04 September 2011

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!!

இந்த கோடைகால விடுமுறையை கணனியிலும் பல உறவுகளுடன் உள்நாட்டிலும் சுற்றுலாவுக்கு  வெளிநாட்டுப் பயணங்களும் போய் வந்து தம் இனிமையான விடுமுறை அனுபவங்களை தம் நண்பர்கள் நண்பிகளுக்கு விபரிக்கும்இனிய தொடக்க நாள் நாளை!

புதிய வகுப்பில் ,புதிய முகம்கள் ,சில வந்து சேருவோரும்,  ஏற்கனவே படிப்பைத் தொடர்ந்து விட்டு சிலகாலம் நிறுத்தி தொழில் புரிந்த உயர்கல்வி மாணவர்கள் மாணவிகள் மீண்டும் படிப்பில் உள்நுழைவதும் இக்காலத்தில்தான் .

பிரென்ஸ் கல்வியில் பல நல்ல நடை முறைகள் உண்டு.

பிரான்சில் கல்வியானது ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி  என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கல்வி நான்கு ஆண்டுகள் பாலர் கல்வியை உள்ளடக்கியதுடன் மேலும் cp- CE-1. ,CE2 CM1 ,CM2 என ஐந்து வருடங்களையும் கொண்டிருக்கின்றது .

பாலர் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டதல்ல .

CP தொடக்கம் CM 2 வரையிலான 5 வருடங்கள் ஆரம்பக்கல்வியில் கட்டாயப்படுத்தப்பட்ட படிநிலைகள் ஆகும்.

இதன் பின்னர் இடைநிலைக்கல்வி கல்லூரியில்((college) 6e, 5e, 4e, 3e வரை நான்கு வருடங்கள் .தொடரப்படவேண்டும்  .

இங்கு 6e  என்பது தாயகத்தின் 6 வகுப்பை ஒத்ததாகும்.

 பிரான்சிலும் தாயகத்திலும்(இலங்கை) வித்தியாலயம் அல்லது கல்லூரியில்  ஆரம்பிக்கின்ற முதலாவது ஆண்டாகும்.

இலங்கையில் 12 ம் ஆண்டின் பின் கா. பொ. த.(உயர்தரம் ) எடுப்பது போல் பிரான்ஸ்சிலும்  பாலர் வகுப்பு தவிர்த்த 12 ஆண்டின் பின்னர் பல்கலைக்கழகங்கள்  உட்பட்ட உயர்நிலைக்கல்விக்குச்  செல்கின்ற முறை இலங்கையை ஒத்ததாக இருப்பதை அவதானிக்க முடியும்!

ஆனால் பெயர் மாறுபடுவதை கானமுடியும்   கல்லூரியில் 6ம் வகுப்பில் ஆரம்பகால 4 வருடங்கள் படித்த பின்னர் BREVET என்ற பரீட்சை (இலங்கையில் 9 வகுப்பை ஒத்தது) கல்வித்திணைக்களங்களில் பிரென்ஸ் மொழி,கணிதம்,சரித்திரம், புவியியல், என நான்கு பாடங்கள் பொதுப்பரீட்சை மூலம் நடத்தப்படுகின்றது.

இப்பரீட்சைக்கு தோற்றுவதற்கு B2I (informatique) பாடம் தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது.  6e.5e 4e 3e ஆண்டுகள் முடித்த பின்னர்  மாணவர்கள் இரண்டு பெரும் பிரிவுக்கு பிரிந்து செல்கின்றனர்.

 ஒரு பகுதியினர் தொழில்கல்விக்கும் மற்றையவர்கள் உயர்நிலைக்கல்விக்கும் தயார் நிலைப்படுத்து.(College)  Lycee இல் 3 வருடங்களுமாக Ecole maternell இல் 4 வருடங்கள் நீங்களாக 12 ஆண்டுகள் கல்வியைப் பெறுகின்றனர்.

 12 ஆண்டு இறுதியில் Baccalaureat  பரீட்சையில் சித்தியடைபவர்கள் .

பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு  பட்டதாரிகளாக பொறியியலாளர்களாக, வைத்தியக்கலாநிதிகளாக, கணக்காய்வாளர்களாக,  நிர்வாகிகளாக தம் மேற்படிப்பை  தொடர்கின்றனர்.

பெரும்பகுதி மட்டுப்படுத்தப்படாமல் பிரான்ஸில் உயர்கல்வியை தொடர்வதற்கு பல்வேறுபட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன்.

பல்கலைக் கழகத்துடன் Grandes Ecoles  என்ற உயர் பள்ளிகளும் இரண்டு ஆண்டுகளில் போட்டிப் பரீட்சைக்கு உள்ளாகின்ற Classe Preparatoires  போன்ற வழிகளும் உள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ENA-(Ecole National Administratin) Polytechnique  போன்ற உயர் பெறுபேறுகளுடன் செல்கின்ற கல்வி நிறுவனங்களும் பிரான்ஸ்சில் சர்வதேச புகழ்வாய்ந்த கல்வி நிறுவனம்.

 இங்கு மட்டும்தான் ஆடை அணிதல் கட்டுப்பாடும் உள்ளது .பல்வேறு நாட்டவர்கள் கல்வி கற்கின்றனர் . அரசியல் தலையீடு இங்கு இல்லை(.பிரென்ஸ் தேசத்தில் பாடசாலைக்கு ஆடை அணிவதில் கட்டுப்பாடு இல்லை சுதந்திரமாக  விரும்பிய ஆடை அணியமுடியும்).


பிரென்சு மொழியில் வரும் குறியீடுகளை இணைக்க முடியவில்லை பதிவுலக ஆசான்களே மன்னியுங்கள் !

இந்த பதிவு எழுதுவதற்கு தூண்டிவிட்டவர் சகபதிவாளர் காட்டான்  அவருக்கு நன்றி!



 கீழ்வரும் பாடலில் ஒரு வரி வரும் நீ படித்த பள்ளி ..

இந்தப் பாடசாலை வாழ்க்கை பற்றி தனிப்பதிவு போடாலாம் ! நீ படித்து பள்ளிக்கூடத்திற்கு என்ன செய்யப் போகின்றாய் என்று நண்பர் ஒருவர் கேட்டார் ? 13 பாடசாலையில்  படித்த ஒரு பழைய மாணவன் எந்தப் பாடசாலையில் பழைய மாணவன் என்று சொல்ல முடியும் பதில் தாருங்கள்!

 உறவுகளே இந்தப்பதிவு பிடித்திருந்தால் பலருக்கு கல்வி பற்றிய தேடலுக்கு  வழிகாட்டனும் என்ற என் ஆவலுக்கு நீங்கள் ஓட்டுப் போட்டும் உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைத்தும் ஆதரவு தாருங்கள்!

தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்!!

02 September 2011

ஆசைப்பட்டதும்! அவதிப்பட்டதும்!!

வெயில்கால வரவில் பல பழங்கள் இயற்கையாகக் கிடைக்கும் கிராமத்து வாழ்வில் !

நம் பள்ளிக்கூட பருவத்தில் ஒவ்வொரு பழம் பருவகாலமாக இருக்கும். அப்படியான ஒன்றுதான் நாவற்பழம் .இது முருகன் ஒவ்வையாருக்கு கொடுத்த தாக கூறப்படுகின்றது.

பள்ளிக்கூடம் போகும் போது நம் காற்சட்டைப் பையில் மதிய இடைவேளையில் எங்களின் வயிற்றுப்பசியைத் தீர்ப்பதில் நாவல் பழம் தனித்துவமானது.

 நாவுக்கு இனிப்புச் சுவையைத் தருவதுடன் போட்டிருக்கும் வெள்ளை உடையை நாவற்கலர் வண்ணம் பூசி வீட்டில் நல்ல தும்புத்தடி அபிசேகம் வாங்குவதற்கும் காரணியாக அமைந்துவிடும்.

என்றாலும் ஆசை விக்கிராமத்தியன் கதை போல !தினமும் பாடசாலை முடிந்து மரத்தில் ஏறிப்பழம் புடுங்குவதில் பாதிப் பொழுது போய்விடும்.


 அப்படியும் ஆங்காங்கே மரம் கீறிய தழும்புகளில் இரத்தம் ஒடிக்கொண்டிருந்தாலும் நாக்கில் நாவல்பழம் சுவை கொடுத்துக்கொண்டிருக்கும்!

  வகுப்புத் தோழிகள் யாராவது வம்பு இழுத்தால் அவர்களின் வெள்ளைச் சட்டையில் வீரச்செயலில் ஒரு உடை  வெள்ளாவி வைத்தாலும் வீட்டு அலுமாரியில் அடைகாக்கும்.  .

அது ஒரு காலம் என்ன செய்வது ஈழத்தவன் வாழ்வில் இழந்தது உரிமை மட்டுமா?
 உணர்வுகள் ,ஆசைகள் ,கனவுகள் ,அடுக்கலாம் பல !புரியுமா!!
 எங்கள் கனவில் கொள்ளிவைத்தவர்களுக்கு!

 ம்  அவையாவும் கனவுகளாக இருந்தாலும்  எனக்கு பலகாலம் நாவல்பழம் சாப்பிடனும் என்று ஆசை .

என்ன செய்வது இம்முறை சென்னையில் நாவல்பழம் கிடைத்தது.


 ரங்கநாதன் தெருவிற்குப் போனபோது  அங்கே பாதை ஓரம் ஒரு பாட்டி விற்பனை செய்து கொண்டிருந்தார் .


நானும் ஏதோ முன்நாள் காதலியை கண்ட சந்தோஸம் போல் அளவில்லாமல் அதிகமான பழம் வாங்கி ரோட்டோரத்திலயே சாப்பிட வெளிக்கிட்டேன்.


 என்னவள் அப்பவே சொன்னால் .
மற்றவர்கள் கானாததைக் கண்டமாதிரி சாப்பிடுகிறார் என்று பறயப் போகினம் .இப்படி சாப்பிடனுமோ அதுவும் அந்த அம்மாவின் சிரிப்பு என்னை சங்கடப்படவைக்குது .உங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியல வெளிநாட்டில் இருந்து வந்ததும் இப்படியா !ஆசையில் ஒரு பை நிறைய நாவல்பழம் வாங்கனும் .அதுவும் இந்த பாதை ஓரத்தில் கடவுளே எப்பதான் திருந்தப் போறியலோ ?

இப்ப என்ன பிரச்சனை உனக்கு !சாப்பிடுகிறது நான் .உனக்கு விருப்பம் இல்லை என்றாள் நான் சாப்பிடக்கூடாதோ? இதைச் சாப்பிட்டு 10  வருசம் ஓடிப்போய்விட்டது.

மனுசன் இப்பதான் வந்திருக்கின்றன் .அதுக்குள் நொய் நொய் என்று கூறுகெட்டவளே!

 ஏன் சொல்ல மாட்டியல் முந்தி எல்லாம் மச்சாள் மச்சாள் என்று பாசம் பொழிஞ்சிட்டு இப்ப கூறுகெட்டவளோ!

இருங்க ஊரிள் போய் அம்மாட்ட சொல்லுரன்.

 மாப்பிள்ளையின் அர்ச்சனையை அப்பவே பாட்டி சொன்னா. இவன் திருந்த மாட்டான் கட்டிமாராடிக்காத  இன்ஜினியர் மாப்பிள்ளை இருக்கிறான் என்று!
 நான் தான் மச்சான் என்று இறங்கி வந்தன். மொட்டையருக்கு வாய் கூடிப் போச்சு.

 இப்ப என்னாச்சு செல்லம் ஏன் கோபிக்கின்றாய் நாவல்பழம் இப்ப சீசன் இந்த முறை கிடைச்சிருக்கு  அது சாப்பிடுகிறது பிடிக்களையா?

உன்னுடைய பாட்டியை ஞாபகப்படுத்தினால் எனக்கு கெட்ட கோபம் வரும் அந்தக்கிழவியால தான் இவ்வளவு காலம் காத்திருந்து கலியாணம் செய்தது. இல்லை என்றாள் நானும் தனுஸ் மாதிரி சின்ன வயசிலயே ஒரு பிரென்ஸ்சுக் காரியை கட்டியிருப்பன் தெரியுமோ?

 உதுக்குத்தான் தனியா விடாத மாப்பிள்ளையை என்று அப்பவும் பாட்டி சொன்னா!

ஏன் தாத்தா ஓடிப்போன மாதிரி நானும் ஓடுவிடுவன் என்றோ!

 என்னுடைய  மச்சாளை விட்டுட்டு நான் பிரென்சுக்காரியுடன் டிஸ்கொத்தேக் போவேனா!
  அப்படிப்போனாலும் வைன் குடிப்பேனா !

 ஓ இது வேற நடக்குதோ! ஊரில் களவா கள்ளுக்குடிச்சனிங்க.
 இப்ப சுதந்திரமா வைன் குடிக்கிறீயலோ?
சும்மா விளையாட்டு என் செல்லம் .

ஆட்டுக்கார அலமேலு படத்தில் ஒரு பாட்டு வரும் .

பருத்தி எடுக்கையிலே என்னை பலநாளும் பார்த்த மச்சான்... அப்படிதான் நானும் ஓடித்தான் வந்திருப்பன் நான் உனக்கு மட்டும் சொந்தம் என்று!

 ஐயோ வேண்டாம் சாமி இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்பது.

உந்தப்பழத்தையே சாப்பிடுங்கோ!


ஏங்க நாவல்பழம் புடுங்கப்போய்  கோமதி வீட்டு ஓட்டை உடைத்து அடிவேண்டியது ஞாபகம் இருக்கா?

  இன்னும் அதை நீ மறக்கலயா? எப்படி மறப்பது கொஞ்சநாளா அவள் மயக்கத்தில்  நீங்கள் நாவல்பழம் புடுங்கும் சாட்டில்  அவங்க வீட்டில் ஜொல்லு விட்டதை பாட்டிதானே  மோப்பம் பிடித்து மாமாட்டை போட்டுக்குடுத்தது!

அந்த கருக்குமட்டை அடிவேண்டி மாமி மஞ்சல் பூசி பத்துக்கட்டினதையும் மறக்க முடியுமா?

இப்ப எப்படி இருப்பாள் கோமதி!  எத்தனை வருசம் பார்த்து இப்ப ஊர்க்கு வந்து  குடியேறிட்டாள் பிள்ளையள் பெரியவர்கள்!
 மனுசன் இன்னும் முகாமில்.
  வரும் போது உங்களை விசாரித்ததாக சொல்லச் சொன்னவள்.

 இந்தக் கதையுடன் நானும் நாவல்பழத்தை அதிகமாக சாப்பிட்டன்

. அன்று இரவு படுத்தால் வயிற்றில் ஏதோ உள்நாட்டு யுத்தம் போல் இருந்திச்சு.
 இது என்னடா இப்படி இருக்கே எங்க என்னாச்சு அப்பவே சொன்னன் சுத்தம் இல்லாததை சாப்பிடாதீங்கோ? என்று இப்ப அவஸ்தை படுகிறீங்க கொஞ்சம் கோப்பி ஊத்தவோ!

 வேனாம் என்று மனைவியை நித்திரை கொள்ளச் சொன்னேன். நள்ளிரவில் வயிறு ஒரு மாதிரி இருக்கு என்று கழிப்பறையில் போய் இருந்தால்
கனகாம்பிகை குளத்தை திறந்து விட்டது போல் வயிற்றுப் போக்கு!

இரண்டுநாள் எங்கும் போகவில்லை வீட்டிலேயா ஓய்வாகப் போனது.
 என் விடுமுறை நாட்கள். மனைவி சொல்லியும் கேளாமல் ஆசையில் நாவல்பழம் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்!


இப்பதிவின் நோக்கம்  சுயமாக வியாபாரம் செய்பவர்களை சீண்டுவது இல்லை. பல்லாயிரம் பேர் உண்ணும் பழங்களை கொஞ்சம் பாதையோரங்களில் விற்பனை செய்பவர்கள் சுகாதாரமான முறையில் பொதி செய்து விற்பனை செய்யலாமே என்ற ஆதங்கமே!