31 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-32

தோல்வியின் போது தோள் கொடுக்காத 
தேர் போன்ற உலகம் வெற்றியின் பின்னே வரவேற்பு என்று
 வெற்றியுடன் மீண்டும் வரும்போது 
வெற்றிக்களிப்பை பங்கிட்டு தனதாக்கின்றது. 
தோல்வியின் போது துவண்டுபோகாமல் இருக்க நம்பிக்கையுடன் 
தோளைத்தட்டிக்கொடுத்த உறவுகள் 
தொலைவில் நின்று நிறைவான சந்தோஸம் காணும் 
இதுதான் இந்த உலக நியதி மச்சான் !

நீ இலங்கை மீண்டும் போகும் இன்றைய நாள் உன் வாழ்வில் மீண்டும் ஒளிபிறக்கப்போகுது மச்சான் , இன்னும் சில மணித்தியாளத்தில் கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறிதுடன் வெளியார் வரவேற்புப்பகுதியில் பாரு எல்லாம் தெரியும் மச்சான் பாபு .

என்னடா சொல்லுகின்றாய் சேகர் ?மூன்று வருடகள் கடந்த பின்  நீயே நேரில் பார்க்கப்போறாய் எனக்கு வேலைக்கு போக நேரமாச்சு .உனக்குத் தான்  இப்ப வெளிநாட்டு வாழ்க்கை நன்கு புரியுமே இங்கு வயிற்றுவலி என்றாலும் வாய்விட்டுச் சொல்லாம வேலைக்குப் போனால் தான் அன்றாடம் நம் பிழைப்பு நல்லா இருக்கும் .

அக்கரையில் இருந்து வெளிநாட்டு வாழ்க்கை ஜாலி என்று சொல்லுவோருக்கு எங்க புரியும் நாம் இழக்கும் வாழ்க்கையும். வாலிபமும் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தான் சேகர் .

ம்ம்ம் ..சரிடா சேகர் கொழும்பு போனதும் தொடர்பில் வாரன்!

சிந்தனையைக் கிளறிவிடுவதில் இந்த நினைப்பு அதிகம் தொல்லை தருமாம் அதுபோல 
மூன்றுவருடம் அரபுலகத்தில் தனியார் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவிட்டு நாடு செல்லக்காத்து இருக்கும் நண்பன் பாபுவுக்கு ஸ்கைப்பில் சொன்னான் சேகர் !

மேற்பார்வையாளராக வேலை ,நான் பார்த்தவேலை என்னவோ குளிர்சாதனம் பூட்டிய பல்பொருள் அங்காடிக்கடையில்தான் வெளியில் தான் உடலை கருவாடு போல காயப்போடும் வெப்பம் புதிய மொழி ,புதிய, புதிய நண்பர்கள் .இறுக்கமான கட்டுப்பாடுகள் இந்த நாட்டில் .நம்நாட்டில் உடன் பிறந்தவார்களுக்கு சுபகாரியம் என்றாலும் ,உறவுகளுக்கு அவமங்களகாரியம் என்றாலும், தொலைபேசி அழைப்பில் தான் நம்உலகம். இன்பம் ,துன்பம் எல்லாம் இந்த் தொலைபேசி இப்போது ,ஸ்கைப் அத்துடன் .முகநூல் என இன்னும் ,சிலதை  பகிரமுடியும் அதுக்கும் இணைப்பு கிடைத்தால் தான் சாத்தியம்.

 இந்த ஊருக்கும் நம் ஊருக்கு வித்தியாசங்கள் பல .என்னதான் குவைத்நாட்டு டினார்  பெறுமதி நம் தேசத்தில் அதிகம் என்றாலும் அதுக்காக நாம் இழக்கும் ஆசாபாசங்கள் அதனைவிடப் பெரிது.

 என்ன செய்வது இனவாதநாட்டில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப்பெற முடியும் என்ற நிலை .

மூன்றுவருட அரபுலக வாழ்க்கை பல விடயத்தை சுயமாக சிந்திக்க  கற்றுத்தந்து இருக்கின்றது இனி வெளிநாடு என்று வெளிக்கிடுவது இல்லை.

 நம்மூரில்  என் உழைப்பிலும், நண்பனின் தயவிலும் ,நான் படித்த அரபுலக அனுபவத்திலும் இருந்தும் தனித்தொழில் தொடங்குவது தான் என் இலட்சியம்.

 என்னை நம்பி என் உறவுகள்கூட ஆயிரம் ரூபாய் கூடத்தராத நிலையில் லட்சங்களைக்கொடுத்து  நான் உடனே அரபுலகம் போகும் வரை தொடர்பில் இருந்தானே ?எப்போதும் தொலைவில் இருந்தானே சேகர் அவன் பெறுமதி என்ன என்று தெரியாமல் இருந்துவிட்டேன் .

இனி அவனின் கடனை ஈரோவில் கொடுத்து அடைத்தாலும் அந்த நம்பிக்கையான நட்புக்கு என்ன கைமாறு செய்வேன்.

 நான் உயிரோடு உயிராக படம் போல காதலித்தவளே என்னை விட்டு பிரிந்த போதும் .



என் கூட இருந்து என்னை வழிநடத்திய வழிப்போக்கன் சேகர் விற்பனைப்பிரதிநிதி என்றாலும் எனக்கு அவனும் ஒரு குருதான்!

அவன் போகும் ஆன்மீக பாதையில் அவனோடு என்றாவது ஒருநாள் அடிபணிந்து போகணும் இது நட்பு என்பதைக்கடந்து குருசிஸ்யன் போல.

 ஆனால் என்னால் அவன் போல கோபத்தில் திட்டவும் ,பிடிவாதம் பிடிக்கவும் ,முக்கிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எத்தனை பெரிய முகநூல் குழுமம் என்றாலும் எதிர்த்துவிட்டு விலகிச் செல்லும் தனி ஒருவன் போல  இருக்க முடியாது அது என் பலவீனம்.

அவனை விட்டுப்போகமுடியாது .இதுவும் ஒரு ஜால்ரா கருணாநிதியை விட்டுப்பிரியாத அன்பழகன் போலத்தான் !

என்றாலும் இந்த சேகரின் பின்னே அரபுலகம் வந்த பின் என் பல நண்பர்களையும் ,தலைவர் சொல்லிவிட்டார் கட்சியைவிட்டு வெளியேறுங்கள்  கட்சி உறவுகளே என் கருத்தில் உடன்பாடு இல்லாத கழக கண்மணிகளே இனி உங்கள் முடிவு  என்றாலும் என்ற  அது எனக்கு வருத்தம் இல்லை நான் மலையும் கடப்பேன் எந்தநிலையிலும் என்று அதிகாரதொனியில் அவ்ன் க்ருத்து இட்டால்  அவன் சிலமுகநூலில் என்னை வம்பில் மாட்டிவிட்டாலும் இன்றும் சேகரின் , நேசிப்புக்கு முன் இந்த புதிய நட்புக்கள் முகத்துடன் கிட்ட நெருங்க முடியாது !சிந்தனை மீள் கட்டுநாயக்கா அண்மித்துவிட்ட நிலையில் இன்னும் சில நிமிடத்தில் தரையிறங்கும் சிறிலாங்கா ஏர்லைன்ஸ் அறிவிப்பு கேட்டு நிஜய உலகுக்கு வந்தான் பாபு! சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது ராஜா இசை சேகருக்கு எப்போதும் ஒரு போதைதான் வாசிப்பு போல  அவன் தந்த பல ஒலிநாடக்கள்  இப்ப வீட்டில் இருக்கோ தெரியாது!`ம்ம்ம்




தொடரும்...

29 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-31


பொருளாதார வீழ்ச்சியும் தொடரும் வேலை வாய்ப்பின்மையும் வீழ்ந்து போகும் திவீர இனவாத முன்னெடுப்பும் இலங்கையில் வறுமைக்கோட்டுக்குள் வாழ்பவர்கள்  இனியும் குடித்தனம் நடத்தமுடியாது என்ற சிந்தனையின் வெளிப்பாட்டில் நெளிநாட்டுக்கு வேலை என்று போகும் அவல நிலைக்கு காரணம் தூரநோக்கற்ற மூவின அரசியல்வாதிகளின் இனவாத வெறியின் வெற்றுக்கோஸங்கள் என்றால் மிகையில்லை !

வீட்டில் அடுப்பு எரியவேண்டி அரபுலகம் செல்லும் பணிப்பெண்களும் அன்றாட உடல் ,உள தினக்கூலி வேலை என்று ஆண்களும் அரபுலகம் சென்ற பின் அங்கு அல்லல் உறும் வாழ்க்கைப்போராட்டங்களை எல்லாம் அதிர்ச்சிசெய்திகளாக, அன்பவங்களாக  ,கேட்டாளும் ,பார்த்தாலும் அரபுலகத்தாரின் பணத்துக்கு இருக்கும் மதிப்பு இந்த பாழப்போன உயிருக்கு இல்லை என்பதை பலதேசம் பார்த்த இந்த சாஹானா அப்பாவியின் மரணம் கூட மாற்றவில்லை மான்புமிகு மந்திரிகளின் மனதை!

 இதையெல்லாம் தொடர்ந்து நாளிதழலில் எழுத வேண்டிய கரங்கள் எல்லாம் இலியானவின் இடை பற்றி தமிழிலும் ,

இனவாத சிந்தனையை இறைக்கும் இந்த சிறுகூட்டத்தினரை!

 இன்றைய தலைப்பில் தலைவாபோல எழுதும் இனவாத சிங்களநாளேடுகளின் நாட்டாமைத்தனத்தையும் என்ன என்று சொல்லுவது .

இவர்கள் தான் இந்த நாட்டுக்கு நல்லதைச் சொல்லும் நடுநிலையாளர்களா? நான் அறியேன் கண்ணுக்கு எட்டியதூரம் வரை விடியல் இல்லை என்பதைச் சொல்வது போல வெளிநாட்டுக்கு போக காத்திருக்கும் அப்பாவிகள் பலரைப்பார்க்கும் போது !


தோட்டத்துறையின் நம்நிலையை எண்ணி என்ன செய்வது என்ற நினைபில் காத்திருந்தான் கட்டுநாயக்கா விமாணநிலையத்தில் கதவு எண்-7 வழியாக வெளியேறி சிரிலங்கன் எயார்லனைன்ஸ் உடாக குவைத் நாட்டுக்கு செல்வதுக்கு பாபு !

இன்னும் சிலநிமிடத்தில் கதவு திறக்கப்படும் என்ற அறிவிப்பு மனதில் இன்னும் சிலநிமிடத்தில் ஆட்சி பறிபோகும் என்ற  ஜனாதிபதியின் நிலைபோல படபடப்பை கொடுத்தது!


இந்த இரண்டுநாளுக்குள் எத்தனை மாற்றம் ஒரு நாள் முதல்வன் போல திடீர் என்று நாளையே நீங்கள் போகலாம் என்ற காதரின் உதவி அரபுலகம் செல்வதுக்காக துருதமாக பணம் அனுப்பிய சேகரின் அன்பு.

 திடீர் என்று வெளிநாடு போறேன் என்றதும் திகைத்துப்போன தந்தை ,மகன் திருந்தக்கிடைத்த சந்தர்ப்பம் என்ற தாயின் நினைப்பு ,அண்ணாவுக்கு நல்ல வாழ்வுகிடைத்துவிட்டது இனி என் படிப்புக்கு கவலையில்லை என்ற சங்கவி ,நல்ல வாய்ப்பு தொலைக்காதீங்க அண்ணா என்ற தம்பி விமலன் ,எல்லாரையும் அலைபேசியில் ஆட்டிவிக்கும் பாம்பாட்டி வித்தை  போல எல்லாரையும் உரிமையோடு ஆட்டிவிக்கத் தெரிந்த நண்பன் சேகர் என எதையும் நினைச்சுப்பார்க்க முடியுது இல்லை .

என்ன இருந்தாலும் என் ஒரு அழைப்புக்கோ, செய்திப்பதிவுக்கோ கூட பதில் தராமல் இருக்கும் மிரூனாவை நினைக்கும் போதுதான்!

 காதலைக் கடந்து கோபம் வருகின்றது நேரில் பார்க்க முடியாமல் வேலை மாரி எப்படி துணிந்து வவுனியா போனால்?
 எதுவுமே தெரியல இந்தப்பெண்களே எல்லாம் மோசம்தான்!

துளசியின் என் மீது மோகப் பொய்க்கு இருக்கும் மரியாதை உயிருக்கு உயிராக நேசிக்கும் எனக்கு இல்லையே ?அவள் என்னை விரும்புவது நான் அறியவில்லை. அன்று வத்தளையில் பார்ட்டிக்கு வந்தபின் ஒன்றாகப்போனோம் .மிருனாவை மட்டக்குளியில் விட்டுவிட்டு துளசியை அவளின் விடுதியில் சேர்த்துவிட்டு நிதானத்துடன் தான் என் அறைக்கு வந்தேன்.

 இடையில் தன்னிடம் எல்லைமீறி நடக்க முயன்றான் என்று என் மிரூனாவிடம் சொல்லியதை வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் பேதை போல என்னையும் அப்படி நினைத்துவிட்டாளே மிரூனா ?என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு கைபேசியின் அழைப்பு சிந்தனையை குழைத்தது !

ஹாலே என்ன மச்சான் பிளைட் ரெடியா, என்று மறுமுனையில் மீண்டும் சேகர்.

 இந்த இரண்டுநாளில் இவனின் அழைப்புக்கள் எல்லாம் இடைவிடாத இசைபோல இருக்கு இல்லை மச்சான் இன்னும் 5 நிமிடம் தான் இருக்கு வெளியேற குடியகழ்வு கடந்து ஏறும் நிலையில் காத்து இருக்கின்றேன் .

ஓக்கேடா சந்தோஸமாக் போ எதையும் நினைச்சு துஸ்ரக்கனவு போல மனசைக்குழப்பிக்காத  மீண்டும்  குவைத் போய்ச்சேர்ந்த பின்  நேரம் கிடைக்கும் போது பேசு என்னோடு பாபு!

நன்றிடா மச்சான் சேகர் !
உனக்கு எப்படி மறுஉதவி செய்யப்போறன் என்று தெரியல ?
என்னக்கு உதவி தேவைப்பாட்டள் நிச்சயம் கேட்கின்றேன் .ஆனால் எந்த நிலையிலும் மிரூனாவை கைவிடாத.

 அதுதான் நீ எனக்குச் செய்யும் பிரதி உபகாரம்  .

அவளைப்பற்றி மட்டும் பேசாத மச்சான் .என் உயிரே என்னுள்னிருந்து விலகும் நொடி போல அவள் தந்த வலிகள் அதிகம்டா.

 இந்த நாட்டைவிட்டுப்போகும் என்னை வழியணுப்பக்கூட வரவில்லை அதிகபட்சம் ஒரு கைபேசி அழைப்பில் கூட வாழ்த்தியிருக்கலாம் .நீ வெளிநாட்டில் இருந்து எத்தனை தரம் பேசிவிட்டாய் அவள் உள்நாட்டில் இருந்து ஒரு வார்த்தை ஒரு குறுஞ்செய்தி அவளை மறக்கணும் இனி!


இல்லை மச்சான் எல்லாம் உனக்கு நேரம் வரும்போது சிலதைச் சொல்லுகின்றேன் முதலில் நல்ல படியாக குவைத் போய்ச் சேர்!

தொடரும்!

28 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-30

காவடி தூக்குவது /எடுத்தல் என்பது ஆன்மீகத்தில் ஆத்ம விடுதலை வேண்டி என்று பொருள்படும்.

 சூரனையும் கொல்லாமல் அபயம் அளித்தவன் வேலன் .அதுபோலத்தான் இந்த காதலும் இரண்டு ஆத்மாக்களின் ஈடேற்றம் .

காதலில்  இருவரும் இணைதல் என்பது தூக்கி ஆடும் காவடியின் பாரமும் ,ஆடுபவரின் உடல்பலமும் ,ஆண்டவனின் கிருபபையும் ஒன்று சேர்ந்தால் தான்! எடுத்த கோவில் தொடக்கம் முடிக்கும் சன்னதி வரை தொடர்ந்து ஆடமுடியும்

காவடி ஆடும் போது சந்திகள், வீதிகள் ,தெருக்கள் ,என பல பக்கம் பார்த்து ஆடிச்செல்லவேண்டும் இடையில் பல இன்னல்கள் பல உருவில் வரும் மகுடிக்கு ஓடிவரும் நாகம் போல !

அதுபோலதான் காதலிலும் பெற்றோர்கள் ஊர் ,இனம். குலம் .என சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் கடந்து திடங்கொண்டு இணைந்தே இருப்போம் என்று சபதம் கொண்டால் தான் சபையேறமுடியும் காதலில் கணவன் மனைவி என கரம் பற்ற .

இந்தகாதல் என்பது இன்றும் பலருக்கு முள்கிரீடம். எனக்கும் இந்த பாபு ,மிரூனா இருவரும் சூட்ட நினைப்பது எதை என் ஐயனே !

இன்னும் இரண்டுநாள் இருக்கு உன் வழியில் நானும் அடங்கி, ஒடுங்கி ,சரணாகதியாக .

அதுக்குள் நான் எடுக்கும் முடிவுகள் யாரையும் உருகவைக்கக்கூடாது.

 ஏற்கனவே என் நண்பனுக்கு உருகும் காதலியை பரிசாக்கியதில் என் பங்கையும் மறக்கமுடியாது செஞ்சோலை சிறார் படுகொலை போல  இந்த பாரிஸ் வாழ்வில்.


 எது எப்படியோ எல்லோரும் இந்த ஆன்மீக குழுவில் போகும் காலம் வரவேண்டும். அதுக்கு உன் தயவும், கருணையும் வேண்டும் என்று எண்ணிக்கொண்டே பாபுக்கு மீண்டும் கைபேசியில் தொடர்பை எடுத்தான் சேகர்!

 "மச்சான் நீ நாளைக்கு கொழும்பு போறாய் "உன் பாஸ்போட்டை மருதானையில் போதிராஜா மாவத்தையில் இருக்கும் என் பிரெண்டு காதர் பாயிடம் சேகர் கொடுக்கச் சொன்னான் என்று கொடு .அந்த பாய்க்கு நான் மிகவும் பரீட்சயமானவன் என்பதால் என்ன செய்ய வேண்டுமோ ?அதைச் செய்வார் உனக்கு.நிச்சயம்  நல்லது நடக்கும் உடனே போ.

 சாரிடா சேகர் நாளை நம்மூர்க்கோவில் தேர் வீதியுலா வருகின்றது .நான் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஒரு காலத்தில் நாம் எல்லாம் இந்த் பதுளையில்  இணைந்தே இருந்தோம்!

 நீ பதுளையை விட்டுப்போனதும் பின் வவுனியா என்றும், பண்டாரவளை என்றும் அலைந்து கடைசியில் உன் வாழ்க்கை எல்லாம் மாறிப்போச்சு.

 நீ இந்த ஊரைவிட்டுப்போனதில் எனக்கு நல்ல நட்பும் இல்லாமல் போச்சு .நீ இங்க இருந்தாள் நிச்சயம் மிரூனா இன்று பதுளை வந்து இருப்பாள்.

 போனவருசம் கூட என்னோடு சேர்ந்து வந்தாள் இந்த வருசம் அவள் என்கூட பேசவே வெறுக்கின்றாள் !

 மச்சான் எதையும் நினைச்சு கவலைப்படாத உன்னைப்புரிந்து கொள்ளாதவள் எப்படி உன்னைச்சரண் அடைந்தேன் என்று சுகராகம் மீட்ட முடியும் .

.பதுளையில் வருடாவருடம் வரும் தேர் வடிவாக இருக்கும் பார்த்து ரசிக்க !


ஆனால் நீ ரசிக்கும் நிலையில் இல்லையே பாபு துன்பங்கள் வந்தால் கைகோர்த்துக்கொண்டு வரும் என்பது போல படிச்சுப்படிச்சு சொன்னாலும் கேட்காமல் ,என்னையும் இந்த காதல்க்காவடி எடுக்கவைத்தாய் கடைசியில் இப்ப நானும் உங்ககுடும்பத்தில் தலைகுனிந்து நிற்கும் நிலையைத் தரப்போகின்றாயா ?

உன் தங்கை சங்கவி என்ன செய்யப்போகின்றாய்? தம்பி விமலன் நிலை எல்லாத்துக்கும் மேல் உன் அப்பா இழுத்த குடும்பம் என்ற தேர் தெருவில் நிற்கவைக்கப்போறீயா ?எனக்கு உனக்கும் ,மிரூனாவுக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாது ?

நான் இருப்பக்கமும் நிற்கும் ஒரு நடுவர் போலத்தான் ஆனால் தீர்ப்பு சொல்லவேண்டிய நிலையை நீயும் மிரூனாவும் உருவாக்கிய நிலையில் என் தனிப்பட்ட ஆன்மீகப்பயணம் நெருங்கும் நிலையில் உன்னிடம் நான் கேட்பது நீ பதுளையைவிட்டு வெளியில் வா .

கொழும்பைக்கடந்து கொஞ்சம் வெளிவட்டமும் பாரூ உன்னை யார் யார் உண்மையில் நேசிக்கின்றார்கள் என்று தெரிந்துகொள்ள கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிடதே .

ஜனாதிபதி என்பது மக்கள் தேர்தலில்  தேர்ந்து எடுக்கும் நிலை என்றாலும் அந்த தகுதியை நாம் உருவாக்க வேண்டும் .அதுக்காக பின் கதவு வேண்டாம் கொஞ்சம் ஜோசி பாபு.

 நான் உன் நன்மைக்கு சொல்லும் தூய நண்பன் என்று எண்ணிணால் நீ நாளைக்காலையில் தேர் வெளிக்கிட்ட கையோடு ஊரைத்தாண்டிவா.

 இல்லையோ என்னையும் மறந்துவிடு நான் உங்கள் இருவருக்கும் தொலைபேசிக்கும் ,இணையத்துக்கும் செலவிடும் ஈரோப்பணமும் நேரமும்சரி இனி மிஞ்சும் .

எனக்கு நீங்கள் மட்டும் நண்பர்கள் இல்லை.

 என் ஆன்மீக வழிகளிலும் பலர் காத்து இருக்கின்றார்கள் புரிஞ்சுக்க! 

சாரிடா சேகர் எல்லாம் என்னால நீ கொஞ்சம் அமைதியாக இரு.

 உண்மையில் மிரூனா பாவம் நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டன் என்றாலும் அவள் கோபம் நியாயம் இல்லை சேகர் அதை அவள் புரிஞ்சுக்கிட்டாள் போதும்.

 எப்போதும் உறவுகள் கடந்து நான் நேசிக்கும் நீ இத்தனை தூரம் சொல்லும் போது நான் உன்னோடு கைகோர்க்கின்றேன்.

 அதுக்கு முன் அவளிடம் பேசணும் மச்சான்.

 இனி நீ அவளுடன் பேச இப்ப நல்ல நேரம் இல்லை காலம்  வரும் போது நானே பேசுகின்றேன் .
உனக்கு நல்ல காலம் பிறக்குது இப்பத்தான் காதர் பாய் செய்தி அனுப்பி இருக்கின்றார் முகநூலில் நீ முதலில் கொழும்பு போ!

 முக்கியம் யாருக்கும் ஏதுவும் சொல்லாத கொழும்பில் வேலை என்று மட்டும் சொல்லு .நான் நாளைக்கு பேசுறன் என்று தொடர்பைத் துண்டித்தான் சேகர்!


தொடரும்....


27 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-29

ஒரு இரவில் நடக்கும் சந்திப்புக்களும் ,ஆலோசனைக் கூட்டங்களும் .திடீர் மாற்றங்களை சிலரின் வாழ்வில் மாற்றிவிடும் என்பது சோழப்பேர் அரசன் குடந்தையூர் அரண்மனையில் நடந்த ஆதித்தசோழனின் மரணம் வரலாறாக இருப்பது போலத்தான் ! 

நாமலை  அறிமுகம் செய்துவைத்த ராகுல் அவனுடன் தாய்லாந்து போக வைத்தது. அவன் சகோதரன் என்ற பெயரில் அதுவும் அவனிடமே கடவுச்சீட்டை கொடுத்து ஓட்டியாக குடியகழ்வைவிட்டு வெளியேறி .

இலங்கையில் இருந்து தாய்லாந்து அனுப்பியதும் அதன் பின் அங்கிருந்து இன்னொரு ஐரோப்பியநாட்டுக்கு அகதியாகப்போவதுக்கு அவன் செய்த உதவி என்றும் மறவாது கல்வெட்டுப்போல 

. அன்று ராகுல் அப்படி எல்லாம் என் வாழ்க்கையை மாற்றி இருக்காவிட்டால் என் வாழ்க்கையும் நீதிமன்றமும் ,பாதுகாப்பு விசாரிப்பு , சிறைவைப்பு , என்று சீரழிந்து இருக்கும் . ஏதோ கெட்டதிலும் நல்லது போல நானும் பிரெஞ்சு நாட்டில் வந்த பின் அகதி அந்தஸ்த்து கிடைத்த பின் தான் மீண்டும் போரில் தோல்வி கண்ட போர் வீரன் மறுபடியும் போரில் வெற்றிவாகை சூடியது போல பாபுவுடனும் ,மிரூனாவுடனும் தொடர்பை எற்படுத்தியது.


. நான் காதலிக்கின்றேனா ?இல்லையா ?என்பதைக்கூட அறிந்துகொள்ளமுடியாத துரதிஸ்ரவசம் ஐராங்கனிக்கு .

நிர்வாக மேற்பார்வையாளர் என்ற வேலை பதவிகிடைத்து அவள் அரபுலகம் போனபின் நான் சிறையில் விசாரணை என்ற பெயரில் தொலைந்தேனா ?இல்லை இருக்கின்றேனா ?என சிலகாலம் நினைத்து இருப்பாள் ! 


ஐராங்கனிக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்றால் நீ ஒரு தொடர்பையும் இனிப்பேனாத சேகர் என்ற ராகுலின் வார்த்தையை தட்டமுடியாது. எனக்காக அவன் செலவு செய்த பணம் அதிகம் .அதுதான் அவளின் நட்பை துறந்தது இல்லை இன்றுவரை .


 ஐராங்கனி எனக்கு பலரைப்போல ஒரு நண்பி என்பதில் மாற்றுக்கருத்தை இன்றுவரை என் மனமும் சரி .மூளையும் சரி மறுதலிக்கவில்லை! 


ராகுல் மரம்போல வந்து எனக்கு நிழல்தந்தவன் .



நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பது போல அவனின் நல்ல நட்பு ,மச்சான் என்ற உறவு எல்லாம் என்னையும் திருத்தி இருக்கு . இன்னும் நான் திருந்த வேண்டும் அதுக்குள் இந்த மிரூனாவின் வாழ்வில் ஒரு நிலைமாற்றம் வரவேண்டும் .அதனால் தான் ஐராங்கனி மீண்டும் தாயகம் வந்து மேலும் சிலகாலம் தன் ஒப்பந்தத்தை அதிகரித்து சென்ற நிலையில் நம்பிக்கையான தோழி மிரூனா அவளிடம் என் புலம்பெயர் நிலைபற்றி ஒன்றும் இன்றுவரை பேசியதில்லை .


 அண்ணா என்ற உறவா ?நண்பி என்ற நிலையா ?என இருதலைக்கொல்லி நிலை மிரூனாக்கு என்பது நான் அறியாதது அல்ல .என்று மிரூனா நம் முதல் சந்திப்பு நினைவிருக்கா அண்ணா என்ற கேள்விக்கு சத்ரியன் படத்தில் நினைவு திரும்பிய ஹீரோயினி போல சேகரும் நிஜ உலகிற்கு வந்தான்! 


சரி மிரூனா கடந்தகாலம் இருக்கட்டும் இப்ப உன் கோபத்துக்கு என்ன காரணம் சொல்லு ?
 அவர் முன்னர் போல இல்லை அண்ணா !

அதிகம் கோபப்படுகின்றார் .செய்யும் வேலையில் ஒழுங்கில்லையாம் .அவரின் நிலைமாற்றம் பற்றி பாபுவின் நண்பர்களே என்னிடம் சொல்லுகின்றார்கள் .

 இந்த வாரம் வத்தளையில் ஒரு பார்ட்டிக்கு போய் இருந்தோம் பார்ட்டி முடிந்து வெளியில் வரும்போது ரொம்ப மோசமான வார்த்தைகள் பேசிட்டார் என் நண்பியிடம் சரியான அவமானமாகிப்போச்சு எனக்கு.

 நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்து கஸ்ர்ப்படுவதைவிட தனிப்பாதையாக பிரிந்தே போய்விடலாம் ஒரு வழிப்பாதை போல சேகர் அண்ணா .

எனக்கு என் தாதித்தொழில் போதும் என்னால் காலம் பூராகவும் சேவை செய்து கொண்டே எங்க அப்பா ,பாட்டியோடு மலையக மண்ணுக்கு ஒளிகொடுத்துக்கொண்டே வாழ்ந்துவிடுவேன்.! எனக்கு மனதைரியத்தை இந்த கொழும்பு நகரப்படிப்பும் ,உங்களின் பாசமும், கடமை என்ற குடும்ப ஆலமரத்துக்கு முன்னால் காதல் ஒரு வாழை மரம் என்று எப்போதும் உங்களைப்போல உதவிக்கு வரும் இன்னொரு ராகுல் அண்ணாவின் அன்பும் எனக்கு போதும் அண்ணா?

 சும்மா சும்மா கைபேசி அழைப்பு எடுத்து கஸ்ரம் கொடுத்து மனதில் வன்மத்தை வரவைக்கவேண்டாம் என்று பாபுவிடம் சொல்லிவிடுங்க .

 என்னைப் பொறுத்தவரை இனி பாபு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்க முடியாது நங்கூரம் இழந்த படகுதான் அவர் அண்ணா!

 மிரூனா கோபத்தில் வார்த்தைகளை ஆற்றில் தவறிவிழும் ஆபரணம் போல ஆக்கிவிடாத வாத்தையின் பெறுமதி அதிகம் புரிஞ்சுக்க. 

பாபு நிச்சயம் ஏதோ மன உளைச்சலில் இருக்கின்றான் என்றுமட்டும் புரிகின்றது. அவன் என்னிடம் செத்திடலாம் என்று சொல்லும் அளவுக்கு குழம்பிய குட்டை போல இருப்பதுக்கு காரணம் காதல் என்றால் ?

அந்த குட்டையில் பாபுவை தள்ளிவிட்ட நானே அவனை அந்த ஆற்றில் இருந்து அகற்றிவிடுவேன் . 

அதன் பின் "என்னோடு வா என்று சொல்லமாட்டேன் உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன் என்று நீயே சொல்லவைக்காத "


 சேகருக்கு கோபம் வந்தாள் காதலுக்கு சாமரமும் வீசுவேன் ,சாட்டையும் வீசுவேன் இப்ப நான் அடுத்த வேலைக்கு போகணும் அப்புறம் பேசுறன் மிரூனா... 


தொடரும்!


25 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-28

இனவாத நாட்டில் சட்டங்களும் ,சட்டசபைகளும் தமிழ்விடயத்தில் தீர்ப்புச் சொல்வது என்றாள் பாதுகாப்பு என்ற கொள்ளிட மலையைக்கடாக்காதவர்கள் தமிழர்  என்பது எந்த ஒரு படிக்காத பாமரனும் அறிந்த செயல் !

சட்டத்தின் பெரிய துறையில் இருக்கும் போதெல்லாம் தமிழர் என்ற நிலையை மறந்தவர்கள் .அந்திம காலத்தில் மக்களுக்கு சேவை ,என்றும் நாட்டில் இன்னும் சட்டம் சீர்குழைந்துவிட்டது என்று வெள்ளவேட்டி கட்டி சிம்மாசனம் தேடும் கூட்டம் எல்லாம் சிந்திக்க மறந்தது .


சிறையில் வாடும் அப்பாவிகளின் வாழ்விற்கு விரைந்து தீர்வு சொல்லாமை. 


என்ன சொல்லியும் இந்த நாட்டில் சந்தேகமும் ,இராணுவ தலையீடல்களும் .இன்னும் எத்தனையோ அப்பாவித்தமிழர்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் சிறைக்கதவுகளின் பின்னே விழியில் வலியைச் சுமக்கின்றகதைகள் எல்லாம் வரலாறக எழுத்தில் வடிக்கவேண்டும் .

இது எல்லாம் உன் நாட்குறிப்பில் எழுதிவை மச்சான் சேகர் .என்று பிணையில் விடுதலையான நண்பனை கொழும்புக்கு அழைத்துச்சென்று கொண்டு இருந்த போது ராகுல் சொல்லிய விடயம் .

இந்த 7 மாதம் வெளியுலகை பார்த்து ரசிக்கவில்லை பல திரைப்படம், நல்ல நாவல் ,முக்கியமாக நல்ல இசை எதுவும் ரசிக்கவில்லை சேகர் !
.

அவன் விழிகள் பிந்துணுவெவ  சம்பவம் பற்றி சஞ்சிகையில் வராமல் பலர் மறந்த விடயம் போல அகிவிட்டது. பிரபல்யமான சினிமா நடிகை திருமணம் முடித்தவுடன் சினிமா வாழ்வு தொலைவது போல !


இனி விற்பனைப்பிரதிநிதி வேலை எப்படி இருக்கும்? பண்டார சேர் என்ன செய்வார்? யாரிடம் போகலாம் !இப்ப  நம் விதியை குருமாற்றம் மாற்றிவிட்டதே!

எவ்வளவு காசு செலவழிச்சான் என்று இன்னும் ராகுல் சொல்லவில்லை. ஐராங்கனி என்னையும் சந்தேகித்து இருப்பாளோ?

 என்ன இருந்தாலும் இந்த இனவாத உணர்வு ஒரு வைக்கோல் பற்றையில் ஒருதுளி நெருப்பு வைப்பது  போல விரைவில் பற்றிவிடும் சுடர் ஒளியாக எது எப்படியோ !

வெளியில் பிணையில் விட்டுவிட்டார்கள் உயிருடன் என் கண்முன்னே நீ புலிதானே ?என்று அந்த புலனாய்வு அதிகாரி அடித்த அடியில் உயிர்போன அந்த சக கைதியின் முகம் இன்னும் ஞாபகம் இருக்கு மனதில்.

என்ன மச்சான் ராகுல் நீ கொழும்பு போறாய் என்றாய் இப்ப நாம் வரும் வான் கட்டுநாயக்கா நெருங்குகின்றது!  எங்க போறம் ராகுல்? ஏன்டா உனக்கு என்ன தெரியும்? நீ நாட்டைப்படிக்காதவன் முதலில் இனவாத நாட்டைப்பற்றி தெரிந்து கொள்ளு .

 வெளியில் வந்த உடன் காற்று அழகாய் வீசிச்சா? அதுதான் என் நண்பன் மூலம் உன்னை தாய்லாந்து அனுப்புகின்றேன் .கொஞ்சம் மசாஜ் கிடைக்கட்டும் என்று! ஆமிக்காரன் கொடுத்த ஒத்தடம் கொஞ்சம் வலி குறையட்டும் என்று ! உன்னோடு வருவது எல்லாம் சகோதரமொழி நண்பர்கள் .என்  பல்தேசிய கம்பனி சுற்றுலாக்குழு அவர்களுடன் ஒன்றாகப் போகும்  நீ சிங்களமொழியே பேசு .

தாய்லாந்து போனபின் அங்க ஒரு பார்ட்டி வரும் அப்புறம் பேசுகின்றேன் .எல்லாம் தெளிவாக சரியா! சேகர் .

 இந்தா கடவுச்சீட்டு சரி மச்சான் மீண்டும் சந்திப்போம் .

அந்தா நிற்கின்றான் நாமல் அவனிடம் எதுவும் பேசாத கேட்டாள்  உன் பெயர் ஜீவன் என்று சொல்லு! 

ஏன்டா ராகுல் நீ இப்படி திடீர் திடீர் என்று முடிவு எடுக்கின்றாய் !
நானா போடா சேகர் எங்காவது   போய் உயிரோடு இருக்கும் வழியைப்பாரு.இது நம் கஸ்ரகாலத்தின் இன்னொரு தொடக்கமாகவும் இருக்கலாம். ஒரு கப்பல் பயணம் போல யாரு கரை சேர்வார்கள் எல்லாம் சமுத்திராஜன் கையில்!



தொடரும்.....

24 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-27

மனித உரிமை ஆணைக்குழுக்களும் ,காணாமல்போவோர் கண்காணிப்புக்குழுக்களும் கண்டுபிடிக்காமல் போன் உயிர்கள் அதிகம் கொண்டதேசம் இந்த இனவாத நாடு! 

சித்திரவதைகள் ,விசாரணை என்றபெயரில் வெளியிடாமல் வீணாக மாண்டோரின் விடுதலை எல்லாம் எழுத வேண்டிய நாலாவது தூணாம் ஊடகம் என்ற துணையும் §

பயங்கரவாததுக்கு துணைபோகும் கைக்கூலிகள் என்றும் அரச விளம்பரம் கிடைக்காது என்ற விளம்பர மிரட்டல் மூலமும் ,மீறினால் இனம்தெரியாதோர் தாக்குதல் என்று குண்டர்படையை கூப்பிட்டும் குழப்பம் தரும் ஆட்சியின் மகிமையில் ஊடக ஆசையே வேண்டாமென்று ஓடியோர் உலகு எங்கும் அடைக்கலம்கோரி  வாழ்பவர்களையும் அழைத்து வாருங்கள் என்று சட்டம் கேட்கும் இன்றைய அரசின் நிலையை என்ன சொல்வது !

விட்டில் பூச்சி விளக்கைத் தேடுமாம் மரணத்துக்கு வழிகாட்ட !படித்தவர்கள் எல்லாம் சில நேரத்தில் புத்தி மாறுவார்கள் தம் நிலை கடந்து பாசத்தில் அது போல நீ முட்டாள் உன்னையார் விடுப்புபார்க்க பிந்துணுவெவ போகச்சொன்னது? அதுவும் விடியலக்காலைநேரம் விறபனைப்பிரதிநிதி வேலை தொடங்குவது 9 மணிக்கு!

 அந்த நேரத்திலும் கோப்பி குடித்து கழுத்துப்பட்டியை சரி செய்து முகத்தை அலங்கரித்த பின் தான் முதல்க்கடைக்கு முழுசுவளம் நல்லதாக இருக்க வேண்டிக்கொண்டு முதல் பில் போட வேண்டும் .அப்பத்தான் மாதமுடிவில் விற்பனை விகிதம் உயர்த்திக்காட்டமுடியும் !சுறா படம் ஹிட்சு இத்தனைகோடி என்று !

இது எல்லாம் தெரியாத நீ இந்த விற்பனை தொழிலுக்கே படிக்காதவன் ,லாய்க்கு இல்லாதவன் நீயடா! 

உன்னை இப்படிச்சிறையில் 7 மாதங்கள் கடந்து பலசிறையில் தேடி  அலுத்து கடைசியில் போகம்பரையில் சந்திக்க வைத்தது என் பாட்டி பங்கஜம் இன்னொரு பேரனுக்கு நீ தான் ஆலமரமாக உதவணும் என்ற பாசப்போராட்டமும் .

உன்னையே விரும்பி ,உனக்கு என்ன நடந்தது என்று தவிக்கும் ஐராங்கனியும் தான் என்னை இங்கு அனுப்பியது .

 என்று பார்வையாளர் என்ற பேரில் பார்க்க வந்த சேகரிடம் சொல்லி முடித்தான் ராகுல்! சந்தேகச்சிறையில் இலங்கையில் புலிகள் என்று சிறையில் இருப்போர் பட்டியல் ஊடகத்தில் எழுதவெளிக்கிட்டாள் உன்னால் முடியாது மச்சான் சேகர். 

ஊடகம் என்பது பலரை சந்தோஸப்படுத்த வேண்டும் அது ஒரே திசையில் பயணிக்க இது பென்னியின் செல்வன் நாவல் இல்லை .

உன்னால் உன் வழியில் போக முடியுமா ?இல்லை அந்த பண்டாரசார் ,அவரது தங்கை ஐராங்கனி ,இல்லை பாபு ,இல்லை மிரூனா என பலரை பற்றி சிந்திக்கவேண்டும் . 

இப்போது உன் பக்கம் இருக்கும் ஒரே தேர்வு நீ ஒரு சுயநலவாதி யாரும் அறியாவண்ணம் இந்த நாட்டுச்சட்டத்தில் இருந்து வெளியில் வரவேண்டும் .அது கைதி தப்பி ஓட்டம் என்ற பெயரில் !வேண்டிய செயல் எல்லாம் பண்டாரசார் செய்து விட்டார் . நீ நீதிமன்றம் வா உனக்கு எல்லாம் புரியும் எல்லா சிங்களனும் இனவாதி அல்ல !புரிந்து கொள் ! 


இப்போது ஐராங்கனி அரபுலகம் போய் ஒரு மாதம் .அவளை அனுப்பியதும் நான் தான் . எப்போதும் காதலுக்கு ராகுல் வில்லனாகவே ராகுல் இருந்து போகட்டுமே நாளை மறுநாள் கண்டி நீதிமன்றத்தில் சட்டதரணியுடன் சந்திக்கின்றேன். என்று விடைபெற்றான் உயிர் நண்பன் சேகர் அறிந்தாலும் பதுளை நண்பர்கள் வெறுத்த ராகுல் !


உலகம் சுற்றுவதுபோல உணர்ந்தான் சேகர்! 






தொடரும்!!!



23 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-26

மக்களுக்காக .மக்களின் அபிவிருத்திக்காக தாய்நிலத்திற்காக சேவை செய்கின்றோம் என்று மாகாணசபைத்தேர்தலிலும் ,பாராளமன்றத்திலும் வேட்டிகட்டியும் கேட்டுப்போட்டும் கதிரையில் குந்தியிருக்க கூப்பாடு போட்டும் கோமாளிகள் எல்லாம் .

குறிப்பிட மறந்த ஒருவிடயம் தேசியத்துக்காக தோள்கொடுத்தோரம் இனவாத சந்தேகத்தில் சங்கிலிப்பிணைப்பாக விலங்கிட்டு, விசாரணையில்லாமலும் ,விடுதலையில்லாமலும் ,விதியையையும் ,சதியையும் ,எண்ணி வாழ்வு இழந்து .வாலிபம் இழந்து ,வாடியிருக்கும் சிறைக்கைதிகளின் சந்தோஸ விடுதலையை சற்று ஓங்கி உரைக்காமல்!

 இந்தியாவுக்கு உடுக்கடிக்கின்றோம். கனடாவில் கொடிபிடிக்கின்றோம் என்று ஊடகத்துக்கு ஊறுகாய் போட்டும் கூட்டம் .

நம் தேசத்திற்கு கிடைத்த சாபம் !!


சட்டம் தெரிந்தவர்கள்,சாமாதான வேடத்தில் சர்வதேசம் பார்த்தவர்கள் எல்லாம் பார்க்க மறந்தது. இலங்கையில் பல சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை இந்த பயங்கரவாதம் என்ற சொல்லின் பின்.

 சிங்கள் இனவாதம் சீரழித்த தமிழர்களின் இரத்தவாடையில் இறந்து போன யுவதிகள் ,ஆடவர்கள் ,குடும்பத்தலைவர்கள் ,தலைவிகள் பற்றி எல்லாம் பரபரப்பாக எழுதவேண்டிய ஊடகம் எழுதியது எல்லாம் அயல்தேசத்து நடிகர் வருகையையும் ,நடிகை வருகையையும் ,கேட்டாள் சினிமா சூட்டிங்க தான் இங்கே இப்ப முக்கியசெய்தி என்று  சொல்வார்கள் கேட்டாள் அனுபவஸ்தர்களாம்!


 முன்னம் எழுதிய விதியோ ?இல்லை ஊடக ஆசையோ ?முந்திச் செல்ல சேகரும் ,நண்பணுடன் சேர்ந்து  பிந்துணுவெவ சென்றநிலையில் ஊடங்கள் என்று படம்பிடிக்க வருவோர்களுக்கு .காடையர்களும் ,இனவாத இராணுவமும் ,உதைகொடுத்துக்கொண்டு இருந்தார்கள் இதுதான்  அன்று நடந்த நிஜம் .

அதை படம்பிடித்த என் நண்பன் ராஜுவும்  தாக்கப்பட்டான்.உள்ளூரில் இருந்த பொலிஸ் சட்டத்தை பாதுகாக்கவேண்டியவர்கள் காத்துக் கொண்டு இருந்து காடையர்களின் அட்டுழியம் கைமீறி எங்கே தங்கள் பதவி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அன்றி வேறில்லை.


. நீண்ட நேர கலவரம் முடிந்துவிட்டது என்று ஊடரங்கு சட்டம் போட்டுச் சொன்னாலும் பலர் வீதியில் அடிபட்டும் .உயிர் பிரிந்தும் போன நிலையில் உதவிக்கு பதுளையில் இருந்து வந்த இராணுவமும் ,பொலிசும் வீதியில் பலரை கேள்வி இன்றி தமிழர் என்ற காரணத்தாள் கைது செய்து கொண்டுபோனது .

பதுளைச்சிறைக்கும் ,கண்டியில் இருக்கும் போகம்பரை சிறைக்கும் விடுப்புப் பார்க்கப் போன சேகருக்கும் வேலியில் போன ஓண்னை வேட்டியில் பிடித்துவிட்ட கதை போல விடுதலைப்புலிகள் உளவாளி என்ற பட்டத்துடன் விலங்கிட்டது .

இனவாத இராணுவம் எத்தனை  தரம்  சேகர் விசாரணையில் நான் ஒரு விற்பனைப்பிரதிநிதி பல்தேசியக்கம்பனியின் ஒரு ஊழியன் இது நிஜம் என்று சொன்னாலும் ஏறாது இராணுவத்துக்கு இருப்பது அதிகம் போதையில் தானே !இனவாத காற்றில் இருந்து கொள் சில மாதம் விசாரணை இன்றி என்று அனுப்பிய இடம்தான் போகப்பரைச்சிறை .

விசாரணைக்கு கூப்பிடவும் இல்லை .விடியல்காலை பேப்பரும்  வரவில்லை வெளியார் பார்வையாளர்களாக வருகையும் பதிவு இல்லாமல் இருந்தான் சிறையில் சேகர்!

.தொடரும்.....

22 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-25


                                       

, இந்தத்  தொடருக்கும் தனிமரத்துக்கும் தொடர்பும் இல்லை என்பதனை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
   நட்புடன் தனிமரம் நேசன்!
///

அதிகாரம் இல்லாத மக்கள் குழுக்கள் சிலரை அதிகாரம்மிக்கவர் போல காட்டி வெடிகுண்டு மிரட்டலும் ,காடையர் தாக்குதலும் ,கைகுண்டு வீச்சும் செய்வதன் ஊடாக ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதில் அரசியல்வாதிகள் ஆனந்த சுகம் பெறுகின்றார்கள் .

தங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் தம் சக்தி மீறி அரசியல் வடிவம் பெறும்போது அதனை முறியடிப்பதில் தலைவா என்ன தர்மம் சரணம் கச்சாமி என்ற புனித வார்த்தையை .

தாம் புகழ் பெற வேண்டி தம்போதனாவா என்று அரசியல் செய்ய வெளிக்கிட்ட தரங்கெட்ட புத்த பிக்குகளையும் தம் ஆளுமைக்குள் கொண்டுவர முயன்ற காட்சிகள் இனவாத இலங்கையிலும் இதிகாசமாக இருக்கின்றது .

இப்படித்தான்  மூவின மக்களும் சேர்ந்து வாழும் மலையக மண் பண்டாரவளையும் முன்னர் ஜே ஆர் ஆட்சியில் ஆடிக்கலவரம் கடந்து மறந்து போய் மறுமலர்ச்சியாக இருந்த சமூகத்திலும் சப்புமல் குமார மறுவடிவம் என்று வில்லும் ,வாளும் இலட்சினை போல சூடிய மக்கள் குழுவாக மலர்ந்த குழுத்தான் வீரவித்தான என்ற இயக்கம்.

 இந்த இயக்கம் நாளடைவில் இந்த பண்டாரவளை நகரத்திலும் பலம்மிக்கதோர் அமைப்பாக மாறியதில் பதவியில் இருந்த ஆட்சியாளர்களின் ஆலவட்டமும்,

 அதிக செல்வம் குவிந்த ஆபரணக்கடை ஒன்றின் பின் புலமும் அந்த நாட்களில் அவர்களுக்கு உந்து சக்தி  இது பல ஊடகத்தவர் அறிந்த உண்மை.அந்த சிங்கள இனவாதம் 

தமிழர் இரத்தம் குடிக்க பல காடையர்கள் ஒன்று குவிந்த இடம் தான் பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாம் .இந்த முகாமில் புலிகள் என்று இராணுவம் சந்தேகித்தவர்களுக்கும்  அப்பாவிகளாக தண்டிக்கப்பட்ட பலர் இருந்தார்கள்!


அந்த முகாம் இருக்கும் தொலைவான வழியில் இருக்கும் பல கடைகளுக்கு வாரம் ஒரு முறை வரும் வார சஞ்சிகைபோல  இந்த பிந்துணுவெவ பாதையோரமும் பல பக்கம் போய் வருவது விற்பனை விநியோகம் செய்வது பல விற்பனைப்பிரதிநிதிகளின்  தொழில் .

இந்த வீதிக்கு வழமையாக போவது போல காத்திருந்த போதுதான் அதிகாலையில் அந்த கயவர்கள் அப்படி ஒரு துயரத்தை தமிழர் மீது கட்டவிழத்து விட்ட செய்தி கேட்டு .



தன்  நண்பனும் ,ஊவா சமூகவானொலியில் ஒரு செய்திச் சேகரிப்பாளனாக இருந்த மலையக நண்பணுடன் .


ஐராங்கனி தடுத்தும் விளக்கு விட்டில்ப்பூச்சியை வா என்று அழைக்கும் கலங்கரைவிளக்கோ கப்பலை கிட்ட வராதே என்று கூறும் அதுபோல இனவாதம் தமிழர் என்றால் சந்தேகிக்கும் புலி என்று .



நீ போகாதே சேகர் உனக்கு இது கஸ்ரகாலம் அவள் பேச்சு கேளாமல் நேரில் பார்க்கச் சென்றான் சேகர்!


தொடரும்....
!