06 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-20


உன்னை நினைந்து நினைந்து மனம் உருகி உருகி நெஞ்சம் நெய்யாய் உருகுதய்யா உன் பட்டுப் பீதாம்பர ஒளி கண்ணில் பட்டு விழிகள் கண்ணீர் சிந்துதய்யா என்பது ஒரு பெருமாள் பஜனைப் பாடலின் பல்லவி. 

அதுபோல பெருமாள் ஓட்டி வருவானா ? என்று மனம் உருகின நேரத்தில் மறுநாள் மதியம் விடுதியின் கீழ்த்தளத்தில் காத்திருந்தபோது, என்ன ரவி கீழ்த்தளத்தில் இருக்கின்றாய் ? உன்னை ரூமில் இல்லையா இருக்கச் சொன்னேன் என்று திரும்பிய பக்கம் பெருமாள் இன்னொரு நண்பனுடன் வந்து நின்றார்;. இல்ல...... நேற்றுப் போனீங்க ஆளைக்காணவில்லை, அதுதான் இங்க வந்து பார்த்தேன்.

ஓ அப்படியா... உங்க மற்ற பிரஞ்கள் எங்க ? அவங்கள் நேற்று வெளியில் போனாங்கள் இன்னும் வரவில்லை, என்று தெரிந்தே பொய் சொல்லவேண்டிய நிலை. அவர்கள் போகும் போது தங்களின் சில உடுப்பைக்கொண்டு போன காந்தனும் சீலனும், ஓட்டி நம்பும் வண்ணம் தங்களின் உடுப்புப் பைகளை விட்டுவிட்டுச் சென்றதில் என் பொய் நிஜம் என்று நம்பிவிட்டார் பெருமாள்!

என்னாச்சு சொல்லித்தானே போனேன், இப்ப இங்க பொலிஸ் நடமாட்டம் அதிகம் அதனால்தான் ரூமைவிட்டு வெளிய வராதீங்க என்று சொன்னேன். ம்ம் சரி அவங்களுக்கு அதிஸ்ரம் அவ்வளவும் தான் இரண்டுநாள் காத்திருக்க முடியவில்லை. பிரிஞ்சு போனவங்களைத் தேடி காலம் கடத்த முடியாது. நாம் இன்று மாலையே மலேசியா போறம். உன் கடவுச்சீட்டைக் கொடுங்க என்றதும் நானும் என்னிடம் இருந்த கடவுச்சீட்டைக் கொடுத்தேன். பெருமாளோடு கூட வந்தவன் என் கடவுச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியில் போனான். 





ரூமில் பெருமாள் மிச்சம் இருந்த தாய் பீரினை சுவைத்த வண்ணம் ரவி ஐரோப்பாவில் உன்னைச் சேர்ப்பது என் கடமை துணிந்து இரு யாரும் அனாதை இல்லை. கடவுள் ஏன் உன்னை என்னிடம் வரவச்சார் என்று தெரியாது. ஆனால் இந்தியா பாண்டிச் சேரியில் இருக்கும் என் குருநாதர் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவார், காரணம் இல்லாமல் காரியம் இல்லை. சில நேரம் சில தத்துவம் பைத்தியக்காரத்தனம் போல இருக்கும். ஆனால் அதுக்காக சூழல் வரும் போது அதன் நிஜம் புரியும். உனக்கு மத நம்பிக்கை இருக்கா உங்க ஊரில் ஐயப்பன் பக்தர்கள் இருக்கின்றார்களா?? 

பெருமாளின் கேள்விகள் என்னை நிலைகுழைய வைத்தது. ராகுலின் பாட்டி ஐயப்பன் பக்தை என்பது ஒருசிலருக்கு மட்டும் தெரியும். ஊரில் இருந்தே சபரிமலை யாத்திரை போகும் காலத்தில் எங்க குடும்பத்துக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் இடையில் இருந்த உறவு விட்டுப்போச்சு. ராகுலும் நானும் நட்பாக இருப்பதே வெளியில் மட்டும் தான். இதுகூட ஒரு சிலருக்குத் தான் தெரியும். என்ன யோசனை ரவி. என் நண்பர்கள் கொழும்பில் இருந்து போவார்கள் அவர்கள் எல்லாம் செட்டிதெரு குருசாமியின் வழியில் போவார்கள். ஏன் பெருமாள் அண்ணே நீங்களும் சபரிமலை போறனீங்களோ ? ஆமா இந்த வருடம் முடியாது ஒரு அசம்பாவிதம் அதனால் தான் என்ன உன்னக்கு வழிகாட்ட இங்க அனுப்பி இருக்கின்றார் போல. 

நான் ஓட்டி வேலை செய்தாலும் யாரையும் ஏமாற்றியது இல்லை. என்னை ஏமாற்றிய உங்க நாட்டுக்காரங்கள் பலர் இப்போது ஐரோப்பாவின் பல நாடுகளில் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள். சரி அது எல்லாம் உனக்குத் தேவையில்லை. கொஞ்சம் பீர் சாப்பிடு இருவருமாக பீர் குடித்தோம். அன்று மாலையில் பெருமாளோடு வந்த நண்பர் வரதன் சகிதம் மூவருமாக சங்கலா எல்லைக் கிராமத்தின் தரைவழிப்பாதை ஊடாக மலேசியா நாட்டுக்குள் நுழைந்த போது புளியங்குளம் சோதனைச் சாவடி போல உடல் பரிசோதனையோ எங்கே போறாய் ? எங்கிருந்தாய் ? என்ன செய்கின்றாய் ? என்ற எந்த கேள்வியும் இல்லை.

சுதந்திரமான பகுதியாக இருநாட்டு எல்லை இருப்பது மனதில் சிலிர்ப்பும் சிந்தனையும் வந்தது. எப்போது நம் தேசம் இப்படி மாறும் என்ற எண்ணம் மனதில எழுந்தது. மலேசியாவிற்கு வந்ததும் தங்கிதிருந்த இடம் மஜீத் இந்தியா அங்கே ஒரு விடுதியில் என்னைத் தங்கவைத்த பெருமாள் 5வது நாள் என்னை ஓட்டி வரதனுடன் மலேசியாவில் இருந்து பாரிஸ் அனுப்பி வைத்தார். 

நான் 2001 மார்கழி 27இல் பாரிசில் கரைசேர்ந்தேன். நான்கு மாதப் பயணத்தில் படித்த அனுபவம் அதிகம் தான், என்றாலும் இன்று 2010இல் நானும் பெருமாளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதெல்லாம் ஆன்மீக யாத்திரையில் சந்திக்கின்றோம். இப்போது பெருமாள் ஓட்டிவேலையை விட்டுவிட்டு ஒரு வியாபார நிலையத்தை நடத்தும் சாதரனமானவர். ஆனால் என் வாழ்வில் இன்னொரு வழிக்காட்டி பாரிஸ்தேசத்தில் அடைக்கலம் நாடிய ஏதிலி வாழ்வில் அகதி வாழ்வைவிட அனுமதி வந்தவுடன் ஆண்டவன் அருளில் 2002 மாசி மாத இறுதியில் நண்பன் ஒருவன் வழிக்காட்டிய நிலையில் என் கதையைக் கேட்ட பிரெஞ்சு அரசு எனக்கு அரசியல் தஞ்சம் கொடுத்தது. 

விசா கிடைத்த நிலையில் இரண்டு வருடத்தில் வீடுவாங்கி தனியாக இருக்கின்றேன். இப்போது நண்பர்கள் சகிதம். என் தாய் தந்தைக்கு வெளிநாட்டில் உயிரோடு இருப்பது ஆறுதல் என்றாலும் நான் இப்படி ஆன்மீகம் என்றும், சாலிகாவின் நினைவிலும் இருந்து மீளவேண்டும் என்றும், கலியாணம் காட்சி என்று புலம்புவதே வேலையாகிவிட்டது. நண்பன் ஜீவன் என்ன உள்குத்துப் போட்டாலும் என் வழியில் தனித்துவமாக போகின்றேன்



. பார்க்கலாம் விழியில் யாராவது விழுந்து சாலியின் இடத்தை பிடிக்கின்றார்களா? என்று. இந்த நிலையில் அன்று என்னோடு பயணித்த நண்பன் ஜீவன் மலேசியாவில் என்னாச்சு இனி அவன் வழியில் என்ன நடந்து இருக்கும்?? ஜீவனின் நண்பனாக இருந்து நிசாவுக்கு நான் எப்படி வில்லன் ஆனேன்?




 முதல் நட்பு ரவி  முற்றும்!!!
தொடரும் ...............

04 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி --19

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கு இவனைக் நான் கான என்ன தவம் செய்துவிட்டேன் கர்ணன் என்று ஒரு பாடல் .மிகவும் கருத்தாளம் மிக்கது .

அதே போல ஐயப்பன் பஜனையில் ஒரு பாமாலையில் வருவது அனாதை என்பவன் யாருமே இல்லை .ஐயப்பனே துணை என்று அப்படித்தான் சங்காவிலில் துணைக்கு வந்தவர் பெருமாள் .

நம்பி வந்து நடு ஆற்றில் நிக்கும் நம்நிலைக்கு உதவும் கரமாக தன் செலவில் முதலில் தங்கும் வசதி செய்து தந்தார் .

எங்கள் விபரம் அறிந்து கொண்டு தானும் ஒரு ஓட்டி என்றும் தான் அனுப்பிவைப்பதாகவும் வாக்குறுதி தந்தார் .சந்திரிக்காவின் வெற்றிக்கோஸம் போல சீலனும் ,காந்தனும் நம்பவில்லை பெருமாளை .
"உவனும் அரசியல்வாதி போலத்தான் எங்களிடம் காசு பறிக்க நல்லவன் போல வேசம் போடுகின்றான் மச்சான் வாக்கு வாங்கியபின் மக்களை மறக்கும் தலைவர்கள் போல வெளிய போய் இருக்கும் பெருமாள் வரமுன் தங்கம் தந்த ஓட்டியிடம் போவோம்" என்று காந்தன் ரகசியமாக வைத்திருந்த தங்கன் கொடுத்த தொலைபேசி இலக்கத்தைக் காட்டினான்

.18 பேர் கட்டுநாயக்கா ஊடாக கச்சாய் வந்தோம். குழுமங்களில் ஒன்றாகுவது போல பின் முரண்பாடு வந்தால் இடையில் பிரிந்து போனவர்கள் போலவும், கட்சி மாறுவது போலவும் தங்கன் தப்பிவிட்டான் கட்சிமாறியதும் அமைச்சர் பதவி கிடைத்த ஜீ.எல் பீரிஸ்போல.!

வந்தவர்களில் கடைசியில் இருந்தது சீலனும் ,காந்தனும் தாங்கள் தங்கனிடம் போவோம் என்ற நிலையில் நான் பெருமாளின் வார்த்தைகள் மீது ஒரு நம்பிக்கைக்கீற்று பார்க்க நல்லவன் போல தெரிகின்றது. இனி நடப்பது தெய்வத்தின் கையில் என்றுவிட்டு பெருமாளுக்காக காத்திருக்க சீலனும் ,காந்தனும் தங்கனின் ஓட்டிக்கு அழைப்பு எடுத்துவிட்டு அவன் கூறியபடி வாடகைக்காரில் மீண்டும் கச்சாய் புறப்பட்டார்கள்.

நாங்க போறம் ரவி இனி எப்படியோ ?எங்களுக்கு முன் ஐரோப்பா போனால் இந்த இலக்கத்துக்கு அழைப்பு எடுத்துச் சொல்லு. எங்கள் நிலையை என்றுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்...

மனம் சஞ்சலம் ஆகும் போது கடவுளிடன் பாரம் கொடுத்துவிட்டால், வழிகாட்டுவதும் வழி மறிப்பதும் அவர் செயல் .என்றுவிட்டு தாய்லாந்து சோமபானம் நீண்டநாட்களின் பின் பருகினேன்.!

சாலியின் மோதிரநினைவு மனதில் அடைவு வைக்கப்போனபோது பெருமாள் வேண்டாம் என்று தடுத்ததும் தன் செலவில் எல்லாருக்கும் சாப்பாடும் குடிக்க தனக்கும் சேர்த்து வாங்கியந்த பீர் காந்தனும் ,சீலனும் போனபின் இப்போது துணையாக இருந்தது.

விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடங்கள் யாரை நம்புவது .?





எங்கள் ஊரில் ஒரு ஐயனார் கோவில் இருந்தது. அடிக்கடி தாத்தா அந்தக்கோவில் போர்த்துக்கள் அரசு இலங்கையை ஆண்டகாலத்தில் இருந்து இன்றும் இருக்கும் இந்தக் கோவிலுக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் தொடர்பு இருக்கு அங்கு இருந்துதான் முன்னர் இந்தக்கோவிலுக்கும் ஆச்சாரியர்கள் வந்தார்கள் என்று ஊரைவிட்டு வந்த 1991 இல் ஜீவனும் இருக்கும் போது சொன்ன போது தாத்தாவுக்கு பைத்தியம் ஊரைவிட்டு ஓடுவதால் இப்படிச் சொல்லுகின்றார் என்று நினைத்துக்கொண்டேன் !






அதன் பின் வேலை சாலியுடன் ,நட்புறவு என்றும் ,


சிறை என்றும் வாழ்க்கைப்படகு தத்தளித்த பின் இப்போது பெருமாள் உருவத்தில் மீண்டும் ஊர்க்கோவில் ஐயனார் ஞாபகம் வந்து இருக்கு!

" கண்ணதாசனுக்கு சோமபானம் போனால் தான் நல்ல கவிதை பிறக்கும் என்று யாரோ நக்கலாக சொன்னது கனவில் நினைவு போல வர "

திடுக்கிட்டு எழுந்த போது மாலையில் பெருமாள் வரவில்லை இன்னும் .என்ற நினைவு வர என்ன செய்வது என நின்ற போதும் மனதில் சஞ்சலம் அன்றைய இரவு தெளிவில்லாத குழப்பத்தில் எல்லாரும் விட்டுப்போன நிலையில் தனியாக சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வெட்டியான் போல. தொலைக்காட்சி பார்க்கவும் விருப்பம் இல்லை, தனிமை ஒரு கொடுமை அதுவும் புது ஊரில் கூடவந்தவர்கள் எல்லாம் என்ன நிலை எனத் தெரியாத ?நிலையில் மீண்டும் ஒரு சோமபானம் கூப்பிட்டது .

"என்ன யோசனை என்பைப்பருகு அருகில் இருப்பதை உன்னப்பாரு "என்றதைப் போல தாய்லாந்து நூடில்ஸ்சில் முட்டை,சோளம்பூ,மல்லி இலை,சோஜா சாறு இறால் சேர்த்தால் சூடாக சாப்பிடும் போது கொழும்பில் ஸ்டார் ஹோட்டல் புரியானி போல இருக்கும் சுவை!

. நேரம் ஓடியது தவிர பெருமாள் வரவில்லை. அயர்ந்த தூக்கம் அம்மாவின் குரலைபோல பிரம்மை எழுப்பியது .

அதிகாலையில் எப்போதும் ராகமாக தேவாராம் பாடும் அம்மாவை தொழில் என்றும் ,சிறைவாழ்வும் ,அதில் இருந்து உயிர் தப்ப வெளிநாடு போவதும் பிரிக்கின்ற நிலையில் மனதில் அம்மா .எனக்காக எத்தனை அலைச்சல் .

என்பைப்பெற்றதுக்கு இனவாதம் கொடுக்கும் பரிசினைச் சுமக்கும் கொடுமையில் இருந்து விடிவு எப்போது ?நான் விரும்பிய சாலிக்காவை பார்க்க நினைத்தபோதும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

.என் தந்தைக்கு மட்டும் தான் எதிர்கால மருமகளைப் பார்க்கும் சூழல் இருந்தது .

.அம்மா என்னைப்பார்த்ததே சிறையில் இருந்த காலத்தில் தான்.

ஒரே நாட்டுக்குள் இரு தேசம் என்ற நிலையில். பெருமாளைச் சேவி அவர் சங்கு சக்கரத்தாரி சங்கடங்கள் தீர்பார் என்பான் ராகுல் அவன் ஒரு ஆன்மீகப்பிரியன். இந்தப்பெருமாளை நம்புகின்றேன் ஆண்டவா கருணைகாட்டு!

தொடரும்...