23 September 2013

பிரெஞ்சுக்காதலியை பிரிகின்றேன்!


ஆப்பில் பெண்ணே
அகதியின் காதலியே
பாரிசில் பார்த்தேன்
பார்த்ததும் பிடித்தது பித்து
பிரியமாக உருகினேன்
உருவிப்போனான் உன்னையும் ஒரு
கறுவல் கலங்காத மரமே
காப்புறுதிக்கார கறுப்பி
கையில் தந்தால் உன்னை!
கறுப்பான ஐபோன் !


கைபிடித்தேன் ஓடும் ரயில் தொடர்
கதை என்று நொந்துபோன இதயம்,
காதலில் முகம் தொலைந்தவன்,
கடமையில் ,உருகும் பிரெஞ்சுக்காதலி
கண்ணில் வலியை விழியில் வலி தந்தவனே.
காத்திருந்த நேரத்தில்  என்னுயிரே என்னில் இருந்து விலகும் நொடி
கதை என்றும் ,கவிதை என்றும் எழுத்துப்பிழையாக
என்னையும் திருத்தாத உதவாத காதலியே!

உள்குத்தே உன்னால் தானடி!
உருகும் காதலியே உனக்கும் விடுதலை
உனக்காக நான் கொடுத்த சீதனம்
பல நூறு ஈரோ பாவியடி அப்பாவியடி நான்.!
உனக்கு செலவிட்டத்தில் உண்மையில்
உன் பாட்டி ஊரில் உனக்கும் ஒரு உறையில்
உன் பெயரில் ஒரு வசந்தமாளிகை
உண்மையில் கட்டி இருப்பேன்!
உனக்கு தெரியாது உன் முன்னே
உன்தேசம் பாரிசில் உண்மையில்!நான் அகதிபோல
உன் பின்னே ஒரு வழிப்போக்கன் நேசிப்பில்!!ம்ம்

பலரை உறவு என்று முகநூல் ஒரு பெயர்,
வலைப்பதிவு வேற நாமம் என்று நேசனுக்கும்
நேசம் கொண்டாடா வந்தாயே?


நேற்றும் பல சந்தோஸம் தந்தாய் வாழ்த்தி  நேசத்தில் தங்கை கலை, மகிஅண்ணா  என உள்ளங்கள் வருகை தந்த குடும்பங்கள் என என்னையும் என் தூக்கத்தையும் 
உன்னோடு கட்டிலில் போட்ட சண்டைகள் பல!


 சாப்பாட்டுக்கடையில் வேலையில் பல நிரூபனிடம் ,மணியிடம், துசியிடம்,
ஏதோ கிறுக்கன் என்று சிலர் என்ற போதும் 
எனக்கு கேட்ட பாடல் தரும் நேயர் நேரம்
என்னையும் தாலாட்டுது.


நேற்றும் வந்தாள் முன்னம் தெரிந்த ஒருத்தி நேசனிடம் நிறைய மாற்றம்! 
வெளியூர் வாழ்வில் நீங்க வந்த ராசி போலும்
நெளியவேண்டிய நிலையில்  நீண்டகாலத்தின் பின் பதின்ம வயதில் பார்த்தவள் இவள் என் பள்ளித்தோழி பகிர்ந்தேன் பாரியருடன்!:)))!




மரத்தையும் மறந்திடாத அங்கும் வருவேன் கீதமாக  இப்படி முடிப்பாய் என்று நானும் நினைக்கவில்லை! நான் வாசிக்கும் போது!
உனக்கு  எப்போதும் அவரசரம் அதிகம் என் அப்பா இப்போதும் சொல்வார் நேசன் !நீ அவருக்கும் அடங்காத வழிப்போக்கன்
அவரும் இப்போது உன் வழியில்!ம்ம்

எனக்கு ஒரு உண்மை தெரியணும் ஐயப்பசாமி ஈஈஈஈஈஈ!:))))
உருகும் காதலியாரு நண்பா ?
எனக்கும் தெரிந்தவளா ?
எங்க பதுளை ஊரில் முன்னம் நடந்தவளா?
உன்நண்பன் 
முகம் தொலைந்தவனையும் மறக்கவில்லை!
முன்னம் நீ எல்லோரையும் அரசியலில் அறிந்தவன்.,!
மறுபடியும் வருவாயா நாட்டுக்கு!
மெளமாக மூடிவிட்டேன் !

மணி அடிக்குது வேலைக்கு போகும் நேரம் தோழி !


விட்டு விடப்போறன்  ஐபோனை 
நல்லா ஜோசி நேசன் எத்தனை உறவு உனக்கு இப்ப !

என்னால் பதிவு எழுதவந்த நீ என்னைவிட அதிக உறவுகள் உனக்கு !


உண்மைதான்  இப்போது எல்லோரையும் தற்காலிகமாக பிரிகின்றேன் !மீண்டும் வருவேன் அது வலையில் இன்னொரு ரயில்ப்பயணம் போல  தோழி!


இன்னொரு  தொடர் தொடர்வேன் !இந்த பதுளையில்
இருந்து!


அது வரை சற்று என் அடுத்த தொழில் மாற்றம் அதுவும் கடந்து நிச்சயம் வருவேன் !!!அனுபவம் போல ஆசான் யார் தோழி!

 ஆடிப்பார்ப்போம் வாழ்க்கை ஒரு வட்டம்!
உனக்கு புரியும் நேசன் பிடித்தால் யாரோடும் சேர்ந்து இருப்பான் பிரிந்தால் உருகவும் மாட்டான் !பிரெஞ்சுக்காதலி என்றாலும்!
இன்னும் வெற்றிலை போட்டு வாழும் வழிப்போக்கன் இந்த ஐபோனும் பிரிந்து பார்ப்போம் எல்லாம் இன்னொரு வெற்றிக்கு!நன்றி தோழி!


நானும் விடைபெறுகின்றேன் நான் தனிமரம் அல்ல இப்போது தோப்பு மீண்டும் வருவேன்!
நட்புடன் தனிமரம்  நேசன் !

சும்மா ஒரு தோழி போல ஐபோன் தொடர்பு இடைநிறுத்துவிட்டேன் தனிப்பட்ட காரணங்களிணால் இன்றுடன்!24/9/13!

ம்ம் என் வலையுலக உறவுகளே!


மீண்டும் தனிமரம் துளிர்க்கும்  உங்கள் அன்பில் அதுவரை இந்தப்பாடலுடன் சிறு ஓய்வு!



22 September 2013

கவிதையும் காணமும்.!


உனக்கா உருகித்தான் ஊரைவிட்டு 
உன்நாட்டுக்கு உயிரைக்கொண்டு வந்தேன்
உருக்கமான காதலியே
உதறிவிட்டுப்போனாய்!


உதவக்கரை என்று உன்னைப்பிரிந்து
உயிர்வாழ இனியும் இல்லை
உண்மைக்காதல் உயிரைப்பிரிகின்றேன்
உந்தன் பாடலுடன் 
உனக்குப் புரியும் என்றால் ஒரு 
உதிர்ந்த பூவை என் 
உயிர்ப்பேழையில் வைத்துவிடு
உருகிப்போகும் என் காதல்!




///

ரயில் பயணங்களில் சினேகமாக வந்தாள்
ரகசியமாக தேன் சுவை தந்தாள் 
ரசிக்கும் மங்கையானாள்
ரதிதேவி  இவள் என்றேன்
ராசியில்லாத தென்றல் என்று யார்
ரகசியம் பேசுவது இவள் இதழ் 
ரசிக்கும் மாலைப்பொழுதில்
ரசிகன் இவன் பிரெஞ்சுக்காரன்!


ரகசியம் சொல்ல ஆசை ஆனால் விசா?
..,!!
// இந்த கவிதைக்கிறுக்கல் எல்லாம் இணைய 

வானொலியில் வந்தது email .info@tamilaruviradio.com
www.tamilaruviradio.com.


அதை என் வலையில் பாட்டோடு பதியும் ஒரு ஆவல் மட்டும்தானூஊஊஊஊஊஊஉங்கோ!ஹீ