31 October 2011

நொந்து போகும் ஓர் இதயம்-13

அயல் நாட்டு அமைதிப்படை என்கின்றபோர்வையில் வந்து செய்த அட்டூளியகள் பல.


 அமைதியாக இருந்த எங்கள் வாழ்வு அடுத்த வேலைச்  சாப்பாடு இல்லாமல் இடம் பெயர்ந்த போது கோப்பி குடிக்க சீனி இல்லாமல் தொட்டுக்கொண்டு குடித்தது பேரீட்சம் பழத்துடன்.


 அது பொறுக்காமல் நாங்கள் அழுதது பார்த்து. சீனிவாங்கச் சென்ற தந்தையை உளவு பார்த்த தாக சொல்லிக் கட்டிப்போட்டு அடித்த காட்சி கண்டு வெளிக்கிட்டுப் போன என் உறவு!

 அதன் பின் நான் கண்டது பல வருடங்கள் பின்.

 அன்று எனக்கு வந்த கோபத்தை கண்ணகி மட்டும் காட்டினால். மதுரை மீது !

என்னைத் தடுத்துவிட்டார் தந்தை. நீ வீட்டுக்கு ஒரு வம்சம் என்று.
 இன்று என் வம்சத்திற்கு புகைப்படமாக தத்தாவைக் காட்டும் துயரம் அனுபவத்தில் உணரனும்.

 வலியின் வேதனையை வருடங்கள் போனாலும் வன்மம் இருக்கு .புத்தன் சொன்னதும், கீதை சொன்னதும், நடைமுறையில் மறக்க மன்னிக்க மனசு விடுகின்றது இல்லை.

இலங்கையில் இருந்து பண்டமாற்றாக தேயிலையைக் கொடுத்து.
 பேரீட்சம் பழமும் பெற்றோலும் வாங்கும் தேசம் இலங்கை .

அரபுலகத்தில் இருந்து வரும் பொதி செய்யப்பட்ட பேரீட்சம் பழத்தைக் கொடுத்து பிரபு மீதான தன் காதலைச் வெளிக்காட்டினால் பார்த்திமா.


 பள்ளியில் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் காதல் கிளிகளாக வலம் வந்தார்கள்.

1987 ஆண்டின் பின் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அன்பளிப்பில் வேலை பெற்ற ஆசிரியர்கள் தாம் கொடுத்த தொகை மீளப் பெறக் கண்டு கொண்ட வழி  தனியார்  வகுப்புக்களை ஊக்கிவிப்பதும் மாணவர்களிடையே  ரியூசன் என்கின்ற பேஸன்.
இதன் மூலம் தனியார் வகுப்புக்களை பல இடங்களில் தொடங்கினார்கள்.

 வவுனியாவில் பல தனியார் ரியூசன்(ரீயூட்டரி) வைரவப்புளியங்குளம் ,கோவில்குளம்,பண்டரிகுளம் என பல இடங்களில் இயங்கியது .
மும்மொழிகளுக்கும்  விசேட வகுப்புக்கள் இருக்கும்.

 அத்துடன்  கலை/வர்த்தகம்/விஞ்ஞானம் கணிதம் என உயர்தர கல்விக்கு பல ரியூசன் சென்ரர்கள் கடைவிரித்தது.

ரவியும் பார்த்திமாவும் இங்கு மேலதிகமாக ரியூசன் கல்வி கற்றார்கள்.

.நானும் சாலிக்காவுடன் அதிகம் உரையாடுவதற்கு இங்கு படித்த சகோதரமொழிதான் அதிகம்
கை கொடுத்தது.

காதல் வந்தால் பொய் சொல்வது இன்னொரு சிறப்பு .

இவர்களும் வீட்டில் மேலதிகவகுப்பு, சிறப்பு நிகழ்வுகள் என்று காதல் பாடம் படித்தார்கள்.

 பெற்றவர்கள் தம் பிள்ளைகள் அதிகமாக படிக்கின்றார்கள் .எதிர்காலத்தை திட்டமிடுகின்றார்கள் என்று நம்பியிருக்கும் போது அவர்கள் கனவுகளை கறையான் போல் அரித்துக் கொண்டிருந்தார்கள்!


பார்த்திமா மீது கொண்ட காதலினால் என் நேரமும் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கனும் என்று எண்ணியதால்  !

புவியல் பாடத்தில் இருந்து தமிழ்பாடத்திற்கு மாறியிருந்தான் ரவி .
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கலைஞர் எழுதியது போல் !தமிழ் ஆசிரியையும் ரவியை வரவேற்று நல்ல பெறுபெறு எடுக்கனும் தமிழிலில் என்று ஊக்கிவித்தார்

.பார்த்திமாவின் பார்வையின் பின் குறிஞ்சித் தென்னவனும்,சில்லையூர் கவிராயரும்  ரவியின் நண்பர்கள் ஆனார்கள்.

 எங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலகிக் கொண்டான் .பார்த்திமா நம் நண்பர்கள் நட்புக்களை விரும்பவில்லை என்று சொல்லி விட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஆளும் கட்சியில் சேர்வது போல் எங்களை திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் ஆக்கினான்.

 இவையாவும் நடந்து கொண்டிருந்த போதும் நான் ஏதும்
கூறவில்லை .என் நினைவில் கிழிந்த பனை ஓலை ஞாபகம் வந்தது  அந்த நூல் பார்த்திமாவுக்குப்  பிடிக்கும் என்பதால்!

பள்ளியில் புத்தகத்தின் ஊடே இவர்கள் கடிதம் பரிமாறுவது தொடர்ந்து கொண்டிருந்தது.

 முதல் வாங்கில் இருபக்கமும் இவர்கள் இருப்பது கடைசி வாங்கில் இருக்கும் சுபைர்க்கு இவர்கள் லீலை தெரியும் !

அவன் என்னிடம் காதில் ஓதினான் எல்லாம் தெரிந்தும் அமைதி என் வேலையில் கவனத்தை திசை திருப்பினேன்.

வஞ்சி அவள் காதல் பார்த்தும் ,நோக்கியும் தீராத உணர்வுகள். வாலிபத்தின்  தீ மனதில் தூண்டிச் செல்ல !

பார்த்திமா என்னும் பேதையை. தொட்டுப் பேச என்னிய ரவி அழைத்துச் சென்றது சிதம்பரபுரம் போகும் வழியில் இருக்கும் கல்வாரிக்கு!

சிலுவைப்படலத்தில் தேவனின் வலிகளைப் படிப்போர் உரிகிப்போகும் விடயத்தை .

இங்கு மலைபோல் கோட்டு ஓவியமாக வரைந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கிருஸ்தவக் கோயில் காட்சி கொடுப்பது கல்வாரியில் .

வவுனியாவில் இருக்கும் பலருக்கும் இந்த இடம் தெரியாது !

இன்னொரு மாற்றுக்குழுக்கள் இந்தப்பகுதியில் தளம் அமைத்து இருப்பதும் ஒரு காரணம். அதிகமானவர்களுக்குத் தெரியாமல் போவதற்கு.!

 மாலை வேலையில் அதன் அண்டிய பகுதியின் அருகாமையில் .வன்னிமரங்கள் கிளர்ச்சி ஊட்ட.
 அருகில் ஓடும் ஓடைகள் கீதம் இசைக்க.
 ரவியும் தனிமையில் இருந்த பார்த்திமாவிடம் எல்லைமீறும் மோகத்தீயில்.
 கன்னங்கள் தொட்டுச் செல்லமாக தன் ஆண்மையின் உணர்வுகளை உதட்டோரம் முதல் எச்சிலை முத்தமாக கொடுத்தான்.
 கட்டிக்கப்போகும் அவள் தன் தாரம் என்றும்! நிக்கா இவனுடன் தான் என்று ஆசைக்கனவில் அவளும் இடம் கொடுத்தால். அருகில் யாரும் இல்லை என்ற தைரியத்தில்.


அந்திப் பொழுதில் மந்தமாருதம் வீசும் வேலையில்.
மெல்லியவள் பூவாசம்.
தேன் இனிக்கும் பால்வாசம்.
 பார்த்தாலே ஆவேசம் பாய்போட்டால் !

மாலையில் வரும் கீதம் இசைக்கும் அந்த நேரத்தில்.
 அந்திநேரச் சிந்துடன் வர்த்தகசேவையில் நாகபூசனி கருப்பையா ஒலிக்க விட்ட.

 இந்தப்பாடலைக் கேட்டுக் கொண்டு இந்தப்புரம் இரு கண்கள் நோக்க.
 மறுகரையில் இரு கண்கள் நோக்குவதை அவர்கள் கானவில்லை!

________________________________________:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

குறிஞ்சித் தென்னவன்- மலையக கவிதையின் முக்கியமான ஒருவர்.
சிதம்பரபுரம்- வவுனியாவில் ஒரு திட்டமிட்டமுகாம் பகுதி!

29 October 2011

நொந்து போகும் ஓர் இதயம் -12

 வாழ்வில் வசந்தமான காலகட்டம் எது என்றால்?
 எல்லோரும் கைகாட்டும் திசை பள்ளிக்காலம்.

 பலர் சிரித்து, மகிழ்ந்தும்,  சிலர் இதயத்தை தொலைத்து ,சிதைந்த ஓவியமான வடுக்கள் கொண்ட காலகட்டமும் இந்தப் பள்ளி வாழ்க்கையில் தான்.


பள்ளியில் கல்வியைத் தவிர ,விளையாட்டுக்கும் முன்னுரிமை கொடுக்கனும் என்பதில் இருக்கும் சூட்சுமம்!

 கல்வியில் பின் தங்கியோர் விளையாட்டில் சரி நல்ல திறமைசாலியாக உருவாகலாம் என்ற கனவினால்.

 அதனால் தான் பள்ளிகளில் புதிய வகுப்பு ஆரம்பத்தில் முதல் தவணையில்  பாடசாலையில்.விளையாட்டுப் போட்டி வைப்பார்கள்.

 ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு உதவியாக உயர்தர மாணவர்கள் மாணவிகளை குழுவாகப் பிரித்து தலமைப்துவப் பொறுப்புக்களை பகிர்வார்கள்.

 சிலர் திறமை இருந்தும் பின்னடிப்பார்கள் நண்பர்களிடையே கருத்து மோதல் ஏன் காலம் எல்லாம் சுமுகமாகவே இருப்போம் என்று

இப்படியான நேரங்களில் இருபாலரும் ஆண்கள் ,பெண்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நிலை பள்ளியில் வருவது இயல்பு .

விளையாட்டுப்போட்டிக்கு சில பாடசாலையில் விரும்பிய வர்ணம் கொடுத்து குழுப்பிரிப்பார்கள்.

 இன்னும் சிலர் பாடசாலையில் தமிழ்
வளர்த்தோர் பெயர் கொடுத்து நான்கு குழுவாக பள்ளியில் விளையாட்டுப் போட்டி வைப்பது இயல்பான ஒருவிடயம் .

விளையாட்டில் விருப்பம் இல்லாத புத்தகப்புழுக்கள் விளையாட்டு முன் ஆயத்தம் நடக்கும் நாட்களில் நூலகத்திலும் ,திரையரங்கிலும் கடலைபோட்ட பல மாணவர்களை நானும் பார்த்திருக்கின்றேன் .

உள்ளூர் விளையாட்டில் இருந்து கோட்டம் ,மாவட்டம் ,மாகாணம் தேசியளவில் என  விளையாடில் முன்னேற்றம் அடைய முதல்படி இந்த பள்ளி விளையாட்டுத்தான் .

மட்டைகள் சிலரின் பண வியாபாரக் குடையின் மோகக்தில் மற்ற விளையாட்டுக்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் தேசத்தில்!

 பல்துறை விளையாட்டில்  தங்கம் வாங்குவோர் பலருக்கு தேசத்தின் செங்கம்பளம் விரிக்கவேண்டியவர்களை விடுத்து ஒரு சிலரிடம் விளம்பர மோக ஒளியைப் பரவவிட்டு   பாமரமக்களின் கனவுகளை சிதைத்து வேலைவாய்ப்புக்களை உருவாக்காத,  ஒரு குட்டையில் ஊறவிடும் மட்டைகள் மேல் எனக்கு எப்போதும் வற்றாத  ஜீவநதிக் கோபம் .


விளையாட்டு ஒழுங்கமைப்பில் ரவியும் பார்திமாவிடம் அதிகம்  உரிமையுடன் தொடர்பைப் பேனவேண்டிய பொறுப்பினை பள்ளியின் விளையாட்டுப் போட்டி ஒழுங்கமைப்பு நிகழ்வுகள் கொடுத்த படியால் அவர்கள்   நட்புப்பரிவர்த்தனை அதிக சுழச்சி முறையில் இடம் பெறலாகியது .

விருப்பு வெறுப்புக்கள் தெரிந்து கொண்டதால்!

 ரவி தன் முதல் காதலை பார்த்திமாவிடம் சொல்வதற்கு எங்களிடம் ஆலோசனைக்கு வந்தான் .

.
வழமைபோல வவுனியா பஸ்தரிப்பு நிலையத்தின் கம்பி வேலியில் .அரட்டையில் இருக்கும் நம் நண்பர்களில் சிலர் அவனுடன் படித்துக் கொண்டிருப்போர்.

 எனக்கும் ஒரு இடம் அவர்கள் கூட்டணியில் எப்போதும் இருக்கும் .காரணம் எதிர்கால வேலை தேடல் பற்றி அவர்களுக்கு சில விடயங்களைப் பகிர்வதால்.

என்னுடன் சுரேஸ் ,முருகன், சந்திரன் என தொழில்துறை நண்பர்கள் இருக்கும் போது விக்னேஸ் அருகில் இருந்தான் .

இவன் ரவியுடன் ஒரே வகுப்பில் படிக்கின்றவன்.
"என்ன இன்று அவசரமாநாடா வேலை முடிந்தும் இங்க இருக்கிறீங்க நண்பர்களே என்றான்" ரவி.

வழமையாக நேரம் போக்கின்றோம்." நீ எங்க போறாய் மச்சான்"

" நானும் உங்களுடன் கதைக்க வந்தன்".

 டேய் தனிமரம் இப்ப எல்லாம் நம்மாளு அதிகம் நம்ம கூட கதைக்கின்றாள்!

 இந்த நேரத்தில் என் காதலைச் சொல்லப் போறன் .எப்படிச் சொல்ல முடியும் நண்பர்களே  ஜோசனை சொல்லுங்கள்!

அவனவன் வேலையில் இருக்கும் பிரச்சனைக்கே முடிவு தெரியாமல் ?இருக்கும் போது இனப்பிரச்சனைக்கு தீர்வுத்திட்டம் ஜோசிக்கும் அரசியல் கட்சிகள் போல் காதலுக்கு ஒவ்வொரு ஜோசனை சொன்னார்கள்.

 இதில் எப்போதுமே எதிர்க்கட்சி நான். எதிரிக்கட்சியும் கூட என்னிடம் தீர்வு கேட்கும் சின்னப்பையன் ரவியுடன் மீண்டும் மோதல் எதற்கு என்று சுயேட்சை வேற்பாளர் போல்  நடுநிலமை காத்தேன் .

மற்றவர்கள் தொலைபேசியில் சொல்லு
,கடிதம் வரை, நேரடியாகச் சொல்லு ,முகம்பார்க்காமல் சொல்லு என அப்போதைய சினிமா உலகநியதில் ஆலோசனை சொன்னார்கள்

".எனக்குல் வீரப்பா சிரிப்பு "அதைப்பார்த்த
 ரவியுக்கு கடுப்பு"

" டேய் இப்படிச் சிரிக்காத தனிமரம்."
" நீ வில்லண்டா இந்த விசயத்தில் எனக்கு முதல் எதிரி நீ தாண்டா"

 இரண்டு வீட்டையும் தெரிந்து வைத்துக் கொண்டு நம் காதலுக்கு வழி சொல்லவில்லையே!



"ரவி உன் காதல் என்று சொல்லு" ஒருதலைக் காதல். பொருந்தாக் காதல் ."இது பார்த்திமா ஏறுக்கொள்ள மாட்டால்!

" நீ தமிழ் படிக்கவில்லை மடல் ஏறுவது? என்று.
 கடைசியில் அதுதான் நடக்கப் போகுது."

" போடாங்.. என் வாயைக் கிண்டாத தனிமரம் "

"ஆமா இவர் வாயி  பேராதனிய பூங்கா "நான் கிண்டி மூங்கில் மரம் நடப்போறன் !

" போய் படிக்கிற வழியைப் பார் தம்பி."

 என்றுவிட்டு .

நானும், நண்பர்களும் படம் பார்க்க இந்திரா தியேட்டருக்குள் நுழைந்தோம்.


















 தேவதை என்  உயிரே !
என் மனதில் நீ ஒரு தொங்கள் கணக்கு.
தமிழ் படிக்கும் உனக்கு கலிங்கத்துப்பரனியில்
காடுபாடுதல் ஒரு  குறிப்பு!
 அதில் என் நினைவுகள் வெந்த நெருப்பு !
புவியியல் படிக்கும் என் நேரங்களில் எரிமலைக்குழம்பாக உன் எண்ணங்கள்!
பொருளியலில் நீ ஒரு சந்தைப் பொருளாதாரம்!
 நான் ஒரு கேள்வி உன் இதயம் என் நிரம்பல்!
வியாபாரத்தில்  நீ தனிக்கம்பனி.
 நான் ஒரு கூட்டனி  நாம் இணைந்தால் அது பொதுக்கம்பனி!
கையிருப்பு எப்போதும் சொத்துத்தான்  நீ என் மனசுக்குள் !
          காதலுடன் ரவி !

 இந்தக் கவிதை பின் ஒரு காலத்தில் பிரதி எடுக்கப்பட்டு  சந்தையில் நகர் வலம் வரும் என்று என்னாத வாலிபக் காதல்!

27 October 2011

நொந்து போகும் ஓர் இதயம்-11

//இந்தத் தொடரில் யாரும் அரசியல் கண்ணோட்டத்தில் கருத்துக் கூறி இத்தொடரின் திசையை மாற்றி விடாதீர்கள் உறவுகளே!
//
இனி உள்ளே போவோமா????










--///////______---
காலம் விரைவில் ஓடிவிடும்! ஆனால் வருவன் என்று சொல்லிப் போனவன் இன்னும் கார்காலம் முடிவிலும் வரவில்லையே என்று ஒருத்தி குறுந்தொகையில் நெஞ்சோடு புலம்புவாளே !

அப்படித்தான் ஒரு வாரம் என்ற என் பயணம் .நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடி, சிலரின் வெளியேற்றம் ,என என் திருகோணமலைப் பயணம் மூன்று மாதங்கள்  கடந்தது.

 இரண்டு இடங்களையும் அதிகம் கவனிக்கனும் என்பதால் நண்பர்களுடன் அதிகம் நெருக்கம் பேன முடியவில்லை.

  புதிய வருடம் விரைவில் சில வாரங்களை கடந்த நிலையில் மீண்டும் அமைதியாக வவுனியாவில் வேலையில் கவனம் செலுத்தும் போது!

 ரவி என்னிடம் வந்தான் .
"என்ன துரை கோபம் தீரலையோ? வீட்டுக்கு வாரதில்லை ஏன் ?"

"இல்லடா ஒரே வேலைப்பளு இடையில் வேலையில் பிரச்சனை.

 என் உயர் அதிகாரி வெளியேறிவிட்டார் அதனால் கொஞ்சம் அதிகமான ஓட்டம்..

சந்தைப்படுத்தலில் முதல் 5 வருடங்கள் மிகவும் அதிக விற்பனையை முன்னேற்றி எங்கள் திறமையை நிறுவனத்திற்கு வெளிக்காட்டி.

 அவர்களின் நன்மதிப்பைப் பெற்று ஏதாவது ஒரு அதிகாரியாக நிறுவனத்தின் சொகுசு அறையில் ஒரு அலுவலகத்தைத் திறந்து நம் இருப்பைத் தக்க வைப்பது என்பது!

 கல்லில் நார் உரிக்கும் செயல்.

 ஊழியர்களின் வேர்வையை உறிஞ்சி விட்டு காலகாலம் சாதாரண  நிலையில் அனுபவம் மிக்கவர்களை சில நிறுவனங்கள் ஊக்கிவிப்புத் தொகை கொடுத்து முன்னேற்றிவிடாமல் விட்டால்!

 எதிர் கம்பனிகள் இப்படியான சிலரை வலைவீசீ  தங்களின் நிறுவனத்தில் கொஞ்சம் உயர் பதவி கொடுத்து .

அவர்கள் திறமையை பயன்படுத்தி தங்களின் விற்பனையை அதிகரிக்கும் செயலில் இறங்கும்.

  அப்படியான போது அந்த நிறுவனங்கள் கார் வசதி,மேலதிக வருவாய் ஈட்டும் வசதி ,தங்குமிடம் வசதி என பல வகையில் பணம் புரலும் செயலைச் செய்து தம் திறமையைக் காட்டும்!

 தன் உழைப்புக்கு இன்னும் அங்கிகாரம் கிடைக்காத போது நேர்மையானவர்கள் மனதில் சஞ்சலம் வரும்.

 மூத்தவர்கள் பலர் இருக்க பின்னால் வந்தவர்கள் பின்கதவால் முன்னே செல்ல  அவர்களின் கீழ் வேலை செய்ய சிலருக்கு சங்கடமாக இருக்கும் போது அவர்கள் மாற்றுவழியில் வேறு நிறுவனத்திற்கு இன்னொரு பதவிக்குப் போவார்கள்!

 அப்படிப் போகும் போது தமக்கு இசைவானவர்களையும் அழைத்துச் செல்வார்கள்.

 என் மேலதிகாரியும் அப்படி மன உளைச்சலில் வேறு நிறுவனத்திற்கு முகாமையாளராக போனார் .

பதிவுலகில் சிலர் தமிழ் மணத்தில் இருந்து வெளியேறியது போல!

 என்னையும் வரும்படி அன்புக் கட்டளை இட்டார் .

எப்போதும் அவரின் பின்னால் சந்தோஸத்துடன் வேளை செய்பவன் நான்.

 சம  மட்டத்தில் வரும் சில புல்லுருவிகளின் போட்டி குழிபறிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள எப்போதும் அவரே பார்த்தசாரதியாக இருந்து என் விற்பனைப் பிரதிநிதி பதவியை பாதுகாதவர்.

 என் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு!

 அவருடன் நாமும் வெளியேறினால் இன்னும் ஒரு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் இலங்கையின் பொருளாதார தொடர் வீழ்ச்சியில் புதிய கம்பனிகள் தொடர்ந்து சந்தையில் நின்று பிடிப்பது கடினமான செயலாக இருந்து கொண்டிருந்தது. ஒரு புறம் என்றால் !

அவர்கள் போகும் நிறுவனம்  சந்தைப்படுத்தலில்  மொத்தமாக சகோதர மொழியினர்களையே வைத்திருந்தார்கள் .

இந்த நிலையில் நானும் முகமூடி  போடனும் சகோதரமொழிக்காரனாக .

காக்கைக் கூட்டில் நான் ஒரு குயிலாக இருக்க  விருப்பம் இல்லை எனக்கு.

 இந்த ஜோசனைகள் ஒரு புறம் என்றால்!நானும் என் நிறுவனத்திற்குத் தெரியாமல் ராஜாவைப் போல் ஒரு இன்னொரு வியாபாரத்தை மூவராக இருந்து செய்து கொண்டிருந்தோம்.

 நிறுவனச் சட்டப்படி இச்செயல் தவறு.


  அதுதான் கொஞ்சம் என்னை கட்சிதாவவிடாமல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு மசோதா.

 இந்த வியாபாரம் ஒரு லாட்ரிச் சீட்டுப் போல்தான்!

 .அரச கட்டுப் பாட்டுப்பகுதியில் இருந்து வன்னிப்பகுதிக்குச  செல்வதற்கு (அரசகட்டுப்பாடு இல்லாத வன்னிப்பகுதிக்கு )
அத்தியாவசியத் தேவைகள் அடங்கிய உலர் உணவுகள் வினியோகம் செய்வதற்கு.

  அக்காலப்பகுதியில் பல  பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்(co-op) என்ற அமைப்புத்தான்.

 அதிகம் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் அனுமதியளித்து இருந்தது .

அவர்கள் சிலர் குழுவாக வந்து வவுனியாவில் தமக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை சிலரிடம் கொடுபார்கள்.

 எந்தப் பொருள் அதிகம் தேவை அதில் அவர்களுக்கு எத்தனை வீதம் விலைகழிவு கிடைக்கும்.

 தங்களுக்கு என்ன அன்பளிப்புக் கிடைக்கும். என அவர்கள் விலாவரியாக விசாரித்து விட்டு கொழும்பு செல்வார்கள்.

 சிலர் வவுனியாவில் கொள்வனவு செய்வார்கள். அப்படி வவுனியாவில் செய்பவர்களுக்கு சில மாத கடன் அடிபடையில் அதிகம் பொருள்கள் அனுப்புவது ஒரு வியாபாரம்.

 அது கொஞ்சம் ரிஸ்க் ஆனவிடயம் என்றாலும் பணம் மீளவும் வரும் என்பது உறுதி .

என்பதால்
 காரணம் பலநோக்குச் சங்கம் அரசாங்கத்தின் ஒரு அமைப்பு பெயரலவில்.

 நானும், தேவன் முதலாளி ,மொயூத் பாய் அதில் கூட்டனிக் கட்சிகள்.

 ஒவ்வொரு லொறியும் உயிலாங்குளம் ஊடாக பயணிக்கும் போது சில லட்சங்கள் சில ஆயிரங்கள் எங்கள் கைகளில் புரலும் .

அதன் மூலம் விற்பனை வருமானம் கிடைக்கும்.

 வியாபார மொழியில்  கொன்வே என்பார்கள்.

 பாதுகாப்புக் கண்கள் சில இந்த லொறிகளை அனுப்பும் போது சிலரின் முக்கிய கையொப்பம் இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் வைத்திருந்தார்கள்.

  அவர்கள் அதற்கு வாங்கும்  பொற்கிழிகளை    ஆங்கில நாளேடுகள் இரண்டாம் பக்கத்தில் எழுதினால்! அந்த ஆய்வாளர் வீட்டுக்கு கைக்குண்டு பரிசளிக்கப்படும் .வீட்டுக் கண்ணாடிகள் சந்தியில் சிந்து பாடும்.

   அனுமதிக்கப்பட்ட பொருள்கள் அளவு ஒரு துரும்பாவது அதிகம் என்றால்!  அவை பறிமுதல் செய்யப்படுவதும், சில லொறிகள் திருப்பி இராணுவத்தின் பகுதிக்கு அனுப்பப் படுவதும் வாடிக்கை .

ஊடகங்கள் இத்தனை லொறி போனது என்று செய்தி போடுவார்கள். திரும்பி வந்ததைச் சொல்லமாட்டார்கள்.

 இதுதான் ஊடக நடுநிலை??? அக்காலகட்டத்தில் இருந்து சமாதான காலகட்டம் வரும் வரை சிலர் இப்படி வியாபாரம் செய்தார்கள்.

 நானும் ஒரு முகமூடி மனிதர் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களை இனம் கானுவது தானே ஒரு வியாபாரியின் திறமை ?அதில் தவறு இல்லை .

அப்படி வியாபாரத்தில் முன்னேறியவர்கள் பலரில் பின்னாலில் சிலர் பாராளுமன்றம்  போனார்கள்.

 ஒருவர் அமைச்சரானார்.

 மாட்டுவண்டிப் பயணம் அவரை பத்திரிகையில் இன்னும் அதிகம் பிரபல்யப் படுத்தியது.

 . அப்படி இருந்த வியாபாரம் நிலையால் நானும் வெளியேறாமல்  மூப்பனார் பிரதமர் ஆகும் நிலமை இருந்தும் மெளனமாக இருந்த கலைஞர் போல்!


 என் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை.

  இவையாவும் தெரியாத ரவி.
"  அவன்  திட்டிய படியால் தான் நான் அவனுடன் சந்திபையோ, வீட்டுக்கோ  வரவில்லை என்று கேட்டது !
.
அப்புறம் சொல்லு எப்படிப் போகுது படிப்பு?

  தொடரும்

25 October 2011

நொந்து போகும் ஓர் இதயம் -10

படம் பார்க்கப் போனோம்.
 எனக்குப் பிடித்த படம் அவளும் மிகவும் ஆசைப்பட்டாள். தனியாக மதவாச்சித் திரைக்கு ஒரு பெண் போகேலுமோ ?

ஏற்கனவே தியேட்டரில் இரண்டு காட்சி தான் ஓட்டுவாங்க. எல்லாம் வாரது பொடியங்கள் செட்தான் .

எப்படி எல்லாம்  நோண்டி பண்ணுவாங்க என்று உனக்குத் தெரியாதா.?
 முன்னர் பள்ளிக்கூடத்தில் யார் யாரோ பின்னால் வீட்டு வரையும் காவலுக்குப் போனதில்லையா?

 ஒரு அன்பு, பாதுகாப்புத் தானே  ?அதற்காக காதல் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் நல்லாவா இருக்கும் .

ஒரு மதினி கூட படம் பார்க்கப் போனால் உடனே தப்பா பேசுவதா ?ஏன் புரிந்துணர்வு இல்லாமல் வெறும் இச்சை என்பதா !

 விகாரைக்குப்  போவது எல்லா பிக்குமாரும் இனவாதிகள் அல்ல என்பதற்காக .

இங்க இருக்கும் பிக்கு நல்ல போதனைதான் சொல்கிறார் .

அன்பு, பாசம் கடமை ஒழுக்கம் என்பதை பக்குவமாக விளக்குகின்றார்.

 நான் புத்தன் போதனையை மதிக்கிறவன்.  சமயத்தை நேசிக்கிறவன். பிக்கு காலில் விழுவது அவரின் ஆசீர்வாதம் என்னை நல்வழிப்படுத்துகின்றது என்பதால் .

"மனதில் எனக்கு வன்மம் இல்லை சாலிக்கா ஒரு தேர்ந்த புத்தன் சிந்தனையை உள்வாங்கியவள் ."அதனால் தான் போயா நாட்களில் நாம் போவது.

" நல்ல தோழியாக ஒருத்தி இருக்க முடியாதா?
" அவள் யுத்த நெறிதவறும் போர்க்கால எல்லைப்படையை விட்டு .

வெளியில் வந்து.
 சிறுவியாபாரத்தை நடத்தட்டும் என்பதால் கடன் உதவிக்கு தெரிந்தவரை வைத்து சிபாரிசு செய்தேன் .

"அக்கரையான ஒருத்தன் என்பதால் பியதாச ஐயா என் மீது மரியாதையாக பேசலாம் என்ற கோணத்தில்" நீ ஏன் சிந்திக்க வில்லை ?

.மூத்தவள் உழைப்பில் பேயரன்- லவ்லி பூசிக்கொண்டு.  வழிகளில் நின்று போறவாரா பெண்களை நையாண்டி செய்யும் இளசுகளுடன் ஊர் சுற்றாமல்  குடும்பப் பொறுப்பை ஆண்மகன் தாங்கட்டும் என்று பண்டார தம்பியை வேலையில் சேர்த்துவிட்டன்.

 அவனுக்கு படிப்பு வரல தெரிந்ததைக் கொண்டு வீட்டுக்கு நல்லவனாக தன்  எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும் என்று எண்ணும் ஒரு மூத்தவனாக ஏன் சிந்திக்க கூடாது பாய்?

"நீ அதிகம் புத்தகம் வாசிப்பது இப்படி மற்றவர்களை மடக்கும் செயலுக்கா தனிமரம்""

 என் ஜோசனை சாலிக்காவை நீ எல்லைப்படையில் வேலை செய்பவள் என்பதால் அவமதிக்கின்றாய்.

 இல்ல சிங்கள இனம் என்று பயப்பிடுகின்றாய் என்கிற எண்ணம்! இதில் ஏதாவது ஒன்று தான் சரியான காரணமாக இருக்கனும் .

ஏண்டா அக்ரம் இப்படி குதர்க்கம் செய்கிறாய்?

" அவள் எனக்கு நல்ல தோழி மட்டும் தான். காதலி இல்லை .இருக்கவும் முடியாது !உறவுகள்  வன்னியில் என்ன நிலை, எப்படி இருக்கு ,என்று அதிகம் கவலையுடன் விடியும் பொழுதுகள் அதிகம்."

 "தந்தை என்னை நம்பித்தான் இந்த வேலைக்கு விட்டவர். அவரை துன்பத்தில் ஆழ்த்தும் எந்த செயலிலும் நான் இறங்க மாட்டன்.

 "காதல் என்ற பூம்பாறையில் பொட்டு வைக்கும் எண்ணம் எனக்கில்லை. கடமை இருக்கு,  கனவுகள் இருக்கு ,இந்த வேலையில் உயர் பதவிக்குப் போகனும் என்ற தேடல் இருக்கு புரிஞ்சுக்க" அக்ரம்.

" சும்மா நீயா ஏதும் கற்பனை செய்துக்காத"

 வா நாங்கள் போகலாம் திருகோணமலையில் ஒரு வாரம் வேலை செய்யனும்.

" மேல் அதிகாரி வருவார் அதன் பின்புதான் நான் திரும்பிப்போகலாம்!".


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் அவர்கள் உறவுகளுக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்நாள்(26/10/2011)  எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்!

 தனிமரம் நேசன் குடும்பம் சகிதம் வாழ்த்துகின்றோம் .

24 October 2011

நொந்து போகும் ஓர்  இதயம் -9

//இந்தத் தொடரில் யாரும் அரசியல் பார்வையில் கருத்தை நோக்க வேண்டாம் உறவுகளே!//

அனுராத புரம் போகும் சொகுசுபஸ்க்கள் மதவாச்சியிலும் நிறுத்துவார்கள் .

இனித் தொடருக்குள்...,>>>>>>>>>


 அன்று அக்ரம் தாமதமாக வருவான் என்பதால் பியதாசவுடன் அவர்கள் வீட்டில் கதையில் இருந்துவிட்டு  அக்ரம் வீட்டிற்குல் நுழைந்தேன்.

 பானு இரண்டாவது மகனைப் பெற்று சில வாரங்கள் என்பதால் அதிகம் அவளுக்கு
சிரமம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை.

" நானா இன்று வாரது தெரியாது இல்லன உம்மாவை கூப்பிட்டிருப்பேன் என்று அவள் சொல்லும் போதே"".

 இல்ல பானு எனக்கும் திடீர் என்றுதான் திருகோணமலை போகச் சொல்லி பெரியவர் சொன்னார்..

.அக்ரமும் இந்தவாரம் அங்குதானே வேலை. அதனால் இருவரும் ஒன்றாகப்போவோம் என்றுதான் இங்கு வந்தேன் .
என்று நான் மதவாச்சிக்கு வந்த விடயத்தை விளக்கினேன்.

சில நிறுவனங்கள் திருகோணமலை,வவுனியா,மன்னார் பகுதியை ஒரு குடையின் கீழ் விற்பனைப் பிரதிநிதிகளிடம் கொடுப்பது நடைமுறை அதிக கிரயச் செலவினைத் தடுக்கும் வழிமுறையாகும்.

 இன்னொரு புறம் அதிகம் மனித வலுவினைக் குறைக்கும் வியாயார தந்திரம்.


நானா வரவர மாத்தாயா ஹரி லச்சனாய்! மாத்தயவகே எக்கனக் பதினே. ஜீவித்த சுந்தராய் !


என்று ஒரு குயில் கூவுது அதுவும் இலங்கையின் இளம்குயில் என்று பானு என்னிடம் பீடிகை போடும் போதே அக்ரமும் வந்தான்!

"உது எங்கே  போய் முடியுமோ தெரியாது? என்று நானும் ஜோசிக்கின்றன். என்றவாரே தன் கையில் இருந்த தாஸ்தாவேஸ் அடங்கிய பையினை மேசைமீது வைத்தான்" அக்ரம்.

 ஏன் பானு இன்று நான் தான் கிடைச்சனா கொத்துப் பரோட்டா போட?
 ரெண்டுபேரும் முடிவே பண்ணீட்டீங்களா? பக்கத்து வீட்டுக்காரனாகி வேலிச் சண்டை போட என்று நான் கேட்டதும் பானு ஏதும் சொல்லவில்லை.

 அக்ரமின்  தங்கை எனக்கும் அக்ரமுக்கும் கோப்பி கொண்டது வைத்தாள்.

 சரி நான் ஒன்றும் கேட்டகல இன்ஸா அல்லா!

நானும் அவர்கள் வீட்டில் இரவு சாப்பாடு முடித்து  வழமையாக அதிகாலையில் போகனும் என்பதால் அமைதியாக .
இரவு நித்திரை க்குச் சென்றேன் என்றாலும் என் சிந்தனை எல்லாம் எதிர்காலம் என்ற ரவியைப் பற்றியதாக இருந்தது.

 அவன் என்னிடன் இப்படி பேசியிருக்கக் கூடாது. இவ்வளவு நேரத்திற்கு ஒரு அழைப்பைக்கூட எடுக்கவில்லையே. அவனுக்கு இத்தனை விசமன் என்றாள் எனக்கு எப்படி இருக்கும் என்று ஜோசிக்கவில்லை என்ற சிந்தனையில் என் கண்கள் மூடிக்கொள்ள!

 அதிகாலை என்

அலராம் அடிக்க நானும் எழுந்து என் அன்றாட கடமை முடித்துக் கொண்டு அக்ரம் கூட அவனது காரில் திருகோணமலைக்குப் புறப்பட்டோம் .

அதிகாலையில் ஹபரன ஊடாக பயணம் செய்வது மனதிற்கு சந்தோஸம் என்றாலும்!

!அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்த பின்பே பயணங்களைத் தொடங்க முடியும்.

 ஹபரன தாண்டி மன்னம்பிட்டியவில் தான் அதிக நேரம் சோதனைச் சாவடியில் காத்திருக்கனும்.

 கிழக்குமாகாணப் போக்குவரத்து பிரதான மார்க்கம் இந்த வழிதான்.

 பல பாதுகாப்புக் கண்கள், சில உறங்காத கண்மணிகள் பார்வை என எப்போதும் ஒரு அச்சம் மனதில் இருக்கும்.

 என் போன்ற சாதாரண பயணிகளுக்கு இந்தப்பாதை தாண்டும் வரை இராமனை சுமந்திரன் வனவாசம் அனுப்பி விட்டு அயோத்தி வந்த நிலை.


 ஒருவாறு நாம் இருவரும் பாதுகாப்பு சோதனைகள் தாண்டி. தம்பலகாமம் ஊடாக திருகோணமலை போக வெளிக்கிட்டம் .

தம்பலகாமம் இயற்கையான விவசாயப் பகுதி அதிகம் காடுகளாகிவிட்டது அங்கிருந்தோர் விரட்டப்பட்டதால். நல்ல கோரைப்புல்லும் குருஞ்சாய் இலைகளும் பார்ப்போர் மனதில் இந்த இடத்தில்!இருந்து மீண்டு போக விரும்பமாட்டினம்.

  சில இடங்களில் வழிவியாபாரிகள் கொண்டு வந்த  நல்ல எருமை மாட்டில் செய்த தயிர் கித்துல் கருப்பட்டியுடன் வைத்திருப்பார்கள்.  பரத்வாஜர் தவசிமாடத்தில் இன்சுவை உண்டோர் பரதன் படைபோல் அத்தனை சிறப்பு மிக்க  தயிர் இந்தப்பிரதேசத்தில் கிடைக்கும்.

 நானும், அக்ரமும் நமக்கு எப்போதும் பழக்கமான அந்த வியாபாரியிடம் வாங்கி .அருகில் இருந்த இலந்தப்பழ மரத்தடியில் நம் வாகனத்தை நிறுத்தி விட்டு குடித்துக்கொண்டிருந்தோம்!

"என்ன தனிமரம் ஒரே டல்லா இருக்கிறாய்" ஏன் சாலிக்கா அழைப்பு எடுக்கவில்லையோ?

 "உனக்கு குசும்பு கூடிப் போச்சு நான் இன்னொரு நண்பனைப் பற்றி ஜோசிக்கின்றேன்."

சும்மா ரீல் விடாத எனக்குத் தெரியும். நீ சாலிக்காவுடன் நேற்று படம் பார்க்கப் போனது . மனசுக்குள் ஏதும் இல்லை என்று பொய் சொல்லாத நானும் ஒரு குடும்பஸ்தன் மறந்திட்டியோ?

அக்ரம்
பாய்  நீ என்ன ஆமியில் சேர்ந்திட்டியோ விசாரிக்கிறாய் ?

"என்னக்குத் தெரியும் தனிமரம் இது அதுதான் அவள் கூட நீ பன்சாலைக்குப் போறாய் .

அவளின் தம்பி பண்டாரவுக்கு வேலை எடுத்துக் கொடுத்திருக்கிறாய் .

வங்கியில் கடனுக்கு ஏதோ பொறுப்புக் கடிதம் யாரிட்டையோ வாங்கிக் கொடுத்திருக்கிறாய் என்று எல்லாம் பியதாஸ அங்கில் சொல்லியிருக்கிறார் அவர் கூட உன்னை இப்போதெல்லாம் மிகவும் மரியாதையாக கதைப்பதைப் பார்த்தால்" எனக்கு அப்படி ஒரு ஐயப்பாடு வருகின்றது .
அக்ரம் பாய் மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீங்க! .
 --

மாத்தயா ஹரி லஸ்சனாய்- அதிகாரி நல்ல அழகு

மாத்தயாவகே எக்கனக் பதின்னே- அவரைப்போல் ஒருவரைக் கலியாணம் முடிப்பது.
ஜீவித்த சுந்தராய்- வாழ்க்கை வசந்தம்

பண்சாலை- புத்தகோயில்/விகாரை/மடாலயம்.

இதயம் விரியும்....

21 October 2011

என் உயிரைக் கொல்லாதே!

சிலபாடலின் பின் சில சுவாரசியமான, மற்றும் சில புரியாத விடயங்களும் பின்னால் ஒழிந்து இருக்கும்.

 அப்படியான விடயங்களை பலருடன் பகிரும் ஆவல் முன்னர் இருந்தது. இப்போதெல்லாம் சராசரி ரசிகனாகவும், சிலதை விலக்கியும் போகவேண்டிய உணர்வாளனாக காலச் சக்கரம் !

இந்த தனியார் வேலையில் சேர்ந்த பின் நானும் அதிகம் பணி நிமித்தம் சில பகுதிகளுக்கு  ஒரு வாரம் மற்ற நண்பர்களுக்கு உதவும் நோக்கில் பலபகுதிகளுக்குப் போய் இருக்கின்றேன்.

 அப்படிப் போன இடங்களில் சிலரைச் சந்தித்து அவர்களுடன் கொஞ்சம் பழகும் வாய்ப்பு வந்திருக்கின்றது.

 அப்படி நான் நுவரெலியாப்பகுதியில் வேலை செய்யும் போது அறிமுகமானவள் தாட்சாயினி..

தக்கனின் மகள் அல்ல சாதாரண தேயிலைத் தோட்டத்து கொழுந்து எடுக்கும்    சுப்பையாவின் கொழுங்கொடி.

 இவள் பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானவள். வீட்டில் மூத்தவள் பொருளாதாரத்தில் முன்னேறவும் தான் கற்ற கணக்கியல் துறையை முடக்கிவிடாமலும் வருமானம் ஈட்டவும் தனியார் நிறுவனத்தில் பிரதம கணக்காளராக இருந்தாள்.

எங்களுடைய ஏகவினியோகஸ்தராக இருந்த அந்த தனியார் நிறுவனத்தின் கணக்கு வழக்கைப் பார்ப்பவள் என்பதால் . சில நேரங்களில் அதிகமான நேரம் எங்களுடன் பணிபுரிவதாள் தாமதமாகி பணிமுடியும் நாட்களில் அவளை அவர்கள் வீட்டில் கொண்டுபோய் விடும் நிலைகளும் இருந்தது .

சில நாட்களில் அவளும் பணிதாமதமானால் அன்பாக கேட்பாள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டே விடும்படி .

அந்தப்பகுதியில் சில சகோதர மொழி நண்பர்கள் வேலையற்று இருக்கும் வேங்கைகள் .இவளுக்கு வேட்பு மனுத்தாக்கள் செய்வதால் இது ஒரு தொல்லையாக அவளுக்கு இருந்த தாள்!

 நாங்கள் யாரும் இப்படி உடன் போகும் போது இம்சையாக இருக்காது என பின் ஒரு கோப்பி நேரத்தில் சொன்னாள்!

தட்சாயினி சுமாரான அழகு எதையும் ஆராய்ந்து பார்க்கும் கூர்மையான அறிவு.

 சில நேரங்களில் நாம் அவசரத்தில் விடும் விற்பனைப் பிழைகளை விரைவாக சுட்டிக்காட்டுவாள்.

 நான் அவளுடன் தயங்காமல்  விற்பனை பற்றி சிலநேரங்களில் அதிகம் பேசும்போது அவளுக்கு இம்சையாக இருக்கும் போது அருகில் இருக்கும் வானொலியில் மிகவும் சிறிய ஒலியுடன் பாடல் ஒலிக்கவிட்டு என் பேச்சை திசைமாற்றத் தெரிந்தவள்

.எனக்கு இருக்கும் பாடல் ரசனையைத் தெரிந்து பிடித்தபாடல் ஒலிக்கும் போது உங்கள் பாடல் போகுது சேர் என்பாள் வேடிக்கையாக.

  இப்போதும் போல் அப்போதும்  ஒரே பாடலை திருப்பித்திருப்பி என் வாகனத்தில் ஒலிக்கவிடுவதால்.

 என்னுடன் வரும் போது சில நேரங்களில் "இந்தப்பாட்டில் ஏன் இப்படி உங்களுக்கு ஈடுபாடு "என்பாள்?

 நானோ "சிலபாடலுக்கு தாட்சாயினி விளக்கம் கொடுக்க நினைத்தால் ஆயிரம் காரணம் சொல்ல முடியும் "என்றால் .

"சார் நீங்க இந்த வேலைக்கு வராமல் அங்கேயே போயிருக்கலாம் என்பாள்"

நான் பட்டு நொந்ததை இவளிடம் சொல்லி ஏன் புலம்பவைப்பான். என்று விட்டு சொன்னே!

" நான் விரைவில் நாட்டை விட்டுப் போய் விடுவேன் பிறகு எதற்கு என்று"

" அது எப்படிச் சேர் உங்களப்போல சிலர் இந்த சந்தைப்படுத்தலில் இருந்து விட்டு வெளிநாடு ஓடும் "சூட்சுமம் என்றாள்?

.இது நாட்டையாளுவோரின் தூரநோக்கு இல்லாமையால் இப்படி ஓடவேண்டியிருக்கு என்று மட்டும் சொன்னேன்.

" நீங்கள் எல்லாம் சுயநலவாதிகள் சேர்" . அவள் மனதில் இருக்கும் எண்ணத்தை என்னால் மாற்ற முடியாது.

 நான் மீளவும் என் நிரந்தர  பணியாற்றும் இடத்துக்கு (வவுனியாவிற்கு )திரும்புவதால் அவளை மீண்டும் காணவில்லை .

அவளுக்கும் இப்பாடல் பிடிக்கும் என்பது மட்டும் நிஜம்!

இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் பிரமாதம். பழனிபாரதியின் கவிதை கிறங்கடிக்கும்!எனக்கு எல்லாப்பாடலும் பிடிக்கும் .

இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும் !
பாடல் பாடும் சித்திராவின் குரல் வளம் ஏற்ற இறக்கத்தில் காட்டும் பாவம்.

கோபால் ராவ் குரல் தடித்தது என்றாளும் ஒரு ஆண்மகனின் கம்பீரம் தெரியும் !

இசையில் இவர்கள் பாடலின் உயிரை தந்து இருப்பார்கள்.

ரகுமான் அறிமுகப்படுத்திய பாடகர்களில் கோபால் ராவ் ஒருவர். பாடகராக இருந்தவர் இந்தப்படத்தில் இசையமைப்பாளராகவும் சேர்ந்து கொண்டார்.

இந்தப்படம் வெளியாகி இருந்தால்
 இன்னொரு வாரிசு தமிழ்த்துறையில் சில படங்கள் நடித்திருக்கும் .

சிம்ரனுக்கு இன்னும் சில படவாய்ப்புக்கள் கிடைத்திருக்கும்.
அந்தப்படம் கோடீஸ்வரன்! வாரிசு எமி குஞ்சுமேனன்.

இன்று சங்கர் என்ற இயக்குனரை தமிழ்சினிமாவுக்கு தந்தவர் K.T.குஞ்சுமேனன் அவர் தூக்கிவிட்டவர்கள் பலர் இன்று பிரபல்யமாக இருந்தாலும் இந்த நொந்து போய் இருக்கும் தயாரிப்பாளர் பற்றி யாரும் அக்கறைப்பட்டதாக தெரியவில்லை!

அந்தப்படத்தில்  மூவர் இசையமைப்பாளர்கள்.


 கோடீஸ்வரன் இசை  ஆகோஸ்.

 இதன் விரிவு --ஆ-ஆனந்த்




                                    கோ- கோபால்ராவ்
ஸ்-ஸ்வரசர்மா.


 இவர்களின் முக்கூட்டணிதான் ஆகோஸ்.




 அதன் பின் வேற படங்களுக்கு இசையமைத்த தாக தெரியவில்லை .

ஆனந்த முதலில் கொடுத்த வெற்றிகள் கூட இந்தப்படம் வெளிவராமல் போனதால் கானமல் போய்விட்டார்!

பாடல்காட்சி எப்படி இயக்கியிருப்பார்கள் என்று ஒரே ஆர்வமாக இருந்தேன் விடியாத இரவாகிப்போனது வெளிவராத இந்தப் படம்.


 ஆனாலும் என்னிடம் இப்படத்தின் முழுப்பாடலும் விருப்பத்தேர்வாக இத்தனை வருடங்கள் ஒரு உடலின் இரத்தோட்டம் போல் ஓடுகின்றது.

 மனதில் எழும் சலனங்களின் இப்பாடலைக் கேட்கும் போது மனசு அதிகாலை ஆற்றினைப் போல் அமைதியாக இருக்கின்றது!


பழனிபாரதியின் ஆங்கில வரிக்கலப்பில்லாத அற்புதப்பாடல்களில் இதுவும் ஒன்று

!பழனியின் கவிதை ஒரு பெண் எப்படி ஆணுக்கு தன் அழகின்  அதிகாரத்தையும் மயக்கத்தையும் கொடுப்பாள் என்பதையும் சவால்விடக்கூடிய தன்மையுள்ளவள் என்பதை மிகவுல் நளினமாக சொல்லியிருப்பார் !

கிளியோபட்ரா பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும் அவள் ஒரு அழகு தேவதை என்பதை மட்டும் நானும் நம்புகின்றேன்!

கவிஞர்களுக்கும் , வாசகருக்கும் ஒவ்வொரு உணர்வைத் தரக்கூடியவள் கிளியோபட்ரா!

 தபால் அட்டை போய் தொலைபேசி வந்தாலும் இன்னும் மனசு அந்த தபால் அட்டை அனுப்பிக் கேட்ட பாடல்களைத்தான் பிரிந்து வரமுடியாத காதலியின் வழியணுப்பைப் போல் மீளவும் நாடுகின்றது .

  நீங்களும் கேளுங்கள் தனிமரத்தின் வலையில்.

http://s01.download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kodeswaran/Naan%20Kezy%20Naattu%20-%20TamilWire.com.mp3








                       

20 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-8

சிலப்பதிகாரத்தில் மாதவி தொடக்கம் வானம் படத்தில் அனுஸ்கா முதல் இந்தப் பாத்திரங்களை விரும்பியா செய்கின்றார்கள்?


 சமூகத்தில் நடக்காமல் இருக்கவில்லைத்தானே!
 காலகாலம் இது தடுக்க முடியாது.

 தாய்லாந்து மங்கைகள் விரும்பி உடல் விற்பதில்லை. வறுமை அல்லது இன்னொரு தொழில் .ஜப்பானில் அமெரிக்கா பாதுகாப்புப் படை வீரர்கள் உடல்பசி தீர்க்க அங்கே நடக்கும் சீரலிவை சர்வதேச நாளிதல்கள் தாங்கி வந்தாலும் பின்னாள் மறைக்கப்படுகின்றது.

 . இந்த விடயங்களை தாங்கி அதாவது உடல் பசியைத் தீர்த்தவர்கள் பலர் பெண்கள் பெயரில் தன் தேன் நிலவு இரவு மறக்கமுடியாத நாட்கள் என்று சகோதரமொழியில் சிற்றிதல்கள் பல (ஆரலிய,பிந்து,ரந்துரு,ரோச,) வாராவாரம் வெள்ளி, புதன் கிழமைகளில் வெளிவரும்.

 இந்த இதழ்கள் வந்த வேகத்தில் விற்பனையாகிவிடும்.

 பல இராணுவச் சிப்பாய்கள் சில கடைகளில் சந்தாதாரர்களாக இருந்தார்கள்.
 நண்பர்கள் குழுவில் சிலர் இதை வேலை நேரத்தில் எங்காவது வாகனத்தை நிறுத்திவிட்டு வாசித்து விட்டு ஒழித்து வைத்து விடுவோம்.

 இமேச்  பிரச்சனை அப்போது. நம்மவர்கள் கண்களில் பட்டால் மானம் காற்றில் சொந்தச் செலவில் சூனியம் வைப்பார்கள்.

 சமயத்தில் சோதனை செய்யவரும் படையினர் இந்தப் பத்திரிக்கையைக் கண்டால் நமட்டுச் சிரிப்புடன் சோதனை செய்யாமல் பத்திரிக்கையை கொண்டு போய்விடுவார்கள்.


 என் நண்பர்கள் வாகனம் சோதனைச் சாவடியில் அதிக நேரங்கள் நிறுத்தப்படும் .

நானோ விரைவில் வெளியேறிவிடுவேன் இரட்டைப் பெரியகுளம் பகுதி என்றாளும், மன்னார்ச் சாவடி நுழைவாயில், நானாட்டான் பகுதி என்றாளும்,

 என் வாகனத்திப் முன் பகுதியில் இந்தப்பத்திரிக்கை சிரித்துக்கொண்டிருக்கும்.

 இது எல்லாம் ஒரு வியாபார தந்திரம் கில்மா பதிவு போட்டு ஹிட்ஸ் கொடுப்பது போல்தான்!

அன்று வாங்கிய அந்த இதழ் என் பின்புற பொக்கட் இல் இருப்பது சாலிக்காவுக்குத் தெரியும்!
  அதை எடுக்கவே என் பின்புறத்தின் பொக்கட்டில் கைவைத்தாள்.

சில வார்த்தைகள் விளங்கா விட்டாள் அவளிடம் கேட்டாள் சொல்லுவாள் எனக்கும்  அவளுக்கும் வயது ஒன்றே வித்தியாசம்.

 நாங்கள்  இருவரும் அனுராதபுரம் போகும் சொகுஸ பஸ்சில் ஏறினோம்   வழிகள் ஊடே அவள் அந்த இதழை படித்து விட்டு தன்  வீட்டில் சாப்பிடுங்கோ என்று என்னை நச்சரித்தாள்.

 இல்லை இன்று அக்ரம் வீட்டில் தான் சாப்பாடு காலையில் அவனுடன் திருகோணமலை   போகனும் என்றேன்.

 அவர்களின் பொருளாதார நிலை அறிந்தவன் நடைமுறைகள் எங்களுக்குத் தெரியும்.

 அதையும் தாண்டி இப்போதெல்லாம் சாலிக்கா என் மீது அதிகம் உரிமை எடுத்துக் கொள்வாள் இதனை தொடரக்கூடாது என்று என்மனதிற்குல் சங்கல்ப்பம்  கொண்டேன் !

பேஜர் எனக்கு நிறுவனம் கொடுத்த காலத்தில் இருந்து சாலிக்கா அனுப்பும் குறுஞ்செய்தி தொல்லை தாங்காமல் தான் கைபேசிக்கு மாறினேன்!

 ஆனால் அதன் பின்பு இன்னும் அதிகமான தொடர் குறுஞ்செய்தி அனுப்புவாள்.
 இதை எல்லாம் நானும் அனுமதிக்கக் முடியாது.

  என்று ஆரம்பத்தில் அவளுக்கு சொல்லியிருந்தேன் .

"உங்கள் அளவுக்கு யாரும் புரிந்துகொள்ளவில்லை என்னை "என் ராஜகுமாரன் வரும் வரை ஒரு நண்பியாக என்னை நடத்த மாட்டாயா ?தனிமரம் என்று அவள் வைக்கும் ஒப்பந்தம் என்முன்னே!

 இருக்கும் போது நானும்  பண்டாராநாயக்க கிழித்துப் போட்ட செல்வா ஒப்பந்தம் போல் இல்லாமல் தமிழ்ர் கூட்டணிபோல் மதில் மேல் பூனைதான் .

வவுனியாவில்  எங்காவது குண்டு வெடித்தால் ,துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தால் அவள் கடமை புரியும் செட்டிக்குளம் பகுதியில் இருந்து கைபேசியில் அழைத்து நலமாக இருக்கின்றேனா ?
என்று கேட்பாள் மிகவும் வெகுளித்தனம் அவள் !

மாத்தயா என்று என் பெயரையும் சேர்த்துச் சொல்லும் போது.
மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும்.

  என்றாளும் நடைமுறைச் சிக்கல்கள் அறிந்தவன் பிழைவிட்டால் வரலாறு மன்னிக்காது என்று பிரமிள் கவிதை ஒன்று சொல்லும் .


மாத்தயா- அதிகாரி
தொடரும்

18 October 2011

நொந்து போகும் ஓர் இதயம்-7

//இந்தப் பாகத்தில் யாரும் தயவு செய்து அரசியல் சாயம் பூசி என் தொடரை திசைமாற்றி விடாதீர்கள் உறவுகளே!-//

:>>>>>>>>>>>>>>>$$$$$$>>>>>>>>>>>
செவ்வாணம் சேலைகட்டும் அந்தி நேர சந்திரோதயம் அவள் அழகு. பார்ப்போர் இவள் என்னுடன் கூட கைபிடித்து மஞ்சத்தில் தஞ்சம்  அடையாளா? என  ஏங்கும் வஞ்சி ஆம்பல் பூவை கையில் ஏந்தும் இளவரசி.

 ஆனாலும் ஏழைக் குடும்பத்தில் எல்லைக்கிராமம்  பூனாவையில் பிறந்த பியதாசவின் மூத்தமகள் சாலிக்கா.

 அக்ரம் வீட்டுக்கு அருகில் குடியிருப்பவள் அக்ரம் வீட்டுக்குப் போகும் பழக்கத்தின் பின்பு எனக்கு கிடைத்த நட்புத் தோழி மிகுந்த சிரமத்தின் மத்தியில் சாதரண


 தரம் படித்து உயர்தரம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தும் பொருளாதார இக்கட்டான நிலையில் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்திற்காக தன்னை தீபம் ஆக்கியவள்.


 எல்லைக்கிராமத்தில் பிறந்த ஒரு குற்றத்திற்காக இவர்கள் குடும்பம் போல் பலர் அந்நாட்களில் பாதிக்கப்பட்டார்கள் .

வெளிமாவட்டத்து சில காடையர்களின் வரவினால் பாலும் தேனுமான எல்லைக்கிராமத்து தமிழ்-சிங்கள உறவில் விரிசல் வந்து ஒட்ட முடுயாத வெடிப்பினை கொடுத்துவிட்டது.

 பூனாவையில் வாழ்ந்த இவர்கள் பின்னர் மதவாச்சிக்கு பின் நகர்ந்தார்கள்.
 பூனாவ வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் இருக்கும் அழகு இயற்கைப் பூமி.

 இங்கு விவசாயம் சிறுபயிர்ச் செய்கை செழிப்பாக இருந்தது.

அங்கு விற்கப்படும் தொதல் என்கின்ற  சக்கரைக்களிச் சுவை என்றும் எனக்குப் பிடிக்கும்.

பிரேமதாச அரசாங்கத்தின் ஆட்சியில் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பவும், மக்களிடையே இனவாதத்தை பெருக்கவும், கொண்டுவரப்பட்ட திட்டம் தான். ஊர்காவல் படைத்திட்டம்.

  மக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சாதார மக்கள் மனங்களில் பிரிவினை வாதத்தை எற்படுத்த காரணமாக இருந்த  அன்நாளைய பாதுகாப்பு அமைச்சர் பின் எப்படி அழிந்து போனார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

 அந்த திட்டத்தால் அதிகம் பாதித்தவர்கள் குடும்பத்தின் துயரங்களை மேட்டுக்குடி ஊடகங்களும் சரி இலக்கியங்களும் சரி இரு மொழியிலும் பதிவு செய்ததாக என் பார்வைக்கு எட்டிய தூரத்தில் இதுநாள் வரை நான் அறியேன்!

எல்லைக்கிராமத்துக்குள் புகுந்து வெட்டினார்கள் ,கொள்ளையடித்தார்கள் என்று சகோதர மொழி ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்தவர்கள்  இது உண்மையில் எந்தக்குழு

செய்தார்கள் அவர்களின் திட்டம் என்ன என்பதை ஆராய்தார்களா? நான் அறியேன் !

கொதி நிலை மக்களை அச்சத்திலும், சந்தேகத்திலும், இருக்கும் காரியங்களை கச்சிதமாக செய்தார்கள்.

 தங்கள் இனத்தவர்களாலே தங்கள்  மகளீர் வாழ்வை சூறையாடிய காடையர்கள் பற்றி எந்த செய்தியும் வராது.

 முக்கிய நாழிதலில் வந்தாலும் திரிவு படுத்தப்பட்டு மக்களிடம் போகும் போது அதற்கு புலிச் சாயம் பூசுவார்கள்.

 பல பெரும்பாண்மை மக்களுக்கு புலிகள் ஒரு போதும் பெண்களை சீரலித்தவர்கள்,வன்முறை செய்பவர்கள் அல்ல என்று புரிந்து கொண்டதால் அவர்களின் சில திட்டங்கள் தவுடு பொடியாகியது மறுக்க முடியாத உண்மை!

 பின் சமாதான தேவதை காலத்தில் இந்தப்படையில் சீர்திருத்தம் செய்வதாக செல்லியே இன்னும் நாறடித்த வரலாற்றை இந்தப்பூமியில் எல்லைக்கிராமத்தில் வாழ்ந்து,  இதே எல்லைக்கிராமத்தில்  வறுமையிலும் முன்னுக்கு வரும் இலக்கியவாதி ஒருவன் என் சினேகிதன்   எதிர்காலத்தில் நாவலாகப் பதிவு செய்வான்.

 அவன் படைப்புக்கள் மக்களிடம் போகுமா என்பதை காலம்தான் பதில் சொல்லனும்!

யுத்த செய்தியை தாங்கி வந்தோர் இங்கு வந்து. சில முக்கிய அமைச்சர்களும் அவர்கள் சேனைகளும் மூலச்சலவை  செய்து ஏழைகள் குமார்களையும், குமாரிக்காவினர்களையும், யுத்த பூமிக்கு யுத்த சேனையின் ஆளனியில்  அனுப்பி போன  வேகத்தில் பெட்டிகளிலும் ஒலித் தோடி இன்று மறைந்து வாழ்வோர் பலரின் சீரலிந்த ரெளத்திர வாழ்வை இலக்கியமும் பதிவு செய்ய தயங்குகின்றது.!

 சிங்களத்  திரை பதிவு செய்தாள் கத்தரிபோடுகின்றது.

 ஆனாலும் இவர்கள் எச்சங்கள் எதிர் காலத்தில் இலங்கை இலக்கியத்தை நடு நிலமையோடு ஆராய்ந்தால் !

நிச்சயம் இந்த எல்லைக்கிராமங்கள்   புதிய செய்திகள் பலதை இலக்கிய, சினிமா உலகத்திற்கு திடுக்கிடும் வண்ணம் கொடுக்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை  .

இதற்கு சாட்சி காட்ட முடியுமா  என்று  நீங்கள் யாரும் கேட்டாள் தனிமரத்தின் நண்பன் குடும்பத்திற்கு உயிர் உத்தரவாதம் கொடுத்தாள்!

 அவனை  சர்வதேசத்தில் நடுநிலை மன்றங்கள் .உண்மையில் இருந்தாள் அவனும் சமூகம் அளிப்பான் என்பதை தாழ்மையாக கூறிக் கொள்கின்றேன் .

அவன் தான் இந்தக்கதையின் தொடர் எழுதும் நாயகன் .
தனிமரம் வெறும் எழுத்தாணிமட்டுமே!

தோல்வியடையும் பொருளாதார நாட்டில். வறுமையாலும் தொழில் வாய்ப்புக்கள் சரியாக கிடைக்காத போது சாதாரன குடும்பத்தில் பிறந்து பொருளாதார தேடலுக்கு முகம் கொடுக்கும் இளைஞன் ,,யுவதிகளுக்கு, இரானுவத்தில் சேர்வதைத் தவிர வேறவழி இல்லை.

 இதை தடுக்க வேண்டியவர்கள் கைநாட்டு என்றாலும் பருவாயில்லை நீ பெரும்பாண்மையில் பிறந்தவன் என்றாள் ஓடிவா உனக்கு சூபிற்ச்சமான எதிர்காலம் இருக்கு.

 என்று உள்வாங்கியோர் மெத்தப் படித்த பண்டிதர்கள்.

 தவறுகள் நடந்த பின் தாங்கள் தப்புவதற்காக சாதாரன சிப்பாய் தவறு என்று பழி தீர்த்த வரலாறுகள் பலது இருக்கும் பூமி இந்த மண்.

 எல்லைக்கிராமத்தில் இருந்த யுவதிகளை அரசு இயந்திரம் பொருளாதார முன்னேற்றம் தருவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து ஊர்காவல் படையில் சேர்த்தது.

 நல்ல சம்பளம் என்று உள்சென்ற பெண்களில் சாலிக்காவும் ஒருத்தி.

தன் பொருளாதார தேடலுக்கு அவளுக்கு முன் இரு தேர்வு தான் இருந்தது துரிதமாக பணம் திரட்ட  .

ஒன்று எல்லைப்படையில் காவல்துறை பெண்ணாக சேர்வது அல்லது தன் மேனியலகை நட்சத்திர ஒளி வீசும் மாடாதிபதிகளின் நட்சத்திர விடுதியில் தன் சதையை விற்பது.

 அதுக்காக  அனுராதபுரத்தில் இருந்த விடுதிகளை முக்கிய அரசதுறை பெரியவர்களும் சமுகத்தில் பாரம்பரிய குடும்பத்தின் வாரிசுகள் பல சமுகப் பாதுகாப்புடன் அரச இயந்திரத்தை தம் கைகளில் வைத்திருந்தார்கள் .

.இங்கு தான் இரானுவத்தின் மிகப்பெரிய ஆளனித்தளம் இருந்தது.

 இங்கு நடந்த தாக்குதல் பின்நாளில் ஊடகங்களில் பார்க்க முடியும். .

ஓய்வில் வரும் இரானுவத்தின் உடல் பசியைத் தீர்க்க இங்கு எத்தனை விட்டில் பூச்சிகள் கண்ணீரில் கசந்து போனார்கள் என்று நன்றாக எனக்கும் தெரியும்.

 இவர்களின் வயதுக்கு இத்தனை நூறில் இருந்து இத்தனை ஆயிரத்தில்  என்று விலை வைக்கப்படுவது உலக சினிமாவில் மட்டும் காட்டப்படும் காட்சி மட்டும் அல்ல நிஜம்.

 என் தொழில் நிமித்தம் இந்த நட்சத்திர விடுதிகளில் தங்கி இருந்துள்ளேன் .

பல சகோதர நண்பர்கள் என்னுடன் வேலை செய்தவர்கள் போய் வந்து  என்னுடன் குடிபோதையில் கண்ணீர் விட்டு அழுத கதைகள், அவர்களின் உணர்வுகளை நன்கு நேரில் பார்த்து  அவர்களை தேற்றியும் இருக்கின்றேன்..

16 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-6

//
இத் தொடரில் யாரையாவது மனம் நோகும் வகையில் எழுதியிருந்தால்..................
 இங்கேயே மன்னிப்பைக் கோருகின்றேன்!

//////:::::///
சாத்தியம் இல்லை." நீ வேறுமதம் அவள் வேறு மதம் "

"உனக்கு இன்னும் உலகம் புரியலடா .நீ போகவேண்டிய தூரம் இன்னும் தொடங்கவில்லை.

 உயர்தரம் இப்போது தான் தொடங்கியிருக்கின்றாய். கல்வி என்ற பெருங்கடலில் இது இரண்டாம் பாகம் நீ இருப்பது.

 இப்போது உன் சிந்தனை உயர்தரம் முடித்து பல்கலைக்கழகம் போவதாக இருக்கனும்.

 அதைவிடுத்து அடுத்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் யுத்த நிலைப்பகுதியில் நின்று கொண்டு காதல் செய்யப்போறியா?

 அதுவும் ஒரு இஸ்லாமிய மங்கையை! எப்போதும்  நம் கனவுகள்  நம் கைகளுக்கு இருக்கனும். கைகள் நீண்டு அடுத்தவன் மூக்கில் குத்துவது சமூகப் பிரச்சனையாக மாறிவிடும்.

 ஏற்கனவே நாம் இங்கு பிரித்தாலும் ஆட்சிக் குழுக்கலால் முட்டிமோதுகின்றோம்.

 இந்த நிலையில் இது உனக்கு தேவையில்லாத ஒரு வலியான விடயம்.

 நான் முத்தவன் உனக்கு." என் சொல் கேள் காதல் கருமம் என்று உன் கல்வி என்ற வாழ்க்கைத் தீபத்தை அணைத்து விடாதே"

 மீண்டும் ஏற்ற அதிககாலம் பிடிக்கும்.
 2 வருடம் மிகவும் ஒரு துறவி போல் எதிலும் பற்று வைக்காமல் கல்வியை நேசி .

உன் குடும்பத்திற்கு வழிகாட்ட வேண்டிய
நீயே வழிமாறிப் போய் விட்டில் பூச்சி ஆகதே.

"இன்னொரு பெண்மனசில் வீணாக காதல் தீயை வார்த்து . அவர்களின்  கல்வி முன்னோற்றத்திற்கு தடை போடாதே.  "

தரப்படுத்தல் கல்வித்திட்டம் போல் ! அதுவரை அமைதியாக இருந்த ரவி என்னிடம்.

 இதப்பாரு தனிமரம்  உனக்கு உள்ளுக்குள் இருக்கும் இஸ்லாமியர் மீதான  தப்பான அபிப்பிராயத்தை! மாற்றப்பாரு.

 நீங்கள் எல்லாம் சேர்ந்து அவங்கட நிலத்தைப் பறித்துக் கொண்டு வெளியேற்றி  விட்டு நல்லவர்கள் போல் நடிக்காத..


  எனக்கு இப்ப உதவி செய்ய முன்வராட்டியும் பறுவாயில்ல.

 உபதேசம் செய்யாத!

 நான் ஒன்றும் உன்னைப் போல சீதனத்துக்கு பார்த்துக் கொண்டு இருக்கும் ஆம்பிள்ளை இல்ல.

 மனசுக்குப் பிடித்த விடயத்தை செயலில் செய்ய நண்பனாக உதவாட்டியும் பறுவாயில்லை .
"மூலச் சலவை  செய்து என் காதலை முளையில் கிள்ளியெறியும் காரியத்தில் கோடாரி போல் முன்வராத"  அது நம் நட்புக்கு கேடாக அமையும்.




 நான் போறன் என்று என் மீது இருந்த கோபத்தை சைக்கிள் பெடல் மீது காட்டி எட்டி மித்துதுப் போய்க்கொண்டே இருந்தான். .

எதிரே இந்திரா திரையில் முஸ்த்தப்பா விளம்பரத்தில் நெப்போலியன் என்னைப் பார்த்து கண்கலங்குவது போல் இருந்தது.




 இவனிடம் இப்படி ஒரு வார்த்தை வரும் என்ற கோணத்தில் நான் ஜோசிக்கவில்லை.

 ஒரு காதல் ஆரம்பமே மனதில் மறக்க நினைக்கும் வலிகளை மீளவும் தட்டி எழுப்பும் .எண்ணங்கள் ஊடாக இவன் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
 எங்கோ நடந்த தவறுக்கு

நான் என்ன செய்ய முடியும் இத்தனை இஸ்லாமிய உறவுகளுடன் தொழில் நிமித்தம் பழகும் எனக்கு அவர்கள் மீது உள்மனதில் வெறுப்பு என்ற கருநாகத்தையும் அல்லவா விதைத்துவிட்டுடான் .

 குழப்பத்தில் நான். பிரதான பாதையில் நிற்கும் போது .







ஐயே கோமத. மொக்கட்ட மெத்தனம் இன்னே?
(அண்ணா நலமா,என்னத்திற்கு இங்கே நிற்கின்றீர்கள்)  என்றவாரே என்  அருகில் தன் கரங்களை  நீட்டினாள் சாலிக்கா.

 . ஒரு நண்பன் வருவான் மதவாச்சி போகனும் என்றேன் நிஜம் என்பதைப் போல் பாவனையில். அப்படியா! நானும் அங்காலதானே போறன் நீங்களும் வாங்கோ என்றாள் .நண்பனுக்கு கைபேசியில் அழைத்துப்பாருங்கள்.

" எங்கே இருக்கான் என்று கேளுங்க" என்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின்  பொக்கட்  மீது  கைவைத்தாள்!

13 October 2011

நொந்து போகும் ஒர் இதயம் -5

இந்தத் தொடரில் யாரையும் மனம் நோகும் எனில் இங்கேயே மன்னிப்பைக் கோருகின்றேன்!


//>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மன்னாரும் என் பிரிவுக்கு உட்பட்டதால் அங்கும் ,வேலை செய்வதால் மொயூத்தின் அங்கிருக்கும் கடைக்கும் போய் வருவதால் அவர்களின் குடும்பத்தவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும்!

முன்னர் இவர்களும் வடக்கில் இருந்தவர்கள்! அக்காலத்தில் நடந்த துயரமான சம்பவத்தால் மதவாச்சியில் இருந்துவிட்டு மீண்டும் தொழில் நிமித்தம் மன்னாரில் குடியேறியவர்கள்!

   மொயூத்தின் திறமையால் இரு இடங்களிலும் வியாபார நிறுவனத்தை நடத்துகின்றார் !

அவரின் முத்த மருமகன்  ராபீக் இங்கும். மற்றவர்கள் மன்னாரிலும்   இருக்கின்றனர்.

 அக்ரம் மொயூத்தின் இரண்டாவது மருமகன்.  என்னுடன் வேலை செய்பவன் .

அதனால் இவர்கள் குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

 மதங்கள் கடந்து நாங்கள் நண்பர்களாக இருப்பது பல இடங்களில் வேலையில் நண்மையைத் தருகின்ற செயல்.

 ஏன் எனில் தனியார் துறையில் விற்பனை அளவு நிர்னையம் இருக்கின்றது.

 ஒவ்வொரு மாதமும் எங்கள் விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் நம் வருமானம் கூடும் !

அடிப்படைச் சம்பளத்தை விட இந்த செயல் மூலம் தான் அதிகமான வருவாயை ஈட்ட முடியும்.

 மண்ணைக் கட்டிக் கொடுத்தாலும்   பொன் என்று விற்பவனே விற்பனையாளன்  அப்படித்தான் நம் தனியார் துறையின் தாரகமந்திரம் ஒரு விற்பனைப் பிரதி நிதிக்கு

 .இது மட்டுமல்ல வியாபாரத்தில் சிலருடன் அதிக தொடர்புகள் உறவு முறையைக் கைக்கொண்டால் நம் செயல்பாடு வெற்றிகரமாக இருக்கும் என்பதை என் தந்தை எனக்கு கற்றுத்தந்த பாடம்.

மொயூத்திற்கு ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கம் தனிமையில் கதைக்கும் போதெல்லாம் என்னிடம் வெளிப்படையாக பேசுவார் .

அல்லா எனக்கொரு குறையும் வைக்கல ஆனால் ஒரு மவன் இருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும்!

 நாலாவது  மகளுக்கும் நிக்கா வைக்கப் போறன் மாத்தயா!

 அந்த நேரம் உங்கட உதவி வேனும் .

நிச்சயமா செய்வன் பாய் நீங்க ஜோசிக்காமல் கேளுங்கோ என்ன இப்படி மாத்தயா போட்டு மட்டும் பிரிச்சுப் பார்க்காதீங்கோ என் பெயரையே சொல்லிக் கூப்பிடுங்கோ !
பாய் உங்கமகனின் வயது என்று நினையுங்கோ

!நானும் மொயூத் வாப்பா என்றும் சமயங்களில் பாய் என்றே அழைப்பேன் !

இதுவும் ஒரு உளவியல் தன்மை எனலாம் பெரியவர்களை கொஞ்சம் மதிப்புக்கொடுத்தால் நாம் நம் தேவைகளை நிறைவேற்றலாம் தானே!

என்னிடம் பாய் உதவி கேட்டது என் பொருளாதார நிலமை அறிந்து அல்ல!

  விற்பனைப் பிரதி நிதி வேலையில் பணம் புரலும்!
 தேவையான போது ஒருநாள் ஒரு வாரம் என சுழற்ச்சி முறையில் பணத்தினை கைமாற்றம் செய்யலாம்!

 இப்படி கைமாற்றி சிலர் கையாடல் செய்து பணத்துடன் ஓடிப்போனதும் பலர்!

 என்றாளும்!

 வீழ்ந்து போன விற்பனைப் பிரதிநிதிகளும் அதிகம்!

இப்படியான சில நடைமுறைச் சிக்கல் பல தனியார் துறையின் வியாபார நிறுவனங்களுக்கு வந்த படியால் தான் !
பின்நாளில் முற்பணமாக (டிப்போசிட்) வரைமுறை நடைமுறையில் வந்தது என்பதும் நிஜம்.

  மொயூத்  போய்க் கொண்டிருக்கும் போதே மறுபக்கமாக பிரபு தன் சைக்கிளை மிதித்த படி வசந்தித் தியேட்டர் அருகால் பாடசாலைவிட்டு  வெளிவந்தான்  !

அவனும் என்னிடம் வந்து கதை கொடுத்தான் அப்புறம் தனிமரம் யாரோ சொந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்திச்சு!

 . அப்ப இனி நமக்கு எல்லாம் உதவி என்கிறாய்! என்று பீடிகை போட்டான்!என்ன சொல்கிறாய் ரவி? ஒன்றும் புரியவில்லை!

 சரி அதை விடு உன் விடயமாகத்தான் இங்காலப்பக்கம் வந்தன் அந்தப்பிள்ளையைக் காட்டவில்லையே?
 உன் எதய தேவதை யாரு ? அக்காலத்தில் லவ்டுடே நகைச்சுவை மிகவும் புகழ்பெற்றது. இதய தேவதை என்பதை அப்பட இயக்குனர் பாலசேகரன் இப்படி மாற்றிப்பேச வைத்து வையாபுரியையும் தாமுவையும் கலாய்த்திருப்பர்.

 பின்னாலில் பாலசேகரன் இன்னொரு படத்துடன் திரையுலகை விட்டு மாயமாகிவிட்டார்!

 நம்மாளுகூடத்தான் நீ பேசிக்கொண்டு இருந்தாய் நம்ம மாமா உனக்கு தோஸ்த்து   எனக்கும் தைரியம் கூடியிருக்கு!

 என் காதலைச் சொல்லப் போறன் பார்த்திமாவிடம்!ரவி விளையாடுகிறாயா! இல்லை சீரியஸ் என்ன தனிமரம் இதில் விளையாட என்ன இருக்கு எனக்கு அவளைப் பிடித்திருக்கு!
 அவளுக்குப் பிடிக்குமா ? பிடிக்குறமாதிரி நடக்கிறன்.

 எனக்கு அவள்தான் இனி எல்லாம் ! தலையில் இடி விழுந்ததைப் போல் நான் சிந்தனை குழம்பி நின்றேன்!


மாத்தயா-சகோதரமொழியில்- அதிகாரி  copy

12 October 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் -3


கடல் எப்போதும் பல கதைகள் சொல்லும். கடல்லோரைக் கவிதையில் இருந்து கடற்கரைத்தாகம் வரை.


 பல தடம்பதித்து இருக்கின்றது தமிழ் சினிமாவில் .ஆனால் கடல்கரையை நாம் பார்க்கும் ஒவ்வொரு கனங்களும் சில சிந்தனையை கிளறிவிடும் தனிமையில் நான் பார்த்த  கடல் அலைகள் வாழ்வில் பொருளாதாரத்தில் எப்படி முன்னோறப்போறாய் என்று எனக்கு என் வாலிபத்தில் மோதி மோதி நீ போகும் பாதை சரியா என அலையலையாக வந்து என்னைச் சீண்டிய கொழும்பு கோல்பேஸ் கடலாக வந்து போகின்றது.


.பின் தொழில் தேடி கொஞ்சம் நிமிந்த போது  மீண்டும் என் தொலைந்த  கிராமத்து கடல்கரையில் புரண்டு கொஞ்சம் திருந்துவிட்டேன் என்று குக்குரல் இட்டபோது உன்னையாரு இங்க விட்டது.

 இது பாதுகாப்பு வலயம் என்று தெரியாதா? என தெரிந்த தமிழில் கேட்ட கடற்படைச் சிப்பாய்க்கு நமக்கும் சகோதரமொழி தெரியும் இது என் பூர்வீக இடம் இது நான் தவழ்ந்த இடம் என அவனுக்குச் சொல்லிக் காட்டிய என் வட
க்குத்தீவின் கடல்கரைவெளியை என்னால் பிரியமுடியுது இல்லை இந்த நிமிடம் வரை !.

தனிமரமாக எங்கே போனாலும் முதல் போவது கடல்கரைக்குத்தான். அது மழைக்காலம் என்றாலும், குளிர் காலம் ,அம்மாவாசை இரவு என்றாளும் பயணம் என்றாள் பீச் ஒரு
தீராததாகம் எனக்கு!


நாங்கள் கப்பல் வீட்டில் இருந்து பயணித்தது ஆழப்புழா கடற்கரைக்கு .

போகும் வழியில் நண்ணீர் ஏரியில் கப்பல் சுற்றுலா இருக்கின்றது. விரும்பியவர்கள் விரும்பிய படி சுற்றிக்காட்ட வசதியாக ஆழப்புழாவில் பல படகுகள் காத்திருக்கின்றது.

  வெளிநாட்டவர் பலர் கப்பலில் ஏறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

 இப்படி நம்நாட்டிலும் வத்தளை- ஹொந்தல -எலகந்த -பக்கம் அழகாய் இருக்கின்றது.

 இங்கே கித்துல்கள்ளு விற்போருக்கும் மீன் விற்கும் மக்களுக்கும் அரசாங்கம் சுற்றுலா வழிமுறைகளை செய்து கொடுத்தால் இன்னும் வருமானம் ஈட்ட முடியும் ஆனால் திட்டம் போடும் சிந்தனையாளர்கள் ????!

 அதை நோட்டம் இட்டவாரே நாம் போனது சேட்டனுடன் ஆழப்புழா கடற்கரைக்கு!

மதிய வேளை அதிகமான கூட்டம் இல்லாமல் அழகுக்கடல் அமைதியாக தெளிந்த நீரோடை போல் இருக்கின்றது.

 நம்முடன் படகு வீட்டில் இருந்து வெளியோறியோரும் இங்கு வந்திருந்தார்கள் அவர்களும் லண்டனில் இருந்து சென்னை வந்து இங்கு வந்ததாக என்னுடன் கதைக்கும் போது கூறினார்கள்.

 அது ஏனோ நம்மவர்கள் எங்கு சந்தித்தாலும் தாயகம்பற்றி நினைவுகளையே சீண்டுகின்றார்கள்.

 பாதுகாப்பான நாட்டில் இருந்தாலும் மனதில் பாதுகாப்பாக இருப்பது தாயக நினைவுகள் என்பதாலா???


தத்துவம் புரிந்தவர்கள் கடல் ஒரு குரு என்கிறார்கள். பள்ளிகொண்டவன் பால்கடலில் பாம்பனையில் உறங்குவதாலா?

 அமைதியாக ஆழப்புழா கடற்கரை எங்களை அசுவாசப்படுத்தியது. கடல்கரையில் கொஞ்சம் கால்நனைத்து மஹாகவியின் கவிதையை சோதித்துப்பார்த்தோம் கடல் மீது சிறுநண்டு படம்கீற அதைவந்து அலைகொண்டு போவதை அவர் முன்னம் பாடியிருந்தார்.

 நாங்கள் மணலில் வீடுகட்டினோம் ஈழக்கனவைப் போல் அதுவும் கடல் அலை அடித்துச் சென்றது! மீண்டும் மீண்டும் முயண்ற போதும் சர்வதேசத்தின் சதிகள் நம்மை சீரலித்தது போல் கடல் அலை மண்ணை அழித்துவிட்டது!


 .நினைவுகள் பல தீண்ட முன்னே வயோதிபர் எங்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்துக் கொண்டிருந்தார்.

 மீனுக்கு வலை வீசிவிட்டு மிகவும் அமைதியாக காத்திருந்தார்.எனக்கு அவரின் பொறுமை மீது பொறாமையாக இருந்தது!

 புலம்பெயர்ந்து சில நிமிடங்களைக் கூட நிம்மதியாக சிந்திக்க முடியாத அளவு பொருளாதார சிக்கல் விரட்டியடிக்கும் போது அவர்
இப்படி ஒரு குருவினைப் போல் அமைதியாக இருக்கின்றாரே? என்று மனதில் என்னிக்கொண்டு நடந்தோம்!

 கடல் நீர் காலினைத் தாண்டி முழங்கால் வரை என் டவுசரை முத்தம் இட்டது.

 என்னவளோ இப்படியே ஊர் என்னத்தில் திரியுங்கோ பார்ப்போர் சிரிக்கட்டும் இந்த வயசிலும் இப்படியா ஒன்றில் குளிக்கனும் இல்லையென்றால் கரையில் நிற்கனும்.
 இது ரெண்டும் கெட்ட நிலை என்று என்னை சீண்டினால் சரி குளிப்பம் என்று ஒரு முடிவோடு என் இடிப்பில் இருந்த கடவுச்சீட்டை எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டு ஒரு முத்துக்குளியல் போட்டேன்!

 காலையில் கப்பல் குளியல் பின் சூரியகுளியல் என ஜாலியாக இருந்தது என்னவளோ இனியும் கடலில் நிற்க முடியாது வெய்யில் தலைக்கு ஏறுகின்றது !

என்ற போது சரிபோவம் என்று வெளிக்கிடவும் தான் சேட்டனுக்கு சாப்பாட்டு நேரம் காக்க வைத்துவிட்டது என்று தவறு புரிந்தது.

 அருகில் இருந்த ஹோட்டலில் சேட்டனைச் சாப்பிடச் சொல்லியிருந்தேன் அவர் எங்களுக்காக காத்திருப்பதாக சொன்னதால் நானும் கடலின் போதையில் அவரை மறந்து விட்டேன் !

நம் போன்றவர்களை ஏற்றிவந்த  மற்ற சாரதிகள்கூட அவரும் கும்மியடித்துக் கொண்டிருந்தார்.

 நாங்கள் போகவும் அவரும் எழும்பி வர அதுவரை வெய்யிலில் இருந்த ஆழப்புழாக் கடல்கரை தூறலுடம் மழையை வரவலைத்தது அதிகமாகுமோ என்று என்னும் போது சில நிமிடங்களில் மழைவிட்டு விட்டது!

 அங்கு இன்னொரு காட்சி நடந்தது அதைப் பாருங்களேன்!

 சிலர் நான் முன்னர் அரபுலகம் போகவெளிக்கிட்டபோது இப்படித்தான் ஊதாசினப்படுத்தினார்கள்.

 பின் என் ஆருயிர் நண்பனை நான் அனுப்பிய போதும் திட்டியவர்கள் இன்று அவனை போற்றுகின்றார்கள்.

 அவன் தான் எனக்கு விருப்பமான பாடல்களை தேடித்தரும் தொழில்நுட்ப வீரன்.

 நான் விரும்பும் பாடல்களை தனிமரத்திற்கு தந்து ஒத்தாசை புரிபவன். இதையும் பாருங்கள்!


நான் கேட்ட இந்தப்பாடலை பல வேலைப்பலுவிலும் எனக்கு உடனடியாக தந்தவன் இதோ பாடல்!


இந்தப்படம் பார்த்தோர் எத்தனை பேர் ?


அருமையான படம் என்பார்வையில்!
அங்கு இருந்து நாம் போனது தொடரும்!  Or

07 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-4

அக்ரம் என்னுடன் வருவது உகந்தது அல்ல! ஏற்கனவே பிரபுவுக்கு நான் உதவுவதற்கு நேரம் ஒதுக்கிவிட்டேன் !

எனவே அவனை மெதுவாக பிரிந்து போக நினைக்கும் போது. இன்னொரு விற்பனை நண்பன் சுரேஸ் வந்தான் !

இருவரையும் கண்டவுடன் இங்க ஏன்ன விசேசம் தனிமரத்துடன் நிற்கிறாய் அக்ரம் ஏன் செக்(காசோலை)ஏதும் பவுன்ஸ் ஆகிட்டுதோ! (காசோலைக்கு வங்கியில் பணம் இல்லாட்டி திரும்பிவிடுவதைக் குறிக்கும்) இப்படித்தான் பலர் நண்பர்களின் முதல் உரையாடலாக இருக்கும் அப்போதைய நாட்களில்.


 அதன் பிறகுதான் சுகசேதி விசாரிப்புக்கள். ஏன் எனில் உள்ளூரில் இருந்த 16  விற்பனைபிரதி நிதிகளும் ஒரு ஒற்றுமையில் இருந்த பிரதேசம் அது!

 நட்புக்கு வெளிமாவட்டத்து விற்பனைப்பிரதி நிதிகளுக்கு சவால் விட்ட பகுதி அது .

இப்படி ஒற்றுமை வரக்காரணம் இரு விடயங்கள் .

ஒன்று அந்த குறுகிய பிரதேசத்திற்கு பல்தேசிய /சுதேசிய கம்பனிகளின் ஏகவினியோகஸ்தராக குறிப்பிட்ட நான்கு வர்த்தக நிறுவனங்களே பிரதானமாக இருந்தார்கள்!-!

அவர்களிடம் குறைந்தது 3வேற  வேற பல்தேசிய/சுதேசிய கம்பனிகளைப் பிரதிநிதிப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகள் ஒரே கூரையின் கீழ் வேலை செய்யும் போது இயல்பாக நட்பு வருவது சகயம் தானே!


2) இரண்டாவது அப்போதைய பாதுகாப்புச் சூழல் !

இந்தப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் திடீர் திடீர் என்று நடக்கும் பாதுகாப்புச் சுற்றிவலைப்பு!

 எதிர்பாராத மாற்றுக்குழுக்களின் துப்பாக்கிப்பிரயோகம்! என எப்போதும் ஒரு    எதிர்பாராத அச்சமான நிலையில் நண்பர்களிடையே குறுந்தகவல் பரிமாறுவது என எப்போதும் நட்பு இறுக்கமான நிலையில் இருக்கும் !

.சில எதிர்பாராத அவசரத்தில் பாதுகாப்புப் படையினர் வழங்கும் வதிவிட பாஸ் விடுபட்டுப் போய்விட்டால் விரைவாக எடுத்துவர ஒரு நண்பன் எப்போதும் தேவைதானே!

அதனால் பலர் தமக்கு வழங்கியிருக்கும் வதிவிடப்பாஸ் பிரதியை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து வைத்திருப்போம்


 .மிகவும் நம்பிக்கையான நட்புக்களிடம்.

 ஏன் எனில் நகரின் நாலாபுறமும் எதிர் பாராமல் சுற்றிவலைத்தால் உடனடியாக ஒரு குறுந்தகவல் சேர்ப்பித்தால் இரானுவத்தின் தலையாட்டிப் பொம்மைகள் எங்கள் மீது வைக்கும் அன்புக் காதலில் இருந்து இது வெறும் ஈர்ப்புத்தான் எனச் சொல்லும் பருவக்கால காதல்போல் ஓடிவிடலாம்!

 இப்படிக் காதலில் தொலைந்து போன நண்பர்கள் சிலரை இது வரை நான் மீளவும் காணவில்லை!


தலையாட்டிப் பொம்மைகள் நகரை வழிமறித்தால் அன்றைய பகல்பொழுதுவரை கையில் இருக்கும் பத்திரிக்கையை எழுத்துக்கூட்டி வாசிக்கலாம்.

 அந்தளவுக்கு பொறுமையான  வேலைப்பாடுகள் நிறைந்து.

 இப்படி தாயகத்தில் சிலபாகத்தில்  சதாரனமான நிலை என்றாலும் இங்கே சில அப்பாவிகள் பாதுகாப்புப் படையின் சந்தேகத்தில் பிடிப்பட்டு தொலைந்து போனவர்கள் குடும்பத்தின் நிலையை எழுத நினைத்தால் இன்னொரு பாரதம் எழுதலாம் ஒவ்வொருத்தனும் !

இப்படியான தருனங்களில் பெண்கள் நிலமையை விபரிக்க நினைத்தால் துயரம் கண்ணை மூடுகின்றது !

அதுவும் இளம்பெண்கள் சகோதரமொழி தெரியாதவர்கள் சில இரானுவத்தின் காமக்கண்களுக்கும் பொருந்தாக் காமத்தின் வெறிக்கும் தீயில் இடப்பட்ட புழுவைப் போல் சொந்த நாட்டிலே படும் அவஸ்தையை பாட மீண்டும்  கோபக்கார பாரதி வரனும் !

நாங்கள் எல்லாம் உலக அழகிகள் நீங்கள் என்ன தான் கழுத்துப்பட்டி கட்டினாலும் எங்களுக்கு ஒரு கமெடி ஹீரோ தான் எனச் சீண்டிச்  செல்லும் சில சிட்டுக்கள் !

அண்ணே உந்த கோதாரி அறுப்பான் என்ன கேட்கின்றான் !

என காதோரம் மெல்லப்பேசும் போது  இன்னொரு அண்ணண் உறவு வந்து விடும்!

  சகோதரமொழி தெரியாத நம் தமிழ் இளவரசர்கள் பாடு சீதையை ராமன் வில்லுடைத்து மாலையிட்டு கைபிடித்த போது கையறு நிலையில் நின்ற மற்றநாட்டு  மன்னன் வாரிசு நிலையைப்போல்!

என்ன பலமான யோசனை தனிமரம் என்ற அக்ரம் என்னைச் சீண்ட இல் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் லாஜ்சில் வந்து நிற்கிரார்.

அவரைப் போய்ப் பார்க்கனும் நீ முன்னால் போ என்று சமயம் பார்த்து அவனை போகவிட்டு நான் முன்னே இருந்த லாஜ்சிற்குப் போனேன்!

அங்கு போகாமல் இருந்தால் அந்த பின் விளைவு நடந்து இராது!

  சிலநிமிடங்களில் நான் அங்கிருந்து வெளியேறிய பின்!

வெள்ளிக்கிழமை மதியத்தின் பின் வவுனியா நகரசபை பேருந்துக்கள் தனியார் பேருந்துக்கள்  அதிகம் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை,கண்டி என தூர இடங்களுக்குப் பயணிக்கும்!

 அதிக இரானுவத்தினர் ,தொழில் நிமித்தம் இங்கு கடமையில் இருக்கும் அரச உத்தியோகத்தோர் தனியார் துறையினர் எனப் பலரும் வெள்ளி மதியத்துடன் நகரைத்தாண்டிச் செல்வது  வார இறுதி விடுமுறை மற்றும்  பாஸ் என்கின்ற பாதுகாப்புக் காரணங்களின் செயலால்!

 அதனால் பலர் குடும்பங்களைப் பிரிந்தும்,
 சேர்ந்து இருக்க முடியாமலும் படும் அவஸ்த்தைகள் அதிகம்.

 நானும் வேலையை எப்போதும் 2 மணிக்கு முடுத்து விடுவேன் .

வவுனியாவில் இருக்கும் நான்கு தியேட்டரில் ஏதாவது ஒன்றில் 2.30 காட்சிக்கு உள்நுழைவது என் பொழுது போக்கு !

அதில் ஒரு அலாதிப் பிரியம் எனக்கு அப்போதைய காலகட்டத்தில்  !

.இப்போது தியேட்டர் போவதற்கே வெறுப்பாக இருப்பது ஒரு வேளை இப்போது அலுப்பரை டாக்குத்தர்கள் அதிகம் என்பதாலா?

 இல்லை ரசனை மாறிவிட்டதா என்று தெரிய வில்லை ?

அல்லது குடும்பத்தலைவன் என்ற பொறுப்புணர்ச்சியோ தெரியவில்லை!அந்த எண்ணத்தில் தான் கழுத்தில் இருந்த கழுத்துப் பட்டியை(புகையிலையை()  .

tie) கழட்டுவம் என்று கண்டி வீதியில் இறங்கும் போது எதிரே மொயூத் மோட்டார் வண்டியில் வந்தார்!

 என்ன மாத்தயா!
 எங்கட கடைப்பக்கம் வரவில்லை ?

நான்! உங்க கோளையாட்ட(உதவியாளர்) சென்னே!

 அவங்கட சாமான்கள் அனுப்பனும் என்று உங்களுக்குத் தெரியாதா?

இல்ல பாய் அவங்கள் மறந்திட்டாங்க போல இப்பவே பின்னால் வரவா பாய் நமக்கு ஒரு வேலையும் இல்லை .

அதுவரை பின்னால் தந்தையின் தோழில் கை வைத்த வண்ணம் இருந்தவள் பாத்திமா !

எனக்கு நன்கு அறிமுகம் ஆனவள் .என்னம்மா நீங்களும் இங்க வந்திட்டீங்களா ?

ஒம் நானா மன்னாரில் படிக்க முடியல அதுதான் இங்கு வந்தாச்சு!

 வாப்பா பக்கதில் இருந்தால் சந்தோஸம்தானே !

நீங்க போனகிழமை அங்க வரல ஆமா நான் கொழும்பு போனன்!

 ஓ அண்ணிட்டயா  ஓ நீங்க வேற அவங்க என் கூட வேலை செய்யிறவங்க !

பாத்திமாகடந்த முறை என் மேலிடத் தில் இருந்து விளம்பரத்துறையில் பணிபுரியும் சகோதரமொழி நங்கை வந்திருந்தால்!

 அவங்களும் நானும் ஒன்றாக சாப்பிட்டதும் ,இடங்களைச் சுற்றிக்காட்டியதும் பார்த்திமா என் துனைவி என்றே என்னிக்கொண்டிருக்கிறாள்!

 மற்றவர் பார்வையில் எப்படி இருந்தாலும். நாங்கள் ஒரு நிறுவனத்தில் வேறு வேறு பிரிவுகளில் பணிபுரிந்தாலும் நட்பாக இருப்பது சகோதரமொழி நங்கைகளின் நல்ல குணம்!

 அது பல  இடங்களில் நான் நேரடியாக உணர்ந்த பண்பு!பாத்திமா பிறகு எப்படிப்பள்ளிக்கூடம் இம் பருவாயில்ல !

இந்தவாரம் தானே தொடங்கியது! மவ பேசாமா இரு !

காக்கா வேலை செய்யனும்.!

கோளையாள்-சகோதரமொழி
சென்னேன்  -சொன்னேன் இஸ்லாமியரின் வட்டாரமொழி!

///:::::..::::