22 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-13


கிராமங்களையும் ,நகரங்களையும் ஒன்றினைக்கும் தேசிய அரசியல் போல நாட்டின் தலைநகர வாழ்க்கையும் ஒரு அரசியல் ஜீவஜோதி !

இந்த ஜோதியில்  சங்கமிக்க சிற்றூரில் இருந்தும் ,சிறுநகரத்தில் இருந்து கனவுகளுடனும் ,கற்பனைகளுடன் வருவோரின் கன்னத்தில் முதலில் கைவைப்பது இந்த தலைநகரில் ஒதுங்கிக்கொள்ள ஒரு முகவரியுடன் மூன்று நேரச்சாப்பாடு இல்லாவிட்டாலும் ,முகம் தொலையாத நிம்மதியுடன் இருக்க ஒரு வாடகை அறை .

அறை கிடைத்துவிட்டாள் அடுத்த கட்ட அரசியல் என்ன ?என்பதையும் ,ஆலோசனை செய்யும் வசதி வந்துவிட்டும் ..துணிவே துணை என்பது போல அப்படி ஆலோசனை செய்ய அறிமுகமான நல்ல நண்பர்கள் இருந்தால் இந்த தலைநகரம் கொழும்பில் ஒரு போக்கிடம் அமைக்க முடியும்.

அந்த கொழும்பு நகருக்கு வவுனியா இன்ரசிற்றியில் இருந்து சேகர் போய்ச்சேர்ந்தது முதலில் பாபு இருக்கும் வாடகை அறையான கொழும்பு -13 இல் ஜம்பட்டாவீதியில் இருக்கும் தொடர்மாடி ஒன்றில்  நண்பனின் அறைக்கு!

அன்று மலர்ந்த தாமரைபோல அவனை வரவேற்றான் பாபு .
வாடா மச்சான் .என்னாச்சு ? நீபோகும் இடம் எல்லாம் இட மாற்றமும், விருப்பு மாற்றலும் விரைந்து வருகின்றதே ?நாடாளுமன்ற தேர்தல் போல அடுத்த விற்பனைப்பிரதிநிதியாக இனி எந்த ஊர் போகப் போறாய் சேகர்?

இந்தநாட்டில் யுத்தம் ஓயாது !நாங்களும் ஓடுவம் ஓடும் வரைக்கும் ஒரு எல்லை இருக்கும் தானே ?

நிஜம்தான் மச்சான் சேகர்.

பஸ்ஸில் வந்த களைப்புக்கு ஒரு தேனீர் குடி தேவாமிர்தம் போல இதுதானே நமக்கு! 

ஆமா உன் வேலை எப்படிடா போகுது பாபு ?சந்தோஸமாக போகுது சேகர் .
எல்லாம் உன் சாமர்த்தியம் தான் முதலில் பஸ் நீண்ட பயணக்களைப்புக்கு ஒரு குளிப்பு போடு .

நான் பரோட்டா கொத்துக் கட்டிக்கொண்டுவாரன் .

சரிடா மிச்சம் உங்கூட பேசணும் என்று இருந்தன் சேகர் .நீ படத்துக்கு புக் பண்ணச்சொல்லியும் அதைச்செய்யல ,உன் கூட அவசரமாக  ஓய்வாக இருந்து பேசணும்!

இன்று மாலையில் எத்தனை மணிக்கு வருவாய்?
 மாலையில் 6 மணிக்கு .

ஓக்கேடா சேகர் நாங்கள் கோல்பேஸ் போவம் சாய்ந்திரம்.

 சரி நானும் மிச்சம் பேச இருக்கு உன்னோடு பாபு.

ஆமா சேகர்!நீ எப்ப பதுளை போறாய் ??ஏண்டா  பாபு காலையில் என் வாயைக்கிண்டாத !

ம்ம் உன் பிடிவாதம் கூடாது மச்சான் .வீணா நம்நட்பை சோதிக்காத தேர்தலில் வெல்வோம் என்று நம்பிக்கையில் பாராளமன்றத்தைக் கலைச்சமாதிரி இல்லை நான் .ஆட்சியும் வேண்டாம் அவதூறும் வேண்டாம் என்று நிற்கும் சுஜேட்சை உறுப்பினர் போல எப்ப போகணுமோ அப்ப அந்த ஊரைப்பார்க்கின்றேன் .

சரிவிட்டுவிடு சேகர் நம்ம பதுளை நண்பர்கள் எல்லாம் உன்னைக்கேட்கின்றாங்க?
மச்சான் பாபு மூடியபாதையால்  முன்னேற வெளிக்கிட்டால் ஆபத்து அதிகமாக இருக்கும் .நான் ஆபத்தை நேருக்கு நேர் சந்திக்கவிரும்பவில்லை .

இந்த விற்பனைப்பிரதிநிதி வேலையே எனக்குப் போதும்.

இன்று தலமைக்காரியாலயம் போனால் தெரியும் !
இனிமேல் வவுனியா நிலமை சரியாகும் வரை வேற இடங்களில் தற்காலிகமாக வேலை செய்யலாம் ,இல்லை யாராவது புதிய இடத்தில் புதிய ஏகவினியோகஸ்த்தர்கள் கிடைத்தால் இருக்கும் பகுதியை இரண்டா பிரித்து விற்பனையை அதிகரிக்க வழிகோலுவார்கள் வடகிழக்கு மாணசபையை இரண்டாக்கியது போல தலைக்காரியாலயம் போனால் தெரியும் கண்டி ,திருகோணமலை ,வவுனியா என்று ஒவ்வொரு பகுதியும் பார்த்தாச்சு ,இனி எந்த இடம் வருமோ ?எப்படி விதி எழுதியதோ யாருக்குத் தெரியும் .

வருங்காலம் எல்லாம் வெல்ல இணைந்த கைகள் நீ இருக்கும் போது எனக்கு என்ன குறை மச்சான் பாபு.

ஆமா என்னை பினாமியாக்கி நீ பல இடத்தில் தப்பிவிடுவாய் .நான் தான் வாய் இருந்தும் ஊமைபோல நடிக்க வேண்டும் !

நண்பேண்டா நீ !

ஆமா நண்பன்தான் இல்லை என்றாள் நமக்குள் எப்படி இப்படி ஒரு புரிந்துணர்வு ?மலையகத்தில் பிறந்த நானும் ,வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நீயும் இணைந்தது 'புரிந்துணர்வில் தானே ?
நிஜம் தான் பாபு .

ஆமா நம்ம ராகுலைப் பார்தாயா ?


அவன் குருநாகல் போய் இருக்கின்றான் உனக்குத் தெரியாதா ?

இல்லடா என் கைபேசி வேலை செய்யவில்லை நேற்றுமுதல் அதனாலஅவன் சொல்லாமல் போய் இருப்பான் .

 இருக்கும்டா சேகர்.

அவன் உங்கள் கம்பனி வட்டார அதிகாரி வீட்டில் தானே தங்குவான் .
ஆமா அந்த ஐராங்கனி எப்படி இருக்கின்றா ?
உங்கள் நட்பை ராகுல் விரும்பவில்லை என்று மட்டும் நேற்றுக்கூட என்னோடு பேசினான் .

அவனைவிடு லூசன் ,அப்படிச் சொல்லாத மச்சான் அவன் தான் நாம ஒன்று சேர மூலக்காரணம் .

அவனை மீறி நான் உன் வழியில் வர ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு கைவசம் !


தொடரும்!

21 July 2013

ஆடிப்பட்டம்!!!!!


ஆடியில் பறந்தது அழகான பட்டங்கள்
அந்தக்கால  ஊர் வாழ்வில்
அந்த ஆனந்த  ஆடிக்களிப்பில்!



ஆட்சியாளர்கள் விட்டார்கள் இனவாத
ஆத்துமீறல் நூல்கள்
ஆயிரம்  
அதில் பல்லாயிரம் காடையர்கள்சேர்ந்ததில் 
அவர்களிடம் இருந்தது பல ஆயுதங்கள்
அடுத்தவர்கள் உயிர்குடிக்கும் அநியாய
அகோரங்கள் ஆடினார்கள் அந்த ஆடியில்!


அப்புத்தளையில் அத்தனையும் பார்த்தது
அத்தையின் மடியில் அமர்ந்து
அழத வண்ணம் அருகில் அப்புஹாமி 
அம்பஜாலுவ அண்டண்ட எப்பா ஆரத்தழுவினான் அன்பில்
அந்த நேரத்திலும்  !அப்போது
அவனோடு இருந்த என் பள்ளிப்பட்டம்
அவசரசமாக இடம் மாற்றி ஏற்றினார்கள்!


அழுதுபுலம்பி அகதியாக இடம்பெயர்ந்து
அத்தனை சொத்தும்
அழிந்த  பின் அறுந்து போன
அந்தப்பட்டங்களின் அவல 
அழகுரல் இன்னும் காதில்
அதுகடந்து ஆமர்ந்த தீவில்
அக்கினிச்சுவாலை என்று ஆமியின்
அத்துமீறல் அடியோடு விரட்டியது!


அகதியாக அந்த அம்மையாரின் ஆட்சியில்!


அதுகடந்து பட்டங்கள் பறக்காமல் சிக்கிய
அவலத்தை அறிந்த அனைத்துலக நாடுகள்
ஆருக்கும் சொல்லவில்லை போதனை
அடியோடு நிறுத்துங்கள்! இனவாத
ஆட்டம் என்றெல்லாம்!

ஆட்சியில் மாற்றம் வந்தபின் அன்பில்
அழைக்கின்றது அந்த ஊரைப்பார்க்க 
அன்பே வா !
அகதியாக அலைகடல்கடந்து
அடைக்கல நாட்டில் அடிப்படை உரிமையும்
அழகாய் உன் வாழ்க்கைப்பட்டமும்
ஆடிப்பற்றக்கின்றதே!


அது போல இழந்த அந்த சொத்துக்கள்
ஆளவிடமுடியாத அந்த உயிர்கள்
அலுப்புடன் சொல்லுகின்றேன்.
 அந்தப்பட்டத்துக்குப் பின் இருக்கும் அகதிப்பட்டம் அதுதரும் 
அழகான பட்டப்பறப்பு 
அனுபவதித்தால்தான் புரியும்!

அவலப்பட்டத்தை அடைந்து அது ஆடிப்பறக்கவும் அழகை நேரில்ப்பார்த்தால்
ஆட்சியாளர்கள் !
அதிகாரதோரனையில்
அலட்சியமாக அறுத்துவிட்ட நம் பட்டத்தை
ஆற்றுப்படுத்த வேண்டிய ,ஆணைக்குழுவும்,
அனைத்துலகசபையும்,
 ஆண்மையின்றி
ஆட்சியில் இருந்த அரக்கர்கள்
அறுத்த பட்டத்தின் வாழ்க்கைக்கு
அனுநீதிக்கு 
ஆட்சியாளருக்கு ஆர் தருவார்கள்
ஆயுள்சிறை ?

அதுவரை அந்தப்பட்டடமும்
அந்த உடல்கீறல்கழும்
அவலமாக
ஆடி என்றாலே பனையில் தொங்கும்
அகதியின் அடிமனசில் நினைவுகளாக
அந்தப்பனை அடிக்கடி வந்துபோகின்றது!
 அப்புஹாமி 
அம்பஜாலுவ அண்டண்ட எப்பா / சிங்கள மொழி  அப்புஹாமி அன்பான மாம்பழ் நண்பனே அழ வேண்டாம் என்றான் என்று பொருள் படும் தமிழில்!பால்ய நண்பன் என்பது அம்பஜாலுவ  என்று சொல்லுவது சிங்கள் மொழியில்!
அக்கினிச்சுவாலை -ஒரு  இராணுவ நடவடிக்கை!