27 November 2012

பிரெஞ்சுக்காதலியும் பிரியும் தனிமரமும்.

....கனவரம் தாருங்கள்
தெய்வங்களே!

நன்றி கவிதாயினி ஹேமா கவிதை!
////////////////////////////////////////////////தெய்வங்களை வணங்கிய வண்ணம்!

 உறவுகளே நலமா??

என்னச்சு தனிமரம் ஒரே மூச்சில் பிரெஞ்சுக்காதலியை வலையில் எழுதுகின்றதே ?என முகநூல் மற்றும் நேரில் சில உறவுகள் கேட்ட போது தனிமரம் ஒன்றும் சொல்லவில்லை .

காரணம் என் தனிப்பட்ட ஆன்மீக பயணத்திற்கான பல தனிப்பட்ட ,தடைகளினால் கொஞ்சம் அமைதி நிறைய அவஸ்த்தையை இந்த தொடர் தந்தது .பின்னனியில் .

எது எப்படியோ என் வலையுலக பயணத்தில் இந்த ஆண்டு இரண்டு தொடரினை எழுதிய மனத்திருப்தி நிறைவான சந்தோஸம்.அதில் ஒன்று மின்நூல் கண்டு அடுத்த கட்டமாக அச்சில் வரும் முதல்கட்டத்தில் தற்போது நண்பனிடம் சென்று இருக்கின்றது.விரைவில் நூலாக வரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்!

இந்த உருகும் காதலிக்கு எந்த திரட்டியில் எத்தனை வாக்கு வாங்கியதோ ?இல்லை எத்தனை பின்னூட்டம் குறைநிறைகளை சுட்டிக்காட்டியதோ ?

என்று திரும்பி பார்க்காமல் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவிட்டேன்
பல இடத்தில் .
என் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து பின்னூட்டமாக கருத்துரைக்க ஓடிவந்த தின்டுக்கல் தனபாலன் சாருக்கு என் மனம்கனிந்த நன்றிகள் முதலில்!


இப்படி ஒரு தொடரினை எழுத தூண்டிய என் உயிர் நண்பன் டெனிலுக்கு நன்றி .

அவனைத்தொடர்ந்து இந்த விசா வலியை புலம்பெயர் வாழ்வின் சமூகநிலையை சாடி எழுத பின்னனியில் இருந்த அன்பு நண்பர் மாத்தியோசி மணி .அவரின் வழிக்காட்டல் தான் இந்த தொடரில் என் நண்பன் ஜீவனின் கதையை தனிமரம் பதிவு செய்ய உதவியது!

அதே போல இனவாத ஆட்சியில் இருந்து புலம்பெயரும் பலரின் அவலத்தையும் அவர்கள் பயண முகவர்களினால் கைவிடப்படும் கையறு நிலையை நிச்சயம் இனிவருவோருக்கு பாடமாகும் வண்ணம் பதிவுலகில் கருத்து அவசியம் என்று சொன்ன நெற்கொழுதாசன் இன்னொரு உதவியாளர் .

இவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்!


தொடரில் சங்கவியின் புலம்பெயர் அவலத்தின் நிலையை செதுக்க காரணம் அன்பு நண்பி கவிதாயினி ஹேமாவின் வழிகாட்டல்! ஒரு சில விடயம் பேசமுயன்றேன் புலம்பெயர்வின் வழியில் சபலத்தில் போய் சகதியில் விழும் யுவதிகள் பற்றி .

இந்த விடயத்தை அதிகம் பேச நினைத்தாலும் சமூக கடமையில் இருந்து விலகக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொட்டுவிட்டுச் சென்ற திருப்பதி போதும்.

இந்த தொடரில் ஜீவன் காத்திருந்த காலம் நிஜம் ஒரு நண்பனாக தனிமரம் அவனை அறியும் 5 வருடம் காத்திருந்த போது பிடிக்கும் என்று வாய்மொழி சொல்லாத நிசா !மாயாவுக்கு சம்மதம் சொல்லிய பின்
அவன் சிங்கப்பூர் போவதற்கு முதல் நாள் பிடிக்கும் என்றதை ஏற்க முடியாத துரதிஸ்ரம் !என்றாலும் படிப்பு முக்கியம் என்ற நிசாவின் நிலைப்பாடும் தெளிந்த முடிவினை சுதந்திர தேச மங்கை எடுக்காத நிலையுமே இந்த காதல் உருக காரணம் !

ஜீவன் நிசாவை விட்டு தன் குடும்பத்தார்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்தான் நண்பர்கள் அவனுக்கு முக்கியம் என்ற தீர்மானம் சரியாக இருந்தது..

படிப்பு முக்கியம் அதே நேரம் குடும்பமும் முக்கியம் படிப்பைச் காரணம் சொல்லி காதலை வெறுப்பது நியாஜம்மில்லை என்ற ஜீவனின் கருத்துச் சரி

என்ற பார்வையில் இதில் ஒரு மூன்றாம் தரப்பாக என் பங்குக்கு பாடலும் சேர்ந்த

நண்பர்களின் கூட்டு உழைப்புத்தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த தொடர்!



இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

இந்த தொடரில் எழுத்துப்பிழை திருத்தி அழகிய படத்தினை தன் தொழில் நுட்ப திறமையால் வடிவமைத்த நண்பன் நிகழ்வுகள் கந்தசாமிக்கு நன்றி.

அவருடன் இன்னும் சமயத்தில் அவசரத்துக்கு எழுத்துப்பிழை தீர்க்க உதவிய
என் அம்மாவுக்கும் ,இன்னொரு பதிவாளினி தங்கைக்கும் ,மற்றும் பாலா சோபிக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!

பதிவுலகில் பல நண்பர்களின் அன்பான பின்னூட்டம் இன்னும் எழுத தூண்டியது .தனிமரத்தை!

இடையில் யோகா ஐயாவின் உறவில் ஏற்பட்ட துயரம், மற்றும் என் நண்பன் டெனில் புகும் வீட்டில் ஏற்பட்ட துயரம் என பலது என்னைப்பாதித்த போதும் !

வலை உறவுகளின் அன்பான வாக்கும் ஊக்கிவிப்பும் என்னை இந்தளவு தூரம் எழுத வைத்தது.

சோர்ந்து போகும் போதெல்லாம் தொடரை இடைநிறுத்தாமல் இருக்க.!

அஞ்சலின்,அதிரா,ராச்,சிட்டுக்குருவி(ஆத்மா),ரெவெரி,துசியந்தன்,முரளிதரன்,முத்தரசு,செங்கோவி,நாஞ்சில் மனோ,மகேந்திரன்,தென்றல்,எஸ்தர்-சபி,கலை,மாத்தியோசி மணி,மைந்தன் சிவா,ஹேமா,யோகா ஐயா,குட்டன்,சுரேஸ்,அம்பலத்தார் ஐயா,ஏரம்பமூர்த்தி,இரவின் புன்னகை,சொரூபன்,பாலகணேஸ்,ஹரி,சீனு,அவர்களும் உண்மை, மாலதி, காற்றில் என் கீதம் தோழி! இன்னும் என் முகநூல் நண்பர்கள் மற்றும் குழுமங்கள் ஆன இன்னும் என்ன தோழா,நண்பர்கள், நீ வருவாய் , விவாதமேடை,பதுளை- சரஸ்வதி தேசிப்பாடசாலை குழு, என்பனவற்றில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த தொடரினை லைக் பண்ணி ,ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களின் தொடர் ஊக்கிவிப்புத்தான் தனிமரம் வலையில் வலம் வர உந்து சக்தி!

உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் !பல பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடவில்லை அவைக்கு பதில் தருவேன்.

தனிப்பட்ட ஆன்மீகப்பயணத்தினால் பதிவுலகில் இருந்து வெளியேறிச் செல்வதால்.


இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும் ஆண்டில் உங்களுடன் இணையத்தில் இணைந்து இருக்கும்.

மீண்டும் சந்திக்கும் வரை என் உறவுகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு முன்கூட்டிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

. இந்தப்பாடலுடன் !


மீண்டும் வலையில் இணையும் வரை


என்றும் அன்புடன்

தனிமரம் நேசன்!


22 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி- நிறைவு!!!

என் நேசம் நீயடி
என் காதல் நீயடி
என்னையும் புரியாத நீயும்
என்னைவிட்டு போய்விடு
எனக்கு எப்போதும் நீ சுமையடி
(ஜீவனின் நாட்குறிப்பில் இருந்து)






 
கலியாணத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்த பின் சிங்கப்பூர் போகும் முதல்நாள் மாலையில் ஜீவன் கோவில் போனான்!



கோயிலில் கும்பிட்டு விளக்கேற்றும் போது ஆச்சரியம் அதிசயம் இந்த உலகில் கடவுள் வாழ்கின்றார் என்பதை உணர்ந்த தருணம். இதுவரை சைவம் என்றாலும் கோயில்களுக்கோ அல்லது நல்லவிழா கெட்ட நிகழ்வுகள் எதுக்கும் வெளியில் போகாத நிசா அவர்கள் எதிர்வீட்டுப் பாட்டியுடன் கோவிலுக்குள் வந்தாள். என் பிரார்த்தனை முடித்து என் குருநாதரிடம் ஆசிவாங்கி வெளியேறும் போது மனதில் சந்தோஸம் ஒரு புறம் என்றால் சங்கடம் இன்னொரு புறம்! கோவில் பிரகாரத்தில் சிறப்பான நாட்களில் குருவின் கைத்தடியாக இருக்கும் என்னிடமே குருநாதர் சொன்னார், ஜீவன்  இந்தப்பாட்டிக்கும் ஒரு நெய்தீபம் கேட்டாங்க நீ எடுத்துக்கொடு என்ன அவசரம் நாளைதானே விமாணம் ஏறப்போறாய் ஓம் குருவே இந்தாங்க பாட்டி நெய்தீபம் இல்ல ஜீவன் அது நிசாவிடம் கொடு அவள் தன் ஏற்ற வேண்டும் எனக்கு குறை ஒன்றும் இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்கின்றேன் பேரன் பேர்த்திகள் பார்த்துவிட்டேன். நிசாவுக்கு கோவில் முறைதலை தெரியாது நீயே சொல்லிவிடன் ஜீவன் நான் என்ன சொல்ல  பாட்டி எல்லாம் என் குருவின் செயல் முதலில் பிள்ளையாரிடம் நெய்தீபத்தை ஏற்றி மூன்று சுற்று சுற்றிவந்து சரனாகதியே நீ தான் எங்கள் குல தெய்வமே என்று ஆண்டவனுக்கு முன் வைத்துவிடு தீபத்தின் ஒளியில் எல்லா தீய நினைவுகளும் எண்ணங்களும் கரைந்து போகும் ஆண்டவன் கைவிடமாட்டார் நம்பினோர் ஆதரிக்கும் என் குருநாதனே!சரிதானே குருநாதா என்னோட கைகளில் நீயும் ஒருவன்  தானே நீ  சொன்னால் சரியாக இருக்கும் மனைவி வந்தவுடன் குருவை மறப்பியோ கடந்து வருவேன் தடங்கள் வந்தால் விலகி நின்றாலும் கூடவருவன் குரு நாதா கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் என் பிழைகளையும் அறிந்த குரு நீங்கள் அல்லவா! மீண்டும் சந்திப்போம் குருநாதா என்று வெளியில் வரும் போது பாட்டி தடுத்தா ஜீவன் நிசாவையும் நீ வீட்ட போற வழிதானே நிசாவையும் வீட்டில் விட்டுவிட்டுப் போ.. அவளுக்கு படிப்பு முடிந்தாலும் இன்னும் ஆவணங்கள் கைக்கு வரவில்லையாம். நான் கொஞ்சம் கோயிலில் இருந்திட்டு வாரன்.

சரி பாட்டி இருவரும் கோயிலில் இருந்து நடந்து வீதிக்கு வந்தபோது மெளனம் யுத்தம் சோதனைகள் வரும் போது சிரிக்கும் மனநிலை போய் விழியில் ஏனோ வலி என்றாலும்!என்ன ஜீவன் மெளனம் முன்னர் போல கலகலப்பு இல்லையே ஏன் சிரியஸ்பார்ட்டி போல இருக்கின்றீங்க? கலியாண மாப்பிள்ளை ஜெகஜோதியாக ஒளிக்க வேண்டாமா?

ம்ம் நக்கல் நான் எப்போதும் போலத்தான் இருக்கின்றேன். அதுசரி நீ அப்படி இருக்கின்றாய் மாயா வந்திட்டாளா? ஓம் வீட்டுக்காரி மதியம் வந்துவிட்டார்கள். நான் தான் பின்னுக்குப் போறன் பெண் வந்து காத்து இருந்து மாப்பிள்ளை திடீர் என்று போனால் தானே சாக்காக இருக்கும். எத்தனை வருடம் பார்த்து பாட்டியை?? பேர்த்தியை அப்ப தெரியாது இப்ப பார்க்கும் போது உறவுகள் விமான நிலையத்தில் காத்து இருக்க அந்தா பார் உன் மாப்பிள்ளை வருகின்றார் என்கிறபோது மாயாவை முகத்தில் வரும் வெட்கத்தைப் பார்க்க வேண்டுமே!

ம்ம் உனக்கு எப்போதும் ரசனை அதிகம் !என்னால் தான் முன்னர் போல இல்லை இயல்பு நிலையே கெட்டுவிட்டது.

என்ன சொல்கின்றாய் நிசா நல்லா படித்து முடித்துவிட்டாய் தானே?

ஓ படித்துவிட்டேன் ஆனால் வாழ்க்கையில் கோட்டைவிட்டு விட்டேன் !உனக்கு எப்போதும் அவசரம்டா ஜீவன்.. அவசரப்பட்டு காதலிக்கின்றன் என்று ரயிலில் சொன்னாய்! காத்து இருக்கின்றேன் என்று நம்பிக்கை தந்தாய்! ஆனால் எல்லாம் சினிமா போலத்தான் !

நீ சொல்வது புரியல நிசா உனக்கு நறுக்கு என்று சொல்லத்தெரியாது! ஜீவன் நீட்டி முழங்க வேண்டியதுதான் முதலில் உன் கோபத்தைக்குறை மிகவும் மனக்கஸ்ரம் உன்னால் உண்மையில் எனக்காக ஏன் காத்து இருக்காமல் போனாய்? இன்னொருத்திக்கு ஓம் என்று சொன்னாய்?

யாரு நான் காத்து இருக்கவில்லையா? விளையாடுகின்றாயா 5 வருசம் நீ என்னிடம் வருவாய் என்று காத்து இருந்தேனே! ரயில் பயணத்தில் தினமும் உன் முகம் காண.. தெரியாதா? அப்ப வந்து பேசி இருக்கலாமே ஒரு வார்த்தை.

நிசா  எத்தனை ஆர்வத்துடன் வருவேன் தெரியுமா உனக்காக? என் இயல்பைக்கூட மாற்ரிவிட்டு மெதுவாக நடப்பேன்! நண்பர்கள் போகவிட்டுத்தான் வீட்டில் இருந்து இறங்குவேன். அது எல்லாம் எங்க உனக்குத் தெரியப்போகின்றது!

தெரியும் ஜீவன் நீ எனக்காக காத்திருந்தது. அப்பாவிடம் சண்டை போட்டது முதுகில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையை வைத்து அப்பா உன்னைப்பற்றி தப்பா எண்ணியது எல்லாம் தெரியும். உன் பிடிவாதம் புரியும். பாடல் ரசனை புரியும். கவிதை வாசிப்புப் புரியும். ஊர்ப்பற்றுப்புரியும். பெரியவர்களிடம் பணிந்து போகும் குணம் எல்லாம் புரியும் !

என்ன புரிந்து என்ன நிசா உன் மேல் நான் வைத்திருந்த தூய் நேசம் புரியுமா? உன் வெள்ளிக்கொலுசுக்கு நான் சத்தமாக இருக்க வேண்டும் எண்ணியிருந்தேனே அதுகூட புரியவில்லையே! இந்த நேசத்தையே புரியாத நீ எப்படி அறிவாய் உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும் என்று எத்தனை சாரியை முன்கூட்டியே வாங்கியந்த என் காதல் பற்றித் தெரியுமா? உன் சம்மதம் தெரியாமலே உனக்கு தாலிக்கொடி  முன்கூட்டியே வாங்கியந்து வைத்திருந்தவன் நான்! அதுகூடத் தெரியாது இது எல்லாம் பூந்தோட்டம் படத்தில் வரும் முரளி போலத்தான் நானும் இருந்தேன் நிசா ! ஆனால் அப்ப எல்லாம் உனக்கு புரியவில்லை !

விதிடா ஜீவன்! எனக்கு உன்னை அதிகம் பிடிக்கும். ஆனால் சொல்லவில்லை குடும்பத்தில் மூத்தவள் நான் வழி தவறினா என்ன ஆகும்! என் தங்கைகள் வாழ்க்கை ஜோசித்தாயா? உன் மச்சாள் வழிதவறி உனக்குப் பிடிக்காதவனைக்கக் கட்டியதில் நீ கதைக்காமல் பங்கஜம் பாட்டியின் காலத்தில் இருப்பதையும் அறிவேன்! நீ எப்படி குடும்ப காவடியைத் தூக்கி ஆடுகின்றாயோ அப்படித்தானே என் அப்பாவும்! இந்த நாட்டில் வந்து கஸ்ரப்படுகின்றார். காவடியின் வலி அதிகம்டா அதைவிட குத்தும் செடில் கம்பியின் வலி உருக வைக்கும் தூக்கி ஆடும் காவடிக்கும் தூக்குக் காவடிக்கும் வித்தியாசம் இருக்கு ஆன்மீகத்தில் போகும் உன் நிலை வெளியில் சிரிக்கின்றார்கள் ! இந்த வயதில் ஏன் இப்படி என்று எனக்கு தெரியும்டா  பங்கஜம் பாட்டியின் கோயில் பங்கும் அதில் நீ கடைசிப்பேரனாகவும் இருக்கின்றாய் ஊர்க் கோயில் உனக்கு முக்கியம் அதன் ஈர்ப்புத்தான் இப்படி வெளிநாடு வந்த பின்னும் என்று அதிகம் பிடித்தவர்களிடன் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

 அப்பாவின் கனவு அவர் என்னிடம் எதிர் பார்த்தது. நான் உன்னிடம் எதிர்பார்த்தது காத்து இருப்பாய் என்று ଀ஆனால் நீயோ கலியாணப்பத்திரிக்கையில் என் பெயரைப் போடும் காலம் வரும் வரை  காத்திருக்காமல் மாயா என்று போட்டு எங்க வீட்டிலயே முதல் அழைப்பு வைத்தாயே!  நீ உண்மையில் கோபக்காரன் தாண்டா !உண்மையில் நீ கோபக்காரன் என்றாலும் நேசிக்கின்றவன் என்பதை அறிவேன்! விதி நாம் இப்படி குடும்பம் முக்கியம் என்று நடுவீதியில் நின்று பேசும் நிலை. இது எல்லாம் யுத்தம் தந்த இன்னொரு நெருக்கடி! நெய் தீபம் ஏற்றி  தந்த போது தெரிஞ்சிச்சு உன் அளுமை. நெய் தீபத்தில் உருகியது என் காதல் என்றாலும் மாயா அதிஸ்ரக்காரிதான் உன்னோடு சேர்ந்து கடல்க்கரைகள் பார்க்கவும் பாரிஸ்,லண்டன் என்று உறவுகள் சேர்ந்து உன்னோடு கூதுகலிக்க என் வாழ்த்தையும் சொல்லிவிடு.

சந்தோஸத்துடன் போ ஜீவன் நான் சுதந்திர தேசத்தில் இருந்தாலும் இன்னும் உன்னை நினைத்துக்கொண்டே தனியாக வாழ்வேன்  என் தங்கைகளுக்கு ஒரு நல்ல அக்காளாக.. வழிகாட்டிகள் அழக்கூடாது ஆனால் உருகலாம் !வீடு வந்து விட்டது இனி உன் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக இருக்க ஒரு நண்பியாக வாழ்த்துகின்றேன். போய் வா மீண்டும் வரும் போது மாயாவின் கணவனாக வருவாய். இன்னொரு ஒரு தடவை உன் தோளில் சாய்ந்து பார்க்கவா ஜீவன்? ம்ம் இது ஏன் தெரியுமா? மாயா என்றாவது என்னிடம் சண்டை போட்டால் நான் சொல்வேன் என் பூமாலையை உனக்கு பொன் ஊஞ்சல் ஆக்கியிருக்கின்றேன் என்று.. தோல்வியிலும் சுகம் உண்டு! நான் விடை பெறுகின்றேன்!

ஜீவன் கவனமாக நண்பர்கள் சகிதம் நாளை விமான நிலையம் போங்க. ரவிக்கு சொல்லுங்க ராகுலுக்கும் சேர்த்து நீங்கள் தான் வில்லன்கள் என்று.. நிசா  சொன்னாள் என்று..

என்ன பார்க்கின்றீங்க? உங்க நட்பு வட்டமும் நான் அறிவேன்! நாளைக்கு என் கதையும் பலருக்கு போகும். எதுக்கும் நீங்கள் நட்பு விடயத்தில் கவனமாக இருங்கள். சம்மந்தம் இல்லாமல் பின் புலத்தையும் பொதுவெளியில் பேசும் நட்பும் வரலாம்!  எப்போதும் அவதானம் பிரதானம் ஜீவன் போய் வா... !a'bientot!




உருகும் பிரெஞ்சுக்காதலி-47


இயந்திரமான வெளிநாட்டு வாழ்வில் இயந்திரமாகிப்போனான் ஜீவன். ஆன்மீகம் என்றும், அடுப்படியில் வாரத்தில் 7நாட்களும்  வேலை வேலை என்று ஓடிய வாழ்க்கைப்படகில் மீண்டும் 2010 இல்  ராகுல் வந்தான்  வழிகாட்டியாக!

 எப்படி இருக்கின்றாய் ஜீவன்?


 ம்ம் இருக்கின்றேன். நீ செய்கின்ற வேலை சரியோ ? வந்து போகும் பாதையில் ஏண்டா இப்படி தனித்தீவாக இருக்கிறாய்! உங்க வீட்டில் தினமும் அம்மா என்னோடு தொலைபேசியில் ஒரே தொல்லை தன்ர மோனையும் உங்களைப்போல பிரமச்சாரியாகவா இருக்க வைக்கப்போறீங்க? இந்த வருடம் அவனுக்கு கலியாணம் முடிக்காவிட்டால் இனி கலியாணம் 40 வயதிலாம். கலியாணம் சாத்திரம் சொல்லுகின்றது. இங்க பலர் பெண்கேட்டு வருகின்றனர். நீ தான் அவனுக்கு உறைக்கச் சொல்ல வேண்டும் ராகுல். அவனை சம்மதம் சொல்லவை ஒரு சம்மந்தம் வந்து இருக்கு! என்று இந்தப்படத்தை அனுப்பி இருக்கின்றா..

இல்ல ராகுல் இப்ப கலியாணம் முடிக்கும் ஆசையில் நான் இல்லை.

எனக்குத் தெரியும், நீ இன்னும் நிசாவை நினைத்துக் காத்திருப்பது. ஒன்றா இரண்டா 5 வருசம் முடிஞ்சுது.  ஒரு வார்த்தை சொல்லவில்லை. நிசா இனியும் காத்து இருக்காத? இங்க விசா இருந்தால்!


 ஒவ்வொரு மாப்பிள்ளையும் டாக்குத்தர் ரேஞ்சுக்கு ஹீரோ தான். அதுவும் வீடு வாங்கி ஒழுங்கா வேலை செய்து எந்தக்குழுவோடும் வீதியில் நின்று வாள்வெட்டும் அடிதடி என்று போகாமல் நாகரிகமாக வாழ்ந்தா ஒவ்வொருதனும் ஒரு ஹீரோதான். அதுவும் அகதியாக வந்து அலைந்து புதிய தொழில் தேடி நிறைவான சிந்தனையுடன் போகும் ஒவ்வொரு ஈழத்தவனும் மாஸ் ஹீரோதான். இந்த ஹீரோக்களுக்கு முன் பின்புலதகுதியில் வரும் சினிமாக் ஹீரோக்கள் சீரோ தான்!

 இனியும் ஜோசிக்காத, நாட்டில் இப்பதான் யுத்தம் முடிஞ்சுது என்று உலகநாட்டை ஏமாற்றுகின்றாங்க. எத்தனை உயிர்கள் உடமைகள் இழப்புக்கள் நாங்கள் ஒவ்வொரு வீதியில் நின்று கதறிய சோகம் யார் காதிலும் விழவில்லையே. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் எந்த சர்வதேசம் எமக்கு விடிவு தரும்? 



சோகங்களும் சுமைகளும் நம் தேசத்தவரின் முகாரி ராகமாகிவிட்டது. இனியும் இப்படி இருக்காத.

இல்லடா அடுப்பில் சட்டி வைக்கும் போதும் நிசாவின் ஞாபகம் வரும். அவள் அசைவம் சாப்பிடுவது இல்லை. போடா விசரா! நினைப்பு எல்லாம் வேண்டாம். கொதிக்கும் எண்ணையில் கோழியைப்போட்டு பொறிப்பது போல அவள் நினைப்பையும் அழிச்சுவிடு. சந்தோஸமாக சமையல் செய். உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா என்று பாட்டு கேட்காத மச்சி! எல்லோருக்கும் ஒரு காலம் உண்டு என்று நம்பிக்கையான பாட்டு கேளு! லங்காசிரியில் இமையும் இசையில் கவிதை எழுது  நாலு பேர் கேட்டு ரசிப்பாங்க. ஜீவன் ஒரு நண்பனாக சொல்லிவிட்டன்.

இன்னொன்று! வாழ்வில் பலதடைகள் கடக்க வேண்டும். நிசாவை மறந்திட்டு.. இந்தா பாரு படத்தை. பங்கஜம் பாட்டியின் பேர்த்தி, என் மாமா மகள் இவளைக்கட்டிக்க நல்லா படிச்சு இருக்கின்றாள். நல்ல குணம் பெயர் மாயா. என்ன சொல்லுகின்றாய் ஜீவன். இந்த கலியாணம் நடக்க வேண்டும். ஒரு நண்பனாக ஒரு மச்சானாக இதைத் தான் நானும் பார்க்க ஆசைப்படுகின்றேன். என்ன ரவி நீயும் சொல்லுகின்றாய்.

 ஓம் மச்சான் இந்த வருடம் உனக்கு கலியாணம் நடக்கணும் என்று நானும் ஆசைப்படுகின்றேன்.   இந்த நாட்டில் அடுப்பிலும் நெருப்பிலும் இருந்து விட்டு வரும் நமக்கும் ஒரு துணைவேண்டும்; தோள் கொடுக்க.. இந்தா பியர். இத்தோடு உன் இந்த நாட்டில் அகதி விசாவில் இருந்தால் கலியாணம் முடிக்க தாய் நாட்டுக்கு போக முடியாது.  வேற ஒரு நாட்டில் கலியாணம் சட்டப்படி செய்ய வேண்டும். அதுக்கான ஆவணங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். பின் வெளிநாட்டில் இருக்கும் பிரெஞ்சு தூதகரத்தில் உறுதிப்படுத்தணும். இதன் பிரதிகளுடன் இங்கு வந்து ஒப்ராவில் கொடுக்கணும். பின் குடிவரத்துறையின் கிளையில் எல்லா ஆவணத்தையும் கொடுத்து விட்டு காத்திருக்கணும். மனைவி வந்து சேரும் வரை காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று தொலைபேசியில் பாட்டு பாடணும். வீட்டுக்காரி வாரதுக்குள் சமுகத்தில் நடக்கும் நல்லது கெட்டதில் தனியாக போனால் எப்போ வருவாளோ என்று ஏங்க  வைப்பதில் நம் சமுகம் கில்லாடி மச்சிஇங்க! தனித்து இருந்தால் என்ன? பிரமச்சாரியோ ஏதும் ஏடாகூடமான வருத்தம் இருக்கோ இல்லை  வெள்ளைக்காரியை சின்னவீடாக வைத்திருக்கின்றானோ என்று எல்லாம் கதை வரும்.

ஜீவன் 30 வயதில் இந்த வயதில் நீ நல்லா ஜோசி !நிசா காதல்விட எனக்கு என் நண்பன் அமைதி முக்கியம். உன் எதிர்கால நட்பில் நான் கூட வரவேண்டும் முகம் தெரிந்தவன் பின்னால் முகம் தொலைந்தவன் இருக்கின்றான்.


பொதுவில் அவன் இல்லாவிட்டாலும் அவன் நட்பு உனக்கு முக்கிய உதவிகள் செய்வார்கள். ஏன் ஜோசிக்கின்றாய் புதிய பயணம் தொடங்கு !காதலையும் மறந்திடு .

நீண்ட குழப்பத்தின் பின் நட்புக்கு மரியாதை செய்யும் ஜீவனும், சரிடா இனி விதிவழிப்பயணம் மாயாவின் கைபிடிக்கின்றேன் துரை ரவி நீதான் எப்போதும் !காதலில் தோற்றாலும் நிமிர்ந்து செல்வேன். எனக்கும் காதல் வருமா என்று இருந்தேன். இந்த 5 வருட சந்தோஸம் போதும் மச்சான் ராகுல் நீ தான் துரை நாளைக்கே மாயாவின் தொலைபேசியில் சம்மதம் சொல்லுகின்றேன். அதுக்கு முன் ஒரு போத்தல் இன்று எல்லாரும் சேர்ந்து இருப்பதால் அன்று இரவு அதிக சந்தோஸத்தில் இருந்தார்கள் நண்பர்கள். ஜீவனுக்கு மனதில் வலி இருந்தாலும் அவன் காட்டவில்லை என்பது ராகுல் அறிவான். ரவி அறிவான் இந்த நண்பர்களுடன் பழகும் இன்னொரு நண்பனும் அறிவான் என்பதை இந்த நட்பு வட்டம் அறியும் மும்மொழி என்றாலும் ஐக்கியம் முக்கியமானது. இனவாதம் மதவாதம் மொழிவாதம் கடந்த இந்தக்கூட்டணிக்கு எப்போதும் விற்பனைப்பிரதிநிதி வேசம் நண்மை தந்தது. அடுத்த சில வாரத்தில் கலியாண ஏற்பாட்டில் ரவி இருந்தான். தோள் கொடுக்க ஜீவனுக்கு....




21 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-46


நட்பு என்ற ரயில் பயணத்தில் யாழ்தேவியிலும் உடரட்டையிலும் பயணத்தில் நம் நட்பில் ஒரு திருப்பம் தான் ராகுல் அன்று ஆஸ்ப்பத்திரியில் என்னோடு பேசியது.


என்ன ரவி இவன் இப்படிப்பேசுகின்றான். நீ சொல்லுமச்சான், நிசா எப்படி நல்லவள் என்று அப்பா அம்மா திட்டினாலே குற்றம் செய்தார்கள் என்று காவல்துறையை கூப்பிடும் இந்த நாட்டில், அப்பா அம்மாவின் கஸ்ரம் புரிந்த நிசா மிகவும் நல்லவள் என்று..!

இதைப்பாரு ஜீவன்! நானும் ராகுலுடன் ஒத்துப்போறன். முதலில் உன் வாழ்க்கை முக்கியம். என்றாவது ஒரு நாள் உன் குடும்பம் கேட்கலாம் நண்பர்கள் என்று எல்லா இடத்திலும் இருந்தனீங்களே இந்த ஜீவன் இப்படி காதல் போதையில் திரியும் போது நீங்கள் யாராவது தடுத்தீர்களா? என்று.
முதலில் உடம்பை பாரு! இன்னொரு நல்ல சேதி மச்சான். எகிப்திய முதலாளி உன்னை மீண்டும் வேலைக்கு வரட்டாம். உன் வேலை சிறப்பாக இருக்காம். என்ன நீ விசா இல்லாதவன் இன்னொரு நண்பன் விசாவில் வேலைக்கு வந்து பொய் சொல்லிவிட்டாய் என்று சின்ன வருத்தமாம். என்றாலும் மன்னிக்கின்றாராம். உண்மையோடா? பின்ன இங்க காதலைவிட வேலை முக்கியம்!காலச்சக்கரம் சுற்றும் அளவுக்கு கடமையும் கூடிவர என் சகோதரியின் வாழ்விலும் விடியல் திறந்து கொள்ள, எனக்கும் பாரிஸில் முகவரி கிடைத்த அந்த நேரம் தான் மிகமுக்கியமான, சர்வதேச நாளிதழ்களில் பிரெஞ் காவல்துறையினரின் தடியடியும் வேலையில்லாத திண்டாட்டமும் சேர்ந்து கொள்ள, புதிய ஜனாபதி தேர்தல் வந்து சேர்ந்தது.




 இரண்டாவது அகதி அடைக்கல மேல் முறையீடுக்குழு மூலம் தாயகத்தில் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கு என்பதுக்கு சாட்டபூர்வமான அத்தாட்சிப்பத்திரங்கள் உதவி மூலம் ஏற்றுக்கொண்ட குழு எனக்கும் அடைக்கல விசா தந்த அன்றைய 2007/6/9 திகதி என் வாழ்வில் சேர்ந்தது. நிக்கோல சர்க்கோசியின் புதிய ஜனாதிபதி வருகையும் நாட்டில் மாணவர்களின் தீவைப்பு மற்றும் கல்வீச்சு ,அடிதடி என்பனவும் ஊடரங்குச் சட்டம் மூலம் தடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் வீதியோரங்களில் கலகத்தடுப்புப் படை காவல்துறையினரும் கண்காணிப்பதால் விசா இல்லாமல் வேலைத்தளத்தில் மற்றவர்களின் விசாவில் வேலை செய்தவர்கள் பயத்தினால் வேலைத்தளத்திலேயே உறங்கிய நாட்களைப்பற்றி யார் பேசுவார்கள்?
வெளிநாடு போட்டான் தலைக்கனம் பிடித்தவன் என்று குற்றம் சொல்லும் ஊர் குறுகுறுத்து, தலைகுனிந்து நின்ற போதெல்லாம் சாமரம் வீசியாதா சந்தணம் பூசியதா? பூசியது எல்லாம் சாணிதானே! அந்த நிலை எல்லாம் எந்த நடிகணுக்கு பரணிபாடும் ஈழத்தவன்களுக்குத் தெரியும் ?
பாரிசில் ஆட்சிமாற்றம் அமைதிச்சூழல் மீண்டும் வசந்தம் 2007 இல் வந்த போது எனக்கும் ஒளி பிறந்தது. இரண்டாவது அகதி அடைக்கல மேல் முறையீடுக்குழு மூலம் தாயகத்தில் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கு என்பதுக்கு சாட்டபூர்வமான அத்தாட்சிப்பத்திரங்கள் உதவி மூலம் ஏற்றுக்கொண்ட குழு எனக்கும் அடைக்கல விசா தந்த அன்றைய 2007/6/ 9 திகதி என் வாழ்கையில் மறக்கமுடியாது. இந்த சந்தோஸமான செய்தியை ரவிக்குச் சொன்னேன்; கைபேசி மூலம் 'மச்சான் விசா கிடைச்சிருச்சு' மறுமுனையில் அவன் சந்தோஸம் ஜீவன் கடவுள் கைவிடவில்லை. அப்ப இந்த வருடம் சபரிமலைக்கு வாராய் சரியா? கையில் காசு இருக்கா? ஓம் மச்சான் வரம்போது ஒரு சுவாஸ் ரீகல் பிஸ்கி வாங்கி வா ஒரு பார்ட்டி போடுவம்.
நீண்டநாள் இல்லாத சந்தோஸம் திரும்பி இருக்கு. உனக்கு கையோட ராகுலுக்கும் லண்டனுக்கு எடுத்துச் சொல்லு அதிகம் சந்தோஸப்படுவான். நிச்சயமாக அவனும் என் நண்பன் ஆச்சே! சரிடா மச்சான், நிசாவும் வந்து இருக்கின்றாள் இன்று பார்த்தேன் சோதிமாமாவிடம் கதைச்சிட்டு வாரன்.
வேண்டாம் என்றால் நீ கேட்கமாட்டாய்! இனி நான் தடுக்க மாட்டன் மச்சான். உன் விருப்பம் சரி இன்னொரு போத்தல் இன்று கூடும் போய்வாடா... ராசா எனக்கு இன்னும் முன் ஆயத்த வேலைகள் முடியவில்லை சமையலில் என்று தொடர்பை துண்டித்தான் ரவி ! இன்று முடிவு தெரிய வேண்டும் என்ற நினைப்பில் சோதிமாமா வீட்டுக்கதவில் அழைப்பு மணியை அமர்த்தியதும் சோதி மாமா வேலையாள் அப்பத்தான் வந்தவர்.. வா ஜீவன் என்றார் இயல்பாக !
என் வருகையை அவர் விரும்பவில்லை என்பதை முகம் காட்டியது.
'சொல்லும்'
விசா கிடைச்சிருக்கு அதுதான் சொல்லிப்போக வந்தன்.
ஓ நல்லவிடயம் அப்ப ஊரில் இனி உன் கோத்தை மோணுக்கு கோடியில் சீதனமும் கொழும்பில் வீடும் யாழ்ப்பாணத்தில் கடையும் வாங்கப்போறா என்று சொல்லு..
இல்ல மாமா, அம்மா என் பேச்சை மீறமாட்டா! என் சந்தோஸம் தான் அவா சந்தோஸம்! ஐயாவும் அப்படித்தான்..நேரடியாக கேட்கின்றேன் நிசாவை எனக்குப் பிடிச்சிருக்கு கண்கலங்காமல் பார்த்துக்க முடியும். எனக்கு அவளைக்கட்டித்தாரிங்களா? கலியாணம் அவசரம் இல்லை. சம்மதம் என்று முடிவை மட்டும் இப்ப சொல்லுங்க.. எனக்கு என்று ஒரு வீடு வாங்கிய பின் தான் கலியாணம். அதுவரை நண்பர்களாக இருப்போம் மாமா!
இதைப்பாரு பங்கஜம் சீமாட்டிக்காகத்தான் உன்னை வீட்டுக்குள் கூப்பிட்டது. என்ர மோளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளைதான் தகுதியாக முடியும். உன்னை மாதிரி சமையல்காரன் எல்லாம் சரிவராது. நினைப்பை விட்டுவிட்டு வேலைதேடி இனி முன்னேறுகின்ற வழியைப்பாரு. நிசாவைத் தேடி இனி இங்கு வந்தாலோ இல்லை வழியில் பேசினாவோ நானும் மரியாதை குறைய வேண்டி வரும். பங்கஜம் பேரங்களுக்கு சோத்தில் உப்பு போட்டுக்கொடுத்து இருப்பா என்று நம்புகின்றேன் ரோசம் வர... உனக்கு ரோசம் இருந்தால் இனி வீட்ட வராத !
சரிமாமா உங்க மகள் எனக்கு வேண்டாம். உங்க சம்மதம் இல்லாமல்..ஆனால் என்றாவது ஒருநாள் உங்களை கேள்வி கேட்டால்சொல்லுங்க, ஜீவனும் படித்தவன் நல்ல ஒரு பல்தேசிய கம்பனியில் விற்பனைப்பிரதி நிதியாக கெளவரமாக இருந்தவன். இனவாதம் என்னை சிதைத்தாலும் முதுகெலும்பு இருக்கு. 7985 கிலோ மீட்டர் தாண்டி அகதியாக வந்தாலும் எங்க பங்கஜம் பாட்டியின் பேரன் ரோசக்காரன். காதலுக்காக அவமானப்பட்டாலும் தாழ்ந்து போக மாட்டன்.

சொல்லுங்க நிசாவுக்கு, நான் காதலித்தது நிஜம்! உங்க சீதனத்துக்கோ இல்லை விசாவுக்கோ நான் அடிமையில்லை! எனக்கும் இந்த நாட்டில் வாழும் வழி தெரியும்! என்றாவது ஒருநாள் ஒரு சபையில் சந்தித்தால் நாகரிகமாக கைகுலுக்குவேன் நிசாவுடன்.. இதை எல்லாம் உள்ளே இருந்து நிசா கேட்பதும் எனக்குத் தெரியும். நான் போறன் என்றுவிட்டு வெளியில் வந்தவனைக் காண காத்திருந்தான் ரவி !

தொடரும்.....
மோள் -மகள்§..
கோத்தை-தாய் யாழ் வட்டார மொழி!

20 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-45


வாழ்க்கையில் நண்பர்கள் வட்டம் என்பது ஒரு இன்னொரு நம்பிக்கை ஒளி அந்த ஒளி வாழ்வில் விளக்கேற்றணும் தீபம் போல அப்படி அன்றி விளக்கை அணைக்கக்கூடாது .இப்படித்தான் ராகுலும் நீண்டகாலத்தின் பின் வைத்தியசாலை வந்த போது சொன்னான்! என்ன மச்சான் இப்படி ஆச்சு எல்லாம் ரவி சொன்னவன் .கடவுள் கைவிடமாட்டார் ஜோசிக்காத எல்லாம் நல்ல படியாக நடக்கும்.என்னாச்சுடா மச்சான் நீயும் வெளிநாட்டுக்கு வந்திட்டாய் எல்லாம் இனவாதம், மொழிவாதம் , மதவாதம்,பிரதேச வாதம் என்னையும் அகதி ஆக்கிவிட்டது என் அனுபவம் பெரிய கதை அதை நேரம் வரும் போது சொல்லுகின்றேன் என் முன் கதையை நம்ம இன்னொரு நண்பனிடம் தனியாக சொல்லிவிட்டேன் இப்ப அவன் என்ன செய்யிறான் தெரியுமா இங்க சமையல்காரானன்! ஹீ ஹீ!

அப்ப உன் அறிவிப்பாளர் கனவு எழுத்தார்வம் ,விற்பனைப்பிரதிநிதியில் மேற்பார்வையாளர் வேலை ,எல்லாம் கோவிந்தாவா??

ராகும் ம்ம் என்ன சொல்வது எல்லாம் விதிடா நான் ஏன் வடக்கில் பிறக்கணும் ?பின் யுத்தம் என்ற நிலையில் பதுளை போகணும் ?அங்கிருந்து என் ஆசைப்படி விற்பனைப்பிரதிநிதி மேற்பார்வையாளராக யாழ் பயணம் ஏன் போகணும் ?

சமாதான காலம் என்று உலகநாடுகளை ஏமாற்றிய போது அந்த நேரத்தில் ,வன்னியில் இருந்து சமாதான காலம் என்று இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் ஏன் கஜன் வரணும் ?

இன்றுவரை புரியாத புதிர் ஜீவன்.!


ஏன் என்னாச்சு ?? மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு !

நானும் போராளியாம் உளவு பார்க்க வந்தவனாம் !

என இனவாத அரசு ஒருபுறம் தெற்கே !


இருந்த நீ ஏன் வடக்கே வந்தாய் சிங்கள தனியார் துறை நிறுவனத்தில் மேற்பார்வையாளர் என்ற போர்வையில் என்று இன்னொரு அரசு ??

போதுமடா சாமி வழிவிடுங்க உயிர் முக்கியம் என்று ஒடி வந்து விட்டன் லண்டன் போகும் வழியில் உன் கதை சொன்னான் நம்ம ரவி !

உனக்கு என்னாச்சு நாம யார் பெட்டிக்கடை பேரம்பலம் யார்?


போய் கேளு நம்ம வம்சம் புகழ் சொல்லும் போயும் போயும் நம்ம பங்கஜம் பாட்டி ஒட்டு வேண்டாம் உறவு வேண்டாம் என்ற தங்கமணி மாமாவின் வானில் வந்த இந்த சோதிமாமாவின் குடும்ப உறவு எமக்கு தேவையா மச்சான் ?


இந்த நிசா என்ன சினேஹா போல அழகா ?


வேண்டாம் ஜீவன் எனக்கு ஏற்கனவே பதுளையில் வில்லன் என்று ஒரு பட்டம் இருக்கு ,பாரிசிலுமா ?

வேண்டாம் மச்சி நான் விற்பனைப்பிரதி நிதி வேடம் போடுவததே நல்லது!

ஏன் தெரியுமா ??

என் கோபம் பலருக்கு தெரியாது ?



மேல் அதிகாரி என்றாலும் கட்டி இருக்கும் கழுத்துப்பட்டியை கழற்றி விட்டு அடித்து விட்டு வருவேன் நடு ரோட்டில் !


அது கொழும்பா ,பதுளையா அல்லது யாழ்ப்பாணமா எங்கும் செய்தவன் எனக்கு என் கருத்து முக்கியம் !


பட்டதாரியா இல்ல, புகழா ,இல்லை இது எல்லாம் என் கால் தூசு எனக்கு பாரிசும் பெரிசு இல்லை!


சோதி மாமாமீது கை வைக்க !

ஆனால் அவர் என்னிடம் சொன்ன ஒரு விடயம் மிகவும் ஜோசிக்க வைக்கின்றது 7 செவ்வாய் சாத்திரம் !


நீயோ நிசாவின் செவ்வாயிலில் உள்ளதடி எனது வாழ்க்கை என்று வைரமுத்து கவிதை பேசுகின்றாய் !

அவரோ என் மகள் வாழ்கை முக்கியம் அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாறங்கள் என்கின்றார் !

உன் பார்வையில் குடும்பம் என்ற ஆலமரமா ?இல்லை காதல் என்ற வாழைமரமா ?

நான் உனக்கு வில்லனா ?இல்லை நண்பனா ?

இல்லை துரோகியா ?

தீர்மானி ஜீவன் குடும்பம் என்பது ஒரு ஆலமரம் அது சாய்ந்தால் நான் நட்பு உறவு என்று எல்லாரையும் தாண்டிப்போகும் வழிப்போக்கன் நிசாவிடயத்திலும் என்னை வில்லன் ஆக்காதே விரைவில் லண்டன் போகணும்!



தொடரும்!

19 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-44


முதுகு வலியைவிட
இதயம் முகாரி பாடியது
முடிவு இல்லாத உன் காதலினால்
முன்னம் முத்தம் தந்தவளே
பின்னம் பித்தனாக்கினாய்!
( ஜீவனின் நாட்குறிப்பில்)


பிரெஞ்சு தேசத்தின் இயல் இசை நடனத்தின் தாற்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் தேடலின் வெளிப்பாடாக ஸ்டார் அக்கடமிக் (star accadamic) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது பிரெஞ்சு தேசத்தில் தொலைக்காட்சி நேயர்களும் கலை ஆர்வலர்களும் இசை நாட்டம் இருக்கும் இளைஞர் யுவதிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. இதில் நாடு தழுவிய ரீதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பலரை கூத்துப்பட்டறை போல ஒருங்கமைத்து மூத்த பல கலைஞர்களின் வழிகாட்டலில் இளைய சமுதாயத்தை போட்டியிட வைப்பதோடு ஆலோசனையும் ஆதரவும் கொடுப்பதால் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ரசிப்பார்கள். செப்டம்பர் இறுதி வாரத்தில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி கிறிஸ்து பாலன் பிறப்பினை வரவேற்கும் டிசம்பர் மாதம் 24 முன் வரும் வெள்ளியில் முடித்து கிரீடமும் பொற்கிளியும் வழங்கி நாத்தரை சிறப்பாக்கும் ஒரு போட்டி நிகழ்ச்சி. அடுத்த நட்சத்திரம் என்ற முகவரி கொடுத்து பல மேடைக் கச்சேரியும் இசை இறுவெட்டும் வெளிவர ஊக்கம் கொடுக்கும் ஒரு தேடல் நிகழ்ச்சி என்பதால் பாரிஸ் வந்த காலத்தில் இருந்து மொழி புரியாவிட்டாலும் ஜீவன் இந்த நிகழ்ச்சயை ரசித்துப் பார்ப்பான்.


நிசாவுக்கும் அதிகம் பிடிக்கும், யார் நல்ல திறமைசாலி என்று அவளோடு பந்தயம் கட்டுவதும் வாக்கினைப்பதிவு செய்வதும் என ஒரு போட்டித் தன்மை சில மாதங்களாக இருவருக்கும் டையில் இருக்கும். அதனால் இந்த வாரம் ஆஸ்பத்திரியில் வீற்று இருக்கும் வெட்டிப்பயல் என்ற நிலையில், நிசா! இந்த வாரம் யார் வெளியேறியது ? என்று பேச்சியைத் தொடர்ந்த போது, நேற்று நான் பார்க்கவில்லை ஜீவன், மனசில் தெளிவு இல்லை முரண்பாட்டின் மூட்டையாக நான் இப்போது இருக்கறேன் என நிசா கூறி முடித்தாள்.

ஏன் நிசா என்னாச்சு ? இல்ல ஜீவன் இன்னும் 5 வருசம் தொடர்ந்து படிக்க வேண்டும். அதன் பின்தான் நல்ல வேலை எடுக்க முடியும். கணக்கியலில் மேல படிக்க லண்டன் போறன்! 

அப்பாவும் அம்மாவும் இதைத்தான் விரும்புகின்றார்கள். அப்பா இந்த குளிர் நாட்டில் வந்து எவ்வளவு கஸ்ரப்படுகின்றார். எனக்காகவும் என் தங்கைகளுக்காகவும் என்று உனக்கு எப்படிப் புரியும்? சில வருடம்தானே வந்து இந்த நாட்டில் இன்னும் உனக்கு ஒரு முகவரி இல்லை. என் வழியில் படிப்பு என்று போனவளையும் ஏன் காதல் என்று கல் எறிந்தாய்? எனக்குள்ளும் போராட்டம் 21 வயதில் இப்படி ஒரு பரவசம் உன்னால் தான்டா!
உன்னைப் பார்த்த நாளில் இருந்து நானும் உன்னோடு அதிகம் நட்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ காதல் என்று சொல்லிவிட்டுப்போன அன்றைய ரயில் பயணம் எனக்கு முட்காடுப் பயணத்தில் நின்றது போல ஒரு உணர்வைத் தந்தது.!


 ஆனால் அது எல்லாத்தனையும் இந்த விபத்து இன்னும் சிக்கல் கொடுத்துவிட்டது என்று உனக்குத் தெரியுமா? நீ முதுகில் அடிபட்டதும் அதற்க்காக சத்திரசிகிச்சை செய்ததும் வீட்டில் இன்னொரு புயல்கொடுத்ததை எப்படிச் சொல்வேன். ஜீவன் ரவி அண்ணா வந்த போது அப்பா இன்னும் கோபம் ஆகிவிட்டார். அன்று முதுகெலும்பு இல்லாத ஆம்பிள்ளை! அவன் எப்படி என்ற மோளை சந்தோஸமாக? வைத்திருப்பான் என்று அவர் ரவி அண்ணாவுடன் நாகரிகம் இல்லாமல் பேசியதைக் கேட்டு என்னால் அழத்தான் முடிந்த்து.
வேற என்ன செய்ய வீட்டைவிட்டு வாருவதோ அரச உதவி அமைப்புகளில் போய் கையேந்துவதோ எனக்கு விருப்பம் இல்லை! முதலில் உனக்கு ஒரு முகவரி கிடைக்கட்டும். இந்த நாட்டில் அதுவரை 3 வருடம் காத்திரு, பாரிஸிற்கு இடையிடையே வருவேன். அப்போது முடிந்தால் ரயிலில் சந்திப்போம். பிடிச்சிருக்கா பிடிக்கலயா என்று இப்ப என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியாது.


ஜீவன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது, என்பாயே அப்பா அம்மாவின் சந்தோஸம்தான் எனக்கு எப்போதும் முக்கியம். உனக்கும் அது புரியும் தானே. பங்கஜம் பாட்டியை நான் அதிகம் பிரிந்திருந்துவிட்டேன். யுத்தத்தினால் அந்தப்பாட்டி பாசத்தில் ஒரு சீமாட்டிதான். அவா இங்கு இருந்தால் தன் பேரனை இப்படி அவமரியாதை செய்வதை நினைத்து நிச்சயம் அப்பாவுடன் முரண்பட்டு இருப்பா. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு, உங்க அப்பா காசு தந்ததும் பாட்டி தடுத்ததும் மறக்கவில்லை. இதை எல்லாம் அப்பாவிடம் பாட்டி சுட்டிக்காட்டுவா.
அதனால் இன்னும் குடும்பம் பிரிந்திருக்க வேண்டிய நிலை வந்துவிடும். என்ன செய்ய ஜீவன்! 


நிசா உன்படிப்பு முக்கியம் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தே இந்த படிப்புத்தான்! 3 வருடம் இங்கு சாதாரணம் விடிந்தால் பொழுதுபோய் இராக்கோழி போலத்தான் வீட்டை வருவது அப்படியான சமைத்தள வேலை இது. எல்லாம் யார் அறிவார்? நீ சந்தோஷமாக லண்டன் போ இன்னும் தெளிவாக ஜோசித்து 3 வருடம் கழித்து வந்து பார் நிச்சயம் நான் வணங்கும் கடவுளும் என் நண்பர்களும் கைவிடமாட்டார்கள். நீ போய் வா சோதி மாமா காத்து இருப்பார் கார்டிநோவில்!

தொடரும்!

18 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-43

வசந்தகாலத்தின் எப்பணூய் (epauoui)மரம் போல

வசந்தம் வீசும் நிசாவின் முகத்தில்
கார்காலத்தின் கலரி(galerie) மரத்தின் சோகம் ஒப்பிய பார்வையில்



 வந்தால் நிசா கதவைத் திறந்து ஆஸ்பத்திரிக்கு !



முன்னால் சோதிமாமா வரப்பின் நிசா வந்தாள் .முதுகு வலியில் எழும்ப முடியாமல் படுத்து இருந்தாலும் மரியாதை நிமித்தம் அசைய வேண்டிய நிலையில் ஜீவன்.

வாங்க சவா(ca-va) சோதிமாமா .நிசா சவா,ஓம் இங்க சவப்பா(சுகமில்லை என்றாலும் )சவா என்று தானே சொல்ல வேண்டும் வந்திட்டமே!


இங்க எல்லாம் படலைக்குப் படலைதானே .


ஊர் கெட்டுப்போய் இருக்கு இந்த நேரத்தில் ஏன் ஜீவன் இந்த ஆடம்பரப்பொருட்கள் எல்லாம் .ஊரில் அம்மா அப்பா எப்படிக் கனவுகான்பார்கள் !

நீ இங்க பாதை மாறிப் போவது சரியோ ?என்றது அவரின் மனதில் இருக்கும் கோபத்தைக்காட்டியது.

என்றாலும் உதவ வந்த இடத்தில் ஏன் வாய்ர்தர்க்கம் என்று அமைதிகாத்தான் .

நிசா என்னாச்சு ஒலிக்கீற்றுப்பார்த்தாயா ?

என்று பேச்சினை மாற்றினான் ஜீவன் .

ம்ம் பார்த்தேன் .

இந்த ஒலிக்கீற்றுத்தான் புலம்பெயர்வர் நம் இளைய சமூகத்தின் முகத்தையும், இன்னொரு பரிமானத்தையும் வெளிச்சம்போடுகின்றது

. நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு வாக்குப் போட்டு ஊக்கிவிக்க வேண்டியது நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும் .

அயல்நாட்டு திறமைக்கு மட்டும் அன்னக்காவடி தூக்காமல் நம் குழந்தைகள் ஊனம் என்றாலும் தூக்கி வைக்க வேண்டியது நம் கடமை

.சின்ன சின்ன கைதட்டல் தான் நாளை இந்த சமூகம் எங்களாலும் முடியும் சாதிக்க என்று சொல்லும் புன்னகை தேசமாக மாறமுடியும் எதிர்காலத்தில் !

விதண்டா வாதமும் ,விட்டுக்கொடுக்காத ,வரட்டுக்கவுரவமும் நல்ல கலைஞர்கள் நலிவடைந்து போவது மூத்தவர்களின் பிடிவாதக் குணத்தினாலும் தான் நிசா !.

ஜீவன் நீ என்ன சொன்னாலும் நம் கலைக்கு எத்தனை மதிப்பு இருக்கு ?யார் பாட்டு கேட்கப்போறாங்க ?

அடையானுக்கு சொந்த இசை இருக்கு ,,சிங்களவனுக்கு சொந்த இசை ,இருக்கு,,ஹிந்திக்காரனுக்கு பங்காரா இருக்கு,!

நமக்கு இருப்பது என்ன ?

இங்க உங்க பாட்டு என்ன என்று பள்ளியில் கேட்டாள் ?

சொல்வது எல்லாம் "ஊத்திக்கிட்டு படுத்துக்கிடலாமா என்று குத்து தானே "

போங்கப்பா இந்த இசை,கலை என்று எதுவும் வேண்டாம் ஜீவன் .

முதலில் உடம்பை பார்த்துக்க முதுகுதான் இங்க தூண் அது இல்லையோ ஆம்பிள்ளை இல்லை !

அம்மா நிசா நீ ஜீவனுடன் பேசிக்கொண்டு இரு .

நான் உனக்கு லண்டன் போக டிக்கட் பார்த்திட்டு வாரன்!

கார்டி நோர்ட் பக்கத்தில் தானே!

சோதி மாமா போனதும் நிசா என்ன விசயம் ஒன்றும் புரியல.

அது இருக்கட்டும் இதில் எந்தப் பாட்டு முதலி வந்தது இந்த வாரம்!





தொடரும்!

16 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -42


இனி வரும் தரிப்பிடத்திற்காய்
காத்திருக்கின்றேன்
அச்சத்தின் எச்சங்கள்
இன்னமும் ஒட்டிக்கொண்டு 
அழகின் இன்னொரு பரிமாணத்தை
எனக்குச் சொல்லலாம்!

(முட்களின் இடுக்கில்-மெலிஞ்சிமுத்தன் கவிதை தொகுப்பு -பாரிஸ்§§)

பாவியார் போகும் இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும் என்பார்கள். அது எந்தளவு உண்மை என்று அனுபவித்தால் தான் புரியும். பலருக்கு சொன்னாலும் கேட்பது இல்லையே?
வழக்கு விசயமாக ஜீவன் லாச்சப்பல் போகும் போது சுரங்கப்பாதை ரயில் பயணத்தில் எதிர்பாராத நிகழ்வுதான், அவன் கையில் இருக்கும் புதியரக சம்சுங் கைபேசியை இங்கு பிறந்து வளர்ந்த ஆப்பிரிக்க மற்றும் அடையான்(அல்ஜீரி/மொரோக்கோ) இளைஞர்கள் சிலர், உடல் உழைப்பை நம்பாமல் வழிப்பறியில் கிடைப்பதில் வாழ்க்கை வாழ எண்ணும் சுகதேசிகள் ஆக இருக்கும் வழிப்பறிக்கூட்டத்தின் ஒரு குழுவினர் ஜீவனின் கைபேசியை பறிப்பதில் ஏற்பட்ட ஓட்டப்போட்டியில், கைபேசியையும் தன் கையில் இருக்கும் தங்க மோதிரத்தையும் பாதுகாத்துவிட எண்ணி சுரங்கப்பாதைப் படிக்கட்டில் ஓடி ஒழிந்து கொள்ள நினைத்த போதுதான் படிக்கட்டில் தவறி விழுந்து அடிபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலை! 

அடி முதுகிலும் காலிலும் பலமாக இருந்தது. இப்படி வழிப்பறிகள் இந்த நாட்டில் அதிகம்; அதில் தப்பும் வழிகள் என்றால், தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு என்றாலும் இங்கு இருக்கும் உறவுகளுக்கு என்றாலும் நவீன கைபேசியில் பேசுவதை தவிர்த்தால் தான் முடியும்! இல்லை என்றால் ஆதிகால செல்டல் கைபேசி போல பழமையான வடிவ கைபேசியை பவித்தால் தான் முடியும்! புதிய மொடல் வாங்கிவிட்டால் வெற்றிப்பட நடிகை தன் முதல் படத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குனர் திண்டாடுவது போலத்தான் கைபேசியை பாதுகாக்க திண்டாட வேண்டும்.
இந்த நாட்டில் இது எல்லாம் சாதாரன நிகழ்வு. புதுப்போன் வாங்க காசு வச்சிருக்கின்றான் தாயகத்து உறவுகளுக்கு அன்பளிப்பாக கஸ்ரப்பட்டு உழைக்கும் காசினை வீண் ஆடம்பரம் செய்ய அனுப்பவில்லை என்று நினைக்கும் உறவுகளுக்கு எல்லாம் எப்படிப்புரியும்; இந்தக்கைபேசியும் கடன் அடிப்படையில் நண்பன் மூலம் வாங்கியது என்று..? நினைவுக்கு வந்ததும் எண்ணிக்கொண்டு இருந்தது ஜீவன் 7 வது மாடியில் 5 இலக்க அறையில் முதுகிலும் காலிலும் கட்டுப்போட்ட நிலையில் தனிமையாக. உதவிக்கு அழைப்பு மணி அடித்தால் ஓடிவருவார்கள் அன்பான பணியாளர்.
வேலை முடிந்து வந்தான் ரவி 'இப்ப எப்படி இருக்குது? '
உடம்பு வலி அதிகமோ என்னத்தை வலி, புலன்விசாரணை என்று கழிதிண்டோமே அதைவிடவா இது வலி?
பழைசை எல்லாம் ஏன் ஞாபகப்படுத்துகின்றாய்? முதுகில் முள்ளந்தண்டு எலும்பில் அடிபட்டிருக்கு, அதில் சின்ன இரத்தக்கசிவு என்றுதான் ஒபரேசன் செய்து இருக்காம்! இடக்காலின் பாத நரம்பு உடைஞ்சுபோச்சாம், அதுக்காக ஒரு ஒப்பரேசன் என்று இரண்டு ஒப்பரேசனும் வெற்றியாம்; இப்ப தான் டாக்டர் சொல்னவர்.
ஓ அப்பவெற்றி நிச்சயம் என்ற இராணுவ முன்னேற்றம் போல அழிஞ்ச சொத்துக்கள் அதிகமோ ??
உனக்கு நக்கல் அதிகம்; ஒன்றோட ஒன்றை முடிச்சுப்போடும் பழக்க தோஸத்தை முதலில் மாத்து!
ஏண்டா கொஞ்சம் சிரிக்க விடன் ரவி அதுவும் பிடிக்கலயா ??என்ன உனக்கு அதிகம் தொல்லை, ஏற்கனவே பணக்கஸ்ரத்தில் இருக்கும் உனக்கு நானும் ஒரு அன்னக்காவடியாகிவிட்டேன் இல்ல?
இல்லடா ஜீவன் நாளைஉனக்கு விசா கிடைச்சால் ஒரு அவசரத்துக்கு 10000 ஈரோ எடுத்து தராமலா போய்விடுவாய்??
முதலில் விசாகிடைக்க கடவுளை வேண்டிக்கொள்! நீ இரு இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் ல்தகா சைஆ வரும். அவங்க அப்பா அம்மா கூட..

. நான் வெளிய போறன். இன்னொரு காவடி கூடுது எப்படித்தான் இந்த இம்சைகளை சுமக்கப்போறன் ஆண்டவா, ஐய்யப்பா வழிகாட்டு..
என்ன சொல்லுறாய் ரவி? நான் விமானநிலையம் வரை போறன். ராகுல் வந்து வந்துவிட்டான் பாரிசிற்கு! 

கண்முழிச்ச உனக்கு கொஞ்சம் உதவிக்கு கூட இருங்க என்று சோதிமாமாவிடம் கேட்டேன் நிசாவுக்கு நல்லாக பிரெஞ்சு தெரியும் தானே வைத்தியர்கள் சொல்வது நல்லாக புரியும். எங்களைப்போல அரைகுறை மொழியை வைத்துக்கொண்டு குசினியில் சட்டியை எடுத்துக்கொண்டு வா என்றால் தாச்சியை எடுத்துக்கொண்டு போய் நிக்கும் நிலையும், வாத்துக்கும் கழுதைக்கும் வித்தியாசமான மொழி உச்சரிப்பை புரியாமல் மேல் இருப்பவன் எங்களை கேவலமாக திட்டும் நிலை நம் அடுத்த சந்ததிக்கு வரக்கூடாது பாரு! அதை சரியாக சோதிமாமா செய்கின்றார். மோளை படிப்புக்கின்றார். நீ காதலி என்கின்றாய். முடிவு நீங்க ரெண்டு பேரும் தானே பேச வேண்டும்!

அதுதான் நண்பனாக செய்ய முடிந்தது. அவர்களை கெஞ்சி வந்து பாருங்கோ நான் இன்னொரு நண்பன் ஊரில் இருந்து வாரான் என்று சொன்னேன். நீண்ட ஜோசனைக்குப் பின் சோதிமாமா வாறம் என்றார். மாமிதான் பின் அடிக்கின்றா, நீ குடியில் விழுந்துதான் காயப்பட்டியோ இல்லை உண்மையில் அடையான் கைபேசியைப் பறிக்க வந்த போதுதான் ஓடினாயோ என்று!
அதுசரி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்காக கமராக் கஸ்சே(ஒழித்துவைத்த வீடியோ) பண்ணியா காட்டமுடியும் ?அதுசரி ஏன் விமானநிலையம் யார் வாரா?
உனக்கு வில்லன் குடும்பம் முக்கியம் என்று போனவன் சமாதான காலம் என்று A -9. திறந்த பின் விற்பனைப்பிரதிநிதியாக யாழ்ப்பாணம் போனவன் அங்கே மறைமுக அடக்குமுறையினால் உள்ளே போக இருந்தவன் உறவுகள் யாருக்கும் சொல்லாமல் கொழும்பில் பல்தேசியக்கம்பனியின் கூட்டத்திக்கு என்று சொல்லிவிட்டு நாட்டை விட்டுவாரன் சமாதான காலம் என்று ஊடகம் சொல்லியது.

 ஒரு கதை சொல்லாமல் விட்டது பலகதை என்பான் அழைப்பில் வரும் போது இப்ப அவனே வாரான் திருந்தாத ஜென்மம் என்றாலும் நண்பன் ஆச்சே தனியாக விடவாமுடியும்? என்ன புதிர் போடுகின்றாய் முதலில் யார் அவன் எனக்குத் தெரியாமல் ?? பங்கஜம் பாட்டியின் செல்லப்பேரன் என்ன ராகுல் வாரானா? அவனுமா வெளிநாட்டுக்கு வந்து அலையப்போறான்? வந்திட்டான் நேற்று இரவு நான் தான் அவனை இறக்க உதவி செய்தேன். இங்க பொறுப்புக்கு சேர்த்த காசில் தான் கொஞ்சம் துண்டுவிழ விட்டுவிட்டாய். நீ உனக்கு இந்த புதுசு கைபேசி வேண்டாம் என்றால் கேட்கமாட்டாய். பாட்டு கேட்கணும் என்றே உயிரை வாங்கி இப்ப அடிபட்டு கிடக்கின்றாய். முதலில் இந்த பாட்டுப்பைத்தியத்தை நிற்பாட்டு! ரவி பாட்டு ஒரு ஜீவன் எனக்கு !என் மறுபெயர் பாட்டுத்தானே மச்சான் அதுதான் பாடல் எனக்குப் பிடிக்கும் எனக்கு மட்டுமா, நிசாவுக்கும் பிடிக்கும் !

எனக்கும் இனிப் பைத்தியம் பிடிச்சிடும் உன்னோடு பாட்டு கேட்டால் !
தொடரும்