16 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-6

//
இத் தொடரில் யாரையாவது மனம் நோகும் வகையில் எழுதியிருந்தால்..................
 இங்கேயே மன்னிப்பைக் கோருகின்றேன்!

//////:::::///
சாத்தியம் இல்லை." நீ வேறுமதம் அவள் வேறு மதம் "

"உனக்கு இன்னும் உலகம் புரியலடா .நீ போகவேண்டிய தூரம் இன்னும் தொடங்கவில்லை.

 உயர்தரம் இப்போது தான் தொடங்கியிருக்கின்றாய். கல்வி என்ற பெருங்கடலில் இது இரண்டாம் பாகம் நீ இருப்பது.

 இப்போது உன் சிந்தனை உயர்தரம் முடித்து பல்கலைக்கழகம் போவதாக இருக்கனும்.

 அதைவிடுத்து அடுத்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் யுத்த நிலைப்பகுதியில் நின்று கொண்டு காதல் செய்யப்போறியா?

 அதுவும் ஒரு இஸ்லாமிய மங்கையை! எப்போதும்  நம் கனவுகள்  நம் கைகளுக்கு இருக்கனும். கைகள் நீண்டு அடுத்தவன் மூக்கில் குத்துவது சமூகப் பிரச்சனையாக மாறிவிடும்.

 ஏற்கனவே நாம் இங்கு பிரித்தாலும் ஆட்சிக் குழுக்கலால் முட்டிமோதுகின்றோம்.

 இந்த நிலையில் இது உனக்கு தேவையில்லாத ஒரு வலியான விடயம்.

 நான் முத்தவன் உனக்கு." என் சொல் கேள் காதல் கருமம் என்று உன் கல்வி என்ற வாழ்க்கைத் தீபத்தை அணைத்து விடாதே"

 மீண்டும் ஏற்ற அதிககாலம் பிடிக்கும்.
 2 வருடம் மிகவும் ஒரு துறவி போல் எதிலும் பற்று வைக்காமல் கல்வியை நேசி .

உன் குடும்பத்திற்கு வழிகாட்ட வேண்டிய
நீயே வழிமாறிப் போய் விட்டில் பூச்சி ஆகதே.

"இன்னொரு பெண்மனசில் வீணாக காதல் தீயை வார்த்து . அவர்களின்  கல்வி முன்னோற்றத்திற்கு தடை போடாதே.  "

தரப்படுத்தல் கல்வித்திட்டம் போல் ! அதுவரை அமைதியாக இருந்த ரவி என்னிடம்.

 இதப்பாரு தனிமரம்  உனக்கு உள்ளுக்குள் இருக்கும் இஸ்லாமியர் மீதான  தப்பான அபிப்பிராயத்தை! மாற்றப்பாரு.

 நீங்கள் எல்லாம் சேர்ந்து அவங்கட நிலத்தைப் பறித்துக் கொண்டு வெளியேற்றி  விட்டு நல்லவர்கள் போல் நடிக்காத..


  எனக்கு இப்ப உதவி செய்ய முன்வராட்டியும் பறுவாயில்ல.

 உபதேசம் செய்யாத!

 நான் ஒன்றும் உன்னைப் போல சீதனத்துக்கு பார்த்துக் கொண்டு இருக்கும் ஆம்பிள்ளை இல்ல.

 மனசுக்குப் பிடித்த விடயத்தை செயலில் செய்ய நண்பனாக உதவாட்டியும் பறுவாயில்லை .
"மூலச் சலவை  செய்து என் காதலை முளையில் கிள்ளியெறியும் காரியத்தில் கோடாரி போல் முன்வராத"  அது நம் நட்புக்கு கேடாக அமையும்.




 நான் போறன் என்று என் மீது இருந்த கோபத்தை சைக்கிள் பெடல் மீது காட்டி எட்டி மித்துதுப் போய்க்கொண்டே இருந்தான். .

எதிரே இந்திரா திரையில் முஸ்த்தப்பா விளம்பரத்தில் நெப்போலியன் என்னைப் பார்த்து கண்கலங்குவது போல் இருந்தது.




 இவனிடம் இப்படி ஒரு வார்த்தை வரும் என்ற கோணத்தில் நான் ஜோசிக்கவில்லை.

 ஒரு காதல் ஆரம்பமே மனதில் மறக்க நினைக்கும் வலிகளை மீளவும் தட்டி எழுப்பும் .எண்ணங்கள் ஊடாக இவன் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
 எங்கோ நடந்த தவறுக்கு

நான் என்ன செய்ய முடியும் இத்தனை இஸ்லாமிய உறவுகளுடன் தொழில் நிமித்தம் பழகும் எனக்கு அவர்கள் மீது உள்மனதில் வெறுப்பு என்ற கருநாகத்தையும் அல்லவா விதைத்துவிட்டுடான் .

 குழப்பத்தில் நான். பிரதான பாதையில் நிற்கும் போது .







ஐயே கோமத. மொக்கட்ட மெத்தனம் இன்னே?
(அண்ணா நலமா,என்னத்திற்கு இங்கே நிற்கின்றீர்கள்)  என்றவாரே என்  அருகில் தன் கரங்களை  நீட்டினாள் சாலிக்கா.

 . ஒரு நண்பன் வருவான் மதவாச்சி போகனும் என்றேன் நிஜம் என்பதைப் போல் பாவனையில். அப்படியா! நானும் அங்காலதானே போறன் நீங்களும் வாங்கோ என்றாள் .நண்பனுக்கு கைபேசியில் அழைத்துப்பாருங்கள்.

" எங்கே இருக்கான் என்று கேளுங்க" என்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின்  பொக்கட்  மீது  கைவைத்தாள்!

13 October 2011

நொந்து போகும் ஒர் இதயம் -5

இந்தத் தொடரில் யாரையும் மனம் நோகும் எனில் இங்கேயே மன்னிப்பைக் கோருகின்றேன்!


//>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மன்னாரும் என் பிரிவுக்கு உட்பட்டதால் அங்கும் ,வேலை செய்வதால் மொயூத்தின் அங்கிருக்கும் கடைக்கும் போய் வருவதால் அவர்களின் குடும்பத்தவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும்!

முன்னர் இவர்களும் வடக்கில் இருந்தவர்கள்! அக்காலத்தில் நடந்த துயரமான சம்பவத்தால் மதவாச்சியில் இருந்துவிட்டு மீண்டும் தொழில் நிமித்தம் மன்னாரில் குடியேறியவர்கள்!

   மொயூத்தின் திறமையால் இரு இடங்களிலும் வியாபார நிறுவனத்தை நடத்துகின்றார் !

அவரின் முத்த மருமகன்  ராபீக் இங்கும். மற்றவர்கள் மன்னாரிலும்   இருக்கின்றனர்.

 அக்ரம் மொயூத்தின் இரண்டாவது மருமகன்.  என்னுடன் வேலை செய்பவன் .

அதனால் இவர்கள் குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

 மதங்கள் கடந்து நாங்கள் நண்பர்களாக இருப்பது பல இடங்களில் வேலையில் நண்மையைத் தருகின்ற செயல்.

 ஏன் எனில் தனியார் துறையில் விற்பனை அளவு நிர்னையம் இருக்கின்றது.

 ஒவ்வொரு மாதமும் எங்கள் விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் நம் வருமானம் கூடும் !

அடிப்படைச் சம்பளத்தை விட இந்த செயல் மூலம் தான் அதிகமான வருவாயை ஈட்ட முடியும்.

 மண்ணைக் கட்டிக் கொடுத்தாலும்   பொன் என்று விற்பவனே விற்பனையாளன்  அப்படித்தான் நம் தனியார் துறையின் தாரகமந்திரம் ஒரு விற்பனைப் பிரதி நிதிக்கு

 .இது மட்டுமல்ல வியாபாரத்தில் சிலருடன் அதிக தொடர்புகள் உறவு முறையைக் கைக்கொண்டால் நம் செயல்பாடு வெற்றிகரமாக இருக்கும் என்பதை என் தந்தை எனக்கு கற்றுத்தந்த பாடம்.

மொயூத்திற்கு ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கம் தனிமையில் கதைக்கும் போதெல்லாம் என்னிடம் வெளிப்படையாக பேசுவார் .

அல்லா எனக்கொரு குறையும் வைக்கல ஆனால் ஒரு மவன் இருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும்!

 நாலாவது  மகளுக்கும் நிக்கா வைக்கப் போறன் மாத்தயா!

 அந்த நேரம் உங்கட உதவி வேனும் .

நிச்சயமா செய்வன் பாய் நீங்க ஜோசிக்காமல் கேளுங்கோ என்ன இப்படி மாத்தயா போட்டு மட்டும் பிரிச்சுப் பார்க்காதீங்கோ என் பெயரையே சொல்லிக் கூப்பிடுங்கோ !
பாய் உங்கமகனின் வயது என்று நினையுங்கோ

!நானும் மொயூத் வாப்பா என்றும் சமயங்களில் பாய் என்றே அழைப்பேன் !

இதுவும் ஒரு உளவியல் தன்மை எனலாம் பெரியவர்களை கொஞ்சம் மதிப்புக்கொடுத்தால் நாம் நம் தேவைகளை நிறைவேற்றலாம் தானே!

என்னிடம் பாய் உதவி கேட்டது என் பொருளாதார நிலமை அறிந்து அல்ல!

  விற்பனைப் பிரதி நிதி வேலையில் பணம் புரலும்!
 தேவையான போது ஒருநாள் ஒரு வாரம் என சுழற்ச்சி முறையில் பணத்தினை கைமாற்றம் செய்யலாம்!

 இப்படி கைமாற்றி சிலர் கையாடல் செய்து பணத்துடன் ஓடிப்போனதும் பலர்!

 என்றாளும்!

 வீழ்ந்து போன விற்பனைப் பிரதிநிதிகளும் அதிகம்!

இப்படியான சில நடைமுறைச் சிக்கல் பல தனியார் துறையின் வியாபார நிறுவனங்களுக்கு வந்த படியால் தான் !
பின்நாளில் முற்பணமாக (டிப்போசிட்) வரைமுறை நடைமுறையில் வந்தது என்பதும் நிஜம்.

  மொயூத்  போய்க் கொண்டிருக்கும் போதே மறுபக்கமாக பிரபு தன் சைக்கிளை மிதித்த படி வசந்தித் தியேட்டர் அருகால் பாடசாலைவிட்டு  வெளிவந்தான்  !

அவனும் என்னிடம் வந்து கதை கொடுத்தான் அப்புறம் தனிமரம் யாரோ சொந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்திச்சு!

 . அப்ப இனி நமக்கு எல்லாம் உதவி என்கிறாய்! என்று பீடிகை போட்டான்!என்ன சொல்கிறாய் ரவி? ஒன்றும் புரியவில்லை!

 சரி அதை விடு உன் விடயமாகத்தான் இங்காலப்பக்கம் வந்தன் அந்தப்பிள்ளையைக் காட்டவில்லையே?
 உன் எதய தேவதை யாரு ? அக்காலத்தில் லவ்டுடே நகைச்சுவை மிகவும் புகழ்பெற்றது. இதய தேவதை என்பதை அப்பட இயக்குனர் பாலசேகரன் இப்படி மாற்றிப்பேச வைத்து வையாபுரியையும் தாமுவையும் கலாய்த்திருப்பர்.

 பின்னாலில் பாலசேகரன் இன்னொரு படத்துடன் திரையுலகை விட்டு மாயமாகிவிட்டார்!

 நம்மாளுகூடத்தான் நீ பேசிக்கொண்டு இருந்தாய் நம்ம மாமா உனக்கு தோஸ்த்து   எனக்கும் தைரியம் கூடியிருக்கு!

 என் காதலைச் சொல்லப் போறன் பார்த்திமாவிடம்!ரவி விளையாடுகிறாயா! இல்லை சீரியஸ் என்ன தனிமரம் இதில் விளையாட என்ன இருக்கு எனக்கு அவளைப் பிடித்திருக்கு!
 அவளுக்குப் பிடிக்குமா ? பிடிக்குறமாதிரி நடக்கிறன்.

 எனக்கு அவள்தான் இனி எல்லாம் ! தலையில் இடி விழுந்ததைப் போல் நான் சிந்தனை குழம்பி நின்றேன்!


மாத்தயா-சகோதரமொழியில்- அதிகாரி  copy