03 June 2011

இன்று ஒரு தகவல்!!

 எப்படி இருக்கனும் என்ற பெற்றவர்களின் ஆசைகள் பல .அதில் விலகிப் போகும் போது அவர்கள் செல்லமாகவும், சில நேரங்களில் காட்டமாகவும் திட்டும் வார்த்தைகள் பலதாக இருக்கும்!

 இப்படித்தாங்க வீட்டில் சினிமா பார்த்து கெட்டுப்போனவன் என்று திட்டுகிறார்கள் என்றால் ! நேற்று என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் கொஞ்சம் அதிகமாக காதால் இரத்தம் வரும் அளவுக்கு வடிவேலுவைப் போல் எகிறிக் குதித்தான்!
மனோவின் அருவாள் அருகில் இல்லை!பயபுள்ள தப்பித்தான்!

அவன் சொல்லிவிட்டுப் போன வேலையை நான் செய்யவில்லை அதுக்கு அவன் சொல்லியது உதவாக்கரை என்று. பின் வைரவரின் வாகனத்தையும் சேர்த்துச் சொன்னது சுட்டுப்போட்டுது மனசில்!

அப்பதாங்க நான் வடை அண்ணாவுடன் பாசம் பொழிந்து கொண்டிருந்தன்.  அவர் நம்ம தோஸ்த்து .இவனுக்கு என் வலையைப் பற்றித் தெரியாது!கொசுவலை தெரியும் அவனுக்கு google வலை தெரியாது.

 நானே எவ்வளவு கஸ்ரப்பட்டு ஒவ்வொருத்தராக நட்புக்கரம் தேடி வரவைக்கிறன் என்று புரியாமல் என்னை உதவாக்கரையாம்! இப்பதாங்க வீட்டைத்தாண்டி தெருவிற்கு வந்தால் இண்ட்லியில்,தமிழ்மணத்தில்,தமிழ் -10,  என பாசக்காரப்  உறவுகள் ஓட்டுப் போட்டு என்னையும் தூக்கிவிட்டுக் கொண்டு இருக்கும் நிலமை தெரியாமல் உதவாக்கரையாம்! 

இதுக்கு விளக்கம் கேட்டேன் நீ ஒன்றுக்கும் 
பயன்படாமல் இருப்பவன் என்று எகத்தாளமாக பதில் சொன்னான் .நானும் வானம்  படத்தில் நம்ம தம்பி சிம்பு சொல்லுவது போல் அடக்கடவுளே  என்று விட்டுவிட்டாலும் இதன் உண்மையான சான்று தேடினேன்!
 இந்தப் பெரிசுகள் திட்டும்போது வராத இரத்த அழுத்தம் .இப்ப எல்லாம் மூக்கு மேல  கோபம் வருகுது கோடைகால வெய்யில் தாங்கமுடியாமல்!

ஆத்தாடி இந்த பச்சப்புள்ள உதவாக்கரையா பதில் யாரு சொல்லுவா? 
நம்ம ராஜா  அப்படித்தாங்க நான் ராகதேவன் இசைஞானியை விளிப்பது ! எங்கே சொன்னார் விளக்கம் எனக் கேட்கும் நண்பர்களே!

ஆற்றுக்கோ,ஏரிக்கோ கரைகட்டும் போது பெருங்கற்களைக் கீழே போட்டு அதன் மேல் மண்ணைக் கொட்டி கரை எழுப்புவார்கள்.மழையாலோ,
வெள்ளத்தாலோ மண் அரிக்கப் பெற்று கற்களுக்கிடையே இடைவெளி தெரியும் படி ஆகிவிட்டால் அதன் வழியே பெரும்பகுதியான நீர் கசிந்து வெளியேறிவிடும். எந்த இலக்கை நோக்கி ஆறு ஓடுகின்றதோ ஆற்றின் முழுத் தண்ணீரும் அந்த இலக்கை நோக்கி ஓடுவதற்கு உதவாத கரையாக அது ஆகிவிடுவதால் அதன் பெயர் உதவாக்கரை.

மேலும் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு நீந்தியோ படகிலோ போய் இறங்கினால் இறங்கக் கூடிய கரை புதை சேறு இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். கரைக்கு அப்புறம் விலங்குகள் வாழும் காடாக இருக்கக் கூடாது. புதை சேறாக இருந்தால் புதைந்து விடுவோம்! விலங்குகள் இருக்கும் பகுதியில் இறங்கினால்  விலங்குகளுக்கு இரையாகிவிடுவோம் அப்படிப்பட்ட பகுதியில் இறங்கினால் அந்தக்கரை உதவா கரை ஆகிவிடுவதால் அதுவும் உதவாக்கரைதான்.

உதவாக்கரை என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது இலக்கணக் குறிப்பு. இது கரையைக் குறிக்கும் போது மட்டும்தான் !

மனிதரை குறிக்கும் போது இலக்கணக் குறிப்பு ஆகுபெயர் ஆகும்!

இப்படி இலக்கண விளக்கத்தை ராஜா கவிஞர் முத்துலிங்கத்திற்கு விளக்கியிருக்கிறார்( கொசுறுத்தகவல் கிழக்கே போகும் ரயில் படத்தில் மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ என்று ஜெயச்சந்திரன் பாடுவது  அவர்  எழுதியது)

இந்த விளக்கத்தை  இளையராஜாவின் படைப்புகள் என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்  கவிஞர் முத்துலிங்கம்.இன் நூலாசிரியர் பிரபல கவிஞர் ,முனைவர்  .கருணாநிதி . ஆய்வு செய்த நூலாகும்!
முடிந்தால்  நீங்களும் படியுங்கள் இசையானியின் இலக்கிய அறிவைத் தெரிந்து கொள்ள முடியும்!  நன்றி முகம் தெரியாத தமிழ் ஆசிரியருக்கு!

01 June 2011

ராகதேவனுக்கு ஒரு வாழ்த்து!!

  ஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவம் அதிகம்  ஆம் இன்று(2/6/43)இந்திய இசைமேதை என்று மட்டுமல்லாது உலகில் பீத்தேவனின் இசைக்கு அடுத்த இடம் எங்கள் ராகதேவன் இசையானிக்கு இன்று பிறந்த நாள்!

வானவில்லைப் பார்பது போல் ஒரு ரசிகனாக அவரை வியர்ந்து பார்க்கிரேன் பண்ணைபுரத்து ராசையா இளையராஜாவாக அன்னக்கிளி முதல் அடி  எடுத்து வந்து இன்று அழகர்சாமி குதிரை வரை என்னை தன் இசையால் ஒரு தந்தை போல் ,நண்பன் போல் ,குருவாக இருந்து என்னை ஆளுகின்றார். அவரை இன்நாளில் வாழ்த்தும் வயது எனக்கில்லை ஆதலால் ஒரு குருவைப் போல் வணங்குகின்றேன்!நீண்டகாலம் வாழ்ந்து இசைத்தொண்டு ஆற்றனும் என்று!

அவருக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இசையமைப் பாளர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் ஆனாலும் என் முதல் தெரிவு எப்போதும் அன்னை போன்ற ராஜாவின் இசைதான்.
"காதல் ஓவியம் ஒலிக்கும்" இக்கனங்களில் அவரின் குரல் ஊடாக நான் என் தொலைந்து போன அழகிய அமைதியான கிராமத்தின் வயல்களில் ரயர் சில்லுவண்டி ஓட்டும் ஒரு சிறுவனாக்  கரைந்து போகின்றேன்.

 அன்நாளில் இவரின் இசையை காற்றலையில் கொண்டு வந்தது இலங்கை ஒலிபரப்பின் மத்திய/சிற்றலை வரிசைகளும் ,திருச்சிறாப்பள்ளி வானொலியின் திரைகடல் ஆடிவரும் தென்றலுமே!இன்று பலதடங்கள் தாண்டி ராஜாவும் வந்துவிட்டார் நானும் புலம் பெயர்ந்து தடம் மாறிப் போனாலும் அவரின் இசையை கேட்கும் ரசனையை   மாற்ற முடியவில்லை என்னால்!

ராஜாவை இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி நல்ல பாடல் ஆசிரியர், பாடகர், எழுத்தாளர் என்று பல்கலைஞ்ஞர்  இவரின் பாட்டுத்திறமைக்கு உதாரணம் பல அதில் இதயக்கோயில் படத்தில் எழுதி இசையமைத்துப் பாடிய "இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்""""வரிகளின் ஊடே இரு அடிகள் ""நீயும் நானும் போவது காதல் என்ற பாதை சேரும் நேரம் ..வந்தது மீதித்தூரம் வரிகளில் கற்பனையின் உச்சம் ஆத்மராகம் ஒன்றில் ஆடும் உயிர்கள் இரண்டு என்ற வரிகளில் படத்தின் மையப்புள்ளியை சுட்டி அற்புதமான வார்த்தையை கோத்திருப் பார்.

அதிகமான பாடல் எழுதி மெட்டமைத்துப் பாடியவர் ராஜா ஒருவரே!ஆண்பாவத்தில் அவர் போட்ட காதல் கசக்குத்ய்யா பாடல் என்றும் நிலைத்து நிற்கும் கவிவரிகள் காதலர்களின் பிரிவில் இப்பாடல் என்றும் ஒலிக்கும்!

 ஆற்றுப்படுத்தும் வரிகள் என்று நண்பர் கானாபிரபா. சில நல்ல பாடல்களை  குறிப்பிட்டிருந்தார் அவற்றில் எனக்குப் பிடித்தது .பின்வரும் பாடல்"" பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி ""என்ற பாடல் எழுதி மெட்டுப் போட்டு பாடியிருந்தார்!

பலபாடல்களை ஒலி/ஒளியேற்ற போதிய கால நேரங்களை புலம் பெயர் தேசம் வழங்க மறுக்கிறது!

இவரின் கற்பனைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு நாடோத்தென்றல்   படத்தில் அவரின் கைவண்ணத்தில் எழுதிய பாடல் தான்" ஒருக்கனம் ஒருயுகமாக  .. ஏன் தோன்ற வேண்டுமோ என்ற பாடலின் காதலின்  தவிப்பை இவர் போல் வடம் பிடிக்க முடியுமா என பலதடவை ஜோசிப்பேன் தேர்ந்த வார்த்தைகள் அச்சரமாக வந்து போகும் " பூமிக்குள் வைரம் போல் நெஞ்சத்தில்  நீதனம்மா ! என்ற வரிகளை பின்னிரவுப் பொழுதில் கேட்டாள் இசையைத்தாண்டி அவரின் குரலில் வரும் பாவத்தை காதலில் சோகரசத்தை பிழிந்து கொடுத்திருப்பார்!துரதிஸ்டவசம் இப்பாடல் இறுவட்டில் மட்டுமே பதிவானது படத்தில் பாரதிராஜா சதிசெய்துவிட்டார் சேர்கவில்லை!

பிரபல்யமான நடிகர் எல்லாருக்கும் பின்னனிபாடியிருக்கிறார் இவரின் இசை தமிழ்.தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என்று பலமொழியில் இசைக்கின்றார்.இதுவரை 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்கிறது விக்மீடியா!

மேத்தா சொல்வதுபோல் பக்கம் பார்த்துப் பேசுகிறேனில் இந்திப் பாடல்களை உச்சரித்த வாய்கள் எல்லாம் மண்வாசனைப் பாடல்களை ஒயாமல் உச்சரித்து கிராமத்துக் காதலை பட்டிதொட்டியில் கொண்டு சேர்த்து ஹிந்தியின் ஆதிக்கத்தை ஒர் இரவில் யுத்தம் இன்றி இசையாள் தமிழ் பக்கம் தலையசைக்க வழி செய்தவர் ராஜா என்று!


இசைஞானம்,இலக்கிய ஞானம், கவிஞானம் அமையப்பெற்ற ஒரே இசையமைப்பாளர் ராஜாமட்டுமே என்று அறுதியிட்டு கூறுகிறார் கவிஞர் முத்துலிங்கம்!

இளையராஜா இசைமட்டும் அல்ல நல்ல கவிஞர்  தமிழ்த்திரையில்  வெண்பாக்கல் எழுத்தத் தெரிந்த  வித்தகர்! இலக்கியத்தில் இவரின் பால்நிலாப் பாதையில்
" என்னைப் பெற்ற போது ஈழந்த சுமையை-தாயே உன்னை இழந்த போது என்மீது ஏற்றிவைத்துச் சென்றாயோ?"என்று தாயின் அன்பை பாடுகிறார்!

என் நரம்பு வீனை, ஞானகங்கா,வழித்துனை, இளையராஜாவின் படைப்புக்கம்  என இதுவரை 8 நூல்கள் வெளியிட்டுள்ளார்.

இவரின் இன்னொரு முகம் மூர்க்காம்பிகையின் மீதான பக்தி அதனால்தான் ரமணமகரிஸின் போதனையை பின்பற்றி   ஆன்மீகத்தில் தன் புகழ் எதுவென்று தெரிந்தும் ஒரு ஞானி போல் பற்று இன்றிய அவரின் பார்வையை  என் நரம்பு வீனை என்ற வெண்பா நூலில்

""காற்றில் பிறக்கும் இசைபோல் எனதுள்ளில்
ஊற்றாய்ச் சுரந்திடும் உன்கருணைத் தேன்கண்டு போற்றுதலே பூண்டொழுகி நின்றேன்! பிறவிமலச்
சேற்றினும் செம்மலரே செப்பு! என்று தன்னடக்கம் காட்ட முடிகிறது!

இளையராஜாவின் மீது அதிகமான விமர்சனங்கள் உண்டு வைரமுத்துவின் மலர்கணைகள் வசைமொழியாக அன்நாட்களில் சில பத்திரிக்கைகள் களம் கொடுத்து தங்கள் தலித்விரோத போக்கை எள்ளி நகைத்தது .மீளமுடியாது என்றார்கள் காதலுக்கு மரியாதை மீண்டும் ஒரு முதல் மரியாதை போல் பட்டிதொட்டி எங்கும் வீறுகொண்ட யானை போல் எல்லாவற்றுக்கும் இசையாள் பதில் சொன்னார்!

நான் கடவுள் இசையில் சாயி +ஜெயமோகன்  மோதல்கள் ஊரறிந்தது!
காய்த்த மரம்கல்லடி படும் என்பதற்கு பல இடங்களில் ராகதேவன் மீது பொறாமை நெஞ்சங்கள்  தலைகனம் பொருந்தியவன் அனுசரிக்கத் தெரியாதவன் என்று தரம்தால்த்தியவர்களுக்கு  ஞானியின் மொனம்தான் பதிலாகியது அது சிம்பனியில் திருவாசகமாக உலகிற்கு கிடைத்தது!

 திரையில் ஒரு படத்தினை தன் பின்னனி இசையால் காவியாம் ஆக்கும் வித்தை தெரிந்தவர் .சிந்துபைரவி,முதல் மரியாதை, சலங்கை ஒலி,பிதாமகன், சேது.அழகி  என அடுக்கலாம் அணிச்சிறப்புக்கள்.

 விஜய் அண்டானி சொல்வது போல் இளையராஜா என்ற யானை     தின்று போட்ட சக்கையை வைத்துத்தான் நாம் இசைக்கிறோம் என்று வார இதழ் ஒன்றில் கூறியிருந்தார்!

 இளைஜராஜாவின் இலக்கியதை அழகாக கவிஞர்  கருனாநிதி இளையராஜாவின் படைப்புக்கள் என்ற நூழாக வெளியிட்டுள்ளார்!

 கம்பனின் புகழ் பாடும் கம்பவாதிரி ஜெயராஜ போல் பேசும் கலை தெரியாத   இந்த பாமர இசை ரசிகனும் ராகதேவன்  இசையை குருடன் தடவிப் பார்த்த யானையைப் போல் நானும் சிலதை அசைபோடுகிறேன்!
இன்று பிறந்த நாளை இசைக்குடும்பமாக கார்த்திக்ராஜா,யுவன் சங்கர்ராஜா,பவதாரினி  காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா என்று இசையாள் நிறைந்திருக்கிறது!