நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தி
பார்ப்போரை பரவசம் ஆக்குவாள்!
தலைமகன் வந்து தளுவியதால்
நிறைமாதக் கர்ப்பனியாகி!
குலமகள் குலுங்கி வளைக்காப்பு நடத்த
மஞ்சள் பூசிய முகத்தினை!
மன்னவனைக் கண்டு
மண்ணை நோக்கி குனியும் கார்காலம் !
நீண்ட சடையை நிலத்தில் விரிக்க
.தைமகள் தங்க நிறத்தில் நெல்மணியை பரப்பி !
விவசாயிகளை சிரிக்க வைப்பாள்!
தைப்பொங்கல் என்று சொல்லி! !
அதைக் கொண்டாடியது ஒரு காலம்!
இனவாத இராட்சதர்கள்
இரக்கமில்லாது எடுத்து இயம்பிய போரில்
இடம் பெயர்ந்து கொதித்தது
இதயப் பானைப் பொங்கல்!
அலைந்து திரிந்து
பானைதேடிப் பொங்கும் என்னத்தில் இருந்தபோது
! பொசுபரசு போட்டு புதர்கள் ஆக்கிய வயல்களில் .
இனி எப்போது நெல்மணிகள் வம்சம் பிறக்கும்!
மீண்டும் வாருங்கள் பொங்கல் வைக்கலாம்!
பிறந்த அன்னைவயலில் என்று கூறும் பேயரசுகள்
இன்னும் அகற்றவில்லை பாதுகாப்பு வேலிகளை!
ஒரு அடிதன்னும்!
அடுத்த முறையாவது வந்திடுவேன் பொங்கல் வைக்க !
காத்திருப்பாய் தை மகளே!
அழைக்கின்ற போது!
அத்தான்
.நானும் வாறேன் புலம்பெயர்ந்து கூப்பிடுங்கள் !அண்ணாவைவும் ,தம்பியையும்,
அடுத்த நேரம் என்ன ஆகும் யார் அறிவார்
என்று முனங்கும் கானும் பொங்கல் !
அப்பா எப்போது வருவார் சேர்ந்து பொங்க
என்று கேட்கும் அண்ணன் மகளிடம்
நெல்லுவாங்கப் போனவன் நெடுநாளாகி வராத
கதையை எப்படி உரைப்போன்!
நிலமகள் தாயே!
நின்னை தேடிவருவேன் என் குருத்துக்களுக்கு
நான் பொங்கிய வயல்க் காணி காட்டுவதற்கு !
புலம்பெயர்ந்த வலிகள் போக்கி
. புன்முறுவல் பூக்க
தைமகள் வரும் நாளில்
பொங்கவேண்டும் தமிழர் தாயகத்தில்!
இத்தனை ஆசைகளையும் !
அடுப்படியில் பொங்கியவாரே
அசைபோடுகின்றேன்!
அடுத்த வேலைக்குப் போகும் அவசரத்தில்!!
உறவுகள் வாசகர்கள் அனைவருக்கும் முன்கூட்டிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
இன்னும் சில வாரத்தில் வலையூடாக சந்திக்கலாம் அதுவரை!
வண்ணத்தமிழ் வணக்கத்துடன்
தனிமரம்!
!





