17 February 2013

விழியில் வலி தந்தவனே! ஆறு

அன்பு என்ற பாசக்கயிறுக்கு கத்தியாக இருப்பது  அதிகாரம் .இந்த அதிகாரம் பல வழிகளில் கத்தியாக குடும்பம் என்ற வட்டத்தில் இருந்து ஊர் ,அது கடந்து நகரம் போய் ,மாநகரம் கடந்து ,தலைநகரம் கலந்து ,தேசம் என்று காதலுக்கு வரும் கத்திகளின் அதிகாரம் என்ன என்று அறியாதவன் இல்லை ரகு !

எந்த நிலையிலும் தன் ஆசையால் தந்தை என்ற மரகத வீணையை சுரம் பிரிந்த தந்தி போல உடைப்பது சுகிமீதான  காதலும் அதன் பின் விளைவான அதிகார ஆட்சியும் என்று முன்கூட்டிய முன் உணர்வினால் தான்  அன்று பொங்கியது!

ஒருவேளை அவள் சாதாரண ஒரு ஏழைவீட்டு இராஜகுமாரி போல இருந்திருந்தால் ரகுவும் அவள் காதலை ஏற்றுக்கொண்டு இருக்கலாம் !

ஆனால் சும்மா அவளை காதலிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு பின் குடும்ப பிரச்சனை என்று அவள் விட்டுவிட்டு போனாலோ ,இல்லை அவளது குடும்பம் இவனை தண்டித்தாலோ ,வேதனையும் வலியும் இவனுக்கு மட்டும் இல்லை அந்த அபலைப்பெண்ணுக்கும் சுஜாதாவின் அனித்தாவின் காதல்கள் நூல் போலத்தான் !எனவே அவள் தன்னை பயந்த கோழை என்று நினைதாலும் பரவாயில்லை காதல் தேன் என்ற வலையில் போய் சிலந்திக்கூட்டில் சிக்க அவன் தயார் இல்லை.

இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன ஏன் ஒரு சாமானியனுக்கும் அதிகாரவர்கத்தினருக்கும் முடிச்சு போடுகின்றது ஒருவேளை பிரச்சனைகளை பார்க்காத ,பிரிவுகளை கண்டு மனம் உருகி ,மனம் புலம்பி உடைந்த நிலாக்கள் போல காதல் சுவாரஸ்யமாக இருக்காது என்பதா??

கடவுளின் படைப்பில் தான் எத்தனை முடிச்சுக்களை போடுகின்றான் சில முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுகின்றன. சில வாழ்நாள் முழுவதும் அவிழ்க்கப்படாமலே போய்விடுகின்றன்.

அடுத்துவரும் நாட்களில் ரகுவிற்கு சுகியை பார்க்க பாவமாக இருந்தது .எப்போதும் சந்தோசமாக பூஞ்சோலைப் பூவாக  திரியும் அவள் முகத்தில் ஆங்காடியில் விலைபோகாத இந்தப்பூ விற்பனைக்கு அல்ல !

விலை அதிகம்  என்பது போல சந்தோசம் இல்லை சோகம் குடியேறியிருந்தது.அந்த சோகத்துக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்வு வேறு அவனுக்கு ,ஆனாலும் ஆரம்பத்திலே  காதல் நதிக்கு அணைகட்டியதில் சிறந்தது என்று நினைத்துக்கொண்டான்.

 முதல் யாசிப்பையும் முதல் ஸ்பரிஸத்தையும் என்றும் மறக்கமுடியாது என்று சொல்வார்கள். அதே போல சுகிக்கு அவனை மறக்கமுடியவில்லை.


இதயத்தில் காதல் தீபம் ஏற்றியவனே
என் உணர்வுகளை பறித்தவனே
ஏன் என்னை சிதைக்கின்றாய்
அனுதினம் உன் முகம் காண தவிக்கும் ஜீவனை
எழு ஸ்வரம் போல 
ஏன்  தீண்ட மறுக்கின்றாய்?

என்  தவிப்புக்களை அறிந்தும் ஏன்
அறியாத துவாரகைக் கண்ணன் போல நடிக்கின்றாய்?
நீ இல்லை என்றால் என் 
இரவுக்கு ஏது பகல்!

சுவாரசியமானவனே சுகியின் நிலையை
புரிந்துகொள்ளடா!!!

(ரகு சுகியின் காதலை மறுத்த போது சுகி எழுதிய கவிதை  இதை தோழி சுவாதி என்பதால் ரகுவிடம் காட்டிய போது ரகுவினால்   ஒன்றும் சொல்ல முடியவில்லை.)


இதயம் பட முரளி போல இருந்தான்!

அதன் பின் அன்று ஒரு நாள் நல்ல மழைக்காலம் சென்னையில் ஒரு மழைக்காலம் போல வன்னியில்!!

பாடசாலை விடுமுறை நாள் என்பதால் ரகு தனது தந்தைக்கு உதவியாக அவர்களது தாய் பூமியான சந்ததியை வாழவைத்துக்கொண்டு இருக்கும்  வயலுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தான்.நேரம் பின்னேரம் ஜந்து இல்லை ஜந்து அரை இருக்கும் மெலிதான கார்கால கும்மிருட்டு  வரும்போது ரகு இந்தியாவில் புகழ்மிக்க மஹேந்திரா தயாரிப்பு உழவு இயந்திரத்தில்தங்கள் வயலில் வேலை செய்யும் சனத்தை ஏற்றிக்கொண்டு சின்னக் கவுண்டர் போல வந்துகொண்டு இருந்தான் !இந்தப் பாதையில் தான் சுகியின் வீடும் இருக்கின்றது!


தொடரும்.......................

பின்னேரம்-மாலை நேரம்/சாயந்தரம்!
I

13 February 2013

காதலர் தின அனுபவம்!


வணக்கம் உறவுகளே இது காதல் மாதம் என்று சமையல் கடைமுதல் அங்காடி வரை அழகிய வார்த்தைகளில் தூங்கும் என் போன்ற தூங்கும் அப்பாவிகளையும் உசுப்புகின்றார்கள்:)))


புதுமாப்பிள்ளை உன் காதல் கதை என்ன என்று  ஒருத்தன் இணையத்தில் முகம் தெரியாமல் வந்து என்ன பாஸ் !
உருகும் காதலியா ?தொலைந்தவன் காதலா ?இல்லை விழியில் வலி தந்தவனே ?
இல்லை இனி எழுதும் தொடர் தான் உண்மையான உங்க அனுபவமா ?

என்று வம்பில் மாட்டிவிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு தெரியாது நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போன கதை :))) 
இருந்தாலும் அவன் கேட்ட காதலர் தின கடந்த கால அனுபவம் சொல்லணும் என்று எனக்கும் காதல் வந்த கதை இது !

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கோ !அது 1996 அப்ப  படித்துக்கொண்டு இருந்தேன் இனிப்படிப்பு வேண்டாம் இத்தனை காலம் கடைசி வாங்கில் இருந்து கணக்கு வாத்தியார் கருக்குமட்டையால் அடித்து உன் கையில் காயம் பட்டு வரும் நிலையை விட்டுவிட்டு உதவாக்கரையாக இருக்காமல் உருப்படு என்று என்னையும் வியாபாரக்கடைக்கு வா என்று என் மாமா சொல்லியதை நம்பி என் தாயும்  வவுனியா அனுப்பிய நிலையில்  !


அங்கு வந்து நான் அடுத்த கட்டம் என்ன என்று காத்து இருந்த போது தான் ஊர் தாண்டி வந்தால் கட்டுப்பாடு போய்விட்டது எங்க பார்த்தாலும் காதலர் தினம் என்று பேச்சு என் நண்பர்களும் சேர்ந்து கொள்ள காலையும் மாலையும் கற்குழியில் குந்தியிருக்கலாம் என்றால் ஒழுங்கா படிக்கவும் இல்லை இதில் வேற உதவாக்கரைக்கு ஒரு காதல் ஒரு கேடா என்று எங்க மாமா கையால் அடித்தால் காயம் வந்து விடும் வீட்டில் அடித்த்தால் விடுதலைக்கு போய்விடுவானோ என்று நினைத்தார் போல நானோ அடுத்த காதலர்தினம்  வருவதற்கு முன் எப்படியும் அன்று  கேட்டுவிடவேண்டும் என்று நினைத்ததுதில் என்ன பிழை ?? கேட்டது பிழை என்று தேஞ்ச (துடைப்பத்தால்)தும்புத்தடியால்  முதுகில் போட்டார் பாருங்க !

தாங்க முடியாத காதல் வலி !!

முடிவு செய்தேன் நான் கட்டினால் இவளத்தான் கட்டணும் .என்று நினைக்கவில்லை .உருகுதே மருகுதே என்று சொல்லவில்லை .காதல் வந்ததும் காதலை யாருக்கும் என்றோ ?காண்பதில் எல்லாம் தலைகீழ் தோன்றம் என்றோ ?

நினைத்து நினைத்துப் பார்தேன் என்றோ ? பாடவில்லையே !

பார்த்தேன் பார்த்தேன் என்றும் ஏனோ எனக்குள் .

உன்னைப் பார்த்த பின் நானாக இல்லையே .என்று ஒரு உணர்ச்சிப் போராட்டம்.

 அவள் ஒன்றும் அப்படி அழகில்லை கொடியிலே மல்லிகைப் பூ ஆனால் சுமார் தேவதை .

அவள் அப்படித்தான் !

நானே பணக்காரன் இல்லை .நானே ராஜா நானே மந்திரி போல என் வழி தனி
வழி .அவளிடம் சென்றேன் அன்பே அன்பே என்னைக் கொள்ளாதே !

சொல்லிவிடு வெண்ணிநிலவே ..உன்னைக்கொடு என்னைத் தருவேன் .
காதல் சுகமானது .

நானும் உன்னை நேசிக்கின்றேன் .நீயோ பாணுபிரியாபோலவோ ,சினேஹா போலவோ ,சிங்கரவேலன் குஸ்பூ போலவோ இல்லை .

என் நெஞ்சைக்கிள்ளாதே என்றேன் அவளிடம் .

அவளோ காதலர் தினத்தில் 'உள்ளத்தை அள்ளித் தந்தா'  நீ ஒரு கோடீஸ்வரன்  !அவள் அறிமுகம் ஆன  அந்த மலைக்காட்சி இன்னும் மனதில் நெஞ்சில் ஆடும் பூ  .

இன்னொரு நண்பன் எனக்கும் கிடைத்தது ம் அந்த மலையகத்தில் .அதை முதலில் சொன்னேன்  அவளிடம். பின்  உனக்கு 18 எனக்கு 20 .

சொல்லாயோ வாய் திறந்து ,பொத்தி வைச்சுக்கோ எந்தன் அன்பு மனசை நினைவுச்சின்னம் மாதிரி என்றேன் .

போடாப் போடா புண்ணாக்கு என்றால் அவள் அன்புத்தம்பி .

காதல் வந்தால் காதலர் தினத்தில் என்னவிலை அழகே என்று தொடங்கி உருகி உருகி உருகும் காதலிபோல இல்லாமல் .

வைரமுத்துவைக் கொண்டு எழுதி அதில் "படைத்தான் உன்னையே மலைத்தேன் தினம் தினம் உன்னை நினைக்கின்றேன்  என்று மயங்கிய கதையை கதிர் அண்ணாவிடம் சொல்ல  அவர்  ரகுமானிடம் சென்றதன் விளைவு காதலர் தினம் வந்துவிட்டது .

பிறகு என்ன தாண்டியார் ஆட்டம் ஆடி எனக்கும் காதலர் தினம் பிடிக்கும் :)))

.நான் அவளுக்கு பூக்கொடுக்கவில்லை பாடல்  தந்தால் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டு நாம் ஓடிவந்தாலும் உள்ளத்திலும் ,இதயத்திலும் இன்னும் தொடர்கின்றது காதலர் தினப் பாட்டுத் தான் எனக்கும் பிடிக்கும் கேட்டுப் பாருங்கள்!:)))))))!

தனிமரமும் மொக்கை போடும் :)))))))

இனிய துணையைத் தேடுங்கள் உனக்கென நானும் எனக்கென  நீயும் சேர்தே இருப்போம் இந்தப்பிறவியில்  என்ற நிஜமான அன்புடன்!

இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!

கற்குழி- இலங்கை வவுனியாவில் இருக்கும் ஒரு கிராமம்!ம்ம்ம்ம்