19 May 2020

சினேஹாவும் சிலிர்ப்பும்!

புளிக்கவில்லையா ?
புன்னகைஅரசியின்
புலம்பல்க்காட்சி!?
புளித்தகள்ளும்,
புளிச்சல்  பணியாரமும்,
புத்துணர்ச்சி  தருவதுபோல
புத்தூரிலும்  புது  மயானம்போல
புதியமன்னர்கள்  படம்போல 
புதினம்   கேட்காத
புதியகொர்னா 
புலம்பெயர்  வாழ்க்கைபோல
புதியபாடல்   கேட்காத 
புதியவார்ப்புக்கள்   காலம்போல
புதிர்போடும்
புதிய முகநூல்நங்கையே!))!


புளிக்காத இசையானியின் பாடல்போல
புதுநெல்லும் புதுநாற்றும் படம்போல
புன்னகையின்  பின்னே
புனைபெயரில்  புதுமடம் 
புழுதிவாரித்  தூற்றினாலும்,
புதுப்பயணம்  போல
புரண்டு அழுத  காதல்  எல்லாம்
புஸ்ஸல்லாவா  வீதிபோல
புறமுதுகில்  குத்தினாலும்!
புதிய  மாஹாத்தயா,
புலத்சிங்களவில்இருந்து
புரட்டிஅனுப்பிய
புதுக்கதையிலும்!
புட்டுவைப்பேன்  பிடித்த பாடல்தாராது
புதிய  அறிவிப்பாளர் 
புன்னகையுடன்  முகநூல் வந்தாலும்,
புன்பட்ட  நெஞ்சம்!


புட்டகபர்த்தி  போனாலும்!
புதுமனிதன்  பாடல்போல
புண்ணியம்  தேடவில்லை.
புதுமாப்பிள்ளை   தேடுகின்ற
புலம்பெயர்  மாமாவும்,


புதிராதபுதிர்  போல
புன்னகைக்கும்  மரத்தில்!
புதுக்கள்ளுக்கும்.
புதுவிளக்கம் தரும்
புத்தியும்  இன்னும்
புகுந்து  கொள்ளாத  அலரிமாளிகைபோல!

புழுக்கம்   இல்லாத  அடுப்படியில்
புதிய  அலைவரிசையும்
புத்துயிர்பெற்றது!
புறப்படுங்கள்  புதிதான  வாழ்வுக்கு!
புன்னகையுடன்   
புதிய தேடல்!



(யாவும்கற்பனை)
Mm

14 May 2020

என் காலம் சொல்லிய வெண்பா நீ!

ஒருநாட்டின் முதன்மையான  கலைகலாச்சாரம்பண்பாடு,சுற்றுலாத்தலங்கள்என்பவற்றை  மக்களிடம்கொண்டு சேர்க்கவேண்டும் என்று ஒரு  தூய்மையானசினிமாக்கலைஞன்  சிந்திப்பான்என்றால்!     அவன் படைப்பை சினிமாப்பிரியர்களும்  வரவேற்று,அக்கலைஞனை  தொடர்ந்து  ஊக்குவிக்க வேண்டியதார்மீக  கடமையும்  மக்களுக்கு  இருக்கவேண்டும்    என்பது  என்  தனிப்பட்ட  கருத்து

தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்கள் கவி நந்தன்!

அப்படி  ஒரு  அற்புதமான  படைப்பாளிகளைவிரல்விட்டு  எண்ணி   விடலாம்  .

மலேசியா  என்றாலே  தமிழ்ப்படங்களில்  போதைவஸ்த்துப்பாவனைகுழுவன்முறைகடத்தல்கூடாரம்என்று  ஒருகண்ணோட்டத்தில்  மட்டுமே  பலதமிழ்ச்சினிமாப்படங்களில்  காட்டப்படும்    ஒருநிகழ்வு

திரைப்படபாடல்களுக்கு   மட்டும்  அழகிய  சுறுற்றுலாப் பூமி  என்று   பலபாடல்கள்  மலேசியாவில்  காட்சிப்படுத்தி  இருப்பார்கள்

ஆனாலும்  மலாய்தேசம்  மூவினமக்களும்  வாழும்   அழகியதேசம்  அந்ததேசத்தின்  காதல்,நட்பு,இசைஅழகிய  காட்சிகளை  பார்க்கும்  ஆவலுக்கு  விடையா





இந்ததேசத்தில்குறிப்பிட்டமாதங்கள்   தங்கியிருந்த  அனுபவங்களை   தொடர்கதையில்  எழுதியிருக்கின்றேன்.https://thanimaramnesan.blogspot.com/2012/11/31.html


இனியமையான  பாடல்களும்  நேற்றில்இருந்துகேட்டுக்  கொண்டேயிருக்கின்றேன்  ஏதோ   ஒருநினைவுகள்  தாலாட்டும்  இசைக்காக!))இப்பட இசையமைப்பாளர் வர்மன் பற்றிய பாடல்களும் பதிவாக இருக்கின்றது!

சமூகத்தளமான யூப்டிப்பிள்  முழுத்திரைப்படமும்   இருக்கின்றது.



 தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்கள் கவி நந்தன்!

கொர்னா  உள்ளிருப்புக்  காலத்தில்  நல்லபடம்  பார்த்ததிருப்திக்கு   தனிமரம்   நிச்சயம்   உத்தரவாதம்தருகின்றேன்!


இதைக்கண்டுகளிக்கலாம்.!

10 May 2020

கவிதையும் காணமும்.

இருதயம் இன்னும் கேட்டது
இரட்டை  இலைபோல
இலங்கை  எதிர்க்கட்சிபதவிபோல
இப்போதைய
இளசுகளின் பேட்டை போல
இன்னும்  விசுவாசம் போல
இருக்கும்  சினேஹா
இறுதியில்  வந்த  கேரளா புயல்போல
இருந்த  மண்ணையும் 
இகழ்ந்துபோனது !
இப்போதும்  நிஜம்என்று
இன்னுமா  நம்பவில்லை!
இதோ  இலங்கைச்சாமிகளும்
இலண்டன்  சாமிகளும்
இன்னும்  கனடாசாமிகளும்
இவ்வழி  வராதகதை  எல்லாம்
இப்பாதம்  நடந்தகதை
இனியும்தொடரும்!
இவன்  இன்னும்
இலங்கைத்  தேயிலைத்தொழிலாளியின்
இன்றைய  வருமானம்1000
இன்னும்  கிட்டாத  நிலா
இதயநிலா  இசைக்குழுவில் 
இருக்கின்றேன்! 
இதயம்தொலைத்து
இலங்கைச்சிறையில்!


(யாவும்கற்பனை)
----------//

-------------------------------------------------------------------------------------------------------------------------
அன்று   ஒரு  காலம்
ஆயிரம் தனிக்கை!
ஆயிரம்ரூபாய்  என்பது
அடுத்த  வீட்டில்கூட
அன்புடன்  கேட்டால்
ஆமிக்கு  கப்பம்  என்ற
அன்றாடபிழைப்பு!
ஆனாலும்,அன்பும்
ஆழ்ந்த நேசிப்பும்,
ஆயிரம்  வெற்றிலைசிரிக்கும்
அப்ப  வெற்றிவிழா!
அது ஒருகாலம்!
ஆயிரம்  ஈரோவில்
அவள்  தந்தைகேட்டான்?
அப்பனே  உனக்கு
அடிமாடுபோல  உழைக்க
ஆம்பாளைத்தகுதி?
அந்த  மாத்தயாவுக்கு
அக்கனம் இருக்கோ?
அய்யோடா  எவன் 
அப்போது  ஜீனஸ்பட 
அப்பத்தா கேட்டசுருட்டு
அப்போதெல்லாம்
அக்குறணை  தயாரிப்புஆச்சே!))
அடேய்  ரஜனிமகளுக்கும்
அடுத்த  தாரம்  கலியாணம்
ஆசியுடன் நடந்ததாமே
அப்ப அந்த அடுத்த
ஆவல்த் தொடர்யாரைநோக்கி
அய்யோ  தனிமரத்தில்
ஆயிரம்  பாடல்  முகவரிக்கு
அன்பான  நட்பு  நீயாச்சே!))
ஆதலால்  இன்னும் 
அழைப்பில்  வருவாய்  என்ற
ஆழ்ந்த  மகிழ்ச்சியில்
அன்பானவேடதாரி!))

(யாவும்கற்பனை)

05 May 2020

கவிதை போல கிறுக்கல்!

பானையில்   இருப்பது
பறவைக்கும்   பசிபோக்கி
பத்திரமாத்து   தங்கம்போல
பாடல்களும்   பாடி
பறந்த   வாழ்வில்
பறவை  போல
பறந்து வந்து  உணவு  இட்டு 
பலாலியில்   குடிகொண்ட
பாரதேச  படையின்  வருகை
பசியாற்றியதா ?
பரதேசியாக்கியதா ??
பாரில் நாமும்
பலஉறவு தொலைந்து
பந்தல் இட்ட 
பழைய  பொங்கல்  போல
பரணி  பாடுவேனோ?
(யாவும்கற்பனை)

———-/-//———-/--------------------------------------------------


சிரிப்பைக் கடன்வாங்கி
சிறைச்சாலையில் 
சிங்களம்  கற்கவைத்தாளே!
சீதனம் என்ன
சிலோன் பாடல் தானே?
சிறப்புச் சித்திரம்  என்றெல்லாம்
சிந்திக்க  வைக்கத்தானே?
சிறப்புத் தேர்ச்சிஎன்று?
சீனாவிலும் இருந்து
சில  வைரஸ் 
சீக்கிறம்  இறக்குமதி  செய்தாயோ?


யாவும்கற்பனை)
--------------------------------------------------------------------------------------/——
முடிவெடுத்த   நீயே
முடிவிலி  வரை
முடியாத  சுமைகள்  எல்லாம்
முற்றும்  துறந்தவன்போல
முடித்துவிடு!
முயற்ச்சி என்ற  கீரீடம்
முகம்தொலைந்தவனுக்கும்
முதல்ச்சிறைபோல!
முதல்முறை
முகம்  பார்த்து  அழுதான்
முன்னால் 
முகநூல்நட்பு

!(யாவும்கற்பனை)
///---------------------------------------

நீண்ட காலம் கேட்க மறந்த பாடல்களை எல்லாம் கொர்னா தேடிக்கேட்க வைக்கின்றது! இதுவும் ஒரு சுகமே. இப்பாடல் கங்கை அமரன் இசையில் இளையராஜாவுடன் ,எஸ் .ஜானகி பாடியது. இலங்கை வானொலியில்  90களின் பின் அதிகம் ஒலித்த பாடல் 
கேட்டு  ஒரு கடிதாசி எழுதுங்கள்  தனிமரத்திற்கு![[[[[[[.