31 August 2011

உன்னை நினைந்து நினைந்து!

ஒவ்வொரு முறை சென்னை போகும் போதும் எப்படியாவது திருப்பதியானை தரிசிக்கனும் பெருமாளே பிறவிப்பயனில் உன்னைப் பார்த்தே என் கண்கள் பரவசப் பேருணர்வைப் பெறனும் என்று நீண்டநாள் கனவு .

ஏதாவது தடங்கள் வந்து பயணம் பாதியில் திரும்ப வேண்டிய நிலையில் முடியாமல் போன காரியம்.

 இந்தத் தடவை என் ஆசைக்கு பெருமாள் பக்தனின் குரலுக்கு கடைக்கண் பார்வை பார்த்து அருள் கொடுத்தார் .

திருவேங்கடாவா மாமலை வாழ்  திருப்பதியானை நானும் என் மனைவியுடன் சென்னையில் இருந்து தமிழ்
நாடு சுற்றுலா மையத்தின் பதிவு செய்யப்பட்ட பேரூந்தில் அதிகாலையில் பலருடன் சென்றோம்.

நண்பர் முன்பதிவை செய்துவிட்டு பற்றிச்சீட்டை கொடுக்கும் போது அதிகாலை 5.30 வாகனம்  நிறுத்தும் திருவல்லிக்கேணி  சாலையில்  காத்திருக்கவும் என்றுவிட்டுச் சென்றார்.

நாங்களும் புலம்பெயர விமான நிலையத்தில் நின்றதுபோல் அதிகாலை 5.15 போய்விட்டோம் பெருமாளை சேவிக்கனும் என்ற ஆவலில்.!

 கீழைத்தேசத்தில் நேரக்கடைப்பிடிப்பது என்பது அரசதலைவர் முதல் ஆடுத்த வீட்டு அன்னலட்சுமி வரை ஓட்டு வாக்கின மந்திரிபோல் நினைத்த நேரம் வருவார்கள்.

ஒரு ஊழியர் அதிகாலை 6மணிக்கு காரியாலயக்கதவு திறந்தார். நானும் போகும் பயணத்தை கூறியதும் இருங்கள்
வாகனம் வரும் உங்கள் முன்பதிவு சீட்டைக் காட்டுங்கள் என்றதும் நானும் கொடுத்தேன்.

 அவர் வாங்கி அதற்கு சுற்றுலாமையத்தின் சின்னம் பொறித்த பற்றிச்சீட்டையும் என் தகவல்களையும் பதிவு செய்துவிட்டு இன்னும் சில நிமிடங்களில் வாகனம் வரும் நீங்கள் காத்திருங்கள் என்றார்

.நானும் எத்தனை காத்திருப்பைப் பார்த்தவன் .என் மனைவி பாவம் இரவும் பயணப்பைகளை  சிரமங்களுடன் முன் ஆயத்தம் செய்தால் துணைவியார் கஸ்தூரிபாய் போல் பின் தூங்கி முன் எழும்புபவள் .

நான் இன்னும் அதிகம் நேரத்திற்கு எழுப்பிவிட்டேன்.நீங்கள் ஒரு அவசரக்குடுகை இன்னும் கொஞ்சம் நித்திரைகொண்டு இருக்கலாம் என்று  காதோரம்  கடிந்துகொண்டால் .

பெருமாளே இது என்ன திருப்பதியான் மயக்கம் இப்படி யா?

 கொஞ்சம் பொறு பெருமாள் பெருமாட்டி உன்னுடன் தரிசனம் பெறனும் என்றுதான் சித்தம் அதனால்தான் இப்படி நடக்குது செல்லம் என்று சென்னை வெயிலுக்கு குற்றால அருவியை உச்சந்தலையில் ஊற்ற எங்களுக்கான வாகனம் தயாராகியது.


எங்களுடன் சிலர் ஏறிக்கொள்ள எங்கள் வாகனம் மிகவும்  உடரட்டமெனிக்கேயைவிட மெதுவாக சென்னையில் இருந்து திருப்பதியை நோக்கிய பயணம் 5 மணித்தியாலம் பிடித்தது .

வழமையாக 3 .30  மணித்தியாலம் போகும் பயணம்.எங்களின் வாகன சாரதியின் அக்கறையான வாகனம் செலுத்தல் !

 திருப்பதி
மலையடிவாரத்தில் நாங்கள் சென்ற வாகனம் நிறத்தப்பட்டது .

மலையடிவாரத்தில் இருந்து ஆந்திராப் பிரதேசத்தின் போக்குவரத்து கழகத்தின் பஸ் பக்தர்களை மேலே கொண்டு செல்கின்றது. அவர்களின் பஸ் மட்டுமே சேவைபுரிய முடியுமாம் !

தனியார் யாரவது போவது என்றாள் கார் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.பார ஊர்திகள் அனுமதியில்லை.

மலையடிவாரத்தில் இதனை ஆயிரம் பக்தர்கள் வருகின்றார்கள் இவ்வளவு கோடியில் பணம் புரலும் இடத்தில் போதியளவு சுகாதார வசதியில்லை கழிப்பிடவசதி செய்ய ஏனோ யாருக்கும் மனசு இல்லை!

 துர்நாற்றம் கூவத்தை விட குமட்டுகின்றது.

 மேலே போய் மீண்டும் கீழே வரக்கட்டணம் 34 இந்தியன் ரூபாய்.
மலையடிவாரத்திற்கும் கோயிலுக்கும் இடையில் வாகனம் ஓட்டுவதற்கு உண்மையில் தனித்துவம் தேவை .

ஒவ்வொரு வளைவிலும் அடுத்தவர் மீது செல்லமான சாய்வுடன் கூடிய இடி கொடுக்க வேண்டும். இது எனக்கு முன்ன மலைநாட்டுப் பயணத்தினை ஞாபகம்  ஓடியதும் மீண்டும் தாயகத்தின் சோதனைச்சாவடியை ஞாபகப்படுத்தும் திருப்பதி காவல்துறையினர் சகல உடமையையும் கதிர் இயக்கச் சேதனைக்கு உட்படுத்தியும் ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒரு புறம் உடல் சோதனைக்கு உட்படுத்திய பின் மீண்டும் வாகனம் சுமந்து செல்கின்றது.


 இயற்கை எழில் மனதில் பெருமாளை நினைத்து ஆண்டாள் பாடியபாசுரங்களையும் பெரியாழ்வார் முதல் குலசேகர ஆழ்வார்கள் பாடல்கள் பக்தியின் பெருமையை மீட்ட விரைவான ஒரு மணித்தியாலத்தில் திருப்பதியானை தர்சிக்கும் நுழைவாயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.

 இவர் உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர் நாமாக்கல் மாவட்டம் இவர் பூர்வீகம் தொடர்ந்து பக்தர்களை அழைத்துவருவதால் பலரை தெரிந்து வைத்திருக்கின்றார் .

மனைவி தடுத்தும் நாந்தான் வீம்புக்கு புகைப்படக்கருவியையும் எனது கைபேசியையும் கொண்டு வந்திருந்தேன் காட்சியை பதிவு செய்யலாம் என்று சில இடங்களில் புனிதம் பேணப்படுவதை நானும் வழிமொழிகின்றேன் .

போய்ப்பார்ப்பதற்கும் நாம் புகைப்படங்களாக  பிரதி செய்து மற்றவர்களுக்கு காட்டுவதற்கும் இடையில் எப்போதும் உணர்வுகள் வேறுபடுவதைக் காணமுடியும்.

முதலில் எங்களை அழைத்துவந்தவர் நமக்கு ஒதுக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாமையத்தின் மடத்திற்கு அழைத்துச் சென்று உடைமாற்றவும் காலைக்கடனை முடிக்கவும் சில நிமிடங்கள் கொடுத்தார் பின் எல்லாரிடமும் கடவுச்சீட்டு , புகைப்படக்கருவி,  எல்லாவற்றையும் தரும்படி  கூறினார்
.  கோயிலுக்குள் புகைப்படக்கருவி,  தொலைபேசி,பாடல்கேட்கும் கருவிகள் அனுமதியில்லை .

எங்கள் பொருட்களை இவர் பாதுகாத்தார்.

முடிகாணிக்கை செய்வதற்கு சங்கக்கடையில் சவற்காரம் வாங்க நின்றதைவிட அதிகமான கும்பல் .

அதுவும் வெளிநாட்டவர் என்றாள் கட்டணம் இவர்கள் சொல்வதை வைக்க வேண்டும்.

 தெரிந்தவர்கள் எனில் முன்னூரிமை தலையில் தண்ணீர் தெளித்த பின் ஒரே இழுவை திருப்பதியானுக்கு கோவிந்தா !

அருகில் குளியல் அறை உண்டு விரைவாக நீராடிய பின் தருசனம் காண பலர் முண்டியடிக்கின்றனர் .

கட்டணம் இல்லாத நுழைவாயில் 50 ரூபா கட்டணம் சிறப்புத் தருசனம்,300ருபாய் கட்டணம்   சிறப்புத்தருசனம் என மூன்று நுழைவாயில் பெருமாளை சேவிக்க எங்களுக்கு விரைவான தருசனம் காணபதற்கு 300 ரூபாய் கட்டணத்தில் உள்நுழைந்தால் பக்தர்கள் கூட்டம் பொங்குதமிழுக்கு யாழ்லில் கூடியதைவிட அதிகம் .

இத்தனை கோடி பக்தர்கள் படை எடுப்பதன் மகிமை  இன்னும் ஆன்மீகம் தழைத்தோங்கு து .என்பதா எள்ளுப் போட்டால் எண்ணையாகும் வண்ணம் ஊர்கின்ற பக்தர்கள்.

 5 மணித்தியாலம் காத்திருந்தோம் !

நமோ வெங்கடேசா நமோ சினிவாசா !உன்னை நினைந்து நினைந்து மனம். உருகி உருகி தினம்  நெய்யாய் உருகுதய்யா !
உன் அருகில் வரத்துடித்து கண்கள் கண்ணீர் சிந்துதய்யா !
பட்டுப் பீதாம்பரம்!
  பெருமாளின் தங்க கலசம் கண்டு! கோவிந்தன் தருசனம் கண்டோம்!

வாழ்வில் இப்பேறு மீண்டும் வரனும் என்ற ஆசையுடன் திருப்பதியானின் துளசித் தீர்த்தம் வேண்டிக் குடித்தோம் பெருமாள் பிரசாதம் கற்கண்டும் லட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தால்.

 புகைப்படப்பிடிப்பாளர்கள் ஆலயத் தோற்றத்தின் முகப்பு  அழகு தெரியும் வண்ணம் விரும்பிய படி புகைப்படம் எடுத்து சில நிமிடங்களில் பிரதியை கையில் தருகின்றார்கள்.

 ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கடலைக்கடை முதல் ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றது.

 ஞாபகப் பொருட்கள் ஏதாவது   விரும்பி வேண்டலாம்.

 மீண்டும் ஆந்திரா போக்குவரத்து வாகனத்தில் மறு பாதையால் கீழே வந்தோம் அங்கிருந்து வெளியில் வந்தால் எமக்கான சிற்றுண்டி தயாராக இருந்தது.

 அதை முடித்துக் கொண்டு வரும் வழியில் தாயார் அலமேலு (பத்மவாதி)அம்மன் ஆலயத்தையும் தருசித்துவிட்டு அங்கு குங்குமம் மற்றும் லட்டும் வாங்கிய பின் நமது பயணம் இனிதே சென்னையை நோக்கி திரும்பியது. 



28 August 2011

சென்னையில் ஒரு சந்திப்பூ(காதில்)

கடந்த வாரம் திடீர் பயணமாக சென்னை வந்த மூத்த பதிவாளர் நண்பன் மைந்தன் சிவாவை மெரினாவில் நேரடியாக சந்தித்தேன். !
அவரை  நலம் விசாரிப்புடன். நாம் இருவரும் மெரினாவில்
கும்மியடித்ததை
நண்பர்களுடன் நம் உரையாடலை பகிர்ந்து கொள்வதில் தனிமரம் மகிழ்ச்சியடைகின்றது.

மைந்தன் -ஹலோ நேசன் நீங்களா?
வாங்க பாஸ் நலமா சிவா!
என்ன நண்பா திடீர் விசிட் ஏதாவது விசேஸமோ?

மைந்தன் -அச்சுவலி ஐம் வெரி இம்போட்டன் மீட்டிங்!

ஐயோ பாஸ் உங்களுக்கு அச்சுவேலியில் நண்பி இருப்பது எனக்குத் தெரியும்! உந்த இங்கிலீஸ் எனக்கு கொஞ்சம் அலர்ஜிக் தம்பி .
நான் உங்க அளவுக்குப் படிக்க வில்லை தமிழில் பேசலாமே!?

மைந்தன் -நிச்சயமாக பேசலாம். இப்ப கொழும்பில் இப்படி இரண்டையும் கலந்து பேசினால்தான் மதிப்பினம் தெரியுமா!?

ஓம் சிவா பலர் சொல்லக் கேள்வி இங்கமட்டும் என்ன சென்னையிலும்  அப்படித்தான்!
வேற சொல்லுங்க சிவா என்ன குடிப்பம் ?
மைந்தன் -நான் குடிப்பதில்லை நேசன் தெரியாதோ ?

நீங்கள் தப்பா புரிஞ்சிட்டீங்க பாஸ் .நான் பால்கோப்பியா? டீ யா ?என்று கேட்டன்!

மைந்தன் -ஒ ஐ சீ! நான் நீங்கள் சகோதர மொழி நண்பர்களுடன் பழகியதால் மெண்டிஸ் ,ஸ்டவுட், லயன் லாகர் என்று நினைச்சன்!

மைந்தன் -நேசன் எனக்கு ஒரு ஐஸ்சொக் சொல்லுங்க

இதோ நண்பா இப்பவே வருகின்றது ?

மைந்தன் -நன்றி நண்பா!

மைந்தன் - யூனோ இந்த ஹன்சிஹாவை டாவடிக்க வெளிக்கிட்ட பின்பு தான் இந்த ஐஸ்சொக் சாப்பிடும் பழக்கம் !

ஏன்? முதலில் ஐஸ்கோனோ குடித்தனீங்க. இல்லை குச்சி சூப்பினதோ?

மைந்தன் -நேசன் மிகவும் கடுப்பூ ஏத்தா தீங்கள் உங்க மேல சகோதரமொழி,இலங்கை வானொலி , என மற்றவங்கள் . கடுப்பா இருப்பது தெரியுமா?!

ஒம் சிவா நல்லாத் தெரியும் !அதுக்கு விரைவில் விளக்கமா பதில் தாரன் .அவங்கள் யார் என்பதை நானும் நேரம் இருக்கும் போதெல்லாம் ஆராய்கின்றேன் ஆனால் முடியல பாஸ்!

 -சொல்லுங்க பாஸ் பதிவுலகில் புகழ்பெற ஏதும் வழியிருக்கா?

மைந்தன் -நேசன் தலைப்பை கவர்ச்சியா வையுங்கள் அதிகமானவர்கள் படிப்பார்கள்!

பாஸ் உங்க இலட்சியம்?

மைந்தன் -அப்படி எல்லாம் பெருசா ஒன்னுமில்ல!

ஏதோ வாழ்க்கைபோனால் சரி!

வெளிநாடு போகும் உத்தேசம் இல்லையா?

மைந்தன் -நமக்கு எல்லாம் 8 மணிக்கு நித்தா வந்திடும்.
  உங்களை மாதிரி சாமப்பேய் கிடையாது!
அப்ப நிரூபன் சாமப்பேயா?

மைந்தன் -ஏன் நேசன் அவர் என் பாஸ்  அவரின் நித்திரை முழிப்புக்கு அயிரம் இருக்கும்! நான் சின்னப்பொடியன் ஹீ ஹீ

உங்கட வெட்டிச் சங்கத்தில்  தமிழக காங்கிராஸ் காரியாலயத்தில் கோஸ்டி மோதலில் வேட்டி கிழிப்பதைப் போல உங்க வேட்டியும் கிழித்து விட்டார்களாமே!?
மைந்தன் - இதுவேற தெரியுமா உங்களுக்கு! ?

பாவிங்களா  அந்த தலைவரை விடமாட்டன் மோதி விளையாட்டுத்தான்!

 நீங்களும் தலைவர் ஆகனும் என்றுதான் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தீர்களாமே!?

மைந்தன் -இதெல்லாம் அவரின் கட்டுக்கதை!

சங்கத்தில் இன்னும் உறுப்பினாரா?

மைந்தன் -இன்னும் உருப்பினர்தான் நேசன்!

நீங்க சங்கத்தில் இருக்கும் போது ஒரு பதிவு போட்டீங்க !இப்ப உங்க அடிப்படை உறுப்பினர், செயல்குழு உறுப்பினர் பதிவை விட்டு தூக்கிவிட்டாங்கலே!?

மைந்தன் -நானாத்தான் விலகுவதாக ராஜனாமாக் கடிதம் கொடுத்தன். கட்சியின் டெல்லி தலைமை இன்னும் என்  ராஜனாமாவை ஏற்க வில்லை இப்படி இருக்கும் போது தலைவர் தன் இஸ்டத்திற்கு ஆடலாமா?

உங்களுக்கும் தலைவருக்கும் ஆரம்பத்தில் இருந்து கலைஞர் அன்பழகன் போல்தானே நட்பு இருந்துச்சு?

மைந்தன் -ஒ அதுவா தலைவர் நல்லா இருந்தார் இடையில் மகளீர் அணித்தலைவி  தன் வலையில் விழ்த்தியதில் நமக்குள் கருத்துவேறுபாடு!

ஓ அவாதான் தப்சியோ?

மைந்தன் -யோ நீ யாரோடு யாரை ஒப்பீடு செய்யிற !

கூல் பாஸ்! இது மொக்கையான கேள்வி!
மைந்தன் -என்னப்பார்த்தா மொக்கையான பதிவு போடும் ஆளாத் தெரியுதோ!?

பாஸ்  உங்க  கூழ் என்பது நல்ல வெட்டிரும்பு தெரியுமோ? நல்ல மெண்டிஸ்  போத்தல் , ரைஜின் , லயன் ஸ்டவுட்!
உங்க தலைவர் 2 போத்தல் மிக்சிங் இல்லாமல் முடிப்பாராமே நிஜமா?

மைந்தன் -யோ இது பப்ளிக்கில் பேசுற விடயமா? அப்பா இதைக் கேட்டா  சங்கத்தையே கலைத்திடுவார்?!

அப்படியா! நீங்க அப்பா பிள்ளையா ?
அப்பா சொன்னா அரசில்ல இறங்குவீங்க ,புதுப்படத்தில் நடிப்பீங்க ஒரே உடுப்பை பலகாட்சியில் போடமாட்டீங்க கேட்டா இமெச்சு இதிலும் பார்க்க !, பஞ்சு டயலக் பேசாமல் சமத்தா நடிக்கலாமே!

மைந்தன் -யோ நீ என்னையா உள்குத்துக் குத்துராய்!

நண்பா  யூனோ திஸ் இஸ் பனியா?

மைந்தன் -பாஸ் நீங்க டமிலே பேசுங்க!

நேசன் - மைந்தன் நீங்கள் வெளியீடு செய்ய இருக்கும் "ஹான்சிஹாவுடன் காதலில் ஒரு கணக்காளர் "என்ற நாவல் பற்றி சொல்லுங்கள்!

மைந்தன் - இதுகூடத்தெரியுமா? சரி அதில் ஹான்சிஹாவுடன் செய்த சில்மிசங்கள் காதல் ரசனையுடன் இதுவரை வெளியாகாத அரிய புகைப்படங்கள் வித்தியாசமான மொழிநடையில் ஒரு நாவல் காவியமாக வெளிவரும்!

இதை ஓட்டை வடையின் தலைமையில்  நாஞ்சில் மனோ வெளியீடு செய்ய விக்கியண்ணா பெற்றுக்கொள்வதாக அறிந்தேன் உண்மையா?

  மைந்தன்  - ஆம் அதுமட்டுமல்ல



ஓரே நேரத்தில் இந்த நாவல் இரு இடங்களில் வெளியீடு செய்யும் முயற்ச்சியில் இருக்கின்றேன் !

நேசன் -
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நண்பா!

  மைந்தன் -ஆம் முதல் முறையாக  வரலாற்றில் ஒரு நாவல் இரு தேசங்களில் மிகுந்த பணச் செலவு செய்து வெளியிட  இருக்கின்றேன் .

பாரிஸ் தேசத்தில் என் நாவல் காட்டான் தலைமையில் துஷ்யந்தன் வெளியீடு செய்ய  நிகழ்வுகள் கந்தசாமி பெற்றுக் கொள்வார் .அதற்காக கந்தசாமி விரைவில் பாரிஸ் போக இருக்கின்றார்!

இதன் வெளியீட்டு  உரைகளை யார் யார் செய்கின்றார் சொல்ல முடியுமா!

அரபுலகத்தில் நடப்பதை  சி.பி செந்தில் குமார் அவர்களும் பாரிஸ் தேசத்தில் நடப்பதை நிரூபனும் செய்கின்றார்கள்!

உங்கள் நாவல் வெற்றிவாகை சூடி நோபல் பரிசு பெற என் வாழ்த்துக்கள் நண்பா!

நன்றி நேசன் இது இரகசியமாக இருக்கட்டும் யாராவது பளாக்கில் திருட்டுத்தனமா வலையேற்றி என் கனவை தளபதியின் வேலாயுதம் படம் என்று விற்றுவிடுவார்கள்!



முடிவாச் சொல்லுங்க! உங்க எதிர்காலத்திட்டம் என்ன ?

அரசியலில் யாருடன் கூட்டு? உங்க தலைவரின்  மெளனம்  இதை எல்லாம் அடுத்த தலைவராக வரப் போகும் மைந்தன் மனதில் என்ன இருக்கு ?

 முதலில் தலைவருக்கு ஒரு விடிவைக்காட்டுங்கள். பாவம்  அவரும் சோகத்தில் இருக்கிறார்!?

மைந்தன் -அதுக்காகத்தான் தலைவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன் !இதைப்புரிஞ்சுக்காமல் நான் சதி செய்வதாக மன்ற உறுப்பினர்களிடையே என்னைப்பற்றி அவதூறு சொல்லி என் வேட்டியை உருவ வெச்சு (கிழித்து) கோவணத்தோட காலிமுகத்திடலில் ஓடவிட்டாங்க.
 நல்ல காலம் கார்த்திகா பார்க்கல !

உங்க மீது தலைவரின் சின்ன வீட்டை  ஹான்சிஹா மாதிரி இருக்கிறீங்க என்று ஜொல்லுவிட்டதால்தான் சங்கத்தில் உங்கமீது இத்தனை அன்புச் செதுக்கல் என்று இன்னொரு நண்பர் எனக்கு சொன்னார் சிவா?

மைந்தன் - யோ நீ ஒரு திட்டத்தோடுதான் சங்கத்தில் லாபி செய்கிறாய் இப்பவே நான் யார் என்று உனக்கு காட்டுகின்றேன் பாரு நேசன்!

கணக்கியல் வேலைக்கும் இப்போது புதிதாய் நுழைந்திருக்கும் வானொலித் தொகுப்பாளர் வேலைக்கும் இடையில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள் சிவா?

மைந்தன் - கணக்கிற்கு முடியை புடுங்கனும் வானொலியில் மூளையை புடுங்கனும் ஹீ ஹீ!

உங்கள் வலையை ஏன் முடக்கினார்கள் பாஸ்?

மைந்தன் - ஒன்னுமில்ல நேசன் தொடர்ந்து கிரிக்கெட்டும் ,விஜய் பதிவும் போட்டதால் யாரோ சில கசுமாலங்கள் என்னை கடுப்பேத்துறாங்கள்!

ஹான்சிஹாவுடன் எப்போது கலியாணம் பாஸ் ? அவங்களுக்கு சமைத்துப்போட  ரெடியா  சகோ?

மைந்தன் அடிக்க வர நேசன் ஓடுகின்றார் மெரினாவின் கடற்கரை ஓரம் !








 ?