26 August 2011

காற்றின் மொழியே ..!

சில மொழி உச்சரிப்புக்கள் எவ்வளவு தூரத்திலும் காதில் விழுகின்ற போது ஒர் ஈர்ப்பு வருவது தவிர்க்க முடியாது !

அதுவும் தெரிந்த மொழியை பேசும் போது இன்னும் ஒரு சுகம் கூடவரும் .
அப்படித்தான் நானும் காற்றுவாங்கிக் கொண்டு செல்லும் போது நல்ல அழகு என சகோதர மொழி குரல் கேட்க நானும் திரும்பிப் பார்த்தேன் !

பீச்சுக்கு தாயகத்தில் இருந்து வந்திருந்த இரு சிங்களக் குடும்பத்தினர் கடல் அலையோடு விளையாடினார்கள். கம்பஹா மாவட்டத்தில் இருந்து அவர்களின் புதல்வி சென்னையில் நடக்கும் சிறுவர் விளையாட்டில் பங்கு பெற வந்திருந்தார்கள்

.மறுநாள் விளையாட்டு இன்று மாலையை சந்தோஸமாக கழிக்கவும்  குடும்பத்துடன் வந்திருந்தார் .மெரினாவிற்கு.

அவருடன் நானும் விடுப்புக்கு பேச்சுக் கொடுத்தேன்.

அண்ணா சுற்றுலா வந்தீர்களா சென்னைக்கு!?

மகளின் விளையாட்டைச் சாட்டி எல்லாரும் வந்தோம் !

பரஸ்பர அறிமுகத்தின் பின் எங்களின் உரையாடலை உங்களுக்காக.

சந்திரசிரி ஒரு சிறைச்சாலை கணக்காய்வாளர். யாழ் சிறை மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் கடமை புரிந்தவர். இப்போது அவிசாவளையில் கடமையாற்றுகின்றார் .

 நீங்கள் எங்கிருந்து வாரீர்கள். தம்பி?

நான் பிரென்ஸ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றன்.






சந்திரசிரி- இந்த புலம் பெயர் மக்கள் இன்னொரு யுத்தம் வரும் என்று நினைக்கிறார்கள் போல?

நேசன் - நிச்சயமாக இல்லை உங்களுக்கு சில தவறான எண்ணங்களை யாரோ திணிக்கிறார்கள்!

சந்திரசிரி- உண்மையில் எனக்கு இறுதியுத்தம் மனவேதனையைத் தருகின்றது .இதன் பிறகாவது நாம் ஒரே நாடு என்று வளர்ச்சிப்பாதையில் போகனும்  இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்க்ள்.?

நேசன் - உறவுகளின் பிரிவையும் சோகங்களையும் இழப்புக்களையும் மறக்க முடியுமா? இன்னும் நமக்கு விடிவு வரவில்லை .! இத்தனை துயரங்கள் சொத்து இழந்து ஒவ்வொரு குடும்பமும் பலதிக்கில் பிரிந்து வாழும் வேதனையை அனுபவித்தால் தான் புரியும் ஒரே நாடு என்ற கொள்கை வெறும் கோஸம் அல்ல நமக்கு ஏதாவது கிடைக்கனும் நிம்மதியாக வாழ.!

சந்திரசிரி-  இப்படியே அடிபடுவதுதான் தீர்வா தம்பி ?
நிச்சயமாக இல்லை.!







நீங்கள் நல்லா சிங்களம் பேசுகின்றீர்கள் ஏதாவது அரச உத்தியோகம் பார்த்தனீங்களோ?

என்னைப் பார்த்தா ரத்துரோசா கமல அத்தாராட்சியா பொய் சொல்ல?!புலி என்றே சந்தேகத்தில் பாதி படிப்பு முடிக்கல!

சந்திரசிரி- இப்ப நாடு அமைதியை நோக்கிப் போகின்றது எப்ப தாய்நாடு வரும் எண்ணம்?

எல்லாரும் அப்படித்தான் சொல்லிரீங்க! இன்னும் வெள்ளைவானும் ஊடக சுதந்திரமும் இல்லையே !
!நாட்டுக்கு வாரவங்க விமான நிலையத்திலே காணமல் போறாங்களே!


சந்திரசிரி  -வெளிநாட்டில் இருந்தாலும் நல்லா உள்ளூர் விடயங்களை அவதானிக்கிறீங்க போல சிவா!

ஒவ்வொரு நாட்டுக்காரனும் தன் நாட்டின் மீது ஒரு பாசமும் பற்றும் வைத்திருப்பார்கள் என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்தந்த நாட்டில் அவனும் வெளிநாட்டு வாசியே!

சந்திரசிரி - உண்மைதான் சிவா நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன் !அவுஸ்ரேலியாவில் வாழும் என் தம்பியும் உங்களைப் போல்தான் சொல்லுவான்!

சந்திரசிரி - சென்னை வரும் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது இங்கு இருக்கும் சிலர் காடைத்தனமாக  நடந்து கொள்வது  சரி என்று எண்ணுகின்றீர்களா தம்பி?

நிச்சயமாக கண்டிக்கணும். சாதாரன மக்கள் மீது செய்யும் வன்முறை கலாச்சாரம்  எந்த நாட்டில் என்றாலும்  எனக்கு உடன்பாடு கிடையாது  .நம்நாட்டிலும் ஜே.வி.பி யும் சிங்கள உறுமையையும் ஏன் குடுராஜாக்களும் சேர்ந்து  செய்கிறார்கள் அண்ணாவுக்குத் தெரியாதோ?


சந்திரசிரி- மிகவும் சூடாக இருக்கிறீங்க போல தம்பி! அரசியல் மீது வெறுப்போ?

அரசியல் மீது வெறுப்பு இல்லை. அரசியல் வாதிகளிலும் அரச அதிகாரிகள் மீதும் தான் கோபம் வருகின்றது அண்ணா! நம்நாட்டை இப்படி சீரலித்ததால் நாம் எத்தனை நாடுகளில் சீரலிகின்றோம்!

 சந்திரசிரி- உண்மைதான் சிவா!

 சந்திரசிரி- இப்போது ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கின்றது நீங்கள் என்ன வேலை செய்கின்றீர்கள்?

முன்னர் போல் இல்லை !வேலை தேடுவது மிகவும் சிரமம்! நம்மவர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள்!
நான் ஒரு சமையல் உதவியாளனாக இருக்கின்றேன்!

 சந்திரசிரி- நல்ல சமையல் செய்வீர்கள் போல மனைவிக்கு வேலைச் சிரமம் இல்லை என்கிறீர்கள்?

அப்படி எல்லாம் பெரிசாக சமைக்கமாட்டன் ஆனால் இதுவரை யாரும் என் சாப்பாட்டை சாப்பிட்டு மரணிக்கவில்லை?

இருவரும் கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தோம்!

நாட்டுக்கு  ஒரு நாள் கண்டிப்பா வருவன் உங்களை தேடி வந்து சந்திப்பன் !
சந்திரசிரி!! உங்களைச் சந்தித்தது மிகவும் சந்தோஸம்  அவரிடம் இருந்து விடை பெற்றேன் !

இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி  சிறிது தூரம் கடந்த பின் என்னிடம் சொன்னால் இப்படி அவருடன் கொழும்பில் கோல்பேஸ் கடற்கரையில் நின்று  பேசினீங்கள் என்றாள் நாலாவது மாடியில்  இருந்திருப்போம் இரண்டு பேருமாக  இல்லை என்றாள் வெள்ளைவான் வந்திருக்கும். வாயை வைத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே! பாருங்கள் நண்பர்களே சுதந்திரமாக பேசக்கூடமுடியுது இல்லையே நண்பர்களாக?
இது யாரின் பிழை?

காற்று வீசும் ...

24 August 2011

கடல் ஓரம் வாங்கிய காற்று! 

என் பாசக்கார பதிவுலக உறவுகளே சிறிய இடைவேளையின் பின் மீண்டும் தனிமரம் உங்களுடன் இணைகின்றது எல்லோரும் நலமா !?

 சிலரின் வலையை முடக்கிவிட்டார்களாம் என்று அவலக்குரல் கேட்டு ஓடிவந்தேன்.!

காற்றில் என் கீதம் தோழி ஒரு  அழகிய தேவதையை பெற்றெடுத்து அகிலவர்சினி என்று அழகிய நாமம் சூட்டியிருக்கிறார் .வாழ்த்துக்களும் நேசனின் ஆசிகளும் தேவதைக்கு.

  இனி உங்களுடன் என் விடுமுறையில் பார்த்து ரசித்தவையை பதிவிடுவதுடன் நண்பர்கள் வலையில் முடிந்தவரை பின்னூட்டத்துடன் சந்திப்பேன் நட்புடன்
       தனிமரம் நேசன்!
 இதோ புதிய பதிவு எல்லாரும் கொண்டாட

கடல் ஓரம் வாங்கிய காற்று!

 ..கடற்கரைக் கிராமத்தில் பிறந்த எனக்கு கடல்காற்று, சோகிபொறுக்கியது ,  கடலில் நீச்சல் அடித்த சுகமான
இளமைக்காலங்கள் என பலதும்  தொலைத்து  இப்போது புலம்பெயர் வாழ்வில் இயந்திரமாக ஓடுகின்றேன் .

பொருளாதார சுமைகள் மூச்சு முட்டினாலும். இரத்த அழுத்தம் ,

அதிகமானால் வேற இடத்தை மாற்றினால்.  கொஞ்சம் மனதிற்குப் புத்துணர்ச்சி வரும் .அதனால் பலகடல்களை நாடி ஒடிப்போய் காற்றுவாங்குவதும் கடலில் புரள்வதும் மனதிற்கு சாந்தியாகும் .

எதுவும் அருகில் இருக்கும் போது அதன் தாற்பரியம் புரிவதில்லை.

 நீண்ட தூரம் பிரிந்து வந்த பின்தான் இயற்கையின் கொடை தெரிகின்றது.
அடிக்கடி சென்னை போகும் என் பயணம் மெரினா கடற்கரையை பார்க்காமல் முடிவதில்லை.

கடற்கரையில் மாலையில் காலாறா நடப்பதும் சந்திரோயத்தை காண்பதும் சில பாடல்களுடன் மணலில் குழிதோண்டுவதும் மனதினை மீண்டும் இளமைக்கால்ங்களுக்கு இழுத்துச் செல்லும் ஒரு மார்க்கம்.


 இந்த முறை மனைவியுடன் கொஞ்சம் அதிகமாக கடலைப் பார்த்த வண்ணம் கடலை போட்டேன் .

எப்போதும் மெரினா பீச்ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாற்றத்தை எனக்குத் தந்து கொண்டிருக்கின்றது .

சுண்டல் விற்கும் சின்னப் பொடியன் .


தன் வாழ்வின் வெளிச்சம் தெரியாமல் ஊருக்கு வெளிச்சமான எதிர்காலத்தை துல்லியமாக சொல்வதாக சொல்லும் நரிக்குறவர் வழித்தோன்றல் ஜக்கம்மா சாஸ்த்திரம் .
நானும் பார்த்தேன் எனக்காக இல்லாட்டியும். ஒரு அன்புத்தாயை அலட்சியம் செய்ய மனசு வரவில்லை .

அதற்காக.

  ஆனாலும் அந்த தாயின் பில்டாப்பூ கொஞ்சம் ஓவர்தான் என் தலையில் ஐஸ் வைத்தா! தம்பி மகராஜான் ஒரு ஹோட்டலுக்கு முதலாளி ஜோகம் இருக்கு.

 என்று ஏற்கனவே சொந்த தொழில் செய்வது இல்லை என்று இருக்கும் எனக்கு இது தேவையா?

மனைவியைப் பார்க்கச் சொன்னேன் அவளோ தும்புத்தடி பிஞ்சு போய்விடும் என்றாள் .

ஆத்தா ஆளைவிடு என்று எஸ்கேப் ஆகி அடுத்த பக்கம் போனேன் என் பிரியமான பால் கோப்பிக்காரர் இருந்தார் .

கடல்கரைக்காற்றுக்கு இதமான சூடு வாங்கிக்கொண்டு நடந்தால் முன்னம் இதில் ஏறிய குதிரை அருகில் வந்தது ஒரு சுத்து சுத்த ஆசைதான் ஆத்துக்காரியை கேட்டேன் ஒரு ரவுண்டு போக!

 மொட்டையனுக்கு கொழுப்புக் கூடிப்போச்சு இன்னும் சின்னப்பிள்ளையோ?

 பிரான்ஸ்க்கு கைபேசி எடுக்கட்டா மாமிக்கு  என்று அம்மாவை ஞாபகம் ஊட்டினால். ஆத்தா!  வீட்டில் உதவாக்கரை இதுவேறா என்று என் ஆசைக்குப் போட்டேன் தடா சட்டம்,.

.அங்கிருந்து ஒரு சில நிமிட நடையில் கடல் அலைகளுக்கிடையில் இன்னும் ஒலிக்கின்றது.

 கடல்மீன்கள்  பாடல்  தாலாட்டுதே வானம் தல்லாடுதே மேகம்  அதையும் ரசித்து விட்டு நடந்தால் அருகில் என் செவியில் விழுந்த ஒரு சொல் திரும்பிப் பார்க்கின்றேன்!

.. தொடரும் காற்று