14 November 2016

தேடலும் ,பிரிவும்!!!!!!

வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே? நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன்  புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) .

எழுத்தும் ஒரு போதை போல சிலருக்கு எதையாவது எழுத்திக்கொண்டே இருக்கச்செய்யும் ஒரு மாயப்போதை  .


காலநதியில் தனிமரமும் ஒரு வலைப்பதிவர் என்ற மாயக்கனவுக்குள் வாழ்வதும் இந்த எழுத்துப்போதையால் என்றால் மிகையில்லை !

என்றாலும் தனிப்பட்ட தேடல்களும் பொருளாதாரமாற்றங்களும் இந்த எழுத்துப்பக்கம் வரவிடாது வேலிகளைப்போட்டாலும்!

 முடியும் போதெல்லாம் வேலிதாண்டிய வெள்ளாடு போல தொடர்கள் என்னும் மாயாச்சிறைக்குள்  மூழ்கிப்போய் எழுத்தில் இன்பம் காண்பது என் பொழுது போக்கு !


ஆனாலும் பின்னூட்டங்களும், திரட்டியில் வாக்கும் எப்போதும் என்பதிவு சிந்தனையை மாற்றியதில்லை !

என்றாலும் பின்னூட்ட ஊக்கம் பதிவை தொடரவும் ,இன்னும் அதிக சிரத்தையுடன் எழுதவும் ஒரு உந்து சக்தி எனலாம்!

வலையில் அறிமுகம் கண்ட காலத்தில் 2010 இல் இருந்த திரட்டிகள் எண்ணிக்கை ,அன்று இருந்த பதிவர்கள் பட்டியல் எல்லாம் இன்று பெறுமதியற்ற நாணயம் 500,1000 போல )))

என்றாலும் ஏதோ !

இவ்வாண்டு ஒரு சிறுதொடர் மீட்டியிருக்கின்றேன் !


விரும்பியோர் நேரம் ஒதுக்கி படித்து உங்கள் கருத்தினை சொல்லுங்கள் ஒவ்வொரு கருத்தும் என் ஓய்வுப்பொழுதுக்கு கிடைத்த ஒரு லட்சம் தங்கக்காசு சினிமா பாடல் போல)))


முன்னர் போல இணையத்தில் இவ்வாண்டு அதிகம் இணைய முடியவில்லை !காரணம் தொழில் மாற்றம்,இல்லறச்சுழல் காற்று சுழல்வதால் கொஞ்சம் வலையுறவுகளை முகநூலில் கும்மியடிப்பதோடு இனிதே இவ்வாண்டு சென்ற நிலையில்!

 இனி வரும் நாட்கள் எப்போதும் போல என் தனிப்பட்ட ஆன்மீகத்தேடலில் கரை ஒதுங்குவதால்!

 உங்களிடம் இருந்து தற்காலிகமாக இணையத்தொடர்பை துண்டித்து சற்றே விலகிச்செல்கின்றேன் இப்போது!

மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில்  வருட இறுதி இனிதே கழியவும் ,முன்கூட்டிய பிறக்கும் கிறிஸ்மஸ்பண்டிகை நல்வாழ்த்துக்களையும் ,பிறக்கும் புத்தாண்டு சாந்தியும் ,சந்தோஸமும் நிறைந்த ஆண்டாக மலரவும் எல்லாருக்கும் பொதுவாண இறைவனை  பிரார்த்தித்த வண்ணம் உங்களிடம் இருந்து
தற்காலிக பிரிவுகளுடன் !



தனிமரம் நேசன்!
பாரிஸ்
14/11/16
மீண்டும் தனிமரம் வலைப்பதிவை புதிய ஆண்டு 2017 /மாசியில் எதிர்ப்பார்க்கலாம்!

அதுவரை !
இந்தப்பாடலுடன் உங்களின் ஒருவன் வலையில் இருந்து விடைபெறுகின்றேன்))))


07 November 2016

காற்றில் வந்த கவிதைகள்-6

முன்னர் காற்றில் வீசியவை இங்கே-http://www.thanimaram.org/2016/10/5.html


----------------------------------------------------
துயரங்களைச் சொல்லி
தூண்போல தாங்கும்
துணைவர்களைவிடவும் !
துன்பம் பெருக்கி
தூற்றாமல் !தோள் சாயந்து
துறவறம் போல ஒரு மரத்தடி நிழல் போதும்!
துவண்டமனதுக்கு
தூவானம் வீச!



----------------------------------------------------------------------------------------------------------

அடர்ந்தவனத்தில்
 ஆயிரம் கனவுகளுடன்!
அடுக்கு மரப்பாதையில்
அழுதுவடிக்கும்
ஆசைரோஜாவுக்கும் தெரியும்!
அகதியின் அன்புக்காதல்
அளவிடமுடியாத 
ஆயிரம் பலம் கொண்டது!
ஆசையுடன் வருவேன்
அணைத்து மகிழ 
அசந்து தூங்காதே ஆருயிரே!





----------------------------------------------------------------------------------------------------
பிரியமானவர்களிடம் வரும் 
பிரிவினை என்பது !
பிரிவினைவாதம் போல!-
பிடரியில் தொடங்கி
பிண்டம் வைக்கும் 
பிதிர்க்கடன் போல 
பிறப்பில் அன்புப்
பிச்சையும் ஒரு சாபமே!
பிறவிக் கடன் போல
பிதற்றியே கொல்லும்!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////
துணிவே துணையென்று
துணிந்துவிட்டால் ! வரும்
துயரங்கள் மறந்து 
தூய்மையாக 
துடுப்பு வீசலாம்!
தூய்மையான பூமியில்
துவண்டு போகாதே 
துழைத்த காதலில் நண்பனே!///



/////////////////////////////////////////////////////////////////////
விந்தையான பூமியில்
விரும்பி யாரையும்
வில்லங்கம் செய்வதில்லை!
விட்டுச்செல்ல இது 
விதர்ப்ப நாட்டு வேந்தன்
விசிரியும் அல்ல,
விரலுக்கும் வீக்கம் வேண்டும்!
விறலுக்கு இறைப்பதா ?
விலையில்லா அன்புக்கு
வீசுவதா என்ற 
விளிப்பு வரும் போது!
விடைபெற்றுச்செல்கின்றனர்
விடுதலை விரும்பிகள்!


31 October 2016

காற்றில் வந்த கவிதைகள்--5

முன்னம் கவிதைகள் இங்கே-http://www.thanimaram.org/2016/10/4.html
/////////////////////////////////////////////////////////////////////


விந்தையான பூமியில்
விரும்பி யாரையும்
வில்லங்கம் செய்வதில்லை!
விட்டுச்செல்ல இது
விதர்ப்ப நாட்டு வேந்தன்
விசிரியும் அல்ல,
விரலுக்கும் வீக்கம் வேண்டும்!
விறலுக்கு இறைப்பதா ?
விலையில்லா அன்புக்கு
வீசுவதா என்ற
விளிப்பு வரும் போது!
விடைபெற்றுச்செல்கின்றனர்
விடுதலை விரும்பிகள்!
                                       


////////////////////////////////////////////////////////////////////////////////////
தவறுகள் பல தவிர்க்க நினைக்கின்றேன்
தவறியும் நிந்திக்கும் மனம்
தந்துவிடாதே தாயுமானவர் போல
தரணி ஆளும்
தன்நம்பிக்கை போதும்!
தறுதலை என்று
தற்பெருமை பேசுவோருக்கு
தக்கபாடம் புகட்டும் வரம்
தந்துவிடு எம்பிரானே!




///////////////////////////////////////////////////////////////////////////////////////

வார்த்தைகள் கொண்டு
வளரும் பயிர்களை
வஞ்சிக்கத்தெரியும்!
வழிகாட்டும் பலருக்கு! எனினும்
வாழ்க்கையில்  முன்னேற
வருவோரையும்
வஞ்சிக்காமல், வளமான
வாழ்க்கையைக் காட்டுவோம்!
வாருங்கள் சேர்ந்தே
வலைபிடிப்போம்
வரும்காலம் நமது என்றே!/



/////////////////////////////////////////////////////////

வேதனையிலும் சிரிக்கும் வரம்
வேண்டி நிற்கின்றேன்
வேந்தனிடம் !
வேஷம் போடும் உலகில்
வேறு ஏதும் வேண்டிலேன்!


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
யாசகமும், யாசிப்பும்
யாருமில்லை என்ற
யாக்கையின் பிரதிபலிப்பல்ல!
யாதவன் மீதான
யாருக்கும் வாய்க்காத
யன்னலோர  தவம் அன்பே!
யான் பெற்ற இந்த நேசம்!
யாதுமற்ற எதிலி என்று
யாருமில்லை இந்த காதலில்!

/////////////////////////////////////////////////////////
அகதியின் ஆசைகள் பல
அன்பே !
ஆனாலும் அசைபோடும்
ஆனந்த நினைவுகள் 
அகல்விளக்கு போல சில
அதில் நீ ஒரு
ஆனந்தப்பூங்காற்று!
ஆனந்தம் படம் சினேஹா போல  சிரிபில்
ஆயிரம் நீ தான்
அழியாத கோலம்  என் நெஞ்சில்!



  (யாவும் கற்பனையே)

21 October 2016

காற்றில் வந்த கவிதைகள்-4

குந்தவை போல பாசம் காட்டியே
குழிபறிக்கும் கூட்டத்தில்!
குயில் போல நீயும்
குணத்தில் ஒரு குரு!
குழைந்து பணிகின்றேன்!
குடியிருப்போம் கூடி!



------/---/
அடிக்கடி ஒலிக்கும்
அழகான பாடலில் எல்லாம்!
அன்பே உன் நினைவுகள்
அசைபோடுகின்றது.
அடுத்து வரும் ரயில் போல
ஆனாலும் பாடல் கேட்க
அலைவரிசை தடைபோடுகின்றது
அறிவில்லாதவனுக்கு!




//////////
அகத்தியரின் சினம் போல
அடிக்கடி   ஆத்திரம்  எட்டிப்பார்த்தாலும்!
அன்பே உன்னிடம்
அடைக்கலம் நாடும் என்
அன்புக்காதல்
அரவணைக்கும் ஐரோப்பிய தேசம் போல
அகன்றது நேசத்தில்
அதையும் மறந்துவிடாதே
அன்பான காதலியே!




/:/::
நீ என்மீது கொண்ட காதல்
நிலையான சொத்துப்போல
நிலைக்கும் என்று நினைத்தேன்!
நிலையில்லாகடன் என்று
நிஜத்தில் இன்று
நினைக்கவைத்துச் சென்றாயே
நீராவி விமானத்தில்!
நிலம்பார்த்து தவிர்க்கின்றேன்.



///////////////////////////////////////////////////////////////////////////////
அகதியின் ஆசைகள் பல
அன்பே !
ஆனாலும் அசைபோடும்
ஆனந்த நினைவுகள் 
அகல்விளக்கு போல சில
அதில் நீ ஒரு
ஆனந்தப்பூங்காற்று!
ஆனந்தம் படம் சினேஹா போல  சிரிபில்
ஆயிரம் நீ தான்
அழியாத கோலம்  என் நெஞ்சில்!
  (யாவும் கற்பனையே)////


///////////////////////////////////////////////////////////////////////////////////////////////

தினம் தினம் வரும்
தினகரன் போல 
திடீர் திடீர்  என்று பரவும்
திருப்பங்கள் போல செய்திகள்
தீயாக விழுந்தாலும்!
திடங்கொண்டு நம்புவோம்
திரும்பி வருவாள் 
திருமகள் என்று!


16 October 2016

பார்த்தேன்! பகிர்கின்றேன்!!!!

எல்லோருக்கும் புரியட்டும் தேர்வு அறிக்கை ஒன்றும் சாதனை அல்ல!சிறுவர் வாழ்வில் பல தேடல்கள் இருக்கும் புரிந்து வழிநடத்த எத்தனைபேர் தயார்!


படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.







29 September 2016

காற்றில் வந்த கவிதைகள் -3

இணைய வானொலிகளின் நிகழ்ச்சிக்கு எழுதியவை வலையில் சேமிப்பாக! நன்றி லங்காசிறி எப்.எம், புரட்ச்சி எப்.எம் !
---------

நீ கடல்கடந்த போதும்! உன்
கருவிழிப்பார்வையில்
கலந்து, கரைந்து போன என் 
காதல்  !இன்னும் வாழ்க்கைக்
கரையைத்தேடும் பயணி போல
காத்து இருப்பதை  உன்
உயர்கல்வி என்றாவது
உணர்த்துமா ?என்ற 
காத்திருத்திருப்பில்
உருப்படாதவன் இவன்!
  (கற்பனையே)



----------------------------------------------
இழந்தவை எல்லாம்
இன்னும் பெரிதல்ல 
இருந்தாலும் !உன் துரோகம் தான்
இதயத்தை நெருடுகின்றது
இப்போதும் நேசிக்கும் நண்பனாக!
இதுவே உன்னிடம் 
இனிமையாக உறுதியுடன் கூறுவேன்!
இவன் தொலைத்தது 
இன்நாட்டு நாணயம் போல 
இதுவும் கடந்து 
இங்கிலாந்து நாணயம் எல்லாம்
இங்கு வீடு கட்டலாம் ஏய்த்த
இசைபோல என்றாலும்
இனிக்கும் என்றாலும் 
இவன் எழுந்துவிட்டான்
இனிய உதயம் என்பது போல
இதையும் காலம் 
இருத்தி வைக்கும் உன்
இருண்ட இதயத்தில்!



//////
பூக்களைத்தாங்கும் நார் போல
பூத்திருந்தேன்  !
பூங்குயிலே நீயோ உதிர்ந்துபோகும்
பூவாய் என்னி என்னை
புதைத்துவிட்டுச்சென்றாயே!
புரண்டு அழுகின்றேன்
பூத்த மலரிடம் இன்று!


--------------------------------------------------------------------------------------------------

விரும்பித்தான் உன்னைப்பிரிந்தேனடி!
விரும்பிய  செல்வம் ஈட்டி,
வீடு ,வாசல் ,விளைநிலம் எல்லாம் 
விலைக்கு வாங்கி .உன்னைச்சேர
விண்ணப்பித்துக் காத்திருந்தேன்!
விரும்பாத நீ நேசிக்கும் இன்றைய
விடுதலைக்காலத்தில் இவனோ
விட்டுவரமுடியாத! புலம்பெயர் தேசத்தில்
விழுந்துகிடக்கும் சருகு!
  (யாவும் கற்பனை)



--------------------------------------------

தினமும் கவிதை எழுதி
தினம் தினம் கொல்லும் உன்மேலான
தீராதக்காதலை திறந்தே காட்டும்
என் இருவிழிகளைக் காண !
திடீர் என்றாவது ஒருதடவை
தோன்றிடு திங்கள் போல
என் ஜீவனே!







26 September 2016

நெஞ்சிக்குள் உன்னை வைத்து!!!

இந்திய தமிழ் சினிமாவுக்கு மாற்றீடாக! ஈழத்தில் 83 இல் தொலைந்த தமிழ்ச்சினிமா  மீண்டும் புதிய வேகத்துடன் அரும்புகின்றது என்ற விளம்பரங்கள் பல ஊடகத்தில் காணும் போது கன்னி முயற்ச்சி வெற்றிவாகை சூடவேண்டும் என்று ஈழத்துப்படைப்பை நேசிக்கும் ஒருவனாக என்றும் நம்மவர் படைப்பை யாசிக்கின்றேன் !வாழ்த்துகின்றேன்.!!



ஆனால் படைப்புக்கள் எல்லாம் இந்திய அதே பழைய பாணியை பின் பற்றுவதை ஜிரனிக்க முடியவில்லை.இலங்கை தமிழ் சினிமாவின் கதை  எழுதிய தம்பி ஐயா தேவதாஸ்  நூலை கொஞ்சம் வாசித்து உள்வாங்கி.

http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_38_itc_9.php.
மூத்தவர்கள் ஈழப்படைப்பினை பார்த்து ரசித்து புதிய களத்தில் இருந்து புதிய வேகத்தில்  நம்மவர்கள்என்று  வெளி வருவார்களோ தெரியாது! ஆனாலும் நம்மவர் பாடலை நேசிக்குப்பலரில் நானும் ஒருவன் அந்த வகையில் இந்தப்பாடல் கவி ரசித்தேன் !



காட்சிகள் இந்திய  தமிழ் சினிமா/ஹிந்தி என தென்னக  வசீகரா முதல் /அயன் ,திருமலை இன்னும் பிரியமான தோழி முதல்  பலதை பின்னனிக்காட்சி பார்த்து ரசித்து, சகித்து ,தான்  வெட்டியாக இந்த சமூகத்தளத்தில்  தனிமரமும் இருக்கின்றேன் !நண்பா! தென்றல் சுடும்[[


 நமக்கான அடையாளம் இது அல்ல! உங்களின் முழுமையான படைப்பை திரையில் காணும் ஆவலுடன் இருக்கின்றேன்.அதன் விமர்சனமும் என் தளத்தில் நேரம் இருப்பின் எழுதுவேன்! https://www.youtube.com/watch?v=njQ30GYDfZw







22 September 2016

யாசித்தோருக்கு நன்றிகள்.

வலையுறவுகள் எல்லோரும் நலம் தானே? சிறியதொடர் எழுதும் ஆசையில் தனிமரமும் யாசிக்கும் ஏதிலி என்ற தொடரை இனிதே உங்களுடன் பகிர்ந்தது ஆனந்தம் .மகிழ்ச்சி என்பேன் !

நீட்டி எழுத நினைத்தாலும் இதுவரை எழுதியதே போதும்   என்ற அசரீரி குரல்போல நட்பின் குரலுக்கும் அணைகட்டவேண்டும் அல்லவா? காவிரிப்போராட்டத்துக்கு உயிர்கொடுக்கும் நெஞ்சங்களை நினைக்கும் போது மனம் துயரம்கொள்கின்றது!

 வாழ்வியலில் எதிர்பார்ப்புகள் பொய்யாகும் நிலையில் எப்படி முடிவு எடுப்பது என்ற திண்டாட்டம் பற்றி என் நட்பு தனிமையில் பேசியதை கொஞ்சம் பாணுடன் கலந்த சீனிபோல பாடல்களும் ,கவிதையும் கலந்து கதையாக்கி ஏதோ சொல்லமுயன்று இருக்கின்றேன்)))


அது உங்கள் பார்வையில் எப்படி இருக்கு என்பதை இனி நீங்கள் தான் விமர்சிக்கவேண்டும்.

தொடருக்கு பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்வது என்கடமை .

அந்தவகையில் தொடர்ந்து ஆதரவு தந்த கரந்தைஜெயக்குமார் ஐயாவுக்கு என் இதயபூர்வமான நன்றிகள் பல. சலிப்பில்லாது வருகை தந்து  தொடர் எழுதத்தூண்டுயவர்.

                                        (உங்கள் பார்வையில் இந்த தொடர் பற்றி என்றாவது ஒரு கருத்துரை உங்கள் தளத்தில் பதிவீர்கள் என்ற நம்பிக்கை யுண்டு! அன்று நான் வலையில் இருப்பேனோ என்று அறியேன்!)



இடையிடையே வந்தாலும் பாராட்டிவர்களில் யாழ்புத்தன்,தில்லையகத்தார் துளசிதரன்சார்,மூங்கில்க்காற்று முரளிதரன் ஸார்,கில்லர்ஜீ,வலிப்போக்கன்,தளிர்சுரேஷ்,யாழ்பாவணன் ,பகவான் ஜீ,ஆத்மா, நாஞ்சில்மனோ,ரூபன் ,மற்றும் முகநூல்க்குழுமங்களில் லைக்கிட்டவர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அவசரத்தில் யாரையாவது மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்கவும்.

கருத்திட நினைத்தாலும் உங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை தனிமரம் அதனால் தான் பின்னூட்டம் இடவில்லை என்று முகநூலில் உள்பெட்டியில் உரைத்தவர்களுக்கும் நன்றிகள்.

மீண்டும் ஒரு தொடர் எழுதும் நோக்கம் இல்லை சிலகாலங்களுக்கு)))) என் அம்மா, என் அக்கா. என் மனைவி, என் பதிவுலக நட்புக்கு இனி எழுத்துப்பிழை திருத்த கொடுத்த அவசரநெருக்கடிக்கு இனி விடுதலை!




 இனி தனிப்பதிவுகளுடன் சங்கமிப்போம்.


சினேஹா பாடலுடன்  நன்றி சொல்ல ஆசை என்றாலும்



 அடிக்கடி யார் அந்த சினேஹா ?,என்ற முகநூல்/வலை விசாரணைக்கு முடிவு கட்டி!எவள் அவ[[[தனிமரம் இன்னும் தனிமரம் தான்[[[


 இனியும் இந்த குத்து இன்னும் பிடிக்கும் நீங்களும் ரசிக்க[[[




14 September 2016

மாயமோ?, மந்திரமோ?,,





வலையில் நம்மை எல்லாம் தொடர் கதை என்றாலும், தொழில்நுட்ப பகிர்வு என்றாலும், பதிவர்கள் பலர் விடியவிடிய முன்பு கூடும் நானாஜோசித்தேன் கும்மி பதிவு என்றாலும், அரசியல் என்றாலும், சினிமா விமர்சனம் மட்டுமா ?சினிமா பற்றி அறிய அவர் தன்வலையில் நீண்ட தொடர் சலிக்காது எழுதியவர்! ஒருவர் அவர் யார் என்றால் நம் வலை நட்பு இவர்தான்[[





 உரிச்ச நம் செங்கோவி பதிவர்கூட இன்ப அதிர்ச்சியாக ஜீபூம்பா குறும்படம் செய்து அதனை செவ்வாய்க்கிழமை முகநூலில் பகிர்திருந்தார்


! அன்றைய நாளில் என் தனிப்பட்ட பணி நிமித்தம் முகநூல் பக்கம் செல்லமுடியவில்லை!

 ஆனாலும் குறும்படம் பார்க்கும் ஆர்வத்தில் இன்று பார்க்கும் வசதி அமைந்தது !



மாயம், மந்திரம் ,என்று நம் புராணக் கதைகளில் இந்த மாயம்  இருப்பதாக வரலாறு சொன்னாலும் ! இன்னும்
மஜிக்/குரலிவித்தை என்று புலூடாவிடக்கூடாது என்று இப்ப இளைய சந்ததி கேள்வி கேட்கும்?, குருவி எப்படி சாவியாக மாறியது ,?,கார் எப்படி ஓடியது?,.இப்படி  என்றாலும் இந்த பிரெஞ்சு தேசத்தில் மஜிக் செய்யும் குழு கூடும் இடத்துக்கு இன்றும்  தென் இந்திய சினிமாவைவிட அதிக முன்பதிவு நடப்பது என் கண்கூடு


! இப்படியான சிந்தனை செங்கோவியிடம் இருப்பது கண்டு மகிழ்ச்சி.!


அவரின் முயற்ச்சிக்கு தனிமரத்தின் வாழ்த்துக்கள்..


 படத்தின் குறைகள் பட்டியல் இடச் சொல்லியிருக்கின்றார் )) எனக்கு விமர்சனம் எல்லாம் தெரியாது!

ஆனாலும் பலர்குடியிருக்கும் தொடர்மாடியில் இருபெண்கள் மட்டும் வன்முறையை கைகொள்ள இதுசாத்தியமா?

அத்துடன் தொடர்மாடி குடியிருப்பு அரபுலகம் போல இருக்கு அங்கே நம் ஆன்மீக கலாட்சாரத்தை கதவில் தோரணம் போல மலரோ/இலையோ கட்டமுடியுமா?

இங்கே தொடர்மாடியின் முன் வீட்டுக்கதவில் நம் மதம்சார்ந்த காட்சிகள் காட்சிப்படுத்த முடியாது!

நானும் ஒரு ஆஞ்சநேயர் படத்தை  முன்கதவில் பதிக்கமுடியவில்லை காரணம் சட்டவிதிமுறை என்னும் போது நீங்கள் சாதரண மாக கடந்துவிட்டீர்கள்)))



குறும்படத்தை நீங்களும் காண இங்கே-



09 September 2016

இப்ப அப்படி நினைக்கவில்லை!!!

இருகோலங்கள் போல
இதயங்கள் இணைவதுக்கு
இளமைக்காலம் தீட்டிய
இனிய பாதை  நம் கல்விக்காலம்!


இனவாத யுத்தம் எனும்
இறையாண்மை சுருதிமீட்ட
இடையில் பிரிந்தோம் !
இருக்கின்றாயா என நீயும்?
இருப்பாளா என நானும்
இடைவிடாது தேடி  அலைந்த
இருள்ச்சிறைகள் எல்லாம்
இங்கு இல்லை என்றே
இருகைகள் விரித்தன!

இதயம் துடித்தது
இந்த தேசத்தில்
இருள்சூழ்ந்த இனம் தெரியாத
இருப்பிடத்தில் இன்னல்கள்
இடரலாம் உன் உடலில்
இயக்கம் என்று!!
இதில் கையொப்பம் இட்டால்
இந்த தேசம் தாண்டி
இரவோடு இரவாக
இன்னொரு பூமிக்கு செல்லமுடியும்!
இங்கிதமாக வார்த்தைகள்
இயம்பி இருப்பார்கள்!
இரக்கமற்ற இறைதாசர்கள்!
இல்லையோ! இந்தப்பிணம்
இனம் தெரியாத வீதியில்
இரத்தக்கறையுடன் வெறிநாய்களுக்கு
இரையாகி இருக்கலாம்!
இலஞ்சம்மாக கோடிகளில்
இறைத்தால் இருக்கலாம் மனசு வைத்தால்
இழிப்பிறப்புக்கள் கருணையில்!


இப்படியும் முயன்று
இழந்த கதைகள் பல
இன்னும் இயம்பவில்லை
இங்கு பலர் !


இருந்தும் உணர்வுகள் தீண்ட
இரவிலும் பகலிலும் விழிசிந்திய
இருப்புத்தேடல்
இணையத்தில் எல்லாம்
இன்னொரு காவியம் சொல்லும்!

இந்த நல்லாட்சியிலும்
இன்னும் பிறக்காத தீர்வுத்திட்டம் போல
இன்னும் உன்னை தேடி
இந்த ஆண்டு வரை  ஐநாவரை போய் வந்தும்
இன்னும் பிறக்கவில்லை
இனிய விடிவு!



 இருந்தாலும்
இன்று உன் சிறப்பு நாள்  9/9/...பிறந்தநாள்!
இருந்தாலும் வாழ்த்துக்கின்றேன்!
இன்னும் நேசிக்கின்றேன்
இந்த நேசம் பொய்யல்ல!

இசைப்பாடல்  உனக்கும் பிடிக்கும்
இலங்கை வானொலியில்
இருவரும் விரும்பிக் கேட்டவை!
இப்போது நானும்
இணைய வானொலிகள் பலதில்
இணைந்தே இருக்கின்றேன் நேயராக!
இன்னும் பலபாடல் சொல்லிக்கொடுக்கும்
இசைப்பிரியன் போல
இன்னும் தனிமரமாக!

இன்னொரு கதை எழுத
இனியும் முகம் காட்டாதே!
இந்த வடக்கும், தெற்கும்
இரயிலில் பயணிக்கும்
இனிய நேரம் இல்லை!
இப்போது அப்படி நினைக்கவில்லை
இவனும் கோழைதான்!
இந்தப்பாடல் இன்னும் வாழும்!



(யாவும் கற்பனை

---------------------------------------------------------------------
அரும்பத விளக்கம்- இயக்கம்*புலிகள் என்ற இலங்கை அரசின் கைதுகள்!

07 September 2016

யாசிக்கும் --- ஏ--தி--லி-----------------முடிவு!

முன்னம் இங்கே யாசிக்க-http://www.thanimaram.org/2016/08/17.html


தேர்ந்த முடிவு என்பது சிந்தித்து எடுக்க வேண்டிய அரசியல்பேரவை போல! காலம் கடத்திக் கொண்டே ஆட்சியை கொண்டு செல்லும் நாடகமாக இருக்கக்கூடாது !இதோ தீர்வு என்ற நல்லாட்சி இதுவரை ஒரு புல்லைக்கூட சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க சாமானிய சிறைக்கைதிகளைக்கூட  பொது மன்னிப்பில் விடுதலை செய்யவில்லை!

 எத்தனை போராட்டம் என்று போராடியும் என்ன தீர்வு கிடைத்தது ?


 அதுபோலத்தான்  என் காதலுக்கும் ஒரு முடிவுரையை மாயாவை கரம் பற்றினேன் ! யாழினி !!



உன் தந்தையும் அவ்வாறு நடக்க ஒரு காரணியானார்! ஆன்மீக தேடல் எல்லாம் பொதுவில் லைக் வேண்டி பகிரும் முகநூல் செயல் போல அல்ல!! நீயோ எல்லாவற்றையும் அறிந்தும்! போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாத ஐநா போல இருந்துவிட்டு காலம் கடந்து அறிக்கைப்போர் விடுவது போலத்தான் இப்போது என்னை நேசித்ததாக சொல்வதும்!


 ஆனாலும் உன் நினைவுகள் என் இதய வானில்  எங்காவது இருக்கும் என்றும்!!

 மறந்து போகாது.

 ஆனாலும் நான் மாயாவுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டேன்! காரணம் என்னைப்புரிந்தவள் .


எங்கும் குடும்பத்தலைவன்   என்ற மகுடம் சூட்ட முத்துக்கள் மூன்றுபோல மூன்று வாரிசுகளுடன் இதோ சிரித்தபடி  சிந்துபாடுகின்றேன்!




 .சீக்கரம் உனக்கும் ஒருவன் கிடைக்க வேண்டும் !பாரிசில்  வாழுபவர்களிடம் காசுமரம் இல்லை என்று நீ வைப்பரில் தாய்தேசத்தில் இருப்போருக்கு நவீன வரவான செல்பியுடன் ஆடம்பரச் செய்தி சொல்லலாம் .

வேற நாட்டில் கோடியில் புரலும் வியாபாரிகள் யாராவது வரக்கூடும் உன் அழகை ரசித்து! சினிமா நடிகைக்கு வாழ்வு கொடுக்கும் தொழில் அதிபர் போல ஆனால் காலம் எல்லாம் கடைசிவரை உன்னோடு யாராவது வரவேண்டும் என்று இந்த அகதியும் யாசிக்கின்றேன் !


நான் வணங்கும் கடவுளிடம்!!!

  ஏதிலியும் யாசிப்பு என்றும் தொடரும் யாழினி.அடுத்த ரயில் உன் வீட்டுப்பக்கம் ஊடாக செல்ல இதோ தயாராக காடினோட்டில் இருக்குது. ஏறிக்கொள் வேற என்ன,,? விடுமுறை இனிதே முடிய வாழ்த்துக்கள் . எப்போதும் என்ன உதவி வேண்டும் என்றாலும் தயக்கம் இன்றிக்கேள் ,,?முடிந்தால் நிச்சயம் செய்வேன்!


அடுத்த வாரம் இந்தியா செல்கின்றேன் யாத்திரைக்கு.


 எல்லாருக்கும் நல்லது நடக்க பிரார்த்தனை செய் யாதவன்! இதைத்தான் என்னால் இப்போது உன்னிடம் நான் கேட்கும் வரம்!

 நான் போய்வாரேன் மீண்டும் சந்திக்கும் போது உன் நட்பு தனிமரத்தை தவிர்த்துக்கொள். நமக்கு பிடிக்காதவர்களிடம் நாம் தான் ஒதுங்கிச்செல்ல வேண்டும்.

 இல்லை யாழினி இதில் எனக்கு உடன்பாடு இலை.


 அவனை நீ தவறாகபுரிந்து கொண்டாய் ஒரு நாள் நீ அவனை அறிவாய்! சரி என் நண்பன் காத்து இருப்பான் ரயில் வெளிக்கிடப்போகுது வீடு சென்றதும் சேர்ந்துவிட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பு.


 உன் பாட்டிக்கு நான் என்றும்  நம்பிக்கையான கடமைவீரன் இந்தப் பேரன்.


 பாசம் பொய்யல்ல நேசம்நிலையானது !!ஏதிலி என்றாலும் எனக்கும் இதயம் இருக்கும் தானே?


உன் சிரிப்பு ஒன்றே போதும் யாதவன்!


தவறிய பொருட்கள் எல்லாம் மீண்டும் கிடைப்பதில்லை!! அதுபோலத்தான் சில அன்பும்!நான் போய்வாரன் யாதவன் உனக்கு வேலைக்கு போகும் அவசரம் நீ போய்விடு !


 யாதவன் போகும் பாதையை நோட்டமிட்டவள் செவிகளில் ரயில் புறப்படும் ஓசை ஒலித்தது. மனதில் தோன்றிய வலியின் உட்பொருளாகக்கூட இருக்கலாம் அந்த ஒலி!!!! யாசிக்கும் ஏதிலியின் மனதை புரியாத ஒலி இனி ஒலிக்காது  யாழினி காதில் செருவிக்கொண்டால் ஹியர்போனை!



                               முற்றும்!

    யாவும் கற்பனை இது!!!!!