் மாணவத் தலைவியாக ஜீவனி போட்டியில் நின்றாள் ராஜீவுக்கு விழுந்த அனுதாப ஓட்டுப் போல மோக ஆசையில் ஓட்டுப்போடும் மாணவர்கள் அவள் பக்கம் தான் அதிகம் .

இது எல்லாம் விட்டுத் தள்ளு படிக்க வந்தவளிடம்!
நீ காதல் ஓலை நீட்டினால் உன்னை சேது படம் போல ஆக்க காத்திருக்கும் கல்லூரி மணவர்கள் பற்றி ஜோசித்தாயா ??

முன்னம் பலர் ஜீவனி மேல் மிட்டாய் மீது சுற்றும் ஈ போல ஜொல்லுவிட்டு சுற்றித் திரியும் காதல் காளைகள் கண்ட இடத்தில் உன் மேல் காதல் அசிட் வீசு வார்கள் !

அன்பாக மலையக வீதியில் ஆட்டோவில் அடிதடிக்கு வருவார்கள் மாலையில் கேப்டன் போல குடித்துவிட்டு .
வேண்டாம் மச்சான் அடங்கிப்போ !

 அதுவும் கடந்து காதல் என்றால்!
நீ  வடக்கில் இருந்து வந்தவன் இவனும்  புலிக்கு உளவாளி என்று பொறாமையில் இனவாத சந்தேக தீயை மூட்டினால் !

புலனாயவுத்துறை இருட்டறையில் முத்தமிட இருகரம் கொண்டு பள்ளிக்கும் வரும் மலையகத்தில்!

இது எல்லாம் நிஜமாக இப்படி நடந்தது !
இந்த ஊரில் என்று இலக்கியம் வரலாற்றில் படைக்க இந்த நாட்டில் சாத்தியம் இல்லை நண்பனே !

எதிர்காலம் என்ற பாதை இனவாத பூமியில் எப்படி இருக்குமோ ??

இந்த காதல் வலையில் போய் இன்னொரு உனக்காவே பிறந்தேன்  படம் போல ஆகிவிடாதே !!.அதில் சரி இந்திய சினிமாவுக்காக பாதி பொய் உன் வாழ்வில் நிஜம் சொல்ல ஒருத்தனும் உனக்கு வெளிநாட்டில் பேனா நட்பு இல்லை!!எந்தன் உயிரே பாடல் கேட்டாயா என்று மொக்கை எழுத!

இது எல்லாம் கேட்க மறுத்தால் இந்த நண்பன் ஈசனையும் இன்றோடு மறந்துவிடு குட் பாய் மை பிரெண்டு!


தொடரும்....

23 March 2014

மான் கராத்தே மயக்கும் பாடல்

பாடல் கேட்கும் ஆர்வம் எப்போது தோன்றியது என்று நான் அறியேன் ?ஆனால்  பாடல் கேட்பதால் வாங்கிய  அடியின் பரிசு இன்னும் ஞாபகம் இருக்கின்றது

.படிக்கும் காலத்தில் பாடல் கேட்டால் கெட்டுப்போவோம் என்ற ஒருவித தப்பு அபிப்பிராயமாக இருக்கலாம் !

என்றாலும் காலச்சக்கரம் வானொலியோடு என்னை அதிகம் இணைத்து இருகின்றது .பணிச்சுமையில்  இருந்து மூச்சு வாங்க வானொலியில் பாடல் கேட்பதும் ;பாடல் நிகழ்ச்சிக்கு ;தபால் அட்டையில்!


 தொடங்கி ;தொலை பேசி குறுஞ் செய்தி என்று வடிவங்கள் மாறினாலும்!

 இன்னும் பாடல் ரசனை குறைய வில்லை ஐநாவின் கூட்டத் தொடரில் தமிழர்  நிலை போல !


தேவா என்ற இசையமைப்பாளர் ஒரு காலத்தில் இலங்கை பண்பலைகளில் அதிகம் இரவு /பகல் என வானொலிகளில் கானா பாடல்களில் நேயர் விருப்பத்தில் மிகவும் வாலிப நெஞ்சங்களில் தாக்கம் செலுத்தியவர்.

வானொலி /தொலைக்காட்சி அறிவிப்பாளர் கலைச்செல்வனுக்கு மருத்துவச் செலவுக்காக இலவசமாக  இலங்கை வந்து இசைநிகழ்ச்சி செய்து கொடுத்த மனித நேயம் மிக்க ஒரு இசையமைப்பாளர் .



இரு தடவை கொழும்பில் இசை நிகழ்ச்சியில் நேரில்ச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மறக்க முடியாத பொக்கிஷம்.


..தன் தம்பிகளுடன் தமிழ்த் திரையில் பஞ்ச பாண்டவர்கள் போல வலம் வந்தவர் .அதிகம் காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர் என்று நையாண்டி செய்தாலும்.இவரைப்போல ஹிட்சு பாடல்களும் :படங்களும் இன்று வருவோரால் கொடுக்க முடியுமா?,,

 அருமையான சுய இசையையும் தந்தது காலத்தால் மறக்க முடியாது. 1990 இன் பிற்பகுதியில் சில வருடங்கள் அதிக தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்ற முதல் இடத்தை தக்க வைத்தவர் தேவா என்பது பலரும் அறிந்த தகவல்.


. தன் வாரிசை கருணாநிதி போல முன் நிறுத்த முயன்ற தன் விளைவு  சபேஸ்-முரளி என்று தம்பிமார் இன்னொரு முகம் காட்ட!

 சிறிக்காந் தேவா சில  படங்கள் இசையமைத்தார் .புதிய இளைஞர்களின் வருகை தேவாவின் இறங்கு முகம்  என்றாலும்.

 இன்று தேவா என்ற பெயரை பலர் மறந்து போகும் நிலையில் மீண்டும் தன் வசீகரக் குரலில் பட்டையைக்கிளப்பும் புதிய பாடல் இது.

தேவாவின் இசையில் அதிகம் ,குரலும் கவிவரியும் விளங்கும் இந்தபுதியவர்  அனுருத் இசையில் ஏனோ பாடல் கிழிந்த ஒலிநாடா போல இசையின் தாக்கம் அதிகமாக இருக்கு.

புதிய பாடல் வரிசையில் இந்த வாரம் என்னை அதிகம் கவர்ந்தது இந்தப் பாடல் ரசிப்போமா!கானா பாலவின் கவிவரிகள் இது.

21 March 2014

அந்த நாள் ஞாபகம் 15

அந்த நாள் ஞாபகம் என்று திரையரங்குகளில் தொலைந்த நேரங்களை மீட்டிப்பார்க்கும் ஆசையில் இந்த ஞாபகங்கள் இன்னும் பல பதிவு செய்ய பாரிஸ் வாழ்க்கையில் பணிச்சுமை அப்பாவி என்னையும் இடைவேளை போடச்சொல்லுது:)) !

இடைவிடாமல் எழுத்தச் சொல்லி இன்னொரு மனம் இயக்குகின்றது .இந்த பதிவு இன்னும் தொடரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் :)))!

இன்று என்னோடு நீங்கள் பார்க்கப் போகும் திரையரங்கு- கிங்ஸ்
                                 


இருந்த இடம் -பதுளை( இப்போது இந்த திரையரங்கும் இல்லாமல் போய்விட்டது வெய்யில் படம் போல)§



விற்பனைப்பிரதி நிதி வேலையை கண்ணும் கருத்துமாக செய்தேனோ இல்லையோ?  அந்த அந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் முதல் காட்சி பார்க்கும் ஆவர்வம் மட்டும் குறைவில்லாமல் தொடர்ந்தது .


மேலதிகாரிகள் இலங்கை அரசியல் போல  இடமாற்றம் செய்து பந்தாடினாலும் பயம் இல்லாமல் பல படம் காலைக் காட்சிக்கு ஒதுக்கிய காலம் மீண்டும் வராத நந்தவனத்தெரு :)) .


நான் மட்டும் நாசமாகமல் நல்ல நண்பர்களையும் கூட்டிச் சென்று அவர்கள் வீட்டில் அர்ச்சனைப்பூக்கள் வாங்கியதை நினைக்கும் போதெல்லாம் விவேக்கின் வசனமான எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்ற கவலை அதிகம் தான்!


இந்த திரையரங்கில் பல படம் பார்த்தவன் இன்னும் நீங்காத நினைவுச்சின்னம்:))).


இந்தப் படம் பார்க்க முதலில் ஆர்வம் தோன்றிய்துக்கு காரணம் யுவன் சங்கர் ராஜா இந்த  திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக முதல் அறிமுகம் ஆகிய நிலையினால் தான் .

போட்ட மெட்டுக்க எல்லாம் இன்னும் மறக்க முடியாது பிடித்த பாடல்கள் எல்லாம் .என்றாலும்  ! இந்தப்படத்தில் இந்தப் பாடல்க்காட்சி நீக்கப்பட்டு இருந்தது .


கொடுத்த20 ரூபாய்க்கு இப்படி துரோகம் செய்திட்டாங்களே என்று புலம்பிய போது  நண்பன் சொன்னான் ".இங்க வந்த நேரம் அடுத்த திரையரகில் ஷாகிலா படம் பார்த்து இருக்கலாம் என்று .

1997 இல் படம் பார்தோம் ரசித்து அதே திரையரங்கில் இந்த நாயகியையும் பார்த்தோம் நக்மாபோல .



இன்று பணி மாறி  பலரும் மறந்த விடயத்தை மீண்டும் தூசு தட்டி என்னையும் எழுதவிடான் நண்பன்.

 நண்பன்  இப்போது  முகநூல் வராமை பணிச்சூழல் காரணமாக . தனிமரமும் முகநூலில் காத்து இருக்கின்றேன்:)))

தொடர் படித்து விட்டு துடைப்பக்கட்டு வருமா ?,இல்லை ஆல்த் பெஸ்ட் என்று வாழ்த்து பூக் கொத்து வருமா?

காலத்தின் கைகளில்  தனிமரமும் முகநூலையும் விட்டு ஓடும் மனநிலை வருமா?? :))!

 வாங்க பாடல் ரசிப்போம்.


19 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -10

உயர்தரம் என்ற உயர்கல்விப்படிப்பின் போது உள்ளமும் ,உடலிய்ற்கூற்றின் உருவம் இல்லாத காதல் உணர்வை ஊற்றெடுக்க வைக்கின்றது !

உண்மையில் வடக்கில் உக்கிர மோதலுக்குப் பயந்து ஊர் தொலைந்து உறவுகள் பிரிந்து ஊரைவிட்டு ஊரு வந்து .

பதுளையில் உன்போல அழகி யாரும் இல்லையடி .உனக்குத்தெரியுமா?" நான் உன்னை நினைப்பது "என்ற ஈழத்து மெல்லிசை போல உயிரை வாங்கும் உணர்வை முதன் முதலில் ஜீவனியிடம் பார்க்கின்றேன் .

உதவி செய்வாயா ?உண்மையான நண்பனாக ?
உயர் தரத்தில் நட்பில் உறவான ஈசனிடம் இதைப் பகிர்ந்தேன்.

ஈசன் முன்னம் சில தடவை யாழ் வந்து போனவன் .அப்பாவின் நண்பரின் மகன் என்ற அறிமுகத்தில் .

வடக்கிற்கும் தெற்குக்கும் A -9 பாதைகள் மூடப்பட முன்னர் நானும் அவனும் நல்ல நண்பர்களாக விளையாடியதுண்டு .

காலச்சக்கரம்  கபட அரசியலில் வடக்கு தெற்கு பாதைக்கதவுகள் இராணுவ படையெடுப்பின் முன்னேற்றம்  ,இந்திய இராணுவக் கட்டுப்பாடு என்ற கதவுகள் மூலம் முகம் பார்க்க முடியாத சிறைக்கூடம் போல நாடு இரண்டு பட்ட சில வருடத்தின் பின் !

இப்போது முன்னால் காதாநாயகன் சில வருடம் ஒதுங்கிவிட்டு மீண்டும் நடிக்க வந்தது போல ஒரே வர்த்தகப்பிரிவு வகுப்பில் பள்ளியில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம் சூரியன் சந்திரன் போல !

என்னடா சொல்லுகின்றாய் மச்சான் ?இன்னும் உயர்த்தரத்தில் பொருளியல் பாடமும் ,பொருளாதார ஜாதிமும் புரியவில்லை கணக்கியல் கேள்விச் சமன் பாடு கண்டுகொள்ளவில்லை .நீ அதுக்குள் காதலில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்றால் எப்படி மச்சான்? இங்க நீ வந்து ஒரு மாதமும் ஆகவில்லை இந்த ஊர் முழுமையாக நீ அறியாய முதல் பேச்சு சிங்களத்தில் முதற் காலை வணக்கம் சொல்லத் தெரியாது .


என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது .ஏன் தெரியுமா?? ஜீவனி இப்ப முதல் முறையாக சினிமாப்பட அறிமுக காதாநாயகி போல  இந்தப்பள்ளிக்கு உயர்தரம் படிக்க வந்திருக்கின்றாள் .


முதல்பட நாயகிக்கு நடிக்க முன்னமே காதல் என்றால் எப்படி அவளின் அடுத்த படம் பாதிக்குமோ அது போல அவளின் எதிர்கால கனவும் தீயில் பஞ்சு போல பொசிங்கி விடும்..

ஜீவனி முன்னம் வேற பள்ளியில் சாதாரண தரம் படித்தவள் !

இன்னும் சொல்லவா ஜீவனி...

18 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -9

இலங்கை என்ற தேசத்தில் இரு இனங்களுக்கிடையில் இனத் துவேசம் வர முன்னர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் வியாபாரிகள் மட்டுமல்ல !

அறிவுசார் புலமையில் மெத்தபடித்த பலர் பல உயர் பதவியில் மேலான்மை தெற்கில் செய்தது இன்னும் வரலாற்றில் வாழ்தலில் பதிவாகி இருக்கின்றது .

வடக்கில் பிறந்த சேனாதி ராஜாவும் தன கணக்கியல் வித்தையில் கல்வித்தகமை பெற்றதில் !

பெருந்தோட்டகம்பனியில் ஒன்றானா  ஊவா பிளாண்டேசன் என்று இன்று அழைக்கும் அன்றைய  மடுல்சீமை பிளான் டேசன் கோனக்கல் தோட்டத்தின் பிராதான கணக்காய்வாராக பதுளைக்கு குடி பெயர்ந்தது 1978 இல் .


.இலங்கையில் தோன்றிய மறக்கமுடியாத  இன்வெறியான 1983 இல் மீண்டும் தன் பூர்வ பூமி வடக்கே தன் ஊரான் தீவுக்கு அகதியாக திருகோணமலையில் இருந்து இலங்கா ராணி என்ற கப்பலில் பயணித்தும் மனதில் பதிந்த வடுக்கள்!


 காணக்காய்வாளரா   இந்திய நாட்டின்  கவர்னர் பதவி போல உத்தியோத்தில் இருந்தாலும் .

 பதுளையில் தனித்தவில் வாசித்தவருக்கு பகவாத்தியம் சேர்க்கும் மேளக்கூட்டம் போல துணைவியாக  சேர்ந்தது  பரிமளா என்ற பாவை . .


சேனாதி ராஜா தாய் வழி உறவில் மச்சாள் வழி வந்தவள். பரிமளா! தனிக்குடித்தனம் தந்த பதுளையில் சேனாதிராஜாவுக்கு சீமந்த  இரட்டை வாரிசா துளிர்த்த ஜீவன்களில் ஒருவன்  தான் பரதன் .


மற்றவன் ராஜன் !

இருவரையும் ஒரு கொடியில் இரு மலர்கள் போல தோலில் சுமந்து உடுத் உடையுடன் தீவுக்கு  அகதியாக் போனவர் மீண்டும் 1984 இல் ஒற்றை வண்டியா தன் தொழிலை பதுளையில்  படர்விட்டார்..



.இனவாத யுத்தம் வடக்கை மரணங்கள் மலிந்த பூமியாக்கிய போது 1996 இல் மரணதுக்கு அஞ்சி மலையகம் புகுந்த வீடாக பூந்தார்கள் பரிமளாவும் ,பாசப்பிறப்புக்களான ஒரு கொடியில் பூத்த இருவரில் ஒருவன்  பரதனுடன்.!



பாசத்தில் பாட்டியிடம் போராட்ட பூமியில் ஒருவனையும்



,அடுத்தவனை கையில் பிடித்து வந்த பரிமளம் தன்கணவர் போல அடுத்த வரிசை படிக்கச்சொல்லி சேர்த்த பள்ளியில் பகிடிவதை பண்பாக வரவேற்றது பனங்கொட்டையான் என்று!


பரதனும் உயர்தரம் முதல் ஆண்டு படிக்க உள்நுழைந்தது 1998 (A/L) அப்போதுதான் இதே பாடசாலையில் இன்னொரு முகம் இவன் .

எனக்கு அறிமுகம் .பகிடி வதையில் என்னை மீட்ட போது!


நானும் எண்ணி இருந்தேன் இவனும் இந்த ஊரவன் என்று!
பின் ஒரு பேட்டியில் இருவரும் இரு முகாம் ஆகி கவிதையில் போட்டி போட்ட போது இடக்குறியில் தான் நானே வியந்தேன் இவன் பேச்சை!கவிதையில் ,பாடலில் இவன் ஒரு வானொலிப்பிரியன் என்று !ஒரு பாட்டுக்கு அவனின் வர்ணணை இன்னும் மறக்க முடியாது!




அந்த நண்பன் !

இன்னும்  பேசலாம் ...............

16 March 2014

மது |!!

இன்று பலரும் குறும்படம் செய்வது வர வேர்க்க வேண்டிய விடயம்  குறுகிய செலவில் நல்ல கருத்துக்களை பொது வெளியில்  பேச  முடிகின்றது.


  அதன்
வகையில் இன்னொரு  புது வருகை இந்த மது குறும்படம் .மது படக்குழுவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்




 என் முக நூலில் அதன் இயக்குனர் என்னோடு பகிர்ந்ததை நானும் ரசித்ததை


நீங்களும் ரசிகக் இங்கே..
 


15 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -8

நீண்டகால வனவாசம் கடந்து அயோத்தியை வனவாசம் கடந்து மீண்ட இராமன் மனது போலத்தான் தாய் நாட்டைவிட்டுப்பிரிந்து மீண்டும் இலங்கை வந்த பரதனின் மனநிலையும்..

எட்டு எட்டாக வகுத்துக்கொள்ளச்சொல்லிய வைரமுத்துவின் பாடல் போலத்தான் எட்டு ஆண்டுகள் பாரிஸ் வாழ்க்கையின் தஞ்ச நிலைக்கு முதல்க்காரணியே முதலில் தோன்றிய இந்தக்காதல் தான்.

 நட்புக்கள்கூட முகம் மறந்துவிட்டார்கள் இன்று முன்னம் அறிந்தவர்கள் முகம் தொலைந்து முகவரியும் இழந்து முகநூலிலும் முகம் காட்டாதவர்கள் பலர் இவன் போல!


என்றாலும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நானும் மீண்டும் இலங்கை வந்து இருக்கின்றேன் உயிரோடு  மீண்டும் வந்து இருக்கின்றேன் ஐயன் அருளில் !


இந்த நிமிடம் வரை இங்கு வந்தது ஈசன் அறிந்து இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் உள்வருகைப் பக்கத்தின்னூடாக தாய் பூமியில்  நடந்து கொண்டிருந்தான் பரதன் .

கடந்த காலத்தில் இனவாத ஆட்சியில் பதவி இருந்துவிட்டு பாரம்பரியம் இழந்து போன முன்னால் ஜனாதிபதிபோல !


இலங்கை நாடுவிட்டுப்போன நாட்கள் அவன் நினைவில் நிறம்மாறாத பூக்கள் படத்தில் விஜயன் நினைவுகள் போல காலம் தான் எத்தனை பாடல் இசைக்கின்றது !இன்று இணையத்தில் வரும் வானொலிகள் போல !!



 வாழ்க்கைப்பாதையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு கதை எழுதும் என் கதையும் எழுதும் நிலை வருமோ? என் நாட்குறிப்புகூட இப்போது என்னிடம் இல்லை !என் நட்பிடம் கொடுத்துவிட்டுத்தான் வருகின்றேன் நம்பிக்கையில் என் சொத்தைப்போல!

அதையும் பலரும் படிப்பார்களோ??நடிகையின் அந்தரங்கம் என எழுதும் பத்திரிகைபோல!

இன்னும் தவிர்க்கின்றேன் --...........