10 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-19

எதிர்பாரத நேரத்தில் ,எதிர்பாரத விடயங்கள் வந்து !நிதானமாகப்போகும் வாழ்வில் இடையூறுகளையும், இன்னல்களையும் ,இதயத்தின்  இருப்பில் சுருட்டுக்கடையின் பணப்பெட்டியில் வைக்கும் முற்பணம் போல தங்கிவிடும் .


அதுபோலத்தான் சேகருக்கு வந்த தொலைபேசி அழைப்பும் உடனடியாக பண்டாரவளைக்கு புதிய  விற்பனைப்பிரதிநிதியாக போகும்படி மேலிட உத்தரவு என்ற பண்டாரவின் கட்டளையை மீறமுடியாதநிலை ஒரு புறம் !

என்றால் எந்த ஊர் வேலை என்றாலும் ,என்ன நேரத்திலும் இராணுவக்கட்டுப்பாட்டின் பகுதி எங்கும் போகும் அவன் துடிப்புள்ள விற்பனைப்பிரதிநிதி என்று பண்டார சேர் பலருக்கு முன் அவனை தூக்கி நிறுத்தினாலும் தலைவா படம்போல சறுக்குவது இந்த மலையகத்தின் ஊவாவிற்கு போகும் நிலையில் தான்!

அங்கு என்றும் விற்பனைப்பிரதிநிதியாக விரும்பிப்போகக்கூடாது என்பது அவன் மனதில் இருக்கும் ரகசியத்தீவு போல் ஒரு வெறி.

முன்னர் இந்த மலையகம் என்றால் அவன் ஆற்றில் அனந்தமாக குளிர்த்தவன் பெற்றோரை யுத்தத்தில் இழந்தாலும் .வளர்த்த உறவுகள் அவனை கட்டுப்படுத்த நினைத்த போதுதான் காட்டாறு போல தனியாக பிரிந்து தலைநகரமும், பின் யாழ்ப்பாணமும் ,வன்னியும் என புதிய தொழில் தேடி ஓடியவன் .அதனால் அவன் வளர்த்தவர்களை என்றும் மீண்டும் அவர்களை நேர் முகத்துடன் சந்திக்கும் சூழல் இன்று வரை எதிர்கொள்ளா வண்ணம் தன் முயற்ச்சியில் விற்பனைப்பிரதியாக உருவானாலும் நண்பர்களை தன் நட்புச்சுவராக கொண்டவன் சேகர்

! இது எல்லாம் அறிந்தவன் பாபு! 

என்ன மச்சான் ரொம்ப அப்செட்டாக இருக்கின்றாய் ?இல்ல பண்டாரவளைக்கு திங்கள்கிழமை முதல் புதிய இடத்தில் வேலை செய்யட்டாம் அதுதான் ஜோசிக்கின்றேன். சரி நடப்பது எல்லாம் நன்மைக்கே.

 நாளை மாலை பண்டாரவளை போக வேண்டும் அதுக்கு முன் இப்போதே மிரூனாவை நான் சந்திக்கப்போறன். நீ நம் அறைக்குப் போ பாபு.

 வேண்டாம் மச்சான் சேகர் நீ அதிகமாக குடிச்சு இருக்கின்றாய்.தெரியும் பாபு அதுதாண்டா நண்பன் நீ  .ஆனாலும் இன்னும் நிதானம்  எனக்கு இருக்கு பாபு!

 கவலையைவிடு !


இப்போதே  மட்டக்குளி போறேன்!



தொடரும்......

09 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-18

சாதியத்தின் உட்பூசல் எப்படி இருக்கும் என்பதைச்சொல்லிச் செல்வது பஞ்சமர் நாவல்! அதில் டானியலின் நடுநிலை எல்லாம் எவ்வாறு  அன் நாட்களில் வாரப்பத்திரிக்கையில் சந்தி எங்கும் சிரித்த கதை எல்லாம் ஈழத்து எழுத்தார்கள் மட்டுமல்ல ,வாசகர்களும் அறிவார்கள் .

என்னதான்  பின் வைரமுத்து "சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்கள் செஞ்ச மோசம் "என்று பாட்டு எழுதினாலும் பதுளையிலும் இருக்கும் பூசல்கள் நீ அறியாயோ நண்பா ?? 

புதிய பாதை போடுகின்றேன் என்று வெளிக்கிட்ட ஜோடிகளின் கதை எல்லாம் படித்ததில்லை !

நல்லா ஜோசி மச்சான் பாபு.

 மிரூனா மனசில் நீ இருக்கின்றாயா தெரியாது?

அவள் சின்ன வயதில் இருந்து மனதில் உறுதி வேண்டும்  பட சுகாசினி போல தாதி வேலையில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்றகனவில் இருந்தவள் .தன் தாய்க்கு போதிய முதல் உதவி கிடைக்காமல் தான் தோட்டத்து மருத்துவ நிலையத்தில் உயிர்பிரிந்த அந்த சின்னவயது துயர் நிலையை என்றும் மறக்காதவள்.


 அதை இப்போது  நடைமுறைப்படுத்துவது  போல அரச தாதியர் கல்லூரியில் படித்துக்கொண்டு கடமையும் புரிகின்றாள். 

இந்தநேரத்தில் அவள் கனவில் காதல் தீ வைக்கப்போறியா? அவளின் கனவுக்கு ,கற்பனைக்கு உன்னால் சித்திரம் தீட்ட முடியுமா மச்சான்?

சும்மா ஒருத்தி மீது காதல் வந்தவுடன் வீட்டை விட்டு ஓடிப்போக  சினிமாவுக்கு ஒத்து வரும் நிஜத்தில்?  அவள் வசதியாக இருந்தவளை கூட்டியந்து உன்னால் சந்தோஸமாக வைத்து இருக்கமுடியுமா ?

இது என்ன இயக்குனர் மகளின் பருவ  உடல்க்கவர்ச்சியா ?உண்மையான அன்பு இருந்தால் காதலுக்கு மரியாதை போல அவர்கள் வீட்டுச் சம்மததுடன் கை கோர்த்தால்  இந்த உலகம் போற்றும்.

 சும்மா ஊடகத்துக்கு பரபரப்புக்கு எதையும் செய்ய இந்தக்காதல் ஒன்றும் விளையாட்டு அல்ல. உன்னை நம்பி உன்  வீட்டில் பொறுப்பு இருக்கு .அது எல்லாம் புரியலயா மச்சான் பாபு ?என்றான் கடல்க்கரையை பார்த்த வண்ணம் சேகர்!

 மச்சான் நீ என்ன சொல்ல வாரா ?என் ஜாதி வேற அவள் ஜாதி வேறஅப்படித்தானே! 

இல்லை மச்சான் ஜாதி மாற்றம் வந்து கொண்டே இருக்கு .ஆனால் உனக்கு பொறுப்பு  இருக்கு அதை தட்டிக்கழித்து விட்டு இன்னொருத்தியின் முந்தானையில் வீழ்ந்து போகநான் விரும்பவில்லை ! 

'காதல் வேதம் கற்றுக்கவா ;காதல் பெரிதா வேதம் பெரிதா என்று வேதம் ஓத நான் ஒன்றும் புதுமைப்பித்தன் இல்லை ' எனக்கு உன் குடும்பமும் ஒன்று தான், மீருனா குடும்பமும் ஒன்றுதான் .

ஆனால் எப்போதும் தனிவழியில் போக வேண்டும் நம் கடமையில். சுயமாக ;சுதந்திரமாக இருக்க வேண்டும் .காதலுக்காக கடமையை தட்டிக்கழிக்காத .

முதலில் கடமை அப்புறம் தான் காதல் பாபு.

சேகர் நான் இப்பவே மீருனாவை கைபிடிக்கப்போவதில்லை .கொஞ்சக்காலம் சந்தோஸமாக பேசுவம், ஊர் கொஞ்சம் சுற்றுவம். பின் நல்ல நாளில் நம் பொறுப்புக்கள் தீர்ந்த பின் ஒன்று சேர்வோம் என்று தான் கனவு காண்கிறேன்! 


நிச்சயம் அவளுக்கு என்னைப்பிடிக்கும் மச்சான் ஒரு வாட்டி நீ பேசு உன்னிடம் அவளுக்கு மரியாதை இருக்கு .

அப்படி முடியாதென்றால் நானே பேசிக்கொள்கின்றேன் .நாளை ஞாயிறு அவளுக்கு விடுமுறை நாள் !

எப்போதும் போல கொச்சிக்கடை அந்தோனியாரிடம் பிரார்த்தனைக்கு வருவாள்  மதம் வேற என்றாலும் அவள் அந்தோனியாரிடம் விசுவாசம்மிக்கவள்.

அதன் பின் கோல்பேஸ் கடல்க்கரை வருவாள் . அங்க பேசிக்கின்றேன் உனக்கு தொல்லை வேண்டாம் மச்சான்! 

அது வந்து ...

நீ எதுவும் பேசாத சேகர்..

அப்ப கடல் பொங்கி விட்டது இனி  கரைகண்டுதான் நிற்குமோ??



ஹீ கொஞ்சம் இரு பாபு என் மேல் அதிகாரி அழைப்பில் வருகின்றார் .
ஓ அப்ப ஐராங்கனி மேட்டர் போல!!!

 கொஞ்சம் இருடா !
ஹலோ  மாலை வணக்கம் பண்டார சேர்!
மறுமுனையில் அவர் சொல்லிய விடயம் கேட்டு அதிர்ந்தான் சேகர்.

 தொடரும்......