31 January 2012

விண்ணைத் தாண்டிய என் காதல் -நிறைவு

 இந்தத் தொடரின்  முன் பகுதியை இங்கே பார்க்கலாம்.http://www.thanimaram.org/2011/10/3_12.html

மற்றவர்களும் ஊர் பார்க்க வேண்டும் என்பதே நோக்கம் அன்றி தற்பெருமைக்காக அல்ல இந்தத் தொடர்!




நகரங்கள் பல கதை சொல்லும் ஒரு புரியாத புதிர் .யார் யாருக்கு துணிவு இல்லையோ !இந்தப் பட்டினம் அவனை ஒரு பரதேசியாக்கி பரிகாசிக்கும்.

 புதிய உறவுகளைத் தேடி பட்டணம் வரும் பலர் .முகம் தெரியாத ஊர்களில் பிறர் குணம் தெரியாமல் மீண்டும் கிராமத்துக்குப் போய் விடுவோமோ என்று பயத்தைக் கொடுக்கும் .

பெற்றோலின் மூச்சுக்காற்று முகத்தை மூடி நிற்கும்!
நகரங்கள் மீதான காதல் எனக்கு  சிறுவயது முதல் இடப்பெயர்வுகளினால் பல நகரங்களை வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்த பால்யகாலம் போய் !

தொழில் நிமித்தம். இலங்கையின் வடக்கு முதல் தெற்கு,  மேற்கு  என பல நகரங்களையும் 8 வருடங்கள் தினமும் ஒவ்வொரு நகரங்களை அளப்பதே வேலையாகிப் போனது.

திருகோணமலை,மூதூர்,எனவும் என் பயணம் இருந்த படியால் நகரங்கள் எனக்கு ஒரு ஈர்ப்பைத் தந்தது!

இதனால் எனக்கு ஒவ்வொரு நகரங்களில் சில நல்ல நண்பர்கள் வந்து போனார்கள்.இலங்கையைச் சுற்றிக்கொண்டிருந்த என் நகரங்கள் பார்க்கும் காதல் .

புலம் பெயர்ந்தும் சிங்கப்பூர்,தாய்லாந்து,மலேசியா,லண்டன் ,ஜேர்மனி என்று நீண்டு செல்லும் பட்டியயில் இப்போது தொடராக சென்னை ஈர்த்து வருகின்றது.

 சென்னையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த என் சுற்றுலா .

இந்த முறை கொச்சின் நகரையும் பார்க்கும் ஆசையை தூண்டியதால் ஆழாப்புலா பீச்சின் தொடர்ச்சியாக கொச்சின் நகரைப் பார்க்கப் போனோம் .

மிகவும் சுற்றுச் சூழல் துப்பரவாக இருக்கின்றது .பல தனி கட்டிடங்கள் போய் ஐரோப்பிய தேசத்தின் முறையில் தொடர்மாடிக் கட்டிடங்கள் வரவேற்கின்றது .
முக்கிய வீதியூடாக நாம் போனது கொச்சின் துறைமுகத்திற்கு .

கடலின் இன்னொரு தேசம். இயற்கையான துறைமுகத்தில் சுற்றுலாவாசிகளைக் கவர படகுகள் வட்டம் இடுகின்றது.

 பலர் குழுவாகவும் தனித்தனியாகவும் போய் வர  விசைக்கப்பல்கள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தலைக்கு 50 ரூபாய்க்கு 1 மணித்தியாலம் கடலில் வலம் வரலாம் .

காற்று வாங்குவோரும் ,காதலியின் கைபிடித்தோரும் ,கப்பலில் கதைகள் பேசுகின்றார்கள்.
அரச அலுவலகங்களிற்கு
 தூரத்துக் கிராமத்தில்  இருந்து வந்தோர்  தம்    காரியம் முடியும் வரை அரச அலுவலகங்களில் காத்திராமல்.

 இந்த கப்பலில் வந்து கடலைப் பார்த்துச் செல்கின்றார்கள் .வழி நெடுகவும் சாஸ்த்திரம் சொல்லுவோர் கூவி அழைக்கின்றார்கள் .

இந்த கப்பலுக்கு காத்திருக்கும் பாதை ஓரம் அழகிய சோலையாக காட்சியளிக்கின்றது .

காதல்தேசத்தில் தபு  முதல் காட்சியில் நடந்து வருவதைப் போல!

 அழகிய அமைதியான கடல்துறைமுகம் பார்க்க பள்ளிக்கூட மாணவர்கள் ,மாணவிகளை குழுவாக பாடசாலையில் இருந்து அழைத்து வந்து காட்டுகின்றார்கள் ஆசிரியர்கள் .

நம் தேசத்தில் பள்ளிக்கூடத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வது மிகவும் குறைவு .பாதுகாப்புக் காரணங்களால்

 கப்பல்துறைமுகத்தை நாமும் சுற்றிப்பார்த்தோம் .மிகவும் ரம்மியமாக இருந்தது.

 மலையாள பாடல்களை ஒலிக்கவிட்டார் அருகில் இருந்த வானொலியைக் காதலிக்கும் ஒரு நண்பர் .

எங்கே போனாலும் எனக்கும் தாய்வானொலி இலங்கை ஒலிப்பரப்பின் ஞாபகம் கூட வருகின்றது  .

இந்த காட்சிக்கு நம் அறிவிப்பாளர்கள் என்ன பாட்டு ஒலிக்கவிடுவார்கள் என்று என்னவளுடன் ஒரு சம்பாசனை செய்தேன்.

 என்னவளோ நீங்களும் உங்கள் பாடல் ரசனையும் என்று கடலில் தள்ளாத குறையாக ஒரு பார்வை பார்த்தாள்!


அங்கிருந்து வெளியேறி பாதை ஓரம் இருக்கும்  கடைகளை நோட்டம் இட்டவாரே கொச்சின் நகரை வலம் வந்தோம் .

சேட்டன் அழகிய இனிய உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் .மூவரும் உணவருந்தியதும் நம் பயணங்கள் முடியும் நேரம் வந்துவிட்டது.

 சென்னை செல்லும் பஸ் நிறுத்தும் பகுதிக்கு சேட்டன் காரினைச் செலுத்தினான்.

 பல இடங்களில் வீட்டுத்தளபாடங்கள் சிறப்பு விலைக்கழிவில் மடைபரப்பி இருக்கின்றது. விரும்பியோர் வாங்கிச் செல்கின்றனர். கொச்சின் நகரங்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றது ஆபரணங்கள், ஆடையகங்கள் ,உணவகங்கள் எங்கும் அதிக மக்கள் .

ஒரு உணவகத்தில் காப்பி குடித்தோம் அங்கே சேவையாளராக திபெத் இனத்தவர்  மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றார்.

பாரிஸ் வந்த புதிதில் இவர்களுடன் நானும் தொழில் புரிந்திருக்கின்றேன்.

இவர்கள் தமிழகத்து உணவகங்களிலும் பல இடங்களில் பணிபுரிகின்றார்கள்!

கொச்சின் அழகில் இருந்து மீளவும் மனம் இல்லாவிட்டாலும் நம் பயணம் திட்டமிடப்பட்டவை. அதிகம் தங்குவதற்கு அடுத்த கட்ட திட்டங்கள் தடம்புரண்ட ரயில் போலாகிவிடும். என்பதால் .

தியேட்டர் பக்கம் ஒதுங்கனும் என்ற கனவு மட்டும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நம் இரவுப் பயணம் மீளவும் சென்னையை நோக்கி போவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னே ஏர்ணாகுளம் பஸ்தரிப்புக்கு வந்தடைந்தோம்..


தனியார் துறையின் பேரூந்து நிறுத்தும் தரிப்பிடத்திற்கு  நாங்கள் பதிவு செய்த நிலையத்தின் காரியாலயத்தினை  சென்றடைந்தோம் .

அங்கே ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் தமிழ் நகைச் சுவைக் காட்சிகள் போய்க் கொண்டிருந்தது .

அப்போது ஒரு முக்கிய பெரியவர் வந்தார் .கையில் கணனியும் தன் காரியாலய பயணப்பையுடன்.

எனக்கு இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் .அவர்தானா இவர் என்று சிறு தயக்கம் அவரும் என்னைப் பார்த்துவிட்டு கதிரையில் அமர்ந்து நகைச்சுவை காட்சிகளை அலைவரிசை மாற்றி மாற்றி நேரத்தைக் கடத்தினார்.

அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் கூடவே அவள் அப்பனும் நோக்கினார் என்று ஒரு கவிதை சொல்லும் .
அதைப் போல் நானும் இருந்தேன் எங்கள் வாகனம் வந்துவிட்டதை அவர்கள் கூறவும் நாமும் வாகனத்தில் ஏறும் போது அவரும் பின் தொடர்ந்து ஏறினார் யார் அவர்???

29 January 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -2

பொருள் ஈட்டப் புறப்பட்டவர்கள்  பலர் வாழ்வுதனை.  என்றும் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் முதல்  இப்ப அங்க என்ன நேரம் வரை  தொடர்கின்ற  தொடர் நிகழ்வுகள்.

அப்படித்தான்  வடக்கின் பலபகுதியில் இருந்து வியாபாரத்திற்கும் அரச கருமங்களுக்கும் என இடம் பெயர்ந்த உறவுகள் பல.

 அந்த வரிசையில் வடக்கின்  ஏழு தீவுகளில் ஒரு தீவில் இருந்து சுதந்திரம் கிடைக்க(சுதந்திரம் கிடைத்த தாக வரலாறு சொல்லுது)  முன்னமே  1946 இல் இருந்து பல மூத்த தலைமுறையினர் குடும்பத்தை பிரிந்து வியாபாரிகளாக கிழக்கிற்கு,மேற்கு,மற்றும்  காலிவரையும். அதைத் .தொடர்ந்து அங்கிருந்து   மலையகம் வரை  சென்றவர்கள் பலர்.

அப்படிச். சென்றவர்கள் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு.

 வயது போன  பாட்டி மார்களிடம் தான்

.அடுத்த வேளையில் குசினியில் என்ன சமையல் முதல் அடுத்த காணியில் அருவி வெட்டுக்கு எத்தனை பேர் கூலிக்கு  வேனும் என்பது வரை இம்மியளவு பிசகாமல் கணக்குப் போடுவதில் ராமானுஜம் தோத்துப் போவார்.

  .யாராவது கையில் இருக்கும் பணத்திற்கு கையாடல் செய்ய செய்யவும். தலைவன் இல்லாத வீட்டில் தகராறு பண்ணவும் படலை தட்டினால் பாட்டியின்  கையில் இருக்கும் கொக்கத்தடிச் சத்தகம்  குடலை உருவவும்  கோவனம் உருவவும் எந்தக் கனமும் ஜோசிக்காத பாட்டிகள் பல கொண்ட குடும்பமாக இருந்த பூமி ஒரு காலத்தில்.

 கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையும் அடுத்த எதிர்ப்பேச்சுப் பேசி குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் ஒத்து மேவி வாழ்ந்தவர்கள்   .குடும்பம்கள் பல  .

இப்படியான குடும்பத்தில்   இருந்து  பெட்டிக்கடையும் வட்டிக்கடையும்  போடப் போன பொன்னையா ,அம்பலத்தார்,கார்திகேசு,என பலர். போனவர்கள் தங்களின்    அவர்களின் மூத்த மகன்களையும்  சேர்த்து அழைத்துப் போனார்கள்.

 தந்தைவழியில் தனையனும் என இப்படிப் போனவர்களின்  வரிசையில் ராகுலின்  பெரிய தாத்தா.    அவர்கள்  பெட்டிக்கடை பேரம்பலம் என முதலில் வியாபாரம் தொடங்கியது தலவாக்கொலயில்.

 அந்த வியாபாரம்  1958 இல் வந்த கலவரத்தில் அழிக்கப்பட்டது.


 அதன்   பின் அவர் இடம் மாறி மீண்டும்  தன் தம்பியுடன் 1960   பிற்பகுதியில் . வெற்றிலைக்கடையும் ,வட்டிக்கடையும் போட்டது பதுளையில்.

தங்கள் வாரிசுகளையும் வியாபாரத்தில் பழக்கப்படுத்திய போது!  அங்கு முதலில் போனவர்களில்    ராகுலின் மூத்த மாமாவும் ஒருவர்.

  அவர் பெட்டிக்கடை முதலாளியாகியது  பதுளையின் முக்கிய புத்தமதக் கோயில் முன்னால் இருந்த வீதியில்! முத்தியங்கன ரஜாமஹா விகாரை நிலத்தில்..

.....   முகம் தொலைத்தவன் வருவான்.......

27 January 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -1

மூத்த குடியாம் வேடுவர் வாழும் துங்கிந்தைத் தாயே போற்றி!





வியாபாரிகளையும் வாழவைத்த ரொக்கில் தாயே போற்றி.


லயம் என்ற வீட்டுச் சிறைதனில்
 விட்டில் பூச்சி ஆகாமல்.
 வெளி உலகிற்கு வீரியத்துடன்
 வாழ்ந்து காட்ட கல்வி புகட்ட
பிரியத்துடன்
வடகிழக்கில் இருந்து வந்து குருத் தொழில் செய்வோருக்கும். .காலச் சுவடுதனில் கலியாணம் முடித்து  புலம் பெயர்ந்த முன்னால் ஆசிரியர்களுக்கும்.    


        ................சமர்ப்பணம்..

தமிழ் பால் ஊட்டிய அமலதயாவதி ஆசிரியர் பாதம் பணிந்து.

 தமிழ் மீது கொண்ட காதலில்
வலையில் தனிமரமாக  நிற்க வழி காட்டிய
நாற்று நிரூபன் மற்றும் காற்றில் என் கீதம் பதிவாளினி துணையுடன்.கூட வரும் உறவுகள் தோல் கொடுக்க

என் நண்பனின் கதையை வலையில் கொண்டுவாரேன்.  இலக்கனவழு  வராமல் காத்தருள்வாய்  தேவி.
///////////////////////////////////// / "இதோ........                                              பாரு....


 மலையகத்தின் அழகு தனைப்பாட கண்ணதாசனும், குறிஞ்சித் தென்னவனும் மீளவும் பிறக்க வேண்டும்!  என்ற ஜோசனையோடு. அந்த அழகு நகரம் பதுளையின் பஸ்தரிப்பு நிலையத்தில்.


1999 செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தின் ஞாயிற்றுப் பின் இரவுப் பொழுதில்.   நண்பர்கள் மூவருடன் ராகுல் நின்று கொண்டிருந்தான்.

 .எப்போதும் குதுகளிக்கும் நண்பர்கள்  முகத்தில். பிரிவின் வலிகள். யாரும் எதையும் பேசாமல் இருந்த போது. மக்கள் மயப்படுத்த போக்குவரத்துச் சேவை பஸ் தூர இடமான  நாட்டின் தலைநகராம் கொழும்பிற்குப் போகும் வழி என் 99 பஸ் தரிப்பிடத்திற்கு வந்து நின்றதும்.

 ராகுல் முதல் பயணியாக தன் தோல்பையை  சீட்டில் வைத்து  ஆசனத்தைப் பிடித்துக் கொண்டான்.

 இன்று திடீர் பயணம் போவதால் இந்த அவசரம்.

சீட்டில் தோல்பைவைத்த கையுடன் பற்றுச் சீட்டையும் பெற்றுக் கொண்டான். தன் பயணத்தில் உறுதியாக இருப்பதால்.

வெளியில் இருக்கும் நண்பர்கள் தயாளன்.சங்கர்,சுகுமார் முகங்களில் பிரிவின் ரேகைகள் .

சரிங்கடா.
 நீங்கள் கிளம்புங்க மச்சான்.
 நேரம் வரும் போது சந்திக்கலாம்!

.ராகுல் நீ எடுத்த எந்த விடயத்திலும் தலையிட்டது இல்லை யாரும். ஆனால் நீ இப்படி கல்பனா விடயத்தில் முரண்பாடாக இருப்பதைத் தான் பொறுக்கமுடியல என்றான் சுகுமார்.

 எதுவும் பேசாதீங்க. உங்க நட்புத்தாண்டா என்னிடம் இருக்கும் சொத்து .
அதையும் பிரியும் வண்ணம் நடக்க மாட்டீங்க! என நம்புறன்

.சரிடா இனிமே எதுவும் பேசல. சந்தோஸமாக போய்ட்டுவா

 .இல்ல மச்சான் சுகுமார். இனி நான் இந்த பக்கமே வரமாட்டன். என் வாழ்க்கையில் வலியும், வேதனைகளுக்கும் இன்றுடன் விடுமுறை.   துயரங்கள்  நிறைந்த இந்தப் பாதை இனி மூடப்பட்டது. என எண்ணிக் கொண்டுதான் வெளியேறுகின்றேன்.

 உங்க நட்பை ஒரு நாளும் மறக்க மாட்டன். நன்றிடா இந்தளவு தூரம் வந்து வழி அனுப்புறத்திற்கு .

போடாங்.., இவர் எல்லாத்துக்கும் நன்றி சொல்லுவார். ஏண்டா

 நாங்க நண்பர்கள் தானே?
இது கூடவா செய்ய மாட்டம்.

 சரி சரி சந்தோஸமா கிளம்பு என்ன தேவை என்றாலும் ஒரு கோல் பண்ணு. .இரவுப் பொழுதில் அந்த நகரம் தன் சோபை இழந்த பிச்சக்காரன் போல இருந்தது .

.சுகுமார் அவனைத் தழுவி வழி அனுப்பும் போது 500 ரூபாய் நோட்டினை சட்டைப் பையினுள் தினித்துவிட்டான்

.ஏண்டா வைச்சுக்க அவசரத்திற்கு உதவும். எப்போதும் என் நினைப்பு இருக்கும் தானே?
 உன்னை மாதிரி ஒருத்தன் கூட இவ்வளவு நாளும் நட்பாக தொடர்ந்து இருந்ததில் எனக்கு பெருமை.

 என் வீட்டில் என்னை விட உனக்கு எப்போதும் ஒரு ராஜகம்பீர மணிமகுட  வரவேற்பு இருக்கும். இனி எப்போது சந்திப்போம்? என்று தெரியல.

 என்றைக்கு இந்த ஊருக்கு வந்தாலும் நம்மவீடு இருகரம் கூப்பி வரவேற்கும். எந்த நேரம் என்றாலும் மறந்திடாத.

 மீண்டும் மீண்டும் என்னைக் அன்புக் கடன்காரன் ஆக்கின்றாய் சுகுமார். உண்மையில் பூர்வஜென்ப பந்தம் போல உன் நட்பு.
 ராமன் குகன் நட்பினை படித்தேன் நூலில்.  நம் நட்பு சிலருக்கு பாடமாக இருக்குது  நட்பு வட்டாரத்தில். அந்த வகையில் சந்தோஸமே .

.சரிங்கடா பஸ் எடுக்கப் போறான். பார்த்துப் போங்கடா.

 இவனுங்க இப்படித்தான் ரேஸ் பண்ணிக் கொண்டு இருப்பாங்க எடுத்துத் தொலைக்கமாட்டாங்க என்றான் தயாளன்.

 .குளிர் கால நேரம் என்பதால் இரவுப் பொழுது விரைவில் கடைகள் மூடப்படும். சில இரவு காப்பிக் கடைகளும் கொத்து ரொட்டிகளும் கொத்தப்படும் சத்தம்  மட்டும்  கேட்கும். பின் இரவுப் பொழுதில்.

 சகோதர வானொலி அலைவரிசை சிரசவில். இனிய சகோதரமொழிப்பாடல்கள் ஒலிக்கவிடும் நேரம்.. என்றாலும் .

அன்று ஞாயிறு பொழுது என்பதால் சிரச வானொலியில் வலம் வரும் top 20' ஹிந்திப் பாடல் தெரிவுக்கு.

 அறிவிப்பாளர் சமந்த வானொலியில் துள்ளிசையோடு வருவதைக் குறிக்கும் பாடல் குறீயிசை ஒரு புறம் என்றால்.!

 இரவுப் பொழுதில் சாரயத்தின் வாசத்தில் ஊறிப்போய் குடை ,மற்றும் செருப்புத் தைக்கும் வீதியில் குடும்பம் நடத்தும் அந்த சகோதரமொழி குடும்பத்தலைவனின் மூன்றாம் தரமான வார்த்தைகள் காதில் விழுகின்றது.

இந்த தலைவனும் ராகுலும்  எத்தனை  படத்தினை அந்த ஊர் தியேட்டரில்  முதல் காட்சியில் இருந்து பார்த்திருப்பார்கள் என்ற எண்ணம் ஒரு புறம்.

 இனி இவர்களையும் சந்திக்கமாட்டன். என்பதால் ஒரு முறை அவனையும் தரிசித்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அவர்களின் ரோட்டோர வீட்டை எட்டிப்பார்த்தான்.

 போத்தல் விளக்கு (கைலாம்பு)வெளிச்சத்தில் அவன் சுருட்டுக் குடித்துக் கொண்டிருந்தான்.

 ராகுலைக் கண்டதும்!
.மல்லி கமனக் யனவா வகே?
 ஒவ் மம கொழும்ப ஜனவா.
( தம்பி பயணம் போகின்றீர்கள் போல?

ஓம் நான் கொழும்பு  போறன்.)
  என்று விட்டு அவனை கடைசியாக பார்த்துக் கொண்டே பஸ்சின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ராகுல்.

 பஸ் நீண்ட இரைச் சலுடன் நகரைக் கடந்து பயணித்துக் கொண்டு இருந்த போது.
 அவன் மனதில் தான் யார் ?இந்த ஊருக்கு முதலில் வந்த நினைவுகள் தொடர்கதை போல விரிகின்றது. .ராகுல் யார்? கல்பனா யார் ?இந்த வழி அனுப்பவந்து சென்ற நண்பர்கள் யார்.? அவனின் சீட் அருகில்   நித்திரைக் காத்திருக்கும் நான் யார்  வருடங்கள் முன்னோக்கிப் போவோமா?

26 January 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -அறிமுகம்...2

வணக்கம் உறவுகளே.
 மீண்டும் தனிமரம் மலையகத்தில் முகம் தொலைத்தவன்  புதிய தொடருடன் உங்களை நாடி வருகின்றேன்.

இந்தத் தொடரில் வரும் பாத்திரங்கள் யாவும் நிஜமே .பெயர்கள் மட்டும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.

கதையின் நாயகன் ராகுலுக்கும் எனக்கும்(தனிமரம் நேசன்) நீண்டகால
நட்பு உண்டு. இன்றும் அவன் என்னுடன் முகநூலில் நட்பை தொடர்கின்றான்.

 ஐரோப்பிய தேசத்தில் அடைக்கலமாகிவிட்ட அவனின் கடந்தகால ஞாபகங்களை. சொல்லாத காதல் செல்லாத காசு என்பதைப் போல சமுகச் சூழலும், பொருளாதார சுழ்நிலையாளும் மெளனித்துப் போன காதலை. இந்த தொடரில் மீட்டிப் பார்க்கும் ராகுல் பாத்திரம் நிஜம்.

 அவனின் சில தவறுகளை என்னோடு பகிர்ந்தபோது பதிவுலகில் சொல்வதற்கு அனுமதி தந்திருந்தான்.

 அந்த நண்பனின் கதையை உங்களுடன் என் சிந்தனை செதுக்கல் மூலம் வலையில் ஏற்றி உங்களுடன் இணைக்கின்றேன்.

 இந்த கதைக்களம் நடக்கும் பகுதியில் விற்பனைப்பிரதிநிதியாக  நானும் இருந்தவன்(1999-2001  காலப்பகுதியில்) என்பதால் இந்தப் பகுதியை கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

 நட்பு அனுபவமே அதிகம் ஆசானாக இருந்து வழிநடத்தும் என்பதை நண்பர்களின் செயல்பாடுகள் மூலம் உணர்ந்து கொண்டதன் பயனை இந்தத் தொடரில் அலசுகின்றேன்.

 இங்கே எழுத்தாணியாக மட்டும் தனிமரம் இயங்கும். மூலக்கருத்து ராகுலனின் சொந்தக்கதை என்பதால் முடிவையும் அவனிடமே விட்டு விடுகின்றேன். என் தளத்தை வாசிக்கும்   அவனும் ஒரு பார்வையாளனாக இருப்பதால் கல் எறி /சொல் எறி எல்லாம் அவனைச் சேரட்டும்.

தொடரை இயக்கும் நண்பனாக தனிமரம் தொடரின் சில இடங்களில் பிடித்த பாடல்களுடன் உட்புகுந்து கொள்கின்றேன்

.வாரத்தில் ஒரு நாள் தொடர் தொடர்ந்து வரும். அறிமுகம் ஆகுவதற்கு முதல் இரு அங்கத்தையும் தொடர்ந்து தருகின்றேன். மூன்றாவது அங்கத்தின் பின் வாரத்தில் ஒருநாள் என எண்ணுகின்றேன்.

 சித்தன் செயல் சிவன் செயல் என்பது போல அப்பன் செயல் எப்படியோ நான் அறியேன். அடுத்த பதிவு முதல் தொடர் நாடி வரும்.

முகப்புப் படத்தை தந்த நிகழ்வுகள் தளத்தின் ஓனர் கந்தசாமிக்கு சிறப்பு நன்றி .

.கதைக்களம் மலையகத்தின் எழில் கொஞ்சும் தேசம். இலக்கியச் சாரலில் தெளிவத்தை ஜோசப்,தமிழ் ஓவியன் என கலையுலகும்.

 இலங்கை அரசியலில்  நீதித்துறையில் பயிற்ச்சி பெற்று சந்திரிக்கா அம்மையார் வரவின் பின் அரசியலில் புகழ் பெற்று சமாதானப்பேச்சு வார்த்தையில் முக்கிய அரசபகுதி அமைச்சர் ஆக இருந்த   நிமால் சிரிபால டி சில்வா.

 மற்றும் சட்டத்துறை பிரதி அமைச்சர் டிலான் பெரேரா போன்றோரின் பூர்வீக தேசமான துங்கிந்தைச் சாரலின் விளைநிலம்.

ஊவா மாகாணத்தின் தலைநகரம்  பதுளைப் பகுதியில் பயணிக்கும் தொடர்.

 மூவின மக்களும் அன்புடன் இனிதே வாழும் பகுதி. பதிவுலகில் இந்தப்பகுதியில்  இருந்து நகரும் முதல் தொடராக மலையகத்தில் முகம் தொலைத்தவன் இருக்கும் என்ற ஆவலுடன் இதை பகிர்கின்றேன்.


மூவினம் வாழும் பூமி என்பதால் சில இடங்களில் பேச்சில்  வரும் சகோதரமொழி (சிங்களம்) தவிர்க்கமுடியாதது. கதையின் உண்மைத் தன்மைக்காக இணைக்கின்றேனே தவிர அந்த மொழிப் புலமை தெரிந்த பண்டிதன் அல்ல தனிமரம். மொழித் தினிப்பும் அல்ல.

 பதுளை பற்றிய சில விடயங்களை தொட்டுச் செல்லும்





. இந்த தொடரில்  யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. என்னையும் அறியாமல் மனம்
நோகடித்தால்! இங்கேயே மன்னிப்பை கோருகின்றேன்.

 புலம்பெயர் பொருளாதார தேடல்  அதிகம் தனித்தனியே மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு தனிமரம் சுதந்திரப்பறவை  அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..
என்றும் நட்புடன்
தனிமரம் நேசன்.

இந்தத் தொடருக்கும் தனிமரம்  நேசனுக்கும்  தொடர்பு இல்லை !இல்லை!! இல்லை!!!

இணையத்தின் இதயங்கள் வாழ்த்திய நொந்து போகும் ஓர் இதயம் தொடரினைப்  இங்கே-படிக்கலாம்-http://www.thanimaram.org/2011/09/blog-post_24.html

24 January 2012

நீ வரும் பாதை வானவில் கோலம்.

தனி வழியில் போனவன்
 உன்னைப் பார்த்த பின்!
 தோல் பற்ற தவம் இருந்தேன். 
அதிகாலை குளிரைப் போல் 
அடைக்கலம் தேடி உன் மடி சாய்ந்தேன்.
 மாலையிட்டு மன்னவன் இவன்
 என்று முகம் மலர்ந்தாய்.




எப்போதும் ஓடும் நதிபோல
  இவன் வாழ்வில்
 அணைகட்டுப் போல அடி எடுத்து வைத்தாய்.
 ஆண்டுகள் சில  காத்திருந்தேன்
நீ  அருகில் வர அன்பே.


எப்போதும் சண்டைபோடும்.
 அலைபேசியும் ஊர் புதினம் சொல்லும் முகநூலும், வலைப்பதிவும், என திரியும் தனிமரத்திற்கும்
தாகம் தீர்க்கும் தமிழ்த்தாயக வந்தாய்.
 இந்நாளில் என் அன்பே.

திருத்த முடியாத தண்டம் இவன்
 என்று என் தந்தை கைபிடித்துக் கொடுத்தது உன்னிடத்தில்.
 இப்போது கொஞ்சம் பரவாய்யில்லை
என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் மாமானார் முன்னாடி
  மருமகனாக நானும் நிலம் நோக்கின்றேன்.
 கூண்டில் இட்ட சிங்கம் போல
 இது எல்லாம் நீ செய்த திருத்தங்கள்.



பொறுமையைப் பழகுங்கள்.
 என்று  பலதடவை போனில் சொன்னாலும்
 .பொசுக்கென்று கோபம் வருகுது உங்களுக்கு!
 என்று திட்டும் போதெல்லாம் தொலைபேசி துண்டிக்கப்படுவதும்.
 பின் கெஞ்சலுமாக ஓடும் நாட்களில் எல்லாம்
 நீ சிறுகுழந்தையாகி என்னை செதுக்கும் சிற்பி ஆகின்றாய். .
  
 சொல்லவில்லை என் காதலையும்,
உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் .
சொல்ல முடியாத தூரத்தில் நீ ..


இன்று பிறந்தநாள் கானும் உள்ளங்களுக்கு தனிமரம் தரும் சிறப்புப் பாடல் (இந்த பாட்டிற்கு மனோ அண்ணாச்சி டூயட் பாடுவார் ஹீ ஹீ)

முஸ்கி -1 இது கவிதை மாதிரி  புலவர்கள் தான் இதை தெளிவு படுத்தனும்.


முஸ்கி-இந்தப் பதிவு எனக்குப் பிடித்த தேவதைக்கு முந்திக் கொண்டு விடும் தூது.போதிய நேரம் இல்லை கணனி முன் இருக்க.

22 January 2012

சேலை கட்டும் பெண்.

உறவுகளே நலமா சிறிய இடைவெளியின் பின் உங்களுடன் மீண்டும் தனிமரம் இனைகின்றது.


பதிவுலகில் 1000 பதிவுகளைக் கடந்து தொடர்ந்தும் காத்திரமான பதிவைத் தரும் அண்ணண் சி.பி. செந்தில்குமார் அவர்களுக்கு தனிமரத்தின் காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள்!

////////////////////////////////////////////

சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள்.....!
 நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப் போனேண்டி...,.!

என்ன மச்சான் இப்படி பாட்டோட வாராய் ?என்று நண்பன் என்னிடம் கேட்ட போது? சேலைக்கடைக்குள் நடந்த விடயத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டதை  உங்களிடமும் சொல்கின்றேன்!

பலருக்கும் தம் உறவுகளுக்கும் தம் மனைவி மாருக்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்தாலும் சேலை வாங்கிக் கொடுக்கும் கணவன்மார்கள் அதிகம் எனலாம் !

இவர்கள் மனைவியுடன்  புடவைக்கடைக்குள் நுழைந்தால் அங்கே இருக்கும் விற்பனையாளர்கள் அண்ணா வாங்க அக்காவுக்கு இந்த சாரிஎடுப்பா இருக்கும் சினேஹா மாதிரி இருக்கும் அவங்க உடுத்தினால்  தேவதை மாதிரி இருக்கும் என்று பாணில் பூசிய ஜாம் போல இனிக்கப் பேசத் தொடங்கினால் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கனும்..

 குடிக்கத்தரும் குளிர்பாணத்திற்கு மேலாக நம் கஜானா காலியாகிவிடும். எத்தனையோ சாறியைப் பெண்கள் பிரித்துப் பார்த்தாலும் திருப்தி  கிடைப்பதில்லை! சீதை பிராமணர்களுக்கு இட்ட சாபம் போல!

 ஒவ்வொரு சாறியும் உடுத்திப் பார்க்கும் போது அவர்கள் தம் கணவனுக்கு எட்டில் அழகு என்று பாடத் தோன்றும் என்றாலும் விலையைப் பார்க்கும் போது வருமானம் செலவு பத்தணா நிலமை.

 ஒவ்வொரு ஆண்மகனும்  ராமன் வளைத்த வில்லை வளைக்க முடியாது தோற்றுப் போகும் சுயம்வரம் இந்த புடவைக் கடைகளில்  என்றால் மிகையாகாது.

 விற்பனையாளர்கள் மேசைத் தட்டில் சாறியை  விரித்தால் !

கல்லுவைத்த அழகு சாறிகள்,கோலங்கள் சாறிகள் ,சில்க் சாறிகள் வஸ்த்திரகலாப்பட்டுச் சாறிகள் ,எம்றைற்றிங் சாறிகள் ,நேத்தரகலா பட்டுச்சாறிகள் கொட்டன் சாறிகள்  ,பட்டுச் சாறிகள் பளபளக்கும் சீக்கூயின் சாறிகள்...., என சேலைப்பூவை விரித்து விட்டால்.

 ஊரில் சொல்வார்களே சோலைக்காட்டுப் பொம்மையும் சேலையுடுத்தினால் சொப்பன சுந்தரி போல இருப்பால் !என்பது தனித்துவம் தான்..

இன்று நவயுக மங்கைகளுக்கு சேலை உடுத்த அதிகம் தெரியாது என்று ஐரோப்பாவின் எண்ணத்தில் இருப்போருக்கு!

 சென்னை ரங்கநாதன் வீதிக்கடைகளில் சிலமணித்தியாலம்  வலம் வந்தால் பொய்யாகிப் போகும் கருத்து.

(கடந்தவருடம் ரங்கநாதன் தெரு)

  இன்னும் சேலைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும்.
ஒவ்வொரு மங்கையையும் மாடன் உடையைவிட மங்களமாக சாறியில் பார்க்கும் போகு மதியிழந்து போகும் இந்திரன்கள் அதிகம் எனலாம்!

இப்படியான சேலையை தெரிவு செய்யும் போது அழகு ,விலை ,என்றதைப் பார்க்கும் நாம் !

இப்போது இன்னொரு விடயத்தையும் பார்க்கவேண்டும்.

 அதுதான் சாறி வேண்டும் போது நீளத்தையும் அகலத்தையும் பார்க்கும் விழிகள் உயரம் என்ற ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

 அழகிய வேலைப்பாடு கொண்ட சேலை  வாங்கும் போது. உயரம் குறைந்தவர்களுக்கு உடுத்தும் அளவு போதுமா? என்று கவனிக்க வேண்டும். .கொஞ்சம் குள்ளமானவர்களுக்கு  சாறியின் உயரம் அதிகமாக இருக்கும் போது.உயரம் குறைந்தவர்களுக்கு  சேலையை மீளவும் வெட்டிச் சீரமைக்கும் போது  அதன் இயற்கை அழகினை சில தையற்கலைஞர்கள் சீரலித்து விடுவார்கள்.  அத்துடன் அழகிய வேலைப்பாடுகள் தெரியாமல் போய்விடும்

. . அதனால் எத்தனை ஆயிரம் கொடுத்தும் அழகிய சேலையை மனைவிக்கு  வாங்கிக் கொடுக்கும் மனம்கவர் கணவன் மார்கள் இந்த உயரம் கூடிய சாறியை வாங்கும் போது தம் மனைவிக்கு ஏற்ற உயரம் குறைந்த எடுப்பான சேலையை பார்த்து வாங்க வேண்டும்..!


 சேலை வாங்குவதில் .கவனம் இல்லையேல்!இழப்பு பணம் மட்டுமல்ல !அன்புதான்!

இப்படித்தான் சிலர். சென்னை போகும்   நண்பர்களிடம். தம்ரசனையைச் ரகசியமாக சொல்லி வாங்கி  வரச் செய்து.

(இன்னும் சில வாரம் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு காத்திருக்கும் ரங்கநாரன் தெரு வியாபாரிகள்)

  தம்மனைவிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க நினைப்போர் !  சிலர்  மனதில் ஏற்படும் வாய்த்தர்க்கம் முல்லைப்பெரியாறு அணை போல இருவருக்கும் இடையில் அக்கப்போராக  வந்தால்! பிறகு நண்பர்கள் எப்படி இன்முகத்துடன் அவர்கள் வீட்டுக்குப் போக முடியும்?

 உயரம் கூடிய  சாறியை  உயரம் குறைந்தவர்கள் எப்படி உடுத்துவது? ஏற்கனவே பிள்ளைகளுடன் விசேட வைபவங்களுக்குப் போய் களைப்புறும் நம் சொந்தங்கள் சேலையை வெறுப்பது ஒருபுறம்  இருக்க ஒருபுறம் அதையும் மீறி  ஆசையில் இந்த உயரமான  சேலையையையும் மடித்து உடுத்திக்கொண்டுண்டால்  எப்படி அடிக்கடி  அவர்களால் இடுப்பு மடிப்பை சரி செய்வது?

 இப்படியான புதிய சிக்கல்களையும் கணவனாகப் போகும் மன்மத ராசாக்களே கவனித்த்துக் கொள்ளுங்கள்! இல்லையேல் நண்பர்களின் சம்பாசனையின் போது!
 
உங்கள் நண்பர்களின் இல்லத்தரசிகள் நீங்கவாங்கின சாறியை நீங்களே உடுத்துங்கோ? அவரும் அவருடைய சாறி தெரிவும்! என்று இல்லத்தரசிகள் பொங்கி வரும் காவேரியாக நண்பர்கள் முன் மடை திறந்தால்! நிலம் நோக்குவது கணவன் மட்டுமல்ல விருந்தினர்களும்தான்.!

07 January 2012

தைமகள் வருவாள்!

நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தி
 பார்ப்போரை பரவசம் ஆக்குவாள்!
தலைமகன்  வந்து தளுவியதால்
 நிறைமாதக் கர்ப்பனியாகி!

 குலமகள் குலுங்கி வளைக்காப்பு நடத்த
மஞ்சள் பூசிய முகத்தினை!
 மன்னவனைக் கண்டு
 மண்ணை நோக்கி குனியும் கார்காலம் !





நீண்ட சடையை நிலத்தில் விரிக்க
.தைமகள்  தங்க நிறத்தில் நெல்மணியை பரப்பி !
விவசாயிகளை சிரிக்க வைப்பாள்!
     தைப்பொங்கல் என்று சொல்லி!  !
அதைக் கொண்டாடியது ஒரு காலம்!





இனவாத இராட்சதர்கள்
  இரக்கமில்லாது எடுத்து இயம்பிய போரில் 
இடம் பெயர்ந்து கொதித்தது
 இதயப் பானைப் பொங்கல்!
 அலைந்து திரிந்து
 பானைதேடிப் பொங்கும் என்னத்தில் இருந்தபோது

!  பொசுபரசு போட்டு புதர்கள் ஆக்கிய வயல்களில்  .
இனி எப்போது நெல்மணிகள் வம்சம்  பிறக்கும்!



மீண்டும் வாருங்கள் பொங்கல் வைக்கலாம்!
 பிறந்த அன்னைவயலில் என்று கூறும் பேயரசுகள்

 இன்னும் அகற்றவில்லை பாதுகாப்பு வேலிகளை! 
ஒரு அடிதன்னும்!

அடுத்த முறையாவது வந்திடுவேன் பொங்கல் வைக்க !
காத்திருப்பாய் தை மகளே!
  அழைக்கின்ற போது!
 அத்தான்
.நானும் வாறேன் புலம்பெயர்ந்து கூப்பிடுங்கள் !அண்ணாவைவும் ,தம்பியையும்,
 அடுத்த நேரம் என்ன ஆகும் யார் அறிவார்
என்று முனங்கும் கானும் பொங்கல் !

அப்பா எப்போது வருவார் சேர்ந்து பொங்க

 என்று கேட்கும் அண்ணன் மகளிடம்

நெல்லுவாங்கப் போனவன் நெடுநாளாகி வராத
 கதையை எப்படி உரைப்போன்!

நிலமகள் தாயே!

 நின்னை தேடிவருவேன் என் குருத்துக்களுக்கு
  நான் பொங்கிய வயல்க் காணி காட்டுவதற்கு !

புலம்பெயர்ந்த வலிகள் போக்கி

. புன்முறுவல் பூக்க

 தைமகள்  வரும் நாளில்

 பொங்கவேண்டும் தமிழர் தாயகத்தில்!
இத்தனை ஆசைகளையும் !
அடுப்படியில் பொங்கியவாரே
  அசைபோடுகின்றேன்!
 அடுத்த வேலைக்குப் போகும் அவசரத்தில்!!



உறவுகள்  வாசகர்கள் அனைவருக்கும் முன்கூட்டிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
 
இன்னும் சில வாரத்தில் வலையூடாக சந்திக்கலாம் அதுவரை!       

வண்ணத்தமிழ் வணக்கத்துடன்
தனிமரம்!


 ! 

03 January 2012

வரம் தருவாய்!

வலையுலக உறவுகளுக்கு !பிறந்திருக்கும்(ஆங்கிலப்) இப்புத்தாண்டு வளமான ஆண்டாக அமையட்டும்!


முன் எச்சரிக்கை!! !
_________________________
இந்தப்பதிவு ஆன்மீகப் பிரியர்களுக்கு மட்டும் !!விரும்பியவர்கள் எந்த  எதிர்க்குத்துப்பதிவு போட்டாலும் தனிமரம் பதில் சொல்லாது!!
////////::/:/




ஆண்டாலின் அழகனே! கருனையின் வடிவமே! உன் திருப்பள்ளி எழுச்சியின் திருக்கோலம் காட்டும் சொர்க்க வாசல் திறப்பு இன்று !(4/1/2012)

அன்று உன் கோலம் கான காத்திருந்தேன்! புன்னாலைக் கிருஸ்ணர் கோயில் எழுந்தருளி மண்டபத்தில்!

நித்திரை கெட்டு நின் நாமம் நினைத்து !அந்தனர் வேதம் ஓத அயராது பூத்த விழிகளுக்கு!
 அன்புருகி ஆனந்தமாய் அழகு மணிமண்டபம்! நிலைக் கண்ணாடியில்! சொர்க்க வாசல் திறப்பினை  
பரவசத்துடன் பார்க்க வழி செய்த காலங்கள் எத்தனை வருடங்கள் போனாலும் விழியில் நீங்காது மாதவா!

எல்லாம் உன் கிருபை என்று நினைத்த போது !
அகதியாக்கி ஆழ்கடல் தாண்டச் செய்து அடுத்த தேசம் கடக்க வைத்தாய் கோதையின்  தாமரைக் கண்ணா!

தயாபார நின் திருப்பள்ளி எழுச்சி சிரிரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும்  கானும்  வரம்  !
எனக்கருள்வாய் என்று நின் பாதம் பற்றுகின்றேன்.!
 பார்ப்பதனே!
 கேட்டதைத் தரும் கிருஸ்ணசுவாமியே!
 என் ஆசையில் உனக்கு ஒரு தூது பள்ளிகொண்டப் பெருமாளே! 
உனைத் தேடி சிரிரங்கம் ! வருவேன் யாத்திரையாய்!
 என்றாவது ஒரு நாளில் உன் கருனைப் பார்வை பட்டாள்!
 சொர்கனுக்கு வாய்த்த சுந்தரியோடு !

பிற்சேர்க்கை-

கிருஸ்ணர் மீது பாடப்படும் ""ஆனந்த சாகரா முரளீதரா மீராப் பிரபு ..என்ற பாடலின் வடிவமான வேற்று மொழிப்பாடல் இது!
மொழிகள் தாண்டிய இசையும் .ஆன்மீகமும் இணைந்த இந்த பக்திப்பாடலை!
 கடந்த மாதம்   ஆலயம் ஒன்றில்  மொரீசியஸ் நாட்டுச் சிறுமி  ஒருத்தி மிகவும் அனுபவித்துப்பாடிய போது!  மனதில் ஒரு குளிர்ச்சி.
 .இந்த திருவெம்பாவைக் காலத்தில் இப்படியான பாடல்கள் இன்னும் பெருமாள் மீது பக்தியைக் கூட்டுகின்றது!