30 August 2014

முன்னோட்டம்

பூக்கள் தந்தேன்
புன்னகை தந்தாய்
காதல் தாலி தரவந்தேன்
கண்டுகொள்ளாமல்
சென்றாய் கையில்
காசில்லாதவன் நானோ!



/////////////////////

கண்டதும் கை பிடிக்க
காதலுடன் ,கவிதையும்,
கதையும் ,சொல்லிக்
காத்திருந்ததும்!
காணமல் போனதும்,
கடல் கடந்து ,
காவல்ச்சிறைக் கைதியானாலும்
கண்ணீரில் கரைந்த 
காலம் ஒரு 
கனாக்காலமா ?
காதலியே கையில்
கவி எழுத 
கம்பிகளின் பின்னே
காளை ஒருவன்.
காத்து இருங்கள்
கதை பேசுவோம்!
                              !!!!!!!!!!!!
.....................................

20 August 2014

ஏன் பிரிந்தாய்!!!!!!!!!!!!!!!!!!!!!

புலம்பெயர் தேசத்தில் இருந்து பொருளாதார நெருக்கடி ஒரு புறம், பொறுத்தமான தளம் இன்றி இன்னொரு புறம் இன்னலுடன் இருக்கும் கலைஞர்கள் .

தங்களின் ஆத்ம திருப்திக்கு வடிகால் தேடும் கலைப்படைப்புக்களை தொடர்ந்து வெளியீடு செய்தவண்ணம் இன்றும் இருக்கின்றார்கள் .

அந்த வகையில் இறுவட்டுக்களின் (CD/AlBAM) மூலம் இதயச்சுமையை இறக்கி இணையத்தின் துணையுடன் இன்று அடுத்த தலைமுறையினர் முன்னேறிச்செல்வது பாராட்ட வேண்டியவிடயம். 

அந்த வகையில் இந்த வாரம் சுவிஸ் தேசத்தில் இருந்து வெளிவந்து இருக்கும் இந்த ஒலி/ஒளிக்காட்சி நெஞ்சை உருக வைக்கின்றது .

இதமான இசை ,இனிய கவிவரிகள், இமையை உறுத்தாத காட்சி அமைப்பு ,இயல்பான நடிப்பு  ,இன்னும் காதல் ததும்பும் பாடல் . 

இதில் பங்கு பற்றிய கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
                                  

தொடரட்டும் உங்கள் இசை ஆர்வம்.


நீங்களும் ரசிக்க இங்கே-Music: Chris G. | Singer: S. Nerujan | Lyrics: Tharcicha S. | Violin: S. Nerujan | Composed: Chris G. and S. Nerujan | Cast: Laveen Sinnarajah | Suvetha Segar | MJ Jahee | Sudharshan S. | Piano: Chris G. | Singer: S. Nerujan | Cinematography: Blackscreen | Editing: J’ash Cinematics | Produced: Chris G. Musical



16 August 2014

கவிதை போல கானம்.

கைதொழும் பீடத்தில் கண் எதிரே
 காதலி போல கண்டு கொண்டேன் அன்று
 கடவுளுக்கு சூட்டும் பூமாலை போல 
கவிதைகள் பாமாலைகள் கடிதம் போல
 கையெழுத்தில் கனத்த இதயத்துடன்
 கவி வடித்து
 கையில் தந்தேன் உன்னிடம்!
காத்திருக்கவா ?
கடந்து போகவா? 
கடிந்தும் கண் இமைக்காமல் 
கடந்து சென்றாய் கல்வி என்று!
 கவிதையில் கண்ணீருடன்
 கதை என்றும் 
காணல் போல நீ என்றும்
 கற்பனையில் கல்வெட்டாக
 கையில் கலர்ப்படம் தீட்டியதும்
 காதலில் அன்றேல் உன் 
காசுக்காக அல்ல !!

கல்லாதவன்  இன்று
 கடந்த ரயிலில்
 கண்டேன் !
 கடந்த காதலியாகா!
 கைதொழும் பீடம் கடக்கும் வழியில்!



கண்ணீர் சிந்தும் உன்
 கடந்த கால நினைவுகள்! 
கட்டையிலும் வேகாதடி!  
கண்ணே உன் சமையல் அறையில்
கண்ணாடி  உப்பாக நானாக ஆசையில்!
////////////////////////////////
பூக்கள் தந்தேன் புன்னகை தந்தாய் !
காதல் தாலி தரவந்தேன் 
கண்டுகொள்ளாமல் சென்றாய்
 கையில் காசில்லாதவன் நானோ!


14 August 2014

எனக்கு ஒரு கவலையும் இல்லை!!!!

கர்நாடக சங்கீதத்தின் இசைக்கோர்ப்பிள் இன்று வரும் தென் இந்திய சினிமா பாடல்களை விரல்விட்டு கணக்கிடலாம் .சினிமா காலமாற்றம்(டிரெண்ட்) அதிக சங்கீதவித்துவான்கள் கதையை மறந்துவிட்டது 

.சங்கராபரணம்,சலங்கை ஒலி,காதல் ஓவியம், சிந்து பைரவி ,மோகமுள்,வில்லுப்பாட்டுக்காரன், என சினிமாவில் சங்கீத இசைகள் சம்மந்தப்பட்ட கதைக்களம் கண்டு ரசித்த ஒரு தலைமுறை நாமாகத்தான் இருப்போம்!

 இன்றைய நவீன இசைப்போக்கு அதிகம் பாடல்களை அதிக நாட்கள் கேட்கும் ஆசையைத் தூண்டுவதில்லை என்பது என் கருத்து இது கால மாற்றமாக இருக்கலாம் :)) 

வானொலியில் புதிய பாடல் அறிமுகம் செய்வதில் ஒரு காலத்தில் இலங்கை தனியார் பண்பலைகள்,சிற்றலைகள் போட்ட போட்டியில் அறிவிப்பாளர்களின் தராதர பஞ்சு வார்த்தைகள் சீமான் போல இடம் மாறி இடம் சேர்ந்து அடித்த கூத்துக்கள்  இலங்கை வானொலி நேயர்கள் நன்கு அறிவார்கள் .



 இன்று இணைய வானொலிகள் இதைப் பின்பற்றி தாமே முதல்வன் என்று இன்று ஒலிக்கவிடும் புதிய பாடல்களின் இசைத்தேர்வை ஒரு வானொலியில் இந்த வாரம் கேட்கும் சூழ்லில் என் நெஞ்சைத் தொட்ட பாடல் இது .நீங்களும் ரசியுங்கள்.

12 August 2014

வாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு!!!!

அன்பான நண்பனே செளக்கியமா? 
இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். !
 கடல்கடந்து என் வாழ்த்துக்கள்

. நீ என்றும் சந்தோஸமாக இருக்க வேண்டி பொதுவான இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

 இளமைக்காலத்தில், இனவாத யுத்தத்தில் இடம்பெயர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் ,இன்னொரு இடம் வவுனியா வந்த போது உன்னை நான் சந்தித்தேன் .!

 நீயும் அழகானவன். அன்பாக என் தோழில் கைபோட்ட நாட்களில் உன் கண்ணில் எதிர்கால இலட்சியம் எம்மையும் ஒரே கூடையில் சுமந்தன . இருவரும் பள்ளிக்கு ஒன்றாக நடப்பதும், வெளியேறும் போது இணைந்தே வருவதும் , இதைப்பார்த்து மற்றவர்கள் நக்கல் பண்ணியது இன்னும் காதில் ஒலிக்கின்றது! 

வீதிகளில், நூலகங்களில் ,திரையரங்குகளில் ,என்று நீயும் நானும் ஒரே தடத்தில் பயணித்த இசை போல இருந்தோமே! 

இனி எல்லாம் சுகமே என்று உயர்தரம் வந்த போது மட்டும் எம்நட்புக்குள் எத்தனை எல்லைதாண்டிய உறவாகி எப்போதும் குடும்பம் முக்கியம் என்ற நோக்கில் இளமைக்கால பருவ மாற்றத்திற்கு எல்லாம் மடைதிறக்காத கதவு போட்டு மாணவர்தலைவர்கள் என்று நீயும், என் மற்ற நட்புக்களும் மேலே ஏறிய போதெல்லாம் ஜாலியாக இருந்த போது இயம்பினாயே .

 உனக்கும் கிடைத்து இருக்க வேண்டிய மாணவர்தலைமைப்பதவியில் பிரதேசவாதம் குறுக்கீடு செய்கின்றது .

பொருளியல் ஆசிரியர்தான் தலைமைகளை தேர்வு செய்வதில் பொறுப்பாசிரியர் என்று! அப்போதும் அறிவேன் .வடக்கும் தெற்கும் போல அரசியல் பேதம்

. அதைவிடுடா பதவி வேண்டாம் முன்னுதாரணம் சொல்லும் தகுதியில்லை எனக்கு என்று அடுத்த காட்சிக்கு போவோம் என்று பார்த்த திரைப்படம் இன்னும் கோகுலம் .காதில் ஒலிக்குது பாடல். 

அடிக்கடி சொல்வாய் நீ வில்லன்டா என்று சிரித்து ,சிலிக்கும் போது அப்பாஸ் போல தலைமுடி வெட்டு புகைப்படக்காட்சியில் பதிவாக பத்திரமாக:)) 

உயர்தரம் முதல் ஆண்டு முடிந்து இரண்டாவது ஆரம்பத்தில் மன்னாரில் இருந்து ,இடம்பெயர்ந்து வந்த இஸ்லாமிய தோழிமீது ! இதயம் துடிக்கு காதலின் நோய் என்ற போதுதான் இருதுருவங்கள் ஆனோம் நட்பிள் நாம் !!

 அன்று இடித்துரைத்தேன் இது காதல் வரும் காலம் அல்ல என்ற போது காதலுக்கு மரியாதை செய் அவள் ஷாலினி போல என்றாய் . சப்பைப்பிகர் என்றேன்

! சட்டையைப்பிடித்தாய் முதல் முறையாக சினிமா ஹீரோ போல்

. சிலர் நட்புக்கள் சூழ்ந்துவிட சீ பேசாதே நீ மதவாதி என்றாய். 

பேசினேன் "மதவாத தீயில் உன் காதல் மலராத மொட்டாகும் மனசை அலைபாயவிடாதே " மாணவன் முன்மாதிரி மகிமைகெடாதே என்று நினைவு மறைக்காமல் இன்னும் நீயும் அறிவாய் .

 ஈகோ வந்ததால் இருக்கும் இடத்தைவிட்டு அகன்றுவிடும் அடிச்சுவட்டை உன்னிடம் கற்றேன் . மரியம்பீவியை நினைத்து நீ சேர்த்த பாடல் ஒலிப்பேழைகள் என்னுக்கும் பிடித்தவை.

 என் தமிழ்பாட நவீனகவிதைகள் உன்னவள் காதல் கவிதைத் திருட்டாக மரியம் உன்னிடம் சேர்த்தவைபெல்லாம் பார்த்து ரசித்தேன் அருகில் இருந்து .

 நம் நட்புக்கு இடையில் இன்னொரு நட்பு நடுவிள் ஒரு கதிரை போட்டது நாம் அவணுக்கு பொதுவான நட்பாக இருந்தோம்!

 மதவாதி நீ என்று சொல்லிய சீண்டல்கள் எல்லாம் சொல்லாத காசு அன்று போல இன்றும் மதங்கள் கடந்து என் முகம் சொல்லும் முகநூல்கள் நட்புகள் நீயும் பார்க்கின்றாய்.


. நீ பம்பாய் படப்பாடல் உயிரே உயிரே என்றதும். என்னைத்தாலாட்டவருவாளா ??என்ற போதெல்லாம்! நந்தவனமே நந்தவனமே நன்றிச்சொல்லிப்போகின்றோம் என்று ஜாலி படப்பாடல்தான் என் தேர்வில் இலங்கை ஒலிபரப்பிள் அடிக்கடி ஒலித்ததும் நீ அறிவாய்.

 உயர்தரப்பரீட்ச்சை முடியும் முன்னரே மதவாதத்தீ காதல் வேண்டாம் மார்க்கத்தின் வழியில் நெறி மரியம்பீவியை இடம்பெயர வைத்ததும்!

 நீ மனம் உடைந்து பரீட்சையை சிறப்பாக செய்யாததும் ,குடும்பங்கள் சிந்திய கண்ணீரும் நீ அறியாய். 

உனக்கு இளமையின் ஈர்ப்பு பெரிதென இருந்தாய்.


 என்னால் முடிந்தது என்னையும், என் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பரீட்சையில் எந்தச்சிக்கலும் வராமல் எழுத நினைத்தேன்.

 நீயே அறிவாய் நம் நட்புக்கு மதவாதிகள் மரக்கட்டைகளுடன் தேடியகதைகள் மறுக்கமுடியுமா உன்னால்??அன்றும் இன்றும் ! மணந்தாள் அவள் என்று மல்லாக்கப்படுத்து துப்பிய் எச்சில்கள் காய்ந்து இருக்கலாம்! மதம் விடாது என்றேன்அன்றும் .


அதுதான் இன்றும் பலித்தது. நீங்கள் இன்று இருவேறு பாதையில் .நானோ எங்கோ ஒரு மூளையில் .

நீண்ட வருட காலத்தின் பின் என் முகநூலில் நட்பு என்று மீண்டும் வந்தாய் நினைவு திரும்பிய ஆனாஸ்ராஜ் விஜய்காந்த் படம் போல  நட்பாக.

 இடையில் எங்கே போனாய் என்றாய்!

" இல்லை மச்சான் சொந்த ஊர் போய் இருந்தேன்! தொடர்புகொள்ளும் வசதியில்லை என்றேன் பொய் சொன்னேன்"

 சந்தேக புலிக்கதையில் இருட்டறை கதை எல்லாம் பகிர்ந்து உன்னை சங்கடப்படுத்தும் அற்ப ஆறுதல் எதற்க்கு என்று!

 எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு வந்திருக்கு எதுக்கும் பல ஆயிரம் ஈரோ அனுப்பு என்று கேட்டாய்.

 என் நிலை புரியமறுத்தாய் வெளிநாட்டில் காசுமரம் என்னிடம் இல்லை கொஞ்சம் காலம் பொறு என்றேன்.

 இடையில் என் கதை எல்லாம் ஒரு தலைராகம் போல சோகத்திலும் சிரிப்பு என் இருப்பானது முகநூல். தந்தியில்லா அலை என்று . நீயோ சரியான துரோகி என்றாய்!

 பல ஆயிரம் ஈரோ போய்  சில ஆயிரம் ஈரோவில் இப்ப கொடு என்றாய் பின் ஒரு வருடத்தில்!


 சிறுதுளியாக சேமித்ததும். சீட்டுக்கட்டாமல் போனதும் சிந்தித்த வண்ணம் சீட்டுக்கம்பனி போல  சீக்கரம் அனுப்பினேன்! 

 முகநூலில் கிடைத்தது என்றாய் மறுவாரம் !மீண்டும் வரவேயில்லை முகநூல்ப்பக்கம் காத்து இருக்கின்றேன் வெட்டியாக இன்றும் உன் பார்வையில் முகநூல் வெட்டியாமே!ம்ம்

நீ சகோதரமொழி நங்கையை கைபிடித்த செய்தி ஏனோ சொல்லாமல் விட்டாய். இன்னொரு நட்பு உன் திருமணப்புகைப்படத்தோடு வாழ்த்தும் சொல்லியது முகநூலில்.

 நண்பனுக்கு பாவற்காய் போல ஆகிவிட்டேனோ என்று பார்த்ததும் நினைத்தேன்!

 பருவாயில்லை பல நட்புக்கள் எனக்குண்டு இழந்தவை எதுவும் பெரிதில்லை என் திமிருக்கு முன்னே என்று என்னை அறிந்த இன்னொரு நட்பு நேற்றும் சொல்லியது!

 இன்று நீ என்னை மறக்கலாம்!  நான் உன்னை மறக்கவில்லை.13/8/0000!


 உன் முகவரியால் இலங்கை வானொலியில் வலம் வந்த என் கவிதையின் சந்தோஸ நாட்களின் முன் சிலஆயிரம்  ஈரோ அடுப்பிள் எரிந்த ஆட்டின்  கொழுப்பு போல என்றாலும் நீ என் நண்பனே!! காத்து இருக்கின்றேன் முகநூலில் வரும் நாட்களுக்காய்!


யாவும் கற்பனை!!!


//////////////////////////////////
பதிவர் சிட்டுக்குருவி என்று தனிமரம் நட்பிள்  வந்து பின் ஆத்மா என்று வலம் வரும்   சகோ இம்ரான் மோஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . 




08 August 2014

என் நட்புக்கு வாழ்த்து.

இனிய நண்பனே!!

 இன்று உன் வாழ்வில்
இன்னொரு சிறப்பு நாள்!9/8/...

இன்நாளில் உன்னோடு
இணைந்து இணைந்த கைகள் போல
  இலங்கையின்
இனிய வீதிகளில்
 இருவரும் பிதாமகன் போல
இயல்பாக இருக்கும் நிலையில்லா

இந்த இனவாத நாட்டின் நிலை.
இடையில் நம்மையும் இருகோடு
இருட்டறை   என்று இழுபட்ட
இன்னல்கள் எல்லாம்
இன்னும் எழுது  என் தோழா
இனி நீ தனிமரம் பாரிசில் என்றாயே!


இந்த நிமிடம் வரை உன்  வார்த்தைகள்
இறுவட்டுக்கள் போல  இவன் தொடர்களில்
இன்றும் நீ போட்ட இந்த தலையங்கம்
இனியும் அச்சில் வருமா??
இது உன் பொறுப்பு நண்பா!


இந்த நன்நாளில் உன்னிடம்
இவனும் நட்பிள் கடனாளிதான்!
இந்த வேசமான உலகில் உன்னால் மட்டும்
இயல்பான என் குணம். இரக்க நிலை
இது எல்லாம் அவன் இயல்பு
இலங்கை தாண்டிய பின்
 இன்றைய நவீன  ஊடகபிரபல்யம் முகநூல்.
இன்னும் வலை என்று
 இப்போதும் வெட்டியாக  இருக்கின்றான்!


இன்னும் அதே திமிருடன் என்று
இளமைக்கால நட்புக்களிடம் இன்றும் இடிதுரைக்கும்
இனிய நண்பனே! இவன் உனக்கு
இந்த ஆண்டில் இனிய பதிவாக
இரட்டிப்பு சந்தோஸத்துடன்
இடுகின்றேன் உன் வாரிசு
இனி வரும் ஆண்டில் வந்திடுவான்.
இந்த டெனிலும் இனி  தோப்பு என்று!

இவன் பின்னே இருப்பேன் தனிமரம் போல
 இவன் அறிவான் !
இன்றும் இணைந்தகைகள் பாடல் இவனிடம்
 இன்னும் சில நாட்குறிப்பு இவனிடம்
இப்போதும் பொக்கிஷம் போல! .
இனியும் எழுதும் தனிமரம்
இன்னும் ஒரு தொடர்.
இவன் இப்படி கடித்தாலும்!



01 August 2014

மீண்டும் நான் மீளபோறன்!!!!

இயற்ககை வீனை போல கோபுரம் 
சுறுதி மீட்டியது நீ வானில் என்னோடு பறந்த போது
இன்று உதிர்ந்த பூவாக நானும் இருக்கின்றேன்!
வானில் முகாரி பாடுகின்றது 
சனியேஸ்வரன் வாகணம்!


//



கட்டியணைத்ததும் பின் காதல் போய்
 கடல் கடந்த காதலியாக
 கண்ணீர் தந்தாலும்§
 காதல் இன்னும் நெஞ்சோடு§
////////////////////







வேலை போய் வீதியில் கொஞ்சம் 
வேதனையோடு வேதனம், 
வேளை தேடி விரைந்து வலைக்கு  வருவேன் அது வரை
வேதனையோடு தனிமரம் ஓய்வு நாடி!
வேண்டியோருக்கு எப்போதும் 
வேண்டும் முறையில் தொடர்பில்
வெளிநாட்டு ஏதிலி இவன்!





இன்று அதிகம் ஏனோ
 இந்த வீதியில் இயபோன் காதில்

இரவில் வரும் போது  கேட்ட ராகம்!