28 February 2012

பஸ்சில் ஒரு சந்திப்பும் வாழ்த்தும்.

வணக்கம் உறவுகளே.!

 இன்று வலையுறவுகளுடன் கொஞ்சம் மனம் திறக்கலாம் என நினைக்கின்றேன்.
பதிவுலகத்தில் எனக்குப் பிடித்த சில விடயங்களை என் பார்வையில் சொல்கின்றேன்.

இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாம் நான் பயன்படுத்தும் ஐபோன் -4 மூலமாகத்தான் எழுதுகின்றேன்.

 .நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டால் என்ன, வாக்குப் போட்டால் என்ன சில  நண்பர்களின் பதிவுகளில் அதிகம் விவாதம் செய்தால் என்ன எல்லாத்திற்கும் மூலகாரணி இந்த கைபேசிதான்.


அதனால் நான் பெறும் பல நன்மைகள் ஒரு புறம் என்றால். தீமைகளும் சில இருக்கதான் செய்கின்றது.

ஏற்கனவே ஒரு கைபேசி பறித்துகொண்டு போட்டான் ஒரு ஆப்பிரிக்க அண்ணண்.

 சிலருக்கு கடுப்பான பின்னூட்டத்தை தனிமரம்  இந்த கைபேசியில் இருந்து தான் பதிவு செய்கின்றேன்.

எப்போதும் விவாதகளம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் .அது பள்ளிக்கூட வாழ்வில் இருந்து இன்றை பதிவுலக வாழ்வுவரை தொடர்கின்றது.

 பள்ளியில் (கடைசி வாங்கில் இருந்துதாங்க நாங்க படிப்பில் கள்ளப்பூனை)முகம் பார்த்து விவாதிப்போம் நக்கல், நையாண்டி, சிரிப்பு, கோபம் என அந்தக் களம் பார்ப்போரை ரசிக்கும் படியாக இருக்கும்அப்போது.

. இப்போது அந்த விவாதங்கள் பல இடங்களில் வருவது இல்லை ஒத்து மேவிப்போவதும் சமரசங்கள் செய்வதும் என ஓடுகின்றது .

ஆனால் வலையுலகில் வந்த சில காலத்தில் எனக்கு அதிகம் விவாதம் செய்வதற்கும் ,விதாண்டாவாதம் செய்வதற்கும் நாற்று வலைப்பூ கிடைத்தது.

 .கடந்த ஆண்டில் அவர் முன்னர் எழுத வெளிக்கிட்டவர் நானோ ஒரு கடையைத் திறந்துவிட்டு ஈ ஓட்டிக் கொண்டிருந்த காலம்.  இப்படி இருக்கும் போது எனக்குப் பிடித்த விடயம் பற்றி ஒரு விவாதமேடை.

அதில் நம் ஈழத்து இலக்கியங்களின் நிலையை என்னி கொஞ்சம் அதிக கவலை, சீற்றம் ,திட்டமிட்டு புறக்கணிப்பு ஒரு புறம் என்றால் .

ஏழுத்து ஆர்வத்தில் வருவோரிடம் பொருளாதார பின்னடைவு ஒருபுறம் , போதியளவு வாசகர்களிடம் போய்ச்சேர முடியாத பலபிரிவினைகள்  .

அதையும் கடந்து மக்களிடம்  கொண்டு செல்ல வேண்டிய இலக்கியங்கள் பற்றி விழிப்புணர்வு கொடுக்காத ஊடங்கள் நிலை .

நல்ல படைப்புக்களை ஊக்கிவிக்காத படைப்பாளிகள்மீது வரும் சீற்றம் என பல விடயங்களில் எனக்கு இன்றும் அதிக வருத்தம் இருக்கின்றது

 .இதனை பல விவாத இடங்களில் பின்னூட்டங்களாக சொல்லியும் வருகின்றேன். (முதலில் நீ எழுத்துப்பிழையுடன் எழுதுவதை நிறுத்து இல்ல பிளக்கைவிட்டு ஓடு என்று
சொன்னார்கள் கொலவெறியுடன்,
தொடரை முடித்துவிட்டு ஓடப்போறன் விரைவில் என்று சமாளிச்சாச்சு)

என் பின்னூட்டங்களைப் பார்க்கும் சில நண்பர்கள் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்பார்கள்.

நான் அதிகம் ஏழுத்துப்பிழை விடுகின்றவன்   பலபதிவுகள் அப்படித்தான் வந்திருக்கு இன்றுவரை.  அதை எல்லாரிடமும் தனித் தனியாக சொல்லும் அளவுக்கு நான் முயன்று ஒப்பாரி வைக்க நினைப்பது இல்லை .

என் பதிவுகளில் வரும் படங்கள் ,பாட்டு எல்லாம் நண்பரின்  கணனியில் இருந்து தான் வருகின்றது. (நான் ஓசியில் ஓட்டுமடம்  போறவன்)

 பதிவுகளை நாஞ்சில் மனோவும் ,சமயங்களில் காட்டானும்  இன்னும் பல நண்பர்களும் தான்திரட்டியில் இணைக்கின்றார்கள்.

 சோம்போறித்தனம் ஒரு புறம் என்றால் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளனும் என்ற  பொறுமை இல்லை .

இதெல்லாம் தெரியாமல் எனக்கு உள்குத்துப் போட்டவர்கள் மீது எனக்கு கோபம் வரவில்லை,அவர்களை புறக்கணிக்கவில்லை. சிரிப்பு ஊட்டுபவர்கள்  மீது எப்படி கோபம் வரும்.!



  இப்படி இருக்கும் போது கடந்த ஆண்டில் வலையில் மோதிய சிலரில். . அண்ணன் யார் என்று கூட தெரியாமல் அதிகம் சண்டை போட்டு ,உங்களுக்கு என்ன தெரியும் என்று மரியாதை இல்லாமல் பின்னூட்டம் போட்டுவிட்டு அந்த விவாதப்பதிவில் இருந்து வெளியேறி விட்டன்.

அதன் பின்பு சிலகாலத்தில் அவரின் பதிவுகளைப் படித்தேன். அப்போது உணர்ந்தேன் இந்த இடம் அவர் பெற எவ்வளவு நேரம் கணனியில் இருந்திருப்பார் ?

 அதன் பின்பு அவர் மீது மரியாதை கூடியது .அவர் படத்தை நான் பார்த்தது நாஞ்சிலின் பதிவில் .

மனோவின் தம்பிகளில் அவரும் ஒருவர் எனக்கு அண்ணர் வயதில் ,அனுபவத்தில்.

பஸ் ஏறும் போது என்னோடு எறியவர் இந்த பஸ் சென்னை நேராக போகுமா?  என்றார் .நானும் அப்படித்தான் போகும் என நினைக்கின்றேன் என்றுவிட்டு நீங்க பிளாக் எழுதும்  ?அவரா இவர். என்றேன் .

ஆமா .உங்களையும்  எங்கயோ பார்த்த ஞாபகம் என்றார். (அண்ணார் பஸ்சுக்குள் கஞ்சியாக்கப் போறார் என்று உள்ளுக்குள் பயம்) .

என்னை நாஞ்சில் மனோவின் வலையில் அதிகம் பார்த்திருப்பீர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

 அதன் பின் இருவரும் பதிவுலக விடயங்களையும் இந்திய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். . கடந்த  வருடத்தில் ஒரு திரட்டியின் பிரச்சனையில் அவர் வெளியேறியது எனக்கும் வருத்தம் தரும் செயல்தான் .

அதிகம் அவரின் பதிவுகளை படிக்கமுடியுது இல்லை . அந்த நண்பர் தான் தம்பி கூர்மதியான் . முதலாவது பதிவர் சந்திப்பு அவருடன் தான் .
கிறுக்கனின் கிறுக்கல் வலைப்பதிவு தம்பி கூர்மதியானின்http://kirukaninkirukals.blogspot.com/
 .இப்போது ஏனோ உள்நுழைய முடியவில்லை. வலையை மூடிவிட்டாரா ???

அதன் பின்பு துசி .துசியோட போட்ட சண்டையை  நாற்றில் பார்க்கலாம் என் முகநூலில் விடியவிடிய போட்ட பின்னூட்டங்கள் எங்கள் நட்பை இன்னும் நெருங்கி வர வைத்திருக்கின்றது.வலை உறவு குடும்ப உறவாக தொடர்கின்றது.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
.பல பதிவாளர்களை வளர்த்துவிடுவதில்
 இவன் ஒரு பல்கலைக்கழகம்.
பல்சுவைப்பதிவிட்டு பலரை வியக்கவைப்பான்.
இலக்கணவழு என்றால் இளைய நக்கீரன்
எப்போதும் வலைக்காக வாழ்பவன்.
அடிக்கடி இவனோடு சண்டைதான்
 அடுத்த பதிவில் அரவணைப்பான்
அண்ணா என்பான் ஐயா.பெரியவரே,பாஸ்
அடிங்கொய்யால என்று அடிக்கடி திட்டுவான்
திருந்தாத ஜென்மம் நீ என்பான்.
தனிமெயிலில் இவன் தூக்கம் கலைந்தாலும்,
 முகநூலில் முறையிட்டாலும் முடியாது என்று சொல்லாதவன் !முடித்துத்தருவேன் என்பான் .
என்ற அண்ணண் இல்ல
அடிக்கடி கடிப்பான் அன்பில் ஒரு நண்பன்.
 நேசத்தில் நேசித்த
காதலி பிரியவதனா போய்விட்டால் புலம்பெயர்ந்து என்று புலம்பும் அன்பு தம்பிக்கு (நிரூபன்)இன்று பிறந்தநாள்.(29/2)




பல்லாண்டு பல்லாண்டு காலம் கணனியும் காதலியுமாக(keybord)
விசைப்பலகையில் வீடுகட்டி
குடியும் குடித்தனத்தனமுமாக விதானையார் வீட்டுச் சீதனத்துடன் இரணைப்பாலயத்தில் இன்பமாக
வாழ வாழ்த்துகின்றேன்.

     இப்படிக்கு!
தனிமரம் -நேசன்.

குறிப்பு- இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட மணிக்குரல் விளம்பரம் 

26 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-10

கிழங்கு சாப்பிட்ட ஆத்தை மூச்சு விடமுடியாமல் மூச்சை நிறுத்தியது.அந்த நேரத்தில் தெரியாது இதயவலி (ஹாட் அட்டக்) என்ற நோய் !

. கலியாணவீடு அடுத்த செத்தை வீட்டையும் காணவேண்டிய நிலையாகிப்போனது.

சின்னத்தாத்தா ஆத்தைக்கு கொள்ளி வைத்தார்.

 ஆத்தைக்கு கொள்ளிப்பந்தம் பிடித்த பேரன்கள், பேத்திகள் ,எள்ளுப்பேர்த்திகள், எள்ளுப்பேரன்கள் என 42 உறவுகள் உடலைச் சூழ்ந்து நின்றவர்கள் அன்று அதில்  இன்று சிலர்  புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டு இருக்கும் நிலை.

கொள்ளிப்பந்தம் என்று மெழுகுதிரியைப்பிடிக்கும் அடுத்த தலைமுறையினருக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பது சமயச் சடங்குகள் பற்றி ??????.

செத்தவர்கள் .மீண்டும் ஏதோ ஒரு வகையில் குடும்பத்தில் இன்னொரு பிறப்பாக வருவார்கள் .என்று பெரியவர்கள் சொல்வார்கள் உண்மையா?

 செத்தவீட்டை முடித்துக் கொண்டு செல்வம் மாமா சரோஜா மாமியைக் கூட்டிக் கொண்டு பதுளை போனார்.

 அதுவரை யாருமே ஊரில் இருந்து மனைவியை கையோடு வெளியிடங்களுக்கு கூட்டிச் செல்வது இல்லை.

 செல்வம் மாமா இதில் முன் மாதிரி ஆனால் அதுவும் நல்லதுக்குத் தான் என்பது அடுத்த மாதம் எங்களுக்குச் சொல்லிச் சென்றது.

.தமிழர் வாழ்வு வேதனை சுமந்த நிகழ்வுகள் ஒரு தொடர்கதைதான் !

நாட்சார்  வீடு .மூன்று தலைமுறை வாழ்ந்து ,வளர்ந்து ,கலியாணம் பார்த்து செத்த வீடு கொண்டாடி சுகதுக்கங்களில் சுவராக இருந்த வீடும் .

சுற்றிவர வேலியால்  நீண்ட வளவு பனைக்கூடல் ஒரு புறம் மாட்டுக் கொட்டகையும். அதன் மறு பாதியில் மாரிகாலத்திற்கு பூவரசு விறகு வைக்கவும் ,ஊமல் சாக்கிலும் ,பன்னாடை கட்டி தொங்க வைத்த கொட்டில் அதனோடு இனைந்த கோழிக் கூடு.

  முட்டை எங்கே போட்டது என தேடிப் போகும் வைக்கோல் பட்டரை.

வளம் கொண்ட  நீண்ட  பேரம்பலத்தாரின் வீட்டை.

 1985 இல் பெப்ரவரி மாதம் ஈ.பீ.ஆர்.எல்.எப்(ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி) எங்கள் ஊர் கடற்படைத் தளம்மீது முதலாவது தாக்குதலைச்  திட்டமிடாது செய்த போது.
கடற்படையினரின் செல் தாக்குதலில் வீடு உடைக்கப்பட்டது. வைக்கோல் பட்டரை தீயிடப்பட்டது .

அதன் பின் பாதுகாப்பு விரிவாக்கம் என்று நில ஆக்கிரமிப்பு .அந்த வீட்டுப்பக்கம் போனதே இல்லை ராகுலும் அவனின் மூன்று தலைமுறையினரும் .

நாலாவது தலைமுறையாயவது போகலாமா ??இல்லை இன்றும் சீதனமாக தனக்குத் தந்த வீட்டை ஒரு தடவையாவது பார்க்கமாட்டோமா தன் விழியால் என ஏங்கும்  பேரம்பலத்தின்  மகளின் உணர்வை எந்த இனவாதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும் ?

அன்று தொடங்கிய ஒட்டம் பங்கஜம் பாட்டியை உடல் தளர்வுறச் செய்தது.

 தன் சொத்து என அரசி போல இருந்த வீடு போய்விட்டது .

உயிரைக்காவிக் கொண்டு அருகில் இருந்த ஊருக்குள் போய் இடம் பெயர்ந்து  குடியேறினோம்.

அந்த ஆண்டைத் தொடர்ந்து 1986 இல் மறக்க முடியாத நிகழ்வு வந்தது.

 செல்வம் மாமி பிள்ளைப்பெறுவுக்கு ஊருக்கு வந்திருந்தா.

உறவுகள் எல்லாம் பல இடங்களில் தனிக்குடித்தனமாக குடியேறியதால் பங்கஜம் பாட்டியும் .ராகுலின் அம்மாவும் சீத்தா மாமியும் பிள்ளைகளுமாக ஒரே வீட்டில் குடியேறினார்கள் .

வீட்டில் எல்லாம் ஆண்வாரிசுகள்.

சண்முகம் மாமாவின் வாரிசுகள் மூவர் ,எங்கள் குடும்பத்தில் அண்ணண் நானும் என் தம்பியும் என ஆறு பேர் இந்த ஆறு பேருக்கும் ஒரு தேவதையாக வந்தால் சுகி.

 .சரோஜா மாமிக்கு பிறந்த முதல்க் குழந்தை தான் சுகி.

எங்கள் பேரம்பலத்தாரின்  வம்சத்தில் வந்த முதல் பெண்குழந்தை .

அப்படியே ஆத்தையின் மறுபிறப்பு  என ஊரே புகழ்ந்து பேசியது போது பங்கஜம் பாட்டி பார்த்துப் பார்த்து பரியரித்தா .

பிறந்தவள் வீட்டில் இன்னொரு உயிரை வாங்குவாள் என்று தெரியவில்லை சில வாரத்தில் .

பேத்தி என்று  பாச முத்தம் இட்டு பார்த்து பார்த்து பணிவிடை செய்த பங்கஜம் பாட்டி உயிர் எடுக்க வந்த கிரகம் உன்ற மோள் என்று திட்டும் நாள் அன்று வந்து..

                                                        வருவான்......

மோள்-மகள்  -வட்டார மொழி

24 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-9

அதிகாலையியே சமயகிரிகைகள் தொடங்கி விட்டது. செல்வம் மாமாவும் .
,
சண்முகம் மாமாவுக்கு மச்சான் ரூபனும் சுண்ணம் இடிக்க வெளிக்கிட்டபோது அருகில் இருந்து வட்டிக்கார முருகேஸர் சுண்ணப்பாட்டுத் தொடங்க!

..முத்து நல் தர்மம் பூ மாலை தூக்கி முளைக்குடம் நல் தீபம் வைபின் '

என்று தொடங்கி ..சுண்ணம் இடிப்பேன் .

என்று செல்வன் மாமா சுண்ணம் இடிக்க உலக்கையைத் தூக்கி இடிக்கும் ஒவ்வொரு தருணமும் .

தன்னை மறந்து அழுத துயரம் என்ன வென்று சொல்வது.

 மச்சான் ரூபன் சுண்ணம் இடிக்க மாட்டன் என்று உலக்கையை விட்டுட்டு  ஓடியந்து சீத்தாமாமியிடம் சேலைத்தலைப்பில் ஒளிந்து கொண்டவனைத் தாங்கி மீளவும் சுண்ணம் இடிக்கத் தாங்கியிருந்தவன் யோகன் .

அவனுக்கு அன்று தெரியவில்லை தன் தந்தைக்கு இப்படி ஒரு நாள் பிறகு தானும் அழுதுகொண்டுதான் சுண்ணம் இடிக்கவேண்டி வரும் என்று !

"ஆலகால விசத்தை உண்ட சிவனைப்பாடி நாம் திருப்பொற்சுண்ணம் இடிப்போம் .

என்று முருகேசர் பாடி முடித்த போது அழுதது செல்வம் மாமா,ரூபன் மச்சான் மட்டுமல்ல கூட இருந்த உறவுகளும் தான் .

எல்லாம் முடிந்து சுடலைக்குப் போகும் போது

தன்னோடு  மருமகன் ராகுலையும் தலையில் தூக்கிக் கொண்டு போனார் .

சோதி மாமா சுடலைக்கு .

செல்வம் மாமா கொள்ளிக்குடம் தாங்கி குலுங்கிக் குலுங்கி அழுத போது.

 ரூபன் கொள்ளி மூட்டமாட்டன் என் ஐயாவுக்கு என்ற போது அருகில் இருந்து கொள்ளியை  வையண்டா என் மாமாவுக்கு(சண்முகம்)  என்று அழுதுகொண்டு அவனை கொள்ளி வைக்க  வைத்தவன் யோகன் .

.பின் அவனுக்கு கொள்ளியே வைக்கமுடியாமல் வித்துடலாகி வருவான் என்று அன்று நினைக்கவில்லை!

எல்லோரும் சுடலையால் வீட்ட
காடாத்தி வரும் போது !

சோதி மாமா ராகுலை நடந்து போ வீட்டை என்றுவிட்டு பெட்டிக்கடை அரணியிடம் தோடம்பழச் சுவை டொபி வாங்கித் தந்து விட்டுப் போனவர் பின் வரவேயில்லை ஊருக்குள் .

சோதி இயக்கத்துக்குப் போய் விட்டான் என்று வதந்தி உலாவியது.

 எல்லாம் பேச்சே முருகா!

இந்த பங்கஜத்தை முண்டச்சி ஆக்கி. மூத்தபிள்ளையை பலிவாங்கி.

  பிந்தி வந்ததுகள் பிழை செய்ய வைத்து பேர் சொல்லும் பிள்ளை செல்லத்துரையை சேர்த்துக் கொண்டுபோக வைத்தாய் .பெத்தவயிறு துடிக்க பின்ன வந்தவனும் ஓடிப்போட்டானே !

யாரிட்டைப் போவேன் காடாத்தி வந்திருக்கும். இந்த மகனை என்ன செய்வாய் செந்தில் வேலா ?

பாவியானே என்று ஒப்பாரி வைத்த பாட்டி.

 அதன் பின் பேரன் ராகுலிடம் பேசுவதே இல்லை  சில காலம்.

உன்னைக்கொண்டு போன சாட்டில் தான் ஓடிப்போய்ட்டான் .

இல்லை என்றால் யாராவது கண்ணுக்குள்!தென்படாமல் இப்படி கொதித்துக் கொண்டு போயிருப்பானா ?

வீட்டுக்கு வந்து எட்டு வீட்டை செய்ய எனக்கு உதவியாக இருக்காமல் .

.முத்தாச்சி  பாட்டி பங்கஜத்தை இனி ஒப்பாரி ஏன்  வைத்துக் கொண்டு .

நடக்கப் போறதைப் பாரு மச்சாள் .வந்தவர்களை அனுப்பவேனும் என்று அதிகாரம் செய்த பின் அழுகையை நிறுத்திவிட்டு தோய்ந்து போட்டு பாட்டி வந்தா வெள்ளைச் சீலையில்!

 இப்படிப் பார்த்த காட்சி என்ன சொல்வது பானுமதி போல இருந்த பாட்டி சுந்தராம்பாள் ஆகிவிட்டதை.

அர்தங்கள் புரியாத போது விளக்கம் தரும் பாட்டி இன்று இனி என் கிட்ட வராதே என்று அதட்டிய போது ராகுல் செய்த பாவம் தான் என்ன !

ஆனாலும் அவனுக்கும் பேரப்பலத்தாரின் பிடிவாதம் இருக்கும் தானே!

 சின்னப்பாட்டியிடம் சாய்ந்து கொண்டான். தனக்குத்தான் பிள்ளைகள் இல்லை இந்தப்பேரன் தன்னை கைவிடமாட்டான் என்று கனவு கண்டாவோ?

 கடைஸியில் கொள்ளி வைத்தவன் இந்தப்பேரன் தான் .

காலம் வலிகளையும் வேதனைகளையும் தீர்க்கும்.

 ஊருக்குள் வந்தவர்கள் மீண்டும் வியாபாரத்திற்கு பதுளை  பசறை, அப்புத்தளை,பண்டாரவளை,கண்டி கம்பளை ,நாவலப்பிட்டி, காலி,தலவாக்கொல்ல, குருநாகல் ,மொரட்டுவ என்று வேகம்  எடுத்து பல திக்கும் பறந்தார்கள் .

அதனால் தான் காகம்கள் என்றார்கள் பட்டணத்தில் வாழ்வோர்.

 ஆனாலும் கஸ்ரப்பட்டு வெற்றிலைக்கடையும் ,வட்டிக்கடையும் போட்டார்கள் விளம்பரப்பலகை வைத்து.

 செல்வம் மாமா ,ஈசன் மாமா,பாலன் மாமா(தேவனின் தங்கை கணவர்) எல்லாறும் பதுளை போனார்கள் 1984 இல் .

சின்னத்தாத்தா மட்டும் செத்தாலும் வரமாட்டேன் .என்று சொல்லிப்போட்டார்.

காணி வித்த காசோடு பதுளை போனவர்கள் வந்தது 1985 தையில்

.பங்கஜம் பாட்டி செல்வம் மாமாவுக்கும் முத்தாச்சியின்  கடைசித் தங்கை  புஸ்பம் மகள் சரோஜாவுக்கும் கலியாணம் செய்து வைத்தா  தையில் .

.ஊரே கூடிவந்து மீண்டும் வீடு கலகலத்தது.

 அந்த நேரத்தில் தான் நல்ல பனங்கிழங்கு புடுங்கும் காலகட்டம்.

 வீடுகள் எல்லாம் பனம்பாத்தியில் கிழங்கு புடுங்கி அவிப்பதும், அவித்த கிழங்கை புழுக்கொடியலுக்குப்  காயவைப்பதும் ,ஒடியலுக்கு பச்சையாக காயவைப்பதும்,  பூரான் திண்ணுவதுமாக ஒரே கிழங்கு வாசம் வீசியது.

  அவித்த பனங்கிழங்கை பச்சைமிளகாயுடன் சேர்த்து(இடித்து) துவைத்து சாப்பிடும் சுவைக்கு யார் தான் ஆசைப்படமாட்டார்கள் .

ஆத்தைக்கிழவிக்கு ஓடியல் புட்டும் ஒடியல் கூழும் என்றால் போதும் நாலுநேரமும் சாப்பிடும்  .

கிழங்கை பச்சை மிளகாயுடன் ,சின்ன வெங்காயம் போட்டு இடித்துக் கொடுத்தால்  உருண்டையாக்கி பேரப்பிள்ளைகளுக்கு ஊட்டியவாரே தானும் சாப்பிடும்.

 அன்றும் அப்படித்தான் எல்லாருக்கும் ஊட்டி விட்டா பேரன்களுக்கு இரவுப்பொழுதில்   .

புஸ்பம் பாட்டி வீட்டில் அன்று இரவு  கலியாணவீட்டுப் பந்தலில் இரவு  இரவாக வாடகைத் தொலைக்காட்சியில் வாடகைக்கு படக்கொப்பி எடுத்து படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

வீட்டில் இருந்த புனிதா மாமி,சீத்தாமாமி , முத்தாச்சிப் பாட்டி ,சின்னத்தாத்தா  என முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் ஒரு ஐம்பது பேர் இருந்திருப்பார்கள் .


.ஊருக்குள்  படம் போடுவது என்றால் எல்லா அயல் வீட்டார்களும் ஒன்றாக  கோப்பி குடித்துக் கொண்டு   விடியவிடியப் படம் பார்த்த காலம் அது .

எங்கப்பாவுக்கு சிவாஜி பிடிக்கும் !

  ஆத்தை ஆசையில் பனங்கிழங்கு துவையலைச் சாப்பிடும் போதே சின்னத்தாத்தா அளவாச்சாப்பிடுங்கோ

கிழங்கு  இட்டு முட்டாக்கி மூச்சு விட கஸ்ரப்படுவாய் என்று சொல்லியதையும் கேட்கவில்லை. சாப்பிட்டா அதன் பின்பு !

இன்றும் ராகுலின் கண்ணுக்குள் அந்தக்காட்சி இருக்கின்றது!

22 February 2012

பாருங்க மச்சானை!

வணக்கம் உறவுகளே.
நீண்ட நாட்களின் பின் ஒரு தரமான ஒரு படத்தினைப் பார்த்தேன் !

அந்தப்படம் பற்றி உங்களுடன் சிலவிடயங்களைப் பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

 இது விமர்சனம் இல்லை

மனோஜ். (GIHAN DE CHICKERA )பட்டதாரி இளைஞ்ஞன் .அவன் உழைப்பை நம்பியிருக்கும் குடும்பம்,,வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அரபுலகம் போகத்துடிக்கும் அடித்தட்டு குடும்பத்தலைவி,  இரண்டு வயது போன பாட்டியுடன் தன் இயலாமையை கடிந்து கொள்ளும் இளைஞன், ஸ்டாலி .

 (DHARMAPRIY A DIAS)
தன் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பனும் என எதிர்பார்க்கும் குடும்பத்தலைவி.

 ,கையில் காசு வந்ததும் உன்னை கலியாணம் கட்டுறன் காத்திருப்பாயா ?என ஏங்கும் காதலன் .

வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்துவதற்கு முகவர் (மகேந்திரா )செய்யும் திருகு தாளங்கள்  (மகேந்திரவைப் பார்த்து  எத்தனை வருடம் ஆச்சு).


வெளிநாடுகள் ஏன்  இலங்கையர்கள் வெளிநாட்டில்  வேலை செய்ய ஆர்வம் இருப்போருக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கக்கூடாதா?

 , கஸ்ரப்பட்டு வாங்கிய சுதந்திரம் பற்றித் தெரியாத புதியதலைமுறையின் அரசியல் சித்து விளையாட்டு,.

படிக்க வேண்டிய மாணவன் வேலைக்குப் போகும் சமூக அவலம். கிறிக்கட் மட்டுந்தான் விளையாட்டா ?

மற்றவை எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா என ஏராளமான கேள்விகள் மூலம் ஒருத்தன் சிந்தனையை சிறைப்பிடிக்க முடியுமா ?

சமூகத்தின் இயல்பு முகத்தினை தயக்கம் இல்லாமல் வெள்ளித்திரையில் காட்ட முடியுமா?
 காதைக்கிழிக்கும் வாய்ச் சவால் இல்லை,

விழியை பிதுங்கவைக்கும் கதாநாயகியின் அங்கத்தை தேவையில்லாமல் காட்டும் நிலை இல்லை.

பிரமாண்டம் என்ற போர்வையில் சமூக அவலத்தைச் சொல்லாமல் போகும் அன்னிய இறக்குமதி இல்லை.

தலைவன் பொருளீட்ட வேண்டும் ஆனால் அதற்கு  வெளிநாட்டிற்குப் போகனும் எப்படிப் போகலாம் வேலைவாய்ப்புக் கேட்டு வெளிநாட்டின் (ஐரோப்பிய)தூதுவர் ஆலயத்தில் விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பித்தால் உடனே விசா கொடுப்பார்களா ?

 விண்ணப்பிப்போருக்கு தகுதி இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு மார்க்கம் கிடையாதா  ?

 ஏழ்மையில் இவர்கள் உழைத்து கடனில் இருந்து மீளவேண்டும் என கனவுகானும் இவர்களுக்கு. வழிகிடைக்காத என காத்திருக்கும் போது !

 ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது அவர்கள் வெளிநாடு போக  எப்படிப் போனார்கள்?தெரிந்து கொள்ள ஆசையா ?  கானுங்கள் மச்சான் திரைப்படத்தை.(2008)

 .நாட்டில் எத்தனைபேருக்குத் தெரியும் இன்னொரு விளையாட்டை  பற்றி.தெரிந்து கொள்ளுங்கள்

வசனகர்த்தாக்கள் கைதட்டவைத்தவை-(  RUWANTHIE DE CHICKERA & UBERTO PASOLINI)
நாய் மூத்திரம் கழித்தால் நல்ல சகுனம் என்றதன் ஊடாக சாஸ்திர மூடநம்பிக்கை.

எந்தநாட்டுக்குப் போனாலும் நீ இரண்டாம் குடிமகன் தான்.

உனக்காக பிரார்த்திக்கின்றேன்(சேவிக்கின்றேன் என்ற வார்த்தையை யாரும் சுஜாத்தா போல பாவிக்கவில்லை )


இன்றும் ஒருத்தன் பெண்பார்க வந்திட்டுப் போறார்?

அம்மா இந்த சூட்கேசில் என்னையும் வைத்துக்கூட்டிக் கொண்டு போ என்று கேட்கும் சிறிமி!

இரண்டு வருடம் தானே போய்ட்டு வாரன் என்ன சொல்லுறீங்க!

கப்பல் வந்து கொண்டிருக்கு போய்விடுவீங்க!

 வெளிநாட்டு விசாவுக்கு காசு வாங்கிக் கொண்டு விடலாமே (ஊழல் செய்து)

இலங்கை பற்றி இவங்களுக்கு என்ன தெரியும்.

?தேசப்பற்று  (சுபீட்சமாக சேர்ந்திருந்தால் தான் முடியும்!)

புத்த பிக்கு என்றால் விசா உடனே தருவார்கள்.

அவளுக்கு என் மேல் சரியான காதல். என்னை எந்தளவுக்கு நேசிக்கின்றாள் என்று புரியுது.

சிறுவனின் வியாபார பேரம்பேசும் திறமையில் மின்னும் அழகு!

ஒவ்வொரு வார்த்தைக்கும்  வார்த்தைகள் அதிகம்.

  ரியாஸ்- அவரின் விமர்சனத்திற்கு http://riyasdreams.blogspot.com/2011/12/blog-post_29.html

கமராவின் மூலம் கடந்து வந்த ஊர்களை காட்சிப்படுத்தியவர் கரங்களுக்கு தங்க மோதிரம் போட நினைப்பது-  (Photography: STEFANO FALIVENE).

சேரிமக்களும் இந்த நாட்டுக் குடிமகன்கள் தான்

.தொட்டலங்கா,மாதம்பிட்டிய கெசல்வத்த ,களனிப்பக்கம் போய் வாருங்கள்.கொழும்பின் இன்னொரு முகம் தெரியும்!

 இப்படி வாங்க
 இலங்கை வங்கிக்கட்டிடம் தான் உயர்ந்த கட்டிடம் என்று விட்டு கேக் வீதியில் இருக்கும் குடிசையைக் காட்டியது.

 இப்படி நான் அலைந்த வீதிகள் எல்லாம் மீண்டும் ஞாபகம் வரவைத்துவிட்டது.

இங்கே-இயக்குனரின் இதயம் பேசுவது-UBERTO PASOLINI இத்தாலி நாட்டவராம்)

ராஜன் பள்ளிக்குப் போகாமல் வேலைக்குப் போகின்றாயா?

கையயில் இருந்த காசைக்கொடுத்துவிட்டு கடன்காரன் வரும் போது வீட்டுக்குள் ஒழிக்கும் காட்சி இயக்கியவிதம்.



கேள்வியாலயே வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் போர்வையில்  இலங்கை வந்து சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் போகும் ஆசிய நாட்டவர்கள்.

பாலியல் தேவைக்காக ஹோட்டலில் இருப்போர் விலைபோகும் பொருளாதார அவலம்.


இத்தாலியில் இருந்து வந்த பார்சலைப் பார்க்கும் அன்பின் வெளிப்பாடு ,ஆற்றாமையின் நக்கல்,

அன்பைச் சொல்லும் முத்தம் .

அரவணைக்கும் தம்பதிகளின் அன்பின் வெளிப்பாடு.


வெளிநாட்டு வாழ்க்கையைச் சொல்லும் திறந்த வெளியில் அவர்கள் போகும் காட்சிகள்..

மூத்த நடிகை மாலினி பொன்சேக்காவைத் தவிர.

 சின்னத்திரைப் பட்டாளங்களை பயம் இல்லாமல் இயக்கி வெற்றிகரமான ஒரு படம் ஆக்கியதற்கு இன்னும் பாராட்டவார்த்தைகள் முண்டியடிக்குது...


என்றாலும்  பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.

 .
 1மணித்தியாலம் 50 நிமிடம் 10 நாளிகைக்கு   நல்ல படம் பார்த்த திருப்தி சகோதர மொழி புரிந்தவர்களுக்கு.

 .புரியாதவர்கள் ஆங்கில மொழியில் வரும் விளக்கத்தை நோக்கவேண்டும்.

சிறிய முதலீட்டில்  பலநாட்டுக்கூட்டுத் தயாரிப்பு எப்படி எல்லாம் நம் சகோதரப்படைப்பு பெருமைப்பட வைக்கின்றது.


 ஈழத்து தமிழ் சினிமாவிற்கு இவை எல்லாம் வழிகாட்டுமா????என்ற ஏக்கம் என்னுள்ளே!

இந்த லிங்கில் சென்றால்
http://www.srilive.co/view/198/machan-sinhala-movie/
தெளிவாக படத்தினைப் பார்க்க முடியும். ஆங்கில சப் டைட்டில் இல்லை என்று ஞாபகம் இருக்கட்டும்! -

நன்றி ரியாஸ் நல்ல படத்தை பார்க்காமல் போயிருப்பேன் .உங்கள் பதிவு வராமல் போய் இருந்தால்! இப்படியான படங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்!


19 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-8

செல்வத்தின் துயரத்தைத் தேற்றிய மாமி முத்தாச்சி.

 இனி ஆகவேண்டியதை பாரு முதலில். நீ அமைதியாக இரு .

அப்பனுக்கு கடமை செய்யனும் .என்ற பேரனும் உன்னைப்பார்த்துத் தான் என் மருமகனுக்கு (சண்முகத்திற்கு) கொல்லி போடனும் .

அவனுக்கு  அறியாத வயசு  .
இப்படி எல்லா ஆம்பிள்ளையும் இடி விழுந்த மரம்போல அழுது ஊத்தினால் நாளைக்கு பேரம்பலத்தாரின் மானம் மரியாதை யாரு காப்பாற்றுவது .

சின்ன மாப்பிள்ளை ஈசனும் யோகனும் விடியக் காத்தாலை ஊருக்குல் சாச் சொல்லட்டும்.

 மணியத்தார் நல்ல சுண்ணப்பாட்டுப் பாடுவார் .அதுவும் பேரப்பலத்தாரின் நண்பர் .அவரை நாளைக்கு பக்கத்திலே  உதவிக்கு வைத்திரு என்றுவிட்டு முத்தாச்சி மாமி சவத்தை எடுக்கும் காரியங்களில் ஆம்பிள்ளைக்கு நிகராக செயல்பட்டது .

தன் மாமி  ஒரு விதானையார் என்பது மறந்து போனதை ஞாபகப்படுத்தினான் செல்வன்.

செத்த வீட்டில் யாரும் உறங்கவில்லை .பாக்கியம் வீட்டில் சாப்பாடு தயாரான போதும் யாரும் சாப்பிடும் நிலையில் இல்லை .

பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்திலும், வீட்டுத் திண்ணை மின்விளக்கு வெளிச்சத்திலும் ,காட்ஸ் விளையாடிக்கொண்டு சில ஆம்பிள்ளைகள் இரவைக்கழித்தனர்.

 அருகில் சிலர் அரசியலில் கூட்டணியின் கூத்தனியை காரசாரமாக விவாதித்தனர்.

 புதிய தலைமுறையினர் புதிய இயக்கமாக ஊருக்குல் வந்துவிட்ட புலிகள் பற்றி பறைந்து கொண்டு இருந்தனர்.

நேரம் ஓடும் வேகம் யாழ்தேவிக்கு ஒப்பானதாக இருந்தது.

 சோதி எப்போதும் விளையாட்டக இருப்பவன்.

 இப்படி வீட்டில் மூன்று பிணம் வந்ததில் இரத்தம்  எல்லாம் கொதித்தது. இவனுங்களை எல்லாம் சுடனும் என்ற தீ குடிகொண்டது.

 .இதுவரை வீட்டில் அவனை யாரும் எதற்கும் கடிந்து கொண்டதும் இல்லை. கட்டளை இட்டதும் இல்லை .

அதுவும் தகப்பன் பேரம்பலத்தார் இவனுடன் அதிகம் பேசியதே இல்லை.

 வியாபாரம் என்று அவர் தூரத்திலே இருந்த தால் இயல்பாக ஏதோ இடைவெளி இவனுடன்.

 என்றாலும் நல்லநாள் பெருநாளுக்கு காசைப்பாரமல் கைநிறைய கொடுத்துவிடுவார்.

 அண்ணன் சண்முகம் தான் கெட்டுப்போய் விடுவான் என்று கடிந்து கொள்வார்.

 செல்லத்துரை தான் அதிகம் படிக்கவில்லை என்பதால் இவன் மீது அதிகமாக படிக்கும் வழிமுறைகளுக்கும் ,பொன்ஸ் பவுடர்,பொன்ஸ்கிரீம்,டவுசர் சிங்கப்பூர் சேட் என நல்ல நல்ல உடுப்புக்களையும் என அள்ளியந்து கொடுப்பவன் .

தம்பி மீது அதிகம் பாசம் மிக்கவன் இப்படியான அண்ணன் இன்று பெட்டியில்  வந்ததைப்பார்த்து அவன் உள்ளம் கன்னியாய் வென்னீர் ஊற்றைப் போல கொதித்தது

.விடியக் காத்தாளை முத்தாச்சி ஈசன் மருமகனையும்(சண்முகத்தின் சகலன்) ,யோகனையும் கோழி கூவ முன்னர்    எழுப்பி விட்டா . சைக்கிளில் யோகனை ஏற்றிக்கொண்டு ஈசன்  முன்னே போக .

பின்னால் பக்கத்துவீட்டு நல்லம்மா மகனும் சைக்கிளில் போனார்கள். சாச் சொல்ல.

இன்று லங்காசிரியும் ,வீரகேசரியும் வீட்டுக்கு மரண அறிவித்தலைத் தாங்கி வருகின்றது .

அன்று ஊருக்குல் அப்படியல்ல!

முன்னால் போறவர் டோய் பதுளைப் பேரம்பலமும் இரண்டு மகன்களும் செத்துப் போனார்கள் இன்று சவம்  எடுக்கிறாங்க டோய் என்று  ஒவ்வொரு குறுக்குச் சந்தியாலும் சொல்லிக் கொண்டு போவார்கள் .

பின்னால் வருவர் யாராவதுவீட்டு முற்றத்தைக்கூட்டியபின் சாணி தெளித்துக்கொண்டு யாரப்பா செத்தது என்று விடுப்பும் விபரமும் கேட்டால்!

 அதுவந்து அக்காள் பதுளையில் வட்டிக்கடை போடப்போன இன்னாற்ற இன்னார் என்று பரம்பரை விளக்கம் கொடுத்து விளக்கம் சொல்வார் .

சண்முகம் .மாமா எப்போதும் தன்ற மகன் களைவிட தன் மேல் எத்தனை பாசம் வைத்திருந்தார்.

 அவருக்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவள் தான் எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் பொண்டாட்டி ஆக்கியிருப்பான் யோகன் .

இது எல்லாம் எங்கே செத்துப் போன மாமாவுக்குப் புரியும் .?

தன் மருமகன் தன்னைப்பார்பான் என்ற ஆசையில் இருந்தவருக்கு சாச் சொல்லும் வரத்தை தந்த  முருகன் மீது அவனுக்கு என்றும் கோபந்தான் .

இப்படியே சாச் சொல்லிக்கொண்டு ஊர் எல்லைத்தாண்டி பாலம் வரும் சந்தியில் வரும் போது பரிதியும் உதிர்த்தெழுந்தான் தன் கடமையைச் செய்ய .

அதுவரை அமைதியாக இருந்த வீட்டில் ஆர் எல்லாம் புதிதாக வாரர்களோ அவர்கள் எல்லாம் ஒப்பாரியை தொடங்கும் போது !

பேரம்பலத்தின் அருமை, பெருமை வந்து நிற்கும் .யாருக்கும் தெரியாத அவரின் குணநலன் இந்த ஒப்பாரியில் தெரியும் .

ஐயாவுடன் அதிகம் பேசாத சோதிக்கு அப்போது புரிந்தது.

 தன் தந்தை எத்தனை கஸ்ரப்பட்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கின்றார் என்று  .

தன் சுகம் என்ன என்று தெரியாமல் குடும்பம் என்றால் !

தான் கோயில் போல அமைதி கொடுக்கனும் என்று இருந்து வாழ்ந்தவர்க்கு இப்படியா இதை தவிர்க்கனும் என்ற வெறியில் இருந்தான் .

தொடரும்...

பறைந்து-பேசுதல் [ யாழ் வட்டார மொழி.
சாச்சொல்லல்-கிராமிய முறை.

18 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-7

கடந்த அங்கத்தில் கொலரா காய்ச்சல் என்பது தவறு. அது வயிற்றோட்டம் என்று வரலாற்றுத் தவறினைத் திருத்திய மருத்துவர் ஐயா முருகானந்தம் அவர்களுக்கு சிறப்பு   நன்றி . உங்களின் தொடர் ஆதரவினை தனிமரம் வேண்டி நிற்கின்றது. /////////////

///////////////////////////////////////////////////////////////


 புனிதா மாமியின் பெயர் உள்ளூரில் செங்கமலம் என்றால் தான் தெரியும்.

 மருமகளும் ,மாமியும் ஒரே  தோற்றம் போல் இருப்பதால் .பங்கஜம் பாட்டியும் செங்கமலம் என்று தான் பாசத்துடன் மருமகளைக்  கூப்பிடும்.

இனி கலியாணப்பெண் என்பதால் !மருமகளை மரியாதை கொடுத்து புனிதா  கெட்டிக்காரி என்று சின்னராசுவிடம் பேச்சைக் கொடுத்த படியே  இருந்த போது !

ஒரு நாட்டில் எங்கோ ஒரு மூளையில் ஏற்பட்ட மரணத்தை வைத்து .
முழுநாட்டையுமே இரத்தக்களரியிலும் ,வாழ்வில் மறக்க முடியாத வடுவையும் தந்து. தமிழர் மீது திட்டமிட்டு செய்த செயல்தான் இனக்கலவரம்.

அந்த சம்பவம்  பதுளை நகரையும் விட்டு வைக்கவில்லை .

அறிவுப்பசி தீர்த்துவைக்கும் புத்தகக்கடை ,வாழ்வாதார  தேவையை நிறைவு செய்யும் வர்த்தக நிலையங்கள் ,சாதாரண மக்கள் வாழும் வீடுகள் ,என  தமிழர்  மீது தேடித் தேடித் தாக்குதல் ,கடையுடைப்பு  ,தீவைப்பு என காடையர்கள் செய்த வன்முறைச் செயல்கள் .மறக்கவும் மன்னிக்கவும் முடியாது

. இந்த செய்தி காற்றலையில் கசிந்து வந்து கொண்டிருந்தது .

 ஊருக்குல் சிங்களவன் வெட்டுறானாம் கொழுத்துறானாம்  என்று பேச்சு வீட்டுத் திண்ணைகளில் வீசிக்கொண்டிருக்க.

  பதுளையில் கடைக்குல் இருந்தவர்களையும் வெளிவரமுடியாது.

 மூடியகடைக்குல் தீ வைத்த நிலையில் எரிகாயங்களுடன் தப்பியவர்கள் மீது காடைத்தனமாக எரித்த செயலில் எத்தனை பேர் மாண்டு போனார்கள்.

 என்று இன்றும் வெளிப்படைத் தகவல் இல்லாத நிலையில் .

பேரம்பலத்தாத்தா ,சண்முகம் மாமா,செல்லத்துரை மாமா என வாழையைப் போல் வெட்டிச் சாய்த்து கடையையும் தீ வைத்தார்கள் காடையர்கள் கூட்டம்.

இத்தனையும் தாண்டி தப்பித்த இருவர் சின்னத்தாத்தாவும் , செல்வம் மாமாவும் தான் .

உயிர் இல்லாத உடலைப் பெட்டியில் கட்டிக்கொண்டு இருவரும் ஒரு  வாரம் கழித்து அகதியாக சொப்பின் பையுடன் வெற்றுடலை வாடகைக்காரில் ஊருக்குல் கொண்டு வந்தபோது   !

ஊரே கூடிவிட்டது. யார் யார் இன்னும் உயிரோடு இருக்கின்றார்களோ ?இல்லாமல் போனார்களோ? என்ற அங்கலாய்ப்பில்.

 எங்கிருந்து ஆத்தையின் ஒப்பாரி இப்படி முழங்கியதோ தெரியாது !

பேரம்பலத்தாத்தாவின் உடல் பெட்டி திறக்க   முன்னாடியே .

சின்னத்தாத்தாவின் தோழில் சாய்ந்து.

  என் வம்சத்தில் வந்த முத்தவனே. மார் மீது போட்டு அடைகாத்தேனே .ஐயா ,ராசா என்னைவிட்டு போனியோ ?

பாவி நானிருக்க என்று ஆத்தை நெஞ்சில் அடித்து ஒப்பாரிவைக்க.

 கூட இருந்தாலும் அண்ணண் என்னையும்  ஒரு பிள்ளைமாதிரி பார்த்தவர் !

என் கண்முன்னாலே இப்படியாகுமோ ஆத்தா    .
எனக்கு கொல்லி இடுவான் என்று  நம்பி வளர்த்த மூத்தவன் சண்முகம் .
பக்கத்தில் கையுக்குல் இருந்த செல்லத்துரை .

என்னத்தைச் சொல்லி அழ ..

பார்த்துப் பார்த்து அழுதே இந்த செல்வனைக் கொண்டு வந்து சேர்க்க நான் பட்ட பாடு என்ற முருகா என்று கதறியழும் சின்னத்தாத்தா  .

ஒரு நாளும் இப்படி அழுது பார்க்காத ராகுல் அம்மா.ஒரு புறம் .

  பங்கஜம் பாட்டிக்கு தன் புருஸன்  பெட்டியைத் திறக்கவும் .

பொருளீட்டப் போன புண்ணினியவானே !பெட்டியில் வரக்காத்திருந்தேனோ !அப்பனுக்குத் துணையாக இரண்டு பிள்ளையலும் முன்னரே போனீங்களாட ?என்ற மோனே.

 கட்டினவள் காத்திருக்க !

கலியாணத்துக்கு  மற்றவனுக்கு பந்தல் போட்டேனே.

 உங்களைப் பார்க்க வருவோருக்கு நிழல் கொடுக்கவா போடுறன் என்று தெரியலையே?
 கந்தனே இந்த பங்கஜத்தை பாவி ஆக்கினாயே?

 என்று ஒப்பாரி வைக்க ஊரில் இருந்த உறவுகள் எல்லாம் .மார்பிலும் ,தோழிலும்  கூடிவைத்த. ஒப்பாரியைப் பார்க்கும் குழந்தைகள் எல்லாம் அழுகின்ற அவலத்தை எப்படி மீண்டும் எழுத்தில் வடிப்பது .

 .அன்று  அருகே அழுது தீர்த்த  ராகுல் இன்றும் அதை நினைத்து அழுவதை

. . கலியாணத்திற்கு  சண்முகம் மாமாவும் சந்தோஸமாக வருவார் .

அடுத்த ஊரில் நடக்கும் கூத்தைப் பார்க்க போவ காத்திருந்த யோகன் அழுகின்றான்  தம்பியுடன் சேர்ந்து தேம்பித் தேம்பி .

மாமி எங்கமாமாவுக்கு ஏன் இப்படி ?

போகும் போது என்னோட பகிடிவிட்டவர். இப்படி பெட்டியிலா  வருவார் .  ?

சீத்தா மாமி .
என்று மூத்த மாமியின் மடியில் விழுந்து அழும் மருமகன் யோகனை தூக்கி தன் தங்கையின் மடியில் வைத்தார் தந்தை தேவன்.

 கைபிடிக்க வருவார் என்று பூத்திருந்த செங்கமலம் மாமி  என்று செல்லம் பொழியும் புனிதா பொங்கி அழுதகாட்சியை வர்ணிக்க வார்த்தை இல்ல

 .அருகில் இருந்த  பெரிய மச்சாள், சின்ன மச்சாள் ,சகளி ,பெரியதாய் ,சிறியதாய் என முப்பது மூத்த பொண்டுகள் தோலைக்கட்டி ஒப்புப்படிக்க .

அடுத்த வீட்டு கமலம் .அக்கம்பக்கம் விமலா,ராச்சாத்தி,பாக்கியம் என ஒடிவந்து ஒப்புப்படிக்க.

 சின்னத் தாத்தா வெற்றுடலை மூன்றையும்  முறையாக தாத்தாவின் இரண்டு கால்மாட்டிலும் .
சண்முகம் மாமாவையும் செல்லத்துரை மாவையும்  முற்றத்தில் வைத்தார் .எல்லோருக்கும் தெரியவும்

.அடுத்த நாள் சவத்தை அடுக்கம் செய்வதற்கு.
வசதியாக .

வீட்டில் அடுத்த மகன் சோதிக்கு எதையும் செய்யும் சபை அறிவு போதாது .
எல்லாம் தெரிந்த சண்முகம் ,செல்லத்துரை மாமா போல் இல்ல இவன் .

வீட்டில் செல்லப்பிள்ளை கொஞ்சம் தெரிந்த மகன் செல்வம் இன்னும் கொலராவில் இருந்து மீளவில்லை .

இவனும் மீளுவானோ என்ற கவலை சின்னத்தாத்தாவுக்கு உள்ளுக்குள்.

 ஆனாலும் வீடே செத்த வீடாக இருக்கும் போது என்னத்தைச் செய்வது .என எண்ணத்துடன்  .
வீட்டுக்கு மூத்த ஒரே ஒரு மருமகன் தேவனைக்  கூப்பிட்டார் .

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தான் ராகுல் .தந்தை வழி மாமியின் பிடிக்குல் இருந்து கொண்டு.

    நாளைக்கு சவம் எடுக்கனும்.

 இனியும் வைத்துக்கொண்டிருக்க முடியாது .ஆகவேண்டி காரியத்தைப் பார்க்கனும் .வளவுக்குல் இருக்கின்ற பூவரசை எல்லாம் தறிக்கச் சொல்லு .சின்னராசுவை .


வேற ஆட்களைக் கூட்டியரச் சொல்லி யாரையாவது அனுப்பு கையோட விசயத்தைச் சொல்லி .கள்ளுக்கும் காசு கொடுக்கச் சொல்லு.
 பின்னாடி கணக்குப்பார்க்கலாம் .
எல்லாம் பேச்சு!

 முதலில் வட்டிகார முருகேசுவிடம் காசு கொஞ்சம் வேண்டு. பிறகு பார்கலாம்.

 இந்த கார்க்காரங்களுக்கு காசும் சாப்பாடும் கொடுக்க வழி செய் .பாவம் அவங்களும் தூக்கம் இல்லாமல் எங்களுடன் வந்த வங்க.

 சரிமாமா என்றுவிட்டு தேவன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்க.

 அருகில் இருந்த ஆம்பிள்ளைகள் எல்லாம் அடுத்த வேலைகளை ஆளுக்கொருவராக செய்தார்கள்.
 பாய் விரித்து  வந்தவர்களுக்கு கோப்பி அருகில் இருந்த நல்லம்மா வீட்டில் இருந்து வந்தது  .

ஒப்புப்படித்து ஒய்ந்து போய் இருக்கும் ஆத்தை மட்டும் ஆர் குருக்களைக் கூப்பிட்டு கிரியை செய்யனும் என்று   சின்னத்தாத்தாவிடம்சொல்லி அனுப்ப !தேக்கி வைத்த துயரம் எல்லாம் தாய் மீது சாய்ந்து  கதறி அழுதான்  செல்வன்..



தொடரும்....

பகிடி-நகைச்சுவை .
ஒப்பு,ஒப்பாரி,-மரணவீட்டில் நடக்கும் சம்பிராதய முறை.
குருக்கள்- மரண சமய நிகழ்வுக்கு தனியாக இருப்பவர் .

16 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-6

பங்கஜம் பாட்டி கலியாண வேலையில் வீட்டை சுன்னாகம் சந்தை போல ஆக்கிவிட்டா !

வடக்கு வேலியை அடைக்கும் சின்னராசுவை. காலையிலே கத்த வெளிக்கிட்டா .

டேய் சின்னராசு மாடுகள் வேலியில் உரசிக்கொண்டு போகமல் இருக்க நல்ல கருக்குமட்டையை குறுக்கால போட்டு காவோலை வேலியை அடை .
வேலியை அடைக்கும் முறை பார்க்கவேணுமா இங்கே செல்லுங்கள்-
என்று சொல்ல
என்ன ஆத்தா .

இந்தவீட்டு வேலியை எத்தனை வருசமா நான் அடைக்கிறன் .வேலியை அடைக்கும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
http://www.thanimaram.org/2011/05/blog-post_3429.html
எனக்கு வேலை சொல்லுறியலோ?
 என்று அவன் கோபமாக கேட்க.

 ஆமா இப்ப எதிர்துப் பேசு  மழைக்காலத்தில் பின்னாடி வந்து அரிசி கொடு ,தேங்காய் கொடு ,என்று இந்த பங்கஜத்திட்டத்தான் வரனும்.

 அப்ப பாரு பங்கஜத்தின் குத்தல் பேச்சை .

அடுத்த கிழக்கு வேலியை கிடுகு போட்டு அடைக்கனும் .

வளவில் சின்னவனின் எல்லையை ஒழுங்கா கதியால் போட்டு அடைக்கனும்.

 பொட்டுப் பிரிச்சு பேரண்கள் போகம இருக்க நல்ல சீமேற்கிழுவையும் கிளுவங்கதியாலும் போட்டு நெருக்கி அடைக்கனும்.
 என்று சின்னராசு வேலைக் காரணிடம் விடாமல் சொல்ல .

ஏன்ன கலியாணமாப்பிள்ளை எங்களுக்கு கோப்பிக் கொட்டையும், தேயிலையும் கொண்டு வருவாரோ ?

 டேய் அவன் கலியாண மாப்பிள்ளை .ஒன்றும் காவிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லி விட்டு இருக்கின்றன்.

 முன்னதுகள் செய்த செயலால் நான் நாளு வீட்டுக்குப் போக முடியாத படி வசைப்பேச்சுக் கேட்கின்றன்.

 என்ர மோனுக்கு எங்க பொண்ணு எடுப்பாய் என்று எள்ளி நகையாடும் நல்லல்மாவிடம் என்ர மருமகள் கையில் இருக்கும் போது வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதோ என்று சண்டை போட்டனான் .

இந்த வேலையைச் செய்ய வேண்டிய ஆண்பிள்ளைகள் எல்லாம் அங்கால போய்ட்டாங்க.

 இப்படி நான் ஓடிப்பறக்கிறன் .

நீ கதை கொடுத்து வேலைக்கள்ளனாக இருக்கின்றாய்.

 டேய்  பந்தல் போடனும் நாளைக்கு மறந்திடாத.

 வீட்டு வாசலில் இருந்து படலைவரை பந்தல் நீளம் வரனும் .

மணவறை வைக்கிறது வாறசனம் நிம்மதியாக இருந்து சாப்பிடனும்.

சொல்லிவிட்டீங்கதானே !
எல்லாம் நல்ல வடிவா செய்து தாரன் கொஞ்சம் காசைப் பார்த்துப்பாராமல் கொடுத்தாச் சரி .

உன்னட்ட காசு கொடுக்க மாட்டன்.

 நீ கள்ளுக்குடித்துப் போட்டு படுத்திடுவாய்.

 பிறகு நான் பையப்பைய உன்னப்பிடிக்க விடியக்காத்தால  ஓடிவரனும்.

 எனக்கு எத்தனை வேலை இருக்கு .

உன்ர பொண்டாட்டி நெல்லுக்குத்த வரும் போது கொடுத்து விடுறன் .
என்று பங்கஜம் பாட்டி சத்தம் போட்டால் சின்னராசு பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவான் .

என்ன சத்தம் போட்டாலும் பங்கஜம் பாட்டி வளவுக்குல் 5பனையை கள்ளுச் சீவ அவனுக்கு கொடுத்திருப்பதாலும் ,மாரிக்காலத்தில் விறகு ,குத்தரிசி,என அள்ளிக் கொடுப்பதாலும் சின்னராசு பங்கஜம் பாட்டி வீட்டு வேலை என்றால் தட்டாமல் ஓடியந்து செய்துவிடுவான்.

 இங்கே தடல் புடலாக வேலை ஆடியில் அமர்க்களப்பட .

அங்கே 5 வது மாமா செல்வனுக்கு சரியான காய்ச்சல் .

அப்போது பதுளையில் பரவியது கொலறா என்ற ஒருவகைக் காய்ச்சல் .

பலகுடும்பத்தில் இந்த இந்தக் காய்ச்சலால் மரணித்தவர்கள் பற்றி யாரும் பதிவு செய்ததாக நான் அறியேன்.

ராகுலும் இதைப்பற்றி பின்னால்  சிலர் வாய் மொழியாக கேட்டதே அன்றி எழுத்தில் தெரிந்து கொள்ளவில்லை என்கின்றான்.

காய்ச்சலிற்கு அப்போது  வெதமாத்தயா(நாட்டு வைத்தியர்)  தரும்  கசாயம் குடித்துக் கொண்டும் தன் நலத்தில் அக்கரை கொள்ளாதும் இருக்கும் போதுதான் அந்தக் கொடூர சம்பவம் நடந்தது.

... வருவான் முகம் தொலைத்தவன்!

13 February 2012

காதல் வந்து கண் சிமிட்டுதே!

வணக்கம் உறவுகளே!
இன்று ஊரெல்லாம் காதலர் தினம்! என்று இந்த ஊடகங்கள் மூலம் வியாபார உலகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும் போது அன்பளிப்புக் கொடுத்தால் தான் காதலா? அன்புக்கு முன்னுரிமை இல்லையா? என்று எண்ணத்தோன்றுகிறது.

காதலர் தினத்தில்(14/2 )காதல் சொல்லிய சில நண்பர்கள் எனக்கும் உண்டு! காதல் என்றால் என்ன? என்று இந்த தனிமரத்திற்கும் பல நண்பர்களுக்கும் விவாதங்கள் இன்றும் தொடர்கின்றது .

ஆனால் நானும் மீனாவைக் காதலிக்கின்றேன்..... என்னடா  ஒரு நடிகையைக் காதலிக்கிறேன் என்று சொல்லுறானே என்று நினைக்கின்றீர்களா?


 கொஞ்சம் தொடர்ந்து வாசியுங்கள்.

எப்போதும் கார்காலம் மிகவும் இனிமையானது...குறுந்தொகையில் பல பாடல்கள் இருக்குது.

அதிலும் ஒரு பாடலில் 'கார்காலத்தில்  வருவேன் என்ற காதலன் வரவில்லையே' என்று ஒருத்தி நெஞ்சோடு புலம்புவதாக இனிதாக உணர்வைச் சொல்லி நிற்கும்.

அப்போது இந்த தனிமரத்திற்குப் புரியாத 'கார்காலம் என்றால் என்னவென்பதை'  பாரிஸ் வந்த புதிதில் அனுபவித்து தெளிந்தேன்.

இலங்கையில் நுவரெலியாவில் அதிகம் குளிர் இருக்கும்.

 அந்த இடத்தில் வேலை செய்வதே கடினம் என வேலையை இடம் மாற்றிக் கொண்டு ஓடியவன்...!

ஆனால் பாரிசில் 'புதுவெள்ளை மழையை' வைரமுத்து கற்பனையாக வடித்ததை நேரடியாகப் பார்த்து அனுபவகிக்கும்  நாட்களின் வரத்தை பெற்றதில் நானும் ஒருவன்.

அதிகம்  மக்கள் குளிர் என்றால் நல்லாக உறங்கனும் என்ற ஆசைவரும்!

ஆனால் பொருளாதார தேடலில், அதிகாலையில் உடம்பை மூடிக்கொண்டு ஒடும் எத்தனை உறவுகள் இந்தக் குளிரையும் பொருள் படுத்தாது பொருள் ஈட்ட ஓடுகின்றார்கள் என்ற எண்ணத்தை குளிரில் நடக்கும் போது எண்ணுவேன்.

அதிலும் பனிக்கால இரவு பகல் ஒரு இன்பம் தான்!

பனிக்கட்டியை அள்ளி வீசும் சிறுவர்கள், குளிரில் நடுங்கும் நண்பனின் ஆடைக்குள் பனிக்கட்டியை செருவி குளிரில் நடுங்க வைக்கும் விளையாட்டு..!

 பனிச்சறுக்கல் போகும் சகஊழியனின் விடுமுறை நாட்கள்!

அதிகம்  மக்கள் வெளியில் வராததால் உணவகங்கள் ஈ ஓட்டும் வேலை நாட்கள் என சுகமானவைதான!

அதிலும் காதலர் தினம் என்று  குளிர்காலத்தின் இந்தநாட்களில் அதிகம் புதியவகைச் சாப்பாடு, இனிப்பூட்டிகள் செய்தல் என்று, வேலையில் வரும் கனதியான மாற்றங்கள் என   காதலர் தினம்  ஓடியே போய்விடும்.

அதுவும் உணவகங்களில் வேலை செய்வோருக்கு விடுமுறை இல்லை..

நம்மவர்களுடன் வேலை செய்தால் விடுமுறை இல்லை-எடுக்க முடியாது.

'இருபது வருடமா நானே வேலை செய்யிறன் ஒரு நாளும் காதலர் தினம் என்று விடுப்பு எடுத்ததில்லை இப்ப வந்த உனக்கு காதலியோடு கடலை போட விடுப்போ..? வேலையைச் செய்!' என்று வேதாந்தம் பேசும் சகஊழியர்...

காதலியே இல்லை இதில் வேற காதலர் தினம் பாரு அதுகளை! என்று பிரென்சு தேச காதல் ஜோடிகளை ஏக்கத்தோடு எள்ளி நகையாடும் நண்பர்கள் ஒரு புறம் என்றால் !

ரயில் பயணத்தில் வரும் நண்பர்களில் என்ன காதலர்தினத்திற்கு அன்பளிப்புக் கொடுத்தாய் புதுப்பொண்டாட்டிக்கு என்று கலாய்ப்போர் சிலர் .

'இன்று ஒரே வேலை மனிசிக்கு தொலைபேசியே எடுக்க முடியல அலைவரிசைகிடைக்கல' என்று வேதனையைச் சொல்லும் உறவுகள் என்று இந்த குளிர்கால நாட்கள் வியப்பாகச் செல்லும்.

அப்போதெல்லாம் நான் மீனாவைக் காதலிப்பேன்.!

மீனாவை ஒரு நடிகையாகத்தான் பலர் தெரிந்து வைத்திருப்பார்கள் .

ஆனால் மீனா நல்ல குரல்வளம்மிக்க பாடகி.

அழகான ஒரு  இசைத்தொகுப்பில் சில பாடலை பாடியிருக்கும் கண்ணழகி மற்றும் மனோஜ் k பாரதி.

மனோஜ்- தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் தோற்றுப்போன ஒரு நல்ல நடிகன். அவர் ஒரு இணை இயக்குனர்.

அதையும் தாண்டி அவர் ஒரு இசைப்பேழை வெளியிட்டார்.  16 வயதினிலே என்று... அதில் இருக்கும் 10 பாடலில் ஒவ்வொரு பாடலும் கிராமிய மனம் கமழும் .

அந்தப்பேழை மீனாவும், மனோஜ்சும் சேர்ந்தும், தனித்தனியாகவும் என பாடல் பாடிய  இசைக்கொத்து. என் கார்கால பின்னிரவில்  மனோஜ்,மீனா தனித்தனியாக பாடிய இப்பாடல் காதோடு சங்கீதம் பாடும் .

எனக்குப் பிடித்த காதல் வந்து  என்று அதைப்பாடுவது மீனா. அந்த பாடலைத்தான் காதலிக்கின்றேன் ..

இசை முரளிதரன்

பாடல் ஆசிரியர் -புஸ்பவாசகன்.

எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காத பாடல் .
நான் தொலைத்தவை எத்தனையோ  அதற்கு எல்லாம் கவலைப்பட்டது இல்லை.

ஆனால் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்களாக சேகரித்து வைத்திருந்த சில பாடல்கள் போய்விட்டது... இந்தப்பாடல் கையில் தங்கிவிட்டது.

காதலைக் கொண்டாடும் உறவுகளுக்கு தனிமரம் தரும்  வாழ்த்துப் பாடல்.

11 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -5

ஆவணியில் கலியாணத்திற்கு நாட்குறிக்கச்  சொல்லி தாத்தா தந்தி அடித்திருந்தார் .

 செல்லத்துரை மாமா கலியாண மாப்பிள்ளை என்பதால். ஆடியில் வரக்கூடாது என்பதால் ஆவணி முதல் வாரத்தில் வருவார் என்றும் தந்தியில் தகவல் கொடுத்தார் தாத்தா.

செல்லத்துரை மாமா கடையில் இருக்கும் ஓய்வான நேரத்தில் .புத்தகம் படிப்பதும் ,சினிமா பார்ப்பதும் என பொழுதினைப் போக்குவார்  .

அப்போது அருகில் ஒரு புத்தகக்கடை இருந்தது. அது பதுளையில் மட்டும் மல்ல பல மலையகதேசத்திற்கும் அறிமுகமான புத்தகக்கடை .

மீனாம்பிகா .
இந்தக்கடையில் நாளிதழ்கள், வாராசஞ்சிகை முதல் அயல் நாட்டுக் கதைப்புத்தகம் .

மற்றும் ஈழத்து இலக்கிய வானில் எழுத்துக் கோலம் இடும் மலையக உறவுகள்  தெளிவத்தை ஜோசப்,மத்தாளை சோமு,மாத்தளை வடிவேலு,ஓ.எஸ்.ராமையா ,தமிழ் ஓவியன் .சி.பி.வேலுப்பிள்ளை,அந்தனிஜீவா,  என ஒரு பக்கமும் முற்போக்கு இலக்கியம் என்ற பாதையில் வந்து பின் நற்போக்கு இலக்கியம் என்ற  எஸ்.பொ அவரைத்தாண்டிய பலரில் ,வ.ஆ. இராசரத்தினம்,டானியல்,டொமினிக்ஜீவா,கைலாசபதி,சிவத்தம்பி,செங்கைஆழியான் என சித்திரங்களாக புத்தகக்கடையில் பலமுகங்கள்  வாசிப்புக்கு தொட்டு எடுக்கக் கூடியவாறு காட்சிப் படுத்துவார் அந்த நிறுவனத்தின் முதலாளி  .

அவரிடம் செல்லத்துரை மாமா கோண்டாவில் சுருட்டுடன் சென்றால் !(ராகுல் வரும் போது சுருட்டு இன்னும் விசயம் சொல்லும்)

இருவரும் பேசுவதே புதிதாக வந்த நாவல்கள் பற்றித்தான் இருக்கும் .இந்தவகையில் அந்த முதலாளி சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு செல்லத்துரை மாமாவுடன் கதை பேச வெளிக்கிட்டால்  விடிய விடிய பேசுவார்கள்

. அப்போது பூபாலசிங்கம் புத்தகசாலை பதிப்பகம் வைத்திருந்தது,வீரகேசரி பதிப்பகம் வைத்திருந்தது . யாழ்கலை இலக்கிய வட்டம் புகழில் இருந்தது.

 செல்லத்துரை மாமாவுக்கு தன் ஆசை மச்சாளை கலியாணம் முடிக்கப் போறன் என்பதில் அதீத ஆனந்தம்.

 தன்னைவிட .மாமா புனிதா மச்சாள் அதிகம் பட்டப்படிப்பு படித்த படியால் தேவையான புத்தகம் ஏதாவது இந்தியாவில் இருந்து வேண்டும் என்றால் அவரிடம் செல்லிவிட்டால்.

 சில நாட்களில் கையில் கொண்டு வந்து மீனாம்பிகா முதலாளி கொடுப்பதால் நன்றி சொல்ல தானே சுருட்டுடன் போவது செல்லத்துரை மாமாவின் இயல்பு.

 அவரும் தனக்கு ஏதாவது புத்தகம் யாழில் இருந்து விரைவில் வரனும் என்றால் செல்லத்துரை மாமாவிடம் சொல்லிவிட்டார் என்றால் !

அடுத்தவர்கள் வேலைக்கு யாராவது ஊரில் இருந்து வந்தால் .கையோடு கொண்டு வருவார்கள் என்பது அவரின் நம்பிக்கை .

இந்த நட்புத்தான் செல்லத்துரை மாமாவையும் மீனாம்பிகா முதலாளியையும் இணைத்தது.

.செல்லத்துரை மாமாவுக்கு மனைவியாகப் போகும் புனிதா மாமி பட்டப்படிப்பு படித்தாலும்.

 வீட்டில் இருக்கும் நேரத்தில் தறி அடிப்பதும் ,கடகம் பின்னூவது. நெல்லுப்பாய் பின்னூவதிலும் கெட்டிக்காரி என்று பங்கஜம் பாட்டி பாரட்டுப்பத்திரம் வாசிக்கும் .

புனிதா மாமி புத்தகம் வாசிக்கும் பங்கஜம் பாட்டி போட்டு போட்டு சண்டிலியான் புத்தகம் வாசிக்கும் .

இந்தக் காட்சியைப் பார்க்கும் ஆத்தைக்கு பாக்கு உரலில் பாக்கு இடித்தவாரே கலியாணம் கட்டப்போறவளுக்கு புத்தகம் வாசிப்புத்தான் முக்கியமோ?

 ஒழுங்கா வாய்க்கு ருசியா சமைச்சுப்போட பழகு .என்ற பேரன் செல்லத்துரை அவன் அப்பன் போல சாப்பாட்டு ராமன் .

என்று குத்தல் பேசும் .

இது எல்லாம் பழகின ஒன்றுதானே என்று பாட்டிமீது கோபம் கொல்லாத புனிதா மாமி வீட்டில் இருக்கும் ஒலிநாடா போடக்கூடிய  பனசொனிக் வானொலியில் பாட்டுப் போடும் .(tape Redio)செல்லத்துரை மாமா முன்னர் வரும் போது வாங்கியந்த ஒலிநாடாதான் அது.

 தன் சம்பளத்தில் முதல் வாங்கிய பொருள் என்று பெருமையாக புனிதா மாமியிடம் முன்னர் சொல்லியிருந்த படியால் .

செல்லத்துரை மாமா ஞாபகம் வரும் போதெல்லாம் .தனிமையில் இந்த பாடலை ஒலிக்க விடுவா  ரசித்துப் பாடுவாகூடவே அப்போது ராகுலுக்கு இந்தப் பாடலின்
இனிமை புரியாது!






அர்த்தம் புரிந்த போது?...

முகம் தொலைத்தவன் வருவான்...,,

08 February 2012

அன்புத் தம்பிக்கு ஒரு பாட்டு!

ஆத்ம திருப்திக்கு எழுதும் என் வலையைத் தாண்டி .

நண்பர்களின் பதிவுகளில் சில விடயங்கள் வரும் போது காரசாரமான விடயத்தை விவாதிப்பதும் கருத்திடுவதும் என் செயல் .

எல்லோருக்கும் ஒரு சினிமா நட்சத்திரம் பிடிக்கும் .நடிகை பிடிக்கும் ,அது அவரவர் விருப்பம் .

ஆனால் வெறித்தனமாக நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்ககூடாது! இளைய சமூகம் என்பதில் எனக்கு கொஞ்சம் அதிக சிரத்தை.

 காரணம் காவலன் படத்தினை பாண்டிச் சேரியில் ஓட விடவில்லை என்பதற்காக வாய்த்தர்கத்தில் ஈடுபட்டு, பின் அடிபாட்டில்  போய் மரணித்த ஒரு ரசிகன் என் நண்பன் .
அவனுடன் ஒரு ஆன்மீகப் பயணத்தில் 3 வருடங்களாக ஒன்றாகப் பயணித்தவன் . அவனின் இழப்பு அவர்கள் குடும்பத்தை  எந்தளவு பாதிக்கின்றது என்பதை ஒவ்வொரு வருடப் பயணத்தின் போது நேரடியாக உணர்கின்றேன் .

அதனால் தான்  நடிகரை வெறித்தனமாக விசுவாசிக்கும் சில நம்மவர் உறவுகளுக்கு சீற்றமாக பின்னூட்டம் இடுவேன் .

அதன் போது தனிமரம் நேசன் அதிகம் தன்னை சீண்டுவதாக  சகபதிவாளர் மதுரன் என் நண்பரிடம் கோபித்துக் கொண்டார் .

ஆகவே இனி வரும் காலத்தில் சினிமா விடயத்தில் கருத்துச் சொல்வதில்லை என்ற முடிவில் இருக்கின்றேன்.

அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் இந்த மொக்கைப் பதிவாளருக்கு! என்னையும் ஊக்கிவித்து ஒரு சகபதிவாளர், அன்பு நண்பர், சரண்யா மோகனுக்கு இதயக் கோயில் கட்டும் படைப்பாளி ராஜ் அவர்கள் .லீபீஸ்டர் என்னும் ஜேர்மனிய
ஒரு விருதினைக் கொடுத்து என்னையும் கொஞ்சம் கர்வப்பட வைத்துவிட்டார்.

 விருது பற்றிய விளக்கத்தினை நண்பர் மதுமதி தளத்தில் பார்க்கலாம்! இதோ அந்த விளக்கம் http://writermadhumathi.blogspot.com/2012/02/blog-post.html?showComment=1328527929802

இந்த விருதினைப் பெறும் தகுதி எனக்கு இல்லை என்ற போதும். இல்லை தனிமரம் உங்களுக்கு இந்த விருது கட்டாயம் பொருத்தம் என்று சொல்லி என் மீது அதிக பொறுப்பினையும் சுமர்த்திவிட்டார்.

 புதியவர்கள் ஐவருக்கு இந்த விருதினைக் கொடுத்து நானும் அவர்களை ஊக்கிவிக்கனும் என்பது இந்த விருதின் ஒரு விதிமுறை.

பெற்றதைக் கொடுத்து மகிழ்வதிலும் ஒரு சந்தோஸம் உண்டு அல்லவா.!
ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் இயங்கும் என்னிடம் பலரையும் தெரிவு செய் என்றால் மிகவும் கடினம்.

என்றாலும் என்னால் முடிந்த அளவு வலையில் நான் பலரைப் படிப்பவர்களில் 5 பேருக்கு  மட்டும் இந்த விருதினை முன் மொழிகின்றேன் .

அவர்களின் வலையில் இந்த விருதுச் சின்னத்தை அலங்கரிப்பதுடன் அவர்களும் இன்னும் 5 வலைப்பதிவாளர்களுக்கு அதனைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை ஞாபகம் ஊட்டுகின்றேன்

பிறந்த தேசத்தில் இருந்து தொலைந்து போனாலும். புகுந்த வீட்டின் பெருமையை கண்கவர் புகைப்படக்காட்சிகள் மூலம் பதிவு செய்து காத்திரமான தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு வலைப்பூத் தான்
சொர்க்கத்தின் வாசல்படி.

அதனை எழுதும் சகபதிவாளர் பிரெஞ்சுக்காரனுக்கு விருதினை அளிக்கின்றேன்.

அவரின் தளத்திற்கு செல்ல இங்கே http://france19450506.blogspot.com/
தனிமரம் என்பதால் சொர்க்கத்தின் வாசல்படி என் வீட்டுக்கு வருவதற்கு விரும்புவது இல்லை. என்றாலும் நான் வாழும் தேசத்தின் அழகு என்னை அங்கே இழுத்துச் செல்கின்றது. என் நண்பர்கள் அவருக்கு இதைத் தெரிவிப்பார்கள் என்று நம்புகின்றேன்..(ஆமா இவர் தூதுவிடுவது எரிக்சொல்கையூம் மூலமோ??)

.
இலக்கியவாசகனை தேடி வாசிக்கத் தூண்டும் பதிவுகளைத் தரும் ஒரு பதிவாளர் குறைவாக எழுதினாலும் நிறையவிடயங்களைத் தொடும் அம்பலத்தார் ஐயாவுக்கு இந்த விருதைக் கொடுக்கின்றேன். அவர் பக்கத்திற்குச் செல்ல.http://ampalatharpakkam.blogspot.com./



ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆன்றோர் வாக்கு .

இன்று ஆலயம் செல்வது வேலை மினைக்கேடு என்று நவீன மொழி பேசுவோரை நினைக்காது .

ஆன்மீகப்பிரியர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆலயத்தின் தலப்புராணம் முதல் திருவிழாக் கோலங்களையும் காட்சியாக பதிவு செய்யும் இராஜாராஜேஸ்வரி அம்மாவிற்கு விருது கொடுக்கின்றேன் .அவங்களின் தளத்திற்கு செல்ல.http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_06.html

எப்போதும் கவிதைகள் ஆகட்டும் ஊர் விடயங்கள் ஆகட்டும் மிகவும் இதயம் நெருடும் வண்ணம் பதிவு செய்வதிலும் ,புதியவர்களை ஊக்கிவிப்பதிலும் ,பாடல் ரசனைமிக்கவருமான ஹேமாவிற்கு இந்த விருது கொடுக்கின்றேன். .

ஹேமாவின் தளத்திற்குச் செல்ல இங்கே-:/http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post_16.html
அவர்களின் பல பதிவில் என்னைக் கவர்ந்த பதிவு மண்வாசனை.
அந்தப்பதிவில் சொல்லிய சில விடயங்கள் மலையகத்தில் முகம் தொலைத்தவன் தொடரில் ஒரு அங்கத்தில் அந்த மாந்தர்கள் வருவார்கள்.
ஆனால் காப்பி பேஸ்ட் கிடையாது பார்வைகள் வேறு வேறு அல்லவா!

காத்திரமான விடயங்களை மிகவும் நீண்ட பதிவாக ,விவாதக்களமாக பதிவு செய்வதில் தன் திறமையைப் பறைசாற்றும் ஒரு வலைப்பதிவின் சொந்தக்காரி ரதி அக்காவிற்கு இந்த விருதைக் கொடுக்கின்றேன் ..
அவர்களின் தளத்திற்கு செல்ல-இங்கே என் மனவானில் -http://lulurathi.blogspot.com











இணையத்தில் பல உறவுகள் பாசமாக தனிமரத்தில் கலந்துவிடுகின்றார்கள் .அந்த வகையில் என்னைத் தொடரும் என் தம்பிகளில் ஒருவருக்கு நாளை மலரும் நல்ல நாளில் பிறந்தநாள் காணுகின்றார்.(9/2)
கடல் தாண்டி தனிமரம் காற்றில் ஒரு வாழ்த்தை கானமாக கொடுக்கின்றேன்.

கவலைகள் மறந்து களிப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

 இணையத்தில் நண்பர்கள் என்று
மறக்க முடியாத பாடசாலையின் பருவக்காதலை பதிவிட்டாய்.
 படிக்க வந்தேன் பாசத்தில்
பின் தொடர்ந்தேன்..நேசத்தில் .
என் உயிர் நீதானே என்று
தொடர் இட்டு
எனக்குப்பிடித்தவர்கள் வாழ்வை ஏற்றிவைத்தாய்.
அன்பைத் தேடும் இதயம் என்று அதிரடியாய் வந்து அவசரத்தில் முடித்தாய்!

அடித்தாடுவதில் கங்குலி என் ஹீரோ என்றாய் .
ஹீரோவுக்கு எல்லாம் பாடல் தந்தாய் பலவிடயங்கள் பதிவு செய்தாய் கன்னிப்பருவத்தில் விமர்சனம் என்றாய் .
எல்லா நடிகையும் பிடிக்கும் என்றாய் எனக்கு பிடித்தவர்கள்  ராதிகா, பானுப்பிரியா ,சினேஹா ஏனோ ?
உனக்குப் பிடிக்காமல் போனது குட்டிப்பையன் என்று கேட்டால் கோபிக்கமாட்டாய் .

எவ்வளவு அடித்தாலும் நல்ல நட்பாக அண்ணா என்றாய்
 அப்பி ஜாலுவோ என்று இனங்களிடையே பிரிவு வேண்டாம்!
 இணையத்தில் என்று வந்தாய் சகோதரமொழி கூட்டனியில் சந்தோஸமாக.

சொன்னால் புரியாது சொல்லச் சொல்ல அடங்காத பதிவுகள்
இன்னும் எழுதனும் நீ என்று வாழ்த்துகின்றேன் ஒரு வாசகனாக .
வாழ்க பல்லாண்டு
குடியும் குடித்தனமுமாக!
நட்புடன் வாழ்த்தும்
தனிமரம்-நேசன் .

06 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -4

கிணற்றடிக்குப் போன பாட்டி முகம் கழுவி வேலியில் கிடந்த தாத்தாவின் சால்வையில் முகம் துடைத்தா .

. அருகில் இருந்த மணி வாழையைப் பார்த்த போது அடி வயிறு பத்தியது .

பாட்டியின் பெருமூச்சு ராகுலின் அம்மாவின் கண்களுக்குல் நீர் முட்டியது .

அந்த மணி வாழை இரண்டு குட்டி போட்டிருந்தது. வாழை நட்டுவைத்த இருவருக்கும் இன்று வீட்டில் இடம் இல்லை.

 இரண்டாவது மாமா தங்கமணி வேலைக்குப் போன பதுளையில் .

மஞ்சள் பூசும் மருதாணி வைக்கும் மூக்கையா மகள் விமலாவை விரும்பி முடித்ததில் .வீட்டில் புயல் வந்தது .

தோட்டக்காட்டில் வேலைக்குப் போனவன் .வீட்டுக்காரியாய் ஒரு இந்தியாக்காரியை இழுத்துக் கொண்டு திரிவதோ ?

என ஆத்தை எடுத்த காவடிக்கு ஆராலும் எதிர்த்துப் பேசமுடியவில்லை.

 சொத்தைப் பிரித்து (காணியும் வளவும்) சொந்தம் பிரித்த தாத்தாவும்.

 செத்துப் போனாலும் என் வீட்டு முற்றம் மிதிக்காத .என்று முழுகின கிணற்று நீரில் தான் மணி வாழையும் வளமாக வாழுது .

அன்று போன தங்கமணி மாமா விவசாயத்தில் முத்திரை பதித்தவர் .அதனால் தான்.

 அவர் கமநல சேவைத் தினைக்களத்தில் முக்கிய பதவியில் இருந்தார்

. பிடிவாதம் ,அவமரியாதை என்ற தேரில் அவரும் ஊருக்கு ஏறிவர விரும்பியதில்லை .

.முத்தவர் சண்முகம் மாமா தாத்தாவின் பேச்சை மீறாதவர் .இதை எப்படியும் சீர் செய்யலாம் என்ற கனவில் இருந்தவருக்கு கண்ணாடி வீட்டில் கல் எறிந்து கடுங்காயம் செய்தார் தங்கமணிக்கு அடுத்து வந்த செல்வா மாமா .

சொர்க்கதங்கம் போல சுண்டி இழுக்கும் சுந்தரி அடுத்த கடை அமரதாசவின் அன்னப் பதுமை லீலாவதியை .
கண்ணடித்து காதலித்து.

 ஊருக்கு போறன் என்று விட்டு கல்லாப்பெட்டியில்  எடுத்த காசு 75 ரூபாய்யுடன் இழுதுக் கொண்டு ஓடியது கல்கமுகவிற்கு.

காற்றில் வரும் சேதி போல தந்தி வந்த கடுதாசி வாசித்த கடைசிக்கு முதல் மாமா கனேஸன் .

சிங்களத்தியைக் கட்டிய மூதேவியை வெட்டிவிடுறன் .அவனை நம்பி வந்தவளையும் கொல்ல வேண்டும் என்று அப்போது இருந்த அரசியல் தாண்டவத்தில் தானும் இறங்கி .

கோபப்பட்டுப் போனது அப்போது ஊருக்குல் போராட்டக்குழுவாக முன் நின்ற ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு.

இத்தனையும் பார்த்துக் கொண்டு இந்த மணிவாழையும் குட்டி போடுதே !

என் வம்சம் இப்படி ஊருக்குல் மானம் போய் விட்டதே? என்று பாட்டி பரிதவிக்கையில் .

 பிழை யார் பக்கம் என்று நோக்குவது என்று ராகுல் தாய் கண்கள் சிந்த யோகனுடன் வீட்டிற்கு வந்த சண்முகம் மாமா .

நாளை காலையில் யாழ்தேவியில் பதுளைக்குப் போறன். என்ற போது!

 என்ன அவசரம்?
 ஒரு கிழமை நின்று போகலாமே.

 இல்ல அம்மா ஐயா தனிய வரும்போதும் அவர் விருப்பம் இல்லாமத்தான் அனுப்பினவர் .

ஆவணியில் அடுத்தவன் (4 ) செல்லத்துரைக்கு முடிச்சுப் போடனும் என்று அப்பாவிற்கு ஞாபகப்படுத்து .என்ற பங்கஜம் பாட்டி தன் ஆசையைச் சொன்ன போது!

 இந்த மருமோனுக்கு ஒரு பெட்டப்பிள்ளையை பெறலயே .
என்று பகிடிவிட்ட அண்ணணுடன் குழந்தைப் புள்ளையோட பேசுற பேச்சா. அவனுக்கு இப்பத்தான் 10 வயது .

கள்ளுக்குடிக்கப்போன மச்சானும், மச்சானுமா ,

ரெண்டு பேரும் இந்தக் கதைதான் கதைச்சனிங்களோ ?

உஸ் உஸ் .
அங்கால ஆத்தையின் குரல் கேட்குது பேசாம போய் படுங்க அண்ணா .

காலையில் போறது என்றால் .புட்டு அவிச்சு கட்டித்தாரன் .

அதுவொன்றும் வேண்டாம். கொஞ்சம் புழுக்கொடியலும் ,அம்மா செய்து வெச்சிருக்கும் அரிசிமாப் பொரியும் போதும் .

தம்பிகளுக்கும் கொஞ்சம் கட்டிவை .

ஏண்டா மருமகனே யோகன் இந்த மாமாவை கடைசிகாலத்தில பார்ப்பியோ ?இல்ல பெட்டச்சியை பெத்துத் தரல என்று சின்னமேளம் காட்டுவியோ ?

சீ போங்க மாமா.

 நீங்க நேற்றுப் போன இராவணன் கூத்துப் பார்க்க கூடவரல .

கடைசி மாமா சோதி ஒழுங்கா என்னைத் தூக்கிக் காட்டல பார்க்க .

என்று தன் ஆசையைச் சொன்னான் ராகுலின் அண்ணன்.


 டேய் ராகுல் அப்பாட கூடப் போய் படுக்கலயோ.

 நாளைக்கு பள்ளிக்கூடம் வயிற்றுவலி என்று சாட்டுச் சொல்லு .

மாமாகூட தேயிலைப்பெட்டியில கட்டி அனுப்பி விடுவன்.

என்ற பேரண்கள் யாரையும் உசுறு இருக்கும் வரை வேலைக்கு ஊர்க்கடல் தாண்டி அனுப்ப மாட்டான் .

 என்ற பங்கஜம் பாட்டி .

டேய் மூத்தவனே இவங்கள் பேரண்கள் ரெண்டு பேருக்கும் .காவடி எடுக்க வைக்கின்றன் என்று சன்னதியானுக்கு நேர்த்தி இருக்கு .

நீ அடுத்த முறை வரும் போது ஆயத்தப்படுத்தனும் .

இப்ப ரெண்டு வருசமா யோகனையும் அவனேடு கந்திட்டு விடும் பழனியின் மோனையும் கூட்டிக்கொண்டு கதிர்காமத்திற்கு குஞ்சப்புவுடன் பாதயாத்திரை போறதையும் என்ர மோன்கள் செய்த வேலையால் போகவில்லை.

 அடுத்த வருஸம் சரி போகவேனும் .அதுக்குள்ள சரி தங்கமணி வருவானா ?

என்ற போது வீட்டு முற்றத்தில் .அமைதியாக அரிக்கன் லாம்புடன் சண்முகம் மாமி வந்து நின்றா .

சரிப்பா உன்னைக்கான வில்லை என்று மருமகள் வந்திட்டால் !

நீ போய்ட்டு காத்தால வா .என்று விட்டு பாட்டியும் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு சரியா வைக்கோல் போட்டு இருக்கா .என்று பார்த்து விட்டு வந்து படுத்தா .

சேவல் கூவ முன்னமே சண்முகம் மாமா சாரத்துடன் முத்தமும் தந்து தன் கழுத்தில் இருந்த புலிப்பல் தங்கச் சங்கிலியையும் தன்  சின்ன மருமகன் ராகுலுக்கு போட்டு விட்டு பயணம் போனார்.

போகும் போது !

வெறுங்குடத்துடன் வேடன் பொண்டில் வந்ததால் .

வீட்டை வந்திட்டுப் போ என்ற பாட்டியின். சொல்லைக் கேளாமல் சண்முகம் மாமா போனது இன்றும் ராகுலின் மனதில் மறக்கமுடியாத நிகழ்வாக பதிந்துவிட்டது.

. அது 1983 ஆனியின் முற்பகுதியில் பாட்டியும். செல்லத்துரை மாமாவுக்கும் செங்கமலம் மாமிக்கும் கலியாணம் செய்துவைக்க ( செங்கமலம் தாத்தாவின் சின்னத்தங்கை மகள். ராகுலுக்கு மாமாவை கலியாணம் முடித்தாலும் மாமி ,இல்லை என்றாலும் மாமி தான்) தேவையான முழு ஆயத்தமும் செய்து கொண்டிருந்தா .

புழுங்கல் அரிசி அவித்தால் என்ன ,அரிசி மா இடித்து வைத்தால் என்ன ,

புதுக்குடித்தனம் போக அருகில் இருக்கும் வளவுக்குள் வீட்டு வேலை செய்ய அத்திவாரம் போட்டால் என்ன .

பங்கஜம் பாட்டி சிட்டாகப் பறந்தது.

 ஊருக்குல் அடுத்த கலியாணம் செல்லத்துரைத் தம்பிக்குத்தான் என ஒழுங்கையால் குடிக்க தண்ணி அள்ளிக்கொண்டு போகும் பொண்டுகள் பேசிக்கொண்டு !

வேலியால் எட்டிப் பார்த்தால் .

அடியே யாரடி பங்கஜம் வீட்டை விடுப்புப் பார்க்கிற குமரி .

என்று குரல் கொடுத்தால் கிழவி கிடுகுபின்னுது போல கிணற்றடிக்கு மறைப்புக்கு கட்ட என்று நக்கல் பண்ணும் பலர் .

பாட்டி ஒழுங்கைக்கு வரமுன் ஓடி விடுவார்கள் .

ஆனி ஓடி ஆடியும் வந்தது  யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே  அந்த சேதி முன்னவர பின்னே!!

//////////////////////////////


 
இணையம் வழி இதயம் நுழைந்து
மனதில் மையம் இட்ட மாய உலகம் ராஜேஸ் நண்பனுக்கு ஆழ்ந்த
அனுதாபங்கள்.


முகம் தொலைத்தவன் வருவான்.....

03 February 2012

வாங்க பழகலாம்.

 என்ன உறவுகளே.
 காதலர் தினம் வரப்போகின்றது.

 காதலன் /காதலிக்கு என்ன காதல் பரிசு கொடுக்கலாம் .என்ற யோசனையில் இருக்கின்றீர்களா?.

தங்கம் விற்கும் விலையில் இதயத்தைத் தவிர இனாமாக எதைக் கொடுப்பது என்று ஏகாந்தமாக கவலைப்படுகின்ற காதல் கிளிகளா?

  கண்கவரும் கல்லுவைத்த சேலையில் காதலி சினேஹாவைப் போல் சித்திரமாக இருப்பாள்!  ஆனால் பாக்கட்டில் இருப்பது  1000 ரூபாய் என்று என்னும் காதலனா நீங்கள் ?

அவருக்கு சாருக்ஹான் போல கோட் சூட் வாங்கிக் கொடுக்கனும் .பேசில் இருக்கும் கிரடிட் காட் எல்லை தாண்டிவிட்டதே  என்று வாடிப் போகும் காதலியா நீங்கள்.?

 எப்படிச் சொல்வது என் காதலை.
 அவரை /அவளை வீட்டுக்கு அழைத்து வந்து ஆத்தாவை மம்மி என்று சொல்ல வைக்கும் மாடன் காதலர்களா  நீங்கள் ? ரங்கநாதன் தெரு அட்சயபவனில்  ஒரு மாதுளை யூஸில் இரண்டு பேர்  இரண்டு மணித்தியாலத்தை  இறுக்கமாக செலவழிப்பவர்களா நீங்கள் ?

இப்படி எல்லாம் நீட்டி முழங்காமல் விடயத்திற்கு வா தனிமரம் என்று கல் எடுப்பது புரியுது !( ஹீ ஹீ வர வர பொறாமை உனக்கு ).

வாங்க பழகலாம் என்றால் .தனிமரம் முரண் பாட்டின் மூட்டை என்று முட்டை எறியும் உங்களுக்கு இன்று ஒரு இனிப்பூட்டி செய்து கை ஒடிக்கப் போறேன் . (இதை செய்து   செய்து என் கைதான் ஒடியுது).

வாங்க பழகலாம்.
.
இன்று நாங்கள் பார்ப்பது .
காதலியைக்  வீட்டுக்கு கூட்டியந்து தன் சமையல் திறமையைக் காட்டும் ஜோடிக்கிளிகள் சோதிக்கட்டும்   என்ற டாக்குமெண்டரி ..(ஏன் இந்தக் கொல வெறி)
  ஒரு சுவையூட்டியைச் செய்யும் வழிமுறை..

முதலில் வீட்டுக்கு வந்தவர்களை  வீட்டு வாசலில் வைத்துப் பேசிக் கொல்லாதீர்கள். அடி எடுத்து உள்ளே வாங்கோ என்று அன்பு மழையில் நனையுங்கள்.(அனுபவமா என்று கேட்காதீர்கள் )

 வீட்டில் இருக்கும் தொல்லை தரும் தொலைக்காட்சியைத் தீண்டாதீர்கள் (யோ அவனவன் தூங்கவே நேரம் போதல இதில தொல்லைக்காட்சியா)
..அன்பு  உறையும் அடுப்படிக்கு கூட்டிச் செல்லுங்கள் .
 (அதுதான் தொடர்களா காட்டுறாங்களே)

வந்தவுடன் மருமகளை/னை சமையல் அறையில் கருக  விட்டால் !என்று பேசுவோருக்கு சொல்லுங்கள். என்ற மருமகள் இலியானாவைப் போல சிம்புவைப்  போல இடுப்பு ஒடித்து ஆடவேண்டும் என்றால் இப்படியான உடல்பயிற்ச்சி தேவை என்று ஊர் வாயை மூடுங்கள் .

Moelleux chocolate.
.
 சாக்காலேட் கட்டி(கண்டோஸ்)- 250 கிராம்(chocolate) 
பட்டர்  (butter)  -     250 கிராம்
சீனி      --     200 கிராம்
கோதுமைமாவு -175 கிராம்
முட்டை-8
இனி செய்முறை  -1
-
முதலில் ஒரு நீர் கொதிக்கவைக்க  கூடிய ஒரு சட்டியில் .500 மில்லி லீட்டர் தண்ணீர் எடுங்கள். அதனை சூடு ஏற்றும்வண்ணம் காஸ் அடுப்பில்/விறகடுப்பில் வையுங்கள்.

இன்னொரு அகன்ற  வெள்ளிப் பாத்திரம் எடுங்கள் .பாத்திரம் எடுக்கும் போது பக்கத்தில் காதலியை முட்டிவிடாதீர்கள்  பாத்திரத்தாலேயே முதுகை நெளிக்கலாம். .

பாத்திரத்தினுள்  சாக்கலேல் கட்டியும்( கண்டோஸ்) ,பட்டரையும் சேர்த்து  .

ஆவி போகாத வண்ணம் மூடிய பின் அடுப்பில்  வைத்த சட்டியின் மீது  சூடேற்றும் வண்ணம் பாத்திரத்தை வையுங்கள்.

இனி ஒரு  15 நிமிடங்கள் கொதிக்கட்டும்.  .நான் பார்த்த பிகர் பாரு ஒரு சோனாக்கிரியுடன் திரியுது என்று என்னும் காதலிக்க மறுத்தவன் /வள் மனம் போல .(நன்றி சந்தானம்)


 செய்முறைப் படம் -1

 அதுவரை வீட்டில் இருக்கும்  நேரத்தில் உங்கள் எதிர்காலத்திட்டத்தைச் சொல்லுங்கள்..(பொருளாதாரம் வளருதாம்  மகிந்தர் சொல்லுறார்)

 இலியானவின் இடுப்பைப் போல உன் இடுப்பு என்று டாக்குத்தர் ரேஞ்சில் இம்சை பேசினான்/ள்  பூரிக்கட்டையால் புள்ளிக்கோலம் போட்டுவிடுவாள் புதுமைக் காதலியைப் புரிந்து கொள்ளுங்கள்

 இதுவரை உன்னை நேசிக்க செலவழித்த நேரங்களை எல்லாம் . இனி நீ  காதலைச் சொன்னதால் .

இனி மேல் வேலைக்கு ஒழுங்கா போகப் போறன் (இனி வலைபக்கம் லீவா தொல்லை தீர்ந்துச்சு)
.என் அடுத்த பயணம் நாடுகள் பார்கனும் நாம் ஜோடிப்புறாவாக ஊரைச் சுற்றுவோம் என்று விளக்கப்படுத்துங்கள்..


பிடித்த இசையை ரசித்து அதன்  இசையை தழுவி (காதலியை அல்ல) கவிதை வரிகளை  மீட்டிச் சொல்லுங்கள்.காதலையும் புரிந்து வாரிக் கொடுங்கள்   அன்பை மட்டும்.  

தங்கம் வாங்கித் தந்தாக் கள்வர்  பவுனைக் கொண்டு போகவும், கத்தியால் குத்துவதையும் பார்க்க என்னால் முடியாது அன்பே. !(எப்படி எல்லாம் யோசிக்கின்றாங்க)

என் செல்லத்திற்கு  நல்ல சாப்பாட்டுக்கடைக்கு நாலுவாரத்திற்கு ஒருக்கா கூட்டிக்கொண்டு போறன் ..

என்று ராஜபக்ச கூட்டணி 20 மாதம் பேசியது போல பேசுங்கள் .(.வீட்டுச் சாப்பாடு சரியில்லை என்பதை எப்படி உள்குத்து போடுறாங்கள்)

ஒன்றும் புரியாமல் முழிப்பாங்க உங்க காதலி நயந்தரா போல இவன்/ள் நல்லவனா கெட்டவனா?(.யாரப்பா தனிமரம் இப்படியா என்று திருப்பிக் கேட்பது .)


 மீண்டும் வாருங்கள் குசினிக்கு .இப்போது
சொக்கலேட் கட்டியும், பட்டரும் கரைந்து போய் இருக்கும் .

 படத்தில்  இருப்பது போல 2

சட்டியில் இருந்து இறக்குங்கள்  .

கையில் இருக்கும் அகப்பை/முட்டைக் கரண்டியால். நல்லாக கலக்குங்கள் தண்ணியாக வரும். (டாஸ்மார்க் அல்ல)

படம்  - 3
 .










அதன் பின் கோதுமை மாவையும், சினீயையும் கலக்குங்கள் ..மூன்றையும் சேர்த்து ஒரே பக்கத்திற்கு கலக்குங்கள் .பின் முட்டையை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக உடைத்து சாக்காலேட்  தண்ணி(முதலில் உடைத்துவைத்தால் நன்று) மீது  கலக்குங்கள் கொஞ்சத்தில் இறுக்கமாக வரும் பேசிப் பேசியே  கொன்ற காதலன் போல வேலை முடிந்தது. . 

பின்  அருகில் இருக்கும் அலுமினியக் கப்பினுல்  ஒரு கரண்டியால்  ஒவ்வொரு கப்பினுள் ஊற்றிவையுங்கள் .அதனை குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.
 படம் -4

விரும்பிய நேரத்தில் மின்சார வெதுப்பு/ அதிகூடிய 180 பாகையில்,
அல்லது விறகு வெதுப்பில் அதிகூடிய  180 வெப்பத்தில்

5 நிமிடங்கள் வேக வைத்தால் .

அழகிய சாக்காலேட் கேக் உங்கள் வசம் .

இவர் தான் அவர்

இனிக்க கொஞ்சம் வெனிலா ஐஸ்கிரிம் உடன் அருந்தினால் உங்கள் காதலி போல தித்திக்கும்.






செய்முறையில் பிழை எனின் சேதாரம் பொருளுக்கு மட்டும்மல்ல உங்க காதலுக்கும் தான்.    ஹீஹீ


  

01 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -3

மூத்த மாமா 1983 இன் முதற் பகுதியில்  ஊருக்குத் திரும்பி வந்தார்.

அந்த நேரத்தில்  தாத்தாவுடன் ,சின்ன  தாத்தாவும் தந்தைக்கு  உதவியாக கல்லாப் பெட்டியில் (காசுப்பெட்டி)  4 சின்ன மாமாவும் 5 சின்ன மாமாவும் இருந்தார்கள் .

. பதுளையில் 2 சின்னமாமா படித்ததும்  வாத்தியார்  வேலை  பார்த்ததும் அந்த நகரில் பிரபல்யமான கல்லூரியில் .(இந்தக்கல்லூரி  இரு மொழிக் கல்வி  போன பின்
 நாளில்  சிங்களம் மட்டும் என  முடிவானது( பிரிவினை விதைக்கப்பட்டது)  .


இன்றும் சகோதர மொழி நண்பர்கள் படிக்கின்றார்கள் அங்கு  . அருகில் பிரபல்யமான சினிமா தியேட்டர் இருக்கின்றது .ராகுலின் முகம் வெளிவரும் போது தியேட்டர் கனவிடயம் சொல்லும்))

மூத்தவன் வந்திட்டான் !

மணலை மீன்வாங்கியாருங்கோ மருமகனே என்று வேலைமுடித்து வந்த   ராகுலின் தந்தையை ஓட்டிவிட்டா பங்கஜம் பாட்டி.

 முற்றத்தில் நின்ற வெடக்கோழி சட்டிக்குள் போனது .

வேலியில் படர்ந்த குறிஞ்சாய் சுண்டல் ஆனது.

 அதுவரை அடுப்பிலே சுழலும் ராகுல் அம்மாவுக்கு விடுமுறை .

தன் மகனுக்கு தான் தான் சமைப்பன் என்று மணலை மீன் குழம்பு, மீன் பொரியல் , முட்டைப் பொரியல்    ,சூடமீன் சொதி .
 பத்தியத்திற்கு அரைப்பதைப்போல   அம்மியில் இஞ்சிச் சம்பல் அரைப்பதும்  என வேகமாக  சுழலும் பாட்டி.

  அத்தனையும்
விறகடுப்பில்  செய்து முடிக்கும் போது  புழுங்கல் சோறு வெந்துவிடும்.

  இதைப் பார்த்துக்கொண்டிருக்கும்   ஆத்தை( தாத்தாவின் தாய் ) பாக்குரலில் பாக்கு இடித்த வாறே.

 உந்த எடுப்பு எல்லாம்  எண்ணத்துக்கு  உனக்கடி?   இப்படி அவிச்சிக் கொட்டித்தான் அந்த பயல்கள் இரண்டும் சந்தி சிரிக்க வைத்து விட்டான்கள் .

எங்க பரம்பரையில் இப்படி ஒரு  மானத்தை  வாங்கிப் போனாங்களே! என்று பழைய கதையைக் கிளறியபோது.

 மூத்த மாமா முகத்தில் வெடிக்கும் எள்ளும் கடுகும் .

உங்க வார்த்தையைக் கேட்கமுடியாமல் தான் ஐயா ஊருக்கு வராமல் இருக்கின்றார்

. அவங்கள்  புரியாமல் இப்படிச் செய்த தற்கு எங்க அம்மா என்ன செய்யும் என்று பாட்டிக்கு ஆதரவாக மூத்தமகன் சண்முகம்  மாமா ஒரு புறம் சண்டை போட .

என்ற மோனுக்கு (தாத்தாவிற்கு) புள்ளையை வளக்கத்தெரியல .

அவன் இல்லாத வீட்டில் நான் இருக்கமாட்டன் .என்று சொல்லி .

பொல்லு ஊண்டிக்கொண்டு வேலிதாண்டிப் போய் சின்னத் தாத்தா குடியிருக்கும் நாற்சாரம் வீட்டு முன் விறாந்தையில் .

அடியேய் செல்லம்மா

அந்த ஓலைப் பாயை கொடுண்டுவாடி. உன்ர சகளி என்னை வீட்டை விட்டு ஓட்டிப் போட்டாள்.

  என்று ஒப்பாரி வைக்கும் ஆத்தை.

 இது 3 மாத்ததிற்கு  ஒரு முறை நடக்கும்.

 ஆத்தை  அங்கே போவதும் .பிறகு பாட்டி கோயில் திருவிழாவைச்  சாட்டி கூட்டிக்கொண்டு வந்து விடுவா  (தாத்தாவின்  தாய்) இப்படி ஒரு புறம்  நாடகம் நடிக்கும் ஆத்தை என்றால் !


பாட்டியின் பல்லவி இன்னொரு வகை. பொடியங்களை மயக்கிப் போட்டாளே .
படுபாவிகள் நாசமாகப் போவாள்கள் .என்று முற்றத்து மண் அள்ளி தூற்றிய போது .!

அப்பாவின் மடியில் இருந்து
அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல் .

.அத்தனையும் நடக்கும் போது  அந்த வீட்டில் ஒரே ஒப்பாரி. அதைக் கேட்டு அடுத்த வளவில் இருக்கும்  மூத்தமாமியின் தாய் முத்தாச்சி வேலிதாண்டி ஓடிவாந்தா !

மூத்தமாமியின் தாய்   ( தாத்தாவின் தங்கைகளில் மூத்தவர் )

 அந்தக் கிராமத்தில் மச்சாளைத் தான் மச்சான்கள் முடிப்பது  நடை முறை மாமன் மார்களும் தங்கள் வீட்டுக்கு  மருமகள் ஆக்குவது தன் தங்கையின் மகள்களை தான்.

 வெளியில் பலர்  சொல்லுவார்கள் சொத்து போய் விடும் என்றுதான் தீவான்கள் இப்படி  செய்கின்றார்கள் .என்று உண்மை அதுவல்ல .

உறவுகள் சூழ்ந்து இருக்கும் போது உதவி இருக்கும்., ஒட்டு இருக்கும், சண்டை போட்டாலும் நாலு சபையில் ஒன்றாக பந்தியில் இருப்பார்கள் என்று பின் நாளில் ராகுலின் அண்ணனுக்குப் புரிந்தது..


.ஆத்தை அடுத்த வீட்டுக்குப் போனதும்

வேலிதாண்டி ஓடிவாந்த  மூத்தமாமியின் தாய் ..

என்ன மருமகன் சண்முகம் பிரச்சனை.?

 ஒன்றும் இல்ல மாமி .

என்றுவிட்டு மாமா எழும்ப்பிப் போனார்.

 கோடியில் இருந்த சைக்கிளை எட்டி ஒரு தட்டுத் தட்டினார் .
வாடா மாப்பிள்ளை என்று  ராகுல் அண்ணன் யோகனை கூட்டிக் கொண்டு போனர் .

நாங்க பாக்கியம் பாட்டி வீட்ட போறம் .. (பாக்கியம் தாத்தாவின் பெரிய தாய் )

என்றதும் .

ஊர் சுற்றும் மருமகன் தந்தையின் மடியில் இருந்து இறங்கி    ஓடிப்போய் ஏறிக் கொண்டான்.

 .ரல்லி  சைக்கில் முன் பாரில் மாமாவுடன் போறது என்றால் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம் .

காற்றினைக் கிழித்துக் கொண்டு அவர் ஒட்டும்   வேகத்திற்கு  யோகனின் தந்தையும் சரி  கடைசி  9 மாமாவும் சரி ஈடு கொடுக்க மாட்டினம்.

  அதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் தாயின் சேலைத் தலைப்பில்  ஒளிந்து நின்ற ராகுல்.
   .
.என்ன மச்சாள் பேசாமல் இருக்கிறீங்க?   மருமகன்  ஊருக்கு வந்திருக்கும் போது  அவனுக்கு வாய்க்கு ருசியா என்ற மோள்  சமைப்பாள் தானே  ?
நீங்க ஏன் இங்க சாப்பாடு சமைக்கின்றீங்க ?
என்று மச்சாளான பாட்டி மீது கதை கொடுத்தா முத்தாச்சி!

அவன்  அங்க வாய்க்கு ருசியா சாப்பிட்டிருக்க மாட்டான்







 .என்ற மூத்தவனுக்கு இன்று நான் சமைக்கின்றன் .நாளை மருமகள் சமைக்கட்டும் என்று தன் சேலையில் மூக்கைச் சீறீய படி பங்கஜம்  பாட்டி கிணற்றடிக்குப்  போனா........ 


                     வருவான் முகம் தொலைத்தவன்......
 .