26 April 2015

முகம் காண ஆசையுடன் - 8

http://www.thanimaram.org/2015/04/7.html

இனி!!!!

புலிச் சந்தேகம் என்ற  போர்வையில் இன்னும் சிறையில் வாடும் தமிழர் ஒருபுறம் என்றால்!

 புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சிங்களவர்கள் கூட இன்னும் சிறையில் இருப்பதை இந்த உலகம் மறந்து தன் தலைவன் உத்தமபுத்திரன் என்பது போல பாராளுமன்றத்தில் தூங்கும் கூட்டம் எல்லாம் வாக்கு வாங்கிய மக்களை மறந்த ஆடும் ஆட்டம் எல்லாம் என்று தோற்க்கும்.

 இனியும் விடியல் வருமா ?,என்று சாமானிய மக்கள்  சிறைப்பறவையானவர்கள் எல்லாம் இனியும் வெளியுலகு கானுவது எப்போது,?

எந்த வல்லரசு இவர்களின் விடுதலை பற்றிப் பொதுவில் பேசும்!

 இல்லை எந்த நடிகன் பேசுவான்?

 இல்லை இனியும் எவர் வாக்கு வேட்டைக்காக  தமிழர் என்று போலி உணர்ச்சியை தூண்டி  தீக்குளிப்போர்  யார் ?,

என்று எல்லாம் இனி வரும் காலம் சொல்லும் என்றாலும் இந்த சிறைவாழ்க்கை மட்டும் அரசியல்வாதிகளுக்கு பஞ்சு மெத்தை .

அப்பாவி மக்களின் சிறைவாழ்க்கை பற்றி தொடராக எழுதும் ஆசையில் பத்திரிக்கை ஆசிரியரை நாடிய போது!

 அவர் சொன்னது" என்னம்மா நீ பிரபல்யமான விசயம் என்றால் நம் பத்திரிக்கையும் விற்பனை அதிகமாகும். வாசகர் வட்டமும்  சினிமா நடிகையின் பின் போகும் தொழில் அதிபர் போல எகிரி வீசும் அதை விடுத்து அடுத்த வேளை என்ன சாப்பாடு போடுவார்கள் என்று அறியாத இருட்டில் வாழும் சிறையில் இருப்போர் பற்றி எழுத  என்னிடம் அனுமதி கேட்டு வந்து என் நேரத்தையும் வீனாக்கிக்கொண்டு"

 ஏதாவது சினிமா கிசுகிசு இல்லை, அரசியல்வாதியின் அந்தரங்கம்!
 இல்லை மதவாதம் என்று நெருப்பான விடயத்தை பத்தவை!


  பத்திரிக்கையில் வலையில் வாசிக்காத  தொடராக இடம் ஒதுக்க சொல்லுகின்றேன்!

 இல்லையோ உனக்கு என்று ஒரு உலகை உருவாக்கு.

 இப்ப தொழில்நுட்பம் வளந்துவிட்டது சுமா .


நீ போகலாம் என்று பிரதம ஆசிரியர் சொன்ன நிலையில் ஆட்சியில் மதிப்பிளந்து போன மந்திரி போல வெளியேறிய சுமாவின் மனதில் அசுரன் நினைப்பு வந்தது  அவசர போலீஸ் 100  போல!

 அசுரனிடம்  இந்தவிடயம் பற்றி எப்படியாவது பேசனும் உடனடியாக அவன் இப்ப  பாரிசில்!நடண விடுதியில் உல்லாச வாழ்க்கையில் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே  என்று இருப்பானோ ?,

இல்லை பிரெஞ்சு பெண்கள் பின் சிகப்பு ரோஜா கமல் போல அலைவானா ,,

இல்லை  பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்று இருப்பானோ?,



இப்படித்தான் இலங்கையில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பேசும் போது இலங்கை  பெண்கள் கற்பனை!!!


 ஆனால்  பாரிஸ்   நிலையோ அடுத்த சாப்பாடு என்ன என்று ஆஹா பட டெல்லி கனேஷ்  போல வாழும் நிலை யார் அறிவார் என்று சிந்தனையில் அசுரன்  சாப்பாடு தயார் செய்தான்!

முகம் காண ஆசையுடன்....

21 April 2015

பத்துநாள் காதல்!

ஈழத்தில் இருந்து இப்போதெல்லாம் பல படைப்புக்கள் வெளிவந்த கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
அந்த வகையில்  இந்த வாரம் வந்து இருக்கும் இந்தப்பாடல் காட்சியமைப்பு  ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலும் !
பாடல் ரசிக்கும் படியாக இருப்பது விருப்புக்குரியது!


நீங்களும் கேட்டு ரசிக்க இங்கே-

 இதையும் கேட்களாம்-http://www.thanimaram.org/2015/04/blog-post_15.html

19 April 2015

கவிதையும் காணமும்.

மாலைத்தேவனை வாழ்த்தும் 
மங்கையின் மனம் பாடும்
மயக்கும் கீதம் இது
மாலைச்சாரல் குளிர்ச்சி!
மனதில் தோன்றும்
மாலைநேர  செவ்வானம்
மயங்கின்றேன் உன் மடியில்!!!!!!

         
///


மலைகளில் எல்லாம் மனம்விட்டும்
மகிழ்ந்து எழுதுகின்றேன் மானே நீதான்
மனதில் தோன்றும் மன்மத ராணி
மலைவாசம் வீசுவோம்
மலர்ந்த ஆண்டில்!
மயக்கம் வேண்டாம்
மவுஸ்பிடித்துவிடேன்
மானே நீயும் ஒரு அரக்கானி போலத்தானோ??
மாடிவீட்டு  ரோஜாவே!
மலையில் இன்னும் 
மனம் நெருங்கி பாடலாம்
மயக்கத்தில்!!!




15 April 2015

சிங்காரி.....

நம்மவர் பாடல்கள் இன்று பல தடைகள் தாண்டி பலதேசங்களில் கேட்கும் வசதியை இணைய வருகையும்  இணைய வானொலிகளும்  இன்று தந்து இருப்பது இன்னொரு கொடை போல புலம் பெயர் தேசத்தில்.

 அந்த வகையில் இந்த வாரம் என் நெஞ்சை தொட்ட பாடல் இது


08 April 2015

முகம் காண ஆசையுடன்..-7


முகம் காண ஆசையுடன்..6
இனி...


இனவாத அதட்டலும், ஆட்சியின் அதிகார தோரணை மிரட்டல்களும் பொதுவெளியில் பேசமுடியாது  ஊமையாகிப்போன ஊமைவிழிகள் போல கதைகள் பல அச்சிலும் ,ஊடகத்திலும் அறியாத நிலைகள் ஈழத்தின் சாபம் போலும்.!!

இன்னும் சிறைகளில் வாழ்கின்றார்கள் என்ற கடவுள் போல நம்பிக்கையுடன் வாழும் நம்மவர் நிலையை எல்லாம் எந்த அரசியல் சட்டமும், வாக்குறுதிகளும், இன்னும் விடுவிக்கவில்லை.! 100 நாட்கள் நெருங்கும் நிலையிலும் .இனவாதம் எல்லாம் வாக்கு வங்கியில் அக்கரையுடன்  புலம்பும் தேசம் தானே நம்பூமி.


 வாழ்கின்றார்களா ?? இல்லை இனவாத  உக்கிர வதையில் மூச்சை அடக்கியவர்கள்  என் ஆசை மச்சான் பட ரேவதி போல அடக்கியவர்கள் நிலையை எந்த ஊடகமும் இன்னும் பொதுவெளியில் பேச மறுக்கின்றது அகிலன்.



 போலி விளையாட்டுக்கும். சினிமாவுக்கும் விளம்பரம் தேடும் பலரின் ஊடகப் பார்வையில் இன்னும் எழுதாத ஆயுத எழுத்து இன்னும் அதிகம்.


  இருக்கலாம் மச்சான் அசுரன். ஆனால் இலங்கை  சிறையில்  சொத்துப் போன பலரை  எல்லாம் ஊடகத்தில் உன்னால்  எழுதமுடியுமா.?



அகிலன் !


எல்லோரும் யுத்த அவலுத்துடன் தான் இன்னும் மெளனம் பேசியது போல  சிலதை மறந்து .அல்லது மறைத்து வாழ்கின்றோம்.

 நம்மவர் தேசத்தில் முக்கிய பதவியில் இருப்போரிடம் இன்னும் சில பொதுவெளியில் சொல்லப்படாத யுத்த தேச  சில பரம  இரகசியம் இருக்காலம் .பதவி மோகம் போய் அவர்களின் அந்திம காலத்தில் சரி.

 அப்பாவி மனிதர்களின் உயிர் மகிமையின் பெறுமதி என்றாவது ஒருநாள் வெளியீடு செய்யலாம்!



அது போலத்தான் நம்மவர் தேசத்தில் சிறையில் இருந்து வெளிவந்தவர்கள் தாம்  சந்தித்த நம்மவர்களின் கதையை எங்காவது பதிவு செய்லாம் கற்பனை ஊடாக  !



அதன் மூலம் சரி என் பூஜாவின் நிலை என்ன என்பதை  அறிந்து கொள்ளும் ஆசையில் தான் முகநூல்/ வலையில் என்று தேடலில் சிலருடன் தனிப்பட்ட அழைப்பை நாடிப்போறன் !

 அதுக்காக என் சுயத்தை இழந்து அல்ல . முகநூலில் அல்லது வலையில் இச்சையுடன் யாரையும் தேடவில்லை அகிலன் .

 மச்சான் அசுரன் உன்னை நான் சந்தேகிக்கவில்லை  ஆனால் ஸ்கைப் அழைப்பிள் சுமா வருவாள் என்று நீ  உருகுதே மருகுதே என்று துடிப்பதைத்தான் நெருடலாக இருக்கு

.இல்லை மச்சான் சுமாவும் ஈழத்தில் சிறையில் சீரழியும் நம் இனத்தின் முகத்தினை நம்நாட்டில் ஊடகத்தில் துணிந்து எழுதும் ஒரு பத்தி எழுத்தாளினி.

 அது போல வலையில் ஒரு பதிவாளினி முகநூலில் வெட்டி பேசும் நாட்டாமை பட செந்தில் போல போலியாக  இருந்தாலும்  சுமாவிடம் பூஜா பற்றி ஏதாவது தகவல்  அறியும் ஆர்வத்தில் இருக்கின்றேன்...


இன்னும்  முகம்   காணலாம்............

02 April 2015

மின்நூல் - தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்

இணையத்தில் பலர் எழுதும் தொடர்கள்  போதிய வாசகர்களை சென்றடைவதில்  அவசர உலகில் நேரமின்னையும் ஒரு பாதகமான அம்சம் எனலாம்  பலர்  தொடர்களை  வாசிக்க  ஊக்கிவிக்கும் முயற்ச்சிதான் மின்நூல் வடிவம்.

சில தொடர்களை தனிமரம் வலையில் எழுதியிருக்கின்றேன்   இதுவரை அவைகளை மின்நூல் வடிவிலும் முன்னர் முயற்ச்சி செய்து இருக்கின்றேன் .மலையகத்தில் முகம் தொலைந்தவன், உருகும் பிரெஞ்சுக்காதலி . என்று அவ்வகையில் மற்றொரு  மின்நூல் முயற்ச்சியை யாழ்பாவண்ணன் ஐயாவின்  உதவியுடன் தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் தொடர்கதையை  மின்நூல் வடிவில் உங்களின் பார்வைக்காக இங்கே-!

இம்மின்நூலைப் பக்கம் பக்கமாகத் தட்டிப் பார்க்க
http://online.fliphtml5.com/grza/hamo
அல்லது
http://fliphtml5.com/bookcase/ucxj

இம்மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய
https://app.box.com/s/k6nonlu14f8991xb4bpdnevrtthgq2mm
அல்லது
https://drive.google.com/file/d/0B_F6tKKRTuS-enVON3ZqM1RuZTQ/view


இதன் விமர்சனப்பார்வைகளும் ,கருத்துரைக்களும்,  வழிகாட்டலும் இன்னும் என்னை மெருகேற்றும் வண்ணம்  உங்களிடம் இருந்து கருத்துரைகளாக எதிர்பார்க்கின்றேன்.

நூலினை படிப்பதுடன் இன்னும் பல நட்புக்களிடம் அறிமுகம் செய்து உங்களின் அன்பான ஊக்கிவிப்பை நல்கும் வண்ணம் உங்களின் ஆதரவை  நாடிநிற்கும்

அன்பின்
தனிமரம் நேசன்.

01 April 2015

கவிதை போல கிறுக்கல்

நீ போன ஊர் அறியாது இன்னும் தவிக்கின்றேன்
 உன் கொழுசு விட்டுச்சென்ற தடயம் போல 
என் காதலையும் உன்னில் சூடாமல் 
ஊர்ப்பாதையோரம் இன்னும் 
இவன் பூவைப்போட்டு வீசும் 
கிராமத்து மச்சான் நடந்துவாடி 
அத்தை மகளே இனி யுத்தமில்லாத பூமியில்...
இந்தப்பத்திரம் போல இவன் இன்னும்
இந்திய அகதிக்கூடத்தில்!


இன்னும்  ஏதிலி  இருக்கின்றேன்..
இனியும் உன்பாதை இலங்கையில் தீமூட்டாமல் 
இருந்தால் நல்லதுதான் வணங்குகின்றேன்!....




////////////////////////

    
சினேஹா போல நீயும் ஒரு சித்திரம்
சிரிக்கவில்லை  சீண்டிய நண்பன்
சில் என்று நெஞ்சில் குளிர்ச்சிய
சில நிமிட சந்தோஸம்!
சிரித்தால் நீ இன்னும்
சிலபாடம் சிலோன் வானொலி போல
சிறைப்பிடித்த சித்திரைப்பாவை.
சிலிர்க்கும் நதியா!
////////////////////////////////

யாரோ எழுதியது யாருக்கோ
யான் அறியேன் யாதுமாய் உன் வலி
யாவரும் வாசிக்க யான் 
யாரையோ கேட்டேன்! 
யாத்து தருவதாக விரைவில்
யாவரும் வாசிக்க!  

 /////////////////////////////////