29 June 2014

அண்ணிக்கு வாழ்த்து!

பதிவுகளில் பின்னூட்டம் இட்டு தனிமரத்தின் நெஞ்சில் இடம்பிடிக்கும் அன்பான உறவுகள் பலரில் இன்று ஒரு பாட்டிக்கு இன்னொரு சிறப்பு நாள் .30/6/...

யார் அந்த பிரபல்யம் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகின்றது :)))என்றும் பதினாறு வயதில் பவணி வரும் எங்கள் கலாப்பாட்டிக்குத்தான்  இன்று பிறந்தநாள்

.சிங்கையின் சிரிப்புத்திலகம் கலாப்பாட்டி என்று அன்புடன் நான் அழைத்தாலும் அண்ணி எப்போதும் உரிமையுடன் கறுப்பு பெலிட்டினால் கூட அடிக்கும் கலை தெரிந்த கவிதைத் தென்றல் இப்போது முகநூலிலும் .

என் வலையில் மலையகத்தில் முகம் தொலைந்தவன்  தொடரில்தான் முதன் முதலில் தனிமரத்தின் பக்கம் பார்த்துப் பேசினாங்க :))

ஹேமாவின் தளத்தில் தான் அறிமுகம் கலாப்பாட்டி  என்றாலும் யோகா ஐயாவையும் கலாய்க்கும்  அளவுக்கு எங்களுடன் நட்பிள் சிங்கப்பூர் காந்தி விலாஸ் உணவு போல அறுசுவை ராணி எங்கள் அன்பின் கலாப்பாட்டி அண்ணிக்கு கடல் கடந்து இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

தனிமரம் தோப்பின் வாழ்த்துச்செய்தி !நூறாண்டு காலம் நோய் நொடியின் வாழ்க!
கவிதையும் அறுசுவைச்சமையலையும்
கலைநயத்துடன் முகநூலில்
கலைத்தென்றல் என்று
கருத்துப்பகிரும் கார்மேக தென்றலே
கடல் கடந்து சிங்கையில் இருந்து
கருத்துரை பின்னூட்டத்தில்
கலாப்பாட்டி என்றும் நேசத்தில்
கலங்கரைவிளக்கம் போல
கடல்தாண்டி பாரிஸ் வந்தால்
கண்டிப்பாக எங்கள் மாளிகையில்
கலைத்தென்றல் கால்பதிக்க
காத்து இருக்கின்றோம் அன்புடன்.



கலாப்பாட்டி வருக வருக என்று!

 கலாப்பாட்டிக்கு  இன்று சிங்கை அம்மனின் ஆசியும்

கலாப்பாட்டியின் கைவண்ணத்தில் கோமதி விலாசில்

இன்று பிறந்தநாள்  கொண்டாட்டத்துக்கு உறவுகளுக்கு கலாப்பாட்டியின் கைவண்ணத்தில் கோமதி விலாசில் தேடியும் கிடைக்காத
சுவையூட்டி இது:)))




28 June 2014

சிந்தையில் வரும் வழி!

சிந்தனையில் நீயே என்றும்
சிரிப்பழகி போல சில நேர
சில தூர ரயில் பயணத்தில்
சில் சில் என்று
சிறுவன் இவனையும்
சில் சில் சில்லெல்லா என்று§


சில கவிதை சிறைப்படுத்த
சிலநேரம் எனக்கும் ஆசைதான்!
சில காதல் இன்னும்
சிறையில் இருக்கு!


சிரிக்க இவன் என்ன
சின்னவர் தனிமரம் போலவா??
சிட்டுக்குருவியா!?..
சில காலத்தின் பின்
சின்ன விடயம்
சித்திரம் போல
சிறுபதிவு போடுமா?


சின்னப்பையன் தனிமரம்??,


!
சினிமா பாடல் ரசிப்போம்!
சிறு பொக்கிஷம்!  ஹீ

21 June 2014

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --39

போராட்டங்களில் பெரிது எது என்றால் ??தன் மனதோடு போடும் யுத்தம் தான் !எது சரியான தேர்வு?? எது மெளனிப்பு ??

என்று எடுக்கும் தீர்மானம் தான் அடுத்த கட்ட காய்நகர்த்தல் எனலாம்! ஆனாலும் அதன் பலாபலனை அனுபவிப்பது?

தன் காலத்திலேயே அனுபவிப்பது என்பது மிகவும் தற்கொலைக்கு ஒப்பான செயல் ஈழத்தின் இன்றைய நிலைபோலத்தான்!

 நிர்க்கதியான கையறு நிலை!

 என் எதிர்காலம் எப்படி இருக்கணும். என்று ஒரு முடிவோடு இருந்த என்னையும்  .மனதோடு போராடு என்றல்லா துன்பியலில் பரதன் தள்ளிவிட்டான்.  படிக்கும் காலத்தில் எப்படி துடிதுடிப்போடு காதல்  கடிதம் தந்தானோ !அப்படியே தான் மீண்டும் இன்று மறுமணம் பற்றி பேசினான் !




அவனால் மட்டும் எப்படி அடிக்கடி என் வாழ்வில் இடையில் வந்து போக முடிகின்றது?,, சினிமாவில் வரும் நகைச்சுவைப்பாத்திரம் போல!


 மறுமணம் சாத்தியமா ??என்ற சிந்தனையில் இருந்த  ஜீவனியை நோக்கி தாய் மீனாட்சி வந்தாள்!

 என்னமா வாழ்க்கைக்கப்பல்  தத்தளிப்பது போல கடும் சிந்தனையில் இருக்கின்றாய்?


  அது வந்து... இதை பாரு ஜீவனி !நீ தான் தீர்மானிக்க வேண்டும் உன் பாதையை ஒரு முறைப்பரீட்சையில் தோற்றுவிட்டோம் என்பதுக்காக் மீண்டும் பரீட்சைக்கு முயற்ச்சிக்காமல் இருந்தால் பட்டப்படிப்பு எப்படி படிக்க முடியும்?

 தோல்வியும் வெற்றியும் சேர்ந்தே இருப்பது இல்லறத்திலும் தான்.... நானும் படித்த வாழ்க்கையின் அனுபவத்தில் சொல்லுகின்றேன்.


 நீ பரதனை ஏற்றுக்கொள்வதில் தப்பிள்ளை !மறுமணம் என்பது ஒன்றும் சாத்தியம் இல்லாத விடயம் இல்லை நவீன உலகில்!  இந்த ஊர். இந்த சமூகம் என்று நீயும் ஒரு வட்டத்துக்குள் நின்றுவிடாத.


 நாங்கள் இருக்கும் காலம் வரை உனக்கு துணையிருப்போம். அதன் பின் உன் வாழ்க்கை குழந்தைகள் காப்பகத்தோடு முடியத்தான் முடியுமா??


 இன்றைய இனவாத நாட்டில் அமைதியான சூழல் சாத்தியமா?, பூவெல்லாம் வாசம் ஜோதிகா போல பிடிவாதம் வேண்டாம். உனக்காக காத்து இருக்கும் பரதனை ஏற்றுக்கொள்!



 தாயின் ஆலோசனையை வழிமொழிந்தார் எதிரில் வந்த முத்தையாவும்!

உன் ஆசைக்கு நான் தான் அரசியல் குறுக்கீட்டைப்போட்டு விட்டேன். பரதன் அப்பனிடம் அரசியல் அதிகாரம் கொண்டு பணியவைத்து, இந்த ஊரைவிட்டு போக வைத்த எனக்கு கடவுள் கொடுத்த நீதிக்குத்தண்டனை போலத்தான் உன் வாழ்வில் நடந்த துயரங்கள்.

 எது எப்படியோ மீண்டும் பரதன் வந்து இருப்பது உன் மீதான  நிலையான அன்பில் அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என் மகள் என்று கூறிய தந்தையின் முகத்தை பார்த்த ஜீவனிக்கு அன்புள்ள அப்பா பட நடிகர்திலகத்தின் முகம் போல தோன்றியது!


 என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியுது இல்லை அம்மா. என்னோட  உலகம் போல இருக்கும் குழந்தைகள் காப்பகத்தை விட்டுப்பிரிய மனசு நெருடல் போல இருக்கு.


பொதுச்சேவைக்காக உன் தனிப்பட்ட  எதிர்கால  வாழ்க்கையை சீரழிக்காத இது என்ன தன் இனம்  அழிக்கப்படும் போது  இனவாத அரசுக்கு வாக்காளத்து வாங்கும்  இலங்கை முஸ்லிம் காங்கிர்ஸ் போலவா?,

 ஜீவனி ஏற்கனவே பொதுச்சேவைக்குப் போய் தன் சுயத்தை இழந்து போய் இருக்கும் உன் அப்பா நிலை பார்த்துமா?? இன்னும் ஜோசிக்கின்றாய் !



எந்த வயதிலும் சமூகப்பணி செய்ய முடியும்! ஆனால் பரதன் போல ஒருத்தன் கிடைப்பது அத்தி பூத்தால் போல  இனி உன் தீர்மானம்  என்றுவிட்டு மீனாட்சி எழுந்து செல்ல!!!


ஜீவ்னி வேலைக்களைப்புக்கு ஏற்ப  நித்திரா தேவியும் தேடிவர இப்பவே இதுக்கு ஒரு முடிவு காணவேண்டும் பரதன் நாளை வருவானா ??



அதே நேரம் தன் நாட்குறிப்பில்  பரதன் கிறிக்கினான் கவிதை போல ஒரு கோடு!

காத்து இருக்கின்றேன்! ஜீவனி
காதலில் உருகும் காதலி
காணாமல் போன
காதல் கதை உண்மையில் மின்நூல்
காணாத பலரைபோல இல்லை!
காதல்க் கதை எழுத்தில். பிழைக்கலாம்!
காற்றில் பாடல் தேர்வு
காதில் ஒலிக்காது  இணையத்தில்!
காலத்தால் இன்னும் உன்னோடு
காலம் மாறி வந்த கதை போல!.
காலம் எல்லாம் கடல் கடந்து
காதோடு காதல் பேசி வாழ்வோம்!...


இன்னும் தவிக்கின்றேன்.

15 June 2014

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --38

புதுமைப்பெண் ,புதியபாதை புரட்ச்சிப் பெண் என்று தேர்தல் பிரச்சாரம் போல மேடையில் பேசுவதுடன் வார்த்தைகளும் வாழ்க்கையும் ஒரு போதும் முடிவதில்லை ஜீவனி!



 ஒவ்வொருத்தரும் தம் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை தாம் தான் எடுக்க வேண்டும்! உறவுகளும் ,சமூகமும் இல்லை ! இந்த நாட்டில் மறுதார வாழ்க்கை ஒன்றும்புதுசும் இல்லை ,புரட்சியும் இல்லை ,இரண்டாம் தாரம் முடித்தவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே பயணிக்கும் காவியங்கள் கண்டவர்கள் கதையை எழுத ஏனோ முன்வரவில்லை தன்குடும்பம்,தன்ஜாதி ,தன்சமூகம் என்ற மேதாவி எண்ணாத்தால்!



! என்றாலும் மூத்தவர் இவரின் வாழ்க்கையில் பலதாரம் இருப்பதையும் நீ அறிவாய்!


. என் தெளிந்த சிந்தனையோடு சொல்லுகின்றேன்!

 நான் உன்னை எப்போதும் நேசிக்கின்றேன் இதயபூர்வமாக இப்பவும் சேர்ந்து வாழகாத்து இருக்கின்றேன். உடல்தேவை நோக்கம் இன்றி! 

என்னோடு வாழ்க்கையில் மூச்சுக்காற்றுப்போல நீ வரவேண்டும் இல்லறத்தில் ! நீயே தீபம் ஏற்றவேண்டும்! விரைந்து ஒரு நல்ல முடிவு சொல்லு இப்ப ரயிலுக்கு நேரமாச்சுபோல எனக்கு விடுமுறை முடிந்து போகின்றது.


 மீண்டும் பாரிஸ் போக வேண்டும் இடையில் என் பூர்வீகத்தில் என் வாழ்க்கை இருண்டு போனதாக எண்ணிப்ப்புலம்பும் என் தாய் முகத்தை பார்க்க வேண்டும்!

 உன்னைநினைத்து என்று கதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி உன்னை கரம்பிடிக்கும் ஆவல் இருக்கு !


யுத்தகால அவசரமாக இராணுவஆலோசனைக்க்கூட்டம் போல இந்த தீர்மானத்தை நீ எடுக்க வேண்டாம் நாளை மீண்டும் விரைந்து வருவேன்!

 நல்ல பதில் சொல்வாயா ?தாலியோடு நீ தனிமரம் இல்லை தயங்காத ஜீவனி!

 சமூகம் நம்மை கவனிப்பதால் எண்ணி  உன் சந்தோஸ வாழ்க்கையை காலம் எல்லாம் காத்திருப்பேன் தனிமரம் போல என்று கைநழுவி விடாத.!!


 நாளை வாரன் என்று பரதன் விரைந்து  சென்ற வழியையே விழியில் வலி தந்தவன் இவனோ என்ற ஏக்கத்துடன் நின்ற வேளையில்!






 பிரசாந்தி உள்ளே நுழைந்தாள் தொலைக்காட்சி  இடைவேளை விளம்பரம் போல!


 ஜீவனீ நான் இப்ப உன் செயளாராக பேசவில்லை! சகதோழி. ஒரு குடும்பத்தலைவி போல பேசுகின்றேன் .

பரதன் என்ன பேசி இருப்பான் என்பதை அவன் நண்பன் ஈசன் வெளியில் சொல்லிவிட்டான்! வீணாக உன் பிடிவாத நிலையில் உன் வாழ்க்கையை தொலைக்காத பலர் தொலைத்த நாட்குறிப்பு போல!




 நான் சொல்வது ஒன்றுதான் உனக்கு பாரிசில் இனிது இனிது என்று இன்பமாக உன் கஸ்ரம் போய் !நல்லாக வாழும் நிலையைப்பார்
 !


இது ஆலோசனை மட்டும் அல்ல அன்பான் கட்டளையும் !நாளைப்பொழுது உன் விடியல் நோக்கி இனியும் தொடர் போல தொடராதே உன்  தனிமரம் வாழ்க்கை முடிவு காண வேண்டி நானும் பிரார்த்திக்கின்றேன்!!!!!!!!!!!!!!!!!!

////////////////////////////////////

தொடரும்....

13 June 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37

அதிகாரிகளின் கடமை ஆட்சியின் நிறுவாக விடயங்களை நிஜமான ஆர்பணிப்புடன் மக்களிடம் தெளிவு படுத்த வேண்டியது. ஆனால் ஆட்சியாளரிடம் ஒரு முகமும். மக்கள் குழுவிடம் இன்னொரு முகம் காட்டியதன் இருண்ட பக்கம் எல்லாம் இன்னும் தொடரும் நாடகம் போல !


இவர்களும், நடிகர்கள்தான் ஈழத்தின் அவலத்தில் .


இப்ப சொல்லு ஜீவனி என்ன சட்ட திட்டங்கள் தத்து எடுக்க ?

உன் மெளனத்தைக்கலை தயவு செய்து.  கொஞ்சம் மனம்விட்டு பேசு ஜீவனி.


 நீங்க பேசுங்க நாம் வெளியில் இருக்கின்றோம் என்று பிரசாந்தினியும் ஈசனும் வெளியில் செல்ல இருவரும் அந்த அறையில் இருந்தனர் பொலிஸ் அதிகாரியின் முன் இருக்கும் குற்றவாளி போல .

 ஏன் பரதன் இங்க வந்தாய்?? இத்தனை வருடம் நான் எப்படி இருக்கின்றேன் என்று ஒரு கணம் சிந்தித்து இருப்பாயா ? 

என் சிந்தனை எப்போதும்  உன்னைவிட்டு என்றும் பிரிந்ததில்லை ரயிலைத் தாங்கும் தண்டவாளம் போல என்றாலும் என்  ஐயாவின் பிடிவாதம் நாட்டைவிட்டுப் போகவேண்டிய கட்டாயம்.


 நடந்தது நடந்து போச்சு இனி நடப்பதைப் பேசத்தான் வந்தேன்! ஆமா என்னாச்சு உன் வாழ்க்கை?,

 நல்ல பையன் தானே ராம்குமார். ஏன் 5 வருட இல்லறம் இடையில் தடம்பிரண்ட  ரயில்ப்பெட்டி போல ஆச்சு?

அது ஒரு கொடுமையான சிறைக்கூடம். எங்கப்பா நல்ல வரதட்சணை,வீடு  என  பல சொத்துக்கள்  கொடுத்து கட்டி வைத்த அப்பாவுக்கு எங்களின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிக்கும் என்று முதலில் தெரியாது.


 கலியாணம் முடிச்சு முதல் இரண்டு வருடம் சந்தோஸமாகத்தான் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது .ஆனால் திடீர் திருப்பங்களும், திசைமாற்றும் பேச்சுக்களும் தானே எல்லாத்தையும் தீர்மானிக்கின்றது.

 வம்சம் வரவில்லை என்ற அத்தையின் முதல்க்குரல்  எங்கள் இருவருக்கும் இடையில் இடிமின்னல் போல முதலில் தோன்றிய வாக்கு வாதம் இலங்கை  சமாதான பேச்சுவார்த்தை போலகிவிட்டது

.  இதில் யாருக்கு குறை என்ற ஒரு தலைப்பட்ச முடிவு என்று அத்தை வீட்டில்  ஆடிய காவடி எனக்கு மனநிம்மதி போச்சு!

 இந்த உலகில் கொடுமையிலும் கொடுமை எது தெரியுமா?? மலடி என்று பட்டம் சுமக்குக்கும் மருமகள்தான்.

 மாப்பிள்ளை சிங்கம் என்று சொல்லும் ஊர்கள் மாப்பிள்ளை திருநங்கை என்று சொல்வதில்லை.

 விதி எழுதும் கதையில் சிலரும் கன்னிப்பருவத்திலே ராஜேஸ் போலத்தான் தினமும் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதை விட காலம் எல்லாம் வாழ்வெட்டியாக இருந்துவிடும் முடிவில் தான் விவாகரத்து வாங்கினேன்!

ஊருக்குள் குடியும். கூத்தியாளுடணும் திரியும் ராம்குமார் அரசியலில் பிரச்சாரத்தில் இப்போது பெரியமனுசன் ஆனால் அப்பா என்று சொல்லும் தகுதியை காலம் கொடுக்கட்டும்! .

விவாகரத்து வாங்கி நான் திமிர்பிடித்த பெண் . வாழத் தெரியாதவள்  என்று பலரும் பல குத்தல் பேசக்கேட்டு  இப்ப என் மனசு எதையும் தாங்கும் இதயம் போல.

 இந்த மழலைகள் காப்பகத்தில் என் ஜீவன் ஒன்றாகிவிட்டது இனி இதுதான் என் பாதை? 

பாதைகள் எங்கு முடியும் என்று யாரும் அறியார்  ஆண்டவன் அன்றி ஜீவனி!

 உன் வலிகளும் வேதனைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது
என்றாலும் உனக்கு என்றும் ஒரு வாழ்க்கை  நிச்சயம் தேவை உடல் சுகத்துக்கு இல்லை உன் பின்னடி வாழ்க்கைக்கு!


இன்னும் தவிக்கின்றேன்........

12 June 2014

அசலும் நகலும்-2

இலங்கை  சிங்கள இசைப்பரப்பில் இந்திய ஆதிக்கம் அதிகம் என்றாலும் ஏனோ அரசியலில் இருக்கும் இந்திய எதிர்ப்பு வாதம்  இன்றுவரை இலங்கை  கலை சமூக வாழ்வில் இல்லை என்பதை ஊடகத்தில் இருப்போர் உறுதியோடு சொல்லும் ஒரு விடயம்




! அரசியல் வாதிகள் ஆயிரம் கொடி பிடித்தாலும் ஆயிரம் புது  இசை இன்னும் மொழிகடந்து அசலும் நகலும் என்று எழுத முடியும்!

இனி மோடியின் கையில் இருக்கு வாழ்க்கை!ஹீ


   !ஹீ அதிகம் நான் ரசித்த பாடல் ஹிந்தி மொழியின் ஒரியினல் இங்கே!
i

சிங்கள மொழி நகல் இது நம் நாட்டு பிரபல்யபாடகி  நிரோஷா பாடிய பாடல் இது நகலாக கேட்டு ரசிப்போம்

!


முதல் அசல் இங்கே-http://www.thanimaram.org/2014/02/1.html

10 June 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---36

ஈழயுத்தம் முடிந்த பின் துரிய முன்னேற்ற வளர்ச்சி, புதிய பாதை திறப்பு,

 பாதுகாப்பு முன்னேற்றம் என்று எல்லாம் பத்திரிகை செய்தி காற்றைப்போல பரவி நின்றாலும் வளர்ச்சியில் பங்கை பாதீட்டு வெற்றி என்று பாராளமன்றத்தில் மாலுப்பாணுடன் ஏப்பம்விட்டு மாண்புமிகு மந்திரிகள் பொய்மாலை சூட்டினாலும்!


 வளர்ச்சிக்கு திட்டமிடவேண்டிய நேரத்தை எல்லாம் அடையாத வல்லூறு அயல் ஓநாய் வல்லரசுகளின் அன்னக்காவடிகளுக்கு ஆத்திரத்தில் அல்லிவிடும்  குப்பைத்தொட்டி  உரைகள் போல அல்ல!


 ரகுபதி ஐயாவின் பேச்சுக்கள் கடமையை கடவுளுக்கு செய்யும் பணி போல இருப்பதனை இணையத்தின் வருகை மூலம் நேரடியாக தனிப்பட்ட முறையில்  அறியும் வசதியை இன்று இறைவன் தந்து இருப்பது இந்த பிரசாந்தி அறியாத செயல்போல!

  சிலரின் சிந்தனை இன்னும் 13 வது சரத்துக்குள்ளும் அண்டைநாட்டின் காலில் சாமியே என்று விழுந்துகிடப்பது போலத்தான் நமக்கான தெளிவான சிந்தனையை உருவாக்காத நிலை  இப்போது தென்னாபிரிக்க நாடகம் இன்னொரு புதுமை!  .

எனக்கு ரகுபதி ஐயாவுடன் இப்ப பேசணும் என்ன செய்யலாம் மேடம் பிரசாந்தி ?


அதுக்கு ஜீவனிதான் பொறுப்பு சார்!

 ஓ அந்த மேடத்திடம் சொல்லுங்க நான் இப்பவே இங்கயே பேசவேண்டும்.

 சில இடத்தில் பணிவைவிட அதட்டல் பாணி அதிகம் வேலையை அதிகம் செய்யும் சூழலைத்தருகின்றது

 .
 

இருங்க சார் நான் ஜீவனியுடன் வருகின்றேன் .சாருக்கு குடிக்க ஜீஸ் ஏதாவது ஒன்றும் வேண்டாம் உபகாரத்துக்கு நன்றி பிரசாந்தி..

மச்சான் பரதன் நீ ரொம்பவே மாறிவிட்டாய். எப்படி இப்படி திடீர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல திடீர் என்று எல்லாம் பேச முடியுது?

 ஒரு கணிப்புத்தான் மச்சான் இப்ப நாம் வெல்வோம் என்ற தன்நம்பிக்கைத்தான்.

 ஆமா யாரு இந்தப்பிரசாந்தி தெரியுமா உனக்கு . ?

தெமோதர கங்கானியின் மகள் !ஜீவனியோடு ஒன்றாக பல்கலைக்கழகம் வரை படித்து வந்தவள்  .

நல்ல சம்பளத்துடன் வேலையில் இருந்தால் யாழ்பாண பொடியனை விரும்பி ஏற்றவள் வாழ்க்கையும் முறிந்த பனைமரம்  போலத்தான் இனவாதம் இவள் தாலிக்கும் விலங்கிட்டு விடுதலைப்புலி என்று !



இன்னும் முடிவில்லை இருக்கின்றானா ?இல்லையா ?என்றுதான் இது எல்லாம் உளவியல் சிக்கல் இன்னும் எழுத  வேண்டும் ஈழத்தின் துயரங்கள் தொடராக யார் யார்  இன்னும் சொல்லாத  ரகசியங்கள் பொதுவெளியில் பேசுவார்களோ?? வெளிநாட்டில் இருப்போர் தான்  இனி   படைக்கவேண்டும் புதுப்படைப்புக்கள்.

இப்ப இங்கு நிம்மதியாக யுத்தம் எல்லாம் இல்லை காலம் மாறிப்போச்சு!வன்முறை புது வழியில் பெருகிவிட்டது என்று பெருமூச்சுவிட்டபடியே ஈசன் சொல்லி முடிக்க !ஜீவனியுடன் சேர்ந்து பிரசாந்தியும் வந்தாள் !

சார் சொல்லுங்க என்ன விசயமாக  ஐயாவைப் பார்க்கணும்?

 நான் ஒரு செல்வத்தை என்னோடு எடுத்துச் செல்ல  வந்தேன் அது விடயமாக´ முதலில் அவரிடம் பேச வேண்டும் .

புரியல அதாவது தத்து எடுக்கப்போறேன் பரதனின் வாத்தைகள் ஜீவனியின் முகத்தில் ஆச்சரிக்குறியீடுகள் கீறியது கோட்டோவியும் போல!



ஈசனுக்கும்  அவன் வார்த்தைகள் தென்னையில் விழுந்த ஷெல் போல சிதறியது சிந்தனை !

 ஏன் பரதன் ?நீ பேசாம் இரு மச்சான் .

 தத்து எடுக்க பல நடைமுறை செயல்பாடு இருக்கு பரதன் ஓ அப்படியா ஜீவனி அது பற்றி விளக்கமாக சொல்லுங்க தத்து எடுக்க உங்க சம்சாரம் ஒத்துக்கிட்டாங்களா???!!


தாலியோடு தனிமரமாக எத்தனை காலம் ஒரு பெண்ணுடன் இருக்க முடியும் ஒரு மழலை இல்லாத நிலையில் அக்கம் பக்கம் என்ன சொல்லும் என்று புரியுமா உனக்கு??,






 அந்த கவலை எல்லாம் பெண் அதிகாரிகளுக்கு புரியாது!

 ஏன் ஆண்மகன்களுக்கு நிஜமா  யாரிடம் குறை என்று உண்மை மோகமுள்  நாவல் போல பலருக்கு புரியுமோ ?,

சே நீயும் ஒரு சாதரண மனுசனா பரதன்??

 ஹா ஹா உன்னோடு பேச வேற வழி!

 இந்த உலகில் எல்லோரும் புதியபாதை போட முடியாது!  முதலில் யாதார்த்தம் தெரிய வேண்டும் ஜீவனி.

 ஊரோடு ஒத்தோட  வேண்டும் இல்லை சதிகளும் ,கழுத்தறுப்புக்களும், விலைபேசலும்,,மறைகரங்களும் வாழ்க்கையில் மண்னை  அள்ளிப்போடும் மரணங்கள் மலிந்த பூமியில் வீரங்கள் சதியால்  வீழ்த்தப்பட்டது விடுகதைகள் போல பல இருக்கு புரிஞ்சுக்க!



தொடரும் காத்து இருக்கின்றேன்!
  //////////



























09 June 2014

கிறுக்கலும் கீதமும்-6



இசையில் இளையராஜா போல இணைந்து இருக்கும் 
               இந்த தாய் வீடு போல இன்னும் உன் காதலோடு
 இசையில் வாழ்வேன் 
இனிய காதலி போல நீ என் நெஞ்சில் சாய்ந்தால்
 இனி எல்லாம் இசையில் காதல் தான் இளம்குயிலே!!




///////////////////////////////////////////////////////////



இசைமீட்டும் சிறிமி போல
 என்  முகம் காட்டாத காதல்! 
                      நிலவு. பரி. என்று உயர்ந்த
 பார்வையில்
             உன்னைச்சுற்றிய பூக்கூடைபோல 
நான்! 
 இன்னும் தவிக்கின்றேன் 
அந்தரங்க நாட்டியம் போல
 என் காதலும் பெண்னே !


///////////////////////////////////////////////////////////////////////////


பூக்கள் போல இதயமும் பூத்தது உன் புன்னகையாள்
    இருவரும் இணைவோம் 
இதயத்தாமரை போல் என்று ஏற்றிய தீபம்
  இன்னும் ஒளிர்கின்றது நீயோ
 இன்னும் புரியாத புதிராக!

////////////////////////////////////

சதுரங்க விளையாட்டில்
சாய்ந்த ரோஜா போல இல்லை
என் காதல் துடிக்கும் பூக்கள் போல
வட்டம் சுற்றும் இதழ்களாக என் ஆசையும்
நீதான் மைய்யக்காதல் உன்னையே
உலகமாக நானும்
கடிகாரமாக ரோஜாவுடன்!


 முன்னம் கீதம் இங்கே-http://www.thanimaram.org/2014/05/5.html

06 June 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---35

வல்லரசுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் வளர்ச்சி காணாத நாடுகளின் மீது  தம் இருப்பினைத் தக்க வைக்க வடிகால சமாதான வடிவம் போடும் செயல்தான் சமூக அடிப்படைவசதியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்த இலவச நிதி ,அன்பளிப்பு என்ற வெற்றுக் காகித  வெள்ளை யானை கதை.



 .இலங்கையின் வடகிழக்கில் யுத்தம் நடப்பதால் அப்பகுதியில் செய்ய முடியாத செயல் பாடுகளை இறையாண்மையுள்ள பக்கம் பார்த்துச் செய்யுங்க எஜமான்களே என்று இவர்களின் குழுக்கூட்டத்தில் குனிந்து நிற்கும் அரசியல்வாதிகள் எல்லாம் கிடைக்கும் பணதினை எப்படி எல்லாம் பொதுப்பணிச்சேவை என்று புறாவை கூட்டில் அடைத்தார்கள் என்று ஆய்ந்து எழுதவேண்டிய ஊடகம் எல்லாம் அவர்களின் துதிபாடும் முகப்பு விளம்பரத்தினால் !வீழ்ந்து போய்விடும் விடயம் எல்லாம் இன்னும் பலர் இந்த நாட்டில் பேசுவது இல்லை.



 இலங்கையில் வெளிநாட்டுப்புலி என்று கொடிபிடிக்கும் கட்சிகளும் ,அரச சாராதா அமைப்புக்களில் தங்களின் ஒரு பொய் முகத்தை புனிதமானவர் மக்கள் சேவையன்றி அரசியல் இல்லை என்று அறிக்கைவிடுவதுடன் அடுத்த சந்திப்பு என்று ஏதாவது சமூக காப்பகத்தில் ஆயிரம் பேருக்கு குடிநீர் வசதியும்.  கல்விக்கூடங்களுக்கு.  சிறுதொகை கணனி அன்பளிப்பும். மற்றும் சமூக காப்பகங்களுக்கு வாகன அன்பளிப்பும். சேவையாளருக்கு நல் வழிகாட்டலும் என்று பத்திரிகைக்கு செய்தி கொடுக்கும் புனித எரில்  சொல்கையூம் /யாக்காசி /சுரேஸ் நம்பியார்,பன்கிமூன்  மான்களின் புழுகூ மூட்டைக்கு என்றுதான் விடிவு கிடைக்கும்!


 உண்மையில் தூய பொதுப்பணியில் தம்மை இணைத்துக் கொண்ட பல நல்ல உள்ளங்களையும்,  இந்த அரச சார்பு அமைப்புக்களும். அதன் தொண்டர்  சினிமா ரசிகர் போல ஜால்ரா  அல்லக்கைகளும். அவமதிப்பதும் .பாலியல் துஸ்பிரயோகம் என்று பல கதை கட்டுவதும் பத்திரிக்கையில் சந்தி சிரிப்பதும் பலராலும் படிக்கப்பட்டாலும் பார்த்தோம் என்பவர்களின் அடுத்த நிலை எல்லாம் இலங்கை ஏடுகள் எழுதுவதில்லை


. இனவாதி இவர் மட்டும் எந்த தேர்தல் என்றாலும் இந்த அரச சார அமைப்புகளும் ஏதோ அரசியலின் பின் சக்தி வெளிநாட்டுப்பணம்  புழங்கும் வெற்றிலையின் மாற்றுச்சுனாமி என்றும் பெரிய பெரிய குற்றச்சாட்டை வெற்றிலை போட்டு துப்பும் எச்சில் போல ஏடுகளைப்பார்த்து துப்பினாலும்!

 எழுது கோல்கள் எல்லாம் இது அரசியல் கறைகள் என்று அதிகம்  கிரிக்கட் போல அடுத்தத்துடுத்து செய்தி போடுவதுதில்லை!

சில குற்றச்சாட்டுக்களும் ,குத்தல்கள் எல்லாம் பொய் என்று நிராகரிக்கவும் முடியாது!

 பல பொது இடத்திலும் நல்லதும் ,கெட்டதும், இருப்பது மனித இயல்பு தான் அரசியலில் ஊழல் போல! நான் மக்களுக்கு என் காலத்தில் சேவையாக இதை எல்லாம் செய்கின்றேன் தம்பி பரதன் காமராஜார் போல ! இதில் ஆத்ம திருப்தி தான் என் சொத்து!

 இந்த காப்பகத்தில் சம்பளமாகவோ .இல்லை நன்கொடையாகவோ. நான் ஒரு சதம்கூட எடுப்பதில்லை.


 இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க புலம்பெயர் தேசத்தின் உதவிகள் தேவை காலத்தின் காட்டாயம். நாட்டின் பொருளாதார நிலை நான் உனக்கு எழுத இது என்ன கருனாநிதி ஆளும்  மத்திய ஆட்சிக்கு மாநில  அரசு சார்பிள் மீனவர் தீர்வுக்கு  எழுதும்  கடிதம் போலவா??

 உன் அப்பா என்னோட அதிகம் நட்புப்பாராட்டி வாழ்கின்றவர். உன்னக்கு எப்படி எல்லாம்  இந்த அமைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க முடியுமோ ??இல்லை வழிகாட்ட முடியுமோ?, அதை என்னோடு சேர்ந்து செய் பணம் முக்கியம் இல்லை  என்று ரகுபதி ஐயா !

முதலில் என்னோடு தொலைபேசியில் பேசும் போது என்னிடம் அவர் மீதான எந்த அரசியல் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

நேரம் கிடைக்கும்  போதெல்லாம் அவரின் மின் அஞ்சலும் ,புகைப்படங்களும் அவரின் பரந்த சேவையை புலம்பெயர் தேசத்தின் வசதி வாய்ப்புக்களுடன் ஒப்பிடும் போது தான் உண்மையில் இந்த அமைப்பு ஒரு சுயநலம்மில்லாத சேவை மையம் என்பதையும் உணர்ந்துகொண்டேன்§


 அவருக்கு பக்க பலமாகி என்  பெயரினை சுயதம்பட்டம் அடிக்காமல் இந்த அமைப்பின் பினாமி  உறுப்பினர் போல இருப்பதினை   கஜபதி ஐயா அன்றி பணிபுரியும் அங்கத்தவர்கள் அறியாத செயல் !

அவரை நான் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையை அவரே தந்த விடயம் செயலாளர் பிரசாந்தி அறியமாட்டாள்!

 என் சமூக்கடமையை நண்பன் ஈசனிடமும் சொல்லியது இல்லை.

 இது என்ன அரசியல் வாழ்க்கையா,,??, எதிர்பார்ப்புடன்   எல்லாம் செய்ய.

 சமூக பொதுப்பணி என்பது வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும்  ஆனால் வேட்டி எல்லாம் கறைகள் இருப்பதே இன்றைய முதல்குடிமகன் முதல் அயல்வீடுவரை!


மக்கள் அவர்களின் பக்கம் என்று ஊடகம் உருவாக்கும் ஹீரோக்கள் உண்மையான கிராம மக்கள் தேவை அறிவார்களா!

தொடரும்....



 !