19 July 2012

அடுத்த முதல்வர் நண்பனா? !!!


வணக்கம் உறவுகளே நலமா??


 இந்தப்பதிவு நகைச்சுவைக்காக மட்டும் யாரையும் நோகடிப்பதல்ல!



 அரசியல் ஆசை பலருக்கு பல வடிவங்களில் வரும். மக்கள் சேவையே மகேஸன் சேவை என்று வாழ்ந்தவர்கள் நிலையை இன்றைய ஜனநாயக ஆட்சி என்று பாராளமன்றத்தில் கதிரை வியாபாரம் ஆகிப்போன நிலையில் .

சாமானிய வாக்காளன் நினைப்பது எல்லாம் ஒரு நல்ல பிரதிநிதி அரசியலில் இறங்கி வரணும் என்று அதாவது முதல்வன் படத்தில் சங்கர் சொன்னது போல அரசியல் ஒரு சாக்கடை என்றுவிட்டு நாம் போய்க்கொண்டு இருக்காமல் அதில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே !
அப்படித்தான் நம் தேசத்தில் இப்போது சப்பிரமுகமாகாண மாகாணசபைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் .
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி பிரச்சார நெடியை தீவீரமாக்கி வரும் நிலையில்.http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39304
 என் நண்பணுக்கு வந்த கற்பனையை கொஞ்சம் நேற்றில் இருந்து முகநூலில் பார்த்து ரசித்ததும் மட்டும்மல்ல சிந்திக்கவும் வைத்த காட்சியை உங்களோடு பகிர்கின்றேன்.
 அந்த சப்பிரமுக மாகாண தொகுதியில் (இரத்தினபுரி முதல்  பலாங்கொடை வரை! ) இருக்கும் பலருக்கு பல ஆசைபோல என் பள்ளி நண்பன் ஆசை இது ! இந்த நண்பனுக்கும் எனக்கும் உறவு வந்ததே   சாதாரனதரம் (o/l )படிக்கும் போதுதான். ,நண்பன் முதல் வாங்கில் இருக்க நான் இருந்ததோ கடைசி வாங்கில் என்பது தனிக்கதை ஆனால் எத்தனை படம் ஒன்றாக பார்த்தோம் என்பது சாதனை !ஹீ  !இரத்தினபுரி பெற்றெடுத்த வைரம், மலையக மக்களை காக்க வந்த விடிவெள்ளி, வருங்கால மத்திய மகாண முதலமைச்சர் எங்கள் அண்ணன் சத்திவேல் பபுதரன் தொண்டமான்!
அதுகடந்து முகநூலில் பால்பு வாங்குவான் அதிகம் என்னிடம் சிக்குப்பட்டாள்  கோடிஸ்வரன் ஒலிநாடாவை  வாங்கிச் சென்று இன்றும் தொலைத்துவிட்டு வேட்டி உருவிய  கதை தனித்தொடர்!  
இப்போது அவன் குரல் கொடுக்கும்!  சாமானிய மக்களின் குரலினை இவன் சொன்னவிதம் கண்டு ரசித்து சிரித்ததைப் பார்த்து நீங்களும் சிந்தியுங்கள்!
 வசந்தகாலத்தில் நாட்டிற்கு சொல்லும் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் என் நண்பன் அடிக்கடி கேட்பது எப்ப வருவாய் என்னைக்கான என்று இப்படி ஆசை இவனுக்கு இருக்கும் போது எனக்கு அரசியல் ஆசையில்லை அந்த அரசியல்தானே நம்மை . ஏதிலியாக ஆக்கியிருக்கின்றது என்பது என் கருத்து ! 

13 July 2012

வைரமுத்துக்கு வாழ்த்து!

21 நூற்றாண்டியில் ஈடில்லா கீர்த்தி பெற்ற பாடல் ஆசிரியர்!,கவிஞர்,இலக்கியவாதி என பன்முகப்பார்வையில் பார் போற்றும் கவிப்பேரசு வைரமுத்து அவர்களே உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!


என்றும் உங்கள் புலமைத்தமிழ் எங்களுக்கு புத்துணர்ச்சி தந்து கொண்டு இருக்க வேண்டும் என ஒரு ரசிகனாக ,வாசகனாக, யாசிக்கின்றேன் !






 எப்போதும் கவிஞர்களுகு வித்துவச் செருக்கு வரும் என்பதை உங்களுக்கும் ,இசைச்செருக்கு வரும் இளையராஜாவுக்கும் என்று இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் வாசித்த போது புரிந்துகொண்டேன் நல்ல பாடல்களை நேசிக்கும் என் போன்ற வழிப்போக்கனின் ஆசையில் நேற்றுப்போட்ட கோலம் வைரமுத்து இனி!திருத்தி எழுதிய தீர்ப்பு அல்ல நட்பில் என்று . !




வானம் எனக்கு ஒரு போதிமரம் எழுதியவர் இனி ரகுமானோடு மறு அவதாரம் கண்டபோது காவி நிறத்தில் ஒரு காதல் படித்தேன்.காதில் ஒலித்த என்ன சொல்லப்போறாய் ,! என்ற பாடல் இளைஞனாக இருந்தாலும் மனதில் அடுத்த ஆத்து ஆல்பேர்ட்டில் வரும் இதயமே இதயமே பாடல்தான் அமைதி தந்தது.




 .எல்லா நதியிலும் என் ஓடம் வாசித்த போது சிற்பியே உன்னைச் செதுக்கின்றேன் திருஞாணம் போல என்னையும் செதுக்கினீர்கள் வைகரை மேகங்கள் 16 வயதில் நீங்கள் நூலாக வெளியிட்டபோது அதே 16 வயதில்தான் நானும் உங்கள் வாசகனாக என்னையும் தீட்டிய என் பழைய பனை ஓலை போல .இதுவரை நான் என தேடித்தேடிப் படித்தேன்




.நேற்று இல்லாத மாற்றமும் .வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாத ஒரு உணர்வு பாடலாக சீண்டிய போது டூயட் படத்தில் பிரபு பேசிய ரத்தத்தினால் வந்த யுத்தத்தினால் கவிதை எழுதினே கண்ணிருந்தால் வாசித்துப் போடியை அதிகம் ரசித்தேன் .தமிழ்புலமைக்கு .


தலைமுறைமாற்றம் போல நீங்களும் தண்ணீர்தேசம் எழுதிய போது தென்மேற்குப் பருவக்காற்று பாடல் ஒலித்தாலும். ரசித்தது (ஒரு ஒடை நதியாகின்றது )தென்றல் வந்து என்னைத் தொடுமும். தலையைக்குனியும் தாமரையேயும் தான் அது எனக்குள் வந்த மாற்றமோ நான் அறியேன் கவிஞரே!



இலங்கையில் நடக்கும் யுத்தம் நிறுத்து என்று (பூவெல்லாம் உன் வாசத்தில் )நீங்கள் பேனா யுத்தம் செய்த போது நானும் உங்கள் மீது ஈர்ப்பில் ரசித்தேன் உன்னைப்பார்த்த பின் நானாக  இல்லையே என்று (காதல் மன்னன் )பாட்டு  எனக்கும் பிடித்த போது நானும் உருகினேன் ஒரு பொய்யாவது சொல்கண்ணே  ஜோடி பார்த்த் போது எங்கோ ஒரு இடத்தில்  என்று அதுவும் ஒரு போர்க்களமும்  இரு பூக்கள்  விரும்பி வாசிப்புக்கு நேசிப்பாகியது!


 அப்போதும் வானம் தொட்டு விடும் தூரம்  என்றும் இன்னொரு  தேசிய கீதம் வாசித்தாலும்   அமர்க்களத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டபோது நாமும் கேட்டோம் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் ஈழத்தில் என்று  ஆனாலும் கேள்விகளாள் ஓரு வேள்வி போல இறுதி யுத்தம் நடந்த போது நீங்கள் எலிக்கறியும் சோழமன்னர்  என்று...  (ஆயிரத்தில் ஒருவன்) படத்தில் எழுதிவிட்டு உங்கள்  பாசத்தலைவர் கருணாநிதிக்கு பாட்டுடைத்தலைவன் என்று ஜால்ரா போட்ட போது கவிராஜன் கதை. வான்ம் தொட்டுவிடும் தூர்ம்தான் செந்தோழன் !

சிகரங்களை நோக்கி திருஞாணம் போல நீங்களும் ஒரு சாதாரன கவிஞர் காலத்தைக்காட்டும் கண்ணாடியாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் மெளனத்தின் சப்தங்கள்  எழுதினாலும் நான் வடுகப்பட்டி முதல் வால்கா வரை என்று எழுதிவிட்டு க்ருணாநிதியிடம் சர்ணாகதியாக வைரமுத்து  பொழிவிழ்ந்து போன் நிலையை எண்ணும் போதெல்லாம் !


கல்வெட்டுக்கள் ,எல்லாம் என் ஜன்னலின் வெளியே சிலதைச் சொல்லனும்  காற்றின் மொழியே  கேட்ட  செவிகள்  .

வில்லோடு  வா நிலாவே  வாசித்தாலும் விடைதேடுவது! பழனிபாரதி ஆங்கிலம் கலப்பதாக நீங்கள் குட்டிய தருணம் அதிகம் சூடு பிடித்தது  நாளேடுகளில்.

  அதன் பின் வித்தக்கவிபா.விஜய் கருணாநிதியிடம் அதிகம் ஒட்டிய போது நீங்கள் ஆஸ்தான் இடம் பிடிக்க  அடித்த காக்கா பிடிப்பு எல்லாம் உங்கள் மீது ஒரு காழ்ப்புண்ர்வை தந்தது நிஜம் .


வாசிக்கும் நெஞ்சம் யோசித்த போது கிராமத்துக் கதை கருவாச்சி காவியம் சந்தணமும் ,சாக்கடையும் தெளிந்து கொண்டேன் தத்துவஞானியாக என்று நானும் நம்பியிருந்தேன் !.

நீங்கள் இன்னும்  சிலவிடயங்களுக்கு குரல் கொடுப்பீர்கள் என்று  பத்துக்குள்ளே  நம்பர் ஒன்று சொல்லு பாடல் ஒலித்தாலும் கவிதைக்கு நீங்கள்  தரும் ஆளுமை அதிகம்!.

 உங்களின் கிராமிய உணர்வும், நவநாகரிக உலகும் கைராசியாக அமைந்தது ஒரு ரத்ததானம் தான் ..அதுதான் உங்களுக்கு தாய்வீட்டு சீதனம்  அந்த இயல்புதான் புதிய கவிஞர்களுக்கு  வழிகாட்ட வேண்டியவர் வாழ்த்தி வரவேற்காமல்.

  அவர்களை கிள்ளுக்கீரையாக தீண்டும் குணம். உங்கள் மகன் மதன்கார்க்கி மட்டும்தான் அடுத்த கவிஞர் ஆகணும் என்று  அவ்வப்போது சிலிக்கன் சிங்கம் ஆங்கிலம் கலந்து எழுதும் போது பாவம் பழனிபாரதி ஒதுங்கியிருந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் ஞாபகம் வருகின்றது கவிஞரே!


ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி என் மனதை குடைகின்றது. பா.விஜய் சமர்2009 கவிதைத்தொகுதி ஈழத்து முள்ளிவாய்க்கால் அவலத்தைப் பாடினார். கருணாநிதிக்கு செல்லப்பிள்ளையாக இருந்தாலும் ஒரு கவிஞனாக!

 வாலி வயதான தாயினை வரவிடாமல்  கழுவேற்றிய அரசினை சாடி கவிதை பாடினார்!

கண்ணகி தேசமே என்று கவிதாயினி தாமரை.  பழனிபாரதி .அறிவுமதி வலி கவிதை தொகுப்பாக என பலர்  , சொல்லோவியம் தீட்டிய போது எல்லாம் பாட்டுத்தலைவன் என்று நெஞ்சுக்கு நீதி பொய் எழுதியகருணாநிதியின் பின் சாமரம் வீசும்  நீங்கள் இன்னும் மெளனம் காப்பது ஏன்,,,,.,,,,,,,,,,,,,,,!<<< ,?கவிதையும் ,கதையும் ஆட்சியின் பின்னே அடுத்த நாட்டுக்கதை என்று  வாகைசூடவா வாய் பேசாமல் இருப்பது !,,?


 தமிழ் ,தமிழன் ,தலைவன் ,வீரம், எல்லாம் சொல்லும் உங்கள் பேச்சு கேட்கும் போது  வானம் தொட்டும்விடும் தூரம்தான் கதையில் சொல்லிய!

 (இந்தக்கூட்டம் நமது ஜனநாயகத்தை அழுக்குப்படுத்திவிடக்கூடாது என்று ஆசைப்படுகின்றோம்  )என்று சொல்லியதை ஒரு வாசகனாக வேண்டுவது பிரபல்யமான நீங்கள்  வலிகள்  சுமந்த நம்மவர் கதையை, கவிப்புலமையில் கொஞ்சம் கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்காமல் அடுத்த தலைமுறைக்கும் தெரியும் வண்ணம் .

நம் துயரங்களை  அழகாய்  கவிதையாக, கதையாக மெட்டுப்போட வேண்டும் .
 என்பதே  இந்த வழிப்போக்கனின் ஆதங்கம்!


இந்த ஆதங்கம் ஒரு வாசகனாக !


ஆனால் பாடல் ரசிகனாக நீங்கள் எப்போதும் எங்கே என் புன்னகை  தாளம் படப்பாடலையும் ,என்னைக்கானவில்லையே காதல் தேசம் பாடலையும் கடந்தாலும் நீங்கள் வரிபிடித்த! ஞானியோடு கைகோர்த்த இந்தப்பாடல் இன்று மட்டும்மல்ல என் வாழ்நாள் முழுதும் காதில் ஒலிக்கும்  கொஞ்சம் தேனீர்  நிறைய வானம் !