05 February 2014

சினேஹா போல சிந்திய கவிதை!.


 சின்னவயது நண்பன் வந்தான்
சிரித்துக்கொண்டு முகநூலில்
சீக்கிரம் ஒரு சின்னக்கவிதை
சினிமா சேர்த்துச் சொல்லு
சிலேடையும் ,சிந்திக்கவும்
சிரிக்காத சிவனே என்று!
சிரிக்காமல் சிந்தித்தேன்.
சிலோனுக்கு இன்று சுதந்திரம்!!
சிறையில் இன்னும் நம் இனம்!
                   
சீச்சீ இன்னும் சிறப்பாக வேணும் !
சினிமாவுக்கு போன சித்தாளு போல
சினிமாவும் சிரித்திரணும் போல
சின்னக்கவுண்டர்கள் என் நம் தேசத்தில்
சீரழியும் சின்னத்தளபதிகள்
சீர் போற்றும் சிந்தனைவாதிகள்
சிறிலாங்காவில் சினைப்பர் தாக்குதல் முதல்
சின்ன ஒரு இடத்தில் இரத்தம்
சிந்தி சிதறுண்ட போது
சிறு கையெழுத்து போடாத
சினிமா கதாநாயகனுக்கு .
சிறுவிமர்சனம்  என்று சிந்தாத
சிறுபத்திரிக்கை வாசலில்
சினம் கொண்டு நம் இனம்
சிறுபிள்ளை போல  சிரித்தாயா நீ!ஹீ!!!

சிறிலங்கா யுத்தத்தில் வென்ற பின்
சிலோனில் சுதந்திரம் சீர்கெடவில்லை
சினிமா மோகம்  சீர்பரப்பி
சிந்தனையில் நவநாகரிகம்!
சிதறுவானே சின்னக்கவிதை சொல்லுடா!

சிந்திக்கின்றேன் சின்னையா
சீவன் போகுதடா
சிருங்கார சீர்வரிசை
சிலிமாக இருக்க வேண்டும்.
சிரித்தாள் நடிகை
சிரிப்பளகி சங்கீதா போல

சின்னக் கன்னக்குழியில்
சிறு பள்ளம் விழவேண்டும்.
சீறி எறியும் சிக்பேக்ஸ் போல
சின்னக்கவிதை
சில நிமிடத்தில் சிந்திவிடு
சில்லறை எண்ணிய சின்னவனே!

சிந்தை எங்கும்  நீ ஒரு
சினேஹா மோகம் பிடித்தவனே
சிரிப்பில்  இன்னும் சிறிமா: மகள் போல
சிலைபோல சின்னவயதில்
சிகிரியாவில்
சின்னமாமியின் சின்னமகள்
சிலகாலமாய்  சிறையில் காத்து  இருக்கின்றாள்

சீக்கிரம் வா சில கோடியுடன் சிறை மீட்க
சில செய்தி சில இணையத்தில்
சிறிங்கா பற்றி சிந்திவிடாதே.


சீக்கிரம் வருது ஐநாகூட்டம் அதில்
சில பிராந்திய் அரசியல்/
சீச்சீ  நீ சிரி
சினேஹாவுக்கு இப்போது சீர்மந்தம்
சின்ன மாமா கருணாநிதி சீர்மந்தம்  பின்னே
சிதம்பரம் மாமனார் சின்னாத்தா!
சிலோன் வாழவைத்த சோனியா
சிறப்பித்த  சீமந்த விழா
சீக்கிரம் வாடா!

சில நாளில் நீயும்
சில இணையத்தொடர்  எழுதுவியோ??
சீக்கிரம்   சொல்லு. பலர் அறியா
சிலர் அறிந்த தனிமரம் சிந்தனையில்
சினேஹா சீர்கெட்ட உதவாக்கரை நீயடா!


சிரிக்கின்றேன் சீக்கிரம் நீ
சிறிலங்கா நீ வருவாயா!
சிந்திக்கின்றேன்!



சிறைநாட்களை!

!




02 February 2014

அசலும் நகலும் தொடர்-1

இசைக்கு மட்டும் தான் இனம், மதம், மொழிகடந்து  எல்லோரையும் ஈர்க்கும் சக்தி இருக்கின்றது என்றால் இருபேச்சுக்கு இடம்மில்லை .

ஒரு மொழியில் பிடித்த இசையை இன்னொருவர் மொழிக்கு ஊடுகடத்தும் போது அது காப்பி /பிரதி /நகல்  விமர்சிக்கப்பாட்டாலும்  இந்த இசை இந்த மொழியில் அசலும் நகலும் என இனம் காட்டும் போது இரு மொழிப்பாடலும் இசை விரும்பிகளினால் ரசிக்கப்படுகின்றன  பலநேரத்தில்.

 மூல இசையை விட பிரதி இசை முணுமுணுப்பில்  உச்சம் காணும் நிலையை 80 /90 இல் இசைஞானியின் இசைகள் எவ்வளவு மற்ற மொழிகளில் தாக்கம் செலுத்தியது என்று எழுத வெளிக்கிட்டால் ஒரு நீண்ட தொடர் எழுத முடியும்.


 .ராஜாவின் இசை மற்ற மொழி ரசிகர்களிடம் !எந்தளவு விரவி இருந்தது என்பதுக்கு இலங்கையின் சிங்கள  இசைப்பிரியர்களிடம் இன்னும் சில இசைத்தொகுப்புக்கள் இன்றும் உயிர்வாழ்கின்றது .


இலங்கையின் சிங்கள் இசைப்பரப்பில்  90 ஆரம்பத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலயமான ஒரு  பெயர் நிரோஷா விராஜினி  . 90 இன் காலத்தில்  ஒவ்வொரு  இசைக்குழுவின் இசைமேடைகளிலும் ஒவ்வொரு பாடகர் ,பாடகிகள் முன்னனியில் இருப்பார்கள் .இந்த  80/90 இல் மேடைக்கலைஞர்களின் !தோற்றமும் மறைவும் இன்று சின்னத்திரையின் வரவினால் முகம் தொலைந்தாலும்!


இன்னும் பலர் ஞாபகத்தில் இசைப்பேழைகளில் இவர்களின் குரல் மூலம் உயிர்வாழ்கின்றது .

அந்த வகையில் நிரோஷா விராஜினியின் குரல் இலங்கை இசைமேடை  எங்கும் சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் வரவில் (  துள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவே  )பாடலின் மூலம் மும்மொழியிலும்  இசை ரசிகர்களிடம் பட்டிதொட்டி எங்கும் பிரபலயம் ஆனவர் .

நிரோஷா விராஜினி பல ஒலிப்பேழைகளையும் வெளீடு செய்து வரும் ஒரு பாடகி .

இசைப்பயணம் என்ற படத்தில் உதயா இசையில் உன்னிகிருஸ்னனுடன் சேர்ந்து பாடிய தமிழ்  பாடல் இலங்கை பண்பலை வானொலியில் சக்கை போடு போட்டது.இவரின் கவி ஆளுமையும் ,மொழியறிவும் பல ரசிகர்களையும் இவர்பால் திரும்ப வைத்தது இன்னொரு சிறப்பம்சம்

 மெல்லத்திறந்த கதவு படத்தில் இடம்பெற்ற அசல் பாடல் இது .


இதன் நகல்  சிங்களத்தில் 93 இன் பிற்காலத்தில் (ஹித்த ஹாண்ட-இதயம் அழுகின்றது)

ஒலிப்பேழையாக நிரோஷாவின் புகைப்படத்தோடு வெளியாகி இருந்தது .


சகோதரமொழிப்பாடல்கள்  விருப்பத்தேர்வில் எனக்கு அதிகம் பிடித்தது இந்தப்பாடல் .இனவாத யுத்ததில்  இந்த ஒலிப்பேழை என் கையில் இருந்து தொலைந்து விட்டது  என்றாலும். இன்று மீள்கலவையாக ஒலி/ஒளியாக  யூட்டியூப் தளத்தில் மீண்டும் ரசிக்கும் போது நிரோஷா விராஜினி ஆண்டி ஹான்சிகா போல இருப்பது என்ன சொல்ல!))))))))))))))))

நகல் இதோ.